Everything posted by Paanch
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
தமிழினம் சுயமரியாதோடு இன்னொரு இன அரசின் ஆதிக்கத்திற்கு அடிமைப்படாமல் தங்களைத் தாங்களே ஆட்சிசெய்து வாழ்வதற்காக வேண்டிப் போராடி உயிர் நீத்தவர்கள் மாவீரர்கள். இதனை எதிர்த்து அரசுக்குத் துணை போய், பல மாவீரர்களைக் கொல்வதில் ஈடுபட்டு, அந்தச் செயற்பாட்டில் உயிர்நீத்து துரோகியாகியவர்களும் உள்ளனர். ஆகவே மாவீரர்களுக்கு “மாவீரர் துயிலும்” இல்லம் அமைத்து நினைவேந்தல் செய்வதுபோல், துரோகிகளுக்கும் “துரோகிகள் துயிலும்” இல்லம் அமைத்து நினைவேந்தல் செய்யவைத்தால் பிரச்சனை நீர்த்துவிடும்.🧐
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
கலிபோர்னியா எரிந்தபோது தங்கள் நாயைத் தூக்கிக் கொண்டு பலபேர் ஓடினார்களே! படமோ, வீடியோவையோ ஐயா பார்க்கவில்லையா!!🐕
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
இடப்பக்கத்தில் நிற்பவர் அச்சொட்டாகத் தமிழ்சிறி தான். சனாதிபதியை எப்போ சந்தித்தார்??🤔
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
சாமியார் தன்ரை வேலையைத் தொடங்கிவிட்டார். நித்தியானந்த சாமியாரையே தூக்கிச் சாப்பிடுவார் போலத் தெரிகிறது.😳
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
நீண்ட காலத்தின் பின்பு, இப்போதுதான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. நான் கடிவாங்கியது தெருநாயிடமோ, பறைநாயிடமோ அல்ல, உயர்சாதி நாயிடம். அறியத்தந்தமைக்கு நன்றி தம்பி. இத்துடன் எந்த நாயினம் என்று அறியத்தந்தால் இன்னும் மகிழ்ந்து நன்றி கூறுவேன்.🙏🐕🕺 பாக்கர்வால் - கால்நடை பாதுகாவல் நாய் பஞ்சாரா வேட்டை நாய் புல்லி குத்தா - காவல் நாய் குல் டாங் - காவலர் நாய் வேட்டை நாய் குல் தெரியர் நாய் இமாலய மேய்ப்பு நாய் கால்நடை பாதுகாவல் நாய் இந்திய பரியா நாய்
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
டிரம்புக்கு தண்டனை கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்??
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
தெரியவில்லை ஐயா! என்னைக் கடித்ததால் வந்த இரத்தம் அதற்குள் பரவி, அது எங்கோ ஓடிப்போய் இறந்திருக்கலாம். மனிதர் கடித்தாலும் ஊசி போடவேண்டும் என்ற வைத்தியரின் ஆலோசனையை அறிந்திருக்கிறேன். அத்தனை கொடிய விடம் மனிதரிலும் இருக்கிறதாம்.😳
-
”என்ன செய்தாலும் தம்பியை (துமிந்த சில்வா வை) விடுவிக்க மாட்டோம்”
அன்று மீன் சாப்பிடும்போது தலை எனக்கு வேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடிப்பேன். ஆனால் இன்றைய உயர் நீதிமன்றம் தலையைவிட்டு வால்தான் வேண்டுமென்று அடம்பிடிக்கிறதே.!!🤔
-
யாழில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்த முச்சக்கரவண்டி!
ஓட்டோவில் பொருத்தியிருந்த அலங்காரப் பொருட்களை அகற்றியபோது அதிலிருந்த அலங்கார வைரவர் சூலமும், கிளீன் சிறீலங்கா திட்டத்தில் அகற்றப்பட்டதாம், அதனை அறியாத வயிரவருடைய வாகனம் ஆத்திரம்கொண்டு, ஓட்டோவை விபத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக மைபோட்டுப் பார்த்ததில் தெரிந்ததாக ஒரு செய்தி.😳🤔
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மகளும், யாழ் உறவுகளும் நலமே இருப்பதாக அறிந்த நிறைவால், நலிந்த வயிறு துள்ளி ஆடுதே பிரியரே! உங்கள் நிம்மதி எங்களுக்கும் மகிழ்ச்சி. 🤩 நல்லிரவு.🙌
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு அமெரிக்காவை நீதிபதியாக்க முயலும்…. குரங்கு ஆப்பம் பகிர்ந்த கதை மறந்த ஈழத்துப் பூனைகள்.!!
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
சாமியார் எத்தனை? ஏனையவர்கள் எத்தனை தரம் யோசிக்க வேண்டும்?? என்பதைக் குறிப்பிட்டால் தன்யனாவேன்.
