Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    89361
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20141
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3101
    Posts
  4. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2281
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/19/26 in all areas

  1. இந்தத் தகவல்கள் "புதியவை" என்று சொல்வதை விட "விசித்திரமானவை" என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். தெற்காசியர்கள் - இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், வங்கதேசத்தினர் - வெள்ளையின மக்களையும், கிழக்காசிய மக்களையும் விட 4 மடங்கு இதய நோய் தாக்கும் ஆபத்துடையவர்கள் ! இதற்குக் காரணங்கள் அவர்களுடைய ஜீன்களிலேயே இருக்கின்றன. இரத்தம் இலகுவாகக் கட்டியாகும் நிலை (thrombosis). இரத்தக் கொழுப்பு ஆரோக்கியமற்ற நிலை (dyslipidemia). அழற்சி (inflammation) அதிகரிக்கும் நிலை ஆகிய 3 காரணிகள் இந்த 4 மடங்கு அதிகரித்த இதய நோய் வாய்ப்பின் காரணங்கள். இந்த 3 காரணிகளுள் முதலாவதைக் கட்டுப் படுத்த மாத்திரைகள் தேவைப் படலாம் (blood thinners). ஏனைய இரண்டையும் கட்டுப் படுத்த உணவும், உடற் பயிற்சியும் பயன்படுத்தலாம். 1. இரத்தக் கொழுப்பு நிலை: இதை நாம் உள்ளெடுக்கும் எண்ணையில் இருக்கும் கொழுப்பு பிரதானமாகத் தீர்மானிக்கும். தேங்காய் எண்ணை, பாம் எண்ணை என்பவற்றில் இருக்கும் நிரம்பிய கொழுப்பமிலம் இரத்தத்தின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் காரணி. இவர் குறிப்பிடும் பாமோலின் எண்ணை கூட 50% வரை நிரம்பிய கொழுப்புக் கொண்டது. அதைச் சாதாரணமாக "விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆலோசனை சொல்வது ஆபத்தானது. 2. PUFA இனைப் பொரிக்க/வதக்கப் பாவித்தால் அதில் இருந்து புற்று நோய் உருவாக்கும் காரணிகளும், அழற்சியைக் கூட்டும் பொருட்களும் உருவாகும் என்பது உண்மை. MUFA இனைச் சூடாக்கினால் இந்த ஆபத்துக்கள் குறைவு. இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவு செய்யும் எண்ணை வகை ஒலிவ் எண்ணை: அதில் இருக்கும் கொழுப்பமிலம் பெருமளவு MUFA வகை. நிரம்பிய கொழுப்பும் குறைவு. இதை விட்டு விட்டு பாமோலின் எண்ணையை எடுத்துக் கொள்ளும் படி சொல்லும் ஆலோசனைக்கு என்ன விஞ்ஞான அடிப்படை இருக்கிறதெனத் தெரியவில்லை.
  2. தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே. அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன. அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார். அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள். 1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது. இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள். அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை. சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது. எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான் மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.
  3. இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம் தோழர் திருமுருகன் காந்தியின் தலைமையிலான மே 17 இயக்கம் இந்தி ஆதிக்க எதிர்ப்பினைத் தீவிரமாகக் கையிலெடுத்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றுதானே ! மொழி ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11 ஆம் தேதி இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்போது என்று கேட்பவர்களுக்கு 'இதற்கு வேறு நல்ல நாள் எது ?' என்று வினாவெதிர் வினாவைத்தான் பதிலாகக் கூற முடியும். இப்போது ஆரம்பிப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என்பது உண்மையாக இருந்தால் கூட, இருந்துவிட்டுப் போகட்டுமே ! அப்படியாவது நல்லது நடக்கட்டுமே ! தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுத் துறைகளில் எல்லாம் வடவரை மட்டுமே வைத்து நிரப்புவது எவ்வகையில் சரி ? தமிழ்நாட்டில் வங்கியின் சேவை முகப்பில் (counter) கூட இந்திக்காரர்களை அமர வைப்பதின் நோக்கமென்ன ? தொடர் வண்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகராகக் கூட (TTE) வடவர்கள் ஏன் ? நம் ஆட்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றால் குறுகிய கால அளவிலேயே அங்கே உள்ள மொழியில் தேவையான அளவு பேசக் கற்றுக் கொள்வதைக் காணலாம். வடக்கிலிருந்து வருபவன் எத்தனைக் காலமானாலும் ஆங்கிலம் கூட பேச