Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19253
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88132
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3001
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3074
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/16/25 in Posts

  1. வீட்டில் நான்தான் சமையல் என்பதால் எனக்கு ஆபத்து இல்லை.
  2. தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுத்தால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும் என்ற ஈழதமிழரின் காதுல பூ சுத்தும் கதைகள் இன்னும் தொடருது என்றால் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவசரமா அரசியல் செய்ய வேறு எதுவும் கிடைக்கவில்லையென்றே அர்த்தம். ஆனால் உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் சுத்தும் பூவை ஏற்க பெரும்பாலான ஈழதமிழர்களின் காதுகள் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.
  3. இந்த பெருந்தோட்ட முதலாளிகளோ அல்லது அரசாங்கமோ மலையக மக்களின் சுபிட்சமான வாழ்வு குறித்து பெரிதாக சிந்திக்கப் போவதில்லை. காரணம் நாளைக்கு வாழ்க்கையில் அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டால் அந்த தேயிலை கூடையையும்... கவ்வாத்து கத்தியையும் அவர்கள் கையில் எடுக்கப் போவதில்லை. சிங்களவர்கள்; ஈழத் தமிழர்கள்; முஸ்லிம்கள்; யாரும் இந்த தேயிலை தோட்டத்து கூலி வேலையை செய்யப் போவதுமில்லை. ஆகவே இந்த மக்கள் கூட்டம் அவர்களுக்கு தேவை... அடிமைகளாகவே தேவை. இதுதான் யதார்த்தம். நம் விடுதலைப் போராட்ட வரலாறில் தம்மை இணைத்து கொண்ட அனைத்து இயக்கங்களும் சாதிய கட்டமைப்புகள்; சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே குரல் கொடுத்திருந்தார்கள். குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமான; செயற்பாடுகளை கூட மேற்கொண்டு இருந்தார்கள். இவ்வாறான உயரிய செயல்பாடுகளை பெருமையாக பேசியதும் நாங்கள் தான். இன்று அவர்கள் இல்லாமல் இருக்கலாம்... ஆனாலும் அந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகள்; கோட்பாடுகள்; தேவைகள் எமக்கு இன்றுமே இருக்கின்றன. இன்று சாதிய மேலாண்மை குறித்து ஆங்காங்கே தனி மனிதர்கள், சமூகங்கள் மத்தியில எழக்கூடிய வக்கிர புக்தியை பொது புத்தியாக பேசத் துணிந்து உள்ளோம். இதை அருண் சித்தார்த்தன் பேர்வழி தெற்கில் போய் பிரச்சாரம் செய்தால் அவனைத் துரோகி, அரச கைகூலி என்கின்றோம். இங்கே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதைப் போல் எனக்குப்படுகிறது. நீங்கள் இன்னும் மாறவில்லை என்பதை நீங்களே கூறிக் கொள்கிறீர்கள். அப்படித்தான் நான் பார்க்கிறேன். நாளைய அல்லது அடுத்து வரும் தலைமுறைகள் இப்படியே இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஈழத் தமிழரிடம் சென்று ஆங்காங்கே முகம் கொடுக்கக்கூடிய களைய வேண்டிய இந்த சமூகப் பிரச்சினையை விட; மலையக மக்களை சிங்களவன் காலடியில் கிடந்தது வாழ்நாள் முழுவதும் பரம்பரை பரம்பரையாக எல்லா வகையிலும் அடிமையாக வாழ்ந்து மடிவது சிறப்பு என்கிறீர்கள். என்னத்த சொல்ல!!!
  4. தலை முழுவதும் வெற்றுப் பெருமிதத்தை நிரப்பிக் கொண்டு வாழும் ஒரு மனப்பிறழ்வே இது, வில்லவன்.............. தலைவர் இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிவார் என்று தான் இருந்தோம். அவர்களுக்கு இருந்த இமாலயப் பணிகளை முடித்துக் கொண்டு பின்னர் இதைப் பார்ப்போம் என்று இருந்திருப்பார் போல.................. இனி ஒவ்வொரு தலைமுறையும் இந்த விடயத்தில் சில அடிகளாவது முன்னோக்கி போனார்கள் என்றால் கூட பரவாயில்லை........................
  5. சுமந்திரனுக்குக் கிடைக்கவிருக்கும் இந்த "ஆத்மீக" ஆதாயம் பற்றியும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்😎! ஒன்று மட்டும் புரிகிறது: பல "ஈழத்தமிழ் தேசியர்களின்" மெல்லிய மேல் பூச்சைச் சுரண்டி உண்மையான வர்ணத்தை வெளிக் கொண்டுவரும் வேலையைச் செய்யவாவது சுமந்திரன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்!
  6. எனக்கு சுமன் தலைவர் இல்லை. ஆனால் உங்களுக்கு பைத்தியர்தான் ஆதர்ச புருடர் என்பதை களம் அறியும். மிக தெளிவாக மேலே சொல்லி உள்ளேன் சுமன் சும்மா வாய்ப்பேச்சுக்கு சொல்லி உள்ளார். ஆனால் அவர் சொன்ன கருத்து மிக சரியானது. சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும். நீங்கள் இஸ்ரேலின், தென் கொரியாவின் right to return பற்றி கேள்விபடவில்லையா? எந்த யூதனும், எந்த கொரியனும் எங்கே இருந்தும் அங்கு போய் வாழ முடியும். அப்படித்தான் தலைவர் கண்ட தமிழீழம் தமிழருக்கு இருந்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கை தமிழ் பிரசைகளுக்காவது வடக்கை இப்படி ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பது உன்னத நோக்கம். 200 வருடமாக செய்த உழைப்புக்கான பலனை இந்த மக்களுக்கு இலங்கை கொடுத்து விட்டதா? இல்லவே இல்லை. மலையகத்தை விட்டு வன்னி, மேல்மாகாணம் என வெளிக்கிட்ட மக்கள், பெருந்தோட்டங்களில் தங்கிவிட்ட மக்களிலும் எவ்வளவோ மேம்பட்டு உள்ளார்கள். 1000 வருடம் ஆனாலும் பெருந்தோட்டத்தில் உள்ள மக்கள் நவீன அடிமைகள்தான். இதை ஒரு இனமாக எம்மால் உடைக்க முடியும். வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியும். ஆனால்…. “என்னது உவயள் யாழ்பாணத்துக்கு, கரம்பனுக்கு வந்து வாழுறதோ?” எண்ட சுண்ணாம்பு சக்குகட்டிய சிந்தனை அதை தடுக்கிறது.
