Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3044Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்6Points87986Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்4Points20008Posts
Popular Content
Showing content with the highest reputation on 09/22/25 in all areas
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் https://www.maalaimalar.com/news/state/2020/10/23144019/1996584/Rare-type-Corals-Will-be-destroyed.vpf தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அரிய வகை பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பனைக்குளம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் முதல் தூத்துக்குடி வரையிலான தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி இதேபோல் ராமேசுவரம் முதல் மண்டபம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியிலும் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. மீன்கள் முட்டையிட்ட குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்கு பவளப்பாறைகள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடங்களில் மீன்களும் அதிகம் காணப்படும். அழியும் நிலையில் பவளப்பாறைகள்... முடக்கப்படும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை..! கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா கடல் பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்களையும், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மீன்களையும் அதை நம்பியுள்ள மீனவர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளைக்கு மூடு விழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சயப் பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரியவகை உயிரினங்கள்தான், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இதுபோன்ற மீன்கள் மற்றும் அதை நம்பியுள்ள மீனவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் (Mannar biosphere reserve) இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியான ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார் வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ள இந்தக்காப்பகம், இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக 1989-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மன்னார் வளைகுடாப் பகுதியில் காணப்படும் அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), டால்பின்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள், இந்தப் பகுதியில்தான் காணப்படுகின்றன. முத்துக்கள், சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து இப்பகுதி காணப்படுகிறது. மேலும் கடற்பஞ்சுகள், பவளங்கள், கடல்விசிறிகள், இறால்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, வாழை தீவு ஆகிய தீவுகளும் மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளன. இந்தத் தீவுகளைச் சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றில் கடினவகை பவளப் பாறைகளும் அடங்கும். இத்தகைய அரிய பகுதியைப் பாதுகாக்கத் தவறியதோடு, அதற்காகத் துவங்கப்பட்ட உயிர்கோள காப்பகம் எனும் அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்தவும் தமிழக அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் பணி கடல்வாழ் அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களின் சமூக மேம்பாட்டை உயர்த்துவது ஆகியவைதான். இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியுடன் இயங்கி வந்தது. இந்நிலையில், ஐ.நா. உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியானது, கடந்த 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து மேலும் நான்கு ஆண்டுகளுக்குத் திட்டத்தை நீடித்தது. ஆண்டுக்கு ரூ.2.5 கோடி வீதம், நான்காண்டுகளுக்கு ரூபாய் 10 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்யாமல் இதுவரை 5.96 கோடி ரூபாய் மட்டுமே அத்திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 0.74 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் அத்திட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று தற்போது, மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை இதுவரை பராமரித்து வந்த அறக்கட்டளையின் காலம் முடிந்ததாகக் கூறி பணிகளை நிறுத்திவிட்டு, உயிர்க்கோள காப்பகத்தை முழுமையாக தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புத் துறையின்கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட பாரம்பர்ய மீனவர்களிடமே அக்கடமையை ஒப்படைப்பதுதான் அறக்கட்டளையின் நோக்கம். ஆனால், அறக்கட்டளை உருவாக்கப்பட்ட 2000-வது ஆண்டு தொடங்கி இன்றுவரை பதினேழு ஆண்டுகளில் அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், கண்துடைப்புக்காக சில கூட்டங்களை மீனவர்களை வைத்து நடத்திவிட்டு, அரசின் பணத்துக்கு கணக்கு எழுதிய வேலைதான் நடந்தது. எனவே, அறக்கட்டளையின் செயல்பாடு முடியவில்லை. இன்னும் ஒழுங்குபடுத்தி சிறப்பாக கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள். தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. பரப்பளவில் பவளப்பாறைகள் உள்ளன. அவற்றைக் கடத்திச் செல்லும் சிலர், சென்னையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கடத்திச் செல்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப் பாறைகளுக்கு மனிதர்களால் அழிவு ஏற்படத் தொடங்கி உள்ளது. பவளப்பாறைகள் கடத்தல் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலைக் கழிவுகளால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் போன்றவற்றாலும் கடல் வளம் பெரிதும் அழிந்து கொண்டிருக்கிறது. கடல் என்பது கழிவுகளைக் கொட்டும் இடம் அல்ல. அது காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாலூட்டிகள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில் கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவளப்பாறைகளே. இத்தகைய பவளப்பாறைகள், கடலின் தட்பவெப்பத்தை பேணிக்காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. எனவே, மீண்டும் தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையை தற்கால சூழலுக்கு ஏற்ப, விதிகளில் மாற்றம் செய்து, மத்திய அரசு மற்றும் ஐ.நா. நிதியுதவியுடன் செயல்படச் செய்ய வேண்டும். இதன் மூலம் மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களை பாதுகாக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார். https://www.vikatan.com/literature/arts/124980-is-gulf-of-mannar-biosphere-reserve-trust-going-to-be-shutdown3 points
-
ஒரு பயணமும் சில கதைகளும்
3 points5. இன்னொரு பாலம் -------------------------------- எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்விக்குட்படுத்துவதும் கிடையாது. உதாரணமாக, பொதுவாக பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை. இதே போலவே தெய்வம் என்ற மேலான ஒரு சக்தி கிடையவே கிடையாது என்ற நம்பிக்கையும் பல மனிதர்களிடம் பரவலாகவே இருக்கின்றது. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நம்பி வாழ்பவர்களும் உண்டு. மனிதர்களும் ஒரு விலங்கே, அங்கே சுயநலம் மட்டுமே உண்டு என்று உறுதியாக எதிர்த் திசையில் நம்புவர்களும் உண்டு. புதுமைப்பித்தனின் 'கடவுளின் பிரதிநிதி' என்னும் கதையில் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவரின் நம்பிக்கை ஒரு தருணத்தில் கேள்விக்கு உட்படுகின்றது. அந்தக் கணத்தில் அவர் அப்படியே உடைந்து சிதறிப் போகின்றார். நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தால், எந்த வாழ்க்கையும் அங்கே உடைந்து தான் போகும். என் வீட்டருகே இரண்டு கோவில்கள் இருக்கின்றன. நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு ஒரு 25 வருடங்களின் முன் குடிவந்தோம். இந்தக் கோவில்களும் ஏறக்குறைய அதே காலத்திலேயே இங்கு வந்தன. ஒன்று சுவாமி நாராயணன் கோவில், மற்றையது தமிழ்நாட்டு வகை கோவில். இரண்டுமே இந்த இடத்தில் மிக செழிப்புடன் இருக்கும் குஜராத்தி மக்களாலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. என் மனைவி ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாட்டு வகை கோவிலின் முதல் வகுப்பு குடிமகள்களில் ஒருவர். என் அயலவர், அவர் குஜராத்தி இனத்தை சேர்ந்தவர், சுவாமி நாராயணன் கோவிலின் முதல் வகுப்பு குடிமகன்களில் ஒருவர். ஊரில் வளர்ந்த சுழ்நிலையோ அல்லது கண்டதையும் கடியதையும் வாசித்ததாலோ, வளரும் நாட்களில் தெய்வம் என்னும் நம்பிக்கை மீது பெருத்த சந்தேகமே இருந்தது. எங்களில் பலருக்கும் நடந்தது போலவே, மிகப் பெரிய இழப்புகளும் ஏற்பட்டன. இவ்வளவும் கேட்பாரன்றி நடந்த பின், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் மனைவி 'இன்று நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும்............' என்று சொல்லிக் கூட்டிப் போகும் நாட்களில் போய்க் கொண்டிருக்கின்றேன். குஜராத்தி அயலவரின் மகன் திருமணச் சடங்கு ஒன்று சுவாமி நாராயணன் கோவிலில் நடந்தது. அதற்காக அந்தக் கோவிலுக்கு ஒரு தடவை போயிருக்கின்றேன். அங்கு இருக்கும் கடவுள் கிருஷ்ணரே என்று நினைத்திருந்தேன். சிட்னியில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும், அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். மிகப் பிரமாண்டமான கோவில் என்றார்கள். என் வீட்டருகே 25 வருடங்களாக இருக்கும் சுவாமி நாராயணன் கோவில் ஓரளவு பெரியது. என் வீட்டிலிருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவில் ஒன்றை குஜராத்தி மக்கள் கட்டியிருக்கின்றார்கள். அதை எல்லோரும் போய்ப் பார்க்கின்றார்கள், வியக்கின்றார்கள். நியூ ஜெர்சி, துபாய் என்று உலகெங்கும் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிட்னியில் கட்டிக் கொண்டிருப்பது 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் என்று சொன்னார்கள். சிட்னி நகரிலிருந்து கொஞ்சம் வெளியே ஒரு இடத்தில் கட்டியிருக்கின்றார்கள். முன்பே அந்தக் கோவிலுக்கு போய் வந்தவர்களும், இப்போது தான் முதன்முதலாக போயிருப்பவர்களும் ஒருங்கே ஒரு அதிசயத்தை பார்ப்பது போலவே அந்த இடத்தை பார்த்துக் கொண்டு நின்றார்கள். கோவிலின் முன்பு ஒரு சாது ஒற்றைக் காலில் நிற்கும் பெரிய சிலை ஒன்று இருந்தது. இந்தியப் பிரதமர் மோடி வந்து அதைத் திறந்து வைத்ததாகச் சொன்னார்கள். சிலையின் உயரம் 49 அடிகள் என்று இருந்தது. அந்தச் சிலையில் இருப்பவர் தான் சுவாமி நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார் என்றும் இருந்தது. அவர் ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக