Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3049
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19112
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/29/25 in all areas

  1. கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அன்று வந்த கடவுள் ஓடித் தப்பி மறைந்து விடுகின்றார் மிச்சமான கடவுள்கள் தங்களுக்கு மிகவும் வேண்டாத ஒரு கடவுளே கொன்று குவித்தது என்கின்றார்கள் கடவுள்களின் போதகர்களும் தங்களின் கடவுள்களின் சொற்களையே போதிக்கின்றார்கள் இது தான் தருணம் என்று ஆநிரைகளின் இடம் வரும் சில கடவுள்களிடம் 'அவங்கள சும்மா விடாதீங்க................' என்று கதறுகின்றன எரியாமல் நசியாமல் மூச்சுடன் இன்று உயிர் தப்பிய ஆநிரைகள் அடுத்த கடவுள் வருகையிலும் இன்று தப்பிய ஆநிரைகள் சில இறக்கப் போகின்றன சும்மா விடப் போவதில்லை இந்தக் கடவுள்கள்.
  2. ஆரோக்கியமான விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும், ஆக்கங்களும் இடம்பெறும் ஒரு தளத்தில், அவசரப்பட்டு, பெரும்பாலும் ஒரு பிரச்சார நோக்கில், பொய்ச் செய்திகளை இணைப்பது நியாயம் இல்லை அல்லவா......... நீண்ட நாட்களாக களத்தில் பிதாமகர்கள் போன்று இருப்பவர்களே இப்படிச் செய்யலாமா.............. ஆதவன், தமிழ்வின் போன்ற பொய்யும், புனைவுகளும் நிறைந்த ஊடகங்கள் போன்றே இந்தக் களமும் போய் விடும் அல்லவா..............
  3. இணையவன்…. அந்தச் செய்தியை நான் பார்த்த போது, எனது பார்வையில் உண்மை போலிருந்ததால் இணைத்தேன். அதற்குக் கீழ் அந்தச் செய்தியை இணைத்தவரின் பெயரையும் போட்டே இருந்தேன். நிச்சயமாக அது பொய்ச் செய்தி என்று தெரிந்து கொண்டு நான் இணைக்கவில்லை. இப்போது அது பொய்ச் செய்தி என்று தெரிந்த படியால்…. அதனை நீக்கி விடுங்கள். இந்த சோகமான திரியில்… தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்போம். நன்றி.
  4. கடவுள் பற்றிய அருமையான புரிந்துணர்வு. இன்றைய தொலைத் தொடர்புப் பரிமாற்ற வசதி இல்லையென்றால் இன்றைய ஹீரோக்களும் நாளைய உண்மையான கடவுள்களே. விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டாடப்படுவார்கள்.
  5. கருத்து சொல்பவனின் Credibility ஐ மட்டுமே அலசுகிறேன். Doubt இருந்தால் அண்ணன் கிட்டதானே இந்த தம்பி கேட்க முடியும். அண்ணை Very Sorry கருத்து சொல்பவன் என்ற ஒருமை உங்களை நோக்கியதல்ல அது மன்சூரை நோக்கியது. எப்போதும் உங்கள் மீதும் ஐஸ்டீன் அண்ணை மீதும் எனக்கு தனி மதிப்பு மரியாதை உண்டு.
  6. விஜைக்கு எதிராக வீரமணி, சுபவீ போராட்டம் என்ற நாதகவின் தம்பிகள் பரப்பிய செய்தி, வழமை போலவே கஞ்சா, கப்ஸா கதை என்பது நிரூபணமாகியுள்ளது. ஆளுனருக்கு எதிரான போராட்டத்தை மாற்றி அடித்துள்ளார்கள். பார்க்கவே பொய் என தெரியும் செய்தியை இணைத்தமைக்கு சிறி அண்ணா எந்த மன்னிப்பும் கேட்க மாட்டார் என்பதை நான் உத்தரவாதப்படுத்துகிறேன்😂. தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கி.வீரமணி தலைமையில் நடந்தது.பிகு இணைப்புக்கு நன்றி
  7. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற எழுத்தினை அடையாளமாகவும்கொண்டுள்ளது. நாமும் பயன்படுத்துவோமே! இச் செயலி வெற்றி பெற்றால் , அது ஒரு வகையில் தமிழின் வெற்றியாகவும் அமையும்.
