Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87986
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31947
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3044
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/31/25 in all areas

  1. அலிசா ஹீலி விளையாடாமல் விட்டிருந்தால் ஆஸ்திரேலியா இலகுவாக வென்றிருக்கும். 😞
  2. 🤣........... இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றால் 'இந்திய பெண்கள் அணிக்கு வயது போய்விட்டது. இளம் வீராங்கனைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.......' என்று சொல்வார்கள் போல....................🤣. பையன் சார் வேற அங்கே ஒரு 18 வயது வீராங்கனை இருக்கின்றார், இங்கே ஒரு 20 வயது வீராங்கனை இருக்கின்றார் என்று இமயம் முதல் குமரி வரை ஒரு லிஸ்ட்டே வைத்திருக்கின்றார்...................😜.
  3. அலிஸாவைப் பற்றிய அபிப்பிராயங்கள் வேடிக்கையாக இருக்கு. இந்தத் தொடரில் ஜந்து போட்டிகள் விளையாடி, 299 ஓட்டங்கள் அடித்திருக்கிறா. இரண்டு தரம் நூறு. அவா ஒரு பிடிய விட்ட உடன், இப்படிக் கதைப்பது, வேடிக்கையாக இருக்கிறது. அதோட அவ ஒரு விக்கட் காப்பாளர். அணித்தலைவி. இவ்வளவுக்குப் பிறகும். விளையாட்டு வினோதங்கள்!
  4. அதேபோல் புலிகள் செய்தார்கள் நாம் செய்யவில்லை என தமிழர்கள் இதில் தப்ப முனைவது சட்டப்படி சரியாகலாம், மனச்சாட்சிப்படி அல்ல. ஐலண்ட் எப்போதும் புலிகளை ஏற்காத தமிழர் என நினைக்கிறேன். ஆனால் நாம் 90% மக்கள் அப்படி அல்ல. புலிகளை எம் பிள்ளைகளாக, தலைமையாக, பிரதிநிதிகளாக, காவலர்களாக ஏற்ற நாம் அப்படி அவர்கள் பிழைகளை கை கழுவ முடியாது. அதே போலத்தான் முஸ்லீம்களுக்கு ஜிகாத் குழுக்களும். புலிகள் அளவுக்கு கட்டுக்கோப்பாக இல்லை எனிலும், சரியோ பிழையோ அவர்கள் கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க என ஆரம்பித்த ஆயுத குழுவே. பின்னாளில் நடந்த காத்தான்குடி சம்பவம் போன்றவை அப்படி குழுக்கள் அமைந்ததன் நியாயத்தை காட்டியும் நின்றன. ஜிகாத்தில் ஆயுதம் எடுத்தவர்கள் பலர் உண்மையான இன உணர்வினர். பலர் பின்னாளில் எம்பிகள். ஆனால் இலங்கை அரசு அவர்களை கையாண்ட விதம், புலிகள் போல அன்றி அவர்களை ஈ என் டி எல் எப் போன்ற ஒரு கட்டாகாலி அமைப்பாக்கியது. கூடவே இயல்பான மதவெறியும் சேர்ந்துகொள்ள - நாம் வெறுக்குக் ஜிகாத் காடைகள் உருவாகினர். ஆகவே முஸ்லிம்களும் ஜிகாத்தை ஏதோ வானத்தில் இருந்து குதித்தோர் என ஒதுக்க முடியாது. புலிகளின் தவறுக்கு இன்றைய தமிழர் தலைமையும், ஜிகாத்தின் தவறுக்கு இன்றைய முஸ்லிம் தலைமையும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதே சரியாகும். உண்மையில் தலைவர் - ஹக்கீம் (அஷ்ரப் அல்ல) காலத்தில் இது பற்றி மன்னிப்பு கோரிய புலிகள், கூடவே ஜிகாத்தின் செயல்களுக்கு ஹக்கீம் அடையாள மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இருக்க வேண்டும். கிழக்கில் அவர்கள் செய்த அட்டூழியத்தின் நகலை சந்திக்க வந்த ஹக்கீமீடம் கொடுத்து இருக்க வேண்டும். இருதரப்பிலும் விட்ட பெரும் பிழைகளே முஸ்லிம்கள் அநியாயமாக வடக்கை விட்டு வெளி ஏற்றப்பட்டதன் சூழமைவு. இந்த சூழமைவு ஒரு போதும் வெளியேற்றிய மிலேச்ச, காட்டுமிராண்டி செயலை நியாயப்படுத்தாது. ஒரு நிழல் அரசு செய்திருக்க கூடாத summary punishment கூட்டு தண்டனை அது. ஆனால் யாழ்ப்பாண முஸ்லிமின் வலியும், வீரமுனை தமிழனின் வலியும் ஒன்றேதான். உளப்பூர்வமாக இரு தரப்பும் மன்னிப்பு கேட்க இப்போ ஒரு தடையும் இல்லை. கடந்த காலத்துக்கு மன்னிப்பு மட்டும் அல்ல, யாழில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை தமிழரும், கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலில் முஸ்லிம்களும் பரஸ்பரம் போடும் முட்டுகட்டைகளை தளர்த்தி நடப்பிலும் நல்லெண்ணப்படி நடக்கலாம். ஆனால் இரு இனங்களும் அடிப்படையில் ஒரே அடியில் இருந்து வந்தவை, ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இவர்கள் இப்படி வாழ வழி இல்லை என்பதே என் கருத்து.
  5. அததெரண கருத்துப் படங்கள்.
  6. இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk
  7. லீக போட்டியில் இந்திய அவுஸ் போட்டியில் இந்திய இரசிகர் வெல்வதற்காக பிறந்தவர்கள் என பதாகையினை காட்ட அதுவரை ஒழுங்காக போய்க்கொண்டிருந்த இந்தியணி தொடர்ந்து 3 போட்டியில் தோற்று வெளியே போகும் நிலையில் இருந்து மீண்டு லீக் போட்டிகளில் 4 வதாக இருந்த அணி; முதலாவதாக இருந்த அணியினையே வென்றுள்ளது, அதற்கு எனது ராசிதான் காரணம் என நினைக்கிறேன், தற்போது தென்னாபிரிக்கா வெல்லும் என கூறுவதால் இந்தியாவிற்கு மீண்டும் அதிர்ஸ்டமடிக்கலாம்🤣. வாத்தியாரும் இந்தியாவினை தெரிவு செய்துள்ளார் என நினைக்கிறேன், இந்தியா வென்றால் நான் தனித்து கீழே விடப்பட போகிறேன் எனும் கவலை எனக்கு.🤣 அப்படி என்ன செய்தேன் என எனக்கு நினைவில்லை, கொஞ்சம் சொல்லலாமே?
  8. ஒபாமா சிங்கம் எண்டால்???? 😂 சாதித்தது, செய்து காட்டினது என்னவாய் இருக்கும்? 🤣 சும்மாய் இருந்தவன் நோபல் பரிசு வாங்கினதாய் இருக்குமோ? 😎
  9. அதென்ன தோற்றால் தோற்கும். தென்னாபிரிக்கா கப்பை தூக்கும்.
