Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

satan

கருத்துக்கள உறவுகள்

Everything posted by satan

  1. ஐயோ..... உலக மகா கொள்ளைக்காரர் எல்லாம் நிறைந்து இருக்கும் இடம் இந்த போலீஸ் இலாகா. இவர்களை கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கோ. முடிந்தால், இவர்கள் திரும்பும் திசையெல்லாம் தெரியாமலே தொடர வேண்டும்.
  2. ம்.... சில சமயம் நம் சரிவர சிந்திக்க மறந்து விடுகிறோம். தமிழராக ஒரு ஆளுநர் வைந்தாலும் சிங்கள ஆளுநர் செய்வதையே அல்லது அதற்கு மேலேயும் செய்வார், ஆட்டுவிப்பது சிங்கள எஜமானர், அதற்கு அவருக்கு பதவி, சம்பளம். வடக்கில் இருந்த தமிழ் ஆளுநர்கள் எப்படி செயற்பட்டார்கள், செந்தில் தொண்டமான் பதவி வகித்த லட்ஷணம் தெரியுது. இவர் நல்லது செய்வார் என எதிர்பார்ப்போம்.
  3. இவர்கள், குத்துவிளக்கை வைத்திருப்பதா சங்கூதி அணைப்பதா என்று முடிவெடுப்பதற்குள் தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலும் வந்துவிடும், அதற்க்காவேனும் பயன்படட்டும் சின்னம். குத்துவிளக்கும் வேண்டாம் சங்கும் ஊதவேண்டாம் என்று மக்கள் ஒதுங்கப்போகிறார்கள். ஒரு விடயத்தில்தானும் ஒத்துப்போகிறார்களா இவர்கள் மக்களுக்காக? இப்பவே இப்படி குத்தி முறிகிறார்கள் என்றால் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மக்களை தயார் படுத்தாமல்? எதிரி தன் ஆட்களை புகுத்த இவர்கள்தான் காரணம்!
  4. இது பொய்ப்புகாராக இருக்கலாம், இந்தியாவில் ஒரு நாளைக்கு பெண்களுக்கெதிரான தொண்ணூறு பாலியல் வன்கொடுமை, கொலை நடப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. தெரிந்தே இவ்வளவென்றால், தெரியாமல் எவ்வளவோ? சிலது பொய்யாகவும் சோடிக்கப்பட்டு நிரூபிக்கப்படுகிறது. அதற்கான காரணம்; வகைதொகையின்றி நடக்கும் இப்படியான குற்றங்களை சிலர் தமது லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். பொலிஸாரின் அஜாக்கிரதை, அலைக்கழிப்பு இதனால் உண்மையாகவே பாதிக்கப்படுபவர்கள், பாதுகாப்பு தேடுவதில் பாதிப்பு, தாமதம் ஏற்படுகிறது, உயிரையும் இழக்க நேரிடுகிறது.
  5. இந்த அறிவு கூட இல்லாமல் எப்படி இவ்வளவுகாலமும் தலைவராக இருந்தார் என்பதே உலக அதிசயம். அதனாற்தான் நேற்று நுழைந்த சுமந்திரன் இவ்வளவு சர்வாதிகாரம் செலுத்த முடிந்தது கட்சிக்குள். இனிவருங்காலத்தில் தேர்தல் வந்தால்; மாவையரின் இந்த நகைச்சுவையை மக்கள் மறக்க மாட்டார்கள் யார் எழுதியிருந்தால் என்ன? சொல்லப்பட்ட விடயம் பலகாலமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதே! காரணம் சரி, எழுதியவர் பிழை என்கிறீர்களா? சரி ..... அவர் எழுதியதில் தவறு காண்கிறவர்கள், உங்கள் கையை உயர்த்திக்காட்டுங்கள். தவறை யாரும் சுட்டிக்காட்டலாம். ஒரு சமூகத்தின் நிமித்தம் ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்புண்டு. ஒருவர் விடும் தவறால் பாதிக்கப்படுவது, விடியலை நோக்கி போராடும் ஒரு இனம். ஆமா...... சுமந்திரன் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையோ? ஒருவரும் அதை கூறியதாக தெரியவில்லை, அல்லது நான் தவறவிட்டு விட்டேனோ? பாராளுமன்றத்தில் தொண்டை கிழிய கத்திவிட்டு அதன் பின் அதற்காக பாராட்டுப்பெறுபவர்களை அனுரா கவனியாமலா இருந்திருப்பார்? கனடாவில் இருக்கிற தங்கமயிலே, சாணக்கியன் பேசியதை தனது அறையில் இருந்து கவனித்த கோத்தா, பின் அவரை அழைத்து பாராட்டியதாக புளகாங்கிதம் அடைந்தாரே. இவ்வளவுதான் அவர்களது உரை. பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக பேசுவார்கள், பாடுபடும் மக்களுக்காகவல்ல. தங்கள் சாணக்கியத்தை காட்டுவதற்கு கிடைத்த அரங்கமே பாராளுமன்றம். இப்போ தங்கள் சொந்த கட்சியையே விமர்ச்சிக்கிறார்கள் பாராளுமன்றில்.