  7. மலையகம். மலயகத்திற்கென்று ஒரு தனி அரசியல் தளம் இருக்கின்றது. அங்கே யாரும் வாலாட்ட முடியாது. அன்றைய தொண்டமான் தொடக்கம் இன்றைய தொண்டமான்கள் வரைக்கும் மலையக அரசியல் பாணி தனி வழி. அது திராவிட நட்புகளை கொண்டது. மலைய அரசியலில் இனவாத சிங்கள அரசியல் இல்லை. அப்படியிருந்தும் ஏன் தோட்டத் தொழிலாளர்களால் ஒரு எல்லையை மீறி முன்னேற முடியவில்லை?அதைப்பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை? நூற்றாண்டு கால சரித்திரம் உள்ளவர்கள் அல்லவா மலையக தமிழர்? ஒரு அங்குலம் கூட அவர்கள் ஏன் அவர்களால் முன்னுக்கு வரமுடியவில்லை. ஏன் எதனால் என்பதை பற்றி ஒரு கட்டுரை,பந்தியாவது எழுதியிருக்கின்றீர்களா? காலம் காலமாகத்தான் மலையக பிரதேசங்களில் மண்சரிவுகளும் அழிவுகளும் வந்து போகின்றன.அப்போது காணாத கண்கள் இப்போது சுமந்திரன் சொல்லிவிட்டார் என்பதற்காக குத்தி முறிகின்றீர்கள்.ஏன் அன்றைய கால அழிவுகளுக்கெல்லாம் குரல் கொடுக்கவில்லை. மீள் குடியேற்ற சிந்தனைகள் வரவில்லை? சரி வேண்டாம் மலையகத்தில் கஷ்டப்படுபவர்களுக்காக நிதியுதவி பற்றி யாராவது இங்கு விவாதித்திருக்கின்றார்களா? பாதிக்கப்பட்டவர்களை வடபகுதியில் குடியேற்ற முடியும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்குரிய வாழ்வாதாரம் பற்றி யாராவது விவாதித்தார்களா? மீண்டும் வீட்டு வேலைகள்,தோட்ட வேலைகள் தான் அவர்கள் வாழ்வாதாரம் என்றால் அவர்கள் அங்கேயே இருப்பது புத்திசாலித்தனம். மற்றும் படி தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றுவதன் மூலம் சிங்கள பொருளாதாரத்தை வீழ்த்த முடியும் என கனவு கண்டால் அதுவும் பொய்க்கனவாகவே அமையும். பத்தாயிரம் மைல் கடந்து வாழ்வது பணம் படைத்த நாடுகளில்.....இங்கே எப்படியும் வாழலாம்.....அந்த நாடுகளிடம் பணம் இருக்கு...உதவி செய்கின்றார்கள். செய்வார்கள்.வேலைக்கு போகாமல் விட்டாலும் வாழலாம். இது அங்கு சாத்தியமா? மற்றும் படி தமிழீழ நிகழ்ச்சி நிரலில் மலையகமும் ஒரு அங்கம் என்பதனை இங்கே பலருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
  8. இப்படி ஒரு நடனத்தை யாழ்களத்தில் போடுவதற்கு இவருக்கு எப்படி மனது வந்தது 🙁 😂 செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என்று தான் Vasee நினைத்தார். மற்றவரோ செலன்ஸ்கி பெல்லி நடனம் ஆடுவதாக கற்பனை பண்ணி அதை யாழ்களத்திலும் போடுகின்றார்
  9. இது போன்ற இரஸ்சியாவிற்குள் நிகழும் தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக கூறுகிறார்கள், இதனை உக்கிரேன் தரப்பில் இருந்து புடனோவ் ஒழுங்குபடுத்துகிறார் என கூறப்படுகிறது, புடனோவ் சி ஐ ஏ இனால் பயிற்றுவிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. தேவையில்லாத மேலதிக விடயங்களை எழுதினால் நச்சென்றிருக்காது🤣.
  10. சரி உங்கள் கருத்துப்படியே செல்வோம் ஆனால் முதலில் சில கேள்விகளுக்கு நேர்மையான பதில் வேண்டும்.... 1.மலையகத்தில் வாழும் அடிமட்ட மக்களுக்கான உதவிகளையும் வாழ்வாதாரத்திற்காக தேவைகளையும் அவர்களுடை நிலத்திலேயே வைத்து செய்ய முடியாதா? 2.முடியாது என்றால் என்ன காரணம் ? (சிங்கள அரசு செய்து கொடுக்காது என்பது அபத்தமான ஒரு பதிலாக இருக்கும் ஏனெனில் வடக்கு கிழக்கிலும் சிங்கள அரசு மக்களுக்கு ஏதும் பெரிதாகச் செய்து விடவில்லை) 3.தங்கள் உரிமைகளை தேவைகளை பெற்றுக்கொள்ளவதற்காக எந்த வகையில் அந்த மக்கள் முயற்சி செய்கின்றார்கள் ? 4.எந்த அரசியல் தலைவர்கள் அவர்களுடைய தேவைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ? மனோ கணேசன் கூட காணி உரிமை என்பதைக் கூறாமல் மக்களுக்கான நிலங்கள் கிடைக்காவிட்டால்....... மட்டுமே....... (வடிவாகக் கவனிக்க வேண்டிய இடம்) வட கிழக்கிற்குச் செல்ல மக்கள் தயார் என்று அறிவிப்புச் செய்ததை நியாயப்படுத்தும்அரசியல்வாதிகள் அரசியல் லாபம் தேட முயற்சிக்கவில்லையா ? முடிந்தால் அரசியல் பசப்பு வார்த்தைகளை அள்ளி வீசாமல் பதில் தாருங்கள் 😂
  11. அந்த வீடியோ எல்லாம் புட்டினுக்கு பொன் முட்டையிடும் வாத்து. என்று அதை வெளியிட்டால் தனக்கு தீமையை விட நன்மை என உணர்கிறாரோ அன்று வெளியிடுவார். அண்டைக்கு MAGA மொக்குகளே தம்பருக்கு உயிரோடு சமாதி கட்டுவார்கள்😂.
