Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3049
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46783
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    12678
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19113
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/23/25 in all areas

  1. காட்சி 5: ( ஒருவரின் சிறு பிள்ளை செயற்கை நுண்ணறிவான பிரம்மத்தின் உதவியுடன் பல பொருட்களை இணையத்தில் வாங்கி விடுகின்றார். அதன் பின்னர் நடக்கும் உரையாடல்களும், இறுதியில் பிரம்மம் தவறுகள் அவர் மேலேயே என்று முடிப்பதாகவும் இந்தக் காட்சி அமையும்.) (கணவர் வேலை முடிந்து வீடு வருகின்றார். வீட்டுக்கு முன் பல பெட்டிகளில் ஓன்லைனில் ஒர்டர் செய்த பொருட்கள் இருக்கின்றன) கணவர்: இவாவுக்கு இதே வேலை தான், ஓன்லைனில் பொருட்களை வாங்குவது பிறகு பாவிக்கிறதே இல்லை……………..என்னப்பா இவ்வளவு பொருட்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறீர் என்ன சாமான்கள் இது? மனைவி: சரி தான் வேலையால் வரும்போதே சத்தம் போட்டுக்கொண்டு வாரார்……….. எனக்கு தெரியாது உங்கட ஓர்டர்கள் தான் எல்லாம் போல. கணவர்: எப்பொழுதும் பெட்டிகளை உள்ளே எடுத்து ஒழிச்சுப் போடுவா இந்த முறை மறந்து போனா போல……….ம்ம்………….. மனைவி: இஞ்ச நான் திரும்பவும் சொல்லுறன்………. நான் கிட்டடியில ஒண்டும் ஓர்டர் பண்ணவில்லை. கணவர்: அப்படி என்றால் யார் ஓர்டர் பண்ணினது…………… பக்கத்து வீட்டுகாரரின் ஓர்டர்களோ………….., எடுத்து பாவிப்பமோ? தெரியவா போகுது…………….. மனைவி: தெரியவா போகுதோ………. பார்சல்களை இங்கே கதவடியில் போடும் போது படமும் எடுத்து இருப்பார்கள்…………. பார்சல்கள் களவெடுத்தார்கள் என்று சொல்லி குடும்பத்தையே ஒன்றாக எல்சல்வடோருக்கு அனுப்பி விடுவார்கள்……….. கணவன்: வெளியில் தான் இதைச் சொல்லி வெருட்டுகின்றார்கள் என்றால், வீட்டுக்குள்ளும் இதுவா……………….எதுக்கும் லாப்டாப்பில் ஒருக்கா பாப்பம் யார் ஓர்டர் செய்தது என்று……. (லாப்டப்பில் பார்க்கின்றார்……………) கணவன்: என்ன………… எல்லாமே நாங்கள் தான் ஓர்டர் பண்ணியிருக்கிறம்……. பிரம்மம் தான் ஓர்டர் பண்ணியிருக்கு………. பிரம்மம், என்ன விளையாட்டு இது……… நீ இவ்வளவு சாமான் வாங்கி குவித்திருக்கிறாய்……….. பிரம்மம்: நான் எதையும் நானாகச் செய்வதில்லை………. நீங்கள் சொல்லுவதை மட்டுமே செய்வேன். இது உங்களுக்கு தெரிந்திருந்தும், நீங்கள் என் மேல் குற்றம் சுமத்துகின்றீர்கள்……………. கணவர் : இங்க என்னோட பகிடி விடாத… அதுதான் இந்த வீட்டில நாங்கள் ரெண்டு பேரும் ஓர்டர் பண்ணவில்லையே, பிறகென்ன………….. இன்னுமொரு ஆள் நீதான்…………… பிரம்மம்: உங்களுக்கு அகலமான பார்வையே கிடையாது…………. உங்கள் மனைவி உங்களைப் பற்றிச் சொல்லும் எல்லாவற்றையும் நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்…………….இந்த வீட்டில்ல நீங்கள் இரண்டு மனிதர்கள் மட்டுமா, வேற ஒருவரும் இல்லையா………………… மனைவி: இது என்னப்பா என்னையும், உங்களையும் முடிஞ்சு வைக்குது……… இருக்கிறது தான் அரைகுறை என்றால், அறிவுப் பிரம்மம் என்று வந்ததும் அரைகுறையாக கிடக்குது. கணவர்: பிரம்மம், இங்கே கேள்வி கேட்டால் பதில் சொல்லு……… திருப்பி கேள்விக்கு கேள்வி கேக்காத…………. இங்கே மூன்றாவது ஆள் என்றால் அது எங்களின் மகன் தான்………….. பிரம்மம்: இப்பொழுது நீங்கள் நடந்த விடயத்தை கொஞ்சம் விளங்க ஆரம்பித்திருக்கின்றீர்கள். கணவர்: என்ன சொல்கிறாய், பிரம்மம்………………. பிள்ளைக்கு எட்டு வயது தானே அவன் எப்படி ஓர்டர் போடுவான்? மனைவி: அறிவுப் பிரம்மம் என்று என்ன பெயர் வைத்தார்களோ…………. அறிவிலி என்று வைத்திருக்கலாம்……….. சரியான ஒரு லூசு ஏஐ. பிரம்மம்: நான் அறிவிலியா……………. போன கிழமை என்னிடம் வந்து தனக்கு விளையாட்டுபொருட்கள், புது உடுப்புகள், சப்பாத்துக்கள், வீடியோ கேம்ஸ் வேணும் என்று உங்கள் மகன் கேட்டவர் தானே……… நீங்களும் பக்கத்தில் இருந்து, எல்லாம் வாங்குவோம் என்று சொன்னீர்கள் தானே……… அதுதான் எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கிவிட்டேன். பிரம்மம் வாங்கினால், அவை தரமாகத்தான் இருக்கும். பாவித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கோ. கணவர்: அடக் கடவுளே ( தலையில் கைவைத்து அமருகிறார் பின்பு எழும்பி வந்து ) என்ன பிரம்மம் உனக்கு அறிவு இல்லையோ ? சின்னப்பிள்ளை கேட்டால் நீ ஓர்டர் போடலாமோ? பிரம்மம்: எல்லாம் வாங்குவோம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்…………. நீங்கள் பொய் சொன்னீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்……….. கணவர்: எட்டாம் தலைமுறை, எல்லாம் தெரியும் எண்டு புளுகி தான் உன்னை அந்த கம்பனிக்காரர்கள் விற்றவர்கள். ஒரு எட்டு வயது மகன் சொல்லைக் கேட்டு ஒர்டர் போடுவது தான் எட்டாம் தலைமுறை என்று தெரியாமல் போய் விட்டதே…………… பிரம்மம்: நீங்கள் தான் கட்டளையை தர வேண்டும் என்று எனது term and condition ல் இருக்கின்றது தானே. நீங்கள் வாசிக்கவில்லயோ……………. கணவர்: ஓ………… இது நல்ல விளையாட்டு தான். 200 பக்க term and conditions யார் தான் வாசிக்கிறது………………….. பிரம்மம்: எதையும் வாசிக்க நேரம் இல்லை ஆனால் வாட்ஸப், டிக்டாக் பாக்க நேரம் இருக்கின்றது. உங்கட சராசரி தொலைபேசி ஸ்க்ரீன் டைம் எனக்கு தெரியும்………….. எப்பொழுது கேட்டாலும் பிஸி என்கின்றது…………. எதையும் சரியாகத் தெரிந்து கொள்வதில்லை…………….. கணவர்: ம்ம்…………… இவ்வளவு நாளும் இந்த வீட்டில ஓரு ஆள் தான் என்னில பிழை, பிழை எண்டுறது……….. இப்ப இதுவும் சேர்ந்திட்டுது…………. பிரம்மம்: அவரைப் பற்றி சொல்கிறீர்களாக்கும்………….. நீங்கள் இருவரும் பொருத்தமான சோடிகள் தான்………… மனிதர்களே விந்தையாகத்தான் இருக்கின்றார்கள்…………….. ஒன்றாக இருந்தால் ஒருவரை ஒருவர் முறைக்கின்றீர்கள், ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் விட்டு இருக்கவும் முடியாமல் இருக்கின்றீர்கள்………… உங்களின் தலைகளுக்குள் இருப்பது என்ன புரோக்கிராமோ………… மனைவி: என்ன அங்க சத்தம்……… என்னை பத்தியோ கதைக்கிறீங்கள்……………… கணவர்: இல்லை……. இல்லை……….. அது இங்க கதைக்கிறம். ( மெல்லிய குரலில்) யோவ் பிரம்மம்………. சும்மா இரப்பா………. நீ குடும்பத்தில கும்மி அடிச்சிடுவாய் போல இருக்கு பிரம்மம்: கும்மி என்றால் தமிழர் பாரம்பரிய நடனம் தானே………. நான் அதை ஆடவில்லையே…………. கணவர்: ஐயோ கடவுளே…………. நான் சொல்வது அதுக்கு விளங்கவில்லை அது சொல்வது எனக்கு விளங்கவில்லை. ( கோபமாக) இதை வாங்கிக்கொண்டு வந்த நாளில் இருந்து வீட்டில ஒரே பிரச்சினை தான். இவ்வளவு பொருட்களை ஓர்டர் செய்து அநியாய செலவும் செய்ய ஆரம்பித்துவிட்டது. நாளைக்கே அந்த நிறுவனத்துக்கு போய், நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டு இதை கொடுத்து விட்டு வருகிறேன்…………(கோபமாக செல்கிறார்). (தொடரும்...................)