  10. 🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] பிறந்தநாளில் என்னை திரும்பிப் பார்த்தேன் ஆண்டுகளை அல்ல, அனுபவங்களைக் கண்டேன்! பனைமரக் காடுகளின் மண்ணிலே பிறந்தேன் இன்னும் கடல்கள் என்பெயரை கிசுகிசுக்குது! வேலை முடித்து ஓய்வு எடுக்கிறேன் கடிகாரத்தின் கட்டளை மறந்து போனேன்! ஓய்வூதியம் அல்ல, நினைவுகளே என்செல்வம் அன்பும் இழப்பும் சேர்ந்தது என்ஊதியம்! தந்தையின் குரலும் தாயின் வருடலும் அக்காவின் புன்னகையும் மனதில் தெரியுது! மூன்று சகோதரர்கள் வாழ்வை முடித்தாலும் அவர்களின் நினைவுகள் இதயத்தில் ஒளிருது! காலங்கள் எல்லாம் ஆதரவளித்த மனையாள் காத்திருக்காமல் இடையில் மறைந்தது எனோ! ஒவ்வொரு விடியலிலும் அவள் புன்னகை உண்டு ஒவ்வொரு குழந்தையிலும் அவள் நிழல் உண்டு! குழந்தைகள் என்றும் என் வானமே பேரப்பிள்ளைகள் என்றும் என் விண்மீன்களே! அவர்களின் புன்னகையில் என்வயது மறைகிறது அவர்களின் கண்களில் என்நம்பிக்கை ஒளிர்கிறது! யாழ்ப்பாணமே என் முதல் இதயத்துடிப்பு வேர்கள் ஆழமாக நிலைத்திருக்கும் இடம்! நான் அவளை மீண்டும்மீண்டும் பார்ப்பேன் சிறுவனாக அல்ல வீடுதிரும்பும் யாத்ரீகனாக! அன்பு தூரத்தால் மரணத்தால் அழியாது நம்பிக்கை அதன் சுவர்களையும் தாண்டும்! நேரம் கடுமையானாலும் முடிவில் கருணையாகும் வாழ்க்கை தந்த பாடம் இதுவே! இன்று என் பிறந்த நாளில் வெள்ளை முடிகளல்ல வாழ்த்துக்களை எண்ணுகிறேன்! ஒவ்வொரு இழப்பும் ஞானமாக மாற ஒவ்வொரு துன்பமும் புனிதமான ஆசிரியரே! நான் கண்களை மூடிய போது மரணத்தை அல்ல, தொடர்ச்சியைக் காண்கிறேன்! உண்மையாக நேசிக்கும் இதயம் ஒருபோதும் வயதாகாது, மறையாது, என்றும் நிலையானது! When time turns and looks at me, It sees not the years, but the stories I carry. A homeland of palmyrah dreams, And seas that still whisper my name. I have walked beyond the wages of work, Where clocks no longer command the day. Pensioned not by coins, but by memories, Paid in love, loss, and unspoken prayers. Father’s voice, mother’s touch — both echoes now, My sister’s laughter still lives in the wind. Three brothers gone ahead, leaving behind Chapters I read with trembling hands. My wife — ah, my companion of seasons — She walks no longer by my side, Yet her smile lingers in every sunrise, Her warmth folded in every child’s embrace. Children became my horizon, Grandchildren — my stars in twilight. Their laughter renews what years had taken, Their eyes — windows to all that remains pure. Jaffna — my first heartbeat, Where roots grew deep and memories stay. I cross oceans to see her again, Not as a boy, but as a pilgrim returning home. I’ve learned: Love outlives its name, Faith outgrows its temple, And time, though cruel, becomes kind at the end. Today, on this birthday of silence and reflection, I do not count candles — I count blessings. Each loss became a light, Each sorrow, a teacher of grace. When I close my eyes, I see not death, but continuity. For the heart that truly loves — Never grows old, never says goodbye. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] 🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32127544686894095/?
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா! நதியின் ஓட்டத்தில் அதன் மேல் மிதந்து செல்லும் இலை போலவே வாழ்க்கை அதுவாகவே ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது, அப்படியே அது முடியும் என்ற எண்ணம் இருந்தாலும், உங்களின் கவிதையில் இருக்கும் இது போன்ற வரிகள் மனதை துணுக்குற வைக்கின்றது................❤️.
  12. ஆரம்பத்தில் இளங்குமரனின் சில பேட்டிகளையும், பேச்சுகளையும், பாராளுமன்ற உரையையும் கேட்ட பின், இவர் எப்படி அந்தக் கட்சியில் ஒரு முக்கியஸ்தர் ஆனார் என்றே தோன்றியது. ஆள் சுத்தமானவர் போல, அதனால் தான் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் போல என்று நினைக்கவைத்தார். பின்னர் அவரின் பேட்டி, பேச்சு எதையும் பார்க்கவில்லை. அவர் இந்த விடயத்திலும் கற்றுத் தேர்வது நல்ல ஒரு விடயம்..................👍.
  13. ஞானசார தேரர் மிகவும் கவலைப்படப் போகின்றார். இந்தக் கணக்கெடுப்பின் படி இஸ்லாமிய மக்களும், இலங்கை தமிழ் மக்களும் அதிகமான சனத்தொகை வளர்ச்சியினையும், சிங்கள மக்கள் குறைவான சனத்தொகை வளர்ச்சியினையும் கொண்டிருக்கின்றார்கள். தேரர் ஏற்கனவே சிங்கள மக்களை இந்த விடயத்தில் எச்சரித்து இருக்கின்றார். அவரின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.................🤣. மலையக தமிழ் மக்களுக்கு என்னவானது............... அவர்களின் வளர்ச்சி வீதம் எப்படி எதிர்மறையானது (- 2.6)................. அவர்கள் இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறவும் இல்லை........ ஒரு வேளை அவர்களில் பலர் தங்களை வேறு விதமாக அடையாளப்படுத்தியிருக்கக்கூடும். உலகெங்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சனை இலங்கையிலும் வந்திருக்கின்றது. முதியவர்களின் விகிதம் அதிகரிக்க, சிறுவர்களின் விகிதம் குறைந்திருக்கின்றது. அதிகரித்த வாழ்க்கை செலவுகளும், அதிகரிக்கும் தனிநபர் வாழ்க்கை முறைகளும்/தெரிவுகளும் இந்த இடைவெளியை இன்னும் கூட்டும்.
  14. போற போக்கை பார்த்தால் - தெற்கில் என் பி பி தோற்றாலும் வடக்கில் வெல்லும் போல இருக்கிறது. கிழக்கில் கஸ்டம். அங்கே தமிழர்களும், முஸ்லிம்களும், தத்தம் இனச்சார்பு அரசியலின் அவசியத்தை, அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தையும் தாண்டி, புரிந்துள்ளார்கள் என நினைக்கிறேன். வடமாகாண சபையை என் பி பி கைப்பற்றினால் - யாழ்கள ஊர்புதினம் பகுதியில் comments ஐ disable பண்ணி விடலாம்😂. வட்டுகோட்டை தீர்மானத்தோடு ஆரம்பித்த வட்டம் (பூச்சியம்) வந்த இடத்துக்கே மீள வந்து தன்னை பூர்த்தி செய்த இடமாக அந்த வெற்றி இருக்கும். வட மாகாணசபையை என் பி பி கைப்பற்றினால் - முதலாவது தீர்மானம்… மாகாணசபை ஒழிப்பை கோருவதாக அமையக்கூடும். பிகு கடக்கும் ஒவ்வொரு வருடமும் 1987 இல் எந்த பெரிய தவறை விட்டோம் என்பதை ஒவ்வொரு மடங்கு அதிகரித்தே, காட்டி செல்கிறது.
