Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88402
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    32727
    Posts
  3. சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    494
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8944
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/16/26 in all areas

  1. பராசக்தி - சுப.சோமசுந்தரம் இது பராசக்தி படத்தின் விமர்சனப் பார்வை அல்ல. அப்படம் ஏற்படுத்திய பரபரப்பு பற்றியது. தற்போது வெளியாகியுள்ள புதிய 'பராசக்தி' திரைப்படம் பெரும் வரவேற்பையும், சிலரிடம் ஏதோ அரசியல் காரணங்களுக்காக வெறுப்பையும், சில தரமான திரை விமர்சகர்களிடமிருந்து அரசியல் கலக்காத விமர்சனப் பார்வைகளையும் பெற்று சமூக வலைத்தளங்களைப் பரபரப்பாக்கி விட்டது. பெயர் ராசியோ என்னவோ, பழைய பராசக்தியும் அக்காலத்தில் அரசியல் களத்தில் சூடேற்றியது. 1930 களிலேயே சூடு பிடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1950 களின் இறுதியிலும் 1960 களிலும் தீப்பிடித்துப் பரவியதை ஓரளவு தொட்டுக் காட்டிப் பெரும் வெற்றி கண்டுள்ளது தற்போது வெளிவந்துள்ள பராசக்தி. இந்தி எதிர்ப்பு அல்ல, இந்தித் திணிப்பு எதிர்ப்பாக்கும் எனும் பம்மாத்து எனக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன் - நாங்கள் பார்ப்பனர்க்கு எதிரி அல்ல, பார்ப்பனியத்திற்கே எதிரி என்பது போல. தணிக்கைத் துறையைச் சரிக்கட்டவும், ஏதோ நாகரிகம் கருதியும் 'தமிழ் வாழ்க' முழக்கத்தை மட்டுமே படம் முன்னெடுத்துள்ளதை என்னைப் போன்றோரால் புரிந்து கொள்ள முடிகிறது. பாசிசத்திற்கு மட்டும்தான் பம்மாத்து தேவையா என்ன ? அறிஞர் அண்ணா போன்று சமூகத்திற்கு நன்மையாற்ற நினைக்கும் கொள்கைச் சான்றோர்க்கும் பம்மாத்து தேவைப்படவே செய்தது. இறை மறுப்பாளரான அண்ணா 'ஒருவனே தேவன்' என்று ஏற்றுக் கொண்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலைத் தமிழ் மொழிவாழ்த்து ஆக்கிய கலைஞர் கருணாநிதி அப்பாடலில், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கழிந்து ஒழிந்து சிதைந்தது பற்றிய வரியினை நீக்கியதும் அவ்வாறுதானே ? இவை அரசியல் நாகரிகம் என்று சொல்லிக் கடந்து செல்லும் பக்குவம் பகுத்தறிவாளரிடம் உண்டு. ஆனாலும் 'இந்தி ஒழிக, தமிழ் வாழ்க !' என்று அன்றைய முழக்கம் சேர்ந்தேதான் ஒலித்தது, சரியாக ஒலித்தது என்பதை இங்கு பதிவு செய்யவே விழைகிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஏதுமறியாத இளம் தலைமுறையினர் இதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். நிற்க. சங்கிகளும், யாரோ வேறொரு கதாநாயகனைத் தெய்வமாய் வழிபடும் ரசிகக் கண்மணிகளும் பராசக்தி படத்தைப் பற்றி கன்னா பின்னாவென்று பதிவு செய்வதைப் புறந்தள்ளி விடலாம். அவர்களை ஆட்டத்துக்கே சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. உலக சினிமா இலக்கணமெல்லாம் பேசி அந்த அளவுகோலை இந்தப் படத்திற்கு வைத்துப் பேசும் தரமான சினிமா விமர்சகர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது, "உங்களின் நிலைப்பாட்டிற்குப் பெயர் அறிமடம் (அறிந்தும் அறியாதார் போல் செயல்படுதல்). இது ஒரு வணிக நோக்கிலான சினிமா. மொழிக் கொள்கை