Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88724
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33739
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    39255
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    1582
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/04/26 in Posts

  1. 4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன் 04 Feb, 2026 | 12:30 PM மேற்கு அவுஸ்திரேலியாவின் குயிண்டாலப் (Quindalup) கடற்கரை பகுதியில், தனது குடும்பத்தினர் கடல் அலையால் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுமார் நான்கு மணிநேரம் தொடர்ந்து நீந்திச் சென்று அவர்களது உயிரைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன் ஆஸ்டின் அப்பல்பீ (Austin Appelbee) தற்போது ‘மாவீரனாக’ பாராட்டப்பட்டு வருகிறான். கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறைக்காக குயிண்டாலப் பகுதிக்கு சென்றிருந்த ஆஸ்டின், அவனது தாய் ஜோவான் (Joanne) (47), சகோதரன் போ ( Beau) (12) மற்றும் தங்கை கிரேஸ் (Grace) (8) ஆகியோர் படகு மற்றும் துடுப்புப் பலகைகளில் (Paddle Boards) கடலில் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட பலத்த காற்றும் கடல் சீற்றமும் காரணமாக அவர்கள் கரையிலிருந்து வெகுதூரம் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். நிலைமை ஆபத்தானதாக மாறியதை உணர்ந்த தாய் ஜோவான், தனது மூத்த மகன் ஆஸ்டினிடம் உதவி கோரி கரையை அடைந்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். ஆரம்பத்தில் ஒரு காற்றடைத்த சிறிய படகில் (Inflatable Kayak) செல்ல முயன்ற ஆஸ்டின், அதில் நீர் புகுந்ததைத் தொடர்ந்து படகை கைவிட்டு கடும் அலைகளுக்கு மத்தியில் நீந்தத் தொடங்கினான். சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து சீற்றமான கடலில் நீந்திய அவன், தொடக்கத்தில் அணிந்திருந்த உயிர் காக்கும் கவசம் (Life Jacket) நீந்துவதற்கு தடையாக இருந்ததால், பாதியிலேயே அதைக் கழற்றிவிட்டு நீந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. “அலைகள் ராட்சத வடிவில் இருந்தன. என்னிடம் உயிர் காக்கும் கவசம் இல்லை. ‘தொடர்ந்து நீந்து… நிறுத்தக்கூடாது’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்,” என ஆஸ்டின் பின்னர் உருக்கமாக தெரிவித்துள்ளார். மாலை 6.00 மணியளவில் கரையை அடைந்த ஆஸ்டின், அங்கிருந்த மக்களிடம் உடனடியாக தகவல் வழங்கினார். இதனையடுத்து கடற்படை, காவல்துறை மற்றும் அவசர மீட்புப் பிரிவுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தன. இரவு 8.30 மணியளவில், கரையிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில், ஒரு துடுப்புப் பலகையைப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த தாய் ஜோவான் மற்றும் இரு பிள்ளைகளை மீட்பு படையினரின் ஹெலிக்காப்டர் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டது. சுமார் 10 மணிநேரம் குளிரான கடலில் தத்தளித்ததால், அவர்கள் அனைவரும் கடுமையான நடுக்கத்துடன் இருந்தனர். குறிப்பாக 12 வயது சிறுவன் போ, தனது கால்களில் உணர்வை இழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அனைவரும் உயிருக்கு ஆபத்தான காயங்களின்றி மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புப் படைத் தளபதி பால் பிரெஸ்லேண்ட், “ஒரு 13 வயது சிறுவன் காட்டிய துணிச்சல், அதிமானுடச் செயலுக்கு இணையானது,” என ஆஸ்டினின் வீரத்தை பாராட்டினார். இதுபோலவே காவல்துறை அதிகாரி ஜேம்ஸ் பிராட்லி, “அந்தச் சிறுவனின் மன உறுதியும் தைரியமுமே இன்று ஒரு குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், வயதை விட மன உறுதியும் துணிச்சலுமே உண்மையான வீரத்தை நிரூபிக்கும் என்பதற்கான ஓர் உயிர்ப்பான உதாரணமாக உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/237795