  8. ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம். ஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு வெறும் 8% மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள பெரும்பான்மையான கொள்முதல்கள் ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி எடுத்துள்ள இந்த “யூரோப் ஃபர்ஸ்ட்” கொள்கை, ஐரோப்பிய பாதுகாப்பு தொழில் துறையை வலுப்படுத்துவதோடு, உக்ரைன்–ரஷ்யா போரை அடுத்து ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பு உற்பத்தியில் சுயாதீனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448927
  9. வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்
  10. பையா நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது மிகமிக மகிழ்ச்சி.
  11. வருத்தத்திற்குரிய நிகழ்வு. ஆநிரை நல்ல உவமானம் @ரசோதரன் அண்ணை, அதை வைத்து நனவிடை தோயும் போது, ஆடு - கறுப்பாடு மேய்ப்பன் - ஏய்ப்பன் மீட்பன் - அழிப்பன் கடவுள் - சாத்தான் எல்லாமே ஒன்று போல் தான் தெரிகிறது, பார்வையின் கோணம் மாறும் போது.
  12. நிறைய எழுதினேன் அக்னி. ஆனால் அழித்து விட்டேன். எழுதிகொண்டிருக்கும் போதே ஏதோ 2015 வாக்கில் கருத்தை விட்டு, கழுத்தை பிடிக்கும் வகையில் உரையாடல் நகர்வதாக தோன்றியது. ஆகவே அழித்து விட்டேன். யாழ் களமும், நீங்களும் நானும் கூட மாறிவிடோம். Dare I say வளர்ந்து விட்டோம். இணைந்திருங்கள் உருப்படியான கருத்துக்கள் எழும்பட்சத்தில் பரிமாறி கொள்வோம்.
  13. தந்தையுடன் செல்லம் விளையாடும் வயதை தொலைத்த ஒரு மகளின் ரணவலி… பதினாறு ஆண்டுகள் அருகில் இல்லாத அப்பாக்கு தவித்த குரல்… தமிழ் தேசியத்தின் பெயரால் நாலு குறுப்,நாலுபேர் வாழ்வுக்கு சிறைவாசம் இருக்கும் கைதியின் பிள்ளையின் கோவம்… தமிழர்கள் விழா என தென்னிந்திய கூத்தாடிகளை கூப்பிட செலவு செய்யும் பணத்தில் ஒருவீதம் இவர்களுக்கும் செலவு செய்யலாம்… எவரிடமும் பதில் இல்லாத கேள்விகள் 👌 https://www.facebook.com/share/v/1A1pbW9429/?mibextid=wwXIfr சிறுமியின் சிற்றுரையை சிறிதுநேரம் செவிமடுத்து கேழுங்கள்.
  14. தமிழ்நாட்டு சினிமா நடிகர்களின் மீதும், அரசியல் தலைவர்களின் மீதும், சாமியார்களின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களுக்கு இலங்கைத் தமிழர்களும் ஒரு காரணம் தானே, அக்னி. இன்றைய இணைந்த இணைய உலகில் எல்லாமுமே சேர்ந்து தானே தங்களை கடவுள்கள் என்று சிலரை நினைக்கவைக்கின்றது. தன் தலைவன்/நடிகன், தன் குரு போன்றோர் எதற்கும் அப்பாற்பட்டவர் என்று நினைக்கும் ஈழத் தமிழர்களும் இருக்கின்றார்கள் தானே. முதல் நாள் முதல் காட்சிக்கு போகும் ஈழத் தமிழர்களும் இருக்கின்றார்கள். ஈழத் தமிழர்கள் தீக்குளிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ஆனால் இந்த தனிநபர் மீதான மோகங்கள் பரவ நாங்களும், நாங்கள் காவிச் செல்லும் செய்திகளும் உடைந்தை ஆகின்றன அல்லவா.
