Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20303
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. பிகாரில் தோல்வியடைந்ததா பாஜகவின் 'மகாராஷ்டிரா உத்தி'? - என்ன நடந்தது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2022, 10:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பாகு செளஹானை சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பதவி விலகிய கையோடு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தார் நிதிஷ் குமார். பதவி விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அதன்படியே எனது பதவியை ராஜிநாமா செய்தேன்," என்று தெரிவித்தார். புதிய மகாகத்பந்தன் கூட்டணியில் ஏழு கட்சிகள் உள்ளன, இதில் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 164 எம்எல்ஏக்கள் உள்ளனர். அனைவரது ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்துள்ளேன். புதிய அரசின் பதவியேற்பு எப்போது என்பதை ஆளுநர் தெரிவிப்பார் என்று நிதிஷ் குமார் கூறினார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "இந்தியை அடிநாதமாகக் கொண்டுள்ள மாநிலங்கள் முழுவதிலும் பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் இல்லை. எந்த கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிகளை பாஜக அழித்தொழிக்கிறது என்பது வரலாறு. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் இப்படி நடந்ததை நாங்கள் பார்த்தோம்," என்று கூறினார்."மாநில கட்சிகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஜேபி நட்டா கூறினார். கட்சிகளை மிரட்டி விலைக்கு வாங்க மட்டுமே பாஜகவுக்கு தெரியும். பிகாரில் தனது திட்டத்தை பாஜக செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதே எங்களின் ஒரே நோக்கம். அத்வானியின் ரதத்தை லாலு பிரசாத் எப்படி நிறுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாங்கள் எந்த வகையிலும் இனி மனம் மாற மாட்டோம்," என்று நிதீஷ் குமாருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ் கூறினார்."இன்று பாஜகவைத் தவிர பிகார் சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சிகளும் உறுப்பினர்களும் நிதிஷ் குமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், பிகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி மகாகத்பந்தன் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக ஜிதின் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 திமுக கருத்து பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதன் மூலம் தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வை வேகம் பெற்றுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். மாறும் கூட்டணி, தக்க வைத்த முதல்வர் பதவி கடந்த 8 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார் நிதிஷ் குமார். இதையடுத்து இதுநாள்வரை எதிர்கட்சி வரிசையில் இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் அவர் முதல்வராக பதவியில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவை உள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 இந்த நிலையில், நிதிஷ் குமார் மீது ஒரு துளி நம்பகத்தன்மை கூட இல்லை என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி தலைவர் 243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப் பேரவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 77 உறுப்பினர்களும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இந்த இரு கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தான் இதுநாள்வரை நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்தார். அந்த மாநில அரசியலில் திடீரென நடந்த திருப்பம், தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. காரணம், அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் திடீரென ஓரணியில் கரம் கோர்த்து ஆட்சியமைப்பது அரிதாக நடக்கக் கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? விரிவாக இங்கே பார்க்கலாம். திடீர் பிளவு ஏன்? கடந்த ஓரிரு மாதங்களாகவே பாரதிய ஜனதாவுக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை. லாலு பிரசாத் - ராப்ரி தேவி இல்லத்தில் நடந்த இஃப்தார் விருந்தில் நிதிஷ் குமார் பங்கேற்றார். அதேபோல் நிதிஷ் குமார் அளித்த இஃப்தார் விருந்தில் எதிர்கட்சித் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார். அப்போதே பாரதிய ஜனதா கட்சிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகப் பேசப்பட்டது. அண்மையில் திரௌபதி முர்மூ இந்திய குடியரசு தலைவராகப் பதவியேற்கும் விழா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்த சில கூட்டங்களில் நிதிஷ் குமார் பங்கேற்காததன் மூலம் இது வெளிப்படையாகத் தெரிந்தது. நிதிஷ் குமார்: "இன்ஜினியர் பாபு" தொடர் முதல்வராக இருக்க நகர்த்திய அரசியல் காய்கள் இந்திய முஸ்லிம்களும் சாதிவாரியாக பிரிந்துள்ளார்களா? பிகாரில் 40 வருடங்களாக மகனாக நடித்தவருக்கு தண்டனை - என்ன வழக்கு? மத்திய அமைச்சரவையில் எஃகு துறை அமைச்சராக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் ஆர்.சி.பி. சிங் தனது குடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்துகளை குவித்துள்ளதாக கட்சி சார்பில் அவரிடம் மேலிடம் விளக்கம் கேட்டது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும் பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தும் விலகினார். 'பாரதிய ஜனதா கட்சி சதி செய்தது' பட மூலாதாரம்,NITISH KUMAR படக்குறிப்பு, ஆளுநர் பாகு செளஹானுடன் மாநில முதல்வர் நிதிஷ் குமார் இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு நடந்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு குறைந்த இடங்களே கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சியாக இருந்து கொண்டே பாரதிய ஜனதா கட்சி சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. "கடந்த பேரவைத் தேர்தலில் சிராக் பஸ்வான் மூலம் வாக்குகளைப் பிரித்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் தோல்வியைத் தழுவ பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டதாக பரவலாகப் பேசப்பட்டது" என்கிறார் பத்திரிகையாளர் ஆர். ராதாகிருஷ்ணன். "மத்திய அமைச்சராக இருந்த ஆர்சிபி சிங்கை பாரதிய ஜனதா கட்சி தன் பக்கம் இழுத்து மகாராஷ்டிராவைப் போல மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தது என ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இப்போது நிதிஷ் குமார் எடுத்திருக்கும் நடவடிக்கை அதைத் தடுப்பதற்கான முயற்சியாகவே இருக்கும்" என்கிறார் அவர். தேசிய அரசியலில் தாக்கம் ஏற்படுமா? பிகாரின் அரசியல் நகர்வுகள் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் பத்திரிகையாளர் சந்திரசேகர். அந்த வகையில் இது பாரதிய ஜனதா கட்சிக்கு மோசமான பின்னடைவாக இருக்கும் என்கிறார் அவர். "குறைந்த இடங்களைப் பெற்றிருந்தாலும் நிதிஷ் குமாருக்கு 'முதலமைச்சர்' பதவியை பாரதிய ஜனதா கட்சி விட்டுக் கொடுத்தது. காரணம் தேசிய அரசியல்தான். கூட்டணியை விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தது. அதனால் அந்தக் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறும் என்று பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்காது." என்கிறார் சந்திரசேகர். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை ஏற்கெனவே அது அகாலி தளம், சிவசேனை போன்ற முக்கியமான நெருங்கிய கூட்டாளிகளை இழந்திருக்கிறது. இப்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் வெளியேறியிருப்பதால் அது நிச்சயமாக 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் வெற்றியைப் பாதிக்கும் என்று சந்திரசேகர் கூறுகிறார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி இதை மறுக்கிறது. "பாரதிய ஜனதா கூட்டணியை உடைப்பதற்காக நிதிஷ் குமாருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் இப்போதைக்கு ஆதரவு கொடுக்கலாம். ஆனால் மீண்டும் தேர்தல் வரும்போது நிச்சயமாக அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த மாட்டார்கள். அப்போது இந்த முடிவுக்காக நிதிஷ் குமார் வேதனைப்படுவார்." என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் துணைத் தலைவர் கரு.நாகராஜன். பிகாரில் நடந்திருக்கும் அரசியல் மாற்றங்கள் தேசிய அரசியலில் பாரதிய ஜனதா கருத்தைப் பாதிக்கும் என்ற கருத்தை மறுத்த அவர், "பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்காக மக்கள் வாக்களிக்கிறார்கள். அதனால் நிதிஷ் குமாரின் முடிவு பாரதிய ஜனதா கட்சியைப் பாதிக்கும் என்பதை கற்பனை கூடச் செய்ய முடியாது" என்கிறார். புதிய கூட்டணி நீடிக்குமா? தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் எதிரும் புதிருமானவை. அவ்விரு கட்சிகளுக்கும் இடையே பழைய கசப்புகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியும் இப்போது தனியே உள்ளது. இப்படியொரு சூழலில் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் "இவர்கள் சேர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது" என்கிறார் சந்திரசேகர். "அதே நேரத்தில் புதிய கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்றிருக்கும் தேஜஸ்வி யாதவ் அமைச்சரவையில் முக்கிய இடங்களைக் கோரலாம். அது நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக அமையலாம். ஒரு வேளை இந்த மகா கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தல் வரை நீடித்திருந்தால் அது பாஜகவுக்கு நெருக்கடியாக மாறிவிடும்" என்கிறார் அவர். நிதிஷ் குமாரும் தேஜஸ்வி யாதவும் பழைய எதிரிகள் என்று கூறுவதை மறுக்கும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கௌரிசங்கர், "இதற்கு முன்பு இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்தபோது பாரதிய ஜனதா கட்சியால்தான் பிரிய நேரிட்டது" என்றார். "இப்போது அந்த வரலாறு திரும்பியிருக்கிறது" என்று கூறும் அவர், "இதே நிலை நாடு முழுவதும் தொடர்ந்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு இறங்கு முகம்தான். அடுத்த தேர்தலில் அந்தக் கட்சி முன்பைப் போல 2 இடங்களில்தான் வெற்றி பெற முடியும்" என்கிறார் கெளரி சங்கர். ஜனதா தளம் மீண்டெழும் வாய்ப்பு' ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பாரதிய ஜனதா கட்சி ஒழிக்கப்பார்த்தது என்று குற்றம்சாட்டுகிறார் சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் தமிழக பிரிவு தலைவர் ராஜகோபால்."ஒரு காலத்தில் ஜனதா தளம் ஆதரவு கொடுத்ததால்தான் பாரதிய ஜனதா கட்சி பெரிய கட்சியாக உருவெடுக்க முடிந்தது. ஆனால் ஜனதா தளத்தை சுக்கு நூறாக பாரதிய ஜனதா உடைத்துப் போட்டுவிட்டது. தற்போது பிகாரில் நடந்து கொண்டிருப்பது ஜனதா தளத்தை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக அமையும்." என்கிறார் அவர்."தேஜஸ்வியும் சரி, நிதிஷ் குமாரும் சரி 'ஜனதா தளம்' என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதனால் அவர்களது கூட்டணியை முரண்பாடுகளைக் கொண்டதாகக் கருத முடியாது." என்கிறார் அவர்.