Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    87988
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    31956
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    19109
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/07/25 in all areas

  1. இல்லை. ஒரு விடயத்துக்காக நினைவு வைத்துள்ளோம். ஐயாவுக்கு கொடுத்த அந்த கொழும்பு 7 வீட்டை மகள் திருப்பி அரசுக்கு கொடுத்து விட்டாவா?
  2. பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, ரைட் சகோதரர்கள், சாண்டோஸ் டுமோன்ட் மற்றும் 14-பிஸ் விமானத்தின் புகைப்படம். கட்டுரை தகவல் கமிலா வெராஸ் ப்ளும்ப் பிபிசி நியூஸ் பிரேசில் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பது மிகவும் எளிமையான கேள்வியாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதற்கான பதிலைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல. விமானத்தை கண்டுபிடித்தது உண்மையில் யார் என்கிற கேள்வி நூறு ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பழைய சர்ச்சையின் வேர். சைக்கிள் மெக்கானிக்குகளாகவும் சுயமாகக் கற்றுக்கொண்ட பொறியாளர்களாகவும் இருந்த ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோரை விமானப் பயணத்தின் உண்மையான 'தந்தையர்' எனப் பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர். 1903 ஆம் ஆண்டில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவர்கள் ரைட் சகோதரர்கள். ஆனால் முதலில் விமானத்தை இயக்கியவர்கள் என்பதற்கான உண்மையான பெருமை, ஆல்பர்டோ சாண்டோஸ் டுமாண்டுக்குச் செல்ல வேண்டும் என்று பல பிரேசிலியர்கள் கூறுகிறார்கள். ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சாண்டோஸ், 1906 இல் பாரிஸில் முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். இது சர்வதேச விமானக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. அப்படியானால் எது உண்மை? பட மூலாதாரம்,NATIONAL LIBRARY OF FRANCE படக்குறிப்பு, சாண்டோஸ் டுமாண்ட் தனது 14-பிஸ் விமானத்தில் பாரிஸில் பறந்தார். சாண்டோஸ் டுமாண்ட்: மக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட முதல் விமானப் பயணம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு இயந்திரத்தை உருவாக்க பலரும் தீவிரமாக முயற்சி செய்தனர். அந்தக் காலகட்டத்தில், விமானங்களை உருவாக்குவதற்கு நம்பிக்கையளிக்கும் நகரமாக பாரிஸ் மாறியது. அங்கு நல்ல பொறியியல் கல்லூரிகள் இருந்தன. உலோகவியல், இயந்திரங்கள், இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பணமும் எளிதாகக் கிடைத்தது. "அந்த நேரத்தில், அது விரைவில் நடந்தேறக்கூடிய ஒன்றாகத் தான் தெரிந்தது," என்று பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜீன்-பியர் பிளே கூறுகிறார். அதேபோல், முதல் விமானமாக எதைக் கருதுவது என்பதை விமான நிபுணர்கள் முடிவு செய்தனர். எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல் (கவண் போன்ற சாதனங்கள் இல்லாமல்) விமானம் பறக்க வேண்டும் என்றும், மக்கள் அதை தங்கள் கண்களால் நேரில் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்தனர். 1906 நவம்பர் 12 அன்று, சாண்டோஸ் டுமாண்ட் இவை அனைத்தையும் செய்தார். பாரிஸில் ஒரு கூட்டத்தின் முன்னிலையில் தனது 14-பிஸ் விமானத்தை 220 மீட்டர் தூரம் பறக்கவிட்டார். அடுத்த ஆண்டு, அவர் 'டெமோயிசெல்லே' என்ற மற்றொரு புதிய விமானத்தை வடிவமைத்தார். இது தான் உலகின் முதல் இலகுரக மற்றும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட விமானம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் விமானம் டெமோயிசெல். ஆதாரங்களை மாற்றுதல் ஆனால் 1908 ஆம் ஆண்டில், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, முதன்முதலில் தாங்கள் விமானத்தில் பறந்ததாக ரைட் சகோதரர்கள் கூறினர். இதைக் கேட்டு பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பறக்கும் கிளப்புகளுக்கு இடையே கடிதங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பு இருந்து வந்தது. தரையிலிருந்து நீண்ட தூரம் பறக்கக்கூடிய முதல் விமானத்தை உருவாக்க ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் ரைட் சகோதரர்களைப் பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், தங்களது காப்புரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகக் காத்திருந்ததாகவும், தங்கள் யோசனையை யாராவது திருடிவிடுவார்கள் என்று பயந்ததாகவும் ரைட் சகோதரர்கள் கூறினர். ஆனால் உண்மையில், 1903-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் அவர்களது ஃப்ளையர் பறப்பதை ஐந்து பேர் மட்டுமே பார்த்தார்கள். ஒரு தந்தி செய்தி, சில புகைப்படங்கள் மற்றும் ஆர்வில் ரைட்டின் நாட்குறிப்பு போன்ற மிகக் குறைந்த ஆதாரங்கள் மட்டுமே அதனைக் குறிப்பிட்டுள்ளன. ஆர்வில் தனது நாட்குறிப்பில் அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் இருந்தது என்று எழுதியுள்ளார். அதாவது, அந்த அளவுக்கு காற்று இருந்ததால், விமானத்தால் என்ஜின் இல்லாமல்கூட பறக்க முடிந்திருக்கலாம் என்று பிரேசிலின் வானியல் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரான ஹென்ரிக் லின்ஸ் டி பாரோஸ் போன்ற சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது, இயந்திரம் இல்லாமல் கூட தானாகவே விமானம் பறக்கக்கூடிய அளவுக்கு காற்று பலமாக வீசியது. இருப்பினும், ரைட் சகோதரர்களின் ஆதரவாளர்கள் இதை ஏற்கவில்லை. 14-பிஸ் பாரிஸில் பறப்பதற்கு முன்பே, ரைட் சகோதரர்கள் 1904-05 ஆம் ஆண்டில் விமானத்தின் சிறந்த மாதிரிகளை உருவாக்கிவிட்டதாக அவர்கள் வாதிடுகிறார்கள். பட மூலாதாரம்,LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் முதன்முதலில் 1903 இல் பறக்க முயன்றது. "அன்று காலை (டிசம்பர் 17, 1903) ரைட் சகோதரர்கள், முதல் முறையாக மிகவும் சிறப்பாக பறந்தனர். அதன் மூலம், பிரச்னையைத் தீர்த்துவிட்டதாக அவர்களே உறுதியாக நம்பினர்" என்று கூறுகிறார் ஸ்மித்சோனியனின் தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் பணியாற்றியவரும், ரைட் சகோதரர்களைப் பற்றி பல புத்தகங்களை எழுதியவருமான வரலாற்றாசிரியர் டாம் க்ரூச். "அவர்கள் இன்னும் சில மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது, ஆனாலும் அவர்களது விமானம் கட்டமைக்கப்பட்டு ஏற்கெனவே பறந்து விட்டது," என்றும் அவர் கூறுகிறார். 