Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    39582
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20564
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    89361
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3198
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/28/26 in all areas

  1. போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @நியாயம் @வீரப் பையன்26 @alvayan @கறுப்பி @Ahasthiyan @Newbalance @வாதவூரான் @Eppothum Thamizhan @தமிழ் சிறி @நிலாமதி @செம்பாட்டான் வெல்பவர்களுக்கு ஒரு பரல் மசகு எண்ணெய் கிருபன் வழங்குவார்.
  2. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 223 யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். குழுநிலைப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 31 மே 2025 அன்று பெங்களூரு மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  3. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 223 யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் PBKS எதிர் GT 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RR எதிர் RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் PBKS எதிர் SRH 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு MI எதிர் RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB எதிர் LSG 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI எதிர் PBKS 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் GT எதிர் KKR 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH எதிர் CSK 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் LSG எதிர் RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் DC எதிர் PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR எதிர் SRH 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் LSG எதிர் KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு DC எதிர் RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு GT எதிர் RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR எதிர் DC 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் DC எதிர் CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு LSG எதிர் RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் CSK எதிர் LSG 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB எதிர் MI 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு PBKS எதிர் RCB 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR எதிர் MI 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK எதிர் GT 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு SRH எதிர் RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் MI எதிர் RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR எதிர் DC கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) அணி? அணி? அணி? அணி? 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) #2 - ? (3 புள்ளிகள்) #3 - ? (2 புள்ளிகள்) #4 - ? (1 புள்ளி) 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! அணி? 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team அணி? 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team அணி? 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator அணி? 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 அணி? 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
  4. 3 பகுதி கட்டுரையும் வாசித்து விட்டேன். கட கடவென்று நடந்ததை எழுதி இருக்கிறீர்கள். சிறப்பு!! 👌 உங்களை தங்களோடு கூட்டிக்கொண்டு உள்ளே செல்கிறேன் என்ற அந்த குடும்பத்துக்கு, நீங்கள் எனக்கு இன்னும் ஒருவர் கூட்டி செல்கிறார் என்று சொல்லி இருக்கலாமே என்று தோன்றுகின்றது. இன்னும் ஒன்று... விமானநிலையத்தில் சந்தித்த பணிப்பெண் வேலைக்கு போகும் அந்த பெண்ணிடம் நிறையவே அவரின் குடும்ப விவகாரங்கள் பேசிவிட்டீர்களோ என்றும் தோன்றியது. ஹோட்டல் கட்டில் விரிப்பில் பொட்டு பொட்டாய் ரத்தம்... வாசிக்கும் பொது கொஞ்சம் வில்லங்கமான சிந்தனை வந்து தொலைத்துவிட்டது. 🤭 சிக்கலான கால கட்டத்தில் தனி ஆளாக Expired ஆனா கிரெடிட் கார்ட்டுடன் "2 x 23kg அரிசிமாவு, பலகாரம், பாறை கருவாடு" சகிதம் சேதாரம் இல்லாமல் லண்டன் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். அது புலம்பெயர்ந்த தமிழருக்கேயான கெத்து. 😁
  5. படிப்பதினால் மட்டும் அறிவு வளர்வதில்லை. என்னடா விளையாட்டு வீட்டைபோய் படியிங்கோடா. அவன் சித்தப்பாவின் அதட்டல் அவனையும் அவன் அண்ணனையும் மற்றும் நண்பர்களையும் நடுங்கி ஒடுங்கவைக்கும். அவர் கையில் அருகே இருக்கும் வேலியில் ஒடித்த நீண்ட கிளிசூரியோ பூவரசம் கம்பு ஒன்று மேலும் கீழும் ஆடி அண்ணன் தம்பி இருவரினதும் கால் கைகளைப் பதம்பார்க்கும். இது அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்த மாலை நேரங்களில், லீவு நாட்களில்கூட அவர்கள் விளையாடும் இடங்களில் நடக்கும் சம்பவம். சித்திரையில் அதுவும் வருடப்பிறப்பு அன்று தம்பி பிறந்த தோசம் காரணமாகவே சில மாதங்களில் அவர்கள் அப்பா இறந்துவிட்டதாக சொந்தங்களால் காரணம் கூறப்பட்டது. காரணம் எதுவக இருந்தாலும், பெரியப்பாக்களும் சித்தப்பாவுமே இவர்கள் குடும்பத்துக்கு உதவிகள் செய்து அவர்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும் சித்தப்பா சற்று வித்தியாமானவர். தான் பெற்ற பிள்ளைகளை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கும் அவர் தன் அண்ணனின் பிள்ளைகளை அதட்டி ஒடுக்கி வைத்திருப்பதில் கர்வம் கொள்பவர். அண்ணனின் பிள்ளைகள் என்றாலும் அவர்களைச் சீராக வளர்க்கிறேன் என்று தன்னை ஒரு சிறந்த காவலனாக காட்டிக்கொள்வதில் பெருமை கொள்பவராக இருந்தார். அண்ணனின் பிள்ளைகளை ஒரு டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வளர்த்தெடுப்பேன் என்று எல்லோரிடமும் சொல்லி இறுமாப்படைவார். ஆனால் “படிடா படிடா” என்று படுத்துபவருக்கு என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் என்று சொல்லவோ வழிகாட்டவோ தெரியாது. ஒரு டாக்டர், எஞ்சினியர் என்றால் தன் பிள்ளைகளைத் தன்வழி வருவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும். கடையொன்றில் சிப்பந்தியாக வேலைபார்க்கும் சித்தப்பாவால் உப்பு எப்படிக் கட்டுவது, சீனி, சக்கரை எப்படிச் சரை கட்டுவது என்பதைத்தவிர வேறென்ன சொல்லிக்கொடுக்க முடியும். “அடியாதமாடு படியாது” என்பது போன்ற முதுமொழிகளுகான விளக்கங்களை தனது பெரியப்பாவின் பிள்ளைகள்மூலமே பரிசோதனை செய்து விளங்கிக்கொள்வது வழக்கமான செயலாகியது. கல்கி, குமுதம், ஆனந்தவிகடனில் வரும் கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து தம்பிக்கு தானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் அவன் கையெழுத்தை அவனாலேயே திரும்ப வாசிக்க முடியவில்லை. அத்தனை மோசமான எழுத்து வடிவங்கள். இருந்தும் சிறந்த எழுத்தாளர், திரைப்படங்களுக்கும் கதை வசனங்கள் எழுதி பாராட்டுகள் வாங்கும் கலைஞர் கருனாநிதியின் கையெழுத்து ரெம்பவும் மோசமானது என்பதையும், அவர் எழுதுவதை வாசிக்கக் கூடிய ஒருவரை உதவிக்கு வைத்துள்ளனர் என்ற செய்தியையும் அவன் அறியவந்ததும், வந்த தயக்கம் நீங்கியது. அவன் எழுத்தையும் வாசித்து அறியக்கூடியவர்கள் உலகில் இல்லாது இருப்பார்களா? சூரியன் காலையில் பிரகாசமாக எழுந்தான், மாலையில் ஒளியிழந்து மறைந்தான், சந்திரன் மலர்ந்தான் என்று ஏதேதோ எழுதி வீரகேசரிக்கு அனுப்பும் எண்ணத்தோடு அண்ணா அக்காமாரிடம் காட்டினான், அவர்கள் அதனைச் சிரமத்தோடு வாசித்தாலும் பின்பு செய்த பரிகாசம் அவன் ஆர்வத்தை அடக்கிச் சோர்வடையச் செய்தது. அவ்வேளையில்தான் யாழ் இணையம் என்ற ஒரு களத்தை திரு மோகன் அவர்கள் ஆரம்பித்தார். களத்தில் இணையும் வழிமுறைகளும் இருக்கவே அவனும் இணைந்து உறுப்பினராகி எழுத ஆரம்பித்தான். சித்தப்பா பிள்ளைகளின் வேண்டுதலில், சித்தப்பா தன் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த கணனியில், அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் சென்று பயிற்சி பெற்றுவந்தது இணையத்தில் எழுத உதவியது. இணையம் அவனையும் அரவணைத்தது. சித்தப்பாவின் பிள்ளைகள் அவர்கள் அப்பனைப்போல் அல்லாது நண்பர்கள்போல் பழகினார்கள். யாழ்கள உறவுகளும் அவன் எழுதும் தமிழை வரவேற்றுப் பாராட்டவே வானத்தில் பறந்தான். இன்றும் பறக்கிறான். பறக்கும்போது அவன் சிந்தனையில் எழுந்த, தமிழின் பெருமைகளை அறிந்த, அறிந்தும் மறந்த சில விடயங்களைத் திரும்பவும் நினைவூட்ட விரும்பினான். அதனால் அவன் விருப்பமும் கீழே பதிவாகியுள்ளது. தமிழினம் முதல் தலைமுறை: நாம் இரண்டாம் தலைமுறை: தாய் தந்தை மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி நான்காம் தலைமுறை: பூட்டன் பூட்டி ஐந்தாம் தலைமுறை: ஓட்டன் ஓட்டி ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள் ஏழாம் தலைமுறை: பரன் பரை பரன்+பரை இதுவே பரம்பரை எனும் தமிழ்சொல்லாக மருவி வழக்கில் உள்ளது. ஒரு தலைமுறை என்பது தோராயமாக 60 வருடங்கள் என்றும், 7 தலைமுறை 480 வருடங்கள் என்றும் ஈரேழு தலைமுறை 960 வருடங்கள் என்றும்(கிட்டத்தட்ட 1000 வருடங்கள்) ஆக பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதின்நாங்கு தலைமுறையாக என்று பொருள் வருமாறு தமிழ் மொழி வகுத்துள்ளது. இப்படியான அமைப்பு வேறெந்த மொழிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எண்கணிதம் 1= ஒன்று -one 10= பத்து -Ten 100= நூறு -Hundred 1000= ஆயிரம் -Thouand 10000= பத்தாயிரம் -Ten Thousand 100000= நூறாயிரம் -Hundred Thousand 1000000= பத்துநூறாயிரம் -One Million 10000000= கோடி -Ten Million 100000000= அற்புதம் - One Hundred Million 1000000000= நிகரபுதம் - One Billion 10000000000= கும்பம் - Ten Billion 100000000000= கணம் - Hundred Billion 1000000000000= கற்பம் - One Trillion 10000000000000= நிகற்பம் - Ten Trillion 100000000000000= பதுமம் - Hundred Trillion 1000000000000000= சங்கம் - One Zillion 10000000000000000= வெல்லம் - Ten Zillion 100000000000000000= அன்னியம் - Hundred Zillion 1000000000000000000= அர்த்தம் - ? மேலும் எழுத ஆங்கிலத்தில் சொற்கள் தெரியவில்லை. 10000000000000000000= பராத்தம் - ? 100000000000000000000= பூரியம் - ? 1000000000000000000000= முக்கோடி - ? 10000000000000000000000= மகாயுகம் - ? நாம் கெடுவதற்குக் காரணங்களை நமது ஒளவை மூதாட்டியாரும் அழகாகச் சொல்லியுள்ளார். 01 பார்க்காத பயிரும் கெடும் 02 பாசத்தினல் பிள்ளையும் கெடும் 03 கேளாத கடனும் கெடும் 04 கேட்டால் உறவும் கெடும் 05 தேடாத செல்வம் கெடும் 06 தெகிட்டினால் விருந்தும் கெடும் 07 ஓதாத கல்வியும் கெடும் 08 ஒழுக்கமில்லா வாழ்வும் கெடும் 09 சேராத உறவும் கெடும் 10 சிற்றின்பம் பெயரும் கெடும் 11 நடாத நட்பும் கெடும் 12 நயமில்லா சொல்லும் கெடும் 13 கண்டிக்காத பிள்ளை கெடும் 14 கடன்பட்டால் வாழ்வு கெடும் 15 பிரிவால் இன்பம் கெடும் 16 பணத்தால் அமைதி கெடும் 17 சினமிகுந்தால் அறமும் கெடும் 18 சிந்திக்காத செயலும் கெடும் 19 சோம்பலினால் வளர்ச்சி கெடும் 20 சுயமில்லா வேலை கெடும் 21 மோகித்தால் முறைமை கெடும் 22 முறையற்ற உறவும் கெடும் 23 அச்சத்தால் வீரம் கெடும் 24 அறியாமையால் முடிவு கெடும் 25 உழாத நிலமும் கெடும் 26 உழைக்காத உடலும் கெடும் 27 இறைக்காத கிணறும் கெடும் 28 இயற்கையை அழிக்கும் நாடும் கெடும் 29 இல்லாளில்லா வம்சம் கெடும் 30 இரக்கமில்லா மனிதம் கெடும் 31 தோகையினால் துறவு கெடும் 32 துணையில்லா வாழ்வு கெடும் 33 ஓய்வில்லா முதுமை கெடும் 34 ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் 35 அளவில்லா ஆசை கெடும் 36 அச்சப்படும் கோழை கெடும் 37 இலக்கில்லா பயணம் கெடும் 38 இச்சையினால் உள்ளம் கெடும் 39 உண்மையில்லா காதல் கெடும் 40 உணர்வில்லாத இனமும் கெடும் 41 செல்வம் போனால் சிறப்பு கெடும் 42 சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும் 43 தூண்டாத திரியும் கெடும் 44 தூற்றிப்பேசும் உரையும் கெடும் 45 காய்க்காத மரமும் கெடும் 46 காடழிந்தால் மழையும் கெடும் 47 குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும் 48 குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும் 49 வசிக்காத வீடும் கெடும் 50 வறுமை வந்தால் எல்லாம் கெடும் 51 குளிக்காத மேனி கெடும் 52 குளிர்ந்து போனால் உணவு கெடும் 53 பொய்யான அழகும் கெடும் 54 பொய்யுரைத்தால் புகழும் கெடும் 55 துடிப்பில்லா இளமை கெடும் 56 துவண்டிட்டால் வெற்றி கெடும் 57 தூங்காத இரவு கெடும் 58 தூங்கினால் பகலும் கெடும் 59 கவனமில்லா செயலும் கெடும் 60 கருத்தில்லா எழுத்தும் கெடும் இந்த 60ஐயும் அறிந்துகொண்டால் நம் வாழ்க்கை கெடவே கெடாது.