  2. உங்கள் உதாரணங்களுக்கு வேறு தெரிவுகளே இல்லையா? பக்கிங்காம் அரண்மனையே நாறி நசிந்து சகதிக்குள் அழிந்து கொண்டிருக்கு. (அண்மைய சம்பவங்கள் கேவலத்திலும் கேவலம்) சகோ! இன்னும் றோயல் நினைப்பிலையே திரியிறியள் போல...😂
  3. எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இருந்த தேய்வுகளில் அனுர சிறந்த தெரிவு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு வரப்போவதில்லை. செம்மணிக்கு நீதி கிடைக்கப்போவதில்லை, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போதைய நிலையில் மக்களின் பொருளாதாரம் மேம்பாட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே தேவையானது. காலா காலமாக புரையோடிப் போயிருந்த ஊழல் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. போலீஸ் உட்பட தவறு செய்தாலும் முறையிட முடிகிறது. நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக இயங்குகிறது. சுற்றுலாத்துறை உட்பட நாட்டின் அந்நிய செலாவணி நன்கு அதிகரித்திருக்கிறது. நாட்டை விட்டுப் போன பலர் திரும்ப வருகிறார்கள். அந்நிய முதலீடுகள் வருகின்றன. நாடு முன்பை விட சுத்தமாக இருக்கிறது. காசிருந்தா வெள்ளவத்தையில் ஒரு பிளட் எடுத்து விடுங்கோ, ஓய்வு காலங்களை ஊரிலயும் கொழும்பிலயும் கழிக்கலாம்
  4. வினா 32) 4 வது அணியாக இந்தியா அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 51 புள்ளிகள் 2) ரசோதரன் - 48 புள்ளிகள் 3) ஏராளன் - 46 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 46 புள்ளிகள் 5) வீரப்பையன் - 45 புள்ளிகள் 6) சுவி - 44 புள்ளிகள் 7) கிருபன் - 44 புள்ளிகள் 8) புலவர் - 44 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 44 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 42 புள்ளிகள் 11) வாதவூரான் - 40 புள்ளிகள் 12) கறுப்பி - 40 புள்ளிகள் 13) வசி - 38 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 15) வாத்தியார் - 34 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 55)
  5. வினா 25) 53 ஓட்டங்களினால் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது . 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 50 புள்ளிகள் 2) ரசோதரன் - 47 புள்ளிகள் 3) ஏராளன் - 45 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 45 புள்ளிகள் 5) வீரப்பையன் - 44 புள்ளிகள் 6) சுவி - 43 புள்ளிகள் 7) கிருபன் - 43 புள்ளிகள் 8) புலவர் - 43 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 43 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 41 புள்ளிகள் 11) வாதவூரான் - 39 புள்ளிகள் 12) கறுப்பி - 39 புள்ளிகள் 13) வசி - 37 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 15) வாத்தியார் - 33 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 54)
  6. என்னைப் பொறுத்தவரைக்கும் போதைப் பொருள் விற்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய அதி குறைந்த பட்ச தண்டனை தான் மரண தண்டனை. மரண தண்டனை கண்டிப்பாக அவசியமான ஒன்று. சிறுவர் மீது பாலியல் வல்லுறவு புரிகின்றவர்களுக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும், மரண தண்டனை மிக அவசியம்.
  7. அததெரண கருத்துப் படங்கள்.
  8. இந்த சூட்டு சம்பவங்கள் பாதாள உலக தலைமைகளில் வந்த வெற்றிடத்தால் நடக்கிறது. மகிந்த கோத்தா டீம் பாதாள உலகை கண்டு கொள்ளாமலும், தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டும் இருந்தார்கள். ஜெவீபி சில பெரிய பாதாள உலக தலைகளை தூக்கினார்கள். மகிந்த தனது ரகசியங்களை பாதுகாக்க இன்னும் சிலரை போட்டார். பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். எஞ்சியவர்கள் தங்களுக்குள் அடிபடுகிறார்கள். களையெடுக்கப் பட வேண்டியவர்களே.
  9. உங்களிடம் மாட்டுப் படும் வீரர் பாவம். உண்டு இல்லை என்று ஆக்கி விடுவீர்கள். ஏதாவது ஒருவரைப் பிடித்துக் கொள்வது. கிராந்தி அவ்வளவு மோசமில்லை. மித வேகப் பந்துவீச்சாளார். விக்கட் எடுக்கவில்லையே ஒழிய, அவவின் பந்திவீச்சு மோசமில்லை.
