Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31932
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20007
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87986
    Posts
  4. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    12678
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/23/25 in all areas

  1. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது. சுயமாக குடிவரவு பணி வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடியும். இதற்கு முன்னர் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்து குடிவரவு பணிகளை முடிக்க வேண்டிய நிலை இருந்தது. இலங்கைக்கு அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவோரு சிறந்த வழிமுறையாகும் என பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு நுழைவாயில் (E-Gate)வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கடவுச்சீட்டுகளையும் கொண்ட பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். பல இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த வசதி குறிப்பிடத்தக்க நன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/good-news-foreigners-who-visting-sri-lanka-1763883182
  2. சூப்பர் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ஆட்டமிழக்க , புதிதாக இன்னுமொருவர் விளையாடலாம். அதாவது ஒரு அணி சார்பாக அதிக பட்சம் 3 பேரே துடுப்பாட முடியும். 2 வது வீரரும் ஆட்டமிழந்தால் அந்த அணியின் ஆட்டம் முடிவடையும். இது பலகாலமாக நடைபெறும் விதிகளில் ஒன்று.
  3. அந்த கறுந்த இறுகிய முகங்களை ☠️இனிமேல் பார்க்க தேவையில்லை 😂
  4. அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை! ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடவில்லை. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக அழைத்து போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பல மாதங்கள் கழிந்தும், இந்த விவகாரம் எந்த முன்னேற்றமுமின்றி அப்படியே இருந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக ரஷ்யாவை பணிய வைக்க, அதனிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரியை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் . இருப்பினும் ரஷ்யா மசிந்து அடிபணியவில்லை. இதன் தொடர்ச்சியாக, மேற்காசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துவதற்கு முன்மொழியப்பட்ட அமைதி திட்டம் போன்று, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா முன்வைத்துள்ள, இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை போர் நிறுத்தத்திற்கான துவக்க புள்ளியாக ஏற்றுக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் இந்த சமாதான திட்டத்தை ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறும் எனவும், குபியான்ஸ்க் நகரை கைப்பற்றியது போல் ஏனைய முக்கிய பகுதிகளையும் கைப்பற்றுவோம் எனவும் புடின் வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளார். இதேவேளை, டிரம்பின் குறித்த சமாதான திட்டத்தில் ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதால், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தன்னுடைய மதிப்பை இழக்க நேரிடும் எனவும், இந்த சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தினால், நீண்டகால நட்பை அமெரிக்கா இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் நலன்களுக்கு துரோகம் இழைக்காத மாற்று திட்டங்களை முன்வைக்க விரும்புவதாகவும் அவர் உறுதியளித்து உள்ளார். மேலும், இந்த முன்மொழிவு ஐரோப்பிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மையையும், பரந்த பாதுகாப்பையும் பலவீனப்படுத்தக்கூடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்நிலையில், இந்த சமாதான திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உக்ரைனை வலியுறுத்திஉள்ளது. https://athavannews.com/2025/1453607
  5. நண்பர்களே, 2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை. அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை. பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன். நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும். நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன. வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது. தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார். தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும். மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன. இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன். என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும். 2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம். நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு. பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது. இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு. ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா? ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி. யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள். • US: nmdp.org • Australia: stemcelldonors.org.au • Canada: blood.ca/en/stemcells • UK: blood.co.uk/stem-cell-donor-registry/ • France: dondemoelleosseuse.fr • Germany: dkms.de • Sri Lanka: praana.lk • India: datri.org இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது. :J, Australia.
  6. இந்தியா எப்படி தோற்றது? சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள். இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?
  7. இங்கிலாந்து மக்களின் வரிபணத்தில் தமிழ் பி பி சி செத்த வீடு கொண்டாடுது .