1908ஆம் ஆண்டு, ரைட் சகோதரர்கள் தாங்கள் தான் முதலில் விமானத்தில் பறந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஒரு பிரசாரத்தைத் தொடங்கும் வரை, இவை அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டதாகத் தோன்றியது. ரைட் சகோதரர்கள் ஐரோப்பாவுக்குச் சென்று, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் 200க்கும் மேற்பட்ட மாதிரி பயணங்களை நிகழ்த்தினர். அதில் ஒரு முறை அவர்கள் 124 கிலோமீட்டர் வரை பயணம் செய்தனர். "அந்த நேரத்தில், ஐரோப்பாவின் அரச குடும்பங்கள் வில்பருடன் விமானத்தில் அமர விரும்பினர். இது ஒரு பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது," என்று பேராசிரியர் பிளே விளக்குகிறார். அதே நேரத்தில், விமானங்கள் குறித்த பிரெஞ்சு ஆரம்பகால நிபுணரான ஃபெர்டினாண்ட் ஃபர்பர் போன்றவர்களும் ரைட் சகோதரர்கள் தான் முதன்மையானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டனர். இவ்வளவு நல்ல கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு விமானத்தை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது என்று அவர்கள் கூறினர். பட மூலாதாரம்,LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரைட் சகோதரர்களின் விமானப் பயணம் பற்றிய செய்தி பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தது. கவண் பயன்பாடு பற்றி எழுந்த விவாதம் ஐரோப்பாவில் காட்டப்பட்ட ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் விமானம் சக்கரங்கள் இல்லாமல் இருந்தது. அதனால், அது பறக்க ஒரு கவணின் (catapult) உதவி தேவைப்பட்டது (இது விமானம் பறக்க உதவுகிறது). இது ஒரு பெரிய விவாதத்துக்குரிய விஷயமாக மாறியது. விமானத்தின் இயந்திரம் போதுமான சக்தி வாய்ந்ததாக இல்லை என்றும், கவண் இருந்ததால் மட்டுமே அது பறக்க முடிந்தது என்றும் விமர்சகர்கள் கூறினர். சிலர், எந்த வகையான தரையிலிருந்தும் விமானம் புறப்படக்கூடிய வகையில் ரைட் சகோதரர்கள் கவணைப் பொருத்தியதாகக் கூறுகின்றனர். சாண்டோஸ் டுமாண்ட், ரைட் சகோதரர்கள் மட்டுமின்றி வேறு சிலரும் தாங்களே முதன் முதலில் விமானப் பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளனர் என்பது தான் இந்தக் கதையின் முக்கியத் திருப்பம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் வசிக்கும் ஜெர்மானியர் குஸ்டாவ் வெய்ஸ்கோப், விமானப் பயணத்தின் ஆரம்பகால முன்னோடியாகவும் இருந்தார். அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மனியைச் சேர்ந்த குஸ்டாவ் வெய்ஸ்கோப் என்பவர் 1901ம் ஆண்டிலேயே விமானப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸும் மார்ச் 1903 இல் விமானம் ஒன்றை ஓட்டியதாக நம்பப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் ஹோவிக் நகருக்கு அருகில், ஜான் குட்மேன் மற்றும் அவரது குடும்பத்தினர் 1871ஆம் ஆண்டு ஒரு கிளைடர் மூலம் மனிதர்களை ஏற்றிச் சென்று, உலகின் முதல் விமானப் பயணத்தை முயற்சி செய்ததாகக் கூறப்படும் சில சான்றுகளும் உள்ளன. அதுவும் எந்த இயந்திர சக்தியும் இல்லாமல், வெறும் கிளைடரிலேயே சென்றதாகக் கூறப்படுகிறது. இன்றும் கூட, அந்த கிளைடரின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் உள்ளது. அதனால்தான் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பதைப் பற்றிய விவாதம் பயனற்றது என்று பல விமான வல்லுநர்கள் நம்புகிறார்கள். "யாரோ ஒருவர் ஒரு நாள் எழுந்து, ஒரு அமைப்பை வரைந்து, 'இது பறக்கும் விமானம்!' என்று சொன்னதால் அது நடக்கவில்லை" என்று ஜேன்'ஸ் ஆல் தி வேர்ல்ட்ஸ் ஏர்கிராஃப்ட்டின் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பால் ஜாக்சன் கூறுகிறார். "டஜன்கணக்கானவர்களின் கூட்டு உழைப்பால் மட்டுமல்ல, மாறாக நூற்றுக்கணக்கானவர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் அது சாத்தியமானது," என்றும் அவர் கூறுகிறார். அங்கீகாரத்தின் கதை சாண்டோஸ் டுமோண்ட், வெய்ஸ்கோப் மற்றும் பல ஆரம்பகால விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பால் ஜாக்சன் கருதுகிறார். "இறுதியில், மதிப்புமிக்க வழக்கறிஞர்களைக் கொண்டவர்கள் தான் பெயர் பெற்றவர்களாக மாறுகிறார்கள்" என்று பால் ஜாக்சன் கூறுகிறார். "சோகமான விஷயம் என்னவென்றால், 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான கண்டுபிடிப்புகளைப் பார்த்தால், அவற்றுக்கான பெருமை பெரும்பாலும் தவறான நபர்களுக்கே வழங்கப்பட்டது," என்கிறார் பால் ஜாக்சன். தொலைபேசியைக் கண்டுபிடித்த பெருமைக்குரிய ஸ்காட்டிஷ் விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் உதாரணத்தை அவர் தருகிறார். இருப்பினும், அது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. உண்மையில், பெல் காப்புரிமை பெற்றிருந்தாலும், உண்மையான கண்டுபிடிப்பு இத்தாலியர் அன்டோனியோ மேயுச்சி (Antonio Meucci) என்பவரால் செய்யப்பட்டதாக அமெரிக்க நாடாளுமன்றம் 2002ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டது. இத்தாலியைச் சேர்ந்த அவர், வறுமையில் வாடியதாகவும், கிரஹாம் பெல்லுடன் ஒரே பட்டறையில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரைட் சகோதரர்களால் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு விமானி க்ளென் ஹாமண்ட் கர்டிஸ். அமெரிக்க விமான வரலாற்றில் முக்கியமான முன்னோடியாகக் கருதப்படும் க்ளென் ஹாமண்ட் கர்ட்டிஸின் உறவினர் தான் மார்சியா கம்மிங்ஸ் என்பவர். 1909ஆம் ஆண்டு, தங்கள் காப்புரிமையை மீறியதாகக் கூறி கர்ட்டிஸ் மீது ரைட் சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இன்று, ரைட் சகோதரர்களின் கதையின் உண்மைத்தன்மையை ஆராயும் ஒரு வலைப்பதிவை நடத்துகிறார் மார்சியா கம்மிங்ஸ். கர்ட்டிஸ் போன்றவர்களை வரலாற்றிலிருந்து அழிக்க ரைட் சகோதரர்கள் வேண்டுமென்றே முயன்றதாக அவர் நம்புகிறார். மறுபுறம், ஆர்வில் மற்றும் வில்பரின் கொள்ளுப் பேத்தி அமண்டா ரைட் லேன், அவர்களின் பணியைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் இந்தக் குற்றச்சாட்டை நம்பவில்லை. "ஆர்விலை எனக்குத் தெரியும். அவர் யாரையும் வேண்டுமென்றே குறிவைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை," என்று அமண்டா கூறுகிறார். "ஆம், ஆனால் தானும் வில்பரும் செய்ததைப் பற்றிய உண்மையை பாதுகாப்பதை அவர் உறுதி செய்தார்," என்கிறார் அமண்டா ரைட் லேன். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvj6d6y26zo
  3. லெப்.கேணல் நிஸ்மியா சிற்றம்பலம் றஞ்சிதமலர் கொக்குக்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு லெப்.கேணல் நிர்மலன் சிவானந்தன் நிர்மலராஜ் திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
  4. பாரபட்சத்தை பராபட்சம் என பதாகையில் எழுதி உள்ளார். சரி அது ஒரு புறம் கிடக்கட்டும். ஆசிரியர் வட்டாரம் கூறுவது என்ன என்றால் இந்த மாணவன் முன்பும் ஏதோ பிரச்சனைப்பட்டு மருந்து குடித்து வைத்தியசாலை வரை சென்றாராம். ஆள் கொஞ்சம் குழப்படித்தனம் என்றமையால் சுற்றுலாவுக்கு கூட்டிச்செல்வது என்றால் இவர் தனது பெற்றோரையும் அழைத்து வரவேண்டும் என இவரிடம் கூறப்பட்டது. இவரது குழப்படித்தனம் காரணமாக பெற்றோர் இல்லாமல் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆசிரியர்கள் இணங்கவில்லை. ஆசிரியர்களையும் குறை கூறமுடியாது. சுற்றுலாவில் இவரது குழப்படித்தனம் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் எப்படி பொறுப்பு கூறுவது?
