Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38754
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    5416
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/14/25 in all areas

  1. 6) இன்றைய தினம் 14/08/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக நவரத்தினம் சிவரஞ்சன் குடும்பம் (சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்) 20000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 14/08/2025 இன்றுவரை மொத்தமாக 220070 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. பேசமுடியாத தந்தையும் மூத்த மகனும் உள்ள இந்த குடும்பத்திற்கு பலதடவைகள் அரசின் நிதி உதவியுடனான வீட்டுத்திட்டம் தவறிப்போனது. இம்முறை இதனை பூரணப்படுத்தி அவ்வீட்டில் குடியேற நல்லுள்ளங்களே உங்களால் இயன்ற பங்களிப்பை செய்து உதவுமாறு தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448 +94 77 959 1047
  2. "கூலி" படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்று நேர்த்திக்கடன் வைத்து, மண்சோறு சாப்பிட்ட... ரசிக குஞ்சுகள்.
  3. எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெறும் கூலி, காணி உரிமை,பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின் போராட்டப் பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன். பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள். அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து (76 அல்ல ) பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட (சாவகச்சேரி பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப் பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதேபோல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின் கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள் 1990 பின் பங்களித்தவர்கள். தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போரா ட்டத்திலிருந்து விலகி விடுவார்கள். பின்னர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர். 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் – பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர். இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள். சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு சிறையை உடைத்து அங்கிருந்து கைதியை விடுவிப்பது என்பது வேறு. வெலிக்கடைப் படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம். 1.துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறுறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது. 2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. 3.மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு. மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா மேற்கொண்டார். இந் நடவடிக்கைக்காகத் திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடையவராகவும், சிங்களம் தெரிந்தவராகவும் இருந்ததனால் இவரையே முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டது சிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஓட்டைவழியாக உள்ளிருந்து வெளியே பார்ப்பார்கள்.அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க வேண்டும். தனக்கான பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார். கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவைமூட முயன்றனர் சிறைக்காவலர்கள்.எனினும் அந்த போராட்டத்திலும் சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார். இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்க்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார். சிவமண்ணர் உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர்.பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க எடுத்த முயற்சி முடியடிக்கப்பட்டது. தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம் ,பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்டப் போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார். பல்வேறு துறை நடவடிக்கைகளிலும் இவர் பங்களித்தார் . வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும் திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே உதாரணம் காட்டலாம் . பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது கடந்த கால வரலாறு பற்றி மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும். தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வல்லவா அவருடைய வரலாறு. https://www.battinatham.com/2025/08/blog-post_76.html
  4. இந்த போரில் உக்கிரேன் வெறுமனே ஒரு இரு முக்கிய எதிரெதிர் தரப்புக்களிற்கிடையேயான போர்க்களமாக பயன்படுத்தப்படுகின்றது என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக சம்பதப்பட்ட தரப்புக்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன் தமக்கிடையே தீர்வுகளையும் எட்ட முனைகின்றனர். தெருத்தேங்காயை எடுத்து ஊர்ப்பிள்ளையாருக்கு உடைப்பதனை போல தமது சொந்த இடம் போல உக்கிரேனை கொடுக்க முனைகிறார்கள், ஆனால் போரினை நிறுத்தாவிட்டாலும் அந்த பகுதியினை அவர்கள் போர் மூலம் எடுத்து கொண்டுவிடுவார்கள்தான். இதனைதான் ஊரில் கூறுவார்கள் சும்மா பொல்லைக்கொடுத்து அடிவாங்குவது என, உக்கிரேனை உசுப்பேற்றி ஒரு பேரழிவிற்குள் தள்ளி தற்போது தாங்கள் நல்லவர்கள் போல உக்கிரேனே சமாதானத்திற்கு இடையூறாக நிற்கிறது என நிறுவ முயல்கிறார்கள், இதில் பாவப்பட்டவர்கள் சாதாரண உக்கிரேனிய மக்கள்தான், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நன்றாக சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.