  8. பட மூலாதாரம், Heritage Auctions / HA.com படக்குறிப்பு, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல்லாண்டுகள் கழித்தும் அந்த காமிக்ஸ் புத்தகம் மிகச் சிறப்பான நிலையில் இருந்தது. கட்டுரை தகவல் கிரேஸ் எலிசா குட்வின் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தங்களது மறைந்த தாயின் பரணில் சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த மூன்று சகோதரர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பழைய செய்தித்தாள்களின் குவியலுக்கு அடியில், அவர்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்தனர். முதன்முதலில் வெளியான சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகங்களில் அதுவும் ஒன்று. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் (Man of Steel) சாகசங்கள் குறித்த ஜூன் 1939-இல் வெளியான முதல் பதிப்பின் அசல் புத்தகம் அது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அது மிகவும் சிறப்பாக எந்த சேதமும் இல்லாமல் இருந்தது. தற்போது இதுவே உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகமாகச் சாதனை படைத்துள்ளது. ஏலத்தில் இது 9.12 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் 82 கோடி ரூபாய்) விற்பனையாகியுள்ளது. வியாழக்கிழமை இவ்விற்பனையை நடத்திய டெக்சாஸைச் சேர்ந்த 'ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ்' நிறுவனம், இதனை 'காமிக்ஸ் சேகரிப்பின் உச்சம்' என்று வர்ணித்துள்ளது. பட மூலாதாரம், Heritage Auctions / HA.com படக்குறிப்பு, காமிக்ஸ் புத்தகத்தின் முழு அட்டைப்படம் அந்த மூன்று சகோதரர்களும், 2024ஆம் ஆண்டில், வீட்டின் பரணில், சிலந்தி வலைகள் சூழ்ந்திருந்த ஓர் அட்டைப் பெட்டிக்குள், பழைய செய்தித்தாள்களுக்கு அடியில் 'சூப்பர்மேன் #1' உள்ளிட்ட ஆறு காமிக்ஸ் புத்தகங்களைக் கண்டெடுத்ததாக ஹெரிடேஜ் நிறுவனம் கூறியுள்ளது. ஏல நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கு முன் அவர்கள் சில மாதங்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் தொடர்புகொண்ட சில நாட்களிலேயே, ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லான் ஆலன் அவர்களைச் சந்தித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத அந்தச் சகோதரர்கள், 50 மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்கள். "அதிக மதிப்புள்ள காமிக்ஸ் புத்தகங்களைத் தான் சேகரித்து வைத்திருப்பதாக அவர்களின் தாயார் பலமுறை கூறியுள்ளார், ஆனால் அவற்றை அவர்களுக்குக் காட்டியதே இல்லை," என்று ஆலன் தெரிவித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? சமையல் அலுமினிய பாத்திரங்களை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்? மீறி உபயோகித்தால் என்ன பிரச்னை? 'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள் End of அதிகம் படிக்கப்பட்டது "பொதுவாக, 'எனது காமிக்ஸ் புத்தகங்களை அம்மா தூக்கி எறிந்துவிட்டார்' எனப் பிள்ளைகள் புகார் சொல்வார்கள். அந்தக் கதைகளுக்கு நேர்மாறான ஒரு சுவாரஸ்யமான கதை இது," என்கிறார் அவர். "பெரும் பொருளாதார மந்தநிலைக்கும் இரண்டாம் உலகப் போரின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், தானும் தனது சகோதரனும் வாங்கிய காமிக்ஸ் புத்தகங்களை, அந்தத் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்," என்று ஹெரிடேஜ் நிறுவனம் கூறியது. வடக்கு கலிஃபோர்னியாவின் குளிர்ந்த காலநிலை, அந்தக் காமிக்ஸ் புத்தகத்தின் பழைய காகிதங்களைப் பாதுகாப்பதற்கு மிகவும் ஏதுவாக இருந்துள்ளது