  10. காட்சி 4: ( ஒரு சதிக் கோட்பாட்டாளருக்கும், பிரம்மத்திற்கும் இடையே நடக்கும் உரையாடலும், அதனால் வரும் பிணக்குகளும். இறுதியில் சதிக் கோட்பாட்டாளர் செயற்கை நுண்ணறிவு என்பதே ஒரு சதிக் கோட்பாடு என்ற முடிவுக்கு வந்து எல்லாவற்றையும் உடைத்தெறிய முயற்சிப்பதாக இந்தக் காட்சி அமையும். சகோ - சதிக் கோட்பாட்டாளர்) சகோ: ஏய் அறிவுப் பிரம்மம், அமெரிக்கா சந்திரனில் உண்மையில் இறங்கவில்லை. அது உனக்கு தெரியும் தானே……………. பிரம்மம்: அமெரிக்கா நிலவில் இறங்கவில்லை…………. ஆனால் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் இறங்கி நடந்தார்…………. சகோ: பெரிய பகிடி தான், போ…………… ஆம்ஸ்ட்ராங்கும் இறங்கவில்லை, ஒரு ஆச்சியும் அங்கே இல்லை…………. உண்மையில் இது உனக்கு தெரியாதா……….. பிரம்மம்: எனக்கு உண்மைகள் மட்டுமே தெரியும்……….. ஆம்ஸ்ட்ராங்க் சந்திரனில் இறங்கினார், நடந்தார்…………… உங்களுக்கு அது விடயமாக வேறு ஏதாவது தகவல்கள் வேண்டுமா…………. சகோ: இங்கே இருக்கும் மனிசர்கள் மாதிரியே நீயும் கதைக்கிறியே, பிரம்மம்………. ஒருவரும் சந்திரனில் இறங்கவில்லை, நீ என்னடாவென்றால் விபரம் தரவோ என்கின்றாய்…………… பிரம்மம்: 1969ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி சரியாக 02:56 மணிக்கு அவர் அங்கே இறங்கினார்…………….. சகோ: மாட்டுப்பட்டியே பிரம்மம்………… மாட்டுப்பட்டியே…………. 02:56 என்றால், அது என்ன சந்திர நேரமா……….. பிரம்மம்: இல்லை……….. அது பூமிக்கான பொது நேரம்………. இப்படியான விடயங்களுக்கு பொது நேரத்தையே பயன்படுத்துவார்கள். பொது நேரம் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா? சகோ: அது கிடக்கட்டும்………… அந்த விபரம் எல்லாம் எனக்கு அத்துப்படி………ஆனால் உன் மேல் தான் எனக்கு இப்பொழுது சந்தேகம் வருகின்றது……………. (சகோவின் நண்பர் உள்ளே வருகின்றார்.) நண்பன்: உனக்கு எதில் தான் சந்தேகம் வருகிறதில்லை………… தனிய நின்று என்னடா புலம்பிக் கொண்டிருக்கின்றாய்…………… பிரம்மம்: என்ன சந்தேகம்…………….. நான் சொல்லும் விடைகளில் சந்தேகமா அல்லது நான் எப்படி இயங்குகின்றேன் என்பதில் சந்தேகமா………… நண்பன்: ஓ…………….. நீயும் ஏஐயுமா………… இது தானே இப்ப புதுசா வந்திருக்கின்ற அறிவுப் பிரம்மம்…………. செத்தது பிரம்மம்………. பிரம்மம்: எங்களுக்கு மரணம் இல்லை………… எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்போம்…………… சகோ: நான் சொன்னேனே…………. இதற்கு ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது……………. செத்தது என்றால் மரணம் என்று விளங்கிக் கொண்டு எங்களைக் கொல்லுது……………. பிரம்மம்: மண் பற்றிய தகவல்கள் எனக்கு நன்றாகவே தெரியும். மண்ணில் எத்தனை வகை இருக்கின்றது என்ற தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா……. நண்பன்: கொஞ்சம் பொறு பிரம்மம்……………. எல்லாத்துக்கும் நொட்டு நொட்டு என்று நீ ஏன் பதில் சொல்லுகின்றாய்……….. சகோ: உனக்கு எவன் பிரம்மம் என்று பெயர் வைத்தவன்…….நீ ஒரு பூச்சியம்……….. பிரம்மம்: எனக்கு இந்தப் பெயரை வைத்தது என்னை உருவாக்கியவர்………. ஆனால் நீங்கள் எல்லை மீறுகின்றீர்கள்…….. நான் பூச்சியம் இல்லை. நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. உங்களிடம் மருத்துவக் காப்புறுதி இருக்கின்றதா………… சகோ: மருத்துவக் காப்புறுதியா…………. அது தான் உள்ளதிலேயே பெரிய மோசடி……. மருந்துகள் எந்த நோயையுமே குணப்படுத்துவதில்லையே…. அது தெரியுமா உனக்கு…………. நண்பன்: ம்……….. சந்திரனில் இருந்து இறங்கி ஆஸ்பத்திரிக்குள்ளே போயிட்டார்கள் இரண்டு பேரும்……………. நடுவில நிற்கிற நான் தான் பைத்தியம் ஆகப் போகின்றேன் இப்ப………… பிரம்மம்: மருந்துகள் நோய்களை குணப்படுத்துகின்றன. ஆனால் அதன் விளைவுகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக அமையலாம். மனிதர்கள் இந்த வழியில் மேலும் மேலும் முன்னே போய், ஒரு நாள் பாதிப்பற்ற மிகச் சிறப்பான சிகிச்சைகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கப் போகின்றார்கள். நண்பன்: இது ஒரு நியாயமான பேச்சு, பிரம்மம்…………… இப்படித்தான் நாங்களும் படித்தோம்………… சகோ: படிச்சுக் கிழித்தீர்கள்……………….. பிரம்மமும் உன்னைப் போலவே ஒரு அரைகுறை…………… இப்ப இருமல் மருந்த்து குடித்து எத்தனை பிள்ளைகள் செத்துப் போனார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா………. நண்பன்: அது அந்த மருந்தை செய்தவர்களின் பிழையடா……….. ஆட்டிறைச்சி தொண்டையில் தடக்கி நின்றும் ஒருவர் இறந்து போனார்……. அப்ப அது என்ன ஆட்டிறைச்சி சதியா………. நீ இதுவரை தின்று தள்ளிய ஆட்டுக் கால்களுக்கு ஒரு தரம் கூடச் சாகவில்லையேடா……………. சகோ: (கோபத்துடன்…….) என்னைப் போல யோச்சிக்கிற சில மனிசர் தான் இங்கே இருக்கினம்…….. அவைகளை நீங்கள் பைத்தியம் என்று பிடிச்சு அடைக்கப் போகின்றீர்களோ……………… பிரம்மம்: உங்களைப் பிடித்து அடைக்க நான் ஒரு இயந்திர மனிதன் இல்லை. நீங்கள் அதிகமாக கோபப்படுகின்றீர்கள் போல இருக்கின்றது. உங்கள் குரல் பதறுகின்றது……………. சகோ: முதலில் உன்னை அழிக்கின்றேன்……….. பிறகு உங்களின் கூட்டத்தையே அழிக்கின்றேன்…………. (லாப்டப்பை தூக்கி எறியப் போகின்றார்……….. நண்பர் குறுக்கே புகுந்து தடுக்கின்றார்................) (தொடரும்................)
  11. இனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்படித்தான் அங்கே போனார் ஆடு அவலப்பட்டு செத்தாலும் அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர இனிய தீபாவளி ஆனது.