  5. காற்று வீசுவதால தான் உயிரோட இருக்கிறம் அண்ணை!!
  6. புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் July 6, 2025 — கருணாகரன் — சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற பாத்திரம், தன்னுடைய பொறுப்பை, தான் விரும்புகின்ற அல்லது தான் சார்கின்ற அரசியல் ரீதியாக அணுக முற்படுகிறதே ஒழிய, அறிவியல் ரீதியான அறத்துடன் இல்லை என்பதைக் குறியீடாக்கியிருந்தார் நிலங்க. நிலங்கவின் ஏனைய கதைகளும் கூட இதே பண்புடையவையாகவே உள்ளன. அதனால்தான் ‘அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாக, மக்களின் தளத்திலிருந்து ஒலிக்கும் வெளிப்பாடாக நிலந்தவின் கதைகள் இயக்கமுறுகின்றன. இதனூடாக நிலங்க அலெக்ஸாண்டரின் விரிந்த மனதை, பரந்த சிந்தனையை, அவர் விளையும் புதிய அரசியலை, செழுமையான பண்பாட்டுச் சூழலை, புதிய சமூகத்தை எனப் பலவற்றோடும் அறிமுகமாகிறேன். இப்படி அறிந்து கொண்டு செல்லும்போது நம்முடைய மூளையும் இதயமும் இளகி விடுகிறது‘ என்று எழுதினேன். கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் அவற்றைக் கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிகளும் எத்தகைய சேதிகளைச் சிங்களச் சமூகத்திற்கு சொல்ல வேண்டும்? என்பதில் நிலந்தவுக்குத் தெளிவான பார்வையுண்டு. அந்தப் பார்வைக்கு நிகரான இன்னொரு வலுவான சான்று, அந்த மனிதப்புதைகுழிகளை சிங்கள புத்திஜீவிகளில் ஒருதரப்பினரும் அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அதிகார வர்க்கமும் எப்படிச் சூதான முறையில் மாற்றியமைக்க முற்படுகின்றன; அதற்கான தருக்கங்களை எப்படி உருவாக்குகின்றன என்பதைத் துணிச்சலோடும் நிதானத்தோடும் நிலங்க கையாண்டிருக்கும் விதம். இப்படி எழுதும்போது சிங்களப் பெருந்திரள் சமூகத்தில் அல்லது சிங்கள அதிகாரத் தரப்பிலிருந்து எதிர்ப்போ குறைந்த பட்சம் ஒரு அதிர்வலையோ தனக்கு எதிராக ஏற்படும் என்று நிலந்தவுக்குத் தெரியும். அதைக்குறித்தெல்லாம் நிலந்த கவலைப்படவுமில்லை. தயங்கவுமில்லை. நிலந்தவின் அகத்தில் சுடரும் உண்மையின் ஒளியும் அவருடைய இயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையும் நேர்மையும் (அறமும்) அவரை வரலாற்றில் முன்கொண்டு செல்கின்றன. அதற்காக அவர் கொடுக்கக் கூடிய விலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம். அதந்தப் புரிதல்தான் அவருக்கான பலமும் மகிழ்ச்சியும் நிறைவுமாகும். இதை ஏன் இங்கே இப்பொழுது சொல்கின்றேன் என்றால், யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளும் அங்கே மீட்கப்படும் எலும்புக்கூடுகளும் உண்டாக்கியிருக்கும் அரசியற் குழப்பங்களுக்காகவும் அறவீழ்ச்சிக்காகவுமே. செம்மணிப் புதைகுழிகளுக்கு சமாந்தரமாகவோ அல்லது வேறொரு கோணத்திலோ துணுக்காய்ப்புதைகுழி விவகாரமும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அங்கே மனிதப் புதைகுழி எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும் துணுக்காயில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம். அல்லது எரியூட்டப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இரண்டின் பக்கமாகவும் நின்று கன்னைபிரித்து அடிபடுகிறார்கள் சமூகவலைத்தளப்போராளர்கள். இன்னொரு பக்கத்தில் வெருகல் படுகொலை என்றொரு குற்றச்சாட்டும் முன்னிறுத்தப்படுகிறது. எல்லாமே துயரத்தினால் நிரம்பியதே. எல்லாம் அநீதிகளால் நிரம்பியதே. எல்லாமே அறவீழ்ச்சியினால் ஏற்பட்டவையே. எல்லாவற்றிலும் நிரம்பிக் கிடப்பது வற்றாத கண்ணீர்… இப்படிச் சொல்லி, எல்லாவற்றையும் சமப்படுத்தவில்லை. அது என்னுடைய நோக்கமும் இல்லை. அப்படிச் சமப்படுத்தி விடவும் முடியாது. அவரவர் தமது துயரங்களை ஆற்றுவதற்கும் தமக்கான நீதியைக் கோருவதற்கும் நிதானமான முறையில் சிந்திப்பதே பொருத்தம் என எண்ணுகிறேன். அந்த நிதானமே நிவாரணத்தையோ, நீதியையோ, ஆறுதலையோ தரக்கூடியது. ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கு நிச்சயமாகத் தீர்வைத் தரமுடியாது. கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்களே! அவர்களுடைய உயிர் இனித்திரும்பாது. உடலும் உயிரும் எலும்புக்கூடாகி விட்டது. ஆனால், அதையாவது காணக்கூடியதாக – பெறக்கூடியதாக இருக்கிறது. அதுவும் செம்மணியில். துணுக்காயிலோ வேறு எங்குமே இதைப்போல மீண்டால்தான், கண்டறியப்பட்டால்தான் அவற்றையும் காணலாம். இந்தக் கொடிய யதார்த்தத்திலிருந்துதான் நாம் இந்த விடயங்களைப் பார்க்கவும் அணுகவும் வேண்டும் எனக் கருதுகிறேன். செம்மணிப்புதைகுழியைப் பற்றிப்பேசும்போது அல்லது அதுபோன்ற படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளைப் பற்றிப் பேச முற்படும்போது இன்னொரு நிலையில் பாதிக்கப்பட்டோரின் உளத்தில் இயல்பாக ஒரு கேள்வியும் அதனோடிணைந்த உணர்நிலையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு அநீதியை, ஒரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட வலியைப்பற்றிப் பேசுகிறீர்களே! அதைப்போல இன்னொரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட அநீதியும் அதனால் விளைந்த வலியும் உண்டே. அதைப்பற்றி ஏன் பேசவில்லை? அல்லது ஏன் பேசத் தயங்குகிறீர்கள்? என்ற கேள்வியும் உணர்நிலையும் அது. என்பதால்தான் பாதிக்கப்பட்டோர் அனைவருடைய துயரமும் இழப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கூடிக் குறைந்தவை அல்ல. அவரவருக்கான துயரங்களுக்கும் அவரவர் படுகின்ற வலிகளுக்கும் உரிய மதிப்பு உண்டு. அவற்றை நியாயமாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது. இல்லையெனில் நாம் நீதியைப் பற்றிப் பேச முடியாது. அதை மீறிப் பேசினால் – பேச முற்பட்டால் அது நீதியாகவோ, நீதிக்கானதாகவோ இருக்காது. மட்டுமல்ல, அநீதியின் பக்கமாகவே நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே பாதிக்கப்பட்டோரின் உளவியலில் – உளநிலையில் – நின்று இதனை அணுகுவதே பொருத்தமானது. நிலங்க அலெக்ஸாண்டர், பாதிக்கப்பட்ட தரப்பின் உணர்நிலையில் நின்று அந்தக் கதைகளை எழுதியபடியால்தான் அவருடைய நீதியுணர்வைக் குறித்து நாம் மகிழ்ந்து, பாராட்டி, நன்றி கூறிப் பேசக்கூடியதாக உள்ளது. ஆனால், இங்கே