Everything posted by satan
-
புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை - ஈபிடிபி
எதிரியோடு இயங்கியதை எவ்வாறு சொல்வார்? அதனாலேயே கிழக்கில் தொடருகிறது கைது. அடுத்து இவர்பக்கமே திரும்ப இருக்கிறது. அதனாலேயே கம்மன்பிலவும் புலிகளை அழைக்கிறார், இவரும் பூச்சடிக்கிறார். இவர்கள் அங்கேயும் பாதுகாப்பு தேடி போக இயலாது, இங்கேயும் அனுதாபம் பெற இயலாது. இவர் கைது செய்யப்படும்போது வெடிகொழுத்தி ஆராவாரிப்பார்கள் வடக்கு மக்கள். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான். இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று ஏற்கெனவே தெரியும், இவ்வளவு விரைவாக வருமென்று நினைக்கவில்லை. நாம் செய்த குற்றங்களை, எங்களால் பாதிக்கப்பட்டவர்களை நாம் மறந்து விடலாம், ஆனால் அந்த குற்றங்கள் மறப்பதில்லை. அது நம்மோடேயே பயணம் செய்யும் நம்மை பழி தீர்க்கும்வரை.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் கைதாகி இருந்தவரை 2019இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூற முயல்வதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆமா .... சிறையில் இருந்தவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி தெரியாது. ஆனால் அது பற்றி பக்கம் பக்கமாக கடிதம் எழுதவும், புத்தகம் எழுதவும் எப்படி தெரிந்ததாம்? அது இருக்க தமிழ் இளைஞர்களை கைது செய்யும்போது உறவினர்களுக்கு அறிவித்தார்களா? சிறையில் இருந்த இளைஞர்களை உறவினர்கள் சந்திக்க அனுமதியளித்தனரா? கைது செய்தவர்கள் எங்கே, அவர்களுக்கு என்ன நடந்தது என்று உறவினர்களுக்கு அறிவித்தார்களா? அப்போ இவர் அதுபற்றி ஊடக சந்திப்பு நடத்தி கேள்வி கேட்க்காதது ஏன்? இவர் சிவநேசதுரை சந்திரகாசனுக்காக வாதாடுகிறாரா? தங்கள் பெயர்கள் வெளிவராமல் தடுக்கிறாரா? சிறையில் சந்திக்கும் வக்கீல் இவராம், நீதிமன்றத்தில் வழக்காடுவது வேறொரு சட்டத்தரணியாம். இதிலிருந்தே இவர் ஏன் இப்படி அவசரப்படுகிறார் என்பது தெரிகிறது. இப்போ சந்திரகாசனால் இவர்களும், இவர்களது அவசரத்தினால் சாந்திரகாசனும் மாட்டுபடப்போகிறார்கள். இப்போ, கிழக்கு பல்கலை விரிவுரையாளர் கடத்தல் சம்பந்தமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றே வி. முரளிதரன் இவரை காட்டிக்கொடுத்தார், கைதும் அதற்காகவே. தப்பில்லையென்றால் ஏன் இவ்வளவு அவசரம்? ஒப்பீட்டுப்பேச்சு? புலிகளை ஏன் இழுத்து தங்களை மூட முயற்சிக்கிறார்? அப்படியா? அப்போ ஏன் ஓடி இராணுவத்திடம் சரணடைந்தனர்? மஹிந்தா தான்தான் புலிகளை வெற்றி கொண்டேனென விழா கொண்டாடினார்? அவ்வளவு வீரன் ஏன் கண்ணீர் வடிக்கிறார்? அதற்குள் கம்மன்பிலவே கைது செய்யப்படலாம். ஏற்கெனவே வேறொருவருக்கு சொந்தமான காணியை விற்று காசு பார்த்தார், அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படலாம். ம் .... இவர்களுக்காக பல குற்றங்கள் புரிந்த தன் இனக்காரன் கஜ்ஜாவையே சிறையில் சென்று சந்திக்கவில்லை என்கிற கோபத்தில் இவர்களை காட்டிக்கொடுக்க வெளிக்கிட்டு பிள்ளைகளையும் தன்னையும் அவர்களிடம் பலி கொடுத்தார். இவரும் அவர்களாலேயே தீர்த்துக்கட்டப்படுவார். இவர் மட்டுமல்ல இவரோடு சேர்ந்து இயங்கிய பலரின் கதை இயக்கியவர்களாலேயே முடியலாம். பழியை அரசாங்கத்தின் மீது போடலாம். அவர்களும், அவர்களுக்காக இவர்களும் செய்த கொலைகளில் இது ஒன்றும் பெரிதல்லவே.
