Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3165
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20444
    Posts
  3. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16981
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    39465
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/18/26 in all areas

  1. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, தென்னாபிரிக்கா அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அலிஷான் ஷரஃபு நிதானமான ஆடி 45 (38 பந்துகள்) ஓட்டங்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டெவால்ட் பிறெவிஸின் வேகமான 36 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டனின் அதிரடியான 30 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும் 13.2 ஓவர்களிலலேயே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 123 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா ஃபர்ஹானின் ஆட்டமிழக்காத புயல்வேக செஞ்சுரியான 100 (58 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் அதிரடியான 38 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷடாப் கானின் ஆட்டமிழக்காத வேகமான 36 (22) ஓட்டங்களோடும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கை தற்போதைய அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, ஷிவம் டுபேயின் மின்னல்வேக 66 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் நிதானமான 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் நிதானமான 31 (27 பந்துகள்) ஓட்ட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் வேகமான 30 (21 பந்துகள்) ஓட்டங்களோடும் விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா விளையாடிய மூன்று போட்டிகளிலும் முட்டை வாங்கி சாதனை படைத்துள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை எனினும் பலரின் பங்களிப்புடன் வேகமாக அடித்தாடி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!
  2. இப்படியே வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கச் செல்வதும், வடையும் கோப்பியும் அருந்திவிட்டு வருவதும் தான் நாம் காலம் காலமாகச் செய்வது. இதனால் யாருக்கு என்ன இலாபம்? இங்கிலாந்தும் எதுவும் செய்யப்போவதில்லை, அமெரிக்காவும் செய்யப்போவதில்லை, இந்தியாவும் செய்யப்போவதில்லை. இவ்வாறான சந்திப்புக்கள் எல்லாமே தமிழ்க் கட்சிகள் "நாமும் இருக்கிறோம்" என்பதை தமிழ்ச் சனத்திற்குக் காட்ட நடத்தப்படுபவைதான். இதனால் ஆன பயன் எதுவும் இல்லை. ஏனென்றால் சிங்களத்தை மீறி, அவர்களை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் வைக்கப்போவதுமில்லை, வெளிநாடுகளும் அவற்றைக் கேட்கப்போவதில்லை. அரசியலில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தபடி, பேரினவாதிகளை மடிக்குள் வரவிட்டு விட்டு இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சென்று பார்த்துப் படமெடுத்துப் போடுவதால் மட்டும் எதுவுமே ஆகிவிடாது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எவரிடமாவது இதன் மூலம் தமிழினத்திற்குச் சார்பான துரும்பைத்தன்னும் நகர்த்த முடிந்ததா என்று கேளுங்கள். அப்படியில்லை என்றால் எதற்காக இப்படியான சந்திப்புக்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றாவது கேளுங்கள்.
  3. போர்த்திகிட்டு படுத்துகவா? படுத்துகிட்டு போர்த்திக்கவா? ஒருவர் விழுந்தடித்து ஓடிஓடிப் போவார். இடையில் வந்தவர் அண்ணை எங்க இந்த ஓட்டம்? தம்பி வீடு எரியுதாமடா. அண்ணை உன்ரை வீடு மாத்திரமல்ல ஊரே எரியுது. விழுந்தடித்து ஓடிப் போனவர் ஓஓஓ அப்படியா என்று ஆறுதலாக நடந்து போகிறார். ஓடிப்போனவர் =அவுசை தெரிவு செய்தவர்கள்.
  4. இவர் யார் என்றே தெரியாமல் இருந்தது நான் செய்த பாக்கியம்...................🤣.
  5. அவ‌ரை தெரிவு செய்த‌ அரை லூசு நான் தான் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அங்கில்😄😛...................
