Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 10/27/25 in all areas
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எப்படிங்க அப்படி விடமுடியும் ....... மூக்கை சிந்தி அழக்கூட உரிமை இல்லையா ......... நான் வேற 5 ல் நிக்கிறன், அகஸ்தியரை நெருங்க முடியாது தெரியும் .......இவர் ஏராளனையாவது நெருக்கிக் கொண்டு நிக்கலாம் என்று நினைக்கிறன் . .....தப்பா ..........! 😇3 points
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவில் குறைபாடு காணப்படலாம். அவரது கவிதை குறைபாடு உள்ளதா? அவர் எழுதியதை ரசித்தோம் தானே.3 points
-
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா வழிகாட்டி Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது. இந்த அங்கீகாரம் 2025 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட “Best in Travel 2026” என்ற பதிப்பின் ஒரு பகுதியாகும். இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை, Lonely Planet அதன் பண்பாடு, உணவு வகைகள் மற்றும் தீவு சாகசங்களுக்காக சிறப்பாக விளக்குகிறது. யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்வது மிதிவண்டி, டுக்-டுக், பேருந்து அல்லது பேருந்து படகு மூலம் எளிதாக செய்யலாம். மேலும், ரயில்கள் மற்றும் பேருந்துகள் யாழ்ப்பாணத்தை இலங்கை தலைநகரான கொழும்புடன் இணைக்கின்றன, சென்னையிலிருந்து நேரடி விமானங்களும் இயக்கப்படுகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு நயினாதீவு தீவிற்குப் பயணிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன — இந்துக் கோவில் நாக பூஷணி அம்மன் கோவில் மற்றும் பௌத்த நாகதீப விகாரை. புராணக் கதைகளின்படி, புத்தர் இலங்கைக்கு இரண்டாவது முறை வந்தபோது இத்தீவிற்கே வந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும், தீவின் பெயர் இலங்கை நாட்டுப் புராணங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நாக மக்கள் என்பவர்களிடமிருந்து வந்ததாக Lonely Planet தெரிவித்துள்ளது. Lonely PlanetBest in Travel 2026 - Lonely PlanetDiscover Lonely Planet’s top travel destinations for 2026. Explore expertly curated adventures worldwide, from top cities to unforgettable experiences. குறிப்பு : CHATGPT துணை கொண்டு மொழியாக்கம் செய்யப்பட்டது2 points
-
இனிய தீபாவளி
2 pointsஇனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்படித்தான் அங்கே போனார் ஆடு அவலப்பட்டு செத்தாலும் அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர இனிய தீபாவளி ஆனது.2 points
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
பிஸ்கோத்து ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து தலைவர் படத்தை போட்டால் நனைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து மாவீரர் வீரத்தை மெச்சினால் உடைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து அழகான கவிதை எனும் தேநீரில் அமிழ்ந்து போவான் தமிழ்நாட்டில் இப்போ பிஸ்கோத்து யாவாரிகள் பெரும் கோடீஸ்வரர்கள். ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து.2 points
-
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் —
மிஸ்டர் ValorKnife இப்பதான் தருணத்திற்கே வந்திருக்கிறார். யாராவது பிச்சுமணி வெளிநாட்டில் நிற்கும் விடயத்தை இவரது காதில் கொஞ்சம் ஊதிவிடுங்கப்பா. தீர்வில்லாமல் இலங்கையில் காலே வைக்கமாட்டானாம். இஞ்சாலை கிழக்கின் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி சாணக்கியன் வயிறு புடைக்க கத்துவதற்கு பொய்ண்ட்ஸ் இல்லாமல் குமைந்து கொண்டு திரிகிறான். கூத்தமைப்பானுகளுக்கு ஜாடையே காட்டாமல் டக்கு டக்கெண்டு தனியார் காணிகள், பாடசாலை காணிகளிலிருந்த ராணுவ முகாம்கள் தூக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தூக்கினத்துக்கு பிறகு போய் வேற்றுவளவில் நின்று ஜெல்பி மட்டும் எடுத்துக்கொண்டு பொருமுகிறான்கள். தூக்கிறது தான் தூக்கிறது அதை தூக்குவதற்கு முதல் எங்களிடம் சொன்னால் அதைவைத்து கொஞ்சம் அரசியாலாவது செய்திருப்போமில்ல என்று மனதிற்குள் விம்மி வெடிக்கிறானுக கூத்தமைப்பு கோமாளிஸ்2 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பல விடயங்களில் எம்மால் எதுவும் செய்யமுடியாது அதில் இயற்கையும் அடங்கும். இது ஒரு விளையாட்டுத்தானே, விட்டுத்தள்ளுங்கோ.2 points
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
இங்கே கருத்தாடல் செய்யப்படும் விடயம் விடுதலைப்புலிகள் யாழ் மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து முஸ்லீம்களை விரட்டிய காலத்தில் விரட்டப்பட்ட முஸ்லீம்களிடம் இருந்த தங்க நகைகளை அபகரித்தார்களா? இல்லையா? என்பது மட்டுமே1 point
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இப்பிடி உண்மையை சொல்லக்கூடாது கோசான்1 point
-
தவெக உட்கட்சி மோதல்
1 pointசீமானுடைய தம்பிகளின் லிஸ்டில் நான் ஒருபோதும் சேரமுடியாது.😂 சீமான் என்னைவிட 5 நாட்கள் பிந்தியே பிறந்தார் 😜1 point
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எல்லாரும் ஏதோ ஒன்றை பார்க்கிறோம், வாசிக்கிறோம் இல்லையா. எதை நம்புவது என்றே தெரியவில்லை. நீங்கள் சொல்லுவதைத்தான் நானும் கருதுகிறேன். கொஞ்சம் மேலதிகமாக யோசிச்சுப் பார்க்கிறேன். எப்படி இது நடந்திருக்கும் என்று யோசிச்சுப் பார்க்கிறேன். அவ்வளவே.1 point
-
இனிய தீபாவளி
