Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88132
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19253
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46850
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    15795
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/19/25 in Posts

  1. தயவு செய்து அப்டேட் ஆகவும். அதில் பாதிப்பேர் தற்போது அனுர படையணியின் சிறப்பு தளபதிகள்😂
  2. அநேகமாக தமிழ் அரசியல் வியாதிகள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, வடக்கில் மக்கள் இந்திய தூதுவராலயத்திற்கு எதிராக செய்த ஆர்ப்பாடத்திற்கு, அமெரிக்காவின் நகர்விற்கு மன்னிப்பு கேட்டு ஆறுதல் சொல்வார்கள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? எடுத்ததற்கெல்லாம் இந்தியாவுக்கு பயணம் செய்து மந்திராலோசனை செய்வது தடுபடும். இனி இவர்களுக்கு அரசியல் கையை மீறிப்போன ஒன்று. ஜதார்த்ததை புரியாமல் ஆடியதால் இல்லையில்லை ஏமாற்றியதால் வந்த வினை. தமிழர் இனி வேறொரு வல்லரசின் அடிமைகள் அவ்வளவே.
  3. இவ்வளவு காலமும் இந்தியன் இருந்து எங்களுக்கு என்ன செய்தார்கள் ? எவன் வந்தாலும் அவனின் சுய நலத்துக்கே வருவான் இலங்கையின் பூர்வ குடி நாங்கள் என்று கடைசியில் எங்களின் இருப்பே பறி போகிறது அதை இந்தியா ரசித்து கொண்டு இருக்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் டாஸ்மார்க்கில் விழுந்து கிடக்கிறார்கள் .வடகிழக்கில் இருப்பே பறி போகையில் எவன் வந்து எம்மை சாட்டி அரசியல் செய்தால் அதை பிடித்து கொண்டு மேலே போவதுதான் சாணக்கியம் . பழிவாங்கும் இந்திய படங்களை பார்த்து இன்னும் இன்னும் அழிந்து கொண்டு இருக்கிறோம் நல்லகாலம் ஜப்பான்காரன் அணுகுண்டு வீச்சுக்கு பின் அத்தகைய படங்களை பார்க்கவில்லை அவர்களை யார் அழித்தார்களோ அவர்களின் உதவியின் ஊடே வளர்ந்து காட்டி கொண்டார்கள் .
  4. அத தெரண கருத்துப்படம்.
  5. அடேங்கப்பா…. 56,000 பிச்சைக்காரர், சவூதிக்கு விசா எடுத்து… விமான சீட்டு வாங்கி போயிருப்பது ஒரு கின்னஸ் சாதனை. 😂 வாழ்த்துக்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத். 🤣
  6. புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன். நாடு புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகி அதிலிருந்து முழுமையாக மீண்டெழாத கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.ரி.என்.ஏக்கும்) இடையே ஒரு சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது. புயலின் அழிவுகளில் இருந்து மக்கள் முழுமையாக மீண்டு எழவில்லை. சிதைந்த வீதிகள் பல இப்பொழுதும் திருத்தப்படவில்லை. உடைந்து தொங்கும் பாலங்கள் பல இப்பொழுதும் முழுமையாகக் கட்டப்படவில்லை.நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் முழுமையாக வீடு திரும்பவில்லை. சேறு படிந்த நகரங்களையும் வீதிகளையும் கட்டிடங்களையும் முழுமையாகத் துப்பரவாக்கி முடியவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மேற்படி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றிருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். இப்படி ஒரு சந்திப்புக்கு சுமந்திரன் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.அதற்கு சுரேஷ் பிரமச்சந்திரன் பகிரங்கமாகப் பதில் கூறியதோடு சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது. சந்திப்பின் பின் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனும் தெரிவித்த தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கே வைக்கப்படுகிறது. எனவே மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம். மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக கருத்தரங்குகளை ஒழுங்குப்படுத்திவருகிறது. அவ்வாறான ஒரு கருத்தரங்கு வவுனியாவில் நடந்தபோது அதில் சுமந்திரனும் கலந்து கொண்டார்;பேசினார். மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைக்க வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கேட்கின்றன. மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட டி.ரி.என்.ஏ ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவை என்ற ஒரு கூட்டுக்குள் காணப்பட்டது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்பின் ஓர் எழுத்துமூல ஆவணத்தில் கையெழுத்திட்டு அந்த கூட்டு உருவாக்கப்பட்டது.அப்பொழுது நடந்த ஒர்ஊடகச் சந்திப்பில் கஜேந்திரக்குமார் பின்வருமாறு சொன்னார் “இந்தக் கூட்டு உடையுமாக இருந்தால் அதைத் தமிழ் மக்கள் தாங்க மாட்டார்கள்” என்று. அவர் ஏன் அப்படி சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் நாடு தாங்க முடியாத ஒரு புயலில் சிக்கி மீண்டும் எழுந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் தாங்க முடியாத அந்த உடைவு விரைவில் ஏற்படுமா ? ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல்களை வலியுறுத்தி கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியபோது அந்தக் கூட்டில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின.டி.ரி.என்.ஏ ஓர் இலட்சியக்கூட்டு அல்ல.அந்த கூட்டுக்குள் இருப்பவர்கள் அனைவருமே முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களைச் சேர்ந்த கட்சிகள்.முன்பு தமிழரசுக் கட்சியோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயல்பட்ட கட்சிகள்.பின்னர் தமிழரசுக் கட்சியின் பெரிய அண்ணன் தனத்தால் அந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியேறிய அல்லது வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்ட கட்சிகள். கடந்த ஆண்டு பொது வேட்பாளரை முன்நிறுத்திய கூட்டுக்குள்ளும் மேற்படி கட்சிகளில் பெரும்பாலானவை காணப்பட்டன.அவர்களுடைய சொந்த வாக்கு வங்கி பலவீனமானது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை அவர்கள் வெல்லமுடியும்.ஆனால் மாகாண சபைத் தேர்தலிலோ, ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலோ பெரிய வெற்றிகளைப் பெறத் தேவையான வாக்கு வங்கி அவர்களுக்கு இல்லை.இந்த விடயத்தில் தங்களுடைய உயரம் என்னவென்று அந்த கட்சிகளுக்கும் தெரியும்.