  5. நான் ஊரு போனநேரம்....கண்ட சிலபேர் ...கேட்டது...என்ன தம்பி கையிலை ..கழுத்திலை ஒண்டையும் காணவில்லை ...எந்த நாடு....ஆ ஆ... கனடாவே ...அப்ப சரி.....இதுக்கு என்ன சொல்லப் போறீயள்... பிரியன் ....35 வருடம் மாடாய் உழைத்தும் கனடாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டேன்......என்னுடைய கையில் திருமண மோதிரம் தவிர வேறு இல்லை...மனைவியின் ஆக்கினைக்கு சிலவேளை..ஒரு சின்ன சங்கிலி போடுவதுண்டு..
  6. அது உண்மையில் ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான், ஆனால் தற்போது உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும், பின்னர் பேச்சுவார்த்தை தொடரலாம் எனவும் உக்கிரேனின் இடங்கள் தொடர்பிலான விட்டுக்கொடுப்பினை உக்கிரேனே தீர்மானிக்க வேண்டும் என கூறப்படுகிறது, உக்கிரேன் சட்டத்திற்கு அமைவாக ஒரு வாக்கெடுப்பின் மூலமே அது தீர்மானிக்கப்படவேண்டும். பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படுவதனை செலன்ஸ்கி விரும்பவில்லை என தெரிகிறது, நிரந்தர தீர்வு ஏற்படும் பட்சத்தில் ஒரு தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையினை செலன்ஸ்கி விரும்பவில்லை போல தெரிகிறது, போரை தொடர்வதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆர்வம் காட்டுகிறது. பிரான்ஸ் அதிபர், உக்கிரேன் நேட்டோவில் அங்கம் பெறாது ஆனால் பாதுகாப்பு உறுதி வழங்கப்படும் எனும் ஒரு கர்த்தினை முன்வைத்துள்ளார், இது அமெரிக்க பிரசன்னம் உக்கிரேனில் ஏற்படுவதற்கான ஐரோப்பிய நாடுகளின் விருப்பாக இருக்கலாம். இந்த பேச்சுவார்த்தையில் இரஸ்சியாவிற்கு இழப்பதற்கு எதுவுமில்லை, அலாஸ்கா கனிமங்களை வழங்குவது மற்றும் போயிங் உதிர்ப்பாகங்கலை இரஸ்சியா பெறுவது பற்றிய விடயங்கள் இரஸ்சியாவிற்கு இலாபகரமற்ற அமெரிக்காவிற்கு மட்டும் இலாபமான முயற்சி, இந்த பேச்சுவார்த்தை முறிந்தால் இரஸ்சியா விரும்பும் விடயங்கள் கிடைக்காவிட்டால் இரஸ்சியா இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகிவிடும். அமெரிக்கா அதன் பின்னர் பொருளாதார தடையினை போடலாம் நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கலாம் ஆனால் போரின் போக்கினை மாற்ற முடியாது. இது ஒன்றும் இரஸ்சியாவிற்கு புதிய விடயமல்ல, ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்தால் இரஸ்சியாவிற்கு இலாபம் உண்டு அதனால் இரஸ்சியாவிற்கு இந்த் பேச்சினால் இழப்பதற்கு எதுவுமில்லை ஆனால் அடையகூடிய இலாபம் உண்டு மறுதரப்பிற்கு இந்த பேச்சுவார்த்தையால் எந்த இலாபமும் இல்லை ஆனால் இழப்பு மட்டுமே உண்டு. ஆனால் ஒரு விதி விலக்கு செலன்ஸ்கி மட்டுமே.🤣
  7. தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.! Vhg ஆகஸ்ட் 14, 2025 மட்டக்களப்பு வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) பங்குபற்றுதலுடன் நேற்று (13.08.205) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியிருந்தார். எனினும், அந்த காணியினுள் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துயிலுமில்லம் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லையென்றும், விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி ஒருவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முழுமையாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒருபகுதியினை விடுவிக்குமாறு கோரியுள்ளார். இதன்படி, நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2025/08/blog-post_458.html
  8. வரவேற்பிற்குநன்றி 🙏 சுருக்கமாக என்பி அல்லது NB என குறிப்பிடலாம்
  9. இதில் இரண்டு சிறு பிள்ளைகளின் கழுத்தை நெருத்து சங்கிலியை திருடியிருப்பதாக தந்தை பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.ஜேர்மனை சேர்ந்த 3 பெண்கள் இதில் சம்பந்த பட்டிருக்கிறார்கள்..