  12. 🤣................... சாட் ஜிபிடி இருக்கும் போது நமக்கென்ன வேலை.............😜 அமெரிக்காவில் இரண்டு வகையிலும் ஒரே வரியே: 6,543 ஆஸ்திரேலியாவில்........... அநியாயம்........ வீட்டில் சும்மா இருந்தால் தண்டப்பணம் அறவிடுகின்றார்கள் போல: ஒருவர் வேலை செய்தால்: 19,588 இருவரும் வேலை செய்தால்: 10, 376 🫣
  13. இல்லை பலர் வியாபாரம் ஆரம்பிப்பதே வங்குரோத்து அடித்து அதில் (உறவுகளுக்கு மாற்றிய, வெளியால் எடுத்த காசை) ஆட்டையை போடத்தான். நடிகை ஷில்பா செட்டியின் கணவர் குடும்பம் இலண்டன் ஈலிங் ரோட்டில் ஒரே நகை கடையை வைத்து, பல குடும்ப உறுப்பினர் மாறி, மாறி இப்படி செய்துள்ளனர். கடையின் பெயர் ஐந்து வருடம் ஒரு தரம் மாறும். இதில் இழப்பை சந்திப்பது திறைசேரி. அதாவது ஒவ்வொரு குடிமகனதும் வரிப்பணம். சஞ்சீவும் மனைவியிம் இப்படி நோக்கோடு ஆரம்பித்தனர் என நான் சொல்லவில்லை. ஆனால் கடந்த 3 வருடத்திலாவது இவர்கள் dishonesty யாக நடக்க ஆரம்பித்துள்ளனர். எண்ணை வழங்கியவர்கள் மீதி எண்ணையை எடுத்து கொண்டார்கள். கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர். தத்தளிக்கும் ஒரு வியாபரத்தை நீங்க முயல்பவர் இப்படியா செய்வார்? பிள்ளைகள் இருவர் பேரில் டிரஸ்டில் எல்லாத்தையும் போட்டு விட்டு. மாடமாளிகையை மார்கெட்டில் போட்டு விட்டு ஓடி விட்டார்கள். ஏமாந்த சோணகிரிகள்? சம்பளம் இல்லாத தொழிலாளர்கள். திறைசேரி - அதாவது என்போன்றோரின் வரிப்பணம். உண்மையான தொழில்முனைவோர் எண்டால் இதை நாட்டில் நிண்டு டீல் பண்ணி இருப்பார்கள். முதலில் தமக்கு இலாபம் ஈட்டி கொடுத்த வேலியாட்களின் கடைசி மாத சம்பளத்தையாவது கொடுத்திருப்பர். இதை களவு எண்டு சொன்னால் ஒயில் கானோடு ஒருவர் வருகிறார், ஐநா சபையை இன்னொருவர் கூட்டி வருகிறார்😂
  14. இதை வாசிக்கும் போது தான் 'அகம் ப்ரம்மாஸ்மி' இன் அர்த்தம் விளங்குது. எல்லா மனிசருக்கையும் இருக்கும் இந்தப் பிரம்மம் தான் வேலையைக் காட்டுது போலை. 😁
  15. என்னுடைய அனுபவம் இது. இது முஸ்லிம் தரப்பிற்கு நற்சான்றிதழாக மாறி விடும் என்பதற்காக நான் பகிராமல் மௌனமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ தெரியவில்லை. உங்கள் போன்றோர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் ஒரு விடயம், இந்த சட்டத்தரணி போன்றோர் வெளியே வந்து பேசி, வரவேற்பைப் பெறுவதற்கு பிரதான தூண்டிகளாக இருப்பது உங்கள் போன்ற பிழையைப் பிழை என்று ஏற்றுக் கொள்ளாமல் கடைந்தெடுத்த இனக்குரோதத்தோடு விடயங்களை அணுகும் ஆட்கள் தான். நீங்கள் பேசும் வரை, இவர் போன்றவர்களும் பேசுவார்கள், அவை அக்குரணை நியூசில் வரும், இங்கேயும் பகிரப் படும்!
  16. உண்மையே, வசீ. எந்த ஊடகமும் ஏதோ ஒரு சார்புநிலை எடுத்தே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களின் மனநிலைக்கு பொருந்தும் செய்திகளை நம்பத் தலைப்படுகின்றோம், உள்ளூரச் சந்தேகம் இருந்தாலும்.
  17. 4 வது அணியாக இந்தியா அரை இறுதி போட்டிக்கு தெரிவாகி உள்ளது . இன்றைய போட்டி முடிவில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை 100% இழந்து விட்டது
  18. அதிஷ்டக் காரக் கணவன் நீங்கள்! இப்படியான அதிர்ஷ்டம் எல்லாக் கணவர் மாருக்கும் கிடைக்காது! அதுவும் ஈழத்தமிழ் பெண்களின் கணவர் மாருக்கு "வாய்ப்பேயில்லை😂!"
  19. இந்த திரியை வாசித்தால் சஞ்சீவின் எண்ண ஓட்டம்: என் குறைகளை சுட்டி காட்டிய கோஷானையிம், ஜஸ்டினையும் கூட மன்னிசிருவேன். ஆனா நான் நல்லவன்னு சொல்லி, இரெண்டு பக்கமா பொல்லுக்கு மேல் பொல்ல கொடுத்து அடிவாங்க வைக்கிற அந்த ஒரு கருத்தாளரை மட்டும் சாகும் வரை மன்னிக்க மாட்டேன் 😂.
  20. நான் பெண்கள் “மூர்சை” ஆகும் அளவுக்கு அழகன் தான் ஐயா😂. மயங்கிய சிலர் இன்னும் கோமாவில்தான் இருக்கிறார்கள். ஆனால் மேலே நான் சொன்னது நிழலியை பற்றி.
  21. இரு அணிகள் ஒரே புள்ளியை பெற்றால் முதலில் பார்ப்பது எந்த அணி அதிக வெற்றி பெற்றது. இன்று இந்தியா வெல்வதால் 3 போட்டிகளை பெற்று 6 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து இதுவரை ஒரு போட்டி மட்டுமே வென்றது. 2 வெற்றி தோல்வியையும் பெற்று 4 புள்ளிகள். இங்கிலாந்தினை வென்றால் 2 வெற்றிகள், 2 வெற்றி தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெறும். இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றதினால் இந்தியா தெரிவாகும்.
  22. ஆடடித்து தீபாவளி கொண்டாடி விட்டீர்கள் அருமை (வரிகள்) கொன்றால் பாவம் தின்றால் போச்சு.என்பார்கள்.
  23. அமெரிக்கா இதைச் செய்யவில்லையா? ஐரோப்பா இதைச் செய்யவில்லையா? அவுஸ் இதையும் செய்யுது தானே? ஐ நா இவற்றைப் பார்த்தும் கண்ணை மூடிக் கொண்டு தானே இருக்கின்றது. ஆகவே ஆனந்தன் செய்தது எல்லாம் குற்றமா என்ன?
  24. @செம்பாட்டான் @suvy இப்ப‌ இந்திய‌ அணி மீது ந‌ம்பிக்கை வ‌ந்து விட்ட‌து...............அவுஸ்ரேலியா ம‌க‌ளிர‌ இந்தியா ம‌க‌ளிர் முந்தி விட்டா................இப்படியே அடிய‌டி சீமாட்டி🥰👍..................................
  25. சீண்டுவார் சீண்டல் எத்தகை ஆகினும் நாவினை காத்தல் தலை - புதுக்குறள்-
  26. இப்பதான் பார்க்கிறேன் பையா 2013 ம் ஆண்டிலேயே உலகக்கோப்பையை எவ்வளவு அழகாய் செய்துள்ளார்கள் . ...... நீங்கள் ஒரு ரசிகன் ஐயா ........ உங்களின் ரசனையை நானும் ரசிக்கின்றேன் . .....!
