Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. புது அனுபவம் போல் ரொம்ப பயந்துட்டார் முதல் குற்றம் செய்து ஜெயிலுக்கு போகும்போது ஏதோ பெரிசா சாதித்த பெருமை சிறுவர்களாக இருந்தால் தங்கள் கீரோக்களாகி விடும் என்கிற நினைப்பு அடுத்து ஜெயிலில் பலவித பலவயதில் நண்பர்கள் அடுத்த முறை சிக்காமல் எப்படி தப்பு செய்வதென்கிற பாடம் பிறகு அது தொடர்கதை ஒரு பன்னிரண்டு வயது மாணவியை பதினாறு வயது பையன் துஷ்பிரயோகம் போதாதற்கு நண்பர்களும் சேர்ந்து மாட்டுப்படார்கள் அவ்வளவு பேரும் அவர்களை போலீசார் அழைத்துச்செல்லும்போது ஏதோ பெரிதாக சாதித்த பெருமை ஒவ்வொருவர் முகத்திலும் சினிமாவில் துப்பாக்கியை நீட்டி சுட்டுவிட்டு ஊ என்று ஊதிவிட்டு சடடைப்பைக்குள் துப்பாக்கியை திணித்துக்கொண்டு வேகமாக உந்துருளியில் பறக்கிறார். அவர்தான் ஹீரோ. சிறையிலும் அவரின் ஹீரோஜிசந்தான். அங்கே சட்டம், தண்டனை, அதன் வலி, அவமானம் பெரிதாக காட்டப்படுவதில்லை. இதில் இளையோர் மயங்கி, அவ்வளவுதானே செய்துதான் பார்ப்போமே என்று தொடர்கிறார்கள்.
  2. சொல்லத்தான் வந்தேன் தேவையில்லை என்றாகி விட்டது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அன்று அந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது, இன்று அது அப்படி நடந்திருக்காவிட்டால் இன்று இதை தவிர்த்திருக்க முடியாதுஎன எண்ணத் தோன்றும். அன்று உண்மை தெரியாமல் தவித்த உள்ளம் இன்று அது வெறும் தந்திரம் என தெளிவடைகிறது. நாம் ஒரு நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறோம், காலம் தன் நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறது. அறியப்படாத உண்மையுமில்லை, வெளிவராத ரகசியமுமில்லை. அன்று காதோடு காதாக பேசியது, இன்று கூரை மீதிருந்து அறிவிக்கப்படுகிறது. நேற்று தீயாகி எனப்பட்டவன் இன்று துரோகம் வெளிப்பட்டு நிற்கிறது.
  3. நல்லவேளை சம்பந்தர் தப்பிவிட்டார். ம், இத்தனை சௌகரியங்களையும் அனுபவித்துக்கொண்டே நாட்டை கொள்ளையிட்டவர்கள் சும்மா விடுவார்களா? இல்லை ஓய்வூதியத்துக்கு முன்னாலேயே இரண்டு மடங்காக சூறையாடிவிடுவார்கள். அரசியல்வாதிகளின் ஓய்வுபெறும் வயதையும் நிர்ணயிக்க வேண்டும்.
  4. இப்படி எத்தனை அக்கினிச்சூளையை தாண்டி வந்தது நம் இனம்! கம்பன் வீட்டுக்கைத்தறியும் கவி பாடுமாம். ஆனால் இங்கு ஒரு இனவழிப்பை சந்தித்த இனத்தின் பிரதிநிதி, ஜானாதிபதி சட்டத்தரணி, அதை நிறுவுவதற்கு ஆதாரம் போதாதாம். அந்த இனத்தின் புதைகுழி என்று அடையாளம் கண்ட பின்னும் முன் கொண்டு சென்று நிஞாயம் தேட திறமையற்ற, நடக்கின்ற அனிஞாயங்களை தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட திராணியற்ற, தனது சக உறுப்பினர்களை அதட்டவும் பயமுறுத்தவும் மட்டுமே பயன்படும் வக்கீல். எது நடக்கிறதோ இல்லையோ, அவர் எங்கு போனாலும் அணியும் கோட் சூட் ஆதாரம் அவர் ஒரு திறமையான சட்டத்தரணி என்று காட்டுவதற்கு. அரசியல்வாதியின் எடுபிடி, அரசியல்வாதி போல பேசுவதில்லையா? ஜனாதிபதியின் ஏவல், தன்னால் எதுவும் செய்ய முடியும் என பந்தா காட்ட முடியுமென்றால், ஓடி ஓடி வக்கீலை காக்க வக்காலத்து வாங்கும் கோசானுக்கு சட்டம் தெரிவதில் என்ன சிக்கல்?