கூட படம் எடுத்தவர்களுக்கு வணிக நோக்கில் அமைந்த ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் மொழிப்போரைப் பற்றி ஏதுமறியாத, வாசிப்பு அதிகம் இல்லாத பெரும்பாலான இளைய தலைமுறையைச் சென்றடைந்து விட்டது இப்படம். பலருக்கு சரியாக மொழி உணர்வைக் கடத்தி இருக்கிறது. அவ்வளவே !". அடுத்து, இதனைத் தங்களுக்கு எதிரான படமாக நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு : ஐயா ! உங்கள் காங்கிரஸ் என்பது அந்தப் பழைய காங்கிரஸிலிருந்து பிரிந்து, அது ஒன்றுமில்லாமல் ஆனபின் 'இனி இதுதான் காங்கிரஸ்' என்று ஆன ஒன்று. எனவே 'படத்தில் காட்டப்பட்டது பழைய சித்தாந்தங்களுடன் திகழ்ந்த காங்கிரஸ். நாங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை நன்கு உணர்ந்த புதிய காங்கிரசாக்கும்' என்று சொல்லி நீங்கள் கடந்து சென்றிருக்கலாம். அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் இந்திக்குப் பெரிய ஆதரவாளராயிருந்து மொழிப் போராளிகளை ஆங்காங்கே சுட்டுத் தள்ளியது நிஜம். அடுத்த தேர்தலில் காமராஜரை மக்கள் தோற்கடித்ததற்கும் பெரும் பங்களிப்புச் செய்தவர் பக்தவத்சலம். அவரை உள்ளது உள்ளவாறு படத்தில் காட்டியதற்கு இன்றைய காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்திரா காந்தி அம்மையாரைக் காட்டிய விதத்திலும் பெரும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று வடக்கில் இருந்த தலைவர்கள் எவரும் மொழிப்போரில் நம்முடைய நிலையைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை என்பது நமது முகத்திலறையும் நிதர்சனம். இறுதியாக தற்போது சிறிய சர்ச்சைக்கு உள்ளானது என்னவென்றால் பராசக்தி படக்குழு டெல்லியில் மோடி தலைமையில் நிகழ்ந்த பொங்கல் விழாவில் பங்கேற்றது. தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பேர் இருக்க, இப்படக் குழுவை பாஜக அழைத்ததும் இவர்கள் அதில் கலந்து கொண்டதும் ஒரு வேடிக்கை அரசியலாகத் தெரிகிறது; கேவலமான அரசியலாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வாறான நிகழ்வுகளை உதாசீனப்படுத்திக் கடந்து செல்ல வேண்டும். படம் தமிழ்ச் சமூகத்திற்கு நல்ல செய்தியைத் தந்தது என்பதோடு நிறுத்த வேண்டும். படக்குழுவினரை நிஜ வாழ்விற்கு அழைத்து வந்து நாயகர்களாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நாயகன் சிவகார்த்திகேயன் தாங்கள் திராவிட இயக்கத்தினர் என்றோ குறைந்தபட்சம் தமிழ் உணர்வாளர் என்றோ கூறிக் கொள்ளவில்லை. பாஜக நாளைக்கே இவர்களை அழைத்து ஒரு இந்தி ஆதரவுப் படத்தை எடுக்கச் சொன்னால், "நீ காசு குடு மாமே ! மத்ததை நாங்க பாத்துக்குறோம்" என்று இவர்கள் ஆனந்தக் கூத்தாடலாம். இதை விட இவர்களிடம் பெரிதாக ஏன் தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்க வேண்டும் ? இது விஷயத்தில் பாசிச பாஜகவை வேண்டுமானால் கடுமையாக விமர்சிக்கலாம். அவ்வளவுதான். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'ரகு தாத்தா' திரைப்படமும் ரசிக்கும் படியாக இருந்தது. இதுவும் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் பின்னணியில் உருவான கதை. ஆனால் இது அப்போது நிகழ்ந்த வரலாற்றைக் கூற வரவில்லை. மாறாக, பெண்ணியம் பேசும் கதையில் கதாபாத்திரங்கள் இந்தி எதிர்ப்பைப் பதிவு செய்தன. பராசக்தி திரைப்படம் போன்று ரகு தாத்தா பரபரப்பாகப் பேசப்படாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் - கீர்த்தி சுரேஷ் தவிர நட்சத்திர நடிகர்கள் இல்லாமையும், முழுமையான வணிக நோக்கில் இளையோரைக் கவரும் உத்திகள் இல்லாமையும் அவற்றில் சில. எது எப்படியோ, இது போன்று தமிழரின் தன்னுணர்வை விழிப்புறச் செய்யும் திரைப்படங்கள் அவ்வப்போது திரையில் தோன்றுவது அவசியமாகிறது. சுதந்திரப் போராட்டம் நாட்டு விடுதலைக்கானது என்றால் மொழிப்போர் தமிழ் இன விடுதலைக்கானது என்பதை இந்நிலத்து இளையோர் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ரகு தாத்தா திரைப்படம் குறித்து முன்னர் நான் முகநூலில் எழுதியவை பின்வரும் இணைப்பில் : https://www.facebook.com/share/p/1bL1fCKieF/
  2. இது உண்மைதான். தாம் வாழும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் இருந்து தப்பி வெளியே வரும் இவர்கள், தாம் வந்து குடியேறும் மேற்கத்தைய நாடுகளில் தாம் எந்த அடிப்படைவாதத்திலிருந்து தப்பி வெளியேறினார்களோ, அதே அடிப்படைவாதக் கொள்கைகளைப் பரப்புகிறார்கள். அத்துடன் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊற்றி வளர்க்கப்படுகின்றனர். இங்கிலாந்தில் 2005 ஆம் ஆண்டிலும், அவுஸ்த்திரேலியாவில் மிக அண்மையிலும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் முன்னின்று படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் மேற்குலகில் பிறந்து வளர்ந்த இஸ்லாமிய இளைஞர் யுவதிகள்தான் என்பது அதிர்ச்சியான தகவல். 2014 முதல் 2019 வரையான காலப்பகுதியில் உலகையே ஆட்டிப்படைத்த‌ இஸ்லாமிய அடிப்படைவாதக் கொடூரப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் அமைப்பில் இணைவதற்கு மேற்குலகில் பிறந்து வளர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் முன்னின்று சென்றிருந்தனர் என்பதும், இவர்களுள் சிலர் மிகவும் கொடூரமான படுகொலைகளை வீடியோக்களின் முன்னால் நின்று நிகழ்த்திவிட்டு அல்லாவுக்கே மகிமை என்று கூக்குரலிட்டதும் நினைவில் இருக்கலாம். இவ்வாறு அவுஸ்த்திரேலியாவிலிருந்து சிரியா சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதியொருவன் தனது இரு மகன்களையும் அங்கு கூட்டிச் சென்றிருந்தான். அப்பயங்கரவாதியும், அவனது இரு புதல்வர்களும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவர்கள், லெபனானிய பின்புலத்தைக் கொண்டவர்கள். சிரியாவில் இவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர், தான் படுகொலை செய்த இரு சிரியர்களின் தலைகளைக் கொய்து தனது இரு மகன்களினதும் கைகளில் கொடுத்த அவன், அல்லாவுக்கே மகிமை என்று கூவியதும் இன்னும் நினைவில் இருக்கிறது. ஈரானிய இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நிச்சயம் துடைத்தழிக்கப்பட வேண்டும். இதற்காக நான் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.
  3. இஸ்லாமிய ஆட்சிகளை எதிர்ப்பவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கும் இஸ்லாமிய கொள்கைகளை கையில் எடுப்பதுதான் கொஞ்சம் அல்ல பெரிய நெருடலாக இருக்கின்றது. நேரடியாக கண்காணும் நிகழ்வுகளின் அனுபவங்கள்.
