Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88127
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    19253
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    8917
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    38889
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/30/25 in all areas

  1. https://www.karainagar.org/about-us முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம். இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம். ஊர்கள் காரை நகர் சுழிபுரம் வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில், ஏராளன் தனது அமைப்பின் மூலம் இதையே சுழிபுரத்தில் செய்வாராயின் - நீங்கள் பணத்தை திரட்டி இந்த நம்பகமான அமைபுக்களிடம் கட்டம் கட்டமாக கையளித்து வேலையை முடிக்கலாம். தயவு செய்து வாத்தியார் அண்ணா, ஏராளனுக்கு @ போட்டு விடவும். அவர்கள் செய்ய வேண்டியது முதற்கட்டமாக தலா 5 குடும்பங்களை இனம் கண்டு, மலசல கூடம் கட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்க இந்த அமைப்புகள் சம்ம்யிக்கிறனவா என்பதை கேட்டு சொல்வதே. வேறு யாரும் யாழ்கள உறவுகள் தமது ஊர் பாடசாலை சங்கம் மூலமும் இதை செய்ய முன்வந்தால் அதையும் செய்யலாம். உதாரணம் விசுகு அண்ணா, புலவர், நந்தன் போன்றோர் இப்படியான சங்காங்கலில் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனது உலக மகா சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி இதில் நான் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள சித்தமாய் உள்ளேன். பிகு சங்கங்கள் சம்பதிக்கும் போது, அதன் பொறுப்பானவர்களோடு இமெயில், போன் தொடர்புகளை பேணவும் நான் தயார். நேரடி சந்திப்புகள், பணம் (money handling) இவை மட்டும் என்னால் முடியாது.
  2. அநுரகுமார திசாநாயக்க மீதுள்ளள கரைபுரண்டோடும் காதலால் வெளிபடுகின்ற உளறல்களின் பாதிப்பையே இங்கே காண கூடியதாக உள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையாவது தமிழ்தேசியமாவது காதலுக்கு முன்னால் கரைந்து உருகிவிட்டது 🤣
  3. இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்! இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்விக்கு, குறிப்பாக உள்ளடக்கத்தை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது. பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியுள்ளார். இங்கிலாந்தின் முதல் பன்மை நகரமான லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராக அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கவனிக்கப்படாதவர்களுக்கும், பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளவர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும், தடைகளைத் தாண்டி ஏனையவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுள்ளார். இலங்கையில் பிறந்து படித்த பேராசிரியர் கனகராஜா, இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்றார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். அவரது கல்வி வாழ்க்கை மூன்று தசாப்தங்களாக நீடிக்கிறது, 2019 இல் லெய்செஸ்டரில் துணைவேந்தராக வருவதற்கு முன்பு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மூத்த பதவிகளையும் வகித்துள்ளார். https://athavannews.com/2025/1457746
  4. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் இந்தியாவிலும் சிறிலங்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 07 பெப் 2026 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 08 மார்ச் 2026 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: A1 இந்தியா IND A2 பாகிஸ்தான் PAK A3 ஐக்கிய அமெரிக்கா USA A4 நெதர்லாந்து NED A5 நமீபியா NAM குழு B: B1 அவுஸ்திரேலியா AUS B2 சிறிலங்கா SL B3 அயர்லாந்து IRE B4 ஸிம்பாப்வே ZIM B5 ஓமான் OMA குழு C : C1 இங்கிலாந்து ENG C2 மேற்கிந்தியத் தீவுகள் WI C3 பங்களாதேஷ் BAN C4 நேபாளம் NEP C5 இத்தாலி ITA குழு D : D1 நியூஸிலாந்து NZ D2 தென்னாபிரிக்கா SA D3 ஆப்கானிஸ்தான் AFG D4 கனடா CAN D5 ஐக்கிய அமீரகம் UAE முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 07 பெப் முதல் 20 