ஜனதா தளம் என்ற கட்சி ஒருங்கிணைந்து மீண்டெழுந்தால் அதுவே தேசிய அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார். சதுரங்கம் ஆடிய நிதிஷ் பிகாரில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கோலோச்சி வந்த லாலு பிரசாத் யாதவ் கட்சியை வீழ்த்தி, அரசியல் அதிகாரத்தில் அமர வேண்டுமானால், அதற்கு தனித்து அரசியல் செய்வது பலன் கொடுக்காது என்பதை உணர்ந்தார் நிதிஷ். ஜெயபிரகாஷ் நாராயணின் அரசியல் பள்ளியில் கற்றுக் கொண்ட படிப்பினையின் விளைவாக, லாலு கட்சியுடனேயே நிதிஷ் தேர்தல் உறவு வைத்துக் கொண்டார். சமூக நீதிக்கான வளர்ச்சி என்ற முழக்கத்தை அந்த இரு தலைவர்களும் முன்வைத்து மக்களை சந்தித்தார்கள். தனது அமைச்சரவையில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக்கினார். ஆனால், தேஜஸ்விக்கு எதிரான ஊழல் புகார்களோடு மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை 2017ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி நிதிஷ் குமார் அளித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார். அதன் விளைவாக தேஜஸ்வி துணை முதல்வர் பதவியை இழந்தார். ஆனால், பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த மறுதினமே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் அரியணையில் அமர்ந்தார் நிதிஷ் குமார். இதே நிதிஷ்தான் அதற்கு முந்தைய தேர்தலில் வாக்காளர்களை சந்தித்தபோது, நான் மண்ணுக்குள் புதைவேனே தவிர, பாஜகவுடன் மீண்டும் அணி சேர மாட்டேன் என்று முழங்கியவர். இதன் காரணமாகவே நிதிஷ் குமாரை 'சந்தர்ப்பவாதி' என்று தனது அரசியல் மேடைகளில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி விமர்சித்து வந்தார். லாலு, நிதிஷ் நட்பு மலர்ந்த காலத்தில், நிதிஷை 'மாமா' என்றே பதின்ம வயதைக் கடந்திருந்த தேஜஸ்வி அழைத்து வந்தார். இப்போது வளர்ந்து முப்பது வயதை கடந்த நிலையில், அதே நிதிஷுக்கு எதிராகவே இதுநாள்வரை அரசியல் நடத்தினார் தேஜஸ்வி. "இன்ஜினியர் பாபு" அரசியலில் விட்டுக் கொடுப்புகள், சதுரங்க ஆட்டங்கள் போல மாறி வந்தாலும், அணிகள் மாறி வாக்கு கேட்கும் தலைவர்களை பிகார் மக்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாகவே பார்த்து வருகின்றனர். 1951ஆம் ஆண்டு பாட்னா நகரை அடுத்த பக்தியார்பூரில் பிறந்த நிதிஷ் குமார். பிகார் பொறியில் கல்லூரியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தவர். அரசியலுக்கு நுழைந்த காலத்தில் 'இன்ஜினியர் பாபு' என்றே அழைக்கப்பட்டு வந்தார். இன்றளவும் பிகாரின் தொலைதூர கிராமங்களில் அந்தப் பெயருடனேயே நிதிஷ் அறியப்படுகிறார். https://www.bbc.com/tamil/india-62477777
  2. செஸ் ஒலிம்பியாட்: பிரமாண்ட நிறைவு விழாவில் பதக்கங்களுடன் குதூகலித்த இளம் வீரர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@FIDE_CHESS படக்குறிப்பு, முதலிடத்தில் உள்ள இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை முதல் முறையாக நடத்திய பிறகு, ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் அதன் நிறைவு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ஃபிடே துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் தொடக்க விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார். அதுவும் நேரு உள்விளையாட்டு அரங்கிலேயே நடைபெற்றது. இன்றைய நிறைவு விழாவில் தனி நபர் பிரிவில் குகேஷ், நிஹால் சரினுக்கு தங்கம், அர்ஜுன் எரிகாசிக்கு வெள்ளி, பிரக்ஞானந்தாவுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோல, வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையிலான இந்த போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் ரிசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 'பி' அணி ஓபன் பிரிவில் வெண்கல பதக்கத்தை பெற்றது. இந்தியா 'பி' அணி தனது இறுதிச் சுற்றில் ஜெர்மனியை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி 3வது இடத்தைப் பிடித்தது. பதக்கம் வென்ற நிஹால் சரின் அளித்த பேட்டியில், "ஆட்டத்திற்குப் பிறகு நாங்கள் நேற்று விஸ்வநாதன் ஆனந்தை சந்தித்தோம், அவர் எங்களை உற்சாகப்படுத்தினார். போட்டியில் முடிவு என்பது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். இது இயல்பானது. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல் நீங்கள் முன்னேற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அவரது பேச்சு எங்கள் மன உறுதிக்கு மிகவும் உதவியது," என்று கூறினார். படக்குறிப்பு, நிஹால் சரின், இந்திய வீரர் ஆச்சரியம் கொடுத்த உஸ்பெகிஸ்தான் இறுதிச் சுற்றில் ஸ்பெயினை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்திய பலம் வாய்ந்த ஆர்மேனிய அணிக்கு முன்னால் இருந்த நெதர்லாந்தை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது. இந்தியாவின் கோனேரு ஹம்பி தலைமையிலான அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. ரஷ்ய போரினால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் மகளிர் அணி போட்டியில் தங்கத்தை வென்று உணர்ச்சிமயமானது. ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. பட மூலாதாரம்,@FIDE_CHESS படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அணிக்கு தங்கம் வென்று தந்த ஜக்கோங்கிர் வாகிடோவ் உஸ்பெகிஸ்தான் அணியின் நாயகனாக திகழ்ந்தார். ஜக்கோங்கிர் வாகிடோவின் வெற்றியின் காரணமாக இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தை தோற்கடித்தது. அவர்கள் சிறந்த டை-பிரேக் ஸ்கோரின் அடிப்படையில் ஆர்மேனியாவை வீழ்த்தினர். உஸ்பெக்ஸ் 11 சுற்றுகளில் ஆட்டமிழக்காமல் 19 மேட்ச் புள்ளிகளுடன் முடிந்தது. பட மூலாதாரம்,@FIDE_CHESS ஜக்கோங்கிர் வாகிடோவின் வெற்றியின் காரணமாக இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தை தோற்கடித்தது. டை-பிரேக் ஸ்கோரின் அடிப்படையில் ஆர்மேனியாவை உஸ்பெகிஸ்தான் முந்தியது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 உஸ்பெக்ஸ் வீரர்கள், 11 சுற்றுகளில் ஆட்டமிழக்காமல் 19 மேட்ச் புள்ளிகளுடன் ஆட்டத்தை நிறைவு செய்தனர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 மூன்றாமிடத்தில் இந்திய அணி, 2 வெண்கல பதக்கம் இந்தியா 'பி' அணி 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2014ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் பதிப்பில் நிகழ்த்திய சாதனையை இந்தியா இப்போதும் பிரதிபலித்து வெண்கல பதக்கம் பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த அனுபவம் வாய்ந்த பி. அதிபன் இருந்தார். போட்டியின் போது அற்புதமான ஃபார்மில் இருந்த இளம் நட்சத்திரங்களான டி குகேஷ், ஆர் பிரக்ஞானந்தா, நிஹால் சரின் மற்றும் ரவுனக் சத்வானி ஆகியோருக்கு இது செஸ் ஒலிம்பியாட்டில் முதல் பதக்க அனுபவமாகும். மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனைகள் கோனேரு ஹம்பி, ஆர் வைஷாலி ஆகியோர் முறையே குல்ருக்பா டோகிர்ஜோனோவா, இரினா க்ருஷ் ஆகியோருக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தனர். தானியா சச்தேவ் கரிசா யிப் மற்றும் பக்தி குல்கர்னியிடம் ததேவ் ஆபிரகாம்யானிடம் தோல்வியடைந்தது, இந்தியா 'ஏ' அணியின் தங்கப் பதக்க வாய்ப்பைப் பாதித்தது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 முடிவுகள்: ஓபன்:இந்திய அணி போட்டிகள்: இந்தியா 'பி' ஜெர்மனியை 3-1 என்ற கணக்கில் வென்றது (டி குகேஷ் வின்சென்ட் கீமருடன் டிரா, நிஹால் சரின் மத்தியாஸ் புளூபாம், ஆர் பிரக்ஞானந்தா ராஸ்மஸ் ஸ்வானுடன் டிரா, ரவுனக் சத்வானி லிவியு-டைட்டர் நிஸ்பேனுவை வீழ்த்தினார்). இந்தியா 'ஏ' அணி அமெரிக்காவுடன் 2-2 என டிரா செய்தது (பி ஹரிகிருஷ்ணா ஃபேபியானோ கருவானாவுடன் டிரா, விடித் சந்தோஷ் குஜ்ராத்தி வெஸ்லி சோ, அர்ஜுன் எரிகைசி லினியர் டொமினிகஸ் பெரெஸ், எஸ்.எல். நாராயணன் சாம் ஷாங்க்லாந்திடம் தோல்வியடைந்தார்). இந்தியா 'சி' கஜகஸ்தானை 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா செய்தது (சூர்யா சேகர் கங்குலி ரினாட் ஜுமாபயேவிடம் தோல்வி, எஸ்.பி. சேதுராமன் அலிஷர் சுலேமெனோவுடன் டிரா, கார்த்திகேயன் முரளி ஆரிஸ்டான்பெக் உராசாயேவை வீழ்த்தினர், அபிமன்யு பூராணிக் காசிபெக் நோஜர்பெக்குடன் டிரா செய்தார்). பட மூலாதாரம்,@FIDE_CHESS மகளிர் அணி: இந்தியா 'ஏ' 1-3 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது (கோனேரு ஹம்பி குல்ருக்பா டோகிர்ஜோனோவாவுடன் டிரா, ஆர் வைஷாலி இரினா க்ருஷ்ஷிடம் டிரா, டானியா சச்தேவ் கரிசா யிப்பிடம் தோற்றார், பக்தி குல்கர்னி ததேவ் ஆபிரகாம்யானிடம் தோல்வியடைந்தார்). இந்தியா 'சி' கஜகஸ்தானிடம் 1.5-2/5 என்ற கணக்கில் தோற்றது (ஈஷா கரவாடே ஜான்சயா அப்துமாலிக்கிடம் தோல்வியடைந்தார், பிவி நந்திதா பிபிசரா அஸ்ஸௌபயேவாவிடம் தோல்வியடைந்தார், வர்ஷினி சாஹிதி செனியா பாலபயேவாவிடம் டிரா செய்தார், பிரத்யுஷா போடா குலிஸ்கான் நக்பயேவாவிடம் தோல்வியடைந்தார்). இந்தியா 'பி' அணி ஸ்லோவாக்கியாவுடன் 2-2 என டிரா செய்தது (வந்திகா அகர்வால் ஜூசானா போரோசோவாவுடன் டிரா, பத்மினி ரௌட் இவா ரெப்கோவாவிடம் தோல்வியடைந்தார், மேரி ஆன் கோம்ஸ் எதிராக ஜூசானா ஹகரோவா, திவ்யா தேஷ்முக் ஸ்வெட்லானா சுசிகோவாவை வீழ்த்தினார்). பிற முக்கிய முடிவுகள்: ஓபன்: ஆர்மீனியா ஸ்பெயினை 2.5-1.5 என்ற கணக்கில் வென்றது, உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தை வென்றது. முக்கிய அம்சங்கள் மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எண்ணிக்கையில் நாடுகள் பங்கேற்றன. 187 நாடுகளில் இருந்து ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் கிட்டத்தட்ட 350 அணிகள் களமிறங்கின. இதில், ஓபன் பிரிவில் 188 அணிகள், மகளிர் பிரிவில் 162 அணிகள் இடம் பெற்றன. 2018இல் நடந்த படுமி ஒலிம்பியாட் போட்டியில் 179 நாடுகளில் இருந்து முறையே ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் 184 மற்றும் 150 அணிகள் கலந்து கொண்டன. இந்தியாவின் 30 பேர் கொண்ட அணிதான் மிகப்பெரிய அணியாக விளங்கியது. https://www.bbc.com/tamil/sport-62481498