  15. இந்த தருணத்திலாவது சொல்ல வேண்டும் போல இருந்தது, கோஷான், அதனாலேயே சொன்னேன். எப்போதும் எல்லாமுமே அரசியல் என்றவுடன் வேதனையும், கோபமும் தான் வருகின்றது........... ஒரு நல்ல தலைவன் கூட இல்லாத இனமாகிப் போய் விட்டோமே............ நீங்கள் சொல்வது சரியே, ஜஸ்டின். சில ஊடகங்களை தவிர்ப்பது போலவே, வேறு சில ஊடகங்களின் பிரச்சாரப் போக்கில் நம்பிக்கை இழந்தது போலவே, நீங்கள் சொல்வதும் நடக்கும். ஆனாலும் பொய்ச் செய்திகள் பரவும் வேகம் மிக அதிகம். பொய்ச் செய்திகள் மிகவும் திட்டமிட்டே உருவாக்கப்படுபவை, அதி தீவிர உணர்வுகளை தூண்டுவதே அந்தச் செய்திகளின் நோக்கம். அதன் விளைவுகள் தற்கொலைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
  16. புலவர், 7 மணி நேரத்துக்கு முன்னரே நீங்கள் இணைத்த பதிவில் இது பொய்யான தகவல் என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழ்சிறி, சோசான் குறிப்பிட்டதுபோல் இதனைப் பார்த்தவுடனேயே சோடிக்கப்பட்ட படம் என்று புரியுமே. பொய்யான தகவைகளைப் பரப்பாதீர்கள்.
  17. சங்கு கல் மண்டபம் ......மக்களை எச்சரிக்கும் மண்டபம் . ......! 🤡 Tamil Creativity 🟰 Tamil Comedy Memes & video’ s 🤡 · Cini Mini ·otrSposdnel671u6aa3h34m45hh8ta5l40269tfm73103 011tltii40culh · வெள்ளக்காரன் வந்து தான் அறிவியலை கற்று கொடுத்தான்ணு சொல்லும் தற்குறிகளின் கவனத்திற்கு ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்காக தமிழன் கட்டிவைத்தான் என நினைக்கத் தோன்றும்.. ஆனால்... நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம். இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..? தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்.... இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர். வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும். சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.. பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது.. இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்காக தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் உண்மையில் இது அறிவியலுக்காக..பயனுள்ள தகவல்கள் ✍️"
  18. “உசிரு போற நேரத்திலும் ஊத்த மாட்டான் பாலை, நீ காலை நீட்டி படுத்துகிட்டா எவ்ளோ பெரிய மாலை”… எஸ்பிபி பாடிய பாடல். அந்த எஸ்பிபிக்கே இருக்கும் போது வழக்கு போட்ட இசைஞானி செத்த பின் அண்ணாமலையில் தீபம் ஏற்றவில்லையா. விஜயகாந்த், உடல் நலம் குன்றிய பின்னும், எப்போதும் போதையில் இருக்கும் தெலுங்கன் அவருக்கெலாம் தமிழகத்தை ஆள ஆசை வருவது காலக்கொடுமை என மேடையில் அவமானப்படுத்திவிட்டு, செத்தவுடன் “வானத்தை போல மனம் படைத்த மன்னவனே” என பாடி கூலிக்கு மாரடித்தாரே இன்னொருவர். இதுதான் இவர்களின் இரெட்டை முகம். இவர்களையும் நல்லவர்கள் என நம்பி அலையும் ஒரு கூட்டம்.
  19. காலை முகூர்த்தத்திற்கு இரவு 8 மணிக்கு போய் தாலி கட்டு என்று சொல்லும் அரைப்போதை அணில்கள் என்று தமிழர்களை விழித்து எழுதியிருப்பதை கண்மையாக வண்டிக்கிறேன்.
  20. அண்மையில் துப்பரவு தொழிலாளர்கள் கொஞ்ச சம்பளம் கூடக் கேட்டுப் போராடினார்களே என்னாச்சு? உயிரோடு இருக்கும் போது ஒத்தை ரூபா கொடுப்பதானாலும் கணக்கு பார்க்கிறார்கள். சாராயத்தைக் குடித்தோ இப்படி ஏதாவது வழியில் இறப்பவர்களுக்கு லட்சக் கணக்கில் வாரி இறைக்கிறார்கள். இனிமேல் கூட்டங்களுக்கு போகும்போது வீட்டார் ஆள் திரும்ப வருதா? அல்லது பணம் வருதா என்று ஏங்கப் போகிறார்கள்.
  21. நிச்சயமாக நான் மேலே எழுதியதை வாசிக்கவில்லையா? விஜை ஒரு நெஞ்சுரம் இல்லாத கோழை - முதல்வராக ஆசைப்பட்ச்க்கூடாது என எழுதியுள்ளேன். நீங்கள் அதையே சென்னைபாசையில் எழுதி உள்ளீர்கள். ஆனால் நீங்கள் ஓக்கே, நான் டிபெண்டர் ஓடும் அணில்?😂 சீமான் கூட இதை விபத்து என்றே சொல்லி உள்ளார். விஜை மீது நேரடியாக கொலை பழி போடுவது, கேவலமான பிண அரசியல். கருணா ஆதரவாளர்களுக்கு இது கைவந்த கலைதான். இது போன கிழமை எடுத்த வீடியோ என நினைக்கிறேன்.
