Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. மேற்கு நாட்டு குடியுரிமை சட்டங்கள் கூட ஒரு காலத்தில் தகப்பன் சார்பாகவே இருந்தன. இப்போ எல்லாமும் ஒன்றே. எமது சமூகத்தில் முன்னர் கூட மிக அரிதாகவே தாயார் கைவிட்ட பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் இனிசலுக்கு மட்டுமே உபகோகப்பட்ட “ஆண் சிங்கங்கள்” அதிகம் இருந்தார்கள். இவர்களை எல்லாம் பிறப்பு சான்றிதழில் இருந்து தூக்கினால் கூட ஒன்றும் குடி மூழ்கிபோகாது🤣.
  2. ஐயா, உங்கள் சமூகம் எண்டால் ஜேர்மனியை சொல்கிறீர்களா? . அமேசன் பழங்குடிகள் உட்பட பல தாயாதி (matriarchal ) சமூகங்கள் உள்ளன. தமிழர் கூட தந்தை பெயரை காவும் மரபினர் அல்ல. இடுபெயர் (given name ) மட்டும்தான். நீங்கள் அடிக்கடி சிலாகிக்கும் வெள்ளைகார அடிமைத்தனத்தின் ஒரு கூறுதான் surname போடும் வழக்கம். நான் சின்ன வயதில் பார்த்த ஒரு விபரணத்தில் பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை குட்டிகளை விலக்கி போட்டு தான் முதலில் தின்றுவிட்டு, சோம்பேறியாக ஓய்வெடுக்கும் ஆண் சிங்கம். ஆகவே சோம்பேறி ஆண்களை விட சோறு போடும் பெண்கள் பெயரை வைப்பதே நியாயம்.
  3. 👍 சூரியனுக்கு டோர்ச் அடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை 🤣. ஆகவேதான் இதை பிற்சேர்த்தேன்👇. 🙏 அருள்நிதியின் படங்கள் பார்த்ததில்லை ஆனால் அவரின் முரட்டு மனேரிசம் பேட்டிலளில் பார்க்க வினோதமாயும், கவரும் விதமாயும் இருக்கும். 80,90 கிராமத்து ஹீரோக்கள் போல நடந்து கொள்வார். ஆனால் சிட்டி போய் என நினைக்கிறேன்.
  4. நான் பஸ் லைன்சன்ஸ் எடுத்ததை அந்த காலத்தில் செய்தியா போட்டிருக்கலாம், வட போச்சே🤣
  5. சரோ அக்கா முன்மொழிவுகள் எல்லாம் வரவேற்கத்தக்கன. ஆனால் தன் கட்சிகார நண்பர் பெண் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அக்கா வழமையான இலங்கை அரசியல்வாதி போலவே நீதிக்கு புறம்பாக நடந்து கொண்டார். ஊருக்குத்தான் உபதேசம்.
  6. ஆனால் இந்த ராஜபார்ட் எதுவும் வேண்டாமென அரசாங்க குமாஸ்தாவாக காலத்தை ஓட்டியவர் கருணாநிதியின் மகன் முக தமிழரசு. பின்னர் திரைப்பட தயாரிப்பில் இறங்கினார். இவரின் மகந்தான் நடிகர் அருள்நிதி. அதே போலவே செல்வி என்ற மகளும். முறை மாமனாகிய முரசொலி செல்வத்தை மணந்தார். பொதுவாழ்வில் இல்லை. ரசோ அண்ணாவுக்கு இவை கட்டாயம் தெரிந்திருக்கும். வாசகர்களுக்காக.