சங்குச் சின்னத்தை தங்களுடையதாக்கியதன் மூலம் தமது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தலாம் என்று அவர்கள் கண்ட கனவு பலிக்கவில்லை. எனவே வெற்றி பெறக்கூடிய கட்சியோடு இணைவதன் மூலம் தான் அவர்களால் எதிர்காலத்தில் கட்சிகளாக நின்றுநிலைக்க முடியும். அந்த அடிப்படையில் பார்த்தால் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி இப்போதைக்கு தமிழரசுக் கட்சிதான். எனவே தமிழரசுக் கட்சியோடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் இந்தக் கட்சிகளுக்கு உண்டு. உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்ததன்மூலம் அவர்கள் மூன்று உடன் நன்மைகளைப் பெற விரும்பினார்கள். முதலாவது, தங்களைத் துரோகிகள் என்றும் ஒட்டுக் குழுக்கள் என்றும் இந்தியாவின் ஆட்கள் என்றும் பெட்டிகட்டி,முத்திரை குத்திய தீவிர தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு கட்சியோடு கூட்டுக்குப் போவதன் மூலம், தமிழ்த் தேசியப் பரப்பில் தங்களைப் பற்றியுள்ள முற்கற்பிதங்களை அகற்றலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு. இரண்டாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு தமிழரசுக் கட்சியோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திராத ஒரு பின்னணியில், தமது பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் இணக்கத்துக்கு போக வேண்டிய தேவை இருந்தது. மூன்றாவது உள்ளூராட்சி சபைகைளை இயலுமானவரை கைப்பற்றுவது. இப்பொழுதும் அந்த அடிப்படையில்தான் அவர்களை தமிழரசுக் கட்சியோடு பேச முற்பட்டுள்ளார்.மாகாண சபைத் தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றிகளை உறுதிப்படுத்துவது. இப்பொழுது நடக்கும் பேச்சுக்கள் வெற்றி பெறுமாக இருந்தால் அதன் முதல்விளைவு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனிமைப்படுத்தப்படும்.அதே சமயம் டி.ரி.என்.ஏ.யும் மதிப்பிறக்கத்துக்கு உள்ளாகும். அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் அவர்கள் நம்பத்தக்க சக்திகள் அல்ல, இலட்சிய பாங்கான கட்சிகள் அல்ல என்ற அபிப்பிராயம் எண்பிக்கப்படும்.ஏற்கனவே பொது வேட்பாளர் விடையத்தில் சங்குச் சின்னத்தை எடுத்ததன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சிவில் சமூகங்களோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள். அதற்குப் பின்னர்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் எழுத்துமூல ஆவணத்தின் அடிப்படையில் கூட்டாகச் செயல்படச் சம்மதித்தார்கள்.இப்பொழுது தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதன்மூலம் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரவையுடனான தமது உறவைப் பலவீனப்படுத்தியிருக்கிறார்கள்.அதன் மூலம் எதிர்காலத்தில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத தரப்பு இது என்ற முற்கற்பிதம் மேலும் நிரூபிக்கப்படும். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் அவர்களைக் கைவிடுமாக இருந்தால்,அல்லது கூட்டமைப்பாக செயற்பட்ட காலகட்டங்களில் மேடைகளில் பகிரங்கமாகவே அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்தது போல இனிமேலும் அழைப்பார்களாக இருந்தால், டி.ரி.என்.ஏ என்ற கூட்டுக்குள் இருக்கும் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்? இக்கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கஜேந்திரகுமார் கூறியது போல,தமிழ்த் தேசியப் பேரவையுடனான அவர்களுடைய இணக்கம் உடையுமாக இருந்தால்,அதைத் தமிழ் மக்கள் தாங்குவார்களோ இல்லையோ டி.ரி.என்.ஏ. தாங்குமா என்ற கேள்வி உண்டு. மாகாண சபைத் தேர்தலை நோக்கி மேற்படி சந்திப்பு நடந்திருக்கலாம். ஆனால் ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமா இல்லையா என்பது இப்பொழுதும் சந்தேகம்தான். புயலுக்கு பின்னரான அரசியல் சூழலானது ஒரு தேர்தலை வைக்கத் தக்கதாக இல்லை. ஏற்கனவே அரசாங்கம் புயலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலுக்காக நிதியை ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருந்தது. அதேசமயம் மாகாணங்களின் எல்லைகளை மீள நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதனால் அதற்கு கால அவகாசமும் கேட்டது.இப்பொழுது புயலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கேட்க வாய்ப்பு உண்டு.இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் மாகாண சபை தேர்தலை அடுத்த ஆண்டு வைக்கலாம். அப்படி ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் அது தமிழ்த்தரப்பின் பாவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையுமா? இப்போதைக்கு தமிழரசு கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன. ஆனால் அதில் அர்ஜுனாவும் களமிறங்கி இளஞ்செழியனும் களமிறங்குவாராக இருந்தால், அவர் தமிழரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கவில்லை என்றால்,அப்பொழுது தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்புக்களின் பருமன் குறையும்.அதுமட்டுமல்ல தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையோடு முன்னேறும். எனவே நடக்குமா இல்லையா என்று உறுதியாகத் தெரியாத ஒரு தேர்தலை நோக்கி,ஏற்கனவே இருந்த ஒரு கூட்டை உடைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியோடு இணங்கிப்போவது என்று டி.ரி.என்.ஏ முடிவெடுக்கமாக இருந்தால்,அது கஜேந்திரக்குமார் சொன்னதுபோல, தமிழ்த் தேசியப் பரப்பில் ஏற்கனவே உள்ள மிகப் பலவீனமான ஒரு ஐக்கியத்தின் முடிவாக அமையும். ஆனால் அதை தமிழ் மக்கள் தாங்கிக் கொள்வார்கள். ஏனென்றால் முள்ளிவாய்க்காலை கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு இனி எதிர்காலத்தில் தாங்கிக் கொள்ள முடியாத துயரம்; தாங்கிக் கொள்ள முடியாத காயம்; தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்று எதுவும் கிடையாது. https://athavannews.com/2025/1456314
  7. "சந்திப்பின் பின் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனும் தெரிவித்த தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கே வைக்கப்படுகிறது. எனவே மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம்." .ஓநாய்கள் ஊழையிட்டது இதற்குதானே ஆடுகள் நனைகின்றது என😆😁;
  8. அவர்களையும் சிங்கள வரையும் ஒரு காலத்தில் வீட்டு வேலைக்கு வைத்து பலகிய மோட்டு குடிகளுக்கு, வடகிழக்கில் குடியேற்றுவது வரப்பிரசாதமாக இருக்கலாம்👍
  9. சுத்துமாத்து சுமந்திரனின்… “லூஸ்” கதையை கேட்டு, எவனும் வடக்கிற்கு வர மாட்டான் என்று அடித்து சொல்லலாம். மலையக மக்களுக்கு… சுமந்திரன், ஒரு முத்தின பைத்தியம் என்று நன்கு தெரியும்.
  10. ராதாகிருஸ்ணன் ஏன் போக போறார்? அவர் என்ன லைனிலா வாழ்கிறார்? அவர் சம்பளம் என்ன 1000 மா? அந்த மக்கள் கொட்டடியில் மாய்ந்தால்தான், இவர் எம்பி இல்லாவிட்டால்? ஆகவே அவர் இப்படித்தான் பசப்பு வார்த்தை பேசுவார். நாங்களும் பதிலுக்கு நிகர்நிலை உதவி கரம் நீட்டினால் - எல்லாம் சுபம் 😂. இவர்களின் மலையக மக்கள் மீதான கரிசனையும், கருணாநிதியின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும் ஒரே வகை.
  11. மேலே கு சா அண்ணைக்கு கொடுத்த விளக்கத்தை போய் மீள வாசிக்கவும்😂. நடைமுறையில் சரி வரும், நாளைக்கே செய்யலாம் என நான் எழுதவில்லை. கொள்கை அளவில் இது நல்ல விடயம் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே நான் எழுதியது. என்ன நினைப்பில் அல்லது மிதப்பில் வந்தாலும் - கிடைத்த வேலை ஒன்றை பழகி, அதில் திறமை காட்டி, மேலேபோய், மேளாளர் ஆகி, பெற்றோல் ஷெட்டையிம் வாங்கினார்களா இல்லையா? இதையே ஏன் வடக்கில் மலையக மக்கள் செய்ய கூடாது. முடியாது? ஏன் என்றார் அவர்கள் எம்மை போல் ஊக்கம், திறமை, உந்தல் அற்றவர்கள்?