நமது சமூக வலைத்தளப் பதிவர்களிற் பலரும் அப்படியான நீதியுணர்சியைக் கொண்டிருக்காமல், சார்பு நிலைப்பட்ட – தமக்கு இசைவான நீதியைக் குறித்தே சிந்திக்கின்றனர். அப்படியொரு நீதி இல்லை. அப்படியொரு நீதியை அவர்கள் எதிர்பார்த்தால், அது நீதியாக இருக்கப்போவதுமில்லை. அதைக் கோருகின்றவர்கள் ஒருபோதும் நீதிக்காகவோ நியாயத்துக்காகவோ எந்தப் பங்களிப்பைச் செய்யவும் முடியாது. அவர்கள் வரலாற்றின் முன் தலைகுனியவே முடியும். “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே..” என்று கூறப்படும் இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களாகச் சொல்லப்படும் சமூகத்தினராகிய நாமே நெற்றிக் கண்ணை (மூன்றாவது கண்ணான அறிவுக் கண்ணை) இழந்து நிற்க முடியுமா? குற்றமாக நடந்தவை அனைத்தும் குற்றங்களே! அதில் எந்தச் சமரசங்களும் வேண்டாம். ஒன்றை ஒன்றினால் மறைப்பதும் மறைக்க முற்படுவதும் தவறு. அந்த உள் நோக்கம் இன்னொரு குற்றமாகும். அது இந்தப் புதைகுழிகளை உருவாக்கிய குற்றத்துக்கு நிகர். இந்தப் புதைகுழிகளில் மட்டுமல்ல, சுதந்திர இலங்கையில் நாடுமுழுவதிலும் உள்ள புதைகுளிகளில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே! நிராயுதபாணிகளே! இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற எந்தப் பேதமும் இல்லை. சிங்களவர்களைச் சிங்களவர்களும் தமிழர்களைத் தமிழர்களும் கூடக் கொன்று புதைத்திருக்கிறார்கள். இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். யாரும் இதில் பெருமைப்படவோ, நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, நம்முடைய கை சுத்தமானது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லவோ முடியாது. நேரடியாக எந்தக் கொலையோடும் எந்தப் புதைகுழியோடும் பலருக்கும் தொடர்பில்லை என்றாலும் அவரவர் சார்ந்த சமூகம், அவரவர் கொண்டிருந்த அரசியல் அல்லது ஆதரவளித்த தரப்புகள் என்பதற்காக இந்தக் கொலைகளுக்கும் புதைகுழிகளுக்கும் எல்லோரும் பொறுப்பாளிகளே! இந்தப் புதைகுழிகளைக் குறித்து வெளியாரின் பார்வை எப்படியானது? ‘இலங்கையில் மனிதப்புதைகுழிகள்‘, ‘பல தரப்புகளாலும் உருவாக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விளைச்சல்கள்‘ என்ற செய்திகள் (தகவல்கள்), இலங்கை பற்றிய – இலங்கையர்களைப் பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையையே அவர்களுக்கு உருவாக்கும். ‘ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் இத்தனை மனிதப் புதைகுழிகளா? அதுவும் நாடு முழுவதிலும்! அதுவும் சுதந்திர இலங்கையில்!! ஆக இலங்கை என்பது எலும்புக்கூடுகளின் தேசமா?‘ என்று அவர்கள் கருதினால் அதில் என்ன தவறு? ஆகவே இதொரு கூட்டுத் துக்கம். கூட்டு அவமானம். கூட்டுத் தலைகுனிவு. கூட்டு அநீதி. இதையும் கூட ஒரு வகையான சமப்படுத்தல் அல்லது சதியான – சூதான தர்க்கம் என்றோ யாரும் சொல்ல முற்படலாம். நிச்சயமாக அப்படியில்லை. இதுதான் உண்மை. மறுக்க முடியாத உண்மை. ஆகவே நாம் நாறி மணக்கும் புழுப்பிடித்த இந்தச் சீழான யதார்த்தத்திலிருந்துதான் உண்மையை நோக்கியும் நீதியை நோக்கியும் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே நமது குற்றங்களுக்கான தண்டனையைப் பெறுவதோடு, இனிமேலும் இந்தகைய குற்றங்கள் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். புதிய (NPP) அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பிறகு கண்டறியப்படும் மனிதப்புதைகுழிகள் தடைகள், அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் தோண்டப்படுகின்றன. இதொரு நல்ல – நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழல். இந்த அரசாங்கம் விடயங்களை முன்னோக்கியதாகக் கையாள முற்படுகிறது. சமூக நல்லிணக்கம், நீதிக்கான முன்னாயத்தம் போன்றவற்றிற்கான தொடக்க வாய்ப்புச் சூழல் என்று இதைக் கருதலாம். இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதைப்போன்ற (பட்டலந்த, சூரியகந்த என்ற) துயரம் மிக்க, கசப்பான ஒரு வரலாற்று அனுபவச் சூழல் உள்ளதால், அவர்கள் இதனை மேலும் மென்னிலையில் – பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பான நிலையில் அணுக முற்படுவதாகவே தெரிகிறது. ஆக பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான நற்தருணமாக இதை மாற்றுவதற்கான பொறுமையும் நிதானமும் விவேகமும் நமக்கு வேண்டும். கன்னை பிரித்து அடிபட்டால் எல்லாருக்கும் சினமும் எரிச்சலும்தான் ஏற்படும். அது பாதிக்கப்பட்டோருடைய துக்கத்தையும் அவர்களுக்கான நீதியையும் அவமதிப்பதாகவே அமையும். இங்கே பலரும் தமக்குச் சார்ப்பான தரப்புக்கு தாம் நீதியைப் பெற்றுக் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் இன்னொரு தரப்பைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுவதே அதிகமாக உள்ளது. நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும். தெரியாமல் இருப்போர் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அவை கசப்பானவை என்பதற்காகக் கடந்து செல்லக் கூடாது. சுதந்திர இலங்கையில்தான் எத்தனை துயரக் கதைகளும் துன்பியல் நாடகங்களும்? 1505 – 1948 க்கு இடைப்பட்ட 443 ஆண்டுகளில் இலங்கையில் அரசியலுக்காகக் கொல்லப்பட்டோரை அல்லது கொலையுண்டோரையும் விட 1948 க்குப் பிந்திய 75 ஆண்டு காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கொலையுண்டோரின் தொகை அதிகமாகும். அதாவது சுதந்திர இலங்கையில்தான் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டோரும் கொலையுண்டோரும் கூடுதல். இதைச் சரியாகச் சொன்னால், வெளியாரினால் – பிறத்தியாரினால் – கொல்லப்பட்டதை விட – கொலையுண்டதை விட நமக்குள் நாமே கொன்று குவித்ததும் கொல்லப்பட்டதுமே அதிகம். விடுதலையின் பேராலும் நாட்டின் பாதுகாப்பின் பேராலும் நடந்த அக்கிரமம், அநீதி, முட்டாள்தனம், நாகரீகக் கேடு இது. இனியாவது நம்முடைய அகவிழிகள் திறக்கட்டும். இனியாவது நாம் நிதானமும் நீதியுணர்ச்சி உள்ளவர்களாகவும் வாழ முற்படுவோம். அதற்கு நாம் பொறுப்புக் கூறுவது – பொறுப்பேற்பது அவசியம். அதைச்செய்வோம்.. புதைகுழிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் படுகொலைகளுக்காகவும் அனைத்து நீதியின்மைகளுக்காகவும்தான். https://arangamnews.com/?p=12141