-
புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை - ஈபிடிபி
இப்போ எதற்கு இந்த புது விளக்கம்? ஐயா விரைவில் கம்பி எண்ண போகப்போகிறாரென கதை அடிபடுகிறது. புலிகள், தாம் இருக்குமளவும் என்னென்ன செய்யவேண்டுமோ செய்துவிட்டார்கள். ஆனால் இப்போ அரசியல் செய்வோருக்கெல்லாம் புலிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டி இருக்கு. காட்டிக்கொடுத்தவன் கூட்டிக்கொடுத்தவனுக்கெல்லாம். இவர்களுக்கெல்லாம் பணம், பதவி வந்தது அவராலேயே.
-
சும்மா ஒர் பதிவு
தங்களின் இடத்தை சுத்தமாக வைத்திருக்க தெரியாதவர்கள், சும்மா நித்திரை கொண்டுவிட்டு, வேலை செய்பவனை பார்த்து இப்படி கூறினால், தங்கள் தப்பு மறைந்துவிடுமென நினைக்கிறார்கள், அற்பங்கள். இதுகள் வெளிநாட்டுக்கு போனாலும் உழைக்க மாட்டார்கள். வெளிநாட்டில் சும்மா பணம் அள்ளிக்கொட்டுகிறார்கள் என சிலர் நினைத்து கதையளப்பர். அவர்களின் அறிவு அவ்வளவு மந்தமானது.
-
நானும் ஊர்க் காணியும்
ஒன்று வரி செலுத்துங்கள், இல்லையேல் உடலை வருத்துங்கள். எப்படியென்றாலும் உங்கள் உடல் உழைத்தாலேயே வரியும் செலுத்த முடியும். புல் பிடுங்குவது ஒரு பொழுது போக்கு, உடற்பயிற்சி. ஒரு உழவாரம் வாங்குங்கள், முதலில் ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் முப்பது நிமிடம் செருக்குங்கள், பின் நீங்களாகவே உங்களையறியாமல் நேரம் போவது தெரியாமல் செருக்குவீர்கள். அல்லது அயலில் யாராவது மாடு வைத்திருந்தால் செருக்கி எடுக்கும்படி சொல்லுங்கள். அதுவும் இல்லையென்றால், உழுது விட்டு புல்லை வேரோடு அரித்து எடுத்து எரித்து விடுங்கள்.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
இவரும் கைது செய்யப்படும் காலம் வரும் அதுவரை பிள்ளையான் கைதை வரவேற்று காத்திருக்கட்டும். விநாயக மூத்தி முரளிதரன், டக்ளஸ் இப்படி பட்டியல் நீளும். மஹிந்தா ரணில் உதயன் கம்மன்பில இப்படிப்பலர் சிக்குவார்கள். இவர்களில் இப்போ கைவைத்தால், அரசியல் பழிவாங்கல் என்று கூப்பாடு போடுவார்கள். அதையே வைத்து அனுதாப அலையில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற பயன்படுத்துவார்கள். பிள்ளையான் இவர்களின் எடுப்பார்க்கைப்பிள்ளை, இவர் இப்போ எல்லோரையும் போட்டுக்கொடுக்கப்போகிறார், பிள்ளையானோ, முரளிதரனோ ஏன்? யாருக்காக கொலைகளை செய்தனர் என்பது விசாரணையில் வெளிவர, அதன்பின் வரிசையாக உள்ளே அழைக்கப்படுவார்கள். அதனாலேயே ரணில் அவரை சந்திக்க துடிக்கிறார். அப்போ ரணிலுக்கும் பிள்ளையான் கொலைகளுக்கும் தொடர்புண்டா? அல்லது மஹிந்த கூட்டத்திற்காக சென்றாரா? வழமையாக மஹிந்தாதான் இவர்களை சந்திக்க ஓடுவார், இவர் ஏன் குறுக்க ஓடுறார்? இவரே தனது நல்லாட்சிக்காலத்தில் அவரை கைது செய்து சிறையில் வைத்தவர்தானே? இப்போ என்ன அவ்வளவு அவசர சந்திப்பு வேண்டிக்கிடக்கு இவருக்கு? இவரும் போகத்தான் போகிறார் அப்போ சந்திக்கலாமே?
