Everything posted by goshan_che
- IMG_6493.jpeg
- IMG_6496.jpeg
- IMG_6581.jpeg
- IMG_6640.jpeg
- IMG_6654.jpeg
- IMG_6707.jpeg
- IMG_6831.jpeg
- IMG_6844.jpeg
- IMG_6843.jpeg
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
உங்களின் மனநிலைதான் எனக்கும். ஆனால் வயது நாற்பதின் நடுப்பகுதியை விட்டு விலக ஆரம்பித்திருப்பதால் அடுத்த கட்டங்கள் பற்றி சிந்திக்கவாவது முனைகிறேன். ஒவ்வொரு முறையும் உணர்வதுதான் ஆனால் இந்த முறை இதை கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்தேன்👇. என்ன மாயமோ தெரியவில்லை, அங்கே போனதும் சிறு, சிறு உடல் உபாதைகள், நோவுகள் எல்லாம் காற்றாய் பறந்து விடுகிறன. உடல் சோர்வதில்லை, மூட்டு வலிப்பதில்லை, தடிமன் காய்ச்சல் கூட மிக அரிதே. அதே போல் கும்பகர்ண விருந்து சாப்பிட்டாலும் கூட ரத்த சீனியின் அளவை மிக இலகுவாக கட்டுப்படுத்த முடிகிறது. Feeling healthy என்பார்களே இது ஊரில் நிச்சயம் ஒரு மடங்கால் கூடுகிறது. இது தனியே கொலிடே மனநிலை மட்டும் இல்லை என நினைக்கிறேன். ஏதோ ஒரு பெளதீக மாற்றமும் உள்ளது. சூரிய ஒளி/வைட்டமின் டி யாக இருக்கலாம். இவ்வாறு, ஊரில் உள்ள விடயங்களை விதந்து பேசினாலும், இள, மத்திய வயது குடும்பங்கள் ஊர் மீளுவதை, குறிப்பாக பிள்ளைகளுடன் போவதை மோசமான முடிவு என்றே இன்னும் கருதுகிறேன். ஊர் போய் வந்த பின் இந்த கணிப்பு மேலும் இறுகியுள்ளது.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவர் புரொண்ட்லைனுக்கு கொடுத்த பேட்டியிலும் நாம் அமைக்கும் நாடு சோசலிஸ்ட் நாடாகவே இருக்கும் என்பதை கூறி இருந்தார் என நினைக்கிறேன். நாமும் அணுகவில்லை. தவிரவும் இது தனியே சோசலிச எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் அல்ல - அமெரிக்காவின் முகவர்கள் என தெளிவாக தெரிந்தோர் குறிவைக்கப்பட்டனர் (நீலன்). கூடவே இந்தியாவை நாம் எப்படி டீல் பண்ணிணோம் (ரஜீவ்) என்பதையும் அமெரிக்கா கவனித்திருக்கும் அல்லவா? ஆகவே அமெரிக்காவின் புலி எதிர் நிலைப்பாடு இறுகவும், கடைசி வரை தளராமல் இருக்கவும், நீங்கள் சொன்னவை உட்பட பல காரணங்கள் இருப்பினும், எமது “வணங்கா முடி” தனமும், “நாம் மட்டுமே எமது பிரச்சனைக்கு தீர்வை அடைவோம்” என்ற அதீத தற்சார்பும் கணிசமான காரணிகள் என்பது என் பார்வை. இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, பலனை அறுவடை செய்ய நாம் முயலவில்லை என்பதோடு, எமக்கிருந்த early advantage ஐ தொலைக்கும் விதமாகவே நடந்து கொண்டோம். மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் நாம் நடைமுறை அரசை நடத்திய காலத்தில் கூட, அமெரிக்காவை எம்பக்கம் எம்மால் திருப்ப முடியவில்லை.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
உடைந்த ரெக்கோர்ட்டை போல இதையே எத்தனை தரம்தான் திரும்ப, திரும்ப சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள்? அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா? இரு கைகள் தட்டாமல் ஓசை எழாது. அமெரிக்காவுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையான உறவு கசந்ததில் - அமெரிக்காவை போலவே ஈழத்தமிழருக்கும் சமபங்கு உண்டு. அமெரிக்கா இப்போ ஜேவிபி யை அணுகும் முறையை பார்த்தீர்களா? இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது. இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன். ஆனால் நாம் எம்மை அவர்களின் பங்காளிகள் என நிலை நிறுத்த தவறினோம். இதில் பாரிய தாக்கம் செலுத்தியது, சில ஈழத் தலைமகளின் செயலற்ற தனமும், சுயநலமும். அவர்களை அடுத்து வந்தவர்கள் திறமையானவர்களாயும், சுயநலமற்றவர்களாயும், தியாக எண்ணத்துடனும் இருந்தனர். ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது. இந்த மனநிலையே மேற்கு, கிழக்கு, நாலு திக்கிலும் அத்தனை பெரிய நாடுகளும் எம்மை சேர்ந்தழித்தமைக்கு வழி கோலியது. இதே அணுகுறையை, அதைவிட மிகவும் பலவீனமான நிலையில் இப்போ நீங்கள் முன்வைக்கிறீர்கள். இதை எழுதி அம்மஞ்சல்லிக்கு பயனில்லை என தெரியும். கேட்டதால் எழுதுகிறேன்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நாம் மட்டுமே போதும் நமக்கான தீர்வை அடைய என்ற அணுகுமுறை, அதன்பால் ஊருடன் பகைத்தது, அதனால்தான் 2009 நடந்தது. இதனால்தான் 2009 க்கு முன் நாம் இருந்த ஸ்டேடசில் நாம் இப்போ இல்லை. இதை நான் 2013 இல் யாழில் எழுத தொடங்கி 11 வருடங்கள். 