  7. Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 03:21 PM சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு இந்திய மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சீரற்ற வானிலையால் இந்திய மீன்பிடிக் கப்பல் காணாமல் போனதாக மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கை கடற்படை உடனடியாக அனைத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் கப்பல்களால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக, சிலாபத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டதுடன், மேலும் அதில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீனவர்கள் இந்தியாவின் மினிகாய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். நான்கு மீனவர்களும் திக்கோவிட்ட துறை முகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு கடற்படை மற்றும் கடலோர காவற்படை தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது. ஆரம்ப வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து இந்திய மீனவர்களை இரண்டாவது முறையாக இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219380
  8. அப்படியே பத்திரமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து விட வேண்டும் . .......... நல்ல செயல் . ......... ! 👍
  9. செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்! யாழ்ப்பாணம் - சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களும் இராணுவமும் மேற்கொண்ட படுகொலைகளின் சாட்சியமே செம்மணி என குற்றஞ்சாட்டப்படுகின்றது. மறுபக்கம், செம்மணியிலிருந்து தோண்டப்படும் பச்சிளங்குழந்தை உள்ளிட்ட மனித உடலங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினாால் கொன்று புதைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது. உண்மையில் யார் தான் இதன் பின்னணியில் இருப்பது, இத்தனை காலமும் மனதில் அவலங்களை சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் தெரிய வேண்டிய உண்மைகள் பல. செம்மணியில் நடப்பவை என்ன? அவர்கள்தான் இவர்கள்!! நேரடி சாட்சியம்!!! பூநகரியிலிருந்து கொழும்புதுறைக்கு படகில் வந்தவர்களே எலும்புகூடுகளாக மீட்பு | Chemmani Mass Graves https://tamilwin.com/article/chemmani-mass-graves-jaffna-1751829524
  10. கேட்கிறன் என்று குறை நினைக்கவேண்டாம் ஒரு தமிழனாய் அவர் சொன்ன வார்த்தைகளில் என்ன பிழை உள்ளது ? இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?
  11. சிங்களம் தன்தேவை முடிந்ததும் துரோகிகளை வைவிட்டு விடும். சொந்த இனத்திற்கே விசுவாசம் இல்லாதவர்களை எந்த இனமும் மதிக்காது. அவர்களைக் கறிவேப்பிலையாகப் பாவித்து விட்டு தூக்கி எறிந்து விடும். இப்டபொழுது அருண் சித்தார்த் என்ற நபர் தமிழினத்திற்கு எதிராகச் செயற்படுகின்றார். அவருக்கும் இந்த நிலை வரும்.
  12. அதொண்டுமில்லை தம்பி ....கட்டாப்பாரை கருவாடு எண்டால் எனக்கு விருப்பம். அதுதான் ஒரு பாசல் வருமெண்டு வழிமேல் விழி வைச்சு பாத்துக்கொண்டிருக்கிறன் 😁
  13. வோயஜர் 1 விண்கலம் – ஓர் அற்புதமான விண்வெளிப் பயணம். (Voyager 1 Spacecraft – A Journey Beyond the Stars) நாசாவின் Voyager 1 விண்கலம், 48 ஆண்டுகள் பயணித்து ஒரு ஒளிநாளை மட்டுமே அடைந்துள்ளது. ஒரு ஒளியாண்டு எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்து பாருங்கள். 🔭 வரலாற்றுப் பின்னணி: வோயஜர் 1 (Voyager 1) என்பது நாசாவின் மிக முக்கியமான விண்வெளிக் கவனிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் முதற்கண் நோக்கம் – கிரகங்களை (Jupiter, Saturn) நேரடியாக ஆய்வு செய்வது. ஆனால் இந்த செயற்கைக்கோள் தனது வேலை முடிந்த பிறகு கூட நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே பயணித்து, இப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிக அதிக தூரம் சென்ற சாதனமாக மாறியுள்ளது. 🌌 வோயஜர் 1 இப்போது எங்கே? இது சூரிய மண்டல எல்லையை (heliopause) கடந்த முதல் மனித உருவாக்கம். 2025-இல், வோயஜர் 1 விண்கலம் புவியிலிருந்து சுமார் 162 ஏயு (AU) தூரத்தில் உள்ளது. (1 AU = 1 Astronomical Unit = புவி முதல் சூரியன் வரை உள்ள தூரம் = சுமார் 15 கோடி கி.மீ.) எனவே: 162 AU \times 150 மில்லியன் கி.மீ = சுமார் 24.3 பில்லியன் கி.மீ. 🚀 எவ்வளவு ஆண்டுகள் பயணித்தது? 1977 முதல் 2025 வரை = 48 ஆண்டுகள்! இந்த 48 ஆண்டுகளில், வோயஜர் 1 இடைவிடாது சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்றுகொண்டே இருக்கிறது. ✨ ஒளி ஆண்டுகளில் வோயஜர் 1 எவ்வளவு தூரம் சென்றுள்ளது? ஒளி ஆண்டு = ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரம் = சுமார் 9.46 டிரில்லியன் கி.மீ. வோயஜர் 1-இன் தூரம் = சுமார் 24.3 பில்லியன் கி.மீ. \frac{24.3 \text{ பில்லியன் கி.மீ.}}{9.46 \text{ டிரில்லியன் கி.மீ.}} = \approx 0.0026 \text{ ஒளி ஆண்டு} > 👉 அதாவது வோயஜர் 1 விண்கலம் சுமார் 0.0026 ஒளி ஆண்டுகள் தூரம் சென்றிருக்கிறது. 🛰️ வோயஜர் 1 – முக்கிய தகவல்கள்: விவரம் மதிப்பு ஏவப்பட்ட ஆண்டு 1977 பயணித்த ஆண்டுகள் 48 ஆண்டுகள் சூரிய மண்டல எல்லை கடந்த ஆண்டு 2012 புவியிலிருந்து தூரம் சுமார் 24.3 பில்லியன் கி.மீ. ஒளி ஆண்டுகளில் சுமார் 0.0026 light years தற்போதைய வேகம் சுமார் 61,000 கி.மீ/மணிநேரம் 🌍 அது எதைக் நோக்கி பயணிக்கிறது? வோயஜர் 1, சூரிய மண்டலத்தை விட்டு வெளியே சென்று "interstellar space" எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான வெளிக்கோளத்தில் பயணிக்கிறது. அது ஒரு சிறிய நட்சத்திரமாகிய AC +79 3888 (எண்) என்ற திசையில் பயணிக்கிறது. ஆனால் அந்த நட்சத்திரத்தை அடைய 40,000 ஆண்டுகள் ஆகும். 📻 இன்னும் தொடர்பு உள்ளதா? ஆம்! வோயஜர் 1 இப்போது மிகவும் மெல்லிய சிக்னல்களை NASA-வின் Deep Space Network மூலம் அனுப்பி வருகிறது. ஆனால் 2025க்கு பிறகு அதன் சக்தி முழுமையாக முடிவடையும், அதன்பின் தொடர்பு முடங்கும். 