இப்படியே ஒற்றைக் காலில் தவம் இருந்ததாக அங்கிருக்கும் பல கல்வெட்டுகளில் தகவல்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இவர் 49 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த காரணத்தால், 1781 - 1830 ஆண்டுகள், சிலையின் உயரம் 49 அடிகளாக உள்ளது என்ற தகவலும் ஒரு கல்வெட்டில் இருந்தது. சுவாமி நாராயணன் என்றால் கிருஷ்ணர் என்று நான் இதுவரை நினைத்திருந்தது பொய் என்பது ஏமாற்றமாகவே இருந்தது. என்னுடைய அயலவரிடம் சுவாமியின் வரலாற்றை நான் கேட்டிருக்க வேண்டும். அவர் அடிக்கடி என்னிடம் ஏதாவது கேட்பார். ஒரு தடவை அவர் வீட்டிற்குள் பல்லி ஒன்று வந்து விட்டதாகவும், உடனே ஓடி வா என்று கூப்பிட்டார். நான் போகும் போது, அவர் கிட்டத்தட்ட கூரையில் நின்று கொண்டிருந்தார். நான் பல்லியைப் பிடித்து, அவர் வீட்டிற்கும், என் வீட்டிற்கு இடையில் இருக்கும் இன்னொரு வீட்டின் முன் வளவினுள் விட்டுவிட்டேன். இப்படி நான் அவருக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கின்றேன். நான் கேட்டிருந்தால், வரலாற்றை மகிழ்ச்சியாக சொல்லியிருப்பார். அன்று நான் பிடித்த பல்லியை நடுக்காணியில் விட்டது அவருக்கு தெரியாது. கோவில் வளாகம் ஒரு பெரும் சரிவில் பல தொகுதிகளாக கட்டப்பட்டிருந்தது. சுவாமியின் 49 அடி சிலை சரிவின் அடிவாரத்தில் ஆரம்பமாக இருந்தது. அதன் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக, 400 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்களில் செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கோவிலின் பகுதிகள் இருந்தன. முதல் தொகுதியில் அபிஷேகம் செய்யும் இடம் ஒன்று இருந்தது. சில டாலர்கள் கொடுத்து நாங்களே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள். எங்களில் ஒருவர் செய்தார். என் மனைவியின் வீட்டார்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் எந்த அவதார புருஷரையும், பாபாக்களையும், குருக்களையும், சாமியார்களையும் நம்புவதும் இல்லை, பின்பற்றுவதும் இல்லை. அந்த நாராயணனை நினைத்து இந்த நாராயணனுக்கு அபிஷேகம் செய்திருக்கின்றார்கள். அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அதன் பின்னால் உணவு விடுதி ஒன்று இருந்தது. எங்களில் சிலர் உள்ளே போனார்கள். என்ன பெரிது என்று சொல்லிக் கொண்டே, ஆனால் வெறுங்கைகளுடன் திரும்பி வந்தார்கள். வட இந்திய சைவ உணவாக இருக்க வேண்டும் போல. ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார்கள். அதன் பின்னால் ஏறிப் போனால், இந்தப் பிரிவின் இன்றைய குருவின் பெரிய பெரிய படங்களும், அவர் சொல்லும் விடயங்களும் இருந்தன. இது ஒரு குரு வழியாக, தொடராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. இந்த குரு சமாதி அடைந்தால், இன்னொரு குரு வருவார். குருவிற்கு செய்யும் பணிவிடைகள் இறைவனுக்கே செய்யும் பணிவிடைகள் என்று ஒரு செய்தி இருந்தது. இறைவனுக்கும், எங்களுக்குமிடையே குரு ஒரு பாலமாக இருக்கின்றார் என்று இன்னொரு செய்தி இருந்தது. அங்கிருந்து பார்க்கும் போது சுவாமி நாராயணனின் 49 அடி சிலையின் பின் பக்கம் தெரிந்தது. இவர்கள் எழுதி வைத்திருப்பது போலவே அவர் ஏழு வருடங்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படியான பாலங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காகவா அவர் தவமிருந்திருப்பார்? சேலத்தில் நித்தியும், கோயம்புத்தூரில் சத்குருவும், புட்டபர்த்தியில் சாயிபாபாவும், இலங்கையில் பிரேமானந்தாவும், இன்னும் எண்ணற்ற மனிதர்களாப் பிறந்து சாமிகளான பலரும் இதே பாலம் என்ற உருவகத்தை தானே வெவ்வேறு வழிகளில் சொல்லி தங்களை முன்னிறுத்தினார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த அடுத்த நாள் அயலவரைப் பார்த்தேன். 'சிட்னியில் உங்கள் கோவிலுக்கு போயிருந்தேன்..............' 'ஓ.......... போயிருந்தியா............ அதை மோதிஜி திறந்து வைத்தார்...............மந்திர் எப்படியிருக்கின்றது?' 'ஆ....... மோடி தான் திறந்தது என்று அங்கே சொன்னார்கள். 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு செய்து கட்டியிருக்கின்றார்கள்.' 'அவர்களிடம் பணம் நிறையவே இருக்கின்றது. எங்களில் பலர் தங்கள் வருமானத்தில் 25 வீதத்தை இதற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்............' தங்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனிதர்கள் உடைந்து போகின்றார்கள் என்றால், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடனே வாழும் மக்கள் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. (தொடரும்......................)3 points
-
ஒரு பயணமும் சில கதைகளும்
2 pointsமகா விஷ்ணுவின் பல நாமங்களில் ஒன்று நாராயணா என்னும் நாமம் .....அச்சுதா, அனந்தா,கோவிந்தா போன்று....... அது அவதாரமல்ல ....... ஆனால் அந்தப் பெயர்களை பக்தியால் பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவார்கள் . ....... அசலம் என்றால் அசையாமல் இருப்பது பொதுவாக மலையைக் குறிக்கும் ........திருவண்ணாமலை இதன் இன்னொரு பெயர் அருணாசலம் ....... பெற்றோர் அன்பினாலோ அன்றி பக்தியினாலோ பிள்ளைக்கு அருணாசலம் என்று பெயர் இடுகின்றார்கள் என்றால் அந்தப் பிள்ளை மலைபோல் அசையாமல் இருக்குமோ . .....இருக்காது ......அது ஓடும் , ஆடும், பாடும் , படம்போடும் அதுபோல் . ........! 😇2 points
-
ஒரு பயணமும் சில கதைகளும்
2 points49 வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று செத்துப் போனவருக்கு என்ன பிரச்சினை இருந்ததோ? யாரறிவார். நித்தம் சோறின்றி எத்தனை பேர் எத்தனையோ வருடங்கள் வாழ்கிறார்கள். யாரும் அதிசயப் படவில்லை. கொஞ்சம் மில்லியன்களை அந்தப் பக்கமும் திருப்பி விடலாம். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் என்.எஸ். கிருஸ்ணன் கேட்பார், “ கோவிலை கட்டுவது எதனாலே?" என்று. அதற்கான பதில், “சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு அதனாலே” என்று வரும். இன்றைய நிலையில் கோவிலைக் கட்டுவது ஒரு வியாபாரத்திற்குத்தான். அதுசரி அநேகமாக பல்லி மேலேதானே இருக்கும். எப்படிக் கீழே வந்தது? அவர் ஏன் மேலே போனார்? புரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனோடு உங்களுக்கு நல்லா பொழுது போகுது போலே.2 points
-
ஒரு பயணமும் சில கதைகளும்
2 pointsபுதிதாக கோயில் கட்டப்பட்டால் அதனை ஒரு அருங்காட்சியத்திற்கு போவது போல அந்த கோயிலுக்கு போக வேண்டும் என சொல்வார்கள், அந்த கோயில் எங்காவது ஒரு மூலையில் இருக்கும், அதற்கும் போகும் வழிகள் கற்களாக இருந்தாலும் அந்த கடவுளின் அருளால் வாகன சக்கரம் பழுதாவதில்லை, மனதில் தோன்றும் எண்ணங்களை வெளியே சொல்லும் தைரியம் இருக்காது🤣. மக்களின் நம்பிக்கைகள் மிக சக்தி வாய்ந்தவை சிலர் தம்து நம்பிக்கைக்காக பிறரின் உயிரை எடுக்கிறார்கள், சிலர் அவர்களது மூட நம்பிக்கைகளை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள், தமக்கு உவப்பான விடயங்களாக அல்லது தாம் சார்ந்த விடயங்களை கண்ணை மூடி நம்புபவர்கள் அதே நேரம் மற்ற விடயங்களில் கேள்வி கேட்டு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இங்கு படித்தவர்கள் கூட இப்படி இருப்பதுதான் வருத்தமளிக்கும் விட்யமாக இருக்கின்றது, சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய படித்தவர்கள்தான் அதிகளவில் சமூக அடக்குமுறைகளில் பலவழிகளில் பங்களிக்கிறார்கள்.2 points
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.2 points
-
ஒரு பயணமும் சில கதைகளும்
2 points3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகளின் ஆரம்ப காலங்களில் கவனிக்காமல் விடப்படுவது அல்லது உதாசீனப்படுத்தப்படுவது வழமையே. எங்கள் இனத்தில் இந்தப் போக்கு இன்னும் கொஞ்சம் அதிகமோ என்று இடையிடையே தோன்றுவதுண்டு. ஆனால் பூமி சூரியனைச் சுற்றுகின்றது என்று சொன்னதற்காக கலீலியோ கலிலி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அப்படியே இறந்து போனார் என்பது போன்ற நிகழ்வுகளால், உலகில் ஒருவர் இன்னொருவருக்கு குறைவில்லை போல என்று சமாதானம் அடைவதும் உண்டு. சில சமூகங்கள் கால நதியில் வேகமாக நீந்தி முன்னே போய்விட்டன. வேறு சில பழம் பெருமைகள் பேசிக் கொண்டே சிறிது பின்தங்கிவிட்டன. மலை வேம்பு என்னும் மரத்தை, அதை ஒரு விருட்சம் என்றே சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன், பத்து பன்னிரண்டு வயதாக இருக்கும் போதே முதன் முதலில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னரேயே ஊர் வேப்ப மரங்களில் நுனி வரை ஏறி வேப்பம் பூ பிடுங்கும் வேலையில் சிறப்பு தேர்ச்சி அடைந்து இருந்தேன். எங்கள் ஊரில் வேப்பம் மரங்களின் உச்சியில் இருந்து பார்க்கும் போது நீலக் கடல் தொடுவானம் வரை எல்லையில்லாமல் தெரியும். இவையெல்லாம் ரசித்துப் பார்க்க வேண்டிய விடயங்கள் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை. வேப்பம் பூ பிடுங்கி, மரச் சொந்தக்காரருக்கு ஒரு பங்கைக் கொடுத்து விட்டு, மிகுதியை சில வீடுகளுக்கு விற்போம். வடகம் செய்வதற்காக வாங்குவார்கள். கடலின் அழகை ரசிப்பதை விட, அதிக வேப்பம் பூ சேர்ப்பதிலேயே கவனம் இருந்தது. ஆனால் மலை வேம்பு பூக்கவில்லை, அதனால் அந்த விருட்சத்தின் மீது ஏறும் தேவை ஏற்படவில்லை. மலை வேம்பு ஊர் வேப்பம் மரத்தை விட கடுமையான நிறம் கொண்டதாகவும், உறுதியானதாகவும் தெரிந்தது. அந்தக் காலங்களில் திருகோணமலை சல்லியில் இருந்து ஒரு உதைபந்தாட்ட அணியினர் எங்களூருக்கு போட்டிகளுக்கு வந்திருந்தார்கள். அவர்களின் அணி மிகவும் திறமையானது, ஆனால் அவர்களின் விளையாட்டில் முரட்டுத்தனம் சிறிது அதிகமாக இருந்தது போலத் தெரிந்தது. அதனாலும், மலை என்னும் பெயராலும், மலை வேம்பு திருகோணமலையிலேயே அதிகமாக இருக்கின்றது என்று நானாகவே முடிவெடுத்து வைத்திருந்தேன். பல வருடங்களின் பின்னர் திருகோணமலையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கு ஒரு மலை வேம்பையும் நான் காணவில்லை. ஆனால் சிட்னியில் ஒரு மலை வேம்பைக் கண்டேன். பல வருடங்களின் முன்னே ஒரு நாள் வெறுமனே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு சிட்னியின் புறநகர்ப் பகுதியான அந்த சிற்றூரில் நடந்து கொண்டிருந்தேன். அந்த விருட்சம் அங்கே நின்று கொண்டிருந்தது. இது எனக்குத் தெரிந்த மரமே என்று அதன் அருகில் போனேன். அது அதுவே தான். அப்படியே பார்த்து கொண்டு அதனுடன் இருந்த ஒரு சிறிய ஒற்றை தள கட்டிடத்தினுள் போனேன், நூலகம் என்று எழுதியிருந்ததால். நூலகத்தின் நடுவே நூலகப் பணியாளர்களுக்கான இடம் இருந்தது. வலதுகைப் பக்கமாக பல வரிசைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடதுகைப் பக்கமாக பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இருந்தன. அதனுடன் நூலகத்துக்கு வருபவர்கள் இருந்து வாசிப்பதற்கு வசதியாக கதிரைகளும், மேசைகளும் சில நிரல்களில் அங்கே இருந்தன. மிகவும் வசதியான இருக்கைகள் கொண்ட கதிரைகள் மற்றும் அகண்ட மேசைகள். இவை எல்லாவற்றின் பின்னும், சுவர் ஓரமாக இந்திய மொழிகளில் புத்தகங்களும், சஞ்சிகைகளும் அடுக்கியிருந்தார்கள். தமிழ் என்று ஒரு பிரிவும் இருந்தது. அதிகமாகப் போனால் ஆனந்த விகடனும், குமுதமும், சில அவசர நாவல்களும் அங்கே இருக்கும் போல என்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாமலேயே அருகில் சென்றேன். முதலில் கண்ணில் பட்டது அசோகமித்திரனின் '18 வது அட்சக்கோடு' நாவல். அந்த திகைப்பு மாறும் முன்னேயே அந்த தமிழ் பகுதியில் இருந்த பல நாவல்களும், கதைகளும் இன்னும் இன்னும் திகைப்பைக் கொடுத்தன. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு, எஸ் ரா, ஷோபா சக்தி, அ. முத்துலிங்கம்............ என்று தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்லப்படுபவர்களின் நாவல்களும், கதைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் யார் அங்கே கொண்டு வந்தது, அதைவிட முக்கியமாக இவற்றையெல்லாம் யார் அங்கே வாசிக்கின்றார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. எட்டோ அல்லது பத்துக் கோடி தமிழ் மக்களில் மொத்தமாகவே ஒரு ஆயிரம் பேர்கள் தான் இவற்றையெல்லாம் வாசிக்கின்றார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படியாயின் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அந்த சிற்றூர் வாசிகசாலையில் இந்தப் புத்தகங்கள் எதற்காக. எங்களை நாங்களே குறைவாக மதிப்பிட்டிருக்கின்றோம் போல. மௌனமாக இருப்பவர்களின் குரல்கள் கணக்கில் சேருவதில்லை போல. ஆனால் அந்த நாவல்களும், கதைகளும் அங்கே வாசிக்கப்படுகின்றன என்பது திண்ணம். நான் அங்கே நிற்கும் நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஒரு சில மணி நேரமாவது அங்கே போவேன். சில நாட்களில் பகல் பொழுதின் பெரும் பகுதியை அங்கேயே செலவழித்திருக்கின்றேன். அந்தப் புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.சில புத்தகங்கள் இல்லாமல் போகின்றன, மீண்டும் தோன்றுகின்றன. சிலவற்றில் சில பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் வாசிக்கும் ஒரு தமிழ் சமுதாயம் அங்கே இருக்கின்றது. நெல்சன் குடாவிலிருந்து திரும்பி வந்த பின் அடுத்த நாள் காலையிலேயே வாசிகசாலைக்கு கிளம்பினேன். அது அங்கே இன்னமும் அப்படியே இருக்கின்றது என்று வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். இரண்டு இரண்டு வீட்டுக் காணிகளை இணைத்து வரிசை வரிசையாக மாடிக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக்கும் அந்த ஊரில் வாசிகசாலையை அப்படியே விட்டு விடுவார்களா என்ற பயம் மனதில் இருந்தது. வாசலில் நின்ற மலை வேம்பு அங்கே இல்லை. அதற்குப் பதிலாக சவுக்கு மரம் ஒன்றை புதிதாக வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு கடும் மழையிலோ அல்லது காற்றிலோ அந்த விருட்சம் தளர்ந்து போயிருக்கலாம். கூரையின் மேல் அது விழ முன் அதை அப்புறப்படுத்தியிருப்பார்கள். நீ முந்தினால் நீ, நான் முந்தினால் நான் என்று காலம் போய்க் கொண்டிருக்கின்றது, மரமானாலும் மனிதர்களானாலும். மற்றபடி நூலகம் தோற்றத்தில் அப்படியே இருந்தது. அதே நடு, வலக்கை, இடக்கை பிரிவுகள். ஆனால் இடைக்கைப் பக்கம் இருக்கும் இருக்கைகள் எல்லாம் இந்திய மக்களால் நிரம்பி இருந்தது. சில ஆண்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்கள். பலரிடம் மடிக்கணினி இருந்தது. அவர்கள் அந்தக் கணினிகளில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு இலவச இணைய வசதி கிடைக்கின்றது என்று பின்னர் அறிந்துகொண்டேன். தமிழ் பகுதி அதே இடத்தில் இருந்தது. ஆனால் அங்கே இருந்த நாவல்களும், கதைகளும் மாறியிருந்தன. தமிழின் ஆகச் சிறந்த நாவல் அல்லது நாவல்கள் எது என்றால் பலருக்கும் பல தெரிவுகள் இருக்கும். மிகவும் மதிக்கப்படும் சில விமர்சகர்களால் தமிழின் ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது ப. சிங்காரம் அவர்கள் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' என்னும் நாவல். இந்த நாவல் இன்று வரை தமிழில் ஒரு சாதனையாகவே கருதப்படுகின்றது. அது அங்கே இருந்தது. புலம் பெயர்ந்தவகளுக்கும், இந்த நாவலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு உண்டு. தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட புலம்பெயர் நாவல் அல்லது கதை இதுவே. இந்த நாவலை 60ம் ஆண்டுகளில் எழுதிய சிங்காரம் அவர்கள், அதை 70ம் ஆண்டுகளிலேயே வெளியிட முடிந்தது. பத்து ஆண்டுகளாக பதிப்பகங்களாலும், நிறுவனங்களாலும் இவரது எழுத்து நிராகரிக்கப்பட்டது. 'ஒன்றுமே விளங்கவில்லை................' என்று தூக்கி எறிந்துவிட்டனர். சிங்காரம் அவர்கள் அப்படியே ஒதுங்கி தனியாகிப் போனார். அதன் பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லை. 90ம் ஆண்டுகளில் தனியே இறந்த பொழுது கூட எவருக்கும் தகவல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கிடைத்த ஒரு கதிரையில் அவரது நாவலுடன் அமர்ந்தேன். அட்டையில் அவரது படம். அப்படித்தான் நினைக்கின்றேன். இணையத்தில் கிடைத்த திருட்டுப் பதிப்பில் இந்த நாவலை முன்னர் வாசித்திருக்கின்றேன், ஆனால் அதில் அவரது படம் இருக்கவில்லை. முன் தலை முழுவதும் தலைமுடி இல்லை. காதுகளில் நீண்ட முடி வளர்ந்திருந்தது. அது அவருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மலை வேம்பும் ஊர் வேப்ப மரம் போலவே பூக்கும், காய்க்கும் என்று பின்னர் தேடி அறிந்துகொண்டேன். இனி அந்த விருட்சத்தை எங்கே தேட. (தொடரும்.................. )2 points
-
அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும். கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை. அவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நாளையும், சிறிய விவரங்களைக் கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். உதாரணமாக அந்த நாளில் அவர்கள் அணிந்திருந்த உடை, சாப்பிட்ட உணவு, கேட்ட பாடல்கள் என அனைத்தையும் மூளையில் படம்பிடித்து வைத்திருப்பதைப் போல நினைவில் வைத்திருப்பார்களாம். மருத்துவ ரீதியாக இது ஹைப்பர்தைமீசியா (Hyperthymesia) எனக் குறிப்பிடப்படுகிறது. ஹைப்பர்தைமீசியா என்றால் என்ன? ஒரு மனிதனுக்கு அதீத ஞாபக சக்தி இருப்பது வரமா? அல்லது சாபமா? ஹைப்பர்தைமீசியா என்பது நோயா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவருக்கு வழக்கமான நினைவாற்றலை விட, மிகவும் துல்லியமான விவரங்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (Autobiographical Memory) இருப்பதை ஹைப்பர்தைமீசியா என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது மிகவும் அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (HSAM) எனவும் குறிப்பிடப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' எனவும் குறிப்பிடுகின்றனர். "புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு, அதை நினைவில் கொள்ளும் பொதுவான நினைவாற்றலில் (superior memory) இருந்து இது வேறுபடுகிறது. மாறாக சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களையே எளிதாக நினைவில் கொள்ள முடியும்" என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்வின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UCI), இதுபோல தங்கள் வாழ்க்கையின் தருணங்களை எளிதாக நினைவுகூரும் ஒரு குழுவின் மூளை மற்றும் மனதின் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்தனர். இந்த அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு UCI நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் மற்றும் சக ஊழியர்களால் ஆவணப்படுத்தப்பட்டது. அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் கொண்டவர்கள் வழக்கமான ஆய்வக நினைவாற்றல் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெறவில்லை. "இருப்பினும், அவர்களின் வாழ்க்கையில் 10½ வயதிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்வதில் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்தவர்களாக உள்ளனர்" என மெக்காக் கூறியதாக 2012ஆம் ஆண்டு வெளியான நியூரோசயின்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர் இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் தலைமை மருத்துவர் விஜய சங்கரை தொடர்பு கொண்டோம். "தைமீசியா என்பது கிரேக்க வார்த்தை. இதற்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுதல் என்பது பொருள். ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமாக ஞாபகம் வைத்துக்கொள்ளுதல். முதலில் இது ஒரு நோய் கிடையாது. இது நரம்பியல் அறிவாற்றல் (neuro cognitive) தொடர்பான ஒரு மருத்துவ நிலை ஆகும்." என விளக்கினார். மேலும் "இது மிகவும் அரிதான ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு 10 - 12 வயது முதலே தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பொரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவர்களின் ஞாபகம் மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கும்." என்றார். இந்த ஞாபக சக்தி கல்விக்கு உதவுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார். அப்படியென்றால் இவ்வளவு ஞாபக சக்தி இருக்கும் ஒருவரால் தாங்கள் படிக்கும் விஷயங்கள், புதிய தகவல்களை எளிதாக நினைவில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் எளிதாக நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இதுகுறித்து மருத்துவர் விஜயசங்கர் கூறுகையில், "இதுபற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களால் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைதான் துல்லியமாக நினைவில் கொள்ள முடியும். அதேசமயம் படிப்பிலோ, புதிய தகவல்களை அறிந்துகொள்வதிலோ இது உதவாது. அவர்களும் மற்றவர்களைப்போல படித்து, மனப்பாடம் செய்ய வேண்டும்." என்கிறார். "ஆனால் படித்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டுவருவது வேண்டுமானால், மற்றவர்களை விட இவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும்." எனக் கூறினார். இதற்கான அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவேளை உங்களுக்கும் இந்த மருத்துவ நிலை இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, வழக்கத்திற்கு மாறான நினைவாற்றல் - உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை அதீத விவரங்களுடன் நினைவில் கொள்வது தானாக நினைவுகொள்தல் - உங்களை அறியாமலேயே கடந்தகால தருணங்கள் நினைவில் தோன்றுவது. குறிப்பாக தேதி அல்லது சில குறிப்புகளை பார்க்கையில் இது தோன்றலாம். காலண்டரைப் போன்ற திறன் - ஒரு குறிப்பிட்ட தேதியில், பல தசாப்தங்களுக்கு முன்பும் கூட என்ன செய்து கொண்டிருந்தீர் என்பதையும் உடனடியாகக் கூறிவிடுவீர்கள். வலுவான உணர்வு பிணைப்பு - அந்த தருணம் நிகழும்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ, அதை நினைவில் கொள்ளும்போதும் அதே உணர்வு தோன்றும். நேரம் - சராசரி மக்களை விட கடந்த காலத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பீர்கள். அச்சு பிசகாத நினைவாற்றல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ். இதுபற்றி 2017ஆம் ஆண்டு பிப். 