  6. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 வணக்கம், 19வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2026 சீசன் மார்ச் மாதம் 28 இல் தொடங்க உள்ளது. இறுதிப்போட்டி பெங்களூருவில் மே 31 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்படமாட்டாது! போட்டிகளின் அட்டவணைகள் இந்திய மாநிலத் தேர்தல்கள் காரணமாக முன்னர் முழுமையாக வெளியிடப்படாமையால், யாழ் களப் போட்டி தாமதமாக ஆரம்பித்துள்ளது. எனவே முதல் 20 போட்டிகளுக்கு (ஏப்ரல் 12 வரையானவை) பங்குபெற்றும் அனைவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். அதன் பின்னரே (ஏப்ரல் 13 இல் இருந்து) போட்டிகளின் முடிவுகளின்படி புள்ளிகள் வழங்கப்படும். குறிப்பு: போட்டிகளில் வெல்லும் அணிகளின் நிலைகளைக் கணிக்க வசதியாக அனைத்துப் போட்டிகளும் கேள்விக்கொத்தில் தரப்படும். ஆனால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) 1. Chennai Super Kings Ruturaj Gaikwad (captain), Ayush Mhatre, Sarfaraz Khan, Sanju Samson, MS Dhoni, Urvil Patel, Kartik Sharma, Shivam Dube, Ramakrishna Ghosh, Shreyas Gopal, Aman Khan, Prashant Veer, Rahul Chahar, Khaleel Ahmed, Gurjapneet Singh, Anshul Kamboj, Mukesh Choudhary, Jamie Overton*, Dewald Brevis*, Matt Short*, Spencer Johnson*, Zak Foulkes*, Matt Henry*, Noor Ahmad*, Akeal Hosein* 2. Delhi Capitals Axar Patel (captain), Prithvi Shaw, Karun Nair, Nitish Rana, Ashutosh Sharma, Sameer Rizvi, Sahil Parakh, KL Rahul, Abishek Porel, Vipraj Nigam, Auqib Nabi, Madhav Tiwari, T Vijay, Ajay Mandal, Kuldeep Yadav, Mukesh Kumar, T Natarajan, Mitchell Starc*, Pathum Nissanka*, Dushmantha Chameera*, Lungi Ngidi*, David Miller*, Tristan Stubbs*, Kyle Jamieson* 3. Gujarat Titans Shubman Gill (captain), Sai Sudharsan, Shahrukh Khan, Anuj Rawat, Kumar Kushagra, Washington Sundar, Manav Suthar, Rahul Tewatia, Nishant Sindhu, Jayant Yadav, Arshad Khan, Sai Kishore, Mohammed Siraj, Prasidh Krishna, Gurnoor Brar, Ishant Sharma, Ashok Sharma, Kulwant Khejroliya, Jos Buttler*, Tom Banton*, Luke Wood*, Glenn Phillips*, Jason Holder*, Rashid Khan*, Kagiso Rabada* 4. Kolkata Knight Riders Ajinkya Rahane (captain), Angkrish Raghuvanshi, Manish Pandey, Rahul Tripathi, Rinku Singh, Tejasvi Dahiya, Anukul Roy, Daksh Kamra, Ramandeep Singh, Sarthak Ranjan, Prashant Solanki, Varun Chakravarthy, Kartik Tyagi, Umran Malik, Vaibhav Arora, Saurabh Dubey, Navdeep Saini, Cameron Green*, Rovman Powell*, Sunil Narine*, Finn Allen*, Rachin Ravindra*, Tim Seifert*, Matheesha Pathirana*, Blessing Muzarabani* 5. Lucknow Super Giants Rishabh Pant (captain), Abdul Samad, Ayush Badoni, Himmat Singh, Akshat Raghuwanshi, Mukul Choudhary, Arshin Kulkarni, Shahbaz Ahmed, Digvesh Rathi, M Siddharth, Akash Singh, Avesh Khan, Mohammed Shami, Mohsin Khan, Prince Yadav, Arjun Tendulkar, Mayank Yadav, Naman Tiwari, Matthew Breetzke*, Aiden Markram*, Anrich Nortje*, Nicholas Pooran*, Josh Inglis*, Mitchell Marsh*, Wanindu Hasaranga* 6. Mumbai Indians Hardik Pandya (captain), Rohit Sharma, Suryakumar Yadav, Danish Malewar, Robin Minz, Shardul Thakur, Naman Dhir, Raj Bawa, Tilak Varma, Mayank Markande, Raghu Sharma, Ashwani Kumar, Deepak Chahar, Jasprit Bumrah, Mohammed Izhar, Mayank Rawat, Will Jacks*, Ryan Rickelton*, Quinton de Kock*, Corbin Bosch* Sherfane Rutherford*, Mitchell Santner*, Trent Boult* AM Ghazanfar* 7. Punjab Kings Shreyas Iyer (captain), Harnoor Singh, Nehal Wadhera, Priyansh Arya, Pyla Avinash, Prabhsimran Singh, Vishnu Vinod, Harpreet Brar, Musheer Khan, Shashank Singh, Suryansh Shedge, Praveen Dubey, Yuzvendra Chahal, Arshdeep Singh, Vijaykumar Vyshak, Vishal Nishad, Yash Thakur, Azmatullah Omarzai*, Ben Dwarshuis*, Cooper Connolly*, Marcus Stoinis*, Mitchell Owen*, Xavier Bartlett*, Marco Jansen*, Lockie Ferguson* 8. Rajasthan Royals Riyan Parag (captain), Shubham Dubey, Vaibhav Suryavanshi, Yashasvi Jaiswal, Aman Rao, Dhruv Jurel, Ravi Singh, Ravindra Jadeja, Yudhvir Singh, Ravi Bishnoi, Yash Raj Punja, Vignesh Puthur, Sandeep Sharma, Tushar Deshpande, Sushant Mishra, Kuldeep Sen, Brijesh Sharma, Jofra Archer*, Lhuan-dre Pretorius*, Donovan Ferreira*, Kwena Maphaka*, Nandre Burger*, Adam Milne*, Shimron Hetmyer*, Dasun Shanaka* 9. Royal Challengers Bengaluru Rajat Patidar (captain), Virat Kohli, Devdutt Padikkal, Jitesh Sharma, Venkatesh Iyer, Krunal Pandya, Swapnil Singh, Satwik Deswal, Kanish Chouhan, Vihaan Malhotra, Vicky Ostwal, Suyash Sharma, Bhuvneshwar Kumar, Rasikh Salam, Mangesh Yadav, Abhinandan Singh, Jacob Bethell*, Phil Salt*, Jordan Cox*, Josh Hazlewood*, Tim David*, Romario Shepherd*, Jacob Duffy*, Nuwan Thushara* 10. Sunrisers Hyderabad Pat Cummins* (captain), Ishan Kishan (stand-in captain), Aniket Verma, R Smaran, Salil Arora, Abhishek Sharma, Nitish Kumar Reddy, Harshal Patel, Harsh Dubey, Shivang Kumar, Krains Fuletra, Zeeshan Ansari, Amit Kumar, Jaydev Unadkat, Shivam Mavi, Onkar Tarmale, Sakib Hussain, Praful Hinge, Liam Livingstone*, Brydon Carse*, David Payne*, Travis Head*, Heinrich Klaasen*, Kamindu Mendis*, Eshan Malinga* போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே. Points table Pos Grp Team Pld W L NR Pts NRR Qualification 1 A Punjab Kings (R) 14 9 4 1 19 0.372 Advanced to Qualifier 1 2 A Royal Challengers Bengaluru (C) 14 9 4 1 19 0.301 3 B Gujarat Titans (4th) 14 9 5 0 18 0.254 Advanced to Eliminator 4 B Mumbai Indians (3rd) 14 8 6 0 16 1.142 5 B Delhi Capitals 14 7 6 1 15 0.011 Eliminated 6 B Sunrisers Hyderabad 14 6 7 1 13 −0.241 7 B Lucknow Super Giants 14 6 8 0 12 −0.376 8 A Kolkata Knight Riders 14 5 7 2 12 −0.305 9 A Rajasthan Royals 14 4 10 0 8 −0.549 10 A Chennai Super Kings 14 4 10 0 8 −0.647 Most runs Runs Player Team 759 Sai Sudharsan Gujarat Titans 717 Suryakumar Yadav Mumbai Indians 657 Virat Kohli Royal Challengers Bengaluru 650 Shubman Gill Gujarat Titans 627 Mitchell Marsh Lucknow Super Giants Most wickets Wickets Player Team 25 Prasidh Krishna Gujarat Titans 24 Noor Ahmad Chennai Super Kings 22 Josh Hazlewood Royal Challengers Bengaluru 22 Trent Boult Mumbai Indians 21 Arshdeep Singh Punjab Kings Most valuable player Points Player Team 320.5 Suryakumar Yadav Mumbai Indians 311.0 Sai Sudharsan Gujarat Titans 273.0 Yashasvi Jaiswal Rajasthan Royals 272.5 Nicholas Pooran Lucknow Super Giants 272.0 Mitchell Marsh End of season awards Award Prize Player Team Fantasy player of the season ₹10 lakh (US$12,000) and trophy Sai Sudharsan Gujarat Titans Most Valuable Player ₹10 lakh (US$12,000) and trophy Suryakumar Yadav Mumbai Indians Orange Cap (most runs) ₹10 lakh (US$12,000) Sai Sudharsan Gujarat Titans Purple Cap (most wickets) ₹10 lakh (US$12,000) Prasidh Krishna Gujarat Titans Emerging player of the season ₹10 lakh (US$12,000) Sai Sudharsan Gujarat Titans Most fours ₹10 lakh (US$12,000) and trophy Sai Sudharsan Gujarat Titans Most sixes ₹10 lakh (US$12,000) and trophy Nicholas Pooran Lucknow Super Giants Most dot balls ₹10 lakh (US$12,000) and trophy Mohammed Siraj Gujarat Titans Highest batting strike rate ₹10 lakh (US$12,000), trophy and a car Vaibhav Sooryavanshi Rajasthan Royals Catch of the season ₹10 lakh (US$12,000) and trophy Kamindu Mendis Sunrisers Hyderabad Best pitch ₹50 lakh (US$59,000) Arun Jaitley Cricket Stadium, Delhi —N/a Team fairplay award ₹10 lakh (US$12,000) —N/a Chennai Super Kings Runners-up ₹12.5 crore (US$1.5 million) —N/a Punjab Kings Champions ₹20 crore (US$2.4 million) and IPL trophy —N/a Royal Challengers Bengaluru
  7. வரவேற்க வேண்டிய ஒரு கண்டுபிடிப்பு.👏🏽 கேள்வி- ஒருவேளை பெண் இதைக் கழட்ட மறந்தால், வீட்டுக்காரன் பாடு என்னவாகும்?
  8. அழைப்புக்கு நன்றி அண்ணா. மன்னிக்கவும் இந்தியன் பிக்கினி லீக்கில் கலந்து கொள்வதில்லை என்பது கொள்கை முடிவு😂
  9. அமெரிக்கா வியாட்னமில் சந்தித்தைவிட பல மடங்கு தோல்வியை இந்த போரினால் சந்திக்க போகின்றது😇, அதனை விலையை நாமும் செலுத்த வேண்டியுள்ளது , ஒரு மூளை பிசகின ஒருவரால் ஆமையை முதல் ஆண்டவர் நடக்கமுடியாமல் தடுக்கி விழுந்தார், இப்ப இருக்கின்றா ஆமையின் தலைவார் வாயால் வழுக்கி விழுகின்றார், ஓவ்வொரு சட்டியருக்கும் சேடம் இழுக்கும் போது ஞானம் வரும் இந்த ஆமை தலைவருக்கு இன்னும் அந்த ஞானம் வரவில்லையே
  10. போன வாரம் ஈரானுடன், பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளது என்று... தம்பர் சொன்னார். அவ்வளவும் பொய்யா.. கோபால்.
  11. வாழ்த்துகள் ஆதித்யா. பிரான்சில் வாக்களிக்கும் தமிழர்களில் இரண்டு வகையினரை அவதானித்துள்ளேன். முதலாவது தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் எந்தக் கட்சி என்று பாராமல் அவருக்கு வாக்களிக்கும் தமிழர்கள். மற்றது வெளிநாட்டவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று தீவிர இனவாத வலதுசாரிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள். இந்த இரு தரப்பினரும் இரு வேறு துருவங்கள் அல்லவா ? ஆனால் இருவரும் (பலர்) தமிழ் தேசிய ஆதரவாளர்கள். தமிழர்கள் ஒரு நாட்டு அரசியலுக்குள் நுளைந்து வளர வேண்டும். அதே வேளை வெளிநாட்டவர்கள் அடக்கப்பட வேண்டும். இதேபோன்றுதான் பிரான்சில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலுக்குள் நுளைய வேண்டும் என்பவர்கள் சீமானின் தமிழனைத் தமிழன் ஆள வேண்டும் என்ற கோசத்தை எவ்வாறு ஏற்க முடியும் என்பது புரியவில்லை. (சீமான் பற்றி இத் திரியில் விவாதிக்கப்பட்டதால் உதாரணம் கூற வேண்டி வந்தது)
  12. இங்கு சொன்னால் குத்தமாகிடும் ....இளவயது குடும்பம் ...அய்யர் அழகன் என்றால் ...அம்மாவும் அப்படியே.....கோவ்விலுக்கு வாற அழகான் பெண்களுக்கு...ரோசாப்பூவும் ...பிரசாதமும் அமோகம் ...அப்ப அயல் பொடியள் ..சும்மா இருப்பாங்களா...