📦 வல்லரசுகளுக்கான "கோல்டன் ரெகார்ட்": வோயஜர் 1-இல் ஒரு தங்க பதிவுத் தட்டு (Golden Record) உள்ளது – இதில் பூமியைப் பற்றி ஒலிக்கோப்புகள், மொழிகள், இசை, மனிதன் மற்றும் இயற்கையின் படங்கள் உள்ளன. இது வெளிநாடிகளுக்கு ஒரு அறிவிப்பாகும் – “நாம் இங்கே இருக்கிறோம்!” என்று. 🔚 முடிவுரை: வோயஜர் 1 என்பது ஒரு சாதாரண விண்கலமாக அல்ல, அது மனித அறிவு மற்றும் ஆர்வத்தின் ஒரு சிலை. 48 ஆண்டுகளாக பயணித்து இன்னும் தொடர்கிறது – புவியின் சிறிய உலகத்திலிருந்து பிரபஞ்சத்தின் நெடுந்தூரங்களை நோக்கி. இது நமக்கெல்லாம் நினைவூட்டுவது: > "அறிவும் கனவுகளும் இணைந்தால், நட்சத்திரங்களை தொட முடியும்!" குறிப்பு : தற்போதைய வேகம்: 17 கி.மீ/விநாடி (அதாவது ஒரு விநாடிக்கு 17 கிலோமீட்டர் பயணம்!) 48 ஆண்டுகள் பயணித்துக் கொண்டிருக்கிறது எனில் நம்முடைய சூரிய மண்டலமே எவ்வளவு பிரம்மாண்டம்.. இப்படி இருக்க பிரபஞ்சத்தை யாரால் கணிக்க முடியவில்லை.. ஆனால் அதற்குள் தான் நாம் இருக்கிறோம் அது நமக்குள் இருக்கிறது.. நாம் அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பது மிகவும் சுவாரசியம். R Ahilesh
  14. என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே ....... ! 😍
  15. சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம். கிளிபோல வளர்த்த ஒரு பெண் கால நேரம் வந்ததும் கோலாகலமாக கல்யாணம் செய்து வைத்தனர் வாழ்வில் முதலடி எடுத்து வைக்கிறாள் கண்ணியமாய் காக்க வேண்டிய கண்வன் காமக் கொடூரன் ஆகிறான். துணைக்கு மாமனார் மாமியார் அவள் பணம் காய்க்கும் மரம் என மீண்டும் மீண்டும் நச்ச்ரிக்கின்றனர் .வீட்டுச்சிறை புறக்கணிப்பது அடக்குமுறை சைக்கோவுடன் வாழ்கை எரிதழலில்வீழ்ந்தபுழுவானாள். "என்னால் முடியலை அப்பா" கார் எடுத்து கோவில் சென்ற பிள்ளை வசதி வாய்ப்பு பணத்துக்குபஞ்சமில்லை ஒரு கண்காணாத இடத்தில யார் கண்ணிலும் படாமல் ஒரு இல்லிடத்தில் வாழ்ந்திருக்கலாம் .சடடத்தை நாடியிருக்கலாம். மேலே படித்து தான் காலில் நிற்க முயன்று இருக்கலாம். பாவம் எல்லோருக்கும் வாழ்க்கை நாம் நினைக்குமாறு நடப்ப தில்லை தாய்வீடு சென்றாலும் அங்கு " அழைக்கும் பேர்வழி" என அவளை விட்டு வைக்க வில்லை .போய் நச்சரித்தார்கள் .பாவம் நொந்து போன maனம் என்ன செய்யும். . மிகவும் மன வேதனைப்படடாள் ஆறுதல்கூற எவரும் இல்லை ..ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என ஊருக்கா வாழ்ந்தீர்கள்?. வாழவும் முடியாது வெட்டி விடவும் முடியவில்லை. தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். எங்கே அந்த ஊரவர்கள் எங்கே அந்த உறவுகள் மாண்ட உயிரை மீண்டும் தர முடியுமா ? தாய் தந்தை சகோதரனுக்கு மாறாத துயரம்.சமூக வலைத்தளங்கள் கூவி கூவி செய்தி போடடன தங்களுக்கு "வியூஸ்" வர வேண்டும் என முக புத்தகம் யூயூ டுயூப் இன்ஸ்டா என்று அத்தனை வகைக்கும் மெல்ல அவல் கிடைத்தது போல, எல்லோர் வாயிலும் நுழைந்தது காற்றை பறக்கிறது. போதும் நிறுத்துங்கள் சட்ட்ம் தான் கடமையை செய்யுங்கள் அவர்கள் கர்மாவாழ்வு முழுதும் துரத்தட்டும் .ஆயிரம் காலத்துப்பயிர் என்பர் எவ்வ்ளவு தூரம் விசாரித்தார்கள்? .அவன் சைக்கோவாம் வேலையற்றவனாம் பூட்டிய அறைக்குள் இருபவனாம் ஆனால் தாய் தந்தைக்கு தெரியாதாம். என்ன பிள்ளை பெத்தது வளர்த்து வைத்திருக்கிறார்கள். அப்பாவியின் உயிரை எடுக்கவா அதுவும் இக்காலத்தில் இப்படி படட பிற போக்குத் தனமா ? தயவு செய்து மீண்டும் பெற்றவர்களைக் பேசி பேசியே காயப் படுத்தாதீர்கள்.மீடியாவுக்கு முகம் காட்டுவதை பேட்டி எடுப்பதை குறையுங்கள்.காலத்துக்கு காலம் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சடடமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றபடடால் நாடு சிறக்கும். தேவை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை. பிரச்சினைகளுக்கு மரணம் தீர்வல்ல
  16. இப்போ வீரகேசரி தமிழ் யுரியுப்பர்களிடம் இருந்து ரியுசன் எடுத்து கொண்டு வருகின்றது. அதனால் தோணவில்லை போலும்
  17. ஒரு ஊரில் பெரிய ரவுடி ஒருவர் இருந்தால் அவருக்கு கீழ் சில ரவுடிகள் இருப்பார்கள், அந்த ரவுடிகளினை தெரிந்தவர்கள் அவர்களை தெரிந்தவர்க்ளெல்லாம் சும்மா இருப்பவர்களிடம் நான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன் யார் தெரியுமா என பயமுறுத்தி வம்பிழுப்பார்கள். இவர்களும் பெரிய ரவுடியுடன் எதற்கு வம்பு என இந்த ஏப்பை சாப்பைகளை சகித்து கொண்டிருப்பார்கள், ஆனாலும் அவர்கள் விடமாட்டார்கள் அவர்களை தொடர்ந்தும் வம்பிழுப்பார்கள் ஒரு கட்டத்தில் அது முற்றி சாது மிரண்டால் காடு கொள்ளாது நிலை ஆகிவிடும். மத்திய கிழக்கு நிலையும் கிழக்காசிய நிலையும் வேறு வேறல்ல, இரண்டிடத்திலும் பலவீனமானவர்களை அல்லக்கைகள் வம்பிழுக்கின்றன (பலவீனமானவர்கள் இருக்கும் வரைதான் ரவுடிக்கு வேலை நடக்கும்). மரங்கொத்தி பறவைக்கு தனது ஆற்றலில் மிகையான நம்பிக்கை இருக்கும், பார்க்கும் மரமெல்லாவற்றினையும் கொத்தும் ஆனால் வாழைமரத்தில் அலகு இறுகி மாட்டுப்பட்டுவிடும். நேட்டோ இரஸ்சியாவினை தொடர்ச்சியாக அழுத்தி ஒரு போரினை ஆரம்பிக்க விரும்பியது, ஏற்கனவே பொருளாதார தடையில் இருக்கும் இரஸ்சியாவினை ஒரு போரின் மூலம் இலகுவாக உடைக்கலாம் என நம்பியது. இரஸ்சியாவின் பலத்தினை தொடர் அழுத்தம் மூலம் அழிக்கலாம் என எதிர்பார்த்தது அதற்கு இரஸ்சியாவின் பாதுகாப்பு, பொருளாதாரத்தின் மீதான மீள்தகவு நெகிழ்தன்மையினை (Elastic resistance) தொடர் அழுத்தம் மூலம் உடைக்கலாம் (Break point) என நம்பியது. அது நிகழவேண்டுமாயின் இரஸ்சியாவின் பொருளாதாரம் உடைய வேண்டும் ஆனால் அது நிகழவில்லை. இரஸ்சியா 2014 பின்னர் தனது பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் மூலம் ஒரு உறுதியான பொருளாதாரமாக மாறியிருந்தது. முக்கியமாக தற்போதய உலகில் காணப்படும் பலவீனமான நிழல் வங்கி முறையினை மாற்றியமைத்தது (Shadow banking system), இன்று பெரிய முக்கிய பொருளாதார சக்தியாக திகழும் அமெரிக்கா, சீனா உள்ளடங்கலாக நாடுகளில் உள்ள இந்த பலவீனமான அமைப்பை மாற்றி அமைத்தது, இதன் மூலம் பொருளாதார பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கலாம் (2008 