Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87988
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10098
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3049
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/02/25 in all areas

  1. பயந்தாங்கொள்ளி ---------------------------- புலி ஒன்று ஒரு தடவையில் மூன்று குட்டிகளுக்கு மேல் ஈன்றாலும், அநேகமாக அவைகளில் ஒன்றே ஒன்று மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்கின்றார்கள். எந்தக் குட்டி தப்பிப் பிழைக்கப் போகின்றது என்பது கூட சில நாட்களிலேயே தெரிந்துவிடும். மூன்று குட்டிகளில் ஒன்று மிகத் துணிவானதாக இருக்கும், இன்னொன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும், மூன்றாவது குட்டி ஒன்று எச்சரிக்கையுடன் இருக்கும். துணிவானதும், எச்சரிக்கையானதுமான இரு குட்டிகளும் சேர்ந்தே இருக்கும். பயந்தாங்கொள்ளி ஒதுங்கிப் பதுங்கி தனியாக இருக்கும். பூனையும் புலியும் ஒரு விலங்காகவே இருந்திருக்கவேண்டும். பரிணாம வழியில் எங்கோ இரண்டு விலங்குகளாக பிரிந்து ஒன்று புலியாகவும், இன்னொன்று பூனையாகவும் மாறிவிட்டன. ஆனாலும் பதுங்கிப் பாய்வதும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரத்துக்கு நாக்கால் நீவி நீவி சுத்தம் செய்வதும் இரண்டு விலங்கிடமும் அப்படியே இன்னமும் இருக்கின்றது. பூனைக்கும் பொல்லாத கோபம் வருகின்றது. மியாவ் என்னும் வழமையான ஒரு மெல்லிய ஒலியை விட, அது இன்னொரு கடுமையான ஒலியை கோபத்தில் எழுப்புகின்றது. காட்டில் புலி சந்தோசமான தருணங்களில் மியாவ் போல மெலிதான ஒலி ஏதாவது எழுப்புகின்றதா என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து போகும் கறுப்பு வெள்ளை பூனைக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக பல வகைச் சாப்பாடுகள் வாங்கி வைத்திருக்கின்றோம். அது ஒரு தெருப்பூனை. அது எங்கே படுக்கின்றது, என்ன செய்கின்றது என்று கூட எங்களுக்கு தெரியாது. சில நாட்களில் அதிகாலையிலே வாசலில் நிற்கும். அதன் உணவைக் கொடுத்தால் சாப்பிடும். பின்னர் போய்விடும். மதியம் வரும், பின்னேரத்திலும் சில நாட்களில் வரும். இன்னும் சில நாட்களில் நன்றாக இருட்டும் வரை வீட்டின் பின்பக்கம் படுத்திருக்கும். இரண்டு வருடங்களின் பின், அதன் வாய் திறந்து மியாவ் என்று சொல்ல ஆரம்பித்தது. நன்றி என்று சொல்வதைப் போல அதன் மியாவ் இருப்பதில்லை. 'நீங்கள் நல்லா இருக்கிறீர்களா..............' என்று கேட்பது போலவே அதன் மியாவ் இருக்கின்றது. சில நாட்களில் ஒன்றும் சொல்லாது. அதன் பிரச்சனை அதற்கு என்று நினைத்துக்கொள்வேன். சேர்ந்தால் போல ஒரு மாதம் வரை வீட்டுப் பக்கம் வராமலும் இருந்துவிடும். அதன் கதை முடிந்து விட்டது போல, இனி இந்த மூட்டை மூட்டையாக கிடக்கும் பூனை உணவுகளை என்ன செய்வது என்று நினைக்க, ஒரு நாள் திடீரென்று வாசலில் வந்து நிற்கும். ஒரு நாள் நான்கு குட்டிகளை கூட்டிக் கொண்டு வந்து, அவைகளுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும் என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன். ஆனால் இது ஆண் பூனை. ஆண் விலங்குகள் பொதுவாக அவ்வளவு பொறுப்பாக நடப்பது இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கின்றன, ஆனால் பூனைகளில் இல்லை என்று நினைக்கின்றேன். ஆகவே நான்கு குட்டிகள் என்றும் வீட்டுப் பக்கம் வரப் போவதில்லை என்றே இருந்தேன். பல வருடங்களின் முன் இங்கிருக்கும் ஒரு வார இறுதி திறந்த வெளிச் சந்தையில் ஒரு மாதுளம் கன்று வாங்கி வீட்டில் நட்டோம். அதை ஏசியன் மாதுளை என்று அவர்கள் சொன்னதாலேயே வாங்கினோம். அமெரிக்கன் மாதுளை கடும் சிவப்பு முத்துகள், அத்துடன் பெரும்பாலானவை பல்லைக் கூச வைக்கும் கூர்மையான புளிப்புச் சுவையும் கலந்தவை. பல்லுப் போனால் சொல்லும் போய்விடும் என்பது ஊரில், இங்கே பல்லுடன் சேர்த்து சொத்தும் போய்விடும். சொத்து ஏற்கனவே இல்லாவிட்டால் பல் வைத்தியம் பார்த்த கடன் ஒரு தலைமுறைக்கு நிற்கும். அதனால் எதுக்கு இந்த அமெரிக்கன் மாதுளை என்று அதை நாங்கள் வீட்டில் வைக்கவில்லை. ஏசியன் மாதுளை ஏசியன் மாதுளை தான். ஊரில் இருக்கும் அதே மாதுளம் பழத்தின் இயல்புகள் தான். ஒரே ஒரு வித்தியாசம் மரத்தில் இருந்தது. மாதுளை மரம் ஒரு சின்ன ஆலமரம் போல பெரிதாக வளர்ந்து வந்தது. இங்கு எல்லாமே பெரிதாகவே இருக்கும், அதற்காக மாதுளை மரமுமா ஆல் போல வளர வேண்டும். அது