  13. 2. கடன்கார கடவுள்கள் ------------------------------------ பணம் கொட்டும் தெய்வம் என்றால் திருப்பதியே உடனேயே நினைவில் வரும். அங்கு நாங்கள் தலைமுடியையும் கொடுத்து, காணிக்கையாக திருப்பதி ஏழுமலையானுக்கு ஏராளமாக அள்ளியும் கொடுக்கின்றோம். மனிதர்கள் தான் கடவுளுக்கு கொடுக்கின்றார்கள், அதை வேறு மனிதர்களே எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இந்தியாவில் மொழிவாரியான மாநிலங்கள் உருவாகும் போது, சென்னையை தமிழ்நாடும், திருப்பதியை ஆந்திராவும் எடுத்துக் கொண்டதாகச் சொல்லுகின்றார்கள். சரியான முடிவை தமிழர்கள் அன்று எடுத்திருக்கின்றார்கள். சினிமா மோகம் அவ்வளவாக தமிழர்களை அன்று ஆட்டிப் படைக்கவில்லை போல. ஒரு காலத்தில் கொழும்பில் இருந்த மயூராபதி அம்மன் கோவிலில் வேண்டப்பட்ட ஒருவரே பொறுப்பில் இருந்தார். அங்கு அப்பொழுது போயிருக்கின்றேன். அவரே மிகவும் வசதியானவர். அந்தக் கோவிலும் வசதியாகவே இருந்தது. இந்தியர்களும், ஈழத் தமிழர்களும் பெருமளவில் புலம் பெயர்ந்ததால் உலகெங்கும் கோவில்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல செல்வாக்காக இருந்தன அல்லது அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். 'வட அமெரிக்காவில் முதன் முதலாக பஞ்சமுக ஆஞ்சநேயர்...............' என்று கூட ஒரு விளம்பரத்துடன் ஒரு கோவில் இங்கே எனக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தின் பின்னேயே ஆஞ்சநேயருக்கு ஐந்து முகங்கள் இருப்பது எனக்கு தெரியவந்தது. அவருக்கு தனியாக கோவில் இருப்பது கூட அப்பொழுது தான் தெரியவந்தது. பின்னர் இலங்கையிலும் ஆஞ்சநேயர் கோவிலைக் கண்டேன். மனைவியின் மார்க்கம் பெரும்பாலும் முழுமுதற் கடவுள்களைச் சுற்றியே இருந்தபடியால், இப்படியான பல கோவில்களின் உள்ளே செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் இங்கு கணிசமான அளவில் அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கின்றார்கள். ஆனால் சிறு சிறு குழுக்களாகவே பழகி வருகின்றார்கள். படிப்பு,வசதி, அதனால் அவர்கள் நினைத்துக் கொள்ளும் அந்தஸ்து போன்ற காரணங்கள் இங்கு குழுக்கள் உருவாகுகின்றன என்று நினைக்கின்றேன். நாங்கள் இலங்கை தமிழர் ஆரம்பித்த கோவிலுக்கு போகாதது இங்கிருக்கும் பலருக்கு ஒரு விசயமாக இருக்கவில்லை. பலருக்கு என்னைத் தெரிந்திருக்கவே வழியில்லை. ஆனால் நாங்கள் பழகிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அது ஒரு பேசுபொருள் ஆகியது. நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்தால் பொதுவாகவே எங்களிடம் பேசுவதற்கு புதிது புதிதாக விடயங்கள் இருப்பதில்லை. கூட்டத்தில் பலரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாக இருந்தால் அந்த தொழில் பற்றிப் பேசிக் கொள்வார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் அந்தக் கதைகள் திரும்ப திரும்ப வரும். இப்படி ஒரு திசையில் மட்டுமே பேச்சுகள் இருக்கும். நடுவில் சம்பந்தம் இல்லாத ஒருவர் வந்து மாட்டுப்பட்டு விட்டால், அடுத்த தடவை அவர் நிச்சயம் வரமாட்டார். எங்கள் ஆட்களின் முயற்சிகளை ஆதரிக்கவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு. எல்லா விடயங்களிலும் இதே குற்றச்சாட்டு உண்டு. ஆரம்பிக்கப்படும் முயற்சிகளின் அடிப்படை நோக்கத்திலேயே சந்தேகம் வந்தால், எப்படி அவற்றை ஆதரிக்கமுடியும்? முயற்சிகள் மிகவும் பழமையானவையும், தேய்ந்து போனவையாகவும் இருந்தாலும் ஆதரவு என்று மற்றவர்களும் போய் நிற்க முடியாதுதானே. ஒருவர் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றார் என்றால், இன்று அதை எப்படி ஆதரிக்கமுடியும். இல்லை, இங்கிருந்து ஆரம்பித்து, மேலே போகலாம் என்று காரணம் சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் மீண்டும் மீண்டும் இங்கேயே ஆரம்பித்தால், இங்கேயே நின்று கொள்ளவே சாத்தியங்கள் உள்ளன. அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கின்றன. நாங்கள் அங்கே அதிகமாக போகா விட்டாலும், அந்தக் கோவில் விளம்பரமாகவே நடந்தது. நல்ல நாட்கள், பெரு நாட்கள் என்று கொண்டாடப்பட்டன. சிலரின் வாழ்வில் அது ஒரு அங்கம் ஆகியது என்று தான் சொல்லவேண்டும். கலை வளர்க்கின்றோம், கலாச்சாரத்தை கடத்துகின்றோம் என்றும் நல்ல பக்க விளைவுகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். பின்னர் திடீரென ஒரு நாள், அந்தக் கோவில் பெரும் கடனில் மூழ்கியிருக்கின்றது என்றார்கள். திருப்பதி, மயூராபதி அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவாவது இலாபம் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே என் எண்ணமாக இருந்தது. கடன் என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. கடவுளே கடனில் இருப்பார் என்பது நான் நினைத்திருக்காத ஒன்று. அவர் மீது இவர், இவர் மீது அவர் என்று குற்றச்சாட்டுகள் பொதுவெளியிலும் வைக்கப்பட்டது. சிலர் பிரிந்து போய் இன்னொரு கோவிலை ஆரம்பித்தனர். இந்தக் கோவிலும் சில நாட்கள் இயங்கி, இறுதியில் மூடப்பட்டது என்று நினைக்கின்றேன். ஐயர் இங்கிருந்து அங்கு போனார் அல்லது வேறு எங்கோ போனார் என்று ஞாபகம். அங்கே இருந்த கடவுளின் விக்கிரகங்கள் என்ன ஆயின என்று நான் யாரையும் கேட்கவில்லை. இரண்டாவது தடவை மின்னல் தாக்குவது போல இன்னொரு சம்பவம் நடந்தது. ஊரில் உள்ள கோவில் ஒன்றின் திறப்புகளை வங்கி எடுத்துச் சென்று விட்டதாக ஒரு தகவல் சொன்னார்கள். ஒரு மண்டபம் கட்ட வங்கியில் கடன் எடுத்திருந்ததகவும், அதை திருப்பிச் செலுத்தாததால் வங்கி இப்படிச் செய்தது என்றும் சொன்னார்கள். ஊரையே காக்கும் தெய்வம் என்று தான் ஊரில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படியுமா நடக்கும் என்று ஆச்சரியமும், அதைவிட அதிக வருத்தமும் ஏற்பட்டது. சிவனே என்று அவர்களின் பாட்டுக்கு இருக்கின்ற கடவுள்களை மனிதர்கள் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல. பின்னர் இன்னும் பல இதே போன்ற கோவில் கதைகள் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா இப்படி உலகெங்கும் இருந்து வந்தன. தமிழ்ப் படங்கள் சில வெற்றிப் படங்களாகவும், பலதும் தோல்விப் படங்களாகவும் ஆவது போல, கோவில்களும் வெற்றி தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், அதே திரைக்கதைகளுடன், அதே உற்சாகத்துடன் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றார்கள், சினிமாக்களையும் கோவில்களையும். பொதுவாகவே மனிதர்களுக்கு மறதி அதிகம் என்பதாலும், எதையும் பின்னிருந்து முன்னாக ஒரு காலக் கோட்டில் இணைத்துப் பார்க்கும் பொறுமை இருப்பதில்லை என்பதாலும், இதுவரையிலும் இல்லாத புது முயற்சிகளாகவே இவை எப்போதும் பார்க்கப்படுகின்றன. (தொடரும்.................)
  14. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவனுக்கு கல்லெறிந்தால் இது தான் நடக்கும். பிரச்சனைகளை தீர்க்காத வரைக்கும் எங்கும் எதிலும் தனகிக்கொண்டே இருப்பார்கள். தலைவனை அழித்த பின் முடங்கிப்போக அவர்கள் ஒன்றும் தமிழர் பரம்பரை அல்ல.
  15. பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க, தென்னாப்பிரிக்க மருத்துவர் சொன்னெட்எஹ்லர்ஸ் (Sonnet Ehlers) உருவாக்கிய பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சாதனம் 'Rape-aXe' ஆகும். இது பெண்கள் உள்ளே அணியக்கூடிய, கூர்மையான கொக்கிகள் கொண்ட ஒரு தற்காப்பு சாதனமாகும். பாலியல் வன்முறை முயற்சியின் போது, உள்ளே இருக்கும் சிறிய கொக்கிகள் (Hooks) தாக்குபவரின் உறுப்பில் சிக்கி, உடனே கடும் வலியை ஏற்படுத்தும். இந்த சாதனத்தை மருத்துவரின் உதவி இன்றி அகற்ற முடியாது, இதனால் குற்றவாளியை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்குவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கமாகும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த புதிய முயற்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. https://www.tamilmirror.lk/விநோத-உலகம்/பாலியல்-வன்முறையைத்-தடுக்க-Rape-aXe/53-374648
  16. தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை ------------------------------------------------------- பிள்ளையார் மாம்பழம் பெற்றது போல இப்படி ஒரு தலைப்பு வைத்தே பிரபஞ்சம் முழுவதையும் இழுத்துக் கொண்டு வந்துவிடலாம். இங்கே ஆக மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன என்று சந்தேகமற தோன்ற ஆரம்பித்து சில காலம் ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகள் நடப்பதும், அவை முன்னரே தெரிந்த முடிவுகளை அடைவதும் ஏற்படுத்தும் சலிப்புகளினாலேயே மூன்று கடகத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் தூக்கிப் போடக் கூடிய ஒரு மனநிலையை உண்டாகியிருக்கின்றது என்று நினைக்கின்றேன். சதிக் கோட்பாடுகள் போன்றவற்றில் அல்லது இதுவரை நடக்காத ஒன்று நடந்து விடும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தால் காலம் கொஞ்சம் சுவாரசியமாக ஓடும் போல. வீட்டில் மூன்று பூனைக் குட்டிகள் நிற்கின்றன. நான்கு பூனைக் குட்டிகள் என் வீட்டுக்கு வந்து சேர்ந்த கதையை முன்னர் எழுதியிருக்கின்றேன். பின்னர் அவை மூன்றாகின. மூன்றும் வீட்டிலேயே தங்கிவிட்டன. சகோதரங்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்குமா என்று அவை ஆச்சரியப்பட வைக்கின்றன. மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று துணை என்பது போல ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளுகின்றன. தெய்வங்கள் - மனிதர்கள் - மற்றயவை என்றும் மூன்று மட்டுமே இருந்தாலும், இவை பல சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருப்பதில்லை, மாறாக ஒன்றுக்கு இன்னொன்று துன்பமாகவே ஆகின்றன என்றும், இன்னும் ஒரு படி மேலே போய், ஒன்றே தனக்கு பெரும் துன்பமாக ஆகின்றது என்றும் தான் எனக்கு கிடைத்த வாழ்க்கை எனக்கு காட்டியிருக்கின்றது. 1. தெய்வத்தின் பாவம் --------------------------------- இங்கு வந்த பின் சில வருடங்களாக கோவில் எதற்கும் போகவில்லை. போகவில்லை என்றால் தெய்வத்துடன் கோபம் என்று அர்த்தம் இல்லை. இங்கு நாங்கள் இருந்த இடங்களில் கோவில் எதுவும் இருக்கவில்லை என்பதே ஒரேயொரு காரணம். அத்துவானக் காடு என்ற சொல்லைப் புரிய வைத்த சில வருடங்கள் அவை. அங்கே மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் எங்களுடைய மனிதர்கள் இருக்கவில்லை. இருபது வருடங்கள் ஊரில் வாழ்ந்திருந்தேன். அங்கே எல்லோரும் எங்களின் மனிதர்களே, ஒருவர் கூட எவ்வகையிலும் வித்தியாசமானவர் கிடையாது. முழு இலங்கையிலுமே அதிக கோவில்கள் கொண்ட ஊர் என்றால் அது நான் வளர்ந்த ஊரே. கும்பகோணமா அல்லது நான் வளர்ந்த ஊரிலா கோவில்கள் அதிகம் என்ற சந்தேகம் காரணமாகவே முழு இலங்கையுடன் முழு இந்தியாவையும் சேர்த்து உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஊரில் வாழ்ந்த அந்த இருபது வருடங்களிலும் கூட கோவிலுக்கு போகவில்லை. அங்கே அந்த இருபது வருடங்களில் ஏன் போகவில்லை என்றால், சரியாகத் தெரியவில்லை, 'ஏனடா போகவில்லை...............' என்று கேட்கின்றேன். பின்னர் வேலை எடுத்து வந்த இடத்தில் இருந்து ஒரு ஐம்பது மைல்கள் தொலைவில் ஒரு கோவில் இருப்பதாகச் சொன்னார்கள். மைல்கள் என்று அளவைப் பார்த்த உடனேயே இது எந்த நாடு என்று உங்களுக்கு புரிந்திருக்கும். அடியும், அங்குலமும், இறாத்தலும், மைலும் என்று தான் இன்றும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு உருண்டைக்குள் இரண்டு உலகங்கள் போல இந்த நாடும், மற்றைய உலக நாடுகளும் பிரிந்து இருக்கின்றன. நாங்கள் மூவரும், அப்பொழுது மகள் பிறந்திருக்கவில்லை, அந்தக் கோவிலுக்கு போய் வந்த பின்னர் அந்தக் கோவில் தமிழ் படங்களில் வர ஆரம்பித்தது. பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் அந்த கோவிலுக்கு வந்து போனார்கள். வேறு இந்திய மொழிப் படங்களிலும் பளிங்கு வெள்ளை நிறத்திலான அந்தக் கோவில் வந்தது. அந்தக் கோவிலின் உள்ளே கடும் கருமை நிறத்திலான வெங்கடேசப் பெருமாள் இருந்தார். அவருக்கு பரிவாரங்களாக வேறு தெய்வங்களும் உள்ளே அவருடனும், வெளியே பிரகாரத்திலும் இருந்தார்கள். சைவம், சாக்தம், வைஷ்ணவம், இன்னும் மூன்று அடங்கலாக மொத்தமாக இந்து மதத்தில் ஆறு பிரிவுகள் இருக்கின்றன என்று சமயப் பரீட்சைக்காக தெரிந்து வைத்திருந்ததைத் தவிர வேறு எந்த தரிசனமும் எனக்கிருக்கவில்லை. இன்றும் அவை கிட்டவில்லை. ஆனால் இவை ஆறு தரிசனங்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப துறைக்கு அவர்களின் வல்லுனர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். வெங்கடேசப் பெருமாளிடமும் கூட்டம் அதிகமாகியது. 