Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    39268
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19591
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3615
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88745
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/11/26 in all areas

  1. இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ரஹ்மனுல்லா குர்பாஸினின் மின்னல்வேக 84 (42) ஓட்டங்களின் உதவியுடன் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமப்படுத்தியது. லுங்கி என்கிடியும் கேஷவ் மஹராஜும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில், விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற முதலாவது சுப்பர் ஓவர் முடிவிலும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றது. 24 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி இரண்டாவது சுப்பர் ஓவர் முடிவில் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடியான 45 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஜொஷ் இங்லிஸின் மின்னல்வேக 37 (17 பந்துகள்) ஓட்டங்கள், மற் றென்ஷோ 37 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணியில் ஜோர்ஜ் டொக்ரல் 41 (29 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாகப் பவிலியனுக்குத் திரும்பியதால் 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. நாதன் எலிஸும் அடம் ஸாம்பாவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். முடிவு: அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் வேகமாக ஓட்டங்களைப் பெற்றதாலும், ஷேர்ஃபான் ரதர்போர்ட்டின் புயல்வேக 76 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டரின் மின்னல்வேக 33 (17 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் வேகமாக அடித்தாட முயன்று ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டதாலும், பின்னணி வீரர்கள் குறைவான ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்ததாலும், சாம் கரனின் ஆட்டமிழக்காது எடுத்த 43 (30 பந்துகளில்) ஓட்டங்களுடன் 19 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்றைய முதல்வராக @வீரப் பையன்26 கதிரையில் வீற்றிருக்கின்றார்!
  2. நாளை வியாழன் 12 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 22 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஓமான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஓமான் நிலாமதி இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 06 பேர் இத்தாலி அணி வெல்லும் எனவும் 17 பேர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இத்தாலி சுவைப்பிரியன் ஈழப்பிரியன் சுவி கோஷான் சே ரசோதரன் நிலாமதி நேபாளம் செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 கிருபன் அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் பிரபா நந்தன் இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 22 பேர் இந்தியா அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் நமீபியா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா நிலாமதி இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா?
  3. குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?
  4. முதலமைச்சர் @வீரப் பையன்26 க்கு வாழ்த்துக்கள். பல் நாள் கனவு நனவாகி இருக்கு. இன்று அப்கானிஸ்தானை தெரிவு செய்த உறவுகளுக்கும் பாராட்டுக்கள். போராடித் தோற்றது தோல்வியே இல்லை. சுமைதாங்கியை பார்த்துக் கொண்டு போகாமல் முடிந்தவர்கள் தண்ணீர் தெளித்து குளுக்கோஸ் கொடுத்து விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தில் எப்படி உசாராக இருந்தாரோ அதேமாதிரி @goshan_che னும் இருக்கணும்.
  5. இதற்கு உடனேயே பதில் எழுத நினைத்துவிட்டு பின்னர் அது ஒருமுன் பின் வாதமாகிவிடும் என நினைத்து விட்டு விட்டேன். நாம் விரும்புவதுமாதிரி எனக்கு நடக்கும் கொடுப்பினை எப்போதும் இருந்ததில்லை, அபூர்வமாக சிலருக்கு அவர்கள் நினைப்பது போல அமைந்து விடுகிறது. அப்படி நடக்காத போது அதற்காக வருந்துவதும் இல்லை (எல்லாம் அவன் செயல் - விளையாட்டாக நகைசுவைக்காக🤣). எனக்கென ஒரு பாதையெல்லாம் போடுகிற அளவிற்கு வசதியும் இல்லை.🤣
  6. இலங்கை வென்றால் எனக்கு புள்ளி கிடைக்கும் (எனக்கும் மட்டும் இலாபம்), மாறாக இலங்கை தோத்தால் கிரிக்கெட்டிற்கு இலாபம் (அனைவருக்கும் இலாபம்). 🤣
  7. தாக்கியெல்லாம் பேசவில்லை. எந்த ஒரு தனிப்பட்ட கல்வி/தொழில் அடைவு நிலையும் ஒரு தனிப் பட்ட ரீதியான சாதனை தான். நாம் இது குறித்து மகிழ வேண்டும். அதுவும் உலகம் அறியாமையைப் பெருமையாகப் போற்றிக் கொண்டிருக்கும் தற்கால யுகத்தில், நிச்சயம் இவை மகிழ்ச்சிக்குரிய விடயங்கள்! என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால், ஏன் இது செய்தியாக வர வேண்டுமென்பது தான். இவரைப் போல டசின் கணக்கான விஞ்ஞான ஆய்வாளர்களை இங்கே ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். எனவே எங்கள் சமூகத்தில் இது மிகச் சாதாரணமான விடயம். இதை அறியாதோர், அல்லது அறிந்தும் "தமிழன் பெருமை" என்று வெற்றுப் பந்தாவில் இருப்போர் இந்த சாதாரண விடயங்களைச் செய்தியாக்கி, அல்பர்களாக எங்கள் சமூகத்தை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
  8. அது வேற மைதானம். ( P. sara oval - Paikiasothy Saravanamuttu Stadium) . இது SSC( Sinhalese Sports Club Ground) இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில்தான் நடைபெற்றது.100 வருட பழமைவாய்ந்த மைதானம். 2010 க்கு பிறகு இங்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை.
  9. கொம்பேறிமூக்கன் பாம்பு. யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் உள்ள அந்தச் சிறிய கிராமத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. செல்லையா, தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த பலா மரத்தின் காய்ந்த கிளைகளை வெட்டுவதற்காகக் கையில் வீச்சரிவாளுடன் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். செல்லையாவுக்கு வயது ஐம்பதைக் கடந்திருக்கும். "மரமேறிக் கைத்தழும்பு ஏறிய உடம்பு" என்று ஊருக்குள் சொல்வார்கள். பலா மரத்தின் ஒரு கிளை வீட்டின் கூரைக்கு மேலே நீண்டுகொண்டு தொல்லையாக இருந்தது. "டேய் ரகு, அந்தக் கயிற்றை இங்க எறிடா" என்று கீழே நின்ற மகனிடம் கத்தினார். கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தக் கிளையின் நுனிப் பகுதிக்கு நகர்ந்தார். அப்போதுதான் அந்தச் சலசலப்பு கேட்டது. பலா இலைகளுக்கு நடுவே பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் நீண்ட ஒரு பாம்பு பதுங்கியிருந்தது. செல்லையா உற்றுப் பார்த்தார். அவரது நெஞ்சு 'திக்' என்றது. "அடக் கடவுளே! இது சாரைப் பாம்பின்ரை ஆண் வர்க்கம்! கொம்பேறி மூக்கன்!" கிராமத்துப் பெரியவர்கள் சொல்வது செல்லையாவின் நினைவுக்கு வந்தது. ‘கொம்பேறி மூக்கன் கடிச்சால் கொல்லாம விடாது. அது கடிக்கிற வேகத்தில மரத்து உச்சிக்கு ஏறும். அது ஏற ஏற விஷம் தலைக்கு ஏறும். கடைசியில பிணத்தை எரிச்சாத்தான் கீழ இறங்கும்.’ செல்லையா சுதாரிப்பதற்குள் அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் பாய்ந்தது. செல்லையாவின் வலது கையில் மணிக்கட்டுக்கு மேலே 'நறுக்'கென்று கொத்தியது. அடுத்த நொடியே அந்தப் பாம்பு செல்லையாவை விட்டு விலகி மரத்தின் உச்சிக்கிளையை நோக்கிச் சரசரவென்று ஏறத் தொடங்கியது. "ஐயோ! அப்பா!" என்று கீழே நின்ற ரகு அலறினான். செல்லையா நிலைகுலைந்தார். விஷம் ஏறுகிறதோ இல்லையோ பயம் அவரை ஆட்கொண்டது. மரக்கிளையைப் பிடித்துக்கொண்டே கீழே பார்த்தார். கண்கள் இருட்டின. பிடி தளர்ந்தது. "தொப்"பென்று கீழே மணலில் வந்து விழுந்தார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்களும், அயலவர்களும் ஓடி வந்தார்கள். செல்லையாவின் கையில் இரண்டு பற்கள் பதிந்த அடையாளம். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஊர்ப் பெரியவர் கனகசபை ஓடி வந்தார். மரத்தை அண்ணாந்து பார்த்தார். மரத்தின் மிக உயரமான, மெல்லிய கிளையின் நுனியில் அந்தப் பாம்பு சுருண்டு உட்கார்ந்து கீழே விழுந்து கிடக்கும் செல்லையாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. "மாட்டிட்டியே செல்லையா, அது கொம்பேறி மூக்கன்டா! கடிச்சிட்டு உச்சிக்கு ஏறிட்டு. இனி அது இறங்க மாட்டுது. அது மேல இருக்கிற வரைக்கும் இவன் ஒடம்பில விஷம் ஏறிக்கொண்டே தான் இருக்கும்." என்றார் கனகசபை பீதியுடன். செல்லையாவுக்கு வாய் நுரைக்கத் தொடங்கியது. உடல் வெட்டி இழுத்தது. விஷத்தின் வேலையா அல்லது மரண பயமா என்று தெரியவில்லை. "ஆஸ்பத்திரிக்குத் தூக்குங்கோ!" என்று ரகு கத்தினான். "தம்பி, இது சாதாரண பாம்பு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற நேரத்துக்குள்ள கதை முடிஞ்சிடும். அந்தப் பாம்பு கீழ இறங்கினாத்தான் உன்ரை அப்பா பிழைப்பான். ஆனால் உன்ரை அப்பாவை எரிச்சுக் கருமாதி செய்யுற புகை வந்தாத்தான் அது இறங்கும்." என்றார் பெரியவர். ரகுவுக்குக் கோபம் வந்தது. "என்ன லூசுத்தனமா கதைக்கிறீங்கள்? அப்பாவைக் காப்பாத்த வழியைப் பாருங்கோ!" அப்போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் "பெரியவரே அந்தப் பாம்புக்குச் செல்லையா செத்துப்போனது தெரியோணும். அவ்வளவு தானே?" என்றான். "ஓம். அவன் எரிஞ்ச புகை அதுக்குத் தெரியோணும்." என்றார் பெரியவர். "அப்ப ஒரு காரியம் செய்வம். செல்லையாவைத் தூக்கிட்டுப் போய் ஒரு ஓரமா வையுங்கோ. உடனை கொஞ்சம் பச்சை ஓலையளையும், பழைய பாயளையும் போட்டு மரத்துக்குக் கீழ எரிப்பம். அந்தப் புகை மண்டலத்தில பாம்பு ஏமாந்தாலும் ஏமாறும்." என்றான் அவன். வேறு வழியில்லை. செல்லையா மயக்க நிலையில் இருந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. ரகுவும் நண்பர்களும் வேகமாகச் செயல்பட்டார்கள். பலா மரத்தின் அடியில் காய்ந்த சருகுகள், பழைய பனையோலைகள் எல்லாவற்றையும் குவித்தார்கள். நடுவே கொஞ்சம் பச்சை இலைகளையும் போட்டார்கள். "நெருப்பை வைடா!" என்றார் பெரியவர். நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பச்சை இலைகள் எரிந்ததில் கரும்புகை குப்பென்று கிளம்பியது. அந்தப் புகை நேராக மரத்தின் உச்சியை நோக்கிச் சென்றது. கீழே அனைவரும் மூச்சடக்கிக் காத்துக்கொண்டிருந்தார்கள். மரத்தின் உச்சியில் இருந்த கொம்பேறி மூக்கன் அந்தப் புகையை உணர்ந்தது. கீழே ஏதோ எரிகிறது; புகை வருகிறது என்பதை அது பார்த்தது. "எரிச்சுட்டாங்க போல" என்று நினைத்ததோ என்னவோ அந்தப் பாம்பு மெதுவாக நகரத் தொடங்கியது. "இறங்குது! பாம்பு இறங்குது!" என்று கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுத்தார். பாம்பு ஒவ்வொரு கிளையாக இறங்க இறங்க ஓரமாகப் படுத்திருந்த செல்லையாவின் இழுபறி கொஞ்சம் குறைவது போலத் தோன்றியது. பாம்பு பாதி மரத்தைத் தாண்டி கீழே வந்து கொண்டிருந்தது. திடீரென்று காற்று திசைமாறி வீசியது. புகை கலைந்து சென்றது. பாம்பு சட்டென்று நின்றது. கீழே எரிவது மனித உடல் அல்ல, குப்பைகள் என்பதை அது கவனித்துவிட்டதோ? அல்லது கீழே சலசலக்கும் மனிதர்களின் சத்தத்தைக் கேட்டுவிட்டதோ? அது மீண்டும் மேலே ஏறத் திரும்பியது. "ஐயோ! அது ஏமாறல! திரும்பவும் ஏறுது!" என்று ரகு கதறினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமு தன் கையில் வைத்திருந்த 'கவணை'(கெற்றப்போல்) எடுத்தான். சின்ன வயதில் குருவி, ஓணான் அடித்த கை பழக்கம். தரையில் கிடந்த ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கவணில் பொருத்தினான். குறி தவறக்கூடாது. தவறினால் பாம்பு உச்சிக்குப் போய்விடும்; செல்லையா கதை முடிந்துவிடும். மூச்சிரைக்கக் குறி பார்த்தான். பாம்பு மேல் கிளைக்குத் தாவத் தயாரானது. ‘விர்ர்ர்’ கவணில் இருந்து புறப்பட்ட கல் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. சரியாகப் பாம்பின் தலைப்பகுதிக்குக் கீழே அதன் கழுத்தில் 'நச்'சென்று தாக்கியது. பாம்பு நிலைதடுமாறியது. பிடி நழுவியது. சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்து ஒரு கயிறு அறுந்து விழுவது போல அந்தப் பாம்பு தொப்பென்று கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அது சுதாரிப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் கம்பு, தடிகளால் அதை அடித்தார்கள். அதே நேரம் அங்கே ஓரமாகப் படுத்திருந்த செல்லையா ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களைத் திறந்தார். "அப்பா!" என்று ரகு ஓடிப் போய்க் கட்டிக்கொண்டான். பாம்பு செத்துவிட்டது. அதன் உடல் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது. பெரியவர் கனகசபை செல்லையாவின் கையைப் பிடித்துப் பார்த்தார். நாடித் துடிப்பு சீராக இருந்தது. "தப்பிச்சுட்டான். அந்தப் பாவி கீழ இறங்கினதால தான் இவன் பிழைச்சான். ஆனா அதுவா இறங்கேல்லை. நாங்கள் இறக்கினோம்!" என்றார். செல்லையா மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். அவர் கண்கள் அந்தப் பலா மரத்தின் உச்சிக்கிளையையே பார்த்துக்கொண்டிருந்தன. மருத்துவ ரீதியாக அது பயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது அந்தப் பாம்பு குறைந்த அளவு விஷத்தையே கக்கியிருக்கலாம். ஆனால் அந்த ஊர் மக்களுக்கு இன்றும் ஒரு நம்பிக்கை உண்டு. "கொம்பேறி மூக்கன் ஏறினால் விஷம் ஏறும்; அது இறங்கினால் தான் உயிர் தங்கும்." அன்று முதல் அந்தப் பலா மரத்தில் யாரும் ஏறுவதில்லை. காற்றில் அதன் இலைகள் அசையும்போதெல்லாம் அந்தப் பாம்பின் ஆவி இன்னும் அங்கே உச்சிக்கிளையில் உட்கார்ந்து யாராவது கடி வாங்குவார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு பயம் அந்த ஊரில் இன்றும் இருக்கிறது. நண்பனின் முகநூலிருந்து.....
  10. அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை! ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகள் செறிந்த அமைப்புகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2013-ஆம் ஆண்டு முதல் சிட்னி பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது ஆய்வுகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேகலாவின் கல்விப் பயணம் ஈழத்தின் பெருமைமிகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு கணினி அறிவியலில் இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர், பின்னர் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மாதிரியாக்கத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான பட்டயத்தையும் பெற்றுள்ள இவர், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் கால்பதிப்பது அரிதாக இருந்த காலத்தில் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது ஈழத் தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள பெண் சமூகத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. அறிவியல் துறையில் ஈழத்து அடையாளத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தி வரும் கலாநிதி மேகலா பாலமுரளி அவர்களுக்குத் தமிழ் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இவரது சாதனைகள் வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. HR Tamil News
  11. எனக்கு மட்டும் ஏன் இந்த அனுபவம் வரவில்லை? குருட்டாம் போக்கில் தெரிவு செய்வதோடு சரி. அடுத்த முறை எனது அட்மினை தெரிவு செய்ய சொல்லவேண்டியதுதான்.🤣
  12. முதல்வர் வீரப்பையனுக்கு வாழ்த்துகள். நான் முன்பு எனது விருப்பத் தேர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தேன். முடிவுகள் தலைகீழாக இருந்தன .இப்பொழது பலமான அணியைத் தெரிவு செய்வதால் அண்மைக்கால போட்டிகளில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருப்பதை அறிந்தேன். ஆகவே விருப்பத் தேர்வை நிநறுத்தி விட்டேன். தேர்தல் போட்டிகளில் விருப்பத் தேர்வையைே தெரிவு செய்கிறேன். வெல்லும் பக்கத்தில் நிற்பதை விட நிற்கும் பக்கத்தை வெல்ல வைக்க விரும்புவதையே எனது தெரிவாக வைத்திருக்கிறேன்.
  13. ம்ம்ம்…பறவைகள் பலவிதம்…. எனக்கு உலக கிண்ண கிரிகெட் போட்டியில் எந்த நாடு வெண்டாலும், கணிப்பு போட்டியில் நான் வெண்டாலும், புள்ளி எடுத்தாலும் - பொருட்டே இல்லை. உண்மையில் இப்போ எந்த போட்டியில் யார் வெல்வார்கள் என கணித்தேன் என்பதே மறந்து விட்டது. அதேபோல் கடைசியாக வரவேண்டும் எனவும் அறம்புறமா எழுதுவதில்லை. ஆனால் தெய்வாதீனமாக 😂😂😂 அப்படித்தான் அமைகிறது 😂. தேர்தல் போட்டியில் கொஞ்சம் அதிக சிரத்தை எடுப்பேன். அதில் கிரிகெட்டை விட கொஞ்சம் அப்டேட் ஆக இருப்பதால் - ஆனால் அங்கும் யார் வெல்வார்கள் என கணிப்போரை மட்டுமே தேர்வேன். விருப்பின் அடிப்படையில் அல்ல. தேர்தல் போட்டியில் பலர் அபிமான கட்சிக்கு அதிகம் கணிப்பை கொடுப்பதை கண்டுள்ளேன். உங்களை தவிர வேறுயாரும் கிரிகெட் போட்டியில் விருப்ப அடிப்படையில் தெரிகிறார்களா என அறிய ஆவல்.
