Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    89214
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20480
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33988
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    47089
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/17/26 in all areas

  1. நேற்று பிரான்சில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்றிருந்தேன். எனக்குப் பின்னால் ஒரு தொண்ணூறு வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய ஒரு பிரெஞ்சுக்காரர் வாக்களிப்பதற்காக கையில் தாங்கும் பொல்லுடன் நின்றிருந்தார். மறைவான இடத்தில் வாக்கை உறையுள் வைக்கும் அறைக்குள் சென்றவர் பொல்லை பயன்படுத்தாமல் இருந்திருக்கவேண்டும் படார் என்று விழும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்து போது வெளிப் பக்கமாக உள்ள சுவரில் விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வருவது தெரிந்தது. உடனடியாக அங்கு நின்ற அதிகாரிகளால் அவசரப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதானவருக்கு இதுவே கடைசி விழுதலாக இருக்க வாய்ப்புண்டு. இந்த நிலையில் வீட்டுக்கு வந்து எனது உறவினர் நண்பர்கள் சிலருடன் பேசியபோது யாரும் வாக்களிக்க செல்லாதது தெரிந்தது. ஒரு வயதானவர் தனது வயதான, இயலாத நிலையிலும் தனது நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக வாக்களிக்க வருவதும் எனது இனம் தனது நாட்டின் மீதும் பற்றற்று தனக்கு உயிர் பாதுகாப்பு தந்து அரவணைத்த நாட்டின் மீதும் பற்றற்று மிக மிக சுயநலமாக வாழ்தல் என்பது எங்கே சென்று முடியப் போகிறது??? 😭
  2. ஒரு நோபல் தானே சும்மா பேச்சுக்காவது கையில் திணிச்சுப்போட்டு போயிருக்கலாம் இப்ப பாருங்கோ பயல் ஒவ்வொருவரையும் திருவோடு எந்த வைக்காமல் ஓயமாட்டான். அமெரிக்கன் பாடம் படிக்கனும் என்றால் நாமளும் சேர்ந்து காய்வது காலத்தின் கட்டாயம்
  3. வடக்கு கிழக்கில் முன்பு போர்க்காலத்தில் எரிபொருள் தடை இருந்தது. அக்காலத்தில் எங்கட சனம் துவிச்சக்கரவண்டியில்தான் பெரும்பாலும் வேலைக்கு சென்றார்கள். இப்ப?
  4. அப்பு விஜய்! உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை? என்ன திறமை இருக்கிறது உன்னிடம்? நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன் நீ.சமூகத்திற்கு நல்லதை சொன்ன கதைப்படங்களும் இல்லை. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என்ற படங்கள் பாடல்களுக்காவே ஓடியவை.கில்லி திரைப்படம் கூட பிரகாஜ்ராஜின் நடிப்பிற்க்காகவும் அவரின் வசனங்களுக்காகவும் திரிஷா கவர்ச்சிக்காகவும் பாடல்களுக்காவும் ஓடியவை என சொல்கிறார்கள். உங்களது சமகால நடிகரான அஜித்.👈 அவர் ஒவ்வொரு படங்களுக்கும் எடுக்கும் முயற்சிகளை பார்.கமலகாசனைப்போல் அவரும் நடிப்பு அரக்கன்.அஜித்திற்கு ரசிகர் மன்றம் இல்லையாகினும் தன்னை சந்திக்க வரும் ரசிகளிர்களிடம் பண்பாகவும் அன்பாகவும் கட்டுப்பாடாகவுமே நடந்து கொள்கிறார்.ஒரு சம்பவத்தில் அவரது ரசிகர் விசில் அடித்ததிற்கே கண்டிப்பான பார்வையை காட்டியவர்.அவர் நடிகர் என்ற வட்டத்தை விட்டு வெளி வந்து உலகளாவிய ரீதியிலும் கார் பந்தய போட்டியில் முன்னணி வகிக்கின்றார்.குடும்பம் பிள்ளைகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார்.அந்த மன நிலையும் நடிகர் விஜய் ஆகிய உங்களுக்கு அறவே இல்லை. பிள்ளைகள் தனி வழி. மனைவி தனியே.சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிற்கூட போகவில்லை. அப்படி இருக்கிறது உங்கள் குடும்ப பாசம்.ஒருவேளை நீங்கள் நடித்த அந்த கலியாண எக்ரிமென்ட் படம் போல் வாழ்க்கையாய் இருக்குமோ?