Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87988
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11531
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    16468
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/03/25 in all areas

  1. நமக்கு பிடித்தவர்கள் " நீ பேசுவதை நிறுத்து .".என சொல்லும்போது ,நாம் பேச நினைக்கும் வார்த்தைகளை தடுக்கும் போது , நம்மை பேச விடாமல் குரலை நசுக்கும் போது, நம்மிடம் பேச என்ன இருக்கு என எண்ணும் போது, ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நம் குரல் வெறுக்க பட்டு விட்டது.இனி அன்பாக பேசினால் பிடிக்காது என்ன பேசினாலும் தப்பா தெரியும். எந்த சூழலிலும் யாரையும் நம்பாதீர்கள் . என்றால் இப்போது மனிதர்கள் கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் துரோகம் செய்யக் கற்றுக் கொண்டு விட்டார்கள் வீட்டில் தாய் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு பணக்காரன் இந்த பூமியில் இன்னும் பிறக்கவில்லை . இறந்துபோன மீன்கள்தான் தண்ணீர் வழியாக போகும் . ஆனால் உயிருள்ள மீன்கள் தண்ணீரை எதிர்த்து தான் செல்லும் அதனால் உங்கள் பிரச்சினைகள் போராடி வெல்லுங்கள். மூன்றாவது வகுப்பு படிக்காதவன் , மூன்று ஜி யு வலேரி கடை வைத்து நடத்துகிறான் . மூன்று டிகிரி முடித்தவர் ...பெட்டிக் கடை போடலாம் என யோசிக்கிறான். தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என் வருந்தாதே நீ தனியாக போராடுவதே வெற்றி தான். சுமைகளை கண்டு துவண்டு விடாதே இந்த உலகை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான் ஒரு நாளுனுக்கு பிடித்து போல உன் வாழ்க்கையும் மாறும் . அது நாளையாக கூட இருக்கலாம்
  2. எனக்கு பிடித்த சில வரிகள். 1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது . இந்த சோகங்கள் துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே மாறிவிடாது. 2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை அவள் கையில் . அதன் பிறகு அவள் ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது . 3. குடும்ப நலன் கருதி யாரோ ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன. 4 வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை 5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது எல்லார் தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும் காதலும் 6. குடும்பத்துடன் நேரம் செலவிடாத மனிதன் ஒருபோதும் உண்மையான மனிதனாக இருக்க முடியாது . 7.பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமல், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தாலும் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் 8.சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள் எந்த புத்தகத்திலும் இருப்பதில்லை பெண்ணின் பேச்சில் நியாயம் இருக்கும் வரை அவளின் சத்தம் கொஞ்சம் அதிகம் தான் இருக்கும்./
  3. மனித உரிமை பற்றித் தேரருக்கு மட்டுமல்ல தமிழர் உட்பட இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு என்னவென்று தெரியாது. கடவுள் பக்தி உள்ளவர்கள் மிருகங்களைப் பாதுகாப்பவர்கள் மனித உரிமையை மதிப்பவர்கள் என்று கூற முடியாது. முதலில் ஒரு மனிதனை அவனது இனம், மதம், சாதி, அந்தஸ்து எல்லாவற்றையும் தாண்டி சக மனிதனாக மதிக்கத் தெரிய வேண்டும். அது எம்மிடம் கிடையாது.
  4. காட்டுப்பள்ளி கலவரம் : வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை- போலீஸ் அதிரடி! காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எல்.என்.டி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் துறைமுகம் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். காட்டுப்பள்ளி கலவரம் அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்ற நபர் கடந்த 35 நாட்களுக்கு வேலையில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அமரேஷ் பிரசாத் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதையில் அவரின் வீட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமரேஷ் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது மீட்டு உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் வைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் இதனையடுத்து உயிரிழந்த தொழிலாளி அமரேஷ் பிரசாத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திடீரென்று வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாகக் கூடுதல் காவல் ஆணையர் பவாணீஸ்வரி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகக் காவல்துறையினர் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். புலம்பெயர் தொழிலாளர்கள் இதனால் காவல்துறையினர் வந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும் ஒரு சில காவலர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அதிரடியாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அப்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட புலம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களை விரட்டி அடித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பிரச்சனை ஏதும் ஏற்படாத வண்ணம் அமைதி காத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆவடி கூடுதல் ஆணையர் பவானிஸ்வரி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளிகள் இதற்கிடையே உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளி அமரேஷ் பிரசாத் குடும்பத்திற்கு நிறுவனத்தின் சார்பில் 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. குறிப்பாகச் சம்பவத்தில் ஈட்டுப்பட்டக் காவல்துறையினரிடமும் வட மாநில ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தக் கலவரத்தால் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கல்வீசித் தாக்குதலில் ஈட்டுப்பட்ட 29 வடமாநிலத் தொழிலாளர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் காட்டுப்பள்ளி துறைமுகக் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காட்டுப்பள்ளி பகுதியில் காவலர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளது குறிப்பிடத்தகது. https://tamil.samayam.com/latest-news/state-news/thiruvallur-kattupalli-attack-northern-state-workers-vellore-jailed/articleshow/123669669.cm டிஸ்கி: குடி வெறியில் செத்தால் 5 லட்சம் இழப்பீடு ..? வட நாட்டவர்கள் அட்டகாசம் தாங்க முடியல.. நானும் ஊர காலி பண்ணிவிட்டு வேற நல்ல நாட்டில் செற்றில் ஆகலாம் என்டு இருக்கன்..
  5. அது தானே! எல்லா மரண புதைகுழிகளையும் கண்டறிந்து, அதற்கு காரணமானவர்களையும் தண்டித்து, சர்வதேச விசாரணைகளை அனுமதித்து அவற்றின் தீர்ப்பும் வந்த பிறகுதானே தமிழ் மக்கள் வாழும் இடங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்? அதுவரைக்கும் ஊர்ச் சனம் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் காய்ந்து கருவாடாகத்தானே போகத்தான் வேண்டும்...!
