Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    12678
    Posts
  2. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    7
    Points
    35520
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19112
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/24/25 in all areas

  1. வினா 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது என்று கேட்டிருந்தேன். பாகிஸ்தான் அரை இறுதிபோட்டிக்கு தெரிவாகாத காரணத்தினால் இனி எல்லாப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ( 20 ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில்) 7 விக்கெட் இழப்புக்கு 87 ஒட்டங்கள் பெற்றது. ஓவர்கள் குறைக்கபடாமல் இருந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 114 ஒட்டங்களை எடுத்துள்ளது. 11 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 55 புள்ளிகள் 2) ஏராளன் - 50 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 50 புள்ளிகள் 4) ரசோதரன் - 50 புள்ளிகள் 5) சுவி - 48 புள்ளிகள் 6) கிருபன் - 48 புள்ளிகள் 7) புலவர் - 48 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 48 புள்ளிகள் 9) வீரப்பையன் - 47 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 44 புள்ளிகள் 12) கறுப்பி - 44 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 42 புள்ளிகள் 14) வசி - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 38 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 59).
  2. வினா 26) பாகிஸ்தான் இலங்கைக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் கிடைக்கின்றன. 1) அகஸ்தியன் - 53 புள்ளிகள் 2) ரசோதரன் - 50 புள்ளிகள் 3) ஏராளன் - 48 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 48 புள்ளிகள் 5) வீரப்பையன் - 47 புள்ளிகள் 6) சுவி - 46 புள்ளிகள் 7) கிருபன் - 46 புள்ளிகள் 8) புலவர் - 46 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 46 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 42 புள்ளிகள் 12) கறுப்பி - 42 புள்ளிகள் 13) வசி - 40 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 36 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 57).
  3. என்னைப் பொறுத்தவரைக்கும் போதைப் பொருள் விற்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய அதி குறைந்த பட்ச தண்டனை தான் மரண தண்டனை. மரண தண்டனை கண்டிப்பாக அவசியமான ஒன்று. சிறுவர் மீது பாலியல் வல்லுறவு புரிகின்றவர்களுக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும், மரண தண்டனை மிக அவசியம்.
  4. கலக்கிறீங்க. சுடச்சுட முடிவுகள்.
  5. அப்பா எங்கே? வேலைக்குப் போய் விட்டாரா....? குடும்பப் புகைப்படம் எடுக்கும் போது ... அப்பா, வீட்டில் நிற்கும் நேரமாக பார்த்து எடுங்கள். 😂
  6. Baskar Jayraman Mookkammal est à Bhavani Homeo Pharmacy. · ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்.. விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.. அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த சமயம்.. "ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?" இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்.. ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்.. அவருக்கு பதிலில் திருப்தி இல்லை.. அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்".. அதிலும் அவருக்கு சம்மதமில்லை.. இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது.. ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்.. அந்த சிறுமி எழுகிறாள் "ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. என்கிறாள்.. அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது..😊" ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்கிறது..👏🏻" அது கலாம் ஐயாவின் கைத்தட்டல். ஐயா அவர்கள் கூறினார்: " குட்..! இதுதான் உண்மையான பதில்..💓" அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு..👍🏻" அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.? கனிவான அன்பும் தளராத நம்பிக்கையும் உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே?... அந்த நம்பிக்கை தானே அழகு!" அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகிறது.💓" படித்ததில் ரசித்தது... Voir la traduction
  7. 1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மேற்கொள்ளும் தகுதி பெற்றிருந்தேன். எனது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 15 அல்லது 16 மாணவர்கள் இருந்தார்கள். தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஆண்களும் பெண்களும். இவர்களுள் ஒரு சிலருடன் உடனடியாகவே நட்பாகிப் போய்விட்டேன். மலர்மன்னன் (என்னுடன் உயர்தரத்தில் சில டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததனால் முன்னரே பழக்கமானவன்), மதியக்கா(உடுப்பிட்டி), கலா அக்க (சிலாபம்), பைரூஸ் (புத்தளம்), சிவா (காரைநகர்) என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில நண்பர்கள். இவர்களுள் மலர் மன்னனும், பைரூஸும் என்னூடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வகுப்புக்கள் முடிந்த நேரங்களுள் இவர்களுடன் ஊர்சுற்றுவதே வழமையாகிவிட்டது. பைரூஸ் பாணதுறையில் இருந்தே கொழும்பிற்கு வந்து போவான். மலர்மன்னன் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தான். மலரும், பைரூஸும் இயல்பாகவே கவிதை எழுதுவதில் வல்லவர்கள். வைரமுத்து, கவிக்கோ எழுதிய கவிதைகளை எனக்கு அடையாளம் காட்டி கவிதைகளில் ஈடுபாட்டினை உருவாக்கித் தந்தவன் பைரூஸ். அவன் தமிழ் எழுதுவது அச்சியந்திரத்தில் எழுதப்பட்ட‌துபோல அழகாயிருக்கும். விரயமாகும் வேளைகளில் ஏதோவொரு தலைப்பிற்குக் கவிதை எழுதுவோம். பைரூஸ் எழுதும் கவிதைகள் இரு வரிகளில் ஹைக்கூ வடிவத்தில் பளிச்சென்று பற்றிக்கொள்ளும். மலர் மன்னனும் அப்படித்தான். இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு முறை இந்தியப்படை ஈழத்தமிழர்களுக்கு தியாகங்களைப் புரிந்தது என்று மாலன் எனும் பெயரில் வெளிவந்த கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையினை சரிநிகர் அப்படியே பிரசுரித்திருந்தது. அதனை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றி நான் பைரூஸுடனும், மலருடனும் பேசும்போது வெகுவாகவே பாராட்டியிருந்தார்கள். ஒரு நாள் தனது கதைபற்றி பைரூஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பனார் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும், மன்னாரில் அவர்கள் வசித்து வந்தார்கள் என்றும், புலிகள் வெளியேறச் சொல்லி அறிவித்ததன் பின்னர் கையில் அகப்பட்ட ஒரு சில உடைகளோடு தாம் கிளம்பி புத்தளத்திற்கு வந்ததாகக் கூறினான். தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்து ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அவன் புலிகளின் தாக்குதல்கள் குறித்து நானும் மலரும் கிலாகித்துப் பேசும்போது தவறாமல் அவனும் கருத்துப் பகிர்வான். ஆகவே, அவன் முன்னால் எமது விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசுவது எமக்குச் சிரமாமாக இருந்ததில்லை. ஒருமுறை அவனது வெளியேற்றம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவனது இடத்தில் இருந்து அவ்வெளியேற்றத்தினை என்னால் உணர முடிந்தது. ஆகவே அன்றிரவு வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றியதுபற்றி சரிநிகரில் எழுதுவதென்று தீர்மானித்தேன். முதன்முறையாக புலிகளுக்கெதிராக என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் அது. முஸ்லீம்களை எதற்காக அன்று வெளியேற்றினார்கள், வெளியேறும்போது எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன, எத்தனை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற எதுவித தெளிவும் இன்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. 1988 இற்குப் பின்னர் அங்கு வாழ்ந்ததுகூடக் கிடையாது. ஆகவே வெளியேற்றம் குறித்த சரியான பார்வையின்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சரிநிகரும் எந்தத் தணிக்கையும் இன்றி அதனைப் பிரசுரித்தது. பைரூஸுடன் அக்கட்டுரை பற்றி பகிர்ந்துகொண்டேன். உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கிய அவன், அக்கட்டுரையினை எழுதியதற்காக எனக்கு நன்றி கூறினான். பின்னர் ஒருநாள் என்னிடம் வந்து எனது கட்டுரையினை அகதி என்ற பெயரில் வெளிவந்த முஸ்லீம்களுக்கான பத்திரிக்கை ஒன்றில் மீள் பிரசுரிக்க அனுமதியளிக்கிறாயா என்று கேட்டான். நானும் ஆமென்று கூறவே, அக்கட்டுரை மீளவும் பிரசுரமானது. இதனை அறிந்தபோது மலர்மன்னன் கொதித்துப் போனான். வெளியேற்றியது பிழை என்று உன்னால் எப்படிக் கூறமுடியும்? கிழக்கில் அவர்கள் எம்மை நடத்தும் முறை பற்றி நீ அறிந்திருக்கிறாயா? கொழும்பில் இருந்துகொண்டு, நீ நினைத்தபடி இப்படி எழுதியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டான். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுக்கு 90 களின் ஆரம்ப காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் படுகொலைகள், அவற்றில் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் பங்களிப்பு என்பன நன்கு தெரிந்தே இருந்தது. ஆகவே, நான் வெறுமனே புலிகளை விமர்சித்து எழுதியிருந்தது அவனுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.