'வெங்கடேசப் பெருமாள் அவர்களின் தெய்வம், எங்களின் தெய்வத்திற்கு எங்கே கோவில்.......' என்று அங்கே இருந்த பளிங்கு நிறக் கோவிலை ஒட்டி ஒரு சிவன் கோவிலை சிலர் கட்டினார்கள். வெங்கடேசப் பெருமாள் உயரத்திலும், சிவபெருமான் தரையிலும் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளிடம் போய் விட்டு, அந்தக் கோவிலின் வடக்கு பக்கமாக இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி சிவபெருமானிடம் போய் விட்டு, அங்கிருந்து தெற்குப் பக்கமாக வெளியேறினால், வெங்கடேசப் பெருமாள் இருக்கும் தளத்திற்கு கீழே ஒரு மண்டபமும், கோவிலின் சிறிய உணவுச்சாலையும் இருந்தன. இங்கு மிக மலிவு விலையில் சில உணவுகள் கிடைக்கும். அக்ரஹாரத்து சமையல், கண் முன்னேயே சமைப்பார்கள். அங்கேயே ஆறுதலாக இருந்து சாப்பிட்டு விட்டு, பின்னர் வீடு போவோம். கோவிலுக்கு போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஒரு நாள் நாங்கள் கோவில் வெளிவாசலை அடைந்த போது, அங்கே சிலர் கூட்டமாக நின்றார்கள். மெல்லிய குரல்களில் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலரின் கைகளில் பதாதைகள் இருந்தன. அச்சடித்த ஒரு காகிதத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி நாங்கள் கோவிலுக்குள் போய்விட்டோம். ஆனாலும் காதில் விழுந்தவை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோவில் தலைவரையும், பொறுப்புக்குழுவையும் மாற்றும் போராட்டமே அது. தேர்தல்கள் இல்லாமல் தலைவரும், குழுவும் பல வருடங்களாக இருக்கின்றனர், கணக்கு வழக்கு எங்கே என்பது போன்ற பல கேள்விகளை பதாதைகளில் பல மொழிகளில் கேட்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து இங்கு பல காலம் முன்னரேயே வந்து பெரும் செல்வந்தர் ஆகிய ஒருவரே தலைவராக, அறங்காவலராக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். பெரும்பாலான வட மற்றும் தென் இந்தியர்களின் இடையே ஒரு ஈழத்தவர் அறங்காவலராக இருப்பது ஆச்சரியமான விடயம் என்றாலும், கீழ் தளத்தில் சமைக்கும் ஶ்ரீ வைஷ்ணவரின் நிலை என்னவாகும் என்றே என் மனம் சஞ்சலப்பட்டது. அவரது தாய் மொழி தெலுங்கு, ஆனால் தமிழும் மிக நன்றாகவே அவருக்கு தெரிந்திருந்தது. பின்னரும் சில நாட்கள் அந்தக் கோவிலுக்கு போய் வந்து கொண்டிருந்தோம். வெளிவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. சில நாட்களில் சமையல் இருக்கும், சில நாட்களில் இருக்காது. அவர்கள் எல்லோர் முகங்களிலும் அமைதியின்மை நன்றாகவே தெரிந்தது. ஒரு நாள் ஶ்ரீ வைஷ்ணவர்கள் பூசைகள் எதுவும் செய்யாமல் கோவிலின் முன் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அதன் பின்னர் அங்கு போகாமல் நின்றுவிட்டோம். சில மாதங்களின் பின்னர் வீட்டருகிலேயே ஒரு கோவில் ஆரம்பித்து இருப்பதாக மனைவி போனார். ஒரு விஷேச நாளில் என்னையும் கூட்டிச் சென்றார். வெளியில் இருந்து பார்க்கும் போது அது ஒரு தேவாலயம் போன்றே தெரிந்தது. ஒரு நீண்ட ஊசிக் கோபுரம் அதன் கூரை மேல் நின்று கொண்டிருந்தது. அந்த ஊசிக் கோபுரத்ததை அகற்றுவது மிகச் செலவு அதிகமான ஒரு விடயமாக இருந்திருக்கக்கூடும். உள்ளே வெள்ளைப் பளிங்குகளால் ஆன கடவுளின் சிலைகள் இருந்தன. ராமபிரானும், சீதாபிராட்டியும் நடுநாயகமாக இருந்தார்கள். கறுப்பு நிறத்திலான ஒரு பெரிய சிவலிங்கம் முன்னே இருந்தது. அங்கிருந்த ஐயர் நாங்கள் முன்னர் போய்க் கொண்டிருந்த கோவிலில் இருந்த ஒருவரே. அவர் ஒரு தமிழர் என்றும், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் அன்று தான் எனக்கு தெரிந்தது. இந்தக் கோவிலில் எந்த தடையும் இருக்கவில்லை. எவரும் எவ்வளவு அருகிலும் சென்று வரலாம் என்றே இருந்தது. மல்லிகையும், கனகாம்பரமும், இன்னும் பல பூச்செடிகளையும் வீட்டைச் சுற்றி வளர்த்து, மாலைகளை கட்டிக் கொண்டு மனைவி இந்தக் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தார். வீட்டுக்கு மிக அருகிலேயே கோவில் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது. சில வருடங்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பின்னர் இங்கேயும் மெதுமெதுவாக அதிகமானோர் வர ஆரம்பித்தனர். 'வேதா சர்க்கிள்' என்று ஒன்று அங்கே ஆரம்பிக்கப்பட்டது. வேதம் தெரிந்தவர்கள் என்றில்லை, எவரும் இணையலாம் என்று யாரோ சொன்னார்கள். இவர்களில் சிலரை நான் வாலிபால் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் சந்திப்பதுண்டு. இவர்களின் சில நடவடிக்கைகள் உள்ளும், புறமும் வேறு வேறாக இருக்கின்ரது என்பதே என்னுடைய அபிப்பிராயமாக இன்றும் இருக்கின்றது. அப்படியான சில நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்திருக்கின்றன. இவர்கள் என்ன தான் சொன்னாலும், வேத வட்டத்தின் பின்னணி என்னைப் போன்ற பலருக்கும் தெளிவாக இருந்தது. அடுத்த தடவை இந்தக் கோவிலுக்கு போகும் போது, சிவலிங்கத்தின் முன்னால் கோவில் மண்டபத்தின் குறுக்காக ஒரு தடித்த இரும்புச் சங்கிலி இருந்தது. அது இன்றும் அங்கே இருக்கின்றது. அந்த இரும்புச் சங்கிலியை தாண்டி நாங்கள் போகக் கூடாது என்ற விதி வந்திருந்தது. அங்கிருக்கும் தெய்வங்களை வட்டங்களுக்குள் நிற்பாட்டியிருந்தார்கள். சில தெய்வங்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் வீட்டில் கட்டப்பட்டனவே. அதன் மூலம் அறிந்த மனிதர்கள் அங்கே கிடையாது. வட்டங்களை ஊடறுத்து ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். இந்தக் கோவிலில் வட்டங்கள் வர ஆரம்பித்து இருந்த அதே காலத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு துணையாக இன்னும் சிலர் சுற்றியிருக்க, கோவில் ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கோவில் என்னுடைய வீட்டிலிருந்து இன்னொரு திசையில் ஒரு நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்தது. அங்கு முன்னர் ஒரு முன்பள்ளிக் கூடமே இருந்தது. அதை அவர்கள் கோவிலாக மாற்றினார்கள். அங்கு முன்னுக்கு நின்ற சிலர் எனக்கு ஓரளவுக்கு தெரிந்தவர்களே. எவ்வகையிலும் இப்படியான ஒரு அக்கறையோ அல்லது ஒரு ஆன்மீகத் தேடலோ அவர்களிடம் இருப்பதாக எனக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. நான் ஒரு கோவில் ஆரம்பித்தால் அந்தச் செயல் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இவர்களின் செயலும் எனக்குத் தோன்றியது. ஆனாலும், நம்மவர்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிக்கும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருப்பது நான் அறிந்ததே. முன்பாடசாலையில் சில தெய்வ விக்கிரகங்களை வைத்திருந்தார்கள். அது ஒரு பிள்ளையார் கோவில் என்றே நினைக்கின்றேன். என் நினைவு தப்பாகவும் இருக்கலாம். நாங்கள் போயிருந்த முதல் நாள் அன்றே பூஜை மிகவும் நீண்டு கொண்டு போனது. அவ்வளவு நீண்ட பொழுது முழுவதும் மௌனமாக இருந்து எதையாவது நினைத்துப் பார்க்கும் அல்லது சிந்திக்கும் திறமை எனக்கில்லை. இலங்கை முறைப்படி பூசை செய்வதாக அங்கு பலர் சொல்லிக் கொண்டார்கள். மிகவும் அருமை என்றார்கள். யார் சொல்வதையும் நான் பொருட்படுத்தவில்லை, மனைவி என்ன சொல்லப் போகின்றார் என்றே நான் காத்துக் கொண்டிருந்தேன். 'சரியான நீட்டுப் பூசை.............' என்று நானே ஆரம்பித்தேன். 'இவ்வளவு தூரம் வர வேண்டும் என்றில்லை................. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கே நாங்கள் போகலாம்.................' என்றார் மனைவி. கணவர்மார்களைப் பற்றி மனைவிமார்களுக்கு நன்றாகவே தெரியும் தானே. (தொடரும்....................)
  17. 🤣................ பொது எதிரியை சாய்ப்பதற்காக கொள்கைகளில் சில தளர்வுகளை செய்து கொள்வதில் தப்பேயில்லை................ நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள், தேர்தல் செலவுகளை நாங்களே பார்த்துக் கொள்ளுகின்றோம்...................😛.
  18. ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன? பட மூலாதாரம்,Cuneiform Digital Library Initiative படக்குறிப்பு,(க்ரெடிட்ஸ்: கியூனிஃபார்ம் டிஜிட்டல் லைப்ரரி இனிஷியேடிவ்) கட்டுரை தகவல் ஜோஸ்லின் டிம்பர்லி 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான முடிவு, இன்றும் நாம் நேரத்தைக் கணக்கிடும் முறைக்கு நேரடி காரணமாக அமைந்தது. அக்டோபர் 1793-இல், புதிதாக நிறுவப்பட்ட பிரெஞ்சு குடியரசு ஒரு துரதிர்ஷ்டவசமான சோதனையைத் தொடங்கியது. அந்த சோதனை நேரத்தை மாற்ற முடிவு செய்தது. இனி ஒரு நாள் 24 மணிநேரத்திற்குப் பதிலாக 10 மணிநேரங்களாகப் பிரிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மணிநேரமும் 100 ' நிமிடங்களை' கொண்டிருக்கும், அவை ஒவ்வொன்றும் 100 ' விநாடிகளால்'ஆனவை என்றும் புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். இந்த நேர முறைமை ஒரு விரிவான புரட்சிகர காலண்டரின் ஒரு பகுதியாகும், இது புதிய 10 நாள் வாரத்தை உள்ளடக்கிய ஆண்டின் கட்டமைப்பை பகுத்தறிவு ரீதியாக்குவதை (மற்றும் கிறிஸ்தவமயமாக்கலை நீக்குவதை) நோக்கமாகக் கொண்டது. தற்போதுள்ள கடிகாரங்களை இந்த தசம முறைக்கு மாற்றும் பணிகள் விரைவில் தொடங்கின. நகர அரங்குகளில் தசம கடிகாரங்கள் பொருத்தப்பட்டன மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் புதிய காலண்டரைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்டன. இது விரைவில் தீராத தலைவலியை ஏற்படுத்தத் தொடங்கியது என்று பிரிட்டனின் லண்டனில் உள்ள ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச்சின் அறிவியல் தொடர்பாளர் ஃபின் புரிட்ஜ் கூறுகிறார். இந்த அருங்காட்சியகம் தான் ராயல் வானியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம் மற்றும் கிரீன்விச் மீன்டைம் நிறுவப்பட்ட இடமாகும். ஏற்கனவே இருந்த கடிகாரங்களை மறுவடிவமைப்பு செய்வதும் மாற்றுவதும் மிகவும் கடினமாக இருந்தது. இந்த முறை பிரான்சை அண்டை நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தியது, அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வு நாள் வருவதை வெறுத்தனர். இறுதியில், இந்த தசம நேர முறை பிரான்சில் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. இருப்பினும், ஒரு நாளைக்கு 24 மணிநேரம், ஒரு மணிநேரத்திற்கு 60 நிமிடங்கள் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 60 விநாடிகள் என்று நாம் எவ்வாறு கணக்கிடத் தொடங்கினோம், இன்றும் எப்படி கணக்கிடுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள, காலக்கணிப்பு முறை தோன்றுவதற்கு முந்தைய காலத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும். ஏனெனில் இது ஆரம்பகால எண் முறைமைகளில் ஒன்றின் கதையாகும். இது தான் நம்மை இந்தப் பாதையில் பயணிக்கத் தூண்டியது. மேலும் இந்தச் சிக்கலான முறை அதனை உருவாக்கிய நாகரிகங்களை விட நீண்ட காலம் நீடித்திருப்பதையும் இது விளக்குகிறது. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... அறுபதின்ம முறையின் அடித்தளம் இதன் தொடக்கத்தில் இருப்பவர்கள் சுமேரியர்கள். மெசபடோமியாவில் (தற்போதைய இராக் பகுதி) சுமார் கி.மு. 5300-1940 வரை வாழ்ந்த பழங்கால மக்கள் மற்றும் நகரங்களை உருவாக்கிய முதல் நாகரிகங்களில் சுமேரியர்களும் அடங்குவர். நீர்ப்பாசனம் மற்றும் ஏர் உழுதல் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளுடன், முதன்முதலில் அறியப்பட்ட எழுத்து முறையை உருவாக்கிய பெருமையும் இவர்களையே சாரும். இது 60-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு எண் முறையை உள்ளடக்கியிருந்தது. உங்கள் கையை உங்களுக்கு முன்னால் உயர்த்திப் பிடித்து, ஒரு விரலை மடக்கிப் பார்த்தால் அதில் மூன்று மூட்டுகள் இருப்பதைக் காண்பீர்கள். ஒரு கையின் விரல்களில் உள்ள அனைத்து மூட்டுகளையும் (கட்டைவிரலைத் தவிர) எண்ணினால் 12 வரும். உங்கள் மற்றொரு கையின் ஒரு விரலைப் பயன்படுத்தி இந்த 12-ஐ ஒன்று எனக் கணக்கிட்டு, மீண்டும் முதல் கையில் 12 வரை எண்ணைத் தொடங்குங்கள். உங்கள் இரண்டாவது கையின் ஐந்து விரல்களும் பயன்படுத்தப்படும் வரை இதைச் செய்யுங்கள். இப்போது நீங்கள் எதை எட்டியிருப்பீர்கள்? அறுபது. சுமேரியர்கள் தங்களின் வளர்ந்து வரும் கணித முறையை 10-ஐ அடிப்படையாகக் கொள்ளாமல், 60-ஐ அடிப்படையாகக் கொண்டு ஏன் உருவாக்கினார்கள் என்பது குறித்த ஊகக் கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. இந்த முடிவு இன்றும் நாம் நேரத்தை அளவிடும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பட மூலாதாரம்,The Fitzwilliam Museum, University of Cambridge படக்குறிப்பு,18-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சிகர அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நேர முறையை ஒரு தசம கடிகாரம் காட்டுகிறது (படம் : தி ஃபிட்ஸ்வில்லியம் மியூசியம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்). வளர்ந்து வரும் தங்கள் நகரங்களுக்கு ஆதாரமாக விளங்கிய, மேலும் பெரிதாகவும் சிக்கலாகவும் மாறிய விவசாய முறையைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமே, அவர்கள் எண்களை எழுதத் தூண்டுகோலாக இருந்தது என்கிறார் கனடாவின் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் கியூனிஃபார்ம் (பண்டைய மத்திய கிழக்கின் ஆரம்பகால எழுத்து முறைகள்) கலாச்சார நிபுணர் மார்ட்டின் வில்லிஸ் மன்ரோ. எண்களைக் குறித்து வைப்பதற்காக, அவர்கள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் அளவு அல்லது அதைவிட சிறியதான சிறிய களிமண் பலகைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். மென்மையான களிமண்ணில் விவரங்களைப் பொறித்தனர். விரைவில் மற்ற சித்திரக் குறியீடுகளும் தோன்றி, சுமேரியர்களின் புகழ்பெற்ற கியூனிஃபார்ம் வடிவ எழுத்துகளாக வளர்ந்தன . 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் இந்த களிமண் பலகைகள் கண்டறியப்பட்டு அதன் பொருள் அறியப்படத் தொடங்கியது. சுமேரியர்கள் பலவிதமான எண் முறைகளைப் பயன்படுத்தியதை அவை காட்டுகின்றன. ஆனால் கணிதத்திற்கும், அதன் மூலம் வானியல் மற்றும் நேரத்திற்கும் மிக முக்கியமானதாக 'செக்ஸாஜெசிமல்' எனப்படும் அறுபதின்ம முறை (60-ஐ அடிப்படையாகக் கொண்ட) முறை உருவானது என்கிறார் மன்ரோ. நாம் இப்போது 10-ஐப் பயன்படுத்துவது போன்றே சுமேரியர்கள் 60-ஐப் பயன்படுத்தினர். நாம் ஒன்பதை எட்டும்போது, இடதுபுறம் ஒரு இடத்திற்கு நகர்ந்து ஒன்றை எழுதி, வலதுபுறம் பூஜ்ஜியத்தைச் சேர்க்கிறோம் என்று அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துல்லியமான அறிவியல் மற்றும் தொல்பொருள் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற எரிகா மெஸாரோஸ் கூறுகிறார். "அறுபதின்ம முறைமைக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் 59 வரை சென்றுவிட்டு, 59-ஐ விட அதிக எண்ணைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஒரு இடத்திற்குத் தள்ளி ஒன்றை மட்டும் பயன்படுத்துகிறார்கள்"என்று அவர் குறிப்பிட்டார். மேலே கூறப்பட்ட விரல் எண்ணும் கோட்பாடு கவர்ச்சிகரமாக இருந்தாலும், சுமேரியர்கள் ஏன் 60-ஐ அடிப்படையாகக் கொண்ட முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "60 எங்கிருந்து வந்தது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று மன்ரோ கூறுகிறார். இந்த முறை சுமேரியர்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இதன் பயன்பாட்டு எளிமை தெளிவாக உள்ளது. பின்னங்கள் அல்லது தசமங்கள் தேவையின்றி 60-ஐ ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, 10, 12, 15, 20, 30 மற்றும் 60 ஆகிய எண்களால் வகுக்க முடியும். 