-
நானும் ஊர்க் காணியும்
நீங்கள் கடினமான வேலை செய்து பழக்கப்படாதவர், முதல்முதல் பிடுங்கும் போது அப்படித்தான் வரும். தொடர்ந்து செய்யும்போது கைகள் பலப்பட்டு, பின்பு நீங்களே வேலை பழகி, அவர்களை விட வேகமாகவும், அழகாகவும் செய்வீர்கள். அதன்பின் வீட்டில் இருக்க மாட்டீர்கள், தோட்டத்திற்குள் ஏதாவது செய்துகொண்டே இருப்பீர்கள். வேலையாட்கள் தேவையில்லை என்றே சொல்வீர்கள். எங்கள் அம்மாவுக்கும் உந்த வேலைகள் பரீட்சயமில்லை. ஆரம்பத்தில் விரல்கள் எல்லாம் பொக்களமாக்கி பல ஊசிகள் ஏற்றப்பட்டன. அதன்பின் தோட்டத்தில் எல்லாவேலையும் தானே செய்வா வீட்டுக்கு வராமலே நின்று. நாங்கள் கற்றுக்கொண்டு நமது வேலையை நாமே செய்ய ஆரம்பிக்கும்போது, தாங்கள் முறையாக, நிஞாயமாக வேலை செய்யாவிட்டால் தம்மை இனி யாரும் வேலைக்கு அழைக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து சரியாக செய்வார்கள். இல்லது வேலை என்று சொல்லி வந்து சொறிவதை மறந்து விட வேண்டும்.
-
நானும் ஊர்க் காணியும்
நாங்கள் ஒரு வேலைக்கு போனால்; மனச்சாட்சிக்கு பயந்து, சரியாக, வாங்கும் சம்பளத்துக்குஉண்மையாக, சம்பளம் தருபவர் மனநிறைவடையும் படி உழைக்கிறோம். அப்படித்தான் மற்றவர்களும் என நினைப்பது தவறு. அவர்கள் ஓம் என்று ஒத்துக்கொள்வார்கள், பிறகு ஏதேதோ சொல்லி இடையில் சென்றுவிடுவார்கள். அவர்கள் விட்ட குறை வேலையை வேறொருவர் தொடர மாட்டார். காரணம், அவர்களுக்குள் ஒரு கொள்கை. அதனால் அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடித்து தாங்கள் நினைப்பதை சாதித்து விடுகிறார்கள். ஒன்று, நீங்களும் அவர்களோடு களத்தில் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும், எல்லா வேலைகளும் முடியாது. புல்லுபிடுங்கல், கூட்டல், துடைத்தல் வேலைகளில். மற்ற வேலைகளில் அவர்களோடு கூட நிற்பது நல்லது. நாங்களும் எங்கள் உறவினர்களை வேலைக்கு அழைத்தே நிறைய இழந்துவிட்டோம், இதனால் அவர்கள் நினைப்பது; நம்மை எப்படியென்றாலும் ஏமாற்றலாம், அவர்களை விட எங்களுக்கு வேலைக்கு வேறு கதி இல்லையென்றே. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்ற கற்றுக்கொண்டு விட்டார்கள். நாமே நம் வேலை செய்ய முயற்சித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.