  3. அதிசய கிணறு: தண்ணீர் உறிஞ்சும் குகைகள் - தோண்டத் தோண்ட விலகும் மர்மம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள திசையன்விளை பகுதியில் அதிசய கிணறு போல் சுற்று வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். கடந்த 3 மாதங்களாக அந்த குழுவினர் அதிசய கிணறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிணறுகளில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், கேமராக்கள் கொண்டு ஆய்வு செய்தனர். அதில், பல கிணறுகளில் சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக உள்ளதாகவும் மழை நீரில் உள்ள ஆக்சிஜன் சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து அதில் துவாரங்களை உருவாக்கி நாளடைவில் பெரிய குகைகளாக மாறி உள்ளதாக தெரியவந்துள்ளது. சில கிணறுகளில் கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அதிசய கிணறை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஐஐடி பேராசிரியர்கள் குழுவினர் இன்று பார்வையிட்டனர். தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். அதனுள் நவீன ட்ரோன் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அந்த கிணறுகள், சராசரியாக 50 முதல் 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டதாக தெரியவந்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்ட கூட்டம் ஏன்? தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த கோரிக்கை பசுமை பாலைவனமாகிறதா கொடைக்கானல்? எச்சரிக்கும் ஆர்வலர்கள் திருநெல்வேலி: கல் குவாரியால் வீடுகளில் விரிசல், அச்சத்தில் வாழ்வதாக தெரிவிக்கும் மக்கள் - கள ஆய்வு மேலும், மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை இந்த கிணறு வழியாக செலுத்தும் போது 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் சென்றும் நிரம்பாத கிணறு குறித்து ஐஐடி ஆய்வு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து ஐஐடி பேராசிரியர்கள் இந்த ஆய்வுக்காக நியமிக்கப்பட்டனர். பொதுவாக, 'ரேபிட் ரீசார்ஜ்' எனப்படும் அதிவேக நீர் பரவல் முறையில் விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும்போது ஒரு மணி நேரத்திலேயே அந்த கிணறு நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் அந்த கிணறு நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் கிணற்றின் அடியில் இருக்கும் சுண்ணாம்புப் பாறைகளான குகைகள்தான் என கண்டறிந்துள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்தனர். நிலத்தடி நீரும், மழை நீரும் சேர்ந்து இந்த சுண்ணாம்பு பாறைகளை கரைத்து துளைகளை பெரிதாக்கியதாகவும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நடைபெற்ற இந்த மாற்றம் காரணமாக கிணற்றுக்குள் சுண்ணாம்பு பாறைகள் பாதாள குகைகளாக உருவாகியுள்ளன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த கிணற்றுக்குள் பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் ஓடைகள் போல உருவாகியுள்ளது. ஒரு வலைபின்னல் போல சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த நிலத்தடி நீர் பாதைகள் உருவாக்கியுள்ளன. நிலப்பரப்பில் ஓடும் நீர் ஓடைகள் போல பூமிக்கு அடியில் இந்த பாதாள ஓடைகள் உள்ளன. அதில் நீர் அதிவேகமாக பரவலாக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் பூமிக்கு அடியில் செல்லும் இந்த நீர் பாதையில் துளையிட்டு, வெள்ள உபரி நீரை செலுத்தினால், பூமிக்கு அடியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிணறுகளுக்கும் நீர் அதிவேகமாக சென்று அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரம். கடந்த மூன்று மாதங்களாக இந்த கிணறு குறித்து தீவிர ஆய்வு செய்த ஐஐடி பேராசிரியர்கள், "சுமார் 300 கிணறுகள் வரை ஆய்வு செய்துள்ளோம்," என்று கூறுகின்றனர். 160 கிணறுகளில் அதன் நீர் மற்றும் கிணற்றின் தரைப்பகுதியில் இருக்கும் மண் மாதிரிகளை சேகரித்தும் ஆய்வு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வுப்பணிக்காக நீர் மூழ்கி கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பூமிக்கடியில் சுண்ணாம்புப் பாறைகளில் உள்ள துளைகளின் அளவு தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. "அந்த வகையில் இந்த ஆயன்குளம் கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறுதான்," என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். "இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் ஆறு கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்கிறது," என்றும் ஆய்வுக்குழுவினர் கூறினர். இதே போன்ற கிணறுகள் அருகிலுள்ள கிராமங்களிலும் உள்ளன. கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம், ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வரை இதே போன்ற கிணறுகள் உள்ளன. அவற்றையும் ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர். இது குறித்து விவரித்த ஆய்வாளர்கள், "இது சிறிய அளவிலான ஆய்வு திட்டம் தான். கருமேனியாறு நீர் பாதை அருகேவரை இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். ராதாபுரம், திசையன்விளை சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். உங்கள் கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகளோ குகைகளோ இருப்பது அறிந்தால் உடனடியாக 8925010683 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பினால் ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் இலவசமாக ஆய்வு மேற்கொள்வர்," என்று தெரிவித்தனர். இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை செப்டம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/india-62481489
  4. இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் போர்க்கப்பல் - காரணம் என்ன? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுவான் வாங் 5 இன்று (09.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ். தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே கராச்சி திரும்புகிறது. ஷாங்காயில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல், கராச்சிக்கு தமது முதல் பயணத்தை மேற்கொள்கிறது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வருகிறது. இந்த கப்பல் எதிர்வரும் 12-15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) எனும் கப்பல் - இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் - சுவேந்து அதிகாரி பட மூலாதாரம்,FOX PENCIL / GETTY IMAGES மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் என, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளதாக, 'இந்து தமிழ் திசை நாளிதழ்' செய்தி வெளியிட்டுள்ளது. மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பகவத் கீதை புத்தக பிரதி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளிகளில் பகவத் கீதையை பள்ளிகளில் போதிக்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றையும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. "கீதை ஒரு மதம் சார்ந்த நூல் மட்டுமல்ல. குஜராத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் மக்களின் ஆசியுடன் தேசியவாத அரசு ஆட்சிக்கு வந்தால், பள்ளிகளில் கீதையை போதிப்போம்" என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இயங்கி வந்தவர் சுவேந்து அதிகாரி. கடந்த 2020 டிசம்பர் வாக்கில் பாஜகவில் இணைந்தார். 2021 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தவர் சுவேந்து அதிகாரி. ஆர்எஸ்எஸ் பற்றிய 64 பக்க புத்தகம் கர்நாடகத்தை அதிரவைப்பது எப்படி? இந்து தேசத்தை உருவாக்குவதில் பின்னணியில் செயல்படும் இந்து அமைப்புக்களின் பங்கு இந்து ராஷ்டிரா: இந்தியா இந்து தேசமாக மாறுகிறதா? அதில் சிறுபான்மையினரின் நிலை என்ன? கவிஞர் சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி புகார் பட மூலாதாரம்,@MAIAMOFFICIAL தான் பண மோசடியில் ஈடுபடவில்லை என்றும் கவிஞர் சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பதில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கிறது 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி. திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் சினேகன், 'சினேகம்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். தனது அறக்கட்டளை பெயரை சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினேகன் புகார் அளித்திருந்தார். தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்துள்ளார். இந்த நிலையில் அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியதாவது: "நான் தமிழ்நாடு பாஜக மாநில மகளிர் அணி துணை தலைவியாக உள்ளேன். 2018-ம் ஆண்டு 'சினேகம்' என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி, நற்பணிகள் செய்து வருகிறேன். இந்நிலையில் சினிமா பாடலாசிரியர் சினேகன் என் மீது பொய் புகார் அளித்துள்ளார். நான் அறக்கட்டளைக்கு சேர வேண்டிய தொகையை பண மோசடி செய்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், நான் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று தனியாக அழைத்ததாகவும் கூறியுள்ளார். நான் முறைப்படி, 'சினேகம்' அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறேன். ஆனால், என்னை ஒரு பெண் என்றும் பாராமல் குற்ற வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில் என் மீது அவதூறு பரப்பி உள்ளார். என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். ஆதாரங்கள் இல்லாமல் என் மீது பொய் புகார் அளித்துள்ள சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜெயலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், "விளம்பர புகழுக்காக சினேகன் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். அவர், திமுகவுக்கு விலைக்கு போய் விட்டாரா? என்று தெரியவில்லை" எனவும் கூறியதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனம் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இலங்கையின் சந்தையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இதுவரை சுமார் 10,000 சர்வதேசக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கியிருப்பதுடன் தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக கடல்சார் விவகாரம் மற்றும் 'ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்ட' அபிவிருத்தி தொடர்பான சுயாதீன ஆய்வாளரான யசிறு ரணராஜா 'ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டம்' என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் எழுதியிருக்கும் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது. அதன்படி, இலங்கையின் சந்தைக்குள் நுழைவதற்கும் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் எரிபொருள்சார் உற்பத்திப்பொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு சினோபெக் நிறுவனம் ஆர்வம் காண்பிப்பதாகத் தெரிவிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு வெளிநாட்டு கையிருப்புப் பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்து, அவற்றை மீள்விற்பனை செய்யும் நடவடிக்கையை இலங்கையில் முன்னெடுப்பதற்கு ஆர்வம் காண்பிக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குமாறு சக்திவலு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்த பின்னணியிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது என, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-62473744