  12. ரத்த திலகம் வைத்த காலங்களில் கூட்டணி தலைவர்கள் உசுபேற்றும் வகையில் பேசுவார்கள் என கேள்விப்பட்டேன். டெமோ காட்டியமைக்கு நன்றி. இத்து போன ஈரோஸ், ஈபி யை தவிர, அவர்களும் பின்னர் இதை கைவிட்டு விட்டார்கள் - எவரும் எந்த காலத்திலும் மலையகம் தமிழர் தாயகம் என கோரியதே இல்லை. மலையகத்தை விட கொழும்பு மாவட்டத்தில் தமிழர் செறிவு அதிகம். அதற்காக கொழும்பு தமிழர் தாயகமா? இனவழி, மரபுபழி தாயாகம் என்பது சும்மா புல்டா போண்டா கதை அல்ல. எழுந்தமானமாக யாழில் வீரவசனம் எழுதுவதால் மட்டும் மலையகம் தமிழர் தாயகம் என ஆகிவிடாது. சக தமிழனை அடுத்த நூறு ஆண்டுக்கு லைன்களில் கட்டி வைத்து, சிங்கள மேலாண்மையின் ரத்த கூலிகளாக இருக்க வைக்கும் -வடக்கில் தமிழ் இனப்பரம்பல் குறைந்து போனாலும் பரவாயில்லை எனது ஆள் இல்லா காணியில் இன்னொரு தமிழனை (இன்னொரு சாதியை சார்ந்த யாழ்ப்பாண தமிழனை கூட) இருக்க விடேன் எனும் நவீன பொன்னம்பலங்கள் சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்.
  13. தையிட்டி விகாராதிபதிக்கு கௌரவம் வழங்கப்படும் நிகழ்விற்கு NPP கடும் எதிர்ப்பு! யாழ். தையிட்டி விகாரை விவகாரம்: தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு! adminDecember 19, 2025 தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்தப்படும். இந்தத் தீர்மானங்கள் வலி வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. வலி வடக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. தையிட்டியில் அமைந்துள்ள “திஸ்ஸ விகாரை” சட்டவிரோதமானது என்றும், அதற்கு பிரதேச சபையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக நடைபெறும் போராட்டம் அரசியல் கட்சிகள் சாராத ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர். மக்கள் போராட்டமாக இருக்குமானால் தாங்களும் கலந்துகொள்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/224487/
  14. பிச்சை காசு தான் கிடைக்கும் . வழக்கம்போல் மீனுக்கு வாளும் பாம்புக்கு தலையும் காட்ட முடியாதளவுக்கு அமெரிக்கா வாலை ஓட்ட நறுக்கி விட்டுத்தான் உதவியே கொடுத்து உள்ளது கொஞ்சம் பணம் கிடைத்தாலும் சிங்களம் தென்னாசிய அரசியல் தன்ரை குடும்பியில் என்பது போல் இடற தொடங்கும் இது உள்ளே வந்தவங்களும் விளங்கும் வேற வழியே கிடையாது தமிழர் பகுதியில் நாலு புத்தர் சிலை வைத்து கபடி கபடி விளையாட வேண்டியதுதான் . அந்த கனிம வளத்தை கையாள கூடிய அளவுக்கு இந்தியா வளரவில்லை என்கிறார்கள் வழக்கம் போல் அணில் ஏற விட்ட கேஸ் தான் அநேகமா நம்ம அரசியல்வாதிகளிடம் மகஜர் ஒன்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .
  15. சுமந்திரன் போன்றோரின் போலி அரசியல் வார்த்தைகளால் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள். எம் உதவிக்கரம் என்றும் உங்கள் பக்கம்.
  16. இவ்வளவு காலமும் இந்தியாவிற்கு மதிப்பளித்து அல்லது இந்தியாவின் மீது கரிசனை காட்டியதெல்லாம் போதும். அமெரிக்காவே வருக வருக.
  17. உண்மையை சொன்னால்; மடைமாற்று, காவடி, தூக்குகாவடி என்பீர்கள். சுமந்திரனை சொன்னால் ஓடி வந்து காப்பாற்றுவீர்கள். பாவம் ஐயா நீங்கள்! அவர் செய்யும் அரசியலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை உங்களால், அவரை விட்டுகொடுக்கவும் முடியவில்லை. உங்கள் பாடு திண்டாட்டந்தான். ஒருவற்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு எது தேவை என்பதை கேட்டறிந்து செய்யவேண்டும். நான் விரும்பியதை எல்லாம் சொல்லிவிட்டு, அதுதான் அவர்களது தேவையென வாய் வம்பம் பேசக்கூடாது. இப்போவாவது அவர்களுக்கு என்ன தேவை என பாதிக்கப்பட்ட மக்களைகேட்டு செய்யுங்கள். அடுத்தவேளை தூங்க இடமில்லை, சாப்பிட ஏதுமில்லை, அவர்களை பாசத்துடன் அழைக்கிறோம் வாருங்கள் என்றால் எப்படி? ஏதாவது ஆயத்தங்கள் உண்டா? மலையகம் அவர்களது தாயகம். அங்கு அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாக வாழவேண்டிய சூழலை உருவாக்குவது அவர்களது பிரதிநிதிகளின் கடமை. தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாமல் அந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்டவர், மலையக மக்களுக்கு ஏதோ செய்யபோகிறாராம். இதைச்சொன்னால் மடைமாற்று, காவடி என்று தூக்கிக்கொண்டு, நிதர்சனத்தை ஏற்க மறுத்து ஏதோ ஜாம்பவானாக கயிறு திரிப்பு.
  18. இந்த வேலையைத்தான் செய்வோம் என்று வெளிநாடுகளுக்கு நாங்கள் யாரும் இடம் பெயர்ந்து வரவில்லை. எந்த வேலையையும் செய்யத் தயாராகவேதான் இருந்தோம். புலம்பெயர்ந்து நாங்கள் வந்த போது புதுவை இரத்தினதுரை கூட கவிதையில் எங்களைப் பற்றிச் சொன்னார் “தூசு தட்டியே காசு பார்த்தவர்கள்” என்று. சரி அதை விடுங்கள். இங்கே யாரையும் யாரும் வற்புறுத்தவில்லை. விருப்பமுள்ளவர்கள் வாருங்கள். ஒன்றாகப் பயணிப்போம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. குமாரசாமி, நான் எழுதியதை நீங்கள் மேலோட்டமாகவே வாசித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது இந்தப் பகுதியை வாசிக்க மறந்து விட்டீர்களோ தெரியவில்லை. இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம்.