வளர்ந்து பக்கத்து வீடு, பின் வீடு என்று இரு வீடுகளுக்குள்ளும் புகுந்து நின்றது. அந்த மனிதர்கள் அருமையானவர்கள். இதுவரை எதுவும் சொன்னதில்லை. இந்த மாதுளை மரத்தின் கீழே ஒரு சின்ன கொட்டகை இருக்கின்றது. அதை முன்னர் பார்க்கும் போது பெரிய கொட்டகையாகத்தான் இருந்தது. ஆனால் மாதுளை பிரமாண்டமாக வளர்ந்த பின், கொட்டகை சிறியதாக தெரிய ஆரம்பித்தது. ஒரு நாள் காலை அந்தப் பக்கமாக போன பொழுது கொட்டகையின் கூரையில் சில அசைவுகள் தெரிந்தன. என்னுடைய உயரத்துக்கு கொட்டகைக் கூரையின் மேற்பகுதி முழுவதுமாகத் தெரியாது. ஏணி ஒன்றில் ஏறிப் பார்த்தால், அங்கே நான்கு பூனைக் குட்டிகள் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றன. நான்கில் ஒரு குட்டி கறுப்பு வெள்ளை. ஆனால் எங்களின் கறுப்பு வெள்ளை இவ்வளவு பொறுப்பானவர் இல்லையே, இந்த நான்கும் எங்கேயிருந்து இங்கே வந்திருக்கும் என்று யோசனையாக இருந்தது. மண் நிறத்திலான வரிவரிப் பூனை ஒன்றும் வந்து போவதுண்டு. எங்களைக் கண்டவுடனேயே அது தலை தெறிக்க ஓடிவிடும். அது ஒரு பெண் பூனையாக இருக்கலாம். ஆனாலும் அதன் குட்டிகளை கொண்டு வந்து எங்கள் வீட்டில் விடும் அளவிற்கு அது எங்களை நம்புமா என்று தெரியவில்லை. நான்கு குட்டிகளில் இரண்டு வரிவரிப் பூனைக் குட்டிகளே. பூனைக் குட்டிகள் ஏற்கனவே ஓரளவு வளர்ந்திருந்தன. ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. இரவிரவாக நித்திரை குழம்பிக் கொண்டேயிருந்தது. கூரையில் இருந்து அவை கீழே விழுந்து விடுமா, வேறு ஏதாவது விலங்கு ஒன்று வந்து இந்தக் குட்டிகளை பிடித்து விடுமா என்று பலப்பல யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன. எங்கோயோ பிறந்து இவ்வளவு நாட்களும் மிக ஆரோக்கியமாக ஒரு தாய்ப்பூனையால் மட்டும் வளர்க்கப்பட்ட அந்தக் குட்டிகள் இன்று என் கண்ணில்பட்டதால் என் கற்பனையில் பல ஆபத்துகளின் ஊடாக போய் வந்து கொண்டிருந்தன. காலை பொழுது விடிந்தும் விடியாததுமாக பின்பக்கம் ஓடினேன். ஏணியில் ஏறி எட்டிப் பார்த்தேன். மண் நிற வரிவரி அம்மா அங்கே குட்டிகளுடன் படுத்திருந்தார். என்னை அது நன்றாகப் பார்த்தது. உடனேயே ஏணியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் அது அங்கே இல்லாத நேரங்களில் நான்கு குட்டிகளையும் நன்றாகப் பார்த்துக்கொண்டேன். எது துணிந்த குட்டி, எது பயந்தாக்கொள்ளி என்று அடையாளம் கண்டுகொண்டேன். பயந்தாங்கொள்ளிக் குட்டிக்கு வெளி உதவிகள் கிடைக்காவிட்டால் அது தப்பிப் பிழைப்பது கஷ்டம் என்று வாசித்தது மனைதில் வந்து கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலை அவைகளை பார்த்து விட்டு, மதிய நேரம் மீண்டும் போனேன். மூன்று குட்டிகள் மட்டுமே கூரையில் நின்றன. ஒரு வரிவரிக் குட்டியைக் காணவில்லை. அது தான் பயந்தாங்கொள்ளிக் குட்டி. அய்யய்யோ............ நான் நினைத்தது நடந்து விட்டதோ என்று நன்றாகத் தேடினேன். கொட்டகையின் ஒரு பக்கத்துடன் ஒட்டி இருந்த மாதுளைக் கிளை ஒன்றுக்கு இடையில் அந்தக் குட்டி மாட்டுப்பட்டிருந்தது. கீழேயும் விழாமல், மேலேறி கூரைக்கும் போக முடியாமல் அது கிளைக்கும் கொட்டகை சுவருக்கும் இடையில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சின்ன அசைவு இருந்தது. அது உயிருடன் தான் இருக்கின்றது என்று தெரிந்தவுடன், வீட்டுக்குள் மீண்டும் ஓடினேன். 'னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............' 'அதைப் பிடித்து விடுகிறது தானே................' 'நீங்கள் ஒருக்கால் வாங்கோ............' மனைவி அவசரம் அவசரமாக வந்தார். அங்கே இருந்த ஒரு சின்ன துவாயை எடுத்துக் கொண்டு நான் அவர் பின்னால் அவசரமாக ஓடினேன். நான் இந்த மரக் கொப்பை இழுக்கின்றேன், நீங்கள் குட்டியை கீழு பிடித்து கூரைக்கு தள்ளி விடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். குட்டி துள்ளிப் பாய்ந்து கூரைக்கு ஓடியது. போன உயிர் வந்தது. பயந்தாங்கொள்ளிகளுக்கு எப்போதும் ஒரு துணையும் உதவியும் தேவைப்படுகின்றது.
  2. ஒரு பயந்தாங்கொள்ளியாற்தான் மற்ற பயந்தாங்கொள்ளியை இனங்காண முடியும். நசிந்து தொங்கும் பூனைக்குட்டியை கண்டவுடனேயே ஓடிய ஆள் எப்படியான ஆள்? தூக்கிவிடவே பயம். அதுக்கு அந்தபெண் பூனையே பரவாயில்லை, அங்கேயே துணிந்து குட்டி போட்டு பாதுகாத்திருக்கிறது. அதற்குள் பயந்தாங் கொள்ளிகுட்டியெது என்கிற ஆராய்ச்சி வேறு. நல்லவேளை! இவர் கடுவன் பூனையின் கண்ணில் படவில்லை.