  6. அதுதானே. அப்ப என்ன. பூசையைப் போட வேண்டியதுதான். நமீபியா ஒரு போட்டி என்றாலும் வெல்லும் என்றே நான் நினைத்திருந்தேன். இதுதான் அந்தப் போட்டியோ. கந்தப்பு ஒரு மார்க்கமாத்தான் நிற்கிறார்.😁
  7. அடுத்த சுற்றில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் என்று விடை அளித்த போட்டிகளை மழை குழப்பவேண்டும் என்று கும்பிடுங்கோ 😄
  8. எனக்கு தெரிந்தவரையில் அந்த அளவுக்கு தில் இருக்கின்ற ஆள் @vasee மட்டும் தான்............. இந்த தடவை நான் கொஞ்சமாக வசீயை இமிடேட் செய்வோம் என்று நினைத்தேன்............. முதலுக்கு நட்டமில்லை என்ற அளவில் முடியும் போல...............🤣.
  9. இப்படி மாறுவதால் தான் 😁
  10. காலில் விழுதல் என்பது தான் தன்னை அடிமையாக உணர்த்துதலின் முதற்படி. இதன் தாக்கம் தான் அதை வைத்தே பின்னர் நடைபெறும் அனைத்து குளறுபடிகளுபடிகளுக்கும் அத்திவாரமாகிவிடுகிறது.
  11. ௳ சிவமயம் வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !! தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா... மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!! வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும். சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும். அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும். சிவ சிவ ஹர ஹர ௐ வீரவேல் ௐ முருகவேல் திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.
  12. ஓம் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் இன்று விளையாடின‌து ம‌கிழ்ச்சி விக்கேட் எதுவும் எடுக்க‌ வில்லை...........வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி அருமையாக‌ ப‌ந்தை சுழ‌ட்டி போடுகிறார் பிரேம‌தாசா மைதான‌ம் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.............உந்த‌ மைதான‌த்தில் 165அல்க‌து 175 ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்........................................................
  13. ஏன் ப‌ல‌ வ‌ருட‌த்தை முன்னோக்கி போவான் 2010ம் ஆண்டுக்கு பிற‌க்கு கிரிக்கேட் அசுர‌ வ‌ள‌ர்ச்சி................ ஜ‌ரோப்பாவில் கிட்ட‌ த‌ட்ட‌ அத்த‌னை நாடுக‌ளும் கிரிக்கேட் விளையாடுகின‌ம்............... டென்மார்க் அணி கிரிக்கேட் உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து கொள்ள‌ இன்னும் 20வ‌ருட‌ம் எடுக்க‌லாம்.............. ஜ‌ரோப்பா கிரிக்கேட் தொட‌ர் ஒன்று வைச்சா ந‌ல்லா இருக்கும் ஆனால் அதுக்கும் கால‌ம் எடுக்கும் முந்தி தொட‌ர்ந்து அதே அணிக‌ள் தான் கிரிக்கேட் விளையாடின‌வை இப்ப‌ ப‌ல‌ சின்ன‌ அணிக‌ள் மெது மெதுவாய் வ‌ள‌ந்துட்டு வ‌ருகின‌ம் கால‌க் கொடுமை என்ன‌ என்றால் ஓமான் நாட்டில் காசை கொட்டி ப‌ல‌ கிரிக்கேட் தொட‌ர் ந‌ட‌த்தினாலும் ஓமான் அணி இதுவ‌ரை கிரிக்கேட்டில் சாதிக்க‌ வில்லை.......................ஓமான் ப‌ண‌க்காற‌ நாடு அந்த‌ நாடு கிரிக்கேட் விளையாட்டை அங்கிக‌றித்து விட்ட‌து...................நாட்டுக்கு பெருமை சேர்ப்ப‌து இனி விளையாட்டு வீர‌ர்க‌ளின் கையில்............... அப்கானிஸ்தானின் வ‌ள‌ர்ச்சி ப‌ல‌ பெரிய‌ நாடுக‌ளை ந‌டுங்க‌ வைக்கும்........................
  14. நான் அதற்கும் மேலே போய் கப்பைத் தூக்கி அதன் மெல் போடுவார்கள் என்று கணித்திருந்தேன். எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. இப்பொழுது உலகம் சுருங்கி விட்டது. உதைபந்தாட்டத்திலும் கிரிக்கட்டிலும் குறிப்பிட்ட சில அணிகள் கோலோச்சிய காலம் போய் சிறிய அணிகள் பலத்த சவாலாக இருக்கின்றன. ஒர காலத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்தது. வாய்ப்புகளைக் கொடுத்தால்தான் யார் உண்மையான திறைமைசாலிகள் என்பது தெரியவரும்.உதைபந்தாட்டம் ஒரளவுக்குப் பரவாயில்லை ஆனால் கிரிக்கட் இவ்வளவு காலமும் குறிப்பிட்ட அணிகள் மட்டும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டிருந்தன.
