Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    39465
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19869
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    89120
    Posts
  4. சுவைப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8846
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/08/26 in all areas

  1. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்: T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இல் இறுதி நேரத்தில் பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் வெற்றியைத் தட்டிச் செல்லும் அதிகம் உரையாடாத @Newbalance க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வெற்றியைத் தட்டிச் செல்லும் @Newbalance க்கு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தில் இருந்து பெற்ற தங்க நாணயத்தின் நிழல்பிரதி தரப்படுகின்றது! இரண்டாவது இடத்தைப் பிடித்த @கந்தப்பு வுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள @நியாயம் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @alvayan , @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். அத்துடன் பல நாட்கள் சுமைதாங்கியாக இறுதி நிலையில் நிற்கும் @வாதவூரான் க்கும் நன்றி பல! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @செம்பாட்டான் @வீரப் பையன்26, @goshan_che @ரசோதரன், @vasee , @suvy ஐயா, @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கு நன்றி பல. விடுமுறையில் மத்திய கிழக்கில் நின்றபோது புள்ளிகளைக் கணிக்கவும், நிலைகளை சரியாக வரிசைப்படுத்தவும் உதவிய @செம்பாட்டான் க்கு பிரத்தியேகமான நன்றிகள்!
  2. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 74) இலிருந்து 79) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 256/4 சரியாகக் கணித்தவர்கள்: ஏராளன் வசீ அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் சுவி கிருபன் கோஷான் சே கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் IND வசீ IND புலவர் SA சுவைப்பிரியன் IRE அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் ENG கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SL 95/10 சரியாகக் கணித்தவர்: நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் ITA ஏராளன் ITA வசீ ITA புலவர் ITA சுவைப்பிரியன் USA அல்வாயன் ITA ஈழப்பிரியன் CA நியூ பலன்ஸ் CAN வாத்தியார் ITA கறுப்பி ITA வாதவூரான் ITA வீரப் பையன்26 OMA சுவி OMA கிருபன் UAE கோஷான் சே UAE அஹஸ்தியன் ITA கந்தப்பு OMA நியாயம் ITA எப்போதும் தமிழன் OMA ரசோதரன் NAM பிரபா OMA நிலாமதி NAM நந்தன் SL 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sahibzada Farhan (PAK) - 383 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Abhishek Sharma ஏராளன் Travis Head வசீ Aiden Markram புலவர் Abhishek Sharma சுவைப்பிரியன் Abhishek Sharma அல்வாயன் Travis Head ஈழப்பிரியன் Babar Azam நியூ பலன்ஸ் Jos Buttler வாத்தியார் Sanju Samson கறுப்பி Abhishek Sharma வாதவூரான் Abhishek Sharma வீரப் பையன்26 Abhishek Sharma சுவி Abhishek Sharma கிருபன் Dewald Brevis கோஷான் சே Suryakumar Yadav அஹஸ்தியன் Aiden Markram கந்தப்பு Abhishek Sharma நியாயம் Suryakumar Yadav எப்போதும் தமிழன் Abhishek Sharma ரசோதரன் Suryakumar Yadav பிரபா Ishan Kishan நிலாமதி Suryakumar Yadav நந்தன் Abhishek Sharma 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sahibzada Farhan (PAK) - 383 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் IND வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் IND ஈழப்பிரியன் SA நியூ பலன்ஸ் ENG வாத்தியார் IND கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி AUS கிருபன் IND கோஷான் சே NZ அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah (IND) - Wickets: 14, Ave: 12.42, Econ: 6.21 சரியாகக் கணித்தவர்கள்: செம்பாட்டான் புலவர் நியூ பலன்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 சுவி கோஷான் சே போட்டியாளர் பதில் செம்பாட்டான் Jasprit Bumrah ஏராளன் Arshdeep Singh வசீ Jacob Duffy புலவர் Jasprit Bumrah சுவைப்பிரியன் Varun Chakaravarthy அல்வாயன் Varun Chakaravarthy ஈழப்பிரியன் Jofra Archer நியூ பலன்ஸ் Jasprit Bumrah வாத்தியார் Jasprit Bumrah கறுப்பி Varun Chakaravarthy வாதவூரான் Adil Rashid வீரப் பையன்26 Jasprit Bumrah சுவி Jasprit Bumrah கிருபன் Varun Chakaravarthy கோஷான் சே Jasprit Bumrah அஹஸ்தியன் Varun Chakaravarthy கந்தப்பு Adam Zampa நியாயம் Varun Chakaravarthy எப்போதும் தமிழன் Varun Chakaravarthy ரசோதரன் Kuldeep Yadav பிரபா Shaheen Shah Afridi நிலாமதி Varun Chakaravarthy நந்தன் Varun Chakaravarthy 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) சரியாகக் கணித்தவர்கள்: வசீ அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் AUS வசீ IND புலவர் AUS சுவைப்பிரியன் PAK அல்வாயன் IND ஈழப்பிரியன் AUS நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் PAK வீரப் பையன்26 IND சுவி ENG கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் SA கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND கேள்விகள் 79) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: @Newbalance முதல்வர் நாற்காலியை பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளார்!
  3. இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இல் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி சஞ்சு சாம்சனின் புயல்வேக 89 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் மின்னல்வேக 54 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மாவின் அபாரமான அதிரடியான 52 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத கடுகதியான 26 (08 பந்துகள்) ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே ஓட்டவிகிதத்தைத் தக்கவைக்க வேகமாக அடித்தாட முயன்றனர். ரிம் செய்ஃபேர்ட்டின் அதிரடியான 52 (26 பந்துகள்) ஓட்டங்கள், மிச்சல் சன்ட்னரின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. ஜஸ்ப்ரிற் பும்ரா 4 விக்கெட்டுகளை 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்துச் சாய்த்திருந்தார். முடிவு: இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2026 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் இந்திய அணியின் வெற்றியை சரியாகக் கணித்த 14 பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்! குறிப்பு: யாழ்களப் போட்டியின் வெற்றியாளர் அடுத்த 12 கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவார்!