  5. மலக்குடலை அறுத்ததாக புகார் - தாய், சேயுடன் சிகிச்சைக்கு அலைந்த உறவினர்கள் 9 ஆகஸ்ட் 2022, 08:25 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சுசிசந்திரிகா தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே பிரசவத்தின் போது கவனக்குறைவாக கர்ப்பிணிக்கு அளித்த சிகிச்சையால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி, பெண்ணின் உறவினர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில், மருத்துவரின்றி செவிலியரே தனியாக பிரசவம் பார்த்ததாகவும், குழந்தையை பிரசவித்த பின்னர் தாயின் மலக்குடலை செவிலியர் கத்தரித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இந்த கூற்றை தலைமை மருத்துவ அலுவலர் மறுக்கிறார். என்ன நடந்தது வாணியம்பாடியில்? வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (26). இவர் மனைவி சுசிசந்திரிகா (25). இவருக்கு முதல் பிரசவத்திற்காக உதயேந்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31.07.2022 அன்று அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், பிரசவத்தின் போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் 2,000 ரூபாய் பணம் கேட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியரே சுகப்பிரசவம் பார்த்தபோது குழந்தை பிறக்கும் சமயத்தில் சதையை கத்தரித்துக் குழந்தையை வெளியே எடுத்து பின்னர் தையல் போட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.பிரசவத்துக்கு இரு தினங்களுக்குப் பிறகு தையல் பிரிந்ததால் சசிசந்திரிகாவின் உடல்நிலை மோசமாகியுள்ளது. இலங்கை நெருக்கடி: "இந்த நாட்டில் பிரசவிக்க பயமாக இருக்கிறது" - கர்ப்பிணிகள் நிலை என்ன? “ஆண்கள் இன்னும் என்னை ஏத்துக்கல” - கைக்குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் தாய் ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகளின் நிலை இப்போது எப்படி? அவரை மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இரு நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுசிசந்திரிகா அனுமதிக்கப்பட்டார். அரசு பேருந்தை சிறைப்பிடித்த உறவினர்கள் அங்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். இதனால் சுசிசந்திரிகா உயிருக்குப் போராடி வருவதாகவும் முறையாக சிகிச்சையளிக்காத ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுசிசந்திரிகாவின் உறவினர்கள் வாணியம்பாடி - கைலாசகிரி சாலையில் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் செய்தனர். இதையடுத்து போாரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாணியம்பாடி கிராம காவல்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து வட்டார தலைமை மருத்துவர் அலுவலர் பசுபதி கூறுகையில், "சுசிசந்திரிகா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மிகுந்த உடல் சோர்வு ஏற்பட்டதாகவும் மலக்குடல் ஏதும் கத்தரிக்கப்படவில்லை. செவிலியர் பிரசவத்திற்கு 2,000 ரூபாய் பணம் பெற்றது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார். மலக்குடலை அறுத்ததாக சந்தேகம் இது குறித்து மருத்துவர் பசுபதியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 90% செவிலியர்கள் தான் பிரசவம் பார்க்கிறார்கள். தையல் போடப்பட்ட இடத்தில் காயம் ஆறாததால் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகும் சசிசந்திரிகா உடல் சுகவீனமாக இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு அவர் பரிந்துரைக்கப்ட்டார். அங்குள்ள அவரது நிலையை கண்காணிக்க ஒரு மருத்துவர் குழு அனுப்பியுள்ளோம்," என்று கூறினார். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு தையல் போட்ட பகுதியில் சதை கிழிந்ததாகவும் இரண்டாவது முறையாக போட்ட தையலும் பிரிந்ததாக உறவினர்கள் கூறினர். "மூன்றாவது முறையாக அதே மருத்துவ நிலையத்துக்கு சுசிசந்திரிகாவை அழைத்துச் சென்றோம். அப்போது அங்கிருந்த மருத்துவர் சுசிசந்திரிகாவை முழுமையாக பரிசோதனை செய்த பிறகு தையல் போட்ட செவிலியரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் இருந்த செவிலியரிடம் மலக்குடலை நீங்கள் கத்தரித்து விட்டீர்கள் என மருத்துவர் கூறியிருக்கிறார். அப்போதுதான் தான் சசிசந்திரிகாவின் மலக்குடலை கத்திரித்ததாக அந்த செவிலியருக்கே தெரியவந்துள்ளது," என்று பெண்ணின் உறவினர் சசிகலா கூறுகிறார். மேலும், "2,000 ரூபாய் பணம் வாங்குவது குறித்து வீட்டில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். பிரசவம் முடிந்த பிறகு மூன்று நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்," என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து சுசிசந்திரிகாவை மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கும் இரண்டு நாள் சிகிச்சை பார்த்த பிறகு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இங்கும் சிகிச்சை அளிக்க முடியாது, மேல் சிகிச்சைக்காக சென்னை செல்லுங்கள் எனக் கூறினர். பிஞ்சுக் குழந்தையை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று கூறிய பிறகே, அடுக்கம்பாறை மருத்துவமனையிலேயே சுசிசந்திரிகாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்னர்," என்கிறார் சசிகலா. https://www.bbc.com/tamil/india-62475300
  6. டாஸ்மாக் மூலம் வெள்ளை பணமாக மாறிய ரூ. 64 கோடி கருப்புப் பணம் - ஆர்டிஐ தகவல் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிப்பு படம் தமிழகத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலில் இரு்நத காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனம் ரூ. 64 கோடி ரூபாய்க்கும் மேலான கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு இந்திய பிரதமர் மோதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். அதன்படி, பிரதமர் உரையாற்றிய அன்று நள்ளிரவில் இருந்தே ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாத நிலை ஏற்பட்டது. என அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ரொக்கமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்துள்ளவர்கள் உடனே வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனால் தங்கள் பணத்தை எடுக்கவும், மாற்றவும் பலர் வங்களில் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். மின் சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பது ஏன்? - செந்தில் பாலாஜி பேட்டி மோசடி புகாரில் வேலூர் நிதி நிறுவனம்: முதலீடு செய்த ஏஜென்ட் தற்கொலை சிறுமி கரு முட்டை சர்ச்சை: தனியார் ஸ்கேன் கருவிகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மோதி தெரிவித்தார். ஆனால் அந்த நடவடிக்கையால் தற்போதுவரை எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை அரசு வெளியிடவில்லை. 2016 ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாநில வாணிக கழகம்(டாஸ்மாக்) மாநிலத்தில் உள்ள அனைத்து முதுநிலை மண்டல இயக்குநர்கள், மாவட்ட மேலாளர்கள், மற்றும் டிப்போ மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், "மத்திய அரசின் கொள்கை முடிவின்படி 8-11-2016 அன்று வெளியிட்ட அறிவிப்பில் 500,1000 ரூ செல்லாது என அறிவித்துள்ளது. எனவே 10-11-2016 அன்றுக்குள் சில்லறை வணிகம் மூலம் பெறப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி விட வேண்டும். மேலும் இதற்கு மேல் 500,1000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது," என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கையினை மீறி தமிழகத்தில் ஈரோடு, தேனி, திருச்சி, தூத்துக்குடி, கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும் 10-11-2016 முதல் டிசம்பர் 31 வரை டாஸ்மாக் சில்லறை வணிகத்தின் மூலமாக 64 கோடி ரூபாய், 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளாக வாங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 22 கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளை ஆகி உள்ளது. சென்னையை சேர்ந்த ஆர்டிஐ செயல்பாட்டாளர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு பல கட்ட அலைகழிப்பிற்கு பின்னர் தமிழ்நாடு வணிக கழகம் அனுப்பிய பதிலில் இந்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. "அரசின் உத்தரவையும் மீறி டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக பல நூறு கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி இருக்கிறார்கள்," என்கிறார் காசிமாயன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த பணம் அனைத்தும் அரசியல் வாதிகள் மற்றும் பெரும் வணிகர்களின் கருப்பு பணம் - பண மதிப்பிழப்பு கால கட்டங்களில் கமிஷன் அடிப்படையில் இந்த பணத்தை சிலர் வாங்கி டாஸ்மாக் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு வெள்ளை பணமாக மாற்றி உள்ளனர். பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு 500,1000 ரூ நோட்டுகளை வாங்க கூடாது என அரசு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட பிறகும், அதனையும் மீறி டிசம்பர் 31 வரை 500,1000 ரூ நோட்டுகளை வாங்கிய டாஸ்மாக் சில்லறை விற்பனை ஊழியர்கள், மற்றும் அதனை கண்கானிக்கும் மாவட்ட விற்பனை அலுவலர்கள், மற்றும் அவர்களை கண்கானிக்கும் மண்டல முதுநிலை மேலாளர்கள் என அனைவரும் மீதும் குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் 13 மாவட்டங்களில் வணிக ரகசியம் என பதில் கூற மறுத்து விட்டார்கள். 25 மாவட்டங்களில் மட்டும் 64 கோடி கருப்பு பணம் வெள்ளை ஆகி உள்ளது," என்றார். 'கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டது உண்மைதான்' பண மதிப்பிழப்பு காலத்தில் கமிஷன் பெற்றுக்கொண்டு டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது உண்மைதான் என்கிறார் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.திருசெல்வன். இதுகுறித்து இவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிகாரிகள் 500 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவிப்பு எதுவும் முறையாக கொடுக்கவில்லை. அரசு கடை தானே என வாடிக்கையாளர்கள் பல இடங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க சொல்லி தகராறில் ஈடுபட்டார்கள். இதனால் வேறு வழியின்றி ஒரு சில கடைக்காரர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்கினார்கள். இது ஒரு புறம் இருக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் அதிகாரிகளின் துணையோடு டாஸ்மாக் வழியே சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கமிஷன் கொடுத்து கருப்பு பணத்தை மாற்றினார்கள். அன்றைய வருமானத்தை வங்கியில் செலுத்தும் பொழுது மொத்த தொகையும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாயாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அப்போதே நாங்கள் புகார் அளித்தோம். புகாரின் அடிப்படையில் மேல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள் அதில் ஊழல் நடைபெற்று இருப்பதை உறுதி செய்தார்கள். அப்போதே ஊழல் செய்தவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யவில்லை," என்றார். இதன் வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனால் இதுகுறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்க முடியாது என பிபிசி தமிழிடம் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ் சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து முன்னாள் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணியிடம் விளக்கம் கேட்டபோது, "அரசியல்வாதிகளின் தலையீடு எதுவுமே கிடையாது வேண்டுமென்றால் இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளலாம்" என்றார். "இந்த புகார் தொடர்பாக ஏற்கெனவே துறை சார்ந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவலை அப்போது இருந்த துறை சார்ந்த அதிகாரிகள் தான் வழங்க வேண்டும். அதிகாரிகளிடம் இந்த புகார் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதுவுமே கிடையாது. வேண்டுமென்றால் இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளலாம். தவறு செய்திருந்தால் தற்போதைய அரசு தவறிழைத்தவர்களை விட்டு விடுமா?" என்றார். https://www.bbc.com/tamil/india-62470754