  15. இதுதான் செய்தி சிறியர்.....முதலில் பெயர் போடாது மறைத்தவுடனேயே புரிந்து கொண்டேன்..
  16. தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் எதிர் என்பிபி என இருக்கும் என நினைத்தால் என்பிபி எதிர் தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் என மாறிவிட்டதா?!
  17. இலங்கை சனத்தொகையில் எந்த மாவட்டத்தில் அதிக சனத்தொகை - முழு விபரம் Published By: Digital Desk 3 31 Oct, 2025 | 04:44 PM இலங்கையின் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பானது தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஒவ்வொரு பத்து ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்டுகிறது. இருப்பினும், 2020 ஆண்டின் போது முகங்கொடுக்க நேரிட்ட கொவிட்தொற்று மற்றும் அதற்கு பின்னர் முகங்கொடுக்க நேரிட்ட நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இத் தொகைமதிப்பானது 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பானது நான்கு கட்டங்களில் மேற்கொள்ளப்படும். முதலாவது கட்டம் "வரைபடம் தயாரிக்கும் கட்டம்" என அழைக்கப்படுவதுடன் அதன் போது நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் பிரிவினை அடிப்படையாக கொண்டு "தொகைமதிப்புக் கண்டம்" எனும் பெயரில் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. இரண்டாவது கட்டம் "நிரற்படுத்தும் கட்டம்” இதன்போது தொகைமதிப்புக் கண்ட வரைப்படங்களைப் அடிப்டையாக் கொண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமைந்துள்ள சகல கட்டடங்கள் மற்றும் அவற்றினுள் உள்ள தொகைமதிப்புக் கூறுகளை, ("வீடு","கூட்டு வசிப்பிடம்","வதிவிட நிறுவனம்", மற்றும் "வசிப்பிடம் அல்லாத கட்டடக் கூறு"என வகைப்படுத்தி) அடையாளங்கண்டு அதற்கான இலக்கம் ஒன்றினை வழங்கி நிரற்படுத்தப்பட்டது. இதன்போது அடையாளங்காணப்பட்ட சகல தொகைமதிப்புக் கூறுகளுக்கும் சிவப்பு நிறத்தினால் ஆன தொகைமதிப்பு லேபல் ஒன்று ஒட்டப்படும். மூன்றாவது கட்டம் அவ்வாறு தயாரிக்கப்பட்ட தொகைமதிப்புக் கூறுகளின் பட்டியலுக்கு ஏற்ப மூன்றாவது கட்டத்தின் போது தனி நபர் மற்றும் வீட்டுவசதிகள் தொடர்பான தகவல் சேகரிப்பானது 2024 ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து 2025 ஆண்டு பெப்ரவரி மாதம் வரை 19 ஆம் திகதி அல்லது (2024 டிசம்பர் 18 ஆம் திகதி அவ்வாறு சேகரிக்கப்பட்ட மேற்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "தொகைமதிப்பு தினம்" உதயமாகும் கணம் அதாவது 00.00 மணி நள்ளிரவு 12.00) "தொகைமதிப்புக் கணம்" என கருதப்படும். தகவல்கள் தொகைமதிப்புக் கணத்தினை அடிப்படையாக கொண்டு இற்றைப்படுத்தப்படும். இறுதிக் கட்டத்தின் போது சேகரிக்கப்படும் வெளியிடப்படும். தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு லங்கையில் தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, இம் முறை தொகைமதிப்பில் தரவு சேகரிப்பு செயல்முறை கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. நபர்களின் வாழ்க்கைத் தகவல்கள், கல்வி, எழுத்தறிவு, உடல் மற்றும் மன நிலைமைகள். குடிபெயர்வு நிலை போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு நபரிடமிருந்தும் தனித்தனியாகப் பெறப்பட்டன. அதன்படி. ஒட்டுமொத்தமாக ஒரு தனிநபரின் சமூக, பொருளாதார மற்றும் மக்களியற் தகவல்களின் தொகுப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் மூலம் டிப்படையாகக் கொண்டு முதலாவது சுற்றில் சேகரிக்கப்பட்ட தகவல்களில் பிறப்பு, இறப்பு மற்றும் வசிப்பிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பின் அதற்கமையத் திருத்தங்கள் இரண்டாவது சுற்றின் போது மேற்கொள்ளப்பட்டது. இது 2024 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து 2024 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களைக்கொண்ட காலத்தினுள் மேற்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்புத் தகவல்களுக்கு ஏற்ப இலங்கையின் சனத்தொகை மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கூறுகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக 2025.10.30 ஆம் திகதி அன்று தெகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. சனத்தொகைப் பரம்பல் மற்றும் ஆண்,பெண், பாலின அமைப்பு 2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையினை நகரம், கிராமம், மற்றும் பெருந்தோட்டம் எனும் மூன்று பிரிவுகளாக பிரித்து தரவு சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், 2024 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது அவை மேலும் விரிவுபடுத்தப்பட்டு நகரம், கிராமம், நகரப் பெருந்தோட்டம், மற்றும் கிரமியப் பெருந்தோட்டம் என நான்கு பிரிவுகளாக தரவு சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த நான்கு பிரிவுகளும் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டன. நகரப் பெருந்தோட்டப் பிரிவு மாநகர சபை அல்லது நகர சபையின் கீழ் காணப்படுகின்ற, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட, தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் 10 அல்லது அதற்கு அதிகமானோர் பணிபுரியும் பயிர்ச் செய்கையுடன் கூடிய பிரதேசமாகும். கிரமியப் பெருந்தோட்டப் பிரிவு பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்ற, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட, தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் 10 அல்லது அதற்கு அதிகமானோர் பணிபுரியும் பயிர்ச் செய்கையுடன் கூடிய பிரதேசமாகும். நகரப் பிரிவு மாநகர சபை அல்லது நகர சபையின் கீழ் காணப்படுகின்ற, “நகரப் பெருந்தோட்டம்” அல்லாத பிரதேசமாகும். கிராமப் பிரிவு பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்ற, “கிராமியப் பெருந்தோட்டம்” அல்லாத பிரதேசமாகும். 2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது மாநகர சபை மற்றும் நகர சபையின் மூலம் நிர்வாகிக்கப்படுகின்ற சகல பிரதேசங்களும் "நகரப் பிரிவு" என்றும், அதன்படி 2024 ஆண்டு தொகைமதிப்பின் போது "நகர- பெருந்தோட்டம்” என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்கள், 2012 ஆம் ஆண்டின் போது “நகரப் பிரிவு” என்பதன் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, 2012 தொகைமதிப்பின் போது “பெருந்தோட்டம்” என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்கள் 2024 தொகைமதிப்பின் போது கிரமியப் பெருந்தோட்டப் பிரிவு என கருதப்பட்டுள்ளது. “கிராமம்” எனும் பிரிவை அடையாளங்காண்பதில் 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் எவ்வித மாற்றங்களும் காணப்படவில்லை. அதன் பிரகாரம் பிரிவு அடிப்படையிலான சனத்தொகையைப் போன்று மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை விபரங்கள் அட்டவணை 1 இன் மூலம் காட்டப்பட்டுள்ளது. 