  15. நாளை வியாழன் 19 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI ஒரே ஒருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இத்தாலி கோஷான் சே இப்போட்டியில் @goshan_che க்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 22 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸிம்பாப்வே வசீ இப்போட்டியில் ஸிம்பாப்வேயின் தயவில் @vasee க்கு புள்ளிகள் கிடைக்குமா? 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் கனடா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கும் யாழ் களப் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா?
  16. இந்த போட்டி தவிர்த்து இதுவரை நடந்த போட்டிகளில் கடைசியாக வருவதால், இந்த போட்டியில் எனது தெரிவினை முதலில் செய்துவிட்டு அதற்கு எதிர்மைறையான தெரிவினை பதியலாம் என முதலில் நினைத்தேன் ஆனால் எனது சோம்பல் தனம் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் நீங்கள் எனக்கு நேர்மாறாக கலந்து கொள்ளும் போடியிலெல்லாம் மேலேயே வருகிறீர்கள் அதன் சூட்சும்தான் விளங்கவில்லை, இந்த போடிகளுக்கான விடைகளையும் ஏற்கனவே கசியவிட்டார்களோ?🤣(சும்மா நகைசுவைக்கு கூறியது)
  17. அதயேன் கேக்கிறியள் - வீட்டோட நாயையும் சுவி அண்ணா அபேஸ் பண்ணீட்டார்😂
  18. இவர் எனக்கே ஃடப் கொடுப்பார் போல உள்ளது😂
  19. இவர் யார் என்றே தெரியாமல் இருந்தது நான் செய்த பாக்கியம் 2-3 மாதங்களில் ஐபிஎல் வருகிறது. இப்பவே பெயரை பாடமாக்குங்கள். மரவேலை சோதனை மாதிரி இருக்கும்.
  20. உங்களுக்கு யார்,எவர், எந்த அரசியல்வாதி நேர்மையானவராக தெரிகின்றார்? எந்த நாட்டின் நிலவரங்கள் சரியாக தெரிகின்றது? 😄
  21. தன்னை விட அதிகம் கற்றுவிட்டார், உழைக்கின்றார் என புருசுவுக்கு தன் பொண்டாட்டி மீது பொறாமை, மற்றும் தாழ்வு மனப்பான்மை பிரச்சனையோ?
  22. இவர் தான் கூடுதல் ஓட்டங்கள் எடுப்பார் என்று யாரோ பதிந்ததாக ஞாபகம்.
  23. பகிடி வதை செய்வதே தவறு. அதை பல்கலைக்கழத்தில் சிறிய அளவில் செய்தாலும் கடந்து போய் விடலாம். ஆனால் பல்கலைக் கழகத்திற்கு வெளியே… புதிய மாணவர்களை தமது தங்கும் விடுதிக்கு அழைத்து… பாலியல் சீண்டல் செய்வது சுத்த அயோக்கியத்தனம். இவர்களுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
  24. தமிழ் மொழியின் பெருமை a une nouvelle photo. Suivre osorendtpSfaa67uihlt9a91c1lt5c17g2079m801u112h3c07t8hf i3c50 · சன் டி.வி.யில் சொன்ன ராசி பலனைக் கேட்டு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுக்க முடிவு செய்தேன். எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கடைத்தெருவில்தான் அந்தக் கீரை விற்கும் 75 அல்லது 80 வயது இருக்கும் பாட்டியைச் சந்தித்தேன். ஒரு சிவப்பு சின்னாளம்பட்டு புடைவை, கருப்பு ரவிக்கை, நெற்றியில் நாலணா அளவிற்கு குங்குமப்பொட்டு, கருப்பு ஆனாலும் வசீகரமான முக அமைப்பு... அந்தப் பாட்டியிடம் என்னை அறியாமல் அழைத்துச்சென்றது. முதல் சந்திப்பே ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக் - பிரபுபோல ஒரு சண்டையில் ஆரம்பமானது. பாட்டியா? ஆயாவா? எப்படிக் கூப்பிடுவது? என்ற சந்தேகத்துடன் எங்கள் வீட்டு வழக்கப்படி பாட்டி, “அகத்திக் கீரை இருக்கா?”