10-ஐ ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் 10-ஆல் மட்டுமே வகுக்க முடியும் என்பதோடு ஒப்பிடும்போது இதன் நன்மைகள் புரியத் தொடங்கும். "கணக்கியல், வரிகள் அல்லது நிலங்களை அளவிடுதல் மற்றும் வாரிசுரிமைக்காக நிலங்களைப் பிரித்தல் போன்ற நடைமுறை நோக்கங்களுக்காக நீங்கள் எண்களை உருவாக்குகிறீர்கள் என்றால், இந்த கணிதச் செயல்பாடுகளைச் செய்ய எளிதான வழி இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்" என்கிறார் மெஸாரோஸ். காலத்தின் தோற்றம் சுமேரியர்கள் நேரத்தைப் பயன்படுத்தியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை என்றாலும், கி.மு. 1000-இல் பாபிலோனியர்களால் (சுமேரியர்களுக்குப் பிறகு வந்த ஒரு பண்டைய மெசபடோமிய நாகரிகம்) சூரியக் கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்கள் முதன்முதலில் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்னரே அந்தப் பிராந்தியத்தில் காலக்கணிப்பு முறை இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று மன்ரோ கூறுகிறார். ஒரு நாளை மணிநேரங்களாகப் பிரித்ததாக அறியப்படும் முதல் நாகரிகம் பண்டைய எகிப்தியர்களுடையது தான் என்று சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் வானியலாளர் ரீட்டா கௌட்ச்சி கூறுகிறார். இது கி.மு. 2500-ஆம் ஆண்டைச் சேர்ந்த மத நூல்களில் காணப்படுகிறது. மணிநேரங்கள் தொடர்பாக முதலில் அறியப்பட்ட பொருட்கள் ஆரம்பத்தில் இரவின் 12 மணிநேரங்களைக் குறிக்கின்றன. இவை கி.மு. 2100 மற்றும் 1800-க்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்திய பிரபுக்களின் சவப்பெட்டிகளின் உட்புற மூடியில் காணப்பட்ட டயகனால் ஸ்டார் கிளாக் என்று கௌட்ச்சி விளக்குகிறார். பட மூலாதாரம்,The Board of Trustees of the Science Museum, London படக்குறிப்பு,நேரத்தை அளவிடுவதற்கான ஆரம்பகால கருவிகளில் ஒன்றான சூரியக் கடிகாரங்கள், கி.மு. 1500 வாக்கில் எகிப்தில் தோன்றத் தொடங்கின (படம் : தி போர்டு ஆஃப் டிரஸ்டீஸ் ஆஃப் தி சயின்ஸ் மியூசியம், லண்டன்). எகிப்தியர்கள் ஏன் சரியாக 12 என்ற உட்பிரிவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை . இதுவே இறுதியில் முழு நாளிலும் 24 மணிநேரங்கள் ஏற்பட வழிவகுத்தது. எகிப்தியர்கள் 12 விண்மீன் தொகுப்புகளைக் கொண்ட ஒரு ராசி சுழற்சியைக் கொண்டிருந்தனர், ஆனால் இது 12 மணிநேரங்கள் குறித்த முதல் குறிப்புகளுக்குப் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஒரு கையின் விரல்கள் மற்றும் மூட்டுகளைப் பயன்படுத்தி 12 வரை எண்ணுவது மற்றொரு சாத்தியமாகும். அவர்கள் தேர்ந்தெடுத்த 10 நாள் வாரம் என்ற கணக்கு சில நட்சத்திரங்களின் தெரிவுநிலையுடன் எவ்வாறு இணைந்தது என்பதன் காரணமாகவும் இது இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். நேரத்தை அளவிடுவதற்கான ஆரம்பகால கருவிகளான சூரியக் கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்கள் கி.மு. 1500-இல் எகிப்தில் தோன்றின. அவற்றில் சில அன்றாட வேலைகளின் போது பயன்படுத்தப்பட்டன, ஆனால் பெரும்பாலானவை காலக்கணிப்பை விட "மத ரீதியான சடங்குகள் மற்றும் வழிபாடுகளுடன் தொடர்புடையதாகவே" இருந்திருக்கலாம் என்று கௌட்ச்சி கூறுகிறார். "தனிப்பட்ட முறையில், அவற்றில் பல கடவுள்களுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் அல்லது நேர்த்திக்கடன்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறும் அவர், "அந்தக் காலத்தின் அறிவியல் பூர்வமான காலக்கணிப்பு குறித்து எங்களிடம் அதிக தகவல்கள் இல்லை"என்றும் குறிப்பிட்டார். ஆரம்பத்தில், அன்றாட வாழ்க்கை மற்றும் வணிகம் குறித்த நூல்களில், மிகச்சிறிய நேர அலகு பொதுவாக வேலை மாற்றமாகவே இருந்தது, இது பொதுவாகக் காலை அல்லது மதியம் என்று கற்பனை செய்யப்பட்டது என்று கௌட்ச்சி கூறுகிறார். ஆனால் பண்டைய எகிப்தின் ரோமானிய காலத்திலிருந்து (கி.மு. 30 முதல்), மணிநேரங்கள் ஒரு தரநிலையாக மாறின, அதனுடன் அரை மணிநேரங்களும் தோன்றத் தொடங்கின என்றும் அவர் தெரிவித்தார். நிமிடங்களின் வருகை இதற்கிடையில், பாபிலோனியர்களும் மணிநேரங்களைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுவந்தனர். நேரத்தைக் கணக்கிடும் நோக்கத்திற்காக இல்லாவிட்டாலும், ஒரு மணிநேரத்தை மிகச்சிறிய அலகுகளாகப் பிரித்த முதல் நபர்களாக இறுதியில் அவர்களே இருந்தனர். கி.மு. 2000 முதல் கி.மு. 540 வரை செழித்தோங்கிய பாபிலோனியர்கள், சுமேரியர்களிடமிருந்து கியூனிஃபார்ம் எழுத்து முறை மற்றும் அறுபதின்ம எண் முறை ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொண்டனர். கி.மு. 1000-ஆம் ஆண்டில், சூரியன் வானில் மீண்டும் அதே நிலைக்குத் திரும்ப எடுக்கும் காலத்தை (360 நாட்களுக்குச் சற்று அதிகம்) அடிப்படையாகக் கொண்ட ஒரு காலண்டரை அவர்கள் உருவாக்கியிருந்தனர் என்று மெஸாரோஸ் கூறுகிறார். ஏற்கனவே 60-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணும் முறையைப் பயன்படுத்தும் ஒரு நாகரிகத்திற்கு இது ஒரு வசதியான எண்ணாக இருந்தது. "60-ஐ அடிப்படையாகக் கொண்ட முறையில் இது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது பாருங்கள்" என்கிறார் மெஸாரோஸ். "உண்மையில், இது தலா 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களுக்கு மிகச் சரியாக வழிவகுத்தது" இது நிலவு சுழற்சியுடனும் ஒத்துப்போனது என்றும் அவர் கூறுகிறார். எகிப்தியர்களைப் போலவே, பகலையும் இரவையும் தலா 12 ஆகப் பிரிக்கும் அன்றாட பயன்பாட்டிற்கான நடைமுறை நேர முறையை பாபிலோனியர்கள் உருவாக்கினர். இந்த "பருவகால மணிநேரங்களின்" நீளம், பகல் மற்றும் இரவின் நீளத்தைப் பொறுத்து மாறுபடும். "இரவு வானத்தை 12 மாதங்களாகவும் 12 ராசிகளாகவும் பிரிப்பதால், பகலையும் 12 ஆகப் பிரித்தோம்" என்கிறார் மெஸாரோஸ். வேறு பல பண்டைய நாகரிகங்களும் பருவகால மணிநேரங்களைப் பயன்படுத்தின, அவை 15-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலும் 19-ஆம் நூற்றாண்டு ஜப்பானிலும் பயன்பாட்டில் இருந்தன. இருப்பினும், இந்த பருவகால நேரம் நடைமுறை பயன்பாட்டிற்காக ஒருபோதும் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்படவில்லை என்று மன்ரோ குறிப்பிடுகிறார். "[அது] நவீன காலத்தின் ஆரம்பம் வரை ஒரு விஷயமாகவே இல்லை... மெசபடோமியா மற்றும் பிற பண்டைய கலாச்சாரங்களில் அது இல்லை, ஏனென்றால் அதற்கு உண்மையில் எந்தத் தேவையும் இருக்கவில்லை"என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Cuneiform Digital Library Initiative படக்குறிப்பு,கி.மு. 3200 காலத்தைச் சேர்ந்த இந்தச் சுமேரியப் பலகை, மிகப் பழமையான கணிதப் பயிற்சிகளைக் கொண்டுள்ளது (படம் : கியூனிஃபார்ம் டிஜிட்டல் லைப்ரரி இனிஷியேடிவ்). பாபிலோனியர்கள் வானியல் நிகழ்வுகளைக் கணக்கிடுவதற்கும் அளவிடுவதற்கும் மற்றொரு நேர முறையை உருவாக்கினர், ஆனால் இது அன்றாட பயன்பாட்டிற்கானது அல்ல. இது ஒரு நாளை 12 "பெரு" ஆகப் பிரித்தது, இதனை நவீன காலத்தின் இரண்டு மணிநேரங்களுக்குச் சமமாகக் கருதலாம். இதைப் பயன்படுத்திய ஒரே பண்டைய கலாச்சாரம் பாபிலோனியா மட்டுமல்ல. உதாரணமாக, இவை பண்டைய சீனா மற்றும் ஜப்பானிலும் காணப்பட்டன. தங்கள் கணக்கீடுகளில் இன்னும் நுணுக்கமான அளவீடுகளின் தேவை காரணமாக, பாபிலோனியர்கள் இந்த இரண்டு மணிநேர 'பெரு' அலகுகளை 'உஷ்' எனப்படும் 30 பண்டைய நிமிடங்களாகப் பிரிக்கத் தொடங்கினர். இதில் ஒவ்வொரு நிமிடமும் நமது தற்போதைய நான்கு நிமிடங்களுக்குச் சமம். இவை மேலும் 60-ஆல் வகுக்கப்பட்டு 'நிண்டா' எனப்படும் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன, அவை ஒவ்வொன்றும் சுமார் நான்கு நவீன வினாடிகளுக்குச் சமம். "அறுபதின்ம முறைமையில் நாம் விஷயங்களை 60 குழுக்களாகப் பிரிப்பதாலேயே" இந்த உட்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மெஸாரோஸ் கூறுகிறார். இருப்பினும், பாபிலோனியர்கள் இதனை "நேரத்தைப் பிரிப்பதாக நினைக்கவில்லை" என்றும், "அவர்கள் இதனை வானில் தூரத்தை அளவிடும் எண்களை அல்லது கிரகங்களின் வேகத்தைப் பிரிப்பதாகவே நினைத்தார்கள்"என்றும் மன்ரோ குறிப்பிடுகிறார். இதுபோன்ற அனைத்து பண்டைய கால வளர்ச்சி முறைகளிலும் யார் யாருடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்கள் என்று துல்லியமாகக் கூறுவது கடினம் என்று கௌட்ச்சி கூறுகிறார். "சுமார் கி.மு. 330 முதல், அலெக்ஸாண்ட்ரியாவில் புதிய அறிவியல் மையம் உருவானதால், எகிப்து, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் ஒன்றிணைந்த ஒரு சங்கமமாக மாறியது," என்று கூறும் அவர், "இதைத்தான் நாம் ஹெலனிஸ்டிக் உலகம் என்று அழைக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பண்டைய கிரேக்கர்கள் பாபிலோனிய வானியல் நேர முறையை ஏற்றுக்கொண்டனர் என்பது தெளிவாகிறது என்று மெஸாரோஸ் கூறுகிறார். மேலும், "அவர்கள் அதே பிரிவை வைத்திருந்தனர், ஏனெனில் இது ஏற்கனவே உள்ள கண்டுபிடிப்புகளுடன் புதியவற்றைச் சேர்க்க அவர்களுக்கு அனுமதி அளித்தது... இது பாபிலோனியர்களுக்கு நன்றாக வேலை செய்த ஒரு அமைப்பாக இருந்ததால், அவர்களுக்குப் பின் வந்தவர்கள் வானியல் தரவு மற்றும் மரபுகளைப் பெறுவதற்காக அதை அதை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்"என்றும் அவர் விளக்கினார். வினாடிகளை எண்ணுதல் "மக்கள் பேசுவதற்கு சமமான நேரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக" கிரேக்கர்கள் தங்கள் அரசவையில் மணல் கடிகாரங்களை வைத்திருந்தாலும், அவர்கள் ஏற்றுக்கொண்ட பாபிலோனிய நேர முறையானது ஜோதிடர்களால் கருத்தியல் ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது மற்றும் பெரும்பாலும் "அன்றாட வாழ்க்கைக்கு உண்மையில் பொருத்தமற்றதாக இருந்தது" என்று கௌட்ச்சி கூறுகிறார். ஆனால் ஹெலனிஸ்டிக் கலாச்சார சங்கமத்திலிருந்து உருவான மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் போன்ற கருத்துக்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றைய நாள் வரை வந்துள்ளன. இருப்பினும், சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் நிமிடங்களும் விநாடிகளும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அளவிற்கு காலக்கணிப்புக் கருவிகள் துல்லியமானதாக மாறின. வினாடி என்பது இப்போது எண்ணற்ற அறிவியல் வரையறைகளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வினாடியை விடச் சிறிய நேர அலகுகளைக் கணக்கிடத் தொடங்கியவுடன், விஞ்ஞானிகள் மெட்ரிக் முறைக்கு மாறி, அதனை மில்லி மற்றும் மைக்ரோ விநாடிகளாக (முறையே ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு மற்றும் மில்லியனில் ஒரு பங்கு) பிரித்தனர். 20-ஆம் நூற்றாண்டில், அணு கடிகாரங்கள் வினாடியை துல்லியமாக மறுவரையறை செய்யசெய்ய விஞ்ஞானிகளுக்கு உதவின. சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வரையறையிலிருந்து, சீசியம்-133 அணுக்களால் மைக்ரோவேவ் கதிர்வீச்சை உறிஞ்சுதல் மற்றும் உமிழ்தல் அடிப்படையிலான துல்லியமான மதிப்பிற்கு அது மாறியது. இன்று, நமது உலகளாவிய அணு கடிகாரங்களின் வலையமைப்பு கிட்டத்தட்ட அனைத்து நவீன கடிகாரங்களின் நேரத்தையும் பராமரிக்கிறது, மேலும் இது இணையம் முதல் ஜிபிஎஸ் மற்றும் அதிநவீன எம்ஆர்ஐ இமேஜிங் வரை அனைத்திற்கும் பின்னணியாக உள்ளது . படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் இருப்பினும், கால கணக்கீட்டின் வரலாற்றைக் கண்டறியும்போது, அது உண்மையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதும், மனித முடிவுகளால் தீர்மானிக்கப்பட்டது என்பதும் வெளிப்படுகிறது. மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் ஆகியவை தொடர்ச்சியான தேர்வுகள், தற்செயல்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக நம்மிடம் வந்தடைந்தன. ஆனால் அவை பல நூற்றாண்டுகளாகப் பயனுள்ள பாரம்பரியமாக நம்மிடம் நிலைத்துவிட்டன. பண்டைய காலத்தின் இந்தத் தாக்கம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்றால், இப்போது இந்த அமைப்பை மாற்றுவது கையாளுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கலாம். 18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நேரத்தைத் தசம முறைப்படுத்த முயன்றபோது கூட, நடைமுறையில் அந்தப் புதிய முறை அரிதாகவே பயன்படுத்தப்பட்டது . அதே சமயம் , குடியரசின் தூர அளவீடுகளையும் நாணயத்தையும் தசம முறைப்படுத்துவதற்கான இதே போன்ற முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தசம நேர முறை வெறும் 17 மாதங்கள் மட்டுமே நீடித்தது, இருப்பினும் அந்த நாட்காட்டி சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு ஓரளவு பயன்பாட்டில் இருந்தது. "இது தொடர்பாக முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்தது,அது மக்களிடையே எடுபடவில்லை," என்று புரிட்ஜ் கூறுகிறார். 1795-ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசிய மாநாட்டின் உறுப்பினரான கிளாட்-அன்டோயின் பிரியர் ஆற்றிய உரையே, தசம நேர முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக இருந்திருக்கலாம். இது யாருக்கும் எந்தவிதமான குறிப்பிடத்தக்க நன்மையும் அளிக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், மற்ற புதிய மெட்ரிக் அளவீட்டு முறைகள் மீது இது ஒரு கெட்ட பெயரை உருவாக்குவதாகவும், அவை இதற்கு மாறாகப் பயனுள்ளவை என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk14g8vj06o
  19. போட்டியை நடத்த முன் வந்தமைக்கு மிக்க நன்றி கிருபன்.