  5. ஏன் சிறியர் இவ்வளவு காலமும் இருந்த பெயர் தானே, அப்போ வராத பிரச்சனையா இனி வரப்போகிறது? எப்படியோ ஸ்ரீலங்கா பயணத்தை தொந்தரவு ஏதும் இல்லாமல் நன்றே கழித்துவிட்டீர்கள், அந்த வகையில் மகிழ்ச்சியே எனக்கு. வாடகை உயரும். ஏன், அதை விரிவாக்கம் செய்வதற்கு முன் விரிவாக்கம் செய்யும் நிறுவனத்தோடு குத்தகைக்காரர்கள் ஒப்பந்தம் ஏதும் எழுத முடியாதா? அதாவது ஏற்கெனவே அங்கு தொழில் புரிந்தவருக்கேமுன்னுரிமையென்று.
  6. இந்த தொழிலுக்கே லாயக்கற்றவர்கள். இவர்களுக்கு பதவி உயர்வு வேறு கிடைத்திருக்கும் அப்போது. விசித்திரமான நாடும் அதன் சட்ட நீதி நிஞாயமும். இதில தங்களை நிஞாயப்படுத்தி மற்றவர்களை குற்றவாளியாக்குவதும் கண்டிப்பதும் அறிக்கை விடுவதும் கேலிக்குரியது. தங்களை புரிந்து கொள்ள முடியாத நிலை.
  7. புலிகளை தவறிழைக்க தூண்டினார்கள். ஊர்காவல் படை என்பது, கிழக்கில் தமிழ் முஸ்லீம் கலவரத்தை தூண்டுவதற்காக இராணுவப்பிரிவிலிருந்த ஒரு குழு. கிழக்கிலே தமிழர் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால், தமது அடாவடிகளை நடத்த முடியாது என்பதற்காக, அவர்களை திட்டமிட்டு எதிரிகளாக்கியது. அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்தார்கள், இதனால் புலிகளை தூண்டி முஸ்லீம் மக்களை தாக்க வைத்து, அந்த வெறுப்பை, பகைமையை கொழுந்து விட்டு எரிய பண்ணுவதற்காக, மிகுதி கொலைகளை முஸ்லீம் ஊர்காவற்படையே செய்து, புலிகள் மீது பழியைப்போட்டு வன்மத்தை வளர்த்தனர். அமைதியாக இருந்த கிழக்கில் ஊர்காவல் படை எதற்கு ஸ்தாபிக்கப்பட்டது? அவர்களால் ஏன் அந்த மக்களை காப்பாற்ற முடியவில்லை? முஸ்லீம் அரபு நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு இதை பயன்படுத்தியவர்கள், அதை ஏன் தடுக்க தவறினார்கள்? முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தமிழரிடம் இருந்து பறித்து தருவதாக கூறியே இத்தனை அனர்த்தங்களை அரங்கேற்றினார்கள். தூர நோக்கற்ற முஸ்லிம்கள், அற்ப வார்த்தையை நம்பி தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் அதை உணரும்போது இவர்களை தூக்கி விடுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். எமது சொந்த நிலங்களை பறிக்கிறார்கள், விகாரை அமைக்கிறார்கள். இவர்களுக்கு இது நடப்பதற்கு எத்தனை நேரமாகும்? எனது அதிகாரத்தை பாவித்து இதை சாதித்தேன் என்கிறார் ஹிஸ்புல்லா. நாளைக்கு இந்த அதிகாரம் வேறொருவர் கைமாறும். அதிகாரம் ஒன்றுமில்லை, தமிழரை அழிக்க உதவியதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம், அனுரா அரசு இதையும் விசாரிக்க வேண்டும், இதற்கு அனுமதியளித்தது யார், ஏன் என விசாரித்தால், அங்கும் ஒரு குடும்பமே சிக்கும். அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை பெற்றுக்கொடுத்த பெருமை ஹிஸ்புல்லாவை சாரும். அனுரா அமைதியான ஒரு நாட்டை உருவாக்க விரும்பினால், இவை எல்லாம் விசாரிக்கப்படவேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும், அல்லது குடியுரிமை பறிக்கப்படவேண்டும். எதிர் காலத்தில் இவர்கள் அரசியல் செய்யவோ, அரச தொழில் புரியவோ முடியாதவாறு சட்டமியற்ற வேண்டும், தடை விதிக்க வேண்டும்.