என ஆலன் குறிப்பிட்டார். "ஒருவேளை இந்த காமிக்ஸ் புத்தகங்கள் டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டின் பரணில் இருந்திருந்தால், அவை பாழாகியிருக்கும்," என்றும் அவர் கூறினார். காமிக்ஸ் புத்தக ஏலத்தில் புதிய சாதனை புத்தகத்தின் இந்தச் சிறப்பான நிலை காரணமாக, காமிக்ஸ் புத்தகங்களை மதிப்பீடு செய்யும் நிறுவனமான சிஜிசி (CGC), இந்த 'சூப்பர்மேன் #1' புத்தகத்திற்கு 10-க்கு 9.0 என்ற மதிப்பீட்டை வழங்கியது. இது '8.5' என்ற வேறொரு புத்தகத்திற்கு வழங்கப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. சூப்பர்மேன் #1 புத்தகம், வாங்குபவருக்கான கட்டணம் உட்பட 9 மில்லியன் டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனையானது. இதன் மூலம், இதற்கு முன் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகத்தின் சாதனையை விட 3 மில்லியன் டாலர் அதிக விலைக்கு விற்றுப் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. சூப்பர்மேனை முதன்முதலில் அறிமுகப்படுத்திய 1938ஆம் ஆண்டு படைப்பான 'ஆக்ஷன் காமிக்ஸ் எண் 1' (Action Comics No. 1), கடந்த ஆண்டு 6 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. பரணின் பின்பகுதியில் காமிக்ஸ் புத்தகங்கள் கொண்ட அந்தப் பெட்டி பல ஆண்டுகளாக யாருடைய கவனத்திற்கும் வராமல் இருந்தது என, அந்த மூன்று சகோதரர்களில் இளையவர் கூறியதாக ஏல நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பல ஆண்டுகள் கடந்த நிலையில், வாழ்க்கையில் தொடர்ச்சியான இழப்புகளையும் மாற்றங்களையும் குடும்பம் சந்தித்து வந்தது. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளே முக்கியமானதாக மாறியதால், ஒரு காலத்தில் அக்கறையுடன் எடுத்து வைக்கப்பட்ட காமிக்ஸ் பெட்டி நினைவில் இருந்து மறைந்தது. கடந்த கிறிஸ்துமஸ் வரை அது அப்படியே இருந்தது," என அந்தச் சகோதரர்களில் இளையவர் கூறியுள்ளார். "இது காமிக்ஸ் புத்தகங்கள், அதன் பழைய காகிதங்கள் பற்றிய கதை மட்டுமல்ல. கடந்த கால வாழ்வின் மற்றும் குடும்பத்தின் நினைவுகள், எதிர்பாராத வழிகளில் மீண்டும் நம்மை வந்தடையும் என்பதற்கான ஒரு சான்று இது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8q12eepqlo
  9. இதுவரை தமிழர் பிரச்சனையை தீர்க அரும்பாடுபட்ட இலங்கை அரசுகள் தமிழர்களின் தேசிய கொடியை கனடாவில் ஏற்றியவுடன் கவலையில் இருக்கிறார்கள்.
  10. இந்த போட்டி ஆசிய அணிகளுக்கு இடையிலான Rising Stars (உயரும் நட்சத்திரங்கள்) போட்டி. இதில் இந்தியா அணிதான் பலம் பொருந்திய அணி. இந்தியா அணியில் பிரபல ஐபிஎல் வீரர்கள் Jithesh Sharma,vaibav suriyavamsi, Arya உட்பட பலர் விளையாடினார்கள், இலங்கை அணியில் விஜயகாந்த் சிறப்பாக 2 போட்டிகளில் விளையாடியதால் தற்போது பாகிஸ்தானில் நடைபெறும் முக்கோண t20 இல் சேர்க்கப்பட்டார்.
  11. அண்ணை, அழகான பெண் அதிகாரிகளை நியமிக்கச் சொல்லி ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோளை அனுப்புங்கோ!
  12. யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க! நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூறும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். எனினும் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. எனவே இறந்த உறவினர்களை சுகந்திரமாக நினைவு கூர முடியும் இதற்கு பாதுகாப்பு படையினரும் அதற்கு தடையாக இருக்கமாட்டார்கள் என்று கூறினார். https://athavannews.com/2025/1453624
  13. நான் நினைக்கிறேன் புதிய கட்டுப்பாடுகள்/விதிகளின்படி அவ்வாறு நடைபெறுகிறது போல.