8ஆம் தேதி 'தி கார்டியன்' இதழில் ஒரு கட்டுரை வெளியானது. பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் லிண்டா ரோட்ரிக்ஸ் மெக்ராபி இதனை தொகுத்திருந்தார். அதில் 1974ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ் என்ற பெண்ணுக்கு HSAM எனப்படும் இந்த மருத்துவ நிலை முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1965-ல் பிறந்தவர். இந்த கட்டுரையின் படி, இவரிடம் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று என்ன நடந்தது எனக் கேட்டபோது, "அது ஒரு வெள்ளிக்கிழமை" என தனது நினைவில் தோன்றியதை விவரிக்கிறார். தொடர்ந்து "எனது இரட்டை சகோதர நண்பர்களான நினா மற்றும் மைக்கேல் உடன் பாம் ஸ்பிரிங்ஸ் சென்றேன். அதற்கு முன்பாக அவர்கள் வாக்ஸிங் செய்துகொண்டனர். அப்போது வலியால் கத்திக்கொண்டே இருந்தார்கள்" என சிறிய விவரங்களையும் நேற்று நடந்ததைப் போல அச்சுப் பிசகாமல் விரிவாக விவரித்தார். இவர் தனது 51 வயதிலும், 1980 முதல் என்ன நடந்தது என்பதை அவ்வளவு நுணுக்கமாக நினைவில் வைத்துள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில சமயங்களின் அவரின் விருப்பமின்றியே நிறைய விஷயங்கள் அவரின் நினைவில் உதிப்பதாகவும் கூறினார். 51 வயதிலும் இவரின் நினைவுகள் துல்லியமாக இருப்பது பற்றி மருத்துவர் விஜய சங்கரிடம் கேட்டபோது, "இந்த நிலை கொண்டவர்களுக்கு வயதாக ஆக ஞாபகங்கள் மறைந்துவிடும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. 70 - 80 வயதுகளில் கூட இவர்களால் துல்லியமாக கடந்த காலத்தை நினைவுகூர முடியும்" என்றார். ஜில் பிரைஸ் தொடர்பான மெக்காக்-ன் ஆய்வறிக்கை வெளியான பின்பு, 2007ல் பிராட் வில்லியம்ஸ் என்பவருக்கு இந்த நிலை இருப்பதாக மெக்காக்-ஐ நாடினார். 2வதாக இவருக்கு இந்த நிலை உறுதி செய்யப்பட்டது. பின் 3வதாக ரிக் பாரன், 4வதாக பாப் பெட்ரெல்லா என அவரின் ஆய்வறிக்கை வெளியான பிறகு பலரும் இந்த மருத்துவ நிலை இருப்பதாக தன்னை தொடர்புகொண்டதாக மெக்காக் குறிப்பிடுகிறார். 2011ஆம் ஆண்டில் இந்த HSAM மருத்துவ நிலை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும். அப்போதுவரை உலகிலேயே 22 பேருக்கு மட்டுமே இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக தி கார்டியனில் வெளியான கட்டுரை கூறுகிறது. இதற்கு காரணம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் "ஒரு தருணம் எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தளவிற்கு அது நினைவில் கொள்ளப்படுகிறது" என நினைவாற்றல் பற்றி பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் ஆய்வு கூறுகின்றன. நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சுவாரஸ்யத்தை சற்று தூண்டும் விதமான உணர்வு ஏற்படும்போது, அது அட்ரீனல் ஸ்ட்ரெஸ் (adrenal stress) ஹார்மோன்களை வெளியேற்றும். இந்த ஹார்மோன்கள் மூளையில் உணர்வுகளை செயல்படுத்தும் பகுதியான அமிக்டலாவை (amygdala) செயல்படுத்தும். இந்த அமிக்டலா இது முக்கியமான தருணம் எனவும், இதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் மூளையின் மற்ற பகுதிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இந்த முறைதான் நமது நினைவுகள் எவ்வளவு வலிமையாகின்றன என்பதை தீர்மானிக்க உதவுகிறது." என மெக்காக் விளக்குகிறார். "சாதாரண நினைவாற்றல் கொண்ட நபர்களை விட HSAM நிலை கொண்டவர்களால் எளிதில் பழைய நினைவுகளை நினைவுகூர முடியும்" என UCI நரம்பியல் பட்டதாரி மாணவர் அரோரா லிபோர்ட் மற்றும் நரம்பியல் நிபுணரும், டாக்டர் க்ரைக் ஸ்டார்க் மே 12ஆம் தேதி வெளியிட்ட கற்றல் மற்றும் நினைவாற்றல் பற்றிய நியூரோபயாலஜி இதழ் (The Journal Neurobiology of Learning and Memory) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த நினைவுகளை சரிபார்த்தால் இவை 87% உண்மையானதாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளையின் அமிக்டலா பகுதி ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள் சமீபத்தில் பிரான்ஸை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இந்த மருத்துவ நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக செப்டம்பர் 1ஆம் தேதி PsyPost செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சிறுமியை பாரிஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். "சிறுவயதில் தனக்கு கடந்த கால நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்க்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது இவரை யாரும் நம்பவில்லை. பின் தனது 16 வயதில்தான் இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்" என அந்த கட்டுரை கூறுகிறது. இது பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH), ஆராய்ச்சியாளர் வாலண்டினா லா கோர்டேவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் குறிப்பிட்ட நாளின் வானிலை முதற்கொண்டு துல்லியமாக கூறும் இவரின் இந்த திறன் கல்வியறிவில் எடுபடவில்லை. படிப்பு சார்ந்தவை என வரும்போது அதன் நினைவுகள் தானாக வருவதில்லை. தாமாக முயன்றால் மட்டுமே ஞாபகம் வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, இவரின் சுயசரிதை நினைவாற்றலை மதிப்பிட இருமாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தனது வாழ்நாளில் 5 கட்டங்களில் இருந்து 4 தருணங்களை நினைவுகூரச் செய்தனர். இதில் இவருக்கு எந்தளவுக்கு துல்லியமாக தருணங்களை நினைவில் கொள்ள முடிகிறது என பரிசோதிக்கப்பட்டது. இரண்டு முக்கிய மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. ஒன்று ஒட்டுமொத்த நினைவக மதிப்பெண். மற்றொன்று குறிப்பிட்ட மற்றும் விரிவான நினைவுகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு எபிசோடிக் மெமரி (EM). "இந்த பரிசோதனையில் இவருக்கு கடந்த கால நினைவுகள் தெளிவாக இருந்தன. அவை மீண்டும் நடப்பது போல் அடிக்கடி அவர் உணர்கிறார். மனம் சார்ந்த இவரின் காலத்தை கடக்கும் ஆற்றல் கடந்த காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் செல்கின்றன. இவரால் தனது எதிர்கால நிகழ்வுகளையும் விரிவாக கணிக்க முடிகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது. இது அந்த சிறுமிக்கு வலுவான சுய விழிப்புணர்வு மற்றும் முன் அனுபவ உணர்வுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிடுகிறது. வரமா? சாபமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ் ஹைப்பர்தைமீசியா நிலையைக் கொண்டவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதுபற்றி என்ன கூறுகிறார்கள்? "பலரும் இதை ஆசிர்வாதம் என நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு சுமை" என்கிறார் ஜில் பிரைஸ். "தினமும் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது என்னை பைத்தியமாக்குகிறது" என்கிறார். "இது பிளவு திரை (Split Screen) உடன் வாழ்வது போல இருக்கும். இடதுபுறம் நிகழ்காலமும், வலதுபுறத்தில் கடந்த கால நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்கும்" என தி கார்டியன் கட்டுரைக்கு விவரித்திருந்தார். "நாம் நினைவில் இல்லாததை மறதி எனக் கூறுகிறோம். ஆனால் சிறிய தகவல்களை சேமித்து வைப்பதால் என்ன பயன். அதன்மூலம் ஏதாவது பயனுள்ளதை வெளிக்கொணர வேண்டும். அப்போது தான் அது அறிவு அல்லது ஞானமாக மாறும்" என நரம்பியல் மருத்துவர் க்ரைக் ஸ்டாக் கூறுகிறார். "நினைவு என்பது கடந்த காலத்தை நோக்கியது. உங்கள் கடந்தகால அனுபவங்கள் இங்கே, இப்போது மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாற்றும் வகையில் இருக்கிறது." என ஆராய்ச்சியாளர் லிபோர்ட் கூறுகிறார். "ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நிலை இருப்பதால், ஹைப்பர்தைமீசியாவை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவது கடினம். வயதாக ஆக இவர்களின் நினைவாற்றல் குறையுமா? இவர்களின் இந்த மனம் சார்ந்த டைம் டிராவல் வயதை பொருத்ததா? நினைவுகள் தோன்றுவதை இவர்களால் கட்டுப்படுத்த முடியுமா? என எங்களுக்கு இதில் பல கேள்விகள் உள்ளன. இவை இன்னும் கண்டறியப்பட வேண்டும்." என லா கோர்டே தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு உண்டா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர். "இந்த நிலை இருப்பவர்களால் எதையும் மறக்க முடியாது என்பதே இவர்களுக்கு பின்னடைவாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் விஜய சங்கர். மேலும் பேசிய அவர், "சாதாரணமாக நம்மை பொறுத்தவரை காலப்போக்கில் சில விஷயங்களை மறந்துவிட முடியும். ஆனால் இவர்களால் ஒரு இழப்பையோ, மறக்க நினைக்கும் விஷயங்களையோ, அதிர்ச்சியளிக்கும் தருணங்களையோ இவர்களே நினைத்தாலும் மறக்க முடியாது. இதனால் இவர்களால் அந்த துயரில் இருந்து மீளவே முடியாமல் போகும்" என்கிறார். "இதனால் Obsessive compulsion ஏற்படும். அதாவது மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே யோசிக்கத் தோன்றும். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது." எனவும் கூறினார். இந்த மருத்துவ நிலையை சரிசெய்ய வழி உண்டா என அவரிடம் கேட்டபோது, "இது நோய் இல்லை என்பதால் இதற்கு தனியாக மருத்துவமோ, தீர்வோ கிடையாது. பொதுவாக இந்த நிலை இருப்பவர்கள் யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் மனதை சற்று தளத்த் முடியும். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, தூங்க வேண்டும் என பரிந்துரைப்போம். மேலும் அவர்கள் மன அழுத்தத்திற்கு சென்று விடாமல் இருக்க, ஆலோசனைகளும் வழங்கப்படும்." என்றார். மேலும், "ஒரு வகையில் அவர்களின் நினைவாற்றல் வரம் என்றாலும், அதிலும் சில கஷ்டங்கள் இருக்கும். சில சமயங்களில் மனநல ஆலோசனைகள் வழங்குவது அவர்களுக்கு உதவியாக இருக்கும்." என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4wwyz82d0o1 point
-
தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும் - Toronto
எமது பெருமைக்குரிய எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும். வரும் சனிக்கிழமை (Sep 27) 3 மணிக்கு. இடம்: அண்ணாமலை வளாக அரங்கு. Scarborough சந்திப்போம் வாருங்கள் நண்பர்களே.1 point
-
பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது!
Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 09:59 AM பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரிப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது அரசாங்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, அமைதி மற்றும் இரு - மாநில தீர்வுக்கான சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க நாங்கள் செயல்படுகிறோம் என அவர் தமது எக்ஸ் தளத்தில் காணொளி அறிக்கையொன்றினூடாக பதிவிட்டுள்ளார். அவுஸ்திரேலியா, கனடா மற்றும் போர்த்துகல் ஆகியவை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து பிரான்ஸூம் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக், காசாவில் பணையக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் சில பழமைவாதிகளிடமிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதற்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசு "நடக்காது" என ஞாயிற்றுக்கிழமை(21) குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2257041 point
-
டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க்
டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க் கேடரினா டிஷ்செங்கோ — சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025, 22:01 32645 அலாஸ்காவில் விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான அலாஸ்கா சந்திப்பு மற்றும் கிழக்கு உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்த பிறகு, ரஷ்ய ஆட்சியாளர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி துறை மற்றும் பிற உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் உட்பட இராணுவ விரிவாக்கத்தைத் தொடர முடிவு செய்தார். மூலம்: ப்ளூம்பெர்க் , கிரெம்ளினுக்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி. விவரங்கள்: ஆதாரங்களின்படி, "உக்ரைனை தனது நிபந்தனைகளின் பேரில் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த இராணுவ மோதல்தான் சிறந்த வழி என்றும், டொனால்ட் டிரம்ப் கியேவின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகம் செய்ய வாய்ப்பில்லை என்றும் புடின் முடிவு செய்துள்ளார்". உக்ரைனின் மின் கட்டமைப்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளை தொடர்ந்து குறிவைக்க புடின் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தைகள், போரில் தலையிடுவதில் டிரம்ப் ஆர்வம் காட்டவில்லை என்பதை புடினை நம்ப வைத்ததாக அவர்கள் மேலும் கூறினர். ஆங்கரேஜில், கியேவ் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்களின் மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டால், தெற்கு உக்ரைனில் போர்களை நிறுத்தி முன்னணியை முடக்க புடின் முன்மொழிந்தார். உக்ரைன் அதன் ஆயுதப் படைகளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நேட்டோவில் சேரும் இலக்கைக் கைவிட வேண்டும் என்றும் அவர் முன்னதாகக் கோரினார். இந்த நிபந்தனைகளை உக்ரைன் நிராகரித்துள்ளது, மேலும் இது தனது தீவிரத்தை நியாயப்படுத்துகிறது என்று புடின் நம்புகிறார் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமானவர்கள் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தனர். உக்ரைனின் விமானப்படை கட்டளையிலிருந்து ப்ளூம்பெர்க் சேகரித்த தரவுகளின்படி, டிரம்ப் மற்றும் புடினின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்ய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் சுமார் 46% அதிகரித்துள்ளன. ப்ளூம்பெர்க்கின் மேற்கோள்: "புடின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசாவில் நடக்கும் போரை கவனித்து வருகிறார் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமான இருவர் தெரிவித்தனர். காசாவில் நெதன்யாகுவின் பிரச்சாரத்தை ரஷ்யாவின் உக்ரைன் போரை விட கடுமையானதாக அவர் கருதுகிறார், மேலும் இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அரசாங்கங்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, இது மாஸ்கோ மீதான அவர்களின் விமர்சனத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறார்." விவரங்கள்: புடின் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார், ஆனால் தனக்குப் பொருத்தமாக இருக்கும் வகையில் செயல்படுவார் என்று ப்ளூம்பெர்க்கின் வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னணி: ஆகஸ்ட் 15 அன்று, டிரம்ப் மற்றும் புடின் அலாஸ்காவில் தங்கள் முதல் பேச்சுவார்த்தையை நடத்தினர் . உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்கள் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து, இராஜதந்திரம் மூலம் ரஷ்ய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, புடின் உக்ரேனிய பிராந்தியங்கள் மீது, குறிப்பாக தலைநகர் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ஒரு பெரிய அளவிலான ரஷ்ய வான்வழித் தாக்குதலின் போது, ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியை மீறின . உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் புடின் தன்னை ஏமாற்றிவிட்டதாக டிரம்ப் கூறினார் . செப்டம்பர் தொடக்கத்தில், ரஷ்ய-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அல்லது புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு குறித்து டிரம்ப் பெருகிய முறையில் அவநம்பிக்கையுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.pravda.com.ua/eng/news/2025/09/20/7531757/ கிரெம்பிளினுக்கு நெருக்கமான ஆதாரம் எது என யாருக்காவது தெரியுமா? இந்த ஆதாரமற்ற செய்தியினை இங்கே பதிந்துள்ளேன் என என்மேல் குற்றம் சாட்டமாட்டீர்கள் என நம்புகிறேன்.🤣1 point
-
ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointவிசில், மெல் கிப்சன் நடித்த பொண்ணுங்களுக்கு என்ன தான் வேணும் (What Women Want) என்ற படத்தின் உல்டா என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு கிடைக்கவே கூடாத சக்தி இது தான். எப்படியோ பெண்களுக்குக் கல்யாணம் ஆன கொஞ்சக் காலத்தில் கிடைத்து விடுகிறது (என்று தாங்களே நம்பத் துவங்கி விடுகிறார்கள்) 😁.1 point
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
தமிழ்நாட்டில் அரசியல் செய்யு எந்த அரசியல் கட்சியும், அரசியல் தலைவரும் பின்வருபவனவற்றை மேடையில் சொல்லியே ஆகவேண்டும் (பாஜகவும், அதன் தமிழ்நாட்டு பிரதிநிதிகளும் இந்த சட்டகத்துக்குள் வரமாட்டார்கள்): இந்தி எதிர்ப்பு நீட் தேர்வு எதிர்ப்பு ஊழலை அடியோடு அழித்தல் சமூகநீதியை ஏற்படுத்தல் இலங்கை கடற்படையிடம் இருந்து அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாத்தல் கச்சதீவை மீட்டல் இலங்கை தமிழ் மக்களின் அகதிமுகாம்களை மேம்படுத்தல் ........ ஒரு துரும்பைக் கூட இந்த தலைவர்களால் அதன் இடத்திலிருந்து அசைக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் காலத்தின் மாற்றங்களால் சமூகநீதி அதன் பாதையில், ஒப்பீட்டளவில், சில முனைகளில் முன்னே சென்று கொண்டிருக்கின்றது. பாஜகவினர் மேடையில் சொல்ல வேண்டிய ஒரே விடயம்: பாரத மாதாக்கு ஜே..............1 point
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இலங்கை தமிழர் பிரச்ச்சனைக்கு தமிழநாட்டு அரசியல்வாதிகள் எவராலும் ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது என்பதே ஜதார்ததம். சீமான் போன்றவர்கள் இதை வைத்து தமிழ் நாட்டு தற்குறிகளை ஏமாற்றி ஏதும் தரகு அரசியலை செய்து பிழைத்து வருகின்றனர். அதை பார்தத விஜையும் அதே சீமான் வகையறாகளின் அரசியலை பின்பற்றி இந்த விடயத்தை வைத்து ஏதும் இலாமடையலாமோ என்று எண்ணுவதே இந்த விஜயின் பேச்சு.1 point
-
ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointஒரு பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்ல, சில பக்கத்து வீட்டுக்காரர்களுன் இதே போலவே தான். அவர்களுக்கு மிகவும் வயதாகி விட்டது, அத்துடன் அவர்களுடைய பிள்ளைகளும் தூர இடங்களுக்கு போய்விட்டார்கள். முன்னர் இந்த தெருவில் இருந்த சிலர் போயும் விட்டார்கள். இங்கே பல்லிகள் வீடுகளுக்குள் பொதுவாக வருவதில்லை. ஆனால் வளவுகளுக்குள் ஓடித் திரிகின்றன. பூச்சிகளை இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன. அவர் தான் பல்லியை இதற்கு முன் இங்கே கண்டதேயில்லை என்று சொல்லி, பயத்தில் துள்ளிக் கொண்டிருந்தார். அதையே அவர் கூரையில் நின்றார் என்று சொல்லியிருந்தேன். அவர் குஜராத்தில் இருக்கும் போது அவர் வீட்டில் பணியாளர்கள் இருந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அங்கே அவருடைய வீட்டுக்குள் பல்லிகள், பூச்சிகள் வராமல் அந்தப் பணியாளர்கள் 24 மணி நேரங்களும் காவலுக்கு இருந்திருக்கின்றார்கள் போல........1 point
-
ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointஎன்னடா இது ஒரு பல்லியை பிடித்ததற்கே முதலையைப் பிடித்த மாதிரி ………..!1 point
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
தமிழ்நாட்டு மக்கள் மிக இலேசாக கடந்து போய்க் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. இதையே எங்கள் நாட்டில் ஒரு அரசியல் தலைவரோ அல்லது முக்கியம் மிக்க ஒருவரோ செய்து விட்டு, இவ்வளவு இலேசாக இருந்து விடமுடியாது. தமிழ்நாட்டில் பல தலைவர்களின் கதைகளில் பலர் வந்து போயிருக்கின்றார்கள். ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார் அல்லது கொள்ளை அடித்தார் என்பது இன்னும் ஒரு இலேசாகக் கடக்கப்படும் நிகழ்வு. இதை ஒரு பரபரப்பான செய்தியாகப் பார்ப்பார்களே அன்றி, அதற்கான விளைவுகள் மக்களால் ஆற்றப்படுவதில்லை. அங்கே ஊழலும், லஞ்சமும் சாதாரண ஒருவரின் வாழ்க்கையிலேயே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகமாகவே கலந்திருப்பதால், இவை ஒரு குற்ற உணர்வை தொடர்ந்தும் எவர் மனதிலும் உண்டாக்குவதில்லை. சமீபத்திய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் போன்ற நிகழ்வுகள் கூட மறக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் அழகிரியின் எல்லை மீறிய கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் கொலைகள், பொன்முடியின் சமீபத்திய மேடைப் பேச்சு போன்றன ஒருவரை அங்கே அரசியல் அநாதை ஆக்கக்கூடியன. சாதி, இனம், மொழி, மதம் என்று கோடுகளால் பிரித்து, வெறுப்பை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அங்கே இடம் இருந்தாலும், அவர்களுக்கான ஆதரவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இது பாட்டா?அல்லது இஸ்ரேலைப் பற்றி எழுதுகிறீர்களா? என்று ஒருகணம் யோசிக்க வைத்துவிட்டது.1 point
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point
- பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது!
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துகல் ஆகியன பிரித்தானியாவுடன் இணைவு! Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:03 AM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேல் குடியேற்றங்களை விரிவுபடுத்தவும், காசா மீதான போரை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில், பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துகல் ஆகியன ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கனேடிய பிரதமர் மார்க் கார்னி பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஞாயிற்றுக்கிழமை ( செப்டெம்பர் 21) அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளார். மேலும் "பாலஸ்தீன அரசு மற்றும் இஸ்ரேல் அரசு இரண்டிற்கும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கட்டியெழுப்புவதில் தங்கள் கூட்டாண்மையை" வழங்கியுள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் "பாலஸ்தீன அரசு உருவாகும் வாய்ப்பை எப்போதும் நிறுவுவதைத் தடுக்கும் முறையாக" செயல்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையிலான பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது, அமைதியான சகவாழ்வையும் ஹமாஸின் முடிவையும் விரும்புவோருக்கு அதிகாரம் அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது, அதற்கான எந்த வெகுமதியும் அல்ல," எனவும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீன அதிகாரசபை கனடாவிற்கு அதன் ஆட்சியை சீர்திருத்துவதில் "நேரடி உறுதிமொழிகளை" வழங்கியுள்ளது. அதே நேரத்தில், அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது. கனடா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து அவுஸ்திரேலியாவும் அங்கீகரிப்பது இரு நாடு தீர்வுக்கான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் ஒரு அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/2257061 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முன்னரெல்லாம் சிவாஜிக்கு -சி.எஸ்.ஜெயராமன், எம்ஜிஆருக்கு சீர்காழியார் எனப் பாடிக்கொண்டிருந்தார்கள். தூக்குத் தாக்கி படத்ததோடு சிவாஜி, சௌந்தரராஜனோடு ஒன்றிப் போனார். எம்ஜிஆரும் சௌந்தரராஜனை தன் படத்தில் பாடவைத்தாலும் விட்ட குறை தொட்ட குறை என்று அவ்வப்போது சீர்காழியாருக்கும் தன் படத்தில் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தார். சபாஸ் மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுடன் எம்ஜிஆருடன் உடனிருப்பவர் மாலினி. அன்றைய முன்ணணி நடிகர்களோடு மாலினி நடித்திருந்தோலும் பத்துப் படங்களுக்குள் இவரது திரைப்பயணம் நின்றுவிட்டது. சபாஸ் மீனா படத்தில் சிவஜியுடன் மாலினி இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தில் இடம் பெற்ற “ காணா இன்பம் கனிந்ததேனோ..” பாடல் அன்று அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட பாடல்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க . .......! 😍1 point- தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அவர்களிடம் கேட்டு பலனில்லை ஏன்னென்றால் இந்த பாரிய மீன்வள கொள்ளை சுரண்டல் இரு நாட்டு அரசுகளின் ஆதரவுடன் தான் நடை பெறுகிறது மன்னார் வளைகுடா பகுதியில் ஐ நாவால் பாதுகாக்கப்பட்ட பவள பாறை தொகுதிகளை இந்த உலகில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை வைத்து இருக்கும் ரோலர்கள் சத்தம் சந்தடி அற்று அழிக்க தொடங்கி விட்டன இதற்க்கு பல அரசியல் பின் புல காரணிகள் உள்ளன அதே வேளை இலங்கை சிங்கள அரசோ உடனடியாக நடவடிக்கைக்களை எடுக்காமல் வட கிழக்கில் தமது நீண்ட கால சிங்கள அரசியல் நலனை பேணுவதிலேயே குறியாக உள்ளது . அத்து மீறி இயற்கையான பவள பாறைகளை அழித்து நாசம் பண்ணும் கடல் கொள்ளையர் மீது மென்மையான அணுகுமுறையை கையாண்டு கொண்டு இலங்கையின் வடகிழக்கு எங்கும் விரைவான கடவு சீட்டுகளை இலகுவாக கிடைக்கும் வண்ணம் பல அலுவலங்களை திறந்து வைக்கின்றது அதனால் பல்லாயிர கணக்கான இளையோர்கள் மாற்று வழி தேடி செல்கின்றனர் .1 point- காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர்
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துக்கல் நாடுகள் பாலஸ்தீன நாட்டை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அல்லற்படும் மக்களுக்கு நிம்மதியான. அமைதியான வாழ்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointஇஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியாவிலா தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்? ஒரு மேடையில் பேசும்போது கேள்வி கேட்க எவருமே இல்லையா?1 point- தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
தேசியத்தலைவர் பேரைக் கூட சொல்லத்தைரியமில்லை.இருந்தாலும் அவர் பேசியதை வரவேற்கலாம். விஜை இந்த விடயத்தைப் பேசி இருப்பதால் அது ஊடக வெளிச்சம் பெறும். காலம்கடந்தாவது ஒப்புக்கு ஒரு வரி பேசி விட்டு கடந்து போயிருக்கிறார்.இதை எல்லா அரசியல்வாதிகளும் பேசியிருக்கிறார்கள். நாளைக்கு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விகடன் வாங்கிய காசுக்கு ஒரு செய்தியை ஒரு ஓரமாகப் போட்டு விட்டு சிவனே என்று இருக்கிறது.மேற்கொண்டு அதை உறுதிப்படுத்த எந்தச் செய்தியைுயும் வெளிவிடவில்லை.சீமான் எதிர்ப்பாளர்கள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொணடு நிற்கிறார்கள்.1 point- எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
கரடிக்கு குளிர்பானம் கொடுத்த இளைஞருக்கு தண்டனை! அதிவேகத்தில் வந்த கார், நூலிழையில் உயிர் தப்பிய நபர்!!1 point- தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அப்ப சபரீசனிட்ட வாங்கின 100 கோடிய நீங்க கொடுப்பீங்களா🤣 பத்தோடு பதின்றோகவேனும் முக்கிய சந்தர்பங்களில் குரல் கொடுத்துள்ளார். போராட்ங்களிலும் கலந்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று நேற்றைய நாகை உரையில் நான் அவதானித்த விடயம். ஏனையை பிரச்சனைகளை பற்றி விஜை பேசிய போது எழுந்த மக்களின் சத்தம், ஈழத்தமிழர் பற்றி சொன்ன போது அதே அளவில் வரவில்லை. இதுதான் எப்போதும் தமிழ் நாட்டின் மனநிலை. 2009 இலும் கூட. ஆகவே ஒரு அடையாள ஆதரவை மீறி வேறு எதை எதிர்பார்தாலும் அது எம் மடமையே.1 point- யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது!