  3. அகதியாக வந்தவர்களுக்கு உணவு உடை தந்து படிப்படியாக முன்னேற வைத்து வாழ வகை காட்டிய என் கனேடிய நாட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், நேர்மையாக வாழ்ந்து , நாட்டுக்கு உண்மையாக இருப்போம். கலாச்சாரத்தை பேணுவோம். யாரும் வரலாம் கல்வித் திறமையோடு நேர்மையான வழியில் புலம் பெயருங்கள். என்றும் வாழிய வாழியவே ... (நேற்று கொலிடே பிசி )
  4. நிச்சயமாக ஈழப்பிரியன். ஜூன் மாத கணக்கில் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு பேரையும், எங்கள் வீட்டில் இருந்து மூன்று பேரையும், @Paanch வீட்டிலிருந்து இரண்டு பேரையும் கணக்கில் சேர்த்து இருப்பார்கள். நாங்கள் ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்கா விட்டால்... 138,241 - 7 = 138,234 சுற்றுலா பயணிகளாக கணக்கு இருந்தது இருக்கும். 😂 இப்ப ஸ்ரீலங்காவுக்கு போன ஆட்கள் ஆரெண்டு பார்த்தால்... முன்னொரு காலத்திலை Boycott Srilanka என்று கம்பு சுத்திக் கொண்டு திரிஞ்ச ஆட்கள்தான். 🤣
  5. இதில் ஒரேயொரு தகவல் பிழை இருக்கிறது: சர்வாதிகாரியான பரிஸ்ரா 1950 கள் வரையில் அமெரிக்க, மேற்கு சார்ந்த அரசொன்றை நடத்தி வந்தார். ஆனால், உள்ளூர் மக்களுக்கு பல துன்பங்கள், மனித உரிமை மீறல்கள் அவரால் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்காவும் அவரைக் கண்டிக்க ஆரம்பிக்க, பிடல் காஸ்ரோவின் புரட்சியினால் 1953 இல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. கியூபப் புரட்சியின் பின்னர் உடனடியாக அமெரிக்கா தடைகளை விதிக்கவில்லை. காஸ்ரோ கூட ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் சோவியத் பக்கம் சாய்ந்து விடவில்லை. 1959 இல் கியூபத் தலைவரான காஸ்ரோ அமெரிக்காவிற்கு வந்த போது அவருக்கு மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். அந்த நேரம் உப ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் காஸ்ரோவைச் சந்தித்துப் பேசிய பின்னர் "a nice young man with strange ideas" என்று தன் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். 1961 இல் கியூபாவைக் கைப்பற்ற சி.ஐ.ஏ தன்னிச்சையாக முயன்ற பன்றிக் குடா நடவடிக்கை, பின்னர் 1962 இல் சோவியத் ஏவுகணைகளை இரகசியமாக கியூபாவினுள் நிறுத்த முயன்றமை, இந்த இரு கட்டங்களில் தான் கியூபா மீது பொருளாதாரத் தடைகள் முகலில் போடப் பட்டன.
  6. @ரசோதரன் 10 நாட்கள் மெதுவாக என் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன, இன்று தான் வாசித்தேன். அருமையான ஜீவ காருண்யக் கதை! அமெரிக்காவில் உரிமையாளர் இல்லாத நாய்களைக் காண முடியாது, ஆனால் உரிமையாளரும், வீடும் இல்லாத பூனைகள் எல்லா நகரங்களிலும் காணலாம். எமது வீட்டுச் சுற்றாடலிலும் ஒரு கறுப்பு வெள்ளைப் பூனை இப்படிச் சுதந்திரமாக உலவுகிறது. அவருக்கு ஒரு நேர சூசிகையும் இருப்பதைக் காண்கிறோம். இரவு 7 மணிக்கு முன் வளவினால் நடந்து வளவின் இடது மூலைக்குப் போய் விட்டு, 8 மணியளவில் அதே பாதையால் திரும்பிச் செல்லும். முன் பக்கக் கமெரா இரவு 7 க்கும் 8 க்கும் அலேர்ட் கொடுத்தாலும் இப்போது மெனக்கெட்டுப் பார்ப்பதில்லை, "பூனை குறொஸ்ஸிங்" 😂 என்பது தெரிந்திருப்பதால். தாய்ப்பூனையோ, கடுவன் பூனையோ குட்டிகளைச் சாப்பிடுவது சாதாரணமாக/இயற்கையாக நிகழ்வதில்லை. நாய், பூனை , எலி போன்ற விலங்குகள் குட்டியீன்ற பதட்டத்தில் இருக்கும் போது சில சமயங்களில் இது (cannibalism) நிகழும். குட்டியீன்ற இந்த விலங்குகளை மனிதர்கள் கிட்ட நெருங்கி பதட்டத்தைக் கூட்டினால் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே தான், குட்டியீன்ற மாமிசமுண்ணி விலங்குகளை அதிகம் நெருங்கிச் சென்று பதட்டப் படுத்தாமல் விலகி நடந்து கொள்ள வேண்டும். பூனையைப் பற்றிப் பேசும் போது இன்னொரு ஆச்சரியமான விடயமும் மிருகவைத்தியப் பார்வையில் குறிப்பிடத்தக்கது: ஒரு வளர்ப்பு (domesticated) யானையைப் பரிசோதிக்க பக்கத்தில் அதன் பாகன் இருந்தால் ஒருவர் போதும். ஆனால், ஒரு வளர்ப்புப் பூனையைப் பரிசோதிக்க மூவர் தேவை: ஒருவர் முன் கால்களையும், தலையையும் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொருவர் பின்கால்களைத் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவர், மிருக வைத்தியர், பரிசோதிக்க வேண்டும். இல்லையேல், நகங்களை வெளியே நீட்டிய கால்களால், தாறுமாறாகக் கீறித் தள்ளி விடும்!
  7. மகள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் இப்படி பேசுகிறார் என்றால், கணவன் குடும்பத்தால் சித்ரவதை என்று அந்த இளம் பெண் வந்து கதறிய போதெல்லாம் இந்தாள் எவ்வளவு பிற்போக்கு தத்துவங்களை மகளுக்கு போதித்திருப்பார்? பாவம் அந்த பெண்.. பொறந்த வீடும் சரியில்ல.. புகுந்த வீடும் சரியில்லை... சுடுகாடே பரவாயில்லைனு நினைச்சுட்டாங்க போல.. Ezhumalai Venkatesan
  8. தொழில் இல்லாதவர்களுக்கும் பெண்ணிடம் சன்மானம் கேட்கும் தன்மானமில்லா ஆண்களுக்கும் ஏன் பெண்ணை கொடுக்கிறார்கள் ?
  9. கடுவன் பூனைகளிடமிருந்து தாய்ப்பூனை தன் குட்டிகளை சிறிது காலம் கவனமாக பாதுகாக்கும். கடுவன் பூனை சிறு குட்டிகளை கடித்து தின்பது உண்மைதான்.