  14. நன்றி பிரியன் ........! 🙂
  15. 1985 கால பகுதிகளில் இல்லை தோழர், இது 1989 பகுதிகளில் ஆரம்பித்து இருக்க வேண்டும் டிஸ்கி இருந்தால் பகிடி தலைவர் அதையும் (மாவா) சேர்த்திருப்பார் .. மண்ணுகேத்த பொண்ணு (1985)
  16. 🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே காற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்! உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாதது உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்! குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும் நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும் நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்! உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்! நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே நாங்கள் உங்களைப் போற்றுகிறோம் உங்களுக்காகப் பேசுகிறோம்! ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு கண்ணீரிலும் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உங்களை நினைவில் கொள்கிறோம்! 🕯️ உங்கள் ஒளி நிலைத்திருக்கட்டும் 🕯️ உங்கள் உண்மை உயரட்டும் 🕯️ உங்கள் நினைவு என்றென்றும் ஒளிரட்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “A Lamp for Every Soul” O spirits of Mullivaikkal, restless in the wind, gentle in the waves we bow our heads before you. May your suffering never be forgotten. May your names never fade from memory. May your dreams live through us. To the mothers who shielded their children, to the babies who never saw the sunrise, to the youth who carried only hope we light this lamp. May this flame guide you where the world failed you. May peace hold you in the embrace we could not give. O souls of Mullivaikkal we honour you. We speak for you. We remember you in every lamp, every tear, every heartbeat. 🕯️ Let your light endure. 🕯️ Let your truth rise. 🕯️ Let your memory shine forever. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1910 [🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”] https://www.facebook.com/groups/978753388866632/posts/32502659262715967/?
  17. இன்னும் பல வருடங்கள் ஆயுள், ஆரோக்கியத்தோடு இருவரும் வாழ வேண்டும்.இதை விட வேறு எப்படி சொல்வது.,மிகவும் நெகிழ்வான சந்திப்பாக அமைந்திருக்கும்.!
  18. இதுபோன்று தானம் கொடுத்தவரும் பெறுபவரும் சந்திப்பது அரிதிலும் அரிது .......உங்கள் நண்பரின் வாழ்க்கையில் அது நடந்திருக்கு . ........! தகவலுக்கு நன்றி நிழலி .......!
  19. உங்கள் நண்பர் மறுபிறவி எடுத்துள்ளார். தானம் கொடுத்தவை காலம் காலமாக போற்ற வேண்டும். எமது இனத்தில் இரத்ததானம் செய்வதே மிகக் குறைவு.
  20. இந்திய விமானப்படைக்கே பரிசு கொடுக்க வேண்டும். விமானத்தையே விழுத்தி சாகசம் புரிந்துள்ளனர்.
  21. அந்த விமானம் புறப்படுவதற்கு முன், அதன் எரிபொருள் தாங்கியிலிருந்து எரிபொருள் வழிந்து கொண்டிருந்ததை… எவரும் பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை என்கிறார்கள்.
  22. நீங்கள் இப்படிஎழுதுவதாலும் ஏதாவது நன்மை உண்டா...எனாவெ அவனவன் செயல்பாட்டினால் ஏதோ முடிந்தளவு செய்கின்றார்கள் ... நன்மை கிடைக்குதோ இல்லையோ ...எமக்காக உயிர்விட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரம் நன்மை செய்வாரென்று தூக்கிபிடித்த அனுரவால் என்ன செய்யமுடிந்தது..திரும்ப புத்தர் சிலயைத்தான் வைக்கமுடிந்தது ....உவ்வளவும் செய்கின்றார் எனத் தூக்கிப்பிடித்த அனுரவுக்கு ..சிங்களவர் செய்தது என்ன ..லட்சக்கணக்கில் கூடி ஆதரவு தெரிவித்துள்ளார்கள் ... இங்கு நாம் என்ன செய்கின்றோ ம் என்றூ செய்வது எல்லாவற்றிர்கும் முட்டையில் மயிர் புடுங்க யோசிக்கின்றோம் ..இந்த சிந்தனை மாறினாலே ஓரளவு நின்மதி கிடைக்கும்...முதலில் தமிழனாக யோசிக்கவேண்டும்
  23. மாட்டு வண்டில் show வுக்குத்தான் இந்தியா லாயக்கு. இவர்களுக்கு ஏன் air show?