2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது. 2012 தொகைமதிப்பின் போது பதிவாகிய 20,359,439 சனத்தொகையை விட இம் முறை சனத்தொகையானது 1,422,361 இனால் அதிகரித்து காணப்படுகிறது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2024 ஆண்டு தொகைமதிப்பின் போது கிராமப் பிரிவின் சனத்தொகை 1,343,596 இனால் அதிகரித்தும், நகரப் பிரிவின் சனத்தொகை 114,733 இனால் அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் பெருந்தோட்டப் பிரிவுகளில் மாத்திரம் 35,968 சனத்தொகையில் குறைவடைந்திருப்தைக் காணலாம். சனத்தொகையின் 'பாலின அமைப்பு' என்பது பாலினத்தின்படி சனத்தொகைகுள் நபர்களின் பரவலாகும். இம்முறைத் தொகைமதிப்பிலே கணக்கிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையினை விட 757,112 இனால் அதிகமாக காணப்படுகிறது. விகிதாசாரமாகக் காட்டினால் இலங்கையின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 51.7 வீதம் பெண்களாவர் என்பதுடன் நூற்றுக்கு 48.3 வீதம் ஆண்களாவர். 2012 தொகைமதிப்புடன் ஒப்பிடும்போது, இம்முறை நகரம் மற்றும் கிராமப் பிரிவுகளில் ஆண்களின் சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் பெருந்தோட்டப் பிரிவுகளில் ஆண்களின் சதவீதம் அதிகமாக காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் போது, நகரப் பிரிவுகளில் பெண்களின் சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. சனத்தொகைத் தகவல்கள் இம்முறை தொகைமதிப்பின் போது இலங்கையின் மொத்த சனத்தொகை 21,781,800 என பதிவாகியுள்ளது. அதில், 51.7 சதவீதம் பெண்கள் மற்றும் 48.3 சதவீதம் ஆண்களும் காணப்படுகின்றனர். நாட்டில் 15 வயதிற்கும் குறைந்தவர்களின் சனத்தொகை 2012-2024 ஆண்டிற்கான தொகைமதிப்புக் காலவரையறையினுள் 25.2 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாக 4.5 சதவீத அலகுகளில் குறைந்துள்ளது. அதேபோல், இந்த காலகட்டத்தில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சனத்தொகை 7.9 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாக 4.7 சதவீத அலகுகளினால் அதிகரித்துள்ளது. ஆம் ஆண்டில் 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகையானது மொத்த சனத்தொகையில் 66.7 சதவீதமாக காணப்படுகிறது, இது 2012 இல் 66.9 சதவீதமாக காணப்பட்டது. அதன்படி 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகைக்கான சதவீதம் 2012-2024 தொகைமதிப்பு காலவரையறையினுள் இந்த சதவீதம் 0.2 அலகுகளில் குறைந்துள்ளது. பதினைந்து வயதுக்குட்பட்ட மற்றும் அறுபத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சனத்தொகைக்கான கூட்டுத்தொகையைக் தங்கிவாழ்வோர் என கருதப்படும். 2012 ஆம் ஆண்டு தொகைமதிப்பின் பிரகாரம் கணக்கெடுப்பின்படி 49.4 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 49.8சதவீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை சனத்தொகையின் இனப்பரம்பல் தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட இனத்தை அவர்களது இனமாக அடையாளம் காணப்படுகின்றன. அதன்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 74.1 சதவீதம், அல்லது சனத்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சிங்களவர்கள் என்றும், 12.3 சதவீதம் பேர் இலங்கை தமிழர்கள் என்றும், 10.5 சதவீதமானோர் இலங்கைச் சோனகர்/முஸ்லிம் என்றும், 2.7 சதவீதமானோர் இந்திய தமிழர்கள்/மலையக தமிழர்கள் என்றும் பதிவாகியுள்ளன. மேலும், மீதமுள்ள சதவீதமானது சனத்தொகை சதவீதத்தில் பறங்கியர்கள், மலாயர்கள், இலங்கை செட்டிகள், பரதர்கள் மற்றும் வேடர்கள் உள்ளிட்ட பிற இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிவாகியுள்ளது. 0.3 தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட சமயத்தை அவர்களது சமயமாக அடையாளங்காணப்படுகின்றன. நாட்டில் மொத்த சனத்தொகையில் 69.8 சதவீதம் பௌத்தர்கள் என்பதுடன் 12.6 சதவீதம் இந்துக்கள் ஆவர். 10.7 சதவீதம் இஸ்லாமியர்கள், 5.6 சதவீதம் றோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் 1.3 சதவீதம் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் இந்த சமயங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, மேலும் அந்த சதவீதம் 0.02 என்ற சிறிய எண்ணிக்கையைக் கொண்டு காணப்படுகிறது. 2024 தொகைமதிப்பில் இனரீதிக்கு ஏற்ப சனத்தொகை மற்றும் சதவீதங்களை 2012 தொகைமதிப்புடன் தொடர்புடைய புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுதல் மற்றும் 2012 - 2024 ஆம் ஆண்டுக்கான சராசரி அதிகரிப்பு விகிதம் அட்ட வணை 06 இல் காட்டப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இனரீதியான பரம்பல் வரைபடம் 04 இல் காட்டப்பட்டுள்ளது. இனத் தொகுதிகளுக்கிடையில் 2012- 2024 காலப்பகுதிக்குள் சனத்தொகையில் கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைச் சோனகர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் அவர்களின் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 1.5 நாட்டின் மொத்த சனத் தொகை வளர்ச்சி வேகத்தின் மூன்று மடங்கிற்கும் அதிகமானதாகும். அதற்கடுத்ததாக கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைத் தமிழர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் 2012- 2024 காலப்பகுதியினுள் அவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 1.3 ஆகும். 2012 2024 காலப்பகுதியில் சனத்தொகையில் சிங்களவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 0.4 ஆகும். இக்காலப்பகுதியில் இந்தியத் தமிழர்கள் நூற்றுக்கு 2.6 என்ற மிகக் குறைவான வருடாந்த வளர்ச்சி விகிதத்தினை வெளிக்காட்டியுள்ளனர். இலங்கையின் வேறு இனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் இக் காலப் பகுதியில் அந்தச் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் அதன் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு - 3.1 ஆகும். இம்முறைத் தொகைமதிப்பில் (2024) மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குடிசனத் தொகைமதிப்பின் போது இனத் தொகுதிக்கு ஏற்ப சனத்தொகை வீகிதாசாரம் மாவட்ட மட்டத்தில் அட்டவணை 7 இல் காட்டப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியிலான சனத்தொகை பரம்பல் கம்பஹா மாவட்டம் அதிக சனத்தொகை (2436142) மாவட்டமாகவும், முல்லைத்தீவு குறைவான சனத்தொகை (122619) மாவட்டமாகவும் பதிவாகியுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் அதிகமானோர் பெண்கள் என்பது முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்டது 2001 ஆம் ஆண்டுத் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பிலேயேகும். அதன்போது தொகைமதிப்பு முழுமையாக நடைபெற்ற 18 மாவட்டங்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 50.2 வீதமானோர் பெண்களாவர். இருப்பினும் பதிவுகளுக்கமைய 1981, 2001, 2012 மற்றும் 2024 தொகைமதிப்புகளின்போது மாவட்ட ரீதியாக அறிவிக்கப்பட்ட பால்நிலை விகிதாசாரம் அட்டவணை 2 இல் வழங்கப்பட்டுள்ளது. 