  14. @goshan_cheநான் சொல்லுறேன் நிலாம‌தி அக்கா உங்க‌ட‌ ரெக்கோட்டை உடைப்பா ஹா ஹா😄😁.................
  15. கணிப்பு வேறு விருப்பம் வேறு. விருப்பபடி தேர்வு செய்தால் நான் இந்தியா, அவுஸ், இலங்கை சுப்பர் எட்டுக்கு கூட போகாது, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து பைனல் விளையாடும் எண்டுதான் எழுத வேண்டும் 😂.
  16. இதுவ‌ரை கோப்பை தூக்காத‌ நியுசிலாந் அல்ல‌து தென் ஆபிரிக்கா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தூக்கினால் கூட‌ ம‌கிழ்ச்சி அடைவேன் நான் யாழ்க்க‌ள‌ போட்டியில் ப‌ல‌ வாட்டி நியுசிலாந்தை தெரிவு செய்து ஏமாந்து விட்டேன்..................நியுசிலாந் எப்ப‌வும் ந‌ல்ல‌ அணி ஆனால் அவைக்கும் கோப்பைக்கு ஆகாது....................தென் ஆபிரிக்காவும் அதே நிலை தான்............................
  17. என‌க்கு இங்லாந் உள்ளூர் கில‌ப் போட்டிக‌ள் பிடிக்கும் இங்லாந் தேசிய‌ அணியையும் பிடிக்கும் இங்லாந் அவுஸ்ரேலியாவிட‌ம் வேண்டி க‌ட்டின‌தை யாரும் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம்.............. அது தான் வெஸ்சின்டீஸ் அணிய‌ தெரிவு செய்தேன்.....................போட்டிகளை பார்த்த‌ மாதிரியும் இருக்கும் பொழுது போன‌ மாதிரியும் இருக்கும் யாழில் வ‌ந்து குப்பை கொட்ட‌வும் பிடிக்கும்😄😁.................................
  18. உங்களில் தப்பேதும் இல்லையே! அதனால் எதனைப்பற்றியும் சிந்திக்காதீர்கள்.
  19. வாழ்க்கையில ஒரு பாதை இருக்கணும். என்ன நடந்தாலும் அது மாறவே கூடாது. விளையாட்டானாலும் சரி. புள்ளி கிடைத்தாலும் சரி. போறது ஒரு பாதை. நான் கற்ற பாடம்.
  20. இந்த யாழ்கள போட்டி ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புவதனை வழங்குகின்றது, சிலர் தாம் தோற்ககூடாது (தமது தெரிவு) என நினைக்கிறார்கள் (ஈகோ), சிலர் இதனை ஒரு விளையாட்டாக பார்க்கிறார்கள், சிலர் இதனை நல்ல மகிழ்வான பொழுதுபோக்காக பார்க்கிறார்கள், எல்லோருக்கும் அவர்கள் விரும்பினது கிடைக்கிறது.
  21. எனக்கும் போட்டி பார்க்கிறது குதிரைக் கொம்பாக் கிடக்கு.
  22. என‌க்கும் அப்கானிஸ்தான் அணிய‌ பிடிக்கும் போட்டி என்று வ‌ரும் போது புள்ளி முக்கிய‌ம் தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளின் அன்மைக் கால‌ விளையாட்டு அமோக‌ம் அத‌னால் தான் அவ‌ர்க‌ளை தெரிவு செய்தேன் அப்கானிஸ்தான் அணி இப்போது உள்ள‌ இல‌ங்கை அணிய‌ விட‌ ந‌ல்ல‌ அணி இது நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌.....................
  23. இன்றைய போட்டிகள் முதலாவது முழுமையாக பார்த்தேன், கடைசி போட்டி இரண்டாவது பகுதி பார்த்தேன், இரண்டும் மிக சிறந்த போட்டிகள்.
  24. ஆம் சொல்லி உள்ளேன். பெரிய கை தான் ஆனால் கேட்ச் பிடிக்க சொன்னால் butter fingers 😂
  25. இலங்கையில் HPV தடுப்பூசி மாணவிகளுக்கு இலவசமாக போடப்படுகிறது அண்ணா. PDF இணைப்பு 👇 http://old.epid.gov.lk/web/images/pdf/HPV/Leaflet/information_leaflet_tamil.pdf
  26. ரஷீத் இன்றைக்கு செமையா பந்து போட்டார். அவரின் ஒரு பந்து கூட எல்லைக்கோட்டைத் தாண்டவில்லை. இங்கிலாந்து வென்றால், அவர்தான் ஆட்ட நாயகன்.
  27. ஆமாம். இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி இங்குதான் நடந்தது. இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றியும் இங்குதான். அம்பயரின் உதவியுடன் இந்தியாவை வென்றிருந்தார்கள். கால்ல பந்து பட்டாலே LBW குடுத்தார்கள். மறக்க முடியாத போட்டி அது. இந்த மைதானம் சிறிய மைதானம். பலேகல்ல மைதானம் வந்தாப் பிறகு, இங்கு சர்வதேசப் போட்டிகள் நடப்பதில்லை. கழகங்களிடையேயான போட்டிகள் இன்றும் நடக்கிறது. கொழும்பு ஓவல் என்றும் இம்மைதானத்தை அளைப்பார்கள்.
  28. மே.இ.தீ நாட்டுபாடலை பாடிய உத்வேகத்தை பார்த்தால் ஒற்றுமையா, உத்வேகமா விளாடுவாங்கள் போல கிடக்கு. வழமையா பாட்டு பாடும் போது பலர் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்கு நிற்பது போல் நிற்பார்கள்😂.
  29. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி அறிவியல் உலகை ஆள்கிறார் என லூசுதனமாய் பேஸ்புக்கில் எழுதபடும் பிஸ்கோத்து தகவல்களை இப்படித்தான் நாறடிக்க வேண்டும். இல்லை என்றால் நிஜமாக சாதிக்கும் தமிழரின் சாதனைக்கும் மதிப்பில்லாமல் போய்விடும். கீழே மித்திலாவின் வேலையிட புரோபைலை தந்துள்ளேன். அவர் ஒரு சாதராண முனைவர்தான். அப்படி ஒன்றும் அரிய சாதனை நிகழ்தியதாக அதில் இல்லை. தமிழன் என்பதால் பிஎச்டி எடுப்பது, மருத்தடிக்கும் விமான லைன்சன்ஸ், ரோட்டு கூட்டு இயந்திர லைசன்ஸ் எடுப்பதை எல்லாம் சாதனை என கொண்டாடுவதும், ஏனையோரும் அதை ஏற்க வேண்டும் என நினைப்பதும் மடமை. இவற்றை எல்லாம் ஒரு அமேசன் பழங்குடியில் செய்யதால் அதன் முதன் முயற்சி பாராட்டலாம், ஈழதமிழரில் அல்ல. https://profiles.sydney.edu.au/mehala.balamurali
  30. நாளொன்றுக்கு 100 புற்றுநோயாளர்கள்; 40 பேர் உயிரிழப்பு - பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி 10 Feb, 2026 | 04:48 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது இந்நாட்டின் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது. அந்த வகையில் நாளாந்தம் நாடளாவிய ரீதியில் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தைத் தழுவுகின்றனர். நோயாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவு வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மத்திய நிலையத்தை திங்கட்கிழமை (09) பிரதியமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போது இந்நாட்டில் புற்றுநோய் ஒரு பிரதான சுகாதாரப் நெறுக்கடியாக உருவெடுத்துள்ளது. சிகிச்சைகளுக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக நாட்டிள் உள்ள பெரும்பாலான நோயாளர்கள் புற்றுநோயின் இறுதி நிலைகளிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் அவர்களுக்குப் பலதரப்பட்ட சிகிச்சை முறைகளை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு நாட்டில் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது. நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தை தழுவுகின்றனர். அந்தவகையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் மத்திய நிலையங்களை நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய 6 பிரதான வைத்தியசாலைகளில் இத்தகைய நிலையங்கள் இயங்கி வருகின்றன. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த மத்திய நிலையத்தில் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்கள் இங்கு பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளான உணவுப் பாதுகாப்பு, சூழல் காரணிகள் மற்றும் விவசாய இரசாயனப் பயன்பாடு குறித்து அமைச்சு மட்டத்திலான விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது. வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுதல் காரணமாக நாளாந்தம் 10 வாய்ப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழக்கின்றனர். அதேபோல், பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் என்பன அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க முறையான விழிப்புணர்வும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளும் அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/238330
  31. அவுஸ்திரேலியா அணித்தலைவர் மார்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. மார்ஸ் தொடரில் விளையாடாத சந்தர்ப்பம் வந்தால் அவருக்கு பதிலாக மாற்று துடுப்பாட்ட வீரர் தேவை என்பதினால் ஸ்டீவன் ஸ்மித் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.