  4. கொண்டாட்டம் அளவு மீறியதால் எழும்ப முடியவில்லை.😆
  5. சுகமோ, சுகமில்லையோ வீட்டுக்கு வந்தாயிற்று.. விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்😊
  6. அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம் ✌️
  7. பிறென்ன மினெக்கெடுறியள்… கூட்டி கழிச்சு கணக்கை பைசல் பண்ணி போட்டு கடையை பூட்டுறானே?😂. எனக்கு மொத்தம் 103 என நினைக்கிறேன். யாழ் கிரிகெட் போட்டியில் நானும் செஞ்சுரி அடித்தேன் என்பது மகிழ்ச்சி. வாதவூரான் வீட்டை கவனமா பாக்கவும். வாடகை தவறாமல் கட்டவும்😂. முதல் 3 இடத்தில் வருவோருக்கு வாழ்த்துக்கள். போட்டியை நடத்திய ஜிக்கும், கலகலப்பாக்கிய உறவுகளுக்கும் நன்றி. வட்டா?👋
  8. பேசாமல் நம்பிக்கை இல்லாத் தீரடானத்தை கொண்டு வர வேண்டியது தான்.காரனத்துக்கா பஞ்சம்.🤣
  9. அவர்களுக்கான கூட்டம் 4% என நினைக்கிறேன். மிச்சம் எல்லாம் முதல் முறை வாக்காளர், ஏனைய கட்சிக்கு போட விரும்பாதவர்கள். இவர்களில் கணிசமாக விஜை எடுப்பார் என நினைத்தேன். ஆனால் இப்போ இதை சரிபாதியாக பிரிக்கலாம் என எண்ணுகிறேன். மிச்சம் எல்லோரும் கட்சிகளோடு அலையன்ஸ் வைக்க, விஜை திரிஷாவோடு அஃபையர் வைக்கிறார்😂 கேட்டேன், 20 வருடமாய் நடக்கும் திருவிழா, இந்தமுறையும் நடக்கும் என உறுதி கூறியுள்ளார் அமைப்பாளர் @கந்தப்பு
  10. வெற்றிக் கொண்டாட்டத்தில இருக்கிறம்.
  11. இந்தியாவுக்கு எதிரணியினரை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை . ........!
  12. ஏன் என்றால் சிரியாவில் அமெரிக்கா இஸ்ரேல் நேரடியாக இறங்கவில்லை. யாழ்களத்திலும் நிகர் இப்படி இருக்கிறார்கள். அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் ஏதும் செய்தால் மட்டுமே அவர்களின் ரேடாரில் புலப்படும்😂.
  13. அவருக்கு பணம் அனுப்பும் அறிவுஜீவிகள் தான் சங்கீதாவை பற்றியும் பேச சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் கதைக்க முன் வந்ததாக சொல்லி விட்டு தான் லிங் ஒன்று போட்டு இருக்கிறார்.பொதுவாக ஏதாவது பார்ப்போம் என்று தொடங்கினால் இவரது குப்பைகளும் கண்ணில படுகிறது.வைத்தியர் என்றோ அல்லது அவரும் ஒரு குடும்பஸ்தன் என்று சொல்வற்கோ அருகதை அற்ற மனிதர்.அர்ச்சனா.அவர் பின்னாடி நிற்கும் அம்மாமார், அன்ரிமார் இன்னும் திருந்த இல்லை.
  14. ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் ஈழத் தமிழர்களும் - நிலாந்தன் ஒரு சிறுவர் கதையிலிருந்து தொடங்குவோம். ஓநாய் ஒன்று நீரோடையில் நீர் அருந்த வந்தது. அங்கே ஒர் ஆட்டுக்குட்டி நீர் அருந்தி கொண்டிருந்தது. ஓநாய் ஆட்டுக் குட்டியைப் பார்த்துச் சொன்னது “டேய் நீதான் போன மாதம் என்னை கேவலமான வார்த்தைகளால் திட்டியது. அதற்குத் தண்டனையாக உன்னை இப்பொழுது நான் கொன்று சாப்பிடப் போகிறேன்” என்று. அதற்கு ஆட்டுக்குட்டி சொன்னது “ஐயா நான் போன மாதம் பிறந்திருக்கவே இல்லை” என்று. ஓநாய் சொன்னது “அப்படியென்றால் அது உன்னுடைய அம்மாவாக இருக்கும். உன்னுடைய அம்மாவைத் தண்டிப்பதற்காக இப்பொழுது உன்னைச் சாப்பிடப் போகிறேன்.” என்று கூறி ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது. இந்தக் கதைக்குள் இருக்கும் செய்தி என்னவென்றால், கொல்வது என்று தீர்மானித்தால் அதற்கு ஒரு காரணம் தேவை. அதுதான் இப்பொழுது ஈரானில் நடக்கிறது. முன்பு ஈராக்கில் நடந்தது; லிபியாவில் நடந்தது. ஈரானை அடிக்க வேண்டும், அதன் எதிர்ப்பை நசுக்க வேண்டும். ஈரான் கீழ்ப்படிந்தால் மேற்காசியா சுருண்டு விடும். எனவே ஈரானை நசுக்க வேண்டும். ஈரான் அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அதைத் தடுக்க வேண்டும் என்பது பிரதான குற்றச்சாட்டு. ஈரான் ஏன் அணுகுண்டை வைத்திருக்கக் கூடாது? அது பாரசீக நாகரிகத்தின் வழித்தோன்றல். பாரசீக நாகரிகமானது இப்போதிருக்கும் பெரும்பாலான ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை விடவும் மூத்தது. ஒரு மூத்த நாகரீகம் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது? இதுதொடர்பாக ஓமானின் அனுசரணையோடு நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பீட்டர் கிர்னஸ் என்பவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். ஓமான் நாட்டின் வெளிவிவிகார அமைச்சின் ராஜதந்திர உதவியாளரான அவர் கூறுவதின்படி, ஈரான் அமெரிக்காவோடு உடன்பாட்டுக்குச் சம்மதித்த பின்னர்தான் அமெரிக்கா ஈரானைத் தாக்கியிருக்கிறது. அதாவது ஈரான் அணுகுண்டு உற்பத்தியைக் கைவிடும் விடயத்தில் அமெரிக்காவோடு ஏதோ ஒரு சமரசத்துக்கு வரத் தயாராக இருந்தது. பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருந்த ஒரு