Everything posted by satan
-
“தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
இவர்கள்தான் அவர்களை கைது செய்ய பின்னடித்தவர்கள். அப்போ.... மேலே இருந்து கட்டளை வந்திருக்கோ? தொழிலை பாரபட்ஷம் இல்லாமல் செய்யத்தெரியாதவர்களை வெளியே அனுப்பி விடுங்கள். நாளைக்கு அரசியல்வாதி, சட்டத்தரணி, தொழிலதிபர் என்று யாரும் வந்தவுடன் அவர்களுக்கு விலை போய்விடுவார்கள். முதலில் அவர்களது கடமை என்ன, அதை எப்படி நிறைவேற்றுவது என்பதே பல போலீசாருக்கும் அதன் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை. பயிற்சி, திறமை, அறிவு அற்றவர்களே பெரும்பாலான போலீசார். தங்களுக்கு தேவையானவர்களுக்காக குற்றம் செய்யாத வயதில் மூத்தவர்களை கூட, சிறு வயதுக்கார போலீஸ், அதிலும் தமிழன் பொட்டான் கட்டையால் அடிப்பதை பார்த்திருக்கிறேன். இதனால் பல பேர் எத்தனை பிரச்சனை வந்தாலும் போலீசுக்கு போவதில்லை. அத்தனையையும் சகித்துக்கொண்டிருக்கிறார்கள். சமூக சீர்கேடுகளையும் அடிதடியையும் வளர்ப்பவர்கள் போலீசாரும் சட்டத்தரணிகளுமே. காசுபேய்கள்!
-
பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் அபத்தமான பதில்!
பிறகு எதற்கு இவருக்கு தொண்டர் கூட்டம்? முட்டாள் சனங்கள். சினிமா கதாபாத்திரங்களை உண்மையென நம்பி அவர்களுக்காக தங்கள் உயிரை மாய்ப்பது, அவர்களுக்காக போராடுவது, கழகம் அமைப்பது அபத்தம். நடிப்பை மட்டும் ரசித்துவிட்டு கடந்து போகத்தெரியாதவர்கள்.
-
உள்ளூராட்சி தேர்தல்; வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்!
எப்பவும் தேர்தல் ஒன்று வரும்போது, சுமந்திரனுக்கு இருப்பு கொள்ளாது, குழப்பி வேலையை ஆரம்பித்து விடுவார். எதற்கும் கட்சி உறுப்பினர், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். கட்சியை முடக்கியாயிற்று, இருக்கிற இரண்டு ஒருத்தரையும் கலைத்து வீட்டை பூட்டிக்கொண்டு நடையை கட்டுவார். மொத்தத்தில் அவர் வீட்டுக்குள் நுழைந்து, தனது திட்டத்தை நிறைவேற்றிவிட்டார். திட்டத்தை கொடுத்தவர்கள் யாரும் இப்போ அதிகாரத்தில் இல்லை. இவரை வரவேற்று, பாராட்டி, சன்மானம் கொடுக்க.
-
“தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
அந்த சட்டத்தரணியும் கைது செய்யப்படவேண்டும், காரணமில்லாமல் பாதிக்கப்பட்ட நபரை அச்சுறுத்தியதற்காக. மேலும் குறிப்பிடப்பட்ட பொலிஸாரையும் விசாரணை செய்யவேண்டும்.
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
தாமாக சொந்த விருப்பத்தின்படி போவது வேறு. நமது மக்கள் போருக்கு பயந்து வெளியேறியவர்கள், இருப்பவர்கள் போரினால் பல பாதிப்பை சந்தித்து தொடர்ந்து வாழமுடியாமல் வெளியேறுகிறார்கள். அவர்களை ஏமாற்றி இப்படி பலவந்தமாக சேர்ப்பதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அந்தத் தாயின் உறவினர் எப்படி இதை செய்தார்? எப்படி இந்த தொடர்பு அவருக்கு ஏற்பட்டது? இதே போன்று வேறு யாரையும் ஏமாற்றி பணம் பெற்றாரா? ரஷ்ய இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் தரகரா அவர்?