  22. இந்த பேனரும், இந்த செய்தியும் நாம் தமிழர் தம்பிகள் வீட்டில் தயாரித்த கப்ஸா என நினைக்கிறேன். திக வோ, வீரமணியோ, சுபவீ யோ இப்படி அறிக்கை விட்டதாகவோ, அல்லது பேனருடன் போராட்டம் நடத்தியதாகவோ நான் வாசிக்கவில்லை.
  23. வேண்டுமென்றே ட்ரான் ஷாட்டில் மக்கள் கூட்டத்தை திரளாக படம் பிடித்து மாஸ்காட்ட ஆசைப்பட்டு அணில் குஞ்சுகளை கொலை செய்திருக்கிறது T VK கொலைக்கும்பல்
  24. 42வது கேள்வியும் கூட. ஆராவது 100 அடிப்பினமா என்பது கூட, வேடிக்கையாக இருந்தது. உங்கள் வருத்தம் புரிகிறது. நாமதான் இன்னும் கொஞ்சம் மேலே பார்க்கவேண்டும். பெண்கள் இப்போ எங்கேயே போய்விட்டார்கள். சமீபத்தில் நடந்த உலக தடகளப் போட்டிகள் பார்த்தீர்களோ தெரியாது. எல்லா ஓட்டப் போட்டிகளும் நெருப்பா இருந்தது. மிகவும் இரசித்தேன்.
  25. இது கதையா பயண அனுபவமா. தலைப்பிலேயே கதை என்று இருப்பதால், கதை என்றே எடுத்துக் கொள்ளவேணுமோ. இப்படி பல விடயங்களை கோர்த்து எழுதும் போது வாசிப்பில் ஒரு உற்சாகம். அடுத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்று. சும்மா அங்கே போனேன் இங்கே போனேன் என்று சொல்லாமல், தங்கள் பழைய அனுபவங்களையும் கோர்த்து எழுதவது மிக நன்றாகவே இருந்தது. அந்த வாசிகசாலைக்குப் போகவேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது. எப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன். விமானத்தில் படம் பார்க்காமல் எப்பிடி. எப்படி பயணம் செய்கிறீர்கள். இப்படி எழுதுபவர்களின் மனநிலயே வேறை போல. அதுதான் அவர்களால் எழுத முடிகிறது. நாம இரசிக்க மட்டும்தான் போல. நான் எப்போதும் யோசிப்பதுண்டு. எப்படி இவர்களின் கண்களில் மட்டும் இப்பிடியான விடயங்கள் விழுகிறது. இப்பிடியான அனுபவங்கள் எப்படி அவர்களுக்கு மட்டும் வாய்க்கிறது. நாமும்தான் பயணம் போறம்.
  26. அக்ரோபர் மாதத்தில் உலகின் முதல் சிறந்த சுற்றுலா தளத்து நாடாக இலங்கை இடம் பிடித்துள்ளது என ஒரு செய்தி வாசித்தேன். கேபிள் கார் விபத்து இந்த தரப்படுத்தலுக்கு பின்னடைவான செய்தியாக அமையப்போகின்றது. அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும்போது மேலும் மேலதிக விபத்துக்கள் இடம்பெறும் முன்னரே உறுதி அற்ற/ஸ்திரம் அற்ற கேளிக்கை உபகரணங்கள்/இயந்திரங்களை பாவனையில் இல்லாமல் நீக்கிவிட வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும்.