1 pointபண்டிகைக்காலத்திக்கேற்ற பதவிசான கவிதை ..........! சுமார் 1975 க்கு முன்வரையான சில நிகழ்வுகள் நினைவில் நீந்துகின்றன ........! அன்று நாங்கள், எம்போன்ற மத்தியதர வர்க்கம் ஆட்டிறைச்சி சாப்பிடுவதென்றால் தீபாவளி போன்ற பண்டிகைகள் , கோவில் வேள்விகள் , யாராவது இறந்துபோனால் "சிலவு" நாட்களில்தான் கிடைக்கும் ........அப்போது கடைகளில் இறைச்சி வாங்கும் பழக்கமும் இல்லை ......மாட்டிறைச்சி..... ம்கூம் .....மூச் ........ கோழி இறைச்சி அப்பப்ப மற்றும் உறவினர் வரும்போதும் கிடைக்கும் .......அக்காலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாதபடியால் அவை தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரியும் . ........! ஆகையால் நான் வேள்விகளுக்கு எதிரானவன் அல்ல .........கிடாய் வளர்ப்பதே விருந்தோம்பலுக்கும், வேள்விகளுக்கும்தான் ........எப்படி பூசி மொழுகினாலும் இன்றும்கூட இதுதான் யதார்த்தம் . .....! எப்படிக்கொல்வது..... கோவில்களில் ஒரே வெட்டில் முடிந்துவிடும் .......மற்றும்படி இதற்காக ஒரிருவர் டிப்பிளோம் எடுத்து ஆங்காங்கே வசித்தார்கள் . ..... சிலர் வாய்க்குள் உப்பு போன்ற எதையாவது திணித்துவிட்டு மூச்சுத்திணற பிடித்து கொல்வார்கள்...... அடுத்து அதை சாப்பிட இலைகுலை குடுத்து பாரமான இரும்பால் தலையில் ஒரே அடி ......அதன்பின் அதன் தோல் உரிப்பது ஒரு கலை .......காலில் குறிப்பிட்ட இடத்தில் கொஞ்சம் வெட்டி விட்டு அதனுள் காற்றை செலுத்த மாற்றர் பலூன்போல பெரிதாக உப்பிக்கொண்டு வந்திருக்கும் பின் சுலபமாய் உரித்து விடுவார்கள் . ......இப்போது அவர்களும் தாம் கொன்ற சீவன்களைத் தேடிப் போய்விட்டார்கள் ..........! 😇1 point
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
ஆம், அவரேதான். கொழும்பு பல்கலையில் மருத்துவம் கற்று இன்று அவுஸ்த்திரேலியா மெல்பேர்னில் தனியார் மருத்துவ நிலையமொன்றினை நடத்தி வருகிறார். எப்போதாவது தொலைபேசியில் பேசுவோம். ஆனால் அதே நட்பு இன்னமும் தொடர்கிறது.1 point
-
பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை!
1 pointபணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை! 1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்… மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா? 2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்… மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க! 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்… மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது! 4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித் திரிந்தால்… மனைவி : இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப கிடையாதே? இப்போவும் வீட்டிலே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல .....! 5.ய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்… மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள் தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க.... . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் "ராம்ராம்", சங்கரா சங்கரா.... மாலை, மணி—அதே வேலை தானா! ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்… மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக காத்திருக்கனுமா நாங்க? 7.ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்… மனைவி : பக்கத்து வீட்டு மோகனப் பாருங்க.... ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்கோ, எப்பவும் என்னை மருதமலைக்குத் தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க! 8.ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்… மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டிக் கிடக்குதோ? அந்தப் பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்... , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்.... 9.ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்… மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ.... ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க! 10.ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்துப் பேசினால்… மனைவி : எப்பவும் மொபைலும் கையுமா...... தான் பேச்சுப் பேச்சு.... ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்! 11.ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் … மனைவி : இந்த வயசில அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில் மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா? ஆஹா! ஓய்வு பெற்ற வாழ்க்கை! எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்கும் அன்பான அர்ப்பணிப்பு உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் அனுபவங்கள் தான்! நன்றி முகப்புத்தகம்1 point
-
எம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….
ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு கதைக்கப்போகிறேன். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் முன்னரே தமிழ் திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாசங்கள்…. வக்கிரங்கள்… பகுத்தறிவற்றதனங்கள் குறித்தெல்லாம் எனது ”வாலி + வைரமுத்து = ஆபாசம்” என்கிற நூலில் துவைத்துக் காயப்போட்டு விட்டபடியால் மீண்டும் அவற்றுள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. . இங்கு பேசப்போவது தம்பி யுகபாரதியின் நூல்குறித்து மட்டுமே. இந்நூல் குறிப்பிடும் பாடலாசிரியர்களில் மகத்தான பாடல்களைக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்…. கெடுத்தவர்களும் இருக்கிறார்கள். எனவே இது இப்பாடலாசிரியர்களின் பாடல்களைக் குறித்த யுகபாரதியின் பார்வையினூடே பயணிக்கும் ஒரு பயணம்தான். . இனி…. . சில ஆண்டுகளுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் கவிஞர் யுகபாரதி எழுதிய தொடர் ஒன்றின் நீட்சிதான் இந்த “நேற்றைய காற்று.” . வார இதழ்களுக்கே உரிய பக்க நெருக்கடியால் சொல்லாமல் விட்டவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அளித்திருக்கிறார். அதுவும் ஐநூறைத் தொடும் பக்கங்களோடு. . இதைப் பற்றி எழுத உட்காரும்போதெல்லாம் யுகபாரதி குறிப்பிடும் பாடல்களைச் சுற்றியும்… கவிஞர்களைச் சுற்றியும் வட்டமிட