  19. 1954 வரை கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன. பின்பு குருஷேவினால் உக்ரேனுடன் இணைக்கப்பட்டதாகவும், சோவியத் உடைவின் பின்னர் உக்ரேனிடம் இருந்த கிரிமியா மேற்குலகினூடான உக்ரேனின் நெருக்கத்தின் காரணமாக கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சமும் கனிமங்களின் சுரண்டலும் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிக்க காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது நான் சொல்லி கிருபன் அறியும் நிலையில் இருக்காது என்று நினைக்கிறேன், அதன் தொடர்ச்சியே மறைமுக மேற்குலகுக்கெதிராக ரஷ்யா தொடுத்த கீவ் நோக்கிய ரஷ்யாவின் படையெடுப்பும் என்பது பின்னாளில் அனைவரும் அறிந்த வரலாறு. உக்ரேன் ரஷ்ய பலத்துடன் ஒப்பிடும்போது நோஞ்சான்தான், ஆனால் உக்ரேனுக்கு பின்னாலிருந்த மேற்குலகும் நேட்டோ ஆதரவும் நிச்சயமா நோஞ்சான்கள் இல்லை என்பது நம் அன்னைவரையும்விட ரஷ்யாவுக்கு நல்லாவே தெரியும். அதுவே போராக வெடித்தது. ஆக்கிரமிப்புகள் நியாயப்படுத்த முடியாதவை, இங்கே காரணங்களைதான் சொல்கிறேன், மற்றும்படி ரஷ்ய &உக்ரேன் பக்கம் நிக்கவோ நியாயப்படுத்தவோ எந்த நிமிடமும் முயற்சிக்கவில்லை, ஒரு இன ஆக்கிரமிப்புபோரில் இருவருமே எமக்கெதிராய் நின்றவர்கள். இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் 1987ல் வந்த உடன்படிக்கையும் அதன் பின்னரான புலிகள் நிலைப்பாடு பற்றியும் சிலமாதங்களின் முன்னர் ஏற்கனவே நீண்ட விளக்கம் ஒன்றை உங்களுக்கு தந்திருந்தேன் அதனை மீண்டும் பதிவு செய்ய விரும்பவில்லை நீங்கள் விரும்பினால் தேடி பிடித்து சரிபார்த்து கொள்ளுங்கள். அப்புறம் 1990,94,2002ல் எந்த வகையான சிங்கள அரச உள சுத்தியான பாலைபழம்போன்ற தீர்வுகள் தமிழர்களை நோக்கி நெருங்கி வந்தன , எப்படி அநியாயமாக அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்பதை உங்களிடமிருந்து அறியவிரும்புகிறேன்.
  20. உந்த நரிப்புத்தி தெரிந்துதான் ரஷ்யா உக்ரேனின் கரைப்பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மற்றவர்கள் சொத்துக்களை ஆட்டைய போடுவதில் மேற்குலகினருக்கு நிகர் யாருமில்லை.
  21. "இதை எப்படிச் செயல்படுத்துவீர்கள்? முன்மொழிவைத் தாருங்கள் முதலில்!" என்று கேட்கும் "புலம் வாழ் பிளானிங் ஒபீசர் மார்"😎 எப்பவாவது இருந்து விட்டு சின்னத்திரையில் தான் தாயகத்தை இங்கிருந்து பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில திட்டங்கள் ஏற்கனவே நடை முறையில் இருக்கின்றன. உதாரணமாக மலையக தமிழ் மாணவர்கள் ஒரு தொகையினரை யாழ் மத்திய கல்லூரியின் விடுதியில் இலவசமாகத் தங்க வைத்து கல்விச் செலவையும் புலமைப் பரிசில்கள் மூலம் ஈடு செய்யும் திட்டமொன்று சில ஆண்டுகளாக நடை முறையில் இருக்கிறது. வெளிநாட்டு பழைய மாணவர் சங்கங்கள் தான் இதற்கு நிதி ஆதரவு. இவை பற்றி யூ ரியூப் வீடியோக்கள் வராது, எனவே யூ ரியூப் வழியாக தாயகத்தைத் தரிசிக்கும் நோக்கர்களுக்கு இவை தெரிய வராது. ஆனால், இந்த செயல்படுத்தல் பற்றிய நிஜமான கரிசனை அல்ல இங்கே எதிர்ப்பவர்களின் உண்மைக் காரணம். நமக்குப் பிடிக்காத சுமந்திரன், மனோ கணேசன் சொன்னார்கள், எனவே எதிர்க்க வேண்டுமென்ற குருட்டுத் தனமான காழ்ப்புணர்வு ஒரு காரணம். "நாங்க யாழ்ப்பாணத்தார், எங்கள் றோயல் பிளட் லைன் மலையகத் தமிழர் நிரந்தரமாக வந்து தங்கினால் நஞ்சாகி விடும்"😂 என்ற அச்சம் இரண்டாவது காரணம். இதனால் தான் நானும் ஐலண்டும் சில சமயங்களில் இங்கே சொல்லியிருக்கிறோம்: புலிகள் இருந்த போது கிடைக்காத தமிழ் ஈழம், இப்ப இருக்கும் வால்களிடம் கிடைக்கக் கூடாது! அது தமிழர்களுக்கே ஆப்பாகத் தான் முடியும்!
  22. இது எப்படி எமது போராட்டத்திற்கு பொருந்தும் நானா? நாம் நேட்டோ போன்று எந்த அமைப்பில் சேரவேண்டும் என்று போராடினோம்? எமக்கு எந்த மேற்குநாடுகள் உதவின? நாம் போராடியது எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக! இதுக்கு லைக் போட்ட கூட்டத்தை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!
  23. உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயரில் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலருக்கு அது நினைவில் கூட இல்லாமல் இருக்காமல். அந்தக் காலத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞர்கள் பிரச்சினை ஒரு பெரிய சவாலாக இருந்தது. அந்தச் சூழலில்தான், இளைஞர்களுக்கு நிலம் வழங்கி, விவசாயம் மற்றும் குடியிருப்பின் மூலம் வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய மக்கள் இருந்த விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகள் குடியேற்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. காட்டுநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு, படித்த இளைஞர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இது வேலைவாய்ப்பை சமாளிக்கும் முயற்சியாக மட்டுமன்றி, கிராம அபிவிருத்தியை நோக்கிய அரசின் ஒரு முயற்சியாகவும் பேசப்பட்டது. ஐந்து ஏக்கர் காணிகள், இலவச நீர் வசதி, உலர் உணவுகள், பயிர் செய்வதற்கான பணம் என அரசாங்கம் பல உதவிகளைச் செய்தது. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு அந்தக் காணிகளை விற்கவோ, குத்தகைக்கு விடவோ முடியாத கட்டுப்பாடுகளும் இருந்தன. பலர் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றனர். மிளகாய் பயிர் செய்து சில “விவசாய மன்னர்களும்” உருவானார்கள். பணமும் பார்த்தார்கள். ஆனால், இந்த முயற்சி நீண்டகாலம் தொடரவில்லை. அன்றைய அரசியல் மாற்றமும் அதற்கான் காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், “படித்த வாலிபர் திட்டம்” இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான பாடமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பை அரசுப் பணிகளுக்குள் மட்டுப்படுத்தாமல், நிலம், விவசாயம், கிராம அபிவிருத்தி வழியாகத் தீர்வு காண முயன்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இதைப் பார்க்கலாம். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே, அமைதியான சமூக அபிவிருத்தி முயற்சியாக இது செயல்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வழங்கும் நிதிகளை சரியான வழிகளுக்குத் திசைதிருப்ப முடியும். விதண்டாவாதங்களிலேயே காலத்தைக் கழித்தால், எதிர்காலத்தில் வடமாமணத்தில் ஒரு தமிழன் பாராளுமன்றம் செல்வதே கேள்வியாகி விடலாம். மலையக மக்களிடம், “வாருங்கள், உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்வது வெறும் வார்த்தையல்ல. அது அவர்களுக்கு ஒரு ஆறுதலும், ஒரு நம்பிக்கையும். அழைத்தவுடன் எல்லோரும் பெட்டி, படுக்கையுடன் ஓடிவரப் போவதுமில்லை. ஆனால் இது ஒரு விதை. விதை விதைக்கப்படாவிட்டால் பயிர் எப்படி வரும்? “இது சரிவராது” என்று ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் தள்ளிவிட்டால், கிடைக்கின்ற அனுகூலங்களையும் இழந்து, தமிழினம் வெறுமையாக நிற்கும் அபாயம் இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததி, தங்கள் பணத்தை ஊருக்கு அனுப்பப் போவதில்லை. ஆகவே, காலத்தில் விதை விதைப்பதே அறிவு. ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.’