  8. இல்லை பலர் வியாபாரம் ஆரம்பிப்பதே வங்குரோத்து அடித்து அதில் (உறவுகளுக்கு மாற்றிய, வெளியால் எடுத்த காசை) ஆட்டையை போடத்தான். நடிகை ஷில்பா செட்டியின் கணவர் குடும்பம் இலண்டன் ஈலிங் ரோட்டில் ஒரே நகை கடையை வைத்து, பல குடும்ப உறுப்பினர் மாறி, மாறி இப்படி செய்துள்ளனர். கடையின் பெயர் ஐந்து வருடம் ஒரு தரம் மாறும். இதில் இழப்பை சந்திப்பது திறைசேரி. அதாவது ஒவ்வொரு குடிமகனதும் வரிப்பணம். சஞ்சீவும் மனைவியிம் இப்படி நோக்கோடு ஆரம்பித்தனர் என நான் சொல்லவில்லை. ஆனால் கடந்த 3 வருடத்திலாவது இவர்கள் dishonesty யாக நடக்க ஆரம்பித்துள்ளனர். எண்ணை வழங்கியவர்கள் மீதி எண்ணையை எடுத்து கொண்டார்கள். கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர். தத்தளிக்கும் ஒரு வியாபரத்தை நீங்க முயல்பவர் இப்படியா செய்வார்? பிள்ளைகள் இருவர் பேரில் டிரஸ்டில் எல்லாத்தையும் போட்டு விட்டு. மாடமாளிகையை மார்கெட்டில் போட்டு விட்டு ஓடி விட்டார்கள். ஏமாந்த சோணகிரிகள்? சம்பளம் இல்லாத தொழிலாளர்கள். திறைசேரி - அதாவது என்போன்றோரின் வரிப்பணம். உண்மையான தொழில்முனைவோர் எண்டால் இதை நாட்டில் நிண்டு டீல் பண்ணி இருப்பார்கள். முதலில் தமக்கு இலாபம் ஈட்டி கொடுத்த வேலியாட்களின் கடைசி மாத சம்பளத்தையாவது கொடுத்திருப்பர். இதை களவு எண்டு சொன்னால் ஒயில் கானோடு ஒருவர் வருகிறார், ஐநா சபையை இன்னொருவர் கூட்டி வருகிறார்😂
  9. வினா 32) 4 வது அணியாக இந்தியா அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 51 புள்ளிகள் 2) ரசோதரன் - 48 புள்ளிகள் 3) ஏராளன் - 46 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 46 புள்ளிகள் 5) வீரப்பையன் - 45 புள்ளிகள் 6) சுவி - 44 புள்ளிகள் 7) கிருபன் - 44 புள்ளிகள் 8) புலவர் - 44 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 44 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 42 புள்ளிகள் 11) வாதவூரான் - 40 புள்ளிகள் 12) கறுப்பி - 40 புள்ளிகள் 13) வசி - 38 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 15) வாத்தியார் - 34 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 55)
  10. வினா 25) 53 ஓட்டங்களினால் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது . 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 50 புள்ளிகள் 2) ரசோதரன் - 47 புள்ளிகள் 3) ஏராளன் - 45 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 45 புள்ளிகள் 5) வீரப்பையன் - 44 புள்ளிகள் 6) சுவி - 43 புள்ளிகள் 7) கிருபன் - 43 புள்ளிகள் 8) புலவர் - 43 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 43 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 41 புள்ளிகள் 11) வாதவூரான் - 39 புள்ளிகள் 12) கறுப்பி - 39 புள்ளிகள் 13) வசி - 37 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 15) வாத்தியார் - 33 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 54)
  11. என் தற்போதைய ஆசை: கடஞ்சாவின் எழுத்துக்களைப் வாசித்து "நான் கள்வன் அல்ல, ஒரு வழி தவறிய ஆடு!" என்று நினைத்து சஞ்ஜீவும் ஆரணியும் பிரிட்டனுக்கு மீள வர வேண்டும்😂! பிரிட்டனின் நீதித்துறை தன் கடமையை செய்ய உதவியமைக்காக கடஞ்சாவுக்கு ஒரு OBE கொடுக்கும் பக்கிங்ஹாம்!
  12. படம் : சீவல்பேரி பாண்டி கிழக்கு சிவக்கையிலே கீரை அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே நான் பழசை நினைக்கையிலே அருவா பட்டிருச்சு மீசை வெட்ட்ருவா என் ஆசை சுட்டிருமா உன் வேஷம் கலைஞ்சிருமா நான் நேசம் நினைக்கையிலே நெஞ்சுருகிப்போயிருச்சே
  13. முதல்வர் ஆக ஆசையில்லை ...எனினும் கிரிகட்டு ஆர்வம் ..வளர்வதில் சந்தோசம் ...இது குருட்டுலக்கில் வந்ததல்ல..
  14. பிரம்மம்: சுய அறிவும், பொதுப் புரிதலும் இல்லாத மனிதர்களுக்கு எத்தனை தகவல்களை வெளியில் இருந்து கொடுத்தாலும், அது விழலுக்கு இறைத்த நீர் தான்……….. இவர்கள் இப்படியே தான் காலத்துக்கு காலம் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கப் போகின்றார்கள்…….. முழுதும் வாசித்தேன் அண்ணை, முடிவு தான் மிகச் சிறப்பு! யாழுக்கு கிடைத்த ரசனை மிகுந்த எழுத்தர். நன்றியும் வாழ்த்துகளும் அண்ணை. காணொளியையும் இணைத்து விடுங்கள்.