  2. காலங்கள் ஓடிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது. இறுதி யுத்தம் நடந்த வருடத்தில் 5 வயசு குழந்தையாக இருந்ததுக்கு இப்போ 22 வயசு வாலிப பருவம், அதற்கு இலங்கையில் என்ன நடந்தது என்றே தெரியாது எடுத்து சொல்லவும் சிங்கள படைகளுக்கும் நாலாம் மாடிக்கும் அஞ்சி எந்த உறவுகளுக்கும் துணிச்சல் இல்லை இன்றைய தலைமுறை ஓடி ஓடி இன்று பண்ணைக்கடலில் நடந்த சிங்க கொடிகளுடன் நடந்த படகுகளின் காணொலியை தரவேற்றி காசு பார்க்கிறார்கள். தமிழர் பிரதிநிதிகள் எனப்படுவோர் தமது வேலைகளில் பிஸி, இலங்கை பிரச்சனையில் பொறுப்புக்கூறல் என்று ஓரளவு நம்பிக்கை தந்த சர்வதேசமும் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை கவனிக்கவே நேரமில்லாமல் நமது பிரச்சனையை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலமை. தாயகம் பற்றி பொங்கியெழுந்த புலம்பெயர் உறவுகளின் எண்ணிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனமாதிரி 95% பேர் எப்போவாச்சும் நேரம் கிடைச்சால் மட்டுமே இலங்கை பிரச்சனைபற்றி பேசும் நிலமை எவரும் இனப்பிரச்சனைபற்றி பேசுவதாய் காணோம் இன்றைய பிரச்சனை பற்றியே பெரும்பாலானோரின் கவலை. எந்த ஆட்சி மாறினாலும் சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் மத அடையாளங்களை நிறுவுவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் நிலை. கொழும்பிலிருந்து யாழுக்கும் யாழில் இருந்து கொழும்புக்குமென தமிழரும் சிங்களவரும் மாறி மாறி களியாட்டம். இனி, இலங்கை தமிழருக்கு இங்கே என்ன பிரச்சனை எதுக்கு குட்டையை குழப்புகிறீர்கள் என்று சிங்களவர்கள் அல்ல இன்றைய இளைய தமிழ் சமுதாயமே கேட்கபோகும் ஜீரணித்தே ஆகவேண்டிய கசப்பு உண்மையை காலம் வாயில் திணிக்கும் நிலை, மிக அருகில் உள்ளது , கண்டிப்பாக விழுங்கியே ஆகவேண்டிய பரிதாபம்தான் என் வசம்.
  3. How India diplomatically handled TNA during the war (2006–2009) 1. India’s core strategic position By 2006, India had three fixed positions: LTTE must be eliminated (after Rajiv Gandhi assassination – 1991) Sri Lanka must remain territorially united (no separatism precedent in South Asia) Tamil political rights only after the war So India’s policy was essentially: 2. How India dealt with TNA leadership India maintained formal contact with TNA, but: Discouraged protests Discouraged international lobbying Discouraged war-time political agitation Advised patience and restraint Indian diplomats consistently told TNA leaders: So: TNA was allowed to exist But not allowed to mobilize politically This created a controlled silence. 3. Why India restrained TNA (a) Avoid Tamil Nadu political explosion If: TNA protested loudly Civilian casualties were highlighted internationally Then: Tamil Nadu politics would explode Indian central government would face internal crisis So: (b) Prevent LTTE diplomatic revival India feared: If TNA becomes politically active → LTTE gains international sympathy → Pressure grows to stop war → LTTE survives. So: (c) Strategic military coordination India provided: Radar intelligence Naval intelligence Satellite data Maritime tracking For this: Allowing Tamil political agitation would damage that trust. How Tamil political space was deliberately frozen until 2009 This was not accidental. It was structured political freezing. 