-
“தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
மீண்டும், போலீஸ், சட்டத்தரணி. இது என்ன போலீஸ் நிலையமா? நீதிமன்றமா? சட்டத்தரணி நீதிபதியா? அவர் எதற்கு போலீசுக்கு சென்று சமாதானம் பேசுகிறார்? அதுவும் தாக்கப்பட்ட மனிதருக்கு எதிராக? மனித உரிமைகள் ஆணையம் இந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். நகையை அபகரித்ததுமட்டுமல்ல அவரை தாக்கியது இரண்டு குற்றம். ஏன் சட்டத்தரணி அவரை சமாதானமாக போகச்சொன்னார்? ஏன் அவரை தாக்கினர் என்கிற காரணத்தை சொன்னார்களா? இங்கே யார் யார் திருடர் பாருங்கள். இதுதான், நாம் எமது சமூகத்திலேயே போராட எத்தனையோ உள்ளது. அதிகாரிகள், போலீசார், சமூகவிரோதிகள், சட்டத்தரணிகள் நட்பு. ஏழைமக்கள் வாழமுடியுமா? நீதி கிடைக்குமா?
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
ம், கட்சியை உடைத்து இரண்டு துண்டாக்கி, இருக்கிறதையும் முடக்கி வைத்துக்கொண்டு, வேறு என்ன வேலை இருக்கிறது செய்யிறதுக்கு? தொழிலதிபர், பத்திரிகை சந்திப்பு நடத்தேக்கையே நினச்சேன், அவர் சொந்தபுத்தியில் செய்யேல்லை என்று. அவர் ஊடகங்களை சந்திக்கும்போது, ஏதோ அந்த அனுமதி, இந்த அனுமதி, அவரை சந்தித்தேன், இவரை சந்தித்தேன் என்று பழைய நிகழ்ச்சித்திட்டம் போல் நினைத்து அடுக்கிக்கொண்டே போனார். ஆனால் அவர் பார்வை நேர்கொண்டதாய் இருக்கவில்லை. இனிமேல் லஞ்சம், ஊழல் வேலை செய்யாது. காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு காலம் பூராவும் உப்பிடியான சட்ட விரோத தொழில் செய்வோர், பாதைகளை மாற்றி, உரிய இடங்களை மாற்றி செய்வது சாதாரண மக்களுக்கும் தெரியும். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாது போல் நடிப்பர், அவர்களே சொல்லியும் கொடுப்பர். அவர்களுக்கு வேண்டியது தட்ஷனை. குற்றச்செயல்களின் சூத்திரதாரிகளே போலீசார்தானே! போலீசார் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால், எப்படி இத்தனை சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன? இளங்குமரன் ஏன் தலையிடப்போகிறார்? மக்கள், எங்கேயும் தங்களுக்கு நீதி கிடைக்காததாலும் தங்கள் குரல் கேட்கப்படாததாலுமே இளங்குமரனை நாடியிருக்கிறார்கள். அதை சொல்லுங்கோ. அதெல்லாம் சும்மா. தங்கள் பிழைப்புக்கு, மக்களை சொல்லும் காரணங்கள். வளங்களை சுரண்டுவது, பின் தங்களையும் தொழிலையும் காப்பாற்றுவதற்கு பூசப்படும் முலாம். அதிகாரிகளையும் பொலிஸாரையும் மிகத்தீவிரமாக கண்காணியுங்கள். இவர்கள்தான் முழு திருடர். நல்லவேளை நீங்கள் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். இல்லையேல், இளங்குமரனை வெளியேற்றி இருப்பார்கள் எல்லோரும் சேர்ந்து.
-
ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’
தன் நாட்டு குடிமக்களை அழித்ததற்கே உலகநாடுகளுக்கு முன்பாக பதில் சொல்ல முடியாமல் நிக்குது இலங்கை, இதில ரோகிங்கியா மக்களை காப்பாற்ற வேண்டுமாம். முதலில் எங்கள் நிலங்களை திருப்பி தரட்டும், குற்றம் புரிந்தவர்களை தண்டிக்கட்டும். ஆமா.... எங்களை தொட்டால் அரபுநாடுகள் வரும் என்று கூச்சல் போட்டவர்கள், அங்கே அனுப்பலாமே? உண்மையில் அவர்களை பொறுப்பெடுக்க வேண்டியது பங்களாதேஷ். ஏன் இவர்கள் இங்கே வருகிறார்கள்? சொல்லிக்கொடுத்துத்தான் கூப்பிடுகிறார்களோ? தனக்கு காணேல்லை அதுக்குள்ள பிறற்கு தானம் செய்யட்டாம்.
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
இதை சற்று முன்யோசனையுடன் வாசியுங்கள். இவர் யார்? தன்னை ஏதோ தமிழ்தேசியன் எனக்காட்ட, மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப பாவிக்கும் யுக்திகள் விளங்கும்!