மெனக்கிடுவதில்லையே, ஏன் ? தன் மொழியே இந்தியாவின் மொழி என்ற மொழி ஆதிக்கத் திமிரன்றி வேறென்ன ? இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் என்பது ஒவ்வொரு காலத்திலும் தமிழன் அவ்வப்போது கையிலெடுக்க வேண்டிய ஒன்றாகி விட்டது. இக்காலகட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்தித் திணிப்பை எக்காலத்திலும் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் - தற்காலத்தில் திக வும் திமுகவும் மட்டுமே - ஏன் அவருடன் கைகோர்க்கவில்லை ? தமிழ்த் தேசியம் (போலியாகவேனும்) பேசித் திரியும் நாதக வினர் எங்கே போனார்கள் ? திருமுருகன் காந்தி தலைமையில் போராட ஏதேனும் மனத்தடை இருக்குமானால், அவர் எந்தத் தலைமையின் கீழும் இப்போராட்டத்தை எடுத்துச் செல்லத் தயாராக இருப்பார். அவர் ஓட்டு அரசியல் செய்யவில்லை. காரியம்தான் முக்கியம்; வீரியம் முக்கியமில்லை என்பதை உணர்ந்தவர் திருமுருகன் காந்தி. அவரை ஓரளவு அறிந்தவர் எவருக்கும் இதனைச் சொல்லும் உரிமையுண்டு. அவருக்குப் புலம்பெயர் தமிழரிடமிருந்து பணம் வருகிறதாக்கும் என்று தனி நபர் விமர்சனத்தில் இறங்கி போராட்டங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அது உண்மையாகவே இருப்பினும், தவறென்ன ? பொருளில்லாமல் ஒரு புல்லைக் கூட இந்த பூமியில் பிடுங்க முடியாது. விமர்சனம் செய்பவர்கள் சமூகப் போராட்டங்களுக்குத் தங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவதுதானே ! மேலே குறிப்பிட்ட கட்சிகள் தேர்தல் கால வேலைகளைக் காரணம் சொல்லி இப்போராட்டத்தில் இறங்கவில்லையாக்கும் என்றே வைத்துக் கொள்வோம். குறைந்தபட்சம் அக்கட்சித் தலைமைகள் ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கலாமே !அக்கட்சிகளின் பத்திரிக்கைகள் போராட்டத்தின் செய்தியையாவது மக்களிடம் கொண்டு சேர்க்கலாமே ! மொழிப்போராட்டம் என்பது தனி மனித பிம்பங்களைக் கட்டமைக்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகப் போராட்டம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். Note the point Your Honour ! திராவிட இயக்க அரசியல் போல என் மனதிற்கு நெருக்கமான இடதுசாரி அரசியலை இங்கே நான் பேசவேயில்லை ! https://www.facebook.com/share/v/1B4uujnoAW/ https://www.facebook.com/share/r/18Pz9oLJnP/
  4. கலை விருதுகள் மட்டும் இல்லை, கோஷான், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற துறைகளில் வழங்கப்படுபவையும் நீங்கள் சொல்லும் வகையானவையே. எடிசன், டெஸ்லா, ஐன்ஸ்டைன் இடையேயான போட்டிகள் பற்றிய கதைகளை வாசித்திருக்கின்றீர்களா என்று தெரியவில்லை. எடிசன் நோபல் விருதை வாங்குவதற்கு தலைகீழாக நின்றார். அவரால் ஒரு அவக்கொலை கூட நடந்தது. ஆனாலும் எடிசனுக்கும் டெஸ்லாவிற்கும் அது எப்போதும் வழங்கப்படவில்லை. தனிநபர் தெரிவு, பார்வை என்பதையும் தாண்டி, அடிப்படையான சில அளவு கோல்கள் எல்லா விருதுகளுக்கும் உண்டு. அந்த அளவு கோல்களையே நான் கேள்விக்கு உட்படுத்துகின்றேன். 'To Kill a Mockingbird' இங்கு மிடில் ஸ்கூலில் ஒரு பாடநூலாக இருக்கின்றது. Victor Hugo அவர்களின் 'Les Misérables' இங்கு ஹை ஸ்கூலில் ஒரு பாட நூலாக இருக்கின்றது. ஒன்று ஒரு புது முயற்சி, நவீனமானது. இன்னொன்று செவ்விலக்கியம், உலகத்திற்கு பிரான்சு தேசம் அளித்த கொடை. இரண்டுமே பாட நூல்களாகவும், விருதுகளுக்கும் மிகத் தகுதியானவை. தமிழில், செங்கை ஆழியான் போலவே, இன்று எழுதும் இரா.முருகன் மற்றும் எங்களின் அ. முத்துலிங்கம் இருவரின் கதைகளையும் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நீங்கள் சொல்லும் அதே வகையானவை. இவர்களின் ஒரு கதைகளையாவது வாசித்தவர்கள் என்று எத்தனை தமிழர்கள் இருப்பார்கள்................. இவர்களுக்காகவே இந்த விடயத்தில் நான் விட்டுக்கொடுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருக்கின்றேன்........... இது தமிழ் மொழிக்கு நான் செய்ய வேண்டிய ஒரு கடமையும் கூட.....................
  5. தமிழ் யூடியூபர்கள் வியூவுக்காகவோ தமது குறை அறிவினாலோ செய்வதாக இருக்கலாம்…. அது கூட ஓக்கே… ஆனால் வெளிநாட்டில் வாழும், ஆங்கிலத்தில் செய்திகளை வாசிக்க கூடிய இயலுமை இருக்கும், வெளிநாட்டில் எதோ ஒரு தொழிலை செய்யும் அளவுக்கு அடிப்படை திறமையாவது இருக்கும், ஈழத்து அங்கிள்கள், இந்த பைத்தியகார வீடியோக்களை நம்பி பார்ப்பதும்…. அதை உண்மை என நம்பி யாழுக்கு காவி வருவதும்தான் ஏன் என்பதை என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை.