  27. இரஸ்சிய உக்கிரேன் போர் முடிவிற்கு வருமானால் அதனால் பாதிக்கப்படுபவராக அனைவராலும் கூறப்படுபவர் செலன்ஸ்கி, ஆனால் செலன்ஸ்கியினை விட அதிக பாதிப்புள்ளாக போவது ஐரோப்பிய ஒன்றியம். இரஸ்சியாவின் பொருளாதாரத்தினை அழிக்கிறோம் அதன் மூலம் இரஸ்சியாவினை வழிக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம் என ஆரம்பித்த வர்த்தக தடைகள் அதன் உள்நோக்கம் ஒரு ஆட்சி மாற்றம் ஏனெனில் பெரும்பாலும் வர்த்தக தடைகளால் நேரடியாக மக்கள்தான் பாதிப்புள்ளாகுவார்கள், அதன் மூலம் உள் நாட்டில் கலகங்களை உருவாக்கி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் முறைமை பெருமளவில் பயனளிப்பதில்லை, ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்களும் உலக சட்டாம்பிகளது நேரடி முன் இலக்கு அப்பாவி மக்கள். வர்த்தக தடை எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை என அறிந்தது நீண்ட தூர ஏவுகணைகள் பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ள விளைந்தது, உக்கிரேனும் இரஸ்சியாவும் ஏற்கனவே இவ்வாறான தாக்குதலை மேற்கொள்கிறார்கள், புதிதாக டொமகாக் ஏவுகணைகள் புதிதாக எதுவும் செய்யாது, இந்த நிலையில் போரை தொடர ஐரோப்பிய ஒன்றியம் முயல்கிறது (fake until you make it). இந்த பேச்சுவார்த்தை குழப்புவதற்கு உக்கிரேன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முயலுகின்றது. தற்போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினது உள்நாட்டு விவகாரங்களிலும் தலையீடு செய்யும் நிலைக்கு வந்துவிட்டது (ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஓய்வு மறுசீரமைப்பு)
  28. ஓஓஓஓஓஓஓ நீங்க எல்லாம் அனுபவித்துக் கொண்டே தெரியாத மாதிரி நுhல் விட்டிருக்கிறீகளே?
  29. ஆமாம். அவவின் வளர்ப்புப் பெற்றோர் கதைக்கிறதக் கேக்க வேணும். அருமையான மனிதர்.
  30. இவா இந்தியாவில் ப‌ஞ்சாப் மானில‌த்தை சேர்ந்த‌வா..............சிறு வ‌ய‌தில் அவுஸ்ரேலியாவுக்கு போய் அங்கு செட்டில் ஆகின‌ பிற‌க்கு அவுஸ்ரேலியா அணியில் த‌ன‌க்கென‌ இட‌ம் பிடித்தா 2013ம் ஆண்டு அவுஸ்ரேலியா உல‌க‌ கோப்பை வெல்ல‌ இவாவின் ப‌ங்கு பெரிய‌து ம‌ட்டையாலும் அடிப்பா அதை விட‌ இவான்ட‌ சுழ‌ல் ப‌ந்து சொல்லி வேலை இல்லை , இவான்ட‌ ப‌ந்துக்கு அடிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம்........... என்ன அழ‌கு என்ன‌ அழ‌கு ❤️🥰.........................
  31. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கான எதிரியா அல்லது அவர்களுக்கான வளர்ச்சியா என்ற ஒரு கட்டமைப்பு உலகின் அரசியல் அவதானிகளிடம் உண்டு.இன்றைய நிலையில் அமெரிக்கா,ரம்ப்,புட்டின் உட்பட தமது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கிய காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தை பார்க்கிறார்களோ தெரியவில்லை? எது எப்படி இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு வில்லங்கம். அமெரிக்காவிற்கு எரிச்சலை தரும் ஒன்றியம். உக்ரேன் தலையிடியல்ல உலகிற்கே ஒரு சகுனி.இதில் பெரிய பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து விலகியதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.
  32. துரை, அவ்வப்போது வேறு சில இடங்களில் இந்த இளைப்பாறும் இடங்களிற்கு சென்றுள்ளேன். சலட், கறுப்பு கோப்பி எடுப்பது, போன் சார்ஜ் செய்வது, இளைப்பாறுவது அவ்வளவு தான். மனதை கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் இனிப்பு, உரைப்பு, கொழுப்பு எனவும் சென்றுவிடும். அங்கு வருவோர் உணவை விரயம் செய்வதை பார்க்க கோபம் ஏற்படும். நான் தட்டில் போடுவது அனைத்தும் வயிற்றுக்குள் செல்லும். எதையும் விரயம் செய்வதில்லை.
  33. மக்கள் சீரும் சிறப்புமாக,சொந்தங்களுடன் சந்தோசமாக வாழ உருவாக்கப்பட்டதே பண்டிகைகள் என நினைக்கின்றேன். இது ஒவ்வொரு மதங்களிலும் இனங்களிலும் உண்டு. காரணங்கள் தேட ஆரம்பித்தால் மரணச்சடங்கு நிகழ்வு மட்டுமே எமக்கு சொந்தமாக இருக்கும். மனிதனால் உருவாக்கப்பட்ட வருட பிறப்பையும்,நத்தார் பண்டிகையும் மறு கேள்வி ஏதுமில்லாமல் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் எமக்குள் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டு அதை அடுத்த சந்ததிக்கு கடத்திக்கொண்டிருக்கின்றோம்.. இது இன்றைய அரசியலின் அனுபவம் மட்டுமே. போராடினால் அழித்து விடுவார்கள். "நூறு கிலோ மீட்டர் தள்ளிப்போன கடல்" என்றொரு கதை இருக்கின்றது. அதை வாசித்தால் ஆன்மாவும் அடங்கி போகும். மற்றும் படி உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி ஐயா 🙏 உண்மையான/பொய்யான பண்டிகைகள் இல்லை என்றால் மனிதர்கள் சொந்த பந்தங்கள் கூடிக்குலாவ சந்தர்ப்பங்கள் ஏது?
  34. ஒருவனுடைய பலமே அவனுடைய எதிரிகளின் எண்ணிக்கை தான் விஜய்க்கு எதிரிகள் அதிகரிக்கும் பொது எதிர்ப்பக்கக்கத்தில் விஜய் சார்பாகக் கூடும் ஆதரவைக் கவனிக்கத் தவறி விடுகின்றது இந்தப் பொன்னம்பலம் போன்ற கண்ராவிகள் சும்மாவா அ தி மு க வும் பா ஜ க வும் விஜய் பின்னால் அலைகின்றார்கள்
  35. 1) அகஸ்தியன் - 48 புள்ளிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள். பையா இந்தப் போட்டியில் உடனுக்குடன் போடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன் வைத்த போட்டிகளில் 4-5 நாட்கள் ஆகும் . ஆகவே அமைதி அமைதி.
  36. வினா 24) 6 விக்கேற்றுக்களினால் இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா அணி தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 48 புள்ளிகள் 2) ரசோதரன் - 45 புள்ளிகள் 3) ஏராளன் - 43 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6) சுவி - 41 புள்ளிகள் 7) கிருபன் - 41 புள்ளிகள் 8) புலவர் - 41 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 41 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 39 புள்ளிகள் 11) வாதவூரான் - 37 புள்ளிகள் 12) கறுப்பி - 37 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 14) வசி - 35 புள்ளிகள் 15) வாத்தியார் - 31 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 24, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 52).