  7. நானும் குடித்திருக்கேன்… குடிப்போனை பார்த்திருக்கேன்… நல்ல புத்தி வருவதில்லை குடியிலே… ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே… -கண்ணதாசன்- குடியால் வீழ்ந்த மு.க.முத்து.. ஊற்றி கொடுத்து கெடுத்தது ‘இந்த’ நடிகரா? அந்த நடிகையின் தாத்தா ஆச்சே! Rajkumar RUpdated: Sunday, July 20, 2025, 13:26 [IST] சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து நேற்று மரணம் அடைந்தார். அரசியல் திரை பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் எம்ஜிஆருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட மு.க.முத்து, வீழ்ந்தது குடிப்பழக்கத்தால் தான் எனவும், அவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே அவரது உறவினரான பிரபல நடிகர் எனக் கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமது. ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நல கோளாரால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். இதை அடுத்து மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடுத்த எம்ஜிஆர், அடுத்த கலைஞர் என அரசியல் வாரிசாகவும் கலைவாரிசாகவும் பார்க்கப்பட்ட மு.க.முத்து குடிப்பழக்கத்தால் வீழ்ந்தார். இந்த நிலையில் தான் ஏன் அப்படி ஆனேன் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமதுவிடம் தெரிவித்திருக்கிறார் மு.க.முத்து. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூருக்கு நேரில் சென்ற பத்திரிக்கையாளர் இர்ஷாத் அகமது, முக முத்துவை பேசுயிருக்கிறார். அப்போது பேசிய அவர்," சென்னையில் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்ததால் திருச்சியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் அங்கும் ஒழுங்காக படிக்கவில்லை. எனது அப்பாவை போலவே நானும் பத்தாம் வகுப்பில் பெயில். ஆனால் அவர் போராடி ஜெயித்தார். நான் தோற்றுவிட்டேன். Recommended For You என்னை வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என அப்பா முயற்சி செய்தார். ஆனால் நான் பேச்சை கேட்டு நடக்கவில்லை. சினிமாவில் என்னை எம்.ஜி.ஆர் போல் ஆக்க வேண்டும் என அப்பாதான் கொண்டு வந்தார். அந்த முதல் படம் பிள்ளையோ பிள்ளை. அந்த படத்தை தொடங்கி வைத்ததே பெரியப்பா எம்ஜிஆர் தான். அப்பாவின் பேச்சை கேட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென பெரியப்பா எம்ஜிஆர் அடிக்கடி சொல்வார். ஆனால் நான் கேட்கவில்லை. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அரசியல் என்னையும் என் அப்பாவையும் பெரியப்பாவையும் பிரித்து விட்டது. குடி என் வாழ்வையே திருப்பிப் போட்டுவிட்டது. நடிகர் ரவிச்சந்திரன் தான் ( நடிகை தன்யாவின் தாத்தா) முதன் முதலில் எனக்கு தண்ணீ அடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எங்கள் உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். முதன் முதலில் அவர் கற்றுக் கொடுத்த பிறகு தினமும் குடிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதே நேரத்தில் அப்பா உள்ளிட்ட யாருமே என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை" எனக் கூறியிருக்கிறார். https://tamil.oneindia.com/news/chennai/m-k-muthus-life-tragedy-how-actor-ravichandran-introduced-him-to-alcohol-721905.html
  8. பின்னே…. எங்களுக்கு எந்த தீமையும் செய்ய முடியாத தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை மட்டும் வாட்டி எடுப்போம்… ஆனால் நாம் வாழும் நாடுகளை, நாம் கொலிடே போகும் இலங்கை அரசியல்வாதிகளை கண்டுக்க மாட்டோம் என்றால் அதை சொல்லத்தானே வேணும்? ஏலும் எண்டால் இலங்கை போய் அனுரவின் புஞ்சி அம்மே பற்றி சிறி அண்ணையை ஒரு யூடியூப் பதிவு போடச்சொல்லவும். 🤣
  9. தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு ? ஆம் ஈழத்தமிழர் நலனுக்கு - இல்லை. இந்த இடத்தில்தான் உங்கள் “நானும் தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகவே எழுதுகிறேன்” வேடம் கலைந்து போகிறது 🤣. கள்ளு குடிச்சால் இன்னொரு ஈரல் முளைக்கும்?