பெப் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று: சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அவை கீழே உள்ளவாறு பிரிக்கப்படும். குழு 1: X1 இந்தியா X2 அவுஸ்திரேலியா X3 மேற்கிந்தியத் தீவுகள் X4 தென்னாபிரிக்கா குழு 2: Y1 இங்கிலாந்து Y2 நியூஸிலாந்து Y3 பாகிஸ்தான் Y4 சிறிலங்கா சுப்பர் 8 சுற்றில் மேலுள்ள அணிகளில் சில தெரிவாகாத பட்சத்தில் அவற்றின் இடத்தை (X1..X4, Y1...Y4) முதல் இரு இடத்திற்கு வரும் பிற அணிகளில் ஒன்று எடுத்துக்கொள்ளும். உதாரணமாக குழு C இல் சுப்பர் 8 க்கு பங்களாதேஷ் தெரிவாகியும் மேற்கிந்தியத் தீவுகள் தெரிவாகாமலும் இருந்தால் X3 இடத்தை பங்களாதேஷ் எடுத்துக்கொள்ளும். சுப்பர் 8 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 21 பெப் முதல் 01 மார்ச் வரை நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் முதலாவது அரையிறுதிப் போட்டி 04 மார்ச் அன்று ஏடென் கார்டன்ஸில் அல்லது கொழும்பு (RPS) இலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 05 மார்ச் அன்று வாங்கெடேயிலும் நடைபெறவுள்ளன. * பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானால் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையேல் கொல்கத்தா ஏடென் கார்டன்ஸில் நடைபெறும். இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 08 மார்ச் அன்று அஹமதாபாத்தில் அல்லது கொழும்பு (RPS) இல் மோதவுள்ளன. * பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் இறுதிப் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையேல் அஹமதாபாத்தில் நடைபெறும். கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  5. யாரையும் நம்பி அல்லது அவர்கள் செய்வார்கள் என்று இந்தத் திட்டத்திற்க்குள் நான் என்னை இனைத்துத்துக் கொள்ள விரும்பவில்லை சங்கங்களின் நிலைமையை அறிந்தவன் என்பதாலும் அவற்றை விமர்சிக்க விரும்பாததாலும் அதற்கு அப்பால் சென்று இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் . இப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேளை எனது காத்திரமான நிதிப் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும். கோஷான் 👍🙏
  6. துரை இது என்ன அர்ச்சனா இராமநாதன் போல் பேசுகின்றீர்கள். அவர்தான் ஓ எல் படிச்சனியா யூனிவசிட்டி போனியா என்று கேட்பார். யூரியூப் காணொளி பார்த்தேன். அதில் கிங்க் சார்ல்ஸ் பிரம்பால் தோளின் இரண்டு பக்கமும் தட்டி பார்த்துவிட்டு கழுத்தில் மாலை போட்டுவிடுகின்றார். கழுத்தில் மாட்டப்படும் மாலையின் பாரத்தை ஆள் தாங்குவாரோ என உறுதிப்படுத்த தோளில் தட்டி பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
  7. "சேர்" பட்டம் என்று தமிழில் சொல்வோமல்லவா? அது தான் பொதுவாக வழங்கப் படும் "நைற்" (Knight) பட்டம். பல வகையான நைற் பட்டங்கள் இருக்கின்றன. மேல் கல்வியாளருக்கு வழங்கப் பட்டது "சேர்" Sir என்று அவர் தன் பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளக் கூடிய King's Bachelor என்ற நைற் பட்டம் என ஊகிக்கிறேன். பேராசிரியர் சேர் கனகராஜாவுக்கு வாழ்த்துக்கள். "King's Speech" என்ற திரைப் படத்தில் இந்த பிரிட்டிஷ் நைற் பட்டங்களைக் பற்றிய ஒரு உரையாடல் வருகிறது. பார்த்து ரசியுங்கள். காட்சியின் பின்னணி: ஆறாம் ஜோர்ஜ் மன்னருக்கு திக்குவாய்ப் பிரச்சினை (stuttering) இருந்ததால், ஒரு பேச்சுப் பயிற்சியாளரின் உதவியை நாடுகிறார். அவர்களது முதல் அறிமுகத்தின் போது நடக்கும் உரையாடலின் பகுதி இது: https://www.youtube.com/watch?v=arhkcfV6C28
  8. இவர் மாற்றி மாற்றி பேசுவார், தான் சொன்னதை சொல்லேலை என்பார், சொல்லாததை சொன்னது என்பார். அன்று தகாத சொற்பிரயோகங்களை பாவித்து பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் இவர், என்னோடு யாராவது தகராறு செய்தால் மண்டையில் ஓட்டை போட்டுவிடுவேன் என்று இவரே பகிரங்கமாக சொன்னார், அண்மையில் கூட தேரர் ஒருவர் அனுராவைப்பற்றி ஏதோ தன்னிடம் கூறியதாக சொன்னார், பின் அந்த தேரரிடம் மன்னிப்பும் கேட்டார், தேரர் சொல்லாததை சொன்னதாக தான் கூறியதற்காக. இவருக்கு ஏதோ மனக்குழப்பம் என்று நினைக்கிறன், அல்லது எதிலும் நிலைத்து நிதானித்து கவனம்செலுத்தி செயற்படமுடியாத ஒரு நோயாக இருக்கலாம்.