  24. அண்ணை சும்மா வாவண்ணை உன்னுடைய கப்பாசிட்டி எனக்கு தெரியும் பின்னாடி மட்டும் இருந்து கொண்டு எனக்கு ஜாடை மட்டும் காட்டண்ணை .... யாரவது ஒருத்தன் பூனைக்கு மணியை கட்டுவமண்ணை. நீயும் நானும் புலம் பெயர் நாட்டில் இருந்து குழறு வதால் ஒன்றும் நடக்காதண்ணை. சோம்பறித்தனத்தை இனத்துக்காக ஒதுக்கி வையன்னை. டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை நாட்டில் தான் நிற்பேன். வாவண்னை ஒரு கை பார்போம். ,பகிடிக்காக இல்லை . கோசான் , ஐஸ்டின் அண்ணை போன்ற intellectuals உம் நமக்கு அவசியம்.
  25. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீழ்ந்தபடியால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டில் என்றாலும் பரவாயில்லை. இன்னொரு செல்வம் கொளிக்கும் நாட்டில் பழைய விமானத்தை சரிபிழை சரியாக பார்க்காமல் சாகசம் காட்டுவதா?
  26. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டேவிட் காக்ஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி முதல், தினசரி முறையான தூக்கம் வரை - உங்கள் 30களில் சில பழக்கங்களைப் பின்பற்றுவது 70கள் வரை கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உங்கள் வாழ்க்கையில் எழுபதுகளை அடையும் போது, இளமைப் பருவத்துடன் ஒப்பிடுகையில், சற்றே பலவீனமாகவும், சோர்வாகவும், அறிவாற்றல் ரீதியாக பின்னடைவைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது. உங்களது தூக்கம் சார்ந்த வழக்கங்கள் மாறியிருக்கலாம், இதனால் காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பீர்கள், மாலையில் தூக்க கலக்கத்தை அதிகமாக உணருவீர்கள். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மக்கள்தொகை சராசரிகளின் அடிப்படையில், உங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள்பட்ட நோயாவது இருக்கலாம். இருப்பினும், இது தவிர்க்க முடியாதது அல்ல என்பதில் ஆராய்ச்சியாளர்கள் முன்னெப்போதையும் விட உறுதியாக உள்ளனர். "இப்போது நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால், 90 அல்லது 95 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்," என்று கலிஃபோர்னியாவில் உள்ள 'பக் இன்ஸ்டிட்யூட் ஃபார் ரிசர்ச் ஆன் ஏஜிங்கின்' தலைவரும் தலைமை நிர்வாகியுமான எரிக் வெர்டின் கூறுகிறார். "ஆனால், பெரும்பாலான மக்கள் 65 அல்லது 70 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, பின்னர் நோய்வாய்ப்பட்டு, முதுமையின் அனைத்து சிரமங்களையும் அனுபவிக்கும் நிலை தற்போது உள்ளது, அதனுடன் ஒப்பிடுகையில் இந்த விஷயத்தில் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம்". மாற்றங்களை விரைவாகத் தொடங்குவது நல்லது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதுமை தொடர்பான சிறிய மாற்றங்களை, உடல் முதன்முதலில் வெளிப்படுத்தத் தொடங்கும் ஒரு முக்கியமான கட்டமாக 30களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உடற்பயிற்சியை அதிகரிப்பது, நல்ல உணவுப் பழக்கம் கொண்டிருப்பது, மது அருந்துவதைக் குறைப்பது போன்ற நன்மை பயக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் எந்த வயதிலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று வெர்டின் கூறினாலும், அத்தகைய மாற்றத்தை விரைவாகத் தொடங்கினால் இன்னும் அதிக பலன்களைப் பெறலாம். முதுமை தொடர்பான சிறிய மாற்றங்களை, உடல் முதன்முதலில் வெளிப்படுத்தத் தொடங்கும் ஒரு முக்கியமான கட்டமாக உங்கள் 30களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தசை நிறை மற்றும் வலிமை, எலும்பு அடர்த்தி அல்லது வளர்சிதை மாற்ற ஒழுங்குமுறை போன்ற பல உடலியல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள். "இந்த காலகட்டத்தில் நீண்டகால மீள்தன்மையை வளர்க்கும் நடத்தைகளை ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது" என்கிறார் அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த 'மாயோ கிளினிக்கின்' கோகோட் மையத்தின் உடலியல் துறை