Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்9Points39465Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points89120Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்5Points20444Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்5Points14719Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/26/26 in Posts
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய போட்டிகளை விமானப் பயணத்தில் பார்க்கம்கூடியதாக இருந்தது😀 இந்தியா அதிகூடிய ஓட்டங்கள் எடுத்தது மகிழ்ச்சி 🤩 புள்ளிகள் விபரம் நாளை தர முயற்சிக்கின்றேன்😊4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியபோதும், றொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 52 (37 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேஸன் ஹோல்டர் வேகமாக எடுத்த 49 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடி எய்டன் மார்க்ரம் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 82 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக் அதிரடியாக எடுத்த 47 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டன் வேகமாக ஆட்டம் இழக்காமல் எடுத்த 45 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான். அயர்லாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியா மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் வாணவேடிக்கையாக ஆட்டமிழக்காமல் எடுத்த 44 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் வேகமான 38 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவ் விரைந்து எடுத்த 33 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதுவே தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது! பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணியின் வீரர்களில் பிரயன் பென்னிட் அதிரடியாக ஆட்டமிழக்காமல் எடுத்த 97 (59 பந்துகள்) ஓட்டங்கள், சிகண்டர் ராஸா வேகமாக எடுத்த 31 (21 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் நிலைத்து வேகமாக ஆடாததால் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றில் விளையாடாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த எட்டு பேருக்குப் புள்ளிகள் கிடையாது!3 points
-
நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்
ஈழப்போரில்... புலியை எதிர் கொள்ள முடியாமல், 11 நாடுகளுடன் சேர்ந்து போரிட்ட சிங்களவன்... இதைச் சொல்ல, எந்த அருகதையும் கிடையாது. அத்துடன்... உனக்கு ராஜபக்ச குடும்பம், "படி அளக்கிற" ஆட்களாக இருக்கலாம். அதற்காக நாமல்... ஆளுமை, ஆட்டுக் குட்டி என்றெல்லாம் கம்பு சுற்ற வேண்டாம். எமக்கு நாமல், ஒரு காமெடி பீஸ் மட்டுமே.3 points
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
2 pointsஇரகுவரனும் இரவிக்கை நாடாவும். சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர் காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில் நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்க மாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன் தாவணி போர்த்தி தாவி நடந்தவளை தரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்து ஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டு அலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர் " இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சி கொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும் கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க "என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறது கட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்க ஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள் கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டி விடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறது தாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும் தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில் முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்ம ரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான் ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளை அள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடி அப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம் அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன் காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான் நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணி ஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும் கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்கு கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல் பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும் நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிட பூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயின நம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயின ஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமது பிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன " இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் " பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில் அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம் இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பல அறைக்குள் வந்து அருகில் நெருங்கி ஆசையை மறைத்து மீசையை முறுக்கி "என்ன" என்று மிடுக்காய் வினவ மோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள் இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சு கையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணி பரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுது எனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளா பல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும் அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்தது பயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன் பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான் சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும் கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டு வாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......! யாழ் இணையம் 28 க்காக ஆக்கம் சுவி .......!2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸிம்பாப்வேயின் பாரியவிசிறிகள் ஆறு பேர் இலங்கை வந்திருந்தார்கள். அவர்களை Castle Corner Fans என்று அழைப்பார்கள். ஆழுக்கு 2000 டாலர் செலவழித்து வந்திருந்தார்கள். இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் அவர்களின் ஆட்டம் பாட்டம் பிரபல்யம் அடைந்தது. பேட்டி எல்லாம் குடுத்திருத்தார்கள். பணம் இல்லாத படியால், அவர்களால் இந்தியா போக முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள். நாடு திரும்பினார்கள். அதன்பின்னர் நடந்ததுதான் அவர்களின் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத சம்பவங்கள். பல நிறுவனங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு வீசா முதற்கொண்டு அவர்களின் பயணத்திற்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அவர்களை இந்தியா அனுப்பி வைத்தனர். புதன்கிழமை பின்னேரம் அவர்கள் சென்னையை வந்தடைந்தார்கள். இவர்கள்தான் அவர்கள். ஆறாவது ஒரு பெண்.2 points
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
2 points
- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
இப்போதான் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருக்கிறார், அதற்குள் ஏன் இவர்கள் எல்லாம் பதறியடிக்கிறார்கள்? அவர் கைது செய்யப்பட்டது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு, அவரை அனுரா ஜனாதிபதியானவுடன் கைது செய்யவில்லையே, எப்படி அரசியல் பழிவாங்கல் என்று கூறமுடியும்? பல சாட்சியங்கள், ஆதாரங்கள் மூலமே கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒத்துழைப்புக்கொடுத்து நிரபராதியென்றால் விடுவிக்கப்படுவார். முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு இது தெரியாமற்போனது ஆச்சரியமே! அதற்குள் ஏன் இத்தனை கலவரம், காரணங்கள் கண்டுபிடிப்பு? நாளைக்கு சுரேஷ் சாலே உண்மையை கூறி, ராஜபக்ச குடும்பத்தை கைது செய்தால், இதே கருத்தையே வைப்பார்கள். புலிகளுடன் போரிட்டால் அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனையில்லையா? அப்படியாயின் புலிகள் செய்தது எப்படி தவறாகும்?பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோத்தா, பத்திரிகை ஆசிரியர்களை கொலை செய்விக்கவில்லையா, லலித், குகனை கொலை செய்யவில்லையா, திரிபோலி இராணுவக்குழுவை அமைத்து அரசியல் எதிரிகளை கொலை செய்விக்கவில்லையா? இவர்கள் அரசியல் பழிவாங்கல் செய்ததனாலேயே யாரை கைது செய்தவுடன் அரசியல் பழிவாங்கல் என்று கூவுகிறார்கள். இராணுவத்தை போர்க்குற்ற விசாரணை செய்யக்கூடாது என்று ஏன் தடுக்க வேண்டும்? அவர்கள் போர்க்குற்ற மீறலில் ஈடுபட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதனாலேயே. விசாரணையை தடுத்தார்கள், இன்று போதைப்பொருள் வணிக தகராறில் அவர்களை அவர்களே கொலை செய்கிறார்கள் இராணுவத்தினர். சுரேஷ் சாலேயை விசாரணை செய்யக்கூடாது என்று இவர்கள் கதறுவதிலிருந்து தெரிவதென்னவென்றால்; சுரேஷ் சாலேயே கொலைகளின் உண்மையான சூத்திரதாரி, இல்லையேல் இவர்கள் ஏன் பதற வேண்டும்? "மடியில கனமுள்ளவனுக்கு வழிப்பயணத்தில் பயமிருக்கும்."2 points- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான். எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான். ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது. தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள். அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான். எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு. எனது மனைவி சொல்வார். எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம். (எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