  9. தேர்தலில் போட்டியிடுவார்கள், அமைச்சுப்பதவி வகிப்பார்கள், ஊடக சந்திப்பு நடத்துவார்கள், மருத்துவமனைப்பக்கமே போயிருக்க மாட்டார்கள். ஆனால் பாருங்கோ.... கைது, விசாரணை என்றவுடன் சொல்லி வைத்த மாதிரி இந்த அரசியல் வியாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவார்கள். அதெப்படி வியாதி உள்ளவர்களால் அரசியல் செய்ய முடிகிறது?
  10. ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ் தேவானந்தா வெளியில் நின்றால், பொதுமக்களின் உயிருக்குத்தான் ஆபத்து. ஆன படியால்... அவனை மறியலில் வைத்திருப்பதே, நாட்டிற்கு நன்மை.
  11. அதுக்கென்ன. கல்லா கட்டினாப் போச்சு. 😀
  12. என்ன இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களா. எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருக்கிறதே.
  13. நீங்கள் தான் பல மக்கள் நலன்புரி அமைப்புகள் வட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்குவதாக எழுதினீர்களே. அந்த அமைப்புகளுக்கு தாங்கள் கடிதம் எழுத முடியாதா? இல்லையேல் தந்தியாவது அடிக்க முடியாதா? கோபுரம்,சுற்றுமதில் கட்டும் புலம்பெயர்ந்தவனுக்கு தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு கக்கூஸ் கட்டிக்கொடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.....இல்லையேல் இருக்கும் அமைப்பின் விலாசத்தை தாருங்கள். 100 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.
  14. இந்தக் கலாச்சார வேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வின்மை வேற்று நாட்டவருக்கு மட்டுமல்லாமல், வேற்று மாநிலத்தவர், ஒரே மாநிலத்தின் வேற்று நகரத்தவர் போன்றவர்களுக்கும் ஆப்பாக முடிந்திருக்கிறது. சில ஆண்டுகள் முன்பு, ஒஹையோவில் ஒரு பெரும்பனிப் புயல் வந்து, வீதிகளில் இருந்து வாகனங்கள் சறுக்கி மீடியனில் மாட்டிக் கொண்ட நிலை. இப்படி மாட்டிக் கொண்ட ஒரு வாகனத்தை, உதவும் நோக்கில் இன்னொரு வழிப்போக்கர் அணுகி கண்ணாடியைத் தட்டிய போது உள்ளே இருந்த அரை லூசுப் பயல் துப்பாக்கியால் சுட்டதில் உதவ வந்தவர் இறந்தார். சுட்டவருக்கு பின்னர் நீண்ட சிறை கிடைத்தது, ஆனால் ஒரு நல்ல மனிதர் உலகில் இருந்து மறைந்தார். இங்கே வாகனங்களை ஒரு வீதியில் திருப்ப வேண்டிய தேவை (U-turn) வந்தால், முடிந்த வரையில் எந்த தனியார் வீடுகளின் வாசல் பகுதி (driveway) யினுள்ளும் நுழையாமல் திருப்ப வேண்டும் என ஆலோசனை இருக்கிறது. நியூ யோர்க் நகரில் இருந்து வடக்கில் இருக்கும் நியூயோர்க் மாநில கிராமம் ஒன்றுக்குச் சென்ற ஒரு இளையோர் குழு, ஒரு தனியார் வீட்டின் வாசலில் நுழைந்து வாகனத்தைத் திரும்ப முயன்ற போது உள்ளேயிருந்து வந்த ஒரு கிழவர் வாகனத்தை நோக்கிச் சுட்டதில் ஒரு இளம் பெண் பலியானார். இந்தக் கிழவருக்கும் நீண்ட சிறை கிடைத்தது. எந்த வீட்டில்/வாகனத்தில் எத்தகைய மனப் பிறழ்வுடைய மனிதர்கள் இருப்பார்கள் என்ற அறுதியில்லாத காரணத்தால் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே 911 அல்லது உள்ளூர் காவல் துறையை அழைப்பதும் ஏனையோருக்கு உதவும் ஒரு பாதுகாப்பான வழி.