  27. உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களின் கருத்தை தூக்கிப் பிடித்து சீர்தூக்கி பார்த்தால் எதுவுமே தேறாது. அரசியலில் தேறாத ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்கியதின் பலன் தான் கருவூர் அவலங்கள். இது உலக அரசியலில் வரலாற்று சாதனை.இந்திய அரசியல் என்றாலே உலகில் ஒரு ஏளன பார்வை உண்டு. இது இன்னும் வலு சேர்க்கும். அரசியல் முதலைகள் நிறைந்த குளம் என சீமான் கருத்து சொல்லியுள்ளார்.அதில் அவர் பல இடங்களில் இணக்கமான அரசியல் மேடை பேச்சுக்களை பேசியுள்ளார்.பேசுபவர். அதை சீமான் விமர்சகர்கள் அங்கே விலைபோய்விட்டார்.இங்கே விலை போய் விட்டார்.குறுக்காலை விலை போய் விட்டார்.பெட்டி வாங்கி விட்டார். ஏ டீம்.பீடீம் எக்ஸ் வை டீம்/டீல் என்பார்கள்.😂
  28. மனிசருக்கு எதிரியே நாக்கு தான்.மூளை வேண்டாம் வேண்டாம் எண்டு எச்சரிச்சாலும் நாக்கு சொல்வழி கேக்காது.😂 இஞ்சை பார் சிறித்தம்பி நெத்தலி பிரட்டலுக்காக பிளைட் எடுத்து சிலோனுக்கு போகோணும் போல கிடக்காம்.😄 சைவ பழத்துக்கு(சுவியர்) நெத்தலி பொரியல்-லெமென் றைஸ் காம்பினேஷன் என்னெண்டு தெரியும்? ஒரு வேளை கேள்வி ஞானமாய் இருக்குமோ? 😂
  29. குரங்கிலிருந்து மனிதன் உருவாகி நாகரீகம் அடைந்தான் என சொல்கிறார்கள். எனக்கு என்னமோ மனிதன் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்து விண்வெளியை தொடும் அளவிற்கு முன்னேறினாலும் குரங்கின் குணமும் செயல்களும் மாறவேயில்லை என தோன்றுகின்றது. ஏனென்றால் படித்தவர்கள் தான்,படிப்பில் முன்னேறியவர்கள் தான் ,மூளைசாலிகள் தான் போர் எனும் மனித குலத்தை அழிக்கும் செயல்களுக்காக ஆயுதங்களை கண்டு பிடிக்கின்றார்கள்.அரசியல் காரணங்களுக்காக சக மனிதர்களை அழிக்கின்றார்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களை பஞ்சத்தில் அழிய விடுகின்றார்கள். பாமரன் அன்னியவனை பலியெடுக்கவும் மாட்டான். பலியெடுக்கவும் மாட்டான்.
  30. புரிகிறது. விஜையை யானைவிளாம்பழம் கொண்டது போல, கோது இருக்க சுளை தின்ன விளைகிறார். தம்பிகள் இதுதாண்டா அண்ணன் என பயர் விடுவதன் காரணமும் இதுவே. இதை நான் எழுதலாம் என நினைத்தேன். ஆனால் சீமானின் மீது வக்ரத்தை கக்குகிறார் என்பார்கள் என்பதால் தவிர்த்தேன். சீமான் சின்ன கருணாநிதி என முன்பே எழுதியுள்ளேன் - அவர் நரி என்பதில் எனக்கு எள்ளளவும் எப்போதும் சந்தேகமில்லை. ஆனால் தலைவரை போல் தன் புத்தியை இனத்தின் பொது நலனுக்கு பாவிக்கும் நல்ல புலி இல்லை. அதை தன் கல்லாவை நிரப்ப, முடிந்தால் பதவியை அடைய என சுயநலனுக்கு மட்டுமே பாவிக்கும், கருணாநிதி போன்ற குள்ள நரி - சீமான்.
  31. இதனாலதானே எமது தேசியத் தலைவர் தமிழீழப் பொலிசுக்கான உடுப்பையே மாற்றினார்.