விசாரணையை குழப்புபவர்கள் சந்தேக நபர்களை விசாரிக்கும்போது ஏன் குழம்புகிறார்கள்? அவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதே, அப்போது ஏன் கண்டுபிடிக்கவில்லை? இப்போ ஏன் தடைஏற்படுத்துகிறார்கள்? குற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்றா, விசாரணை நடைபெறக்கூடாது என்றா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்றா, இனிமேலும் இப்படியான குற்றங்கள் நிகழ்வதை தடுக்கக்கூடாது என்றா? தடை ஏற்படுத்துபவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட நபர் செய்யவில்லை என்றால், உண்மையான குற்றவாளியை இவர்களுக்கு தெரியும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியது இவர்களின் கடமை. அல்லது சட்டம் தன் கடமையை செய்ய வழிவிட வேண்டும்!1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி 27 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இங்கிலாந்து (Y1) எதிர் நியூஸிலாந்து (Y2) ENG. எதிர் NZ 17 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் நான்கு பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் ENG வசீ NZ புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் ENG ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் NZ கறுப்பி ENG வாதவூரான் ENG வீரப் பையன்26 NZ சுவி ENG கிருபன் ENG கோஷான் சே ENG அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் ENG ரசோதரன் AFG பிரபா ENG நிலாமதி AFG நந்தன் NZ இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
❤️.................. 'ஃபீல் குட்' நிகழ்வுகள்............... இவற்றை பார்க்கும் போது அதிக சந்தோசம் வருவதால், வயது அதிகமாகி விட்டது என்று நினைக்கின்றேன்......................🤣.1 point- தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் — கருணாகரன் —
தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் February 24, 2026 — கருணாகரன் — தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முடியாதோரின் கண்களுக்கு ரோஹண விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்க போன்ற முகங்களே தென்படும். அந்த முகங்கள் பிரதிபலித்த பழைய – தீவிர இனவாத முகத்தையும் அது மேற்கொண்ட பகிரங்க வெறுப்பு நடவடிக்கைகளுமே நினைவில் எழும். அவ்வாறு தோன்றுவதால்தான் பழைய ஜே.வி.பியை நினைத்துக்கொண்டு தமிழ்த்தரப்புப் பேசுகிறது; எழுதுகிறது; தீர்மானங்களை எடுக்கிறது; போராட்டங்களை நடத்துவதற்கு முயற்சிக்கிறது. மொத்தத்தில் தன்னுடைய அரசியலை முன்னெடுக்கிறது. இது தவறான ஒரு வழிமுறை – அணுகுமுறை ஆகும். என்பதால் தமிழ்த்தரப்பு மேலும் பின்னடைவையும் தோல்வியையுமே சந்திக்கப்போகிறது என உறுதியாகச் சொல்ல முடிகிறது. எதிர்த் தரப்பைப் பற்றிச் சரியான கணிப்பீட்டைச் செய்து கொண்டால்தான் அதை எதிர்கொள்ளக் கூடிய அரசியற் பொறிமுறைகளை(தீர்மானங்கள், போராட்டங்கள், தந்திரோபாயங்கள், தொடர்பாடல்கள் போன்றவை) முன்னெடுக்க முடியும். இல்லையெனில் தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளுமே தொடரும். தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளும் ஒருபோதும் சரியான விளைவுகளைத் தராது. நற்பயன்கள் எதையும் விளைக்காது. பதிலாக மேலும் பின்னடைவையும் சிதைவையும் தோல்வியையுமே வழங்கும். இன்றைய ஜே.வி.பி வேறு. அது நெகிழ்ச்சியும் உருமாற்றத்தையும் கொண்ட அநுரகுமார திசநாயக்கவின் முகத்தை உடையது. உறுதிப்பாடும் நிதானமும் கொண்ட ரில்வின் சில்வாவின் அகத்தைக் கொண்டது. இந்த இரண்டின் கலவையே தேசிய மக்கள் சக்தி. இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முற்படுவோருக்கு இந்தக் கலவையின் நுட்பத்தையும் சிறப்பையும் தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். சுலபமாக ஒன்றைச் சொல்லி இதை விளக்கவும் நிரூபிக்கவும் முடியும். உள்நாட்டிலும் சரி, வெளியுலகிலும் சரி, மிகச் செல்வாக்கான – நம்பிக்கைத் தோற்றமுடைய முகம் அநுரகுமார திசநாயக்கவினுடையது. ‘மக்களின் நாயகன்’ என்று சொல்லக் கூடிய இன்றைய தலைவர் அநுரகுமார திசநாயக்க. இதை யாரும் மறுக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை உட்பட எதையும் வெளிப்படையாக உரத்துச் சொல்லாத, இனவாதத்தை வெளிக்காட்டாத செல்வாக்கான இந்த முகத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அநுரகுமார முதலில் ஓரிடத்துக்குச் செல்வார். அடுத்ததாக அவரைத் தொடர்ந்து ஏனைய அரசுப் பிரதிநிதிகள் அந்த இடங்களுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா செல்வார். உள்நாட்டிலும் இதுதான் நடக்கிறது. வெளிநாடுகளிலும் இதுவே நிகழ்கிறது. அநுர முதலில் இந்தியாவுக்குச் சென்றார். இப்பொழுது ரில்வின் சென்று திரும்பியிருக்கிறார். அநுர முதலில் சீனாவுக்குச் சென்றார். ரில்வின் பிறகு சீனாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் ஐரோப்பாவுக்குச் சென்றார். ரில்வின் பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் வடக்குக் கிழக்கிற்கு வந்து சென்றார். ரில்வின் அதற்குப் பிறகு வடக்குக் கிழக்குக்குச் சென்று திரும்பினார். இந்தப் பயண ஒழுங்கினை யாரும் மீள நினைவு கொண்டு நோக்கலாம். அநுரகுமார திசநாயக்க தன்னுடைய செல்வாக்கான அடையாளத்தைக் கொண்டு கடினமான பாதைகளை இலகுவாக்கிக் கொடுக்கிறார். அதைப் பயன்படுத்தி, ஏனையவர்கள் தங்களுடைய அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ஆக ஜே.வி.பியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை நட்சத்திரமும் அரசியல் முதலீடும் அநுரகுமார திசநாயக்கவே. அதை அவரும் மிகச் சரியாகப் பேணிக்கொள்கிறார். மிகச் சாதாரணரைப் போன்ற ஒரு தோற்றத்தில் மிக வலிமையான மனிதராக – தலைவராக அநுர தொழிற்படுகிறார். அநுரகுமார திசநாயக்கவுக்கு துணை செய்வதைப்போல அல்லது தேசிய மக்கள் சக்தியின் பயணத்துக்கு வலுச்சேர்ப்பதைப்போல கூடவே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் விஜித ஹேரத்தும் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டைக் கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியாக வலுவான உறவைக் கட்டியெழுப்பியிருக்கிறது. நன்மதிப்பைப் பெற்றுள்ளது. ஒரு வகையான நூதனமான அரசியலைக் கையாண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு முன்செல்கிறது தேசிய மக்கள் சக்தி. இதற்கு இசைவாகத் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஜே. வி. பி. ஆனால், தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி. பிக்கும் இடையில் பெரியதொரு உட்போர் நடந்து கொண்டிருப்பதாக பரவலாகப் பேசப்படுவதுண்டு. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்கொள்ள முடியாமலிருக்கும் ஆற்றாமையின் வெளிப்பாடு. இரண்டாவது, தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியின் இன்றைய போக்கையும் புரிந்து கொள்ளத் தவறுவதன் விளைவு. இந்த இரண்டினாலும் தேசிய மக்கள் சக்திக்கோ ஜே.வி.பிக்கோ எந்தப் பாதிப்புமில்லை. இங்கே வேடிக்கை என்னவென்றால், தங்களுடைய கட்சிக்குள் அல்லது அரசியற் கூட்டுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை. தேசிய மக்கள் சக்திக்குள்தான் குத்து வெட்டுகளும் இழுபறிகளும் என்பதைப்போல கதை விடுவதுதான். எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்முரண்பாடுகளும் கொதி நிலைகளும் இருப்பது வழமை. உள் முரண்பாடுகளால் தமிழரசுக் கட்சி நீதிமன்றத்திலேயே போய் நிற்கிறது. ஐ.தே.க உள்முரண்பாட்டினால் நீண்டகாலம் இழுபறிப்பட்டதை யாரும் மறக்க மாட்டார்கள். இனித் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில்தான் ரணில் – சஜித் அணி என்று பிளவு ஏற்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளும் உட்கொதிப்புகளும் உலகறிந்தவை. தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள், முஸ்லிம் காங்கிரசுக்குள் எல்லாம் உள் முரண்பாடுகள் அல்லது கொதிப்பான நிலை இருந்தபடியால்தான் அவற்றிலிருந்து சிலர் வெளியேறும் நிலை உருவானது. விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் நிகழ்ந்த உள்முரண்பாடுகள் பல. உமா மகேஸ்வரன் – பிரபாரன் முரண்பாடு, மாத்தயா – பிரபாகரன் முரண்பாடு, கருணா – பிரபாகரன் முரண்பாடு என பல அடுக்குகள் உண்டு. முரண்பாடும் கொதிப்புகளும் எந்தக் கட்சியிலும் எந்தக் கூட்டிலும் இருக்கும். அதைக் கடந்து, தமது அரசியல் முன்னெடுப்பில் குறித்த தரப்பு எப்படிச் செயற்படுகிறது? எப்படி வெற்றிகளைப் பெறுகிறது? எப்படி முன்செல்கிறது என்பதே அரசியல் பெறுமானமும் அரசியல் வெற்றியுமாகும். தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தமக்குள் உள்ள முரண்பாடுகளை எப்படித் தீர்த்துக் கொள்கின்றன என்று வெளியே தெரியவில்லை. அவற்றுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொதிப்புகளின் தன்மையைச் சரியாக உணர முடியவில்லை. நிச்சயமாக புகைச்சல்களும் முரண்களும் இருந்தே தீரும். ஆனால், அரசியல் ரீதியாக இரண்டும் முன்செல்வதை யாரும் மறுக்கவே முடியாது. இதையே நாம் கவனிக்க வேண்டும். இதற்கு முதற்காரணம் வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் படித்துக் கொண்ட ஒரு பேரமைப்பாக ஜே.வி.பி இன்றிருப்பதாகும். தன்னுடைய லட்சியவாதத்துக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தூரத்தையும் (இடைவெளியையும்) முரண்பாடுகளையும் இயலாமைகளையும் அது கற்றுள்ளது. அப்படிக் கற்றுக் கொண்டபடியால்தான் அதனால் தன்னை நெகிழ்ந்து கொடுக்க முடிந்திருக்கிறது. அதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. அண்மைய (இந்த வார) உதாரணம், ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணமும் அது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களுமாகும். இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரில்வினிடம் ‘இந்து’ பத்திரிகை கேள்வி எழுப்பியபோது, ”ஜே.வி.பி இந்தியாவுக்கு எதிரானது என்று நீண்டகாலமாக நிலவிவரும் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்து விட்டது. காலப்போக்கில் எமது நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் ரில்வின். மட்டுமல்ல, கொழும்பு – ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை எழுப்பிய “ஜே.வி.பியின் முதல் தலைவரான ரோஹண விஜேவீர இந்தியாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டை நீங்கள் கைவிட்டு விட்டீர்களா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்போது, “இலங்கைக்குப் பாதகமாக அமையக் கூடிய கொள்கைகளைக் கடைப்பிடித்த இந்திய அரசாங்கங்களை எதிர்த்தோமே தவிர, நாம் ஒருபோதுமே இந்தியாவை எதிர்க்கவில்லை“ என்று தெரிவித்திருக்கிறார். இது எதைக்காட்டுகிறது? முந்திய ஜே.வி.பி யிடமிருந்து இப்படி ஒரு சொல் வருமா? அதைப்போல இன்றைய ஜே.வி.பியிடமிருந்து முன்பைப்போலக் கடுமையான ஒரு வார்த்தை வரவே வராது. இதுதான் படிப்பினை. இதுதான் மாற்றம். இதுதான் விவேகம். இதுதான் வெற்றிக்கான வழிமுறை. புறச் சூழலின் யதார்த்தத்தை ஜே.வி.பி கற்றுத் தேர்ந்துள்ளது. அதனால்தான் ரில்வின் இந்தியாவைக் குறித்து அவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது. மட்டுமல்ல, இந்தியாவுக்கு அவர் பயணம் செய்தது கூட யதார்த்தத்தை உணர்ந்ததன் விளைவே. இந்தியாவை தூர வைத்துக் கையாள முடியாது என்று அவருக்குத் தெரியும். மட்டுமல்ல, ரில்வினின் இந்தியப் பயணம் ஜே.வி.பிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மிகப் பெரிய வெற்றியே. ஒன்று, நல்லுறவை வலுப்படுத்துவதில். இரண்டாவது, பொருளாதார உதவி மற்றும் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதில். மூன்றாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்தியாவின் அழுத்தத்தைக் குறைப்பதில். ஏற்கனவே அநுரகுமார திசநாயக்க, ஹரிணி அமரசூரிய போன்றவர்கள் சென்று நிலைமையைச் சுமுகமாக்கியிருந்தனர். இப்பொழுது ரில்வின் இந்தியாவுக்குப் போய் வந்திருக்கிறார். இப்படிப் பல உயர்மட்டத் தலைவர்களும் இந்தியாவுக்கு விஜயம் செய்வதை இந்தியாவும் வரவேற்கிறது. இதில் இரண்டு தரப்புக்கும் வெற்றியே உண்டு. இந்திய எதிர்ப்பைத் தன்னுடைய வரலாறாகக் கொண்ட ஒரு இயக்கத்தை – அதனுடைய ஆட்சியைத் தன் வசப்படுத்தியுள்ளது இந்தியா. அதைப்போல, தான் முந்திய நிலைப்பாட்டைப்போல இந்திய எதிர்ப்பில் தான் இல்லை என்று காட்டுவதன் மூலம் இந்தியாவின் சந்தேகத்தையும் பகைமையையும் இல்லாமற் செய்துள்ளது ஜே.வி.பி. கூடவே தனக்கு ஏற்படவுள்ள நெருக்கடிகளையும் அழுத்தத்தையும் குறைத்துள்ளது அல்லது இல்லாமற் செய்துள்ளது. ஆக, இந்தியா, மேற்குலகம், சீனா, யப்பான், ஐ.எம்.எவ் என அனைத்துத் தரப்புகளையும் கையாளும் நுட்பத்தை தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் கற்றுக் கொண்டுள்ளன. ‘L போர்ட் அரசாங்கம் ஓராண்டைத் தாக்குப் பிடிப்பதே கஸ்ரம்‘ என்று கேலி செய்த ரணில் விக்கிரமசிங்கவைக் காணவேயில்லை. இப்படியெல்லாம் சொல்லும்போது, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் விழுந்தடித்துக் கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வேண்டியதில்லை. அப்படி அவர்களால் செய்யவும் முடியாது. அதைப்போல தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பவர்கள், இந்தக் கட்டுரை தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறது என்று கொதிக்கவும் தேவையில்லை. அப்படியான எந்த ஆபத்தையும் இந்தக் கட்டுரை உருவாக்கவில்லை. ஏனெனில் நாம் மேலும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய சங்கதிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்டவையெல்லாம் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி ஆகியவற்றின் புதிய தோற்றமும் புதிய அணுகுமுறைகளும் என்பது உண்மையே. அதே அளவுக்கு இவற்றின் இன்னொரு பக்கமும் உண்டு. முக்கியமாக வெளிநாட்டில் தம்முடைய உறவை நல்லபடி பார்த்துக் கொள்ள முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் உள்நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடயங்களில் சரியாகச் செயற்படவே இல்லை. அதனால் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியிலும் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் ஒன்று உருவாகியுள்ளது என்பதை வைத்துக் கொண்டு, குறித்த சமூகங்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறக்கணிக்கவும் முடியாது. அதை வேறு விதமாக – இனவாத அடிப்படையில் – கையாளவும் கூடாது. ஆனால், அப்படித்தான் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தவறாகச் செயற்படுகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசாங்கம் வாயே திறக்கவில்லை. குறைந்த பட்சம் மாகாணசபைகளுக்கான தேர்தல் பற்றி ஜனாதிபதியோ பிரதமரோ எத்தகைய உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. இனப்பிரச்சினை தீர்வு உள்ளடங்கலாக, பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு ஏதுவான அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும். அது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கையையும் காணவில்லை. ஏன், பொருளாதார மறுசீரமைப்போ, புதிய பொருளாதாரக் கொள்கையோ, மாற்றுப் பொருளாதார விருத்தித் திட்டங்களோ உருவாக்கப்படவும் இல்லை. ஆக மொத்தத்தில் முந்திய அரசாங்கங்களைப்போல சிங்களப் பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கம் (ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும்) அக்கறையாக உள்ளது. ஆனாலும் அப்படிக் காட்டிக் கொள்ளாமல் முற்போக்கு முலாம் பூசிச் சிரிக்கிறது. இது கபடத்தனமாகும். இந்தக் கபடத்தனத்தோடு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தலாம். ஆனால், நாட்டை அமைதியாக்கவோ முன்னேற்றவோ முடியாது. இப்பொழுது எல்லாமே சரியாக நடப்பதாக – முன்னோக்கிச் செல்வதாக – ஒரு தோற்றம் காண்பிக்கப்படுகிறது. இதுதான் ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வெற்றியாகும். அடிப்படையில் எந்த மாற்றங்களையும் செய்யாமல், மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று நம்ப வைக்கப்படுகிறது. System Change என்பதற்கே மக்கள் தேர்தல் ஆணையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினார்கள். அந்த ஆணையின் அடிப்படையில் அநுரகுமார அணி எந்த வகையில் System Change ஐச் செய்துள்ளது? அல்லது அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது? இதை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். இப்பொழுது நடக்கும் இந்த அரசியல் வித்தைக்கு எவ்வளவு காலம் ஆயுள் என்று உடனடியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தந்திரங்களுக்கும் சூதான அரசியலுக்கும் மயானம் வெகு தொலைவில் இல்லை. இப்பொழுது நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதை மீள நினைவுபடுத்திக் கொள்ளலாம். “தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் கைப்பற்றிய அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காகவும் ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தியுள்ளது. ‘ரில்வின் இந்தியாவிடம் சரணடைந்து விட்டார்’ என்றுகூடச் சிலர் கடுந்தொனியில் பேசலாம். கைகொட்டிச் சிரிக்கலாம். அரசியலில் என்னவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். அதிகாரத்துக்கு வேண்டியவை எவையோ அவற்றைச் செய்ய வேண்டும் என்ற யதார்த்தமே இங்கே முக்கியமானது. அதையே ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும் செய்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் மாகாணசபைத் தேர்தலுக்கும் இந்தியாவின் ஆதரவையும் உதவியையும் பெற வேண்டிய தமிழ்த் தரப்பு இந்தியாவைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகிறது. இலங்கை அரசுடன் நெருங்கவும் முடியாமல் திணறுகிறது. போருக்குப் பிறகான அரசியலை எப்படி முன்னெடுப்பது? இதுவரையான அரசியற் பயணத்தில் கற்றுக் கொண்டது என்ன? பெற்றுக் கொண்டது என்ன? இலங்கையில் மெய்யாகவே சாத்தியப்படக்கூடிய அரசியற் தீர்வு என்ன? அதை எப்படிப் பெற்றுக் கொள்ளது? சர்வதேச ஆதரவை எப்படிப் பெறுவது? அதனுடைய சாத்தியப்பாடுகளும் வரையறைகளும் என்ன? என எதைப்பற்றியும் அது படித்தறியவும் இல்லை. பட்டறியவும் இல்லை. இப்பொழுதும் அந்தப் பழைய – நைந்துபோன – சில பல சொற்களை வைத்துக் கொண்டு வார்த்தைகளால் அரசுக்கு எதிராகப் பீரங்கிகளை அடிக்கின்றன. தினமும் சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள், ஊடக மாநாடுகளில் எல்லாம் குற்றச்சாட்டுப் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அதாவது தாம் எந்த நிலையிலும் நெகிழவோ மாறவோ மாட்டோம் என்ற விதமாக தோற்றம் காட்டுகின்றனர் தமிழ் அரசியற் தரப்பினர். இது சுத்தமான அரசியற் கோமாளித்தனமாகும். ‘நெகிழவோ மாறவோ மாட்டோம்‘ என்ற பிடிவாதத்தினால்தான் விடுதலைப்புலிகள் தம்மையே பலியிட நேர்ந்தது. அதற்கான விலையை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் காலத்தை நீடிப்பதும் குறைத்துக் கொள்வதும் தற்பொழுது அரங்கில் உள்ள தமிழ்க் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது. ஆனால், அந்தத் தலைமைகளோ வரலாற்றிலிருந்தும் எதையும் படிக்கத் தயாரில்லை. வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முயல்வதில்லை. குறைந்த பட்சம் தம்மை, தம்முடைய கட்சியை அல்லது இயக்கத்தை ஒரு தடவையேனும் மறுபார்வைக்குட்படுத்திச் சீர்ப்படுத்த முயற்சிப்பதில்லை. தமிழ்த்தரப்பில் தலைமைத்துவத்துக்கான ஒரு முகத்தைக்கூடக் காணவில்லை. இருக்கின்ற முகங்களை மாறி மாறி ஒவ்வொரு தரப்பும் சிதைப்பதிலேயே குறியாக உள்ளன. தலைமைக்குரிய ஒரு முகத்தையாவது அடையாளப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவரிடத்திலும் இல்லை. இந்தப் பிழையான குணத்தினால்– இயல்பினால் – மூடத்தனத்தினால் – இந்தியாவையும் எதிர்த்தரப்பாகிய சிங்களர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைக்கின்றன. இந்த (இன்றைய) உலகத்தில் ஒப்பாரிக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. அது புலம்பலுக்கு ஒப்பானது. புலம்பல்களை யாரும் செவி கொள்வதில்லை. உங்களுடைய விருப்பங்களும் தேவைகளும் நியாயங்களும் நிலைப்பாடும் எவ்வளவோ பெறுமதிக்குரியனவாக இருக்கலாம். அவை எல்லாவற்றையும் பெறுவதற்கான யதார்த்தம் எப்படி உள்ளது என்பதே முக்கியமானது. ஜே.வி.பி பல பத்து ஆண்டுகளாக கடைப்பிடித்த நிலைப்பாட்டையெல்லாம் மூடையாகக் கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, தன்னை நெகிழ்த்தி, தேசிய மக்கள் சக்தியாகி, இன்று உலகத்தோடு ஒத்து ஓடுகிறது. தமிழர்களோ??? https://arangamnews.com/?p=126961 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
காச வாங்கிட்டாங்கள் என்று ஒருத்தரும் வரேலையா. அவர்கள் முதற் சுற்றில் நன்றாகச் செய்ததெல்லாம், இப்போ செய்யவில்லை. களத்தடுப்பு அவர்களின் பலம். அதிலேயே கோட்டை விட்டால். இப்பிடி அடிக்கிறாங்கள் என்ற விரக்தியோ தெரியா.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய பெரிய ஸ்கோர் அடித்து விட்டது 256💪 ஹா ஹா................... புள்ளிய அள்ளிட்டோம் ஹா ஹா.................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையன் சார், எந்த நிலைமையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருப்பதும், எங்களுடன் இணைந்திருப்பதும் உங்களின் உறுதியைக் காட்டுகின்றது......................👍. சுகமாகி விடுவீர்கள்................🙏.1 point- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
1 pointசுவியர் மன்னிக்க வேண்டும். நான் தான் 18+ என்ற பதத்தை பாவித்து தவறான அர்த்தம் கொடுத்து விட்டேனென நினைக்கிறேன். உங்கள் கதையில் விரசம் எதுவும் இல்லை. நான் பகிடியாகச் சொன்னது தான் 18+1 point- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இலங்கை அணி வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறார்கள்.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointஅண்ணா... ஒரு சால்ட் உப்பு கொடுங்க... சரி Ok... But ஆனால்.. நடு centreல வராம Queue வரிசையில வந்து வாங்கு...1 point- சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
பொலிஸ் காரருக்கும்... 🍬டொபி🍡, 🍫 சொக்லேட் 🍭 சாப்பிடுகிற பிள்ளைகள் இருக்கும் தானே. 😜 அதுகளும் பாவம் இல்லையா. 😋 😛1 point- சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