  8. எம்பியாக இருந்துமட்டும் என்னத்தை சாதித்தவராக்கும்? வரே வா அப்படி வழிக்கு என்று சொல்வார்கள். நேற்றுத்தான் சுமந்திரன், சாணக்கியன் இதை சொன்னால் விளைவு என்ன என்கிற மாதிரி கதை. இன்று இப்படி. சாணக்கியன் சிங்கள கட்சியிலிருந்து பதவிக்காக கட்சி தாவி இப்போ கிழக்கின் முதலமமைச்சர் பதவி கனவில், யாரிலும் நோகக்கூடாது என்று காத்திருக்கிறார். அன்று ஹிஸ்புல்லா சொன்னார், அதாவது கிழக்கில் முஸ்லீம், முதலமைச்சராக வந்தால் தமிழர், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள் என்றார், அதே இன்று, ரவுப் கக்கீம் சொல்கிறார். தமிழரசுக்கட்சிகளோடு பல விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறார்களாம், முஸ்லிம்களுக்கென்று ஒரு மாகாணம் என்றால் அது கிழக்கு மாகாணம் தானாம், அதை தாங்கள் காத்துக்கொள்ள வேண்டுமாம். அப்போ சாணக்கியன் என்ன செய்வாரென ஆரூடம் கூறியாச்சு. முதலில் சாணக்கியன் தமிழரசில் போட்டியிடும்போதே தூஷண பிக்கரை கூட்டி வந்து அப்பாவி மக்களை பயமுறுத்தி வாக்கு சேர்த்தவர். அப்பவே அடித்து சொன்னேன் சாணக்கியனின் தந்திரத்தை. அங்கே முஸ்லிம்கள் காகித ஆலையை ஆட்டையைப்போட கங்கணம் கட்டுகிறார்கள். சிறீநாத், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுக்க போராடுகிறார்கள். சாணக்கியன் கனவில் மிதக்கிறார். இருந்து பாருங்கள், சாணக்கியன் கிழக்கின் முதலமைச்சர் ஆனால், இருக்கும் தமிழரின் நிலங்களும் பறிக்கப்படும். அவர்களுக்கு தமிழரும் தேவையில்லை, நிலங்களும் தேவையில்லை, பதவி மட்டும் வேண்டும். அதற்காகவே சாணக்கியன், சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கு நுழைந்தனர். சிங்கள மக்களோடு வாழ்வது அதிஷ்ட்டம் என்றவர், வடக்கு கிழக்கில் எனது உயிருக்கு ஆபத்து இராணுவம் மற்றும் அதிரடிப்படையின் பாதுகாப்பு வேணும் என்று சிங்களத்திடம் கேட்டு பெற்று விட்டு, வடக்கு கிழக்கிலே வாக்கு கேட்க்கும் வெட்கம் கெட்டவர், சிங்களத்திடம் எதிர்த்து கேள்வி கேட்க்கும் தைரியம் இருக்கா? சொன்னாரே, மன்னாரில் மனித புதை குழி தோண்டினார்கள், அப்போ நானும் அங்கிருந்தேன், அதன் பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். செம்மணி புதைகுழி வெளிவந்தவுடன் பேட்டி கொடுக்கிறார். ஏன் அவரால் அதை முன்கொண்டு செல்ல முடியவில்லை? இவர் சட்டத்தரணிதானே? தமிழரின் பிரதிநிதி என்று வேறு அதிகாரம் செலுத்துகிறார். அப்போ ஏன் அவரால் முடியவில்லை? நீங்களும் அப்பப்போ சுமந்திரனுக்கு எதிரும் புதிருமாக கருத்துக்களை பதிந்து நடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் நடிப்பு அவர்களை காப்பாற்றாது.