பின்னணியில்தான் ஈரான் தாக்கப்பட்டிருக்கிறது. ஆயின், இங்கே பேச்சுவார்த்தைகள் எனப்படுகின்றவை ஈரான் உஷார் நிலையில் இருப்பதைத் தடுக்கும் தந்திர நோக்கத்தைக் கொண்டவையா? ஈரானின் அதிபர் இரும்பு கரம் கொண்டு நாட்டை ஆண்டார் என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன. பெண்களுக்கு உரிமை இல்லை. அரச எதிர்ப்பாளர்கள் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்படுகிறார்கள், உலகில் அதிகம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட நாடு…. போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவற்றில் உண்மையுண்டு. ஆனால் அது ஈரானியர்களின் பிரச்சினை. அதற்காக ஈரானிய அதிபரை தண்டிப்பதற்கு வெளி நாடுகளுக்கு உரிமையும் இல்லை. அதேசமயம் போரின் தொடக்க நாளில் சில நிமிடங்களிலேயே கொமெய்னியும் அவருடைய குடும்பமும் அழிக்கப்படும் அளவுக்கு ஈரான் பலவீனமாக இருந்திருக்கிறது. அதன் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தகர்த்தெறியும் அளவுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் வலிமையாக இருந்திருக்கின்றன. ஈரானின் வலிமையை உடைப்பதில் அதன் உள் எதிரிகளுக்கும் பங்கு இருந்திருக்கிறது. உள்ளே இருப்பவர்கள் வழங்கிய தகவல்களை வைத்துத்தான் கொமெய்னியின் தலை குறி வைக்கப்பட்டிருக்கிறது. தன்னைத் தானே மூடும் சமூகங்கள் தம்மைத் தாமே காட்டிக் கொடுப்பவர்களை உற்பத்தி செய்கின்றன. எதுவாயினும் கடந்த மூன்று மாத காலப் பகுதிக்குள் அமெரிக்கா தன்னை உலகின் ஏகப் பெரு வல்லரசு என்று நிரூபிக்கும் இரண்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. முதலாவது வெனிசுலாவின் அதிபரை அவருடைய நாட்டுக்குள் இறங்கித் தூக்கியது. இரண்டாவது, ஈரானின் அதிபரும் உட்பட தீர்மானிக்கும் அதிகாரமுடைய உயர்மட்டத் தலைவர்களை போர் தொடங்கிய அன்றே தீர்த்துக் கட்டியது. இறமையுள்ள நாடு ஒன்றின் தலைவரை அந்த நாட்டுக்குள் இறங்கிக் கைது செய்கிறார்கள். மற்றொரு நாட்டின் தலைவரை குண்டு போட்டுக் கொலை செய்கிறார்கள். வெளிநாடுகளின் வான்பரப்புக்குள் ஆளில்லா விமானங்களை அத்துமீறி அனுப்பி ஆட்களைக் கொல்லுகிறார்கள்; இலக்குகளை அழிக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், இறையாண்மை எங்கே இருக்கிறது ? சுதந்திரம் எங்கே இருக்கிறது? நாடுகளின் ஆள்புல எல்லைகளுக்குப் பொருள் என்ன? 10 கோடி மக்களை கொண்ட ஈரானுக்கும் இது பொருந்தும். சிறிய இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும். இலங்கைத் தீவின் 40 கடல் மைல் தொலைவில் வைத்து ஈரானியக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம். அமெரிக்கா எதுவரை தான் வரமுடியும் என்பதனை அங்கே காட்டியிருக்கிறது. சிறிய இலங்கைத் தீவு சுதந்திரம், இறைமை என்றெல்லாம் வீரம் காட்டவில்லை. இந்தியா யாருடைய பக்கம்? இந்தியாவின் மௌனம் அதன் ராஜதந்திரமான வார்த்தைகள் எதை உணர்த்துகின்றன? ஈரானுக்கு அவர்கள் ஆதரவில்லை என்பதைத்தான். பாரசீகத்தைப் போலவே இந்திய பேரரசும் ஒரு பெரிய பண்பாட்டு நிலப்பரப்பு . ஆனால் ஒரு நாட்டின் ஆல்புல எல்லைக்குள் நுழைந்து அந்த நாட்டின் தலைவரைக் கொல்லும் காட்டு விதியை இந்தியா ஆதரிக்கின்றதா? எதிர்கின்றதா? இப்படிப்பட்டதோர் உலகச் சூழலில் அரசற்ற சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை? ஒரு பகுதியினர் ஈரான் தாக்கப்படுவதை ரசிக்கிறார்கள். ஏனென்றால் ஈரான் இறுதிக் கட்டப் போரில் அரசாங்கத்தின் பக்கம் நின்றது. ஈரான் மட்டுமல்ல, கியூபா, வியட்நாம், பாலஸ்தீனம் போன்ற நாடுகளும் ஐநாவில் அரசாங்கத்தின் பக்கம்தான் நிற்கின்றன. கியூபா எப்பொழுதும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படும் ஒரு நாடு. அங்கே மருத்துவ, பொருளாதாரத் தடை காரணமாக முதியவர்கள் இறந்து கொண்டிருப்பதாக ஒரு சிறுமி எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வாசிக்க கிடைத்தது. பொருளாதாரத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் ஈழத் தமிழர்கள் கியூபாவின் பக்கம்தான் நிக்க வேண்டும். ஆனால் ஐநாவில் கியூபா ஈழத் தமிழர்களோடு நிற்பதில்லை. இன்னுமோர் உதாரணம். மேற்காசியாவில் அரசற்ற குர்திஷ் மக்கள் வெவ்வேறு நாடுகளால் பங்கிடப்படுகிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் இப்பொழுது அமெரிக்காவின் உதவியோடு அந்தந்த அரபு நாடுகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் அறநெறியின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிராக நிற்க வேண்டுமா? அல்லது எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்று ராஜதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமா? எது சரி ?