  20. திருப்பதி மட்டும் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருந்தால் திமுக ஆட்டையைப் போட்டு திருப்பதியானுக்கு மொட்டையடித்து பழனியாக்கியிருப்பார்கள். இங்குள்ள (யேர்மனியில்) கோயில்களில், தட்டில் விழுவது ஐயருக்கு, மற்றவை நிர்வாகத்துக்கு.கோயிலில் எங்கே சாமி இருக்கிறார்? ஆசாமிகள்தான் கோயிலை ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.
  21. ஆமைக்கு ஏதிராக ஈரானுடன் பலர் புகுந்துவிளையாடுகின்றார்கள், ஆமை இதில் வென்றால்தான் நல்லது, பேச்சுவார்த்தையில் போய்யென்றாலும்
  22. தத்தை நெஞ்சம் .......சர்வர் சுந்தரம் . ......கே.ஆர் விஜயா......! 😍
  23. இந்தியா அமைதிப்படை காலத்தில் மண்டையன் குழுவை நடாத்தி பல இளைஞர்கள் சித்திரைவாதை செய்து கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் 2004 இல் சேர்ந்த போது சொல்லப்பட்ட காரணம் சிங்கள தரப்புக்கு எதிராக தமிழ் அமைப்புகள் சேர்ந்து பலமான கூட்டணி அமைக்க வேண்டும். 2010 தேர்தலில் தமிழர்களை அழித்த மகிந்தா சரத்பொன்சேகா ஆகிய இருவர்களில் சரத் பொன்சேகாவுக்கு யாழில் ஏன் அதிகளவு மக்கள் வாக்களித்தார்கள்? இவர்களை தவிர சிவாஜிலிங்கம் , விக்கிரமபாகு கருணாரத்தினா போன்றவர்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வடபகுதியில் ஜேவிபிக்கு யாழ் மண்ணில் இருந்து 3 வேட்பாளர்கள் ஏன் தெரிவு செய்தார்கள். இதே ஜேவிபி தமிழர்கள் கொல்லபடும்போது தமிழர்களுக்கு எதிராக இருந்ததை யாழ் மக்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை. யாழ் மக்களும் சுயநலவாதிகளா? எம்மவர்களில் சிலர் வைகோ அவர்களை கடந்த 7,8 வருடங்களாக குறை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் திமுகவில் இருந்து வை கோ பிரியும் போது வைகோவுக்காக சிலர் தீக்குளித்தார்கள். ஆனால் 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் வை கோ இருந்தார். அப்பொழுது இயக்கமும் இருந்தது. அக்காலத்தில் எம்மவர்கள் திக்குளித்தவர்கள் பற்றி சொல்வதில்லை. வை கோ அவர்கள் பாரதீய ஜனதா, தமிழகத்தில் ஊடுருவதை தடுக்கத்தான் திமுகவுக்கு ஆதரவு என்று சொல்கிறார். இதே போலதானே 2004 இல் சிங்களதரப்புக்கு எதிராக போட்டியிட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இயக்கம் இருந்த காலத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் சேர்க்கப்பட்டார்
  24. ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்! ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் மாதம் வரை நிறுத்தி வைப்பதை நீட்டிப்பதாகவும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழனன்று (26) கூறினார். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு ஒருதலைப்பட்சமானதும் நியாயமற்றதும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். நான்கு வாரங்களாக நீடித்த இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளதுடன், விண்ணை முட்டும் எரிசக்தி விலைகளால் உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, உலகளாவிய பணவீக்க அச்சங்களையும் தூண்டியுள்ளது. தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. வெள்ளை வியாழக்கிழமை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால் அதன் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார். பின்னர் 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டார். எனினும், போரில் பல உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா யாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பதை ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறவில்லை. 2026 மார்ச் 23 அன்று, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார், ஆனால் இப்போது அதை 10 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். எனினும், வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள போர் இந்தப் போர், கப்பல் போக்குவரத்தைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது. இதன் விளைவாக, மசகு எண்ணெய் விலை சுமார் 40% உயர்ந்துள்ளது, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலை கடுமையாக அதிகரித்துள்ளது, மேலும் உணவு உற்பத்திக்கு இன்றியமையாத நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களின் விலை சுமார் 50% உயர்ந்துள்ளது. ட்ரம்ப்பின் நம்பிக்கையூட்டும் மதிப்பீட்டிற்கு மத்தியிலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைத் தாக்கித் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தது. அது வளைகுடா நாடுகளையும் தாக்கியதுடன், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% கொண்டுசெல்லும் ஹார்முஸ் நீரிணை வழியாக மத்திய கிழக்கு எரிபொருள் ஏற்றுமதியையும் திறம்படத் தடுத்துள்ளது. 10,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது குறித்து பென்டகன் பரிசீலனை பேச்சுவார்த்தைகளில் நல்லெண்ண நடவடிக்கையாக, பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சில கப்பல்கள் உட்பட 10 எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரான் அனுமதித்ததாக ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். அதேநேரம், மத்திய கிழக்குக்கு 10,000 வரையிலான மேலதிக தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து பென்டகன் பரிசீலித்து வருவதாக, அத்துறையின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்த விடயம் தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் கருத்துக்கான கோரிக்கைக்கு பென்டகன் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரோந்துப் பணிகளுக்காக ஆளில்லா ட்ரோன் வேகப் படகுகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது என்று பென்டகன் கூறியுள்ளது. ஒரு தீவிரமான மோதலில் இதுபோன்ற படகுகளைப் பயன்படுத்துவதை வொஷிங்டன் உறுதிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் நிராகரிப்பு பாகிஸ்தான் மூலம் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்ட 15 அம்ச அமெரிக்க முன்மொழிவை, ஈரானின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஈரானின் உச்ச தலைவரின் பிரதிநிதி ஆகியோர் புதன்கிழமை விரிவாக ஆய்வு செய்ததாகவும், அது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு மட்டுமே சேவை செய்வதாக அவர்கள் கருதியதாகவும் ஒரு ஈரானிய அதிகாரி கூறியுள்ளார். எனினும், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கலைப்பது, அதன் ஏவுகணைகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் நீரிணையின் கட்டுப்பாட்டைத் திறம்பட ஒப்படைப்பது வரையிலான கோரிக்கைகளை அந்த முன்மொழிவு உள்ளடக்கியிருந்ததாக ஆதாரங்களும் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத் மூலம் அனுப்பப்படும் செய்திகள் வழியாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே “மறைமுகப் பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாகவும், துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட பிற நாடுகளும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் கூறினார். போர் தொடங்கியதிலிருந்து ஈரான் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கியுள்ளது; எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உத்தரவாதங்கள், இழப்புகளுக்கான இழப்பீடு மற்றும் நீரிணையின் மீதான முறையான கட்டுப்பாடு ஆகியவற்றை அது கோரியுள்ளது என ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று அது இடைத்தரகர்களிடம் கூறியதாக பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை அலை வியாழக்கிழமையன்று, ஈரான் இஸ்ரேல் மீது பல அலைகளாக ஏவுகணைகளை ஏவியது. டெல் அவிவ், ஹைஃபா மற்றும் மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு பாலஸ்தீனிய நகரம் உள்ளிட்ட பிற பகுதிகளையும் அது தாக்கியது. குறைந்தது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாவது டெல் அவிவ் மீது தாக்கியது, மற்றவை சிறிய வெடிபொருட்களை சிதறடிக்கும் கொத்து ஏவுகணைகளைக் கொண்டிருந்தன, அவை வீடுகளையும் கார்களையும் சேதப்படுத்தியதாக இஸ்ரேலின் இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வடக்கு நகரமான நஹாரியா மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அம்பியூலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. ஈரானில், தெற்கு நகரமான பந்தர் அப்பாஸ் மற்றும் தெற்கு நகரமான ஷிராஸின் புறநகரில் உள்ள ஒரு கிராமம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ஃபஹானில் உள்ள ஒரு பல்கலைக்கழக கட்டிடம் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2026/1470134
  25. தமிழ்நாட்டின் ஈழ அரசியலை பொறுத்தவரை பழ.நெடுமாறனின் ஈழ அரசியலை விட, சீமானின் ஈழ அரசியலை விட வைகோ அவர்களின் அரசியல் பரவாயில்லை என்பது என் கருத்து. அது மட்டுமல்லாமல் நன்றிக் கடனும் உண்டு. இன்னுமொன்று..... அல்லது என் கேள்வி? தமிழ்நாட்டு அரசியலில் யாரிடம்,எந்த கட்சியிடம் பச்சோந்தி தனம் இல்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்? தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே ஒரு குறளி வித்தை அரசியல் நிறைந்த நாடு. அந்த அரசியல் காற்று ஈழத்தமிழ் மண்ணில் வீசக்கூடாது என்பது என் நீண்ட கால பிரார்த்தனை.
  26. அனுதாபம் எப்படி பெற வேண்டும் என்பதை இனவாத சிங்களத்திற்கு சொல்லிக்கொடுத்ததே இஸ்ரேல் அமைப்பு என்பதை நான் அறிந்துள்ளேன். உதாரணத்திற்கு ஈழத்தில் எமக்கு எதிராக நடந்த கொடுமைகளும் அழிவுகளும் நன்கு தெரியும். அதை யார் செய்தார்கள் என்பதும் நன்றாக எமக்கு தெரியும். ஏனெனில் நாம் அந்த நாட்டவர்கள்.நாம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தோம்.அதே விடுதலை இயக்கம் சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.ஏன் எப்படி எதனால் என நம்மவர்கள் ஆராய தயாரில்லை.செய்யாத குற்றத்திற்கும் தண்டனை அனுபவித்ததுதான் எமது விடுதலைப்போராட்டம். சர்வதேச ரீதியில் எமது விடுதலை போராட்ட இயக்கத்தை முதலில் பிள்ளையார் சுழி போட்டு தடை செய்தது அமெரிக்காதான்.அதே அமெரிக்காவை இன்று இங்கே எல்லோரும் ஆதரிக்கின்றோம். கால சுழற்சி வேகமானது மட்டுமல்ல விசித்திரமானதும் கூட...
  27. கதையை மிக விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்த்தியுள்ளீர்கள். இறுதிப் பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பழிவாங்குதல் சட்டப்படி குற்றம் என்பதை உறுத்தியது. நீங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டத்திற்கப்பாற்பட்ட தீர்வைக் கொடுத்து அதற்கான தண்டனையக் கதையின் நாயகர்களுக்குக் கொடுக்காமல் அது தவறு, தண்டிக்கப்படலாம் என்ற தொனியில் முடித்தது அருமை. இரண்டாம் பாகத்துக்கான வாடை தெரிகிறது.
  28. றியாஸ் குரானாவின் விமர்சனங்களில் எந்த வகையான சமரசமும் என்றும் இருப்பதில்லை. இந்தக் கட்டுரையும் அப்படியான ஒன்றே. ஓரிரு வருடங்களின் முன்னர் இவருடைய இளையராஜாவின் இசை பற்றிய ஒரு விமர்சனத்தை நான் இங்கு களத்தில் பகிர்ந்தேன் என்று நினைக்கின்றேன். விமர்சனம் எவ்வளவு கறாராக எழுதப்பட்டாலும், றியாஸின் மொழியில் இருக்கும் பண்பாடு கவனிக்கத் தக்கதும், மெச்சத் தக்கதும் ஆகும். இவ்வாறான மொழிநடையில் எழுதப்படும் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் இல்லாமல், நையாண்டிகள் இல்லாமல், மேம்போக்கான ஒற்றை வரி நிராகரிப்புகள் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விமர்சனப் போக்கை உருவாக்குகின்றன. ஜெயமோகன் இந்துத்வா அமைப்புகளின் ஒற்றைப்படையான அரசியலுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்தாலும், அவரது ஆக்கங்கள் ஒரு ஒற்றை தன்மையுள்ள சமுதாயத்தை, ஒரே பண்பாட்டையே வலியுறுத்துகின்றன என்பது என் அனுபவமும், விமர்சனமும் ஆகும். இந்தியா, இந்தியர்கள் என்பதை ஒரு அலகாகக் காட்டும் அவரது நிலைப்பாடு அரசியலுக்காகவோ அல்லது ஆன்மீகத்துக்காகவோ அவரை ஒரு முன்னோடியாக கருதும் நோக்கங்களை ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் செய்தது. ஆனாலும், இவரது மொழிவளமும், அழகியலும், ஆக்கங்களில் வெளிப்படும் தனிமனித தவிப்புகளும் இவரை எங்கள் தலைமுறையின் மிகச்சிறந்த தமிழ் படைப்பாளிகளில் ஒருவராக்கியது. விக்கி பக்கங்களுக்கு மாற்றாக தமிழ் விக்கி என்னும் ஒன்றை உருவாக்கியுள்ளார். விக்கியில் எவரும், எதுவும் எழுதலாம் என்னும் போக்கால், திட்டமிடப்பட்டே பல மோசடிகள் செய்யப்படுகின்றன என்பதை எதிர்த்தே தமிழ் விக்கி ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை தமிழ் விக்கி சரியான திசையில் செல்வதாகவே எனக்குப்படுகின்றது. ஞானபீடம் விருது போன்றவற்றை வழங்கும் அமைப்புகள் தமிழ் மொழிக்கு நியாயம் செய்யவில்லை என்பதே என் எண்ணமும் ஆகும். தகுதியற்ற வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்கப்படுவதற்கு முன்னர் பல வருடங்களாக தமிழுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளையும், படைப்புகளையும் தமிழர்களும் கண்டு கொள்ளவில்லை, உலகமும் கண்டு கொள்ளவில்லை. நாமே நமக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்வது சரியான ஒரு மாற்றுவழியாகவே தோன்றுகின்றது. பணத்துக்காக, இலாபங்களுக்காக சமரசம் செய்து கொள்ளும் படைப்பாளிகள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். அதே போலவே, எந்த சமரசமும் இன்றி, தங்கள் அழகியலை, தங்கள் அரசியலை முன்வைப்பவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். இன்னொரு புதிய விருதால், அது எவ்வளவு தான் பணப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தாலும், இலட்சியவாதிகள் மாறப் போவதில்லை. ஈழத்து இன்றைய படைப்பாளிகளான சயந்தனையும், அனோஜனையும், அகரமுதல்வனையும் நான் அறிந்து கொண்டது ஜெயமோகனின் கட்டுரைகளில் இருந்தே. பேராசிரியர் சிவத்தம்பி, மு. தளையசிங்கம் என்று பல முன்னோர்கள் பற்றிக் கூட இவர் எழுதிய கட்டுரைகளே அவர்கள் மேல் பார்வையை திருப்பியது. அது போலவே இந்த விருதும் அமையும் என்று நம்புகின்றேன். ஜெயமோகன் முன்னிறுத்தும் ஒற்றை பண்பாட்டை, ஒரு தேசத்தை, அவரது ஆன்மீகத்தை என்றும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. விதி என்றும், கர்மா என்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
  29. 20 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் கோயில் ஒன்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாங்கள் கதைக்கும்போது இடையில் பிரெஞ்சில் ஏதோ கதைத்துவிட்டேன். அங்கிருந்த தாய்லாந்துக்காரர் எம்மருகில் வந்து நீங்கள் பிரான்சிலிருந்து வந்துள்ளீர்களா என்று பேசுக் கொடுத்தார். நாமும் பிரெஞ்சு பேசும் ஒருவரைச் சந்தித்த ஆவலில் அவரிடம் பேசினோம். அப் பிரதேசத்தில் பார்த்து ரசிக்கக் கூடிய இடங்களைப் பற்றிய தகவல்களைக் கூறினார். கடைசியாக, இங்கு கல் பதித்த தங்க நகைகளை மிகவும் மலிவாக ஒரு இடத்தில் வாங்கலாம் என்றார். போதாக்குறைக்கு எமது ஆட்டோ ஓட்டுனரிடம் ஏதோ அவர்கள் மொழியில் கூறி அனுப்பி வைத்தார். நாங்களும் சில இடங்களைப் பார்த்துவிட்டு இறுதியாக ஓட்டுனரிடம் நகைக்கடைக்குப் போகலாம் என்றோம். அது ஒரு ஒதுக்குப் புறமாக இருந்தாலும் மிகப் பெரிய கடை. ஏராளமானவர்கள் நகை வாங்குவதைப் பார்க்க முடிந்தது. நாமும் இரண்டு கல் வைத்த நகைகளை வாங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். அன்று இரவு அடுத்தநாள் உலாத்தலைத் திட்டமிடுவதற்காக வழிகாட்டிப் புத்தகத்தைப் புரட்டியபோது எமக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சற்றும் பிசகாமல் அப்படியே அதில் எழுதப்பட்டிருந்தது. அன்று முழுவதும் நித்திரையில்லை. அடுத்தநாள் முதல் வேலையாகக் காலையில் நகைகளை மதிப்பிடும் அலுவலகம் ஒன்றைக் கண்டு பிடித்து நகைகளைப் பரிசோதித்தோம். நல்ல வேளை அவை உண்மையான தங்கமும் கற்களும் என்று அத்தாட்சிப் பத்திரம் தந்தார்கள். ஆனாலும் எதிர்பார்த்த இலாபம் இல்லை.