  9. பெற்ற மகனும் கட்டிய மனைவியும் நடக்கப்போவது தெரியாமல் நிம்மதியாக தூங்க, பாதகன் சொல்லிக்கொள்ளாமலேயே பிரிந்து சென்றான். அவன் உடலை மறைத்த நயவஞ்சக சீடர், அவர் ஞானம் எய்திவிட்டார் என்கிற பொய்யுரைக்க அந்தப் பொய்யில் மதத்தை தோற்றுவித்து வயிறு வளர்த்தனர் அவர்தம் சீடர். அதன் உண்மையை புரிந்துகொண்ட சிங்களம் தன் பங்குக்கு புத்தனை வைத்து கொலை, கொள்ளையடிக்கிறது. புத்தன் தான் கடவுளல்ல, தான் ஒரு ஞானி என்பதை வெளிப்படுத்தாமல் மறைத்ததும் நயவஞ்சகமே!
  10. சிங்களவர்களின் அழிவுக்கும் காரணமான, அவர்களை பாதுகாக்க தவறிய அரசை கண்டியுங்கள், அவர்கள் மேலும் விசாரணையை கோருங்கள். தங்கள் அரசியல் லாபத்திற்காக, செல்வாக்கிற்காக நாட்டு மக்களை பலி கொடுத்ததும் வளங்களை அழித்தும் சூறையாடிய, காலத்திற்கும் எங்களை எதிரிகளாக்கிய இனவாதிகளே காரணம். எங்களது, உங்களது இழப்பில், பகைமையில் குளிர் காய்ந்தது அவர்கள் மட்டுமே. அவர்கள் தண்டிக்கப்பட்டாலேயே இப்படியானதொரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். சிங்களவரை ஏமாற்றி போர் செய்வதும் பின்னர் அவர்களை வைத்து தப்புவதும் நிறுத்தப்பட வேண்டும். நீங்கள் ஒன்றும் நாட்டில் தேசியம் வளர வேண்டுமென்று இங்கு குரல் எழுப்பவில்லை, அப்படியிருந்திருந்தால்; எப்பவோ எழுப்பியிருப்பீர்கள். இப்போ உங்களுக்கு சன்மானம் தரப்பட்டிருக்கிறது, உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது, சிங்கள மக்கள் உண்மையை அறிந்து குரல் கொடுக்காமல் தடுப்பதற்கும் அவர்களை அதிலிருந்து திசை திருப்புவதற்கும். இப்போ மக்கள் உங்களை கேட்க வேண்டிய கேள்வி; இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தாய், இதுவரை உனக்கு இதுபற்றி தெரிந்திருக்க வில்லையா என்கிற கேள்வியே. இனவாதிகளின் செல்வாக்கு அழிந்து விட்டதால், காலம் கடந்து விட்டதால் நீங்கள் ஆட்டுவிக்கப்படுகிறீர்கள், இன்னும் எந்தெந்த பாம்பு எந்த புற்றிலிருந்து கிளம்பி வரப்போகிறதோ தெரியவில்லையே. உண்மை தானாகவே கிளம்பியிருக்கிறது, உண்மையை விழுங்கிய மண் வெளியே தள்ளுகிறது. போராடுங்கள், தலை குனிவது அவற்றை மறைக்க அவற்றுக்கு தடைபோட முயலும் நீங்களுந்தான்.
  11. ஒருபுறம் செம்மணி புதைகுழி, மறுபுறம் புலம்பெயர்ந்தோரின் எழுச்சி, தன்னை விரட்டுகிறது என்பது சிங்களத்தின் கவலை, பயம். எத்தனை நாடுகளை சீரழித்து, அடிமைப்படுத்தி தம்மை வளப்படுத்திக்கொண்ட நாடுகள் இன்று மனிதாபிமானிகள். ஆனால் அடிமை, அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் வழியில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தாங்களும் செய்த கொடூரங்களை மறைக்க இப்படி கூச்சல் போடுவது வழமை. இலங்கை அரசாங்கம் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஐ .நா .அமர்வுகளில் போது பல நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைத்து அறிக்கைகள் தாயாரித்தது. அதற்கு யாரும் சாதாரணப்பட்டவர்கள் உடன்படுவது இல்லை. சமூக ஊடகங்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், சட்ட விடயத்தை கையாண்டவர்கள், சட்டத்தரணிகள் போன்ற விடயம் தெரிந்தவர்களே. இலங்கை அரசுக்காக இவ்வாறான அறிக்கைகளை தயாரித்து அவர்களை காப்பாற்றி பாராட்டும் பெற வைத்திருக்கிறார்கள். அவர்களே இலங்கை அரசு செய்த அடூழியங்களை நிஞாயப்படுத்துகிறார்கள், கண்டும் காணாததுபோல் இருந்தார்கள், இதற்கு அவர்களுக்கு ஊதியமுமுண்டு.