  15. நடுவரின் (கிருபன்) தீர்ப்பே இறுதியானது என்பதால், நான் போட்டியில் தொடர்வதில் சந்தோசமே, யாழ்கள போட்டியில் கலந்து கொள்ளும்போதுதான் போட்டி சுவாரசியமாகிறது (போட்டியினை மைதானத்தில் இருந்து பார்ப்பது போல கள உறவுகளுடன் போட்டியினை பார்க்கும் ஒரு அனுபவம்).
  16. 3012 கக்கூஸ் கட்ட வக்கில்லை….. ஆனால் நாங்கள் எல்லாம் மெத்த படித்த, டி என் ஏ யில் புத்தி கூர்மை ஏறிய, உலகளாவிய வியாபார காந்தங்கள் நிறைந்த சமூகம் எண்ட கதைக்கு மட்டும் பஞ்சமில்லை 😂. எத்தனை வளைவுகள், கோபுரங்கள், சுற்று மதில்களை இந்த 16 வருடத்தில் கட்டி இருப்பீர்கள். அந்த பணத்தில் இதையும் செய்து கொஞ்ச மலையக மக்களையும் குடியமர்த்தி இருக்கலாம். பிகு மனமுண்டானால் மார்க்கபந்து.
  17. டக்கிலசாரின் வரலாற்றை விக்கி கலைக்களஞ்சியத்தில் வாசித்தேன். தலை சுற்றுதய்யா! தாயார் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியையாம். இவருக்கு ஆறு வயதிலேயே மறைந்துவிட்டார். டக்லசாரின் வாழ்க்கை திசைமாறி பயணிக்க இதுவே ஆரம்பம் போல் உள்ளது.
  18. முதல் சுற்றுப்போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI BAN 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group A - First IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group A - Second PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group B - First AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group B - Second SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI Select BAN Select BAN BAN NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group C - First ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group C - Second BAN 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group D - First NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group D - Second SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 Y2 Y3 NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 Y1 Y4 ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 X1 X4 IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 X2 X3 AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 Y1 Y3 PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 Y2 Y4 SL 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 X3 X4 SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 X1 X2 AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 Y1 Y2 ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 Y3 Y4 PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 X2 X4 AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 X1 X3 IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 Select X1 IND X2 Select X2 AUS X3 Select X3 Select X4 Select X4 Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 1 - First AUS சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 1 - Second IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 Select Y1 ENG Y2 Select Y2 Select Y3 Select Y3 PAK Y4 Select Y4 Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 2 - First PAK சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 2 - Second ENG 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), Super 8: Group 1 - First X2 Super 8: Group 2 - Second Y1 AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, Super 8: Group 2 - First Y3 Super 8: Group 1 - Second X1 IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Travis Head 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VARRUN 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) AHBISEK SARMA 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BUMRA 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) IND 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
  19. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN எதிர் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN எதிர் ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN எதிர் ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? USA ?? NED ?? NAM ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SL ?? IRE ?? ZIM ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? WI ?? BAN ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? SA ?? AFG ?? CAN ?? UAE ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. X1 IND USA NED NAM X2 AUS IRE ZIM OMA X3 WI BAN NEP ITA X4 SA AFG CAN UAE Y1 ENG BAN NEP ITA Y2 NZ AFG CAN UAE Y3 PAK USA NED NAM Y4 SL IRE ZIM OMA 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y3 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத் X1 எதிர் X4 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல Y1 எதிர் Y3 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y4 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத் X3 எதிர் X4 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y1 எதிர் Y2 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி, X2 எதிர் X4 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ் X1 எதிர் X3 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 ?? X2 ?? X3 ?? X4 ?? 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 ?? Y2 ?? Y3 ?? Y4 ?? 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?
