Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10098
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    20010
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    31956
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/13/25 in all areas

  1. விமானத்தின் குறைபாட்டை 7 ஆண்டுக்கு முன்பே சுட்டிக்காட்டிய அமெரிக்காவின் எஃப்ஏஏ - நிபுணர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத் விமான விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஜூலை 12-ஆம் தேதி இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் விமானத்தின் இரு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட் ஆஃப் நிலைக்குச் சென்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக 2018 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் பரிந்துரை செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்ன பரிந்துரை? ஆமதாபாத் விமான விபத்துக்கு அதுதான் காரணமா? முதற்கட்ட அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஏர் இந்தியா ஏஐ 171 விமானத்தின் கேப்டன் சுமித் சபர்வால் (இடது), இணை விமானி க்ளைவ் குந்தர் (வலது) குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ 171 விமானம், பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தின் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 241 பேர் உள்பட கிட்டத்தட்ட 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்ற பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் உயிர் பிழைத்தார். விபத்து நடந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், இயக்க (RUN) என்ற நிலையில் இருந்து கட் ஆஃப் (CutOff) நிலைக்குச் சென்றதால், இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்வது தடைப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இரு என்ஜின்களும் செயல்படாமல் போனதாக முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான விபத்து பிற்பகல் 1.40 மணியளவில் நடந்துள்ள நிலையில், காலை 11.17 மணியில் இருந்து என்ன நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானம் கிளம்புவதற்கு முன்பு விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் தகுதியானவர்களா என்பதற்கான சோதனைகள் நடத்தப்பட்டன. சுவாசப் பகுப்பாய்வு சோதனையில், அவர்கள் விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தின் எரிபொருள் மாதிரிகளும் திருப்திகரமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமானிகளின் அறையில், 'ஏன் துண்டித்தீர்கள்? (எரிபொருள் சுவிட்ச்)' என விமானி கேட்ட போது, 'நான் அணைக்கவில்லை' என்று மற்றொரு விமானி கூறியுள்ளார். ஆனால், அடுத்த சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம, கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் இரண்டு என்ஜின்களின் கட் ஆஃப் நேரத்துக்கு இடையில் ஒரு விநாடி நேரம் இருந்துள்ளது. எரிபொருள் விநியோகம் தடைபட்டதால், வேகம் குறையத் தொடங்கியதாக விமான புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ள 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'திட்டமிட்டு செய்யவில்லை, ஆனால்?' படக்குறிப்பு, எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்கிறார் அசோக் ராஜா. "ஏஏஐபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட் ஆஃப் சுவிட்ச் தொடர்பாக விமானிகள் பேசியது குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், திட்டமிட்டு இதனைச் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா. "விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு மனநல ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை" என்பது முன்பே உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் அவர், "விமானம் கிளம்புவதற்கு முன்பு அவர் எவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தாலும் எரிபொருள் உள்பட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வாய் விட்டுக் கூற வேண்டும்" எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அசோக் ராஜா, "அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கு அந்நாட்டின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA)) ஒப்புதல் வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டு போயிங் விமானத்தின் தொழில்நுட்ப பிரச்னைகள் தொடர்பான சில பரிந்துரைகளை எஃப்ஏஏ வழங்கியுள்ளது" எனக் கூறுகிறார். 