  12. அண்ணை, நானும் நீங்களும் இந்த திரியில் எதிர் எண்டால் உக்ரேன் திரியில் ஒரே கருத்து. 2017 முதல் இப்படித்தான். அதேபோல் நீங்களும் யாழை விட்டு ஒதுங்கவில்லை. ஒதுங்கவும் கூடாது. எந்த தனிப்பட்ட உள்நோக்கமும் இல்லை. ஆனால் மலையக மக்களை ஊரில் குடிவைக்க இங்கே சொல்லப்பட்ட எந்த காரணும் தர்க வலு அற்றவை. இந்த எதிர்ப்பின் பின்னால் இருப்பது (நாம் உணரும் (conscious) அல்லது உணரா (unconscious) யாழ் மையவதம் என்பது என் நிலைப்பாடு. இணைந்திருங்கள்.
  13. 🤣................. ஏதேதோ வெளியிடுகின்றார்கள், இதை மட்டும் வெளியே விடுகின்றார்கள் இல்லை........😜. அதிபர் ட்ரம்ப் இவ்வளவு ஆதரவாக இருந்துமே, சேற்றில் ஒரு கால், சகதிக்குள் ஒரு கால் என்று ரஷ்யாவும், அதிபர் புடினும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்............. உக்ரேன் மக்களின் வீரம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று......................👍.
  14. ஆனால் நான் அப்டேட்டட்! எனக்கு ஏஅய் எண்டு வாசிக்கத்தெரியும்!
  15. வெள்ள நேரம் நாட்டில நிண்டனான் பாருங்கோ… ஈழத்தமிழர் காதில் இப்போ முழுசா அனுரா சுத்துற பூத்தான் பாருங்கோ… ஆமி, நேவி இல்லாட்டில் இனமே வெள்ளத்தில அழிஞ்சிருக்கும் எண்ட அளவுக்கு பூந்தோட்டமே காதில இருக்கு கண்டியளே…. இனி எந்த தமிழ்தலைவரின் பூவும் அங்கே வேலைக்கு ஆகும் போல தெரியவில்லை.
  16. இது பரபரப்புக்காக எழுத பட்ட தலைப்பு போல படுகிறது. சும்மா சந்தோசமான தாம்பத்யத்தில் இருந்த மனைவி - ஒரு நாள் புட்டு கேட்டதற்கா தலையை கொத்துவா? Battered women syndrome போல ஏதோ பிண்ணனி காரணம் இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கொலைக்கான உண்மை காரணத்தை அல்லது அதற்கு அருகான காரணத்தை நெருங்கி இருக்கலாம் என ஊகிக்கிறேன்.
  17. அதுதான் செலன்ஸ்கியின் குலுக்கல் நடனத்தை பகிர்ந்த கருத்து செழுமையை களமே கண்டதே. சாத்தான் வேதம் ஓதக்கூடாது. வாசகருக்கு, இந்த செலன்ஸ்கி ஒரு கோமாளி பெல்லி டான்ஸ் ஆடுகிறார் என மேற்படி கருத்தாளர் யாழில் பதிந்த வீடியோ ஒரு ஏ ஐ புரட்டு. பச்சை பொய்யர் - பொய் என தெரிந்தே பதிந்தார் என்பது என் குற்றச்சாட்டு. ஆதாரம் இதோ. இதுதான் இவர் ஏ ஐ உலகில் “கருத்தாடும்” இலட்சணம். வெக்கட்கேடு! https://www.reuters.com/article/fact-check/dancer-in-social-media-video-is-not-ukraines-president-zelenskiy-idUSL1N3930VL/
  18. அடடா.. இப்படி ஒரு மகிழ்வான விடயம் நிகழ்ந்ததை கவனிக்காமல் விட்டு விட்டேன். தமிழ் சிறி (தாத்தாவுக்கும்)க்கும், மகள் யாழினிக்கும் (நல்ல அழகான பெயர்), பேத்தி சிவானிக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
  19. சரியான நேர்வழிப் புரிதல். ஆனால், உக்ரைனை "நேட்டோ உறுப்பினருக்கு வழங்கும் பாதுகாப்புக்கு ஒத்த (Article 5-like) பாதுகாப்பு " தருவோம் என்று ஏமாற்றும் வேலையை ட்ரம்ப் செய்வார் என நினைக்கிறேன். எப்படி? Article 5/சரத்து 5: ஒரு நேட்டோ உறுப்பு நாடு தாக்கப் பட்டால் நேட்டோ பதில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி செய்கிறது. Article 4/சரத்து 4: அப்படியாக ஒரு உறுப்பு நாடு தக்கப் பட்டால் அது நேட்டோ பதில் வழங்க வேண்டிய தாக்குதலா என்று ஆலோசனை நடத்த வேண்டுமென்கிறது. ஹங்கேரி, துருக்கி ஆகிய இரு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் நேட்டோவில், உக்ரைனுக்காக சரத்து 5 இனை அமல் செய்ய ஆலோசனை செய்தால் என்ன பலன் இருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.
  20. முன்னரே சொன்னதுதான். உங்கள் சிந்தனை தெளிவு பிரமிக்கத்தக்கது.
  21. எனக்கு பிடடு கட்டியாக உள்ளது என்று கொத்து விழாமல் இருந்தால் சரி.எதுக்கும் நன்றாக கொத்துவம்.