  20. மொறட்டுவை பொலீஸ் நிலையம் போகும் வழியில் அன்று மாலை நடந்த விடயங்களையும், வாகனத்தில் இருந்த தமிழ் மாணவர்கள் இழுத்துவரப்பட்ட விடயங்களையும் ஓரளவிற்கு அறிந்துகொண்டேன். பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவர்கள், பேரூந்துகளில் பல்கலைக் கழகத்திற்கு வந்திறங்கிய மாணவர்கள் என்று பலர் இழுத்துவரப்பட்டிருந்தார்கள். வெகுசிலரைத் தவிர அநேகமானோர் ஒன்றில் சற‌த்துடன் மட்டும் அல்லது சறமும் மேலங்கியும் அணிந்து காணப்பட்டார்கள். சுமார் 15 நிமிட பயணத்திற்குப் பின்னர் பொலீஸ் வாகனங்கள் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டோம். பின்னர் பொலீஸ் நிலையத்தின் முற்பக்கத்தில் இருந்த சிறிய அறையொன்றினுள் எம்மை நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவு வேளையாதலால் சில மாணவர்கள் தரையில் அமர்ந்து உற‌ங்க ஆரம்பித்தார்கள். எம்மை அறையினுள் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற பொலீஸ் அதிகாரி மீண்டும் அங்கே வந்தான். எம்மில் சிலர் உறங்குவதைக் கண்டுவிட்டு கத்தத் தொடங்கினான். வாயிலின் அருகில் நான் அமர்ந்திருந்தமையினால் என்னை நோக்கியே அவனது ஆத்திரம் திரும்பியிருந்தது. கோபம் கொண்டு காலால் என்னை உதைந்த அவன் பேசத் தொடங்கினான். "நீங்கள் எல்லாம் புலிகள், பிரபாகரன் உங்களை இங்கே அனுப்பியிருப்பது பொறியியல் கற்றுக்கொண்டு அங்கு சென்று தனக்கு உதவுவதற்காகத் தான். நாம் இங்கே எமது உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கிறோம். எமது அரசாங்கம், நாம் கட்டும் வரிப்பணத்தில் உங்களைப் படிப்பிக்கிறது. எமது சிங்கள மக்களுக்குச் செல்லவேண்டிய பணம் பயங்கரவாதிகளான உங்களுக்கு கல்விகற்கப் பாவிக்கப்படுகிறது. உங்களை இனிமேல் விடமாட்டோம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது" என்று சிறிதுநேரம் கர்ஜனை செய்துவிட்டு, "பிரபாகரனின் ஆட்சியில் உனக்கு என்ன பதவி தருவதாகக் கூறியிருக்கிறான்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நிலைமையின் தீவிரம் உணராது, "தெரியவில்லை, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை" என்று நான் பதிலளிக்கவும் மிகுந்த கோபம் கொண்ட அவன் என்னைத் தாக்கினான். எனக்குச் சிங்களம் தெரியும் என்று நினைத்து அவ‌னுடன் பேசியதன் பலனை நான் அங்கு அனுபவித்தேன். அவன் மட்டுமல்ல, அன்றிரவு அப்பொலீஸ் நிலையத்தில் இருந்த இன்னும் சில பொலீஸ் அதிகாரிகளும் தமது பங்கிற்கு தவறாது வந்து எம்மீது வசைமாறி பொழிந்துவிட்டுச் சென்றார்கள். ஒருசிலர் தாக்கினார்கள். ஏனென்று கேட்பாரின்றி சுமார் 60 தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்டு போவோர் வருவோர் என்று வேறுபாடின்றி உடலாலும், மனதாலும் கடுமையான தாக்கத்திற்கு உள்ளானோம்.
  21. குறைந்தது 60 தமிழ் மாணவர்கள் வரையில் அந்த முஸ்லீம் மாணவனால் அடையாளம் காணப்பட்டோம். வெகு சில தமிழ் மாணவர்களே அந்த அடையாள அணிவகுப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். அடையாளம் காணப்பட்ட எம்மை கட்டுப்பாட்டு அறையினுள்ளிருந்து வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலீஸ் வாகனங்களுக்குள் ஏற்றுவதற்காக பொலீஸார் இழுத்து வந்தபொழுது அங்கு சுற்றியிருந்த சிங்கள மாணவர்களும் பொதுமக்களும் வெற்றிக்களிப்பில் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள். கட்டுப்பாட்டு அறையினுள் நடந்தது நாம் புலிகளா இல்லையா என்கிற விசாரணை என்றும், எம்மை பொலீஸார் வாகனங்களில் ஏற்றியதன் மூலம் நாம் புலிகள் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் எம் முன்னாலேயே பேசினார்கள். அறுபது புலிகளைக் கைதுசெய்துவிட்ட மகிழ்ச்சியும் , "இவ்வளவு நாளும் எமக்குத் தெரியாமல் இத்தனை புலிகளும் இங்கு கல்விபயின்று வந்திருக்கிறார்களே?" என்கிற எரிச்சலும் ஒன்றுசேர அவர்கள் ஆத்திரம் பொங்கக் கூச்சலிட்டார்கள். நாம் மெதுமெதுவாக பொலீஸ் வாகனங்களில் ஏறத் தொடங்கினோம். பல்கலைக்கழகத்தில் இருந்து மொறட்டுவைப் பொலீஸ் நிலையம் செல்லும் வழியில் எனக்கருகில் இருந்த சக தமிழ் மாணவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி, எங்கே வைத்து, யார் உங்களைப் பிடித்து வந்தார்கள் என்கிற கேள்விகளும், விடைகளும் எமக்கிடையே பரிமாறப்பட்டன. கூடவே முஸ்லீம் மாணவன் எப்படி இதற்குள் சிக்கினான், அவனுக்கு என்ன நடந்தது? அவன் எதற்காக அடையாளம் காட்டும்படி வற்புறுத்தப்பட்டான்? என்கிற எனது கேள்விகளுக்கும் அந்தச் சிறிய பயணத்தில் விடை கிடைத்தது.