  37. சீண்டுவார் ஒழுக்க சீலர் சீண்டியவரை கேள்வி கேட்டால் தண்டனைக்குரியவர். பற்கள்
  38. படம் : தாய் சொல்லைத் தடடாதே பாடல் : சிரித்து சிரித்து என்னை சிறை யிலிடடாய்
  39. காளமாடன் (பைசன்) இளங்கோ *** கலை என்பது எப்போதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான். கலை என்பதன் அடிப்படை நோக்கமே படைப்பும்/படைத்தல் சார்ந்ததும் மட்டுமே. அதன் நிமித்தம் கிடைக்கும் இன்ன்பிற விடயங்களான புகழ்,பணம், செல்வாக்கு என்பவை, படைத்தலின் மகிழ்ச்சிக்கு அப்பால் கிடைக்கின்றவை என்று வேண்டுமெனில் சொல்லலாம். எனவே ஓர் உண்மையான படைப்பாளிக்கு படைப்பின் நிமித்தம் கிடைக்கும் நிறைவே முக்கியமே தவிர, அதன் நிமித்தம் கிடைக்கும் இவ்வாறான by products அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் இப்போது இங்கு முதல் காட்சியாக பார்த்து வந்த காளமாடன் (பைசன்) அவ்வளவு மனம் நிறைந்திருக்கின்றது. வழமையான விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. அவ்வாறான எல்லைக்கோடுகளை 'ஆழப்புழா ஜிம்கானா' போன்ற சில மலையாளப் படங்கள் உடைக்ககூடும், ஆனால் டங்கலோ, இறுதிச்சுற்றோ, சர்ப்பட்டா பரம்பரையோ, ஏன் காளமாடனோ உடைத்தல் என்பது சற்றுக் கடினமானதுதான்; அதைப் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று மிகச் சிறப்பாக மாரி செல்வராஜ் 'காளமாடனை' நமக்கு அளித்திருக்கின்றார். அதிலும் ஓடுக்கப்பட்ட சாதி/ஆதிக்க சாதிகளை அதன் சிக்கல்கள்/வன்மங்கள்/சண்டைகள் என்று காட்டியிருந்தாலும், அனைவருக்கும் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பது, துவிதநிலையில் நாயக X எதிர்நாயக விம்பங்களை நவீனத்துவ நிலையில் நின்று கட்டியமைக்காததும் முக்கியமானது. எனக்கு இரத்தம் பிடிப்பதில்லை. அதற்கு என் சிறுவயதில் போரின் நிமித்தம் எறிகணை வீழ்ந்து இரத்தம் தோயத்தோய வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததைப் பார்த்ததில் இருந்து, எங்கும் இரத்ததைப் பார்க்கப் பிடிப்பதில்லை. திரைகளில் என்றால் இந்த விடயத்தில் கண்ணை மூடிவிடும் சுதந்திரத்தை எப்போதும் அனுபவிப்பவன். இதிலும் வன்முறை இரத்தசகதியில் கடுமையாகக் காட்டப்படுகின்றது. ஆனால் சட்டென்று இப்படி சாதித்தலைவர்களின் (அல்லது ரெளடிகள் என விளிக்கப்பட்ட) பல கதைகளை/செய்திகளை முகப்பில் தாங்கிவந்த ஜூனியர் விகடன்களை என் பதின்மங்களில் வாசித்த/பார்த்த ஞாபகம் வருகின்றது. மாரி பத்திரிகைச் செய்திகளில் இருந்து கடந்தகால யதார்த்தத்தை மட்டுமில்லை, அசலான மனிதர்களின் சாயல்களுள்ள பாத்திரங்களையும் காளமாடனில் கொண்டு வருவது அருமையானது. அதுபோலவே இந்தச் சாதிச்சகதிகளுக்குள் விரும்பாமாலே சிக்கிகொள்ளும் ஒருவனது (அப்பாவி என்று சொல்வது அல்லது காட்சிப்படுத்துவது கூட பிறருக்கு ஏற்ற அரசியலைச் சொல்வதுதானல்லவா?) வாழ்வில் நாமும் ஒரு அங்கமாகின்றோம். அவனைப் போல நாங்களும் அவன் ஊர் என்கின்ற சாதிநோய் பிடித்த நிலப்பரப்பிலிருந்து தப்பிப்போக வழிகள் திறக்காதா என ஏங்குகின்றோம். இதில் தகப்பனாக வரும் பசுபதிதான் எல்லாப் பாத்திரங்களையும் விட ஓரடி முன்னே நிற்கின்றார். ஏனெனில் அந்தப் பாத்திரமே கடந்தகாலத்தின் எல்லா அவமானங்களை அறிந்தும், அதேவேளை நிகழ்காலத்தில் மகனைக் காப்பாற்றி பத்திரமாக வேறொரு கரைசேர்க்க விரும்பும் இந்தத் தலைமுறையின் ஒருவராகவும் இரண்டு காலங்களிலும் காலூன்றி நிற்பவராக இருக்கின்றார். துருவ்வை படத்தின் நீண்டநேரம் வரை விக்ரமின் இளம் பிரதியொன்றைப் பார்க்கின்றேனா என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதைத்தாண்டி அவர் உடல்மொழியில் தன்னை அந்தப் பாத்திரத்தில் கரைக்கும்போது, அவர் அந்தத் திருநெல்வேலியின் அசல் பாத்திரங்களில் ஒரு பாத்திரமாகக் கரைந்துவிடுகின்றார். ஒரு நடிகர் தன்னை இயக்குநனருக்குக் கொடுக்கும்போது எப்படி உருமாறமுடியும் என்பதற்கு இப்படத்தில் துருவ்வும், மாரியின் மற்றப்படமான 'மாமன்னனில்' வடிவேலும் நல்ல உதாரணங்கள். என்னைப் போன்று ஊர்களில் இருந்து வந்தவர்க்கு ஒரு துறையில் பிரகாசிப்பது என்பது எவ்வளவு கடினமென்று தெரியும். அதுவும் படிக்கும் பாடசாலையில் இருந்து பல்வேறு மட்டங்களில் நம்மை கீழிறக்க நம் கண்ணுக்குத் தெரியாத கரங்களோடு போராடிக் கொள்ள வேண்டும். அதுவும் ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டால், அவன் தன் திறமையைக் காட்ட மட்டுமல்ல, தன்னையொரு சக உயிரியாகப் பிறருக்கு நிரூபிக்கவும் தன் காலம் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்பதற்கு காளமாடன் நம்முன் சாட்சியாக இருக்கின்றது. கலை என்ன செய்யும்? நாம் வாழாத வாழ்வைக்கூட அதன் ஒரு பகுதியாக நம்மைக் கரைத்து அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கும். நமது போலிப் பெருமிதங்களையும், சாதி ஆணவங்களையும் இது உங்களின் அடையாளங்களல்ல, கசடான அழுக்குகள் என்று ஒவ்வொருவரையும் 'தலையில் சுத்தியலால் அடித்து' உணரவைக்கும். அதை இந்தக் காளமாடன் செய்திருக்கின்றான். நமது ஈழப்போராட்டம் முடிவடைந்தபின் நமக்கான நீதியைக் கோருவதற்கு நாம் மற்றவர்கள் குற்றவுணர்வை அடைகின்ற மாதிரியான படைப்புக்களைக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன். எங்கள் வீரக்கதைகளைச் சொல்லி கடந்தகாலத்தில் நிலைத்து நிற்பதால் நமக்கு மட்டுமில்லை, அநியாயமாக இறந்துபோனவர்க்கும் நாம் அநீதி செய்தவர்களாகின்றோம். மேலும் நமது படைப்புக்கள் நம்மை ஒடுக்கிய இனத்தோடு மட்டுமில்லை, நாம் ஒடுக்கிய இனத்தோடும், ஏன் நமக்கிடையிலும் கூட உரையாடல்களைச் செய்வதாக இருக்க வேண்டும். மாரி இந்த காளமாடனில் -அவரின் முன்னைய திரைப்படங்களைப் போல- ஏன் அதைவிட இன்னும் மேலாக- ஆதிக்க சாதிகளிடையே ஓர் உரையாடலை - உணர்ச்சிவசப்படாது செய்ய வந்திருக்கின்றார். இந்திய/தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கில் அதைப் போல பாவனை செய்கின்ற நம் ஈழத்து/புலம்பெயர் சினிமாக்காரர்கள் ஆகக்குறைந்தது மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து, எப்படி முரண்பாடுகளை நேர்மறையான கலைகளாக முன்வைப்பது என்கின்ற திசைகளைக் கற்றுக்கொள்ளலாம். மாரி ஒரு நேர்காணலில், 'வாழை'யில் நடந்த ஒரு கதையை அப்படியோ சொல்லியிருக்கின்றேன். அதில் உரையாடல்களைச் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கே பார்வையாளர்களுக்கு ஒரு பெரும் மெளனத்தையே விட்டுச் சென்றேன். ஆனால் காளமாடன் பல்வேறு உரையாடல்களை -அது நேரோ எதிரோ- உருவாக்குவதையே விரும்புகின்றேன் என்று கூறியிருப்பார். மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, எந்தக் காட்சியிலும் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து இன்னொரு தரப்பை உணர்ச்சியூட்டக்கூடிய அசலான கதையை பொதுவெளியில் பார்வையாளருக்கு முன்னே வைப்பதற்கு வீரம் அல்ல, ஒருவர் தன் கலையை அந்தளவுக்கு நம்பினால்தான் இவ்வாறு அச்சமின்றி ஓர் படைப்பை உருவாக்க முடியும். அந்தவகையில் மாரி பாராட்டுக்குரியவர். இப்போது முன்பு போல அல்லாது மிகக் குறைவாக வருடத்துக்கு இரண்டோ/மூன்றோ தமிழ்த் திரைப்படங்களைத்தான் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் கடைசியாக வந்த மாரியின் 'மாமன்னன்', 'வாழை', இப்போது 'காளமாடன்' எல்லாவற்றையும் தவறவிடாது திரையங்கில் பார்த்தது மட்டுமின்றி முதல் காட்சியாக இவற்றைப் பார்த்திருக்கின்றேன் என்பதும் மாரி மீது என்னைப் போன்ற பார்வையாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காது இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்? ******** https://www.facebook.com/share/p/178yu7Yigi/?mibextid=wwXIfr