  10. பட மூலாதாரம், BOOPATHY கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 30 ஜூன் 2025 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.] ''போலீசோ, வேற யாராச்சும் வந்து கேட்டா, எனக்காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை போட்டுக் காமிச்சிருங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் காரணம். உடல்ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்; மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்...என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு...என்னை மன்னிச்சிருங்கப்பா...என்னை மன்னிச்சிருங்கம்மா...!'' திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், தனது தந்தைக்குப் பதிவு செய்து வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய ஆடியோவில் கூறப்பட்டிருந்த வார்த்தைகள் இவை. அவருடைய இந்த ஆடியோ வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் கைகாட்டிபுதுாரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரிதன்யா(வயது 27). ரிதன்யா, எம்.எஸ்.சி.–சிஎஸ் படித்தவர். இவருக்கும் அவினாசி பழங்கரையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 அன்று திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 77 நாட்களே ஆனநிலையில், கடந்த ஜூன் 28 அன்று, ரிதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். பட மூலாதாரம்,BOOPATHY 'திருமணமாகி 2 வாரங்களில் திரும்பிய ரிதன்யா' அவினாசி–சேயூர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருமணமாகி 2 வாரங்கள் மட்டுமே, ரிதன்யாவும், கவின்குமாரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அதற்குப்பின், பிரச்னையாகி ரிதன்யா தன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு 20 நாட்கள் இருந்துள்ளார். அப்போது கவின் அவ்வப்போது வந்து பார்த்துச்சென்றுள்ளார். பெற்றோர் மீண்டும் ரிதன்யாவிடம் பேசி, அவரை கவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கும், வேறு சில இடங்களுக்கும் சுற்றுலா சென்றுள்ளனர். இரு வாரங்கள் சந்தோஷமாக இருந்த நிலையில், மீண்டும் கடந்த ஜூன் 22 அன்று ரிதன்யாவை கவின் அழைத்து வந்து, அவரின் தந்தையின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது ரிதன்யா மிகவும் சோகமாக இருந்துள்ளார். தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாமென்று ரிதன்யா கூறிய நிலையில், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஒரு வாரம் அப்பாவின் வீட்டில் இருக்க ஆசைப்பட்டதால் கொண்டு வந்து விட்டதாக அண்ணாதுரையிடம் கவின் கூறியுள்ளார். ரிதன்யாவை விட்டுச்சென்ற பின், ஜூன் 23 மற்றும் ஜூன் 27 ஆகிய இரு நாட்களும் கவின் வந்து பார்த்துச் சென்றுள்ளார். மறுநாள் ஜூன் 28 அன்று, சேயூர் மொண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி காரை தனியாக எடுத்துச் சென்றுள்ளார் ரிதன்யா. வாரம் ஒரு முறை அவர் அந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்பதால் அவரை தனியாக அனுப்பியுள்ளனர். அன்று மதியம் ஒரு மணிக்கு ரிதன்யாவின் தாயார் ஜெயசுதாவுக்கு ரிதன்யாவின் மொபைலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், இந்த எண் யாருடையது என்று கேட்டு, செட்டிபுதுார் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு பெண் மயங்கிக் கிடக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார். உடனே ரிதன்யாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு செல்வதற்குள் அவரை அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். முதலில் ரிதன்யாவின் தற்கொலை குறித்து, அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் போலீசில் தெரிவிக்கவில்லை. அதனால் சேயூர் போலீசார் தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்கொலை செய்வதற்கு முன்பாக, ஜூன் 28 மதியம் 12 மணியளவிலேயே அவர் ஆடியோ பதிவு செய்து, தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார். அப்போது மொபைலில் 'நெட்'டை அணைத்து வைத்திருந்ததால் வாட்ஸ்ஆப் தகவலை பெற முடியவில்லை. அன்றிரவு, உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக, இரவு 11 மணியளவில் அண்ணாதுரையின் மொபைலில் 'நெட்'டை அவருடைய உறவினர் ஒருவர் 'ஆன்' செய்தபோது, ரிதன்யாவின் மொபைல் எண்ணிலிருந்து 10 ஆடியோ பதிவுகள் வந்துள்ளன. அதில் தன்னுடைய தற்கொலை முடிவு பற்றி, அழுதவாறே பேசியுள்ள ரிதன்யா, அந்த ஆடியோக்களை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பியிருந்தது தெரியவந்தது. அந்த ஆடியோக்களில் தன்னுடைய தற்கொலை முடிவுக்கு கவினும், அவருடைய தாயும், தந்தையுமே காரணமென்று தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,BOOPATHY படக்குறிப்பு,கணவர் குடும்பத்துடன் ரிதன்யா '300 சவரன் நகை, புது வால்வோ கார், திருமண செலவு ரூ.3 கோடி' இந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ரிதன்யாவின் தந்தை, சேயூர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியது (IPC 306) உள்ளிட்ட பிரிவுகளில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாயார் சித்ரா தேவி ஆகியோர் மீது சேயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவின்குமாரும், ஈஸ்வரமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். உடல்ரீதியான பாதிப்பு காரணமாக, சித்ரா தேவியை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், ''300 சவரன் போட்டு 70 லட்ச ரூபாய்க்கு வால்வோ காரும் வாங்கிக்கொடுத்தோம். அதில் 150 சவரன் அங்கே இருந்தது. மீதம் என் வீட்டில் இருந்தது. ஆனால் அதற்கு மேலும் கேட்டு, டார்ச்சர் செய்து, இரண்டே வாரத்தில் மகளை என் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். நானும் எல்லாம் சரியாகிவிடுமென்று சமாதானப்படுத்தி பேசி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆனால் வெளியில் சொல்லவே முடியாத அளவுக்கு உடல்ரீதியான கொடுமைகளை அவள் அனுபவித்துள்ளார்.'' என்றார். ''என்னிடமும் என் மனைவியிடமும் கூட முழுமையாக எதையும் சொல்லாமல், அவள் மாமியாரை வரச்சொல்லி, என் வீட்டில் வைத்தே ஒன்றரை மணி நேரம் தனியாகப் பேசினாள். அதன்பின், மாமியார் எங்களிடம் வந்து, 'எங்க பையன் இப்படி இருப்பான்னு எங்களுக்கே தெரியலை. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.' என்று கூறி அழைத்துச் சென்றார். மறுபடியும் 20 நாளில் திரும்பிவிட்டாள். பையனுக்கு தொழில் இல்லை. உறவினர்களில் பலர் 100 கோடி ரூபாய் செலவழித்து அவரவர் மாப்பிள்ளைக்குத் தொழில் செய்து கொடுத்துள்ளனர். உங்க அப்பா 500 சவரன் போடுவதாகக் கூறி பாதியளவும் போடவில்லை என்று எல்லோரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.'' என்றும் அண்ணாதுரை தெரிவித்தார். மாப்பிள்ளைக்கு தனியாக தொழில் இல்லாவிடினும், 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை வாடகை வந்ததால் வருமானம் இருக்கிறதென்று திருமணத்துக்கு 3 கோடி ரூபாய் செலவழித்ததாக பிபிசி தமிழிடம் கூறிய ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, தற்கொலைக்கு முன்பாக ரிதன்யா, தன் தந்தைக்குப் பேசி அனுப்பிய ஆடியோக்களை பிபிசிடம் பகிர்ந்தார். அதில் பேசியுள்ள ரிதன்யா, தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக மீண்டும் மீண்டும் பல முறை தெரிவித்துள்ளார். தன்னுடைய தற்கொலை முடிவுக்கு, கவினும், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தியும், அவருடைய தாயார் சித்ராதேவியும்தான் காரணமென்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,BOOPATHY படக்குறிப்பு, பெற்றோருடன் ரிதன்யா மகளுக்கு நீதி வேண்டுமென்று கேட்கும் தந்தை! தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என்று கண்ணீரோடு பேசினார் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை. கவின் குடும்பத்தினருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, பிபிசி தமிழிடம் பேசுகையில் குற்றம் சாட்டினார். ரிதன்யாவின் ஆடியோவில், தன்னுடைய தற்கொலைக்கு கவின் மற்றும் அவருடைய தாய், தந்தை இருவரும் காரணமென்று தெளிவாகக் கூறியிருந்தும் கவினையும், அவருடைய தந்தையை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுபற்றி சேயூர் காவல் ஆய்வாளர் ராஜபிரபுவிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அவருடைய தாயார் வயது முதிர்ந்தவர். சமீபத்தில்தான் அவருக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. விசாரணையின் போதே, அவர் அடிக்கடி மயக்கமாகிவிட்டார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டே உடனடியாக அவரைக் கைது செய்யவில்லை. ஆனால் வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.'' என்றார். ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தரப்பில் அவர்களுடைய உறவினர் யாரிடமும் கருத்துப் பெற முடியவில்லை. அவர்கள் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சண்முகானந்தன், ''கவின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி யாரும் பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் சார்பில் நானும் எந்தக் கருத்தும் கூற முடியாது. '' என்றார். திருமணம் முடிந்த 77 நாட்களில் இந்த மரணம் நடந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தனது விசாரணையை இன்று காலையில் துவக்கியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவினாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், ''தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் ஆடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் கூறியுள்ள தகவலின் அடிப்படையில், அவரின் கணவர், மாமனார், மாமியார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிதன்யாவின் ஆடியோவில் எந்த மாதிரியான கொடுமை நிகழ்ந்தது பற்றி எதுவும் கூறவில்லை. அதனால் இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது. இரு தரப்பிலும் விசாரித்தபின்பே தெளிவான காரணங்கள் தெரியவரும்.'' என்றார். பட மூலாதாரம்,BOOPATHY நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4nnp0wq7yo
  11. இந்த 25+ நிமிட காணொளியை காணவும். https://youtu.be/vOL8YgX0suY?si=M4BWna4Inscy51gg
  12. இதில் முதல் குற்றவாளி வரதட்சணைதான் (A # 1), எமது சமூகத்திலும் வரதட்சணை வாங்குபவர்கள் உள்ளார்கள், ஆதிலும் பெரும்பாலானாவர்கள் படித்தவர்கள்தான் இந்த வரதட்சணை வாங்குபவர்களாக உள்ளார்கள். சிலர் வரதட்சணை கொடுப்பதினை பெருமையாக நினைப்பவர்களும் உள்ளார்கள். எமது சமூகத்தில் வரதட்சணையினை ஒரு பிற்போக்குத்தனமாக பார்க்கும் நிலை கூட இல்லை.
  13. எதையும் இலகுவாக சொல்லலாம்.போராட்டம் என்று வரும் போது கூட எவ்வளவு தூரம் அந்த குடும்பம் பின்னோக்கி சிந்திக்கிறது என்பதை பொறுத்தது தான் பெண்ணின் அடுத்த கட்ட முன்னேற்றம் இருக்கிறது.அது யாராக இருந்தாலும் அந்தந்த துன்பங்களை அனுபவிப்பர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
  14. ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி எல்லோர் வாழ்விலும் இதை நினைவில் கொள்ளுங்கள். உனக்காக நீ போராடு ....மிகவும் விருப்பமான ஒரு சொற் பதம் என் வாழ்விலும் நடந்திருக்கிறது போராடி எடுத்த ஒரு விடயம்.
  15. வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு? வரதட்சிணை கொடுமையால் உயிரிழப்புகள் ஏற்படுவது நம் நாட்டில் அரிதான நிகழ்வொன்றும் அல்ல. அது ஊடகத்தின் ‘பிரதான கவனம்’ பெறுவதுதான் அரிதான நிகழ்வு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருமணமான 4-ம் நாளில் 24 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கும், 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ரிதன்யா தற்கொலை செய்யப்பட்டதற்கும் இந்தச் சமூகம் ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே மாதிரியான அக்கறையோடு கருத்துகள் தெளிக்கப்படவில்லை. எதிலும் அரசியல் என்பதுபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் எதற்கு அதிக கவனம் என்பதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பெண் என்றாலே பெரும் அரசியல்தான். 100+ சவரன் நகை என்பதால் கேரளத்து விஸ்மயாவையும், தமிழகத்து ரிதன்யாவையும் ஹைலைட் செய்துவிட்டு வெறும் 1 பவுன் நகை என்பதால் திருவள்ளூர் மகேஸ்வரியை துணுக்குச் செய்தியாக்காமல் இருப்போம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு உட்பட்ட நடக்கும் ஒவ்வொரு வரதட்சிணைக் கொடுமையையும் அதே முக்கியத்துவதோடு அணுகும்போது சமூகத்தில் அது அடிக்கடி பேசப்படும் பொருளாகும். வரதட்சிணைக் கொடுமைகளில் ஈடுபட நினைப்போருக்கு சமூகப் பார்வை நம் மீது இருக்கிறது என்று உள்ளூர ஓர் அச்ச உணர்வு ஏற்படக் கூடும் என்ற அக்கறையை பதிவு செய்து கொண்டு, ‘வரதட்சிணை கொடுமைக்கு பெண்கள் ‘பலி’ ஆக பெற்றோரும் காரணமா?’ என்ற வாதத்துக்கு நகர்வோம். ரிதன்யாவும் பெற்றோரும்.. - “மாற்று வாழ்க்கையை அமைப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. என் பொண்ணு ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லி இறந்துட்டா. அதுல எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. பெண்ணை இழந்தால் கூட. அதேமாதிரி எல்லா பொண்ணும் இருக்கணும்னு நான் நினைக்கல. வாழுறதுக்கு வழி இருக்கு. வாழலாம். தன் வாழ்க்கைய மாய்ச்சுதான் இந்த உலகத்தைவிட்டுப் போகணும்னு முடிவெடுப்பது தவறுதான்” - சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் ரிதன்யாவின் தந்தை பேசிய வீடியோவில், அவர் இவ்வாறு கூறுவது பதிவாகியுள்ளது. அவரது இந்தப் பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது. உண்மையில் ஓர் அரதப் பழசான, ஆணாதிக்கம் தடித்த வாக்கியம் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம். எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர், 12-ம் வகுப்பு படிக்கும் மகளின் திருமணம் பற்றி அடிக்கடி கனவுகளோடு பேசுவார். “என் மகளுக்கு 300 பவுனாவது நகை போட்டு, ஜாம் ஜாம்னு திருமணம் செய்ய வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார். அவர் 40+ இளைஞர்தான். படித்தவர். வியாபாரத்தில் வெற்றி கண்டவர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி விசிட் கொடுப்பவர். செல்போன் முதல் கார் வரை எல்லாவற்றையும் லேட்டஸ்டாக அப்கிரேட் செய்பவர். ஆனால், அவர் வரதட்சிணை ஐடியாலஜியை மட்டும் சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை. அதாவது, அவரது வெற்றியும், கவுரவமும் மகளின் திருமணத்தை எவ்வளவு பகட்டாகச் செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று நம்புகிறார். அல்லது, அவ்வாறு நம்ப இந்தச் சமூகத்தால் பழக்கப்படுத்தப்பட்டுள்ளார். 5 பவுனோ, 500 பவுனோ மகளை கல்யாணச் சந்தையில் வியாபாரம் செய்துவிடுவதுதான் தகப்பனின் தலையாயக் கடமையாக இருக்கிறது. இதில் ரிதன்யாவின் தந்தையோ, மகேஸ்வரியின் தந்தையோ விதிவிலக்கல்ல. மகளுக்கு வரதட்சிணை கொடுப்பது ஒரு குற்றம் என்று புரியாமலேயே அதை ஊக்குவிக்கும் அனைத்து பெற்றோருமே வரதட்சிணை மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் தான். வரதட்சிணை கொடுப்பது குற்றம் என்பதால், வரதட்சிணை மரணங்கள் நிகழும்போது பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்வதும் வழக்கத்துக்கு வர வேண்டும். மகளை தொலைத்த துயரத்தில் இருப்பவர்களுக்கா? என்று கேட்காமல், இதை ஊக்குவிக்க வேண்டும். பெண்ணின் பெற்றோர்கள் எப்படி வரதட்சிணையை தங்களின் பெருமித அடையாளமாகக் கருதுகிறார்களோ, ஆணின் பெற்றோர்கள் வரதட்சிணையை அவர்களின் உரிமையாகக் கருதுகிறார்கள். அந்த வகையில், வரதட்சிணைக் கொடுமைகளுக்கு பெருங்காரணம் ஆணின் பெற்றோர் தான் என்றால் அது மிகையாகாது. தங்கள் மகனை எத்தனை பணத்துக்கு வியாபாரம் செய்யலாம் என்று கணக்குப் போடுபவர்கள் அவர்கள்தான். வரதட்சிணை கேவலம் என்று எந்த ஆண் மகனின் பெற்றோரும் அவரிடம் சொல்வதாகத் தெரிவதில்லை. மாறாக “உனக்கு இருக்கும் அழகுக்கும், சம்பாத்தியத்துக்கும்.. ” என்று கல்யாணச் சந்தையில் தன்னை ஒரு “பிராண்டாகக்” கருதப் பழக்குவதே ஆணின் பெற்றோர்கள் தான். திருமணத்துக்கான தகுதி என்பது பெண்ணை இணையராக நடத்தும் பக்குவம் மட்டுமே. இதை எத்தனை பெற்றோர் ஆண் பிள்ளைக்கு சொல்லி வளர்க்கிறார்கள். அப்பா, அண்ணன், அக்கா / தங்கையின் கணவர் எப்படி வாழ்க்கைத் துணையை நடத்துகிறார்களோ அப்படியே தனக்கு வரும் பெண்ணையும் அணுகுவது அவனுக்கு இயல்பானதாக இருக்கிறது. மேலும், மனைவி என்றால் நம் பாலியல் தேவைக்கான நுகர்பொருள் என்ற போக்கும் குடும்பங்களில் ஊக்குவிக்கப்படுகிறது. பெண்ணின் மனது என்னவென்பதை தாராளமாக வெளிப்படையாக தாய் தன் மகன்களிடம் பேசலாம். குற்றாச்சாட்டுகளை சுமத்தும் முன்... - ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம் எல்லாம் 27 வயதான, கல்லூரி படிப்பு முடித்த, கார் ஓட்டத் தெரிந்த, தந்தையின் தொழிலை நிர்வகித்து பழக்கமுள்ள, வசதியாக வளர்ந்த பெண்ணின் மனதில் பதிவாகிறது என்றால், அதற்கு குடும்பச் சூழலும் தூபம் போடாமல் இருந்திருக்க முடியாதல்லவா? ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு இயல்பாகக் கடத்தப்பட்டுவிடும். சிலர் மட்டுமே கல்வி, வாசிப்பு என்ற சிறகை விரித்து தேவையற்றதை விட்டொழிப்பார்கள், இல்லை குடும்பத்துக்கே புரிய வைப்பார்கள். ரிதன்யாவுக்கு என்ன மாதிரியான பழக்கவழக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டன என்பது வெளியில் இருந்து இந்த தற்கொலை விவகாரத்தை அணுகும் நமக்கு முழுமையாகத் தெரியாது என்றாலும் கூட மகளின் மரணத்துக்கு அவர் சொன்ன காரணத்தை உயர்த்திப் பிடிக்கும் தந்தையின் பேச்சு பிற்போக்கானது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும் கூட. அதேவேளையில் தற்கொலை முடிவு தவறானது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை ரிதன்யாவின் தந்தை கூறியுள்ளார். மறுமணம் அவரவர் விருப்பம் என்பதிலும் உடன்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்தும் முன்னர் அவருடைய இந்த நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டுவது அவசியம். நமக்கு நாமே... - பெண் சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் தானமாகக் கொடுப்பது அல்ல. இந்தா வைத்துக் கொள் என்று யாரும் நமக்கு பொட்டலம் கட்டிக் கொடுக்க மாட்டார்கள். பெண் சுதந்திரத்துக்கான பெரிய திறவுகோல் கல்வி. கல்லூரிக் கல்விவரை இன்றைய பெண்கள் கற்பது எளிதாகவே வசப்படுகிறது. கல்லூரியில் நீங்கள் என்னப் பாடம் வேண்டுமானாலும் படியுங்கள், ஆனால் அங்கேயும் சென்று பணக்காரர்களாக திரள்வது, ஊர்க்காரர்களாக திரள்வது, சாதிக்காரர்களாக திரள்வது என்று சுருங்காதீர்கள். பாடப் புத்தகத்தைத் தாண்டி வாசியுங்கள். சினிமா, பொழுதுபோக்கு தாண்டி அரசியல் பேசுங்கள். இன்னமும் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்று கூடத் தெரியாமல் பட்டம் பெறும் மாணவிகள் உள்ளனர். நீங்கள் பெறும் பட்டம், திருமணப் பத்திரிகையில் பதிவு செய்வதற்காக மட்டுமே இருக்குமாயின் நீங்கள்தான் வேண்டி விரும்பி அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். பணம் சம்பாதிக்கத் தேவையில்லை என்றாலும் பணிக்குச் செல்லுங்கள். நட்பு, வாசிப்பு, பணியிடம் என பயணப்படும்போது வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி குறைந்த பட்ச அறிவாவது பெண்களுக்கு இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு இந்தச் சட்டங்கள் பற்றிய கையேடுகளைக் கொடுக்கலாம். அது பற்றிய விவாதங்களை ஊக்குவிக்கலாம். பெற்றோர், சமூகம், கல்வி நிறுவனங்கள் தாண்டி பெண்கள் தங்களுக்காக நிற்க வேண்டும். ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பழமொழி எழுதப்பட்ட கால, சூழல் வேறு. அதற்கான களமும் வேறு. ஆனால், வெகு நிச்சயமாக பெண்களுக்காக பொருத்திப் பார்க்கலாம். நீங்கள் உங்களுக்கான சுதந்திரத்தை யாராவது கொடுப்பார்கள் என்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தால், யாரும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்காகப் போராட உங்களைவிட மிகத் திறமையானவர், தகுதியானவர் யாரும் இருக்க முடியாது. எந்தச் சூழலில் மீண்டெழ கல்வி அவசியம். அதை வாழ்க்கைக்குமானதாக மாற்றிக் கொள்வது உங்கள் வசம். இப்போது அதை செய்யாவிட்டால், எப்போது செய்யப்போகிறீர்கள் பெண்களே..! இது ஒரு கூட்டுப் பொறுப்பு: இங்கே சமூகத்தையும், பெறோரையும் பெண் சுதந்திரத்தை மதியுங்கள் என்று அறிவுரை சொல்லும் அதேவேளையில் ஆண்களுக்கும் முக்கியமாக சில அறிவுறுத்தல்கள் உள்ளன. எத்தனை காலம் தான் நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களாக, வரதட்சிணைக் கொடுமை செய்பவர்களாக, பெண் அடிமைத்தனம் செய்பவர்களாக, குடும்பத்தின் கவுரவத்தை பெண்ணின் தலையில் சுமத்துபவர்களாக இருப்பீர்கள். கொஞ்சமேனும், வெட்கப்பட மாட்டீர்களா? சிறிதளவேனும் உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்த மாட்டீர்களா?. உங்கள் கல்வியை சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாது சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் பயன்படுத்தும் வகையில் கற்றுக் கொள்ளுங்கள். பள்ளி, கல்லூரி, பணியிடம் என்று பாலின சமத்துவத்தை மதியுங்கள். அதுவே இல்வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும். படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள், எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? டிரீம் வெட்டிங் செய்வீர்களா? என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறா பெண்கள். வரதட்சிணைக் கொடுமையால் நிகழும் மரணங்களில் இவர்கள் எல்லோருமே ஸ்டேக் ஹோல்டர்ஸ்தான். இதனை ஒழிப்பதென்பது சமூக கூட்டுப் பொறுப்பே! https://www.hindutamil.in/news/life-style/1367877-will-the-rithanya-case-serve-as-a-wake-up-call-for-parents-who-perpetuate-dowry-culture-4.html
  16. பிள்ளை முறையிடும் போது "நம்ம வீட்டுக்கு வாம்மா" நான் பார்த்து கொள்வேன் என தைரியம் கொடுத்திருக்கலாம் தானே ..அல்லது போய் என்ன எது என்று பார்த்திருக்கலாம் தானே மணப்பெண் வீட்டுக்கு வந்தால் ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என்று...படித்த பிள்ளை எவ்வளவு செல்லமாக வளர்த்திருப்பார் . கடைசியில் ....இப்படி போய்விட்டாயே அம்மா ? கண்டறியாத ஒருவனுக்கு ஒருத்தி ...அது உண்மையான பாசமுள்ள கணவனாய் இருந்தால் மட்டும். இவ்வ்ளவும் செலவு செய்து கட்டி கொடுத்த மனுஷன் உன்னை பார்க்கமலா விட்டு விடுவார்.
  17. 🤣......... கனடாவில் கார் ஓட்டிப் பாருங்கள்....... 'கமரா......... கமரா.........' என்று விடாமல் ஒரு பயம் காட்டுவார்கள் பாருங்கள்...... மன்னன் அலெக்ஸாண்டரே பயந்து போய் விடுவார்..........
  18. இதற்காக ஒரு நோபல் பரிசை கேட்டுப் பார்ப்பமோ என்றும் ஒரு ஐடியா உள்ளுக்குள் வருகின்றது.........🤣.
  19. எல்லாம் வீட்டுக்காரி இந்தப்பக்கம் வரமாட்டார், படிக்கமாட்டார் என்கிற துணிவுதான்.
  20. அந்தப் பக்கம் நல்ல துணிவாகத்தான் இருக்குது....... நாங்கள் தான் இப்படி ஆகிவிட்டோம்...... கல்யாணத்தின் பின்........🤣.
  21. இந்த வசனத்தைப் பாருங்கோ ..விளங்கும்.. னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............'
  22. ரசோதரன் எனக்கு ஒரு சந்தேகம். பயந்தாங்கொள்ளி என்பது யார்? நான்கு கால் பூனையா? இரண்டு கால் பூனையா?
  23. நீங்கள் ஒர் தமிழ் "அனுரா"😂 அனுரா உங்கள் பல்கலைகழக சக தோழர் என்பது இந்த செயலில் இருந்து தெரிகிறது..😂
  24. சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை நக்கிறதாம். கேள்விப்படவில்லையா சிறியர்? எய்தவர்கள் பிடிபட வேண்டும். அம்புகளை பிடிப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை.
  25. சிறிலங்கா பொலிசாரும் இடுப்பு பெல்ட் கட்டி தங்களது தொப்பையை குறைக்க வேணும் என அமைச்சர் கேட்டுள்ளார்
  26. இந்த தடவை யாழிலிருந்து விமானநிலையம் போகும்போது நாங்கள் வந்த வான் பழைய இலக்கத்தகடு என்றபடியால் அதற்கு இருக்கைப் பட்டிகள் அணியத் தேவையில்லை என்று சாரதி சொன்னார். இருந்தாலும் பழக்க தோசத்தில் அணிந்திருந்தேன். இடையிடை அது தானாகவே கழன்று கொண்டிருந்தது. தேடித்தேடி மீண்டும் மீண்டும் அணிந்தேன். பயணிகள் எல்லோரும் கட்டாயம் இருக்கைப் பட்டிகள் அணிய வேண்டுமென்றால் இலங்கையில் அநேகமான வாகனங்கள் ஓடவே முடியாது.
  27. இது நம்ம அண்ணன் அடிக்கடி சொல்லும் தெலுங்கு வந்தேறி எல்லொ😂.. பிகு தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டை கொழுத்தும் 🤣
  28. மேற்குலகினை எதிர்க்கிறோம் என்ற நினைத்துக் கொண்டு அவற்றிற்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு பக்கமும் சிந்திக்க வேண்டும். வடகொரியா ஈரான் போன்ற சர்வாதிக நாடுகள் தமது சொந்த மக்களையே அடக்குமுறைக்குள் வைத்துக் கொடுமைப் படுத்துபவை. நாளை இவற்றிற்கு மேற்குலகிற்கு நிகரான சக்தி கிடைக்குமாக இருந்தால் இவை தனது எதிரி நாடுகளை நட்புடன் கையாளும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது ? இதற்கு தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்திக்க வேண்டியதில்லை. அணுவாயுதம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஈரானின் கொள்கை தவறானது. மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல் அறிவியலில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைய முடிந்தால் ஈரானின் எதிர்காலத்துக்கு நல்லது. இன்று தனது சொந்த வான்பரப்புப் பாதுகாப்பையே முற்றாக இழந்து நிற்கும் நிலை எதிர்காலத்தில் ஏற்படாது..