  32. அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி! September 28, 2025 12:09 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா… *தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்… *கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி வழங்கியுள்ளார். அ.நிக்ஸன்- — — — ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை என்று தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வரும் பின்னணில், ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பை காப்பாற்றும் முயற்சியிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. அத்துடன், 1920 இல் ஆரம்பித்த சிங்கள – தமிழ் முரண்பாடுகள், முப்பது வருட அஹிம்சைப் போராட்டத்தின் மூலமும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் தீர்க்க முடியாமல் போன சந்தர்ப்பங்களில், 2009 இற்குப் பின்னரான கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் என தமிழர்கள் கோருகின்றனர். இப் பின்புலத்தில், மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் பக்கம் நிற்பதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ரசிய – உக்ரெய்ன் போர், இஸ்ரேல் – காசா போர் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வரிகள் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு மத்தியில் உலக அரசியல் சமநிலை தற்போது குழப்பமடைந்துள்ளது. இதன் காரண – காரயமாக சிறிய நாடு ஒன்றைக் கூட தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தியை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் வகுத்துள்ளன. டொனால்ட் ட்ரம்ப்பும் அந்த நிலைப்பாட்டில் தான் இயங்குகிறார். இங்கே, வல்லரசுகளின் இப் போட்டித் தன்மைகளை சிங்கள அரசியல் தலைவர்கள் நன்கு புரிந்து கையாளுகின்றனர். பாலஸ்தீனம் தனிநாடு அதாவது இரு அரசுத் தீர்வு முறைக்கு எப்போதோ அங்கீகாரம் பெற்றுவிட்டது. ஆனாலும், அமெரிக்க அழுத்தங்கள் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் பாலஸ்தீன விவகாரம் முடிவின்றி நீடிக்கிறது என்பதே உண்மை. அதேநேரம் பாலஸ்தீன விவகாரத்துக்கு இரு அரசுத் தீர்வு என ஏற்கனவே கூறிய சர்வதேச நாடுகள் கூட மனதளவில் அதனை முழுமையாக விரும்பவில்லை என்பது மற்றொரு உண்மை. இந்த ஊடாட்டங்களுக்கு மத்தியில் சர்வதேச அரசியல் நலன்கள் என்ற தன்மையை ஆழமாக அறிந்து குறிப்பாக சமகால புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழலுக்கு ஏற்ப, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநாவில் கூறியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவும் அவ்வாறு கூறியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என கூறப்பட்ட மைத்திரி – ரணில் ஆட்சியிலும் பாலஸ்தீனம் பற்றி அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அது இலங்கை அரசின் பாலஸ்தீனம் பற்றிய உண்மையான அரசியல் பார்வையல்ல. இருந்தாலும், பாலஸ்தீனம் தனி நாடு ஆக வேண்டும் என கூறுவது ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பின் ஒரு உத்தி. அதாவது, ஈழத் தமிழர் விவகாரத்தில் அமெரிக்க – இந்திய அரசுகளை தொடர்ந்து தம் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கையாளப்படும் அரசியல் அணுகுமுறை அது. குறிப்பாக, அமரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் அயல் நாடான இந்தியாவும் இஸ்ரேல் ஆதரவு நிலையில் செயற்படும் பின்னணியில், சிறிய நாடான இலங்கைத்தீவின் ஜனாதிபதி ஒருவர் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பேசியிருப்பது அரசியல் ரீதியான தேவைகளின் அடிப்படை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலக அரசியல் ஒழுங்குகள் குழப்பமடைந்து வரும் ஒவ்வொரு சூழலிலும் இலங்கை ஜனாதிபதிகள் அவ்வாறான இராஜதந்திர பேச்சை முன்னெடுப்பது வழமை. இதற்கு அநுரகுமார திஸாநாயக்கவும் விதிவிலக்கல்ல. அதற்கான பிரதான காரண – காரியம் என்பது, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்து உள்ளக விசாரணை பொறிமுறையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கமாகும். அதற்கு மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் இந்தியா மிகவும் தேவையான ஒரு நாடு. ஆகவே, சர்வதேச அளவில் அந்த நாடுகள் தற்போது கொண்டுள்ள பாலஸ்தீனம் தொடர்பான தற்போதைய அரசியல் கொள்கைக்கு மாறான கருத்து ஒன்றை உலக அரங்கில் பகிரங்கப்படுத்தினால், உடனடியாக அந்த நாடுகள் இலங்கையை நோக்கி அவதானம் செலுத்தும் என்ற நம்பிக்கை சிங்கள அரசியல் தலைவர்களிடம் உண்டு. இந்த அவதானம் என்பது, இலங்கை ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என விரும்பும் சிங்கள அரசியல் தலைவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இந்தியா ஊடாக காய் நகர்த்த முற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்கும். கடந்த காலங்களிலும் சிங்கள அரசியல் தலைவர்கள் இவ்வாறான அரசியல் காய் நகர்த்தல்களை கன கச்சிதமாகச் செய்திருக்கின்றனர். இதனை மேலும் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதானால், 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பெரும் வெற்றிக் கோசத்துடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காலம் முதல், இன்றைய அநுரகுமார திஸாநாயக்க வரையும் நீட்சியடையும் பிரதான அரசியல் உத்தி இது. ஏனெனில், தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்பதில் இந்திய மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை. சீனாவை மையப்படுத்திய இந்தோ – பசுபிக் விவகாரத்தில், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவுடன் பனிப் போர் நிலவினாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் அந்த