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
எனக்கென்னவோ இவர் அதிகப்பிரசங்கித்தனம் செய்ய வெளிக்கிட்டு ஆழமாக பரிசோதிக்கப்படப்போகிறார் என்றே தோன்றுகிறது. அவர் செய்த வியாக்கியானம் தேவையற்றது. போதைப்பொருள் வியாபாரிகளை கூட, சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதாடி விடுவிக்கிறார்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தன்னோடு இணைத்து பேசுகிறார். அரசியல் தொடங்கப்போகிறாராம். இன்றைய நமது அரசியல் நிலை எங்கே போகிறது? தட்டிக்கேட்டால்; ஊடகவியலாளர் சந்திப்பு, அரசிய கட்சி ஆரம்பிப்பு. மக்களை பற்றி சிந்திப்பதில்லை, தமக்கு பிடிக்காதவரை பழிவாங்க, தாம் நேர்மையானவர் எனக்காட்ட இவைகள் தேவைப்படுகிறது. இப்போ, எத்தனை வருடங்களாக இந்தக்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்காக மக்கள் போராடுகிறார்கள்? யார் கண்டுகொண்டார்கள்? ஒருத்தன் கேட்டவுடன் வந்துவிடுவார்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு. சாதாரண ஏழைகள், சட்டப்படி செய்திருந்தால்; இது வழமைதானே என்று போயிருப்பார்கள். இவர், நீதிமன்றம் ஏதோ ஒரு வழக்கில் நூறுபேரின் சாட்சி பத்தாது என்று தள்ளிவிட்டதாம் என விவரிக்கிறார். அதே பிழையான உதாரணம். அந்த தீர்ப்பு பெற்ற வழக்கும், இவரின் வழக்கும் ஒன்றா? முன்பெல்லாம் நான் படிக்கும் காலத்தில் எனக்கு தெரிந்த சிலர் கரைவலை வேலை என்று சொந்த ஊரை விட்டு வேறு ஒரு பகுதிக்கு சென்று வருவார்கள். அங்கே, அவர்களது வேலையாட்கள் சிங்களவர். இப்போ, இவர்களில் சிலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள், சிலர் மூப்பின் காரணமாக அந்த வேலையை செய்வதில்லை. இப்போ அந்த இடத்தில சிங்களவர் தொழில் செய்கிறார்கள். காரணம் யார்? நாமேதான். சிலர் சிங்களவரை தொழிலாளிகளாக வைத்திருப்பது; போலீசில் மாட்டும்போது இலகுவாக தப்பித்துவிடலாம் என்பதற்காக. சாதாரண ஏழை மக்கள் போராடுகிறார்கள், பெரும் பணக்காரர் கொஞ்சுகிறார்கள். மாட்டுப்பட்டவுடன் கோஷங்களுடன் வருவார்கள்.
-
20 ஆம் திகதி பதவியேற்பு; 10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை!
ஜெயலலிதாவின் கடைசி ஆட்சிக்காலத்தில், அவர் முதலமைச்சர் ஆனபின் சிறை சென்று மீண்டு வந்தார். அந்தக்காலத்தில் பன்னீர்ச்செல்வம் பொறுப்பை ஏற்று நடத்தியிருந்தார் என நினைக்கிறன். ஜெயலலிதா இறந்தபின் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது ஊழல் வழக்கில். வழக்கு பிற மாநிலத்தில் நடத்தப்பட்டதால் தண்டனை கிடைத்தது.