அறமா? விடுதலையா ? இந்த இடத்தில் அறமும் விடுதலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. அரசற்ற சிறிய மக்கள் கூட்டத்துக்கு இதுதான் விதி. ஏன் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கும் இதுதான் விதி. போர் என்று வந்தால் அங்கே தர்மம்,நீதி நியாயங்கள் இருக்காது. வெற்றியை உறுதிப்படுத்துவது என்ற ஒரே இலக்கு மட்டும்தான் இருக்கும். அது ஒரு காட்டு விதி. அது நாகரீகமடைந்த மனிதர்களின் விதியல்ல.மனித குல நாகரீகம் என்பது போரைத் தவிர்ப்பது. ஆனால் விலங்குகளின் விதி அதுவல்ல. அங்கே வெல்வதுதான் பிழைக்கும். அதுதான் காட்டு விதி. இங்கே தொடக்கத்தில் கூறப்பட்ட சிறுவர் கதையில் இருப்பது அதுதான். ஓநாய்கள் பசியோடு திரியும் காட்டுக்குள்தான் ஆட்டுக் குட்டிகளும் வாழ்கின்றன; ஈழத் தமிழர்களும் வாழ்கிறார்கள். ஓநாய்களிடமிருந்தும், சிங்கங்களிடமிருந்தும், ட்ராகன்களிடமிருந்தும் ஈழத் தமிழர்கள் தப்பிப்பிழைக்க வேண்டும். தமது போராட்டத்தின் நீதிக்கும், தமது ராஜதந்திர இலக்கிற்கும் இடையே ஏதோ ஒரு சமநிலையைப் பேண வேண்டும். கிறீஸ்து தன் சீடர்களுக்குப் போதித்ததுபோல”இதயத்தில் புறாக்களைப்போல கபடமற்றவர்களாகவும். செயலில் பாம்புகளைப்போல எச்சரிக்கையுணர்வோடும்” போராட வேண்டும். https://www.nillanthan.com/8178/
  15. மீண்டும் ஒருக்கா முயற்சி பண்ணுங்க. எந்த 30அச் சொன்னீங்கள்.🤣 தொடர்ந்தும் மூன்றாவது அரைச்சதம் அடிச்சு.......
  16. போட்டுப் பிளக்கிறான் பயபுள்ள. விட்டதெல்லாம் பிடிக்கிறான் இன்றைக்கு. பவர் பிளேவில் 92 ஓட்டங்கள்.
  17. 5 நாள் ஹொலிடே. 3 ஆம் நாளே ஹொலிடேயில் தம்பரும் நெத்தன்யாஹுவும் சேர்ந்து ஆயத்துல்லாவை போட்டிட்டினம். இன்னும் 5 நாள் நிற்கவேண்டியிருந்தது.. மொத்தம் பத்து நாட்கள்! மூன்று மடங்கு செலுத்தவேண்டி வந்தது.. அத்துடன் ஹொட்டேல், சாப்பாடு என்று செலவுகள்.. விமான நிலையத்தில் கேற் எங்கே என்று தெரியாமல் திணறிய இந்தியர்களுடன் ஒப்பிடும்போது எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை! சாம்சன் 30 க்குள் அவுட் ஆவார்!
  18. sroepSnodt64uh780:3haf6at4s6fuu7fl61ragmm0af 5 m7m9509 m3ihc · ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் . “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே? குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே, அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார். சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார். கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் " என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார். உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார். உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள். சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “ என வினவினார். "அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன். நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான். முதியவராகிய சிவபெருமான் சொன்னார். " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்." "நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை "" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் "".......!
  19. வைக்கோல் வண்டி பாரம் .........!
  20. சுகமா வீட்ட வந்து சேர்ந்தாச்சு போல.
  21. நீங்கள் பிழைக்க தெரிந்த ஆள், பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொண்டு எங்களை இத்து போன கூட்டணியில் இணைத்துவிடப்பார்க்கிறீர்கள், தமிழ்நாட்டு வழக்கில் சொன்னால் உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா, அன்ட்ரேமார்க்கும் இல்லை உங்க காட்டிலை மழைதான்.🤣
  22. அவரவர்க்கு சாதகமான செய்திகள் தமக்கு சார்பானவர்களை உயர்த்தியே கூறும். வளமான மத்திய கிழக்கில் வியாபார ரீதியில், நட்பாக புகுந்து, முழு வளத்தையும் அபகரிக்க நினைத்து, அந்த நாட்டை, வளத்தை, அழித்து, அரசியலை இரண்டுபடுத்தி அவர்களை எழுந்திருக்க விடாமல் அடித்து நொருக்கி ஏதிலிகளாக்கி விட்டு தாம் வந்த வழியே போய்விடுவார்கள். அவர்களுக்கு நன்றியில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பரிகாரமில்லை, தம்மை நிஞாயப்படுத்துவார்கள். அடுத்தவரின் வளங்களை அபகரிப்பது இல்லையேல் அழித்தொழிப்பது. அவர்களின் வளத்தால் பெற்ற ஆயுதங்களை அவர்களிலேயே பரீட்சிக்கிறார்கள். இது எந்த வகையில் நிஞாயம்? உலகம் முழுவதையுமே அழிவில் தள்ளியுள்ளார்கள். இவர்கள் அழிக்கப்படாதவரை ஏதோ ஒரு நாடு தொடர்ந்து இவர்களுக்கு இரையாகிக்கொண்டே இருக்கும்.