  6. நியாயம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இப்படியான குற்றத்திற்கு மரண தண்டனை, ஆயுள்தண்டனை. ஒரு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கும், மேல்நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனை அல்லது தண்டனைக்கால குறைப்பு செய்யும். பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன பலர் தண்டிக்கப்பட்டுமுள்ளனர். அவர்களுக்குகாக வாதாட அவர்களை விடுவிக்க பல பிரபல வழக்கறிஞர்களே முன்வருகிறார்கள். விசாரணை தாமதம், மேல்நீதிமன்றம், அதற்கு மேல் நீதிமன்றம், குடியரசுத்தலைவரின் கருணை என்று முறையீடுகள், மனுக்கள் போட்டு தண்டனை குறைப்பு அல்லது தப்பித்தல் என்று வெளியே வந்து, மீண்டும் அதே குற்றமிழைக்கிறார்கள், பயம் விட்டுப்போய். ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஒரு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய தீர்ப்பை இன்னொரு நீதிமன்றம் மாற்றியமைப்பது என்பது. அப்படியென்றால் நீதிமன்றத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது? மாறி மாறி நீதிமன்றம் சென்று காலம், பணம், சக்தி விரையம் செய்து, தீர்ப்பை நீர்த்துபோகச்செய்வதை விட்டு ஒரே நீதிமன்றமாக செயற்பட்டால் காலவிரயம் இல்லாமல் ஒரே முறையில் தண்டனையை நிறைவேற்றலாம். நீதிமன்றம் மேல் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நம்பிக்கையுமிருக்கும்.
  7. முக்கியமான பணி இது, இலகுவானதல்ல, இதனாலேயே நாம் அரிய தலைவன் ரவிராஜை இழந்தோம். சாணக்கியன் செய்யலாம், செய்வாரென் எதிர் பார்த்தேன் ஆனால் செய்ய மாட்டார்.
  8. பாடசாலைகளில் இராணுவ முகாம் அமைப்பது ....? உடனடியாக இராணுவத்தில் கைவைக்க மாட்டார் ஏற்கெனவே சந்திரிகா உறுதியளித்துவிட்டு இராணுவம் முறுக அப்படியே திருப்பி போட்டார். ஆகவே இராணுவத்தோடு மெதுவாகவே மாற்றங்களை கொண்டுவரவேண்டும். இனவாதத்தை ஊட்டி முறுக்கேற்றபட்டவர்கள் அவர்கள்.
  9. இந்தியா சொல்வதற்குமுன் அதன் உளவு அமைப்பு றோ இன்னும் தடுமாறுது போலுள்ளது.
  10. அவர்கள், இத்தனை காலமும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டாலும் கொள்கை ஒன்று, ஆட்கள் மாறி மாறி வெல்லும் கட்சியில் உட்காருவார்கள். இப்போ மட்டும் ஏன் கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள்? அதிகாரம் தங்களது கைவிட்டு போனால், இனிமேல் தங்களுக்கு அரசியல் கிட்டாது என்று தெரிந்து விட்டார்கள் போலும். தமக்குள்ளே மாறி மாறி வைத்திருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். எங்கே, தட்டுத்தவறி தமிழருக்கு அரசியல் அதிகாரம் கொடுத்து விடுவாரோ, பின் தமக்கு அரசியல் செய்ய ஏதுமில்லை என்பதும் கவலையாயிருக்கும்.
  11. ம்...... அப்படியென்றால்; மற்றவர்கள் இனவாதத்தை வளர்ப்பவர்கள் என்று சொல்ல வந்தாரோ என்னவோ?அதில் இணைந்தால்; தானும் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தே அவர்களுக்கு வாக்களித்தாரோ? இதுதான் இவரது ராஜதந்திரம், தூர நோக்கு.