-
வடக்கு, கிழக்கில் அதிகளவு தமிழ் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை
பொலிஸாருக்கு என்ன மாத்தையா அழுத்தம் வட கிழக்கில்? அவர்கள் தான், லஞ்சம் பெறுவதினால் ஏழை எளிய மக்களை அழுத்துகிறார்கள். இங்கு நடக்கும் பல சமூக சீர்கேடுகளை அவர்கள்தான் வளர்க்கிறார்கள் என்றால்; நீங்கள் நம்பவா போகிறீர்கள்? நம் நாட்டில் அதிக, அதிக ஊழல் என்று குறிப்பிட்டு சொன்னால் இந்த துறைதான்.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
இன்று, பல அசல், நசல் உண்டு. மக்கள் அது சார்ந்த திணைக்களங்களில் முறையிடுகிறார்கள். ஆனால் பலன் பூச்சியம். பனை, இன்னும் மரங்கள் தறிப்பதற்கு அனுமதி பெற்றே செய்யவேண்டும். சிலர் அனுமதி பெற்று செய்கிறார்கள். சிலர் அப்படியல்ல. பெற்றவர்களும் பத்து மரங்களுக்கு அனுமதி பெற்றிருப்பார்கள், ஆனால் தறிப்பது இருபது மரங்கள். பத்து மரம் எங்கே தறிக்கப்போகிறோமென குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் அடுத்த பத்து மரங்கள் வெளிநாடுகளில் வசிப்பவரின் காணிகளில், அல்லது காணியிலிருந்து தூரத்தில் வசிப்பவர்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே கள்ள மரம் தறித்து ஏற்றிக்கொண்டு போகிறார்கள். கேட்டால்; அவர்களிடம் அனுமதியிருக்கும். அங்கே நடந்த மோசடிகளை ஆராய முற்படுவதில்லை. இந்த போலீஸ்காரர் பிடித்தால்; அவர்கள் கைலஞ்சம் கொடுப்பார்கள், சரி மாத்தையா, மேலும் உதவி வேணுமெண்டால் சொல்லுங்க என்று மரியாதையாக அனுப்பி வைப்பார்கள். அது ஏன், போத்தல் நீர் அடைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அடி ஆழத்திற்கு மேல் நீர் எடுக்க முடியாதென அனுமதியிருக்கும். ஆனால் அதற்கு மேல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறார்கள். எங்கும் எதிலும் ஊழல், ஏமாற்று. அதிகாரிகளுக்கு தெரியும், தாங்கள் கொடுக்கும் அனுமதியை வைத்து மோசடி செய்கிறார்கள் என்று. ஆனால் அதை சரி பார்ப்பதில்லை. இப்படி ஏதும் பிரச்சினை வந்தால் மட்டும் உசாராவார்கள். தாங்கள் கொடுத்த அனுமதிப்பத்திரம், சரியாக கையாளப்படவில்லை அல்லது தான் சரியாக அதனை பரிசோதிக்கவில்லை என்பதை எந்த அதிகாரியாவது ஏற்று உண்மையை பேசுவாரா? பேசினால் அவர் உத்தியோகம் என்னாவது? நீதிமன்றங்களிலேயே பல பிழையான தகவல்களை சட்டத்தரணியின் விவாதத்தின் மூலம் வெற்றியடைந்து விடுகிறார்கள். இது எல்லோருக்குமான நடைமுறை. இதை இளங்குமரன் தனக்கு வந்த முறைப்பாட்டின் படி தடுத்திருக்கிறார். அதற்கு காட்டப்படும் முக்கியத்துவம், கொடுக்கப்படும் காரணங்கள் தங்களை பிரபல்யப்படுத்துவதும், அரசியல் சாயம் பூசுவதும் நல்லதல்ல. இன்றைய நடைமுறைகள், அதிகாரங்கள், அறிந்தவர்; தன்பக்க நிஞாயத்தை நிரூபித்து விட்டு தன் வேலையில் இறங்கிவிடுவார். நாளாந்தம் எத்தனையோ இணைய வழி சேறடிப்புகள், நடந்துதான் கொண்டிருக்கிறது. இதனால் சிங்களவர் வந்துவிடுவார்களாம். அவர் வைத்திருப்பதே சிங்கள சாரதி. தொழிலாளர் பிற இனத்தை சார்ந்தவர்கள். இப்போ, இது ஒரு நாகரிகம். கட்சி தொடங்குவது, நீதிமன்றம் போவது, தங்களின் செல்வாக்கை காட்டுவது. இப்படி இதை பெரிது படுத்தினால்; தாக்கப்படுவது ஏழை எளிய மக்கள். யாரும் அநீதியை தட்டிக்கேட்க முன்வரார்.
-
வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
போராட்டத்தின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியாமல் பலரும் தவிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்கின்றனர்.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
மக்கள் முறையிடாமல் இளங்குமரன் அங்கு வந்திருக்க நிஞாயமில்லை. அதோடு குறிப்பட்ட அளவிற்கு அனுமதி பெற்று, அதற்கு மேலும் சுரண்டுபவர்களும் உண்டு. அதற்கு முறையான விசாரணை வேண்டும். கள்ளன் யார், நிஜமானவன் யார் என்று எவருக்கும் தெரியாது. சரியாக ஆராய்ந்து உண்மையை கண்டறிவது சம்பந்தப்பட்டவரின் கடமை. இதை பெரிய விடயமாக்கி பிரபல்யம் தேடுவதால் களவாக செயற்படுவோர்க்கு தைரியம் அளிக்கப்படுகிறது. அதோடு இளங்குமரன் போன்றோர் இனிமேல் சமூக விரோத செயலை கண்டிக்க தயங்குவர்.