2024 தொகைமதிப்பின் போது, நாட்டின் 25 மாவட்டங்களையும் கருத்தில் கொள்ளும்போது, சகல மாவட்டங்களிலும் பால்நிலை விகிதாசாரம் 100 விடக் குறைவான மதிப்புகளைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (1) 1981 தொகைமதிப்புத் தொடர்பாக தற்போது காணப்படும் மாவட்ட எல்லைகளுக்கமைய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பால்நிலை விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது. (2) 2001 தொகைமதிப்புத் தொடர்பாகத் தொகைமதிப்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த மாவட்டங்களுக்கு மட்டும் பால்நிலை விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது. இம்முறை தொகைமதிப்பின் போது அதிகூடிய பால்நிலை விகிதாசாரம் மொனராகலை மாவட்டத்தில் 97.9 சதவீதம் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் 97.3 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த தொகைமதிப்பில் மிகக் குறைந்த பால்நிலை விகிதாசாரம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88.0 சதவீதம் பதிவாகியுள்ளது. வீட்டுவசதிகள் தொடர்பான தகவல்கள் வீட்டு வசதிகள் தொடர்பான தகவல்கள் நபர்கள் வசிக்கும் வீட்டுக் கூறுகளில் இருந்தே சேகரிக்கப்படும் என்பதுடன், இதன் போது வீட்டுக் கூறின் தகவல்கள் மற்றும் குடித்தனத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இலங்கையில் வசிக்கும் வீட்டுக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை 6,030,541 ஆகும். அதிகமான வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை (28 சதவீதம்) மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றது என்பதுடன், குறைவான வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை (51 சதவீதம்) வட மாகாணத்தில் பதிவாகியுள்ளன. நாட்டிலுள்ள வீட்டுக்கூறு 4.32 வகைகளினுள் 95.66 சதவீதமான வீட்டுக்கூறுகள் தனி வீடுகளாகும் என்பதுடன் இணைந்த வீடுகளாகும். எஞ்சிய வீட்டுக் கூறுகளில் 82 சதவிதம் ஏனைய வீட்டுக் கூறுகளாக பதியப்பட்டுள்ளது. இலங்கையில் வீட்டுக் கூறுகளில் 97.9 சதவீதம் மாத்திரம் சுவர்கள் நெடுவாழ்வுத் தன்மையுள்ள பொருட்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதுடன், எண்ணிக்கையில் 2.1 சதவீதமானவற்றின் சுவர்கள் நெடுவாழ்வுத் தன்மையற்ற களிமண் பலகை/ கிடுகு/பனையோலை போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வீட்டுக்கூறுகளில் 98.1 தன்மையுள்ள பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1.7 சதவீதமானவற்றின் கூரைகள் சதவீதத்திலும் கூரைகள் நெடுவாழ்வுத் நெடுவாழ்வுத் தன்மையற்ற கிடுகு/ பனையோலை/ வைக்கோல் போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள மொத்த வசிக்கும் வீட்டுக்கூறுகளில் காணப்படும் மொத்தக் குடித்தனங்களின் எண்ணிக்கை 6,111,315 ஆகும் என்பதுடன், குடித்தனத்தின் அளவு (வழமையாக வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை) 3.5 ஆகும். இலங்கையில் உள்ள மொத்த குடித்தனங்களில் 38.9 சதவீதமானவர்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மார்க்கமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்புச் சபையிடமிருந்து விநியோகிக்கப்படுகின்ற நீர்ஆகும். நாட்டில் மொத்தக் குடித்தனங்களில் 97.4 சதவீதமானோர் வெளிச்சத்தினைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மார்க்கமாக மின்சாரம் காணப்படுகிறது . மொத்தக் குடித்தனங்களின் எண்ணிக்கையில் 92.2 சதவீதமானோர்க்கு தமது குடித்தனத்தில் தனியான பாவனைக்கு (வீட்டுக் கூறினுள் அல்லது வீட்டுக் கூறிற்கு வெளியில்) மலசலகூடம் காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/229096
  18. இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்? பட மூலாதாரம், Griet Van Malderen கட்டுரை தகவல் இசபெல் கெர்ரெட்சன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன. நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண்ட பாலைவனச் சிங்கங்களில் காமாவும் ஒன்று. அந்த சிங்கத்தைப் பெல்ஜிய புகைப்படக் கலைஞர் கிரீட் வான் மால்டரென் வியத்தகு முறையில் படம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்படும் மதிப்புமிக்க 'ஆண்டின் சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர்' போட்டியில் அவரது புகைப்படம் மிகவும் பாராட்டப்பட்டது. "அது நாள் முழுவதும் அந்த கடல்நாயைக் கவனித்துக் கொண்டிருந்தது," என்று வான் மால்டரென் கூறுகிறார். அவர் காரில் இருந்தபடியே காமாவைப் பார்த்துக் கொண்டே, அந்தப் படத்தைப் பிடிக்க பல நாட்கள் காத்திருந்தார். மொத்தம் 80 சிங்கங்களைக் கொண்ட நமீபியாவில், ஸ்கெலிட்டன் கடற்கரையில் 12 பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை வறண்ட நமீபிய பாலைவனத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு உணவைத் தேடி இடம்பெயர்ந்து, இந்த புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப 2017-ஆம் ஆண்டில் தங்கள் உணவு மற்றும் நடத்தையை கடுமையாக மாற்றிக் கொண்டன. மேலும், இந்த மாற்றத்தால் அவை செழித்து வளர்வதாகவும் தெரிகிறது. 'எல்லாமே ஒரு போராட்டம்தான்' "இந்த விலங்குகள் எவ்வளவு மீள்தன்மை கொண்டவை என்பதைப் புகைப்படம் காட்டுகிறது... அவை உயிர்வாழத் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன," என்கிறார் வான் மால்டரென். "இந்தச் சிங்கங்கள் கடினமானவை. வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதைப் பற்றியது, இங்கு எல்லாமே ஒரு போராட்டம்தான்." காமாவுக்கு மூன்று மாத வயதானதிலிருந்தே அதை வான் மால்டரென் கவனித்து வருகிறார். அதற்கு இப்போது மூன்றரை வயது. "கிட்டத்தட்ட அது வயது வந்த சிங்கமாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார். மேலும், அந்தப் பெண் சிங்கம் ஒரே இரவில் 40 கடல்நாய்களைக் கொல்லக்கூடிய அச்சமூட்டும் வேட்டைக்காரியாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார். நமீபியாவின் பாலைவனச் சிங்கங்களை 1980 முதல் கண்காணித்து வரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் பிலிப் ஸ்டாண்டர், ''காமா, ஸ்கெலிட்டன் கடற்கரையில் வளர்ந்த முதல் தலைமுறை சிங்கங்களில் ஒன்று. வான் மால்டரெனின் புகைப்படம் உண்மையிலேயே முக்கியமானது. ஏனெனில் அது காமா, கடற்கரையில் தனியாக இருந்த முதல் நாளைக் காட்டுகிறது" என்று கூறுகிறார். நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் 1980களில் ஸ்கெலிட்டன் கடற்கரையில் வாழ்ந்தன, ஆனால் ஒரு வறட்சி மற்றும் விவசாயிகளுடனான மோதல் காரணமாகப் பெரும்பாலான சிங்கங்கள் அழிந்த பிறகு அவை பாலைவனத்திற்குத் திரும்பின என்று ஸ்டாண்டர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த விலங்குகள் "மீண்டும் கடற்கரைக்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடித்துள்ளன," என்று அவர் கூறுகிறார். 'நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை' இந்த விலங்குகள் "மிகவும் வாழத் தகுதியற்ற நிலப்பரப்பில், தாவரங்கள் இல்லாத பெரிய மணல் குன்றுகளின் பரப்பில்" வாழப் பழகியுள்ளன என்று 1997 இல் 'பாலைவனச் சிங்கப் பாதுகாப்பு அறக்கட்டளையை' (Desert Lion Conservation Trust) நிறுவிய ஸ்டாண்டர் கூறுகிறார். "பாலைவனச் சிங்கங்கள் நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை," என்கிறார் ஸ்டாண்டர். அவை எந்தச் சிங்கத்தை விடவும் மிகப்பெரிய வாழ்விடத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார். மேலும் "அவை மிகவும் ஆரோக்கியமான, சிறந்த விளையாட்டு வீரர்கள். ஒரு பாலைவனச் சிங்கத்தின் சராசரி வாழ்விட எல்லை சுமார் 12,000 சதுர கிமீ (4,600 சதுர மைல்கள்)'' என்று அவர் கூறுகிறார். அதேசமயம் செரெங்கேட்டியில் உள்ள ஒரு சிங்கத்தின் வாழ்விட எல்லை பொதுவாக சுமார் 100 சதுர கிமீ (39 சதுர மைல்கள்) இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவை தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழப் பழகிவிட்டன. "அவை உண்ணும் இறைச்சியிலிருந்து நீர் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான நடாஷா கூப்பர் கூறுகையில், "சவன்னா வனப்பகுதியில் அல்லது 'லயன் கிங்' படத்தில் வருவது போல ஒரு பெரிய பாறையின் மீது சிங்கங்களைப் பார்த்து நாம் பழகிவிட்டோம், எனவே கடற்கரையில் ஒன்றைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் விந்தையாகவும் அசாதாரணமானதாகவும் உணர்கிறோம்." பாலைவனச் சிங்கங்கள் சவன்னா சிங்கங்களை விடச் சிறிய குழுக்களாகப் பயணிக்கின்றன என்று கூப்பர் கூறுகிறார். "பொதுவாக, அதிக இரைகள் இருக்கும் பகுதிகளில், குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் வசிக்கின்றன," என்று அவர் கூறுகிறார். "இந்த பகுதியில், போதுமான உணவைப் பெறுவதற்காகச் சிறிய குழுக்களாக அதிக தொலைவுக்குச் சுற்றித் திரிகின்றன." இது சிங்கங்களைப் படம் பிடிக்கும் பணியை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது. "ஒரு புகைப்படக் கலைஞராக இது அருமையாக உள்ளது, ஏனெனில் இந்தச் சிங்கங்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "அவை சும்மா படுத்துத் தூங்காமல், உயிர்வாழ எப்போதும் வேட்டையாடுகின்றன." பட மூலாதாரம், Griet Van Malderen படக்குறிப்பு, நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக உள்ளன மீண்டும் கடற்கரைக்கு பயணம் 2015 இல், வறட்சி காரணமாகச் சாதாரணமாக அவை வேட்டையாடும் தீக்கோழிகள், ஓரிக்ஸ் மற்றும் ஸ்ப்ரிங்பாக் போன்ற உள்நாட்டு இரைகள் குறைந்த பிறகு, சிங்கங்கள் மீண்டும் கடலைக் கண்டறிந்து கடற்கரையில் கடலோர இரைகளை வேட்டையாடத் தொடங்கின. "கடல்நாய்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "காலநிலை மாற்றம் இந்த பாலைவனச் சிங்கங்களை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது, அட்லாண்டிக் கடற்கரையில் உயிர்வாழ அசாதாரண வழிகளில் அவற்றைப் பழக்கப்படுத்தியுள்ளது." பல தலைமுறைகளாகச் சிங்கங்களின் நடத்தை மாறுவதைப் பார்ப்பது "ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்ட முதல் பாலைவன பெண் சிங்கம் "ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாடுவதில் சிறப்புப் பெற்றிருந்தது," என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த கடல்நாய் சிங்கங்களுக்கு ஒரு சிறிய ஓய்வு இடைவெளியைக் கொடுக்கிறது." 2025 மார்ச்சில் கடற்கரையில் இரண்டு குட்டிகள் பிறந்தன என்று வான் மால்டரென் மேலும் கூறுகிறார். "இந்த பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்." நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக இருக்கின்றன. "நாங்கள் அவற்றை கடல்சார் சிங்கங்கள் என்று குறிப்பிடுகிறோம், ஏனெனில் அவை கடல் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளவும் கடலில் இருந்து உணவை உட்கொள்ளவும் கற்றுக் கொண்டுள்ளன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார். ஸ்டாண்டர் நடத்திய ஒரு ஆய்வில், மூன்று இளம் பெண் சிங்கங்கள் 18 மாத காலப்பகுதியில் உட்கொண்ட உயிரிப்பொருட்களில் (biomass) 86% நீர்க்காகங்கள் (cormorants), ஃபிளமிங்கோக்கள் மற்றும் கடல்நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டது. "இது ஒரு சிறிய சிங்கங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், கடலைப் பற்றிய அறிவை பயன்படுத்தி அவை இப்போது மீண்டு வரும் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாண்டர். இதற்கு ஸ்கெலிட்டன் கடற்கரையில் வசிக்கும் மனிதர்களுடனான மோதலைக் குறைக்க வேண்டும். சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வரும்போது அவற்றைப் பயமுறுத்தச் சிங்கங்களை பாதுகாக்கும் காவலர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாண்டர் கூறுகிறார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க, சிங்கங்கள் கடக்கும்போது ஒரு எச்சரிக்கையை அனுப்பும் மெய்நிகர் வேலி அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார். சிங்கங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைப் புகைப்படக் கலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தான் புகைப்படம் எடுக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதே தனது வேலையின் முக்கிய நோக்கம் என்று வான் மால்டரென் கூறுகிறார். "[எனது புகைப்படங்கள்] இந்த விலங்குகளின் அழகையும் அவற்றின் பலவீன நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் மீள்தன்மை நமக்கெல்லாம் ஒரு பாடம். மாற்றத்தை எதிர்கொள்ள, தகவமைத்துக் கொள்ள மற்றும் காலம் கடப்பதற்கு முன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "விலங்குகள் மீண்டு வரும், அவை, அவற்றின் அறியப்பட்ட அழகு மற்றும் வலிமையைப் மீண்டும் பெறும் திறன் கொண்டவை. நாம் அவற்றிற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அழகான பாடத்தை அந்தப் புகைப்படம் நமக்குக் கடத்துகிறது" என்று ஸ்டாண்டர் ஒப்புக்கொள்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9v1dkp7793o
  19. பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா, வளத்துடன் வாழ்க.