  23. யாழ்களத்துக்கான ரஸ்ய தூதுவரும் @vasee …அவரது உதவியாளர் கூகிள் டிரான்சிலேட்டரும் ஒவர் டைம் செய்து உழைக்கிறார்கள் 😂. ஆனால் நம்ம கோமாளி செலன்ஸ்கி…புட்டின், டிரெம்பையே டீல் பண்ணியவர்… ஓபனுக்கு எல்லாம் பீச்சங்கையே காணும்😂… சதாம்…கடாபி…அசாத்…கமேனி வரிசையில் தானும் சேர ஆசைபடுகிறார் ஓபன் 😂. பிரச்சனை ஒண்டும் இல்லை செஞ்சிர்லாம்😂. பிகு ஈரானின் டிரோன்களை எதிர்க்க பல மில்லியன் பெறுமதியான பேறியட் ஏவுகணைகளை பாவித்து அவை கையிருப்பு தீரலாம் என்ற அச்சத்தில்… செலன்ஸ்கியிடம் டிரோன் எதிர்ப்பு டிரோன்களை கோரியது அமெரிக்கா, அரபு நாடுகள். #எரியுதடி மாலா #பேனை 80 ல வையி 😂😂😂
  24. நெத்தன்யாகுவின் குடும்பம் புளோரிடாவில் உள்ளதாக கூறுகிறார்கள், உண்மை நிலவரம் தெரியாது. இந்த போரில் அமெரிக்க தரப்பு வெற்றி பற்றிய செய்திகள் பரவலாக ஊடக தரப்பில் வெளிச்சம் போட்டுக்காட்டும் விகிதத்துடன் ஒப்பிடும் போது போர் நீடிக்கும் கால அளவுகளை பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பாடாகவே உள்ளது, ஆனால் போர் வெற்றி ஈட்டப்படும் வரை தொடர நினைத்தால் அது அனுமனின் வால் போல நீண்டு போகும் அதனால் எந்த இலாபமு ஏற்படாது நட்டமே ஏற்படும். அதனால் ஈரான் அணுகுண்டு ஆற்றல் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது (முன்பும் இவ்வாறே கூறினார்கள்), கமேனி கொல்லப்பட்டுவிட்டார், ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டது (ஈரானிடம் தாக்குதலை நிறுத்த சொல்லி விட்டு) என கூறி போரினை முடித்து வைக்கலாம்.
  25. நிதிக்கடத்தலலின் பின்னணியில் முன்னால் புலனாய்வாளர்கள் உள்ளது ஒரு வகை சதித்திட்டத்தின் பங்காக இருக்கலாம், கங்கேரி மீது ஒரு தீவிரவாத தாக்குதலாகவும் இருக்கலாம் அல்லது அதன் அரச தேர்தலில் செய்யப்படும் இடையூறுகளாகவும் இருக்கலாம். ட்ருஸ்பா எண்ணெய் வழங்கி உக்கிரேன் பிரிவில் எந்த வித சேதமும் காணப்படவில்லை என்பதனை செய்மதி பட மூலம் காட்டுகிறது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறமையினை மீறும் செயல்களில் தொடர்ச்சியாக உக்கிரேன் ஈடுபடுகின்றது, முதலில் இந்த எண்ணெய் வழங்கி மீது தாக்கிய போது செலன்ஸ்கி கருத்துக்கள் என்பன ஒரு திட்டமிடாத எதிர்வினையாற்றும் நடவடிக்கையாகவும், ஒரு நீண்டகால இராஜதந்திர சிக்கலை உருவாக்கும் முயற்சியாகவும் காணப்படுகிறது. உலக ஒழுங்கு மாற்றம் இப்போது ஆதரவாக உள்ள சக்திகள் நாளை கை கழுவி விடும் நிலை ஏற்படலாம் எனும் நிலையில், தற்போது நிகழ்த்தும் சில செயல்கள், கருத்துக்கள் நீண்ட கால நோக்கில் உக்கிரேனுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் சில மாற்றங்களை ஐரோப்பாவில் ஏற்படுத்த தொடங்கிவிட்டததிற்கான ஆரம்ப கட்ட மாற்றங்கள் தெரிய தொடங்கி விட்டது, தற்போதய நிலையில் எவ்வளவு காலம் மத்திய கிழக்கு நிலை நீடிக்கும் என தெரியாத நிலையில், சில தடாலடி அரசியல் கொள்கை மாற்றம் ஐரோப்பாவில் நிகழலாம்.
  26. pSroosnedtgfHtg01u2àut5g328ig66ll6r03:16i89g9uu03et 9 i050,i · ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள். கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார். அங்கிள்... அங்கிள்.... என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்.... அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள் prescription கொண்டுவந்தாயா குழந்தை???? அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா???? எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள். "காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது. சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன????? குழந்தை மென்று விழுங்கி சொன்னது " மெரிக்கள்" கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார். நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு????? மெரிக்கள் அங்கிள்... அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது????? குழந்தை கண்ணீருடன் சொன்னது.... டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது. அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார். அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார். வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார். அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்..... டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற அதற்க்கு மருத்துவர் இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம். எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்........!
  27. யாரோ இருவரின் சண்டைக்குள் எங்களை இழுத்துவிடாமல் இருப்பது நல்லது!