  22. கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்! 16 Dec, 2025 | 10:33 AM கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள் செவ்வாய்க்கிழமை (16) களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நடத்தினர். இந்த சத்தியாக்கிரகத்தில் கம்போடியாவைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய காஷ்யப தேரர் தலைமையிலான சுமார் 50 பிக்குகளும் கலந்துகொண்டனர். கம்போடிய காஷ்யப தேரர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் கம்போடிய மொழிகளில் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது இங்கு கருத்துத் தெரிவித்த வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர், இலங்கையில் அண்மையில் வீசிய சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே முதன்மையானது என்றும், இந்த நேரத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குற்றவாளிகளைத் தேடுவதை விட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இப்போதைய முக்கிய விடயம் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/233484
  23. இந்த மலையக தமிழரின் மீள் குடியேற்ற விவகாரத்தில் சுமந்திரன் ஐயா சொன்னவுடன் எல்லாம் நடந்து விடும் என்ற தொனியில் பலரின் கருத்துக்கள் உள்ளது. இத்தனைக்கும் சுமந்திரனும் மனோகணேசனும் எதற்கும் லாயக்கு இல்லாத அரசியல்வாதிகள். சும்மா பேச்சுக்காக,தங்கள் அரசியல் லாபத்திற்காக வசனங்களை வெளி விடுபவர்கள்.அந்த இருவரும் ஜதார்த்தமாக எதையும் சிந்தித்த வரலாறு இல்லை. குட்டையை குழப்பி சுகம் தேடுபவர்கள். விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி? அரசியல்/பொருளாதார ரீதியாக சிங்கள அரசு இதனை அனுமதிக்கும் என நினைக்கின்றீர்களா? கிந்திய அரசு மீள் குடியேற்றத்திற்கு ஆதரவளிக்கும் என நம்புகின்றீர்களா? இன்றைய ஸ்ரீலங்கா அரசியல் நிலவரத்தில் இந்தியாவை மீறி சிங்கள அரசால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பது பெரும் துயரம்.
  24. விசுகர் பழைய தலைமுறைதான் அப்படி இனம் காண்கின்றது. வவுனியாவில் நல்ல வசதியாக உள்ள 50 வயசு தாண்டியவர்கள் வாழும் பகுதியை வைத்து ஆட்களை முத்திரை குத்துவார்கள். தொழில் நிமித்தம் வன்னியில் பணியாற்றிய (அரசு உத்தியோகத்தர்) யாழ்ப்பாணத்தாரும் ஆட்களை வாழும் பகுதிகளின் அடிப்படையில் இனம் காண்பார்கள். ஆனால், அடிப்படையில் வவுனியா மாவட்டத்தை (வன்னி) பொறுத்தவரை பெரும்பாலானோர் குடியேறியவர்களே. இங்கு போர்ச்சூழலுடன் வன்னிக்கு சென்று நிரந்தரவதிவிடமாக்கியோர் பலர். 1970 வந்து குடியேறிய மலையகத்து மக்களின் ஒரு பகுதியை பார்த்தால் அவர்களின் நாலாம் தலைமுறை பாடசாலைக்கு செல்கின்றது. இரண்டாம், மூன்றாம் தலைமுறை யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரை திருமணம் செய்துள்ளது. மூன்றாம் தலைமுறையிடம் தமது அடி மலையகம் எனும் இனங்காணல் இல்லை. பலர் மலையக பக்கம் சென்றதே இல்லை. சிறப்பாக வாழ்கின்றார்களா என்று பார்த்தால் அப்படி கூறுவதற்கு இல்லை என்றாலும் பொதுவாக வன்னியில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் இவர்களுக்கு உள்ளது. சிலர் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கும் சென்றுள்ளார்கள். இந்த வரலாறு - டொட் எல்லாம் எங்கள் காலத்துடன் மருகிவிடும்.
  25. சிங்கள குடிநேற்றமும் பிடிக்காது , தமிழ் குடியேற்றமும் பிடிக்காது. தமிழ் தேசியர்கள் உலகில் ஒரு வினோதமான பிறவிகள் தான்.
  26. அதாவது ஏழைகள் எங்கும் எப்போதும் உங்கள் கருத்தின்படி குடியேறிகளாக வாழ முடியும் ஆனால் அவர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திற்கான விலை கிடைக்காது அல்லது கிடைக்கவும் தேவையில்லை அவர்களுக்கு அவர்களின் நிலத்திலேயே பாதுகாப்பான வீடு கிடைக்கக் கூடாது அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அவர்களை மீண்டும் ஒருமுறை,,,,,,, இன்னும் ஒரு 200 ஆண்டுகளுக்கு அகதிகளாக குடியமர்த்தி விட்டால் உங்களின் தலைவருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் 😇
  27. கூட்டமைப்பு தனிநாடு தான் தமிழர்களுக்கு வேண்டும் என்ற போது அது அமெரிக்க ஏகாதிபத்திய மேற்கத்தியம் சொல்லி தான் இப்படி கேட்கின்றார்கள் என்றவர்கள் ரஷ்ய தமிழ் இரசிகர்கள்
  28. எனது முதலாவது பிரியமான உணவு புட்டுத்தான்.இனி நிழலி எடுத்த முடிவைத்தான் எடுக்க வேண்டிய நிலை. ஒரே இரத்தம்
  29. எவ்வளவுதான் தான் கல்வி அறிவு இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் பட்டறிவு தான் கை கொடுக்கும்....😅 என்ற வசனம் சுமந்திரனின் கருத்திற்குப் பொருத்தமானது என்பதற்கான சில ஆதாரமான விஷயங்களை சொன்னால்...... இவர் கீழே மேலே நடுவிலே என்று ஆர்ப்பரிக்கின்றார்😂
  30. Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல. ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர். தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே. எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்