  20. Kohli-ன் வார்த்தை தந்த திருப்புமுனை; Cricket உலகையே திரும்பி பார்க்க வைத்த Jemimah Rodrigues........!
  21. பட மூலாதாரம், Alvaro Bon படக்குறிப்பு, அல்வரோ போன் கட்டுரை தகவல் லானா லாம் சிட்னி 30 அக்டோபர் 2025 சுமார் 18 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் ஒரு படகிலிருந்து தவறி விழுந்த, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு சர்ப்ஃபோர்டு (அலைச்சறுக்கு பலகை), கடலில் சுமார் 2,400 கிமீ (1,490 மைல்கள்) தூரம் மிதந்து சென்று, நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்குத் தீவில் உள்ள ராக்லான் துறைமுகத்தில் கைட்சர்ஃபிங் (kitesurfing) செய்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்வரோ போன் என்பவர், கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பலகையைக் கண்டுபிடித்தார். அவர் தான் கண்டுபிடித்தது குறித்துப் பல ஆன்லைன் சர்ஃபிங் குழுக்களில் பதிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பலகையின் உரிமையாளரின் நண்பர் அதைக் கண்டு, இருவரையும் இணைத்து வைத்தார். இந்தப் பலகை இந்த வாரம் அதன் ஆஸ்திரேலிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். அந்த உரிமையாளர், லியாம் என்று மட்டுமே அறியப்படுகிறார். மே 2024-இல் இந்தப் பலகை படகில் இருந்து காற்றில் பறந்து சென்றது. "அவரால் நம்பவே முடியவில்லை," என்று போன் பிபிசியிடம் கூறினார். அதன் வடிவமைப்பாளர் தற்போது சர்ஃப் போர்டுகளைத் தயாரிப்பதில்லை என்பதால், அந்தப் பலகைக்கு மாற்று இல்லை என அவர் மேலும் கூறினார். சுமார் பத்து ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்து வரும் 30 வயதான போன், ராக்லானில் தினசரி கைட்சர்ஃபிங் செய்கிறார். பலகையைக் கண்ட நாளன்று வலுவான நீரோட்டங்கள் காரணமாகத் தன் காற்றாடிச் சறுக்குக் கயிற்றை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். கடலில் அடித்துச் செல்லப்படும் அபாயத்தை எதிர்கொள்வதை விட தனது பட்டத்தை இழப்பது மேல் என்ற என சட்டென அவர் முடிவெடுத்தார். அவர் துறைமுகத்தின் தொலைதூரப் பகுதிக்கு சென்றபோது புகுந்தபோது, கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த ஆனால் பெரிதாக எந்தச் சேதமும் இல்லாத, கிரீம் நிறத்தில் இருந்த 7 அடி 6 அங்குல (229 செமீ) பலகையைக் கண்டார். அவர் அதை மணல் மேடுகளில் மறைத்து வைத்து, சில நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்து, அதை துறைமுகத்துக்கு எடுத்துச் சென்றார். பலகையைச் சுத்தம் செய்த பிறகு, அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினார். பலகையின் வடிவமைப்பாளரின் தனித்துவமான கையொப்பத்தைக் காட்டும் படங்களை அவர் பதிவிட்டார். "நிச்சயமாக இது தினமும் பயன்படுத்தப்படும் பலகை அல்ல... இது கிழக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மிதந்து வந்திருக்க முடியுமா என்று யோசிக்கிறேன்?" என்று அவர் எழுதினார். "அந்த செய்தியில் நான் அந்தப் படங்களையும் பதிவிட்டேன். பின்னர் நான் ராக்லானில் மீண்டும் அலைச்சறுக்குச் சாகசத்துக்குச் சென்றேன் என்று நினைக்கிறேன்," என்று போன் கூறினார். திரும்பி வந்தபோது, மர்மமான பலகை பற்றிய பதில்களால் அவரது தொலைபேசி நிரம்பி வழிந்தது. நூற்றுக்கணக்கானோர் அந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், இந்த அசாதாரண கண்டுபிடிப்பு குறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்தனர். லியாமின் நண்பர் பலகையைக் கண்ட பிறகு, லியாம் அதன் உரிமையாளர் என்பதைக் நிரூபிக்கப் பலகையின் படங்களை போனுக்கு அனுப்பினார். மேலும், ஒரு குடும்ப நண்பரைத் தொடர்புகொண்டு அதை எடுத்து வர ஏற்பாடு செய்தார். தனது விதியினால் ஏற்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு குறித்துப் போன் தத்துவார்த்தமாகப் பேசினார். "ஒவ்வொரு கதைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது... நான் சர்ஃப் போர்டைக் கண்டுபிடித்த அதே நேரத்தில், என் காற்றாடிச் சறுக்கை இழந்தேன்," என்று அவர் கூறினார். "ஒருவேளை அதுதான் அர்த்தமாக இருக்கலாம்... சில சமயங்களில் நீங்கள் சிறந்தவற்றைக் கண்டுபிடிக்கச் சில விஷயங்களை விட்டுவிட வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7nd17v4nxo
  22. நியுசிலாந்தின் அணித்தலைவர் சோபி டிவைனிற்கான பிரியாவிடை, 2024 வெளியான காணொளி. நியுசிலாந்தின் பழங்குடி மக்கள் பேசும் மெளரி மொழியில் உள்ளது.
  23. மடையன் என்பதன் அர்த்தம் என்ன என்பதை தெறிந்து கொள்வோம் ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை" மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. . வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது. வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம். மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா? இனி யாரையாவது மடையா என்று திட்டும் முன் யோசியுங்கள்... மடை திறந்து தாவும் நதியலை நான் நன்றி முக நூல்
  24. எப்படா சறுக்குவான் என்று நினைவில் இருக்கும் யாரும் இங்கே எழுதவில்லை 🤣 எங்கள் கோஷானுக்கா இப்படி....... என்ற ஒரு அதிர்ச்சியில் இருந்து உடன் மீண்ட நாங்கள் வேறு எப்படி எழுதுவது😇
  25. வீரகேசரியில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்று எழுதப்பட்டு இருக்கிறது. 30,40 வருடங்களுக்கு முன்பு வீரகேசரியில் இருந்த நிருபர்கள் எங்கே, இப்ப இருப்பவர்களில் சிலர் 🤔
  26. ஆசைப்படலாம் வசி. ஆனால் ஆசைக்குப் புள்ளிகள் இல்லை. 😄
  27. நான் எப்படி இந்தியாவினை தெரிவு செய்துள்ளேன் என தெரியவில்லை! அடுத்த போட்டியில் சந்திப்போம் (எங்களுக்கு போட்டி முடிவடைந்து விட்டது) இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு எனது நிபந்தனை அற்ற ஆதரவு, என்னுடன் அவுஸ்ரேலியா வெல்லும் என தெரிவு செய்த அனைவரும் தென்னாபிரிக்காவிற்கு தமது ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிற்கும் ஐ சி சி போட்டிகளுக்கும் எட்டா பொருத்தம், இந்தியா இறுதி போட்டியில் தோற்றால் இந்தியாவினை தெரிவு செயாத அனைவருக்கும் மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருக்கா?🤣
  28. வினா 33) இறுதி போட்டிக்கு இந்தியா தெரிவாகுமென 11 போட்டியாளர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார்கள். 1) அகஸ்தியன் - 68 புள்ளிகள் 2) ஏராளன் - 61 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 61 புள்ளிகள் 4) ரசோதரன் - 59 புள்ளிகள் 5) சுவி - 57 புள்ளிகள் 6) கிருபன் - 57 புள்ளிகள் 7) புலவர் - 57 புள்ளிகள் 8) வீரப்பையன் - 56 புள்ளிகள் 9) செம்பாட்டன் - 55 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 11) வாதவூரான் - 53 புள்ளிகள் 12) வசி - 51 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 14) கறுப்பி - 50 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 75).