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது! adminSeptember 21, 2025 யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்பவும் , யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கும் தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் படகு சவாரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை ( 21.09.25) நடைபெற்றது. நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்திருந்தனர். நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழ். மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன் ஓர் அங்கமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும் எமது இலக்காகும். இதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், தனியார் துறையினரும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் யாழ். படகு சவாரி திட்டம் மண்டைதீவு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்கள் எமது யாழ். மண்ணுக்கு சுற்றுலாப் பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கு இது உதவும் என நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/220610/1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
பருவகால அரசியல்வாதிகள் மக்கள் வாக்குகளை கவர்வதற்கு பல கதைகளை அடித்து விடுவார்கள், அதைக்கண்டு நாம் உச்சம் கொள்ளக்கூடாது. இவ்வளவு காலமும் நடிகர் விஜய் அவர்கள் ஆழ் உறைநிலையிலா இருந்தார்?1 point- தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
வரும்கால முதல்வர் வாழ்க. கதையோடு நிற்காமல் செயலிலும் இறங்க வேண்டும்.1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointஇது தொடர்பாக ஒன்றையும் ஓரளவு விபரங்களுடன் எழுதலாம் என்று இருக்கின்றேன், அண்ணா. அதனாலேயே சில விபரங்களை இப்பொழுது தவிர்த்திருக்கின்றேன். அங்கு குடியேறிய, குடியேறிக் கொண்டிருக்கும் மக்களிடையே இருக்கும் நம்பிக்கையின்மைகளை, சந்தேகங்களை என் பார்வையில் எழுதலாம் என்று நினைத்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் மட்டுமே தான் இது காணப்படுகின்றது என்றில்லை. எல்லா மேற்கு நாடுகளிலும் புலம் பெயர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் அதிகமாகவே உள்ளது.1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 point4. பாட்டி வடை சுட்ட கதை ------------------------------------------ சில கதைகளை ஆயிரம் தடவைகளாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம். சில நிகழ்வுகளும் திரும்ப திரும்ப நடந்து கொண்டேயும் இருக்கின்றன. மீண்டும் அந்தக் கதைகள் சொல்லப்படும் போது அல்லது அதே நிகழ்வுகள் நடக்கும் போது ஏதாவது ஒரு சின்ன மாற்றம் அல்லது திருப்பம் இருக்கும், இருக்காமல் கூட போகலாம். இந்தச் சில கதைகளும், நிகழ்வுகளும் எங்களின் வாழ்க்கைகளை விட்டு என்றுமே தூரமாகப் போவதில்லை என்பது ஆச்சரியம் தான். ஆனால் ஏராளமான கதைகள் முற்றாக எங்களை விட்டு நீங்கிவிட்டன. நான் சிறு வயதாக இருக்கும் போது அம்மாச்சி ஒரு கூனன் - கூனி என்னும் இருவரை வைத்து பல கதைகள் சொல்லியிருக்கின்றார். அந்தக் கதைகளை நான் பின்னர் வேறெங்குமே காணவில்லை. சல்லடை போட்டுத் தேடி இருக்கின்றேன், அவை அகப்படவேயில்லை. அந்தப் புகையிரத நிலையத்தில் வீட்டுக்காரர்கள் எல்லோரும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக இரண்டு சோடி தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன. நான் மறு பக்கமாக, அங்கே ஒரு சோடித் தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன, நின்று கொண்டிருந்தேன். புகையிரத நிலைய மேடையில் மஞ்சள் கோடுகள் இரண்டு பக்கங்களிலும் மிக நேர்த்தியாக கீறப்பட்டிருந்தது. மஞ்சள் கோட்டை தாண்டி எவரும் நிற்கக்கூடாது என்று ஒரு அறிவுறுத்தல் எழுதியிருந்தார்கள். எட்டிப் பார்த்துக் கொண்டே மஞ்சள் கோட்டைத் தாண்டிவிட்டேன். 'என்ன பாயப் போகின்றீர்களா...........' என்று கேட்டுவிட்டு சிரித்தார்கள். புகையிரத நிலையத்தின் இந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒரு சோடித் தண்டவாளம், மறுபக்கமாக போய்க் கொண்டிருந்த இரண்டு சோடித் தண்டவாளங்களுடன் நிலையத்தின் இரு முனைகளிலிருந்தும் சிறிது தூரத்தில் பின்னிப் பிணைந்து, பின்னர் இரண்டு சோடிகளாக பிரிந்து போய்க் கொண்டிருந்தன. 'தண்டவாளங்கள் சந்திப்பதில்லை............' என்ற தலைப்பில், ஏதோ ஒரு வடிவில், ஒன்றோ பலவோ வாசித்தது போல ஒரு ஞாபகம். டி. ராஜேந்திரரின் வசனமாகக் கூட இருக்கலாம். பல நல்ல உவமைகளும், சில வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட உவமைகளும் அவரது பாடல்களிலும், வசனங்களிலும் எப்போதும் இருந்தன. அடுக்கு மொழியில் தான் எழுதுவது என்று முடிவெடுத்தால் சில இடங்களில் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாதது. ஒரு புகையிரதம் மறு பக்கத்தில் வந்து நின்றது. அது நாங்கள் ஏற வேண்டியது இல்லை. சிட்னி நகர மையத்துக்குப் போவதற்காக நாங்கள் நின்று கொண்டிருந்தோம். மனிதர்கள் கண்டுபிடித்ததில், மனிதகுலத்தின் மொத்த வளர்ச்சியில் புகையிரதம் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு இலகுவாக ஒரு கூட்ட மக்களையும், பொருட்களையும் அது அள்ளிக் கொண்டு செல்கின்றது. ஒரு அராபியக் குதிரைக்கு, ஒரு காட்டு யானைக்கு இருக்கும் கம்பீரம் புகையிரதங்களுக்கு இருக்கின்றது. மேற்கு நாட்டவர்கள் நீராவியில் இயங்கும் இயந்திரங்களை உண்டாக்கி, அவற்றைக் கொண்டு கப்பல்களும், புகையிரதங்களும் செய்தார்கள்; அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே நாங்கள் நீராவியில் ஒரே மாவை இரண்டு தடவைகள் அவித்து புட்டு செய்து சாப்பிட்டோம் என்று சொல்லிச் சிரிப்பான் நண்பன் ஒருவன். இன்று அவன் போக்குவரத்து துறையில் பெரிய பொறுப்பில் இருக்கின்றான். உலகில் ஏறக்குறைய எல்லா பெரு நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் புகையிரத சேவைகள் திறம்பட இருக்கின்றன. ஆனால் நான் வாழும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் ஒரு விதிவிலக்கு. மிகவும் குறைந்த புகையிரத சேவைகளே லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கின்றன. ஒரு மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அராபியக் குதிரைகள் போல, காட்டு யானைகள் போல இந்த நகரில் புகையிரதங்கள் சோம்பி நிற்கின்றன. ஒழுங்கான புகையிரதப் பாதைகளோ அல்லது விரிவான தடங்களோ இல்லை. ஆனால் இங்கு வாழும் ஒவ்வொருவரும் ஒரு வாகனங்கள் அல்லது இரு வாகனங்கள் என்று வைத்திருக்கின்றார்கள். தனித்தனியே பயணிக்கின்றார்கள். அதுவே சுதந்திரம், வசதி என்கின்றார்கள். உலகில் நல்லதொரு புகையிரதச் சேவையை எங்கு பார்த்தாலும் மனம் ஏங்குகின்றது. சிட்னி நகரின் மையத்தில் இருக்கும் உயர்ந்த சுழலும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உணவகத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். 80 அல்லது 82 வது தளத்தில் அந்த உணவகம் இருந்தது என்று நினைக்கின்றேன். அதற்கென்று தனியே உயர்த்தி இருந்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டுமே அங்கிருந்து சாப்பிடலாம். அங்கே வேலை செய்பவர்கள் பலரும் நேபாளத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவர்கள் நேபாள மக்கள் என்று தெரிந்தது. அதில் ஒருவர் சரிதா தன்னுடைய பெயர் என்று அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் சரிதா என்ற பெயர் பயன்பாட்டில் இருக்கின்றது தானே என்று கேட்டார். இலங்கையிலும் நன்றாகவே இருக்கின்றது என்றேன். 'ஜூலி கணபதி' படம் நினைவில் வந்தது. சுழலும் 80 வது மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் ஜெயராமால் தப்பித்திருக்கவே முடியாது. வானம் நிறைந்த மப்பும் மந்தாரமுமாக இருந்தது. உணவகம் சுழன்றாலும் ஈரமான மேகங்கள் எல்லா திக்கையும் மூடி வைத்திருந்தன. பின்னர் சிறிது நேரத்தில் 360 பாகைகளில் சில பாகைகளில் மேகங்கள் கலைந்தன. சிட்னி நகரமும், அதன் முடிவில்லாக் கடலும் அந்த வெளிகளினூடே தெரிந்தன. ஊரில் சிறு வயதுகளில் வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து நான் பார்த்த அதே நீலக் கடல் தான். 15 நிமிடங்கள் இன்னும் இருக்கும் போதே உங்களின் நேரம் முடிந்து கொண்டு வருகின்றது என்று சரிதா வந்து ஞாபகமூட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்கும் போது 'மலையூர் மம்பட்டியான்' படம் ஞாபகத்திற்கு வந்தது. திரும்பி வரும் போது வங்கியில் ஏதோ எடுக்க வேண்டும் என்று போனார்கள். முன்பு சிட்னியில் திருட்டுப் பயம் மிக அதிகம். தாலியோ அல்லது பொன் நகைகளோ பலரும் அணிவதில்லை. முக்கியமாக புகையிரதங்களில் அணிவதேயில்லை. குறிப்பாக சில புகையிரத நிலையங்களில் இழுத்து அறுத்து விடுவார்கள் என்று சொன்னார்கள். அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். வீட்டுக்கு வந்து கூட திருடுவார்கள் என்றனர். புராணக் கதைகள் போல சில திருட்டுச் சம்பவங்களை விபரித்திருக்கின்றார்கள். அப்பாவித் தேவர்களிடம் அசுரர்கள் அடித்துப் பறிப்பது போல அந்தக் கதைகள் அமைந்திருந்தன. ஆதலால் பெரும்பாலான பொன் நகைகள் வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களிலேயே இன்றும் இருக்கின்றது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறியிருப்பதால் எம்மவர்களில் பலர் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தும் இருக்கின்றார்கள். இப்பொழுது திருட்டுப் பயம் ஓரளவு குறைந்திருக்கின்றது என்றார்கள். அதற்கான காரணத்தை வேறொரு தலைப்பில் பின்னர் எழுதுகின்றேன். திரும்பி வரும் போது புகையிரதத்தில் இரண்டு வரிசைகளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். கொஞ்சம் சத்தம் அதிகமாகவே கதைத்தும், சிரித்தும் கொண்டிருந்தோம். சில வருடங்களின் முன் அங்கு ஆஸ்திரேலிய - இந்திய பிணக்கு இப்படியான ஒரு நிகழ்வாலேயே ஆரம்பமானது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அது பொய்யான தகவலாகவும் இருக்கலாம். திடீரென்று முன்னால் இருந்த உறவினர் யாரோ அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஸ்பிரே அடிக்கின்றார் என்றார். அங்கே பார்த்தேன். ஒரு இளைஞன் குனிந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அந்த உறவினர் மீண்டும் அதையே சொன்னார். வங்கியில் இருந்து எடுத்த பொருட்கள் அவரிடமேயே இருந்தது. 