  31. வடகிழக்கில் நடந்தது ஒரு ஆயுதப் போராட்டம்... பல வருடங்கள் இது தொடர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் ஒரு முடிவுக்கு வரும்.. வந்தது!! ஆனால் மலையகத்தில் நடப்பது வாழ்நாள் போர் 200 ஆண்டு காலம் ஆகியும் முடிவு இல்லாத வாழ்க்கை போர். ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் போர். 200 ஆண்டு காலம் என்பது எத்தனை தலைமுறைகள்? அங்கேயே அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து அங்கேயே உழைத்த மக்களுக்கு உரிமை கிடைக்காது என்பது எப்படிப்பட்ட கொடுமை. மாட்டுக்கு கொம்பு முளைக்கும் முன்பே நம்மை முட்டாமல் இருக்க, அது பிறந்ததும் சூட்டுக்கோளால் கொம்பு முளைக்கும் இடத்தில் தீச்சு விடுவதும் அடுத்தது பருவத்துக்கு வரும் முன்னால் காய் அடித்து ஆண்மை நீக்கி வேலையில் கட்டி வசக்கிவிட்டால் வாழ்நாள் பூராவும் அதே வேலை வாங்கலாம். உரிமையை அபகரிப்பதும் காய அடிப்பதும் ஒன்றுதான். அந்த மக்கள் தொகையை அதிகமாகாமல் தமிழினம் பெருகாமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றுதான். பிரித்தானிய காலனித்துவவாதிகளால் பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் அடைந்த வாழ்வியல் துயங்கள் அதற்கான காரணிகளான தேசிய புறக்கணிப்பு, அரசியல் புறக்கணிப்பு, குடியுரிமை பறிப்பு, நாடற்ற நிலை, நாடு கடத்தல், பதிவு குடியுரிமை, வசிப்பிட குடியுரிமை, திட்டமிட்ட கருத்தடை, கூடிசன குறைப்பு, நிலமற்ற நிலை, வீடற்ற நிலை, பொருளாதார ஒடுக்குமுறை, கல்வியொடுக்குமுறை, உள்ளூர் ஆட்சிக்குள் உள்வாங்காத ஒதுக்கு முறை, இம்மக்களின் வாழ்விடங்களை வணிக நிலம் ஆக்கி கம்பெனிக்காரர்களுக்கு நூறு ஆண்டு கால குத்தகைக்கு கொடுத்து விட்டமை, இம்மக்கள் வாழ்ந்த பல பெருந்தோட்டங்களை சுவைகரித்து சிங்கள மக்களுக்கு சிறு தோட்ட உடைமையாளர்களாக கொடுத்து விட்டமை, இதனால் வாழ்விடங்கள் இழந்து வசிப்பிட தொழிலாளர்களாக காலனித்துவவாதிகள் கட்டிப்போட்ட அதே 200 ஆண்டுகால வரிசை லயங்களில் வாழும் நிலை என பல்வேறு நெருக்கடிகளை இன்றும் அந்த மக்கள் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் இவர்கள் வாழும் நிலங்களை கிராமங்களாக கூட அங்கீகரிக்காமல், இம்மக்களை கிராம மக்களாக கூட ஏற்றுக் கொள்ளாமல், நாட்டு மக்கள் என்று தேசிய அந்தஸ்தை வழங்காமல் தோட்ட மக்கள் "வத்து கம்கரு" என்றே புறக்கணித்து வைத்திருக்கின்றமை என இத்தனை அரசியல் தேச வஞ்சனைகளுக்கும் முகம் கொடுத்து உரிமைக்குப் போராடாமல் மௌனித்து 200 ஆண்டுகளை வீணடித்துவிட்டு வந்தேறி குடிகளாக வருடங்களை எண்ணிக்கொண்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? ~ ஒப்பாரி கோச்சி புத்தகத்தை வாசித்து... என்னை பாதித்த வரிகளுடன் ...
  32. விடுதலை போருக்கும் அடுத்தவன் அரிப்பு போருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எதிரியாய் இருந்தாலும் கோத்தா சொன்னால் சொல்வதை பார்த்து அப்படியே பற்றிக்கொள்ள வேணுமாம். அடுத்தவன் சொன்னால் சொன்னவர்கள் கருத்தை விட்டுவிட்டு எங்கே சுச்சா போனார்கள் எப்போ போனார்கள் எங்கே போனார்கள் என்று என்று பிரிச்சு மேய்ந்து அக்குவேறு ஆணிவேறாக பார்க்கவேண்டும். அப்போதான் அது இனிக்கும்
  33. இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்…. சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.
  34. மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதற்கான பிரதான காரணமாகவும், பெரு விருப்பமாகவும் நாங்கள் சொல்லும் காரணம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மிகவும் சரிந்து இருக்கும் சனத்தொகையையும், தமிழ் மக்களின் சனப் பரம்பலையும் அதிகரிக்கலாம் என்பதே. அதன் மூலம் எங்களின் நிலத்தையும், இருப்பையும், அரசியல் பலத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் பின்னால் இருக்கும் நோக்கம். இவ்வாறு குடியேற்றப்படும் மலையக தமிழ் மக்களின் நிலை என்னவாகும் என்றே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மலையக மக்கள் இதை விரும்புகின்றார்களா என்ற இன்னொரு பிரதான கேள்வியும் இருக்கின்றது. இந்த மக்கள் குடியேற்றப்படும் அல்லது குடியேறும் இடங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிஜம். மூன்று தலைமுறைகளாக அவர்கள் புதிய ஒரு இடத்தில் இருந்தாலும், அங்கு அவர்கள் சமனான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை. பறை என்னும் இசை பற்றி சமீப காலங்களில் நிறையவே உரையாடப்படுகின்றன. தமிழர்களின் ஆதி இசைகளில் இதுவும் ஒன்று என்கின்றோம். கொண்டாடப்பட வேண்டும் என்கின்றோம். பறையும், இசையும், அந்த மனிதர்கள் பற்றியும் சினிமாக்கள், கதைகள் கூட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 50 வருடங்களாக, போராட்ட காலம் உட்பட, இந்த பறை வாசிப்பவர்கள் கோவிலுக்கு வெளியே அதே இடத்திலேயே நின்று வாசிக்கின்றார்கள் என்று நாம் சொல்லத் தவறுகின்றோம். கோவில்களில் ஒரு தவில் அல்லது நாதஸ்வரக் கலைஞக்கும், ஒரு பறையை வாசிப்பவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் வேறுபாடுகளை நாம் காணத் தவறுகின்றோம். இந்த வேறுபாடுகளின் பின்னால் இருப்பது சமூகக் காரணிகளே. அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நிற்கும் தோரணை, பார்க்கும் பார்வை இப்படி எல்லாமே வேறுபட்டவை. குடியேற்றப்பட்டால் இதுவே தான் மலையக தமிழ் மக்களுக்கும் ஆகும். ஆங்கிலேயர்கள் அவர்களின் தேவைக்காக இலங்கை, மலேசியா, பிஜி, கரீபியன், பர்மா என்று உலகெங்கும் தொழிலார்களாக இந்த மக்களை