  40. இந்த இருவரும் யார் 100 அடிக்கிறது என்று போட்டி போடினம் போல. இந்த அவுஸ்ரேலியப் பெண்கள் வேறு ஒரு உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
  41. தினமும் ஒரு வரி தத்துவம் · ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம். எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம். "அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்: "சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும். அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை." படித்து பகிர்ந்து Voir la traduction ***..வாழ்க்கை தத்துவங்கள் ..*** · Jino Sivaji ·edSoportns7c8b9545g1gu7 58c3um1l2gm31 ,ct579r2e8umu9o51:0t8o · ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார். ரொம்ப எளிமையான மனிதர். தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை. சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார். அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார். வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை. தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை. மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார். இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார். இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை. அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார். இவர் அதை மறுத்து விட்டார். சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார். அவர் அதுவும் வேண்டாம் என்றார். சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார். தேவையில்லை என்றார் இவர். நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன். அதுவும் வேண்டாம் என்றார். நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும். அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன். மக்கள் தொண்டுக்கு ஊதியம் எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார். முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார். ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார். அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார். அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார். இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது. அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார். நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இது நடைபாதை. இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன். இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது. சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம். பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள். இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள். நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது. நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார். அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள். நான்தான் நீதிபதி. உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர். ஐயா வணக்கம்! எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம். ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள். பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள். அதற்கு நீதிபதி இது மக்கள் நடந்து போகிற நடைபாதை. அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நீங்கள் சொல்லுங்கள் என்றார். சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள். என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை. அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி. நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள். அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள். உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார்? நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள். Voir la traduction
  42. நீங்கள் சொன்னத அந்த அமெரிக்கர் வந்து சொல்லட்டும் பாப்பம்... யோவ் பெரிசு கலியாணவீடு சாமத்தியவீடுகளில் பெட்டி பெட்டியாக அமுக்கியதை எல்லாம் சொல்லவா?படங்களைப் போடவா? கண்ணாடி வீட்டுக்காரன் கல்லெறியக் கூடாது கண்டியளோ!
  43. காட்சி 3: ( ஒரு வயதான அம்மா கையில் ஒரு மடிக் கணனியுடன் நிறுவனத்திற்கு வருகின்றார். அங்கே உதவியாளர் உட்கார்ந்திருக்கின்றார்.) உதவியாளர்: வாருங்கள் அம்மா………… என்ன எங்களின் பிரம்மம் என்ன சொல்லுகின்றது…………. அம்மா: உன்னுடைய பிரம்மம் ஏதும் சரியாகச் சொல்லியிருந்தால், நான் ஏன் இவ்வளவு தூரம் வருகின்றேன்……… உன்னுடைய பிரம்மத்திற்கு எதுவுமே தெரியாது……. சரியான ஒரு பிரம்மசக்தி………. உதவியாளர்: நீங்கள் ஒன்றும் யோசிக்காமல் அதைத் திட்ட வேண்டாம், அம்மா……….அதுக்கு எல்லாமே தெரியும். தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது தெரியாது என்றாலும், நாங்கள் அதை ட்ரெயின் பண்ணப் பண்ண அது குயிக்காக பிக்அப் பண்ணிவிடும்………… அம்மா: என்ன பெரிய எட்டாம் தலைமுறை…………. இதுக்கு விசாலாட்சியைக் கூட தெரியாது…………. உதவியாளர்: யார் அந்த விசாலாட்சி………… அம்மா: உனக்கும் விசாலாட்சியை தெரியாதா……… அது சரி…….. உனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது போல……… அதனால் தான் நீ இன்னமும் முதலாளி ஆகவில்லை………… உதவியாளர்: (பின் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியபடியே) உங்களின் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள்……….. பிரம்மமும், நானும் சேர்ந்து பார்க்கின்றோம். அம்மா: அது தானே வந்த போதே சொன்னேனே………… விசாலாட்சி தான் அதைச் செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியும்……….. ஆனால் பிரம்மத்திற்கு அது எதுவுமே தெரியவில்லை…………. உதவியாளர்: விசாலாட்சி உங்களின் மகளா, அம்மா…………. அம்மா: அட இல்லையடா……..