  10. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை Mani Singh SPublished: Monday, July 21, 2025, 21:40 [IST] சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்ப நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் விரைந்து வந்தனர். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் வருகை தந்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் லேசான தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி வேறுசில பரிசோதனைகளை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தவாறே உத்தியோகப்பூர்வ கடமைகளை முதல்வர் நிறைவேற்றுவார். முன்னதாக, இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ பணிகள் இயக்குனர் அனில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மு.க. ஸ்டாலின் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிகுறிகளை மதிப்பீடு செய்வதற்காக, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று கூறப்பட்டிருந்தது. https://tamil.oneindia.com/news/chennai/doctors-advise-cm-stalin-to-rest-for-3-more-days-apollo-hospital-new-report-722259.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி விரைவில் முதலமைச்சர் இட்லி சாப்பிட்டார், நலமாக உள்ளார் ? முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் எப்போது? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில் Mani Singh SUpdated: Monday, July 21, 2025, 21:03 [IST] சென்னை: முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதையடுத்து இதற்கு பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 2 நாளில் வீடு திரும்புவார்" என்று கூறினார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/when-will-chief-minister-stalin-be-discharged-from-apollo-hospital-udhayanidhi-says-this-722255.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  11. நான் எங்கே ஒழுக்க சீலர்கள் என்பதால் ஏனையோரை ஆதரிக்கிறேன் என எழுதியுள்ளேன்🤣. அவர்களை போலவே இவரும் என்றல்லவா எழுதியுள்ளேன். திமுக மட்டும் அல்ல, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் தவிர மிகுதி அனைவரும் தமிழ்நாட்டில் பாஜகவோடு என்றோ கூட்டணி வைத்தோர்தான். ஆனால், கூட்டணி வைத்தாலும் - கருணாநிதி, ஜெ, இராமதாஸ், வைகோ, ஆர் எஸ் எஸ் கொள்கைகளை காவவில்லை. சீமான் அப்படி அல்ல. அவர் ஒரு கடைந்தெடுத்த சங்கி. பெரியாரிய கொள்கைகளை எதிர்ப்பதன் மூலம், தமிழ் நாட்டில், பிஜேபி எனும் நச்சு விதை வளர இடைவெளி ஏற்படுத்தி கொடுக்க முயலும் ஐந்தாம்படை சீமான். பயிரிடும் அனைவரும் விவசாயி அல்ல. சிலர் கஞ்சாவும் பயிரிடுவார்கள். சீமான் ஒரு கஞ்சா-விவசாயி. நாட்டுக்கு கேடு. அதே போல் அன்புமணி மீதும் இந்த விடயத்தில் தகப்பன் மீது இருந்த நம்பிக்கை இல்லை.
  12. இது என்ன தரவுகள் எல்லாம் தாறீங்க… செல்லாது…செல்லாது…. கருணாநிதிக்கு நாக்கு பச்சை கலர் அவர் ஒரு ஏலியன் எண்டு சொன்னாலும் ஏத்துகொள்ள வேண்டும். அதுதான் தன்மானமுள்ள புலம்பெயர் ஈழதமிழனுக்கு அழகு 🤣. மக்ரோனின் அம்மா பிறந்தது 1950. அவரின் மனைவி பிறந்தது 1953. இது என்ன மாடல்? அல்லது நாம் பஞ்சம் பொழைக்கும் நாடு ஒன்றின் தலைவர் என்பதால் கள்ள மெளனமா🤣.
  13. நம்ம தல மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்… மோடி ஜிப்பாவ சந்தில வச்சி உருவ நம்ம தல போல யாரும் இல்லை🤣 தல போல வருமா🤣 மல்லாவி எண்டா கிளிநொச்சி பக்கம்தானே🤣