ஆரம்பித்துவிடும் மனம். . அப்புறம் சும்மாவா இருக்க முடியும் ? . யுகபாரதி ஒரு பாடல் குறித்துக் குறிப்பிட்டால் உடனே அதைக் கேட்டாக வேண்டும் என்கிற ஆவல் எழுந்து யூடியூப்பில் பார்க்கத் தொடங்கிவிடுவேன். . மனம் அந்தப் பாடல்வரிகளில் மிதக்கத் தொடங்கிவிடும். இப்படியே யூடியூப்பில் மூழ்கிக் கிடந்தால் அப்புறம் எப்போதுதான் எழுதுவது? ச்சை…. முதலில் இதை நிறுத்தித் தொலைக்க வேண்டும் என முடிவெடுத்து எழுத ஆரம்பிப்பதற்குள் மூன்று நான்கு வாரங்கள் கடந்தோடி விட்டது. . வெறுமனே பாடல்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல்… அந்தப் பாடலாசிரியர் பயணித்த பாதை எது…? எந்த சித்தாந்தம் அவரை இப்படிப் பயணிக்க வைத்தது…? அந்த வேளையில் கோலோச்சிக் கொண்டிருந்த சித்தாந்ததிற்கு அவர்கள் எப்படி உரமூட்டினார்கள் என்பது குறித்தெல்லாம் விரிவாக…. மிக விரிவாகப் பேசுகிறது “நேற்றைய காற்று”. . யுகபாரதி முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல “மொழியறியாத ஒருவர் இசையமைப்பாளர் ஆகலாம்… . இனமறியாத ஒருவர் இயக்குநராக ஆகலாம்… . ஆனால், தமிழைப் பிழையற அறியாதவர்களோ, தமிழினத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களோ பாடலாசிரியராக ஆக முடியாது.” உண்மைதான். . ஆனால், இப்போது பாடல் எழுதிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் இந்த மொழி குறித்தும், இனம் குறித்தும் புரிதல் உள்ளவர்கள்? என்கிற கேள்வியும் யுகபாரதிக்குள் எழமலில்லை. . ஆனால் அவற்றுக்குள் தலையை நீட்டி சர்ச்சைகளுக்குள் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை அவர். . திரைத்துறைக்கு வெளியில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் வேண்டுமானால் அடித்து ஆடலாம். ஆனால் தம்பியைப் போன்றவர்கள் கடுமையான விமர்சனத்தில் ஈடுபட்டால் அது பொறாமையின் நிமித்தமும், போட்டியின் நிமித்தமும் எழுந்ததாகவே பொருள் கொள்ளப்படும். . ஆயினும் அவ்வப்போது நாசூக்காகச் சுட்டியும் செல்கிறார். . யுகபாரதி தேர்ந்தெடுத்து எழுதியுள்ள இருபது பாடலாசிரியர்களில் கண்ணதாசனோ, கல்யாணசுந்தரமோ, வாலியோ, வைரமுத்தோ இடம்பெறவில்லை. . பரவலாக அறியப்பட்ட இவர்கள் குறித்து எழுதுவதை விட…. இன்னமும் விரிவாக அறிந்தாக வேண்டிய கவிஞர்களின் மீது கவனம் குவித்திருக்கிறார். . நா. காமராசன் / புலமைப்பித்தன் / கவி. கா.மு. ஷெரீப் / உடுமலை நாராயணகவி / அறிவுமதி / மருதகாசி / பஞ்சு அருணாசலம் / ஆலங்குடி சோமு / கங்கை அமரன் / மு. மேத்தா என நீளுகிறது அப்பட்டியல். . இவர்களில் திராவிட இயக்கச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு… . பொதுவுடைமைச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு…. . தமிழ்த் தேசிய சிந்தனை மரபில் வந்தவர்களும் உண்டு. . . தனது “கருப்பு மலர்கள்” கவிதைத் தொகுப்பால் அதிரவைத்த நா. காமராசனை ”சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” என “நல்லவனுக்கு நல்லவன்” படத்தின் பாடலைச் சொன்னால் சட்டெனப் புரியும் பலருக்கு. . அறுபதுகளில் பிறந்தவர்களுக்கோ நீதிக்குத் தலைவணங்கு படத்தில் வரும் “கனவுகளே ஆயிரம் கனவுகளே” பாடலும் அதில் வரும்…. . “நகக்குறி வரைகின்ற சித்திரமோ / அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ / முகமென்று அதற்கொரு தலைநகரோ / கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ” என்கிற வரிகளும் வந்துபோகும். வானிலே தேனிலா பாடுதே / வெளக்கு வெச்ச நேரத்திலே / பாட்டுத் தலைவன் பாடினால் போன்ற பாடல்களைக் கொடுத்த நா. காமராசனின் பாடல்களில் என்னை இன்னமும் இதமாக வருடும் பாடலும் ஒன்றுண்டு. . அதுதான் : . ’ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் வரும்…. “இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்” என்கிற பாடலும்…. . அதில் வரும் ”புத்தனின் முகமோ / என் தத்துவச் சுடரோ / சித்திர விழியோ / அதில் எத்தனை கதையோ “ என்கிற வரிகளும்தான்… . நா. காமராசனின் பாடல்களோடு நிற்காது அவருக்கும் கலைஞருக்கும் இருந்த தொடர்பு… அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவு… அவரது அதிரடி பேச்சு என பல்வேறு சுவையான செய்திகளையும் சொல்கிறார் யுகபாரதி. . . ”எனக்கு வியாபார புத்தியும் இல்லை. விளம்பர யுக்தியும் தெரியவில்லை.” என வருந்திய புலமைப்பித்தன் கோவை சூலூரில் மரத்தடி பள்ளியில் தமிழ் பயின்று தமிழாசிரியராய் உயர்ந்து எழுதிய பாடல்கள் ஏராளம். . ”பழுதுபார்த்து ஒதுக்க முடியாத பாடல்களை மட்டுமே எழுதிய பாடலாசிரியர்களாக இருவரைக் கொள்ளலாம். . ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மற்றொருவர் புலமைப்பித்தன்” என்கிறார் யுகபாரதி. . 1966 இல் வெளிவந்த ’குடியிருந்த கோயில்’ திரைப்பட்த்தில் வரும் “நான் யார், நான் யார் நீ யார்?” பாடலில் தொடங்குகிறது புலமைப்பித்தனின் திரையுலகப் பயணம். . அணி இலக்கணத்தை முதன்மையாகக் கொண்டு அவர் எழுதியுள்ள பாடல்களின் பட்டியல் நீளமானது. . ”நாயகனில்” வரும்… ”நீயொரு காதல் சங்கீதம் / வாய்மொழி சொன்னால் தெய்வீகம்…” . ”நீதிக்குத் தலை வணங்கு” படத்தில் வரும் “இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்….” . ”ரோசாப்பூ ரவிக்கைக்காரி”யின் “உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப்பூ வச்ச கிளி…” . ’அடிமைப்பெண்’“ணின் “ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா…” என ஏராளம் எழுதிக் குவித்திருக்கிறார் புலவர். . தம்பி யுகபாரதி ”ஜோக்கரில்” எழுதிய “என்னங்க சார் உங்க சட்டம்” பாடலுக்கான உந்துதலே புலவர் எழுதிய ”நீதிக்குத் தண்டனை” திரைப்படத்தில் வரும் “ஓ மனிதர்களே கொஞ்சம் நில்லுங்கள்” பாடல்தான் என்பது யுகபாரதியின் கருத்து. . எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் கலைஞரின் படங்களுக்குப் பாடல் எழுதும் துணிச்சல் புலவர் புதுமைப்பித்தனுக்கு இருந்திருக்கிறது. . திரைப்பாடல்கள் மட்டுமின்றி அவரது “புரட்சிப் பூக்கள்” கவிதை நூல் குறித்து… . தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் இருந்த நேசம் . குறித்தெல்லாம் விரிவாகச் சிலாகிக்கிறார் யுகபாரதி. . எனது மனதைத் தொட்ட பாடல்கள் வரிசையில் அவர் அழகன் திரைப்படத்தில் எழுதிய “சாதி மல்லிப் பூச்சரமே” பாடலுக்கு பிரதான பங்கிருக்கிறது. . . ”ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?” என நம்மைக் கேட்ட கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல். . போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது. . கலைஞரின் நண்பராயினும் தமிழரசுக் கட்சியில் தன் பயணத்தைத் தொடர்ந்தவர். மதத்தைத் தாண்டிய மனிதநேயத்தை முன்னிறுத்தியதற்கு முன்னுதாரணமாகச் சொல்லலாம் கவிஞர் கா.