  32. ராஜா பாதி ரஹ்மான் பாதி…90s teenager 😀 ஆப்கானிஸ்தான் குர்பாசை முதல்ல அனுப்பி இருக்கலாம்.
  33. நான் கேள்விபட்டுள்ளேன். சாணியை பாம்பின் முத்து மேல் போடும் தைரியம் எல்லாம் இல்லை, அதனால் பாம்பு முத்தை துப்பிய பின் இயற்கை/அகால மரணம் அடைந்தால் நான் போய் முத்தை நைசாக எடுத்து கொள்ளலாம் என நப்பாசை கொண்டதுண்டு😂.
  34. இலங்கை அணி விளையாடும் குறூப்பில் அவுஸ்ரேலியா உள்ளடங்கலாக அனைத்து அணிகளும் மோசமான அணியாக இருக்கின்றது, ஆப்கானிஸ்தானுக்கு நியுசிலாந்து, தென்னாபிரிக்கா என நல்ல அணிகளுடன் போட்டியினை வைத்து ஒரு நல்ல அணியினை சுப்பர் 8 முன்னமே கழட்டி விடப்போகிறார்கள், இன்றைய போட்டி தென்னாபிரிக்காவுடன் ஆப்கானிஸ்தானுக்கு, இந்திய பிட்ச் மோசமான பிட்ச் இந்த் மோடி பிட்ச் ஒன்றுக்கும் உதவாத செத்த பிட்ச், போட்டி வேறு காலையில் நடக்கவுள்ளது 250 ஓட்டங்கள் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கை அணி சுப்பர் 8 க்கு தகுதியான அணியே இல்லை, சிம்பாவேயிடம் தோற்றால் சிம்பாவே சுப்பர் 8 க்கு போய்விடும் என நினைக்கிறேன். கோசான், எனது இடத்தினை தற்காலிகமாக கைப்பற்றியுள்ளார் அவ்வளவே!
  35. இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நமீபியா அணி, ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டனின் 42 (38 பந்துகளில்) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, பஸ் டீ லீட்டின் ஆட்டமிழக்காத 72 (48 பந்துகளில்) ஓட்டங்களின் உதவியுடன் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, முஹமட் வஸீம் ஆட்டமிழக்காமல் எடுத்த 66 (45 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் 55 (47 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டிம் செய்ஃபேர்ட் மின்னல்வேக 89 (42 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஃபின் அலென் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 (50 பந்துகளின்) ஓட்டங்களுடன் 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி சஹிப்ஸடா பர்ஹானில் அதிரடியான 73 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், பாபர் அஸாமின் 46 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஷடாப் கான் மின்னல் வேகத்தில் எடுத்த 30 (12 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணியில் ஷுபம் ரஞ்சனே 51 (30 பந்துகளில்) ஓட்டங்களையும், ஷயான் ஜஹங்கிர் 49 (34 பந்துகளில்) ஓட்டங்களையும் எடுத்திருந்தாலும், இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல் மூன்று நாட்கள் முதல்வராக இருந்த @செம்பாட்டான் 13வது இடத்திற்கு சறுக்கிவிட்டார்!
  36. காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே ....... மனோரமா & தங்கவேலு . ........! 😍
  37. ஆசிரியர் ஆசிரியர் என்று எழுதி உள்ளார்கள். மாணவியை தாக்கிய அந்த ஆசிரியர் ஆணா அல்லது பெண்ணா?
  38. ஆண்குறிகள் அழுக்கானவை நீலாவணை இந்திரா 1 கோதுமை ரொட்டியென நிலத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கும் சூரிய வெப்பம் தகிக்கின்ற பட்டப்பகலில் நான் அக்காட்சியைக் கண்டேன். ரோமன் ஃபாதரின் முகம் வழக்கத்தை விடவும் அதிகமாக விகாரமடைந்திருந்தது. அவர் கைகளில் இருந்த சவுக்கு மரக்கம்பின் முனையில் சிறுதுளி இரத்தம் அப்பியிருந்ததைக் கூட என்னால் கவனிக்கமுடிந்தது. வெயில் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த நண்பகலில், ஒழுங்காகவும் ஒழுங்கின்றியும் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளுக்கு நடுவில் குச்சானை முட்டுக்காலில் வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டுத்திரும்பிய நீலக்களிசனைக் கூட மாற்றாமல் கிழிக்கப்பட்ட சட்டையுடன் முகமெங்கும் அழுது வடித்த கண்ணீர்க்கறையுடன் வானத்தைப் பார்க்கும் படியாக அவன் இருந்தான். அவனது களிசனில் மூத்திரம் ஒழுகியிருந்தது. முன்னால் சில துண்டுப் பத்திரிகைகளும் அதில் அரைகுறை ஆடைகளுடனான நடிகைகளது புகைப்படமும் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நஞ்சு குடித்துச் செத்துப்போன டேவிட்டின் கல்லறைக்கு மேல் பெரு மணலைப் பரப்பி வைத்திருந்த ஃபாதர், அவனை முட்டுக் காலில் இருத்திய விதத்தைப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. அவர் அவனை எதற்காகவோ திட்டிக்கொண்டிருந்ததையும் வேசியின் மகன் என்று உரத்துக் கூறியதையும், நான் மறைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் நிச்சயமாகக் கையும்களவுமாகப் பிடிபட்டிருக்க வேண்டும். (சுயமைதுனம் செய்யும் போதே ஃபாதர் அவனைக் கண்டிருக்கவேண்டும்.) நிலத்தில் விழுந்த பனம்பழம் போன்ற தொத்திப்பான முகத்தையுடைய குச்சான், மெலிந்த தேகமுடையவன், எண்ணை அப்பிய முகத்துடன், கிறிஸ்துமஸ் இற்கு வழங்கப்படும் சட்டையை வருடம் முழுக்கப் போட்டுக் கொண்டு அலையும் எங்களைப் போன்றவர்களுள் அவனும் ஒருவன். அவனைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டுமென்றால் அவனது சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருக்கும் குறளி வித்தைக்காரனானவன், தனது சகோதரி மேர்லினுடன் தேவாலயத்தின் விடுதியில் தான் வசித்துவருகின்றான். அப்துல்லாஹ் தான் முதன் முதலாக எங்களுக்குச் சுயமைதுனம் செய்யப் பழக்கிவிட்டவன். ஆண்குறியிலுள்ள தோலை மேலும், கீழுமாக அசைக்கையில், அதிலிருந்து வெண்ணிறமாக திரவம் பீச்சியடிக்கும் போதெல்லாம் உடலுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை எங்களால் விவரிக்க முடியவில்லை. அதிலிருந்து நாங்கள் அடிக்கடி அதனைத் திரும்பத் திரும்பச் செய்ய ஆசைப்பட்டோம். அப்துல்லாஹ்வின் கரைவலைத் தோணியின் மறைவில், தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறைகளுக்குள் உள்ள பனை மரங்களுக்கிடையில், சவுக்குமரப் பற்றைக்குள், கடலை ஒட்டியிருந்த பாறைகளின் மறைவில் என நானும் குச்சானும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சுயமைதுனம் செய்து கொண்டோம். எங்களுக்குள் அது அலாதியான ஒரு ஆசையைத் தூண்டிவிட்டது. சாப்பாடு, தண்ணீர் போல நாங்கள் தினமும் அதனை செய்து கொண்டோம். பள்ளி லைப்ரரியில் இருந்து பழைய நாளிதழ்களில் உள்ள நடிகைகளின் புகைப்படங்களைக் கிழித்துக் கொண்டு வந்தோம். அதைப் பார்த்துக் கொண்டே செய்வதற்கும் பழகியிருந்தோம். அப்படியொரு நாளிதழ் புகைப்படத்தில் வெள்ளையாக இருந்த நடிகையை குச்சான் விரும்பத் தொடங்கினான். அவளைப் போன்ற ஒரு பெண்ணைத்தான் காதலிப்பேன் என்றும் கூறிக் கொள்வான். அவன் தனது அம்மா மர்யத்தையோ அப்பாவையோ பார்த்ததில்லை. ஆனால் இந்த நடிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாவின் பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போன்றே இருக்கும் என்று குச்சான் சொல்வான். ஒரு தடவை கூட அந்தப் புகைப்படத்தை அவன் பிரிந்ததே இல்லை. தனக்கு விருப்பமான கணிதப்புத்தகத்தினுள் அதை ஒழித்து வைத்திருந்தான். 