  29. திருவிழா கூட்டத்தில் இரண்டு நபர்கள் அவரவர் மனைவிகளை தொலைந்துவிட்டார்கள். அந்த இருவரும் அவர்களது மனைவிகளை தேடி அங்கும் இங்குமா தேடித் திரிந்தார்கள்.பிறகு.... அவர் : ஏங்க,உங்க மனைவியும் காணவில்லையா? இவர் : ஆமாங்க.அரை மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என் மணைவி இன்னும் கிடைக்கல.உங்க மனைவி கிடச்சுட்டாங்களா? அவர் : அட இன்னும் கிடைக்கலங்க. நானும் தேடிட்டு தான் இருக்கேன். ஆமா உங்க மனைவி எப்படி இருப்பாங்க? இவர் : என் மனைவி பாக்குறதுக்கு நயன்தாரா சாயல்ல இருப்பாங்க.அவ சிரிச்சா கண்ணத்துல அழகா குழி விழும்.அதுக்கு பக்கத்துலயே சின்ன மச்சம் ஒன்னு இருக்கும்.ரோஸ் கலர் சாரி கட்டியிருப்பா.பாக்குறதுக்கு சின்ன பொண்ணு மாதிரியே இருப்பாங்க. சரிங்க உங்க மணைவி எப்படி இருப்பாங்கனு சொல்லுங்க? அவர் : அத விடுங்க. அவ கிடக்குறா கழுதை. வாங்க முதல்ல உங்க மனைவியே தேடுவோம்.
  30. நீங்கள் குறுக்கிடவில்லை அண்ணை. கேட்டதற்காகச் சுருக்கமாக சில பதில்கள். 1950 இல் இடம்பெற்ற கொரிய யுத்தத்துடன் அமெரிக்கா வடகொரியா மீது முதலாவது முறையாக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்திருந்தது. இத்தடைகள் 1980 களின் இறுதிக்காலப் பகுதியில் மேலும் இறுகின. இதற்கு தென்கொரிய தூதரகங்கள், அதிகாரிகள், தென்கொரிய விமானங்கள் மீது வடகொரிய அரசாங்கத்தின் முகவர்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இறுக்கமடைந்தன. ஆனாலும் 1990 களுக்குப் பின்னர் தென்கொரிய அரசுகள் வடகொரியாமீதான தடைகளைத் தளர்த்தி சுமூகமான உறவைப் பேண முனைந்தன. 1994 இல் அமெரிக்க அரசாங்கம் முதல்த் தடவையாக வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்தி அணுவாயுதத் திட்டத்தை வடகொரியா கைவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்போதே வடகொரியா அடுத்தடுத்து நான்கு அணுவாயுதப் பரீட்சிப்புக்களை நடத்தியதுடன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரீட்சிக்கத் தொடங்கியது. இதனாலேயே அமெரிக்கா மட்டுமே விதித்திருந்த தடைகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் மேலும் விரிவாக்கப்பட்டு பன்னாட்டுத் தடைகளாக மாறின. வடகொரியாவுக்கு தனது அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தென்கொரியா போன்று மக்களாட்சியை நடத்தும் சந்தர்ப்பங்கள் பலமுறை வழங்கப்பட்டும், கிம்மின் சர்வாதிகார குடும்ப ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் பகடைகளாகப் பாவித்தும், வடகொரியாவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவே அணுவாயுதம் தயாரிக்கிறோம் என்றும் கிம்மின் குடும்பம் கூறி வருகிறது.
  31. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளான இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் ஐரோப்பிய அமெரிக்க நலன்புரி நிறுவனங்களால் இன்றும் பஞ்ச நிவாரண உதவிகள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் இந்தியாவிற்கு என பிரத்தியேக சிறுவர் வறுமை என இன்றும் ஜேர்மனியில் நிதி சேகரிக்கின்றனர். அம்பானியின் ஆடம்பரமான திருமண நிகழ்வின் பின்னரும் இந்த உதவிகள் தொடர்வது அதிசயத்திலும் அதிசயம். உலகில் தன்னை புதிய வல்லராசாக காட்டிக்கொள்ள முனையும் சீனாவிற்கு மேற்கத்திய நாடுகள் செய்த உதவிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் அதை செய்து கொண்டே இருக்கின்றன. கூட்டிக்கழித்து பார்க்கப்போனால் சந்ததி சந்ததியாக இனப்படுகொலை /இன அழிப்பு செய்துவரும் சிங்கள ஸ்ரீலங்கா எனும் இனவாத நாட்டிற்கு சென்றுவரும் வெள்ளை உல்லாச பயணிகளுக்கு செங்கம்பளம் விரிப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள். நல்ல காலம் தனி நாடு அமையவில்லை. அதுவும் வந்திருந்தால் தமிழர்களுக்கு தமிழர்களே முற்று முழுதான எதிரிகள் ஆகியிருப்பர்.
  32. நீங்கள் சில நாட்களுக்கு முன் பதிந்த, “பால் வண்ணம் பருவம் கண்டு…”, மற்றும் தற்போது பதிந்துள்ள “மூடித் திறந்த இமை இரண்டும்…” ஆகிய இரண்டு பாடல்களையும், கம்பராமாயணத்தைப் படித்தவுடன் கண்ணதாசன் எழுதியிருப்பார் போல் தெரிகிறது. கம்பன், சீதையின் இடையை வர்ணிப்பதை வாசித்த கண்ணதாசன், சரோஜாதேவிக்காக இப்படிச் சொல்லியிருப்பார்: “அன்னக் கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது…” சரோஜாதேவியை விட்டுவிடுங்கள். அன்னை இல்லம் படத்துக்காக கடற்கரையில், பெருத்த இடையோடு தேவிகா நடந்து செல்ல, அவர் பின்னால் நடந்து வரும் சிவாஜி கணேசன், இவ்வாறு பாடிக் கொண்டு வருவார்: “நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது…” இங்கு கவிஞர் பொய் சொல்லியிருக்கிறார்!
  33. நல்ல கதை. நல்ல இயற்கை ரசிகன். யாரோ வீட்டுப் பூனைக்கு உணவு வாங்கி வைத்து பராமரிக்கும் இளகிய (குழந்தை )மனசு .
  34. Published By: VISHNU 01 JUL, 2025 | 08:18 PM செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்ட மேலதிக பணிகளின் போது மேலும் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து காணப்படுவதால், அவை எத்தனை என சரியான எண்ணிக்கை கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது. அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/218971

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.