  15. புத்தகம்ன்னா புத்தகம்… அப்படி ஒரு புத்தகம். படிக்கக் கையில் எடுத்ததில் இருந்து முடிக்கும் வரை அவ்வளவு சுவாரசியம். . எல்லாம் நம்ம தலைவர் லாலு பிரசாத்தின் சுயசரிதைதான். . லாலு பிரசாத் என்றாலே ஒரு இளக்காரப்பார்வை எண்ணற்றவர்களிடம் உண்டு. அதுவும் அவரை நம்மூர் பசுநேசர் ராமராஜனோடு ஒப்பிட்டுச் செய்த பகடிகள் ஏராளம். . ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அவர் யார்? எப்படிப்பட்டவர்? எவ்விதம் இவ்வளவு உயரத்துக்கு வந்தார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த நூலில் இருக்கிறது. . அதிலும் தான் எந்த இடத்தில் தடுமாறினேன்…. தவறிழைத்தேன் என்கிற மனம் திறந்த ஒப்புதல் வாக்குமூலங்களும் உண்டு இதில். . அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறது. தமிழிலேயே தடுமாறும் நான் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை வாசித்துவிட்டேன் என்றால் உங்களால் முடியாதா என்ன? (GOPALGANJ TO RAISINA) . புறாக்களும் அணில்களும் எலிகளும் துள்ளி விளையாடும் அந்த மண் குடிசையின் இடுக்குகளில் சில வேளைகளில் தேள்களும் பாம்புகளும் கூட எட்டிப்பார்க்கும். . பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுல்ள ஒரு குக்கிராமமான புல்வாரியாவில் ஆறு சகோதரர்களோடும் ஒரு சகோதரியோடும் லல்லு பிறந்தார். . 1948 ஜூன் பதினொன்று என்று சான்றிதழ்கள் சொன்னாலும் கல்வி பெறாத தன் தாய் சொல்லும் பிறந்த தேதியில் சந்தேகம் இருக்கிறது என்கிறார். . ராமநவமியும் மொகரமும் பாகுபாடற்றுக் கொண்டாடப்படும் அக்கிராமத்தில் மரமேறி மாங்காய் பறிப்பது… . குட்டையில் குதித்து நீந்துவது… . எருமை மாடுகளின் மீது சவாரி செல்வது… . பிடுங்கிய கரும்பை சுவைத்தபடி வீடு வந்து சேருவது இதுதான் லல்லுவின் அலப்பரையான ஆரம்பப் பள்ளிக் காலங்கள். . அலப்பரையின் உச்சமாக ஊருக்கு வந்த பெருங்காய வியாபாரி மூட்டையை கிணற்று மேட்டில் வைத்துவிட்டு துண்டை உதறுவதற்குள் கிணற்றுக்குள் குப்புறப் பாய்கிறது மூட்டை. . உபயம் : லல்லூ பிரசாத். . வியாபாரியின் அலறல் கேட்டு மொத்த கிராமுமே திரண்டு வர.. ”அட…. உதவிக்கு இவ்வளவு பேரா…?” என அந்த வியாபாரி வியக்கும்முன்னே கையில் வைத்திருக்கும் குடங்களோடு கிணற்றை நோக்கிப் பாய்கிறது மொத்த கூட்டமும். . பின்னே…. நேற்றுவரை சாதாரணக் கிணறாக இருந்த அந்தக் கிணறு…. பெருங்காயக் கிணறாக பரிணாமம் பெற்றால் சும்மா இருப்பார்களா மக்கள்? . அப்புறமென்ன அந்தக் கிராமம் முழுக்கவே பெருங்காய சமையலும் பெருங்காய மணமும்தான். . இனி இவனை இங்கு வைத்துக் கொண்டிருந்தால் உருப்பட மாட்டான் என்று முடிவெடுத்த லல்லுவின் தாய் பாட்னா கால்நடைக் கல்லூரியில் தினக்கூலியாகப் பணியாற்றும் தனது மற்றொரு மகன் முகுந்த் ராயிடம் அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார். . அக்கிராமத்துக் குட்டைகளையும்… குளங்களையும்… பறவைகளையும்… நண்பர்களையும் பிரிய முடியாத லல்லுவின் கதறல் தாயின் செவிகளில் ஏறுவதேயில்லை. . முடிவு ? . பாட்னாவிலுள்ள பள்ளியை நோக்கிய பயணம். 66 பைசா தினக்கூலி வாங்கும் அண்ணனால் இரண்டு சட்டையும் ஒரு டிராயரும் மட்டுமே வாங்கித்தர இயலுகிறது. . தனது கிராமத்துக் கதைகள், மிமிக்ரி என வெளுத்துக்கட்டும் லாலு அரசு நடுநிலைப் பள்ளியின் கிளாஸ் லீடர். அண்ணனுக்கு உதவியாக சமைத்துத் தருதல் பாத்திரங்கள் கழுவுதல் என நகரும் நாட்கள் கல்லூரிக் காலத்தைத் தொடுகிறது. . பாட்னா பல்கலைக் கழகத்தின் B.N கல்லூரியில் காலெடுத்து வைக்கிறார் லாலு. கல்லூரியில் சேர்ந்தாலும் இரண்டு வேளை உணவோ… நாகரீக உடையோ அண்ணன்களால் வாங்கித்தர இயலுவதில்லை. . வசதிபடைத்த உயர்ஜாதியினர் மோட்டார் சைக்கிள்களில் கல்லூரிக்கு வர 10 கிலோமீட்டர் நடைதான் லாலுவைப் போன்ற ஏழை ஜாதிகளுக்கு. . அங்குதான் ஆரம்பிக்கிறது லாலுவின் முதல் சமூகப்பணி. . ஒருநாள் சட்டென்று கல்லூரியின் பிரதான வாசலின் முன்பாக நடுவில் நின்றபடி உரத்த குரலில் பேசத் தொடங்குகிறார்: . “நாங்கள் ஏழைகள்தான்… ஆனால் படிக்க ஆசைப்படுபவர்கள். பசியும் களைப்பும் மேலிட 10 கிலோமீட்டர் நடந்தே வந்தால் எங்களுக்குள் எப்படிப் படிப்பு ஏறும்? காலையில் கல்லூரியில் கால் வைத்ததில் இருந்து மாலைவரை பசிக்கு ஏதேனும் சிறுதீனி தின்னலாம் என்றால் அதற்கு பாக்கெட்மணி கொடுத்து அனுப்ப எங்கள் வீடுகளில் வசதியும் கிடையாது. கல்லூரி முடிந்தாலோ மீண்டும் வீடு நோக்கி அதே 10 கிலோமீட்டர் நடை. உடனடியாக கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும்…” என்று முழங்க… . துணைக்கு மாணவர்களும் கூட்டம் கூட்டமாக வந்துசேர்கிறார்கள். . லாலுவின் பேச்சையும் பேச்சின் வீச்சையும் கண்ட பல்கலைக் கழக நிர்வாகம் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு பேருந்துவிடச் சம்மதிக்கிறது. . போதாக்குறைக்கு கல்லூரிப் பெண்களை கேலி செய்பவர்கள்… விடாமல் துரத்துபவர்கள்… ரோட்டோர ரோமியோக்கள்… என எல்லோருக்கும் லாலு என்றால் சிம்ம சொப்பனம்தான். . பெண்கள் தேடிவந்து புகார் செய்வார்கள் லாலுவிடம். அதற்காக கேலி செய்யும் மாணவர்களை போலீசிடம் பிடித்துத் தருவது கல்லூரி நிர்வாகத்திடம் போட்டுத் தருவது என்றெல்லாம் போக மாட்டார் லாலு. . அவருக்கே ”உரித்தான” பாணியில் பாடம் எடுத்து மாற்றிக்காட்டுவார். பெண்கள் மத்தியில் லாலுதான் ஹீரோ. . B.N. கல்லூரியில் மட்டுமில்லை அதைத்தாண்டி பாட்னா பெண்கள் கல்லூரிக்கும் சார்தான் அத்தாரிட்டி. அக்கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே ஆண் லாலுதான். . இந்த வேளையில்தான் ராம் மனோகர் லோகியாவின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார் லாலு. . நிலப்பிரபுக்களின் மையமான பீகாரில் பெரும்பாலான நிலமும் கல்வியும் அரசியலும் அதிகாரமும் உயர்ஜாதியினர் கைகளில் மட்டுமே சுற்றிச் சுற்றி வந்தது. . தனது சோசலிச தத்துவத்தை சோதித்துப் பார்க்கும் சோதனைக் களமாக லோகியா பீகாரில் களமிறங்க லாலுவின் கவனமும் அவரது சோசலிஸ்ட் கட்சியை நோக்கித் திரும்புகிறது. . பிற்பாடு பாட்னா பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவரானதோ… . கல்லூரி தேர்தலில் அமைச்சரின் மகனையே மண்ணைக் கவ்வ வைத்ததோ… . வழக்கம்போல மாணவிகளின் நூறு சதவீத ஓட்டும் லாலுவிற்கே விழுந்ததோ… . பீகாரின் தலைநகரே வியந்த விஷயங்கள். . . லோகியாவிற்குப் பிற்பாடு ஜெ.பி என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களது ”முழுப்புரட்சி” அறைகூவலை ஏற்று மாணவர் போராட்டத்திற்கான அமைப்பாளர் ஆகிறார். . இதில் முக்கியமானது 18.3.1974 இல் நடந்த பீகார் சட்டசபை முற்றுகைப் போராட்டம்தான். . ஜெ.பி.யின் ஆணைப்படி தொடங்கிய இப்போராட்டத்தை கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு என சகல வழிகளிலும் ஒடுக்கப் பார்க்கிறது போலீஸ். துப்பாக்கிச்சூட்டில் லாலு கொல்லப்பட்டுவிட்டார் என்கிற புரளி கிளம்ப கொந்தளிக்கிறது பீகாரே. . பிற்பாடு இந்திராகாந்தி கொண்டு வந்த ”மிசா” சட்டத்தில் லாலு கைது செய்யப்படுவதும்… . 