  10. இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள மயிலிட்டி வரசித்தி விநாயகருக்கு 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்தழிக்கப்பட்டு தற்போதுவரை விடுவிக்கப்படாதுள்ள மயிலிட்டி அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு, இராணுவ முடகம்பி வேலிக்கு முன்பாக 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல் பொங்கி படையலிடப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மீது 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டி கிராமம் உள்ளிட்ட பல கிராம மக்கள் இரவோடு இரவாக தமது பூர்வீக இடத்தை விட்டு அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டனர். இதன்போது வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் என கோடான கோடி ரூபா பெறுமதியாக சொத்துகளை விட்டது விட்டவாறே மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். அவ்வாறே பருத்தித்துறை-பொன்னாலை பிரதான வீதியோரமாக ஐந்து தளங்களைக் கொண்ட இராசகோபுரத்துடன் அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலிட்டி அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயமும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படாதுள்ளது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காலத்தில் குறித்த ஆலயம் முற்றிலுமாக இடித்தழிக்கப்பட்டு அந்த பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய தீர்த்தக் கிணறு மட்டும் சிதைவுகளுடன் எஞ்சியுள்ள நிலையில் இராணுவத்தின் முள்வேலிக்கு முன்பாக அண்மையில் ஆலயத்தின் பழைய தோற்றத்துடன் கூடிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக பிள்ளையார் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த ஆலயத்தின் பூசகராகச் செயற்பட்டு வந்தவரை தேடிப்பிடித்து அழைத்துவந்து கடந்த செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. தங்கள் இஷ்ட தெய்வமான வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடம் மிகவிரைவில் விடுவிக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://newuthayan.com/article/இராணுவ_ஆக்கிரமிப்பிலுள்ள_மயிலிட்டி_வரசித்தி_விநாயகருக்கு_35_ஆண்டுகளின்_பின்னர்_பொங்கல்#google_vignette
  11. டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி! போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைகளை வைக்க முடியும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதிகளைக் கொண்ட டான்பாஸ், 2014 முதல் ரஷ்யாவால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ இப்போது கிட்டத்தட்ட லுஹான்ஸ்க் முழுவதையும், டொனெட்ஸ்கின் சுமார் 70% பகுதியையும் கொண்டுள்ளது. ஆனால் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, டான்பாஸை விட்டு வெளியேறும் எந்தவொரு திட்டத்தையும் உக்ரேன் நிராகரிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், ரஷ்ய படைகள் தங்கள் கோடைகால தாக்குதலைத் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன. கிழக்கு நகரமான டோப்ரோபிலியா அருகே திடீரென முன்னேறி, குறுகிய நேரத்தில் 10 கி.மீ (ஆறு மைல்கள்) தூரம் அவை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442823
  12. ஆமா 10 நாளா சனம் கத்துது...இந்த முல்லா தொப்பி ,முட்டாக்கு போட்ட சனத்தையோ காணவில்லை..அவை மதில்மேல் பூனைகளோ....அல்லது இந்த காத்தாடி மூலம் அவையின் வீட்டுப் பான் தேவை நிறைவு செய்யப்படுமோ....
  13. இந்தியர்கள் மற்றும் தமிழர்களில் இப்படி பிரித்துவிடும் மோசமானவர்கள் உள்ளனர் 😒
  14. தமிழர்கள் இந்தியாவையும் மேற்குலகத்தையும்மட்டும நம்பி இருந்தால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான் ஒப்புக்காகவது சீனாவுடன் பேச்சுவார்ததைகளை நடத்தி அவர்களுக்கு செக்வைக்க வேண்டும். இதைத்தான் சிறிலங்கா அரசு தொடர்ந்து மாறி மாறி செய்து கொண்டிருக்கிறது.ஐநா வுக்கும் கடிதம் எழுதுவதையும் இந்தியாவுக்கு கடிதம் எழுதுவதையும் நிறுத்தி விட்டு சீனாவுக்கு கடிதம் எழுதி ஒரு சோதனை முயற்சியைச் செய்து பார்ப்பதில் என்ன நட்டம் வரப்போகின்றது?