ன்னு கேட்டேன். “இருக்கு ராசா. முழு கீர, அரக்கீர, பொன்னாங்கண்ணிக் கீர, பருப்புக்கீர எல்லாம் இருக்கு. பாலக் வேணுமா? இதோ இருக்கு” என்றாள் பாட்டி. “எனக்கு அகத்தி கீரதான் வேணும். மாட்டுக்குப் போடணும்” என்றேன். “நல்ல மகராசனா போடு. இந்தா இந்தக் கட்டு நாற்பது ரூபா.” “நாற்பது ரூபாவா. ஏன் பாட்டி இவ்வளவு வெல சொல்ற. கீரயா, தங்கமா இது?” என்றேன். அவ்வளவுதான் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது. “இந்தாய்யா கீர வேணும்னா வாங்கு. தங்கம் வைரம்னு வீணா பேசாதே” என்றாள் பாட்டி. பாட்டிக்கு இவ்ளோ கோபம் வரும்னா எனக்கு எவ்ளோ வரும். “பாட்டி நீ மட்டும்தான் கீர விக்கிறியா? இன்னும் எவ்வளவு கடையிருக்கு. நான் முப்பது ரூபாய்க்கு இதே கீரயா வாங்கிக் காட்டுகிறேன் பார்.” அப்படீன்னு சவால் விட்டுட்டு பக்கத்துலே உள்ள எல்லா கடைகளிலும் அகத்தி கீர விலை கேட்டேன். 50 ரூபாய், 45 ரூபாய் என்றனர். மழை சரியாக பெய்யலையாம். அதனால் எல்லா காய்கறி விலையும் ஏறிடுத்தாம். வேற வழியில்லாம 45 ரூபாய் சொன்ன ஒரு அம்மாவிடம் கீரைய வாங்கினேன். ஆனா, பாட்டியோட நேர்மை மட்டும் என்னைக் கவர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் அதிக விலைவைத்து விற்கும்போது, பாட்டி மட்டும் நியாயமா விற்கிறது என் மனதைத் தொட்டது. அடுத்த வெள்ளிக்கிழமை சைக்கிள் நேராக பாட்டி கடைக்கு நின்றது. “வா ராசா... இந்த அகத்தி கீரை” என்று பழசையெல்லாம் மறந்து என்னைப் பார்த்து பாசமாக பேச ஆரம்பித்தாள். “மாட்டுக்குத்தான போடற. இந்தா இதையும் போடு” என்று இலவசமாக ஒரு கட்டையும் கொடுத்தாள். “டீ சாப்பிடறயா பாட்டி?” என்றேன். “வேண்டாம்யா. இப்பதான் ஒரு டீ குடிச்சேன்.” இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு பல வாரங்களைக் கடந்தது. செவ்வாய், வெள்ளி என்றாலே பாட்டியைப் பார்க்கப் போகும் உற்சாகம் என்னைத் தழுவும். அன்று கடைத்தெருவிற்கு 6 மணிக்கே சென்றேன். பாட்டி அப்போதுதான் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஒரு பாய், ஒரு பெரிய மரப்பெட்டி. இவ்வளவுதான் கடை. (‘சந்திரமுகி’ கட்டிலை அநாயாசமாக தூக்குவதுபோல்) அந்தப் பெரிய மரப்பெட்டியைத் தூக்கி முன்னாலே வைத்து அதில் கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்துள்ள காய்கறி மற்றும் கீரை வகைகளை அடுக்கினாள். பின்பு எல்லாவற்றிலும் தண்ணீர் தெளித்தாள். என்னைப் பார்த்ததும் “என்ன ராசா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?” என்றாள். “அது இருக்கட்டும் பாட்டி. நீ ஏன் தனியா கஷ்டப்படறே. உன் வீட்டுக்காரரு, புள்ளைங்க எல்லாம் எங்கே?” என்றேன். “அதையேன் கேட்கற