பேராசிரியர் ஜுவோன் பாசோஸ். இதில் என்னென்ன சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள, முதுமை தொடர்பான செயல்முறையை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், வழக்கமான போக்குகளைப் பின்பற்றாத மக்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறார்கள். ஒரு உதாரணம், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது பிற விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் 35 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள். அவர்களில் பலர் தங்களது 60கள் அல்லது அதற்குப் பிறகும் இதைத் தொடர்கிறார்கள். மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான மூத்த விரிவுரையாளர் பால் மோர்கன், "இந்த விளையாட்டு வீரர்களில் பலர், முதுமையடைவது தொடர்பான விஷயத்தில், மற்றவர்களை விட மிகவும் மாறுபட்ட முறையைக் கொண்டுள்ளனர். இந்த முறை, இருதய செயல்பாடு மற்றும் தசை வலிமை மற்றும் செயல்பாட்டில் அதிக உச்சநிலையைத் தொடர்ந்து, தாமதமாக ஏற்படும் ஒரு வீழ்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது." என்கிறார். இதன் விளைவாக, அவர்களில் பலர் முதுமை வாழ்க்கையில் இயக்கம் மற்றும் சுதந்திரத்தை இழப்பதை நீண்ட காலத்திற்கு தவிர்க்க முடிகிறது என்று அவர் கூறுகிறார். "வாழ்க்கையின் நடுப்பகுதிகளில், ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படும் இந்த கூடுதல் சக்தி அவர்களிடம் உள்ளது" என்று மோர்கன் கூறுகிறார். இது நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. மோர்கனின் கூற்றுப்படி, ஆரோக்கியமான முறையில் முதுமையடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, நமது 30களில், குறிப்பாக தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் ஏரோபிக் திறன் (செயல்பாட்டின் போது உங்கள் உடல் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச ஆக்ஸிஜன் அளவு) ஆகியவற்றின் அடிப்படையில், அதிகபட்ச அளவை அடைய முயற்சிக்க வேண்டும். விளையாட்டு ஒரு சிறந்த வழி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜப்பானிய ஆய்வு ஒன்று சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று தடுமாறி விழுவது. இது சுறுசுறுப்பு குறைவு மற்றும் மூட்டுகளில் இயக்கம் குறைவால் ஏற்படுகிறது. 'நடப்பதற்கு உதவும் உடலின் கீழ் அங்கங்களில் உள்ள தசைக் குழுக்கள் சுயமாக வாழ்வதற்கும், முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கும் முக்கியம். அதனால் அவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்" என்று மோர்கன் கூறுகிறார். இதை அடைவதற்கு விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். டென்னிஸ் அல்லது பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பதற்கும், நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அதே சமயம், 2025ஆம் ஆண்டு ஜப்பானிய ஆய்வு ஒன்று சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது, அதன்படி தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் முதியவர்களுக்கு நீண்டகால பராமரிப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு அல்லது முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. வாரத்திற்கு 75 நிமிடங்களுக்கு மேல் ஓடுவது முதுமை செயல்முறையின் சில அம்சங்களின் மீது தாக்கம் செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் உடலை உழைப்பின் உச்சநிலைக்குத் தள்ளுவது உண்மையில் முதுமையின் சில அம்சங்களை துரிதப்படுத்தக்கூடும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன, ஆனால் இது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை. மறுபுறம், ஒரு ஆய்வு தினமும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது மூளைக்கு வயதாவதை குறைக்க உதவும் என்று கூறுகிறது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவிப் பேராசிரியரான அதிதி குர்கரின் கூற்றுப்படி, "ஒப்பீட்டளவில் எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் அனைவரும் ஆரோக்கியமாக முதுமையடைவதன் நன்மைகளைப் பெறலாம். சாப்பாட்டுக்குப் பிறகு 15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும்". 