😋சினிமா வசனங்களை உங்கள் அரசியலுக்காக எழுதி வைத்து அரசியல் மேடைகளில் படிக்கின்றீர்கள்..இது உங்களிடம் சொந்தமாக எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்றது.சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😂 நீங்கள் நடிகன் என்ற முறையில் அஜித்தை பார்த்தாவது குடும்பவாழ்க்கை என்னவென்பதை பார்த்து திருந்தியிருக்கலாம்.பெற்ற பிள்ளை தனியே பட்டமளிப்பு விழாவில்....தந்தையோ ரகசிய காதலியுடன் ஒரே வர்ண உடையுடன் உல்லாச கண்கவர் காட்சியளிப்புகள். இந்த சித்திரத்தில் நாட்டுக்கு தலைவன் ஆக ஆசை.😛 அரசியல் என்று பார்த்தால்...அங்கேயும் பூச்சியம் தான். இரண்டரை மணி நேர திரைப்படத்தில் வரும் காட்சி கானங்கள் வரலாறுகள் போல் நிஜ அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் காட்சிப்படுத்த முனைகின்றீர்கள்.மீண்டும் சொல்கிறேன் சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😎 நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? உங்கள் அரசியல் அனுபவங்கள் என்னென்ன? அரசியலுக்காக பொது மக்களை சந்தித்து பேசியிருக்கின்றீர்களா? பத்திரிக்கையாளர் சந்திப்புகளையாவது நடத்தியிருக்கின்றீர்களா? பனையூரில் இருந்து கொண்டு பத்து பனங்கொட்டையாவது தானம் செய்திருக்கின்றீர்களா? அல்லது தாட்டிருக்கின்றீர்களா? உங்கள் அரசியல் பிரச்சாரத்தை காணவந்த மக்கள், ரசிகர்கள் பலியாகி இருக்கின்றார்களே. உங்களுக்காக வந்தவர்களை ஒரு தடவையாவது போய் சந்தித்திருக்கின்றீகளா? நீங்கள் அந்த மரண பழியை வேறு யார் மேலேயும் சுமத்தினாலும் உங்களை பார்க்க வந்தவர்கள் தானே பலியாகியிருக்கின்றார்கள்.உலக சம்பிரதாயத்திற்காகவது போய் நலம்/துக்கம் விசாரித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நாட்டுக்கு தலைவன் எனும் சிந்தனை கோமாளித்தனத்தை விட மோசமானது. உங்களை சுற்றி வரும் ரசிகர்கூட்டங்களை வைத்து கணக்கு பண்ணும் விஜய் அவர்களே! நீங்கள் எப்படியோ அதே போல் தான் உங்கள் ரசிகர் பட்டாளமும் வாக்காள பெருமக்களும் என்பதை அவர்களது பகிரங்க பேட்டிகள் சொல்லி நிற்கின்றன. பார்க்கவே கேவலமாக இருக்கின்றது.பொது வெளியில் மனைவி படுக்கை என போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள். இதுதான் உங்கள் முதல்வர் கனவுக்கான சித்திரங்கள்....! சிபிஐ க்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது ஏதோ விண்வெளியில் ஆராய்ச்சி செய்து விட்டு வந்தவர் போல் கொடுக்கும் பூமழை பிலிங்.....அது விஜய் அண்ணாவால் மட்டுமே முடியும்.அத பார்த்து ஒட்டோ ஓட்டுனர்களும் டாக்ஸி றைவர்களும் பூரித்து பொங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. இன்னும் வரும்
  5. எல்லாவற்றையும் ஐரோப்பிய, வட அமெரிக்க தரத்திற்கே இலங்கையில் கொண்டு வரக் கூடிய இயலுமை இருக்குமாக இருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே இருக்கிறோம்? வாகன ஓட்டிகள் திருந்த வேண்டும், அப்படித் திருந்தும் வரை சைக்கிளோடுவோர் உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்க வேண்டும்!
  6. ஈரான் நாட்டு பெண்கள் மிகமிக அழகானவர்கள்.
  7. அப்பாடா .....நான் வாக்களித்து விட்டேன் ........! நான் ஒருபோதும் வாக்களிக்கத் தவறுவதில்லை........ அப்படி எப்போதாவது தவறியிருந்தால் அந்நேரம் நான் வேறிடத்தில் இருந்திருப்பேன் . .......! 😀
  8. ஒரு தோட்டாவுக்கு இருக்கும் சக்தியைவிட ஒரு வாக்கிற்கு அதிக சக்தி இருப்பதாக சொல்கிறார்கள். இஸ்ரேல் அவுஸ் போன்ற நாடுகளில் வாக்களிக்காவிட்டால் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். அமெரிக்காவில் இளம் சந்ததியினர் வாக்கு செலுத்துவது மிகமிக குறைவு.