  7. வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ. 9 ஆகஸ்ட் 2022, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. அதிபராக இருந்த போது நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கையாண்ட விதம் குறித்த விசாரணையுடன் இந்தச் சோதனை தொடர்புடையது என்று கூறப்படுகிறது. தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், "இது நாட்டின் இருண்ட காலம்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு, இதற்கு முன் எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்று எதுவும் நடந்ததில்லை," என்று தெரிவித்துள்ளார். மீண்டும் செல்வாக்கை பெருக்கும் ட்ரம்ப்பின் புதிய உத்தி அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ''நீதியின் வாள்" எனினும் இந்தச் சோனை குறித்து எஃப்.பி.ஐ. அமைப்போ, அமெரிக்காவின் நீதித்துறையோ கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அமெரிக்காவின் மைய அரசின் சட்டங்களும் ரகசிய ஆவணங்களை கையாள்வது குறித்து விவரிக்கின்றன. இந்தச் சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ட்ரம்பின் வழக்கறிஞர் கிறிஸ்டினா என்பிசி நியூஸிடம் கூறியுள்ளார். அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில், ட்ரம்ப் வீட்டில் நடைபெற்றிருக்கும் சோதனை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அனைத்து அரசு அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகவும், அதனால் "அறிவிக்கப்படாத இந்தச் சோதனை அவசியமில்லை, ஏற்புடையதில்லை" என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடுவதைத் தடுக்கவே நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார். "இத்தகைய தாக்குதல்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே நடக்கும் சாத்தியம் உண்டு. கெடுவாய்ப்பாக, இதுவரை காணாத ஊழலில் திழைக்கும் அமெரிக்கா இப்போது அந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார். புளோரிடாவில் சோதனை நடந்தபோது நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில் ட்ரம்ப் இருந்ததாக சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது. ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய ட்ரம்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப், "இந்தச் சோதனை தேசிய ஆவணக் காப்பகப் பதிவுகளைக் கையாள்வது குறித்த விசாரணையுடன் தொடர்புடையது" என்று கூறினார். பின்னணி என்ன? அதிபராக இருந்தபோது அரசு ஆவணங்களைக் கையாண்டது தொடர்பாக ட்ரம்பை விசாரிக்க வேண்டும் என்று தேசிய ஆவணக் காப்பகம் நீதித்துறையைக் கேட்டுக் கொண்டுது. அதிபராக இருந்த காலத்தில் பல ஆவணங்களை ட்ரம்ப் கிழித்து எறிந்ததாகவும் அவற்றை ஒட்டவைக்க வேண்டியிருந்தது எனவும் தேசிய ஆவணக் காப்பக அதிகாரிகள் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை 'போலிச் செய்திகள்' என்று கூறி நிராகரித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாகவே இப்போது ட்ரம்பின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. எஃப்.பி.ஐ.யின் தேடுதல் வாரண்டில் நீதிபதி ஒருவர் கையெழுத்திட வேண்டும். தேடுதல் வேட்டைக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்த பிறகே நீதிபதி அதில் கையெழுத்திடுவார். பட மூலாதாரம்,GETTY IMAGES அந்த வகையில் நீதிபதி கையெழுத்திட்ட வாரண்ட் குறித்த தகவல் திங்கள்கிழமை காலை பத்து மணிக்கு எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் வந்ததாக பெயர்கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ட்ரம்பின் இல்லத்தில் இருந்து பல பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவம் எந்தக் கதவும் உடைக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது. இதனிடையே வெள்ளை மாளிகையின் கழிவறைப் பேழையில் சில காகிதங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களை பத்திரிகையாளர் மேகி ஹேபர்மன் வெளியிட்டுள்ளார். இது ட்ரம்பின் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ட்ரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வெள்ளை மாளிக்கைக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையின்போது, நீதித்துறையின் விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என்று பைடன் கூறியிருந்தார். வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டில் பைடனின் மகன் ஹன்டர் பைடனும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறார். https://www.bbc.com/tamil/global-62447584
  8. சீனா - தைவான் விவகாரம்: தைவானைச் சுற்றி சீனாவின் போர்ப்பயிற்சி சொல்லும் செய்தி என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, சீனாவின் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து தைவான் முன்னெச்சரிக்கையுடன் படைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளது. அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றது, சுயாதீன ஆட்சி நாடாக இருக்கும் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது. நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தைவானை சுற்றி சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டதை இருதரப்பும் எப்படி பார்க்கிறது என்பதை பிபிசி செய்தியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். புதிய இயல்பு நிலை ஸ்டீஃபன் மெக்டொனெல், பெய்ஜிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள தீவிர சிந்தனையாளர்கள், நான்சி பெலோசியின் தைவான் வருகை தங்களுக்கு விட்டுச் சென்றுள்ள சூழல் குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடையலாம். நான்சி பெலோசி அவர்களுக்கு ஒரு வாய்ப்பை திறந்துவிட்டுள்ளார், அவர்கள் அதனை பயன்படுத்தியுள்ளனர். தைவானைச் சுற்றி மேற்கொள்ளப்படும் தீவிர ராணுவ நடவடிக்கைகள் தற்போது "ஏற்றுக்கொள்ளக்கூடிய" பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன. தைவானில் ஏவுகணைகளை ஏவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது "ஏற்றுக்கொள்ளக்கூடியதாக" மாறியுள்ளன. சர்வதேச சமூகம் இதனை ஏற்றுக்கொண்டது மட்டும் இதற்கு காரணம் அல்ல, அவற்றை நிகழ்த்திய சீனா அதிலிருந்து தப்பித்து கொண்டதால் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது. தைவானை நோக்கி சீறிப்பாய்ந்த சீன ஏவுகணைகள் - அச்சத்தில் மீனவ குடும்பங்கள் அமெரிக்காவுடன் உறவை முறிக்கும் சீனா - காலநிலை மாற்றம், போதைமருந்து ஒழிப்பில் சிக்கல் தைவானை தனிமைப்படுத்த சீனாவை அனுமதிக்க மாட்டோம்: நான்சி பெலோசி இப்போது சீன ராணுவம் (பிஎல்ஏ) ஒவ்வொரு முறையும் தைவானுக்கு நெருக்கமாக போர் விமானங்களை அதிக எண்ணிக்கையில் பறக்கவிடுகிறது. இது தற்போது புதிய இயல்பாக மாறியுள்ளது. இதைவிட, சீனா தன் படைகளின் மூலம் தைவானை கைப்பற்றும் வகையில் தாக்குதல் நிகழ்த்தும் என்பதே நடப்பதற்கு சாத்தியமான ஒன்றாக உள்ளது என, சீன மக்கள் பலரும் கருதுகின்றனர். இது நடைபெற வேண்டும் என விரும்பியவர்களுக்கு இச்சூழல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. தைவான் "தாய்நாட்டுக்குத் திரும்புதல்" என, சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ விவரித்ததை அடைவதற்கு உண்டான அமைதிவழி உத்திகள் தற்போது விவாதிக்கப்படவில்லை அல்லது அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை. சீன ராணுவத்தின் இத்தகைய பிரம்மாண்டமான ராணுவ ஒத்திகைகள், சீன ராணுவத்தின் எழுச்சி தடுக்க முடியாதது என்கிற நம்பிக்கையை உலகளவில் முடுக்கிவிட்டுள்ளது என்பது இதன் பக்கபலனாக கருதப்படுகிறது. இது, தென்சீனக் கடலில் உரிமைகோரல் தொடர்பாக சீனாவுடன் போட்டி கொண்டுள்ள தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளை அச்சுறுத்தலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த பெரியளவிலான ராணுவ நடவடிக்கைகள் முன்னதாக திட்டமிடப்பட்டிருக்கலாம். நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி கசிந்தபோது, சீன ராணுவ ஜெனரல்கள், திடீரென இவற்றை நிகழ்த்தினார்கள் என கற்பனை செய்வது கடினம். சீனா இதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு, சந்தர்ப்பம் கிடைத்தபோது நிகழ்த்தியது என்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் பெய்ஜிங்கில் நேர்காணல் செய்யப்பட்ட தேசியவாதி ஒருவர், "காம்ரேட் பெலோசிக்கு நன்றி!" என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நான்சி பெலோசி - ட்சாய் யிங் வென் கடும் ரத்தக்களரியான, பேரழிவு நிகழ்வு என்பதற்கு மாறாக, தைவானை கைப்பற்றுவது எளிதானது என, தனது சொந்த போர்க்குணமிக்க சொல்லாட்சிகளில் சீன அரசாங்கம் சிக்கிக்கொள்வது ஆபத்தானது. பிரதான நிலப்பகுதியில் எவ்வித தாக்குதலையும் தடுக்க தைவான் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் பாதுகாப்பு உத்திகளை தயாரிப்பதற்கு இந்த போர் விளையாட்டுகள் உதவியதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்த போர் ஒத்திகைகள் அதிபர் ஷி ஜின்பிங் அரசாங்கத்திற்கு போதவில்லை. அமெரிக்காவுடன் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லை கடந்த குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றுடனான ஒத்துழைப்பை சீனா கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்திவிட்டது. மேலும், அமெரிக்கா - சீன ராணுவத்திற்கு இடையிலான அனைத்து உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. மேலும், இதுதொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின் மற்றும் தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே ஆகியோரின் தொலைபேசி அழைப்புகளுக்கு சீன தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, காலநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்திக்கொண்டது. உலகின் இருபெரும் கார்பன் உமிழ்வு நாடுகள் இதுதொடர்பாக பேசுவதை நிறுத்திக்கொண்டன. பெலோசியின் தைவான் வருகை பதட்டத்தை நிச்சயமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஷி ஜின்பிங் அரசாங்கம் குறைந்தது இப்போதைக்கு இந்த பதட்டத்தை விரும்புவதாக தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷி ஜின்பிங் வார்த்தை போர் ரூபெர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ், தைவான் தைவானை சுற்றி நடக்கும் சீன ராணுவ நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து சீன தரப்பிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளும் அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தைவான் அரசியல்வாதிகளின் சிறு குழு ஒன்றை சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, "தைவானின் பிரிவினைவாத சக்திகள்" என்று அடையாளப்படுத்தினார். அப்படி அடையாளப்படுத்தப்பட்டதில் முதன்மையானவர் தைவான் அதிபர் ட்சான் யிங்-வென். சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ அவரை, "சீன நாட்டின் தகுதியற்ற வம்சாவழி" என கூறினார். இதனை வேறு விதமாக கூறினால், ஒரு துரோகி. தைவானைச் சுற்றி ஏவுகணைகளை வீசும் சீனா: விரையும் அமெரிக்கக் கப்பல் - நேரடித் தகவல்கள் சீனா - தைவான் பிரச்னை என்ன? மிக எளிமையான விளக்கம் ராணுவ பலத்தில் மேற்கு நாடுகளை சீனா முந்துவது எப்படி? தங்களின் எதிரி அல்ல என சீனா கூறிவரும் பெரும்பகுதி தைவான் மக்களை, தைவானை தாய்நாட்டிலிருந்து கிழித்தெடுக்க முயற்சிப்பதாக கூறும் சிறிய "குழுவில்" இருந்து பிரித்தெடுக்க முயற்சிப்பதே இதன் நோக்கமாகும். தைவான் குறித்த சீனாவின் இந்த பார்வை யதார்த்தத்திலிருந்து வேறுபட்டதாக இருப்பது இங்கு பிரச்னையாக உள்ளது. சீனாவுடனான எவ்விதமான ஒன்றிணைப்பையும் தைவானின் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர் என சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்களை "தைவானியர்கள்" என்றே கருதுகின்றனர் "சீனர்களாக" அல்ல. "சீன கலாச்சாரக் கூறுகளை நீக்குவதை" ட்சாய் யிங்-வென் அரசாங்கம் மேற்கொள்வதே இதற்கு காரணம் என, வாங் இ கூறுகிறார். மேலும், ட்சாய் "இரு சீனாக்கள்" அல்லது "ஒரு சீனா, ஒரு தைவானை" உருவாக்க முயல்வாதாக கூறுகிறார். பட மூலாதாரம்,EPA தைவான் சீனாவுடன் "மீண்டும் இணைந்த பின்பு" தைவான் மக்கள் "மீண்டும் கற்க வேண்டும்" என்று பிரான்ஸுக்கான சீன தூதர் கூறியிருந்தார். தைவான் மக்கள் சீனர்கள் அல்ல என நம்பும் வகையில் அவர்கள் "மூளைச்சலவை" செய்யப்பட்டுள்ளதாக, அவர் கூறுகிறார். இது மீண்டும் யதார்த்தத்துடன் வேறுபட்டதாக உள்ளது. விரும்பியதை படிக்கவும் சிந்திக்கவும் வாக்களிக்கவும் அனுமதிக்கப்பட்ட சுதந்திர சமூகத்தினராக தைவான் மக்கள் உள்ளனர். இவை அனைத்தும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போதைக்கு உள்ள கேள்வி. 