  24. இந்திய உபகண்டத்தில் தயாரிக்கப்டும் மருந்துகளை பாவித்தால்…. அல்ப ஆயுளில், போய் சேர வேண்டும் போலுள்ளது.
  25. இது பரபரப்புக்காக எழுத பட்ட தலைப்பு போல படுகிறது. சும்மா சந்தோசமான தாம்பத்யத்தில் இருந்த மனைவி - ஒரு நாள் புட்டு கேட்டதற்கா தலையை கொத்துவா? Battered women syndrome போல ஏதோ பிண்ணனி காரணம் இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கொலைக்கான உண்மை காரணத்தை அல்லது அதற்கு அருகான காரணத்தை நெருங்கி இருக்கலாம் என ஊகிக்கிறேன்.
  26. இந்த. மனிதன். பகலில். ஒரு வேலையை. தேடி. எடுத்து. செய்திருக்கலாம். இரவில். வீட்டிலிருந்து. இருக்க. முடியும். விரும்பிய. எல்லாம். கிடைத்து. இருக்கும்
  27. என்ன நடக்குது இங்க .. புட்டை ஒருவரும் தொடுவதற்கில்லை சிவப்பு பச்சரிசி ஊறல் இடியல் ஒரு வறுவல் மூங்கில் குழலில் கடைசி அவியல் சுடுதல் உண்டு திரியாய்ப்பாரை கருவாடு பொரியல் உண்டு ஊர்க்கோழி முடடையுடன் சின்ன வெங்காயமும் பிஞ்சு மிளகாயும் இவற்றுடன் முதல்நாள் வைத்த கரைவலை மீன் அரைத்த குழம்பு சொர்க்கம் ஐயா .. என்ன நடக்குது இங்க .. புட்டை ஒருவரும் தொடுவதற்கில்லை
  28. வில்லவன், மலையக தமிழ் மக்களின் நன்மைக்கும், பாதுகாப்பிற்கும், எதிர்காலத்துக்குமாக, மலையக மக்களின் சுயவிருப்புடன் அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டு, கௌரவத்துடன் நடத்தப்படுவார்கள் என்றால், அதைவிட நல்லதொரு விடயம் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு எம் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எம் மக்களின் சில பிடிவாதங்கள், கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் என்பன மனிதர்களை அவர்களின் பிறப்புகளினால் வரும் அடையாளங்களை வைத்து வகைப்படுத்துகின்றன. ஒரு மனிதன் ஒடுக்கப்படுகின்றான் என்பது கண்ணீரை வரவழைக்கின்றது. மார்த்தாண்டம் என்னும் ஊர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று தெரியாது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் கறுப்பு என்றால் மார்த்தாண்டக் கறுப்பு என்று சொல்வார்கள். அங்கிருந்து ஒரு பையன் இங்கு வேலை செய்ய வந்தான். டாடா கன்சல்டிங். மிகப் பெரிய விசயம். அந்தச் சமூகத்திலிருந்து அப்படி ஒரு பையன் இங்கு வருவது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. அதுவும் டாடா கன்சல்டிங் போன்ற நிறுவனங்களில் இருந்து வருவது. ஆனாலும் அவனை இங்கிருந்த தமிழ்நாட்டவர்கள் முற்றாகவே, வெளிப்படையாகவே ஒதுக்கினார்கள். வேலையில் என்னை மீறி அந்தப் பையனை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள், ஆனால் நாங்கள் வேறு என்று நாங்கள் நினைக்கக்கூடும். இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்களும் இவ்வாறானவர்களே. இது தான் என்னுடைய பயம். என்னுடைய வேறு பல சொந்த அனுபவங்களும் உள்ளன. சிலவற்றை நான் எழுதினாலும், அப்படி நடந்திருக்கும் என்று பலர் நம்பப் போவதில்லை. ஆனாலும் இந்த விடயம் அடங்கிய பின், கதைகளாக எழுதுவதாக உள்ளேன். இவ்வகையான சமூக புறக்கணிப்புகள் இருக்காது என்றால், அந்த மக்கள் இந்தக் குடியேற்றத்தை விரும்புகின்றார்கள் என்றால், இதை வரவேற்கும் முதல் ஆட்களில் ஒருவனாக, உங்களைப் போலவே நானும் இருப்பேன். இது நான் இங்கு இணைந்தவுடன் எழுதிய ஆக்கங்களில் ஒன்று. சொந்த அனுபவமே.
  29. வடகிழக்கில் நடந்தது ஒரு ஆயுதப் போராட்டம்... பல வருடங்கள் இது தொடர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் ஒரு முடிவுக்கு வரும்.. வந்தது!! ஆனால் மலையகத்தில் நடப்பது வாழ்நாள் போர் 200 ஆண்டு காலம் ஆகியும் முடிவு இல்லாத வாழ்க்கை போர். ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் போர். 200 ஆண்டு காலம் என்பது எத்தனை தலைமுறைகள்? அங்கேயே அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து அங்கேயே உழைத்த மக்களுக்கு உரிமை கிடைக்காது என்பது எப்படிப்பட்ட கொடுமை. மாட்டுக்கு கொம்பு முளைக்கும் முன்பே நம்மை முட்டாமல் இருக்க, அது பிறந்ததும் சூட்டுக்கோளால் கொம்பு முளைக்கும் இடத்தில் தீச்சு விடுவதும் அடுத்தது பருவத்துக்கு வரும் முன்னால் காய் அடித்து ஆண்மை நீக்கி வேலையில் கட்டி வசக்கிவிட்டால் வாழ்நாள் பூராவும் அதே வேலை வாங்கலாம். உரிமையை அபகரிப்பதும் காய அடிப்பதும் ஒன்றுதான். அந்த மக்கள் தொகையை அதிகமாகாமல் தமிழினம் பெருகாமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றுதான். பிரித்தானிய காலனித்துவவாதிகளால் பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் அடைந்த வாழ்வியல் துயங்கள் அதற்கான காரணிகளான தேசிய புறக்கணிப்பு, அரசியல் புறக்கணிப்பு, குடியுரிமை பறிப்பு, நாடற்ற நிலை, நாடு கடத்தல், பதிவு குடியுரிமை, வசிப்பிட குடியுரிமை, திட்டமிட்ட கருத்தடை, கூடிசன குறைப்பு, நிலமற்ற நிலை, வீடற்ற நிலை, பொருளாதார ஒடுக்குமுறை, கல்வியொடுக்குமுறை, உள்ளூர் ஆட்சிக்குள் உள்வாங்காத ஒதுக்கு முறை, இம்மக்களின் வாழ்விடங்களை வணிக நிலம் ஆக்கி கம்பெனிக்காரர்களுக்கு நூறு ஆண்டு கால குத்தகைக்கு கொடுத்து விட்டமை, இம்மக்கள் வாழ்ந்த பல பெருந்தோட்டங்களை சுவைகரித்து சிங்கள மக்களுக்கு சிறு தோட்ட உடைமையாளர்களாக கொடுத்து விட்டமை, இதனால் வாழ்விடங்கள் இழந்து வசிப்பிட தொழிலாளர்களாக காலனித்துவவாதிகள் கட்டிப்போட்ட அதே 200 ஆண்டுகால வரிசை லயங்களில் வாழும் நிலை என பல்வேறு நெருக்கடிகளை இன்றும் அந்த மக்கள் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் இவர்கள் வாழும் நிலங்களை கிராமங்களாக கூட அங்கீகரிக்காமல், இம்மக்களை கிராம மக்களாக கூட ஏற்றுக் கொள்ளாமல், நாட்டு மக்கள் என்று தேசிய அந்தஸ்தை வழங்காமல் தோட்ட மக்கள் "வத்து கம்கரு" என்றே புறக்கணித்து வைத்திருக்கின்றமை என இத்தனை அரசியல் தேச வஞ்சனைகளுக்கும் முகம் கொடுத்து உரிமைக்குப் போராடாமல் மௌனித்து 200 ஆண்டுகளை வீணடித்துவிட்டு வந்தேறி குடிகளாக வருடங்களை எண்ணிக்கொண்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? ~ ஒப்பாரி கோச்சி புத்தகத்தை வாசித்து... என்னை பாதித்த வரிகளுடன் ...