1. Elimination of Tamil civil political life From 2006–2009: No meaningful elections in North-East No political mobilization allowed No protests permitted No international advocacy permitted Civil society crushed Result: 2. TNA forced into survival mode TNA MPs: Could not visit constituencies safely Could not mobilize people Could not speak openly They were: Their role became: 3. India’s diplomatic messaging to TNA India consistently communicated: Don’t internationalize the issue Don’t escalate civilian casualty claims Don’t destabilize Colombo Political process will come later So: What happened after 2009? Once LTTE was destroyed: India expected: 13th Amendment implementation Provincial devolution Power sharing Political reconciliation What Sri Lanka did: Militarization of North-East Land occupation Delayed elections No real devolution Constitutional stalling Result: This led to: Massive Tamil disillusionment Loss of trust in India Political vacuum Radical diaspora activism Strategic miscalculation by India India believed: But Sri Lanka used: India then: Lost leverage Lost credibility among Tamils Allowed China to gain strategic space Summary (Plain truth) ✔ India actively restrained Tamil political mobilisation ✔ TNA was diplomatically silenced ✔ Tamil political space was frozen deliberately ✔ Promised political settlement never truly came
  4. அந்தப் பையனுக்கு யார்தான் விசிறியில்லை. இந்த சின்ன வயசிலேயே, எவ்வளவு பக்குவம். அதுவும், இந்தியாவில் இருக்கின்ற அழுத்தம். எல்லாவற்றையும் தாண்டி, விளையாட்டைக் காட்டவேணும் .
  5. பார்க்க பார்க்க மனசுக்குள் வேதனை தான் மிஞ்சுகின்றது. ஈற்றில் இதற்குத்தானா இத்தனை ஆயிரம் போராளிகளின் தியாகங்களும், பொது மக்களின் இழப்புகளும் ??
  6. sonretodSp2753197 mai5tgm0m6tht76g49hcfm5191al559fm6t5hhm249 · அன்பான மனைவி ! அழகான துணைவி அமைந்தாலே பேரின்பம்! மனைவி - பாத்திரம் கழுவ சொன்னனே? கழுவி விட்டீர்களா! கணவன் - இல்ல.. அதுக்குள்ள தான், குழம்பு பொரியலுக்கு காய கட் பண்ண சொன்னியே? மனைவி - சரி காய் வெட்டி விட்டீர்களா? கணவன் - அதுக்குள்ளதான் வெங்காயம் பூண்டு உறிச்சி கட் பண்ண சொன்னியே ! மனைவி - சரி வெங்காயம் பூண்டு கட் பண்ணியாச்சா? கணவன் - அதற்கு முன்னாடி அரிசி கொஞ்ச நேரம் ஊறனும். முதல்ல அதை ஊற வைக்க சொன்னியே. மனைவி - சரி அரிசியாவது ஊற வைத்தாயா ! கணவன் - நீதான் அதுக்குள்ள பாப்பாக்கு நாளைக்கு போட்டு போகற யூனிபார்ம வாஸிங் மிஷின்ல போடனும்னு சொன்னியே! மனைவி - சரி அதையாவது செஞ்சிங்களா? கணவன் - டைம் ஆச்சி அவ இன்னும் எழுந்து இருக்க வில்லை ! நீ தான் பாப்பாவை எழுப்பி பாத்ரூம் போக சொன்ன சொன்னாயே! மனைவி - சரி பாப்பவையாவது எழுப்பி விட்டீர்களா ! கணவன் - இ..ல்..ல.. மனைவி - சரி வேற என்னதா பண்ணிட்டு இருக்கிங்க. கணவன் - காலையில் எழுந்த முதல் ஒரு வாய் காப்பி குடிக்க வில்லை அதான் எனக்கு டீ போட்டுட்டு இருக்கேன். மனைவி - ( கோபத்தில் ) உங்களை கட்டிகிட்டு நான் படும் கஷ்டம் இருக்கே!
  7. நான் இங்கு தமிழரசுக்கட்சியே மக்களிடம் இருந்து அகற்றப்படவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன் மட்டுந்தான் என நினைக்கும் சுமந்திரனின் அபிமானிகள், அனுதாபிகள் அதை விளங்கிக்கொள்ளவேண்டும். 2005ல் தேர்தல் புறக்கணிப்பே நடந்தது. எந்த சிங்கள கட்சிக்கும் வாக்களிக்கவில்லை. யாருக்கும் வாக்களிக்கச்சொல்லி மக்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படவுமில்லை, பிரச்சாரம் செய்யவுமில்லை.