  14. முன்பே எழுதியதுதான் என் தமிழ் நாட்டு அரசியல் பார்வை பெரும்பாலும் அந்த மக்களின் நலன் சார்ந்தே. அவர்களின் சுக, சகஜ வாழ்வுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது வரக்கூடாது என்பதே முதலாவது கருதுபொருள். நான் சார்ந்த ஈழதமிழரின் பழி தீர்த்தலுகளுக்காக தமிழ் நாட்டு மக்களை சகதியில் தள்ளி விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. (உங்கள் நிலைப்பாடும் இதுவே என நீங்கள் சொன்னாலும் எடுப்பது என்னமோ எதிர் நிலைப்பாடுதான்). இரெண்டாவதாக, ஈழதமிழர் அரசியலுக்கும் சீமான் மூலம் ஆர் எஸ் எஸ் தமிழ் நாட்டில் நிலைகொள்வது ஆபத்தானதே. ஆகவே, தமிழ் நாட்டு, ஈழதமிழர் நலனில் அக்கறை உள்ள என்னால் நேரடி ஆர் எஸ் எஸ் (பாஜக), மறைமுக ஆர் எஸ் எஸ் (நாதக) வை ஆதரிக்க முடியாது. இதனால்தான் திமுகவை வீழ்த ஆர் எஸ் எஸ் அல்லாத வேறு எந்த சக்தி வந்தாலும் அதை நான் எதிர்ப்பதில்லை, ஆதரிப்பேன். உதாரணம் தவெக. செத்தவர்கள் பற்றி பச்சை பொய்யை பேசி, தன் விம்பத்தை உயர்த்த முயல்வது அண்ணனுக்கு புதுசா என்ன? தாயை புணர சொன்னவர் பெரியார் - சீமான். Vs அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் - இதுவும் அதே சீமான் தான். வேறவாய் vs நாறவாய் 🤣 இந்த பைத்தியத்தை இன்னும் நம்பி கொண்டு யாழிலும் சிலர் 🤣
  15. எம் ஜி ஆருக்கு போட்டியாக கருணாநிதி இவரை திரை நட்சத்திரமாக்க முனைந்தாராம். ஆனால் எண்ணையை பூசி கொண்டு பிரண்டாலும் ஒட்டுற மண்தானே ஒட்டும்🤣. மகன் நடிப்பதோ பிள்ளையோ பிள்ளை, அப்பன் அடிப்பதோ கொள்ளையோ கொள்ளை என்பது அன்றைய பிரபல அரசியல் வாசகமாம். பின்னாளில் இந்த முத்துவே எம்ஜிஆரிடம் சரணடைந்து பண உதவிகோரினாராம். உதவி செய்தாலும், அரசியலில் இவரை எம்ஜிஆர் சேர்த்துகொள்ளவில்லையாம். தன்னை கவிழ்ப்பார் என்ற பயமா அல்லது அப்பனுக்கு எதிராக மகனை நிறுத்த கூடாது என்ற நல்லெண்ணமா தெரியவில்லை. சார்ந்தோருக்கு அனுதாபங்கள்.
  16. அப்போ சிறிதரன், கஜன் முக்காத தலைவர்களா? தவறு அனைவர் மீதும்தான். ஈழ தமிழர் வரலாற்றில் ராமனாதன் தொட்டு அப்படி வந்த ஒரு தலைவரை காட்டுங்கள் ? ஆனால் எமக்கான ஒரு குரல் அல்லவா? அவர் அரசியலில் முன்னிலை பெற்ற பின் கனடாவின் எம்மீதான போக்கு 180 பாகையால் திரும்பியதா இல்லையா? இதை பாதுகாக்க வேண்டியது நம் வேலை அல்லவா?
  17. இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பல்கலையிலும், மாணவர் ஒன்றியத்திலும் முடிவெடுக்கும் பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களே உள்ளார்கள்.. ஆகவே இதில் ஏனைய சமூக மாணவர்கள் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை.
  18. உங்கள் கேள்வி நியாயமானதுதான். ஆனால் சும் இப்போ எம்பி இல்லை. மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? இதில் சாணக்சும் அடக்கம். இது மட்டும் அல்ல, கரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக ஏன் இன்னும் ஊரில், புலம்பெயர் நாட்டில் யாரும் குரல் எழுப்பவில்லை?
  19. இந்த வழக்கில் சில சங்கி பொலிஸ்காரரகள் கேம் ஆடுவதாக முன்னர் மருத்துவர், நடிகை, பாடகி சந்தேகம் வெளியிட்டார். நேற்று ஒரு பொட்டு வைத்த பொலிஸ்காரார் ஆபீசுக்கு நடந்து போய், பேட்டி எல்லாம் கொடுத்து இன்னொரு புகாரை கிளப்பி உள்ளார். இது ஒரு திட்டமிட்ட நகர்வாகவே தெரிகிறது. தமிழ்நாடு காவல்துறையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்.. நிர்வாக குளறுபடியா, உள்ளடி வேலையா? Updated: Friday, July 18, 2025, 18:27 [IST] சென்னை: சிவகங்கையில் அஜித் குமார் மரண வழக்கின் தாக்கம் தணிவதற்கு முன்பாகவே, மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேனின் அதிர்ச்சிப் புகார்கள் தமிழக அரசியலிலும், காவல்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை செய்யும் சில அத்துமீறிய சம்பவங்கள் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தமிழக காவல் துறை வரலாற்றில் ஒரு உயரதிகாரி தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்படையாக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அரிதான நிகழ்வாகும். இச்சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்து, காவல்துறையைக் கட்டுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேண், இந்த அரசுக்கு உயர் அதிகாரிகளே களங்கத்தை