  4. சீனாவை நம்பினால் நடுதெருவில் கைவிடப்படுவார்
  5. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் - ஜனாதிபதி Published By: Vishnu 16 Jan, 2026 | 08:49 PM பு.கஜிந்தன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (16) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து பல காலங்கள் கடந்தாலும் இன்னும் பூர்த்தியடையாத வீட்டு திட்டங்களை பூர்த்தி செய்யும் முகமாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனவும், வட மாகாண மக்கள் யுத்த காலத்திலும் மற்றும் யுத்த காலத்திற்குப் பிறகும் பல இடப் பெயர்களை சந்தித்துள்ளனர் எனவும், நீண்ட காலமாக சொந்த வீடு இல்லாமல் வாழ்வது இலகுவான விடயம் அல்ல எனவும் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டில் முதல் முறையாக வட மாகாண மக்கள் நம்பிக்கை செலுத்தக்கூடிய வகையில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், முதலாவதாக மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கம் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார். மேலும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக கல்விக்காக அதிக நிதியை இம்முறை ஒதுக்கியுள்ளதாகவும், மக்களுக்கு ஒரு சிறந்த வருமான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும், விசேடமாக யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை, சுற்றுலாத்துறை , கடற்றொழிற்துறை மற்றும் சிறு கைத்தொழில் துறை போன்றன இப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரமாக இருக்கின்றன எனவும், இவ் அனைத்து துறையையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யுத்த காலத்தில் முரண்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் இனவாதத்துடன் வாழ்ந்தனர் எனவும், இந்த முரண்பாட்டின் ஊடாக எவருமே நன்மை அடையவில்லை எனவும், மாறாக பாதிப்புக்கள் மட்டுமே மிஞ்சின எனவும் குறிப்பிட்டார். மேலும் அதிமேதகு சனாதிபதி தெரிவிக்கையில், மீண்டும் எமது நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், நாம் அனைவரும் அமைதியாக ஒற்றுமையாக சகோதரத்துடன் வாழும் ஒரு நாடு எமக்கு தேவை எனவும், இத்தோடு சிறப்பான பொருளாதாரத்துடனும் சிறந்த பொழுதுபோக்குடனும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை எமக்கு தேவை என்றும் குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த அதிமேதகு சனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து, இத் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதாகவும் இத் திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும், எமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் இத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் எமது இளம் சமுதாயத்திற்கு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார். இதே போன்று சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால் எமது நாட்டிற்கு பெரிய பங்களிப்பை இந்த சுற்றுலாத்துறை வழங்குகின்றது எனவும், வடக்கில் அழகிய கடற்கரைகள் மக்களை கவரக்கூடிய பல இடங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த சுற்றுலாத்தலம் ஒன்று இங்கு இல்லை எனவும், இதன் குறைபாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இங்குள்ள விமான நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிக வேகமாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், வட மாகாணத்தில் சிறந்த சுற்றுலாத் தலம் ஒன்றை அமைப்பது எமது தேவையாக உள்ளது எனவும், இளைஞர் யுவதிகளுக்குசிறப்பான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், நல்ல ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறான பொருளாதாரத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பாக எமது அரசாங்கம் செயற்பட உள்ளதாகவும்தெரிவித்ததுடன், மேலும், இதற்கு மேலாக எனது நோக்கம் சிதறடிக்கப்பட்ட மனங்கள் மற்றும் உள்ளங்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நான் ஒருபோதும் மக்களை கைவிடமாட்டேன் என்று குறிப்பிட்ட சனாதிபதி அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/236228
  6. நோபல் பரிசு சமாதனத்திற்கு கொடுப்பது என்பது ஓர் பூச்சாண்டி....தங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சி நடைபெறும் நாடுகளின் எதிர் கட்சியினருக்கு பரிசை கொடுத்து ஆட்சியை கவிழ்ப்பது இவர்களின் செயல் ..
