Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அவர்களை உலகமெல்லாம் இழுத்து விட்டது அமெரிக்காதான்!
  2. இதைத்தான் சொல்லுறது, ஒருவருக்காவது தெரிவித்து வைத்திருக்க வேண்டுமென்று!
  3. நீங்கள் சொன்னபின் இந்த பழமொழியைத்தான் நினைத்தேன். இவர், புதுதும்புத்தடியை தூக்கி அடுத்த வீட்டையல்லோ கூட்டினவர். அது தும்புத்தடியின் பயன்பாட்டு காலத்தை பொறுத்து தூக்கியெறியும்போது தெரியும், கூட்டி துடைச்சுதா இல்லையா என்பது. இவர் அடுத்த தேர்தலில் வெல்லுற வழியை பாக்க வேணும், நெடுகிலும் வாயால வடை சுட்டுக் கொண்டு பாராளுமன்றம் போகேலாது. இப்போ ஒரு புது யுக்தி; தான் முதலில் தேசியபட்டியலின் மூலம் பாராளுமன்றம் போனாராம், அப்போ கட்சியில் சொன்னவர்களாம், நீங்கள் எப்போதும் தேசியப்பட்டியல் உறுப்பினராகவே இருந்து விடுங்கள் என்று. அதற்கு தான் மறுப்பு தெரிவித்து தேர்தலில் நின்று மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றம் போவேன் என்று சொல்லி தேர்தலில் நின்று வென்று பாராளுமன்றம் தெரிவானாராம். அந்த தும்புத்தடி இப்போ தூக்கியெறியப்பட்டுவிட்டது. இப்போ தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிமேல் ஆசை வந்துவிட்டது இவருக்கு. பாராளுமன்றம் போக என்னென்ன திட்டம் எல்லாம் போடுறார் பதவியாசை இல்லாத ஞானி. சவால் விடுகிறார், குழப்பத்தை உருவாக்குகிறார், எச்சரிக்கிறார். இவ்வளவுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இவர்.
  4. இது சரியான கருத்து, சிங்கள அரசியல் வாதிகளும் மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றனர். உண்மையான சமூகத்தை நேசிக்கும் மக்களின் பிரதிநிதி, இதைத்தான் சொல்லவேண்டும், செய்ய வேண்டும். அதைவிட்டு, பட்டி தொட்டியெல்லாம் மைக் பிடிச்சு கூவக்கூடாது பதவிவிலகுங்கோ பதவிவிலகுங்கோ என்று. அதை சொல்லவேண்டியது அவர்களை தெரிந்தெடுத்த மக்களே. இவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். ஏன் நிராகரித்தார்கள் என்று யோசித்து திருந்துவதை விடுத்து, தான் ஏதோ மக்களை வழிநடாத்துகிறவர் மாதிரி உளறிக்கொண்டு திரியிறார்.
  5. சிறியர், சாமியார், கந்தையர், பாஞ் மற்றும் ஜெர்மன் வாழும் கள உறவுகள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
  6. நாங்கள் முன்பே கூறியதுதான். சிவஞானத்தை குறிப்பிடாமல் விட்டுவிட்டாரோ. பதவிக்காக எந்தப்பக்கமும் இழுபடும் தன்மையானவர்கள். வேலியில போன ஓணான்களை பிடித்து, அவர்களின் பின்புலம்அறியாமல், வீட்டுக்குள்ள சேர்த்த மாவையரால, வீடு இரண்டாகி கலேபரமாயிருக்கு. இளையவர்கள், சட்டம் நுணுக்கம் தெரிந்தவர்கள், உதவியாக இருக்கும் என்று நினைத்திருப்பார். அவரோ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தெரியாமல், எதுக்கெடுத்தாலும் கோட்டு வாசலில் போய் நிக்கிறார்கள். அப்போ கட்சி பிரச்சனையை சுமுகமாக தீர்க்கத்தெரியாதவர், நீதிமன்ற பிரச்சனையை எப்படி கையாளுவார்? அரைகுறையால் இருந்ததையும் கெடுத்து விட்டதுதான் மிஞ்சியது. இந்த திறமையில் மோடி "உங்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள்." என்று அனுராவுக்கு கூறியது கேவலமாம். இருந்தாலும், சுமந்திரன் தந்திரமாய் பாராளுமன்றம் போனால், ரொம்ப மூக்குடைபடுவார். அவரது திட்டம், தமிழ்தேசியக்கட்சியை பிரித்து, தமிழரசுக்கட்சியை உடைத்து, தமிழரை சிங்களத்துக்கு அடிமையாக்குவது. அதை அவர் செவ்வனே செய்ய சில நாசகாரிகளை தெரிந்தெடுத்து வைத்திருக்கிறார், இன்னும் கொண்டுவருவார். இவர் ஆட்டம் நீடித்தால்; அடுத்த தேர்தலில் மக்கள் தமிழரசுக்கட்சியை துடக்கு கழித்து விடுவார்கள்.