  6. https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-4/?fbclid=IwY2xjawMlZMVleHRuA2FlbQIxMABicmlkETB0MElRM2M2V0VxY3ZnUUF2AR7uFU-uioeOd-SHnslD1sRgljbk-gk2XoWrXqWLWL3xJApN6QDb5LDnaJlJkg_aem_azGvcdRkWsVOtS2coOUB3w 1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4 September 3, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும் தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் கொழும்பில் ஒரு வீட்டில் காவலில் வைக்கப்பட்டனர். மூன்று மாதங்களின் பின்னர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சுதந்திரன் பத்திரிகைக்கான தடை நீங்க மேலும் பல மாதங்கள் சென்றன. தடை நீங்கிய பின் செயற்குழுக் கூட்டம் 02.11.1958 இல் நடைபெற்றது. இதில், தொடர்ச்சியாக சாத்வீக வழியில் போராடுதல் என முடிவெடுக்கப்பட்டதுடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் யாழ் நகரத்திலுள்ள தேனீர்க் கடைகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதை ஒழிக்கும் பொருட்டு யாழ் நகரத் தேநீர்ச் சாலை உரிமையாளர்களின் மாநாடொன்றை நடாத்துவதென்றும், 24.11.58 தொடக்கம் ஒரு வாரம் தீண்டாமை ஒழிப்பு வாரமாக அனுஷ்டிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அ. அமிர்தலிங்கம், கு. வன்னியசிங்கம், சு. நடராசா என்போர் இவ்வேலைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். வன்னியசிங்கத்தின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட தேநீர்ச்சாலை உரிமையாளர்களின் மாநாட்டில் யாழ் நகர உணவு விடுதிகளில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை என ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரசாரம், சமபந்திப் போசனம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டது. மலைநாட்டுக் குழந்தைகளின் கல்வி உயர்கல்விக்கு வசதியற்ற மலைநாட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் 25 பேருக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். விடுதி வசதி, இலவசப் புத்தகங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளில் கட்சியின் சார்பில் கு. வன்னியசிங்கம் ஈடுபட்டார். 1959 செப்டெம்பர் 17 இல் கு. வன்னியசிங்கம் மரணமடைந்தார். இதே மாதம் பண்டாரநாயக்காவும் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்ப நிலையால் பொதுத் தேர்தல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியது. 1960 மார்ச் தேர்தலும் சிம்மாசனப் பிரசங்கத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்படலும் 1959 புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் கீழ் 1960 மார்ச் இல் தேர்தல் நடைபெற்றது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 176, 492 வாக்குகளைப் பெற்று 15 தொகுதிகளில் வெற்றியீட்டியது. இதைவிட கட்சியின் ஆதரவினைப் பெற்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள் நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஐக்கிய தேசிய கட்சியும் 50 இடங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 46 இடங்களையும் கைப்பற்றியது. டட்லி ஆட்சியை அமைத்ததும் பாராளுமன்றத்தில் ஆதரவை நாடினார். தமிழரசுக்கட்சி இரு பெரும் கட்சிகளிடமும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அவையாவன: பண்டா – செல்வா உடன்படிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் பிரதேச சபைகள் நிறுவப்படல் வேண்டும். அதற்கிடையில் தமிழ்ப்பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றம் நிறுத்தப்படல் வேண்டும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகள் யாவும் தமிழ்மொழிக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்ட திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதன் மூலம் ‘நாடற்ற தமிழர்’ என்ற நிலை நாளடைவில் மாற வேண்டும். குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை 06 நியமனப் பிரதிநிதிகளில் 04 பேர் மலைநாட்டுத் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் நியமிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இதையொட்டிய விபரங்கள் ஆளும் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படல் வேண்டும். அத்துடன் ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இக்கோரிக்கைகளை எழுத்தில் பெற்ற டட்லி அதனை நிராகரித்தார். அதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட சீ.பி.டி. சில்வா, ஏ.பி. ஜெயசூரிய, மைத்திரிபால சேனநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க என்போர், கோரிக்கைகள் பண்டாரநாயக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதால் அதனைத் தாம் ஏற்பதாகக் கூறினர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி உடனான உடன்பாட்டின்படி 1960 ஏப்ரல் 22 ஆம் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தமையினால் அரசாங்கம் பதவி விலகியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முற்பட்ட போது தமிழரசுக்கட்சியும் அதற்கு ஆதரவை வழங்கியது. இது தொடர்பான கடிதம் செல்வநாயகம், என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, சி.பி.டி. சில்வா என்போர் சார்பில் கையொப்பமிட்டு மகாதேசாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் மகாதேசாதிபதி இதனைக் கருத்திற் கொள்ளாமல் மரபை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஏற்பாடு செய்தார். 1960 யூலை தேர்தலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்குறுதிகளை மீறுதலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையினை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஏற்றார். இருப்பினும் 1960 யூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்கள் தம்மைத் தோற்கடித்தார்கள் என இனவாதப் பிரசாரத்தினை மேற்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்ரீலங்கா சமஷ்டிக் கட்சி எனக் கேலி செய்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 75 ஆசனங்களைப் பெற்று தனியாக ஆட்சி பெறக்கூடிய நிலையை எய்தியது. தமிழரசுக் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 218, 753 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியுடனான உடன்பாட்டை நிறைவேற்றப்போவதாகக் காட்டிக்கொண்டது. 1957 ஆம் ஆண்டு தனிச் சிங்களத்தில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிம்மாசனப் பிரசங்கத்தை பகிஷ்கரித்து வந்த தமிழரசுக்கட்சி இத்தடவை தமிழ் மொழிபெயர்ப்பும் உடன் வாசிக்கப்பட்டதால் பிரசங்கத்தில் கலந்துகொண்டது. எனினும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தது. தொண்டமான் நியமனப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். உடன்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது பற்றி பிரதமர் தலைமையில் அமைச்சர் குழுவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களத்தை நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்கும் சட்டத்தை நீதியமைச்சர் சாம்.பி.சி. பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனால் அரசிற்கும் தமிழரசுக் கட்சியிற்கும் இடையிலான உறவு சிதைவடைந்தது. சட்டமூலத்திற்கு தமிழரசுக்கட்சி பலமான எதிர்ப்பைத் தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே சமயம் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தின் கீழ் மிகக்குறைந்த உரிமைகள் வழங்கும் சட்டத்தையும் நீதிமந்திரி சமர்ப்பித்தார். இருப்பினும் தமிழரசுக்கட்சியின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது. இரண்டாவது தடவையும் சிங்களத் தலைமைகள் வாக்குறுதிகளை கைவிட்டமையால் தமிழரசுக்கட்சி போராட்டத்திற்குத் தயாராகியது. 1961 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச் சிங்களச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனால் சிங்கள உத்தியோகத்தர்களும் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தமிழரசுக்கட்சி நடாத்த இருந்த போராட்டத்தின் முதற்படியாக செல்வநாயகம் தலைமையில் மக்கள் ஊர்வலமாக யாழ் கச்சேரிக்குச் சென்று தமிழில் நிர்வாகம் நடாத்தப்படல் வேண்டும் என்று மனுச் சமர்ப்பித்தனர். தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநில மாநாடு (1961 ஜனவரி, யாழ்ப்பாணம்) 1961 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வன்னியசிங்கம் அரங்கில் மாநாடு நடைபெற்றது. பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த சி.மு. இராசமாணிக்கம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது என்றும், பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பிப்பது என்றும், தொடர்ந்து மற்றைய மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961) சத்தியாக்கிரகத்தை ஒரு நாளைக்கு ஒரு தொகுதியின் மக்களினால் அத்தொகுதி உறுப்பினர் தலைமையில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது (பொலிசார் கைது செய்யலாம் எனக் கருதியே இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டது). 