அமெரிக்க பொருளாதார பேரிடர் போன்றதோர்). அத்துடன் இந்த நிழல் வங்கி முறைமையில் மிக மிக குறைந்தளவிலான வெளித்தொடர்பினை பேணுதல் மற்றும் முழுக்க முழுக்க நாடு சார்ந்த வங்கி அமைப்பு, இறுக்கமான நாணய கொளகை, தனியான வர்த்தக பரிமாற்று சேவை என பல விடயங்களை மாற்றி அமைத்தார்கள். தற்போது எப்படி ஒரு எலாஸ்ரிக் பாண்டினை அதன் முழு சக்திக்கு அப்பால் இழுத்தால் அறுந்து விடுமோ அதே போல அந்த அழுத்தத்தினை பாதியில் விட்டால் அது தெறித்து இன்னொரு வகையான சேதத்தினை ஏற்படுத்துமோ அந்த நிலையில் உலகை தள்ளி விட்டுள்ளார்கள் (இதில் பலியாக போவது அல்லக்கைகள், ரவுடி ஏற்கனவே கழண்டுவிட்டார்), எதிராளி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் குடைச்சல் கொடுத்ததன் விளைவாக நிலமை தலைகீழாகி அதே பிரச்சினை திரும்பியுள்ளது. இரஸ்சியாவினை அழிக்கவேண்டுமாயின் (போரில் தோற்கடிக்க) அவர்களின் பொருளாதாரத்தினை முதலில் அழிக்க வேண்டும், ஆனால் இந்த பொருளாதார தடைகளால் அதனை நிறைவேற்ற முடியாது. எதிர்காலத்தில் பல போர் அழிவுகள், பொருளாதார பேரழிவுகள் ஏற்படலாம் அதனை தவிர்க்க சமாதானமே சரியான வழி.
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். கட்டுரை தகவல் அமீர் அஹ்மது பிபிசி உலக சேவை 2 ஜூலை 2025, 02:48 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். அது உங்கள் உடல் முழுவதற்கும் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை ரத்தத்தின் மூலம் கொண்டு செல்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்க கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் (CVDs) எனப்படும் இதய நோய்கள்தான் இறப்புக்கான முக்கிய காரணம். ஐந்தில் நான்கு கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் மரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன. இதயநோய் மருத்துவர்களின் கூற்றுப்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் தினமும் செய்யக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. ஆரோக்கியமான இதயம் என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கும். "நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் இளம் வயதிலேயே இதயத்துக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் குறைக்கலாம்," என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த இதயநோய் மருத்துவரான எவன் லெவின். ஆனால், இது ஆரோக்கியமான இதயம் உங்கள் மாரடைப்பு ஆபத்தைக் குறைக்கும் என சொல்லுமளவு எளிதானதா என்கிற கேள்வியும் உள்ளது மாரடைப்பு என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என சந்தேகம் எழுந்தால் உடனடியாக அவசர உதவியை அழைக்க வேண்டும் இதயத்துக்கான ரத்த ஓட்டம் திடீரென தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்துக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது, இதய தசைகள் சேதமடையலாம் அல்லது இறக்க தொடங்கலாம். உரிய சிகிச்சை இல்லாவிட்டால் இதயத்தின் தசைகள் மீட்டெடுக்க முடியாத சேதத்தைச் சந்திக்கலாம். இதயத்தின் ஒரு பெரும் பகுதி இதுபோல் சேதமடைந்தால், மரணத்தை விளைவிக்கும் வகையில் இதயம் துடிப்பது நின்றுவிடுகிறது (இது கார்டியாக் அரெஸ்ட் அல்லது மாரடைப்பு என அழைக்கப்படுகிறது). மாரடைப்பு மரணங்களில் பாதி, அறிகுறிகள் ஏற்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் நிகழ்கின்றன. எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகள் மருத்துவ அவசரமாக கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பது முக்கியம். பிளேக்ஸ் (plaques) எனப்படும் கொழுப்புப் பொருள்கள் இதய ரத்த நாளங்களில் தேங்கி, ரத்தம் எளிதில் பாய முடியாத அளவு அதனை குறுகலாக்கும் கரோனரி இதய நோய்தான் மாரடைப்புக்கு பொதுவான காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் சுமார் 805,000 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதில், 605,000 பேர் முதல் முறையாக மாரடைப்பை அனுபவிக்கிறார்கள், 200,000 பேர் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிக்கு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு வரலாம் என்பதை ஒருவர் அறிவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரடைப்பின் வலி நெஞ்சிலிருந்து கைகளுக்குச் செல்லலாம் மாரடைப்பு பலவிதமான அறிகுறிகளுடன் ஏற்படலாம், இதில் மிகவும் பொதுவானது மார்பு வலி – ஆனால் இது ஒரு கூர்மையான வலியாக மட்டும் இல்லாமல் மார்பு முழுவதும் கடுமையான அழுத்தம் மற்றும் இறுக்கமாக இருக்கும். சில பெண்கள் இந்த மார்பு வலியோடு, கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வலியை உணரலாம். கலிபோர்னியாவைச் சேர்ந்த இதயவியல் மருத்துவர் ஐலின் பார்சேகியன், மாரடைப்பு தொடக்கத்தில் அஜீரணக் கோளாறு என தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறுகிறார். ஆனால், அஜீரணக் கோளாறு போலல்லாமல் இடது கை, தாடை, முதுகு மற்றும் வயிறு போன்ற உங்கள் உடலின் பிற பகுதிகளிலும் மாரடைப்பு பெரும்பாலும் வலியை ஏற்படுத்துகிறது. தலைச்சுற்றல், அதிக வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையும் இதில் அடங்கும். மாரடைப்பு திடீரென ஏற்பட்டாலும், சமயங்களில் பலமணி நேரம் அல்லது பல நாட்களுக்கு முன்பே கூட எச்சரிக்கை அறிகுறிகள் தென்படலாம். ஓய்வு எடுத்தாலும் நெஞ்சுவலி சரியாகாவிட்டால் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். "மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, ரத்த ஓட்டம் சீரமைக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட இதய தசைகள் இறக்கத் தொடங்கலாம், அவசர மருத்துவ பணியாளர்கள் வரும்வரை ஒரு ஆஸ்பிரினை மெல்லும்படி நான் அறிவுறுத்துகிறேன்," என்கிறார் மருத்துவர் ஐலின் பார்சேகியன். உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். "உங்கள் வயது, எடை, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் உடல்நலம் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்களுக்கு எதிராக இருந்து, மார்பு