குடியேற்றினார்கள். பின்னர் கைவிட்டார்கள். இவர்கள் குடியேறிய எந்த தேசத்தில் வளமாக இருக்கின்றார்கள். இலங்கையில் தான் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. பிஜியில் அரச அதிகாரம் கிடைத்தது, இந்த மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால். அதுவும் பிஜியின் மற்றைய சமூகத்தால் ஒரு இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. மற்றபடி அங்கும் இந்த மக்கள் ஒரு வளமான வாழ்வை வாழவில்லை. ஆங்கிலேயர்கள் தங்களின் நோக்கத்துக்காக பெரும் சுயநலத்துடன் இந்த மக்களை குடியேற்றியது போலவே, நாங்களும் இந்த மக்களை இன்று மீண்டும் குடியேற்ற நினைக்கின்றோம் அல்லவா. மலையக மக்களுக்கு முதலில் தேவையானது அவர்கள் வாழும் இடத்திலேயே சொந்த வீடும், அதனுடன் சேர்ந்த சிறிய நிலமும். அவர்கள் வளமாவதுஅங்கிருந்தே ஆரம்பிக்கும். அடுத்ததாக உயர் கல்வி அல்லது முறையான தொழில் பயிற்சிகள். மலையக, கொழும்பு, வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்த திசையில் நகர்வது தான் மலையக மக்களுக்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும். அந்த நாட்களில் ஊரில் பீட்டர் அம்மா என்று நாங்கள் கூப்பிடும் ஒருவர் ஒரு சின்னக்கடை வைத்திருந்தார். பாண் பணிஸ் போன்றன விற்பார். வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில், வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் அவரின் கடை இருந்தது. எனக்கு அவர் அடிக்கடி பணிஸ் கொடுப்பார். அது நான் அவருக்கு செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி, வேறு சில வேளைகளில் அது ஒரு பண்டமாற்று. கதையாகவே எழுதலாம். என்னையே ஒரு பணிஸை எடு என்று சொல்லிவிடுவார். எல்லா பணிஸும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதைப் போலவே தான் இந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லோரும் ஒன்றே. 'பணிஸ் அரசியல்வாதிகள்..........'................
  35. மன்னிக்கவும் அண்ணா... உங்களுடைய இந்த கருத்து பண்பற்ற ஒன்றாக எனக்குப் படவில்லை . நனைகிற ஆடு... குளிர் காய்கிற ஓநாய் ... உண்மையில் மலையகத்து மக்களின் யதார்த்த லயத்து வாழ்க்கை நிலை, இற்றை திகதி வரைக்கும் எஸ்டேட்ட தோரை, கங்காணி, ஆராச்சி (கிராம சேவகர்) இப்படி வரிசையாக அந்த அப்பாவி மக்களை மனிதர்களாக கூட மதிக்காமல் நடத்தும் நடப்பு உங்களுக்கு தெரியுமா? இன்று அனைத்தையும் இழந்து நிட்கும் அந்த மக்களை பற்றி பேசுகிற ஒரு தலைப்பில் நீங்கள் ஓநாய் வேட்டையில் புளங்காகிதம் அடைகிறீர்கள். மலையகத்து மண் வளமாக இருக்கிறது... அந்த மலையகத்தை பெருந்தோட்டமாக உருவாக்கிய மக்கள் இன்றுவரை வளமாக இருக்கிறார்களா? சுமந்திரனை கழுவி ஊத்த மலையக மக்களின் கண்ணீர் வேண்டாமே. 🤲
  36. தென் ஆப்ரிக்காவை இந்தியா எளிதில் வெற்றி கொள்ள உதவிய 'அர்ஷ்தீப் சிங் எழுச்சி' பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2025, 03:17 GMT "ஒருசில நாட்கள் உங்களின் திட்டத்தை உங்களால் சரியாக செயல்படுத்த முடியாமல் போகலாம். கடந்த போட்டியில் அதுதான் நடந்தது. இன்று அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியதால், அனைத்தும் நன்றாக அமைந்தது" நேற்று (டிசம்பர் 14) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கூறிய வார்த்தைகள் இவை. டிசம்பர் 11-ஆம் தேதி நடந்த இரண்டாவது டி20 போட்டி அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏமாற்றம் அளித்தது. அவரால் தன் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. வைட் யார்க்கர்கள் வீசவேண்டும் என்ற திட்டம் சற்று தவற, அவர் வீசிய யார்க்கர்கள் நடுவர்களால் 'வைட்' என்று அறிவிக்கப்பட்டன. 4 ஓவர்களில் மொத்தம் 9 வைட்கள் வீசினார் அவர். அதுவும் ஒரே ஓவரில் 7 வைட்கள் வீசியிருந்தார். அந்த ஓவரின்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. அன்று, நியூ சண்டிகரில் வீசிய 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் அர்ஷ்தீப். அதுவே தென்னாப்பிரிக்கா 200 ரன்களைக் கடக்க முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. இது, ஒரு சர்வதேச டி20 போட்டியில் அவர் ஐம்பது ரன்களுக்கு மேல் கொடுத்தது மூன்றாவது முறை. மற்ற இரண்டு தருணங்களில் விக்கெட்டாவது எடுத்திருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் அதுவும் கிடைக்கவில்லை. அர்ஷ்தீப் சிங்கிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் அது மோசமான ஒரு செயல்பாடாக அமைந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நியூ சண்டிகரில் அர்ஷ்தீப் வீசியது அவரது டி20ஐ கரியரின் இரண்டாவது மோசமான செயல்பாடு 3 நாட்கள் & சுமார் 230 கிலோமீட்டர் பயணத்துக்குப் பிறகு... மூன்றாவது டி20 போட்டிக்காக தரம்சாலாவில் களம் கண்டது இந்திய அணி. சொந்த காரணங்களுக்காக இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடவில்லை. அதனால் வேகப்பந்துவீச்சு யூனிட்டின் தலைவர் என்ற பொறுப்போடு அர்ஷ்தீப் களமிறங்க வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பொறுப்புகளை நன்றாக சுமந்து, முந்தைய போட்டியின் செயல்பாட்டை முற்றிலும் மறந்து, சிறப்பாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் ஆனார். 4 ஓவர்களில் அவர் விட்டுக்கொடுத்தது வெறும் 13 ரன்களே. 