2024இல் நடைபெற உள்ள தேர்தலில் தைவான் மக்களை அதிபர் ட்சாய் கட்சிக்கு எதிராக தைவான் மக்கள் வாக்களிக்கும் வகையில் அச்சுறுத்துவதே சீனாவின் நோக்கமாக உள்ளது. சீனாவுடன் நட்பாக உள்ள குவாமிண்டாங் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என சீனா நினைக்கிறது. சீன பிரதான நிலப்பகுதியில் பெருமளவில் முதலீடு செய்துள்ள தைவான் தொழிலதிபர்களுக்கு சீனா நேரடி அச்சுறுத்தல்களை விடுக்கிறது. அவர்கள் "சரியான பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்" என அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய உத்திகளை சீனா முன்பே முயற்சித்துள்ளது, ஆனால் அவை வெற்றி பெறவில்லை. தைவானின் தொழில்கள் பல சீனாவின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக தைவானின் பழ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைவானுக்கு வரும் பிரதான சுற்றுலாப் பயணிகள் மீது சீனா விதித்துள்ள தடையால் சுற்றுலாத் துறை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனாவைப் பற்றிய தைவானிய அணுகுமுறைகள் மேலும் கடினமாகிவிடும் என்பதே கடந்த சில நாட்களின் சான்றுகள் கூறுவதாக உள்ளன. https://www.bbc.com/tamil/global-62473778
  9. அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஜாரியா கோர்வெட் பிபிசி ஃபியூச்சர் 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கா இதுவரை குறைந்தது மூன்று அணு குண்டுகளையாவது தொலைத்துள்ளது. அவை எங்குள்ளன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது எப்படி நடந்தது? அமெரிக்கா தொலைத்த அணுகுண்டுகள் எங்கே போயின? அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? அது பனிப்போர் உச்சத்தில் இருந்த ஒரு மெல்லிய குளிர்கால நாளின் காலைப்பொழுது. ஜனவரி 17, 1966 அன்று, ஸ்பெயினில் இருந்த மீன்பிடி கிராமமான பலோமரேஸில், உள்ளூர்வாசிகள் வானத்தில் இரண்டு ராட்சத நெருப்புப் பந்துகள் அவர்களை நோக்கி வரும் காட்சியைக் கண்டனர். அடுத்த சில நொடிகளில், கட்டடங்கள் குலுங்கின. வெடிகுண்டு துண்டுகள் தரையில் விழுந்தன. சில வாரங்களுக்குப் பிறகு, ஃபிலிப் மேயர்ஸ் டெலிபிரின்டர் மூலம் ஒரு செய்தியைப் பெற்றார். அந்த நேரத்தில், அவர் கிழக்கு சிசிலியில் உள்ள கடற்படை விமான தளத்தில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரியாக இருந்தார். ஸ்பெயினில் அவசரநிலை இருப்பதாகவும் சில நாட்களுக்குள் அவர் அங்கு இருக்க வேண்டும் என்றும் டெலிபிரின்டர் செய்தியில் கூறப்பட்டது. இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா? சென்னையில் அமெரிக்க கடற்படை கப்பல் - இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் சிஐஏ உளவாளி கேரி ஷ்ரோன் மறைவு: பின்லேடனை பிடிக்க அமெரிக்கா அனுப்பிய ஜேம்ஸ் பாண்ட் இருப்பினும் ராணுவம் எதிர்பார்த்ததைப் போல் இந்தப் பணி ரகசியமாக இருக்கவில்லை. பொதுமக்களுக்கு என்ன நடக்கிறது எனத் தெரிந்திருந்தது. அன்று மாலை விருந்து ஒன்றில் கலந்துகொண்டு தனது மர்மமான பயணத்தைப் பற்றி அறிவித்தபோது, அவருடைய ரகசியத்தன்மை நகைப்புக்குரியதாக மாறியது. "அது ஒருவிதத்தில் சங்கடமாக இருந்தது. அது ரகசியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் எதற்காகச் செல்கிறேன் என்பதை என் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள்," என்கிறார் மேயர்ஸ். பல வாரங்களுக்கு, உலகெங்கும் உள்ள செய்தித்தாள்கள், இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் நடுவானில் மோதியபோது, நான்கு பி28 தெர்மோநியூக்ளியர் குண்டுகளை பலோமரேஸில் விழுந்தன என்று சொல்லப்படுவதாகச் செய்தி வெளியிட்டன. மூன்று குண்டுகள் நிலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று மட்டும் தென்கிழக்கில் மத்திய தரைக் கடலில் தொலைந்தது. 1,100,000 டன் டி.என்.டி குண்டுகளின் வெடி திறனைக் கொண்ட, 1.1 மெகா டன் அணுகுண்டைக் கண்டுபிடிப்பதற்கான வேட்டை நடந்து கொண்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலோமரேஸில் அணு குண்டுகள் தொலைந்தபோது, 3.2 கிலோ புளூட்டோனியத்தை சிதறின காணாமல் போன மூன்று அணு குண்டுகள் 1. ஒரு மார்க் 15 தெர்மோநியூக்ளியர் குண்டு, ஜார்ஜியாவிலுள்ள டைபீ தீவில், பிப்ரவரி 5, 1958 அன்று தொலைந்தது. பாதுகாப்பான தரையிறக்கம் செய்வதற்கு விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக கடலில் தூக்கி எறியப்பட்டது. 2. ஒரு பி43 தெர்மோநியூக்ளியர் குண்டு, பிலிப்பைன்ஸ் கடலில், டிசம்பர் 5, 1965 அன்று தொலைக்கப்பட்டது. ஒரு குண்டுவீச்சு விமானம், விமானி மற்றும் அணு ஆயுதம் ஆகியவை, விமானங்களைச் சுமந்து செல்லும் கேரியர் கப்பலின் ஒரு பக்கத்திலிருந்து நழுவியது. அதை மீண்டும் கண்டுபிடிக்கவே இயலவில்லை. இரண்டாவது நிலையிலிருந்த ஒரு பி28எஃப்1 தெர்மோநியூக்ளியர் அணுகுண்டு, கிரீன்லாந்து துலே விமான தளத்தில், 22 மே 1968 அன்று தொலைக்கப்பட்டது. கேபினில் தீ பற்றியதால், விமானத்தில் இருந்த குழு விமானத்தைக் கைவிட்டு தப்பித்தனர். சோவியத் தொலைத்த அணுஆயுத டோர்பிடோக்கள் பலோமரேஸ் சம்பவம் மட்டுமே அணு ஆயுதத்தைக் கைவிட்ட சம்பவமல்ல. 1950ஆம் ஆண்டு முதல், பூமியில் பேரழிவை விளைவிக்கக்கூடிய இந்த குண்டுகளோடு தொடர்புடைய இத்தகைய 32 விபத்துகள் நடந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில், இவை தவறுதலாகக் கைவிடப்பட்டன அல்லது அவசரநிலையின்போது தூக்கி எறியப்பட்டு பிறகு மீட்கப்பட்டன. ஆனால், அமெரிக்காவின் மூன்று அணுகுண்டுகள் முற்றிலும் காணாமல் போய்விட்டன. அவை, சதுப்புநிலங்கள், பெருங்கடல் என்று எங்கு தொலைந்தனவோ அங்கேயே இன்றுவரை இருக்கின்றன. ஆனால், எங்கே என்று கண்டுபிடிக்கப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கலிஃபோர்னியாவில் இருக்கும் ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுதப் பரவல் தடுப்பு மையத்தின் கிழக்காசிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு திட்டத்தின் இயக்குநர் ஜெஃப்ரி லூயிஸ், "அமெரிக்காவின் இத்தகைய பெரும்பாலான பிரச்னைகளைப் பற்றி நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். 1980களில் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட முழு பட்டியல் வெளியானபோது தான் இது வெளிப்பட்டது," என்று அவர் விளக்குகிறார். "பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா அல்லது சீனா பற்றி எங்களுக்கு உண்மையில் எதுவும் தெரியாது. எனவே முழு கணக்கியல் போன்ற எதுவும் எங்களிடம் இல்லையென்று நான் நினைக்கிறேன்," என்கிறார் லூயிஸ். சோவியத் யூனியன், 1986-இல் 45,000 அணு குண்டுகளைக் குவித்து வைத்தது. அவர்களும் அணு குண்டுகளைத் தொலைத்த சம்பவங்கள் நடந்துள்ளன. அவையும் மீட்டெடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்க சம்பவங்களைப் போலன்றி, அவையனைத்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் நிகழ்ந்தன. அவற்றின் இருப்பிடங்கள் தெரிந்திருந்தாலும் அணுக முடியாத இடத்தில் இருக்கும். ஏப்ரல் 8,1970-இல் சோவியத் கே-8 என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் தீ பரவத் தொடங்கியது. அது ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு அருகே, பிஸ்கே விரிகுடாவில், வடகிழக்கு அட்லான்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. அதில் மூன்று அணு ஆயுத டோர்பிடோக்கள் இருந்தன. அவை அந்த நீர்மூழ்கிக் கப்பலோடு கடலுக்குள் மூழ்கின. 1974ஆம் ஆண்டில், ஹவாய்க்கு வடமேற்கே பசிபிக் பெருங்கடலில் மூன்று ஆணுசக்தி ஏவுகணைகளுடன் ஒரு சோவியத் கே-129 நீர்மூழ்கிக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியது. அதை விரைவாகக் கண்டுபிடித்து, அதிலிருந்து அணு ஆயுதங்களைத் தன்வசமாக்கிக் கொள்ள அமெரிக்கா ரகசிய முயற்சிகளை எடுக்க முடிவெடுத்தது என்கிறார் லூயிஸ். ஹாவர்ட் ஹியூஸ் என்ற அமெரிக்க கோடீஸ்வரர், விமானி மற்றும் திரைப்பட இயக்குநர் என்று பரவலாகப் பிரபலமானவர். அவர் ஆழ்கடல் சுரங்கங்களில் ஆர்வம் இருப்பதைப் போல காட்டிக் கொண்டார். "ஆனால், உண்மையில் அது ஆழ் கடல் சுரங்கம் இல்லை. அது, ஆழ் கடல் வரை சென்று நீர்மூழ்கிக் கப்பலைப் பிடித்து மீண்டும் மேலே கொண்டு வருவதற்கான ஒரு ராட்சத கருவியை உருவாக்குவதற்கான முயற்சி," என்று லூயிஸ் கூறுகிறார். பிராஜக்ட் அசோரியன் என்றழைக்கப்பட்ட அது துரதிர்ஷ்டவசமாக வேலை செய்யவில்லை. நீர்மூழ்கிக் கப்பலைத் தூக்கும்போதே உடைந்துவிட்டது. "ஆகவே அந்த அணு ஆயுதங்கள் மீண்டும் கடலுக்கடியில் விழுந்திருக்கும்" என்கிறார் லூயிஸ். 1998ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் அவருடைய கூட்டாளியும் 1958ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள டைபீ தீவுக்கு அருகே விழுந்த அணு குண்டைக் கண்டுபிடிக்க உறுதியோடு முயன்றனர். அவர்கள் முதலில் அதைத் தொலைத்த விமானியை விசாரித்தார்கள். பிறகு வெடிகுண்டைத் தேடியவர்களையும் பேட்டி கண்டார்கள். பல தசாப்தங்களுக்கு முன்பு அட்லான்டிக் பெருங்கடலின் அருகிலுள்ள விரிகுடாவில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இறுதியில் அவர்களுடைய தேடல் பரப்பு சுருங்கியது. பல ஆண்டுகளாக மேவரிக் கூட்டாளிகள் படகு மூலம் அந்தப் பகுதியைத் தேடினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலோமரேஸில் அணுகுண்டை மீட்க ரோபோடிக் நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டது ஒருநாள் அவர்கள் கதிர்வீச்சைக் கண்டறியும் கெய்கர் கருவியைப் படகில் பொருத்தி தேடிக் கொண்டிருந்தபோது, விமானி விவரித்த சரியான இடத்தில், மற்ற இடங்களில் இருக்கும் அளவை விட 10 மடங்கு அதிக கதிர்வீச்சு இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், அது கடல் பரப்பிலுள்ள தாதுக்களில் இயற்கையாக நிகழும் கதிர்வீச்சிலிருந்து வந்துள்ளது. ஆகவே, இப்போது வரை அமெரிக்கா தொலைத்த மூன்று அணு குண்டுகள் மற்றும் சோவியத் தொலைத்த டோர்பிடோக்கள், பெருங்கடலில் அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தல்களின் நினைவுச் சின்னங்களாகக் கிடக்கின்றன. இருப்பினும் அவை பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன. இந்த ஆபத்தான ஆயுதங்கள் அனைத்தையும் ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை? அவை வெடிக்கக்கூடிய அபாயம் உள்ளதா? நாம் எப்போதாவது அவற்றைத் திரும்பப் பெற முடியுமா? தண்ணீருக்குள் வந்த பாராசூட் சிக்கல் இறுதியாக, 1966ஆம் ஆண்டில் பி52 குண்டுவீசும் விமானம் விழுந்த ஸ்பானிய கிராமமான பலோமரேஸுக்கு மேயர்ஸ் வந்தபோது, அதிகாரிகள் காணாமல் போன அணு குண்டை தேடிக் கொண்டிருந்தனர். மார்ச் 1, 1996 அன்று, சிறிய நீர்மூழ்கிக் கப்பல் வெடிகுண்டு முதன்முதலில் கடலின் அடிவாரத்தைத் தாக்கியபோது ஏற்பட்ட தடத்தைக் கண்டுபிடித்தது. பிறகு, அதுகுறித்த படங்கள் ஒரு வினோதமான காட்சியை வெளிப்படுத்தின. காணாமல் போன அணு ஆயுதத்தின் வட்டமான முனை அதில் தெரிந்தது. அணுகுண்டுக்குப் பொருத்தப்பட்டிருந்த வெள்ளை நிற பாராசூட், அது விழுந்தபோது ஓரளவுக்கு வெளியாகி அணுகுண்டின் வட்டமான முனையை மூடியிருந்தது. அந்த அணுகுண்டை மீட்பதற்கான முயற்சிகள் ஓயவில்லை. 