நாடுகள் இந்தியாவை கடந்து எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாது என்பதற்கு கடந்த கால செயற்பாடுகள் உதாரணமாகும். இவற்றையெல்லாம் அறிந்தே சிங்கள அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றனர். கட்சி அரிசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மகிந்த சமரசிங்க, அமரர் மங்கள சமரவீர, ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் பீரிஸ், மிலிந்த மொறகொட போன்றவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் என்பதற்கும் அப்பால், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் மிக நுட்பமாக கையாளும் சிறந்த இராஜதந்திரிகளாவர். இந்தியாவைக் கையாள மிலிந்த மொறகொட வகுத்துள்ள அரசியல் உத்திகளையே அநுரகுமார திஸாநாயக்க தற்போது நன்கு பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படை. இதனை மையமாகக் கொண்டே அநுரகுமார திஸாநாயக்கா பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை துணிந்து ஐநாவில் கூறியிருக்கிறார். இது மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்குப் புரியாத புதிர் அல்ல. ஆனாலும், இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இலங்கைத்தீவு முக்கிய ஒரு தளமாக இருப்பதை கருத்தில் கொண்டு சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சி கட்டமைப்பை நியாயப்படுத்தும் அரசியல் செயன்முறைகளுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ஏற்பாடுகளை செய்வார்கள் என்பதே உண்மை. உதாரணமாக, வடக்கு கிழக்கில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரி ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறிக்கு இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. கொழும்பில் உள்ள அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இந்த மாதம் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட பாடநெறியின் நிறைவு விழா இந்த மாதம் 19 இடம்பெற்றிருக்கிறது. இன அழிப்பு அல்லது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடுகளின் இராணுவத்தினர் ஐநாவின் இப்படியான பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படுவதில்லை. ஆனால், இலங்கை இராணுவம் 2009 இற்குப் பின்னரான சூழலில் பல சந்தர்ப்பங்களில் இப் பாட நெறிகள் மற்றும் சர்வதேச கூட்டு பயிற்சிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் இலங்கை இராணுவம் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றன. ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயணத் தடைக் கூட விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட பயணத் தடை விதித்திருக்கின்றன. ஆகவே, மிலிந்த மொறகொட, பேராசிரியர் ரொஹான் குணவர்த்த போன்றவர்கள் சர்வதேச அளவில் இலங்கை இராணுவம் தொடர்பாக மேற்கொள்ளும் தொடர் பிரச்சாரங்களில் ஐநா நம்பிக்கை கொண்டுள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாகின்றனர் என பிரகடனப்படுத்தியுள்ள கனடா அரசின் டிரேசி மார்டினோ என்ற இராணுவ நிபுணர் பயிற்சிக் குழுவுக்கு தலைமை தாங்கியமை அதனை கோடிட்டுக் காண்பிக்கிறது. இப் பாடநெறியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், பங்களாதேஷ், ஃபிஜீ, இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 09 வெளிநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அர்ஜென்டீனாவைச் சேர்ந்த திரு. விக்டர் மானுவல் நுனேஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல் நரேஷ் சுப்பா ஆகியோர் பிற பாட நிபுணர்களாகப் பணியாற்றினர். ஆகவே, அநுர அரசாங்கத்தை முன்னேற்றி, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதே மேற்கு – ஐரொப்பிய நாடுகளின் நோக்கமாக உள்ளன. ஐநா இலங்கையின் நலன்களுக்கு ஏற்ப ஒத்துழைப்பு வழங்கும் என, ஐநாவின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ், அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவான சில நாட்களில் சந்தித்தபோது கூறியதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன், அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையை ஐநா எப்போதும் கையாளும். ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட இனமாக ஒருமித்த குரலில் தமது அரசியல் உரிமை பற்றிய செயற்பாடுகளை உரிய முறையில் செயற்படுத்த தவறினால், ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள் அந்த இனத்தை ஒடுக்கும் அரசுகளுடன் கைகோரக்கும் ஆபத்து உருவாகும். ஆகவே 2009 இற்குப் பின்னரான தமிழர்களின் செயற்பாடுகளில் ஒருமித்த செயற்பாடுகள் அற்ற தன்மை மேலோங்கி வருவதால், ஐநா போன்ற அமைப்புகளும் சர்வதேச நாடுகளும், இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த மக்கள் என்ற அடிப்படையில் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்புடன் மாத்திரம் உறவை பேணி அபிவிருத்தி அரசியலை புகுத்துகின்றன. இதனை அநுரகுமார அல்ல, வேறு எந்த ஒரு சிங்கள தலைவரும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். https://oruvan.com/anuras-un-speech-and-international-background/
  33. வழமையான போட்டியாளர்கள் விரைவாக பங்கு பற்றுங்கோ, பஸ் வெளிக்கிடப்போகிறது. @வாதவூரான், @கறுப்பி, @Eppothum Thamizhan, @தமிழ் சிறி, @வீரப் பையன்26, @நிலாமதி, @புலவர், @nilmini, @சுவைப்பிரியன், @Ahasthiyan, @நந்தன், @goshan_che, @நீர்வேலியான், @ரசோதரன், @குமாரசாமி, @ஈழப்பிரியன், @முதல்வன், @பிரபா, @nunavilan @kalyani அண்ணாக்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கச்சிகள் எல்லோரும் ஓடி வாங்கோ.