1974 ஜுன் 25 ஆம் நாள் நாட்டையே இருளில் தள்ளிய எமர்ஜென்ஸி அறிவிக்கப்படுவதும்… . நாடு முழுவதும் அரசியல்தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும்… . கருத்தடை என்கிற பெயரில் இந்திராவின் உத்தமபுத்திரன் சஞ்சய்காந்தி திருமணமே ஆகாத இளைஞர்களை கொத்துக் கொத்தாக தூக்கிப்போய் கட்டாயக் கருத்தடை செய்து அனுப்பப்படுவதும்…. . என நடந்தேறியவை அனைத்தும் இப்பன்றித் தொழுவ ஜனநாயகம் பல்லிளித்த காலங்கள். . இந்திரா அறிவித்த அவசரநிலை பிரகடனம் வாபஸ் வாங்கப்பட்டதும்… . நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்… . சிறைக்குள்ளிருந்தபடியே லாலு வக்கீலுக்கான LLB படிப்பில் பாஸானதும்… . சிறைக்குள் இருந்தபடியே எம்.பி. தேர்தலில் போட்டிபோட்டதும்… . சிறைக்குள் இருந்தபடியே 3.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் வரலாற்றில் கண்ட செய்திகள்தான். . ஆனால் இவையனைத்தும் நிறைவேறும்போது லாலுவுக்கு வயது வெறும் 29. . ஆம்… . இந்தியாவிலேயே அன்று இந்த வயதில் பாராளுமன்ற உறுப்பினரானது லாலு பிரசாத் மட்டும்தான். . இதுதான் வரலாறு காணாத செய்தி. . ஆனால் இதில் கல்லூரிக் காலம் தொடங்கி ஜெ.பி.யுடன் இருந்த காலம் வரை லாலுவுக்கு எதிராக கோள் மூட்டுவதிலும், ஏழரையைக் கூட்டுவதிலும் கவனமாக இருந்தது ஆர்.எஸ்.எஸும் அதனது மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும் தான். . அது இன்று வரையிலும் தொடர்கிறது என்பது வேறு விஷயம். . காரணம் : ஆர்.எஸ்.எஸுக்கும் பி.ஜெ.பி.க்கும் பேரைக்கேட்டால் தூக்கத்தில்கூட மூச்சா போய்விடக் கூடிய அளவுக்கு கிலி கொடுக்கும் புலியாக இருந்தவர்தான் லாலு பிரசாத். . அதற்கு உதாரணமாக ஒன்றே ஒன்றைச் சொல்லி விடைபெறுவது உத்தமமானது என்று நினைக்கிறேன். . அதுதான் : எல்.கே.அத்வானியின் கைது. . வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்காக வந்த மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த உத்தரவிட்டதும் அதைத் தாங்க முடியாமல் பி.ஜெ.பி ரத்த யாத்திரையைத் அறிவித்ததும் அதற்கு அத்வானி தலைமை வகித்து நகரம் நகரமாய் வந்து ரணகளப்படுத்தியதும் ஊர் அறிந்த செய்திகள். . பாட்னா பொதுக்கூட்டம் ஒன்றில் லாலு அறிவிக்கிறார் : . ”நேற்று இரவு என் கனவில் ராமர் வந்தார். என்னிடம்…. ’லாலு… என் பேரைச் சொல்லிக் கொண்டு ஒரு டுபாக்கூர் ரதயாத்திரை வருகிறது… அதைப் போய் தடுத்து நிறுத்தி ஆளைத் தூக்கி உள்ளே போடு…’ என்றார். பீகார் எல்லைக்குள் கால் வைத்தால் நிச்சயம் கைதுதான்” என்கிறார் லாலு பிரசாத். . ரதயாத்திரை வரும்போது மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் பயத்தில் மெளனம் காக்கிறார்கள். வழியெங்கும் கலவரம். . பீகாரை நெருங்குகிறது ரதயாத்திரை. . மத்திய அமைச்சர் முப்தி முகமது சையத் முதலமைச்சர் லாலுபிரசாத்தின் போன் லைனுக்கு வருகிறார். “ரத யாத்திரையைத் தடுக்க வேண்டாம். அப்படியே போக விட்டுவிடுங்கள்” என்கிறார். . ”நீங்கள் அதிகாரத்தில் மயங்கிவிட்டீர்கள்” என்றபடி போனை வைக்கிறார் லாலு. . ரதம் நெருங்குகிறது. . முதலில் சசராம் என்கிற இடத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்வதாகத் திட்டம். . தன் படுக்கை அறையில் அரசின் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை. கைதானால் கொண்டு வர ஹெலிகாப்டர் எல்லாம் ரெடி. ஆனால்… ரகசியமாகப் பேசப்பட்ட விஷயம் வெளியில் கசிகிறது. . ரூட்டை மாற்றுகிறார் அத்வானி . அடுத்ததாக தன்பாத் என்கிற இடத்தில் தடுத்து நிறுத்த முடிவெடுக்கிறார்கள். . இந்தத் திட்டமும் லீக்காகிறது. . மீண்டும் ரூட்டை மாற்றுகிறார் அத்வானி. . . லாலு பிரசாத்தின் அதற்கடுத்த திட்டம்தான் Plan B. . ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.கே.சிங்கை வரச்சொல்லி ஆணைபிறப்பிக்கிறார் லாலு. அடுத்து டி.ஐ.ஜி ராமேஷ்வருக்கு அழைப்பு. இவர்களோடு ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு தலைமைச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளை அழைத்து சமஸ்டிபூரில் அத்வானியைக் கைது செய்யும் திட்டத்தை விவரிக்கிறார். . இந்தமுறை ரகசியம் கசியாமல் இருக்க தனது இல்லத்தில் உள்ள எல்லா தொலைபேசி இணைப்புகளையும் துண்டிக்கச் சொல்லிவிட்டு வந்தவர்களை வெளியேவிடாமல் மூலையில் போய் குத்த வெச்சு உட்காரச் சொல்லுகிறார் லாலு. . அதன்பிறகு CRPF க்கு தகவல் சொல்வதோ… . ஹெலிகாப்டர் பைலட் அவினாஷிடம் அந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஒப்படைப்பதோ… . தன்னை சந்திக்க வந்த பி.ஜெ.பி. தலைவர்களிடம் “அத்வானி ஜி… யை கைது செய்ய நானென்ன பைத்தியக்காரனா?” என்று திசைமாற்றி விடுவதோ… . இதை நம்பி கட்சிக்காரர்களும் மீடியாக்காரர்களும் குப்புறப்படுத்து குறட்டை விட்டதோ…. . தனியாகத் தூங்கிய அத்வானிக்கு தேநீர் கொடுக்கச் சொல்லி சத்தமின்றித் தூக்கியதோ… . எல்லாம் இந்நூலில் வரும் பரபரப்பின் உச்சங்கள். . இவை எல்லாவற்றைவிடவும் முதலமைச்சராக இருந்த காலங்களில்… ”வழக்கமாக” ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தலித்துகளுக்கு வீடுகட்டித் தருவதற்கு மாற்றாக நகரின் மத்தியில் அடுக்குமாடி வீடு கட்டித் தந்தது… . அரசு நிலத்தில் அமைந்திருந்த கோடீஸ்வரர்களுக்கான 200 ஏக்கர் பாட்னா கோல்ப் மைதானத்தை கைப்பற்றி மிருகங்கள் சுதந்திரமாக உலவட்டும் என அருகில் இருந்த பாட்னா மிருகக்காட்சி சாலையோடு இணைத்தது…. . பணக்காரர்கள் குடிக்கவும் கும்மாளமிடவுமாய் இருந்த பாட்னா ஜிம்கானா கிளப்பில் 60 சதவீதம் கையகப்படுத்தி… அதில் இனி ஏழை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வீட்டு திருமண நிகழ்வுகள் உட்பட சகலத்தையும் வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கிறார். . அத்தோடு நிற்கவில்லை லாலு. . ஒரு புறத்தில் பணக்காரர்கள் விலை உயர்ந்த மதுபானங்கள் குடித்துக் கொண்டிருக்கும்போது ஏழைகள் என்ன செய்வார்களென யோசித்து . “இனி நீங்களே உங்களுக்கான உள்ளூர் கள்ளையும் கறியையும் கையோடு கொண்டு வாருங்கள். இங்கேயே உங்களுக்கு விருப்பமான ஆடு கோழி பன்றி என சமைத்துச் சாப்பிடுங்கள். இது வசதி உள்ளவனுக்கு மட்டுமேயான இடமல்ல. இது உங்களுக்கானதும்தான் என அறிவிக்கிறார் லாலு பிரசாத். . ஆளும் வர்க்கங்களும்… உயர் சாதிகளும்… உயர் அதிகாரிகளும் காண்டாவதற்கு இவைகள் போதாதா….? . இப்போது புரிகிறதா பிரதர் அவர் ஏன் உள்ளே இருக்கிறார் என்று….? . . . படித்ததும் கிழித்ததும் பார்ட் II https://pamaran.wordpress.com/2019/09/04/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/
  16. இது கூகுள் குரோமை ஒத்த வடிவமைப்புடன் உள்ளது. வேகமும் அதிகம். சாட்ஜிபிடி அதிகமாகப் பாவிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். முதலில் திறக்கும்போது உங்களது கணணியிலுள்ள உலாவியின் தரவுகள யாவற்றையும் எடுத்துக் கொள்ளவா, நீங்கள் பாவிக்கும் உலாவியிலுள்ள தடயங்கலை ஆராய்ந்து உங்களைப் பற்றி அறிந்து கொள்ளவா என்று கேட்கிறது. அநேகமாக கூகிள் உலகின் ஒற்றையாட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  17. சிறப்பான நாடகம், நன்றி அண்ணை.