2,850 அடி ஆழத்தில், கடல் தளத்திலிருந்து இந்த அதை மீட்பது மேயர்ஸின் வேலையாக இருந்தது. அவர்கள் சில ஆயுரம் அடி கனரக நைலான் கயிறு, ஓர் உலோக கொக்கி ஆகியவற்றை வைத்து ஒரு வகையான மீன் பிடி தூண்டிலைப் போன்ற ஒரு கருவியை உருவாக்கினர். அந்த ஆயுதத்தின் மீது அதை மாட்டி, முக்குளிப்பவர் அதற்கு அருகே செல்லக்கூடிய தொலைவுக்கு அதை மேலே இழுப்பதும், பிறகு முக்குளிப்பவர்கள் அதை மேலே கொண்டு வருவதும் "திட்டமாக" இருந்தது. ஆனால், அது வேலை செய்யவில்லை. "அனைத்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் மெதுவாகவே செய்யப்பட்டன. நாங்கள் காத்திருந்தோம். அந்தத் தூண்டில் போன்ற கருவியை அணுகுண்டில் இணைக்க முடிந்தது. ஆனால், அதைத் தண்ணீரிலிருந்து மேலே உயர்த்தத் தொடங்கியபோது, அதிலிருந்த பாராசூட், கடலின் அடியில் விரிந்துகொண்டது. இதனால், அது ஒருபுறம் அணுகுண்டை கீழ்நோக்கி இழுக்கவே, நாங்கள் ஒருபுறம் மேல்நோக்கி இழுக்கவே, அதைத் தூக்குவது கடினமானது," என்கிறார் மேயர்ஸ். "பாராசூட்கள் நிலத்தில் செயல்படுவதைப் போலவே தண்ணீரிலும் நன்றாக வேலை செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்கிறார் மேயர்ஸ். பாராசூட் ஒருபுறம் கீழ்நோக்கி மிகவும் கடினமாக இழுத்ததால், தூண்டிலின் கொக்கி உடைந்து அணு குண்டு கீழே விழுந்தது. இந்த முறை அது முன்பை விட இன்னும் ஆழத்தில் விழுந்தது. மேயர்ஸ் உடைந்து போனார். இஸ்ரேல் – பாலத்தீனம்: நூறாண்டுகளாகத் தொடரும் சண்டைக்கு என்ன காரணம்? தைவானை நோக்கி சீறிப்பாய்ந்த சீன ஏவுகணைகள் - அச்சத்தில் மீனவ குடும்பங்கள் காஸாவில் பதற்றம்: 19 பாலத்தீன ஜிஹாதிகள் கைது - வான் தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் பலி ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள் வேறு வகையான ரோபோடிக் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். அதன்மூலம் பாராசூட்டையே பிடித்து இழுத்து, அணு குண்டை நேரடியாக மேலே இழுக்க முயன்றனர். அந்த முறையில் அதைச் செய்தும் முடித்தார்கள். தொலைந்துபோன அணு குண்டுகளின் அபாயம் துரதிர்ஷ்டவசமாக, காணாமல் போன மூன்று அணு குண்டுகளில் இத்தகைய வெற்றிகரமான மீட்பு முயற்சிகள் சாத்தியப்படவில்லை. இருப்பினும் அந்த அணு குண்டுகள் வெடிக்கும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அபாயம் ஏன் குறைவு என்பதைப் புரிந்துகொள்ள, அணு குண்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். செப்டம்பர் 1905ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது அறிவியல் கட்டுரையின் பக்கங்களில் தனது ஃபவுன்டைன் பேனாவை வைத்து, உலகின் மிகவும் பிரபலமான சமன்பாடாக மாறவிருந்த, ஒரு பொருளின் நிறையை ஒளியின் வேகத்தால் பெருக்கினால் கிடைப்பதே ஆற்றல், E = mc2 என்ற தனது கோட்பாட்டை எழுதினார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டை, நாஜிக்கள் தனது கோட்பாட்டை ஓர் ஆயுதமாக மாற்ற முயல்கிறார்கள் என்று எச்சரித்தார். அதற்குப் பிறகு விரைவாக மேன்ஹாட்டன் திட்டம் உருவாக்கப்பட்டதும் அமெரிக்கா அணு குண்டை பயன்படுத்தியதும் வரலாறு. ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியில் பயன்படுத்தப்பட்டவை அசல் அணு குண்டு வகை. இவை கதிரியக்க தனிமங்களின் அணுக்களை ஒன்றுக்கொன்று மோத வைத்து, அவற்றைப் பிரித்து வெவ்வேறு தனிமங்களை உருவாக்குகின்றன. இந்த "பிளவு" செயல்முறை அதிக ஆற்றலை வெளியிடுகிறது. இந்த அணுக்கரு பிளவை அடைவதற்கு, அணு குண்டுகள் பொதுவாக துப்பாக்கி போன்ற செயல்முறையைப் பயன்படுத்தியது. அது கதிரியக்க தனிமங்களை உடைக்க வழக்கமான வெடிபொருட்களைப் பயன்படுத்தியது. இதற்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாகப் பயன்படுத்தப்பட்ட தெர்மோநியூக்ளியர் அல்லது ஹைட்ரஜன் குண்டுகள் - 1950கள் மற்றும் 60களில் நிறைய அணு ஆயுதங்கள் தொலைக்கப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை - அதைவிட ஆயிரக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தவை. இவை, முதலில் அணுகுண்டுகளைப் போலவே வழக்கமான பிளவு நடந்து அளப்பறிய ஆற்றலை வெளியிடும். இது இரண்டாவது மையத்தைப் பற்ற வைக்கும். அதில், ஹைட்ரஜன் ஐசோடோப்புகள், டியூட்டீரியம் (கனமான ஹைட்ரஜன்) மற்றும் டிரிடியம் (கதிரியக்க ஹைட்ரஜன்) ஆகியவை ஒன்றாக உடைந்து, முன்பைவிடப் பல மடங்கு அதிக ஆற்றலை வெளியிடுகின்றன. தொலைந்து போன டைபீ தீவு அணுகுண்டை எடுத்துக்கொண்டால், அது இன்னும் எங்கோ கடலுக்கடியே மண்ணில் புதையுண்டு கிடக்கிறது. பிப்ரவரி 5, 1958-இல், இந்த 3,400-கிலோ மார்க் 15 தெர்மோநியூக்ளியர் ஆயுதம் பி-47 குண்டுவீச்சு விமானத்தில் ஏற்றப்பட்டது. இதுவொரு நீண்ட பயிற்சிப் பணியிலொரு பகுதி. மாஸ்கோ போல, விர்ஜீனியாவின் ராட்ஃபோர்ட் நகரத்தை உருவகப்படுத்தி, சோவியத் யூனியன் மீதான தாக்குதலை உருவகப்படுத்துவது தான் திட்டம். விமானிகள் ஃப்ளோரிடாவில் இருந்து புறப்பட்டு பல மணிநேரங்கள் கனரக ஆயுதங்களுடன் கப்பலில் பறக்கும் திறனைப் பரிசோதிக்கும் ஒரு வழியாக, தங்கள் இலக்கை நோக்கிச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES எல்லாம் நன்றாக நடந்தது. ஆனால், திரும்பும் வழியில், விமானங்கள் தெற்கு காரோலினாவில் ஒரு தனி பயிற்சிப் பணியை எதிர்கொண்டது. இந்தப் பயிற்சியின் திட்டம், பி47 விமானத்தில் ஒன்றை இடைமறிப்பது. ஆனால், அந்த வழியில் வந்த அணு ஆயுதம் ஏந்தியிருந்த வேறு பி47 விமானத்தை அவர்கள் இடைமறித்தது தெரியவில்லை. அதைத் தொடர்ந்து நடந்த விபத்தில் அணுகுண்டை ஏற்றிச் சென்ற பி47 ரக விமானம் சேதமடைந்தது. அணுகுண்டை தண்ணீரில் வீசிவிட்டு, அவசரமாகத் தரையிறக்க விமானி முடிவெடுத்தார். வெடிகுண்டு 30,000 அடி ஆழத்தில், டைபீ தீவு கடல் பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த தாக்கத்தில் கூட அது வெடிக்கவில்லை. உண்மையில் முன்பு கூறிய இத்தகைய 32 விபத்துகளில் எதுவுமே அணு குண்டுகளை வெடிக்க வைக்கவில்லை. ஆனால், இரண்டு குண்டுகள், கடல் பரப்பை கதிரியக்கப் பொருட்களால் மாசுபடுத்தியுள்ளன. பிளவு வினை நடக்கத் தேவையான அணுக்கருப் பொருளை ஆயுதத்திலிருந்து தனித்தனியாக வைத்திருப்பது, அணு குண்டு வெடிக்காததற்குரிய காரணிகளில் ஒன்று என்று லூயிஸ் கூறுகிறார். சுமார் 10 வாரங்கள் தேடியபிறகு, டைபீ தீவு வெடிகுண்டு 1958ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதியன்று தொலைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டில், அப்போதைய பாதுகாப்புச் செயலாளரின் உதவியாளர் எழுதிய ஒரு கடிதத்தில், அவர் வெடிகுண்டு "முழுமையானதாக இருந்தது" என்று விவரித்தார். அதாவது அதில் புளூட்டோனியம் கோர் இருந்தது. இது உண்மையாக இருந்தால், மார்க் 15 இன்னமும் முழு வெடி திறன் கொண்டதாக இருக்கலாம். இன்று இந்த வெடிகுண்டு 5-15 அடிக்கு கடல் தரை மண்ணின் அடியில் புதைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், விமானப்படை அணு ஆயுதங்கள் மற்றும் எதிர்ப்புப் பரவல் நிறுவனம், அதனுள்ளே இருக்கும் வெடிபொருட்கள் அப்படியே இருந்தால், அது "தீவிரமான வெடிப்பு அபாயத்தை" ஏற்படுத்தக்கூடும் என்று முடிவு செய்தது. அணு ஆயுதம் நீருக்கடியில் வெடிக்குமா? சாத்தியமுண்டு. 25 ஜூலை 1946இல் அமெரிக்கா பிகினி அட்டோல் என்ற பகுதியில் அணுகுண்டை வெடிக்கச் செய்தது. பன்றிகள் மற்றும் எலிகளால் நிரப்பப்பட்ட கப்பல்களுக்குக் கீழே 90 அடி ஆழத்தில் அணு குண்டை வெடிக்க வைத்தனர். பல கப்பல்கள் உடனடியாக மூழ்கின. அதிலிருந்த உயிரினங்கள், ஆரம்ப வெடிப்பிலும் பிறகு தொடர்ந்த கதிர்வீச்சிலும் உயிரிழந்தன. வேற்று கிரக வானிலையைப் போல, ராட்சத வெள்ளை காளான் மேகம் எழுவதை அந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட அணு குண்டு வெடிப்பு காட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வேற்று கிரக வானிலையைப் போல, ராட்சத வெள்ளை காளான் மேகம் எழுவதை அந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட அணு குண்டு வெடிப்பு காட்டியது இந்தச் சோதனை மற்றும் பிற சோதனைகளின் விளைவாக, அந்தத் தீவுச் சங்கிலி மிகவும் கதிரியக்கம் கொண்டதாக மாறியது. அது இன்றுவரை கதிர்வீச்சு கொண்டதாக உள்ளது. செர்னோபில் போல, மனிதர்களற்ற காட்டுயிர்களின் சோலையாக அது மாறிவிட்டது. அணுகுண்டுகளின் கதிரியக்கத் தன்மை காணாமல் போன மூன்று அணுகுண்டுகள் எப்போதாவது மீண்டும் கண்டுபிடிக்கப்படுவது சாத்தியமில்லை என்று லூயிஸ் கருதுகிறார். விமானங்கள் கடலில் விழுந்து நொறுங்கும்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி பெரும்பாலும் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படும். நவீன தொழில்நுட்பத்துடன் இதைக் கண்டுபிடிக்க, "நீருக்கடியில் இருப்பிடத்தைக் காட்டும் பீக்கன்" பயன்படுத்தப்படும். அது தேடல் குழுக்களை கறுப்புப் பெட்டி இருக்கும் இடத்தை நோக்கி வழிநடத்தும். ஆனால், தொலைந்துபோன அணு ஆயுதங்கள் இருந்த விமானத்தில் அத்தகைய தொழில்நுட்பங்கள் எதுவுமில்லை. அதற்குப் பதிலாக, தேடல் குழுக்கள் கடலை சிறிது சிறிதாகத் தேட வேண்டும். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி டெரெக் டியூக் டைபீ வெடிகுண்டை தேடியதைப் போல, கதிர்வீச்சு உள்ள பகுதிகளைத் தேடுவது ஒரு மாற்றாக இருக்கலாம். ஆனால், இது மிகவும் சிக்கலானது. அணு குண்டுகள் உண்மையில் கதிரியக்கத் தன்மை கொண்டவை அல்ல. "அவற்றைக் கையாளும் மக்களுக்குக் கதிரியக்க அச்சுறுத்தல் இல்லாத வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றில் கதிரியக்கத் தன்மை இருந்தாலும் அதைக் கண்டறிய மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும்," என்கிறார் லூயிஸ். லூயிஸை பொறுத்தவரை, தொலைந்துபோன அணு ஆயுதங்கள் மீதான ஈர்ப்புக்குக் காரணம், அவை இப்போது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான அபாயங்கள் இல்லை. அவை எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதுதான் அதற்கான காரணம். அது, ஆபத்தான கண்டுபிடிப்புகளைப் பாதுகாப்பாகக் கையாளும் அதிநவீன அமைப்புகளில் இருக்கும் பலவீனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோபோடிக் நீர்மூழ்கிக் கப்பலின் உதவியோடு இறுதியில் பாலோமரேஸில் தொலைந்த அணுகுண்டு மீட்கப்பட்டது லூயிஸ், "பொதுவில், அணு ஆயுதங்களைக் கையாளும் நபர்கள் நமக்குத் தெரிந்த மற்றவர்களைவிட வித்தியாசமானவர்கள், மிகக் குறைவான தவறுகளைச் செய்கிறார்கள் அல்லது அவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ற கற்பனை உள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனால், உண்மை என்னவென்றால், அணுசக்தியைக் கையாள வேண்டிய அமைப்புகள் மற்ற மனித அமைப்புகளைப் போன்றவை தான். அவை குறைபாட்டற்றவை அல்ல. அவை தவறுகள் செய்கின்றன," என்று கூறுகிறார். அனைத்து அணுகுண்டுகளும் இறுதியில் மீட்கப்பட்டுவிட்ட பாலோமரேஸில் கூட, நிலம் இன்னமும் முன்பு நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளின் கதிர்வீச்சினால் மாசுபட்டுள்ளது. ஆரம்ப துப்புரவு முயற்சிகளுக்கு உதவிய அமெரிக்க ராணுவப் பணியாளர்களில் சிலருக்கு மர்மமான முறையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கும் இந்தத் துப்புரவு முயற்சிக்கும் தொடர்பு உள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள். 