2018 ஆம் ஆண்டு பரிந்துரை என்ன? '787 ட்ரீம்லைனர் விமானங்களில் எரிபொருள் கட் ஆஃப் வால்வுகளில் தொழில்நுட்ப சிக்கல்கள் வரலாம்' எனவும் அது சரியாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எஃப்ஏஏ பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அது கட்டாயம் என்பதாகக் குறிப்பிடாமல் பரிந்துரை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார் அசோக் ராஜா. "இது விதிமீறல் என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் போயிங் விமானம் தொடர்பான இந்தப் பரிந்துரையை செயல்படுத்தியிருக்கலாம்" எனக் கூறும் அசோக் ராஜா, "எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" எனக் குறிப்பிட்டார். 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்ஏஏ (FAA) அளித்துள்ள பரிந்துரையில், போயிங் நிறுவனத்துக்கு விமானத்தை இயக்குகிறவர்களிடம் இருந்து கிடைத்த அறிக்கையின்படி, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் லாக்கிங் சிஸ்டம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் (Flight deck) அமைக்கப்பட்டு, என்ஜினுக்கு எரிபொருளை வழங்கவும் துண்டிக்கவும் செய்ய விமானியால் கையாளப்படுகிறது. இதில் கவனக்குறைவு நேரிடுவதைத் தடுக்கும் வகையில் லாக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லாக்கிங் சிஸ்டம் செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? 'லாக்கிங் சிஸ்டம் சரிவர செயல்படாவிட்டால், ரன் மற்றும் கட் ஆஃப் நிலைகளுக்கு ஆகிய 2 நிலைகளுக்கு இடையே எரிபொருள் சுவிட்சை மாற்றலாம். இதில் கவனக்குறைவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனால் விமானத்தின் இயந்திரம் நிறுத்தப்படுவது போன்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்' என எஃப்ஏஏ எச்சரித்துள்ளது. 'விமான உரிமையாளர்களும் அதனை இயக்கும் விமானிகளும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை உறுதி செய்ய வேண்டும்' எனவும் எஃப்ஏஏ அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. 'ஒத்துப் போகும் அறிக்கை' 'தரையில் விமானம் இருக்கும் போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை உயர்த்தாமல் (Lift) இரண்டு நிலைகளுக்கு இடையில் நகர்த்த முடியுமா எனப் பார்க்க வேண்டும். சுவிட்சை உயர்த்தாமல் நகர்த்த முடிந்தால் லாக்கிங் சிஸ்டம் துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் என்பதால் சுவிட்சை மாற்ற வேண்டும்' எனவும் எஃப்ஏஏ தெரிவித்துள்ளது. இதனை மேற்காள் காட்டிப் பேசிய முன்னாள் விமானி அசோக் ராஜா, "இரண்டு விமானிகளுக்கு நடுவில் கட் ஆஃப் வால்வு இருக்கும். அது கைதவறி அணைக்கும் அளவுக்கு இருக்காது. அதற்கான வாய்ப்புகளே இல்லை" எனக் கூறுகிறார். "கடந்த காலங்களில் விமானத்தின் இயக்கம் முழுவதும் கைகளால் கையாளப்பட்டன. அதாவது நேரடியாக மெக்கானிக்கல் செயல்பாடு இருக்கும். தற்போது எலக்ட்ரானிக் முறையில் கையாளப்படுகின்றன" எனவும் அசோக் ராஜா குறிப்பிட்டார். எஃப்ஏஏ கூறிய பரிந்துரைகளுடன் விமான விபத்து தொடர்பான இந்திய விமான புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையும் ஒத்துப் போவதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 'பரிந்துரை தான், கட்டாயம் இல்லை' படக்குறிப்பு, விமானத்தின் மென்பொருளில் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எலக்ட்ரிகல் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.