2 சிம்னி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் கருக்கல் பொழுதொன்றில் கடல் பெரும் பூதம் போலக் காட்சியளித்தது. மர்யம் சிவப்புக் கற்கள் பதித்து வைத்திருந்த தனது தங்கத் தோடுகள் இரண்டையும் கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்தாள். இரசமிழந்து தேய்ந்து போயிருந்த உடைந்த கண்ணாடியின் மீதிருந்த பல்லியொன்று அவளது நிர்வாணத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அவளது கழுத்தின் கீழே கண்டித்துப் போயிருந்த இரத்த வடுக்கள் தென்பட்டன. முலைகள் இரண்டும் பருமனில் பெரிதாகியிருந்தன. சகாயப்பனை திருமணம் செய்த போதிருந்த நீளமான முடி அவளிடமிருக்கவில்லை. அவை கொட்டப்பட்டிருந்தன. இடது காதுக்கு மேலால் சிறுநரையுடன் மொட்டையாகத் தலை தெரிந்தது. பெரும்பாலும் இப்போதெல்லாம் அவளிடம் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இளம் வயதாக இருந்தாலும் தொடர்ந்தும் அரிசிக்கும், சாளை மீன்களுக்காகவும் உடலை விற்றுக் கொண்டிருப்பவளிடம் தேகச்சத்து குறைந்து போயிருந்ததே அதற்கான காரணமாயிருந்தது. கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்த மர்யம் கைகள் இரண்டையும் உடலோடு சேர்த்து இறுகப்பற்றிக் கொண்டு எழுந்தாள். அன்று குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. கிழிந்த பாயில் படுத்துக் கொண்டிருந்த மேர்லின் மீது தன்னுடைய போர்வையை எடுத்துப் போர்த்தினாள். அவளுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. பைபிளை எடுத்துப் புரட்டினாள். மத்தேயு 11 வசனம் 28 ல் ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்கிற வசனத்தை வாசித்தவள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள். ரோமன் ஃபாதரேர் அவள் சேர்ச்சின் தாழ்வாரத்தில் இளைப்பாறுவதைக் கூட அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கையில் தேவாலயத்திற்குள் உள்ள தேவனால் இரட்சிக்கப்படுதல் நடைபெறாத காரியமாகவே இருந்தது. அவள் ஒரு விபச்சாரி என்பது அனைவருக்கும் பட்டும் படாமலும் தெரிந்திருக்க, அவள் தேவாலயத்திற்குள் வரக்கூடாதென்பதும் ஊரில் இருக்கும் வரைக்கும் கல்லறைத்தோட்டத்தில் ஊழியம் செய்ய வேண்டுமென்பதும் தேவாலய நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டமாயிருந்தது. இந்த நிலையில்தான் மர்யத்திற்கும் ஜேக்கப்பிற்குமான சந்திப்பு நிகழ்ந்தது. அந்தக் கடற்கரையோரக் கிராமத்திற்கு வருகை தந்திருந்த தொண்டு நிறுவனத்தின் ஊழியனாக அவன் இருந்தான். அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேக்கப்; கிறிஸ்தவத் தொண்டு நிறுவனமொன்றின் கணக்காளராக இருந்தான். சுனாமியால் சிதிலமடைந்த தேவாலயத்தினைப் புனரமைப்புச் செய்து மீளவும் ரோமன் ஃபாதர் மூலம் கிறிஸ்தவச் சபைக்கு ஒப்புக் கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் ஃபாதர் அவனிடம் மட்டுமே குழைந்து குழைந்து பேசுவார். அதிக வளர்த்தியுடன் இருந்தவன் நவீன முறையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தேவாலயத்தின் நில வரைபடமொன்றைத் தன்னோடு எப்போதும் வைத்திருந்தான். அதனுடன் தேவாலய ஊழியர்கள் தங்குவதற்கென ஒரு தங்குமிடமும், சமையலறையும் அதற்கான தாழ்வாரமும் கூடவே கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலைத்தளத்தைப் பார்வையிடுவதுடன் அதற்கான பணத்தினை வங்கியிலிருந்து பெற்று வழங்குவதும் பின்னர் தினக் கணக்குகளைக் குறித்து வைத்து வாரம் ஒரு முறை குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளருக்குக் கணினி மூலம் அறிவிப்பதும் அவனது வேலையாக இருந்தது. அந்த ஊரில் இருந்த எல்லோரும் ஜேக்கப்பை வெள்ளைக்கார பொஸ் என்றே அழைத்தார்கள். மர்யமும் அவனை அப்படியே அழைத்தாள். ‘வெள்ளைக்கார பொஸ் தேத்தண்ணி குடிக்கிறீங்களா?’ கட்டிட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மர்யத்தின் கேள்விகளால் உந்தப்பட்டு ‘என்ன?’ என்பது போல விழிகளை உயர்த்தினான். மர்யம் தனது கைகள் இரண்டையும் மேல் கீழாகத் தேத்தண்ணியை ஆற்றுவது போல் சைகை காட்டியபடி வெறும் குவளையொன்றை வாயருகே வைத்து ஊதி ஊதி தேநீரை அருந்துவது போல் பாவனை செய்தபடி தேநீர் வைத்திருக்கும் பிளாஸ்க்கைக் காட்டினாள். அவனும் மனதுவிட்டுச் சிரித்துக் கொண்டே ஆம் என்றபடி தலையாட்ட அவள் ஒரு குவளைத் தேநீரை அவனுக்கு வழங்கினாள். இஞ்சியின் ரசம் ஏறியிருந்த தேநீரைப் பருகியவன் சீனி அதிகம் என்றாலும் சுவையாக இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூற எதுவும் அறியாதவளாக மர்யம் சிரித்தபடி முகத்தைத் துடைத்தவாறே விடைபெற்றாள். ஜேக்கப் இற்கான உணவைத் தயாரிக்கவென இருந்த தேவாலயச் சமையற்காறி ரோசம்மா, மேல் வருத்தங்கண்டு வரமுடியாமல் போகவே அந்த வேலைக்காக மர்யம் நியமிக்கப்பட்டாள். ஜேக்கப்பிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும், வேண்டிய வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும். அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது, அவனது நீண்ட மேலங்கியை ஸ்திரி பண்ணிக்கொடுக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது. வெள்ளைக்காரர்களுக்கு அதிகம் பேசும் கறுப்பர்களைப் பிடிப்பதில்லை. ஆகவே கவனமாக இருக்கவேண்டும் என்கிற ரோமன் ஃபாதரின் பல நிபந்தனைகளுடன், அவள் அவனது வசிப்பிடத்திற்குள் நுழைந்த போது, ஜேக்கப் தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான். விடுதியில் யாரும் இல்லாததால் அவனது குளியலறைக்கதவு தாழ்ப்பாள் இடாமலே இருந்தது. முழு நிர்வாணத்துடன் அவன் குளித்துக் கொண்டிருந்த கோலம் மர்யத்திற்கு விநோத அனுபவமொன்றை ஏற்படுத்தியது. மெல்லிய பாடலொன்றை உரத்துப்பாடிக் கொண்டிருந்தவன் தனது முகத்தில் விழும் நீரை கழுத்தளவு வளர்ந்த தலை மயிர்கள் மீது கைகளால் தடவிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தான். பக்கவாட்டில் சிலுவையில் அறையப்படாத இயேசு நாதராக இருந்தவன் பாடலின் சந்தத்திற்குப் பொருத்தமில்லாத குரல்வளத்தோடு அலட்டிக் கொண்டிருந்தது, ரசிக்கும் படியாக இல்லாதது போல அவனுக்கு வேறு விதமான உடலமைப்பும் இருந்ததையும் மர்யம் கவனித்தாள். தொடைகளிலோ, மார்பிலோ மயிர்கள் இல்லாத வழவழப்பான தேகத்தை ஜேக்கப் கொண்டிருந்தான். மார்பு சற்று இறக்கமாயிருந்தது. பெண்களுக்கான மார்பின் அளவில் பாதிக்கும் குறைவான அளவு கீழ் நோக்கியதான மார்பகங்களும் வழக்கத்திற்கு மாறான இடுப்பும் அவனுக்கிருந்தது. ஆண்குறி மிகவும் சிறியதாக இருந்தது. அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் பலரிலும் சிறிதான ஆண்குறி அவனுடையதாக இருந்தது. அடர்ந்து திரண்ட மயிர்களில் கீழிருக்கும் அடர்த்தியான வீங்கியபடியிருக்கும் சகாயப்பனின் நீண்ட ஆண்குறி ஸ்கலிதம் அடைந்தபின் சுருங்கிவிடும் அளவிலும் சிறிதான அளவில் அது இருந்தது. கடல் நீரின் உப்புத்திரண்டிருக்கும் ஆண்குறிகள் பலவற்றை அவள் உள்ளெடுத்துக் காறி உமிழ்ந்த தருணங்களையெல்லாம் அவனது உறுப்பு அவளுக்கு ஞாபகப்படுத்தியது. தலையைத் திருப்பி அவளை ஒரு கணம் அவன் பார்த்தான். எந்த சலனமுமின்றி அவனது இடுப்பின் கீழ் ஆராய்ச்சி நடாத்திக் கொண்டிருந்த மர்யத்தை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவன் உஷ்…. என்று சத்தம் எழுப்ப சுய நினைவுக்கு வந்தவள் சற்று பார்வையை வேறுபக்கமாகத் திருப்பிக் கூரையை வெறித்தாள். ஈரமான தலையுடன் வெளியேறியவன் என்ன என்பது போல சைகை செய்ய பூனைக் கண்களுடன் இருந்த மர்யம் இன்னுமொரு பூனைக் கண்களுடன் இருந்தவனை உற்றுப்பார்த்தாள். சமையல் வேலைகளுக்காக வந்திருக்கிறேன் என்றவள் “கோக்கி” சமைக்க என்றாள். எனக்குத் தமிழ் தெரியும் என்றவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்தாள் மர்யம். அவனை நிர்வாணத்துடன் பார்த்தது குறித்து எதுவும் அலட்டிக்கொள்ளாதவன் உடைகளை மாற்றிவிட்டு மேசையின் மீதிருந்த மாம்பழத்துண்டுகளை உண்டுவிட்டு வெளியேறினான். விடுதி புழுதி படிந்து கிடந்தது. ஆங்காங்கே புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. மேசை மீதிருந்த சீனிப்பேணியைச் சுற்றி வட்டமிட்டு பின்னர் நேர்கோடாய் நகரும் எறும்புகள் சமையற்கட்டை நோக்கிப் பயணித்தன. கருகிய வாழைப்பழத்தோல்கள் நிலத்தில் கிடந்தன. ரோசம்மாள் வராததால் அவ்விடுதி சொற்பத்துக்குள்ளே ஜேக்கப்பால் குழப்பி வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டினாள் மர்யம். அறையைக் கூட்டித் துப்பரவு செய்தபின் பின் கிணற்று நீரை வாளியில் அள்ளி எடுத்துக்கொண்டு தரை முழுவதையும் கழுவிச்சுத்தம் செய்தாள். ஜேக்கப்பினுடைய உடைகளை முழுமைக்குமாகத் துவைத்துக் காயப் போட்ட பின்னர் சமையல் வேலைகளைச் செய்துவிட்டு வீட்டின் முற்றத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். தாமதமாக வருகை தந்த ஜேக்கப், தனது கையில் ஒரு டைரியையும், ஆங்கில நூலொன்றையும் வைத்திருந்தான். உடனே மேலங்கியை மாற்றிவிட்டு உணவு மேசையில் அமர்ந்தவனுக்கு உணவு பரிமாற எத்தனித்தாள் மர்யம். அவளை இடைமறித்தவன் நீயும் உட்காரு சாப்பிடலாம் என்றான். அவள் ஒருவித ஆச்சரியப் பார்வையை அவன் மீது செலுத்தினாள். அதை உணர்ந்து கொண்டவன். ஆங்கிலத்தில் சிற் என்றான். தனித்து விடப்பட்டிருந்த செம்மறியாடொன்றை இழுத்துக் கட்டியது போன்ற மனநிலையில் அவளிருந்தாள். அவனது தமிழ் உச்சரிப்புக்கள் வேறுவிதமாக இருந்ததையும் மர்யம் கவனிக்கத் தவறவில்லை. ‘நீ சில்வியா பிளாத் படித்திருக்கிறாயா?’ என்றான். ‘இல்லை’ என்றாள் மர்யம். சில்வியா பிளாத்தின் டியூலிப் கவிதையை விவரிக்கத் தொடங்கியவன் அவை ரோஜா மலர்களிலும் அழகானவை. குளிர்காலம் வரும் போது அவை இன்னும் அழகாக இருக்கும். எப்போதெல்லாம் எனக்கு மனம் உறுத்தலாக இருக்கிறதோ அப்போதெல்லாம் டியூலிப் மலர்களுள்ள தோட்டத்தில் கவிதைகளுடன் நான் அமர்ந்து விடுவேன். அந்தப் பொழுது மிகவும் ஆசுவாசமாக இருக்கும். இன்றைய உணவு ரொம்பச் சுவையாக இருந்தது என்றவன், சில இனிப்புக்களைக் கொடுத்துச் சென்று வா என்று அவளை வழியனுப்பி வைத்தான். 3 தேவாலயமும், விடுதியும் கட்டிமுடிக்கப்பட்டுக் கையளிக்கப்படவிருந்த நாட்களுக்கு முன்னராகவே ஜேக்கப்பிற்கும் மர்யத்திற்கும் இடையில் இனம்புரியாதவொரு அன்பும், உறவும் காணப்பட்டது. திராட்சை வைனையும், தென்னஞ்சாராயத்தையும் அருந்திக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில் மேர்லினை நலம் விசாரித்தவன் தானும் அவளைப்போலவே வாழ ஆசைப்பட்டதைக் கூறினான். நிறைவெறியில் தலைமுத்திய தனது தந்தையைப் பற்றி ஏகத்திற்குத் திட்டித்தீர்த்தவன் தமிழும், ஆங்கிலமும் கலந்தபடி தனது கதையைக் கூறத் தொடங்கினான். ‘மர்யம் உன்னை நான் காதலிப்பதாக நீ நினைக்கிறாயா?’ என ஆரம்பித்தவன் அவளது பதிலைக் கேட்காமலே ‘இல்லை’ என்றான். அப்படியென்றால் உன்னுடன் செக்ஸ் வைக்க விரும்புகிறேனா என்று கேட்டவன் அதற்கும் அவளைப் பதில் கூற விடாமல் ‘நிச்சயமாக இல்லை… ஆம் நிச்சயமாக இல்லை’ என்று தலையை இருபக்கமாக ஆட்டியபடி பேசினான். சவுத் வேல்சில் தான் பிறந்தேன். சரியாகச் சொன்னால் அங்கே கடற்கரையோரமாகக் கழிமுகம் இருக்கும் யம்பா எனும் சிறுநகரம். அழகான நகரமது. எனது தந்தை அங்கிருந்த தபால் நிலையத்தில் கடைநிலை ஊழியராக இருந்தார். அங்கு வரும் பொதிகளைப் பக்கத்திலுள்ள இலூக்கா, பலினா, லிஸ்மோர் ஆகிய நகரங்களுக்கு விநியோகிப்பது அவரது வேலையாக இருந்தது. ஓரளவு திக்கிப் பேசும் அவரின் கோபத்தின் இரண்டாவது இலக்காக நான் இருந்தேன். ஆம்… முதல் இலக்காக எனது அம்மா இருந்தாள். எழுபதுகளின் பின்னர் அதிகமாகப் பயிரிடப்பட்ட கரும்புத் தோட்டமொன்றில் கரும்பு வெட்டும் வேலை அவளுடையது. தினமும் நீராவிப் படகொன்றில் பயணித்துக் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று விடுவாள். அங்கு நீள் வரிசையில் இருக்கும் கரும்புகளை வெட்டிய பின்னர், உருட்டிச் செல்லப்படும் சக்கர வண்டிகளில் ஏற்றிவிட்டு மீளவும் வெட்டச் சென்று விடுவாள். கரும்பு வெட்டு இல்லாத நாட்களில் தொழிற்சாலையில் இருக்கும் உபரி வேலைகளுக்காகவும் அவள் செல்வதுண்டு. பாடசாலை விடுமுறைவிடும் நாட்களில் நானும் அவளுடன் கரும்புத் தோட்டத்திற்குச் செல்வது வழக்கமாய் இருந்தது. அகலமான பாத்திகளின் இடையே நீள் வரிசையில் நடப்பட்டிருக்கும் கரும்புகள் உங்கள் ஊரிலுள்ள கிளிசரியாத் தடிகளைப் போன்று மொத்தமாகக் காணப்படும். அவற்றை அம்மா வெட்டித்தர, ஒவ்வொரு கரும்பாக நான் சக்கர வண்டியில் போடுவேன். அவள் என்னை வேலை செய்ய விடுவதேயில்லை. எனது உள்ளங்கை வியர்க்கும் போது அவற்றை தனது உள்ளங்கைகளால் அழுத்தித் துடைத்து விடுவாள். பின்னர் சிறுதானியங்களை அவித்த நீரை நானும் அவளும் பருகுவோம். அது ஒரு விலை குறைந்த சூப் போன்று இருக்கும். அங்கிருந்து பயணமாகி வீட்டிற்கு வரவும், அப்பா வரவும் சரியாக இருக்கும் என்று கூறிய ஜேக்கப் தலையின் மேல் சுழலும் மின்விசிறியை உற்று நோக்கினான். நான் ஒரு ஆண் போன்று இல்லாதது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது நடவடிக்கைகளில் ஒருவிதப் பெண் தன்மை இருந்தது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. வைத்தியர்கள் அது ஹார்மோன் பிரச்சினையாக இருக்கலாம் என்றார்கள். நான் முழுமையாக ஆணாக இருக்கவில்லை என்பதை நானே உணர்ந்தேன். ஆனால், நான் ஒரு முழுமையான பெண்ணும் இல்லை என்பதையும் உணர்ந்தேன். என்னோடு படித்த பையன்களது பிறப்புறுப்பு போன்று என்னுடையது இருக்கவில்லை, உடலும் இருக்கவில்லை ஆனால் திருநங்கை எனும் அளவிற்கும் நான் இருக்கவில்லை இப்படியான ஒரு உடலியல் பிரச்சனை எனக்குள் இருக்கிறதை என்னுடைய பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே நான் அறிந்து கொண்டேன். எனக்கு ஆண்களின் மீது ஈர்ப்பு வரவில்லை, பெண்களின் மீது சுத்தமாக வரவேயில்லை. இந்தச் சமூகத்தைக் குறித்தான ஒருவித அச்சம் என்னிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதை விடவும் தனது பெல்ட்டினால் அடிக்கும் அப்பாவிடம் அதிக பயம் இருந்தது. ஆணின் நடத்தைகள் கைவரப்பெறாத என்னை அவர் திட்டியபடியே இருந்தார். இதற்காகவே நான் ஆண் போன்று நடிக்கப் பழகிக்கொண்டேன். அவ்வப்போது அந்த நடிப்பு தோற்றுப்போகும் வேளையிலெல்லாம் நான் மீண்டும் தாக்கப்பட்டேன். என்னால் அம்மாவும், அம்மாவின் கண்ணீரால் நானும் திரும்பத் திரும்ப உடலளவிலும் மனதளவிலும் தாக்கப்பட்டோம். நான் முழுமையற்ற ஆணாகவும், முழுமையற்ற ஆண் உறுப்புடனும் பிறந்தது குறித்து வெட்கப்பட்டேன். என்னுடைய உடல் சார்ந்து எனக்குக் கழிவிரக்கம் உண்டானது. அதை நான் வெறுத்தேன். அப்பாவையும் வெறுத்தேன். ஆண்களையும், ஆண்மையையும் வெறுக்கத்தொடங்கினேன். நான் நேசித்தது அம்மாவை மட்டும்தான் என்றான். அப்பாவின் அதிகாரத்தில் இருந்து தப்பிக்கவே நான் திருச்சபையின் விடுதியில் சேர்ந்தேன். அப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றதொரு உணர்வு இருந்தாலும் அம்மாவை இழந்தது குறித்து வருத்தமடைந்தேன். அங்கிருந்து பல நாடுகளுக்குச் சென்றேன். தனிமையில் வாழ்ந்தேன். இந்தியாவில் இரண்டு வருடத்திற்கும் மேலாக இருந்தேன். தமிழை நன்கு பேசவும், கொஞ்சம் வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். கச்சத்தீவு தேவாலயத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வந்தேன் என்றவன் தனது வைனின் இறுதிமிடறையும் பருகினான். யாரும் எனது தனிமைக்கு ஆறுதலாக இருக்கவில்லை என்று அவளது கைகளைப்பற்றி முத்தமிடவும், மர்யத்தின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த்துளியொன்று ஜேக்கப்பின் கைகளை நனைக்கவும், ரோமன் ஃபாதர் அவ்விடுதிக்குள் நுழையவும் சரியாக இருந்தது. தேவாலயமும், விடுதியும் திறக்கப்பட நாட்குறிக்கப்பட்டவுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளர்களும், பணியாளர்களும் வருகை தந்திருந்தனர். தேவாலயத்திற்கு வெள்ளை நிறமும், முன்னான மேல் தளத்திற்கு நீல வண்ணமும் பூசப்பட்டிருந்தது. ரோமன் ஃபாதரின் தலைமையில் ‘அர்ச்சிப்பு’ நிகழ்விற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தபடியிருக்க, ஊர் மக்கள் தேவாலயத்தின் முன்றலில் திரண்டிருந்தனர். வர்ண விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் கருணை பொங்கிய இயேசுவைத் தாங்கிய அன்னை மரியாள் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. மெழுகுவத்திகளுடன் ஊர்வலமாக மக்கள் திரண்டிருந்தனர். மேர்லினோ ஜேக்கப் வாங்கிக் கொடுத்திருந்த புதிய சட்டையை அணிந்திருந்தாள். மர்யம் வாசலில் நின்றபடி கருணை கூர்ந்த கடவுளைத் தொழுது கொண்டிருந்தாள். கொரிந்தியார் 13:7 இல் உள்ளபடி அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்ற வாசகம் பதிக்கப்பட்டிருந்த வளைவை நோக்கி வெளிப்பட்ட ஜேக்கப், வாசலில் நின்று கொண்டிருந்த மர்யத்தின் கைகளைப் பிடித்து ஆலயத்திற்குள் அழைத்துவர ரோமன் பாஃதர் உள்ளிட்ட ஊரவர்கள் எரிச்சலுடன் அவனைப் பார்த்தனர். சமையற்காரி ரோசம்மாளைத் தாண்டி உள்ள வந்தவன் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடத்தையில் பிழைத்த அகோலா, அகோலிபாளைத் தண்டித்தது போல் கர்த்தராகிய இயேசு இவளைத் தண்டிப்பதாக இருந்தால் அவளை தேவாலயத்தில் ஊழியம் செய்யும் நிலைக்கு வழியேற்படுத்தியிருக்கமாட்டார். அவளைக் கல்லெறிந்து கொல்லுமளவிற்கு இங்கு தூய்மையான ஆண்கள் எவருமில்லை. அவளது குடும்பத்தாரைத் தொண்டு நிறுவனம் தத்தெடுக்கிறது. இந்த ஆலயத்திற்குப் பாத்தியப்பட்டவளாகச் சாகும் வரை அவள் ஊழியம் செய்யட்டும். அவளுக்கான மாதச் சம்பளத்தை எங்கள் தொண்டு நிறுவனம் பார்த்துக்கொள்ளும். சமையல்காரி ரோசம்மாளுக்கு உதவியாகவும், சபை ஊழியர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கவும் அவளுக்கு இந்தத் திருச்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். ரோமன் ஃபாதர் இதனை வழிமொழிவார் எனக்கூறவே சபை ஒரு கணம் துணுக்குற்று நின்றது. பசப்பி, வெள்ளைக்காரனை மயங்கிப் போட்டாள் என்று சில குரல்கள் அலை மோதப் புதிய தேவாலயத்தின் சுவர்களில் அவை எதிரொலித்து அடங்கின. மர்யம் கண்ணீர் மல்க ஜேக்கப்பின் கால்களில் விழவும் எதுவும் செய்ய முடியாத ஃபாதர் தேவனின் ஆசி அதுவென்றால் அப்படியே ஆகட்டும் என்று கூறவும், மெழுகுவத்திகள் கரைந்தொழுகிப் பலரது விரல்களைச் சுட்ட போதே திருப்பலி ஆரம்பமானது. சில தினங்களுக்குப் பின்னர் ஜேக்கப் அவுஸ்திரேலியா திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் வந்தது. இறுதியாக அவன் மர்யத்தைச் சந்திக்க வந்த போது அவள் அழுது கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியவன் அவளது புகைப்படமொன்றை அவளுக்குப் பரிசளித்தான். நான் எனது அம்மாவுடன் உன்னைக் காண மீண்டும் வருவேன் என்று ஜேக்கப் உறுதியளித்துச் சென்ற மூன்றே மாதத்தில் கர்ப்ப வாந்தியெடுத்தாள் மர்யம். மர்யத்திற்குத் தலைசுற்றலுடன், காய்ச்சலும் ஆரம்பமானது. ஊர் முழுக்க வெள்ளைக்காரனுடன் படுத்தெழும்பி விட்டாள் வேசை என்கிற பிதற்றல் கதைகள் அதிகம் உலாவத் தொடங்கின. விடுதியின் அறையில் அவளை வைத்திருப்பது ரோமன் ஃபாதருக்கு எரிச்சலைக் கிளப்பியது. அவளது வயிறு வளருகையில் தேகம் மெலிந்து சூம்பிப்போனது போலானது. சமையல்காரி ரோசம்மாள் மட்டும் அவளுக்கு ஆதரவாக இருந்தாள். மெல்ல மெல்ல இருமத்தொடங்கியவள் அடிக்கடி மூச்சிரைப்பிற்கு உள்ளானாள். இரத்தம் கலந்த சளி அவளுடலில் இருந்து வெளியானது. அதைக்குறித்து அவள் சட்டை செய்யாதிருந்தாள். இரவு முழுக்கக் கண்களை மூடியபடி இருந்தாள் பின் தீராத இருமலால் அவதிப்பட்டாள். பைபிளை வாசித்தபடி உளமாற தனது கணவன் சகாயப்பனை நினைத்துக் கர்த்தராகிய இயேசு என்னும் ஆண்டவர் தனக்குப் பாவமன்னிப்பு அளிப்பார் என்று புலம்பினாள். இருமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. தேய்பிறை நாளொன்றில் சமையல்காரி ரோசம்மாள் உதவியுடன் குறைமாதக் குழந்தையாகக் குச்சானைப் பெற்றெடுத்தவள் காச நோயால் பீடிக்கப்பட்டதை அறியாமலே சிலநாட்களின் பின் இருமி இருமிச் செத்துப் போனாள். விடுதியில் இடம் கிடைத்தாலும், கல்லறைத் தோட்டத்தில் இடம் கிடைக்காததால் கடற்கரையோரத்திலே அவளது சடலம் புதைக்க அனுமதிக்கப்பட்டது. ரோமன் ஃபாதர் தள்ளி நிற்க ரோசம்மாளும் சில மீனவர்களும் சேர்ந்து சடலத்தைப் புதைக்க குச்சானைக் கைகளில் ஏந்தியபடி மேர்லின் அழுது கொண்டிருந்தாள். அதன் பிறகு மர்யத்தின் அத்தனை வேலைகளையும் சேர்ச்சின் விடுதியில் தங்கியிருந்த மேர்லின் செய்து கொண்டே தனது தம்பியையும் ரோசம்மாளின் உதவியுடன் வளர்த்து வர எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் அவளை அடிமை போல நடாத்தத் தொடங்கினார் ரோமன் ஃபாதர். 4 வழக்கம் போல குச்சானும், நானும் தும்பி பிடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தோம். உலங்கு வானூர்தி போல படபடவெனச் சிறகடித்துக்கொண்டு திமிருடன் அலைகிற தும்பி, சிறு செடிகளுக்குள் புகுந்து புகுந்து பின்னர் ஏதாவது ஒரு செடியிலுள்ள இலையின் நுனியில் அமர்ந்திருந்து, தனது உடைந்த கண்ணாடிச்சில்லுகளை ஒட்ட வைத்திருப்பது போலிருக்கும் கண்களைச் சுழற்றி அங்குமிங்கும் இரைகௌவிகளை நோட்டமிட்டபடியிருக்கும். அப்போதுதான் குச்சான் தன்னுடைய வேலையைத் தொடங்குவான். அடிக்கடி வியர்த்துக் கொண்டிருக்கும் தனது உள்ளங்கையைச் சட்டையில் தடவியபடி முடிதும்பைச்செடிகளைக் கற்றையாகப் பிடித்து எடுத்துக் கொள்வான். முடிதும்மையின் பூக்கள் வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகுடையதாயிருக்தும் அவை மேர்லினைப் போல, எனது அம்மாவைப் போல, எனது அம்மாவைப்போலவே அந்தத் துண்டுப்பத்திரிகையில் இருக்கும் நடிகையைப் போல மென்மையானதும் அழகானதுமாகும் என்பான். மேர்லினுக்கு முடிதும்பைப்பூக்களை ரொம்பப் பிடிக்கும் அதை அவள் வட்டமிட்டுச் சேர்த்து இடியப்பம் போல செய்வதுண்டு. அதற்காகவென முடிதும்பைப்பூக்களைப் பத்திரப்படுத்திவிட்டு இலைகளுடன் கூடிய செடிகளை எடுத்து வைத்திருப்பான். பூனைக்கண்களையுடை குச்சான் மெல்ல மெல்ல பூனை போல நடக்கத் தொடங்குவான். தும்பியின் வால் நீட்டப்பட்டிருக்கும் திசையில் பணிந்து செல்வான். முடிதும்பைக்கற்றையைக் கண நேரத்தில் அதன் மீது போடுவான். ‘ஒரே அமுக்கு…. மாட்டிவிட்டது… மாட்டிவிட்டது…’ என்று கத்துவான். பின்னர் ஒவ்வொரு முடிதும்பைச்செடிகளாக விலக்க அது செடிகளுக்கிடையே உள்ள இடைவெளியினூடாகப் பறந்துவிடும். அன்றும் அப்படித்தான் பல பிரயத்தனங்களுக்குப்பிறகு தும்பியொன்றைப் பிடித்தவன். சொப்பின் பேக்குகள் நிறைய முடிதும்பைப்பூக்களை எடுத்துக் கொண்டு பெருங்கடலின் அலைவாக்கரையோரமாக ஓட்டமெடுத்தான். கத்திக்கூச்சலிட்டபடி வெறி கொண்டு ஓடினான். மேர்லின்… மேர்லின்… இன்று நான் பச்சைத்தும்பியொன்றைப் பிடித்துவிட்டேன் என்றபடி ஓடினான். அவன் கூடவே நானும் பற்களும் ஈறுகளும் தெரியும் படிச் சிரித்துக் கொண்டே ஓடினேன். வழக்கத்திற்கு மாறாக, தேவாலயத்தின் முன்பு மக்கள் திரண்டிருந்தனர். விடுதியின் தாழ்வாரத்தில் மேர்லின் குத்துக்காலிட்டிருந்தாள். அவளது தலைமுடி நறுக்கப்பட்டிருந்தது. ரோசம்மாள் செருப்பை எடுத்து ஆங்… ஆங்… என்றபடி ரோமன் ஃபாதரை மூச்சிரைக்க அடித்துக் கொண்டிருந்தாள். அவள் நிறைவெறியில் மூர்க்கத்துடன் இருக்கும் புருஷனொருவன் பொண்டாட்டியைப் போட்டு அடிப்பது போல அடித்துக்கொண்டிருந்தாள். அப்பாவிப் பெண்ணை நாசம் செய்துவிட்டாயே பாவி என்று கத்தினாள். இறைவனுக்குச் சாட்சியாய்த் தொண்டு செய்ய வந்தவன் செய்கிற காரியமா எனப் பெண்களில் சிலர் குமுறினர். அங்கிருந்தவர்கள் அடித்த அடியில் ஃபாதரின் நீண்ட வெள்ளை அங்கி கிழிந்திருந்தது. கிழிந்த சட்டையில் தாடை உடைந்ததால் கசிந்திருந்த இரத்தத் துளிகள் அப்பியிருந்தது. அவர் முட்டுக்காலில் இருத்தப்பட்டிருந்தார். டேவிட்டின் கல்லறை மீதிருந்த