மு. ஷெரீப்பை. . “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற கவிஞர் “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என சுட்டிக்காட்டவும் தவறவில்லை. . ”ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” பாடல் தந்த உந்துதலே தன்னை ”ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கு போட்டு” என எழுத வைத்ததென்பது யுகபாரதியின் வாக்குமூலம். . திரைத்தமிழை எதார்த்த தத்துவத் தளத்திற்கு இழுத்து வந்ததில் கவிஞர் கா.மு. ஷெரீப்பிற்கு பெரும் பங்குண்டு. . ”கவிஞன் தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளைமாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடன் எழுத வேண்டும்.” . என்ற கா.மு. ஷெரீப்பை இத்துறையில் இருந்து சந்நியாசம் வாங்க வைத்ததே “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் / அவன் மாம்பழம் வேண்டுமென்றான்” என்கிற வாலியின் பாடல்தான். . “என்னை சினிமாவை விட்டுத் துரத்திய பாடல் அது” என்று 1986 பத்திரிகை நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். . இந்நூலில் பாடலாசிரியர்களது திரையுலக அனுபவங்களை மட்டுமல்லாது அவர்களது அரசியல் அனுபவங்களையும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்லும் யுகபாரதி கா.மு. ஷெரீப்பிற்கு ஏற்பட்ட ஒரு சோகத்தையும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறார். . தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழரசுக் கழகத்தின் வளர்ச்சிக்காகவே பாடுபட்ட அவருக்கு அதன் தலைவர் ம.பொ.சி. கொடுத்த ”அல்வா” பற்றிய சம்பவம்தான் அது. . ம.பொ.சி. யின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டிற்கு ஐம்பது பவுன் தங்கம் வழங்கத் திட்டம் போடுகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் ஐம்பது பவுனுக்கான தொகை வசூலாவதில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறார்கள். . இத்தனைக்கும் அப்போது மோடி கிடையாது. . அதைப் பார்த்த அக்கழகத்தின் பொதுச் செயலாளரான கா.மு. ஷெரீப் தன் மனைவி கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கழற்றி அவரது தலைவர் ம.பொ.சி. கழுத்தில் போடுகிறார். . அதில்தான் அத்தலைவருக்கான காரே வாங்கப்படுகிறது. ஆனாலும் ”தலைவர்” தான் எழுதிய “எனது போராட்டம்” என்கிற போராட்ட காதையில் கா.மு. ஷெரீப் அவர்களைப் பற்றி கூடுதலாக ஒரு வரிகூட குறிப்பிடவில்லை என்பதுதான் அதிலுள்ள சோகம் என்கிறார் தம்பி யுகபாரதி. . . பராசக்தி படத்தில் ”கா… கா… கா…” பாடலில் வரும் ”எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்குப் பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே / வலுத்தவன் இளைத்தவன் இனச்சண்டை பணச்சண்டை / எத்தனையோ இந்த நாட்டிலே “ வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஐம்பதுகளிலேயே இப்படியொரு கருத்தாழம்மிக்க பாடலை யார் எழுதியிருப்பார்கள் என்று யோசித்ததுண்டு. . பிற்பாடுதான் தெரிந்தது அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் உடுமலை நாராயணகவி என்பது. . திராவிட இயக்கக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு இவரையே சாரும். . திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணகவிக்கு தமிழையும் கலையையும் கற்றுத் தந்தவர் முத்துசாமிக் கவிராயராம். . பெரியாரின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பற்றுக் கொண்டவர் நாராயணகவி. . சோவியத்து ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்த பெரியாருக்கு கலைத்துறையினர் பாராட்டுவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய… வரமாட்டேன் என்று மறுத்து விடுகிறார் பெரியார். . ஆனால் அவசியம் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும் என நாராயணகவி வேண்டுகோள் விடுக்க… . ”யாருக்காக இல்லாவிட்டாலும் நாராயணகவிக்காகக் கலந்து கொள்கிறேன்” என்று கூறி கலந்து கொண்டிருக்கிறார் பெரியார். . திரைத்துறை மீது அவ்வளவு நல்ல எண்ணம் இருந்ததில்லை பெரியாருக்கு என்பது ஊரறிந்த ரகசியம். . ஆனால் அவரையே யோசிக்க வைத்த பாடல் உண்டென்றால் அது ”டாக்டர் சாவித்திரி” படத்தில் இடம்பெற்ற “காசிக்குப் போனால் கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு” என்கிற நாராயணகவியின் பாடல்தான். . அவருக்கும் கலைவாணருக்கும் இருந்த உறவு…. . அவருக்கும் பாபநாசம் சிவனுக்கும் இருந்த உறவு என இதில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் யுகபாரதி. . இதில் சுவாரசியமான ஒரு தகவல் உண்டென்றால் அது உடுமலையார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கன்னத்தில் விட்ட அறைதான். . தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான “உலகே மாயம், வாழ்வே மாயம்” பாடல் பதிவின் போது நடந்த சம்பவம்தான் அது. . நாராயணகவி எழுதிய அப்பாடலை பாடிய கண்டசாலா தமிழையும் தெலுங்கு போல உச்சரித்து “உல்கே மாயம், வால்வே மாயம்” எனப் பாட ”தமிழை ஏண்டா இப்படிக் கொலை செய்கிறீர்கள்?” என்று விழுந்திருக்கிறது அறை எம்.எஸ்.வி.