  9. வைரமுத்து எழுதிய பல ஆயிரம் பாடல்களில் சில நூறு முத்துக்களாவது இல்லையா? வைரமுத்து வெளியிட்ட நூல்களில் ஒரு சிலவாவது முத்துக்கள் இல்லையா? இந்த முத்துக்கள் ஞானபீடத்துக்குரிய தகுதியை கொடுக்கவில்லையா? கவிஞர் கண்ணதாசனிற்கு எவ்வாறான அங்கீகாரங்கள், விருதுகள் கிடைத்தன என தெரியவில்லை. ஆனால், அவர் மீது வசவுகள் பாடி அவர் படைப்புக்களை நையாண்டி செய்து தமது வக்கிரங்களை கொட்டி தீர்த்த தமிழ் இலக்கிய காவலர்களின் புலம்பல்களை முன்னொரு பொழுது வாசித்துள்ளேன்.
  10. தமிழ் தேசிய முகமூடி அணிந்த றௌடிகளின் சேட்டைகளுக்கெல்லாம் "தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் போட்டி" என்ற ஒரே காரணத்தோடு வருவது நிலாந்தனுக்கே ஒரு கலர் கண்ணாடியினூடாகத் தான் எதையும் பார்க்க முடிகிறது எனக் காட்டுகிறது. அம்பிகா சற்குணநாதனை இதே போன்ற தூசணங்களால் திட்டி ஒதுங்க வைத்த போது, சுமந்திரனை அவுசில் வைத்துத் தூசணங்களால் திட்டிய போது, சும்மா ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்ப வந்து வேசம் போடும் நிலாந்தன் போன்றோர் தான் ஈழத்தமிழர்களின் "சிந்தனைத் தலைவர்கள் - thought leaders" 😎 என்றால், நமக்கு விடிவேயில்லை என்று தான் அர்த்தம்!
  11. ஆம். உண்மை. இராணுவன. உடையுடன். துப்பாக்கியுடன். கண்ணடித்தால். ஒரு. ஈரான். மங்கை. அழகே. அழகு. தான். வெளியில். அடக்குமுறை. என்று. சொன்னாலும. அவர்கள். சகல துறைகளிலும். பணியாற்றுகிறார்கள்.
  12. பொருளாதார தடை என்ற பெயரில் மற்றைய நாடுகளை கட்டிச் சுவராக்கி கடைசியில் இயலாமல் சரணடைய வைக்கிறார்கள். இவர்களது தூளத்திற்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையும் ஆடத் தொடங்கிவிடும்.
  13. சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார். சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தகவல்களின் படி, வீதியில் நடந்து கொண்டிருந்த பெண் தனது கைபேசியை பார்க்கும்போது, பின்னால் ரோபோ வந்ததை கவனித்தார். ரோபோ அருகில் நின்றிருப்பதைப் பார்த்ததும் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த ரோபோ மகாவ் நகரில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. சம்பவத்திற்கு பிறகு ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் பொதுமக்கள் இருப்பிடங்களில் ரோபோக்களை அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். கல்வி மையத்தின் பிரதிநிதி டோவின் மேக், ரோபோ சம்பவத்திற்குப் பின்னர் அந்த பகுதியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததாகவும், இதனால் இந்த சந்திப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். சம்பவத்திற்கு நேரில் சாட்சி பெற்ற சிலர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் பெண் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றார், எந்தவித புகாரும் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பரவியதைக் கண்ட பிறகு, பொலிஸார் ரோபோவை கைது செய்ததை நகைச்சுவையாகவும் பகிர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2026/1468772
  14. ரோபோ பொலிசாரை கைது செய்யும் காலம் வெகுவிரைவில் வரும்😇
  15. 😂 நீங்கள் நினைத்தது சரி விஜய் இரசிகையின் பேட்டி ஒன்று பார்த்தேன் ஏன் அவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவாவின் பதில் விஜய் அண்ணாவின் X படம் (எனக்கு பெயர் நினைவில்லை) பார்த்தேன் அதில் இருந்து அவர் முதலமைச்சரா வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார் என்று முடிவு எடுத்தேன். உண்மை