  12. ம், செம்மணியை கண்டவுடன் ஆளாளுக்கு பதறியடித்துக்கொண்டு கிளம்புகிறான்கள். அவ்வளவு பயம். புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன் நடந்த இனப்படுகொலைகளையும் ஆராய வேண்டும். தமிழருடைய சம உரிமைகளை பறித்து, இனவன்முறை, ஆயுத காலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்களை முதலில் தண்டிப்போம். பின்னர் புலிகளை தண்டிப்போம். மக்களை, நிராயுத பாணிகளாக நின்றவர்களை, அஹிம்சை வழியில் போராடியவர்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்தவர்கள், நீதியை சரியாக நடைமுறைப்படுத்த தெரியாதவர்கள் செய்த ஊழியாட்டம் இன்னும் அரசகதிரையில் பதவிகளோடு இருக்கிறது, அதற்கு உதவிகள், அவகாசம் வழங்குகிறது சர்வதேசம், மனித உரிமை நிறுவனங்கள். ஆனால் தங்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகளாக்கி, தடைகளை ஏற்படுத்தி, சேர்ந்து அழித்துவிட்டு அந்த மக்களை ஆபத்தில் தள்ளிய ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாடுகளையும் தண்டியுங்கள் முடிந்தால். இவ்வளவு நாட்களும் இவற்றை கதைக்காமல் எங்கே போயிருந்தார்கள் இவர்களெல்லாம்? உண்மை மறைந்து விட்டதென நிம்மதியாக உறங்கபோயியிருப்பார்களோ? இவர்களிடம் ஏற்றுக்கொள்ளல், பொறுப்புக்கூறல் இல்லை. தம்மை மறைக்க பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுவதிலேயே கண்ணாக இருக்கிறார்கள். நாடு எப்படி முன்னேறும்? அனுராவுக்கு வாக்குபோடடவர்களும் விரும்புவது, நாட்டில் சமாதானம், ஒற்றுமை, முன்னேற்றம். இல்லையென்றால்; இன்று மஹிந்தவோ, மைத்திரியோ, ரனிலோ தான் அரச கதிரையில் இருந்திருப்பார்கள், கோத்தாவும் விரட்டியடிக்கப் பட்டிருக்க மாட்டார். அதை புரிந்து பேசினால் நல்லது. மஹிந்தவே தான் இழைத்த குற்றத்திற்கு மின்சாரகதிரையே தனக்கு தண்டனை, அதிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார். இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டியிருக்கு?
  13. அதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்தில்லை. புலிகளை தண்டிப்பதற்கு முதல் இந்த வன்முறையை தூண்டியவர்கள், அதற்கான காரணம் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக நீதிபதியை மாற்றியவர் யார், ஏன், எதற்காக காரணம் வெளிக்கொணரப்படவேண்டும். கோயில்களை இடிக்கவும், இறைச்சிக்கடை வியாபாரத்தலங்கள் அமைக்க அனுமதியளித்தவர் யார்? அனைவரும் விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களது முறைகேடான பதவிகள் பறிக்கப்பட்டு அவர்களது வங்கிக்கணக்குகள் ஆராயப்பட்டு முறைகேடான பணச்சேர்ப்பு பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதாவது தமிழரும் முஸ்லிம்களும் இணைந்திருந்தால் தமது திட்டம் நிறைவேற்ற முடியாது, ஆகவே எங்களை இரண்டு படுத்த அவர்களுக்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது. தமிழரை பெலயீனப்படுத்த முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தருவதாக வாக்களித்து செயற்பட்டிருக்கிறார்கள். தமிழர் முடிந்தபின் இவர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா? அதன் பலனை கண்டோமே. இவர்களிடம் இருந்து கிழக்கை பறிப்பது சிங்களத்துக்கு ஒன்றும் பெரிய காரியமல்ல. சொந்த காணியை பறிக்க முடியுமென்றால், கள்ளக்காணியை பறிப்பது ஒன்றும் பெரிய பிரச்னையல்லவே. அறிவு இல்லாத ஜென்மங்கள் தங்களையும் தனிமைப்படுத்தி, தமிழரையும் அழிக்கிறார்கள். அதனாற்தான் வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்தஆறு ஓடும் என்று எச்சரிக்கிறார்கள் பின் விளைவை எதிர்பாராமல். இதையே போரின் பின் விநாயக மூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தனும் சேர்ந்து கோரஸ் பாடுகிறார்கள். வடக்கு கிழக்கு இணைவது தமிழர் பெலம் பெறும் என்பது சிங்களத்துக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இந்த மூடர்களை அது பாவித்து தன் திட்டத்தை நிறைவேற்றுகிறது. பேசுவது தமிழ், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்லக்கூடாதாம். அறிவு எவ்வளவு என்று பாருங்கள்!