30களில் நமது தசைகள் மற்றும் இருதய அமைப்பைப் பாதுகாத்து வலுப்படுத்துவது போல, நமது மூளைக்கும் அதையே செய்ய முடியும். வழக்கமான பரிசோதனைகள், முறையாக பல் துலக்குதல், புகைபிடிக்காமல் இருப்பது மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துதல் மூலம் நல்ல பல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஆச்சரியமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் அழற்சி அதிகரிப்பால் உருவாகும் 'பீரியோடொண்டல் நோய்' என்ற ஈறு நோய்க்கு, வாழ்க்கையின் பிற்பகுதியில் அறிவாற்றல் குறைவதற்கான அபாயத்துடன் தொடர்புள்ளது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மூளையில் நீண்டகால அழற்சியின் தாக்கத்தால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தூக்கம் மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதற்கான ஆற்றலையும் உந்துதலையும் வழங்குகிறது. 30களில் இருந்தே மது அருந்துவதைக் குறைக்கத் தொடங்குவதும் சாத்தியமாகும். மது அருந்துவது உடலில் மரபணு வெளிப்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது, இது முதுமையடைவதை துரிதப்படுத்துகிறது. மதுவும் தூக்கத்திற்கு ஒரு முக்கிய இடையூறாகும். வரவிருக்கும் காலங்களில் வயது தொடர்பான மூளைச் சுருக்கத்தைத் தவிர்ப்பதற்கும் டிமென்ஷியா அபாயத்தைக் குறைப்பதற்கும் நிலையான தூக்க முறைகள் முக்கியமாக இருப்பதாக வெர்டின் கூறுகிறார். இதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் சென்று எழுந்திருப்பதை உறுதிசெய்வதும் அடங்கும், இது தூக்க ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. தூக்கம் மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதற்கான ஆற்றலையும் உந்துதலையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், மனித உடல் செல் மீளுருவாக்கத்தில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. "ஒரு இரவு தூக்கம் இல்லாவிட்டாலும், உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறை மாறுகிறது, மேலும் உங்கள் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும் என்ற உங்கள் மன உறுதியும் போய்விடும்" என்று அவர் கூறுகிறார். வழக்கமான தூக்க முறையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தின் காரணமாக, வெர்டின் இப்போது ஒவ்வொரு இரவும் அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார், ஆனால் தூக்கத்திலிருந்து எழுவதற்கு அல்ல, மாறாக தூங்கச் செல்ல நினைவூட்டுவதற்காக. "இதற்குக் காரணம், நாம் சர்க்காடியன் உயிரினங்கள்," என்று அவர் கூறுகிறார். "மரபணு வெளிப்பாடு முதல் வளர்சிதை மாற்றம் வரை நமது முழு உயிரியலும் 24 மணி நேர சுழற்சியுடன் ஒத்திசைவில் உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது உங்கள் உடல் இவை அனைத்திற்கும் மிகவும் ஒத்திசைவாக இருக்க உதவுகிறது." இருப்பினும், ஒரு நல்ல இரவு தூக்கம் எப்போதும் சாத்தியமில்லை என்பது இளம் குழந்தைகளை வளர்க்கும், 30களில் இருக்கும் பெற்றோருக்கு தெரியும். 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'உண்ணாவிரதம் இருக்கும்போது, அது உங்கள் உடலை செரிமானத்தில் கவனம் செலுத்தாமல், சரிசெய்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது' இறுதியாக, உங்கள் 30கள் என்பது ஊட்டச்சத்தை இன்னும் கொஞ்சம் தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கான ஒரு உகந்த நேரமாக இருக்கலாம். நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று, பகலில் உணவு சாப்பிடாமல் இருக்கும் நேரத்தை அதிகமாக உடலுக்கு கொடுப்பது. உதாரணமாக, 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) மூலம் இதைச் செய்யலாம். 