  6. பெரும்பாலான தமிழ் யூடியூப்பர்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர்கள் தாம் பேசுவது தெரிந்துதான் பேசுகிறார்களா அல்லது தமிழ்பேசும் இஸ்லாமியர்களைக் குளிர்விக்க இப்படிப் பிதற்றுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்ரேல் சுக்குநூறாகியது, மரண அடி, அழிந்தான் யூதன், அமெரிக்கா பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுகிறது, அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பல்களை ஈரானின் ட்ரோன்கள் நிர்மூலமாக்கின, இஸ்ரேல் பிரதமர் நெத்தென்யாகு ஈரானினால் துல்லியமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் விரும்பியவாறு தலைப்பிட்டு தமது மனம் போன போக்கில் எடுத்துவிடுகிறார்கள். இதிலும் சில ஈழத்தமிழர்கள் மதில்மேல் பூனைபோல இருந்துகொண்டு ஒரு நாள் அமெரிக்காவிற்குச் சார்பாகவும் மறுநாள் ஈரானுக்குச் சார்பாகவும் பேசுகிறார்கள். தமிழ் அடியான் என்கிற யூடியூப்பர் ஒருநாள் அமெரிக்காவை போர்க்களத்தில் இருந்து ஈரான் அகற்றிவிட்டது, அமெரிக்கப் படைகள் முற்றாக மத்திய கிழக்கில் இருந்து காணமலாக்கப்பட்டிருக்கின்றன என்று செய்தி வெளியிட்டார். மறுநாள் அமெரிக்காவின் பாரிய நெடுந்தூரக் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் பல நிலைகளைத் தாக்கியழித்தபோது, தான் முதல்நாள் கூறியதற்கு நேரெதிராகப் பேசியிருந்தார். நான் இதுகுறித்து அவரிடம் கேள்வவி எழுப்பியபோது சில மணிநேரத்தில் எனது பதிவு அவரால் நீக்கப்பட்டது. இப்படித்தான் தமிழ் யூடியூப்பர்களின் நிலை. இவர்கள் வெளியிடும் காணொளிகளை உண்மையென்று நம்பும் எம்மவர்கள் இதுகுறித்துச் சிந்திப்பது நலம். 😊
  7. இல்லை கோஷான். பாரதியின் எழுத்தும், இவருடைய எழுத்தும் ஒன்றில்லை. அருகில் கூட இல்லை. பாரதியின் ஆன்மாவிலேயே இசையும், தமிழும் இருந்தது. மிகவும் இலகுவான, எல்லோருக்கும் தெரிந்த காக்கைச் சிறகினிலே நந்தலாலா! - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா! என்ற வரிகளுக்கு எந்த இசையும் தேவையில்லை. இந்த வரிகளின் அர்த்தம் புரிவதே ஒரு கவிதையான தருணம். பாரதியாரோ, புதுமைப்பித்தனோ, அசோகமித்திரனோ கவனிக்கப்படாமல் போனதே வரலாற்றில் வந்து போன வைரமுத்துகள் போன்றவர்களாலேயே. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் இருந்த பிணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். அன்று புதுமைப்பித்தனை தமிழ் உலகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் காலத்தால் அழியாமல் நிற்பவர் அவரே. அவருடைய 'சாப விமோசனம்' சிறுகதைக்கு ஈடாக தமிழில் ஒன்று கிடையவே கிடையாது. அசோகமித்திரன் ஏழைப் பிராமணன் ஆகவே இறந்துபோனார். அவருடைய 'புலிக்கலைஞன்' உலக கிளாசிக். ஆனாலும் அவர் வாழும் காலத்தில் இயக்குனர் ஷங்கரும், பாக்யராஜும், ஏ ஆர் முருகதாஸுமே எழுத்தாளர்களாக தமிழ் மக்களுக்கு தெரிந்தார்கள். அதை தாண்டினால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார் போன்றோர். இதுவே தமிழ் சமுதாயம் அன்றும், இன்றும். வைரமுத்துவின் திகட்டும் வர்ணனைகளுடனான வானம்பாடிப் பாடல்கள் இன்னும் சில வருடங்களிலேயே மறைந்துவிடும். எம் ஜிஆரின் நடிப்பு போல, ரஜனியின் ஸ்டைல் போல, விஜய்யின் டான்ஸ் போல. இந்த உலகம் இருக்கும் வரை நவீன தமிழின் தலைமகனாக பாரதி இருப்பார். வைரமுத்துவோ அவருடைய பாடல்களோ இருக்காது. சரஸ்வதியே இறங்கி வந்து தான் இதை எழுதியிருக்க வேண்டும்: காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ கனலிலே சுடுவ தென்னே?கண்ண பெருமானே! சேற்றிலே குழம்ப லென்னே?கண்ண பெருமானே-நீ திக்கிலே தெளிந்த தென்னே?கண்ண பெருமானே! பாரதிக்கு ஈடு இணையே கிடையாது, கோஷான்...................
  8. உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இருக்க கூடாது என்பதை ஈரான் மரண அடி கொடுத்து நிறைவேற்றிவிட்டது இன்ஷாஅல்லாஹ்
  9. இன்னொரு மத மாணவருக்கு இன்னொரு மதம் பிடித்தவர் இன்னொரு மத புத்தகத்தை ஏன் கொடுக்கணும். இன்னொரு மதத்தைப் பற்றி அறிய இன்னொரு மதத்தவனுக்கு ஆர்வம் இருந்தால் அவனாகவே வாங்கிப் படிப்பான்.
  10. ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்! ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு மந்தமாக இருப்பதாலும், ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் இந்த நிதிக் கோரிக்கை காங்கிரஸில் ஒரு பெரிய அரசியல் போராட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்தப் பத்திரிகை விளக்கியுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தப் போர் நிதி வலு சேர்க்கும் என்றும், மோதலின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. இதுவரை அமெரிக்கப் படைகள் 7,800-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன, 8,000-க்கும் மேற்பட்ட போர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளன, மேலும் 120-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது. போரின் முதல் வாரத்திலேயே, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக 11 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டிருந்தது. தற்போது மேலதிகமாக செலவிடப்படும் 200 பில்லியன் டொலருடன் சேர்த்து, போருக்கான அமெரிக்காவின் மொத்தச் செலவினம், 2025 ஆம் ஆண்டில் 356.51 பில்லியன் டொலர்களாக இருக்கும் ஈரானின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதியை விட அதிகமாக இருக்கக்கூடும் என ‘World Meters‘ அமைப்பு தெரிவித்துள்ளது. 2026 நிதியாண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டிற்காக 838.5 பில்லியன் டொலரை காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1469194
  11. இப்பொழுது தேர்தல் நேரம். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் வாக்குகள் கிடைக்குமென்றால் மட்டும் வருவார்கள். கூட்டுச் சேர்ந்த கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கே திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு இது ஓட்டு அரசியல் இல்லை என்கிறீர்கள். எப்படி வருவார்கள்? நாம் தமிழர் கட்சியைப் பற்றி நீங்களே சொல்லிவிட்டீர்களே போலி தேசியம் பேசித் திரிபவர்கள் என்று. இதற்கு மேல் என்ன செல்ல இருக்கின்றது?
  12. ஆக, யாழ் அகவை 28இல் ஊர்க்கதை வாசிக்க வாய்ப்பிருக்கின்றது.☺️
  13. உங்களுடைய விவாதங்களுக்கும் எனது இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாரதியின் பாட்டை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது. கண்ணதாசன், அம்பிகாபதி திரைப்படத்துக்கு எழுதிய பாடல் வரிகள். கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே…
  14. இந்திய அரசியலில் எதுவும் நடக்கும். இன்னும் இரண்டு மாதங்கள் தானே. பார்ப்போம்.