'அய்யோ............ ஷ் ஷ் என்று ஸ்பிரே அடித்து, எங்களை எல்லாம் மயக்கிப் போட்டு, எல்லாவற்றையும் கொள்ளையடிக்கப் போகின்றான்.........' என்று அவர் சத்தமாகவே சொன்னார். இந்தப் பக்கத்தில் இருந்த நானும், என் மனைவியும் அந்த இளைஞனைப் பார்த்தோம். அவர் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே 'நானும் தமிழ் தான்..............' என்றார். கனடா டொரண்டோவில் இருந்து சிட்னிக்கு மருத்துவ படிப்பிற்காக வந்திருக்கும் இளைஞன் அவர். அன்றைய வகுப்புகள் முடிந்து அவரது தங்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவருடைய அலைபேசியையும், மடிக்கணனியையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சில தடவைகள் அந்த இளைஞனிடம் கேட்டுக்கொண்டோம். 'பரவாயில்லை, இலங்கைத் தமிழைக் கேட்பதே நல்ல சந்தோசமாக இருக்கின்றது..........' என்று அப்பாவியாக சிரித்தார் அந்த எதிர்கால மருத்துவர்.1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointஅருமை அண்ணை. விற்கிற அளவுக்கில்லாட்டிலும் அம்மம்மாவுக்கு வேப்பம்பூ ஆய்ந்து குடுத்திருக்கிறன். உங்கள் எழுத்துக்குள்ளால் போகும் போது வேம்பு, மலைவேம்பு எல்லாம் தலைக்கு மேலே நிற்கிறது போன்ற உணர்வு.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீங்கள் சொல்வதுதான் சரி . ........இருவரும் ஒரே வெயிட்டும் கைட்டும் பேஸ்கட்டுமாய் இருப்பதால் கொஞ்சம் அசந்திட்டன் ..........வயசும் போகுதுதானே .........! 😀1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 point2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த நாகரிகத்திலும் அப்படி ஒரு தெய்வம் இருக்கின்றதா என்று யோசிக்க வைத்தது மகளின் அந்தக் கேள்வி. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பன ஐந்து பூதங்கள் எனப்படுபவை. பூமியெங்கும் பல நாகரிகங்களிலும் இவைக்கு தனித்தனியே கடவுள்கள் இருந்தார்கள். அவற்றில் பல கடவுள்கள் அழிந்து போய் விட்டாலும், சில கடவுள்கள் மனிதர்களிடம் இருந்து தப்பி இப்போதும் பூமியில் அழியாமல் இருக்கின்றார்கள். ஆனாலும் தனியே மண்ணுக்கு என்று ஒருவர் எங்கேயும் இருந்ததில்லை என்றே தோன்றியது. 'மண்ணுக்கு என்று ஒரு அப்புச்சாமி இல்லை. ஆனால்...............' சுற்றிவர மண்ணும், மண் குவியல்களும் அன்றி வேறுதுவுமில்லை. மேலே தெளிந்த நீல வானம். குளிர்காலப் பருவத்தை முடித்துக் கொண்ட சூரியன் இதமாக கிழக்கில் இருந்து எரிந்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு இடம் இருப்பதை நான் முன்னர் தெரிந்திருக்கவில்லை. பெரும் மணல் வெளியும், அதன் இடை இடையே நெருக்கமாக சில நூறு அடிகள் உயரம் கொண்ட மண் குன்றுகளும் அந்தப் பிரதேசத்தை மூடி இருந்தன. மண் சரிவுகளில் சறுக்கும், ஓட்டகத்தில் ஏறி ஓடும், மணல் பிரதேச வாகனங்களில் பறக்கும் விளையாட்டுகளும், பொழுதுபோக்குகளுக்குமான இடம் அது. 'ஆனால் பூமாதேவி என்று ஒரு அப்புச்சாமி இருக்கின்றார். அம்மன் போல. அவர் தான் பூமி முழுவதற்கும் கடவுள், பூமிக்கு பொறுப்பு.............' என்றேன். 'நீங்கள் அவரையா இப்போது கும்பிட்டீர்கள்.........' என்று சிரித்தனர் ஒன்றாகச் சேர்ந்து. கொடுக்கப்பட்ட அந்த நீண்ட மட்டையின் மீது இருந்தோ அல்லது நின்றோ சரிவுகளில் சறுக்கிக் கொண்டு கீழே வந்து விடலாம். மட்டையின் மீது இருந்து கொண்டே சறுக்குவது இலகு. மட்டையில் நின்று கொண்டே சரிவுகளில் சறுக்கி வந்தால் முகம் குப்புற விழ வேண்டி வந்தாலும் வரும். எப்படியோ உருண்டு பிரண்டாவது கீழே வந்து விடலாம். ஆனால் மீண்டும் சரிவுகளில் ஏறும் போது மணல் தெய்வத்தின் துணை இருந்தால் நலம். நான் இரண்டு முழங்கால்களையும் குத்திட்டு, மட்டையை மணலில் குத்தி கைகளால் பிடித்துக் கொண்டே, தலையைத் தாழ்த்தி, மூச்சு விடும் போது பார்த்திருக்கின்றார்கள். காவோலை மண்டியிட்டு மூச்சு விட குருத்தோலைகள் கலகலத்தன. சிட்னியில் இறங்கிய அன்றே நெல்சன் குடாவுக்கு போவதற்கு ஆயத்தாகிவிட்டார்கள். என்னை விட்டால் வீட்டுக்கு அருகில் இருக்கும் வியட்நாம் வெதுப்பகத்தில், அது இப்பவும் அங்கே இருந்தால், பாணை வாங்கி சம்பல் அல்லது பழங்கறிகளுடன் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரில் இருக்கும் வாசிகசாலைக்குள் ஓடிப் போய் விடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். முன்னர் சில தடவைகள் அப்படி நடந்தும் இருக்கின்றது. -நெல்சன் குடா சிட்னியிலிருந்து வட கிழக்கு திசையில் ஒரு இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கின்றது. கலிபோர்னியாவில் இருக்கும் கடற்கரை சுற்றுலா நகரங்கள் போன்றே இதுவும் இருக்கின்றது. கோடை காலத்தில் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருவார்கள் என்றனர். அங்கே கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருக்கும் எண்ணற்ற விடுதிகளே அதற்குச் சான்று. அங்கிருக்கும் மணல் மேடுகள் பூமியின் தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று அங்கே எழுதியிருந்தார்கள். அதிகமாகப் போனால் சில நூறு அடிகளே வரும் இவையா தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று ஆச்சரியமாக இருந்தது. வடகோளத்தில் அரபுப் பாலைவனங்களிலோ அல்லது ஆபிரிக்கப் பாலைவனங்களிலோ ஆயிரம் அடிகளில் மண் மேடுகள் இருக்கும் என்றே நினைக்கின்றேன். இந்தியாவில் கூட ராஜஸ்தானில் இருக்கலாம். பூமியின் வடகோளமும், தென்கோளமும் மிகவும் மாறுபட்டவை. தென் கோளத்தில் நீர்ப்பரப்பு மிக அதிகம், நிலப்பரப்பு மிகக் குறைவு. வட கோளத்தில் நிலப்பரப்பு தென் கோள நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகம். அதனாலேயே தென் கோளத்தின் வெப்பநிலை சீராகவும், வடகோளத்தின் வெப்பநிலை பருவகாலங்களுடன் பெருமளவு மாறுபட்டுக் கொண்டும் இருக்கின்றது. திமிங்கிலம் பார்ப்பது, ஓங்கில் (டால்பின்) மீன்கள் பார்ப்பது என்றும் பெரிய படகுகளில் ஆட்களை கடலுக்குள் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். சில தடவைகள் கலிஃபோர்னியா கடலுக்குள் இப்படி போயும் இருக்கின்றோம். இப்படிப் போனதில் ஒரு தடவையாவது ஒரு திமிங்கிலமோ அல்லது ஓங்கில் மீனோ கண்ணில் பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பொழுது நான் வேலை பார்த்த இடம் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது, ஒரு நாள் மதியம் கடற்கரையில் நடக்கும் போது ஓங்கில் மீன்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தன. எப்பவோ குடுத்த காசுகளுக்கு அப்பொழுது எனக்காக வந்திருக்கின்றன போல. நெல்சன் குடாவிலும் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கட்டணங்கள், விலைகளும் அதிகம். அந்தக் கடற்பகுதியில் எத்தனை ஓங்கில்கள் இருக்கின்றன, எத்தனை குட்டிகள் போட்டன என்ற தகவல்களும், இன்னும் மேலதிக கதைகளும் அந்தப் படகுப் பயணத்தில் சொன்னார்கள். ஆனால் எந்த மீனும் மேற்கடலுக்கு வரவேயில்லை. கலிபோர்னியா கடலில் கேட்காத கதைகளா அல்லது கொடுக்காத காசா, சரி இதுவும் போகட்டும் என்று இருந்தோம். திடீரென்று வேறோரு பகுதியில் ஓங்கில் மீன்கள் நடமாடுவதாக அங்கே படகை செலுத்தினார்கள். அங்கே பெரிதும் சிறிதுமாக பல ஓங்கில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. பெரியவை கடுமையான சாம்பல் நிறத்திலும், குட்டிகள் மெல்லிய சாம்பல் நிறத்திலும் இருந்தன. முக்கியமான ஒரு விடயம் சொன்னார்கள். இந்த ஓங்கில் மீன்களின் கூட்டத்தில் பெரிய மீன்களில் ஆண் மீன்களே கிடையாது என்றும், அம்மா - பெரியம்மா - சித்தி - மாமி மீன்கள் மட்டுமே குட்டிகளை வளர்க்கின்றன என்றும் சொன்னார்கள். ஆண்கள் தனியே போய் விடுமாம். ஓங்கில் மீன்கள் புத்திசாலிகள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம் தானே. அங்கிருந்த ஒரு வெளிச்ச வீட்டிற்கு போயிருந்தோம். 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை, அந்த வெளிச்ச வீடு அங்கிருக்கும் ஒரு சிறிய மலையில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அந்த குடாப் பகுதிக்கு இரவுகளில் வரும் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து போயிருக்கின்றனர். தனி ஒருவராக ஒருவர் அந்த வெளிச்ச வீட்டை பல ஆண்டுகள் பராமரித்து இருக்கின்றார். சில மண்ணெண்ணை லாந்தர்களை இரவுகளில் ஏற்றி அந்த வெளிச்ச வீட்டை இயக்கியிருக்கின்றார். அவர் தினமும் லாந்தர்களை ஏற்றினார் என்றே அங்கே எழுதி வைத்திருக்கின்றார்கள். அந்த லாந்தர்கள் சில அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு மனிதர் போல எத்தனை தெய்வங்கள் வந்து போன பூமி இது. (தொடரும்..........................)1 point- ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained
ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained
1 pointADHD (Attention deficit/hyperactivity disorder) என்பது நியூரோ டெவெலப்மென்டைல் கண்டிஷன் (Neuro developmetal condition) ஆகும். அதாவது மூளையோடு தொடர்புடைய பிரச்னை! ADHD வகைகள் 1. இன்அட்டென்டிவ் (inattentive) - இதில் கவனித்தல் பிரச்னைதான் முக்கிய காரணமாக இருக்கும். 2. இம்பல்சிவ் ஹைப்பர் ஆக்டிவ் (impulsive hyperactive) - இதில் அதிகமான இயக்கம், படப்படப்பு மற்றும் அமைதியின்மை அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் யோசிக்காமல் முடிவுகளை உடனுக்குடன் (இம்பல்சிவ் டெசிஷன்ஸ்) எடுப்பார்கள். 3. இரண்டும் கலந்த வகை (combined) - இது கடுமையான பிரச்னை எப்படிக் கண்டறிவது? • கவனம் இல்லாமை • நிலையில்லாத மனது • அதிகப்படியான உடல் இயக்கம் • உடல் சோர்வு மற்றும் படப்படப்பு போன்ற அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்கள் எப்போதுமே அசைவில் இருக்கவே விரும்புவார்கள். இவர்களின் மூளைக்கு அது அவசியமாகப்படும். சில நேரங்களில் உடல் அசைவுகள் இல்லாத போது 'ஃபிட்ஜெட் ஸ்பின்னர்' போன்ற பொம்மைகள் இவர்களுக்கு உதவும். அதைக் கையில் வைத்துச் சுற்றிக்கொண்டே இருக்கும்போது உடல் அசைவினில் இருப்பதாக எண்ணி மூளை அமைதியடையும். எந்த வயதில் இது வெளிப்படும்? பொதுவாகக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே இதன் அடையாளங்களைக் கண்டறிய முடியும். சிலருக்கு 'ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி' இல்லாமல் மற்ற அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இது ADD (Attention deficit disorder) ஆகும். இதை கண்டறிவது சிரமமே! ADHD-ஐ அதீத சுறுசுறுப்பு, படப்படப்பு போன்றவற்றை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ADD இருக்கும் குழந்தைகள் இயல்பாக இருப்பதுபோலத்தான் தெரிவார்கள். அவர்களுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்துவதில் பிரச்னை வரும். 5 முதல் 6 வருடங்களுக்குப் பிறகே இவர்களுக்கு பிரச்னை இருப்பதே தெரியவரும். ADD - ADHD ADHD மற்றும் ADD-ஆல் வரும் பாதிப்புகள்: ~ எந்த விஷயத்தையும் முறையாக நிர்வகிக்க முடியாது ~ மறதி ~ நேர மேலாண்மை இல்லாமை ~ இடத்தைக் குப்பையாக வைத்திருப்பது ~ பொருட்களை அடிக்கடி தொலைப்பது சிறு வயதிலேயே இந்த ADHD வரும்போது குழந்தைகள் ஹைப்பராகச் செயல்படுவார்கள். குதிப்பது, ஓடுவது என ஓர் இடத்தில் உட்காரவே மாட்டார்கள். முக்கியமாக வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கவனிக்கவே முடியாது. அருகில் அமர்ந்திருப்பவர்களைத் தொந்தரவு செய்வார்கள். இதெல்லாம் நாளுக்கு நாள் நடக்கக் கூடிய பாதிப்புகள்! இதைக் கண்டறியாமல் விட்டால் பெரியவர்கள் ஆனபிறகும் தொடரும். ADHD-ஐ சரி செய்ய முடியுமா? இந்த ADHD-ஐ சரி செய்ய முடியாது. ஆனால், அதைச் சமாளித்து அதோடு ஒன்றிணைந்து வாழ முடியும். சீக்கிரமே கண்டறிந்தால் அதிகமாகாமல் தடுக்க முடியும். இதைப் பெரியவர்களாக இருக்கும்போது கண்டறியும் பட்சத்தில் அவர்களின் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் தரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மருத்துவரிடம் ஆலோசித்து, பிரச்னை எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதைச் சமாளிக்கும் வழிகளைக் கற்றுக்கொண்டால் நிம்மதி பிறக்கலாம். இவர்களை வழிநடத்த, தேவையானபோது நினைவூட்ட எனச் சில செயலிகளும் இப்போது உள்ளன. இதனால் அவர்களின் நிர்வகிப்பு திறன் மற்றும் நேர மேலாண்மை மேம்படும். ADHD இருப்பவர்கள் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியமா? சுயமாகவே சமாளிக்க முடியுமா? முதலில் நமக்கு உண்மையாகவே ADHD இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். சில சமயங்களில் சிலர் உண்மையாகவே அதீத ஆற்றல் கொண்ட குழந்தையாகக் கூட இருக்கலாம். இதை மனநல மருத்துவர் அல்லது உளவியலாளர்களால் மட்டுமே கண்டறிய முடியும். இதைக் கண்டறிந்த பின்னரே பாதிப்பின் அளவும் நமக்குத் தெரிய வரும். ஏனென்றால், இந்த ADHD அனைவருக்கும் ஒரே அளவில் இருக்காது. குறைவான, நடுத்தரமான மற்றும் அதிகமான என மூன்று அளவுகளில் இது இருக்கும். அதிகமான அளவு இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவை இருக்கும். இவர்களைப் பெற்றோர்களால் தனியாகச் சமாளிக்க முடியாது. நடுத்தர அளவு பாதிப்புள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அதைச் சமாளிப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும். குறைவான அளவு பாதிப்புள்ளவர்கள் பெற்றோரின் உதவியோடு இதைச் சமாளிக்க முடியும். இதைப் பற்றி நிறையப் புத்தகங்களும் உள்ளன. அவற்றை வாசித்து பிரச்னை குறித்துத் தெரிந்துகொண்டால், இந்த குறைவான அளவு ADHD பாதிப்பை நீங்களே சமாளிக்கலாம். ஆனால் பாதிப்பு அளவைக் கண்டறிய மருத்துவரின் உதவி அவசியமானது. இவர்களால் தினசரியாக ஒரு வழக்கத்தை (Routine) பின்பற்ற முடியுமா? இவர்களுக்குச் சொந்தமாக ஒரு வழக்கத்தை உருவாக்கி அதைப் பின்பற்றுவது கடினமாகவே இருக்கும். வெளியிலிருந்து ஒரு நபர் உதவி, இவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதேபோல் அது கடினமான வழக்கமாக இல்லாமல் எளிமையாக, பின்பற்றக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அதிகப்படியான திட்டமிடல் தேவைப்படும். எளிமையான வழக்கம், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஒருவரின் உதவி என இந்த மூன்று விஷயங்களும் இருந்தால் இந்தப் பிரச்னையை சமாளிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடும். மனநல மருத்துவர் மற்றும் விளையாட்டு சிகிச்சை நிபுணர் மீனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள் எவ்வாறு உதவலாம்? நண்பர்கள் முதலில் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது, எதனால் வருகிறது, எப்படியெல்லாம் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து, புரிந்துகொண்டால் இவர்கள் கொஞ்சம் ஆதரவாகவும் ஆறுதலாகவும் உணருவார்கள். மேலும் இவர்கள் மறக்கும் விஷயத்தைக் கடுமையான முறையில் வெளிப்படுத்தாமல் மெதுவாக நினைவுபடுத்த வேண்டும். சின்னசின்ன விஷயங்களில் நண்பர்களும் சுற்றியிருக்கும் உறவினர்களும் ஆதரவாக இருக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்." விரிவாக எடுத்துரைத்த மருத்துவர் மீனா, நம்முடன் அவருடைய தனிப்பட்ட கதையையும் பகிர்ந்துகொள்கிறார். "என்னுடைய மகனுக்கும் இந்த ADHD உள்ளது. அதனால்தான் நான் இந்த துறைக்கே வந்தேன். என் மகனுக்கு உட்கார்ந்து ஒரு பாடம் படிப்பது என்பதே கடினமாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டு, அவன் ஓடி ஆடி விளையாடும் போது அந்த பாடத்தை அவனுக்கு வாசித்துக் காட்டி அவனைப் படிக்க வைத்தேன். அப்படி படித்துத்தான் அவன் ஸ்கூல் டாப்பர ஆனான். அவனுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதற்கும் ஊக்கப்படுத்தினோம். உடல் இயக்கம் இவர்களுக்கு ரொம்ப முக்கியம். என் பையன் ஒரு மாரத்தான் ஓடும் அளவுக்குச் சிறந்து விளங்குகிறான். கல்லூரியில் கூட உடற்பயிற்சி உடலியல்தான் படிக்கிறான். அவன் இப்போது இந்த ADHD-ஐ பிரச்னையாக பார்க்கவில்லை. அதை தன் பலமாகக் கருதுகிறான்!" என்றார் பெருமையாக! ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained | A complete guide on ADHD and how to control it - Vikatan1 point- வணக்கம்
1 pointஎன்னை வரவேற்றதற்கு மீண்டும் நன்றிகள். நான் ஈழத்தில் பிறந்து வளர்ந்தவன். பிறகு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து, அதன் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினேன். நான் yarl.com வாசிப்பதற்க்கு காரணம், yarl.com ஊடக பல ஆக்கங்கள், தகவல்கள் மற்றும் செய்திகளை கிடைக்க பெறுகிறது. பலர் சிறந்த ஆக்கங்கள் எழுதுகின்றனர், மேலும் பல்வேறு மாறுபடட கருத்துக்களையும் எழுதுகிறார்கள். பலவற்றை நான் விரும்பாமல் போகலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பொதுவாக yarl.com சிறந்த ஒரு ஊடகம் என்றே சொல்லுவேன். முன்பாக, நான் சேராமல் இருந்ததற்குக் காரணம், நான் விவாதிப்பதில் அடிமையாகிவிடுவேனோ என்ற பயம். ஆனால் இப்போது சேருவதற்கு கரணம் பலர் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டு எழுதுகிறார்கள் / பங்களிக்கிறார்கள். எனவே, நான் குறைந்தபட்சம் அவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்றகாக. மேலும், எனக்கு சில துறை சார்ந்த அறிவும் அனுபவமும் உள்ளதாக்க நம்புகிறேன் ஆகவே நானும் பங்களிக்க முடியும்.1 point- நடனங்கள்.
1 point- நடனங்கள்.
1 pointஎச்சரிக்கை. 18+ 👈 பால்குடிகள் ,குஞ்சுகுருமன்கள் மற்றும் கண்ணியமானர்களுக்கு உகந்த நடனமல்ல. சதிராட்டம் என்பது இது தானோ? https://www.youtube.com/watch?v=vy3BRUrNj9s1 point - பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.