  16. பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது! இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (‍NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 18 இன் கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார். மேலும், ஆறு உக்ரேனியர்கள் லக்னோ மற்றும் டெல்லி விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் செல்லுபடியாகும் விசாக்களில் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் கட்டாய தடைசெய்யப்பட்ட பகுதி அனுமதி இல்லாமல் மிசோரமுக்குச் சென்றதாகவும் ஒரு வட்டாரம் தெரிவித்தது. அங்கு, இந்தியாவிற்கு விரோதமான இனக் குழுக்களை அவர்கள் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பாவிலிருந்து வந்த பல ட்ரோன் சரக்குகளை அவர்கள் மிசோரம் மாநிலத்தில் கொண்டுவந்து சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது. சந்தேக நபர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, சனிக்கிழமையன்று நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர் அவர்களை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தார். சந்தேக நபர்களுக்கான தடுப்புக் காவல் திங்கட்கிழமையன்று மீண்டும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மார்ச் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்தக் குழு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகவும், அவர்களின் நடமாட்டம் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை ஏற்படுத்தியதாகவும் NIA குற்றம் சாட்டியுள்ளது. https://athavannews.com/2026/1468779
  17. ஓம். முன்பும் இந்த அமைப்பு தமது இல்லை என கல்லூரி சொன்ன நியாபகம். அண்ணாமலை விடயம் மட்டும் அல்ல, அதற்கு முன்பும் பலது பிழைத்துள்ளது. எல்லாருமே கருத்து திணிப்புத்தான். தவிர மக்கள் நல்லா பொய் சொல்லுவார்கள் பூத்துக்குள் போய் தமது கைவரிசையை காட்டுவார்கள்😂 விஜை நடித்த படங்களில் பலதும் மொக்கைதான் அதிலும் அதி மொக்கையான படம் என்றால் பத்திரிதான். வசீகரா நல்ல நகைச்சுவை. ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி ஓம் சக்தி பரா சக்தி சஞ்சைக்கு திரிஷா சித்தி
  18. போரை விரும்பாத வெண் புறா… தம்பருக்கு ….. ஜெயவேவா! ஜெயவேவா😂
  19. இவர்கள் எவ்வளவுதான் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வளர்ந்தாலும் போர் நிலையில் இன்னும் எதிரிகளை அல்லது மாற்றுக்கருத்துடையோரை குறைத்து மதிப்பிடுகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. ஈரான் முக்கியஸ்தர்கள் ஈராக்கின் தலைவர் சதாம் ஹுசையின் அகற்றப்படும் போதே தம்மை சுதாகரித்திருப்பார்கள். அதே போல் கடாபி கொலை என பார்க்கும் போது ஈரான் தினசரி தம்மை பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.அதனால் தான் இன்றும் பலத்துடன் இருக்கிறார்களோ என நினைக்கத்தோன்றுகின்றது. அமெரிக்க கொள்கையாளர்கள் ஈராக்,லிபியா,சிரியாவில் இலகுவாக வெற்றி பெற்றது போல் ஈரானிலும் அதன் தலைவரை போட்டுத்தள்ளியவுடன் வெற்றிவாகை சூடலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றது. டொனால்ட் ரம்ப் ஆட்சியில் மட்டுமல்ல வேறு யார் ஆட்சிக்காலத்திலும் ஈரான் மீதான போர் ஒன்றிற்கு இன்றோ நாளையோ என ஒரு திட்டத்தை அமெரிக்க கொள்கையாளர்கள் வகுத்து வைத்திருப்பார்கள் என நம்பலாம்.மற்றும் படி டொனால்ட் ரம்ப் அவர்களினால் தான் ஈரான் போர் வந்தது என யாரும் கோபப்பட்டால்...... அமெரிக்காவின் ஏனைய தலைவர்களினால் தமக்கு பிடிக்காத நாடுகள் மீதான அத்து மீறல்களையும் போர் அழிவுகளையும் திரும்பி பார்த்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.சில போர்கள் தங்கள் தனிப்பட்ட விடய மூடி மறைப்பிற்காகவே தொடங்கப்பட்டதாக தெரிகிறது. ஈரானுக்கு பின் பலமாக ஒரு பெரும் சக்தியாக சீனா இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
  20. கோழிக்கும், ஆட்டுக்கும், மாட்டுக்கும் மட்டும் அல்ல…. புண்ணாக்கு பரிமாறப்பட்டுள்ளது😂 புரிஞ்சவன் பிஸ்தா😂
  21. https://web.facebook.com/photo/?fbid=26386733690956285&set=pcb.26386735687622752 காலில் மண்படாமல் சமயகிரியை செய்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.
  22. என்னப்பா.... எல்லாம், சப்பெண்டு போச்சுது. இந்தச் செய்தி உண்மையா? அல்லது... AI விளையாட்டா. விவாகரத்து மனுவை ரத்து செய்ய, இந்தியா வந்த சங்கீதாவை... கட்டி அணைத்து கண்கலங்கி வரவேற்ற விஜய்..! பாசப் போராட்டம்.!!! Lankapuri

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.