1961 பெப்ரவரி 20 ஆம் திகதி செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதி மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றினர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் வெளியில் உதவிக்கு நின்றனர். முதலாம் நாள் திட்டமிட்டபடி யாழ் அரசாங்கச் செயலக வாசலில் எவரும் உள்ளே செல்லவிடாது தடுத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் பிரதான வாயில் ஊடாக அலுவலர்கள் உள்ளே செல்வதற்கு பாதை அமைக்க முற்பட்ட போது எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் அவ்விடத்துக்குச் சென்று பாதைக்குக் குறுக்கே படுத்துக்கொண்டனர். பொலிஸார் பலாத்காரமாக சத்தியாக்கிரகிகளை தூக்கி அப்புறப்படுத்த முற்பட்டு மிருகத்தனமாகத் தூக்கி வீசினர். இதனைப் பார்த்துக்கொண்டு வெளியில் நின்ற மக்களும் நூற்றுக்கணக்கில் சத்தியாக்கிரகிகளோடு சேர்ந்தமையினால் பொலிஸாரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அன்று பகல் 11 மணிக்கு மேல் நீதிமன்றத் திறப்புவிழா இடம்பெற்றது. அதற்குரிய ஆணையை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க அதிபர் நீதியரசரிடம் கொடுப்பதற்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமைந்திருந்த பழைய பூங்கா வாயிலிலும் சத்தியாக்கிரகவாசிகளினால் மறியல் போராட்டம் செய்யப்பட்டது. குண்டாந்தடிகளினால் சத்தியாக்கிரகிகளைத் தாக்கி அவர்களுக்கு ஊடாக அரசாங்க அதிபரின் வண்டியைக் கொண்டு செல்ல பொலிஸார் முற்பட்டனர். ஈ.எம்.வி. நாகநாதன் உட்பட பல சத்தியாக்கிரகிகள் காயங்களுக்கு உட்பட்டனர். 2 ஆம் நாள் சத்தியாக்கிரகம் வட்டுக்கோட்டைத் தொகுதி மக்களால் அ. அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. முதலாம் நாள் பொலிஸாரின் அட்டூழியத்திற்குப் பலத்த கண்டனம் ஏற்பட்டதால் அவர்களின் அட்டூழியம் சற்றுக் குறைவடைந்தது. எனினும் அரச ஊழியர்களை சத்தியாக்கிரகிகளுக்கூடாக அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு அரச ஊழியர்களும் மறுப்புத் தெரிவித்தனர். 3 ஆம் நாள் வி.ஏ. கந்தையா தலைமையில் ஊர்காவற்துறை மக்களும், 4 ஆவது நாள் என். நவரத்தினம் தலைமையில் சாவகச்சேரி மக்களும் கலந்துகொண்டனர். இவ்வாறு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றமையினால் யாழ் மாவட்ட அரச நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. 1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்படல் 1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டமெங்கும் யாழ்ப்பாணத் தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஹர்த்தால் நடைபெற்றது. 1961 பெப்ரவரி 28 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கச் செயலகத்தின் முன்னாலும் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. 1961 மார்ச் 4 ஆம் திகதி திருகோணமலையில் அரசாங்கச் செயலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததுடன் மூதூரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மார்ச் 22 ஆம் திகதி படுகாயமுற்ற ஏகாம்பரம் மரணமடைந்தார். தொடர்ந்து மன்னார், வவுனியா அரசாங்கச் செயலகங்களுக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்பட்டது. “இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கமே இல்லை” என பிரதமர் செனற் சபையில் கூறினார். சத்தியாக்கிரகத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராகியது. அரசின் சார்பில் நீதி அமைச்சர் பி.எல். பெர்ணான்டோ பங்குபற்றினார். மு. திருச்செல்வத்தின் கொழும்பு இல்லத்தில் 1961 ஏப்ரல் 05 ஆம் திகதி இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொழியுரிமை தொடர்பாக மிகக்குறைந்த கோரிக்கைகளில் கூட உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தைத் தொடருவது எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் அரசு தபால் சேவை போராட்டத்தின் தீவிரத்தினால் அரசாங்கம் பங்கீட்டு உணவு வழங்காது மக்களைப் பணியவைக்க முற்பட்டது. இதனால் போராட்டத்தை வேறு துறைகளிலும் விரிவாக்கும் நோக்கத்துடன், அரச தபால் சேவை சட்டத்தை மீறி, தமிழரசு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 14 ஆம் திகதி பகல் 12 மணிக்கு செல்வநாயகம் இதனை ஆரம்பித்து வைத்தார். 10,000 பேர் வரிசையில் நின்று தமிழரசு தபால் தலைகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழரசு தபால் சேவையின் தபால் மா அதிபராக செனட்டர் நடராசா நியமிக்கப்பட்டார். தமிழரசு தபால் பெட்டிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டது. அவசரகால, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலும், இராணுவம் தாக்குதல்களை மேற்கொள்ளுதலும் 1961 ஏப்ரல் 17 ஆம் திகதி 12 மணிக்கு அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட அதேவேளை 48 மணிநேர ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. கச்சேரியின் முன் அமைதியாக இருந்த சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் தாக்கப்பட்டனர். பழனியப்பன் என்ற இளைஞரினது தொடை துளைக்கப்பட, அவர் மயக்க நிலையை எய்தினார். பெண் சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு பல மைல்களுக்கு அப்பால் தனிமையான இடத்தில் விடப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் – இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வடக்கு – கிழக்கு இராணுவ ஆட்சியின் கீழ் விடப்பட்டது. திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் உட்பட தலைவர்களும் பிரதான தொண்டர்களுமாக 74 பேர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி, சுதந்திரன் பத்திரிகை என்பன தடை செய்யப்பட்டதோடு சுதந்திரன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பத்திரிகைத் தணிக்கை அமுலுக்கு வந்தது. இரகசிய ஏடுகள் பிரசுரமாதல் ‘சத்தியாக்கிரக’ என்ற ஆங்கில ஏடு மாதம் இருமுறை தட்டச்சில் வெளியாகியது. ‘தமிழன் கண்ணீர்’ என்ற தமிழ் ஏடும் வெளியாகியது. கோவில் பிரார்த்தனைகளை கட்சி ஒழுங்கு செய்தலும், எஞ்சியிருந்த தலைவர்கள் அதில் பேசுதலும் (கூட்டம் நடாத்துவது தடை செய்யப்பட்டிருந்தமையால்) இடம்பெற்றது. சத்தியாக்கிரகிகள் தாக்குதல் தொடர்பில் மலையகத்தில் எழுச்சி சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது தொண்டமான் நேரடியாகச் சென்று உற்சாகப்படுத்தினார். வவுனியா, மன்னார் பகுதிகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேரடியாகவே பங்குபற்றினர். வவுனியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி நடேசபிள்ளையும் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். சத்தியாக்கிரகம் நசுக்கப்பட்டதற்கு முதல் நாள், 1961 ஏப்ரல் 24 ஆம் திகதி தோட்டத்தொழிலை அத்தியாவசிய சேவையாக்கும் சட்டவிதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்தது. எனினும் 1961 ஏப்ரல் 25 ஆம் திகதி 5 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியின் நான்கு அம்சக் கோரிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பித்தது. இதேவேளை தோட்டப்பகுதிக்கும் இராணுவம் அனுப்பப்பட்டது. 1961 ஐப்பசியில் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கட்சியின் தடை நீங்க மேலும் சில மாதங்கள் சென்றன. மீண்டும் சிங்கள ‘ஸ்ரீ’ பஸ்வண்டி 1958 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடவிடப்படவில்லை. ஆனாலும் 1961 ஐப்பசியில் சிங்கள ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது. பஸ்வண்டி வந்து சேர்ந்த மறுநாளே இளைஞர்கள் சிலர் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து காவலாளிகளையும் சுட்டுக்காயப்படுத்தி பஸ் வண்டியையும் தீக்கிரையாக்கினர். அடுத்த நாள் எஞ்சிய ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் மீளப் பெறப்பட்டன. தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடு – மன்னார் (1961 ஓகஸ்ட் 31, செப்டெம்பர் 1, 2) தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடானது மன்னாரில் 1961 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டெம்பர் மாதம் 1, 2 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. சி.