எனக்கு திராவிடம் என்ற சொல்லின் தோற்றம், அதன் வரலாற்றுப்பாவனை, அர்த்தம் என்பனவற்றுக்கும்,
கடந்த நூற்றாண்டில் ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் எழுந்த அரசியலுக்கும் உள்ள வேறுபாடு நன்கு புரிவதால் - அந்த சொல்லில் ஓர் ஒவ்வாமையும் இல்லை😎.
ஆனால் தமிழின் திரிபு பெயரால் அழைக்காமல் இந்த மண்ணின் முதுசத்தை தமிழின் பெயராலேயே அழைக்கவேண்டும் என்ற உறுதியும் உள்ளவன்.
சொற்பாவனையில், திராவிடத்தில் இருந்து தமிழுக்கு மாறும் transition இல் எவரையும் விலக்கி வைக்காமல், அகண்டு, அரவணைத்து தமிழ் என்ற குடையின் கீழ் வரும் போது - இந்த வித்தியாசங்கள் தாமாகவே இல்லாமல் போகும்.
இல்லாமல் இதை திராவிடர் நாகரீகம் என தேவையில்லாத ஆணியை தமிழ்நாடு அரசு புடுங்க முனைந்தால் - இப்போ வரவேற்றது போல் அப்போ எதிர்வினையும் ஆற்றலாம்.