  29. இதைத்தான் அழகு தமிழில் உள்மனக்கிடக்கை என்பார்கள்😂. பின்னாளில் மனோதத்துவ நிபுணர் சிக்மன்ட் ப்ரோட் தனது Freudian concept இல் ஓர் அங்கமாக முன்வைத்த Freudian Slip என்பதும் இதுவே😂. பிகு காலையில் அவசர வாசிப்பில் தலையங்கம் கண்ணில் பட்டது… நானும் கோஷான் என்றே வாசித்தேன். நம்மதான் யாழில் பிரபலமாச்சே😂, நம்ம (நியாபகார்த்தமா?😂) பெயரை ஏதோ ஒரு கப்பலுக்கு வச்சிருக்காங்க போல எண்டு விட்டுவிட்டேன்😂. மைன்ட்வாய்ஸ் அநியாயமா ஒரு எழுத்தில் எல்லாம் மாறிப்போச்சு. இல்லாட்டில் கப்பல் என்னதுதான், மம்மி டாடி எல்லாம் கனடாவிலதான் லிவிங்ஸ்டன் எண்டு ஏதாவது உருட்டி இருக்கலாம்😂
  30. அவர்தான் ஜெமைமான்ட கால்ல விழுந்திட்டாரே. முற்றுமுழுதான ஆதரவு என்றும் சொல்லிவிட்டாரே🤣
  31. இரு கோடுகளில் போதை என்னும் பெரிய கோடு போட்டதால் மற்றைய கோடுகள் மறைந்துவிட்டன.
  32. Natesan Natesan · ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது… சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’ சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா… இதை வெச்சுக்கோ… சீக்கிரம் கதவைத் திற… நான் உள்ளே போகணும்!’’ சித்ரகுப்தன் சிரித்தான். ‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்–& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது… அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’ ‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’ ‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’ ‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’ ‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’ ‘‘வேறே எப்படி வாங்கறது?’’ ‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’ ‘‘என்ன சொல்றே நீ?’’ ‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’ ‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’ ‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது… ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’ பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்…. அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’ ‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’ ‘‘என்ன உத்தரவு?’’ ‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’ ‘‘அப்புறம்?’’ ‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான். ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்: காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்! நன்றி : ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் ........! Voir la traduction
  33. ஜெமைமா பேட்டியில் சொன்னது: இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் — நான் இதை தனியாக செய்யவில்லை. என் அம்மா, அப்பா, பயிற்சியாளர், என்மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடந்த மாதம் மிகவும் கடினமாக இருந்தது, இது ஒரு கனவுபோல் உணர்கிறேன், இன்னும் நம்ப முடியவில்லை. (என்னை மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாட சொல்லியபோது) நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. குளித்துக் கொண்டிருந்தேன், “சொல்லும்போது சொல்லுங்கள்” என்றேன். மைதானத்திற்குள் செல்வதற்கு ஐந்து நிமிடம் முன்பு, நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறேன் என்று கூறினார்கள். இது எனக்காக அல்ல — இந்தியாவுக்காக இந்தப் போட்டியை வெல்லவேண்டும் என்பதற்காக எல்லாம் அமைந்தது (முன்பு கடினமான போட்டிகளில் தோற்ற அனுபவம் இருந்தது). இன்றைய நாள் எனது 50 அல்லது 100 பற்றி அல்ல, இந்தியா வெல்வது பற்றிதான். இதுவரை நடந்தது எல்லாம் இதற்கான முன்னோட்டம் போல. கடந்த வருடம் நான் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டேன். நன்றாக துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்தேன். ஆனால் தொடர்ந்து பல விஷயங்கள் நடந்தன, எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் போது தினமும் கண்ணீர் விட்டேன். மனதளவில் நன்றாக இல்லை, கவலை நிறைந்த நாட்கள். ஆனால் எனக்கு தெரியும் — நான் மைதானத்தில் நிற்கவேண்டும், மீதியை கடவுள் கவனிப்பார். ஆரம்பத்தில் விளையாடிக்கொண்டே என்னுடன் பேசிக்கொண்டிருந்தேன். இறுதியில், பைபிளிலிருந்து ஒரு வசனம் நினைவு வந்தது — “நிமிர்ந்து நில்; கடவுள் உனக்காகப் போராடுவார்.” நானும் அப்படித்தான் நின்றேன், அவர் எனக்காகப் போராடினார். என்னுள் பல உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன, ஆனாலும் அமைதியாக இருக்க முயன்றேன். இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றபோது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹாரி அக்கா வந்தபோது, நன்றாக ஒரு கூட்டணியை உருவாக்குவது மட்டுமே நினைத்தோம். தீப்தி ஒவ்வொரு பந்துக்கும் என்னுடன் பேசினார், ஊக்கமளித்தார். நான் முடியாவிட்டாலும், என் கூட்டாளிகள் என்னை ஊக்குவிக்கிறார்கள். எனக்காக எதையும் எடுத்துக்கொள்ள முடியாது — நான் ஒன்றும் தனியாக செய்யவில்லை. (பார்வையாளர்கள் பற்றி) ஒவ்வொரு ரசிகரும் கத்தி, ஆரவாரம் செய்து, நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் — அவர்கள் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் கத்தும்போது அது என்னை மேலும் ஊக்குவித்தது.
  34. மன்னார் காற்றாலைத் திட்டத்தைப் பற்றி இது வரை நான் கண்ட கட்டுரைகளில் எல்லாத் தரவுகளையும், சட்ட ஆதாரங்களையும் உள்ளடக்கிய ஒரேயொரு கட்டுரை இது மட்டும் தான். இரண்டாம் தடவையும் வாசிக்க வேண்டும், முழுவதையும் விளங்கிக் கொள்ள. இந்தத் தரவுகளை வைத்துக் கொண்டு யாராவது இலங்கையில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு கோரியாவது ஏதாவது வழக்குப் போட்டிருக்கிறார்களா இது வரை? தேர்தல் நேரம் மட்டும் வெளிப் பட்டு வரும் "ஜனாதிபதி சட்டத்தரணிகள்" எவராவது ஒரு சூழல் பாதுகாப்பு சட்டத் தரணியோடு இணைந்து இதை உச்ச நீதிமன்றத்திற்குக் கொன்டு போக முடியாதா? இலங்கையில், இந்த விடயங்களில் eminent domain என்ற அரசுக்கான விசேட உரிமை சட்டத்தில் இருக்கிறதா?
  35. 2009 உடன் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுவிட்டது. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர், தலைமை இல்லை. இங்கே மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் 2009 அல்லது அதற்கு முற்பட்டதா? அல்லது குடு அடிக்கும்/விற்கும் கோஷ்டி விடுதலை புலிகள் அமைப்பு என கூறப்படுகின்றதா?
  36. மனிதஇனம் மிகவும் மோசமானது . ........ இவர்களால் சிங்கங்கள் கூட அகதிகளாய் அலைகின்றன ........! 😇
  37. ஏராள‌ன் அண்ணா தான் இந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை போட்டியில் முத‌ல் இட‌ம் பிடிக்க‌ போகிறார் இந்தியான்ட‌ புன்னிய‌த்தில‌ ஆக‌லும் கீழ் ம‌ட்ட‌த்தில் நிக்காம‌ க‌வுர‌வான‌ புள்ளியுட‌ன் நிப்பேன்.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.