  18. உலகம் மிகச் சின்னது என நினைக்க தோன்றுகின்ற தருணம் இது. நான் குருணாகலில் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒரு சிறு பகுதியினர் குருணாகலுக்கும் வந்து வாழத் தொடங்கினர். சிங்களத்தில் ஒரு சொல் தானும் தெரியாத, மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு குடும்பங்களுடன் பழகும் வாய்ப்பு அங்கிருக்கும் போது கிடைத்தது. மன்னாரில் ஒரு பெரிய புடவைக் கடையின் உரிமையாளராக இருந்த ஒருவரின் குடும்பமும் அதில் ஒன்று (மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் கொண்ட குடும்பம்). குடும்பத்தை காப்பாற்ற குருணாகலில் வீதியில் பெட் சீட் விரித்து சிறு சிறு பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, அவர்கள் பட்ட பாடுகளையும், அவமானங்களையும் நேரில் பார்த்தவன் நான். அந்த நேரத்தில் தான் சரிநிகர் பத்திரிகை என் கண்ணில் பட்டது. பேராசிரியர் சிவத்தம்பி போன்றோரோ முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக கள்ள மெளனம் சாதித்துக் கொண்டு இருந்த நேரத்தில் சரிநிகர் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டு இருந்தது. முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்றம் தொடர்பாக எதிர் கருத்துகளை கொண்ட என்னைப் போன்ற எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்களின் பகுதியினரின் ஆன்மாவாக அது ஒலித்துக் கொண்டு இருந்தது. இதே காரணத்திற்காகத்தான் ரஞ்சித்தும் சரிநிகரில் பங்களிக்க தொடங்கியிருக்கின்றார் என அறிய ஆச்சரியமாக இருக்கின்றது. ......அன்றில் இருந்து சரிநிகரில் நானும் பல சிறு கட்டுரைகளையும், நையாண்டி பத்திகளையும் எழுத ஆரம்பித்து, சரிநிகர் நிறுத்தப்படும் வரை அது தொடந்தது. சரிநிகர் மூலம் தான் எனக்கு சேரன், வ,ஐ.ச ஜெயபாலன், விக்கினேஸ்வரன், கவிஞன் றஷ்மி, அவ்வை, கொல்லப்பட்ட டி.சிவராம் போன்றோரின் தொடர்பும் நட்பும் கிடைத்து இன்று வரைக்கும் தொடர்கின்றது..
  19. ம‌ழை கார‌ன‌மாய் ப‌ல‌ போட்டிக‌ள் கைவிட‌ப் ப‌ட்ட‌து............இன்று ந‌ட‌க்கும் போட்டியும் கைவிட‌க் கூடும் அப்ப‌டி கை விட்டால் வ‌ங்கிளாதேஸ் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும் இந்த‌ உல‌க‌ கோப்பையில்😁............................
  20. அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா? எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்! மிக அருமையான வினா! குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்! இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்! ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ? ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ? அப்போதும் உதைக்கிறதே! குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்? ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சிறுத்தையும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், சில-நிமிட நேரத்திலேயே, சோர்வடைந்து, வேகம் குறைந்து நின்றுவிடும். இவற்றுக்கு, அதிக-வேக ஓட்டத்தை, வெகுநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் - STAMINA - இல்லை! குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால், இவற்றின் இரை-விலங்குகள் தப்பிவிடும்! மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடமும் இல்லாத ஒரு திறன் குதிரையிடம் உண்டு! சீராக, ஒரே வேகத்தில், நீண்ட நேரம் ஓடக் கூடிய திறன் - STAMINA, குதிரையிடம் மட்டுமே உண்டு! எனவேதான், குதிரைத்திறன் (HORSE POWER) திறன்-அலகாகக் கொள்ளப்படுகின்றது! வெகுநேரம் தாக்குப் பிடிக்கும் திறனில், குதிரைக்கு இணையான விலங்குகள் இவ்வுலகில் இல்லை. Umamahesvari Ck
  21. Dr. V Mohan explains the causes of diabetes and how to prevent it, and what steps to follow to correct diabetes. காணொளி கீழே👇 https://youtu.be/hhdAoFJHHmU?si=c9rwWFC_3KoPBI5z
  22. நீங்கள் சொல்வது சரிதான். இது இவர்கள் மட்டும் செய்த பிழை அல்ல. கம்பெனியில் அதிகாரத்தில் இருந்த அனைவரும் சேர்ந்தே, கிடைத்தவரை இலாபம் என்ற அடிப்படையில் உருவ கூடியதை உருவி உள்ளார்கள் என்றே நான் நினைக்கிறேன். இங்கேதான் KPMG யை அனுப்பி விட்டு - இன்னொரு பிரபலமாகாத கணக்காளரை உள்ளே எடுக்கும் போதே இப்படித்தான் இதை முடிப்பது என திட்டமிட்டே இதை செய்துள்ளார்கள் என நினைக்கிறேன். நட்டத்தில் ஓடும் கம்பெனிகள் டிவிடென் கொடுப்பது வழமை என்பதையும் ஏற்கிறேன். ஆனால் கம்பனியின் இருப்பே கேள்விகுறியாகலாம் என்ற போது இப்படி எடுப்பது - சட்டப்படி சரியாகினும், இவர்கள் நோக்கம் என்ன என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. மீண்டும் சொல்கிறேன்…ஆரம்பத்திலேயே களவு எண்ணத்தில் தொடங்கியதாக நான் நினைக்கவில்லை. ஆனால் கடைசியில் அப்படித்தான் முடித்துள்ளார்கள்.
  23. ஐசே நான் டொஹா கட்டர விட்டுபோய் இரண்டு வருடம் வா. நிம்ம‌தியா இலங்கைல மாஸ் ஹொல்டிங், ஹெல க்லோதிங் என பெரிய கம்பனில வெல செஞ்ச என்னை புடிச்சி ஓனர் தன்ற நோர்த் ஆப்ப்ரிகா, எகிப்து கைரோ வில உள்ள் பெக்டரில‌ போய் கொஞ்ச நாள் வெல செய் என்ரு என்னை அனிப்பினாருவா. ஐசே பசுந்தான ஈஜிப்சியன் கிளியோபட்ராக்கள் குட்டிகளோடவா இருகேன். மார சூன் வா. இன்னைக்கு எகிப்திய நைல் நதி கிட்ட ஒக்காந்து கோப்பிய உறிஞிசிட்டு ஒங்கட, ஜஸ்டின்ட கருத்த பர்ர்த்டேன் வா ஐசே சிரிப்பு தாங்க ஏலலவா. அப்ப்புடி சிரிப்பு வா தாங்க முடியலவா. ஈஜிப்சியன் குட்டிகள் என்னையா பயிதியம் என நினக்குறாங்கவா? பாவம் என்று ஒயில் தொடைக்க போனேவா. நீங்கள் வேணா வேணா சொல்ல சொல்ல போய் தொடச்சேன் வா. ஐயோ என்ட மேல் என்லாம் ஒயில் வா. ஐசே பிசின் மாதிரி ஒட்டதுவா ஒயில். சோப் போட்டும் போவுதில்லவா. லாம்பெண்ணை ஏதாவது போட ஏலுமாவா? காப்பாத்துங்க வா...