  30. அதையேன் கேக்கிறியள்… பெப்ரவரி கடைசியில் ஆரம்பித்தால்… ஏப்ரலில் கடைசி ரெண்டு வாரம் விட்டு..மே மாசம் முழுவதும், யூன் 3ம் கிழமை வரைக்கும் எனக்கு உதுதான் அலுப்பு. மூன்று வகை மரங்களின் மகரந்தம் எனக்கு வைக்கோல் காய்ச்சல் hay fever ஐ தருகிறது. மருந்து எடுத்தால் குறையும்…. ஆனால்…. நாள் பூராவும் நோய் வந்த கோழி அல்லது சொம்பி போல் சோர்வாக திரிய வேண்டும். எல்லாவற்றையும் பாவித்தாயிற்று😂. ஜாமீன் கடலிலேயே இல்லையாம் எண்ட நிலை இப்போது. Non drowsy மருந்தை போட்டாலும்…நித்திரை மட்டும்தான் வராது, ஆனால் சோர்வு அப்படியே உள்ளது என்பது என் அனுபவம்.
  31. ஒவ்வாமையுடனும் ஆஸ்மாவுடனும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். ஓட்டப் பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஆஸ்மா முற்றாக மறைந்து விட்டது. ஒவ்வாமை ஓரளவு உள்ளது. பூத்திருக்கும் வயல் ஓரங்களில் தும்மாமல் ஓட முடிகிறது. விஞ்ஞான ரீதியில் ஒவ்வாமைக்கும் ஓட்டத்துக்கும் தொடர்பு இருக்குமோ அல்லது வேறு காரணங்களாலோ தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தடவை ஊசி போட்டிருந்தேன். தொடர்ந்து ஊசி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். நான் பாவிப்பது levocetrizine. 5 கிராம் குளிசையில் பாதியை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எடுப்பதுண்டு. மார்ச் - ஏப்ரல் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பாதிக் குளிசை எடுப்பேன்.
  32. இரானுக்கு மேலும் 10 நாள் கால அவகாசம் - பாகிஸ்தான் பற்றி டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரான் விவகாரத்தில் ஒரு புதிய 'கால அவகாசத்தை' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை இரவு அறிவித்தார். "இரானின் எரிசக்தி நிலையங்கள் மீது அடுத்த 10 நாட்களுக்கு எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக திங்களன்று, இது தொடர்பாக அவர் ஐந்து நாட்கள் கொண்ட ஒரு 'காலக்கெடுவை' அறிவித்திருந்தார்; அந்தக் காலக்கெடு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. "இரான் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அதன் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளோம். இந்த அவகாசம் ஏப்ரல் 6, 2026 அன்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும்," என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அவர் கூறினார். "போலிச் செய்தி ஊடகங்களின் (Fake News Media) கூற்றுகளுக்கு மாறாக, எங்களது பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன," என்று டிரம்ப் எழுதியிருந்தார். முன்னதாக திங்களன்றும், இரானுடனான தனது பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் பயணித்து வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். இரான் இந்தக் கூற்றை மறுத்ததுடன், பேச்சுவார்த்தைகள் தங்கள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் கூறியது. இரானின் 'பரிசு' பட மூலாதாரம்,Gallo Images/Orbital Horizon/Copernicus Sentinel Data 2025 முன்னதாக வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி), வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இரானிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த ஒரு 'பரிசு' குறித்து டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார். "இரானில் உள்ள சரியான நபர்களுடன் நாங்கள் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு ஒரு பரிசை அளித்தனர். 'உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில், 8 பெரிய கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல நாங்கள் அனுமதிக்கிறோம்' என்று இரான் எங்களிடம் கூறியது," என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் கொடிகளைப் பறக்கவிட்ட 8 கப்பல்கள் உண்மையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றன என்ற தகவல் தனக்குப் பின்னர் கிடைத்ததாக டிரம்ப் கூறினார். மேலும் இரண்டு கப்பல்களைச் செல்ல அனுமதிக்கப் போவதாக இரான் பின்னர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். முன்னதாக புதன்கிழமை, நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதி அளித்து வருவதாக இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியிருந்தார். "சீனா, ரஷ்யா, இந்தியா, இராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல நாங்கள் அனுமதி வழங்குகிறோம்," என்று அராக்சி தெரிவித்தார். அராக்சியின் இந்தக் கூற்று குறித்த தகவலை, மும்பையில் உள்ள இரானியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒரு சாத்தியமான இடமாகப் பாகிஸ்தானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதை இங்கு நினைவுகூரலாம். "மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் முழு ஆதரவை அளிக்கிறது," என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை மாலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஷாபாஸ் ஷெரீப்பின் இந்த அறிக்கையை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்திருந்தார். இதிலிருந்து, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் தயாராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. எண்ணெய் விலையில் லேசான சரிவு பட மூலாதாரம்,Agoes Rudianto/Anadolu via Getty Images பிபிசி நியூயார்க் பிசினஸ் செய்தியாளர் நடாலி ஷெர்மனின் கூற்றுப்படி, இரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பது குறித்த டிரம்பின் சமூக ஊடகப் பதிவிற்குப் பிறகு எண்ணெய் விலைகள் சரிந்தன. அமெரிக்கப் பங்குச் சந்தை மூடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் கூறினார். போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக் கூடிய பற்றாக்குறை குறித்த கவலைகளால் வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்திருந்தன, ஆனால் டிரம்பின் சமூக ஊடகப் பதிவிற்குப் பிறகு விலைகள் மீண்டும் சரிந்தன. பிரென்ட் கச்சா எண்ணெயின் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய் சுமார் $108-ல் முடிவடைந்தன, ஆனால் டிரம்பின் அறிவிப்பிற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுமார் $1 சரிந்தன. தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரும் பங்கைக் கொண்ட நாஸ்டாக் குறியீடு, சுமார் 2.4% சரிந்தது. இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம், அமெரிக்காவில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு தீர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான சரிவு ஆகும். சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான ஒரு வழக்கில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஜூரி மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்களை குற்றவாளிகளாக அறிவித்து, மனுதாரருக்கு ரூ. 56.5 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டது. அமெரிக்க சந்தைகள் அக்டோபரில் இருந்த சமீபத்திய உச்சத்திலிருந்து 11% சரிந்துள்ள. அவை அதிகாரப்பூர்வமாக சரிவு நிலைக்குள் நுழைந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வியாழக்கிழமை வர்த்தக அமர்வில் எஸ்&பி 500 குறியீடு 1.7% சரிந்தது, அதே நேரத்தில் டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியிடு 1% சரிவுடன் முடிவடைந்தது. https://www.bbc.com/tamil/articles/ce3dnxprg73o
  33. திருவாரூர் தேர் அழகு . .......! 🙏
  34. போன தடவை கேட்க மறந்திட்டன்… இப்ப இது அவசியமாய் இருக்கு.. இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம் இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுது பாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுது பகுதிநேர உழைப்பொன்று தேடப் போறன் பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுது ஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம் ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம் ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு.. தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும் போயிலையை நட்டாலும் விலை போகாதாம் கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற வாய்க்கு இவை ஏன் அப்பிள் நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில் பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சு பாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம் பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள் போனென்று கேட்கிறாய் ஆச்சி டிக் –ரொக் போடப்போறன் ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய் அயலட்டையெல்லாம் உதுதான் தொழில் ஆயிரக்கணக்கில் காசுவருதாம்.. ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும் ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுது அதுக்கும் வழியிருக்கு…மேக்கப் படிப்பது.. அப்பன் உன்னை நம்பி அயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன் அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடி அப்பிள் போன்தான்..வேணும்தம்பி அதை மறக்காமல் அனுப்பிவிடு…
  35. அத தெரண தமிழ் கருத்துப் படங்கள்.
  36. போர் காலத்தில் பொக்கற் ரேடியோ பிரபலம். அப்துல் ஹமீதின் பாட்டுக்கு பாட்டு தொடக்கம் செய்திகள் வரை (பி பி சி இழுத்ததோ நினைவில்லை.) கேட்டோம். சைக்கிள் பெடலை அடித்து டைனமோ மின்சாரத்தில் வானொலி கேட்ட அனுபவமும் உண்டு. குண்டு வீச்சு விமானங்களில் நடைபெறும் உரையாடலை 1987 காலத்திலேயே கேட்ட நினைவு உண்டு. சிங்களம் விளங்குவது இல்லை. ஆனால், எவ் எம் அலைவரிசையில் உரையாடலை கண்டுபிடித்துவிட்டாலே பெரிய சந்தோசம் தான். அந்நேரங்களில் சிங்களம் தெரிந்தவர்கள் அல்லது தெரியும் என சொல்பவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவு இல்லை. அவர்கள் என்ன சொல்லப்போகின்றார்கள் வாயை பார்த்துக்கொண்டு நிற்போம். அந்த காலங்களில் எவ் எம் அலைவரிசையில் விமானங்களின் உரையாடலை கேட்பது இலங்கை அரசினால் தண்டனைக்குரிய குற்றம் என நினைக்கின்றேன்.
  37. வழக்கறிஞர் எப்படி திட்டலாம்? அடுத்து என்ன செய்யலாம் என்றல்லவா யோசிக்க வேண்டும். வரும் நாள் செல்லும்.