-
நானும் ஊர்க் காணியும்
வாரம் செய்தறி, வழி நடந்தறி, தோழமை கூடியறி என்பார்கள். அனுபவமே சிறந்த ஆசிரியர். இனி ஊரிலை வசிக்கிற எண்ணம் இருந்தால்; எதற்கும் அவசரப்படாமல் நன்றாக விசாரித்து அறிந்து வேலைக்கு ஆட்களை அமர்த்துங்கள், பழகுங்கள். பழையவர்களை பகைமை பாராட்டாமல் விலத்தி நடவுங்கள். உங்களை ஏமாற்றியவர்கள் உங்களுடன் நட்பாக இருப்பவர்களை உங்களுக்கு எதிராக திருப்புவார்கள். கவனம்!
-
நானும் ஊர்க் காணியும்
ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனை அறிமுகப்படுத்தி கருவறுக்கிறது இந்த லட்ச்சணத்தில பத்து வருஷம் தரட்டாம். இப்பவாவது புத்தி வந்ததே அதுவே போதும். உந்த கூட்டத்தோட என்னென்று குடியிருக்கிறது? ம், அக்கா வீட்டில தான் மண்வெட்டி இருந்ததோ? தாங்களாகவே வீட்டில இருக்கிறதென முடிவு எடுத்திட்டினம். வாங்கின வீட்டை ஊரோட உறவோட வாங்கியிருக்கலாம், எடுத்தாலும் உறவுக்குள்ள என்று மனம் ஆறலாம். இப்போ ஊர் ரொம்ப கெட்டுப்போச்சு உயிரோட வந்ததே பெரிய காரியம். ஒருநாளைக்கு நித்திரையால எழும்ப பிந்தினால் தூக்கிக்கொண்டுபோய் தீ வைத்து விடுவார்கள். ஒருவரைபாத்து மற்றவர் பழகுவது, மற்றவரை குறை சொல்லிக்கொண்டு தாங்கள்நல்லவர்கள் போல், தங்கள் குறைகளை மறைப்பது.
-
நானும் ஊர்க் காணியும்
நாள் கூலி இல்லாமல் கொண்ராக்காக கொடுத்தீர்களென்றால் அரைநாளிலேயே செய்து முடித்து விடுவார்கள். சிலர் ஆடு கடித்ததுபோலவும் செய்வார்கள்.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
அவர்கள் காரணம் ஏதும் தெரிவிக்க விட்ட்டாலும், கைது செய்யப்பட்டவருக்கு தெரியும் காரணம். ஏற்கெனவே விநாயக மூர்த்தி முரளிதரன் தனது விசாரணையில் எல்லாவற்றையும் கூறிவிட்டார். இனி இவர் தன் பங்குக்கு அவரை காட்டிக்கொடுக்கட்டும். தான் விட்டெறிந்த பந்து திரும்பி வந்து தன்னை தாக்குமென்று தெரியாதவர்களா இவர்கள்?
-
நானும் ஊர்க் காணியும்
எனக்கென்னவோ ஆளாளுக்கு ஒருவரை சாட்டி ஒருவர் விளையாடுகிறார்கள் போலுள்ளது. சும்மா இருத்துகிறீர்கள் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போகின்றனர். எது எது இருக்கிறது என்றொரு கணக்கில்லாமல் கொடுப்பது, போகும்போது அது எங்கே என்று கணக்கு கேட்பதில்லை கோவில் சொத்துபோல் தமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அடுத்தவர் மேல் பழி போடுவது. நான் செய்கிறேன் என்று இழுத்துப்போடுவோர் மட்டும் நல்லவர்கள் இல்லை. ரதி அக்காவில எனக்கொரு சந்தேகம், வீட்டில் குடியிருப்பவர் ரதி அக்காவுக்கு வேண்டப்பட்டவரோ, உறவினரோ? பொறுத்திருந்து பாப்போம்.