க்கு. . இதைச் சொல்லிவிட்டு ஆனால் அதற்குப் பிறகு தம்பி யுகபாரதி சொல்வதுதான் உச்சகட்டமான சமாச்சாரம். அதை அவரது வரிகளிலேயே சொல்வதானால்…. . “காலத்திற்கேற்ப பாடுவதாகச் சொல்லிக் கொண்டு, என்னுடைய பலபாடல்களை இந்தப் பாடகர்கள் கொன்று புதைத்திருக்கின்றனர். . இசையமைப்பாளரை அறையக்கூடிய கவிராயர்கள் இப்போதில்லை என்பதல்ல, எழுதக்கூடிய கவிராயர்கள் பலருக்கே தமிழ் சரியாகத் தெரியாது என்பதுதான் இன்றைய நிலை.” என்கிற யுகபாரதியின் ஆதங்கத்துக்கு யார் ஆறுதல் சொல்வது? . . என்னடா இவன் இன்னும் அறுபதுகளையே தாண்டவில்லையே எப்போது இவன் நம்ம காலத்துக்கு வந்து சேரப் போகிறான் என நீங்கள் சலித்துக் கொள்வது புரிகிறது. . என்ன செய்வது…. நேற்றைய செய்திதானே நாளைய வரலாறு…? . . இசைஞானியை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலத்தின் பக்கம் வருவோம். 1962 இல் அவர் எழுதிய “மணமகளே மருமகளே வா வா” என எழுதிய அந்தப் பாடல்தான் தமிழக மக்கள் மத்தியில் அவரைப் பிரபலப்படுத்தியது. . இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடல்களில் அதுவும் ஒன்று. நமது நோஸ்டால்ஜியாவைக் கிளப்பிவிடும் பாடல்களில் ஏகப்பட்ட பாடல்கள் பஞ்சு அருணாசலத்தினுடையவைதான். . . ”சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்” / ”தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்” / “கண்மணியே காதலென்பது” / “அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை” / “பருவமே புதிய பாடல் பாடு” / “விழியிலே மலர்ந்தது” / “ராஜா என்பார் மந்திரி என்பார்” / “குயிலே கவிக்குயிலே” / ”தூரத்தில் நான் கண்ட உன்முகம்” என எண்ணற்ற அற்புதமான பாடல்களுக்குச் சொந்தக்காரர் அவர். . அவர் எழுதியவற்றிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என்றால் 1965 இல் வெளிவந்த ”கலங்கரை விளக்கம்” படத்தில் வரும் “பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண்பனி தூவும் நிலவே நில்” என்கிற பாடல்தான். . இளையராஜாவின் ஆளுமையைப் புகழ்வதற்கென்றே எண்ணற்ற பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாசலம். . ஆனால் அவர் வசனம் எழுதிய இயக்கிய படங்களில் சிலவற்றில் பெண்கள் பற்றிய பார்வை பிற்போக்கானவைதான் என்பதை யுகபாரதியும் ஒப்புக் கொள்கிறார். . நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இங்கு நூல் குறித்து மட்டுமே எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்பதால் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கிறேன். . அதை வேறொரு தளத்தில்… வேறொரு தருணத்தில் பார்ப்போம். . . அடுத்ததாக யுகபாரதி சிலாகித்து எழுதியிருக்கிற ”அண்ணன்” எனக்கும் அண்ணன் தான். . அதுதான் பாவலர் அறிவுமதி. . மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ”சிறைச்சாலை” படத்தின் பாடல்களைக் கேட்டு சொக்கிப் போயிருக்கிறேன் நான். . அதிலும் அதில் வரும்… ஆசை அகத்திணையா / வார்த்தை கலித்தொகையா / அன்பே நீ வா வா புது காதல் குறுந்தொகையா… என்கிற வரிகளாகட்டும்…. கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ / கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ? என்கிற வரிகளாகட்டும்…. . ”நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ? பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய்தானோ…?” என வளைய வரும் வரிகளாகட்டும் இன்றும் என் பொழுதுகளை இனிமையாக்கக் கூடியவை. . பலநாட்கள் யார் எழுதியது என்பதை அறிந்து கொள்ளாமலேயே “முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன” பாடலை ரசித்திருக்கிறேன். . பாலு மகேந்திரா இயக்கி இளையராஜா இசையில் வெளிவந்த ”ராமன் அப்துல்லா” படப்பாடல் அது. . அதில் வரும் ”நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை….” . “உந்தன் பேரைச் சொல்லித்தான் காமன் என்னைச் சந்தித்தான்… “ என்கிற அறிவுமதியின் வரிகள் கிறக்கம் வரவழைப்பவை. . ”சேது”வில் வரும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை”யாகட்டும்… . ”மாலை என் வேதனை கூட்டுதடி…”யாகட்டும் எல்லாம் அறிவுமதியின் சாதனையைக் கூட்டும் பாடல்கள்தான். . அவரது பாடல்களை விடவும் நாம் கொண்டாட வேண்டிய குணாம்சம் ஒன்று இருக்கிறதென்றால் அது அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் அவரது அறச்சீற்றம்தான். . எழுத்தாளர் சுஜாதாவின் புறநானூற்று உரைக்கான மறுப்பாகட்டும்…. . மணிரத்னத்தின் ”இருவர்” படத்துக்கான எதிர்ப்பாகட்டும்…. . எல்லாமே அவரது அறச்சீற்றத்தின் அடையாளங்கள்தான். ”மதுரை வீரன் தானே”…. “அழகூரில் பூத்தவளே”… “தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்”… ”பொய் சொல்லக்கூடாது காதலி”… என நீண்டுகொண்டே போகும் பாவலர் அறிவுமதியின் பட்டியல். . . அரசவைக் கவிஞர் பதவியைப் பெற்ற கடைசிக் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய மாஞ்சோலைக் கிளிதானோ / பொன்மானத் தேடி / இதயம் போகுதே / சங்கீதமேகம் என பலபாடல்களைக் குறிப்பிடுகிறார் “நேற்றைய காற்றில்.” . . . இந்த நூலைப் படிக்கும் வரையில்கூட “மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே” பாடலை எழுதியவர் நிச்சயம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன் நான். . ஆனால் 1956 இல் வெளிவந்த ”தாய்க்குப் பின் தாரம்” படத்திற்காக இப்பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. . அதைப் போலவே “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே” பாடலை எல்லோரும்கண்ணதாசன் தான் எழுதியிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை எழுதியவரும் மருதகாசிதான் என்கிற செய்தியை உரக்கச் சொல்கிறார் யுகபாரதி. . மருதகாசி அவர்களின் ”சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா….” ”காவியமா நெஞ்சின் ஓவியமா…” ”மணப்பாற மாடுகட்டி….” ”சமரசம் உலாவும் இடமே…” போன்ற அற்புதமான பாடல்கள் தோன்றிய விதம்… அதன் பின்னே ஒளிந்திருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் என நம்மை அழைத்துக் கொண்டு போகிறது ”நேற்றைய காற்று.” . . ஆலங்குடி சோமுவின்… ”உள்ளத்தின் கதவுகள் கண்களடா” “பொன்மகள் வந்தாள்” ”மஞ்சக்குளிச்சி அள்ளி முடிச்சு” போன்ற பாடல்கள் குறித்தும்…. . . கு.