  15. ஊருக்கு நான் கிளம்பீட்டன். போய் கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கணும் இல்லையோ வானாவது பிடிக்கணும் வாகனம் ஒடியபடி இல்லை வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்துப் போடணும் போகேக்க விமான நிலையத்திலும் போய் இறங்கி விமான நிலையத்திலும் போற விமானத்திலும் தாற சாப்பாட்டையும் படம் பிடித்து கட்டாயம் போடணும் சொல்லீட்டும் தான் நான் போனாலும் சப்பிரைஸ்சா தான் போறன் என்று சனத்திற்கு நல்லா படம் காட்டணும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா காற்சட்டை ஒன்றை கொழுவணும் கண்டதை எல்லாம் வாங்கி தின்னணும் தின்னுறதைவிட படம் பிடிச்சு போடணும் கையில் ஒரு தண்ணிப் போத்தல் கண்ணுக்கு ஒரு கூலிங்கிளாஸ் தலையில ஒரு தொப்பி கட்டாயம் முடிஞ்சால் முதுகில ஒரு சோல்டர் பை முடியாட்டில் இடுப்பிலோ குறைக்காலோ ஒரு காசுப்பையை தொங்க விடணும் கையில கொஞ்ச மோதிரம் கைச் சங்கிலி கழுத்தில வடம்போல சங்கிலிகள் கடைசிவரை பூட்டாத சேட் மேல் பட்டன் கையை அகட்டியபடி ஒரு நடை கையில கட்டுக்காசுக்கு வாங்கிய போன் காலில சேலில வாங்கின செருப்புகள் இடைக்கிடை என்ன வெக்கையப்பா இங்க மனுசர் வாழலாமோ என்றனும் இங்கிலீசிலையும் கொஞ்சம் கதைக்கணும் இடைக்கிடை வெளிநாட்டையும் பீத்தனும் கடை கடையா ஏறி இறங்கணும் காணாததை கண்டவன் போல கண்ணில் கண்டதையும் வாங்கி வைக்கணும் கண்டவைக்கு ஹலோ என்றனும் இங்க கடையில மலியப்போட்ட சாமான்களை கட்டிக்கொண்டுபோயவைக்கு குடுக்கணும் ரிச்சாவுக்கு இயக்கச்சியில் போகணும் உச்சா போறதை தவிர மிச்சமெல்லாம் மிச்சம் விடாமல் படம்பிடிச்சு போடணும் கச்சான் கடலை சாப்பிடணும் நல்லூர் கந்தசாமியாரையும் கட்டாயம் பார்க்கணும் அந்த றீயோவில ஐஸ்கிறீம் நக்கணும் அப்படியே நாலு கடற்கரை போகணும் அதிலும் மீன் சந்தைப்படம் கட்டாயாம் அப்படியே ஏலுமென்றால் சந்தையும் இங்க பாணும் பருப்பும் சாப்பிட்டாலும் அங்க போய் பீசா பர்கர் என்று நிக்கணும் ஊரில இருக்கேக்க போகாத கோயிலுக்கு உதுதான் எங்கட குலதெய்வம் என்று ஊரைக் கூட்டி பொங்கல் வைக்கணும் ஊரில் உள்ள கோயில் எல்லாம் போகணும் உள்ளவனை எல்லாம் கூப்பிட்டு நல்ல ஊர் ஆடு வெட்டி பாட்டி வைக்கணும் ஊத்தி நல்ல சாராயமும் வாக்கணும் வாக்கிற சாரயத்தில வந்தவன் எல்லாம் வாழ்த்தணும் பெரிய வள்ளலென்று எல்லாம் முடிய ஏக்கங்களோட மிளகாய் தூளும் அரிசி, வேற வகை மாக்களோடு கருவாடும் பனங்கட்டியும் மிச்ச சொச்ச சாமானும் கட்டிக்கொண்டு எச்சிலயாவது பூசி அழுகிறமாதிரி நடிச்சு அதையும் வீடியோ எடுத்துப் போட்டிட்டு அப்படியே அழுவார் மாதிரி வந்திடணும் வந்து போன கடனை கட்ட சரியாகீடும். 😂😂😂 உண்மை உரைகல்
  16. இவ்வளவு தகவலே போதும் ஐயா. இதற்கு மேல் அவிழ்த்துவிட வேண்டாம். 😁