குருசாமி. "எஃப்ஏஏ கூறிய அம்சங்களில் (Special Airworthiness Information Bulletins (SAIB) 'கட்டாயம்' என இல்லாவிட்டால் அதை விமானங்களின் உரிமையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை" என்கிறார், அசோக் ராஜா. விமானத்தின் எலக்ட்ரிகல் வயர்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தன்னிச்சையாக எரிபொருள் கட் ஆஃப் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இறுதிக்கட்ட அறிக்கை வெளிவரும்போது முழு விவரங்களும் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த கோவை நேரு ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியின் பேராசிரியர் எஸ்.குருசாமி, ""இரண்டு சுவிட்சுகளும் வெவ்வேறு மின் இணைப்புகள் மூலம் செயல்படும். அப்படித் தான் விமானம் வடிமைக்கப்பட்டிருக்கும். தவறுதலாக இதை அணைப்பதற்கு வாய்ப்பில்லை. இரண்டு என்ஜின்களுக்கும் தனித்தனி எரிபொருள் அமைப்புகள் உள்ளன" என்கிறார். "ஒன்று ஆஃப் செய்யப்பட்டாலும் மற்றொன்று கட் ஆஃப் ஆக வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறும் அவர், "இதற்கு மனித தவறு காரணமா? தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது முழு அறிக்கை வரும்போது தெரியவரும்" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939eqgd9zno
  2. 👍 நான் இரண்டிற்காகவும் பூமி வெப்பமடைவதை குறைப்பதற்கான பங்களிப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் செய்கிறேன் இறைச்சியை முடிந்தளவு தவிர்த்தல் கோழி இறைச்சியை குறைப்பது வீகன் உணவை அதிகரிப்பது
  3. இதை எவ்வளவு பேர் ஆமோதிக்கிறீர்கள் என்று எனக்கு சொல்லத் தெரியாது...ஆனால் இது தான் உண்மை என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்...கடந்த பல ஆண்டுகளாக வடக்கு மாகாணம் ஓப்பீட்டு அளவில் ஒரு ஐந்துகுள்ளயாவது வந்தது..இந்த தடவை கடசி நிலைக்கு சென்றிருப்பது புலம் பெயர் மக்களால் என்ற ஒரு குற்றச் சாட்டையும் சில இடங்களில் ஊரிலிருப்வர்கள் எழுதியிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது..எல்லாவற்றுக்கும் புலம் பெயர் சமுகம் தான் காரணம் என்றால் ஊரிலிருக்கும் பெற்றோர் என்ன தான் செய்கிறார்கள்...? எமது பெற்றோர் காலம் அதற்கு முந்தைய காலத்தில் உள்ளவர்களின் வீடுகளில் பார்க்கப் போனால் எங்காவது ஒரு வீட்டில் தான் பல்கலைக்கழகம் போனவர்களோ அல்லது அரச உத்தியோகம் பார்த்தவர்களோ இருந்திருக்கிறார்கள்..வளம் குறைந்த காலத்தில் கூட படிக்க வேணும் என்ற ஒரு கோட்பாடோடு இருந்திருக்கிறார்கள் அந்த மக்கள்...அப்படி இல்லாது விட்டாலும் பெற்றோர் அவர்களை கல்வி என்ற ஒன்றுக்கு போக வைக்க வேணும் என்பற்காகவது 'டேய் படிக்காட்டி பிற்காலத்தில் ஆடு மாடு தான் மேய்ப்பாய் என்று பேசியாவது படிக்க வைத்த பெற்றோரும் உண்டு. இப்போ படிக்க முடியாதவர்கள் என்று ஊரில் இருப்பவர்களை சொல்ல இயலாது....காரணம்.அனேகமான வீடுகளில் பல்கலைகழகம் போனவர்களோ அல்லது அரச வேலை செய்வோரோ தாரளாக இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில் ஏன் கல்வி நிலையில் பின் தங்கிப் போகிறார்கள்...உண்மையாக படிக்க வேணும் எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்ய வேணும் என்ற நிலை அனேகருக்கு இல்லை..வெளியிலிருப்பவர்களை வெருட்டி,உருட்டியாவது பணத்திலிருந்து தேவைப்பட்ட எல்லாவற்றையும் பெற்று கொள்கிறார்கள்..18, 20 வயதுக்குள்ளயே தேவை அற்ற விடையங்களுக்கு அடிமையாகும் இளையவர்கள்..எல்லாவகையான மதுப்பாவனையும் கடந்த கிழமை கூட செய்திகளில் வந்த செய்தி மது அருந்தி விட்டு வாகன விபத்தில் இறந்த முவர்.... இந்த புலம் பெயர்ந்தவர்களும் இல்லாது விட்டால் உங்களுக்கு கேட்டதும் பணம், ஆடம்பர பொருட்கள் என்று வந்து சேராது..சிலருக்கு அலட்டல் எழுத்தாக கூட இருக்கலாம்.வெளி நாடுகளிலிருந்து பகிரப்படும் ஆலயங்களின் நேரடி அஞ்சல் பகுதிகளில் கூட ஊருலிருக்கும் சிலர் வந்து யாராவது எங்களை கூப்பிட்டு விட மாட்டீர்களா...?.ஐ போண் வேணும் வாங்கி அனுப்பி விட மாட்டீர்களா.....?இப்படி கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறார்கள்.. இந்த ஆண்டு வடக்கு மாகாணம் 69-70.அடுத்து வரும் ஆண்டுகளில் எழுதக் கூடடியமாதிரியிருந்தால் ... எழுதுகிறேன்.நன்றி.✍🙏
  4. இதைப் பார்க்க கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததே ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.