  15. பகிர்விற்கு நன்றி ஐயா.
  16. 19 Mar, 2026 | 05:26 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீன தரத்திற்கு உயர்த்தும் பணிகளின் முதற்கட்டம் வியாழக்கிழமை (19) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டன. ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், Dawoodi Bohras சமூகத்தின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகளை Amic Engineering Private Limited நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலைய நடைமேடைகள் தரமுயர்த்தப்படுவதுடன், நவீன இருக்கை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் நிலையத்தின் கூரை முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. மேலும், துருப்பிடிக்காத வலுவான உலோகப் படிக்கட்டுகள் அமைக்கப்படுவதோடு, நவீன மின்விளக்கு வசதிகள் மற்றும் CCTV கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்படவுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் விசேட அணுகுமுறைப் பாதைகள் (Easy Access Routes) உருவாக்கப்படவுள்ளன. அதேபோல், ரயில்களின் நேர அட்டவணையை துல்லியமாக அறிய நவீன காட்சிப் பலகைகள் நிறுவப்படுகின்றன. இத்திட்டம் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே தல்பே ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பொலன்னறுவை, கண்டி மற்றும் மருதானை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உயர்த்துவதோடு, நாட்டின் ரயில் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு | Virakesari.lk
  17. ஈரானை.... நொட்டிப் பார்த்ததில் இருந்து, நிம்மதி இழந்து... முத்தீட்டுது.
  18. செம்பவள வழித்தோன்றல் என் தலைவன். ஒரு தமிழன். எனவே அவர் பிழை விட மட்டார். வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், தமிழன் தப்பு செய்யமாட்டான் என்பதை செவ்வாய் கிரக அறிஞர் கூட ஏற்கிறார்கள்.
  19. தான் போக வழியைக் காணேல்லையாம் மூஞ்சூறு விளக்குமாத்தையும் காவிக்கொண்டு வெளிக்கிடிச்சுதாம்!🤣
  20. ஓம், இதை நானும் கேள்விப் பட்டேன். சுவிசில் வாழ்ந்த எம் தலைவன் கிம் அந்த நாட்டுச் சொக்கலேற்றினால் அதிகம் கவரப் பட்டு, வட கொரியா வந்த பின்னரும் கூட விசேட வழிகளில் சுவிஸ் சொக்கலேற்றை வரவழைத்து அனுபவிப்பதாக அறிந்தேன்! கோவிட் காலத்தில் நாட்டை முற்றாகப் பூட்டிய வேளையில் கொரிய மக்கள் பட்டினியை எதிர் கொண்டதாக அறிந்த தலைவன் கிம் "No bread? why can't they eat chocolate?" என்று வினவியதாகவும் அறிந்தேன்😎!
  21. இந்த பைபிள் விநியோகத்தைப் பற்றி…. ஆபிரகாம் சுமந்திரன் தனது திருவாயை திறந்து, கருத்து ஒன்றும் கூறவில்லை என்ற படியால்… சுத்துமாத்து சுமந்திரன் பம்மிக் கொண்டு இருக்கிறதை பார்க்க.... அவருக்கும் உள்ளுக்கு நல்ல விருப்பம் போல் தெரிகிறது. 😂 “மௌனம்… சம்மதத்துக்கு அறிகுறி” 🤣
  22. இவ்வளவு வேகமாகத் தொடரை எப்பிடித்தான் எழுதி முடிச்சியளோ அண்ணா. நன்றாக இருக்கிறது. ஆனாலும் பலரையும் காணவில்லை. யாழை விட்டுப் போய்விட்டார்களா என்ன? கருத்திடாவிட்டாலும் மனம் சலிக்காது எழுதியமைக்கு வாழ்த்து அண்ணா.
  23. கடலில் செல்லும் ஒரு எண்ணை கப்பலில்… எண்ணை கசிவு ஏற்பட்டாலே, பூமி மாசு படுகின்றது என்று பதறும் உலகம்… மாறி, மாறி எண்ணை உற்பத்தி வயல்களை தாக்கும் போது ஏற்படும் கரும் புகை, முழு உலகத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்தப் பாதிப்புக்களை… இந்தப் போரில் எதுவித சம்பந்தமும் இல்லாத, உலகில் ஒவ்வொரு தனி மனிதனும், வருங்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டி வரும்.
  24. சினிமா பாடல் இலக்கியமா அல்லது இலக்கியம் இல்லையா என்பதை கேட்பதைவிடுத்து யார் யாருக்கு ஞானபீடம் வேண்டும் என வினவுங்கள். அவர்களுக்கு வைரமுத்து ஞானபீடத்தை பெற்றதனால் ஏற்பட்ட கடி, சொறி, சிரங்கு உட்பட எல்லா உபாதைகளும் பறந்துவிடும்.
  25. தம்பர் சமாதான விரும்பி என நம்மில் சிலர் தலைகுத்தனமாக கணித்தது போல்… ஈரான் அடித்தவுடன் அடங்கி விடும் என தம்பர் தப்பாக கணித்துள்ளார்.
  26. இதை மேற்கோள் காட்டப் போகின்றவர் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்............🤣. சமீப காலங்களில் கொடுக்கப்பட்ட நோபல் இலக்கிய விருதுகளில் இரண்டு மிக விமர்சனத்திற்கு உட்பட்டன. ஒன்று இது, மற்றொன்று ஒரு பெண் எழுத்தாளர், பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வந்த விமர்சனங்களின் சாரம் ஞாபகம் இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக Bob Dylon நோபல் விருதை வாங்கப் போகக் கூடவில்லை.................. பழத்தட்டுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்................... Bob Dylon சமனாக தமிழில் ஒருவருக்கு அதி உயர் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றால் அது இளையராஜாவாகத்தான் இருக்கும்...................🫣............ இது கூட அடுத்ததாக நடக்கும்............... பாஞ்சாலியின் துகில் உரியப்படும் போது பகவான் வந்து காத்தார்................. தமிழ்த்தாயை காக்க பாரதியும், புதுமைப்பித்தனும், சி சு செல்லப்பாவும், ப சிங்காரமும், அசோகமித்திரனும், இன்னும் சிலரும் மீண்டும் மீண்டும் பிறந்து, ஏழ்மையில் உழன்று, வாழும் நாட்களில் எவருக்கும் தெரியாமல் இருந்து, பின்னர் அப்படியே இறந்து போக வேண்டும்.........................😌.