  7. நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடப்போகிறேன் என்று அன்று அறிக்கை விட்டார், இன்று அடக்கி வாசிக்கிறார். அவர் இவரை நேர்மையற்றவர் என்கிறார், இவரோ அவரை சாடுகிறார். அதை விட வேறு பலரும் தம்மை இராணுவம் எனக்காட்டி அதிலும் தமது சம்பளத்தை பிடித்துக்கொண்டதாக கூறுகின்றனர். கிழக்கிலே விசாரணை ஆரம்பிக்க, இவர்க்கு வேற்குது போலிருக்கே!
  8. அனுரா, ஆரம்பத்திலேயே வைச்சார் பாருங்கள் குட்டு. சஜித்துக்கு வாக்கு கேட்டவர், பதவி அனுரா குடுக்க வேணும்? முதலமைச்சர் கனவும் இருக்கு இரண்டு பேருக்கு.
  9. அதுதான். மக்களின் பிரதிநிதிகள், ஒருவரை ஒருவர் பொறுத்து போகத்தெரியாது, மதிக்க தெரியாது, கொள்கைகளுக்கு அமைவாக நடப்பது கிடையாது, ஒற்றுமையாக அமைதியாக செயற்படத்தெரியாது. சின்னப்பிள்ளைகள் மாதிரி கோள் சொல்வது, அடம்பிடிப்பது, ம்..... என்றால் கோட்டுக்கு போவது. இவர்கள் எப்படி மக்களை வழிநடத்தப்போகிறார்கள்? சாதாரண மக்கள் தங்கள் நீதிமன்ற விடயங்களுக்காக காத்திருக்கிறார்கள், இவர்களோ காலத்தை, பணத்தை, சக்தியை விரையமாக்கிக்கொண்டு கடமைகளை செய்யாது குழுச்சண்டை, தகுதிக்கு மீறிய அதிகாரம். மற்றைய கட்சிகளில் அப்படியில்லையே. முன்பெல்லாம் தமிழரசுக்கட்சியின் ஒற்றுமையை பாராட்டுவார்கள். இப்போ இவர்கள் செய்வதெல்லாம் கேலிக்கூத்து. கூத்தாடியள்!
  10. சிவநேசதுரை சந்திரகாந்தனை நோக்கி கையை காண்பித்திருப்பாரோ? அதுபற்றி தனக்கு தெரிந்தவற்றை சொன்னேன் என்கிறார். சின்ன மீன்களை பிடித்தால், பெரிய மீன் தானாகவே வந்து மாட்டும்.