14 பந்துகளை 'டாட் பால்'களாக வீசினார். முக்கிய கட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார். முதல் ஓவரிலேயே தாக்கம் ஏற்படுத்தினார் வழக்கமாக தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைப்புக் கொடுக்கும். அந்த மைதானத்தில் பொதுவாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து ஸ்விங் ஆகும். அதனால் அவர்கள் இங்கு பந்துவீச விரும்புவார்கள். ஆனால், போட்டிக்கு முன்பு 'பிட்ச் ரிப்போர்ட் செய்திருந்த ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமானா போமி எம்பாங்வா, இந்தப் போட்டியில் பௌலர்களுக்கு பெரும் சவால் இருக்கும் என்று சொல்லியிருந்தார். "போட்டி தொடங்குவதற்கு முன்பே பனி பொழியத் தொடங்கிவிட்டது. சிறு புற்கள் ஆடுகளத்தில் பரவியிருக்கின்றன. இது நீங்கள் பந்துவீச்சாளராக இருக்கவேண்டாம் என்று நினைக்கக்கூடிய ஒரு ஆடுகளமாகத் தெரிகிறது. இந்த மைதானத்தில் ஒரு போட்டிக்கு சராசரியாக 15 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. பௌலர்கள் தங்களின் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும். பேட்டர்கள் ஆரம்பத்தில் ஆடுகளத்தை சற்று கணித்துவிட்டு அதன்பின்னர் அடித்து ஆடலாம்" என்று போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் கூறியிருந்தார். டாஸின்போது தனது அணி முதலில் பேட்டிங் செய்வது பற்றிப் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், "முதலில் பேட்டிங் செய்வதால், ஒருசில ஓவர்களுக்கு ஆடுகளத்தைக் கணிக்க வேண்டும். இன்று நல்ல தொடக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருந்தார். ஆனால், அவர்கள் சொன்னதுபோல் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தை அர்ஷ்தீப் சிங் கொடுக்கவேயில்லை. அவர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்தில் குயின்டன் டி காக் சிங்கிள் எடுக்க, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டிரைக்குக்கு வந்தார். அவர் சந்தித்த முதல் பந்து (ஓவரின் இரண்டாவது பந்து), நன்கு அவுட்ஸ்விங் ஆனது. அடுத்த பந்து, 'ஓவர் தி ஸ்டம்ப்' வந்து அர்ஷ்தீப் வீசிய கோணத்திலேயே (with the angle) பேட்டருக்கு வெளியே சென்றது. இரண்டு பந்துகள் அடுத்தடுத்து வெளியே சென்றிருக்க, ஓவரின் நான்காவது பந்தை உள்ளே திருப்பி ஹெண்ட்ரிக்ஸுக்கு அதிர்ச்சியளித்தார் அர்ஷ்தீப். நல்ல லென்த்தில், முதலிரு பந்துகளைப் போல் இந்த பந்தும் மிடில்-லெக் ஸ்டம்ப் லைனில் தான் பந்து பிட்ச் ஆனது. அதனால், அதேபோல் வெளியே செல்லும் என்று நினைத்து ஹெண்ட்ரிக்ஸ் ஆடியிருக்கலாம். ஆனால், இம்முறை பந்தை அர்ஷ்தீப் இன்ஸ்விங் செய்ததால், எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார் அந்த தென்னாப்பிரிக்க ஓப்பனர். நான்காவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. எம்பாங்வா சொன்னதுபோல் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்காமல் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் விக்கெட்டை வீழ்த்தியது தென்னாப்பிரிக்காவை பின்தங்கச் செய்தது. மார்க்ரம் எதிர்பார்த்த அந்த நல்ல தொடக்கம் அந்த அணிக்குக் கிடைக்க அவர் விடவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தை அர்ஷ்தீப் வழங்கவில்லை சிக்கனமான பவர்பிளே ஸ்பெல் & சிறப்பான டெத் ஓவர் தன் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய அர்ஷ்தீப், பவர்பிளேவில் வீசிய 3 ஓவர்களிலும் சேர்த்தே 9 ரன்கள் தான் கொடுத்தார். மறுபக்கம் ஹர்ஷித் ராணாவும் சிறப்பாகச் செயல்பட்டதால் (பவர்பிளேவில் 2 விக்கெட்டுகள்) தென்னாப்பிரிக்க அணி பவர்பிளேவில் 25/3 என தடுமாறவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியால் இந்தப் போட்டியில் மீண்டு வர முடியவில்லை. ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, குல்தீப் யாதவ் என பந்துவீசிய அனைவருமே விக்கெட் வீழ்த்தினார்கள். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இருந்தாலும், ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், கடைசி கட்டத்தில் அதிரடியை கையில் எடுத்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 17வது ஓவரில் மார்க்ரம் ஒரு சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸரும், 1 பவுண்டரியும் விளாசினார் மார்க்ரம். அதனால், அந்த ஓவரில் மட்டும் தென்னாப்பிரிக்காவுக்கு 19 ரன்கள் வந்தன. அவர் அரைசதம் கடக்க, அந்த அணியும் 100 ரன்களைக் கடந்தது. கடைசி 2 ஓவர்களிலும் அதே அதிரடியைத் தொடர்ந்தால் தென்னாப்பிரிக்கா 140 என்ற ஸ்கோரை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மார்க்ரம் நன்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆட்டத்தின் 19வது ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப். இப்போதும் நியூ சண்டிகரில் முயற்சி செய்ததைத்தான் முயற்சித்தார் - வைட் யார்க்கர்கள். ஆனால், கடந்த ஆட்டத்துக்கு மாறாக, இம்முறை பந்துகள் யார்க்கர்களாக தவறிவிட்டாலும் அவற்றின் லைன் தவறவில்லை. பந்து பேட்டருக்கு வெளியே சென்றாலும், வைடாகவில்லை. அந்த ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்த மார்க்ரம், மீண்டும் மூன்றாவது பந்தில் ஸ்டிரைக்குக்கு வந்தார். அர்ஷ்தீப் அவருடைய