  30. @goshan_che யின் குளிர்கால தூக்கம் (Winterschlaf) இடையில் சுமந்திரனால் குழம்பி விட்டதா. 😂 🤣
  31. ஊடகத்துறையில் முத்திரை பதித்த... ஆற்றல் மிகு இலக்கியவாதி, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி. -வீரகேசரி- கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி வாரவெளியீட்டில் 19.10.2025இல் பதிவாகி வெளிவந்திருப்பது….. அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும்…. 20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி வன்னி மண்ணில் 12.02.2009 அன்று எறிகணை வீச்சுக்கு இலக்காகி கொடிய போரின் சாட்சியாக மக்கள் மனங்களிலில் வாழும் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள் பற்றிய பார்வை..……. பேரன்பும்,நன்றியும் திரு.ச.சிறிகஜன் அவர்கள், பிரதம ஆசிரியர், வீரகேசரி, மற்றும் இணை ஆசிரியர்கள், நிர்வாகக் குழுமத்தினர்க்கு. நன்றி மூத்த படைப்பாளி திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களுக்கு. யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்… வாரம் ஒரு படைப்பாளி… ************************* (பார்வை - 65) ஈழத்துப் பத்திரிகைத்துறை என்பது அன்றுதொட்டு இன்றுவரை மிகச் சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அதிலும் ஓர் ஊடகருடைய நேர்த்திய பணி என்பது உள்ளதை உள்ளபடி எழுதுதல், பக்கச்சார்பற்ற நிலையைக் கொண்டிருத்தல், நேரிடைக் களத்தில் நின்று எழுதுதல் இவ்வாறாக இன்னும் பல நெறிமுறைகளை ஊடகதர்மம் கொண்டிருக்கிறது. அவ்வாறான வலியும் சவாலும் நிறைந்த உணர்வுமிகு பயணம் ஒன்றில்தான் ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் அரசியல் களநிலவரம், விமர்சனம், வெளிச்சம் சஞ்சிகையின் கவிதை, சிறுகதைகள் போன்ற படைப்புகளை பு.சிந்துஜன், பு.சத்தியமூர்த்தி, விவேகானந்தன், கதிர்காமத்தம்பி, ஹம்சத்வனி எனும் புனைபெயர்களில் ஆக்கங்களை படைத்து வந்தவரும் ரி.ரி.என் தொலைக்காட்சியின் நாள்நோக்கு, அரசியல்களம் மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்கியவர் மறைந்தும் மறையாது ஊடகத்துறையில் முத்திரை பதித்து வாழும் ஒரு நேர்த்திய வெளிப்படைத் தன்மைகொண்ட துணிச்சலான ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும் ஊடக நண்பர்கள், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவரும் 20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி இறைபதமடைந்த நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களது பார்வையோடு இவ்வாரம் இணைவோம். தாயகத்தின் சிரமென விளங்கும் யாழ்ப்பாணத்தில் கல்வியாளர்களும், கலைப் பேராளர்களும் நிறைந்திருக்கும் இணுவில் கிராமத்தில் திரு.திருமதி.புண்ணியமூர்த்தி பற்குணமலர் மண இணையருக்கு 30.10.1972ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த சத்தியமூர்த்தி அவர்கள் மன்னம்பிட்டி எனும் தமிழ் கிராமத்தில் எட்டு வயது வரை வளர்ந்தார். கிராம உத்தியோகஸ்தரான இவரது தந்தை, தாய், சகோதரி, மற்றும் இரண்டு சகோதர்ர்கள் என அழகான குடும்ப ஓட்டத்தில் சத்தியமூர்த்தி தன் கல்வியை மன்னம்பிட்டி மகா வித்தியாலயத்தில் கற்கும் காலத்தில் முதலாம் ஆண்டில் மிகுந்த ஈடுபட்டுடன் காட்டிய அதிதீவிர கல்வி அறிவால் பள்ளிச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தார். எட்டாவது வயதில் யாழ் மண்டைதீவில் தனது அம்மம்மாவுடன் வாழ்ந்த காலத்தில் தொடர்நிலைக் கல்வியை யா/மண்டைதீவு மகா வித்தியாலத்தில் கற்ற இவர் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்று யா/இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை தனது கல்வியைத் கற்று யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவக் கல்வியை தொடர்ந்தார். தனது பட்டப் படிப்பில் அரசியலை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட இவர் தனது பள்ளிக்காலம் முதல் கவிதை, சிறுகதை, பேச்சு, கட்டுரை என தன் சிந்தனைகளில் எதிர்படும் காட்சிகளை எழுதத் தொடங்கினார். இவ்வாறாக சத்தியமூர்த்தியின் பயணம் கல்வியோடும் இலக்கியப் படைப்புகளோடும் சிறந்துகொண்டிருக்கையில் 1995ஆம் ஆண்டு இவரது சகோதரன் தாய் மண்ணில் சிந்துஐன் எனும் வீர நாமத்துடன் மண்ணுள் விதையானான். உடன் பிறந்தவனின் தாய்மண்மீதான ஆளமான நேசத்தை இவரால் புரிந்துகொள்ள முடிந்தாலும் உடன்பிறப்பு என்ற வகையில் சற்றுத் துவண்டுபோன சத்தியமூர்த்தி அவர்கள் “ இன்று நீ சென்றுவிட்டாய் நாளை நான் உன்னை தொடர்ந்து வருவேன் நீ நிம்மதியாய் உறங்கு” என்று தன் சகோதரனின் நினைவாக அன்று குறிப்பொன்றைப் பதிந்துள்ளார். இளமைக் காலத்தில் சத்தியமூர்த்தி அவர்கள் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களால் யாழ்ப்பாணம் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்டு “ஆதாரம்” எனும் சஞ்சிகையை அவருடன் இணைந்து வெளியிட்டுக்கொண்டிருந்தார். அதில் இவரது எழுத்துகள் ஊடாக தொடர்ந்து கருத்துகள் பதிவேற்றப்பட்டதோடு பல பத்திரிகைகளில் பல்வேறு புனை பெயர்களில் தன் படைப்பான்றலை வெளிப்படுத்தி நின்றார். 