  14. அவர்களுக்கு அது கேவலமாக தெரியாது. இனத்தை விற்று, அவர்களுக்கொரு தீர்வு வந்து விடக்கூடாது என்பதற்காக அலைகிறார்கள். தீர்வு வந்தால்; இவர்கள் யாருக்கு சேவகம் செய்வது? எப்படி உயிர் வாழ்வது? இப்போ, இது ஒரு தொழில்! நாளாந்தம் மனித நேயம் பேசிக்கொண்டு நமது இழப்பில் வியாபாரம் செய்கிறார்கள்.
  15. ஓ.... கடத்தல் மன்னர்கள் சிறையில் இருப்பதால், வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா தொழில்? தொழில் அனுபவம் காணாது போலுள்ளது.
  16. தங்களது ஊழல்களையும் குற்றங்களையும் மறைப்பதற்காக ராஜ பக்ஸக்கள் செய்யும் திசை திருப்பல்கள். வெகு சீக்கிரம் உயர்த்த ஞாயிறு விசாரணை முடிந்து இவர்களை தூக்கு மேடைக்கோ, சிறைக்கோ ஆயுள் தண்டனையில் அனுப்ப, இதெல்லாம் அடங்கும். மின்சாரக்கதிரையில் ஏற அவதிப்பட்டவர் இங்கே போகட்டும். அவருக்கு தெரியும் தான் செய்த குற்றங்களுக்கு அதுதான் தண்டனையென்பது.
  17. முஸ்லிம்கள் மீது புலிகளின் இனச்சுத்திகரிப்பு என சிறிலங்கா அரசு அதை சுட்டிக்காட்டி அரபு முஸ்லீம் நாடுகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசு ஆதரவில் இயங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரின் அட்டகாசம் அதிகரித்திருந்தது. தமிழ்க்கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாக்கியது. அப்பாவித்தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு, விரட்டப்பட்டு, காடுகளிலும் உறவினர் வீடுகளிலும் இழப்புகளோடு தஞ்சமடைந்து இருந்தபோது, இப்போது மனித நேயம் பேசும் ஒருவரும் அந்த மக்களுக்கு பாதுகாப்பளிக்கவில்லையே? அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் அன்று புலிகளைத்தவிர யாரும் முன்வரவில்லை. அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்தவர் விநாயக மூர்த்தி முரளிதரன். அன்று யாழ்ப்பாண தலைமையகத்திற்கு சென்ற விநாயக மூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி பற்றி முறையிட்டார். விநாயக மூர்த்தி முரளிதரனின் தூண்டுதலிலேயே யாழ்ப்பாணமுஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் எதிரொலி இங்கும்நிகழ்ந்து விடக்கூடும் எனும் அச்சம் எழுந்திருக்கலாம், அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலையை தவிர்ப்பதற்காக முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அங்கு அப்படியான ஒரு சூழலை முதலில் வலிந்து தோற்றுவித்தவர்கள் முஸ்லிம்களே! அன்றும் இன்றும் அவர்களுடைய குறிக்கோள், தமிழரை கிழக்கிலிருந்து அழித்தொழிப்பதே. அருண் சித்தார்த் சொல்லுது, குருக்கள் மடத்தில் நடந்த படுகொலைகள் புலிகளால் நடத்தப்பட்டதாம். அதற்காக புனர்வாழ்வளிக்கபட்ட முன்னாள் புலிகளும், புலம்பெயர் புலிகளும் தண்டிக்கப்படவேண்டுமாம், இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் முன்னாள் புலிகள் தண்டிக்கப்படக்கூடாதாம். காசு கொடுத்து தப்பி போய் வெளிநாடுகளில் இருந்துகொண்டு போராடுகிறார்களாம். இவருக்கு அப்போது தப்பிப்போக காசு இல்லைபோலும், அந்த வயிற்ரறெரிச்சலை கொட்டுது, தனது எஜமானை சிக்க வைப்பதும், இன்னும் இந்த பிரச்சனை மறக்கப்படாமல் இருப்பதற்கும் இவர்களே காரணமாயிருப்பதால், அவர்கள் மீது கோபமும் இப்படி கதைக்க வைக்கிறது. இவன் தமிழனா? இவனை பேசாமல் என்ன செய்வது? எந்த தொழிலும் உயர்வானதே, ஆனால் இவன் இப்போது இனத்தை விற்றுசெய்யும் தொழில் ஈனத்தனமானது, அருவருக்கத்தக்கது. மரியாதையை யாரும் கேட்டுப்பெற முடியாது, அது நமது நடத்தையால் பிறர் நமக்குத் தருவது, பிறருக்கு நமது செயல் மீது ஏற்படும் ஈர்ப்பு.