மு. இராசமாணிக்கம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 1963 ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பிந்தாமல் போராட்டத்தை ஆரம்பித்தனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு என கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் அமைப்பு ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன்படி ‘இலங்கைத் தொழிலாளர் கழகம்’ ஹட்டனில் 22.12.1962 (சனி) அன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக அ. தங்கதுரை தெரிவு செய்யப்பட்டார். இந்தியாவின் மீதான சீனாவின் படையெடுப்பில் இந்தியாவுக்கு ஆதரவு 1961 இறுதியில் சீனா இந்தியாவின் மீது படையெடுத்தது. இவ்விடயத்தில் சீனாவைக் கண்டித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு 18.11.1961 இல் தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தின் விபரம்: சர்வதேசக் கண்ணியத்தையும் கௌரவமான நடத்தையை மீறியும் உலகத்திற்குத் தானும் பிரகடனப்படுத்திய பஞ்சசீலக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டும் கம்யூனிஸ்ட் சீனா, இந்தியா மீது நடத்தும் ஆக்கிரமிப்பை இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆசியாக்கண்டத்தில் ஜனநாயகம் நிலைபெறவும், தனது நாட்டையும் தேசிய கௌரவத்தையும் காப்பாற்றவும் நடாத்தப்படும் இப்போரில், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் தனது ஆதரவை அளிப்பதுடன் இந்திய மக்களுடன் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கிருக்கும் ஐக்கியத்தையும் காட்ட, கட்சி விரும்புகின்றது. ஏகாதிபத்தியச் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் தனது சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடும் இந்தியாவிற்கு ஆதரவு நல்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தை இக்கட்சி கேட்டுக்கொள்கிறது. தனது பாதுகாப்பிற்குப் போதிய ஆட்பலம் இந்தியாவிடம் இருப்பினும், மாண்புமிக்க கொள்கைகளுக்காகவே இந்தியா போரிடுவதால், மனித சுதந்திரத்திற்காக நடத்தப்படும் இப் புனிதப்போரில் ஒரு சிறிதளவேனும் பங்கெடுக்க விரும்புவதனால், இப்போரில் பங்கெடுப்பதற்காக இலங்கைவாழ் தமிழ்பேசும் இளைஞர்களைத் தொண்டர்களாகச் சேரும்படி இக்கட்சி அழைக்கின்றது. மந்திரிமார் வருகைக்கு மீண்டும் எதிர்ப்பு தமிழரசுக்கட்சியை மீண்டும் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தும் வகையில், 24.02.1963 இல் கட்சிச் செயற்குழு மந்திரிகள், அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு – கிழக்கிற்கு வரும்போது, வருகையை எதிர்ப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் வடக்கு – கிழக்கிற்கு கோலாகல விஜயங்கள் செய்யின் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் அமைச்சர் ரி.பி. இலங்கரத்தின வருகைதந்த போது கறுப்புக்கொடி காட்டினர். நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பருத்தித்துறை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் திறப்புவிழாவிலும் அணிவகுத்து நின்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர். இவ்வார்ப்பாட்டத்தின் போது ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி.ஏ. கந்தையா உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர். தாக்குதலினால் பாதிக்கப்பட்ட வி.ஏ. கந்தையா 4.06.1963 இல் மரணமடைந்தார். தொடர்ந்து வ. நவரத்தினம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ‘எல்லாம் தமிழ் இயக்கம்’ உருவாதல் சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரசுடனான தம் கருமங்களைத் தமிழில் ஆற்றத் தூண்டுவதற்குமாக எல்லாம் தமிழ் இயக்கத்தை 1963 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதியில் உருவாக்கினர். இதன்படி தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள், வேறு அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றின் முன் போராட்டக்காரர்கள் விண்ணப்பங்கள், தந்திகள், முகவரிகள் என்பவற்றை தமிழில் எழுதுமாறு தூண்டினர். தேவையானவர்களுக்கு தாமே எழுதிக்கொடுத்தனர். அரசாங்கம் 1964 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி சத்தியாக்கிரகத்தால் கைவிடப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தை வடக்கு – கிழக்கில் அமுல்படுத்தப்போவதாக அறிவித்தது. தமிழரசுக் கட்சி முழுச் சக்தியையும் திரட்டி இதனை எதிர்ப்பது என 30.6.1963 இல் கொழும்பில் தீர்மானித்தது. அரசாங்கம் தீர்மானித்தபடியே சிங்கள அரசாங்க ஊழியர்களை வடக்குக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. அதேவேளை தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களத்தைத் திணிக்கும் நோக்கில் 2000 சிங்கள ஆசிரியர்களையும் வடக்கு – கிழக்கிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி இதனைப் பகிஷ்கரிப்பது என்றும் இப்போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்களை இணைப்பது என்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கட்சியின் போராட்ட அச்சத்தினால் சிங்கள ஊழியர்கள், ஆசிரியர்கள் வடக்கு – கிழக்குக்குச் செல்ல மறுத்தனர். இதனையொட்டி, அரசு 01.01.1964 அன்று அறிவித்தமைக்கு எதிரான மாபெரும் கண்டன ஊர்வலங்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா என்பவற்றில் நடாத்தியது. அவ்வவ் மாவட்டக் கச்சேரிகளுக்கு முன்னால் தனிச்சிங்களச் சட்டப்பிரதிகளையும் எரித்தது. பாதயாத்திரை சாதி பேதத்தை ஒழிக்கவும் கட்சியின் இலட்சியங்களை மக்கள் முன் பிரசாரம் செய்யவும் என பாதயாத்திரை நடாத்தப்பட்டது. செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பமானது. பலவாரங்களாக நடைபெற்ற பாதயாத்திரையின் போது தங்கிநிற்கின்ற இடங்களில் தீண்டாமை ஒழிப்பின் அவசியம் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றியும் கருத்தரங்குகளை நடாத்தினர். அரசு மீண்டும் சமரசப்பேச்சுக்கு வருதல் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைமையில் தொழிற்சங்கங்கள் 21 கோரிக்கைகளை சமர்ப்பித்து பெரிய போராட்டத்துக்கு ஆயத்தங்களைச் செய்தன. இந்நேரம் தமிழரசுக்கட்சியின் ஆதரவை அரசாங்கம் வேண்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் பிரதான அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியை தன்னுடன் இணைப்பதில் வெற்றி கண்டது. இதன்பின்னர் தொழிற்சங்கப் போராட்டமும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு 1964 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் திருகோணமலை இடம்பெற்றது. இம்மாநாட்டில் செல்வநாயகம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இதன்போது தொடர் போராட்டம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இந்தியாவின் சார்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் லாவ்பகதூர் சாஸ்திரியும் கையொப்பமிட்டனர். இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் 975,000 பேரில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதென்றும் 300,000 பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதென்றும் முடிவிற்கு வந்தனர். மீதி 15,000 பேர் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் உடன்பாட்டிற்கு வந்தனர். 1967 இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தின் மூலம் இது நடைமுறைக்கு வந்தது. திருப்பி அனுப்பப்படும் செயன்முறை 15 வருட காலத்திற்குள் இடம்பெற வேண்டும் எனத் தீமானிக்கப்பட்டது. மலையக மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் எந்தவிதக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் தலைவர் தொண்டமான் நியமன உறுப்பினராக இருந்தபோதும் அவருடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது விட்டனர். தமிழரசுக் கட்சி இதனைக் காரசாரமாக எதிர்த்தது. இந்தியா தன்னுடைய நலன்களுக்காக மலையக மக்களை விலையாகக் கொடுத்த நிகழ்வாக இது இருந்தது. மலையக மக்களின் அரசியல் பலம் பலவீனமடைந்தது. இது பற்றி மனோகணேசன் கூறும் போது “இந்தியா முழு மலையக மக்களையும் இந்தியாவிற்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழுப்பேரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். அரசாங்கம் கவிழ்தல் அரசாங்கம் ஏரிக்கரை பத்திரிகையை தேசியமயமாக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது. அரசாங்கக் கட்சியின் சபை முதல்வர் சி.பி.டி. சில்வா தலைமையில் பல உறுப்பினர்கள் இதனை எதிர்த்து எதிர்க்கட்சிக்கு மாறினர். இந்நிலையில் அமைச்சர்கள் பலர் தமிழரசுக்கட்சியின் உதவியை நாடினர். ஆனால் முன்னைய அனுபவத்தினால் அதனை கட்சி நிராகரித்தது. மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தது. இதனால் அரசாங்கம் கவிழ்ந்தது. 1965 மார்ச் பொதுத்தேர்தல் இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 217,986 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றினர். ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களையும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி 41 இடங்களையும் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழரசுக்கட்சியின் ஆதரவை நாடினர். இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி அரசில் சேர்ந்தது. டட்லி – செல்வா ஒப்பந்தம் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழியில் நிர்வாகம் நடத்துவதற்கும், தமிழிலேயே பதிவதற்கும், தமிழ் பேசும் மக்கள் நாடு முழுவதிலும் அரச கருமங்கள் விடயத்தில் தமிழில் தொடர்பு கொள்வதற்கும், வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்ற அலுவல்களைத் தமிழில் நடாத்தவும் ஏற்றவகையில் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையில் மாவட்ட சபைகளை உருவாக்குதல், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படும் போது; முதலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கு வழங்குதல், இரண்டாவதாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்குதல், மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கு முதலிடம் கொடுத்த பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குதல் என்பன ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருந்தன. இவ் ஒப்பந்தத்தின் பின்னர் தமிழரசுக்கட்சி அரசாங்கத்தில் சேந்தது. இதில் திரு.மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழரசுக்கட்சியின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. அதன் வரலாற்றுப் பாத்திரமும் முடிவு பெற்றது. தமிழரசுக்கட்சி அரசில் சேர்ந்ததினால் அரச ஊழியர்களில் பழையவர்களுக்கு சிங்களத் தேர்ச்சியின்றி, சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டன. புதிய ஊழியரின் சிங்களத் தேர்ச்சி 8 ஆம் தரமாக்கப்பட்டது. ஆனால் திறைசேரி அதிகாரிகள் 9 ஆம் தரச் சோதனையை 8 ஆம் தரம் என நடத்திச் சலுகையை முறியடித்தனர். நிதியமைச்சர் வன்னி நாயக்கா, பிரதமரோடு தமிழரசுக் கட்சி நடாத்திய மாநாட்டில் இதனை ஒத்துக்கொண்டார். தமிழ்மொழி உபயோகச் சட்டவிதிகள் மசோதா – 1966 ஜனவரி 08 1958 இல் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட தமிழ்மொழி உபயோகச்சட்டத்தின் கீழ் அதன் இயங்கு விதிகள் தொடர்பான சட்ட மூலம் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தத்தின் கீழ் 1966 ஜனவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழையும் நிர்வாக மொழியாகவும், நாடு முழுவதிலும் தமிழ்பேசும் மக்கள் தமிழில் அரசாங்கத்தோடு கருமமாற்றவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இதனை சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உட்பட சிங்கள எதிர்க்கட்சிகள் யாவும் காரசாரமாக எதிர்த்தன. இச்சட்டவிதிகள் மூலச்சட்டத்தின் எல்லையை மீறியுள்ளன எனக் கூறப்பட்டது. அரச தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு எதிர்க்கட்சிகள், கொழும்பு விகாரமாதேவி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியது. ஊர்வலம் கட்டுக்கடங்காமல் சென்றதால் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ரத்தினசாரதேரோ என்ற பௌத்தபிக்கு சூடுபட்டு மரணமடைந்தார். எனினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் பெரிதாகச் செயற்படவில்லை. இடதுசாரிக் கட்சிகள் இதன்மூலம் தமது இனவாதப் போக்கினை வெளிக்காட்டின. மாவட்ட சபை தொடர்பான வெள்ளை அறிக்கை தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓரளவு அதிகாரம் பகிரக்கூடிய சட்டமூலத்திற்காக வெள்ளை அறிக்கை மு. திருச்செல்வத்தினால் தயாரிக்கப்பட்டது. பல மாதங்கள் பிரதமரினாலும் அமைச்சர்களினாலும் கட்சித் தலைவர்களினாலும் ஆராயப்பட்ட வெள்ளை அறிக்கை பராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புக்கு அஞ்சிய பிரதமர் டட்லி சேனநாயக்க “மாவட்ட சபை மசோதவை தாம் பராளுமன்றத்தில் நிறைவேற்ற மாட்டோம்” எனக் கூறினார். தமிழரசுக்கட்சியின் பத்தாவது மாநில மாநாடு (1966 யூன் 23, 24, 25 – கல்முனை) தமிழரசுக் கட்சியின் 10 ஆவது மாநில மாநாடானது 1966 ஆம் ஆண்டு யூன் மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் தலைவராக ஈ.எம்.வி. நாகநாதன் தெரிவு செய்யப்பட்டார். முதன்முறையாக பிரதமர் டட்லி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இலகுவில் வாக்குக்கொடுக்க மாட்டேன், கொடுத்தால் நிறைவேற்றத் தவறமாட்டேன்” என டட்லி மாநாட்டில் உறுதிமொழி அளித்தார். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற முற்பட்ட போது தமிழரசுக் கட்சியினதும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினதும் முயற்சியினால் ஆட்சேபத்திற்குரிய அம்சங்கள் நீக்கப்பட்டது. விருப்பத்திற்கு மாறாக யாரையும் இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா திரும்பியோரின் வீதத்திற்கே இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்யும் திட்டம், இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்தோரை தனிவாக்காளர் இடாப்பில் அடக்கும் அம்சம் என்பனவே நீக்கப்பட்டன. ஆட்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான சட்டமும் மாற்றப்பட்டது. பிரஜை, நாடற்றவர் என்ற பேதமின்றி இந்நாட்டில் சட்டபூர்வமாக வாழும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எல்லோரையும் பதிந்து அடையாள அட்டை வழங்குவதற்கு சட்டமியற்றப்பட்டது. இச்சட்டங்களை தமிழரசுக்கட்சியின் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர்கள் வ. நவரத்தினம் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்த்து வாக்களித்தார். இதனால் 24.04.1968 இல் கூடிய கட்சியின் பொதுச்சபை வ. நவரத்தினம் அவர்களைக் கட்சியிலிருந்து ஏகமனதாக வெளியேற்றியது. இதன்பின்னர் வ. நவரத்தினம் ‘தமிழர் சுயாட்சிக் கழகம்’ எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியைத் துறத்தல் திருகோணமலை கோணேசர் கோவிலைச் சார்ந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக்க மு. திருச்செல்வம் முயற்சித்தார். இதற்காக தமிழர், சிங்களவர், பறங்கியர் என மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சேருவல பௌத்த ஆலயத் தலைமைப் பிக்கு இதை எதிர்த்தார். பிரதமர் டட்லி சேனநாயக்க மு. திருச்செல்வத்துடன் கலந்தாலோசிக்கமாலே குழுவை நிறுத்தி வைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1968 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்தார். இதன் பின்னரும் தமிழரசுக் கட்சி சில மாதங்கள் அரசாங்கத்தில் நீடித்தது. 1968 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியது.
  7. பலாப்பழம்போல் பல பதிவுகளை கள உறவுகள் பதிந்து வருகிறார்கள். பழத்தை அப்படியே எடுத்துக் கடிக்காமல், அதனைப் பிளந்து தடலைப்பிரித்து உள்ளே தும்பு, பால், நரம்பு நீக்கி, விதை நீக்கிவரும் சுளைகளை எடுத்து சுவைக்கும்போது வரும் இன்பம் சொல்ல வார்த்தை இல்லை. அதுபோன்று உறவுகளின் பதிவுகளில் உள்ள வரிகளைக் களைந்தெடுத்துப் பதிந்து மகிழ்வித்த நிலாமதி அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்!!🙌😁
  8. இந்த தாயின் பரிதவிப்பை நாங்கள் உணர்வதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்! இறுதிக்கட்டப்போரில் இலங்கை இராணுவம் மட்டும்தானே பங்குபற்றியது? பிரிகேடியர் வருண கமகே நழுவல் பதிலை கூறியுள்ளார்.
  9. பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. “ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மெக்ஸிம் பிரிவோட் அறிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதாகப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கடந்த ஜுலை மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பெல்ஜியம் உட்பட பல நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுக்க தொடங்கியுள்ளன. நியூயார்க்கில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா. கூட்டத் தொடர் 23ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. பாலஸ்தீனத்தை நாடாகக் கருதும்படி பிற மேற்கத்திய நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. காஸாவில் அதிகரிக்கும் மனிதநேய நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு அந்தத் தீர்மானம் எடுக்கப்படுவதாகத் பிரிவோட் கூறியுள்ளார். இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனர்களில் அதிகமானோரை ஒரு முறைக்கு மேல் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளியிருப்பதாலும் ஐ.நா. அங்குப் பஞ்சத்தை அறிவித்திருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிவோட் குறிப்பிட்டுள்ளார். அனைத்துலக சட்டத்தை மீறும் விதத்தில் இஸ்ரேல் வன்முறையாக நடந்துகொண்டதால் இஸ்ரேலிய அரசாங்கம், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆகியோர்மீதான நெருக்கடியை அதிகரிக்க பெல்ஜியம் உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேலிய மக்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக அதன் அரசாங்கம் அனைத்துலக, மனிதநேய சட்டங்களை மதித்து நடப்பதை உறுதிசெய்து காஸாவின் நிலையை மாற்றும் நோக்கில் பெல்ஜியம் அத்தகைய தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. https://akkinikkunchu.com/?p=339390
  10. அப்படியே ஆகட்டும் தோழர் ..
  11. முந்தைய சிங்கப்பூர் ஜனாதிபதி லீக்குவான் லீயை பின்பற்ற முயற்சிக்கிறாரா? அல்லது தனது பாதுகாப்பை தானே உறுதிப்படுத்தி தமிழரின் மனதை கவர்கிறாரா? பொறுத்திருந்து பாப்போம்!