குச்சானை விடவும் பரிதாபமான நிலையில் அவர் இருந்தார். செருப்பை வைத்திருந்த ரோசம்மாள் அவரது முகத்தில் காறி உமிழ்ந்தாள். என்னை…. மன்னித்…. என்று ஏதோ சொல்லத் தொடங்க ஃபாதரின் முகத்தில் மீண்டும் ஒரு அடி விழ, அவர் நிலை தடுமாறி தரையோடு தரையாகச் சாய்ந்தார். அவரது ஆடை கிழிக்கப்பட முழு நிர்வாணமாக நின்றவர், தனது இரு உள்ளங்கைகளாலும் அழுக்கேறிய தனது பிறப்புறுப்பை மறைத்தபடி அழுதடங்கினார். பொலிசார் சற்று நேரத்திலே அங்கு வருகை தந்தனர். மேர்லினை ஆம்பியூலன்ஸில் ஏற்றியவர்கள் ஃபாதரை தூக்கி நிறுத்தினர். உச்சக்கட்ட வலியில் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை பொலீஸ் ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போதுதான் நான் அதனைக் கண்டேன். தனது பிருஷ்டங்களை மறைக்க முடியாமல் எதிர்த்திசையில் தலைகுனிந்தபடி நடந்து கொண்டிருந்த ஃபாதரின் சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருந்தது, குச்சானுக்கு இருப்பதைப் போலவே! illustration by Sam Weber பாக்கியராசா மிதுர்ஷன் எனும் இயற்பெயரையுடைய நீலாவணை இந்திரா என்பவர், இலங்கையைச் சேர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் பிரிவில் அணுத்தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது அதே பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழிநுட்பப் பாடப்பரப்பில் தனது முதுமாணிப் பட்டத்திற்கான கற்கைநெறியினை மேற்கொள்கிறார். இவரது கக்கூஸ் வாளி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தடைப்பட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இவரது இரண்டு கவிதைகள் கிழக்கின் கவிக்கோர்வையிலும், றெதிநெந்தா என்று பேசப்பட்ட சிறுகதையொன்று கிழக்கின் நூறு சிறுகதைகளில் நூறாவதாகவும் வந்துள்ளது. கிழக்குப் பண்பாட்டலுவல்கள் நூலின் அடிப்படையில் இவரே மிகவும் இளம்வயதுடைய கிழக்கு மாகாண சிறுகதை எழுத்தாளர் ஆவார். மேலும் விவாதங்களிலும், மேடைப்பேச்சுக்களிலும் செயற்பட்டு வருகிறார். https://thadari.com/penises-are-dirty-nilavanai-intira/
  39. # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40)வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK பாகிஸ்தான் 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT WI மேற்கிந்திய தீவுகள் 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA இந்தியா 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ நியூசிலாந்து 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP இங்கிலாந்து 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE இலங்கை 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA ஸ்கொட்லாந்து 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM சிம்பாவே 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA தென் ஆபிரிக்கா 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED நெதர்லாந்து 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE நியூசிலாந்து 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA பாகிஸ்தான் 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA தென் ஆபிரிக்கா 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE அவுஸ்திரேலியா 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI இங்கிலாந்து 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA இலங்கை 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP நேபாளம் 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM இந்தியா 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM அவுஸ்திரேலியா 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE ஐக்கிய அரபு இராச்சியம் 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA நெதர்லாந்து 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA அயர்லாந்து 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT ENG இங்கிலாந்து 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA நியூசிலாந்து 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI மேற்கிந்திய தீவுகள் 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA நமீபியா 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK இந்தியா 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE ஆப்கானிஸ்தான் 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA இங்கிலாந்து 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL அவுஸ்திரேலியா 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ நியூசிலாந்து 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM அயர்லாந்து 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP ஸ்கொட்லாந்து 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE தென் ஆபிரிக்கா 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK பாகிஸ்தான் 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED இந்தியா 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI மேற்கிந்திய தீவுகள் 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM இலங்கை 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN ஆப்கானிஸ்தான் 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA அவுஸ்திரேலியா முதல் சுற்றுகுழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா பாகிஸ்தான் IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா பாகிஸ்தான் குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்றுகுழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) அவுஸ்திரேலியா இலங்கை குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI SCOT Select SCOT Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்றுகுழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) நியூசிலாந்து தென் ஆபிரிக்கா குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8சுற்றுப்போட்டிகேள்விகள்53) முதல் 64)வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK ENG 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா அவுஸ்திரேலியா சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ NZ PAK Select PAK Select SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து நியூசிலாந்து சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), ENG AUS AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, NZ IND IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். AUS IND 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) இந்தியா 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) இத்தாலி 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) சூரியகுமார் யாதவ் 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வருண் சக்கரவர்த்தி 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) அபிஷேக் சர்மா 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வருண் சக்கரவர்த்தி 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) அபிஷேக் சர்மா 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) இந்தியா
  40. இது. இலங்கை. பாஸ்போட். உள்ளவர்களை. குறிக்காது. இலங்கையில்பிறந்த. வெளிநாட்டு. குடியுரிமை. பெற்றவர்களை. மட்டுமே. குறிக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.