  38. யாழில் உள்ள பலர் யூத வெறுப்பாளர்கள் என்பதை நான் அறிவேன். அதன் பின்னால் உள்ள காரணங்களையும் நான் புரிந்து கொள்கிறேன். முரண் நகையாக, அதே ஆட்களில் சிலர் இலங்கை முஸ்லிம்கள் மீது பொது பல சேன செய்த அட்டூழியங்களை நான் எதிர்த்த போது என்னை பழித்தவர்களாக இருந்தனர். மேலும் சிலர் யசீதிகள் மீது ஐசில் செய்த அட்டூழியங்களை கண்டும் காணதவராய் இருந்தனர். ஐம்பதை தொடப்போகும் எனக்கு, வாழ்க்கை கற்றுத்தந்த முக்கிய பாடங்களில் ஒன்று, இந்த உலகில் நாம் அறச்சீற்றம் கொள்வது கூட தேர்ந்த எம் நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே என்பதே. நான் கூட 2009 மேயில் அடைந்த மன உளைச்சல் போல் வேறு எந்த போருக்கும், மனித அழிவுக்கும் அடையவில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்து என வரும் போது இனம், மதம், நிறம் பார்க்காமல் உதவும், அப்படி உதவுபவர்களை தடக்கி விழுத்தும் எண்ணம் தவறு என்ற புரிதல், மனித தன்மை இன்னும் தமிழர்களிடம் எஞ்சி உள்ளது. அல்லது உள்ளது என நான் நம்ப விரும்புகிறேன். நிற்க, அண்மையில் யூத தன்னார்வ நிறுவனம் ஒன்றின் 5 முதலுதவி வண்டிகள் இலண்டனில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தன்னார்வ அம்பூலனன்ஸ் சேவை யூதர்களால் நடத்தப்பட்டாலும் அது எல்லோருக்கும்மானது. சில வருடங்கள் முன் வட மேற்கு இலண்டனில்…வீதியால் போகும் போது நடைபாதையில் ஒரு நடுத்தர வயது ஆசிய பெண் தடுக்கி விழுந்தார், என் கண்முன்னே. அது பிரெக்சிற்ரால் இலண்டனில் ஓட்டுனர் தட்டுப்பாடு இருந்த காலம். 999 ஆம்புலன்ஸ்சுக்கு அடித்தால், வண்டி அனுப்ப 3 மணி நேரம் எடுக்கும் என்றார்கள். அந்த பெண் வலியால் கதறி கொண்டு இருக்கிறார். அவரை விழுந்த இடத்தில் இருந்து அரக்க கூடாது அது உடைவுகளை மேலும் சிக்கலாக்கும் என்பது எனக்கு முதலுதவி பயிற்சி சொல்லி தந்த பாடம். விழுந்த காலமோ குளிர் மைனசில் இருக்கும் காலம். தரையில் கிடப்பதும் ஐஸ் கட்டியில் கிடப்பதும் ஒன்றேதான். மேலும் 999 க்கு அழைப்பை எடுக்கிறேன். அவர்களுக்கும் விபரீதம் விளங்கினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. அப்போது இன்னொரு வெள்ளை இன பெண் நாயோடு வந்தார். என்ன என என்னிடம் விபரங்களை கேட்டு விட்டு, பட பட என தன் போனில் இருந்து அம்பூலனசுக்கு போன் அடித்தார். 5 நிமிடத்தில் அம்பூலனஸ் வந்தது. வீழ்ந்து கிடந்த ஆசிய பெண்ணை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனது. யார் இவர்கள் என கேட்டேன், தனியார் அம்பூலன்ஸ் எண்டால் செலவை யார் ஏற்பது என எண்ணியபடியே… இது ஒரு யூத தன்னார்வ அமைப்பு. மத, இன அடையாளம் இன்றி யார் உதவி என அழைத்தாலும் வருவார்கள் என சொல்லி சென்றார் அந்த பெண்மணி. அந்த 5 அம்பூலன்ஸ்தான் அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் தீக்கிரையானது. (எதுவும் கற்பனை அல்ல)
  39. வீதியோரம் . மலர் . ........... 14. வீட்டுக்குள் சுஜிதா இன்னமும் பயம் தெளியாமல் குத்துக்காலிட்டு தரையில் அமர்ந்திருக்கிறாள்.மணிமேகலை மூவருக்கும் சுட சுட தேநீர் போட்டு எடுத்து வந்து அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து பருக்குகிறாள்.தொண்டைக்குள் தேநீர் சூடாக இறங்கியதும் அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள். அப்போது விநோதன் அவளிடம் உனக்கு அவர்களை முன்பே தெரியுமா என்று வினவ ஓம் என்று தலையாட்டுகிறாள். எப்படி என்று கேட்க அவர்கள் என் அப்பாவின் நண்பர்கள். அப்ப நான் சின்னப் பிள்ளை. அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள்.வீட்டுக்கு வரும்போது சாப்பாட்டு சாமான்கள், இனிப்புகள்,சொக்கிலேட் எல்லாம் எனக்கும் தம்பிக்கும் கொண்டு வந்து தருவார்கள். இவர்கள் வந்தால் அப்பாவின் கையில் நிறைய காசு இருக்கும். — சரி பிறகு….. — அப்படித்தான் அன்றும் இவர்கள் வந்தார்கள். வந்து அப்பாவிடம் வேறொரு ஊருக்கு போய் வேலை செய்யவேண்டும் அங்கு வீடு எல்லாம் இருக்கு நீ முதல்ல போய் நிலமையைப் பார்த்து பின் வந்து இவர்களைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று சொன்னவர்கள். சரியென்று அப்பாவும் புறப்பட்டும் போனவர். பின் இரண்டு மூன்று மாதங்களாய் ஒரு தகவலும் இல்லை. இவர்கள் இடைக்கிடை வந்து சாமான்கள்,பணம் எல்லாம் அம்மாவிடம் குடுத்துவிட்டு போவார்கள். அண்டைக்கு இவர்களோடு புதுசாய் ஒருவர் வந்தவர். இப்ப என்னை முதலாய் திரத்தினவர் அவர்தான். அவர் என்னைப் பார்த்து நீ காம்புக்கு வாறியா அங்கு சின்ன சின்ன வேலைகள் செய்ய எமக்கு ஆட்கள் தேவை என்று சொல்ல அம்மா குறுக்க வந்து அவ சின்னப்பிள்ளை இதெல்லாம் வேண்டாம் என்று தடுத்தவ.மற்றவர்களும் வேண்டாம் அன்னை, இது எங்கள் நண்பனுடைய குடும்பம் விட்டுட்டு வாங்க போகலாம் என்று சொல்ல அவர் கேட்கவில்லை. உடனே அம்மாவை வீட்டுக்குள் கூட்டிப்போய் என்ன சொன்னாரோ தெரியாது பின் அம்மா வெளியில் வந்து பிள்ளை நீ இப்ப இவர்களோடு காம்புக்கு போ, நீ விரும்பிய நேரம் உன்னை இங்கு கூட்டி வருவார்கள் நானும் இடைக்கிடை அங்கு வந்து பார்ப்பேன் என்று அழுதுகொண்டு சொல்கிறா. இப்ப நீ போகாவிட்டால் அம்மாவையும் தம்பியையும் சுடுவன் என்று சொல்லுறாண்டி . பிறகு நான் இவர்களுடன் காம்புக்கு வந்தேன். அங்கு வந்தது முதல் சமையல் வேலைகள் எல்லாம் செய்ய வைத்தார்கள். பிறகு தப்பு தப்பான வேலைகள் எல்லாம் செய்ய சொன்னார்கள் செய்யாட்டி அடிப்பார்கள்.ஒருநாள் நான் காட்டுக்குள்ளால் வெளியே ஓடிவந்து ரோட்டில் நடந்து வரும் போதுதான் அந்த ஜீப்பில் வந்தவர்கள் என்னையும் தூக்கி கொண்டு வந்து ஒரு வீட்டில் வைத்து என்று சொல்ல மேகலை தடுத்து அது வேண்டாம் அப்புறம் சொல்லு என்கிறாள், பிறகு இன்னொரு ஜீப்பில் வந்தவர்கள் அவர்களிடம் என்னவோ சொல்லி அனுப்பி விட்டு என்னையும் அந்த ஜீப்பில் ஏற்றிக் கொண்டுவர அதற்குள் யுகேந்திரன் அழுதுகொண்டு இருந்தவன். பிறகுதான் உங்களையும் ஏற்றிக் கொண்டு வந்தவர்கள். சரி நீ போய் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டுட்டு படு….. இதெல்லாவற்ரையும் மறந்துவிடு. ஒருத்தரிடமும் ஏன் யுகேந்திரனிடமும் கூட சொல்ல வேண்டாம். இனி ஒரு பயமுமில்லை ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். நல்லாப் படிச்சு முன்னுக்கு வரவேண்டும்.என்று சொல்லிவிட்டு விநோதன் எழுந்து செல்ல கூடவே மேகலையும் வருகிறாள். — அப்பாடா ஒருமாதிரி எல்லோருடைய பிரச்சினைகளும் தீர்ந்தமாதிரி இருக்கு, இல்லையா விநோ ….. —- அதெப்படி சொல்ல முடியும் மேகலை…..எப்பவும் நாங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். “ஒருபோதும் விதைகள் உறங்குவதில்லை அதுபோல்தான் குற்றங்களும்” இதெல்லாம் எங்களுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் சட்டங்களுக்கு மனிதாபிமானம் கிடையாது…..புரிந்து கொள் ….. —-- எப்படி ….. —-- முதலையால் கை கால் இழந்தவன் இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறான். இந்த மூவரையும் கொன்றது எங்கள் மூவருக்கும் தெரியும்…. ஒருத்தருக்கு தெரிந்தால்தான் அது இரகசியம்….சுஜிதா இப்ப கொஞ்சம் வளர்ந்த பிள்ளைதான் ஆனால் ஒருநாளோ ஒரு வருடமோ பத்து வருடமோ இன்னும் வளர்ந்து காலவோட்டத்தில் பயம் தெளிய யாரோடாவது வாய் தடுமாறி உளறவும் கூடும். இப்ப யுகேந்திரனுக்குத் தெரியாதுதான் ஆனால் ஒரு காலத்தில் தெரியவும் வரலாம். அப்போ அவனுக்கு எங்கள் மீது கோபம் வரலாம்…அதுதான் எந்நேரமும் நாங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். — சும்மா போ விநோ நீ அதை இதை சொல்லி கலவரப் படுத்திறதே உனக்கு வேலையாய் போச்சு ….. . காட்டுக்குள் யானைகளின் மரங்கள் முறிக்கும் சத்தமும், பிளிறலும் கேட்டு, அவை அருகில் எங்கோ இருப்பதை உணர்த்துகின்றன . ...... விநோதனும் சைக்கிளை எடுத்து அந்த வெள்ளை வானில் போட்டு விட்டு அதை ஒட்டிக்கொண்டு காட்டுப்பாதையால் போகிறான்...........! சுபம் …..! படங்கள் உபயம்: கூகுள். யாவும் கற்பனை …..! யாழ் அகவை 28 காக ஆக்கம் சுவி…..!
  40. வீதியோரம் . மலர் . .......... 13. இந்த சில மாதங்களில் “வீதியோரக்கடை”யடியில் பல மாற்றங்கள் உண்டாகி விட்டன. மின்சார சபையால் விகாரையில் இருந்து கடையையும் தாண்டி ஒரு மைல் நீளத்துக்கு வீதியை அகலமாக்கி வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. அதனால் கடைக்கும் அவர்களது வீட்டுக்கும் குளத்தின் கரைகளிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனால் அவர்கள் வீட்டின் அருகில் ஒரு பெரிய வட்டமான கிணறு ஒன்றும் வெட்டி மோட்டார் போட்டு பக்கத்தில் உயரத்தில் தண்ணீர் தொட்டி அமைத்து விட்டிருந்தார்கள். அதில் இருந்து குழாய்கள் பொருத்தி சமைக்க, குடிக்க, குளிக்க அதற்கொரு அறை என்று எல்லாம் அமைத்திருந்தனர். மேலும் ஆட்களை வைத்து பின்னால் ஐந்து ஏக்கர் வரை காடுவெட்டி நிலமெல்லாம் எரித்து டிராக்ட்டரால் சமன் படுத்தி விட்டிருந்தார்கள்.இனி அதில் விவசாயத்துடன், வாழை மற்றும் பல பயிர்கள் பயன்தரு பழ மரங்கள் எல்லாம் நட்டு வைத்திருந்தார்கள். இப்போதெல்லாம் அங்கு தப்பான காரியங்கள் ஒன்றும் இருப்பதில்லை.முன்பு மது வித்த பையனும் அங்கு வந்து கடையில் எடுபிடி வேலைகள் செய்து வருவதால் அவனுக்கும் ஒரு சம்பளம் போட்டுக் குடுக்கிறார்கள். வழக்கமாய் போய்வரும் வழியில் அண்ணாச்சியும் வந்து இளைப்பாறிப் போகிறார்…… அன்று காலையில் சுஜிதா மேகலையிடம் அம்மா இன்று பாடசாலையால் பக்கத்துக் கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப் போகிறோம். சில நேரம் நான் வரத் தாமதமாகலாம் என்று சொல்லி விட்டு ஸ்கூட்டியில் வெள்ளை யூனிபார்முடன் போகிறாள். யுகேந்திரனும் அந்த இளஞனுடன் பணம் போடுவதற்கு வங்கிக்கு போயிருக்கிறான். விநோதன் வீட்டுக்குள் ஏதோ வேலைகள் செய்து கொண்டிருக்கிறான். மணிமேகலை மட்டும் கடைக்குள் உணவு சமைப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறாள். அப்போது மிக வேகமாய் சுஜிதா ஸ்கூட்டியில் ஓடிவந்து கடைக்குமுன் அதை விழுத்திவிட்டு உள்ளே ஓடிவந்து அம்மா என்னைக் காப்பாத்துங்கோ, அவங்கள் என்னைத் திரத்திக் கொண்டு வாறாங்கள். என்று கத்திக் கொண்டு அவள் பின்னால் கோழிக்குஞ்சுபோல் ஒட்டிக்கொண்டு நிக்கிறாள் பயத்துடன். மேகலையும் நீ பயப்பிடாதை, யாரடி அது துரத்தி வாறது என்று சொல்லி விநோ இஞ்சை ஒருக்கால் வாங்கோ என்று பின்னால் பார்த்து குரல் கொடுக்கிறாள். அப்போது ஒரு வெள்ளை வான் வந்து அரை வட்டமடித்து நிக்கிறது. அதிலிருந்து மூன்றுபேர் இறங்கி கடைக்குள் ஓடி வருகிறார்கள். நீ மாறன் மகள் சுஜிதாதானே என்று கத்த அது நானில்லை என்று சொல்லிக்கொண்டு அவள் பின்னால் ஓடுகிறாள். அவர்களில் ஒருவன் டேய் இவள் சுஜிதாதான், நல்ல வடிவா வளர்ந்து விட்டாள் விடாதையுங்கோடா பிடியாடா அவளை இனி எங்களுக்கு கொண்டாடட்டம்தான் என்று கத்திக் கொண்டு துரத்துகிறான். மற்றவன் அவள் மட்டுமென்ன இவளும் செமையாதான் இருக்கிறாள்…… பொறுடா இவளைப் பிறகு பார்க்கலாம் முதல்ல அவளைப் பிடிப்பம் வாடா என்று முன்னால் ஓடியவனைத் தொடர்ந்து இருவரும் ஓடுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஓடிய சுஜிதா வீட்டை அடைந்து கதவைத் திறக்க முயல அது திறபடவில்லை, உள்ளிருந்து விநோதன் சுஜிதா நீ பயப்பிடாதே நேராக காட்டுக்குள் ஓடு, பின்னால் திரும்பிப் பார்க்காதே நான் இருக்கிறேன் என்று சொல்ல சரி அப்பா என்று சொல்லிவிட்டு காட்டை நோக்கி ஓடுகிறாள். வீட்டுக்கும் காட்டுக்கும் இடையில் கொஞ்ச தூரம் இருந்தது. முன்னால் வந்தவன் நில்லடி என்று சொல்லி அவளை நெருங்குகிறான், தொடர்ந்து பின்னால் இருவரும் ஓடிவர அவர்களுக்குப் பின்னால் மணிமேகலையும் ஓடிவருகிறாள். அவன் எட்டி அவள் முடியை பிடிக்கும் சமயம் சரியாக அவன் பிடரியில் “டப்” என்றொரு சத்தம்.அவன் வேகமாய் கால்கள் தேய திரும்பி விழுகிறான். அவன் விழுவத்தைக் கண்டு இவங்கள் இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க மிகக் குறைவான வினாடியில் அந்த இருவர் நெற்றியிலும் “டப் டப்” பொட்டு விழுந்திருக்கு. திடுக்கிட்ட மேகலை திரும்பிப் பார்க்க பின்னால் வீட்டருகில் விநோதன் சாவகாசமாய் பிஸ்டலை அதன் உறைக்குள் போட்டுக்கொண்டிருந்தான். பின்பு விறகு அள்ளும் வண்டிலை எடுத்து வந்து அவர்களை அதில் போட்டுகொண்டு சுஜிதாவிடம் இனி நீ பயப்பிடாமல் வீட்டுக்குப் போய் இரு ………இப்பொழுது இங்கு ஒன்றுமே நடக்கவில்லை சரியா என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். பின் மேகலையும் அவனுமாய் அவர்களை காட்டுக்குள் வெகுதூரம் குளகரையோடு தள்ளிக்கொண்டு போய் அவர்களது ஆடைகள் முழுவதையும் களைந்து விட்டு வெற்றுடலுடன் குளத்துக்குள் தள்ளி விடுகிறார்கள். அப்போது மேகலை, விநோதனும் அசந்திருந்த நேரத்தில் அந்த பிஸ்டல் , தோட்டா, பெல்ட் எல்லாவற்றையும் தூக்கி அந்தக் குளத்தில் தூரமாக எறிந்து விட்டு இனிமேல் இந்தக் கோதாரி ஒண்டும் வீட்டுக்குள் இருக்க வேண்டாம் என்று சொல்கிறாள் . நானும் அதைத்தான் நினைத்தேன் நீ செய்து விட்டாய் என்று விநோவும் சொல்கிறான். சற்று நேரத்தில் பல முதலைகள் கூட்டமாய் வந்து அந்த உடல்களை உள்ளே இழுத்துக் கொண்டு போகின்றன. ஆடைகளை குப்பை மேட்டில் போட்டு விறகுகளால் மூடி எரித்து விடுகிறார்கள். பின் கடையடிப்பக்கமாய் வந்து குளித்துவிட்டு வீட்டுக்குள் வருகின்றனர்.......! மலர் ............. 🦈 13.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.