பொலிஸ் குழுவினர்… மிகுந்த சிரமப் பட்டு இந்தக் குற்றவாளிகளை கண்டு பிடித்தமைக்கு, பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.1 point- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
1 pointஓம்…இது பெரும்பாலும் கடல் அரிப்பால் நிகழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் நாங்கள் கிரிகெட் விளையாட கூடிய அளவு மணல் இருந்த இடமெல்லாம் இப்போ கடல்.1 point- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
1 pointஇந்தக் கவிதையில் என்ன விரசம். மனச்சாட்ச்சியைத் தொட்டு சொல்லுங்கள். அதன் முதல் பந்தியிலேயே நான்கு திருத்தலங்களின் தரிசனம் உண்டே அது ஏன் யார் கண்ணிலும் படவில்லை . .......! தலைப்பு கொஞ்சம் கவர்ச்சிதான் - மறுக்கவில்லை துள்ளி வந்து விழும் வார்த்தைகளின் துடுக்கு அடக்கித்தான் எழுதுவது ஆயினும் என்ன எழுதுவது ஏன் இனி எழுதுவது ....... கருத்துக்களை எழுதிப் போட்டு கை தட்டிவிட்டுப் போகலாம் .......! ( கோஷான் - சே இது உங்களுக்கானது அல்ல , பொதுவானது என் மனக்குமுறல் மட்டுமே..... நான் என்ன செய்வது எவ்வளவோ வருடத்து வாசிப்பு பழக்கம் , ஏராளமான எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பரிட்சயம் எழுதினால் அப்படித்தான் வருகின்றது. அந்தக் கவிதைகூட அந்த நிமிடத்தில் எழுதியதுதான். கதையோ , கவிதையோ எண்ணி வைத்திருந்து எழுதியதில்லை. எண்ணம் கூடிவரும்போது எழுதுவதே அவ்வளவுதான். தயவுசெய்து யாரும் குறைநினைக்க வேண்டாம் ) .......!1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதெல்லாம் பையனுக்கு கால் தூசு. வேறு ஏதோ விடயத்தில் சுணங்குகிறார். பையன் எல்லாம் ஓக்கே?1 point- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
இவர்தான் சுரேஸ் சாலெக்கும் உதவி செய்து அதே நேரம் ஜெவிபி க்கும் தகவல்களை வழங்கியிருப்பார் ..டபிள் ஏஜன்ட் டாக பணிபுரிந்திருப்பாரோ?1 point- சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
சிங்கள எழுத்து எது தெலுங்கு எது என்று தெரியாத நிலை தான் என்னுடையதும் 🤣1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டி மேற்கு இந்திய அணி மற்றும் தென்னாபிரிக்கா அணி மோடி மைதானத்தில் மோதுகின்றன, 200 ஓட்டங்களுக்கு மேலான ஓட்டத்தினை இந்த போட்டியில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம், பகல போட்டியாக நடைபெறும் போட்டி என்பதால் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடும். ஆடுகளம் சிகப்பு நிற மண் என கிரிக் இன்போ கூறுகிறது, ஆரம்ப ஓவர்கள் மிக சிரமமாக வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், ஆரம்ப ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருக்கும் அணி ஒரு பெரிய ஓட்டத்தினை எடுக்க வாய்ப்புள்ளது. சிகப்பு மண் சுழலுக்கும் உதவும் ஆனால் தென்னாபிரிக்கா ஒரு முழுநேர சுழலுடனேயே வருவார்கள் கடந்த போடியில் விளையாடிவர்களே இந்த போட்டியிலும் கலந்து கொள்ளக்கூடும். இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு என கூறமுடியாத வகையில் மிகவும் இறுக்கமான பலம் கொண்ட அணியாக இருந்தாலும் தென்னாபிரிக்காவின் திட்டமிடலுக்காக தென்னாபிரிக்கா வெல்லும் என கருதுகிறேன். இரண்டாவது போட்டி சென்னையில் சிம்ப்பாவேயிற்கு எதிராக இந்தியா மோதுகிறது சஞ்சு சாம்சன் விளையாடுகிறார் எனவும் ரிங்கு சிங்கு சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை என கூறப்படுகிறது, கிரிக் இன்போ ரிங்கு அல்லது திலக் என குறிப்பிடுகிறது, மற்றும் ஒரு மாற்றம் வலது ஆதிக்கம் கொண்ட சிம்பாவேயிற்கெதிராக சுந்தருக்கு பதிலாக இடது கை அகசர் மீண்டும் அணியில் இணைகிறார் என கூறப்படுகிறது. இரண்டாவது போட்டி யார் வெல்வார்கள் என்பதற்கு கேள்விக்கே இடமில்லை, ஆனால் சிம்பாவே கொஞ்சமாவது முயற்சி செய்து போட்டியினை சுவாரசியமாக்க வேண்டும், இலங்கை அணி போல அடுத்தடுத்து ஒரு மோசமான தோல்வியினை கொடுக்கும் போட்டியாக இல்லாமல் இரசிகர்களு ஒரு சிறந்த போட்டியினை கொடுக்க முன்வரவேண்டும். பையனின் கருத்தான சஞ்சு சாம்சனை அணியில் இணைக்கவேண்டும் என்ற கருத்தினை இந்திய தெரிவுக்குழுவும் காது கொடுத்து கேட்டுள்ளது போல இருக்கின்றது, ஆனால் அபிசேக்கினை நீக்கவில்லை, ரிங்கு சோந்த காரணத்திற்காக இன்றைய போட்டியில் கலந்து கொள்ளமுடியாமையால் அந்த இடத்திற்கு சஞ்சுவை இந்திய தெரிவுக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை! ஏனென்றால் தெரிவுகள் அப்படி!!1 point- இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
புத்தரே ....எல்லாமே கண்டாவளை கொத்துரொட்டிப் பாலம் போலதான் இருக்கும் ...இது அனுர அம்மானுக்கும் தெரியும் ...காசு வேணுமே ...4 பில்லியன் ரூபாவென்றால் சும்மாவா1 point- இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இந்திய கப்பல் வருகின்றது இந்திய காவிகளும் வருகின்றனர் கப்பல் வருவது நட்புக்காம் காவி வருவது சுற்றுலாவுக்காம் அனுரா அம்மான் உன் காவி நண்பர்கள் எங்கே உசுப்பி விடும் ஐசே,நீர் உசுப்பாவிடில் ரில்வின் உசுப்பிவிடுவார்1 point- சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