ஏற்படுத்துவதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார். முன்பு ஒருமுறை போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே, பாஸ் விவகாரத்தில் மோதல் வெடித்தது. தமிழக அரசின் இரு துறை ஊழியர்கள் மோதிக்கொண்டதும் அரிதான நிகழ்வுதான். இந்த நிலையில்தான், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பும் வண்ணம் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. ஆனால், இது வலதுசாரிகளின் சதி என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள். கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் வலதுசாரிகள் அதிகார மையங்களில் முக்கிய இடம் பிடித்ததாகவும், அதன் பலனை தற்போது பார்ப்பதாகவும் திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் நெருங்குவதால் வேண்டுமென்றே வலதுசாரி ஆதரவு போலீசார் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த ஏதேதோ செய்கிறார்கள் என்பது அக்கட்சியினர் வாதம். அதேநேரம், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும், ஏன் திமுக அரசு தங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த திட்டமிடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை அதிமுகவினர் எழுப்புகிறார்கள். மேலும், அரசு வேலையில் இருக்கும் யாரும் இதுபோல வேண்டுமென்றே செய்து தங்கள் வருங்காலத்தை இழக்க விரும்பமாட்டார்கள், இது நிர்வாக குளறுபடிதானே தவிர வேறில்லை என்பது அதிமுகவினர் வாதம். இதில் உங்கள் கருத்து என்ன? https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-police-turmoil-shocking-allegations-by-mayiladuthurai-dsp-sundarasen-spark-political-con-721519.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  20. கட்டுரை மிக தெளிவாக ஆதாரங்களையும், கருணாநிதி-காமராசர் இடையான உறவையும் விளக்குகிறது. திருச்சி சிவா சொன்னது போல் கருணாநிதி காமராஜருக்கு ஏ சி போட்டு கொடுத்தார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவே தெரிகிறது. தமிழ் நாட்டை காப்பாற்று என கூறியது கருணாநிதியின் பிலடப் ஆக இருக்க கூடும். ஆனா எமெர்ஜென்சிக்கு பிறகு அரசியலில் இருவரும் நெருக்கமாககி, ஆலோசனை, ரகசிய சந்திப்பு எல்லாம் நடந்தபடியால் இதையும் பொய் என ஒதுக்க முடியாது.
  21. ஶ்ரீநிவாஸ் எப்போ எம்மை கருவறுத்தார் அல்லது முயன்றார்? புலம்பெயர் குமுகாயம், கமுகமரம் எல்லாம் தென்னிந்திய தயாரிப்புகளை அடியோடு புறக்கணித்தே விட்டீர்களா? யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் என்ன ஒட்டு குழுவா? அவர்களுக்கு தெரியாத? எப்போதும் உங்களிடம் கை ஏந்த வேண்டுமா? இசை நிகழ்சி மூலம் தம்மிடையே நிதி திரட்டினால் ஆகாதா? இப்படியவது பண்பாட்டு மையம் பயன்பாட்டுக்கு வந்ததே பெரிய விடயம்.
  22. உங்களுக்கு விளங்குதோ விளங்கவில்லையோ தெரியவில்லை சாத்தான்… நாம் ஏன் 16 வருடமாக ஒரே இடத்தில் நிண்டு சுத்துகிறோம் என்பதை உங்கள் நீண்டபதில்கள் விளக்கி நிற்கிறன. புலிகள் தவறிழைத்தார்கள், அதில் அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் ஜிகாத், ஊர்காவல் படைகளால் தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள். இராணுவத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். இவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும். இதில் அப்போ அதிகாரத்தில் இருந்த, இப்போ எஞ்சியுள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு ஈடாக ஒரு நியாயமான தீர்வு வர வேண்டும். இதுதான் உண்மையான நல்லிணக்க, பொறுப்புகூறும் முடிவாக இருக்கும். (Truth and reconciliation). இதை முந்தள்ளும் இயலுமையை நாம் பெறாதவரை, உங்கள் போன்றோரின் சிந்தனை எமது மக்களை வழி நடத்தும் வரை….. அடிப்படைவாத முஸ்லிம்களும், இலங்கை அரசும், பெளத்த பேரினவாதிகளும், அருண் சித்தார்துகளும் வென்றுகொண்டே இருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.