-
சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
அவருக்கு அந்த தைரியம் இருக்கா? பாதிக்கப்ட்ட, முறைபாடளித்த பெண்ணின் எல்லா விபரங்களையும் வேண்டுமென்றே வெளியிட்டுவிட்டு, அது தொழில் நுட்ப்ப கோளாறு என எந்த வருத்தமும், மன்னிப்பும் இல்லாமல், தெனாவட்டாக கூறும் இவரால், உத்தரவாதம் கொடுக்க முடியுமா? யாராவது இவரை நம்பி முன்வருவார்களா?
-
அனுர குமார திஸ்ஸநாயக்க கூறியது என்ன? - உண்மையின் தரிசனம்
மக்கள்தான், தமிழ்த்தேசியத்தை வளர்த்தார்கள், உரமூட்டினார்கள், அதற்காக தங்கள் அனைத்தையும் இழந்து, இறுதியாக இருந்த ஒரேயொரு துருப்புச்சீட்டையும்பயன்படுத்தி, அதை தக்க வைத்தும் கொண்டார்கள். மக்கள் அதை காத்து வளர்ப்பதற்கு எதையும் இழக்க துணிவார்கள், அதில் தாம் சுகம் காணலாமென கனவு காண்ட நாகப்பாம்புகள், அங்கே குடிபுகுந்தன. மக்களின் எதிர்பார்ப்பை, கனவை, சிதைத்து அவர்களின் எதிரிக்கே அவர்களின் வாக்கை வைத்து உதவின. எதிரிக்கு அரசியல் கதிரைகளையும், தங்களின் அரசியல் சுகத்தையும் தீர்மானித்தன. அதனால் தமிழ்த்தலைமைகளே, சிங்கள கட்சிகளையும் குள்ள நரிகளையும் வரவழைத்தன. இருந்தும் மக்கள் சளைக்காது இவர்களை தெரிந்தெடுத்து அனுப்பி தங்களுக்கு விடிவு வருமென எதிர்பார்த்துகாத்திருந்தனர். ஆனால் நடந்தது உட்கட்சி மோதல். மக்கள் என்ன செய்வார்கள் பாவம்? தங்களுக்கென அனுப்பிவைத்த தலைவர்கள், மற்றவர்களுக்கு, கேளாமலே சேவை செய்யும்போது, மக்கள் அவர்களை பின்தொடர்வதில் தப்பு இல்லை. தமிழ்த் தலைமைகள் செய்ததை இப்போ மக்கள் நேரடியாக செய்கிறார்கள். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருந்தால் காணும் எனும் நிலை. நாம் இன்னும் தமிழ்த்தேசியம் என நினைத்துக்கொண்டு இவர்களுக்கு வாக்களித்தால்; தனிமனிதன் வாழமுடியா அடக்குமுறை, சுரண்டல், பழிவாங்கல் நம்மிடையே உருவாக்கி இங்கேயே நாம் போராட வேண்டிய நிலையிலுள்ளோம்.
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
அது யார் விட்ட தவறு? நானும் செய்யேன், மற்றவரையும் செய்ய விட்டேன் என்று ஒருவரை ஒருவர் விமர்ச்சித்துக்கொண்டும் குழிபறித்துக்கொண்டும் இருந்தால்; மக்கள் வேறு வழியை நாடுவார்கள் என்பது கூட தெரியாமல், கொட்டிக்குலைக்கும் இவர்களால் மக்களுக்கு என்ன லாபம்? இன்றும் திருந்தினார்களா பாருங்கள்? கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் தனி முடிவு, அறிக்கை, கருத்து. கட்சிக்குரிய யாப்பை பின்பற்ற தெரியாதவர்கள், நீதிமன்றம் போகிறார்கள். அங்கே என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பது தெரியாதா சட்ட நிபுணருக்கு? சட்ட யாப்பிற்கு மேல் தீர்ப்பு சொல்லாது. அப்போ யாப்பு எதற்கு? தமக்கு பிடிக்காதவரை வெளியேற்றுவதற்கா?