அழுத்தத்தை உணர்ந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழையுங்கள்," என்கிறார் அமெரிக்க இதயநோய் நிபுணர் மருத்துவர் இவான் லெவின். மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கியமானதாகிறது. உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் ரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது உட்பட மாரடைப்பு அபாயத்தையும் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்வதற்காக உங்கள் ரத்தத்தில் காணப்படுவதுதான் (கொழுப்பு) கொலஸ்ட்ரால். அதே நேரம், சில வகை கொழுப்பு அதிக அளவில் இருந்தால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. நமது இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தினசரி வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய ஒன்று என இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகமுள்ள உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன் அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால் தினசரி உட்கொள்ளும் உப்பின் அளவு 6 கிராமுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்பதால் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நிறை கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த உணவுகளில் இறைச்சி பை (meat pie), கேக்குகள், பிஸ்கட்கள், சாசேஜ்கள், வெண்ணெய் மற்றும் பனை எண்ணெய் உள்ள உணவுகள் அடங்கும். நிறைவுறாத கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மற்றும் ரத்த நாள அடைப்புகளை நீக்க உதவக் கூடியவை என்பதால் சமச்சீரான உணவாக அவை சேர்க்கப்பட வேண்டும். இந்த உணவுகளில் எண்ணெய் மீன்கள், அவகேடோ, கொட்டைகள் மற்றும் காய்கறி எண்ணெய்கள் அடங்கும். ஆரோக்கியமான உணவை வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான எடை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஒரு நாளைக்கு தினமும் 30 நிமிடம் வீதம் வாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சி செய்வதை இதயநோய் மருத்துவ நிபுணர் இவான் லெவின் பரிந்துரைக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு "எப்போதும்" புகைப்பிடிக்கவோ அல்லது வேப் (Vaping) செய்யவோ கூடாது என்பதுதான் அவரது மிக முக்கிய அறிவுறுத்தல். 24,927 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சிகரெட்டுகளை மட்டும் புகைப்பவர்களுக்கு உள்ள இதய நோய் அபாயம் இ-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கும் இருப்பதாக அமெரிக்க இதய சங்கம் தெரிவிக்கிறது. இருப்பினும் இ-சிகரெட்டுகளை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30-60% குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, ஏற்கெனவே ஒரு மாரடைப்பை அனுபவித்தவர்களில், சுமார் ஐந்தில் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டாவது மாரடைப்புக்காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகளுக்கு ஸ்டேடின்கள் மற்றும் எஸெடிமிப் (ezetimibe) மருந்துகளை பரிந்துரைப்பது இரண்டாவது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவும். இந்த இரண்டு மருந்துகளும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள். "எல்டிஎல் (LDL) கொலஸ்ட்ரால் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவு இதய கோளாறுகளின் அபாயம் குறைகிறது என்பதை பல பத்தாண்டுகளின் தரவு காட்டுகிறது," என்கிறார் டாக்டர் ஐலின் பார்சேகியன். இளம் தலைமுறையினரிடம் மாரடைப்பு அதிகரிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளைஞர்களின் வாழ்க்கை முறை மாரடைப்பை அதிகரிப்பதில் பங்கு வகிப்பதாக இதய நோய் மருத்துவர்கள் கவலை கொள்கின்றனர். மாரடைப்பு அபாயம் பொதுவாக வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, ஆனால் அமெரிக்க தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் (US National Center for Health Statistics) தரவுகள் இளைஞர்களிடையே மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. 2019இல், 18 முதல் 44 வயது வரையிலானவர்களில் 0.3% பேர் மாரடைப்பை அனுபவித்தனர். 2023ஆம் ஆண்டு இது 0.5% ஆக உயர்ந்தது. 2019-ல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 0.3% பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டில் இது 0.5% ஆக அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்புக்கு, இந்த வயதினரிடையே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் அதிகரித்தது மற்றும் உடற்பயிற்சி இல்லாமை உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களைக் காரணமாக கூறுகிறார் மருத்துவர் இவான் லெவின். "நாம் அனைவரும் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, ஆனால் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். கோவிட்டுக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் நச்சான, அதிகம் நகரவே தேவையில்லாத உடல் இயக்கமே இல்லாத வாழ்க்கை முறைக்குள் செல்வது கவலை அளிக்கிறது," என்கிறார் அவர். இரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்கும் அத்திரோஸ்கிளிரோசிஸ் (atherosclerosis) உருவாக்குவதற்கு புகைப் பிடிப்பது ஒரு காரணியாக அறியப்படுகிறது, ஆனால் இளைஞர்கள் மீது வேப் (vapes) பயன்படுத்துவதன் அறியப்படாத தாக்கம் பற்றிய கவலைகளும் மருத்துவர் இவான் லெவின் போன்ற இதயநோய் நிபுணர்களுக்கு உள்ளது. டாக்டர் ஐலின் பார்சேகியன் கூறுகையில் "பரம்பரை ஹைப்பர்லிபிடமியா (familial hyperlipidaemia) போன்ற மரபணு ஆபத்து காரணிகளும் இள வயதில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் போன்ற சூழல்களும் இதற்கு பங்களிக்கின்றன என்று புரிந்து கொள்ளப்படுகிறது." என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdd5y14ppo
  19. வெளிநாட்டு மாணவர்களால் பல்கலைகள் பெருவாரியான பணம் சம்பாதித்தார்கள். ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் 50000-60000 டாலர்கள் வருடத்திற்கு எடுக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.