  24. திறன் என்பது பிழை. திறன் என்பது efficient or efficiency, பொதுவாக தசம தானத்தில் கதைப்போம். உதாரணம்80% திறன் / 80 % efficient இயந்திரம் . வலு தான் சரியான சொல் (குதிரை வலு). உதாரணம் 10 குதிரை வலு படகு . 10ம் வகுப்பில் “வேலை, வலு, சக்தி” (work, power and energy) என்று ஒரு அத்தியம் இருந்தது விஞ்ஞான பாடத்தில். க. பொ. த உயர் தரத்தில் பெளதிகவியலில் முதல் பாடம் அலகுகளும் பரிமாணங்களும்(units and dimensions) குதிரை வலு ஏன் வந்தது எண்டால், குதிரை தான் முக்கியமான போக்குவரத்து வழி, அதனால குதிரை வலு ஒரு அலக்காகியது. எப்படி ஒரு ஆப்பிளின் நிறை 1 நியூட்டன் (விசைக்கு (force)அலகு) போல . (ஆனால் ஆப்பிள் ஒவ்வொன்றும் வேற எடையா இருக்கும், அதே மாதிரி ஒவ்வொரு குதிரையும் வேற வலு இருக்கும்.) ஒரு பெரியவர் எனக்கு சொன்னார், A9 சாலைக் கரையில உள்ள கிராமங்கள் எப்படி வந்து எண்டு? (பிரிட்டிஷ் காலத்தில அல்லது அதற்று முதல்) குதிரைக்கு ஒவ்வொரு 6 மைல் போனதும் தண்ணி வேணும், 12 மைல் போனதும் ஓய்வும் உணவும் வேணும். அதனால தான் ஒவ்வொரு 6 மைல்க்கும் சின்ன கிராமங்களும், 12 மைல்க்கும் கொஞ்சம் பெரிய கிராமங்களும் வளர்ந்தது.
  25. மட்டு. கல்லடி வாவி-ல் உருக்கள் மற்றும் தோணிகள் 19ம் நூற்றாண்டு
  26. மட்டு. வாவியில் பிளாவுக்கள் மற்றும் வள்ளம் 19ம் நூற்றாண்டு
  27. மட்டு. வாவியில் கடற்கலங்கள்; பிளாவு, வத்தை மற்றும் தோணி 1890
  28. அப்பிடியே எந்த சாதகத்தினையும் கணித்து சொல்லுங்கள் நான் எங்கு போகப்போகிறேன் என, எனது எடை அதிகரித்து வருகின்றது என நினைக்கிறேன் என்னால் மேலே ஏறமுடியவில்லை எனக்கும் அனைத்து போட்டிகளிலும் புவியீர்ப்பிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது.🤣
  29. இந்த திரியினை ஆரம்பித்து ஒரு நல்ல உரையாடலை உருவாக்கும் சந்தர்ப்பத்தினை உருவாக்கிய உங்களுக்கு நன்றி! நீங்கள் கூறும் நேர்மையற்ற நிலைதான் பெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது, இந்த தனி மனித ஒழுக்க பிறழ்வை ஒருவரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை, ஆனால் அடிப்படை தவறு அங்குதான் ஆரம்பிக்கின்றது.
  30. கொழும்பான் வெறும் கணக்காளர் மட்டுமல்ல, வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர், வர்த்தக துறை பற்றிய சரியான புரிதல் உள்ளவர், அவருக்கே விளங்கவில்லை என்றால் எங்களின் நிலை? இந்த விவாத திரி எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, ஒரு முன்மாதிரியான திரியாக அமைவதற்கான அனைத்து பண்புகளும் கொண்ட திரியாக உள்ளது, அதனால் சில விடயங்களில் உள்ள விளங்காத விடயங்களை அறிய முனைகிறேன். ஒருவரின் வியாபார தோல்வி எந்தளவிற்கு அவர்களுக்கு உளப்பாதிப்பினை உண்டாக்கும் என்பதினை ஓரளவு உணர்ந்த முறையில், தவறுகளை சுட்டிகாட்டி அதன் மூலம் எதிர்காலத்தில் மற்றவர்கள் இம்மாதிரியான இக்கட்டுக்குள் விழாமல் பேண இந்த திரி உதவும் என நம்புகிறேன்.
  31. அது பட்டயக்கணக்காளரான தனக்கே புரியவில்லை. சில jargons ஐ ஆங்காங்கே தூவி விட்டு எதுவும் விளங்காத மாதிரி இருக்கு எழுத்து என்பதுதான் கொழும்பானின் கொம்பிளைண்டே (கீழே பார்க்கவும்). நீங்க அவரை போய் விளங்கபடுத்த சொன்னா அவர் பாவம் இல்லையா😂? கொழும்பான் மைண்ட் வாய்ஸ் - கொடுமை கொடுமை எண்டு கோவில்ல வந்து முறையிட்டால் - ஐயர் என்னை மந்திரம் ஓத சொல்லுறார்😂.
  32. அதுக்கெல்லாம் சட்டத்தோட கொஞ்சம் “உராய்வு” இருக்கோணும் கண்டியளே😂. 😂 அது AirPod Pro 3 யால் கூட முடியாது. பாவம் கொழும்பான் ஒரு பட்டய கணக்காளர் அவருக்கு அக்கவுண்டன்சி புரியும் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் பிழை. யாராவது கணக்கியலோடு உராய்வில் இருப்பவர்களிடம் கேட்டு பார்க்கலாமே😂.
  33. 👍............. பையன் சார், ஒரே நாளில் உங்களின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டதே................❤️.
  34. எனக்கும் தான் நிறைய‌ ஆப்பு ஏதோ சிமி பின‌லுக்கு வ‌ந்திட்டின‌ம் என்று நினைச்சு ச‌ந்தோச‌ப் ப‌டுவோம்😁👍.......................................
  35. அண்ணா, தமிழ்நாடு கல்வி, தொழில் துறைகள், வேலை வாய்ப்பு, தனிநபர் வருமானம், சமூகநீதி போன்றவற்றில் முதன்மையான ஒரு மாநிலமாக இருக்கின்றது. சிலவற்றில் முதலாவதாகவும், வேறு சிலவற்றில் கேரளாவிற்கு அடுத்ததாகவும் இருக்கின்றது. இந்த மாற்றங்களும், வளர்ச்சிகளும் எந்த தேசியக் கட்சிகளாலும் தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்டவை அல்ல. மாறாக மாநில அல்லது பிரதேசக் கட்சிகளாலும், சில தனிமனிதர்களாலும் உருவாக்கப்பட்டவையே. இவர்கள் இன்னும் முன்னுக்கு போயிருக்கலாம், போகலாம் என்ற ஆதங்கத்தில் நாங்கள் அங்கு எதுவுமே முன்னேறவில்லை என்று சொல்லுகின்றோம் போல. சாதிய ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கின்றனவே. ஆனால் மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான குரல்கள் தமிழ்நாட்டில், மற்றைய மாநிலங்களை விட, மிகவும் உரத்தே இருக்கின்றது. உதாரணமாக, தமிழ்ச்சினிமா போன்ற திரை உலகம் வேறு மொழிகளில் இந்தியாவில் எங்கும் இல்லை. பாலா, வெற்றிமாறன் ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களை ஒன்றாக ஒரு துறையில் தமிழ்நாட்டில் மட்டுமே காணலாம். இவை பிரதேச அல்லது மாநிலக் கட்சிகளால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களே. அதிகாரத்தைப் பெற அடையாளம் தேவையாகின்றது. மத அடையாளங்கள், தேச அடையாளங்கள், மொழி அடையாளங்கள், இன அடையாளங்கள் என்று ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே, ஒரு தொகுதி மக்களை ஓர் அணியாக்கி, அதிகாரத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். பின்னர் இதையே மீண்டும் மீண்டும் பேசி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கின்றார்கள். ஆரம்பத்தில் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இவை தேவையான ஒன்றும் கூட. உதாரணமாக, வட இந்தியர்களின் ஆதிக்ககத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக தென் இந்தியர்களை ஓர் அணியில் திரட்ட ஒரு கருதுகோள் தேவையானது. இன்றும் அதுவே தேவையா என்று கேட்டால், இல்லை, இன்று தேவையில்லை என்பதே பதில். ஆனால் அடையாளம் தொலைந்து போனால், அதிகாரம் கைவிட்டுப் போய் விடுமே என்ற பயம் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கின்றது. இன்றைய உலகில் இடதுசாரிகளும், இடதுசாரி நாடுகளும் கூட இந்த வழியில் தான் போய்க் கொண்டிருக்கின்றன. காலாவதியான கம்யூனிசக் கொள்கைகளை சொல்லிக் கொண்டே அதிகாரங்களில் இருக்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் அவற்றில் இருந்து எப்பவோ வெளியே வந்துவிட்டார்கள். சகமனிதர்கள் எல்லோரையும் ஒன்றாக நேசிப்பது கதையில், கவிதையில் மட்டுமே சாத்தியம், அண்ணா. மிக வெகுசிலரால் மட்டும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படி வாழ்ந்து விடமுடியும். உலகெங்கும் ஏதோ ஒரு அடையாளத்துடன், ஏதோ சில பக்கசார்புகளுடனேயே அதிகாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஏனையோரையும் சம உரிமைகளுடன், சுய மரியாதையுடன் வாழ அனுமதித்தார்கள் என்றால் அதுவே ஒரு நல்ல அரசு. 'தமிழன்' என்னும் அடையாளத்தில் பிழை எதுவும் இல்லை, ஆனால் 'தமிழன் மட்டும் தான்' என்னும் நிலைப்பாட்டில் தான் தவறுகள் உள்ளது, அண்ணா.