1995ஆம் ஆண்டு யாழ் இடம்பெயர்வினால் பல்கலைக்கழக கல்வியை தொடரமுடியாத சத்தியமூர்த்தி வன்னிமண்ணில் கால் பதித்து தாயக சட்டக்கல்லூரியில் சட்டக்கற்கையை முடித்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். பின்னர் சட்டக்கல்லூரியின் அதிபர் பொறுப்பினை ஏற்று பணிபுரிந்தார். தன் ஆளுமைத் திறனாலும் தூரநோக்குச் சிந்தனையாலும் தன் பணிகளை செவ்வனே ஆற்றிய சத்தியமூர்த்தி வன்னிப் பெருநிலப் பரப்பில் போர்மேகங்கள் சூழ்ந்தவேளை எல்லைகாப்புப் பணியில் சுழற்சிமுறையில் பகுதிநேரமாக தன்னை இணைத்துக் கொண்டார். தவணைமுறை தவறாது மாதத்திற்கு ஒருவாரம் தாய்மண்ணுக்கான தன் பணியை விருப்போடு ஆற்றினார். இயற்கையின் மீதும் தாய்மண்மீதும் குடும்பத்தின் மீதும் ஆழமான பற்றுறுதிகொண்ட இவர் பிறரது கண்ணீரை எந்தவகையிலாவது யாருடைய உதவியை நாடியும் துடைத்தே ஆகவேண்டுமென்று உறுதியாய் நிற்பார். முகாமைத்துவ உதவிப் பரீட்சையில் சித்திபெற்று முல்லைத்தீவு கல்வித் திணைக்களத்தில் முகாமையாளராகப் பணியாற்றிய இவர் தனது பணிக்காலங்களில் பல்வேறு பணிகளை ஆற்றி கல்விச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றார். முல்லைத்தீவுக் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட முறைசாரா கல்விப் பிரிவினரால் “இதழியல்” கற்கை நெறியை ஏழு கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்தி பல ஊடகவியலாளர்களை உருவாக்கி வெளிக்கொணர்ந்தார். பின்னர் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய சத்தியமூர்த்தி பல ஊடகர்கள், எழுத்தாளர்களின் மனங்களில் தன் நற்பண்புகளாலும், நேர்த்தியான கடமை உணர்வுகளாலும் பலராலும் நேசிக்கப்படும் ஓர் ஊடகரானார். ஈழநாடு பத்திரிகையின் இயங்குநிலை தடைப்பட தொடர்ந்தும் ஈழநாதம் பத்திரிகையில் இணைந்து செய்தி, கட்டுரை, களநிலவரங்கள் என்பவற்றை எழுதினார். புலிகளின் குரல் வானொலியிலும், கனேடியத் தமிழ் வானொலியிலும், ஐ.பி.சி வானொலியிலும் பலரது நேர்காணல்களை, களமுனை நிலைமைகளை, பொறுப்புநிலை சார்ந்தோரின் நேர்காணல்கள் ஊடாக வெளிக்கொணர்ந்த இவர் நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவையூடாக அரசியல்களம் நிகழ்ச்சியையும் வழங்கி வந்தார். போர் ஓய்ந்து சமாதானம் நிலவிய காலத்தில் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு கல்குடா வலையக்கல்வி பணிபனைக்கு சென்றார். சமாதானம் முடிவுற்று மீண்டும் தாயகப் பகுதியில் போர்மேகங்கள் சூழ கிளிநொச்சி சுகாதார திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துசேர்ந்த சத்தியமூர்த்தி அவர்கள் 2004ஆம் ஆண்டு் மார்கழி மாதத்தில் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் உடமைகளை இழந்த மக்களின் தேவைகளை இரவுபகல் பாராமல் பொது அமைப்புகள், களச்சேவையாளர்களுடன் இணைந்து தன் பணியையும் ஆற்றிநின்றார். ரி.ரி.என் தொலைக்காட்சி ஊடாக நாள்நோக்கு, அரசியல்களம் ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கியதன் மூலம் பும்பெயர் வாழ் மக்களிடையே நாட்டு நிலைமைகளை அறியும் வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனூடாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்கள் மனங்களிலும் நீங்காது நிலைத்தார். நிதர்சனம் தொலைக்காட்சி் (த.தே.தொ) சேவையில் கு.வீரா தொகுத்து வழங்கிய “நிலவரம்” நிகழ்ச்சியில் பலமுறை அழைக்கப்பட்டார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத் தொலைக்காட்சி மூலம் அறியப்பட்ட இவர் 16.06.2005 அன்று ஊடகப் பணியில் இருந்த நந்தினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து கிளிநொச்சியில் வாழ்ந்து வந்தார். 2006ஆம் ஆண்டுபெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர் தனது மகள் பிறந்து இரண்டாவது நாளில் 550 பக்கங்களைக் கொண்ட பஞ்சதந்திரக் கதைகள் என்ற புத்தகத்தை வாங்கி வந்து “ மகளே இதிலுள்ளது கதைகள் மட்டுமல்ல வாழ்க்கையின் தத்துவங்களும்தான் அடங்கி இருக்கிறது இதைப் பின்பற்றி வாழவேண்டும்” என எழுதி தன்னுடைய கையொப்பத்தையும் மனைவியின் கையொப்பத்தையும் இட்டு மகளிடம் கையளித்தார். ஒரு பண்பான, தாய்மண்ணையும் தாய் மொழியையும் நேசிக்கின்ற நெறிமுறை தவறாத ஒரு தந்தையாக ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி வாழ்ந்தார் என்பதை இன்னும் பல சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றது. கிளிநொச்சி நகர் போர்ச்சூழல்களால் மெல்ல மெல்ல இயல்பு நிலையை இழக்கத் தொடங்கியது சத்தியமூர்த்தி குடும்பம் மூங்கிலாறிற்கு இடம்பெயர்ந்தது. உயிரிழப்பு, நில ஆக்கிரமிப்புச் செய்திகள் காட்டாற்று வெள்ளமாய் மெல்ல மெல்ல ஊர்மனைகள்தோறும் பரவுகிறது. உண்மைச் செய்திகள் வெளியே செல்வதில் ஊடகத் தணிக்கை முட்டுக்கட்டை போட்டு நிற்கிறது. தொடர் இழப்புகள் இடப்பெயர்வுகள். வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் இலக்குவைத்து துவம்சம் செய்யப்படுகிறது. சத்தியமூர்த்தியின் கால்களும் எழுதுகோலும் அவலங்களை உண்மை நிலைகளை பதிப்பாக்கத் துடிக்கின்றது. விசுவமடுப் பகுதியில் பரவலாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தவண்ணம் இருக்கிறது. சத்தியமூர்த்தி அவர்கள் செல்மழைக்குள் நின்றுகொண்டு வானலையூடாக உலகம்வாழ் மக்களுக்கு “சுற்றிவரக் குண்டுமழை பொழிகிறது. மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் இன்று உங்களோடு கதைக்கும் நான்கூட இந்தக் குண்டுக்குப் பலியாகலாம்” என அந்த அவலச் சூழலை எடுத்தியம்பிக்கொண்டிருந்தார். இவரது குடும்பம் மு/தேவிபுரம் வந்தடைந்தது. அங்கும் இருக்கமுடியாத சூழல் வர மக்கள் பெருமளவில் இடம்பெயர சத்தியமூர்த்தி குடும்பமும் புது/இரணைப்பாலையை