கோணத்தோடு வெளியே வீசிய பந்தை மார்க்ரம் பலமாக அடிக்க முற்பட, பந்து எட்ஜ் ஆகி கீப்பர் ஜித்தேஷ் சர்மாவின் கைகளுக்குள் தஞ்சமடைந்தது. அதனால், மார்க்ரமின் இன்னிங்ஸும், சற்றே சவாலான ஸ்கோர் அடிக்கலாம் என்ற தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூன்றாவது டி20 போட்டியின் பவர்பிளேவில் 18 பந்துகள் வீசிய அர்ஷ்தீப் அதில் 12 பந்துகளை டாட் பால்களாக வீசினார் மார்க்ரம் அவுட் ஆனதால், அடுத்த 9 பந்துகளில் தென்னாப்பிரிக்காவால் 4 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால், அந்த அணியின் இன்னிங்ஸ் 117 ரன்களில் முடிந்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா வழக்கமான அதிரடி தொடக்கம் (18 பந்துகளில் 35 ரன்கள்) கொடுக்க, சேஸ் செய்வது ஓரளவு எளிதானது. 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்தியா இந்தப் போட்டியை வென்றது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என முன்னிலையும் பெற்றிருக்கிறது. மூன்று இந்திய பௌலர்கள் (அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா, வருண்) தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தாலும், ஆட்டத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒரு ஏமாற்றமான செயலபாட்டுக்குப் பிறகு சிறப்பான முறையில் எழுச்சி கண்டு இந்தியாவையும் வெற்றி பெறவைத்துவிட்டார் அர்ஷ்தீப் சிங். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5qyv5wdq1o
  37. நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை. தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமே ‘குய்யோ முறையோ’ என்று கத்தவில்லை. தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போ” என்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை. புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்” என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து வாழவில்லையா? புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா? சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்? ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.
  38. @goshan_che யின் குளிர்கால தூக்கம் (Winterschlaf) இடையில் சுமந்திரனால் குழம்பி விட்டதா. 😂 🤣
  39. இது ஒரு நல்ல முயற்சி இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு வெறும் பேச்சாக இது இருக்கலாம், ஆனால் இது நடைமுறையில் மலையக தமிழ் மக்களை பல தசாப்தங்கள் பின்னுக்கு தள்ளி விடும் ஒரு நிகழ்வகாவே இருக்கும். 1970ம் மற்றும் 80 ஆண்டுகளில் என்னுடைய ஊரில் குடியேற்ற்றத் திட்டம் என்னும் ஒரு சிறிய இடம் இருந்தது. இது ஊரின் சுடலையின் முன்னே இருந்தது. பருத்தித்துறை - வல்வெட்டித்துறை வீதியின் ஒரு பக்கம் சுடலையும், மறுபக்கம் இந்த குடியேற்றத் திட்டமும் இருந்தன. அங்கு இந்த மலையக மக்களே குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் நகரசபையில் சுத்திகரிப்பு பணியாளர்களாக வேலை செய்தனர். வெறும் கைகளாலும், கைகளால் தள்ளும் வண்டில்களும் கொண்டு அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்தனர். மனிதக் கழிவுகளை கூட அவர்களே அள்ளினார்கள்...........😭😭. அவர்களை நான் வேறு எங்கும், எந்த நிகழ்வுகளிலும் கண்டது இல்லை. அவர்களின் பிள்ளைகள் எங்களுடன் பாடசாலையில் படித்தார்களா என்றும் எனக்கு தெரியவில்லை. கோவில்களுக்குள் நிச்சயம் விட்டிருக்கமாட்டார்கள். யாழ்ப்பாண மக்கள் வறட்டுத்தனமான கௌரவம் மிகவும் அதிகமாக உள்ள சமூகங்களில் ஒன்று. இதை நான் ஊரில் இருந்த நாட்களில் என் வீட்டிலேயே பார்த்திருக்கின்றேன். யாழ்ப்பாண மக்கள் வேறு எவரையும் ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது நான் ஊருக்கு போகும் போதெல்லாம் அந்த குடியேற்ற திட்டம் இருந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போகின்றேன். அங்கு எவரும் இல்லை. பாழடைந்து போய்விட்டது. ஆனாலும் அங்கே யாரையோ தேடுகின்றேன். இலங்கையிலிருந்து சாஸ்திரி - பண்டா ஒப்பந்தத்தின் பின் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிலையும் தமிழ்நாட்டில் இதுவேதான். அங்கும் அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. விளிம்பு நிலை மக்களாக, பட்டியலின மக்களாகவே அவர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மலையகப் பூமியே மலையக தமிழ் மக்களுக்கு சுயமரியாதையையும், கௌரவத்தையும் கொடுக்கும். மலையகத்தை கட்டி எழுப்ப வேண்டியது அரசினது கடமையே. அதை இனியாயினும் செய்ய முன்வந்தார்கள் என்றால் அதுவே மலையக மக்களுக்கான சரியான ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இலங்கையின் வடக்கும், கிழக்கும் குடிசனப் பரம்பல் மிகக் குறைந்த இடங்களாக வந்துவிட்டன. வவுனியாவின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரப் போகும் சிங்கள மக்களை எதுவும் தடுக்கப் போவதில்லை.
  40. நேற்று 25 கார்த்திகை அன்று தம்பி தமிழ்சிறியை அவர் மகள் யாழினி தாத்தாவாக்கிவிட்டார். அவர் குடும்பத்தில் உதித்த முதல் பேரப்பிள்ளை, பேத்தியின் பெயர் சிவானி. பேத்தி சிவானி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!!🙌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.