  5. பேரம் பேசும் கண்களுக்கு தெரிவதில்லை, அதற்குப் பின்னால் உள்ள வலி.
  6. ஓம் தமிழ் யுரியுப்பர்கள் விமானம் விபத்து பற்றி தங்களது கற்பனை கதைகளை தொடர்ந்து விட முடியவில்லையே என்ற கவலை தான் ஆனாலும் விடுவது இல்லை என்று சிங்கல அடியான் ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராம் வேண்டும் என்றே செய்யபட்ட தவறு விமான விபத்து - தலைப்பு. காணொளி பார்க்கவில்லை
  7. சிரிப்பு வருது சிரிப்பு வருது ........... ! 🤣
  8. நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆமத்துறு, இந்த பயங்கரவாதச்சட்டத்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இளைஞர் பாதிக்கப்படும்போதெல்லாம் ரசித்துக்கொண்டிருந்துவிட்டு, இப்போ இந்த பன்னிரண்டு பேருக்காக வீதியில் இறங்கி கொடி பிடிப்பதேன்? அன்றெல்லாம் உங்களுக்கு பயங்கரவாதசட்டம் தேவையாயிருந்தது, அதை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டியிருந்தது. இப்போ அது உங்களுக்கு எதிராக பாயும்போது அகற்ற வேண்டுமென்கிறீர்கள் அது என்ன நிஞாயம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? இயற்றினவர்கள் அதற்கு இரையாகும்போது நீங்கள் கூப்பாடு போடுவீர்கள், உங்களுக்கு போட்டு வளர்த்தவர்கள் அவர்களாச்சே. இப்போ உங்கள் தேவைக்கு தமிழரும் சேர்ந்து. இந்த பன்னிரண்டு பேரும் நாட்டுக்காக உழைத்தவர்களா, அனிஞாயத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களா? நாட்டை கொள்ளையடித்தவர்களுக்காக குரல் எழுப்பி மிகுதி கொள்ளையரையும் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்.
  9. அதற்கு ஏன் நீங்கள் இடம் அளிக்கிறீர்கள்? உங்கள் பிரஜைகளை நீங்கள் கௌரவத்துடன் வாழ விட்டால் மற்றவர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? தமிழரின் அரசியல் உரிமைகளை பறித்தது இந்தியாவா? அவர்கள் மீது கலவரங்களை தூண்டி கொன்று ஒழித்தது இந்தியாவா? அவர்களின் நிலங்களைபறித்தது இந்தியாவா? தமிழரின் பூர்வீக நிலங்களில் இராணுவ காவலரண்களை, விகாரைகளை உருவாக்கியது இந்தியாவா? பிக்குவிற்கு இப்போ சிங்களத்தை புனிதமாக்க வேண்டிய தேவையுள்ளது. எங்கோ கேட்டதை இங்கு வந்து கக்குகிறார். ஆனால் கண்ணுக்கு முன் நிகழ்ந்தவைகளை, நிகழ்த்தியவைகளை மறைக்கிறார். பிரச்சனைக்கு தீர்வு காண முயலாமல் பழியை வேறொரு பக்கம் காட்டி தொடருங்கள் அடுத்த அத்தியாயத்தை, அந்த இந்தியாவே வெகு விரைவில் உங்களையும் கூறு போடும். உள்நாட்டு பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வக்கில்லாமல் சர்வதேசத்துக்கு கொண்டு போய், பிச்சை