  27. சினிமா பாடல்கள் இலக்கியத்தினுள் வருகின்றது என்பது தெரியாதபடியால் கேட்டு குத்தாட்டம் போட்டுவிட்டார்கள்.
  28. இது நான் 28ம் திகதி, மார்கழி மாதம், 2017ம் ஆண்டில் எழுதியது ............... பல வருடங்களாக நானும் எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்று எனக்கே இப்பொழுது தான் தெரிகின்றது................. இவற்றை இரண்டு மூன்று புத்தகங்களாக போட்டு விட்டு, விருதுகளுக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.......................🤣: பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்துவிடும் போல தெரிகிறது. எல்லா வகையிலும் முயன்று, மோடியின் ஆட்சியில் அவர் இதைப் பெற்று விடுவார் என்றே தெரிகின்றது. ஞானபீடம் இந்தியாவில் வருடாவருடம் அளிக்கப்படும் இலக்கியத்திற்கான மிக உயர் விருது. தமிழில் இதுவரை அகிலனும் (சித்திரப்பாவை நாவலுக்காக) ஜெயகாந்தனுமே பெற்றுள்ளார்கள். வைரமுத்து ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் வேறெந்த வகையிலும் ஒரு சிறந்த இலக்கியவாதி இல்லை. இவருக்கு ஞானபீடம் கிடைத்தால் தமிழ் இலக்கிய உலகம் கண்ட மிகப்பெரும் சிறுமைகளில் இதுவும் ஒன்றாகும். இவர்தான் தமிழின் இன்றைய இலக்கியவாதி என்பது தமிழில் தோன்றி மறைந்த பெரும் இலக்கியவாதிகளுக்கும், இன்று இருப்போருக்கும் செய்யப்படும் மிகப் பெரும் அவமரியாதை. சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார். அகிலனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருக்கக்கூடாது. அகிலனை இன்று இந்தியாவில் எவருக்கும் தெரியாது, தமிழிலேயே அவரை பெரும்பாலானோருக்குத் தெரியாது. குளத்தில் எறிந்த கல் ஏற்படுத்தும் சிறிய சலனம் அளவில் கூட ஒரு மாற்றத்தை உண்டாக்காதவர்.
  29. இந்த உலகம் கணக்கிட்டதை விட ஈரான் மிக வலிமையுடன் இருப்பது போல் தான் யுத்த செய்திகளை வாசிக்கும் போது தெரிகின்றது. நெத்தன்யாகு பங்கருக்குள்..... அமெரிக்காவின் தவறான வெளிநாட்டு போர்களுக்கு முதல் சாவு மணி அடித்தது ஜேர்மனிதான். இரண்டாவது தடவையாக அமெரிக்கா அதாவது ஜோர்ஜ் புஷ் யூனியர் ஈராக் மீது போர் தொடுக்க ஆரம்பித்த போது ஜேர்மனி முற்றாக எதிர்த்து அந்த நடவடிக்கையிலிருந்து விலகிக்கொண்டது. பிரான்ஸ்சும் அதையே பின் தொடர்ந்தது என நினைக்கின்றேன். ஆனால் இங்கிலாந்து அவுஸ்ரேலியா கனடா போன்ற நாடுகள் அந்த நேரம் தேவையில்லாத போருக்கு அமெரிக்காவிற்காக முட்டு கொடுத்தன. டொனல்ட் ரம்ப் அவர்கள் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு மேலதிக அறா வரிவிதித்ததுதான் பெருங்கோபம்.அதை விட ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களுடன் நல்லராஜ தந்திர உறவில் உள்ளார் எனும் தன்மான கோபம். அரசியல் கொள்கைவாதங்களை விட பொருளாதார அரசியல் என்பது இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றது.எடுத்ததிற்கெல்லாம் பொருளாதார தடைகளை கொண்டு வந்ததின் விளைவுகளை சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமல்லாமல் உலகமே அனுபவிக்கின்றது என்பதை அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றது. பொருளாதார தடைகள் எத்தனை எதிரிகளை உருவாக்கியுள்ளது என்பதை இந்த ஈரான் போரும் சொல்லியிருக்கின்றது.
  30. வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைக்கக்கூடாது என கொக்கரிக்கும் எவரும் தாமோ, தம் சார்ந்தாரோ இந்த பாடலை, இவை போன்ற இன்னும் பலப்பல பாடல்களை கேட்கவோ, கேட்டு இரசிக்கவோ, குத்தாட்டம் போடவோ, கிளுகிளுப்பு அடையவோ இல்லை இல்லை என நம்புவோமாக!
  31. suvy, இரண்டு வர்ணத்தில் உள்ள பாடலொன்றின் இரண்டு வரிகள் சொல்லட்டுமா? கண்ணதாசன் எழுதியது, “காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று கண்கூடாய் நான் பார்த்ததுண்டு புத்தன் யேசு காந்தியைக் கூடக் குற்றம் சொல்லிக் கேட்டதுண்டு…”😉
  32. கிறிஸ்துவ மாணவர்களிற்கு பைபிளை பாடசாலைக்கு தேடிச்சென்று கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அதை அவரவர் செல்கின்ற சேர்ச்சிலேயே கொடுக்கலாம். அப்படித்தான் காலம் காலமாக நடக்கின்றது. வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டவர்களின் பிள்ளைகள் வார இறுதியில் சமய வகுப்பிற்கு சென்று வருகின்றார்கள். அங்கு தேவையானவற்றை வழங்குகின்றார்கள். இலங்கையிலும் கிறிஸ்துவ மாணவர்கள் யாராவது பைபிள் இல்லாமல் சிரமப்பட்டதாக நான் அறியவில்லை. பைபிளை கொளுத்தும் அளவிற்கு சிந்திப்பது மனப்பிறழ்வு நிலை என்பது ஒருபுறம் அமைய, பாடசாலையை மத பிரச்சார மேடையாக்குவதும் தவறானதே. அவரவர் அவரவர் மதத்தில் அவரவர் விடயங்களை கடைப்பிடிக்கும்போது சச்சரவுகள் வருவதில்லை.