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்
ஒருத்தர் மற்றவரை போட்டுக்கொடுத்து தப்ப நினைக்கலாம், எல்லோரின் ஊழலும் வெளியில் வரும். நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
ஐயா! இந்தியாவை சொன்னவுடன் கோபமடைவது நீங்கள் தான். நான் உங்கள் கேள்விக்கான பதிலை மட்டுந்தான் கொடுத்தேன். அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. நான் ஒன்றும் இட்டுக்கட்டி சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாவிட்டால் அமைதியாக இருங்கள், இங்கு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதற்காக என்மீது வார்த்தை துஸ்பிரயோகம் வேண்டாம். இது உங்கள் பதிலளிக்கும் முறை, இங்கு யாரும் அதை ரசிப்பதில்லை என்பதை பண்புடன் எடுத்தியம்புகிறேன். கால் கழுவுகிறதென்கிறீர்கள், ஏதோ குடிப்பதென்கிறீர்கள். நீங்கள் அதைத்தான் செய்கிறீர்களோ?
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
தமிழரசுக்கட்சி என்கிற பெண்ணை சொந்தமாக்க எத்தனையோர் பேர் போட்டி. எல்லோரையும் அதிலிருந்து விரட்டி விட்டு, தன் சொந்தப்பெண்ணாக வைத்திருக்க போட்டி. முடிந்தால்; தமிழரசை விட்டு வெளியேறி வென்று காட்டுங்கள் எனச் சவால் விடுவதில் ஆரம்பித்து மற்ற உறுப்பினர்களையும் விரட்டுவதில் வந்து நிற்கிறது. தாம் மட்டும் அதை விட்டு விலகார். காரணம், இவர் போன்ற சுயநலவாதிகளுக்கு இதைவிட வேறு நாதியில்லை. பாவம் தமிழரசு! எல்லோராலும் கைவிடப்பட்ட கைம்பெண்ணாகபோகிறாள் போகிறாள்.
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க மக்களை தூண்டியது யார்? யாரால் மக்கள் ஜே .வி .பியை தெரிந்தெடுத்தனர் என்பதை எல்லோருக்கும் புரியும். உங்களுக்கு புரியவில்லையென்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவுக்கு தமிழினம் கால் கழுவுவதை இந்தியாவுடன் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்."
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
அப்போ சுமந்திரன் வலுவாக இருக்கிறாரோ? நீங்கள் நிதர்சனத்தை ஏற்றிக்கொள்ளும் ஆளல்ல என்பது எல்லோரும் தெரிந்த விடயம். தேர்தல் முடிவுகள் உங்கள் தலையில் குட்டிச்சொல்லியும் புரியவில்லை என்பதால், உங்கள் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை.
-
மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல
இவர்கள் அரசியலுக்கு வரும்போது, மக்களுக்கு கூறிய விடயங்களை, அரசியலில் இருந்து போகும்போது கூட நிறைவேற்றாதவர்கள், நாள்க்கணக்கு காட்டுகிறார்கள். இவர்கள் உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்திருந்தால்; அதன் கஸ்ரம், நிறைவேற்ற எடுக்கும் காலம் தெரிந்திருக்கும். அரசியலுக்கு வந்த உடனேயே, யார், எவ்வளவு பணம், எப்படி சேர்ப்பது என்கிற குறியிலேயே இருந்திருப்பார்கள். அவற்றை தேடி சுத்தப்படுத்தவே காலம் காணாது. இது எல்லாம் மக்களுக்கு தெரியாதென நினைத்து மக்களுக்காக அழுகிறார்களாம். அங்காலை ஒருவர், முடிந்தால்; நாங்கள் ஊழல் செய்தோம் என்பதை நிரூபியுங்கள் என்று சவால் விட்டவர், இப்போ எங்களை விமர்சிப்பதை விட்டு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்கிறார். மக்களுக்கு மூன்று வேலை உணவு கொடுத்தாலே போதும் என்கிறார். மக்களின் தேவை அவ்வளவுதான் என நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ? இன்னொரு கூட்டம், பதவியை ராஜினாமா செய்த முன்னாள் சபா நாயகரை பற்றி இன்னும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்கள் ஊழலை விசாரிப்பதை விமர்சிக்கிறார்கள் எதிர்க்கிறார்கள். வேறொருவர் கட்சியை முடக்கி வைத்துக்கொண்டு, அனுராவுக்கு சவால் விடுகிறார். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அவசரம். இவர்களுக்கிடையில் மாட்டுப்பட்டு அவதிப்படுவது மக்கள்தான். மக்களை வைத்து தாம் பிழைப்பதும் தம்மை மறைப்பதுமே இவர்கள் செய்வது.