  12. யாரின் இருப்பை காக்கப்போகிறீர்கள்? ஒவ்வொரு தேர்தலின்போதும் இதைத்தானே பல்லவியாக பாடுகிறீர்கள். நீங்கள் இல்லாமலேயே தீர்வு பெறும் காலம் நெருங்கி விட்டது. அதை தடுக்காமல் தள்ளி நில்லுங்கள். முதலில் அரசியல்வாதிகள் நீங்கள் ஒற்றுமையாக வந்து வாக்கு கேளுங்கள், மக்கள் ஒருமித்து வாக்களிப்பார்கள். இல்லையேல்; உங்களது இருப்பு கேள்விக்குறியாகும். தேர்தலுக்கு முன் ஒன்று, தேர்தலுக்கு பின்னொன்று, தேர்தலின் போதொன்று, தென்னிலங்கையிலொன்று, வடக்கிலொன்று, பாராளுமன்றத்திலொன்று, சர்வதேசத்திலொன்று, பத்திரிகையிலொன்று, பேட்டியிலொன்று என மாறி மாறி திரித்து மக்களை பிரித்து அரசியல் செய்தது இனியும் எடுபடாது. ஒரு கட்சியாக இருந்து, ஒருமித்த கட்சியாக இருந்து, பல கட்சிகளாகி, மக்களுக்கு என்று ஒரு கட்சியுமேயில்லாமல் தள்ளாடுது தேசியம். தேர்தல் வரும்போது ஏக பிரதிநிதிகள் நாங்கள், உங்கள் ஏகோபித்த ஆதரவை தாருங்கள் என்று கெஞ்சுவீர்கள். அதன் பின் நீங்கள் மக்கள் கண்களில் படமாட்டீர்கள், உங்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியாது, அவர்களின் கோரிக்கைகளைவிட சிங்களத்தின் கோரிக்கையே உங்களுக்கு முதன்மையானது. இதற்கு மக்கள் வாக்கெதற்கு உங்களுக்கு?
  13. மாவையருக்கு விளங்கிப்போச்சு, அடுத்த தேர்தலில் மண் கவ்வப்போகுது தமிழரசுக்கட்சி என. உடனடியாக தேர்தலும் வருவதால், உடனடியாக முயற்சிக்கிறார். தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுமென அறிவித்தவர்களும் இவர்கள் தான், இப்போ சேர்ந்து போட்டியிடுவோம் என்பவர்களும் இவர்கள் தான். காலம்..... தமிழரை வாழ விடுவதில்லை என முடிவெடுத்து விட்டது. உள்ளுக்குள் இருந்து குடைச்சல் கொடுப்பதென்றே முடிவெடுத்து விட்டார். ம்..... ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர், அதற்கு ஆதரவு வழங்கியோருக்கு எதிராக நடவடிக்கை என அச்சுறுத்தினார் ஒருவர், இவரோ வேறொன்று சொல்கிறார். ஒரு கொள்கையில்லை, ஒரு தலைவனில்லை, ஒன்று சேர்ந்து முடிவெடுப்பதில்லை, மக்கள்மேல் மதிப்பில்லை. மக்களே இவர்களை என்ன செய்வதென்று முடிவெடுப்பார்கள்.
  14. ஓஓ..... போன பஸ்ஸுக்கு கைகாட்டுகிறார்கள்! அப்படிப்பட்டவர்கள் தான். வருகிற பஸ்ஸில் ஏறவும் மாட்டார்கள், ஏறுகிறவர்களையும் இழுத்து விழுத்திகொண்டே இருப்பார்கள், போன பின், பஸ்ஸை நிறுத்தினோம் அதற்கிடையில் பஸ் போய் விட்டது என்று உச்சுக்கொட்டுவர்.
  15. ஒவ்வொருவரும், நான் ஜனாதிபதியோடு முன்பே கதைத்தேன், படித்தேன், விளையாடினேன் என்று முண்டியடித்துக்கொண்டு வருவதைப்பார்த்தால் தெரியவில்லையா? ஆனால் சேர்ந்து பணியாற்றுவோம் என்றவரின் சத்தத்தை காணவில்லை. ஊரிலே தான் இருக்கிறாரா? யார் ஜனாதிபதியானாலும் முன்னுக்கு தெரிபவர்களை இந்த முறை காணமுடியவில்லையே. சஜித் வந்திருந்தால்; அரியம் பாராளுமன்ற வீதியாலேயே போகமுடியாமல் செய்த்திருப்பார்கள். நாங்கள் சிங்களத்துக்கு போட்டு அனுராவை சமாளிக்கவில்லை, எங்களது தேவையென்ன, எதற்கு முயற்சிக்கிறோம் என்று கோடிட்டு காட்டியிருக்கிறோம். அதனால எங்களை பாருங்கள் நாங்களும் உங்களோடு கதைத்தோம் என சமாளிக்க வேண்டியதில்லை. எங்கள் செயல் எமது தேவையை கொண்டு சேர்த்திருக்கிறது, செய்ய வேண்டியதை கவனத்தில் எடுக்க வேண்டியது அவர்கள்.