  11. அதன் பின்னும் நடந்தது, இன்னும் தொடருது. இவர் ஏன் அதை நிறுத்தவில்லை? அப்போ, இவர் அந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை தீர்க்கவில்லை. எல்லோருக்கும் அனுரமேல் காதல். எப்போ கூப்பிடுவார், குசலம் விசாரிக்கலாமென தவியாய் தவிக்கிறார்கள். தாங்கள் கடந்த எஜமானருடன் கூடிகூத்தடித்துவிட்டு இப்போ எல்லாம் அனுரா தலையில். அவரொருத்தர் அனுரா சொன்னதை செய்யேல்லை என்கிறார். நாட்டில் எங்கு திரும்பினாலும் பிரச்சினை, ஊழல், பொருளாதாரப்பிரச்சனை தலைதூக்க முடியவில்லை. முன்பிருந்தவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. அவர்கள் ஆட்சி முடிந்து போகும்போதோ அல்லது மீண்டும் ஆட்சியேறியபோதோ யாரும் கேள்வி கேட்க்காமல் நிபந்தனையில்லா ஒத்துழைப்பு கொடுத்து, நாட்டை அழித்தார்கள் சுருட்டினார்கள். அனுர வந்தது வரேல்லை சவால் விடுகிறார்கள், எச்சரிக்கிறார்கள், காலக்கெடு விதிக்கிறார்கள்,குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதுக்கு அனுரா மசியாவிட்டால், பாராட்டிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று, ஒன்று சேர அழைப்பெடுப்பார்கள். இதெல்லாம் இவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாமல் தோற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தம்மை பெரியவர் என காட்டும் மாயை.
  12. அவர்களுடைய வரலாறு அவர்களுக்கே விளங்காது. தங்கள் எண்ணத்துக்கு ஒவ்வொரு பிக்கு ஒவ்வொரு வரலாறு எழுதுவார் பௌத்தத்தையும் சிங்களத்தையும் பெருமைப்படுத்தி தமிழ்ப்பெயரை மாற்றி சிங்களப்பெயர் என்றும் கூறுவார்கள், அதனாற்தான் நாட்டில் இவ்வளவு குழப்பம்.
  13. அவர் ஏதோ பொழுது போக்குக்காக தான் சமூக சீர்கேடுகளை களைகிறேன் என்று போக்கு காட்டுகிறார், நீங்களும் நம்பிக்கொண்டு. பல காலமாக இந்த மதுபான சாலைகள் திறக்கப்படும்போதெல்லாம் மக்கள் எதிர்த்து போராடியிருக்கிறார்கள், நீதிமன்றங்களை நாடியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பேசாதவர், இப்போ ஏன் பேசுகிறாரென யோசியுங்கள். அனுரா, இவரை அழைத்து விசாரிக்க வேண்டும், நான் ஜனாதிபதியோடு தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசினேன், அவர் எனக்கு வாக்குறுதியளித்தார் என்று உளறிக்கொண்டு திரியலாம். ரணில் மதுபான சாலை உரிமம் கொடுத்தது தப்பில்லை, அது யாருக்கு கொடுத்தது என்று அறிவிப்பேன் என்று அனுரா சொல்லிவிட்டு சொல்லாமல் திரிவதுதான் தப்பாம். இதுமட்டுமா, மோடி அனுராவிடம், உங்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொன்னதும் கேவலமாம். அதோட குபேந்திரன் என்கிற பெயரையும் அறிமுகம் செய்து வைக்கிறார். இனிமேற்காலங்களில் அடிக்கடி இவரது பிரசன்னம்/பெயர் வரும். அடுத்த தேர்தலுக்கு வேட்ப்பாளராக அறிமுகமாகலாம்.