  7. இலண்டனில் இந்திய தணிக்கை குழுவின் கத்தரி இல்லாமல் திரையில் பார்த்தேன். இந்தி திணிப்புக்கு எதிரான கதை எனினும் பல சமசரங்களுடன்தான் திரைக்கதை அமைந்துள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் கட்சிகளால்தான் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது என்பது புரிதல். ஆனால் படத்தில் இந்திய நாடு முழுவதும் பரவிய இரகசிய மாணவர் அமைப்பினால் (அதுவும் தமிழ்ப் பெயராகிய புறநானூற்றுப் படை) முன்னெடுக்கப்பட்டதாகக் காட்டப்பட்டது புனைவு. திராவிடக் கட்சிகள், இடது சித்தாந்தக் கட்சிகளின் பங்களிப்பு காட்டப்படவில்லை. இப்போதைய "ஜென் Z" தலைமுறைக்கு இப்படி ஒரு வரலாறு இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் இன்னும் உணர்வோடு சொல்லியிருக்கலாம்.
  8. மரியா மரியாதையா கொண்டு வந்து குடுத்திரு இல்லாட்டி மற்றவருக்கு நடந்தது தெரியும் தானே என மரியாதையா சொல்லியிருப்பாரு நைனா
  9. பணப்பரிமாற்ற ரசீது. வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசல கூடத்தை பூரணப்படுத்த குழிவெட்டும் படங்கள்.
  10. ஓம் அக்கா. என்னால் வீட்டினுள் செல்ல முடியாது. இந்த படங்கள் பிளம்பிங் செய்யும் தம்பி எடுத்து அனுப்பி உள்ளார். இந்த நிலையில் உள்ள மலசலகூடத்தை தான் 3 சகோதரர்களும் பாவித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க கவலையாக உள்ளது. நாளை தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பன வழங்குவார்களாம். உடனடியாக வேலையை தொடங்க கேட்டுள்ளேன். மலசலகூடத்தையும் தூய்மைப்படுத்த கேட்டுள்ளேன். இவர்கள் டிசம்பர் 3ஆம் திகதி நிகழ்விற்கு சகோதரியுடன் வந்தவர்கள், பிந்தியபடியால் தூக்கி இறக்குவதும் ஏற்றுவதிலும் உள்ள சிரமம் காரணமாக ஆட்டோவில் இருந்தவர்கள். அப்போதே மலசலகூடம் திருத்தும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் பின்னர் நடந்ததெல்லாம் விந்தைதான்!
  11. Nitesh Samuel not out 77 101 163 0 0 76.23 கந்தப்பு இவர் அடித்த ஓட்டம்களில் 4 6 ஒன்றும் இல்லையே? ஆளுக்கு முட்டைக்கோப்பி கொடுக்க வேண்டும்.
  12. ஈழவம்சாவளி தமிழன் நித்தீஸ் சாமுவேல் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவின் முதலாவது போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 101 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ஒட்டங்களை பெற்றார்
  13. சுகாதாரமற்ற இடங்களுக்கு போகும் போது உங்கள் நலனிலும் கவனம் எடுங்கள் ஏராளன்.
  14. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளின் மலசலகூடம் (பிளாற்) திருத்தப்பணிகளுக்காக 80000 ரூபா மூளாய் கணேஷா ஹாட்வெயர்ஸ் அன் எலக்ரிக்கல்ஸ் கடை உரிமையாளர் முருகசோதி அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்துள்ளேன். பணம் செலுத்தினால் தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பவற்றை பறிப்பதாக கூறியதால் பணத்தை செலுத்திவிட்டேன். இருப்பு 380,420.67-80025=ரூ 300,395.67 சதம் இன்று 16/01/2026 80000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.
  15. இப்போது நீங்கள் கூறும் நானா யாரென்று புரிந்துவிட்டது. அந்த நபரின் குரோதத்தின் காரண‌மும் தெளிவாகிறது. நான் விடயம் தெரியாமல் இனம்பற்றியெல்லாம் எழுதிவிட்டேன். மிக்க நன்றி!
  16. பயனாளியின் முகம் மறைக்கப்பட்ட படம். வங்கிப்பரிமாற்ற பிரதி.