ராசா. என் புருசன் நல்லவருதான். கல்யாணம் ஆன புதிசுல என்ன அப்படி பாத்துப்பான். (பொக்கை வாயில் வெட்கம்) ஆனா பாரு... அப்புறம் வேற ஒருத்தியோட குடுத்தனம் நடத்தப் போயிட்டான். அவளும் இவன்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் வாங்கிட்டு அம்போனு நடுத்தெருவில விட்டுட்டா. பாவம் சாப்பாட்டுக்கே வழியில்லாம திரும்ப என்கிட்டேயே வந்து விழுந்தான். இதுல குடி வேற. என்ன பண்றது? நான் காய்கறி வித்து வரக் காசுல என் ஒரே பொண்ணு திருவண்ணாமலைல இருக்கா. அவளுக்குக் கொஞ்சம் அனுப்புறேன். மீதிய நானும் வுட்டுக்காரரும் கஞ்சி குடிக்க வச்சுக்குவோம். அப்பப்ப குடிக்கவும் அவனுக்கு பணம் குடுக்கறேன். போயிட்டு போறான். நம்மதான் இப்படி வெய்யில்லயும் மழைலயும் பாடுபடறோம். அவனாவது குடிச்சிட்டுக் கவலையில்லாம இருக்கட்டுமே” என்றார். எனக்கு இப்போது பாட்டி இளங்கோவடிகளின் கண்ணகியைப்போல் தோன்றினாள். “அப்புறம் ராசா, என் பொண்ணுக்கு ஒரே பையன். கான்வென்ட்ல படிக்கறான். இங்கிலிசு நல்லா பேசறான். போன லீவுக்கு போய்ப் பார்த்தேன். Grandma comeன்னு ஏதேதோ சொல்லுது. எனக்குத்தான் ஒண்ணும் புரியல. கொழந்தை நல்லா இருக்கணும். என் உயிரே அவன்தான். என் கதைய வுடு. இந்த அகத்திக்கீரை” என்று கீரைக்கட்டை நீட்டினாள். கூடவே இலவச கட்டும் இருந்தது. பல வாரங்கள் கடந்தன. ஒருநாள் நான் சற்று லேட்டாகக் கடைக்குச் சென்றேன். அங்கே பாட்டி வழக்கமான சிரிப்புக்குப் பதிலா ரொம்பவும் பதற்றமாக இருந்தாள். என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள். “என் ராசா வந்துட்டயா. உனக்கு கீரைய குடுத்துட்டுதான் ஊருக்குக் கிளம்பணும்னு இருக்கேன்.” “ஏன் பாட்டி என்ன ஆச்சு?” என்றேன். “அதையேன் கேட்கற. நேத்து புள்ளைய ஸ்கூல்ல வுட சைக்கிள்ள போன என் பொண்ணு மேலே ஒரு லாரி மோதிட்டான். பொண்ணும் பேரனும் பக்கத்துல இருந்த பள்ளத்தில் விழுந்து ரொம்ப அடியாம். பொண்ணு இப்ப பரவாயில்லையாம். ஆனா, குழந்தைதான் இன்னும் கண்ணு முழிக்கலையாம். ராசா தலைல நல்ல அடியாம். திருவண்ணாமலை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் எப்படி உயிரோடு இருப்பேன்? இந்த ராசா கீரை புடி. நான் கிளம்பறேன்...” என்றாள். பாட்டியின் இந்த நிலைமையிலும் வாடிக்கைக்காரரை மதிக்கும் உயர்ந்த எண்ணம் என்னை உலுக்கியது. “கொஞ்சம் இரு பாட்டி... இப்ப எப்படி திருவண்ணாமலைக்கு போவ?” என்றேன். அழுகையுடன் “இப்ப 1ஆம் நம்பர் பஸ் வரும். அதுல ஏறி கோயம்பேடு போயி அங்கேருந்து 122 பஸ் புடிச்சு போயிடறேன்” என்றாள். “கொஞ்சம் இரு பாட்டி” என்று சொல்லி பாக்கெட்டில் கையை விட்டேன். ஒரு 100 ரூபாய்தான் இருந்தது. நல்லவேளை எச்.எப்.