  17. இலங்கைத்தீவிலேயே முதன் முதல் தமிழரை அழித்தது முஸ்லிம்கள் தான், சிங்களவர் அல்ல. அது நடந்தது இந்த வீரமுனையில் தான்; 1954ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பில் தமிழர்களால் "தீயுண்ட வீரமுனை" என்ற நூல் 1956 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அன்று தொடக்கம் முஸ்லிம்களுக்கு வீரமுனை மீது கண்தான். பல தாக்குதல்கள் 1990 முன்னர் நிகழ்ந்தன. இது தெரியாத வட தமிழீழ தமிழர்கள் தென் தமிழீழத்தில் தமிழர் தான் முதன் முதலில் முஸ்லிமை தாக்கினர் என்று சொந்த இனம் மீது தமது பிரதேசவாத கண்ணால் பார்த்து பழி சுமத்தும் நிலை, குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களால், வன்மையாக கண்டிக்கத்தக்கது. Document:
  18. 1 point
    புறாக்கள் அ ஓர் கருப்பு ஆங்கிலேய மேக்பை ஆங்கிலேய தாரைப் புறா ஆச்சன் லகுவர் கேடய ஆந்தை (=Aachen Luster Shield,[1] ELFP-No. D/705;[2] = Aachen Shield Owl[3]) ஆப்பிரிக்க ஆந்தை (GB/710)[2] ஆல்டென்பர்கர் தாரைப் புறா (D/513)[2] அமெரிக்க ராட்சத ரன்ட் புறா அமெரிக்கன் சோ ரேசர் (ESKT/031)[2] அனடோலிய ரிங்க்பீட்டர் (TR(D)/1104)[2] ஆன்ட்வெர்ப் சுமெர்லி (B/701)[2] அரேபிய தாரைப் புறா (D/514)[2] அரச புறா (ESKT/204)[2] ஆர்க்காங்கல் (புறா) (=Gimpel (D/402)) ஆர்மீனியன் டம்ப்லர் ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர் ஆங்கிலேய கேரியர் (=Carrier (GB/101)[2]) ஆங்கிலேய விசிறிவால் (=Garden Fantail (GB/608)) ஆங்கிலேய நீளமுக டம்ப்லர் (clean legged (GB/830)[2] and muffed (GB/831)[2]) ஆங்கிலேய மேக்பை (GB/807)[2] ஆங்கிலேய நன் புறா (=Nun (GB/896)) ஆங்கிலேய பவுட்டர் (GB/310)[2] ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா (GB/832)[2] ஆங்கிலேய தாரைப் புறா (ESKT/508)[2] இ இந்திய விசிறிவால் (ESKT/607)[2] இந்திய கோலா இத்தாலிய ஆந்தை (I/706)[2] இலாகூர் புறா (D/037)[2] ஈரானிய ஹைஃப்லையர் உ உக்ரைன் ஸ்கைகட்டர் (=Ukrainian Skycutter, =Polish Eagle (PL/963)) உரல் கோடிட்ட பிடரி புறா எ எகிப்திய ஸ்விஃப்ட் (GB/043)[2] எலிசிடர் புருசுலர் (=Old German Magpie Tumbler (D/828)) க ஓர் சிவப்பு கார்னியா ஓர் வெள்ளை குமுலெட் டிரகூன் கலடி கர்ணப் புறா ஆண் ஓர் சிவப்பு ஹெல்மெட் கொண்டைப் புறா ஓர் கருப்பு ஹெல்மெட் புறா கார்னியா (F/007)[2] கவுசோயிசு புறா (F/008)[2] கோபர்க் வானம்பாடி புறா (D/025)[2] கொலோன் கரணப் புறா (D/827)[2] கொண்டை சவுல்சு புறா (F/018)[2] குமுலெட் (GB/822)[2] கடிடானோ பவுட்டர் (=Gaditano Cropper (E/337)[2]) கலட்சு சுழல் கரணப் புறா (RO/974)[2] கென்ட் கிராப்பர் (B/309)[2] கிரானடினோ பவுட்டர் (E/343)[2] ஹெல்மெட் புறா ஹோல்லே கிராப்பர் (NL/331)[2] ஹோமிங் புறா காலர் புறா (GB/605)[2] கீவ் கரணப் புறா (RUS(D)/891)[2] கோமன் கரணப் புறா (H/857)[2] கீழை சுருள் புறா (GB/714)[2] கீழை சுழல் கரணப் புறா (D/850)[2] சுழல் கரணப் புறா, ச செகடினர் ஹைஃப்லையர் சீன பறக்கும் புறா[3] (=Chinese Nasal Tuft; Chinese Tumbler (D/914)) சீன ஆந்தை (D/609)[2] சிஸ்டோபோலிய