எடுத்து, சர்வதேச படைகளையும் ஆலோசனைகளையும் கையாண்டு சொந்த மக்களை கொன்றொழித்த இந்த இந்த நாட்டுக்கு இறைமையேது, அதிகாரமேது, பொருளாதாரமேது? உங்கள் மதம் என்னத்தை போதித்தது, சாதித்தது? நீங்கள் போதிப்பது மத போதனையுமல்ல நீங்கள் ஆன்மீக வழிகாட்டியுமல்ல. உங்கள் வாயிலிருந்து வெளிவருவது இனவாதம் மதவாதம் அழிவின் வழிகாட்டிகள் நீங்கள். அதுபற்றி நீங்கள் வெட்கப்படுவதில்லை, பெருமை பேசிக்கொள்கிறீர்கள். அரசியல் கூட்டங்களில் அரசியல்வாதிகளில் முதல் இருக்கைகளை தேடுகிறீர்கள். உங்களுக்கு எதற்கு மதம், காவி? இரத்தம் குடித்து வாழும் விஷ ஜந்துக்கள். முகத்தில் குரூரம், வாயில் கக்கும் இனவாதம், அடாவடி, பொய், திரிப்பு. வேறு என்ன உங்களிடமுண்டு மக்களுக்கு போதிப்பதற்கு?
  10. உங்களை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் இப்படி நழுவிப் போய்விட்டதே, ஜஸ்டின். இதே போலவே நியூ ஜெர்சியில் இருந்து வருவதாகச் சொல்லிய ஒரு அணியும் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது. அங்கிருந்து ஒரு சிலர் மட்டும் வந்தார்கள். என்னுடைய அணி செட்அப் வாலிபால் கிண்ணத்தை வென்றது. மொத்தமாகவே உலகெங்கும் எங்களில் செட்அப் வாலிபால் விளையாடுபவர்கள் குறைவு. இரண்டு 2கே அணிகள் கனடாவிலிருந்தும், ஒரு 2கே அணி அமெரிக்காவிலிருந்தும், மற்றும் என்னுடைய அணியும் கலந்துகொண்டன. அந்த இளையோர் அணிகள் எதிர்பார்க்காத விதத்தில் போட்டிகள் அமைந்தன. ஓவர் கேம் வாலிபாலில் கனடா அணி ஒன்று வென்றது. இரவு ஒன்றுகூடலும் நன்றாகவே இருந்தது.
  11. ஒட்டு மொத்தமாக பண வாக்கு தேர்தலாக இருக்கும் நாட்டில் நீங்கள் சொல்வதெல்லாம் சாத்தியமா சார்? 🤣 இந்திய தேர்தல்கள் என்றாலே மோசடி தேர்தல் என்பது உலகத்தினது பார்வை.
  12. யாழ்.பல்கலை இந்த நிதித் தேட்டம் தொடர்பாக ஏன் புலம்பெயர் மக்களை நாடியதா? அல்லது நாடவில்லையா?. உள்ளூரில் பல்வேறு வாழ்வாதாரப் பணிகளைத் தமிழ்க் குமுகாயம் மேற்கொள்ள இதுபோன்ற படம் காட்டல்களுக்கு எதற்காக எம்மைக் கருவறுக்க முனையும் சக்திகளை யாழிலே கொண்டுதிரிகிறார்கள். படித்த, அறிவாளர்கள் கொண்ட பல்கலைக் குமுகாயத்தின் வரண்ட சிந்தனையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. சம்மந்துரை...வீரமுனைபடுகொல்லை உங்கள் கணக்கில் இல்லையோ...அல்லது சண்கிளாஸ் போட்டிருக்கிறியாளோ... கடந்த 5 வருடத்தில் உங்கடை ஆட்கள் அமச்ச்சுப்பதவி வகித்தவையே,,, அதிவிட கிழக்கில் ஆட்ட்சியும் செலுத்தினவை....அப்ப எங்கை போனது இந்த குரலற்றவை அமைப்பு... செம்மணி தோண்டி உண்மைகள் வெளிவர உங்களுக்கு கடி தொடங்கியிட்டுது...