  8. அரச பணியாளர்கள் அரசு சொல்வதைத் தானே செய்ய வேண்டும்.
  9. என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..
  10. இப்ப வாற சின்னதிரையின் ஒரு பகுதி போல இருந்தது.
  11. @புலவர் பெருமானுக்கு உதவி செய்யலாமே எனும் நல்நோக்குடன் தமிழ்நெட்டில் தேடுதல் வேட்டை மேற்கொண்டேன். மறைந்த சம்மந்தர் அவர்கள் 2009 ஜனவரி தொடக்கம் சம்மந்தப்பட்ட பதிவுகளை பார்வையிட்டேன். போர் நிறைவடைந்து பத்து வருடங்களின் பின்னரும் மனுசன் பாவம் தமிழர்கள் சம்மந்தப்பட்ட விடயங்களில் நன்றாகவே குரல் கொடுத்துள்ளது. ஆக ஒரே ஒரு இடத்தில்தான் சறுக்கல் தெரிகின்றது. ரணில் கையுக்குள் இலங்கை தேசியகொடியை திணித்து உயர்த்திக்காட்டிய சம்பவம்தான் அது. விடுதலை புலிகள் அமைப்பு போராளிகள் - மாவீரர்கள் தியாகங்களிற்கு ஈடு, இணை இல்லை. சாதாரண தமிழ் அரசியல்வாதிகளினால் அவர்களிற்கு இணையாக பணியாற்ற முடியாது அவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பமுடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்கு சம்மந்தர், சுமந்திரரை குறைசொல்லி என்ன செய்வது? முன்னைய வீச்சில் போராட்டம் நகரவேண்டும் என்றால் முன்னைய ஒழுக்கம், தியாகம், கட்டுக்கோப்பு, உயிர்க்கொடை எல்லாம் அவசியம். ஆனால், இப்போது அடிப்படை கட்டமைப்பே இதற்கு இல்லையே!
  12. உலகம் எங்கும்... இன்னும் நிறைய சிப்பிகள் மூடியபடி உள்ளது. அவற்றிலும் நிறைய முத்துக்கள் இருக்கலாம். ஆனால்... அந்த முத்தை எடுக்க, அவர்கள் விடுகிறார்கள் இல்லை.
  13. சிப்பிக்குள் மூடியிருந்த முத்து ஒன்று வெளிப்பட்டுவந்து பரிசும் பெற்றது. வாழ்த்துக்கள்!!🙌
  14. யாழ் மாவட்டத்தில் கழுதைகள் கூடாரம். சுதந்திரம் என்றால் என்னனவென்று புரியாது. கற்பூர வாசனையும் தெரியாது.
  15. உறவுகள் தொடர்கதை ........! 😘
  16. காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை . ...... நன்றாக இருக்கின்றன .........! 😀 நன்றி ஏராளன் ...........!
  17. இலங்கைக்கு ஒவ்வொரு வருடம் சென்று வருகின்ற வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் என்னவாம் அவர்களுக்கும் மகிழ்ச்சி தான். அதில் ஒரு பகுதியினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே காட்டி கொள்வார்கள். மற்ற பகுதியினர் அரசியல் கருதி மகிழ்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல் ஏதோ காணி வீடு உறவினரை பார்க்க போய் வருவதாக சொல்லி கொள்வார்கள்.