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
என்னையும் ஒரு விசர்நாய் கடித்தது. அதன் தாக்கத்தால் நான் எவரையும் கடிக்கப் போனதில்லை ஆகவே சாமியார், தமிழ்சிறீ உட்பட மற்றும் யாழ்உறவுகள் எவரும் என்னைக்கண்டு பயப்படத் தேவையில்லை இது நடந்தது வாழைச்சேனை ஓட்மாவடியில் எனது 24வது வயதில். நாயின் கடிக்குள்ளாகி அதன் 14 பற்கள் என் கையில் ஆழப்பதிந்திருந்தன. காயங்களுக்கு காரத்திரி வைத்து, பன்றி இறைச்சி உண்ண வைத்து, தலைக்கு அரப்புப் பிரட்டி முழுகவைத்து, மட்டக்களப்பில் மாமாவுக்குத் தெரிந்த தமிழ் வைத்தியத்தியர் ஒருவரின் வைத்தியத்திற்கு ஆளாக்கப்பட்டு தேறிவிட்டதாக எண்ணிய பின்பு……
- வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
-
வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்
வித்தியானந்த கல்லூரி அதிபரை இடம் மாற்றினால்! அவர் போகும் இடத்தில் உள்ள கல்லூரியின் நிலை என்ன.??🤔
-
ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்!
அமெரிக்கர்கள் எப்பவும் புதுமையை நாடிநிற்பவர்கள். புதுவருடம் உதயத்தில் வெடி கொளுத்தி மகிழ்வது உலகெங்கும் சாதாரண விடையம். இந்த மகிழ்வை அடைவதற்குப் புதுமையாக வாகனம் ஒன்றைக் கொளுத்திப் போட்டு மகிழ்ந்துள்ளார்கள் அங்குள்ள மக்கள் அவ்வளவுதான்.💃🏼🕺
-
மாத்தறை சிறைச்சாலை சம்பவம்; மேலும் ஒரு கைதி உயிரிழப்பு!
சிறைச் சாலையில் கைதிகள் மட்டுமல்ல காவலர்கள், உத்தியோகப் பணி புரிபவர்கள் எனப் பலர் உள்ளனர். இவர்கள் எப்படித் தப்புகிறார்கள்.???🤔
-
மலரும் நினைவுகள் ..
சுவி அவர்களால் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு 9 பொட்டுக்கள் இட்டுள்ளார். இவைகளில் ஒன்றின் பொட்டை இல்லாது அழித்துவிட்டால் உண்மை புலப்படலாம். அது எந்தப் பொட்டு????, முக்கிய குறிப்பு, இதில் வயதுவந்தோர் மட்டுமே பங்குபற்றலாம்.💃🏼🕺
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
எண்சாண் உடம்பிற்கும் தலையே பிரதானம் போல, செய்திகள், பதிவுகள் போன்ற அனைத்திற்கும் தலையங்கம் பிரதானமாக இருக்கிறது. வாசகர்களுக்கு ஓரிருவரித் தலையங்கமே முதலில் அதற்கான வரைவுகளை வாசிப்பதற்கு முன்னர் அதுபற்றிய எண்ண ஓட்டங்களை உருவாக்குகிறது. வாசித்தபின்பு அவர் எண்ண ஓட்டங்களுக்கு ஒவ்வாத நிலையில் வரைவுகள் இருந்தால் அது ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திக் கலங்கடிக்கிறது. ஆகவே தலைப்புக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகிறது. தலைப்பில் குறைபாடு கண்டால், அது அதன் வரைவையே நோண்டிப் பார்த்து குறைதேடும் முயற்சிக்கும் ஆதாரமாக அமைந்துவிடுகிறது.😳
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
இப்படி ஒரு புத்திரனைப் பெற உங்கள் அப்பா அம்மா என்ன புண்ணியம் செய்தார்களோ?🙌
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
உடற்கட்டமைப்பு ஆணழகன் மற்றும் பெண் துடையமைப்பு அழகி போட்டி!
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!! ஆனால் தலையங்கத்தில் சிறிது மாற்றம் தேவை.🧐😌
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இடிஓசை கேட்கும்போது “அர்ச்சுனா அபயம்” என்று சொன்னால் இடி விழாதாம். அம்மா சொல்லி சிறுவயதில் கத்துவேன், இப்போ மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன்.😳
-
அநாகரீக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா எம்.பி.யும் தம்பிராசாவும்; கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடந்த அசிங்கம்
ஒருவரைப் பார்த்து பைத்தியம் என்று சொன்னால் தவறில்லை. ஆனால் வாய்மூடு என்று எவர் சொன்னாலும் அது மாபெரும் தவறு. இது தினக்குரல் பத்திரிகையின் கண்டுபிடிப்பு.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
போதாது. சாந்திமுகூர்த்தம் முடியட்டும் பார்க்கலாம்.🧐