  14. எள்ளுப் பாகு அல்லது எள்ளு உருண்டை செய்யும் முறை.
  15. ஒருவேளை உங்கள் அன்ராவை நான் அறிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.
  16. இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.சீமான் எதிர்பாளர்கள் பார்த்து சுய இன்பம் காணுவதற்காக இந்த வீடியோ
  17. இந்த மாணவனது தகவலை படத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிறியண்ண...பலதும் , பத்திலும் பகிரப்பட்டுள்ளது..எனக்கு சிலவேளைகளில் படங்களோடு தகவல்களை பகிர முடியாமல் போகிறது ஏன் என்று தெரியவில்லை.நான் உட்பட முடிந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இவ்வாறன மாணவர்களை மேற் கொண்டு கற்பதற்கு ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காகவே சில விடையங்களை இங்கும் இணைப்பேன்.🖐
  18. நேற்றிலிருந்து றாலைப் போட்டுவிட்டு தம்பி ஒருவர் காவல் இருக்கிறார். இப்போ நீங்க தான் தூண்டிலில் மாட்டியிருக்கிறீர்கள். பார்ப்போம்.
  19. 5- வகையான பாரம்பரியமான துவையல் 🥥 1. தேங்காய் துவையல் (Coconut Thuvaiyal) சிறப்பம்சம்: எளியதும், பரம்பரிய சுவையும் 🔸 பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வத்தல் மிளகாய் – 2 உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய், சிறிது இம்லி 🔸 செய்முறை: 1. எண்ணெயில் பருப்பு, மிளகாய் வதக்கி, இறுதியில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கவும். 2. தேங்காய், உப்பு, இம்லி சேர்த்து அரைக்கவும். 3. சாதத்துடன் கலந்தால் அருமை! --- 🍅 2. தக்காளி துவையல் (Tomato Thuvaiyal) சிறப்பம்சம்: கொஞ்சம் காரமானும், நல்ல Shelf life கொண்டதும் 🔸 பொருட்கள்: தக்காளி – 3 வத்தல் மிளகாய் – 3 கடலை பருப்பு – 1.5 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, பின் தக்காளி சேர்த்து வெந்துவிடும்வரை வதக்கவும். 2. உப்பு சேர்த்து அரைத்து, சிறிது எண்ணெயில் சுட்டு வைக்கவும். --- 🌿 3. கொத்தமல்லி துவையல் (Coriander Thuvaiyal) சிறப்பம்சம்: கொத்தமல்லி வாசனையுடன் அருமையான பச்சை நிற துவையல் 🔸 பொருட்கள்: கொத்தமல்லி இலை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – 2 கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிது இம்லி, உப்பு 🔸 செய்முறை: 1. பருப்பு, பச்சை மிளகாய் வதக்கி, பின் கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 2. அனைத்தையும் அரைத்துத் தாளிக்கவும். --- 🌶️ 4. கார வெங்காய துவையல் (Spicy Onion Thuvaiyal) சிறப்பம்சம்: சாதத்துடன் சும்மா சூப்பரா இருக்கும் 🔸 பொருட்கள்: வெங்காயம் – 2 (நறுக்கியது) வத்தல் மிளகாய் – 3 இஞ்சி – சிறிது பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. எண்ணெயில் வெங்காயம், மிளகாய், இஞ்சி வதக்கவும். 2. உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். 3. தேவைப்பட்டால் எண்ணெயில் சிறிது வதக்கவும். --- 🫘 5. பருப்பு துவையல் (Mixed Dal Thuvaiyal) சிறப்பம்சம்: அதிக நாள்கள் வைத்துக் கொள்ளக்கூடியதுடன், சத்து அதிகம் 🔸 பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி வத்தல் மிளகாய் – 3 இம்லி – சிறிது தேங்காய் – 2 மேசைக்கரண்டி (ஐச்சிகை) பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, தேங்காய், இம்லி சேர்த்து அரைக்கவும். 2. எளிய சாதம், இடியாப்பம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சூப்பர். தமிழ்நாடு ரெசிப்பீஸ்