மா. பாலசுப்ரமணியத்தின்… ”அமுதை பொழியும் நிலவே” . ”சிங்கார வேலனே தேவா” . ”குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே” . ”இன்பம் பொங்கும் வெண்ணிலா” போன்ற நினைவை விட்டு அகலாத பாடல்கள் குறித்தும்…. விலாவாரியாகச் சொல்கிறது தம்பி யுகபாரதியின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு. . . இங்கு சொன்னதை விடவும் நான் சொல்லாமல் விட்டதே அதிகம். . உண்மையில் இந்தநூல் ஒரு முனைவர் பட்டம் பெறுவதற்கான சகல தகுதியும் கொண்ட ஆய்வேடு என்றுகூட சொல்லலாம். . அவ்வளவு சுவாரசியம்மிக்க தகவல்கள். . தன் சமகாலத்துக் கவிஞர்கள் குறித்தும் இதில் விடுபட்ட முந்தைய தலைமுறைக் கவிஞர்கள் குறித்தும் அடுத்தடுத்து வரும் தனது தொகுப்பில் சேர்க்க இருக்கிறார் யுகபாரதி. அதன் பொருட்டு அவற்றை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கிறார். . வரிக்கு வரி…. பக்கத்திற்குப் பக்கம்… சுவாரசியமூட்டும் இந்நூல் எனது பல பொழுதுகளை இனிமையாக்கியது. . எனது காலக்குதிரையை பின்னோக்கி பயணிக்க வைத்ததில் தம்பி யுகபாரதியின் இப்புத்தகத்திற்குப் பெரும்பங்கிருக்கிறது. . எனவே….. யான் பெற்றதை நீங்களும் பெற… . “நேற்றைய காற்றை”… https://pamaran.wordpress.com/2019/12/04/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/1 point
-
இனிய தீபாவளி
1 point🤣..................... வியாசர் சொல்லாத, எழுதாத கதை என்று ஒன்று உலகில் இல்லை. எல்லாக் கதைகளையும் அவர் ஒருவரே எழுதிவிட்டார். அந்த ஜெகோவாகாரர்களும் வியாசாரின் கதை ஒன்றையே சொல்லுகின்றார்கள் போல, அண்ணா...................🤣. மூன்று நேர உணவுக்கும் வழி இருந்தால், அங்கே ஆசாரமும், ஆன்மீகமும் புகும் என்பது போல புதுமைப்பித்தன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கின்றார். ஏதாவது வயிற்றுக்கு கிடைத்தாலே போதும் என்று வாழ்ந்தது ஒரு காலம், அண்ணா................இன்று சுக்கிலபட்சமும், கிருஷ்ணபட்சமும் சமயலறையில் அமர்ந்திருக்கின்றன....................🤣. திங்கள் கிழமைக்கும், செவ்வாய் கிழமைக்கும் என்ன வித்தியாசம், ஒரு நாளைக்கும் இன்னொரு நாளைக்கும் என்ன வித்தியாசம்................. 'கயிற்றரவம்' வாசித்திருப்பீர்கள் தானே, அண்ணா.................... ஏதோ முடிந்த அளவுக்கு நம்பி வந்த மனையாளுக்காக திங்களும், செவ்வாயும் வேறு வேறு என்பதை எதிர்த்து வாதாடாமல் காலம் ஓடிக் கொண்டிருக்கின்றது............... மனிதர்களின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் அச்சமூட்டுகின்றன, ஆனால் அவர்கள் மிகவும் பிரியமானவர்களாக இருக்கும் போது, கேள்விகளும் உள்ளுக்குள்ளேயே தொங்கி நின்று விடுகின்றன.................1 point
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
உண்மை தான் உடையார். ஆனால் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தன் விருப்பின்றி தீண்ட முற்பட்ட ஒருவரைத் தன் திருமண வைபவத்துக்கு அழைத்து காலில் வீழ்ந்து ஆசீர்வாதமும் பெற்று, அதனை புகைப்படமும் எடுத்து வெளி உலகுக்கு பகிரவும் செய்வார்களா? இங்கு வைரமுத்து இந்த விடயத்தில் மிக மோசமான மனிதர் என்பதில் ஐயமில்லை. ஆனால், சின்மயி?1 point
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
1 point
-
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் Oct 27, 2025 - 02:02 PM - உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது. லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை, பெரு, தென் அமெரிக்கா யாழ்ப்பாணம், இலங்கை மெயின், அமெரிக்கா காடிஸ், ஸ்பெயின் ரீயூனியன், ஆப்பிரிக்கா போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா கார்டஜீனா, கொலம்பியா பின்லாந்து, ஐரோப்பா டிப்பரரி, அயர்லாந்து மெக்சிகோ நகரம் கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா சார்டினியா, இத்தாலி லிபர்டேட், சாவ் பாவ்லோ யூட்ரெக்ட், நெதர்லாந்து பார்படாஸ், கரீபியன் ஜெஜு-டோ, தென் கொரியா வடக்குத் தீவு, நியூசிலாந்து தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா குய் நோன், வியட்நாம் சீம் ரீப், கம்போடியா பூக்கெட், தாய்லாந்து இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா துனிசியா, ஆப்பிரிக்கா சாலமன் தீவுகள், ஓசியானியா https://adaderanatamil.lk/news/cmh8vqm3i018iqplpczm4u15f1 point
-
கருத்து படங்கள்
1 point
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
நான் கவிதையில் வீக் ☹️ ஆனால் ஈழ தமிழர்கள் அவர் கவிதையை மிகவும் இரசிப்பார்கள் இப்போ இவர் யாழ்பாணத்தில் சொன்ன கவிதை என்று வட்சப்பில்வந்தது. 👇 மண்ணின் மீது தண்ணீர் இருக்கின்றது மண்ணுக்கு கீழே கண்ணீர் இருக்கின்றது இது தான் யாழ்பாணம். அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவின் அரவணைப்பில் இருந்த இந்த சின்மயி என்ற பாடகி நீண்ட காலம் மகிழ்ச்சியாக பாடி திரிந்து தனது திருமணத்திற்கும் வைரமுத்துவை அழைத்து அவர் காலில் மகிழ்ச்சி பொங்க விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்பு தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து இப்படி ஒரு குற்றசாட்டை சுவிச்சலாந்தில் நடந்ததாக வைத்தார். இவா ஒரு பிராமணர் என்ற காரணத்தால் இந்தியாவில் சிலர் ஆதரித்தனர். இது எவ்வளவு சுத்துமாத்து என்பது அங்கே உள்ள ஈழதமிழர்களுக்கு தெரியும்.1 point
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