  16. காரணம்? ம் ...... வெளியில சொல்லாதீங்கோ, பலபேர் உங்கள் கூட்டணியில் சேர்வார்கள், நீங்களும் சேர்ந்து போட்டியிடலாம் தேர்தலில், வாக்குகள் எண்ணவே கஸ்ரப்பட்டு உங்களை வெற்றியாளராக்கி அறிவிப்பர்.
  17. காரணங்கள் வெவ்வேறு இருக்க, இவரொருவர் தான் சொல்லித்தான் நடந்ததென்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தெரியும் இவரின் விலாசம் எங்கே என்று.
  18. குடிப்பிரியர்கள் வாக்குப்போட மாட்டார்கள், அது சரியா? போதை என்று வந்தால்; அரசியல் வாதிகள், காவற்துறை, இராணுவம் எல்லாம் சேர்ந்து அனுராவை மேலே கொண்டு போகப்போகிறார்கள்.
  19. இந்த அரசு நிலைத்தால், அது நடக்கக்கூடியதல்ல. ஒவ்வொருவன் உண்ணும் உணவுக்கும் கஸ்ரப்பட்டே உண்ணவேண்டும். ஆதலால் இந்த அரசை நிலைக்க விடமாட்டார்கள், சும்மா இருந்து வயிறு வளர்த்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள். விசேடமாக லஞ்சம், ஊழல் ஒழிப்பு, உழைப்பே முக்கியமாக கருதப்படும். இந்தியாவின் நிலையை சீனா முழுமையாக எடுக்கும். இந்த அரசில் இவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியதாயினும் அவசரம் எல்லாவற்றையும் தலை கீழாக்கிவிடும். நாட்டை சுரண்டியதுகள் சும்மா இராதுகள். இனவாதம், ஊழல் கருவிலேயே ஊறி விருட்ஷமாய் நிக்கிறது. அதை அதன் பாட்டில் போய் மெதுமெதுவாகவே களைய வேண்டும். எனக்கென்னவோ நேர்மையான தேர்தலை நடத்த, மாற்றங்களை ஏற்படுத்த போய் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து விடுவாரோ என தோன்றுகிறது. சிறியர் விசுக்கிற விசையை பாத்தா ஒருவரும் தாங்க மாட்டார்கள். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பி ஓட முடியாதே. அரசியல் வாதிகளின் பெஞ்சன் எல்லாம் இனி குறைக்கப்பட்டு, அவர்கள் ஆற்றிய சேவையை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு வரையறை செய்தால்; நாடு முன்னேறும், மக்களின் நிலை புரியும் இவர்களுக்கு. மக்களின் பணத்தில் இவர்கள் சொகுசு வாழ்க்கை, மக்கள் அடிமை வாழ்வு. ஐயோ! களத்தில் கலவரம் வெடிக்கப்போகுது, நான் ஓட்டம்.
  20. இது, இவருடைய ராஜதந்திரம்! முன்னொரு காலத்தில், ஒரு அணி வடக்கில் திரண்ட போது, நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் போகவும் மாட்டோம் என்றவர், பின்னாளில் அணி என்றால்; முன்னுக்கு போய் நிற்பார். இப்போ பொது வேடட்பாளர்என்றவுடன் கரிச்சுகொட்டுறார். பாருங்கள் பின்னாளில் எப்படி மாறுவாரென்று. காலம் அப்படி! ரணிலுக்கு, மற்றையவருக்கு வாக்கு போட்டவர்களை சாடவில்லை, இவருக்கு சாட்டையடி விழுகுது, தனக்கு எதிரானதாக சித்திரிக்கிறார். அரியத்தாரோ யாரையும் சாடவில்லை, தான் செய்ய வேண்டியதை செய்தேன் என்பது போலுள்ளார். மெல்லென பாயும் தண்ணீர் கல்லையும் ஊடறுத்து பாயுமாம், வெழுத்தோடும் நீர் அனைத்தையும் அழித்தோடுமாம்.
  21. அட, நீங்களுமா? அதை கந்தையருக்கு விளக்கமாக சொல்லுங்கோ. பாவம் அவர்! நம்பி காரியத்தில் இறங்கப்போறார். உங்களுக்குள்ளும் இப்படியொரு பேயிருக்கா?
  22. அப்போ .... அவர், சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கு போடவில்லை என்கிறீர்கள்... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.