  34. கொரொனா வந்து 2021 இல் மீண்டும் நாடுகள் மீண்ட போது பல பிரச்சினைகள்: அமெரிக்காவில் சும்மா நிவாரணமாகக் கிடைத்த காசினால் பணவீக்கம், பாரவூர்தி -HGV ஓட்டுனர்கள் இல்லாமையால் பிரிட்டனில் வினியோகச் சங்கிலிப் பாதிப்பும், விலையுயர்வும், அதே போல ஜேர்மனியிலும் விளைவு இருந்தது. ரஷ்யாவின் விலைகுறைந்த எண்ணையும், எரிவாயுவும் உள்ளூரில் விலைகளைக் குறைவாக வைத்திருக்க உதவின. ஆனால், அது தான் ஜேர்மனியின் நீண்ட கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்தது என்பது ஜேர்மனியில் வசித்தாலும் அதன் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் வாழும் சிலரின் தவறான கணிப்பு. வெளிநாடுகளுக்கு விற்கவென்றே பொருட்களைச் செய்து ஏற்றுமதி செய்த ஜேர்மனி, தற்போது அந்தப் பொருளாதார மொடல் சந்தைப் போட்டி காரணமாக வேலை செய்யாமல் விட்டதால் பாதிக்கப் பட்டிருக்கிறது. சீனாவும் இதே போன்ற ஒரு உற்பத்திக் குறைவினால் (manufacturing slowdown) பாதிக்கப் பட்டிருக்கிறது. இதையெல்லாம் ICU என்றால் "இந்தியா எப்பவோ அரை உயிரோடு புதைக்கப் பட்டு விட்டது" என்றல்லவா எழுத வேண்டும்😂? இவையளும் இவையிண்ட அரைவேக்காட்டு ஆய்வுகளும்!
  35. கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்படும் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது..நோயாளிகளுக்கிடையேயான மறைப்பு (கேர்ட்டின்)முக்கியமல்லவா..நோயாளிகள் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை படம் பிடித்து முகப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் போது இவர்களுக்கு பிறைவேசி முக்கியமில்லையா என்று கேட்டேன்... இன்ன மாதிரி செய்தால், போட்டால் நன்றாக இருக்கும் என்று எழுதிய பின் தான் ஒரு சிறிய பகுதிக்கு கேர்டின் போட்டு இருக்கிறார்கள்..பிறகும் எதற்கும் முரண்பட்டு எழுதுவேனோ என்ற எண்ணம் போலும் பணிப்பாளர் பேசவும் மாட்டார், பதில் எழுதவும் மாட்டார்..அப்படி ஒரு தலைக்கணம்.வெளிநாடுகளிலிருந்து போய் கதைப்பவர்களுக்கு நன்றாக தேன் ஒழுக கதைத்து அனுப்புகிறார்.
  36. அரசியல் என்று வந்து விட்டால் இவை தவிர்க்க முடியாதவை. முதலிலேயே சீமான் சொல்லி விட்டார் நாங்கள் 15 வருடங்களாக களத்தில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக வளருவமாம் தம்பி வந்து அடுத்த முதல்வர் நான் தான் என்பாராம். நாங்க பொத்திக்கொண்டு இருக்கணுமா என்று. மற்றும் தலைவர் மற்றும் புலிகள் இவ்வுலகில் வாழ வெல்ல தகுதியுடையோர் அல்ல. மற்றும் வெற்றி பெற்றவன் மட்டுமே உலகில் புத்திசாலி வீரன் சாதனையாளன்.
  37. Published By: Vishnu 28 Sep, 2025 | 06:44 PM ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226346

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.