2024 இல் கூட எழுத வேண்டி இருக்கிறது. அதுவும் உங்களை போல விடயம் அறிந்த ஒருவருக்கு.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அவரவருக்கு அவரவர் அஜெண்டா மட்டுமே முக்கியம். இதை கூட சம்பந்தமே இல்லாமல் உங்கள் நா த க பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறீர்களே. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். இந்த தூசண அம்மணி வாயையே மூட முடியவில்லை, இதில், ஒவ்வொரு குரூப்பும் ஆளுக்கு ஆள் இந்த பெண்ணுடன் இவரும், அவரும் கூட்டு என்று கதை வேறு. இந்த சீத்துவத்தில் உங்க்ளுக்கு நாம் எமக்கான தீர்வை நாமே அடைவோம் என்ற நினைப்பெல்லாம் ஓவராக தெரியவில்லையா?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அப்படியே தாளிச்சிடுவோமாக்கும்….. இந்த திரியை பார்த்தாலே தெரியவில்லை….வளைச்சு, வளைச்சு கதைக்க மட்டுமே செய்வோம் என்பது…. பிரான்சில் இல்லாத தமிழ் அமைப்புக்களா? லா சப்பல் எங்கள் கையில்… அடுத்த தலைமுறை பெரிய…பெரிய பதவிகளில்….. என்ன பிரயோசனம்…. எமக்கு எது முக்கியம்? இவரின் பேச்சை நிறுத்தணும். அடித்தது எமக்கு மனச்சாந்தியை தந்தது… ஆனால் இவரின் வாயை அடைத்ததா? அடித்தவர்கள் கடைநிலை மக்கள் - அடிப்பது ஒன்றே அவர்கள் வசமுள்ள ஆயுதம். ஆனால் கதைப்பதை நிப்பாட்ட கூடிய வல்லமை உள்ளவர்கள் பதுங்குகிறார்கள்.
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
ஓ அப்படியா? தகவலுக்கு நன்றி. எனக்கு மகளிர் கிரிகெட், ஐ பி எல் இரெண்டும் சுத்தம்🤣. அதுதான் நினைக்கிறேன் என எழுதினேன். எங்கோ இவர் சன்ரைசர்ஸ் எண்டு தலையங்கம் வாசித்தேன். ——— ஆனால் வியாஸ்காந்தை வாங்கியது ஹைதரபாத் என்பது சரிதானே? வேறு ஏதாவது ஐபிஎல் அணி ஈழ தமிழருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதா?
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
10,000 ஆண்டுக்கு முன் லெமுரியாவில் துறைமுக கட்டிய தமிழர்கள், அதில் இருந்து ஆமை வழித்தடத்தில் அப்பால்-23 என்ற கிரகத்தில் போய் உள்ளார்கள். அது ஒரு முழுத்தமிழ் கிரகம். அங்கே போகலாம் என கிளப்பி விட்டால்….. யாழிலும் சிலர் அறையை பூட்டி கொண்டு கையை அறுப்பார்கள் என நினைக்கிறேன்🤣.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
அம்மு சன்ரைசர்ஸ் ஐதரபாத்துக்கு எடுபட்டதாக நினைக்கிறேன். அதே போல் நேற்று replacement ஆக யாழின் வியாஸ்காந்த் எடுபட்டுள்ளார். ஐ பி எல் லில் ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே அணி கலாநிதி மாறனின் ஹைதரபாத் தான். @வாலி உங்கள் கவனத்துக்கும். நான் சி எஸ் கே (வாய்ப்பு முழுக்க இலங்கை வீரருக்கே) விட்டு, ஈழத்தமிழரை உள்ளீர்ர்கும் எஸ் ஆர் எச் க்கு மாற நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் @MEERA
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இல்லை ஐலண்ட் - ஆனால் சிங்கள பகுதிகளால் போகும் போது சிறிய சிறிய கடைகளில் அல்லது வீடுகளிலோ கூட வெளியில் ஒரு போர்ட்டில் அல்லது கார்போர் மட்டையில் “பத் கமு” (சோறு சாப்பிடுங்கோ) என எழுதி வைத்திருப்பர். போனால் நல்ல பாரம்பரிய உணவு கிடைக்கும். அதேபோல் வீதியோரங்களில் சோளம், எருமைத்தயிர்+கித்துள் பானியும் கிடைக்கும். ரட்ட கஜு என கேட்டா கச்சானும், தெம்பு ரட்டகஜு என கேட்டால் அவித்த கச்சானும் வாங்கலாம். தெற்கு அதிவேக சாலையின் சர்வீஸ்கள் பற்றி எழுதினேன் அல்லவா, அங்கேயும் பாரம்பரிய உணவுகள் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் அந்த feel மிஸ்ஸிங்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
ஆமையும் தமிழனும்....
இந்த தீவில் மட்டகளப்பு பக்கம் இருந்த மக்கள்தான் குடி ஏறி இருக்கவேணும், அங்கேதான் “இருக்கா” என்பதை “இரிக்கா” என சொல்வது🤣.