டி. டெபிட்கார்டும் கூடவே இருந்தது. பக்கத்தில் இருந்த ஏடிஎம்மில் 5000 ரூபாய் எடுத்தேன். ஓலா ஆப்பில் ஒரு கேப் புக் பண்ணி கோயம்பேடுக்கு பாட்டி சீக்கிரம் செல்ல ஏற்பாடு செய்தேன். “பாட்டி இதை வச்சுக்கோ. இப் ஓலா வரும். அதுல எத்திவுடறேன். உன் பேரனுக்கு ஒண்ணும் ஆவாது. திருவண்ணாமலை அருணாசலம் பாத்துப்பார். நீ கவலை படமா போயிட்டு வா” என்றேன். பாட்டி கண்களில் தாரைதாரையாக கண்ணீர். என் கண்களிலும்தான். எப்படியோ பாட்டியை ஓலாவில் ஏத்திவிட்டு ஒடிபியை டிரைவரிடம் சொல்லி பாட்டியை பத்திரமாக அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அப்புறம் மூன்று, நான்கு வாரங்களுக்கு பாட்டியைக் காணோம். பேரனுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. பாட்டியை பார்க்காத ஏக்கம் வேறு. கடைத்தெரு எனக்குப் பாலைவனமாகத் தோன்றியது. அடுத்த வாரம், பாட்டி கடையைத் திறக்காமல் ஓரமாக நின்றுகொண்டு நான் வருகிறேனா என்று பார்த்தவாறு இருந்தாள். பாட்டியைக் கண்ட மகிழ்ச்சியில் சைக்கிளை வேகமாக ஒட்டி பாட்டியிடம் சென்று நிறுத்தினேன். நான் பேசுவதற்குள் பாட்டி பேசினாள். “ராசா உன் புண்ணியத்தால பேரன் உயிர் பொழைச்சுட்டான். நீ சொன்ன அண்ணாமலை என்னைக் கைவுடல. நா போய் ஆஸ்பத்திரி நிக்கவும் பேரன் கண் முழிச்சி, பாட்டி வந்துட்டாயான்னா கேட்கவும் சரியா இருந்தது ராசா. நேரத்துல எனக்கு உதவி செஞ்சியே. இந்தா உன் பணம். ஊர்ல ஒரு பழைய மாட்டு வண்டி இருந்தது. அத வித்துத்தான் உன் பணத்தை ரெடி பண்ணி கொண்டாந்திருக்கே. இந்தா பிடி. இப்பவும் நான் திருவண்ணாமலைக்குத்தான் என் புருஷனையும் இட்டுக்குனு போறேன். என் பொண்ணு கூடவே இருந்து பேரனைப் பாத்துக்கப் போறேன். உன்னப் பாத்து சொல்லிட்டுத்தான் போணும்னு நின்னிருக்கேன். வரேன் ராசா. ஒனக்கு எவ்வளவு பெரிய மனசு. 5000 ரூவாவ முள்ளங்கி பத்த மாதிரி எடுத்துக் கொடுத்து பேரன போயி பார் பாட்டீன்னியே. யார் ராசா அப்படி பண்ணுவா? நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும் ராசா. இதோ 1 நம்பர் பஸ் வருது. நான் வரேன்.” பாட்டி பஸ்சில் ஏறும்போது என் கையில் இருந்த அந்த 5000 ரூபாயை பாட்டி கையில் திணித்தேன். “இது என் ஞாபகமா வச்சுக்கோ” என்றேன். “எனக்கு எதுக்கு ராசா இவ்வளவு பணம்?” என்றாள். “பேரனுக்கு நல்ல டிரஸ் வாங்கிக் குடு. விளையாட பொம்மை இந்த மாமா வாங்கி தந்ததா சொல்லி வாங்கிக்கொடு.” பாட்டி புடவை தலைப்பால் கண்களை துடைப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. என் மனம் அமைதியின்றி தவித்தது. எத்தனையோ பிரிவுகளை சந்தித்த மனம் பாட்டியின் பிரிவை ஏன் ஏற்க மறுக்கிறது? பாட்டிக்கும் எனக்கு என்ன தொடர்பு. ஏன் இந்த நட்பு? புரியவில்லை. காஞ்சி பெரியவரின் பொன்மொழி மட்டும் ஞாபகத்திற்கு வந்தது. “ஈஸ்வரன் நமக்கு சம்மந்தம் இல்லாது பலவற்றுடன் நம்மைச் சம்மந்திப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான்". கல்கியில் வந்த புனைவு கதை. #தமிழ்_வரிகள் #சிறுகதைகள் #தமிழில்பகிர்வோம் #அறிந்து_கொள்வோம் பாட்டி ஏன் மஞ்சள் ஜாக்கட் போட்டிருக்கு என்று யாராவது கேட்டால் அவர்கள் கதையை ஊன்றிப் படித்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி . .........! 😀
  25. அத தெரண கருத்துப்படங்கள்.