  33. அத தெரண கருத்துப்படங்கள்.
  34. இதென்ன பைபிள் கொடுத்தா இந்திரன், பைபிள் கொடுக்காட்டில் சந்திரன் எண்டு ஒரே தில்லு முல்லா கிடக்கு. இஸ்லாம், கிறிஸ்தவத்தில் சில பிரிவுகள் மதம் பரப்புவதை ஒரு கடமையாக சொல்லிறன. இந்த பணிப்பாளர் இப்படி ஒருவராக இருக்கலாம். ஆனால்… அரச கல்விகொள்கைக்கு அப்பால் அதிகாரிகள் விருப்பபடி எல்லாம் பள்ளிகளில் புத்தகம் வினியோகிக்க முடியாது. அப்படி நடந்தாலும் அதை பெற்றோர், பாதுகவலர் சங்கத்தினர் கேட்பார்கள். யார் இந்த் பெயர் தெரியாத இரெண்டு சங்கி மங்கிகள்? ஆட்களும் அவையின்ற பல்லும்😂. பைபிளை கொழுத்துவோம் என்ற சொற்பாவனை, சிவசேனா என்ற பெயர், இவர்களின் நோக்கம் என்ன என்பதை காட்டி நிற்கிறது. இந்த செய்தி உண்மையாக இருக்குமா ? இது இரெண்டு சங்கி மங்கியள் ஊடக வெளிச்சம் தேடி செய்யும் விடயமாகவே தெரிகிறது. அவரவர் சமய நூல்களை தவிர வேறு ஏதும் வினியோகம் ஆவதில்லை. லைபிரரியில் ஒண்டை வைக்கலாம் - ஆர்வம் உள்ளோர் தேடி வாசிக்க.
  35. இந்தப்பிரச்சினையை போலீசார் விசாரிக்க முடியுமா?யார் யார் விசாரிக்கபட்டார்கள்? என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று எதுவும் கூறவில்லை, பொலிஸாருக்கு எதுக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்? மக்களின் சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியாத போலீசார், கல்விசார் பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா? சைவ ஆலயங்களை இடித்து பௌத்த விகாரைகளை அமைப்போரையும் போலீசார் விசாரித்து பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தில் இந, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமே? என்ன கோமாளிக்கூத்தெல்லாம் நடத்துது சிவசேனை.
  36. நீங்கள் காமெடி கீமடி ஒன்றும் பண்ணவில்லயே? அது இந்திய இலங்கை விசுவாசிகளை மகிழ்விப்பதற்காக சொல்லபட்ட தமிழ்யுரியுப் செய்தியாக தான் இருக்கும்
  37. பைபிள் ஒரு சமய நூல். பாடசாலைகளில் பிற சமயத்து மாணவர்களிற்கு இதை இலவசமாக விநியோகம் செய்வது எதை குறிக்கின்றது? வேறு சமயத்து நூல்களும் பாடசாலைகளில் இலவசமாக விநியோகம் செய்யப்பட முடியுமா? இதற்கான அனுமதி கிடைக்குமா? சமய நம்பிக்கை சாராத நாத்திகர்களின் நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றால் அதற்கான அனுமதி கிடைக்குமா?
  38. இப்படியான அறிக்கைகளுக்கு என் கண்டனங்கள். இருந்தாலும்.... ஏன் ....பிற சமய சமூகத்தினரிடம்... எதற்காக பைபிளை கொண்டு சேர்க்க முயற்சிக்கின்றார்கள் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.😎 தனகுபவர்களை விடுத்து தனகுபவர்களுக்கு பதில் சொல்வதை குற்றமாக கருதி தண்டனைகளும் தடைகளும் கொடுக்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உதாரணத்திற்கு ஈரான் போர்.