  17. அத தெரண கருத்துப்படங்கள்.
  18. இங்கே சோனியா ஒரு கிழட்டு மூதாட்டி, கிழவி என்பதுதான் நீங்கள் விளங்கவேண்டியது நண்பரே.
  19. இங்கு நீங்கள் குறிப்பிடுவது யாரை, தமிழர்களையா? தமிழர்களைத்தான் என்று எடுத்துக்கொண்டால், தமிழர்களில் எந்தப் பிரிவினர் மேற்குடனும், இலங்கையுடனும் சேர்ந்து பயணிக்கலாம் என்று விரும்புகிறார்கள்? எமக்கான பயன் கிடைக்குமென்றால் சேர்ந்து பயணிப்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பயன் தான் என்ன? அதனைத் தருவதற்கு இந்தியா உடன்படுகின்றதா? அதற்கான சமிக்ஞைகள் இந்தியாவினால் எப்போது, யாரிடம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன? நீங்கள் சிட்னியில் உங்களின் இந்திய நண்பர்களுடாக இந்திய அதிகார வர்க்கத்தினை அணுகியிருக்கிறீர்களா? புலிகளை அழிக்க உதவுங்கள், நாம் மகிந்தவிடம் உங்களுக்கான தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதியளித்த பின்னர், யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்டபோதும், தனது வாக்குறுதியைத் தானே தூக்கிக் கடாசிவிட்டு பேசாமலிருக்கும் இந்தியா இப்போது எதற்காக எமக்கான தீர்வைத் தரப்போகிறது என்று நினைக்கிறீர்கள்?
  20. இங்கு "நம்ம நானா " என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் குறிப்பிடும் நபர் சிங்கள இனவாதிகளில் மிகத் தீவிரமானவர்களில் ஒருவரான சிறிமாவை ஆதரித்தவர் என்பதுடன் அவரது செயற்பாடுகளை இன்றுவரை நியாயப்படுத்தி வருபவர், தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர், த‌மிழரின் விடுதலைப் போராட்டத்தை இன்றுவரை கொச்சைப்படுத்தி வருபவர், தமீழத் தேசியத் தலைமைத் தண்டிக்கவேண்டும் என்று கூறிவருபவர் , பொதுவாகத் தமிழ்த் தேசியம் என்பது அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர். ஆக, நான் சொல்பவரும் நீங்கள் குறிப்பிடுபவரும் ஒரே நபர்தான் என்றால், நீங்கள் சரியாகவே கணித்திருக்கிறீர்கள் என்று பொருள். மேலதிக விபரங்களுக்கு என்னுடன் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள், நாம் அந்த நபரை யாரென்று சரியாக இனங்கண்டுகொள்ளலாம்.
  21. தேசிய பூங்கா - அல்பெர்டா - கனடா
  22. மேலே 👆 இருப்பது, இலங்கையில், 2013 - 2023 இல் இறுதியாக தரவுகள் சேகரிக்கப் பட்ட போது அதிக மரணங்களை ஏற்படுத்தும் காரணங்களாகக் கண்டறியப் பட்டவை. மாரடைப்பினால் ஏற்படும் மரணம் 43% வீத அதிகரிப்பு, மூளை இரத்த அடைப்பி(Stroke) னால் ஏற்படும் மரண வீதம் 26% அதிகரிப்பு. அடுத்த தரவு சேகரிப்பில், இந்த வீதங்கள் இன்னும் அதிகரித்திருக்கும். தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணை, பொரித்த/கரித்த உணவுகளின் பிரபலம், உடலுழைப்பின்மை, ஆண்கள் 30 தாண்டும் முன்பே பெற்றுக் கொள்ளும் "மாறாத தொப்பை"- இவையெல்லாம் தான் காரணங்கள். பாடசாலை மட்டத்திலேயே ஏதாவது செய்ய வேண்டும். இல்லா விட்டால் இதை மாற்ற வழிகள் இல்லை! தரவு மூலம்: https://www.healthdata.org/research-analysis/health-by-location/profiles/sri-lanka

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.