  12. நானும் முதலாவது வகை தான். நடு ரோட்டிலை நிண்ட அனுபவம் எக்கச்சக்கம். ஜேர்மனியில எரிபொருள் இல்லாமல் கார் நடு ரோட்டில நிண்டால் தண்டம் கட்ட வேண்டும். 😂
  13. அரச பதவியில் அல்லது தனியார் பதவியில் உள்ள இலங்கை தமிழன் சிங்களத்தில் சரளமாக பேசுவான்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தகும். தமிழ் அரசியல்வாதிகளில் பலர் சரளமாக சிங்களம் பேசக்கூடயவர்கள். இவர்கள் அனைவரும் சிங்கள பகுதியில் சிங்களத்தில் கதைப்பர். தமிழர் பகுதிகளில் தமிழில் கதைப்பர். ஆனால் சிங்களவர்களோ எங்கும் தமது மொழியையே முதன்மைப்படுத்துவர். இங்குதான் இனவாதம் காலூன்றி நிற்கின்றது. அமைதி சூழலை விரும்பும் நாட்டு தலைவர்கள் அந்நாட்டு முக்கிய மொழிகளில் பேசும் தன்மையாகவாவது இருக்க வேண்டும்.அது இங்கு அறவே இல்லை. நீ உன்னை தமிழர் பிரதேசங்களில் சிங்களவனாக முன்னிலைப்படுத்த நினைக்கும் போது தமிழருக்கு தனித்தாயகம் வேண்டுமென்பது சிறு குழந்தைக்கும் வரும்.
  14. வவுனியாவின் தண்ணீரில் இருக்கும் கல்சியம் காபனேற் கூட நீர் ஆவியாகும் போது இவ்வாறு படியலாம். அதை "உப்பு -NaCl" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.
  15. படம் : பேரும் புகழும் இசை : விசுவநாதன் வரிகள் : கண்ணதாசன் பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
  16. தமிழக கடல்வள கொள்ளையர்கள் எல்லை தாண்டி வந்து எம் வளங்களை கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்லாமல், கச்சதீவை மீட்டால் பிரச்சனை தீரும் என்று தமிழக அரசியல்வாதிகள் ஸ்டாலினில் இருந்து சீமான் தொட்டு விஜய் வரைக்கும் கச்சதீவை மீட்க சொல்லி செய்யும் பம்மாத்து போலி அரசியலுக்கு அனுர தக்க பதிலை கொடுத்து இருக்கின்றார். கண்டிப்பாக இது தமிழக அரசியல்வாதிகளுக்கு வெறுப்பை தரும் விடயம்.
  17. https://youtu.be/YzSEFSr-lWk?si=Mxw3Ax3Bmd3WPfnU எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு https://youtu.be/3yxZYAAJb_M?si=PDJZLc3sLtLfuf7f கண் போன போக்கிலே கால் போகலாமா
  18. படக்குறிப்பு, வலுவான உடலமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடல் தகுதியைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். கட்டுரை தகவல் சம்பத் திஸாநாயக்க & ஷெர்லி உபுல் குமார, கிளிநொச்சியில் இருந்து பிபிசி சிங்கள சேவை 3 செப்டெம்பர் 2025, 01:43 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் ''பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் உயிருடன் அல்லவா கையளித்தோம். சடலத்தைக் கொடுக்கவில்லையே'' என கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார். செல்வதுரை கோபிநாத் என்ற அவரது மகன், பள்ளி ஆசிரியராக இருந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றினார். சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தருணத்தில் தனது மகனை ராணுவத்திடம் ஒப்படைத்த போதிலும், அவருக்கு என்ன நடந்தேறியது என்பது தொடர்பில் எந்தவிதத் தகவலும் இல்லை என கோபிநாத்தின் தாய் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் இந்தச் சம்பவமானது, நாட்டில் தீர்க்கப்படாதுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பட்டியலில் மற்றுமொரு சம்பவமாகவும் இருக்கக்கூடும். சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளின் பிரகாரம், உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அதிகளவானோர் காணாமல் போன நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இராக் முதல் இடத்தில் உள்ளது. கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் வசித்து வந்த செல்வதுரை கோபிநாத், தனது 27வது வயதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். படக்குறிப்பு, அவரது தந்தையின் கூற்றுப்படி, கோபிநாத் விருப்பமின்றித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்திகளை வழங்கச் சென்றார். மா, வாழை, தென்னை போன்ற மரங்கள் நிரம்பிய தோட்டத்திற்கு மத்தியில் மிகவும் அமைதியான சூழலில் அவரது வீடு அமைந்துள்ளது. நாங்கள் அவரது வீட்டை நெருங்கிய சந்தர்ப்பத்தில், அவரது தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி வரவேற்றார். அதன் பின்னர், அவரது கணவர் சுப்ரமணியம் செல்வதுரை எங்களிடம் பேசத் தொடங்கினார். 73 வயதான அவருக்கு, கடந்த ஒரு வார காலமாக காது கேட்கும் திறன் குறைந்துள்ளது. முச்சக்கரவண்டி (ஆட்டோ) ரிப்பேர் வேலைகளைச் செய்தல், வாகனங்களின் ஆசனங்களுக்கு மேலுறை தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ''எமது மகன் செல்வதுரை கோபிநாத் ஒரு ஆசிரியர். அக்கராயன் மகா வித்தியாலயத்தில் அவர் ஆசிரியராக வேலை செய்தார். அவர் ஆங்கில ஆசிரியர். அவருக்கு ஆங்கலம் நன்றாகத் தெரியும்.'' ''நிதர்சனம் என்ற விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேனல் ஒன்று இருந்தது. எனது மகன் 1:15 மணிக்கு விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தியை வாசிக்கச் சொன்னார்கள். செய்தியை வாசிக்க வேண்டும். 10,000 ரூபா சம்பளம் கொடுத்தார்கள்'' என சுப்ரமணியம் செல்வதுரை தெரிவித்தார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் செல்வதுரை சொல்லும் விதத்தில், தனது இரண்டாவது மகனான கோபிநாத், விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகச் சென்றமையானது, தனது சுய விருப்பத்திற்கன்றி, வேறு மாற்று வழி இல்லாமையே அவர் அங்கு சென்றார் எனப் புரிகிறது. ஆங்கில செய்தி வாசிப்பாளராகப் பணியாற்ற வேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தெரிவிக்காத பட்சத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காகத் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற அச்சத்திலேயே அவர் அதற்கு விருப்பம் தெரிவித்து இருந்ததாக கோபிநாத்தின் பெற்றோர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தனர். படக்குறிப்பு, தாயார் இன்னும் கோபிநாத்தின் டூத்பிரஷை பத்திரமாக வைத்துள்ளார். ''என்னை இவ்வாறு அழைக்கின்றார்கள் என்ன சொல்வது என்று எனது மகன் கேட்டார். எங்களுக்கு இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதற்கான வழி இல்லை. அதனால், செய்தி வாசிக்குமாறு நான் கூறினேன். அப்படி இல்லையெனில், விடுதலைப் புலிகள் அழைத்து செல்வார்கள்தானே!'' "கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்தே அவர் ஆரம்பித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் மாவீரர் தினத்திற்கான நேரடி ஒளிபரப்பிற்காக முதலில் அவரை அழைத்துச் சென்றார்கள். அவர் செய்தியை மொழிபெயர்ப்பு செய்வார். வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு இந்த இடத்திலிருந்தே அவரை அழைத்து சென்றார்கள்" என்று விவரித்தார் அவரது தந்தை. "வாகனத்தில் இருவர் வருகை தந்தார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரியவர்கள் என நினைக்கின்றேன். பிரபாகரன் ஐயாவின் நேரடி ஒளிபரப்பை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் எனச் சொன்னார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. போகுமாறு கூறினோம்.'' ''பின்னர் 9 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்து இறக்கி விட்டார்கள். அவர் பள்ளிக்குச் சென்று வருவார். அன்றுதான் இது ஆரம்பமானது. நீங்கள் நன்றாகச் செய்தி வாசிக்கின்றீர்கள் என மக்கள் சொன்னார்கள். ஆளுமை நன்றாக இருக்கின்றது என்றார்கள். அதனால் நீங்களே செய்தி வாசிக்க வேண்டும் என்றார்கள். அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால், எதுவும் செய்ய முடியாது. செல்ல வேண்டும். அழைப்பது பெரியவர்கள், அவர்களுடன் எம்மால் மோத முடியாது, எதுவும் செய்ய முடியாது என்பதால் போகச் சென்னோம். அதன் பின்னர் 9:15 மணி செய்தியை வாசித்தார். ஒன்பது முப்பது அல்லது 10 மணி போல வீட்டிற்கு வருவார். அவர் வரும் வரை நாங்கள் வீதியைப் பார்த்துக் கொண்டிருப்போம்.'' கடந்த 2009-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக ''குண்டுகள் விழ ஆரம்பித்தன. நாங்கள் முள்ளிவாய்க்கால் - வள்ளிபுரம் கிராமத்திற்குச் சென்றோம்.'' கோபிநாத்திற்கு மூத்த மற்றும் இளைய சகோரர்கள் இருக்கின்றார்கள். யுத்தம் கடுமையானதை அடுத்து, சுப்ரமணியம் செல்வதுரை தனது குடும்பத்தினருடன் கிளிநொச்சியை விட்டு வெளியேறி, முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர்ந்திருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுபட்டு, இந்த குடும்பத்தினர் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வந்துள்ளனர். ''விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பித்து ராணுவத்திடம் சென்றோம். அவர்கள் எங்களை ஓர் இடத்தில் தங்கச் சொன்னார்கள். அதன் பின்னர் பிரிந்து இருக்குமாறு சொன்னார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நாங்கள் அழுதோம். நாங்கள் அழுது கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ராணுவத்தினர் வந்து மகன்கள் இருந்தால் வருமாறு கூறினார்கள். ஏன் வரச் சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். என்னால் அதை விவரிக்க முடியவில்லை, கவலையாக இருக்கின்றது'' என செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி கூறினார். படக்குறிப்பு, "எங்கள் மகனுக்கு என்ன ஆனது எனச் சொல்லுங்கள். நாங்கள் அவனை உயிருடன்தானே கொடுத்தோம், சடலமாக அல்லவே!" என்று அவர் சற்று சீற்றத்துடன் கேள்வியெழுப்பினார். விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராக வேலை செய்தமையால், எனது மகனை பலரும் அடையாளம் கண்டு கொண்டிருந்தனர் என்பதாலேயே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம் என கோபிநாத்தின் தந்தை தெரிவிக்கின்றார். ''நான் தப்பு செய்யவில்லை. அம்மா எந்தவித பொய்யையும் சொல்ல வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்' என்று அவர் எந்நேரமும் சொன்னார்'' என அவரின் தாய் கூறுகின்றார். ''மகன் பள்ளியில் தங்கியிருப்பார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வருவார். வெள்ளிக்கிழமை வருகை தந்து மாலை 6 மணியளவில் செய்தி வாசிப்பதற்காகச் செல்வார். இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வருவார். வாரத்தில் இரண்டு தினங்கள் மாத்திரமே செய்தி வாசிப்பதற்காக அவர் செல்வார்.'' ''அம்மா என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது என அவர் சொன்னார். அப்பாவுக்கு கண் தெரியவில்லை என அவர்கள் வந்தால் கூறுங்கள். அதையும் செய்து, இதையும் செய்ய முடியாது எனச் சொல்லுங்கள். நாங்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு தொகையை அவர்களுக்கு வழங்குவதாகச் சொல்லுங்கள். எமது சம்பளத்தில் ஒரு தொகையைத் தருகின்றேன். வேறு ஒருவரை எடுக்குமாறு கூறுங்கள்'' என்று அவர் கூறியதாகவும் தாயார் கூறினார். அதோடு, ''முள்ளிவாய்க்கால் செல்லும் வரை அவர் எம்முடனேயே இருந்தார். எமது மகன் தவறு செய்யவில்லை என பேருந்தில் ஏறும்போது சொன்னேன். மகனும் தகவல்களைச் சொன்னார்.'' "எனது மகன் தவறு செய்யவில்லை என ராணுவத்திடம் நான் சொன்னேன்.'' ''இல்லை, இல்லை. அவரிடம் தகவல்களைப் பெற்றதன் பின்னர் அனுப்புவோம் என அவர்கள் கூறினார்கள்.'' 'இவரிடம் தகவல்களை பெற வேண்டும் என மற்றுமொருவர் கூறினார்.'' ''இல்லை, இல்லை அவரைப் பாதுகாப்பாக அழைத்து வந்து கையளிப்போம். எதுவும் செய்ய மாட்டோம். பயப்பட வேண்டாம். உங்கள் மகனை நாங்கள் அனுப்புவோம் என்று சொன்னார்கள்'' ''அதன் பின்னர், "அம்மா அழுக வேண்டாம். அடையாள அட்டையைத் தாருங்கள். சென்று வருகின்றேன் அம்மா. அழுக வேண்டாம் அம்மா' என்று எனது மகன் சொன்னார். பேருந்தில் ஏறும்போதும் சென்று வருகின்றேன் என்றார்.'' படக்குறிப்பு, கோபிநாத்தின் தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷினி, எங்களை வீட்டிலுள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, கோபிநாத் பயன்படுத்திய பொருட்களைக் காட்டினார். தனது மனதில் ஏதோ ஒருவித சந்தேகத்தில் வாழ்கின்ற போதிலும், தனது மகன் இன்னும் வாழ்கின்றார் என்ற பெரும் நம்பிக்கையுடன் வாழ்வதாகவே பத்மா பிரியதர்ஷனி. ''மகன் இருக்கின்றார் என்று நம்புகின்றேன். ஆண்டவனுக்குத்தான் தெரியும்.'' ராணுவம், போலீஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில் சோர்வடைந்த இந்தப் பெற்றோர், ஜோதிடம் பார்க்கும் இடங்களுக்கும் சென்றுள்ளனர். இந்தியாவில் உள்ள ஜோதிடம் சொல்லும் கோவிலுக்குக் கூட சென்றுள்ளனர். அவர்கள் மாத்திரமன்றி, அவர்கள் தேடிச் சென்ற ஜோதிடர்கள்கூட, தனது மகன் உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ள போதிலும், அவர் தொடர்பில் இன்று வரை எந்தவிதத் தகவலும் இல்லை என சுப்ரமணியம் செல்வதுரை கண்ணீர் மல்கத் தெரிவித்தார். கோபிநாத்தின் தாயான பத்மா பிரியதர்ஷனி எம்மை வீட்டின் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று, தனது மகனின் பொருட்களைக் காண்பித்தார். ''எனது தங்க நகைகளை விட்டுவிட்டு, எனது மகனின் பொருட்களை மீண்டும் எடுத்து வந்தேன். இது அவர் பயன்படுத்திய பொருட்கள்'' கூறியவாறு பெட்டியொன்றைத் திறந்து எமக்குக் காண்பித்தார். வலுவான உடல் கட்டமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடற்பயிற்சிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட பழைய படமொன்றையும் அவர்கள் எம்மிடம் காண்பித்தனர். இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்ட அவரது தாய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஏனைய இளைஞர், யுவதிகள் தொடர்பிலும் கவலை தெரிவித்தார். ''படலந்த தொடர்பில் சொல்லும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது. எமது பிள்ளைகளுக்கும் ஏதேனும் நடந்தேறியிருக்கும் என நினைத்துக் கவலையாக இருக்கின்றது.'' ''யுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் எமது பிள்ளைகளை உயிருடன் கையளித்திருந்தோம். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரே நாங்கள் அவர்களைக் கையளித்திருந்தோம். அவர்கள் என்ன கூறி அழைத்துச் சென்றார்கள்? தகவல்களைப் பெற்று மீண்டும் அனுப்புவதாகச் சொன்னார்கள் அல்லவா? அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். எமது பணமோ காணியோ ஒன்றுமே வேண்டாம். பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களிடம் கூறுங்கள். உயிருடன் கையளித்தோம். சடலத்தைக் கையளிக்கவில்லை அல்லவா!'' என உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசினார். 'கவலையில் இருக்கும் தந்தை' வேறொரு முகாமில் இருந்த தனது நெருங்கியவர்கள், தனது மகனைக் கண்டுள்ளதாகக் கூறுகிறார் கவலையில் இருக்கும் தந்தை. ''ராமநாதன் என்ற பெயரில் முகாமொன்று இருந்தது. பெரும்பாலானோருக்கு எம்மை நன்றாகவே தெரியும் அல்லவா? உங்களின் மகனைக் கண்டோம் என்று அவர்கள் சொன்னார்கள். நன்றாக இருக்கின்றார். தண்ணீர் எடுக்கும் குழாய் அருகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கறுப்பு நிற கால் சட்டை அணிந்திருந்தார். நான்கு பேர் இருந்தார்கள். கையில் காயம் இருந்தது எனக் கூறினார்கள். சிறு குழந்தை ஒன்றும் அதேபோலக் கூறியது. நான் மாமாவை கண்டேன் என்று சொன்னது'' என்கிறார் அவர். அதன் பின்னர், இந்தக் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாமில், வெளியில் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டதை அடுத்து, உறவினர்களைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரத்தை பெற்று கோபிநாத்தின் தந்தை முகாமை விட்டு வெளியில் சென்றிருந்ததாக அவரது தந்தை கூறினார். அந்தச் சந்தர்ப்பத்தில், தான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், வவுனியா - மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் வெள்ளை நிற வேன் ஒன்றில் நான்கு பேருடன் தனது மகன் நின்று கொண்டிருந்ததை அவதானித்ததாக சுப்ரமணியம் செல்வதுரை தெரிவிக்கின்றார். அவர்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் என சுப்ரமணியம் செல்வதுரை கூறிய போதிலும், அதைச் சுயாதீனமாக எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. பேருந்தில் இருந்து இறங்கி அந்த இடத்திற்குச் சென்ற போதிலும், அந்த இடத்தில் இருந்து குறித்த வேன் வெளியேறியிருந்ததாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார். ''அநுராதபுரம் சிறைச்சாலையில் கோபிநாத் என்ற நபர் ஒருவர் இருக்கின்றார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. நான் அங்கு சென்றேன். அவர் இல்லை. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர்'' என கோபிநாத்தின் தந்தை கூறினார். 'ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும்' ''மகன் இருக்கின்றார் என்று அனைவரும் கூறுகின்றார்கள்'' ''மகன் வருவார் என்று உயிர் இருக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். மகனின் எந்தவொரு பொருளையும் அழிக்கவில்லை. நான் அனைத்து இடங்களுக்கும் அதை எடுத்துச் சென்று, இங்கு கொண்டு வந்துள்ளேன். எனது தங்க நகைகளையும் கைவிட்டுவிட்டேன். மகனின் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகளைக் கொண்டு வந்தேன். அவரது டுத் பிரஷையும் கொண்டு வந்தேன். பாதணியையும் கொண்டு வந்து வைத்துள்ளேன்.'' ''நாங்கள் ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும். அவரிடம் இவ்வாறு இருப்பதைக் கதைக்க வேண்டும். எத்தனை ஜனாதிபதிகள் பதவிக்கு வந்த சென்றுள்ளார்கள்? ஆனால் எங்களுக்கு விடுதலை இல்லை. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் ஒரு முடிவு தேவைப்படுகிறது. எதுவும் நடக்கவில்லை.'' ''நான் மாத்திரம் இதைக் கதைக்கவில்லை. அனைவரும் கையளிப்பதாகச் சொல்லிச் செல்கின்றார்கள். நாங்கள் வந்தவுடன் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று இந்த ஜனாதிபதி கூறினார், கதைப்பதாகவும் கூறினார். ஆனால், இன்னும் கதைக்கவில்லை. அவர் பதவிக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கதைக்கவில்லை.'' ''எங்களுக்குப் பணம் தேவையில்லை. எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? உயிருடன் நாங்கள் கையளித்தோம்'. அம்மா என்று சொல்லி, அடையாள அட்டையைப் பெற்றுச் சென்றார்.'' ''அவர் சாப்பிடும் உணவுகளை நாங்கள் வீட்டில் சமைக்க மாட்டோம். அவர் நினைவு வரும் என்பதற்காகவே சமைப்பது இல்லை.'' 'பெற்றோர் என்பதை வைத்துக்கொண்டு மாத்திரம் பதில் சொல்ல முடியாது' யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள இந்தத் தருணத்தில், வடக்கில் மாத்திரமன்றி, தெற்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பானவர்களின் அரவணைப்பின்றி கவலையுடன் வாழந்து வருகின்றனர். முழு அளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் நிர்க்கதி ஆகியுள்ளதுடன், பகுதியளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வை முன்னோக்கிக் கொண்டு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், சில தரப்பினர் எந்தவித வழக்கு விசாரணைகளும் இன்றி, தொடர்ந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஊடக பிரதானி தயா மாஸ்டர் மற்றும் சர்வதேச நிதி தொடர்பான பிரதானியாகக் கடமையாற்றி கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆகிய விடுதலைப் புலிகளின் முன்னிலை செயற்பாட்டாளர்கள், சட்டக் கட்டுப்பாடுகள் இன்றி இன்றும் வாழ்ந்து வருகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்" என்கிறார் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே. (கோப்புப் படம்) இவ்வாறான பின்னணியில் ராணுவத்தின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கோபிநாத்திற்கு என்ன நடந்தது? அவர் ராணுவம், குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு ஆகிய நிறுவனங்களின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டாரா என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தோம். இதன்படி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வருகை தந்து ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செல்வதுரை கோபிநாத் தொடர்பில் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகேவிடம் பிபிசி சிங்கள சேவை முதலில் வினவியது. அதற்கு அவர், ''பெற்றோர் கூறுகின்ற விதத்தில் மாத்திரம் தன்னால் பதில் கூற முடியாது. எம்மிடம் ஒப்படைக்கப்பட்டாரா? நாங்கள் பொறுப்பேற்றோமா? என்பது தொடர்பில் தகவல் இல்லை'' என பதிலளித்தார். ''ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் புனர்வாழ்வு அளித்தோம். ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் போகவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார். 'ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்' அவ்வாறான 15,000 திற்கும் அதிகமானோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். ''ராணுவத்திடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்'' என்று கூறுகிறார் அவர். ''அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் தேவை எமக்கு இருக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்.'' ''முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ராணுவத்தில் இணைந்து கொண்டு கடமையாற்றினார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றியிருந்தனர்.'' ''அவர்கள் சுயவிருப்பத்துடன் ராணுவத்தில் இணைந்து கொண்டார்கள். புனர்வாழ்வின் பின்னர் எம் மீது எழுந்த நம்பிக்கை காரணமாக அவர்கள் எம்முடன் இணைந்தார்கள்.'' ''எம்மிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் ஆக்கப்பட்டதாக எந்த வகையிலும் குற்றச்சாட்டு இல்லை.'' ''அந்தப் பெற்றோர் சொல்கின்றமை தொடர்பில் இதையே கூற வேண்டும். நாங்கள் பொறுப்பேற்ற அனைவருக்கும் உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். எம்மிடம் தற்போது யாரும் இல்லை'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பதில் செல்வதுரை கோபிநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் நாயகம் மிரான் ரஹீமிடம் பிபிசி சிங்கள சேவை வினவியது. பிபிசி சிங்கள சேவை வழங்கிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி அலுவலக அதிகாரிகளை கோபிநாத்தின் தந்தையுடன் தொடர்புபடுத்துவதாக அவர் கூறியுள்ளார். இதன்படி, அடுத்தகட்ட விசாரணைகளில் இந்தச் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 'உலகில் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 2வது இடம்' இந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 29வது அமர்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து ஆராயப்படவுள்ளது. இதற்கு முன்னர் சர்வதேச மன்னிப்பு சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் ஆயிரக்கணக்கானோர் உண்மை மற்றும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அதிகளவில் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது. முதலாவது இடத்தில் இராக் உள்ளது. வலிந்து அல்லது தன்னிச்சையாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவில், இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளின் பிரகாரம், 2024ம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் 6,264 வலிந்து காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 1980ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதி வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களாகக் குறைந்தது 60,000 முதல் 100,000 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை கணிப்பிட்டுள்ளது. கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையான சுமார் 30 ஆண்டுக் காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில், இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஆகியவற்றில் தண்டனைகளின்றி மீறியுள்ளதுடன், சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெற்ற கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், சிறுவர்கள் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டமை போன்ற மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgngr9d8zro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.