உயர பறக்கும் புறா சுருள் இறகுப் புறா (D/601)[2] ஜெர்மன் பியூட்டி ஹோமர் (D/032)[2] ஜெர்மன் மோடெனா (D/206)[2] ஜெர்மன் நன் (D/897)[2] சாக்சன் ஃபேரி சுவாலோ சாக்சன் பீல்டு புறா (D/475)[2] சாக்சன் துறவி (D/467)[2] சாக்சன் சீல்டு (D/471)[2] சாக்சன் ஸ்பாட் (D/472)[2] ஸ்கான்டரூன் (D/105)[2] ஸ்மால்கல்டன் மூர்ஹெட் (D/602)[2] செர்பிய ஹைஃப்லையர் (SRB/886)[2] சிராசு டம்ப்லர் (D/920)[2][1] சவுத் ஜெர்மன் மாங் (muffed (D/436)[2] and clean legged (D/437)[2]) சவுத் ஜெர்மன் சீல்டு (D/438)[2] ஸ்டார்கார்டு சேக்கர் (D/818)[2] (German: Stargarder Zitterhals) இசுடார்லிங் புறா (D/405)[2] இசுடிரால்சுன்டு ஹைஃப்லையர் (D/804)[2] சிராசர் புறா (D/023)[2] ஸ்வெர்டுலோவிஸ்க் நீல சாம்பல் பல அம்ச தலை புறா செகடின் ஹைஃப்லையர் (H/861)[2] ஜிட்டர்ஹால் (=Stargard Shaker (D/818)) ட டமாஸ்கஸ் புறா (GB/042)[2] டானிசு காலர் (DK/604)[2] டானிஸ் சுவாபியன் (DK/404)[2] டானிசு டம்ப்லர் (DK/810)[2] டான்சிக் ஹைஃப்ளையர் (D/816)[2] டபிரசின் கர்ணப் புறா (H/849)[2] டொமஸ்டிக் சோ பிலைட் Domestic Show Flight (ESKT/915)[2] டோமினோ சுருள்Domino Frill (GB/715)[2] டோனெக் (=Dunek) டிரெசுடன் தாரைப் புறா (D/505)[2] டச்சு பியூட்டி ஹோமர் (NL/033)[2] டச்சு கிராப்பர் (NL/302)[2] டார்மிகன் (GB/611)[2] டிப்லர் புறா டர்பிட் (GB/711)[2] டிரகூன் (GB/104)[2] ந நார்விச் கிராப்பர் (GB/306)[2] நன் (GB/896)[2] (=English Nun) நிஸ் வெள்ளை வால் ஹைஃப்லையர் த துரிஞ்சன் வண்ண புறா, a group of pigeon breeds ப பிரித்தானிய சோ ரேசர் புருன்னர் பவுட்டர் பழைய டச்சு கபுசின் புராதான கரணப் புறா (D/907)[2] பார்பு புறா (Barb pigeon) (GB/102)[2] பெல்ஜிய ரிங்க்பீட்டர் (B/1102)[2] பெர்லின் சார்ட் ஃபேசுடு கரணப் புறா (D/904)[2] பிஜல்ஜினா சுழல் கரணப் புறா (BiH/1008)[2] பர்மிங்கம் சுழல் கரணப் புறா (GB/918)[2] பொகாரா தாரைப் புறா (GB/501)[2] பிரெசுலோ கரணப் புறா (D/911)[2] பிரித்தானிய சோ ரேசர் புருன்னர் பவுட்டர் (CZ/330)[2] புடாபெஸ்ட் ஹைஃப்லையர் (Poltli) பர்சா கரணப் புறா (TR(D)/894)[2] பெலசிகாசா கரணப் புறா (H/858)[2] பிரெஞ்சு மான்டைன் (F/006)[2] பனிப் புறா (D/403)[2] பழைய டச்சு கபுசின் (NL/603)[2] பழைய டச்சு கரணப் புறா (NL/826)[2] பழைய கீழை சுருள் (=Old Oriental Owl (D(USA)/726)) பழைய ஜெர்மன் கிராப்பர் (D/301)[2] பழைய செர்மானிய ஆந்தை (D/704)[2] பழைய கீழை ஆந்தை (D(USA)/726)[2] (=Old Fashioned Oriental Frill) பாகிஸ்தான் ஹைஃப்லையர் பார்லர் சுழல் கரணப் புறா பிக்மி பவுட்டர் (GB/329)[2] போலந்து ஹெல்மட் (=Polish Krymka Tumbler (PL/934)) ம மோடெனா மோடெனா (GB/205)[2] மஃப்ஃபெடு ஹெல்மட் (=Polish Helmet, =Polish Krymka Tumbler (PL/934)) மேற்கு இங்கிலாந்து டம்ப்லர் (GB/833)[2] ர