-
நானும் ஊர்க் காணியும்
சொந்த ஊரில், உறவுகளே வீட்டின் ஓடுகளை, கதவுகள், மின்குமிழ்கள்களை கழற்றி தமது வீட்டுக்கு மாற்றினார்கள், விற்றார்கள். எல்லா இடத்திலும், எல்லாரிடமும் உந்த கள்ள புத்தி உண்டு. ஒருவர் களவெடுத்து கொண்டு வீட்டை மாறினால், சொந்தக்காரர் எந்த நடவடிக்கையும் அதற்கெதிராக எடுக்காவிட்டால், தொடர்ந்து வருபவர்களும் அதையே செய்வார்கள். நீங்கள் எத்தனை பேரை மாற்றி மாற்றி இருத்தினாலும் உது தொடர்கதையாகும்.
-
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது; ஈ.பி.டி.பி தெரிவிப்பு
உண்மையை சொன்னால் சேறடிப்பா தேர்தல் காலங்களில் மட்டுமல்ல எப்போதுமே உங்கள் மேல் விமர்சனம் உள்ளது ஏதோ பெரிய கட்சி பெருமெடுப்பில் வெற்றியீட்டுவதுபோல் பிம்பம் காட்டுகிறார். இவ்வளவு காலமும் எதை வைத்து அரசியல் செய்தார்கள்? ஏன் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள்? இப்போ இவர்களை சுற்றி ஏமாற்று, ஊழல் வழக்குகள் தொடர இருப்பதால் புதுப்புரளி.
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து 101 பேர் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்
தலையங்கத்துக்கும் செய்திக்கும் தொடர்பில்லை.
-
அப்பா ஏன் பின்தங்குகின்றார்.
என்ன, அப்பாவைப்பற்றியுயே தேடிதேடிப்படிக்கிறீர்கள் போலுள்ளதே! அப்பா, தன் அன்பையும் தேவையையும் கவலைகளையும் களைப்பையும் ஒருபோதும் வெளியில் காட்டுவதில்லை பொருட்படுத்துவதுமில்லை. காரணம், குடும்பத்தின் தேவைகள், கவலைகள், ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பதால். அதனால் அவருக்கு ஏதும் குறைகள் இருப்பதாக அல்லது அவைகள் பிறரின் கண்ணுக்கு தெரிவதில்லை. அங்கேயும் ஒரு ஆன்மா, பிறர் தன் தேவைகள், குறைகள், கவலைகள் மற்றவரால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், கவனிக்கப்படவேண்டுமென மௌனமாக ஏங்குகிறது.
-
நானும் ஊர்க் காணியும்
வீடு இருந்தாலும் கஸ்ரம், இல்லையென்றாலும் கஸ்ரம். ஊரில் வீட்டை வாங்கி விட்டு வெளிநாட்டில் இருப்பவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. கேட்டால், தேவையில்லாத பகை. இருந்த நிம்மதியும் வாங்கிய வீட்டால் போய்விட்டது. ம் ....... தொடருங்கள் பாப்போம். உந்த விஷயம் வீட்டு அம்மாவுக்குத் தெரியுமோ? நானும் வீட்டைப்பாக்கப்போறேன் என்று வெளிக்கிட்டா என்றா சாமியாரின் கதை கந்தல்.
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
ஒன்றை கவனித்தீர்களோ? எப்போதும் கறுப்பு கோர்ட் சூட்டோடு திரிபவர், இந்தமுறை மோடி நிறத்தில நிக்கிறார். நானும் உங்களில் ஒருவன்! யாரோ சொன்னார்கள் சுமந்திரன் இந்தியாவின் கைக்கூலியல்ல, அமெரிக்க எஜமானின் நண்பன் என்று. இங்க பாத்தால்; மோடியோடு ஒட்டிக்கொண்டு நிக்கிறார். உவர் மக்களுக்காக உழைப்பவரல்ல, சும்மா படம் காட்ட ஒவ்வொரு நவீன உடுப்பை வெளியிடுவார். முந்தி கடற்தொழிலாளர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் குல்லா தொப்பியோட படம் காட்டினவர். நான் தமிழர் பிரதிநிதி, ஆனால் வெள்ளைக்காரன் என்கிற நினைப்பு. இவர் நவீன உடை அழகு காட்சிக்குத்தான் பொருத்தமானவர். போயும் சந்திக்கினம், வரும்போதெல்லாம் சந்திக்கினம், அவரும் பாசாங்காக தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென சவுண்டு விடுவார். அந்தப்பிரச்சனை தீர்ந்தால் இந்தியாவை யார் கணக்கெடுப்பார்? ஏன் இங்கு வரவேண்டிய தேவை அவர்களுக்கு? தன் நாடுபோல் தன் நாட்டு பாதுகாப்போடு வந்திருக்கிறார், யாரும் எதிர்க்கவில்லை. அப்படியிருக்கும்போது தமிழர் பிரச்சனை அவர்களுக்கு சாதகமானதே.