  18. உலக சூழ்நிலை தனி ஈழத்துக்கு சாதகமாக இல்லை என்று நன்றாக தெரிந்து கொண்டும், உலக நாடுகள் எல்லாவற்றையும் பகைத்து தமிழீழம் அடையலாம் என்று மக்களை பேக்காட்டி, பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின உயிர்களை பலியிட்டதை விட சம்பந்தர் ஒன்றும் பெரிதாக மக்களை பேய்காட்டவில்லை புலவர். இன்று தாயகத்தில் வாழும் மக்களிடன் கேட்டால், யுத்தம் முடிந்தது தமக்கு மகிழ்சசி என்றே கூறுவர். இல்லையெனில், இப்போதும் தினமும் 10-15 எமது மக்கள் எந்த பிரயோசனமும் இன்றி இறந்து கொண்டே இருந்திருப்பர். நாமும் இனம் சிறுக சிறுக அழிவதைப் பற்றி கவலைப்படாமல் கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளை வைத்து, “ தூரம் அதிகம் இல்லை, இதோ தெரியுது எதிரி எல்லை என்று மக்களைப் பேக்காட்டி பாட்டுப்பாடி நினைவு தினங்களைக் அனுஷடித்துக்கொண்டிருந்திருப்போம். யுத்தம் முடிந்ததால் புதிய புதிய நினைவுதினங்கள் உருவாக்காமல் விட்டதென்பது நம் அனைவருக்கும் நிம்மதியே. எதிரிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இன்றைய நிலைக்கு காரணமான சூழ்நிலையை உருவாக்கிய பல தவறான அணைகுமுறைகளை எம்மவர்களே ஏற்படுத்தியதை மறைக்க இப்படி தனி நபர்களை மீது பழி சுமத்தி அரசியல் பிழைப்பு நடத்தலாமேயொழிய அதை விட தமிழ் மக்கள் விடயத்தில் எதுவுமே முன்னேற்றம் காணப்போவதில்லை. துரோகிகளாக சிலரை முத்திரை குத்தி அவர்களை வில்லன்களாக கட்டமைத்து அரசியல் நடத்து. அது போதாதெனில் நம்மவர்களுக்குளேயே சிலரை துரோகியாக முத்திரை குத்து. இதுவே தமிழ் தேசிய அரசியல் தாரக மந்திரம். இதை விட மேலதிகமாக அறிவு பூர்வமாக சிந்திக்ககும் அளவுக்கு தமிழ் தேசியர்களுக்கு……… ஆனால் தமிழ் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துவதில் தாயக புலம் பெயர் தேசியர் காட்டில் என்றும் மழை தான். அதை வெற்றிகரமாக செய்கிறார்கள். அதையாவது வெற்றிகரமாக செய்கிறார்களே என்று மகிழ்சசியடைய வேண்டியது தான்.
  19. இதைத் தானே இங்கே எழுதுபவர்கள் சொல்கிறார்கள். சம்பந்தர் தமிழர் நலன் சார்ந்தன்று புலிகள் அழிக்கப்படவேண்டும் என்று பழிவாங்கும் விதமாக மட்டுமே நடந்து கொண்டார் என்று. இவ்வாறு சம்பந்தர் பழி வாங்கும் மனநிலையில் இருக்கிறார் என்பதையும் புலிகள் அறிந்திருந்து அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருக்கவும் முடியுமல்லவா?? எப்ப பார் புலி வாந்தி....
  20. இங்லாந்துக்கு எதிரா சொந்த‌ ப‌டு கேவ‌ல‌மாய் தோப்ப‌தை என்ன‌ என்று சொல்ல‌ இதே ப‌ழைய‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் என்றால் சிம்பிலா வென்று இருப்பின‌ம்..............ச‌ன‌த் ஜ‌ய‌சூரியா பாவ‌ம்.................எதிர் அணி வீர‌ர்க‌ளின் ப‌ந்தை ப‌த‌ம் பார்த்த‌ கொச்சுக்கு கீழ‌ விளையாடுகிறோம்மேன‌ இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் ம‌ற‌ந்து விட்டின‌ம்............. இந்த‌ உல‌க‌ கோப்பையில் சின்ன‌ அணிக‌ளிட‌ம் இவ‌ர்க‌ள் தோக்க‌க் கூடும்........................