  39. அப்பு விஜய்! உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை? என்ன திறமை இருக்கிறது உன்னிடம்? நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன் நீ.சமூகத்திற்கு நல்லதை சொன்ன கதைப்படங்களும் இல்லை. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என்ற படங்கள் பாடல்களுக்காவே ஓடியவை.கில்லி திரைப்படம் கூட பிரகாஜ்ராஜின் நடிப்பிற்க்காகவும் அவரின் வசனங்களுக்காகவும் திரிஷா கவர்ச்சிக்காகவும் பாடல்களுக்காவும் ஓடியவை என சொல்கிறார்கள். உங்களது சமகால நடிகரான அஜித்.👈 அவர் ஒவ்வொரு படங்களுக்கும் எடுக்கும் முயற்சிகளை பார்.கமலகாசனைப்போல் அவரும் நடிப்பு அரக்கன்.அஜித்திற்கு ரசிகர் மன்றம் இல்லையாகினும் தன்னை சந்திக்க வரும் ரசிகளிர்களிடம் பண்பாகவும் அன்பாகவும் கட்டுப்பாடாகவுமே நடந்து கொள்கிறார்.ஒரு சம்பவத்தில் அவரது ரசிகர் விசில் அடித்ததிற்கே கண்டிப்பான பார்வையை காட்டியவர்.அவர் நடிகர் என்ற வட்டத்தை விட்டு வெளி வந்து உலகளாவிய ரீதியிலும் கார் பந்தய போட்டியில் முன்னணி வகிக்கின்றார்.குடும்பம் பிள்ளைகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார்.அந்த மன நிலையும் நடிகர் விஜய் ஆகிய உங்களுக்கு அறவே இல்லை. பிள்ளைகள் தனி வழி. மனைவி தனியே.சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிற்கூட போகவில்லை. அப்படி இருக்கிறது உங்கள் குடும்ப பாசம்.ஒருவேளை நீங்கள் நடித்த அந்த கலியாண எக்ரிமென்ட் படம் போல் வாழ்க்கையாய் இருக்குமோ?😋சினிமா வசனங்களை உங்கள் அரசியலுக்காக எழுதி வைத்து அரசியல் மேடைகளில் படிக்கின்றீர்கள்..இது உங்களிடம் சொந்தமாக எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்றது.சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😂 நீங்கள் நடிகன் என்ற முறையில் அஜித்தை பார்த்தாவது குடும்பவாழ்க்கை என்னவென்பதை பார்த்து திருந்தியிருக்கலாம்.பெற்ற பிள்ளை தனியே பட்டமளிப்பு விழாவில்....தந்தையோ ரகசிய காதலியுடன் ஒரே வர்ண உடையுடன் உல்லாச கண்கவர் காட்சியளிப்புகள். இந்த சித்திரத்தில் நாட்டுக்கு தலைவன் ஆக ஆசை.😛 அரசியல் என்று பார்த்தால்...அங்கேயும் பூச்சியம் தான். இரண்டரை மணி நேர திரைப்படத்தில் வரும் காட்சி கானங்கள் வரலாறுகள் போல் நிஜ அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் காட்சிப்படுத்த முனைகின்றீர்கள்.மீண்டும் சொல்கிறேன் சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😎 நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? உங்கள் அரசியல் அனுபவங்கள் என்னென்ன? அரசியலுக்காக பொது மக்களை சந்தித்து பேசியிருக்கின்றீர்களா? பத்திரிக்கையாளர் சந்திப்புகளையாவது நடத்தியிருக்கின்றீர்களா? பனையூரில் இருந்து கொண்டு பத்து பனங்கொட்டையாவது தானம் செய்திருக்கின்றீர்களா? அல்லது தாட்டிருக்கின்றீர்களா? உங்கள் அரசியல் பிரச்சாரத்தை காணவந்த மக்கள், ரசிகர்கள் பலியாகி இருக்கின்றார்களே. உங்களுக்காக வந்தவர்களை ஒரு தடவையாவது போய் சந்தித்திருக்கின்றீகளா? நீங்கள் அந்த மரண பழியை வேறு யார் மேலேயும் சுமத்தினாலும் உங்களை பார்க்க வந்தவர்கள் தானே பலியாகியிருக்கின்றார்கள்.உலக சம்பிரதாயத்திற்காகவது போய் நலம்/துக்கம் விசாரித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நாட்டுக்கு தலைவன் எனும் சிந்தனை கோமாளித்தனத்தை விட மோசமானது. உங்களை சுற்றி வரும் ரசிகர்கூட்டங்களை வைத்து கணக்கு பண்ணும் விஜய் அவர்களே! நீங்கள் எப்படியோ அதே போல் தான் உங்கள் ரசிகர் பட்டாளமும் வாக்காள பெருமக்களும் என்பதை அவர்களது பகிரங்க பேட்டிகள் சொல்லி நிற்கின்றன. பார்க்கவே கேவலமாக இருக்கின்றது.பொது வெளியில் மனைவி படுக்கை என போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள். இதுதான் உங்கள் முதல்வர் கனவுக்கான சித்திரங்கள்....! சிபிஐ க்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது ஏதோ விண்வெளியில் ஆராய்ச்சி செய்து விட்டு வந்தவர் போல் கொடுக்கும் பூமழை பிலிங்.....அது விஜய் அண்ணாவால் மட்டுமே முடியும்.அத பார்த்து ஒட்டோ ஓட்டுனர்களும் டாக்ஸி றைவர்களும் பூரித்து பொங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. இன்னும் வரும்
  40. மேலோட்டமாக வேகமாக பதிவுகளை நோட்டமிட்ட போது அகதி முகாமில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் இணைந்தார் என விளங்க பார்த்தேன்.