  14. அப்படித்தான் நினைத்தாலும், இங்கு ஒருவர், இவர் சொன்னதை மட்டும் தூக்கிக்கொண்டு மேடைபோட்டு விமர்ச்சிக்கிறார். அதனாலஅனுரா நடைமுறைப்படுத்தினாலும் படுத்தலாம். அல்லாட்டி சிங்கன் குடைச்சல் கொடுத்து, வழக்கு போட்டு பதவிவிலக வைத்துவிடுவார். அனுரா இவரை உள்ளுக்கு இழுக்குமட்டும், சிறிதரன் பதவி விலகுமட்டும் திரும்பத் திரும்ப பழைய சீலை கிழிஞ்ச மாதிரித்தான். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இராது கண்டியளோ! இன்னும் கொஞ்ச நாளில் தன்னிலேதான் கதைக்க வேண்டி வரப்போகுது. மக்கள் எத்தனை அல்லோல கல்லோல பட்டார்கள், வைத்தியசாலை அதிகாரிகளின் முறைகேடுகளால், இன்னும் பல ஊழல்களால். அதை கவனிக்க நேரமில்லை விரும்பவில்லை, தைரியமில்லை. தனக்கு கதிரை கிடைக்கேல என்கிற கடுப்பில் உளறிக்கொண்டு திரியிறார்.
  15. மாத்தையா, சீனாவுக்கு போய் என்ன வாங்கிக்கொண்டு வாறார் என்று பாப்போம். எங்களின் நாடு இவ்வளவு சீரழிந்ததற்கும் இரத்தம் சிந்தியதற்கும் காரணம் இந்தியாவின் பாதுகாப்பு முன்னுரிமை, தன்னைவிட இலங்கை முன்னேறிவிடக்கூடாது என்கிற கொள்கை. அதை இனவாதிகளும் பயன்படுத்திக்கொண்டனர். இது அனுராவுக்கு ஒன்றும் தெரியாததல்ல, தெரிந்தும் அந்த வலையில் விழுகிறாரென்றால் இவரால் மற்றைய தலைவர்களை விட பெரிசாய் எதை சாதிக்கப்போகிறார்? இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாடு முன்னேறுவது இயலாத காரியம்.
  16. தயவு செய்து அந்த அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, படித்த, துடிப்புள்ள, இளம் பட்டதாரிகளை நியமியுங்கள். அல்லது காது வைத்திய நிபுணரிடம் அனுப்பி பரிசோதனை செய்து காது கேட்க்கும் கருவி வசதியை ஏற்படுத்துங்கள் அவர்களுக்கு. செவிப்புலனற்றவர்கள், தாம் சேவை செய்ய முடியவில்லையே என வருந்துகிறார்கள். இவர்களுக்கு கொடுத்த வசதியை வைத்து மற்றவர்களை வதைக்கிறார்கள்.
  17. முன்னெச்சரிக்கை இல்லாத செயற்பாடு. நம்மிடம் எல்லா வளங்களுமுண்டு, பருவ காலத்திற்கேற்ப பாவிக்க, பதப்படுத்த, சேமிக்க தெரியவில்லை. இப்பிடித்தான் தரம் குறைந்தவைகளை கூடிய விலைக்கு இறக்குமதி.
  18. அதே, பின்னர் இதுவே அவர்களுக்கு பாதகமாய் அமைந்து விடும். இருந்தாலும் தான் நல்லபிள்ளை, இஸ்ரேல்தான் அடுத்தவரின் உரிமைகளை பறிப்பதுபோல் அறிக்கைகளும் விடுகினம்.
  19. இதிலிருந்து தப்புவதற்காக அனுராவுடன் இணைய முயற்சிக்கிறார், அனுரா தடாலடியாக இனவாத பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார். இவர் சிலரை மாட்டிவிட உத்தேசிப்பதுபோலுள்ளது. பாப்போம் எப்பிடி போகுதென்று?
  20. மாற்ற முடியாத அரசியல் என்று தமிழருக்கு சாதகமானவையை நீக்கி யாப்பு வடிச்சு வைச்சிருக்கினமெல்லோ, அப்படி, வலுவான, மாற்றமுடியாத, அசைக்க முடியாத சட்டமாக இயற்றி, நடைமுறைப்படுத்தவேண்டும் இவரது காலத்திலேயே. இவர் சொன்னவற்றை நிறைவேற்றினால்; இவர்தான் சதாகால ஜனாதிபதி! சின்னப்பொடியன்தானே, காலம் நிறைய இருக்கு அவருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.