'இடைநிலை உண்ணாவிரதத்தை' ஆதரிப்பவர்கள் பலர் 16:8 பிரிவை பரிந்துரைக்கின்றனர், அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணவை எட்டு மணி நேரம் என்ற வரம்புக்குள் சுருக்குவது. ஆனால், எளிதாக நிர்வகிக்கக்கூடிய 12:12 பிரிவின் மூலம் நாம் ஏராளமான நன்மைகளை அடைய முடியும் என வெர்டின் கூறுகிறார். "நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, அது உங்கள் உடலை செரிமானத்தில் கவனம் செலுத்தாமல், சரிசெய்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. நான் மக்களிடம் சொல்வது, நீங்கள் சாப்பிடும்போது, ஒன்றைக் கட்டமைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, உடலைச் சரிசெய்கிறீர்கள்." பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதிக அளவு உணவு கரோட்டினாய்டுகளை (Carotenoids - சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளிலும், மாம்பழம் மற்றும் அப்ரிகாட் போன்ற பழங்களிலும் காணப்படும் தாவர ரசாயனங்கள்) உட்கொள்பவர்கள் மெதுவாக முதுமையடைகிறார்கள் என்ற தனது ஆய்வு முடிவு மற்றும் பிற ஆய்வுகளை மேற்கோள் காட்டும் குர்கர், 'ஏனெனில் இந்த ரசாயனங்கள் நமது செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் எனப்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதில் பங்கு வகிக்கக்கூடும்' என்கிறார். பட மூலாதாரம், Getty Images ஒட்டுமொத்தமாக, 30களில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் முதுமையை பாதிக்கின்றன என்பதை பாசோஸ் உறுதியாக நம்புகிறார். பல தசாப்தங்களாக அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்காணித்து வரும் பெரிய ஆய்வுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, ஃப்ரேமிங்ஹாம் இதய ஆய்வு மற்றும் செவிலியர் சுகாதார ஆய்வு போன்றவை, நடுத்தர வயதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கும் மக்கள், பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட இருதய நோய், அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் பலவீனம் ஆகியவற்றின் அபாயங்களைக் குறைவாகக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. "30களில் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், காலப்போக்கில் குவிந்து, 70களில் செயல்பாட்டு வீழ்ச்சிக்கு பங்களிக்கும் நுட்பமான மூலக்கூறு மற்றும் செல்லுலார் மாற்றங்களைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்," என்கிறார் பாசோஸ். "இதைச் செய்வதன் மூலம் முதுமையைத் தடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை என்றாலும், அதன் பாதையை நிச்சயமாக மாற்ற முடியும்." 30களில் நல்ல ஆரோக்கியத்தோடு தான் நாம் இருக்கிறோம் என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் முதுமை இறுதியில் நம் அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் அதிகப்படியான மதுவைத் தவிர்த்து, உங்கள் பிற்கால வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்து, வழக்கமான தூக்க முறையைக் கடைபிடித்து, தொடர்ந்து சாப்பிடுவதிலிருந்து உங்கள் உடலுக்கு அதிக இடைவெளிகளைக் கொடுத்தால், வருங்காலங்களில் உங்கள் இதயம், தசைகள், மூட்டுகள் மற்றும் மூளை என அனைத்தும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0l7lj2pz0do
  27. எனக்கும்… ஶ்ரீலங்காவுக்கு “கொலிடே” போற ஐடியா இருக்கு. 😂 எதற்கும் @satan ஐ கேட்டுப் பார்ப்போம். 🤣
  28. சிங்களர் தீர்வு மட்டும் அல்ல, சக வாழ்வை கூட தரப்போவதில்லை. இப்போ உள்ள அத்தனை தமிழ் அரசியல்வாதியும் - ஒரு சதம் தேறாத கேசுகள். வெளியக சுயநிர்ணயம் ஒருபோதும் சரிவராது. உள்ளக சுயநிர்ணயம், சமஸ்டி என்பன நீண்ட கால இலக்காக இருத்தல் அவசியம் ஆனால் இதற்கும் குறைவான ஒரு காணி உரிமையாவது பாதுகாக்கபடும் தீர்வை நோக்கி நகர்வதே இப்போ செய்ய கூடியதும், வேண்டியதும். இந்த 4 பிரபஞ்ச உண்மைகளி கீழ் புலம், புலம்பெயர் தமிழர் ஒன்றுபட்டு, ஒரு புதிய அரசியலை, தலைமையை உருவாக்க வேண்டும். சொல்வது மிக இலகு… செய்வது….

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.