வந்தடைந்தது. அங்கும் இருக்கமுடியாத சூழல் வர புதுக்குடியிருப்பு கோம்பாவிலுள்ள திம்பிலி வெட்டையில் பல இலட்சம் மக்கள் ஆங்காங்கே சிதறிக் குடிலமைக்க இவரது குடும்பமும் குடிலமைத்தது. ஊடகர்கள் தாம் கண்ணும் கருத்துமாகய் நேசித்த ஊடகப் பணியில் சிறிதளவேனும் பின்வாங்கலையோ,தாமதத்தையோ உண்டுபண்ணாது தம்சேவை நேரங்கள் தாண்டியும் இரவு பகலாக ஓடியோடி மக்களின் துயர துன்பங்களை கட்டவிழ்த்துவிடப்படும் போர்ப் பூதத்தையும் ஒவ்வொரு மணித்துளியும் கடந்தவர்களாய் கடமையாற்றிய பல்வேறு ஊடகவியலாளர்களுள் சத்தியமூர்த்தியும் ஒருவராகிறார். அந்தச் சூழலில் இணையத்தள வசதிகள், தொலைபேசி வசதிகள் இருந்ததே இல்லை. செய்தி ஊடகங்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு இடமாக தற்காலிக கொட்டகைகள் அமைத்து இடம்மாறிக்கொண்டிருந்தது. இவ்வாறாக ஓடியோடி இழப்புகளை, அழிவுகளை தாள்களிலே எழுதி எழுதி ஊடகங்களில் சமர்ப்பித்து இயன்றவரை வெளி உலகிற்கு தெரியப்படுத்திக்கொண்டிந்த ஊடகர், ஆய்வாளர், நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்கள் 12.02.2009 அன்று எறிகணை வீச்சில் காயமடைந்து கொடிய போரின் சாட்சிகளுள் ஒருவராய் ஏதுமே அறியா இரண்டரைவயது நிரம்பிய தனது மகளின் இறுதி முத்தத்தோடு இவ்வுலக வாழ்வு துறந்தார். இறுதியான அந்தப் புகைப்படம் ஐக்கியநாடுகள் சபை மனித உரிமை கூட்டத் தொடரின்போது பேச மொழியற்ற உணர்வுப் படமாய் நீதி கேட்டு நிற்கிறது. ஊடக தர்மத்தையே தங்கள் உயிரிலும் மேலாக நேசித்த ஊடகவியலாளர்கள் பலரை ஈழமண் சந்தித்திருக்கிறது. ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவாக யா/இந்துக்கல்லூரி 1991ஆம் ஆண்டு சக மாணவர்கள் இணைந்து “பு.சத்தியமூர்த்தி நினைவுகளுடன் பேசுதல்” எனும் நூலினை. 12.02.2019இல் திருமதி.நத்தினி சத்தியமூர்த்தி, செல்வி. சிந்து சத்தியமூர்த்தி ஆகியோரின் பதிப்புரிமையோடு ராதையன், வேலணையூர் சுரேஸ், பு.கமலநந்தினி, கை.சரவணன், ஜெ.கோகுலவாசன் ஆகியோரின் மலர்த் தொகுப்புடன் யாழ்ப்பாணம் எவகிறீன் அச்சுப் பதிப்புடன் இந்நினைவு மலர் வெளிவந்துள்ளது. இந்நூலினை…… “பு.சத்தியமூர்த்திக்கும் உலகெங்கும் அடக்குமுறைக்கு எதிராகவும் மானுட உரிமைகளுக்காகவும் எழுதுகோல் ஏந்திப் போராடிய சக ஊடகப் போராளிகள் அனைவருக்கும்… “ படையல் செய்யப்பட்டிருக்கிறது. ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களுடனான நெஞ்சகலா நினைவுகளை யா/இந்துக் கல்லூரி 1991ஆம் ஆண்டு பிரிவு மாணவர்கள், யாழ்ப்பாணம் எழுகலை இலக்கியப் பேரவை, முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ஓவியர் புகழேந்தி, பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், வலம்புரி நாளிதழ் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம், மூத்த ஊடகவியலாளர் ராதேயன், மூத்த ஊடகவியலாளர் காக்கா அண்ணை, யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், கலாநிதி சி.ரகுராம், நண்பன் சி.செவ்வேள், கவிஞர் வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, வைத்திய கலாநிதி செல்வலிங்கம் தெய்வகுமார், பன்னாட்டு விவகார அரசறிவியலாளர் கலாநிதி ரஞ்சித் ஶ்ரீறீஸ்கந்தராஜா, உடுவில் அரவிந்தன், திருமதி. சத்தியமூர்த்தி நந்தினி, சிந்து சத்தியமூர்த்தி, நீலன் கீலன், ஆதிலட்சுமி சிவகுமார், ஊடகவியலாளர் இளங்கீரன், கவிஞர் முல்லைக் கமல், நரேஸ், ரேணுகா உதயகுமார், த.தே.தொலைக்காட்சி சிவா (புவியரசன்), ந.லோகதயாளன், சிதம்பர பாரதி, ந.மயூரரூபன், செ.சதீஸ்குமார் (விவேகானந்தனூர் சதீஸ்), கண்ணதாசன் மோகனகுமாரி, இரா.ராஜன், ஈழமுரசு பொறுப்பாசிரியர் கி.ஜெயசுந்தர், ஊடகவியலாளர் இதயச்சந்திரன், திருமதி.ப்ரியம்வதா பயஸ் (காயத்திரி பயஸ் ராஜா), கார்த்தி ஜனனி, தர்மலிங்கம் சிவா, கை.சரவணன், நா.எழில், ஆனந்தி சகோதரி, ஊடகவியலாளர் உமா, யாழ் இந்துவின் மைந்தன் ஊடக மையம் பிரான்ஸ் பொறுப்பாளர் க.ஆதித்தன், ஊடகவியலாளர் பரா பிரபா, சிவப்பிரகாசம் றாஜ், நேரு குணரட்ணம், கனேடிய தமிழ் வானொலி செந்தமிழினி பிரபாகரன், சத்தி பரமலிங்கம், அ.யோ.கொலின் (அன்பழகன்), முன்னாள் ஈழநாதன் (வெள்ளிநாதம்) வார இதழ் ஆசிரியர் ஶ்ரீ.இந்திரகுமார், தமிழன்பன் அருள்திலா, காவலூர் இ.விஜேந்திரன், பிறேமினி அற்புதராசா, ஊடகவியலாளர் எஸ்.வி.ஆர்.கஜன், வட்டு சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் ஜெ.கோகுலவாசன், ந.நவராஜன், பு.சிந்துஜன், சுதர்சன், வலி வடக்கு பிரதேச்சபை உறுப்பினர் ச.சஜீவன், சி.நிசாகரன் ஆகியோரின் நினைவுக் குறிப்புகளோடு இந்நூல் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு சுமந்து நிற்கிறது. உயிரிழப்புகளையும், உடலக்குவியல்களையும், வாழ்வியலில் மனித இனம் அனுபவிக்கமுடியாத வலிகளையும், சொல்லிலடங்கா வேதனைகளையும், அர்ப்பணிப்புமிகுந்த தியாக உணர்வு கலந்த வாழ்வியலையும் எழுதிய, வாசித்த, நிகழ்ச்சிகளாய்த் தொகுத்த மிக அற்புதமான ஊடகவியலாளர்களை, ஆய்வாளர்களை ஈழமண் தாங்கி நின்றிருக்கின்றது, நிற்கிறது என்ற ஊடக தர்மம்மிகு ஊடக நாயகர்களை நெஞ்சார நினைந்துருகுவதோடு நலிவுற்றுப் போகும் ஊடக தர்மம் தம்முயிர் கொடுத்தும் ஊடகதர்மம் காத்த உன்னத ஊடகர்களை நெஞ்சிருத்தி நெறிமுறை காத்து ஊடகப்பணியாற்ற வேண்டுமென்று உரிமையுடன் வேண்டுகிறோம். து.திலக்(கிரி), 19.10.2025.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.