  22. தமிழர்களுக்குத் தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்வதானால், சமஷ்ட்டி முறையிலான தீர்வையோ அல்லது இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தினை ஒத்த தீர்வையோ ரஜீவ் காந்தி தமிழர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இதனை நேரடியாகவே போராளிகள் தலைவர்களான பிரபாகரன், சிறீ, பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரிடம் 1985 ஆம் ஆண்டு ரஜீவ் தெரிவித்திருந்தார். மேலும், ஜெயாரினால் 1984 ஆம் ஆண்டு மார்கழியில் நடத்தி முடிக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபையினையே, சற்றுத் திருத்தங்களுடன் அதிகாரப் பரவலாக்க அலகாக ஏற்றுக்கொள்ள ரஜீவ் சம்மதித்தார். . தனது புகழ்ச்சிக்காகவும், இந்தியாவை பிராந்திய வல்லரசு எனும் தரத்திற்கு உயர்த்துவதற்காகவும் ரஜீவினால் நடத்தப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ, ஆனால் இந்தியா தலைமையில் பேச்சுக்கள் நடந்தன என்று சரித்திரம் எழுதப்படுவது ரஜீவிற்கு முக்கியமானதாக இருந்தது. தமிழருக்கு ஏதாவது கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவிற்குக் கரிசணை இருந்தது உண்மை. ஆனால், அது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யவேண்டுமா என்பதில் இந்தியாவிற்கு உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை. 1987 இல் இந்திய அமைதிப்படை வந்ததே ஜெயாரின் வேண்டுகோளினால் எனும்போது, அது தமிழர்களுக்குச் சார்பாக இயங்கும் என்று எதிர்பார்த்தது எமது மடமை. 2015 அல்லது 2016 ஆக இருக்கலாம், அவுஸ்த்திரேலியாவின் பேர்த்த் நகரில் இந்தியாவின் முன்னாள் புலநாய்வுத்துறையின் இயக்குநரும் இன்னும் சில முக்கியஸ்த்தர்களும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்தார்கள். இறுதி யுத்தத்தில் புலிகளை இந்தியா அழிக்க முடிவெடுத்ததன் நோக்கம் அனைவரும் எண்ணியிருந்த ரஜீவின் கொலையினைக் காட்டிலும், 1987 இல் இந்தியப்படையினை புலிகள் எதிர்க்க எடுத்த முடிவுதான் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. பிராந்திய வல்லரசும், உலகின் ஐந்தாவது பெரிய இராணுவத்தைக் கொண்டதுமான இந்தியாவை சிறிய ஆயுத அமைப்பான புலிகள் இயக்கம் எதிர்த்துப் போரிட முடிவெடுத்தமை இந்தியாவைப் பொறுத்தவரை பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. 1991 இல் ரஜீவ் கொல்லப்பட்டாலென்ன, உயிர் தப்பியிருந்தாலென்ன, இந்தியா புலிகளைப் பழிவாங்க 1987 இலேயே முடிவெடுத்து விட்டது என்று நினைக்கிறேன். 2005 இல் இந்திய காங்கிரஸின் தலைவியாக சோனியா வந்தமையும், இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு வந்தமையும் இரு நாடுகளுக்கும் சாதகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுக்க, இந்தியா தனது சபதத்தை நிறைவேற்றிக்கொண்டது.
  23. ராஜீவ் படுகொலை நிகழ்ந்து இருக்காவிடினும், ராஜீவ் கொலைப் படையினரை அனுப்பி இருக்காவிடினும் கூட, இந்தியா ஈழப் போராட்டத்தை நசுக்கித் தான் இருக்கும். ராஜீவ் கொலை ஒரு சாட்டாக, வாப்பாக போய்விட்டது.
  24. காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் ! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457707

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.