  28. இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?
  29. ஆளும் முடிஞ்சுதாம் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன... இரண்டாவது விக்கட்டும் ஔட் 🤣🤣
  30. ஏன் இப்ப அதிரடி அறிவிப்பு. முதலே செய்திருக்கலாமே. இலங்கைக்கு போனபொது, சிறிலங்கன் விமனத்திலை தமிழில் என்னமோ சொல்லுறா ஆனால் ஒன்றுமே விளங்க இல்லை. நல்ல காலம் ஒரு அதிரடி அறிவிப்பும் சொல்லவில்லை. இப்படி ஒரு மொழியை கொலை செய்யத்தான் வேணுமா? சிறிலங்கன் விமனத்திலை போனது என் குற்றமே. விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்தா ஒரு பெண். அவ சிங்களத்திலசொன்னது எனக்கு விளங்கின அளவு தமிழிலை சொன்னது விளங்கவே இல்லை. ( எதோ ஒரு விமானம் வந்துவிட்டது எண்டுதான் சொன்னவா). உலகம் எங்கோ போக இலங்கை எங்கோ போகுது.
  31. ரஞ்சித் அவர்களே, தேடுதலும் வரலாற்றறிகையும் வற்றிச் செல்லும் உலகில் காலத்திற்கு ஏற்றவாறு தேடியெடுத்து மொழிபெயர்த்து அவற்றை அறிந்துகொள்ளப் பாலமாகச் செயலாற்றிய தங்களுக்கும் தங்கள் நேரத்துக்கும் யாழ் களமும் நாமும் நன்றியுடையோராவோம். தங்கள் தேடல்கள் தொடரட்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  32. தொடரின் இறுதி அத்தியாயம் : திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதியை தமிழினச் சுத்திகரிப்புச் செய்த இலங்கையரசு தமிழ்ப் போராளிகளால் சிங்களவர்கள் (ஆயுதம் தரித்தவர்கள் உட்பட‌) மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலான மிகிந்தபுர - தெகிவத்தை ஆகிய குடியேற்றக்கிராமங்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரசு புத்தக வடிவில் பட்டியலிட்டு வெளியிட்டிருந்தது. வைகாசி 30 ஆம் திகதி ஊ.கா.படையினர் மீது நடத்தப்பட்ட‌ இத்தாக்குதலை "5 சிங்கள அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று அது செய்தி வெளியிட்டிருந்தது. இத்தாக்குதலினை டெலோ அமைப்பு நடத்தியிருந்தது. தமிழ் மக்களைப் படுகொலை செய்தும் அவர்களின் வீடுகளை எரித்தும் அட்டூழியம் புரியும் ஊர்காவற்படையினருக்குத் தண்டனையாகவே இத்தாக்குதலை நடத்தியதாக டெலோ போராளிகள் சிங்களவரிடம் தெரிவித்திருந்தனர். ஐந்து சிங்கள ஊர்காவற்படையினர் மீதான டெலொ அமைப்பின் தாக்குதலினை அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும், குடியேற்றக் கிராமங்கள் மீதுமான தாக்குதலாகக் காண்பிப்பதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் மீதமாயிருக்கும் புராதன தமிழ்க் கீராமங்களில் இருந்து தமிழர்களை படுகொலை செய்தோ, அடித்து விரட்டியோ ஆக்கிரமிப்பதுதான் இலங்கையரசின் நோக்கமாக இருந்தது. தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவரான சம்பந்தன் 2002 இல் பாராளுமன்றத்தில் பேசும்போது பாரம்பரிய தமிழ் விவசாயக் கிராமமான கிளிவெட்டியில் ஜெயவர்த்தன காலத்து அரச பயங்கரவாதத்தின் கோரச் சுவடுகள் இன்றும் காணப்படுவதாகவும், மிகுந்த விளைச்சல் தரும் கிராமமான கிளிவெட்டியினை ஜெயவர்த்தனவின் அரசும் இராணுவமும் இணைந்து சுடுகாடாக வெறும் 48 மணித்தியாலத்தில் மாற்றிவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீளவும் அவர்களின் வாழிடங்களுக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சம்பந்தன், அப்பகுதிகளுக்கான தனது அண்மைய பயணத்தின்பின்னரே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "எரிந்து சாம்பலாகக் கிடக்கும் வீடுகள், நெற்களஞ்சியசாலைகளின் துருப்பிடித்த இரும்புச் சட்டங்கள், பால் சேகரிக்கும் நிலையத்தின் வெற்றுக் கூட்டுக் கட்டிடம் ஆகியன எமக்குக் கூறும் செய்தி என்னவெனில் ஒருகாலத்தில் இக்கிராமம் செல்வச் செழிப்புடன் வசதியாக இருந்திருக்கிறது என்பதையும், இன்றோ அது மனித நடமாட்டமில்லாத சுடுகாடாக ஜெயவர்த்தன அரச பயங்கரவாதத்தினால் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதும்தான்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். மட்டக்களப்பு - திருகோணமலை கடற்கரையோர நெடுஞ்சாலையில் , மட்டக்களப்பிலிருந்து வடக்காக 85 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் புராதனத் தமிழ்க் கிராமம்தான் கிளிவெட்டி. கிளிவெட்டிக்குத் தெற்காக நூறுவீதம் சிங்களக் குடியேற்றவாசிகளைக் கொண்ட அல்லைச் சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிளிவெட்டியில் வட மேற்குப் புறத்தில் இன்னும் இரு சிங்களக் குடியேற்றக் கிராமங்களான டெஹிவ‌த்தையும், நீலபொலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிளிவெட்டிக் கிராமம் மீதான தாக்குதல் 1985 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதி ஆரம்பமானது. அருகிலிருக்கும் சிங்களக் கிராமமான சேருநுவர பகுதியில் இருந்து புறப்பட்ட பொலீஸாரும் ஊர்காவற்படையினரும் கிளிவெட்டியின் தெற்குக் கரையிலிருக்கும் தங்கநகர் ஊடாக