  18. காலங்காலமாக ஒரு இனத்தை குறிவைத்து, அவர்களது பொருளாதாரம், உடைமை, உயிர் என்பவற்றை தாக்கி அழித்து துரத்தும்போது, சிங்களத்தோடு தோளோடு தோள் நின்று வாரிச்சுருட்டியது இந்த ஈனப்பட்ட இனம். முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து மக்கள் பிரதிநிதி என்று பாராளுமன்றம் போனவர், முஸ்லிம்களின் மேடைகளில் தோன்றி முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூப்பாடு போட்டார். ஆனால் குறிவைத்து அப்பப்போ தாக்கியழிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதாரம் காணாது என்று உரத்துச்சொல்லிப்போட்டு, இன்றும் இந்த மக்களின் பிரதிநிதி தான் என்று அடாவடி பண்ணுகிறாரோ அது தெரியவில்லையா? கிழக்கு மாகாணத்த்துக்கு ஒரு முஸ்லீம் முதலமைச்சராக வந்தால் கிழக்கை முற்றாக கைப்பற்றி முஸ்லீம் மாகாணமாக மாற்றவேண்டும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை இல்லாது செய்ய வேண்டுமென்ற முஸ்லிம்களோடு சேர்ந்து முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தாரே தாங்கள் அறியவில்லையா? ஊர்காவற்படை என்பது தமிழருக்ககெதிராக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட ஒரு ஆயுத குழு. அது கிழக்கில் செய்த அட்டூ ழியங்கள் யாவரும் அறிவர். அப்படியான ஒரு அழிவு வடக்கில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்படிருக்கலாம். அதற்காக அவர்கள் பின் மன்னிப்பும் கேட்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் செய்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டார்களா? இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் அப்பப்போ கூறி தமிழர் தான் குற்றவாளிகள் என அவர்கள் நிறுவுகிறார்கள், அதற்கு வக்காலத்து கொடுப்பதும் நாம் தான். சிங்களம் தமிழரை தாக்கினால் அவர்களோடு கேளாமலேயே ஒன்று சேர்ந்து தாக்குகிறார்கள் தமிழரை,சிங்களம் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கிளம்பியபோது ஒரு முஸ்லீம் அரசியல்வாதி சொன்னார் நாட்டை இரண்டுபடுத்தும் போரில் முஸ்லிம்களை கேளாமலேயே தாம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி போரிட்டபோதும் அரசாங்கம் தங்கள் மீது வன்முறையை கட்டவிழ்ப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் தங்களுக்கு அந்த நேரத்தில் தமிழரிடமிருந்து ஆதரவு தரவேண்டுமென்றும் பேசினார்கள். எப்படி இருக்கிறது அவர்களது நிஞாயம்? தமிழர் அதிகாரம் கேட்டால் மட்டும் தங்களுக்கும் வேண்டுமென்று கூச்சலிடுகிறார்கள். கேட்க வேண்டியது, அது என்ன அவர்களோடு சேர்ந்து கூடிக்குலாவுவது, தமிழர் கேட்டவுடன் மட்டும் இவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது? இந்த இனம் ஒரு கொள்கை இல்லாமல் ரத்தம் குடித்து வாழும் இனம். அதனால் சிங்களம் இவர்களை பயன்படுத்துகிறது. ஹிஸ்புல்லா, நசீர் போன்றவர்கள் அவர்களுடன் சேர்ந்தவர்கள் கிழக்கில் வேண்டுமென்றே கொலைகளை நடத்தினர் தமிழருக்கெதிராக. அதை ஹிஸ்புல்லாவே வெளிப்படையாக கூறியிருக்கிறான். கிழக்கு முஸ்லிம்களுடைய மாகாணமாக்குவதற்காக திட்டமிட்டு படுகொலைகளை நடத்தி அந்த மக்களை விரட்டினான். இப்போ பாருங்கள்... முழுமையான விசாரணைநடத்தி பறிக்கப்பட்ட நிலங்கள் மீள அந்த மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமென்கிற நிலை வந்தால், வந்தால்.... முஸ்லிம்கள் எப்படி மாறுவார்கள் என்று! ஹி ஹி என்று கொண்டு, எந்த வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் வந்து ஒட்டிக்கொள்வார்கள்.