  20. ஒரு ஊரில் பெரிய ரவுடி ஒருவர் இருந்தால் அவருக்கு கீழ் சில ரவுடிகள் இருப்பார்கள், அந்த ரவுடிகளினை தெரிந்தவர்கள் அவர்களை தெரிந்தவர்க்ளெல்லாம் சும்மா இருப்பவர்களிடம் நான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன் யார் தெரியுமா என பயமுறுத்தி வம்பிழுப்பார்கள். இவர்களும் பெரிய ரவுடியுடன் எதற்கு வம்பு என இந்த ஏப்பை சாப்பைகளை சகித்து கொண்டிருப்பார்கள், ஆனாலும் அவர்கள் விடமாட்டார்கள் அவர்களை தொடர்ந்தும் வம்பிழுப்பார்கள் ஒரு கட்டத்தில் அது முற்றி சாது மிரண்டால் காடு கொள்ளாது நிலை ஆகிவிடும். மத்திய கிழக்கு நிலையும் கிழக்காசிய நிலையும் வேறு வேறல்ல, இரண்டிடத்திலும் பலவீனமானவர்களை அல்லக்கைகள் வம்பிழுக்கின்றன (பலவீனமானவர்கள் இருக்கும் வரைதான் ரவுடிக்கு வேலை நடக்கும்). மரங்கொத்தி பறவைக்கு தனது ஆற்றலில் மிகையான நம்பிக்கை இருக்கும், பார்க்கும் மரமெல்லாவற்றினையும் கொத்தும் ஆனால் வாழைமரத்தில் அலகு இறுகி மாட்டுப்பட்டுவிடும். நேட்டோ இரஸ்சியாவினை தொடர்ச்சியாக அழுத்தி ஒரு போரினை ஆரம்பிக்க விரும்பியது, ஏற்கனவே பொருளாதார தடையில் இருக்கும் இரஸ்சியாவினை ஒரு போரின் மூலம் இலகுவாக உடைக்கலாம் என நம்பியது. இரஸ்சியாவின் பலத்தினை தொடர் அழுத்தம் மூலம் அழிக்கலாம் என எதிர்பார்த்தது அதற்கு இரஸ்சியாவின் பாதுகாப்பு, பொருளாதாரத்தின் மீதான மீள்தகவு நெகிழ்தன்மையினை (Elastic resistance) தொடர் அழுத்தம் மூலம் உடைக்கலாம் (Break point) என நம்பியது. அது நிகழவேண்டுமாயின் இரஸ்சியாவின் பொருளாதாரம் உடைய வேண்டும் ஆனால் அது நிகழவில்லை. இரஸ்சியா 2014 பின்னர் தனது பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் மூலம் ஒரு உறுதியான பொருளாதாரமாக மாறியிருந்தது. முக்கியமாக தற்போதய உலகில் காணப்படும் பலவீனமான நிழல் வங்கி முறையினை மாற்றியமைத்தது (Shadow banking system), இன்று பெரிய முக்கிய பொருளாதார சக்தியாக திகழும் அமெரிக்கா, சீனா உள்ளடங்கலாக நாடுகளில் உள்ள இந்த பலவீனமான அமைப்பை மாற்றி அமைத்தது, இதன் மூலம் பொருளாதார பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கலாம் (2008 அமெரிக்க பொருளாதார பேரிடர் போன்றதோர்). அத்துடன் இந்த நிழல் வங்கி முறைமையில் மிக மிக குறைந்தளவிலான வெளித்தொடர்பினை பேணுதல் மற்றும் முழுக்க முழுக்க நாடு சார்ந்த வங்கி அமைப்பு, இறுக்கமான நாணய கொளகை, தனியான வர்த்தக பரிமாற்று சேவை என பல விடயங்களை மாற்றி அமைத்தார்கள். தற்போது எப்படி ஒரு எலாஸ்ரிக் பாண்டினை அதன் முழு சக்திக்கு அப்பால் இழுத்தால் அறுந்து விடுமோ அதே போல அந்த அழுத்தத்தினை பாதியில் விட்டால் அது தெறித்து இன்னொரு வகையான சேதத்தினை ஏற்படுத்துமோ அந்த நிலையில் உலகை தள்ளி விட்டுள்ளார்கள் (இதில் பலியாக போவது அல்லக்கைகள், ரவுடி ஏற்கனவே கழண்டுவிட்டார்), எதிராளி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் குடைச்சல் கொடுத்ததன் விளைவாக நிலமை தலைகீழாகி அதே பிரச்சினை திரும்பியுள்ளது. இரஸ்சியாவினை அழிக்கவேண்டுமாயின் (போரில் தோற்கடிக்க) அவர்களின் பொருளாதாரத்தினை முதலில் அழிக்க வேண்டும், ஆனால் இந்த பொருளாதார தடைகளால் அதனை நிறைவேற்ற முடியாது. எதிர்காலத்தில் பல போர் அழிவுகள், பொருளாதார பேரழிவுகள் ஏற்படலாம் அதனை தவிர்க்க சமாதானமே சரியான வழி.