கிராமத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான 50 வீடுகளைத் தீக்கிரையாக்கிய பொலீஸ் - ஊர்காவற்படை அணியினர் பெண்கள் உடபட 37 தமிழர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்றனர். முதலில் பொலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் பின்னர் கந்தளாயிற்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். பின்னர் அல்லை - கந்தளாய் வீதியில், மகாவலி ஆற்றின் மதவு கடந்து சாம்பல்ப்பிட்டியில் வாகன‌ங்களை நிறுத்தி, 36 தமிழர்களை அவ்விடத்திலேயே சுட்டுக் கொன்று உடல்களை வீதியில் வைத்து எரியூட்டினார்கள். சின்னவன் எனப்படும் இராசைய்யா சூட்டுக் காயங்களுடன் ஓடித் தப்பிக்கொண்டார். அருகிலிருந்த பற்றைக் காடுகளுக்குள் ஓடி ஒளித்துக்கொண்ட அவர் பின்னர் திருகோணமலையினை வந்தடைந்தார். அந்தநாள் இரவு கிளிவெட்டிக் கிராமத்தின் பெரும்பாலான தமிழர்கள் அச்சத்தினால் திருகோணமல நகருக்கு அருகில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமங்களான பச்சனூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார்கள். சில வயது முதிர்ந்தவர்கள் மட்டும் தம்மை சிங்களவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை என்கிற எண்ணத்தில் கிளிவெட்டியிலேயே இருக்க முடிவுசெய்தார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக ஆனி 1 ஆம் திகதி மீண்டும் கிளிவெட்டிக்குள் நுழைந்த பொலீஸாரும் ஊர்காவற்படையினரும் மீதாமக‌விருந்த முதியோர் அனைவரையும் சுட்டும் வெட்டியும் கொன்றார்கள்.அன்று தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்கள் டெலோ அமைப்பினரால் ஐந்து ஊர்காவற்படையினர் கொல்லப்பட்ட சிங்களக் குடியேற்றமான தெகிவத்தையைச் சேர்ந்தவர்கள். பிற்பகல் 2 மணிக்கு இராணுவமும், பொலீஸாரும், ஊர்காவற்படையினரும் இணைந்த கும்பல் கிளிவெட்டிக்குள் நுழைந்தது. தங்கத்துரையின் மாமனாரான மயில்வாகனம் கனகசபை கிளிவெட்டியை விட்டு வெளியேறிச் செல்லாது அங்கேயே தங்கிவிட்ட முதியவர்களில் ஒருவர். அன்று மர நிழலின் கீழிருந்து இன்னொரு முதியவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தொலைவில் ஆயுதம் தரித்த இராணுவத்தினரும், பொலீஸாரும், ஊர்காவற்படையினரும் பெருத்த ஆரவாரத்துடன் வருவதைக் கண்டிருக்கிறார். இக்கும்பலைக் கண்டதும் உடனடியாக ஓடிச்சென்று வைக்கல்க் குவியல் ஒன்றின்பின்னால் அவர் ஒளிந்துகொண்டார். ஆனால் அவரைக் கண்டுவிட்ட அக்கும்பல், அவரை வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்றது. மேலும் நான்கு வயது முதிர்ந்த பெண்கள் உட்பட ஒன்பது முதியவர்களை அக்கும்பல் கொன்றது. கொல்லப்பட்ட பெண்களின் பெயர்கள் வருமாறு : கமலா ராசைய்யா (முதல்நாள் இரவு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய ராசைய்யாவின் துணைவியார்) மற்றும் அவரது மகள், ராஜ ராஜேஸ்வரி அம்மாள்(கிளிவெட்டி சைவக் குருக்கள் சுப்பிரமணிய சர்மாவின் மனைவி) அவரது மகள் பிரசாந்தி. அன்றும் 125 வீடுகளை இராணுவத்தினரும், பொலீஸாரும், ஊ.கா.படையினரும் எரியூட்டினர். கிளிவெட்டியில் மீதமாயிருந்த 3 முதிய தம்பதிகள் உட்பட 13 தமிழர்களை அவர்கள் இழுத்துச் சென்றனர். அவர்களுள் 5 இளவயது ஆண்களும், 3 இளம் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரையும் தெகிவத்தைக்கு அவர்கள் இழுத்துச் சென்றனர். ஆண்கள் அனைவரினதும் உடைகளைக் களைந்த அக்கும்பல் அவர்களைச் சுட்டுக் கொன்றது. ஒரு உடல் மரத்தில் நிர்வாணமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டது. மீதமாயிருந்த இளம்பெண்கள் மூவரையும் அக்கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திக் கொன்றது. அன்றைய நாட்களில் திருகோணமலையில் தங்கியிருந்த தங்கத்துரை லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் சைமன் விஞ்செஸ்ட்டருடன் கிளிவெட்டிப் படுகொலைகள் குறித்துப் பேசினார். லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை அறிக்கையினூடாக கிளிவெட்டிப் படுகொலைகள் சர்வதேசத்திற்குத் தெரியவேண்டி வந்தது. அதுலத் முதலி கிளிவெட்டிப் படுகொலைகள் குறித்த சர்வதேசச் செய்திகளை மறுத்தபோதிலும் அவரது மறுப்பை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கத்துரை பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார் என்று குற்றஞ்சுமத்தி அவரைக் கைதுசெய்துவிட‌ லலித் ஆயத்தமாகி வருகிறார் என்கிற செய்திகள் கசியத் தொடங்கியதும் தங்கத்துரை தமிழ்நாட்டிற்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார். மறுநாளான ஆனி 2 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியை 10 ஆவது மைல்க் கல்லிற்கு அருகாமையில் காத்திருந்த ஊ.கா.படையினர் மறித்தனர். மறிக்கப்பட்ட பஸ்ஸை அருகிலிருந்த காட்டிற்குள் அவர்கள் ஓட்டிச் சென்றனர். பெண்கள் உட்பட 13 தமிழ்ப் பயணிகளை அவர்கள் சுட்டுக் கொன்றனர். அடுத்துவந்த இருநாட்களான ஆனி 3 ஆம் 4 ஆம் திகதிகளில் கிளிவெட்டி மற்றும் மூதூர் ஆகிய கிராமங்களுக்கிடையில் வாழ்ந்துவந்த தமிழர்களை முற்றாக வெளியேற்றும் நோக்குடன் பாரிய இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று அரசால் முடுக்கிவிடப்பட்டது. இப்பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு குறைந்தது 35 தமிழர்களை இராணுவத்தினரும், ஊ.கா.படையினரும் கொன்று குவித்தனர். இத்தாக்குதலின்போது 200 தமிழர்கள் காணாமற் போயிருந்தனர் என்பதுடன் இன்றுவரை அவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இவ்விரு தினங்களிலும் அரச படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அழித்தொழிப்பு நடவடிக்கை குறித்து தகவல்களைச் சேகரித்த சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களில் ஒன்று குறைந்தது 1,000 வீடுகளாவது இராணுவத்தாலும் ஊ.கா.படையினராலும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தது. மேலும் இங்கு வாழ்ந்துவந்த தமிழர்களில் 2500 பேர் மூதூரில் அடைக்கலம் தேடி ஒளிந்திருந்த நிலையில் இன்னும் 1,000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஓடி ஒளித்துக்கொண்டுள்ளதாக அது மேலும் தெரிவித்திருந்தது. இந்த அழித்தொழிப்பு இராணுவ நடவடிக்கையினூடாக திருகோணமலை மாவட்டத்தில் வேறொடு பிடுங்கி எறியப்பட்ட தமிழ்க் கிராமங்களாவன‌, மேன்காமம், கங்குவெளி, பாலத்தடிச்சேனை, அரிப்பு, பூநகர், மல்லிகைத்தீவு, பெருவெளி, முன்னம்போடிவத்தை, மண‌ற்சேனை, பாரதிபுரம், லிங்கபுரம், ஈற்சிலம்பற்றை, கருக்கல்முனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, மற்றும் வாழைத்தோட்டாம் ஆகியனவாகும். திருகோணமலை மாவட்டத்தில் வைகாசி 23 ஆம் திகதியிலிருந்து ஆனி 4 ஆம் திகதி வரை இலங்கை அரசால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்திவந்த ராஜன் ஜூல், குறைந்தது 145 தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கான சான்றுகள இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் 5 சிங்கள ஊ.கா. படையினரும் இக்காலப்பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் அரசு வெளியிட்ட பொதுமக்கள் படுகொலைகள் பட்டியலில் டெலோ அமைப்பினரால் கொல்லப்பட்ட ஐந்து ஊ.கா.படையினரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. கொல்லப்பட்ட தமிழர்கள அனைவரியும் அரசாங்கம் "பயங்கரவாதிகளின் பட்டியலில்" சேர்த்துவிட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு தமிழ் மகனையும், மகளையும் பயங்கரவாதி என்று சந்தேகிப்பதனூடாக, அவர்களை, அவர்களது பூர்வீகத் தாயகத்திலிருந்து பலவந்தமாக விரட்டியடிப்பதன் மூலம் "தமிழ்ப் பயங்கரவாதத்தினை" முற்றாக ஒழித்துவிடலாம் என்று அனைத்துச் சிங்கள அரசாங்கங்களும் எண்ணிச் செயலாற்றி வந்தன. முற்றும் ! *********************************************************************************************************** குறிப்பு : இத்துடன் இத்தொடர் முற்றுப்பெருகிறது. திரு சபாரட்ணம் எழுதிவந்த இத்தொடர் 2005 ஆம் ஆண்டு தவிர்க்கமுடியாத காரணங்களினால் இடைநடுவே நின்றுவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் திரு சபாரட்ணம் அவர்களும் இயற்கை எய்திவிட்டதனால் இத்தொடரை முழுமையாம தமிழ்ச் சங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் தமிழ்ச் சங்கம் சில பகுதிகளை தொழிநுட்பக் காரணங்களால் இழந்துவிட்டது என்றும் கூறப்பட்டது. ****************************************************************************************************************** நன்றிகள்: ஈழப்பிரியன் அண்ணா, நொச்சி, விசுகு அண்ணா மற்றும் தொடர்ச்சியாக எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
  33. கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத அறையில் என் நண்பர் ஒருவரின் இறந்த உடலை பார்க்க போன போது அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள், இறந்த இளம் மற்றும் நடுத்தர பெண்களின் இறந்த உடலுடன் உறவு கொள்வதற்கு என்றே சிலர் உள்ளதாகவும், அதனால் அதை தடுக்க பல கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் கூறினர். நான் லஞ்சம் கொடுத்து தான் என் நண்பரின் உடலை பார்க்க சென்றேன். பண்டைய காலத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்கள் இறந்த பின் அவ் உடலை காக்க காவலாளிகளை நியமிக்கும் வழக்கம் பல நாடுகளில் வழக்கத்தில் இருந்தன. இங்கு ரொரண்டோவில் பல ஆண்களை ஏமாற்றி (Gays களை) பின் பாலியல் வல்லறவாக்கி கொன்ற சீரியல் கொலையாளி, இறந்த ஆணின் உடலுடன் உறவு கொள்ளும் வழக்கத்தை கொண்டவராக இருந்தார் என அங்கு கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து கண்டு பிடித்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.