  26. நீங்க வேற அரை இறுதிக்கு இந்தியாவுடன் தென்னாபிரிக்கா செல்லும் என்று விடை எழுத முதலில் நினைத்து போட்டு கடைசி நிமிடத்தில் அவுஸ்திரேலியா செல்லும் என்று பிழையாக எழுதிவிட்டேன் 😪 இறுதி போட்டிக்கும் இந்தியாவுடன் அவுஸ்திரேலியா செல்லும் என்று எழுதிவிட்டேன் 😀
  27. தம்பி முறைப்பாட்டாளர்...நீங்கள் உவங்கன்ட போய் முறைப்பாடு செய்வதை விட உந்த புலம் பெயர் பழைய மாணவர் சங்கங்கள் இருக்கல்லோ அவையளிட்ட ஒரு விண்ணப்ப கடிதம் போடுங்கோ போட்டி போட்டு கொண்டு செய்து தருவாங்கள் ...அவுஸ்ரேலியா பழைய மாணவ சங்கம் செய்ய முதல் கனடா பழைய மாணவ சங்கம் செய்ய முன் வருவான்... சில சமயம் சங்கங்களில் அங்கத்துவராக இல்லாத ஆட்கள், நாற்பது ஐம்பது வருசத்திற்கு பிறகு விசிட் பண்ணியிருப்பினம் அவையளிட்ட கேளுங்கோ உங்களுடைய அப்பா/அம்மா வின் நினைவாக உந்த உதவிகளை செய்ய முடியுமோ என்று உடனே உச்சி குளிர்ந்து தலையாட்டி போடுவினம் ...பாடசாலை அதிபருக்கும் கொண்டாட்டம் அதே சமயம் அரசாங்கத்துக்கும் பெயர் கிடைக்கும்...
  28. இன்று வட பகுதி பாடசாலைகளில் இது ஒர் நடமுறையாக பின்பற்றப்படுகிறது ...ஒரு காலத்தில் நாங்கள் பள்ளி செல்லும் காலங்களில் இப்படியான நடமுறை இல்லை ஆனால் ஆசிரியருகளுக்கு மரியாதை செலுத்தினோம் அதே மரியாதையை இன்றும் செலுத்துகின்றோம் ...ஆனால் இன்று இந்து மாணவர்கள் அதிகமாக இந்த காலில் விழும் கலாச்சாரத்தின் உள் வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்...
  29. இந்த டீல் நல்லாயிருக்குதே................... நமீபியாவிற்காக நான் கும்பிடுகின்றேன்............... ஆப்கானிஸ்தான் போகாத சூப்பர் எட்டுக்கு பாகிஸ்தான் எப்படி போகலாம்.............🤣.
  30. முந்தி அவுஸ்ரேலிய‌ வீர‌ர்க‌ள் தான் அதிக‌ம் போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிசா அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் விளையாட‌ வில்லை................... ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு கிரிக்கேட் உல‌கில் ப‌ல‌ மாற்ற‌ங்ள் வீர‌ர்க‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து சீக்கிர‌ம் ஓய்வை அறிவிப்ப‌து..................கார‌ண‌ம் ஜ‌பிஎல் ப‌ண‌ ம‌ழை😮...................