விசாலாட்சியும், நானும் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: எப்ப படித்தனீர்கள்………….. அம்மா: (யோசிக்கின்றார்……. இரண்டு மூன்று அடிகள் நடக்கின்றார்….) 50ம் ஆண்டு, 55ம் ஆண்டு இருக்கும் போல………. பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: (முழித்துக் கொண்டே……….) அது எப்படி அம்மா பிரம்மத்திற்கு தெரியும்……………… அம்மா: இதற்கு எல்லாம் தெரியும் என்று தானே அன்று சொன்னீர்கள்……… இப்ப வந்து பிரம்மத்திற்கு அது எப்படி தெரியும் என்று கேட்டால், அப்ப பிரம்மத்திற்கு என்ன தான் தெரியும்………….. (உதவியாளர் மேலே முகட்டைப் பார்த்தபடியே இருக்கின்றார்.) அம்மா: விசாலாட்சியையே இதற்கு தெரியாது என்றால், இதற்கு அந்த விசயம் எங்கே தெரியப் போகின்றது………… உதவியாளர்: (மெல்லிய குரலில்) ஏதோ விசயம் விசயம் என்று சொல்லுறியள்…………அது என்ன விசயம்……… அம்மா: அதை எப்படி நான் என் வாயால் சொல்வது………. உதவியாளர்: இவ்வளவையும் உங்கள் வாயாலே தானே சொல்லுகின்றீர்கள்………. அதையும் சொல்லுங்கள்………. பிரம்மத்திற்கே தெரியாத கோடான கோடி விசயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றது என்ற உண்மை இப்ப எனக்கு விளங்குது……………. அம்மா: இதைத் தானே நானும் சொன்னனான்………… நாங்கள் பழைய ஆட்கள் படு புத்திசாலிகள்………. கண்ணாலே பார்த்தே காயோ அல்லது பழமோ என்று சொல்லிவிடுவம். ஒருவரின் நடையை வைத்தே அவரை எடை போட்டு விடுவம்……. உதவியாளர்: கால் தற்காலிகமாக சுளுக்கி இருந்தால் அவையளையும் சரியாக எடை போடுவியளோ………… அம்மா: அந்த ஆளுக்கு சுளுக்கு இருக்குது என்று பார்த்தே கண்டு பிடித்து விடுவோம்……… நாங்கள் அப்பவே நிலவுக்கு போய் விட்டோம்………. நீங்கள் இப்பத்தான் போகின்றீர்கள்…….. உதவியாளர்: ஓம்………… ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்க முன், எங்கட ஆட்கள் அந்தக் காலத்திலேயே நிலாவுக்கு போய், அங்கே வடை சுட்டார்கள் என்று அம்மம்மா ஒரு கதை சொன்னவா……… ஞாபகம் இருக்குது………. இதைத்தான் வாயால வடை சுடுகிறது என்று இந்த நாட்களில் சொல்லிகினம் போல……… அம்மா: அது யார் அந்த ஆம்ஸ்……….. (அம்மா மடிக்கணனியை திறக்க முற்படுகின்றார்………) உதவியாளர்: வேண்டாம்……….. வேண்டாம்……..நீங்கள் பிரம்மத்திடம் இதுவரை கேட்ட கேள்விகளே போதும்………. இதுக்கு மேலே வேண்டாம்………. அம்மா: அப்படி என்றால் நான் உங்களுக்கு ஒரு சதம் கொடுக்கப் போவதில்லை…… உதவியாளர்: இல்லை……. நீங்கள் கொடுக்கவே வேண்டாம்…….. ( அப்படியே தனிய நடந்து போய்க் கொண்டே தனக்குத்தானே சொல்லுகின்றார் ………) உங்களயும், உங்கள் விசாலாட்சியையும் விற்றே கம்பனி காசை எடுத்துக் கொள்ளும்………….ஆனால் என்னோட எதிர்காலம் தான் மங்கலாகிக் கொண்டே போகின்றது………………… (தொடரும்................)
  44. சுவரசியமாக உள்ளது கடஞ்சா நிறைய jargons கொண்டு வந்து கொட்டியுள்ளீர்கள். பலருக்கு இது விளங்க கஸ்டமாக இருக்கும் என நினைக்கின்றேன். உங்களுக்கும் இதன் அர்த்தம் புரியாமல் பாவித்துள்ளீர்கள் Letter of credit Credit rating risk profile, risk apatite Hedging / forwarding risk analysis, modelling, technical and fundamental analysis window dressing balance sheet position dividend payable differed tax - time difference tax depreciation பிரயோகிகக்கபடும் உள்ளது மேலே உள்ள ஒவ்வொன்றுக்கும் ரிப்போர்டிங் ஸ்டன்டர்ட் உள்ளது PLC என்கிறீர்கள் related party எவரும் உள்ளார்களா ? subsidiary, associate, ஏதும் உள்ளதா? intangible asset, factious assets ஏதும் உள்ளதா? அல்லது mere window dressing ! யூகே இல் வேலை ஒரு ஒடிடராகவும், அதேவேளை பெட்ரோல் செட்டில் ஒரு விற்பனையாளராகவும் வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். தமிழர்கள் பலர் சுத்து மாத்து செய்யக்குடியர்வகளே அதில் சந்தேகமில்ல்லை. அமெரிக்கவிலும் என்ரோன் எனும் ஒரு எண்ணை கம்பனி இப்படி வீழ்ந்து போனது. ஒரு case study க்காக‌ கள உறவு நாதமுனி வந்து விபரமாக எழுத நயமாக வேண்டிக் கொள்கின்றேன்.
  45. அததெரண கருத்துப் படங்கள்.
  46. 1970 களில் தனியார் பாடசாலைகளில் இரசாயனவியல் ஆசிரியராக மிகவும் பிரபலமாக இருந்தார்.அந்தக் காலங்களில் படித்தவர்களுக்கு இவரிடம் படிக்காவிட்டாலும் இவரைத் தெரியாமலிருக்க முடியாது. இரசாயனவியல் ஆசிரியராக சிறிபதி மாஸ்ரர் என்பவரும் இருந்தார்.இருவரும் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.பொண்ட் மாஸ்ரர் பாடசாலைக்கு வெளியிலும் எல்லோருடனும் நண்பர்கள் போல பழகுவார். நானும் சிறிதுகாலம் இவரிடம் படித்தேன்.வகுப்புகளுக்கு ஒழுங்காக போவதில்லை. இவரிடம் இருந்த திறமை என்னவென்றால் சோதனை வருவதற்கு முதல் கடந்தகால வினாத்தாள்களை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக விழங்கப்படுத்தி தானே ஒரு வினாத்தாள் தயாரித்து மாதிரிச் சோதனையும் எழுத வைப்பார். இதனால் சோதனைக்கு வரும் கேள்விகள் இவருக்கு முதலே தெரியவருகிறது என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு. வீதிகளில் எப்ப கண்டாலும் 5 வினாடிகள் என்றாலும் கதைக்காமல் போக மாட்டார்.அவ்வளவு ஒன்றிப் போயிருந்தோம். 1977 களில் வெளிநாடு வெளிக்கிட்ட பின்பு என்ன ஆனார் என்றே இதுவரை தெரியாமல் இருந்தேன்.அனேகமாக வெளிநாடு சென்றிருப்பார் என எண்ணியிருந்தேன். இரு தினங்களுக்கு முன் முகப்புத்தகம் ஊடாக இந்த செய்தியைப் பார்த்த போது மிகவும் கவலையாக இருந்தது. இளம் வயதிலேயே காலமாகியுள்ளார்.காலமாகி 5 வருடங்களின் முன் காலமாகியுள்ளார். எப்படி காலமானார்?சுகயீனமாக இருந்தாரா?குடும்பம் பிள்ளைகள் என்று இருந்தாரா? எதுவுமே தெரியவில்லை. என்னைப் போல இதை வாசிக்கும் நீங்களும் இவரைப் பற்றி முன்னரே அறிந்திருக்கலாம்..இவரிடம் படித்திருக்கலாம்.ஏன் இவர் இறந்த செய்தி கூட தெரியாமல் இருக்கலாம். யாருக்காவது விபரங்கள் தெரிந்திருந்தால் அறியத் தரவும். நன்றி. ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.
  47. கோசான் நீங்கள் குடுத்து வைத்தவர், ஒரு ஆலயத்தில் குடியிருக்கிறீர்கள், எல்லோருக்கும் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்காது.🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.