ரமனோல். ரவுபைசியன். ரேசிங் ஹோமர் ரிவர்சேவிங் பவுட்டர் (=Reversewing Cropper (D/304)[2]) (German: Verkehrtflügelkröpfer) ரோசன் சிராக் ல லுசெர்ன் தங்க காலர் லுசெர்ன் தங்க காலர் (CH/421)[2] வ விசிறிவால் வியன்னா ஹைஃப்லையர் விசிறிவால் புறா (GB/606)[2] வாலன்சிய ஃபிகரிட்டா (=Valencian Frill (E/722)[2]) வியன்னா ஹைஃப்லையர் (A/981)[2] ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர் (NL/327)[2] மேலும் காண்க வளர்ப்புப் புறா வீட்டுப் புறா ஆடம்பரப் புறா டிப்லர் புறா மேற்கோள்கள் Encyclopedia of Pigeon Breeds: List of Pigeon Breeds Entente Européenne d’ Áviculture et de Cuniculture (2012): EE-List of the breeds of fancy pigeons (ELFP) National Pigeon Association (2014): Breeds: from the NPA Standard (table of contents by name) பகுப்புகள்: Articles containing German-language text புறாக்கள் இப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2024, 06:48 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.Pßü
  19. அட நான்தான் முன்பு விடயம் தெரியாமல் பஸ்ஸிலும் சைக்கிளிலும் பிரயாணங்கள் செய்திட்டு வந்திருக்கிறான் . ........ ! 😀
  20. உங்கள் & நண்பர்களின் தன்னலமற்ற சேவைகள் தொடர வாழ்த்துகள் தம்பியை சந்தித்தேன் உங்களை சந்திக்க முடியவில்லை, அடுத்த முறை சந்திப்போம்
  21. பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள் அமைப்பினரால் காரைநகரில் அத்தியாவசியப் பணி நிறைவேற்றப்பட்டது கடந்த 04/07/2025 வெள்ளிக்கிழமை அல்வின் வீதி, காரைநகரைச் சேர்ந்த திரு வே.நாகராசா (3பேர் விசேட தேவை உடையவர்கள்) ஐயாவின் வீட்டிற்கு குடிநீருக்காக புதிய தண்ணீர்தாங்கி பொருத்தி, பழுதடைந்திருந்த மலசலகூடத்தினை மீளப்புனரமைப்பு செய்துள்ளோம். இப்பணிகளுக்காக 44110 ரூபா செலவு செய்துள்ளோம். இந்த அத்தியாவசியப் பணியை செய்ய நிதி உதவி அளித்த பே்மிங்காம் (2016) உதவும் கரங்கள் அமைப்பினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விசேடமாக இவ்அமைப்பின் செயற்பாட்டாளர்களான திரு கதிர் அண்ணா, திரு இராசகுமார் அண்ணா, திரு ஜெயசசி அண்ணா ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளை பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முயன்று செய்வித்த புலர் அறக்கட்டளையின் பொருளாளர் திரு கு.பாலகிருஸ்ணாவிற்கும் கணக்காய்வாளர் திரு சி.சிறீரங்கன் அவர்களிற்கும் J/46 கிராம சேவகராக உள்ள திருமதி ப.சிவப்பிரியா அவர்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி குயிலினி ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிகிறோம். உதவிகள் செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் கீழுள்ள எமது WhatsApp இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். +94 77 777 5448 +94 77 959 1047 ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.