உறவுகளே ,குடைக்கு பின்னால் தெரியும் மொழி சிங்களமா அல்லது தெலுங்கா?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தெரியவில்லை! ஜக்கம்மாவினை வைத்து கொஞ்சம் அதிகமாக கலாய்த்துவிட்டோமோ என ஒரு புறம் யோசனையாக இருந்தாலும், பையன் இதனை ஒரு விடயமாக எடுக்கும் நபர் இல்லை என்று நினைத்தாலும் பையன் திடீரென காணாமல் போயுள்ள நிலையில் கோசான் வேறு ஜக்கம்மாவிலிருந்து சர்வதேச பயங்கரவாதியாக மாற்றியதால் உண்மையாக தலைமறைவாகிவிட்டாரோ தெரியவில்லை. ஆனால் அவர் இல்லாத யாழ்கள போட்டி நினைத்து கூட பார்க்கமுடியவில்லை! ஏதாவது சொற்குற்றம் பொருள் குற்றமிருந்தால் பொறுத்து மன்னித்து மீண்டும் களத்திற்கு வாருங்கள் பையன், அல்லது வேலைப்பழு காரணமாக வராமல் இருந்தால் ஒரு வார்த்தை பதிந்து விட்டாவது செல்லுங்கள்.1 point- குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு
அனுரா நம்ம அம்மான் ...அவரை போய் நீங்கள் சந்தேகபடலாமா?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... 👍.............. சனங்களுக்கு சாமியும் வேண்டும், பூசாரிகளும் வேண்டும்.....................🤣. சாமி - பையன் சார் பூசாரிகள் - வசீ, கோஷான், செம்பாட்டான் 'சாமியே எழும்பி தலை தெறிக்க ஓடினாலும், பூசாரிகள் விட மாட்டார்கள்............' என்று நேற்று இதையே குறிப்பிட்டிருந்தேன்................🤣. பிரமிளின் தாக்கம். இந்த வரியை நேற்று எழுதும் போது பிரமிளின் 'மேல் நோக்கிய பயணம்' கவிதை மனதில் வந்து அடக்க முடியாத சிரிப்பு: ......... ஜடையில் கங்கையின் இமயப் பனிமூச்சு அனலாய் அடிக்கிறது நதிநாக்கு வரண்டு அவள் நீர்கேட்டுத் தவிக்கிறாள். அர்த்த நாரிஇவள் பாரிச வாதத்தில் பின்னே இழுக்கிறாள். ஜடை இருளுள் பிறைகவிழ்ந்து விவேகப் பித்தம் கோஷப் புயலில் கலைந்து புத்தி தெளிந்து பிழைக்கும் வழிதேட இடிஒலி எழுப்பிய உடுக்கை பொத்தல் விழுந்து 'பொத் பொத்' என்றொலிக்க திரிசூலம் துருப்பிடித்து கையைக் கடிக்க மறுகையில் மானின் கால் எலும்பும் இன்னொரு கைநெருப்பு அணைந்து புகைந்து அரனார் இருமவும் பின்தொடர்வோர் கல்லடியில் படம் ஒடுங்கி பாதிசெத்த பாம்புமாலை புழுவாகிப் புரள ஊழித்தீ தீவரண்டு நெற்றிக்கண் குழிவிழுந்து திருதிரு எனவிழிக்க அறந்து பறக்கும் பூணூலை பொடிமட்டையில் சுருட்டி பொத்திப் பிடித்தபடி அரனார் ஓடுகிறார்............ ...................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் நான் போட்ட பதிவுக்கு வந்து சிரித்துவிட்டுப் போனார். தான் இல்லாமல் பயபுள்ளைங்க என்ன பாடுபடுறாங்கள் என்று பாக்கிறாரோ.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏன், என்ன ஆனது பையன் சாருக்கு ( @வீரப் பையன்26 )............................ பல்லில்லாத இலங்கை அணி பற்பொடி மிச்சம் என்று வாழலாம்............ ஆனால் பையன் சார் இல்லாமல் இங்கு போட்டியே இருக்காது.............. பையன் சார், நீங்கள் வந்து இந்த இலங்கை அணியை கீரை விற்க அனுப்புங்கோ....................1 point- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
என்னது உங்களுக்கு முடியாதது என்று உலகில் ஏதாவது உள்ளதா? இந்த முறை நீங்கள் எழுதுறியள்… நாங்கள் வாசிக்கிறம். பிகு கருத்து எழுதும் அதே தோரணையில் உங்கள் அனுபவங்களை தொடராக, சின்ன சின்ன துணுக்குகள் போல எழுதலாம். நாம் எழுதும் குப்பைகள் போல இல்லாமல்… நீங்கள் எழுதினால்..: பலருக்கு ஊக்கியாக இருக்கும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையன் இல்லாத யாழ்கள போட்டியும் பல்லில்லாத இலங்கை அணியும் ஒன்றுதான்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உடைந்த மணிக்கூடும் நாளுக்கு இரெண்டுதரம் சரியான நேரம் காட்டும்.1 point- சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
புத்தனுக்கு. பயந்து போகவில்லை. மன்னிக்கவும். புத்தருக்கு. புத்தருக்குபயந்து. போகவில்லை.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@புலவர் புலவர் அண்ணா இனி எங்களுக்கு புள்ளி கிடைக்க வாய்பில்லை ஆரம்ப சுற்றுப் போட்டியில் கணிப்புகள் கிட்ட தட்ட சரியா வந்தது சூப்பர்8க்கு பிறக்கு எல்லாம் தலைகீழா போச்சு எங்கட பஞ்சு பஞ்சு டையிலாக்குத் தான் ஞாபகத்துக்கு வருது உப்பு விக்க போனால் மழை பெய்யுது மா விக்க போனால் காற்று வீசுது ஹா ஹா......................1 point- சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
சாமி வெடுக்குநாறிக்கு போய்…. ஆதி லிங்கேஸ்வருக்கு ஒரு பூசையை போடுறது?1 point- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
எனக்கு பிடிக்காத அரசியல் கட்சியோடு சேர்ந்து பயணிக்கும் ஒருவரை கைக்கூலி என்று நான் எடை போட்டால் உலகத்தில் என்னை தவிர மிகுதி அனைவரும் கைக்கூலிகள்!!!1 point- பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு!
பலாளி சர்வதேச விமான நிலையமா அல்லது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமா? அதுசரி "யாழ்ப்பாணம்" த்தில் வெறுப்பு உணர்வு உள்ளவர்கள் பலாலி என்று சொல்லலாம்,,, இப்ப எத்தனை வருசமா வாராங்கள்,போறங்கள் ....இன்னும் அபிவிருத்தி முடியவில்லை1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சரியான தல இடியும் முதுகுவலியும் அது தான் என்னால் உங்க எல்லாருடம் சேர்ந்து பம்பல் அடிக்க முடியாம இருக்கு அண்ணா...............கோவம் மனஸ்தாவம் எதுவும் இல்லை....................நீங்கள் தொட்டு மற்ற உறவுகள் எழுதுவதை வாசிக்கிறேன்.................இந்த கருமம் பிடிச்ச வருத்தோட எழுத முடியாம இருக்கு நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ வசி அண்ணா நான் வாசிச்ச பின் பச்சை புள்ளி குத்துகிறேன்😍....................0 points - அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.