  21. இலங்கையில் தமக்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஈழத்தமிழர்களே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்!
  22. நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம். இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார். மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.
  23. பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் பெயர் வாங்கிக் கொடுத்த 'பெருமாள் பிச்சை' கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். கார்த்தி - சந்தானத்துடன் இணைந்து 'அழகுராஜா' என்ற திரைப்படத்தில் நகைச்சுவையிலும் அவர் கலக்கியிருப்பார். வில்லன் கதாபாத்திரங்களில் அசத்திய சீனிவாச ராவ் இளம் வயதில் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பின்னாட்களில், நாடக கலையால் ஈர்க்கப்பட்ட அவர் திரையுலகிற்கு வந்தார். குணசித்திர வேடங்களில் மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் அவர். கிராமப் புறத்தில் வாழும் நபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திய அவர், நவ நாகரிக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியும் நடிப்பில் அசத்தினார். தெலுங்கில் கிருஷ்ணா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்ற பிரபலங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் விக்ரம், விஜய், சிலம்பரசன் ஆகியோரின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 'ஆஹா! நா பெல்லண்டா' என்ற படத்தில் பிசினாரி என்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான கணேஷ் திரைப்படத்தில் அரசியல் தலைவராக நடித்திருக்கும் அவர் தெலுங்கானாவுக்கே உரித்தான தெலுங்கு பேச்சுவழக்கில் மிரட்டியிருப்பார். நகைச்சுவை உணர்வுக்காக நன்கு அறியப்பட்டவர் அவர். பட மூலாதாரம்,UGC அரசியல்வாதியாகவும் சீனிவாச ராவ் நடிப்பில் மட்டுமின்றி அவர் அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். விஜயவாடா கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ஆம் ஆண்டு அவர் பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புத் திறமைக்காக பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார். நந்தி, சைமா உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற அவருக்கு 2015-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. திரையுலகினர் இரங்கல் கோட்டா சீனிவாச ராவின் திறமையான நடிப்பு குறித்து பல நேரங்களில் நடிகர்களும் இயக்குநர்களும் புகழ்வது உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பு ஜூலை 10 அன்று, கோட்டா சீனிவாச ராவின் பிறந்த நாளை ஒட்டி இயக்குநர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "நடிகர்கள் உங்களை சிரிக்க வைக்கலாம். சிலர் உங்களை அழ வைக்கலாம். ஆனால் கோட்டாவால் மட்டுமே உங்களை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும், அச்சப்படுத்தவும் முடியும்," என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrl90q802zo
  24. இந்த விடையம் வீடியோவாக முகப் புத்தக பக்கம் பார்க்க முடிந்தது..உயிராபத்தான கட்டத்திலும் அனேகமானவர்களின் போண்கள் வீடியோ எடுத்தபடி தான் இருக்கிறது..நாகரீகம் கூடிய மக்கள்.🤨
  25. யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு! written by admin July 12, 2025 பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217784/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.