ஒரு ஆணின் அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க, பெண் ஒருவரும் அதே அளவிலான அல்லது அதைவிட வலிமையான நிலையை அடைய வேண்டும். அவர் எழுதிய கவிதை மனதை கவர்ந்துவிட்டால், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தோன்றும்?????? அதை வெளிப்படையாகச் சொல்ல, இன்னும் அதிகமான தைரியம் தேவைப்படுகிறது. இங்கே, படையில் பணியாற்றிய பெண்களே ஆண் வீரர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதை இப்போதுதான் வெளிக்கொணர்ந்துள்ளனர். அதற்குப் பின்னால் நிற்கும் காரணம் — ஆண் வீரர்களின் பதவி நிலை. அந்த நிலைமை, படை வீராங்கனைகளுக்கே இவ்வாறு என்றால், சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் நிலைமை எவ்வளவு கடினமாய் இருக்கும்?1 point
-
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்
களத்தில் பேராசிரியர் ரகுராமும் என்பதன் அர்த்தம் என்ன? பேராசிரியர் ரகுராம் அடுத்த துணைவேந்தராக வரவேண்டும் என குளோபல் தமிழ் நியூஸ் எதிர்பார்க்கின்றதா? அல்லது பேராசிரியர் ரகுராம்கூட போட்டியில் நிற்குமளவுக்கு துணைவேந்தர் பதவி மட்டமாகிவிட்டது என கூறுகின்றதா?1 point
-
12 வயதிற்குட்பட்ட சிறார்கள் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் - அரசாங்கம்
சிறுவர்களுக்கு மட்டுமென தொலைபேசிகளை உரிய நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். அது பெற்றோர்களுடன்,காவல் துறையுடன் மட்டுமே தொடர்பு கொள்ளக்கூடியதாக உள்ள தொழில்நுட்பங்களுடன் இருக்க வேண்டும்.ஏனைய இணைய வசதிகள் ஏற்படுத்தக்கூட தடைகளை வைத்து தயாரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் இணைய தளங்களை பார்ப்பதை,கைத்தொலைபேசியை பாவிப்பதை கட்டுப்படுத்தலாம் நான் நினைக்கின்றேன். இன்றைய காலத்தில் கைத்தொலைபேசியும் ஒரு தனிமனித பாதுகாப்பு சாதனமாக அமைந்து விட்டது.அதனால் சிறுவர்களுக்கும் கைத்தொலை பேசி போன்ற தொடர்பு சாதனங்கள் அவசியம்.1 point
-
கைகூ வடிவில்!
1 pointநானும் போராட வருகிறேன் எனவந்தவனை… நாய் போல நடுத்தெருவில் கொன்றதை… நல்லது என நயப்போரைக்கூட… நையப்புடைக்க முடியாத கோழை நான்… நான் ஆதாலால் தேர்ந்தெடுத்த ஆயுதம்… நையாண்டி. -என் குரல்-1 point
-
அவுஸ்திரேலியாவில் வினோதம் : வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை !
இங்கு சாப்பிடுவதில்லை, தடை செய்யப்பட்டிருக்கு அரியவகை நண்டுகளென1 point
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
சின்மாயிடம் இவனைப்பற்றி கேட்டால் தெரியும், இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை பெண்களின் வாழ்கையில் விளையாடினானோ???1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டி முடியும் வரை அவர் ஆழ்ந்த தியானத்திலிருந்து வெளியே வரச் சந்தர்ப்பம் இல்லை. 😀வந்தவுடன் அவரை ஒரு பேட்டி எடுத்து அவரது வெற்றியின் ரகசியத்தை வெளியிட வேண்டும் 😅1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
துரதிஷ்ட இலங்கை. இலங்கையும் இந்தியாவும் மூன்று போட்டிகளைத் தோத்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையின் மூன்று போட்டிகளை மழை காவுகொண்டது. மழை இல்லாவிடில், முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருக்கலாம். சாமரி அத்தப்பத்துவை இனி பார்க்க முடியுமோ இல்லையோ தெரியாது. ஆனால் இலங்கை மகளிர் அணியை இப்படியான அணியாக மாற்றியதில் அவவுக்கு பெரும் பங்கு இருக்கு. இந்தியாவில் மிதாலி ராஜ்ஜை சொல்லுவார்கள். இலங்கையின் மிதாலி சாமரி.1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதுக்காக என்டாலும், மற்றவர்களின் புள்ளிகளைப் பிரிச்சு நமக்குக் குடுக்கலாமே. கடைசியா வரும் என்று கணிக்கிறது எவ்வளவு கடினம் தெரியுமா. 😄1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி பாகிஸ்தான் என சரியாக செம்பாட்டன், அகஸ்தியன் ஆகிய போட்டியாளர்கள் கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 65 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 52 புள்ளிகள் 11) வாதவூரான் - 50 புள்ளிகள் 12) கறுப்பி - 50 புள்ளிகள் 13) வசி - 48 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 69).1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 29) மழை காரணமாக இந்தியா வங்களாதேசத்துக்கு இடையிலான போட்டிகள் கைவிடப்பட்டது. எல்லாப் போட்டியாளர்களும் 2 புள்ளிகள் கிடைக்கின்றன. 1) அகஸ்தியன் - 63 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 50 புள்ளிகள் 11) வாதவூரான் - 50 புள்ளிகள் 12) கறுப்பி - 50 புள்ளிகள் 13) வசி - 48 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 67).1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 28) இங்கிலாந்து அணி 8 விக்கேற்றுக்களால் நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்தார்கள். 1) அகஸ்தியன் - 61 புள்ளிகள் 2) ஏராளன் - 56 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 56 புள்ளிகள் 4) ரசோதரன் - 54 புள்ளிகள் 5) சுவி - 52 புள்ளிகள் 6) கிருபன் - 52 புள்ளிகள் 7) புலவர் - 52 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 52 புள்ளிகள் 9) வீரப்பையன் - 51 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 48 புள்ளிகள் 11) வாதவூரான் - 48 புள்ளிகள் 12) கறுப்பி - 48 புள்ளிகள் 13) வசி - 46 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 46 புள்ளிகள் 15) வாத்தியார் - 44 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 28, 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 65).1 point
-
12 வயதிற்குட்பட்ட சிறார்கள் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் - அரசாங்கம்
பொதுவாக சில பரீட்சைகளில் திறமை சித்திகளை பெறும் மாணவ, மாணவிகளுக்கு கனவுப் பொருட்களாக இருக்க கூடிய ஆடம்பரமான பொருட்களை பரிசளிப்பதை பெற்றோர் முதல் உறவினர்கள் வரை தவிர்க்க வேண்டும்.1 point
-
அவுஸ்திரேலியாவில் வினோதம் : வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை !
இந்த நண்டுகளின் பயணத்திற்காக ஒரு பாலமே கட்டுப்பட்டிருக்கு1 point
-
தவெக உட்கட்சி மோதல்
1 pointஉங்கள் நீண்ட எழுத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏 தமிழர்களுக்கென்று தனி மரபும் தனி முயற்சிகளும் என்றும் எங்கும் உண்டு. இதை நாங்கள் வரலாறு ஊடாக மட்டுமல்ல இன்றைய நடைமுறை உலகிலும் பார்க்கலாம். இதற்கு தனி விளக்கங்கள் தேவையில்லை என நான் நினைக்கின்றேன். இலங்கையில் தமிழர் பிரதேசம் என்றால் தனி விசேடங்கள் உண்டு. இயற்கை வளங்கள் பெரிதாக இல்லாமலே தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.அவர்களது தனி முயற்சி அல்லது கூட்டு முயற்சிகள் ஏராளம்..ஏராளம்.இதை பார்த்து தான் சிங்களம் கொஞ்சம் மிரள்கிறது என நினைக்கின்றேன். இங்கு திராவிடம் தேவைப்படவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வேற்று மண்ணில் கால் பதித்தவர்கள்.இன்று என்ன,எந்த நிலையில் இருக்கின்றார்கள் என நான் சொல்லத்தேவையில்லை. இங்கேயும் திராவிடம் தேவைப்படவில்லை. அதே போல் தமிழ்நாட்டிலும் தனி முயற்சியும்,பொருளாதார வளங்களுமே அதன் முன்னேறத்திற்கு காரணம் என நான் நினைக்கின்றேன். மற்றும் படி திராவிடம் அரசியல் செய்ய மட்டுமே பயன்படுகின்றது.அபிவிருத்தி தமிழர் சார்ந்ததாகவே நான் பார்க்கின்றேன். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு போட்டியாக இருக்கும் கேரளத்திற்கு திராவிடம் தேவைப்படவில்லை என்பதை நான் உணர்கின்றேன். தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் சாதி வேற்றுமைகளை அழிக்க வேண்டும். அதை அழிக்க தமிழர் என்றொரு கட்டமைப்பு வேண்டும். அதற்கு "மட்டும்" என்ற பதம் தேவைப்படுகின்றது.தமிழர்களுக்கு சாதி,மதம் சார்ந்த உட்பிரிவுகள் தேவையில்லை. தமிழர் என்ற ஒரு குடை மட்டுமே தற்காலத்திற்கு தேவைப்படுகின்றது. திராவிடத்தால் ஒழிக்க முடியாத இன பாகுபாட்டை,சாதி வேற்றுமைகளை தமிழர் என்ற ஒருமைப்பாட்டால் மட்டுமே அழிக்கமுடியும் என நான் நினைக்கின்றேன். ஏனைய நாடுகளை பாருங்கள் எல்லாம் மொழி சார்ந்தே தம் கொள்கைகளையும் சட்டங்களையும் விதிகளையும் வகுத்துள்ளார்கள்.1 point
-
கைகூ வடிவில்!
1 point
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
அல்வாயர் @alvayan எனது அனுபவங்களை, நான் கேட்டதை, பார்த்ததை கூறினேன் அவ்வளவுதான். 1995 யாழை விட்டு வெளியேறும் வரை பல்வேறு நேரடி அனுபவங்கள், அப்போது நடந்த சம்பவங்கள், நாம் பார்த்தது, அறிந்தது, கேட்டது நினைவில் உள்ளன. காரணங்கள் வேறுபாடு உள்ளவை, ஆனால் எல்லாருமே வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு தருணங்களில் பொதுமக்களிற்கு சிரமங்களை ஏற்படுத்தினார்கள். இவை மிரட்டல்கள் தொடக்கம் படுகொலை வரை சென்றன. ஒவ்வொருவருக்கும் தமது கோணத்தில் பார்க்கும்போது தாம் செய்தவை சரியாகவே தென்படும்.1 point
-
களைத்த மனசு களிப்புற ......!
1 point
-
தவெக உட்கட்சி மோதல்
1 pointநேற்று இயக்குனரின் மாரி செல்வராஜ் 'பைசன்' பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, கூட்டம் கூட்டலிடுகின்றது. அவர் உடனே கூச்சலிடுவதை நிற்பாட்டச் சொல்லுகின்றார். அதைத் தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட இப்படிச் சொன்னார், 'நான் உங்களுக்கு சாராயத்தை தரவில்லை, நீங்கள் ஏன் கூச்சலிடுகின்றீர்கள்............... நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தந்துள்ளேன், அதைப் படியுங்கள்..................'. உலகெங்கும் சமுதாயங்கள் முன்னோக்கிப் போவது இன்றிருக்கும் ஒரு சிலராலேயே. கூச்சலிடும் கூட்டங்களால் அல்ல. என்னுடைய பங்கிற்கும் இதை நான் பல தடவைகள் எழுதியிருக்கின்றேன். தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல்வர்களில் எம்ஜிஆர் சிறந்த ஒரு முதல்வர் அல்ல. தமிழ் திரை உலகை ரஜனிகாந்தும், அவர் வழி வந்தவர்களும் பின்னோக்கி கொண்டு சென்றது போல, எம் ஜிஆரும், அவர் வழியில் அரசியல் செய்பவர்களும் தமிழக அரசியலை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
0 points