  22. இறைவன் ரொம்பவும் பிசி பாஸ். கள்வருக்கு பின்னால் எல்லாம் ஓட அவருக்கு நேரமில்லை. எவ்வளவு பிகருகளெல்லாம் வந்து குவியும் போது அவர் பொறுமையாக இருந்து ரசிக்க வேண்டாமோ?
  23. புதுசா இருக்கு. பனங்காட்டுக்கை சிங்கம் எப்ப போனது? 😁 நல்ல அனுபவப் பகிர்வு. நினைச்சுப் பாக்க இப்பவே கிர் எண்டுது.
  24. ஆபிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது. பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைகள் பிறந்தால் காலை நேரப் பிரார்த்தனையின் போது எல்லா மாணவர்களுக்கும் அறிவிப்பார்கள். மாணவியியும் தனது குடும்பப் பெயரை தந்தையாரின் பெயராக உபயோகிக்க அனுமதியும் உண்டு..! பார்ப்பனரால் அறிமுகப் பட்ட எமது பெயர் வைக்கும் முறையால், எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்று நினைக்கிறேன்.
  25. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 11:59 AM கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். குறித்த நபர் சம்பவத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். ஏனெனில் அவர் முன்தினம் கடையில் சொக்லேட்டுகளை திருடும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்துள்ளது. முதியவரிடம் சொக்லேட் வாங்கும் அளவிற்கு பணம் இல்லாமையால் சொக்லேட் பிரியரான அவர் திருடியுள்ளார். அவர் வழமையாக கடைக்குச் செல்லும் போது தனக்கும் அவரது மனைவிக்கும் சொக்லேட்கள் வாங்கி வரும் பழக்கம் இருந்துள்ளது. சந்தேகநபர்கள் தாக்குதலுக்குள்ளான முதியவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து வீதியில் விட்டுச் சென்றுள்ளனர். அவ் வழியூடாக சென்ற பெண்ணொருவர் அவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார் என மரணப்படுக்கையில் இருந்த முதியவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். https://www.virakesari.lk/article/222548
  26. என்ன கொடுமை ஐயா. செய்தி திரட்டி என்பதை பார்த்துவிட்டு ஏதோ உலகத்தில் உருப்படாத நாடு ஒன்றில் இப்படி நடைபெற்றதோ என எண்ணினேன். இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்பதை வாசிக்க அதிர்ச்சியாக உள்ளது. நாட்டில் மனிதாபிமானம் இல்லாது போகின்றது.
  27. அடி, நுனி தெரியாமல் கருத்து கூறுவது கடினம். ஆனாலும் இந்த பெண் இவ்வளவு ஆபத்துடன் பயணிக்க அவர் காதலன் அனுமதி கொடுத்தாரா? அவர் ஏன் இலங்கை செல்லவில்லை? அவருக்கு இலங்கை செல்ல முடியாத நிலமை உள்ளதா? அவருக்கு உண்மையில் இந்தப்பெண்ணில் அன்பு உள்ளதா? அவர் அங்கு யாருடன் மேய்ந்துகொண்டு உள்ளாரோ யாருக்கு தெரியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.