  41. வீதியோரம் . மலர் . ......... 10. — சரி மேகலை இனி நாங்கள் இவற்றை மறந்து விட்டு எங்கட அலுவலைப் பார்க்கலாம் ….என்று சொல்லிப் போகிறான். --- நில் விநோ, கொஞ்சம் நில் ஒரு விடயம்……நேற்று காலை இவ்வழியால் பிக்குமார் சென்ற பொழுது நான் கொஞ்சம் புஸ்பங்களை அவர்கள் பாதங்களில் சமர்ப்பித்து விட்டு, அவர்களை வணங்கி பெரிய பிக்குவானவரிடம் நாங்கள் இருவரும் திருமணம் செய்யலாம் என்றிருக்கிறோம். எங்களுக்கு நீங்கள் திருமணம் செய்து வைப்பீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ஏன் நீங்கள் ஒரு கோவிலில் போய் தாலிகட்டி திருமணம் செய்யலாமே என்று சொன்னார். நான்தான் அவரிடம் உங்களுக்குத் தெரியும்தானே சாமி எனக்கு ஏற்கனவே மணமாகி பிள்ளைகளும் இருக்கின்றனர். துரதிஷ்ட்டவசமாக என் நிலைமை இப்படியாகி விட்டது. பல வருடங்கள் கடந்தும் விட்டன, இதுநாள் வரை அவர்கள் எங்கே இருக்கிறார்கள்,என்ன ஆனார்கள் என்றே தெரியாது. நானும் இவ்வளவு துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும் அங்கு சென்று வாழ மனம் ஒப்பவில்லை சாமி . மேலும் இப்போது இங்கே என்னையும் விநோதனையும் சேர்த்து கதைகட்டிக் கதைக்கிறார்கள். அதை அப்படியே வளரவிடவும் நாங்கள் விரும்பவில்லை.அதனால் இருவரும் சேர்ந்தே இந்த முடிவெடுத்திருக்கிறோம்…… — அவரும் , உங்களுக்கு வயது வித்தியாசம் இருக்கே, நீ மூத்தவள் இல்லையா…அது உங்களுக்கு சௌகரியப் படுமா என்றுகேட்கிறார். — அது எனக்கு சங்கடமாய் இருந்தாலும் நான் அவரிடம் அதெல்லாம் பார்க்கிற நிலைமையிலா சாமி நாங்கள் இருக்கிறம் …..இங்கு நாமிருவரும் பாலியலை முன்னிலைப் படுத்தி மணமுடிக்க வில்லை , இந்த சமுதாயத்திலும் எமது பிள்ளைகள் மத்தியிலும் மரியாதையாக வாழ விரும்புகிறோம். அன்று நாங்கள் வீதியில் வீசப்பட்டுக் கிடந்தபோது நீங்கள் மட்டும் இல்லையென்றால் இன்று நாங்கள் செத்த இடத்தில் புல்லு முளைத்திருக்கும். எங்களைக் காப்பாற்றி மறுவாழ்வு தந்த தெய்வங்கள் நீங்கள். மேலும் இரண்டு பிள்ளைகள் எங்களுடன் இருக்கிறார்கள். இன்றும் எங்களை அம்மா,அப்பா என்றுதான் கூப்பிடுகிறார்கள். இன்று அவர்கள் வளர்ந்தும் விட்டார்கள் சாமி. அவர்களது எதிர்காலம் பற்றியும் கவலையாய் இருக்கு சாமி என்று சொல்ல ….. —- அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்…..அதிலும் அந்தப் பிள்ளை சுஜிதா நன்றாகப் படிக்கிறாள்….பாடசாலையில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதால் விரைவில் அவவை தலைநகரில் மேற்கொண்டு நல்ல பாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கு எமது சங்கம் மூலமாக நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னவர்…… — அப்ப யுகேந்திரன் பற்றி என்று கேட்க ….. — அவருக்கு படிப்பு கொஞ்சம் கம்மி என்றாலும் விளையாட்டுகளில் நிறைய ஆர்வம் கொண்டவர்….. அதனால் அதற்கேற்றவாறு அவரை நாங்கள் வளர்த்து விடுவோம் என்று சொன்னவர்…. — அப்படியா கேட்க சந்தோசமாய் இருக்கு சாமி…. அவர்களும் கடந்த காலத்துன்பங்கள் எல்லாவற்றையும் மறந்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்…..எனக்கு இன்னொரு தாலி காட்டும் எண்ணமில்லை சாமி ….இங்கு இருப்பவர்கள் எங்களைக் கேவலமாய் பேசுவதை தவிர்க்கத்தான் நாங்கள் விரும்புகிறோம். திருமணத்தை மிகவும் எளிமையாய் செய்தால் போதும் சாமி….என்று சொல்ல அவரும் கொஞ்ச நேரம் மற்ற பிக்குமாரோடும் கலந்து கதைத்து விட்டு வந்து என்னிடம் அடுத்து வரும் போயா தினத்தன்று பகவான் புத்தரின் முன்னிலையில் அவரின் ஆசிகளுடன் உங்களின் திருமணத்தை நடத்தி வைப்பதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்…..என்கிறாள்……! — மிக நல்ல வேலை செய்தாய் மேகலை….சரி நீபோய் வேலையைப் பார்…..நான் இந்த முயலை வெட்டி சுத்தமாக்கிக் கொண்டு வருகிறேன். இதை நாங்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு முயலின் காதைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போகிறான்……! மலர் . .......... 🐭 10.
  42. வழமைபோல் போட்டியை மிகவும் திறம்பட திட்டமிட்டு செயற்படுத்திய @கிருபன் கிருபன் ஜீ அவர்கட்கு நன்றி! கிருபன் ஜீ அவர்கட்கு உதவியாளராக பணியாற்றிய @செம்பாட்டான் அவர்கட்கு நன்றி! முதலாவதாக வந்து முதல்வர் கதிரையை கைப்பற்றிய நியூபலன்ஸ், கதிரையை நீண்டநாட்கள் ஆக்கிரமித்து பின்னர் முடிவில் இரண்டாவதாக வந்த கண் தப்புவிற்கு பாராட்டுக்கள்! போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்! உலக கோப்பை போட்டி பற்றிய தகவல்களை அவ்வப்போது வழங்கியவர்கள், உரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்! @கிருபன் ஜீ யிடம் ஒரு வினா. பூம்ரா, வருண் ஆகிய இருவரும் மொத்தம் 14 விக்கெற்றுகளை கைப்பற்றினார்கள். வருணை தெரிவு செய்தவர்களுக்கு ஏன் புள்ளிகள் வழங்கப்படவில்லை? தென் ஆபிரிக்கா இறுதி போட்டியில் கலந்து கிந்தியாவை தோற்கடிக்க முடியாமல் போனது துரதிஸ்டம். நியூசிலாந்து இறுதி போட்டியில் முதலில் துடுப்பாடாதது தோல்விக்கான காரணமோ தெரியவில்லை. ஏதாவதொரு போட்டியில் மிகக்குறைந்த எண்ணிக்கையை பெறும் அணி எது என கேட்கப்பட்ட வினாவிற்கு இலங்கை என சரியான பதிலை கொடுத்த @நந்தன் இற்கு பாராட்டுக்கள்! நான் இலங்கையை சொறி லங்கா என விளிப்பது இல்லை. ஆனால், இந்த போட்டியில் அதன் விளையாட்டு சொறி லங்கா எனும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டது.
  43. குர்திஷ் இனம் எங்கும் எப்போதும் நடுத்தெருவில் விடப்பட்டதகாவே வரலாறு சொல்கின்றது. நேட்டோவில் இருக்கும் துருக்கி குர்திஷ் இனத்திற்கு விடுதலை கொடுக்க இடையூறு செய்து கொண்டே இருக்கும்.ஏனெனில் துருக்கி வன்மம் கொண்ட நாடு. வன்மம் பொல்லாதது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.