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர்
சட்டம்பியாரிடம் யாரும் மகஜர் கையளிக்கவில்லையோ? அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இல்லையென்பது யாவரும் அறிந்ததே, ஆனாலும் முந்திக்கொண்டு அறிக்கை விடுவதும், வெளிநாட்டுத்தூதுவர்களுடன் நின்று படம் பிடிப்பதும், அழைப்பு கிடைக்கப்பெற்றவர்களை முந்திக்கொண்டு தான் பயணம் செய்து காணொளி பதிவிடுவதும் பார்த்தால்; அவர் இன்னும் யதார்த்தத்தை புரியவில்லை என்பது தெரிகிறது. பாருங்கள்! எந்த வழியிலாவது புகுந்து மோடி, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் தரிசனமாவார். அவர் தமிழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்லி வாக்கு வாங்கினாலும் வக்காலத்து வாங்குவது, உழைப்பதெல்லாம் சிங்களத்துக்கே. மோடியே தனக்கு பாதுகாப்பில்லை என, தனது வான், தரை, விசேஷ கொமோண்டோ பாதுகாப்பு படையுடன் வந்திறங்கியிருக்கிறார். இதுபற்றி பேசவா போகிறார்? தன் நாட்டில் வைத்தே பேசாதவர், இங்கு வந்து பேசுவாராம். பாப்போம்!
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
நூறு வீதம் உண்மை. "தாம் பெற்ற துயரம் மற்றவர்களும் பெறவேண்டும்." என விரும்புபவர்கள். பல வருங்கால கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன், லட்சியங்களுடன் வரும் புதுமுக மாணவர்களை அன்புடன் வரவேற்று, அவர்களின் தயக்கத்தை போக்கி, விதிகளை அறிமுகப்படுத்துவதுதான் மூத்த மாணவர்களின் கடமை, ஆரோக்கியமான பண்பு. இதுகளெல்லாம், பகிரங்கமாக செய்ய முடியாதவற்றை பல்கலையில் செய்து வீரம் காட்டும் கோழைகள். சமுதாயத்திற்கு வேண்டப்படாதவர்கள். இவர்கள் படித்து என்னத்தை சாதிக்கப்போகிறார்கள்? சமுதாயத்தை நாசம் செய்யவே படிக்கிறார்கள்.
-
நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்!
- பூசா சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தமிழ் கைதி உயிரிழப்பு!
விளக்கமறியலில் இருந்த கைதியிடம் எப்படி, எங்கிருந்து கூரிய ஆயுதம் வந்தது? அதுவும் மற்றய கைதிகள் தாக்கப்படவில்லை தமிழ் கைதி குறிவைக்கப்பட்டுள்ளாரா? எங்கு சென்றாலும் தமிழரை விடுவதில்லை என விரட்டி கொலை செய்கிறார்கள்.- வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
ரஞ்சித் குமார வாக இருக்கலாம்.- நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
அது சரிதான், எதற்கு அவர் மறைந்து வாழ்ந்து, நேரலையில் தோன்றவேண்டும்? நேரடியாகவே தரிசனம் தந்தால் நம்புவோமில்ல. - பூசா சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தமிழ் கைதி உயிரிழப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.