  31. சூப்பர் எட்டுக்கு மட்டுமா............ அரையிறுதி, இறுதிப் போட்டியில் கூட அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். ஆஸ்திரேலியா வெளியே போனது எல்லோர் வீடுகளிலும் களவு போனது போல தானே........... அதனால் பரவாயில்லை............. ஆனால் ஆப்கான் வெளியே போனது என்னுடைய வீட்டில் மட்டும் களவு போனது போல....................🤣.
  32. இலங்கையை பொறுத்தமட்டில் பொதுவாக பாடசாலை கட்டடங்களில் அவசரகால வெளியேற்ற பாதை இல்லை. இது அடிப்படையில் கட்டட வடிவமைப்பு, திட்டமிடல் குறைபாடு. பெரிய சிறிய பாடசாலை என வேறுபாடின்றி அனைத்து பாடசாலைகளிலும் இந்த குறைபாடு காணப்படக்கூடும். யாழ் இந்து கல்லூரி போன்ற பிரபல தேசிய பாடசாலைகளில் அண்மைக்காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் இதற்கு விதி விலக்காக அமையக்கூடும். ஆனாலும், இவற்றிலும் இந்த குறைபாடு காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவசர கால வெளியேற்ற பாதை பாடசாலைகளில் உள்ளது அல்லது இல்லாதது பற்றிய விழிப்புணர்வு அவசியமானதும், தேவையானதும் ஆகும். நாங்கள் படிக்கும் காலத்தில் தேவை ஏற்பட்டால் சுவர், மதில் ஏறி பாய்வோம்.
  33. கேள்வித்தாள் வந்தது சரி , நீங்கள் எத்தனை மார்க் எடுத்தீர்கள் ....... அதை சொல்லவில்லையே ......! 😉
  34. கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ! பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள். 1) "தமிழ்" (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 - இன்றுவரை). 2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி). 3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி). 4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்). 5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி). 6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி). 7) ரஞ்சன்(சுரபி கடை - முன்னாள் WTM பொறுப்பாளர்). ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்). 9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி). 10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்). 11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு - கனடா). 12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்). 13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்). 14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி). 15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்). 16) ஆதி கணபதி(பல் வைத்தியர்). 17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்). 18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்). 19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு - கனடா). 20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்). 21) சுரேஷ்(spicyland உரிமையாளர்). 22) தவா (வீடு விற்பனை முகவர்)(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்). 23) பாலா(கணக்காளர்). 24) செந்தில்(மின்னல்). 25) பாபு(பாபு உணவகம்). பெயர் பட்டியல் தொடரும் ............. https://www.ilankainet.com/2019/02/25.html
  35. 🤣............. மழை வந்து இந்தப் போட்டியில் ஆக்டோபஸை காப்பாற்றி விட்டது போல..................🤣.
  36. காலில் விழுவது என்பது இன்னொரு மனிதர் காலில் விழுந்து தனது மானம் மரியாதை எல்லாவற்றையும் கொடுத்து தன்னை அடிமை என்று அறிவிப்பதாகும். இந்தியாவின் மோசமான கண்டுபிடிப்புக்கள் மனிதனை அடக்கி ஒடுக்க சாதி முறை அது போன்று மனிதனை காலில் விழுந்து வணங்க வைத்து அடிமைபடுத்துவது .
  37. வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்! 18 Feb, 2026 | 10:32 AM யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் , கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் 'சீட்டு' முறையில் பணம் கட்டியுள்ளார். ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர். மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும் ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் "பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்" என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார். தீராத கடன் சுமை சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் "இன்னும் வட்டி மீதமுள்ளது" எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். சமூகத்தின் குரல் மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். "என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?" என அந்தப் பெண் எழுப்பும் கேள்வி அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா? பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை முன்னெடுக்க முடியும். https://www.virakesari.lk/article/238933
  38. அந்தக் குடிகாரன் அடித்த அடியில்… அந்தப் பெண் இறந்து இருந்தால், அந்தச் சிறுவனுக்கு ஆதரவு இல்லாமல் போய் இருக்கும். இந்தச் சம்பவம்… அந்தச் சிறுவனுக்கு வாழ் நாள் முழுக்க மன உழைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.