  36. இந்த திரியை வாசித்தால் சஞ்சீவின் எண்ண ஓட்டம்: என் குறைகளை சுட்டி காட்டிய கோஷானையிம், ஜஸ்டினையும் கூட மன்னிசிருவேன். ஆனா நான் நல்லவன்னு சொல்லி, இரெண்டு பக்கமா பொல்லுக்கு மேல் பொல்ல கொடுத்து அடிவாங்க வைக்கிற அந்த ஒரு கருத்தாளரை மட்டும் சாகும் வரை மன்னிக்க மாட்டேன் 😂.
  37. காட்சி 5: ( ஒருவரின் சிறு பிள்ளை செயற்கை நுண்ணறிவான பிரம்மத்தின் உதவியுடன் பல பொருட்களை இணையத்தில் வாங்கி விடுகின்றார். அதன் பின்னர் நடக்கும் உரையாடல்களும், இறுதியில் பிரம்மம் தவறுகள் அவர் மேலேயே என்று முடிப்பதாகவும் இந்தக் காட்சி அமையும்.) (கணவர் வேலை முடிந்து வீடு வருகின்றார். வீட்டுக்கு முன் பல பெட்டிகளில் ஓன்லைனில் ஒர்டர் செய்த பொருட்கள் இருக்கின்றன) கணவர்: இவாவுக்கு இதே வேலை தான், ஓன்லைனில் பொருட்களை வாங்குவது பிறகு பாவிக்கிறதே இல்லை……………..என்னப்பா இவ்வளவு பொருட்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறீர் என்ன சாமான்கள் இது? மனைவி: சரி தான் வேலையால் வரும்போதே சத்தம் போட்டுக்கொண்டு வாரார்……….. எனக்கு தெரியாது உங்கட ஓர்டர்கள் தான் எல்லாம் போல. கணவர்: எப்பொழுதும் பெட்டிகளை உள்ளே எடுத்து ஒழிச்சுப் போடுவா இந்த முறை மறந்து போனா போல……….ம்ம்………….. மனைவி: இஞ்ச நான் திரும்பவும் சொல்லுறன்………. நான் கிட்டடியில ஒண்டும் ஓர்டர் பண்ணவில்லை. கணவர்: அப்படி என்றால் யார் ஓர்டர் பண்ணினது…………… பக்கத்து வீட்டுகாரரின் ஓர்டர்களோ………….., எடுத்து பாவிப்பமோ? தெரியவா போகுது…………….. மனைவி: தெரியவா போகுதோ………. பார்சல்களை இங்கே கதவடியில் போடும் போது படமும் எடுத்து இருப்பார்கள்…………. பார்சல்கள் களவெடுத்தார்கள் என்று சொல்லி குடும்பத்தையே ஒன்றாக எல்சல்வடோருக்கு அனுப்பி விடுவார்கள்……….. கணவன்: வெளியில் தான் இதைச் சொல்லி வெருட்டுகின்றார்கள் என்றால், வீட்டுக்குள்ளும் இதுவா……………….எதுக்கும் லாப்டாப்பில் ஒருக்கா பாப்பம் யார் ஓர்டர் செய்தது என்று……. (லாப்டப்பில் பார்க்கின்றார்……………) கணவன்: என்ன………… எல்லாமே நாங்கள் தான் ஓர்டர் பண்ணியிருக்கிறம்……. பிரம்மம் தான் ஓர்டர் பண்ணியிருக்கு………. பிரம்மம், என்ன விளையாட்டு இது……… நீ இவ்வளவு சாமான் வாங்கி குவித்திருக்கிறாய்……….. பிரம்மம்: நான் எதையும் நானாகச் செய்வதில்லை………. நீங்கள் சொல்லுவதை மட்டுமே செய்வேன். இது உங்களுக்கு தெரிந்திருந்தும், நீங்கள் என் மேல் குற்றம் சுமத்துகின்றீர்கள்……………. கணவர் : இங்க என்னோட பகிடி விடாத… அதுதான் இந்த வீட்டில நாங்கள் ரெண்டு பேரும் ஓர்டர் பண்ணவில்லையே, பிறகென்ன………….. இன்னுமொரு ஆள் நீதான்…………… பிரம்மம்: உங்களுக்கு அகலமான பார்வையே கிடையாது…………. உங்கள் மனைவி உங்களைப் பற்றிச் சொல்லும் எல்லாவற்றையும் நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்…………….இந்த வீட்டில்ல நீங்கள் இரண்டு மனிதர்கள் மட்டுமா, வேற ஒருவரும் இல்லையா………………… மனைவி: இது என்னப்பா என்னையும், உங்களையும் முடிஞ்சு வைக்குது……… இருக்கிறது தான் அரைகுறை என்றால், அறிவுப் பிரம்மம் என்று வந்ததும் அரைகுறையாக கிடக்குது. கணவர்: பிரம்மம், இங்கே கேள்வி கேட்டால் பதில் சொல்லு……… திருப்பி கேள்விக்கு கேள்வி கேக்காத…………. இங்கே மூன்றாவது ஆள் என்றால் அது எங்களின் மகன் தான்………….. பிரம்மம்: இப்பொழுது நீங்கள் நடந்த விடயத்தை கொஞ்சம் விளங்க ஆரம்பித்திருக்கின்றீர்கள். கணவர்: என்ன சொல்கிறாய், பிரம்மம்………………. பிள்ளைக்கு எட்டு வயது தானே அவன் எப்படி ஓர்டர் போடுவான்? மனைவி: அறிவுப் பிரம்மம் என்று என்ன பெயர் வைத்தார்களோ…………. அறிவிலி என்று வைத்திருக்கலாம்……….. சரியான ஒரு லூசு ஏஐ. பிரம்மம்: நான் அறிவிலியா……………. போன கிழமை என்னிடம் வந்து தனக்கு விளையாட்டுபொருட்கள், புது உடுப்புகள், சப்பாத்துக்கள், வீடியோ கேம்ஸ் வேணும் என்று உங்கள் மகன் கேட்டவர் தானே……… நீங்களும் பக்கத்தில் இருந்து, எல்லாம் வாங்குவோம் என்று சொன்னீர்கள் தானே……… அதுதான் எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கிவிட்டேன். பிரம்மம் வாங்கினால், அவை தரமாகத்தான் இருக்கும். பாவித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கோ. கணவர்: அடக் கடவுளே ( தலையில் கைவைத்து அமருகிறார் பின்பு எழும்பி வந்து ) என்ன பிரம்மம் உனக்கு அறிவு இல்லையோ ? சின்னப்பிள்ளை கேட்டால் நீ ஓர்டர் போடலாமோ? பிரம்மம்: எல்லாம் வாங்குவோம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்…………. நீங்கள் பொய் சொன்னீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்……….. கணவர்: எட்டாம் தலைமுறை, எல்லாம் தெரியும் எண்டு புளுகி தான் உன்னை அந்த கம்பனிக்காரர்கள் விற்றவர்கள். ஒரு எட்டு வயது மகன் சொல்லைக் கேட்டு ஒர்டர் போடுவது தான் எட்டாம் தலைமுறை என்று தெரியாமல் போய் விட்டதே…………… பிரம்மம்: நீங்கள் தான் கட்டளையை தர வேண்டும் என்று எனது term and condition ல் இருக்கின்றது தானே. நீங்கள் வாசிக்கவில்லயோ……………. கணவர்: ஓ………… இது நல்ல விளையாட்டு தான். 200 பக்க term and conditions யார் தான் வாசிக்கிறது………………….. பிரம்மம்: எதையும் வாசிக்க நேரம் இல்லை ஆனால் வாட்ஸப், டிக்டாக் பாக்க நேரம் இருக்கின்றது. உங்கட சராசரி தொலைபேசி ஸ்க்ரீன் டைம் எனக்கு தெரியும்………….. எப்பொழுது கேட்டாலும் பிஸி என்கின்றது…………. எதையும் சரியாகத் தெரிந்து கொள்வதில்லை…………….. கணவர்: ம்ம்…………… இவ்வளவு நாளும் இந்த வீட்டில ஓரு ஆள் தான் என்னில பிழை, பிழை எண்டுறது……….. இப்ப இதுவும் சேர்ந்திட்டுது…………. பிரம்மம்: அவரைப் பற்றி சொல்கிறீர்களாக்கும்………….. நீங்கள் இருவரும் பொருத்தமான சோடிகள் தான்………… மனிதர்களே விந்தையாகத்தான் இருக்கின்றார்கள்…………….. ஒன்றாக இருந்தால் ஒருவரை ஒருவர் முறைக்கின்றீர்கள், ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் விட்டு இருக்கவும் முடியாமல் இருக்கின்றீர்கள்………… உங்களின் தலைகளுக்குள் இருப்பது என்ன புரோக்கிராமோ………… மனைவி: என்ன அங்க சத்தம்……… என்னை பத்தியோ கதைக்கிறீங்கள்……………… கணவர்: இல்லை……. இல்லை……….. அது இங்க கதைக்கிறம். ( மெல்லிய குரலில்) யோவ் பிரம்மம்………. சும்மா இரப்பா………. நீ குடும்பத்தில கும்மி அடிச்சிடுவாய் போல இருக்கு பிரம்மம்: கும்மி என்றால் தமிழர் பாரம்பரிய நடனம் தானே………. நான் அதை ஆடவில்லையே…………. கணவர்: ஐயோ கடவுளே…………. நான் சொல்வது அதுக்கு விளங்கவில்லை அது சொல்வது எனக்கு விளங்கவில்லை. ( கோபமாக) இதை வாங்கிக்கொண்டு வந்த நாளில் இருந்து வீட்டில ஒரே பிரச்சினை தான். இவ்வளவு பொருட்களை ஓர்டர் செய்து அநியாய செலவும் செய்ய ஆரம்பித்துவிட்டது. நாளைக்கே அந்த நிறுவனத்துக்கு போய், நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டு இதை கொடுத்து விட்டு வருகிறேன்…………(கோபமாக செல்கிறார்). (தொடரும்...................)