  19. இது வருடாவருடம் நடக்கும் சம்பவம். எத்தனை கஸ்ரப்பட்டு படித்து முன்னுக்கு வருகிறார்கள், இது சாதாரண மாணவர்கள் செய்யும் வேலையல்ல. நாளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டியவர்கள். இவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் இவர்களை திருத்த முடியாது. பிறரின் துன்பத்தில் மகிழும்மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்.
  20. நான் நினைக்கிறன் இவருடைய ஒரு தங்கை மருத்துவ தாதியாக பணியாற்றியவர். எனது கணிப்பு சரியா? மிகவும் சிவந்த நிறமுள்ளவர்.
  21. ம். நன்றாகவே தெரியும். பெயரை நான் சொல்லாமல் விட்டதற்கு காரணம் ஒருவேளை அவராக இல்லாமல் இருந்திருந்தால் என்பதற்காகவே. அவர் யாழ்ப்பாண பெண்கள் பாடசாலையில் அதிபராக இருந்திருப்பார் என நினைக்கிறன். அவர்களை இரணைமடுவுக்கு சுற்றுலா கூட்டிச்சென்றபோது தவறுதலாக இரு பெண்கள் குளத்தில் விழுந்து இறந்து விட்டார்கள். இதனால் மிகவும் மனமுடைந்து கஸ்ரப்பட்டார்கள்.
  22. என்ன இது? நல்ல நண்பர்கள், கலியாண வீட்டில் பொட்டலம் எல்லாம் கடத்தி, கட்டியணைத்தீர்கள். விலாசம் தெரியாமலா? விலாசம் தராமலா பார்சல் வரவில்லை என்று ஏங்குகிறார்? பயணம் போவதும் வருவதும் பிரச்சனையல்ல, கொண்டுவரும் பொருட்களை கொடுத்து முடிப்பதே பெரிய வேலை.
  23. இது தொல்பொருள் அமைச்சுக்கு தெரியுமோ? உடனடியாக வந்துதடை ஏற்படுத்தி தேடத்தொடங்கி விடுவார்களே? பௌத்த சாசன அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு தமிழரின் காணிகளை பிடித்த அமைச்சரின் பெயரை மறந்து விட்டேன், அவரும் மறைந்து விட்டாரா? கள்ளரின் தொலைபேசிகளும் செயலிழந்து விட்டனவாம்.
  24. யாரோ அப்பாவி சின்னப்பையன், பெற்றோரோடு அமர ஆசைப்படுகிறார் என்று நினைத்திருப்பார். அது சரி, தங்களின் பயணக்கட்டுரை எப்போ வெளிவருகுதாம்? படிக்க ஆவல்! கொண்டுவந்த பொட்டலங்கள் பகிர்ந்தளிச்சாச்சா உரியவர்களுக்கு, அன்பானவர்களுக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு?
  25. தொழில் நுட்ப கோளாறான விமானம் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது? நெதன்யாகு பாவம், அவர் யாரையும் கொலை செய்ய நினைக்கவில்லை. நேற்று சத்துணவுக்கு வரிசையில் நின்ற குழந்தைகளை இலக்கு, இன்று தண்ணீருக்கு நின்ற குழந்தைகள் இலக்கு. ஆனால் அது தொழில் நுட்ப கோளாறா, நெதன்யாகுவின் மூளைக்கோளாறா? போர் முடியுமுன்னோ பின்னோ நெதன்யாகு அரசியலில் இருந்து துரத்தப்படுவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.