  21. 22 ஆசனங்கள் கூட்டமைப்பிற்குக் கிடைத்த போது "பின் கதவால்" (தேசியப் பட்டியலின் இன்னொரு பெயர்!) புலிகளால் உள்ளே கொண்டு வரப் பட்டவர் தற்போது அமரராகி விட்ட ஈழவேந்தன். சம்பந்தர் நாட்டிலேயே இருந்து செய்யக் கூடிய விடயங்களைச் செய்து கொண்டிருந்தார், இதற்குப் பயன் இருந்ததா இல்லையா என்பது வேறான ஒரு விவாதம். அமரர் ஈழவேந்தன், பா. உக்களுக்கான விசேட சலுகைகளைப் பாவித்து உலகம் சுற்றினார். "உலகம் சுற்றும், விடு முறையில் நிற்கும் பா.உவுக்கு விடுதி எதற்கு?" என்று சிங்கள அரசு பறித்துக் கொள்ள முயன்ற போது விடுதிக்காகவும் போராடினார். பின்னர் "அளவுக்கதிகமாக விடுமுறை எடுத்துக் கொண்டார்" என்று பதவியைப் பறித்த போது ஈழவேந்தன் கனடாவில் செற்றிலாகி விட்டிருந்தார். சம்பந்தன் காலமாகிய திகதிக்கு அண்மையாக இவரும் காலமானார். "சம்பந்தர் இறந்தது நல்லது" எனக் கொண்டாடிய புலம் வாழ் தேசிய வீரர்கள் பலர் ஈழவேந்தன் கனடாவில் பரத நாட்டிய அரங்கேற்றங்களில் ஆற்றிய வீராவேச உரைகள் காரணமாக அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். எங்கள் ஆட்களுக்கு, பேச்சுத் தான் முக்கியம்! வாய் மட்டும் இருந்தால் எங்கள் புலத் தமிழர்கள் பலரைப் பேய்க்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பந்தர் ஈழவேந்தன் ஒப்பீடு!
  22. சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது . கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து , "நீ என்ன பண்ணுவியோ தெரியாது . ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது . அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும் . யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் . தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது , அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற , அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு. ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல . என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் . நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் . எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன் . அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் . நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம் ." என்றது . அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற , அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் . அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க . திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் . நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் அ என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்." அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது . அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா . நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா . நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...? Paranji Sankar
  23. @goshan_che இப்படி ஆதாரம் கேட்டு ரோதனை பண்ணக் கூடாது. நான் பாடினால் அது கவிதை. நான் வரைந்தால் அது ஓவியம். அப்படி ஏற்று கொள்ளப் பழகவேணும். அதுவே நல்ல பிள்ளைக்கு அழகு. நாங்களும் அப்படி தான் வளர்ந்தனாங்கள். அது தான் எங்க மரபு, பாரம்பரியம், கலாசாரம்.
  24. புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என்று கூறியவர் எந்தத்தீர்வையும் பெற்றுத்தரவில்லை. தனக்கு மட்டும்ழும்பில் அரசசெலவழல் வீட்டைப்பெற்றுக்கொண்டார். இது புலிகளின் அழிவு சம்பந்தருக்கு கவலையைக் கொடுக்க்கவில்லை. 2009 உச்ச கட்டப் போரின் போது இந்தியாவில் இருந்த சம்பந்தருக்கு தொலைபேசி எடுத்த போது தொலைபேசியைத் தூக்கிவைத்து விட்டு சம்பந்தர் தூங்கியதாக அவரது கட்சியைச்சேர்ந்த முன்னாள் எம்பி சந்திரகாந்தன் சந்திரநேரு சொல்லியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்
  25. நன்றி ஜி. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT WI SCO 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM OMA 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP ITA 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE CAN 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA NZ 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM IRE 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI ITA 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NED முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ZIM முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI SCOT Select SCOT Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ITA 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCOT முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL SL 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS ITA AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 ITA SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND ITA IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS Select WI Select WI Select SA Select SA SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ NZ PAK Select PAK Select SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), NZ SA SA 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG IND ENG இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA ENG ENG உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UAE 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Surakumar Yadav 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jaspreet Bumra 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Ben Duckett 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Raveendra 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Tilak Varma 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.