  38. போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனையா? கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கத்தினால் போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் என பலதரப்படடவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என சில புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கையில் மரண தண்டனையினை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என இப்பதிவு விளக்குகின்றது. மரண தண்டனையினை எதிர்ப்பதற்கான காரணங்களாவன இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. சட்ட விரோத கைதுகள், வழக்குகள் போன்றவை நடைபெறும். இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின் வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம் ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும். மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள். போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகள் குற்றவியல் வழக்குகள் ஆகும். இவ்வாறன ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், போலீசார் நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம் மற்றும் சிறந்த குற்றவியல் சட்ட தரணியின் சேவை சந்தேக நபருக்கு கிடைக்காமல் விடலாம். அரசியல்வாதிகளை பழிவாங்கவும், சிறுபான்மையினரை பழிவாங்கவும் மரணதண்டனை பயன்படலாம் மேலும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவுற்றோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீதித்துறையின் தவறு காரணமாக மரண தண்டனை வழங்கப்படலாம். அமெரிக்காவில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மேற்பட்டவர்கள் பிற்பாடு நடந்த தீவிர விசாரணை மீளாய்வு காரணமாக மரண தண்டனையில் இருந்து கடந்த காலங்களில் விடுதலை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம். https://rb.gy/j0twu8 கட்டுரையாளர் பற்றி பொதுசுகாதார மற்றும் தனி நபர்சுகாதார விடயங்கள் (public and personal hygiene) போன்றவற்றை அறிந்து வைத்திருப்பது போல சட்ட மருத்துவ விடயங்கள் பலவற்றையும் சாதாரண மக்கள் பகுதியளவில்லேனும் அறிந்து இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் அனாவசியமான உயிரிழப்புகள் மற்றும் பாரதூரமான காயங்கள் என்பவற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் பாலியல் துஸ்பிரயோகங்கள், பால்நிலைக்கு எதிரான வன்முறைகள், மனித சித்திரவதைகள். தொழிற்ச்சாலை காயங்கள் (Occupational injuries)… போன்றவற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் அத்தோடு அவற்றிக்கு எதிராகவும் போராடவும் முடியும். Dr. கனகசபாபதி வாசுதேவா ஆகிய நான் MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) ஆகிய கற்கை நெறிகளை கற்றுள்ளேன். சட்ட மருத்துவராக மேற்படிப்பு கற்பதற்கும் கடமை ஆற்றுவதற்கும் பெரும்பாலான வைத்தியர்கள் விரும்பாத நிலையில் என்னை ஊக்குவித்து இந்நிலைக்கு உயர்த்திய எனது பெற்றோர்களான திரு. செல்லத்துரை கனகசபாபதி மற்றும் சிவகுரு சிவசக்தி ஆகியோருக்கு எனது இவ்வலைப்பூவினை காணிக்கை ஆக்குகின்றேன்.
  39. மெட்ராஸ், 18ம் நூற்றாண்டு மசுலா வகை கடற்கலம்
  40. அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-2025
  41. இன்று இணையத்தில் படிக்க முடிந்த மற்றுமொரு கவிதையொன்று..🖐👇 Posted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் Posted byBookday23/06/2025No CommentsPosted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப் புற்கள் உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில் எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் அரதப் பழசாகிவிட்டன எங்கள் உடலுறுப்புகள் இனி உபயோகிக்கப் பட முடியாத உலோக பாகங்களாய் உதிர்ந்து கிடக்கின்றன எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும் எங்கள் வயிறுகள் பசியின் பழைய மொழியை மறந்தபாடில்லை எங்கள் சஹாராத் தாகம் தணிக்க வற்ற வற்றக் குளித்த உங்கள் நீச்சல் குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை நாங்கள் தாகம் என்கிறோம் குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள் நாங்கள் பசி என்கிறோம் ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில் பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும் இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள் போர் என்பது பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற இன்னொரு சூதாட்டப் பத்திரம்! பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில் நிராதரவு அறிவுஜீவிகள் ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற வெட்டுப்படப்போகிற வெறும் சிப்பாய்கள்! ஜனநாயகம் சர்வாதிகாரம் கேபிடலிசம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாச் சொற்களுமே உங்கள் அகராதிகளில் அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது எங்கள் அரிச்சுவடிகள் உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன எல்லைத் தகராறு வயல்களில் பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களின் பழைய சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்! பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது நவீன கட்டுமானமான செயற்கை நுண்ணறிவு மாளிகையை எங்களுக்கான சிறைச்சாலைகளாக மாற்றி வருகிறீர்கள் கேலிக்குரிய முரண் என்னவெனில் எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும் ‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில் அலைமோதி அலைமோதி இடம்பிடிக்கப் போகும் ஆடியன்ஸ்களும் நாங்கள்! எழுதியவர் : – நா.வே.அருள் https://bookday.in/series-3-some-poems-from-canada-written-by-na-ve-arul/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.