2020ஆம் ஆண்டில், உயிர் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் முன்னாள் படைவீரர்கள் விவகார செயலாளருக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தனர். இதில் பலரும் 70 மற்றும் 80 வயதின் பிற்பகுதியில் உள்ளனர். உள்ளூர் மக்கள் பல தசாப்தங்களாக கதிர்வீச்சை முழுமையாகச் சுத்தம் செய்யுமாறு பிரசாரம் செய்து வருகிறார்கள். பாலோமரேஸ் "ஐரோப்பாவின் மிகுந்த கதிரியக்கம் கொண்ட நகரம்" என்று அழைக்கப்பட்டது. மேலும் உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தற்போது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் அப்பகுதியில் விடுமுறை விடுதி கட்டத் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து வருகின்றனர். 1968ஆம் ஆண்டு ஆபரேஷன் குரோம் டோம் முடிவுக்கு வந்ததால், பனிப்போரின் போது ஏற்பட்ட இழப்புகள் மீண்டும் நிகழ வாய்ப்பில்லை என்று லூயிஸ் நம்புகிறார். இதற்கு விதிவிலக்காக, இன்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றிலும் இது மாதிரியான, கிட்டத்தட்ட தவறுதலாகக் கைவிடக்கூடிய நிலைமைகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் தற்போது 14 பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் ஒவ்வொன்றிடமும் அத்தகைய நான்கு கப்பல்கள் உள்ளன. அணுசக்தி தடுப்புகளாக வேலை செய்ய, இந்த நீர்மூழ்கிக் கப்பகள் கடலில் செயல்படும்போது இவை கண்டறியப்படாதவாறு இருக்க வேண்டும். மேலும் அவை எங்குள்ளன என்பதைக் கண்டறிய மேற்பரப்புக்கு எந்த சமிக்ஞையையும் அனுப்ப முடியாது. முக்கியமாக, நீர்மூழ்கிக் கப்பல் கடைசியாக எந்த நேரத்தில், எங்கு இருந்தது, எந்தத் திசையில் சென்றது, எவ்வளவு வேகமாகப் பயணித்தது என்பதைக் கணக்கிடுவதற்கு கைரோஸ்கோப்கள் பொருத்தப்பட்ட இயந்திரங்களைச் சாந்துள்ளனர். இந்தத் துல்லியமற்ற அமைப்பு, பல சம்பவங்களை விளைவித்துள்ளது. சமீபத்தில் 2018ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எஸ்.எஸ்.பி.என். நீர்மூழ்கிக் கப்பல் கிட்டத்தட்ட ஒரு கப்பலின் மீது மோதியிருக்கும். அணு ஆயுதங்களைத் தொலைக்கும் சகாப்தம் இன்னும் முடிவடையாமல் கூட இருக்கலாம். https://www.bbc.com/tamil/global-62470199
  10. சிஐஏ உளவாளி கேரி ஷ்ரோன்: ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா அனுப்பிய ஜேம்ஸ் பாண்ட் பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பிபிசி நியூஸ் 7 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2005ஆம் ஆண்டு என்பிசியில் கேரி ஷ்ரோன் 9/11 நாட்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு முதல் உளவுப்படை அணியை வழிநடத்திய சிஐஏ ஏஜென்ட் கேரி ஷ்ரோன் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 80ஆவது வயதில் காலமானார். பொதுவாக உளவு அமைப்புகளில் வாழ்ந்து, கடமைக்காகவே அர்ப்பணித்து மறைந்தவர்கள் பற்றி உலகம் அதிகம் அறிவதில்லை. ஆனால், அந்த உளவு அமைப்புகளின் வரலாற்றில் இதுபோன்ற ஜேம்ஸ் பாண்டுகள் என்றென்றும் நினைவுகூரப்படுவர். அத்தகைய ஒருவர்தான் கேரி ஷ்ரோன். அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அழித்தொழித்த அமெரிக்க நடவடிக்கையில் அவர் ஆற்றிய வரலாற்றுபூர்வ பங்களிப்பை இங்கே விரிவாக காணலாம். அது.... 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 19, , உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன், 9/11 தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளில் இன்னும் புகைந்து கொண்டிருந்த நிலையில், சிஐஏ அதிகாரி கேர் ஷ்ரோன் தனது மேலதிகாரியின் அலுவலகத்தில் தான் செய்ய வேண்டியவை குறித்த உத்தரவுகளைப் பெற்றார். அதில் ஒன்று, "பின்லேடனை பிடிக்கவும் கொல்லவும் அவரது தலையை பனிப்பெட்டியில் கொண்டு வர வேண்டும்," என்பது. ஒசாமா பின்லேடனின் வலது கரமாகக் கருதப்பட்ட அய்மன் அல் ஜவாஹிரி மற்றும் அல்-காய்தாவின் உள்வட்டத்தின் மற்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை, "அவர்களுடைய தலைகளை ஈட்டி முனையின் மீது குத்த வேண்டும்" என்று கேர் ஷ்ரோனுக்கு வந்த உத்தரவுகள் நேரடியானதாகவே இருந்தன. அடுத்த சில நாட்களுக்குள், ஷ்ரோன் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் குழு ஆப்கானிஸ்தானில் தரையிறங்கியது. அவர்கள் செயற்கைக்கோள் தொலைபேசிகளை விடச் சற்று கூடுதலான வசதிகளைக் கொண்ட சாதனங்களை வைத்திருந்தனர். அத்துடன், அவர்களுக்கு ஆதரவளிக்கும் கூட்டாளிகளுக்காக லட்சக்கணக்கான டாலர்கள் பணமும் வைத்திருந்தனர். சில வாரங்களுக்குப் பிறகு, அக்டோபர் 7ஆம் தேதி தாலிபன் ஆளுகையில் இருந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடங்கியது. இது ஆகஸ்ட் 2021இல் முடிவடைந்த சுமார் 20 ஆண்டுகால போரைத் தொடக்கி வைத்தது. பின்லேடன், 2011ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். ஆனால், அவரது வலது கரமாக செயல்பட்ட ஜவாஹிரியை கொல்ல மேலும் பத்தாண்டுகள் ஆயின. ஆகஸ்ட் 1ஆம் தேதி, இறுதியாக காபூலில் அமெரிக்க ட்ரோன் ஒன்று ஜவாஹிரியை கண்டுபிடித்த ஒரு நாள் கழித்து, கேரி ஷ்ரோன் தனது 80ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். அய்மன் அல் ஜவாஹிரி: பின் லேடனின் 'வலது கை'யாக மாறிய கண் மருத்துவரின் கதை அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ''நீதியின் வாள்" ஆப்கானிஸ்தான்: அல்-காய்தாவையும் தாலிபனையும் இணைக்கும் உறுதி மொழி அவருடைய மரணத்தை அடுத்து, சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் ஆற்றிய இரங்கல் உரையில், அமெர்க்க உளவுத்துறையில் பணியாற்றும் ஒவ்வோர் அதிகாரிக்கும் ஷ்ரோனின் வாழ்க்கையை "ஒரு காவியமாக, உத்வேகமாக" குறிப்பிட்டுப் பாராட்டினார். "இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிலும் சிஐஏவிலும் அவர் பணியாற்றிய அனைத்து பதவிகளிலும், மிகச் சிறப்பான திறனை கேரி வெளிப்படுத்தினார். அவருடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, வாய்மை தவறாமை மற்றும் விடாமுயற்சியை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்," என்று வில்லியம் பர்ன்ஸ் கூறினார். அந்த நேரத்தில் சிஐஏவில் பணியாற்றிய சில அதிகாரிகளே, ஆரம்பகட்ட நடவடிக்கையை வழிநடத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தார்கள். பல தசாப்தங்களாக நீடித்த எங்கள் தொழிலில், ஷ்ரோன் 1980கள் மற்றும் 1990களில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சிஐஏ-வின் தலைவராகப் பணியாற்றினார். அந்த நேரத்தில், ஆப்கானிஸ்தான் மீது "அமெரிக்க அரசுக்கு எந்த ஆர்வமும் இருக்கவில்லை," என்று அவர் பிபிஎஸ்-இல் அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்தார். "தாலிபன்கள் அங்கு இருந்தனர். அவர்கள் மனித உரிமை மீறல்களைச் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவொரு துயர்மிகுந்த அரசாங்கம். தங்கள் மக்களை மோசமாக நடத்தினார்கள். ஆனால், உண்மையில், வாஷிங்டனில் இருந்தவர்கள் யாரும் அதன்மீது அவ்வளவாக அக்கறை காட்டவில்லை." பட மூலாதாரம்,CENTRAL INTELLIGENCE AGENCY TWITTER படக்குறிப்பு, செப்டம்பர் 19, 2001 அன்று அல் காய்தா தலைவர்களை வேட்டையாட, 3 மில்லியன் டாலர்களுடன் புறப்பட்ட சிஐஏ அதிகாரிகள் இருப்பினும், 1996ஆம் ஆண்டு வாக்கில், 1980களில் சோவியத்துக்கு எதிரான கொரில்லா போரில் பங்கெடுத்த, பெரியளவில் அப்போது அறியப்படாத ஜிஹாதியான ஒசாமா பின்லேடனின் நடவடிக்கைகளில் அமெரிக்க உளவுத்துறை கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகு, "நிலைமை மாறத் தொடங்கியது" என்று ஷ்ரோன் கூறினார். சிஐஏவின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் ஒரு சிறு குழுவை ஷ்ரோன் உருவாக்கினார். அந்தக் குழுவே செளதி நாட்டவரான பின்லேடனால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து முதலில் எச்சரித்தது. ஷ்ரோன் விரைவில், அந்தப் பிராந்தியத்தில் அவர் இருந்த காலத்திலிருந்து அறிந்து வைத்திருந்த ஆப்கன் தாலிபன் தளபதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஷ்ரோன் வழிகாட்டுதலின் பேரில், சிஐஏ பலமுறை பின்லேடனை கொல்லவோ பிடிக்கவோ முயன்றது. பின்லேடனின் வாகனத் தொடரணி (கான்வாய்)மீது மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவது, ஏவுகணைகள் மற்றும் குண்டு வீச்சுத் தாக்குல்களை மேற்கொள்வது, தெற்கு ஆப்கனில் இருக்கும் பின்லேடனின் பண்ணையில் சோதனையிடுவது வரை எல்லாம் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. இந்த நேரத்தில் உச்சகட்டமாக, பின்லேடன் 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டு வெடிப்புகளை நடத்தினார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் அல்-காய்தா தளங்கள் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான கப்பல் ஏவுகணை தாக்குதலில் இருந்து பின்லேடன் தப்பினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அல்-காய்தாவைச் சேர்ந்த விமான கடத்தல்காரர்கள், 9/11 தாக்குதலைத் தொடங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேரி ஷ்ரோனின் 2001ஆம் ஆண்டின் பணி, இதுபோன்ற வடக்குக் கூட்டணி போராளிகளுடன் இணைவது 2001ஆம் ஆண்டு, ஆபரேஷன் ஜாபிரேக்கர் என்று அதிகாரபூர்வமாக அறியப்படும் ஆப்கானிஸ்தானுக்கான ஆபரேஷனில், ஷ்ரோன் மற்றும் ஏழு அமெரிக்கர்கள், 1996ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை ஆண்ட தாலிபன் அரசை எதிர்த்துப் போராடும் குழுக்களின் கூட்டணியான வடக்குக் கூட்டணியோடு (Northern Alliance) இணைந்தார்கள். அப்போது 59 வயதாகியிருந்த ஷ்ரோன், சிஐஏவின் பணியாளர்களுக்கான ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கு வெறும் 11 நாட்களே மிச்சமிருந்தது. "நான் அந்த ஆப்கனுக்குள் செல்ல அழைப்பு வரும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வடக்குக் கூட்டணியில் இருப்பவர்களுடனான எனது நீண்ட கால உறவைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இது சரியான தேர்வு என்றே நினைக்கிறேன்," என்று ஷ்ரோன் பல ஆண்டுகளுக்குப் பிறகு கூறினார். ஷ்ரோனின் மதிப்பீட்டையே முன்னாள் சிஐஏ துணை ராணுவ அதிகாரியும் ஆப்கானிஸ்தான் போர் வீரரும் முன்னாள் துணை பாதுகாப்புச் செயலருமான, மைக்கேல் "மிக்" முல்ராயும் கூறினார். "செப்ரம்பர் 11, 2001ஆம் தேதிக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் அவருடைய அனுபவம், அவர் தலைமையிலான படையெடுப்பு, ஆரம்பகட்ட படையெடுப்பில் எங்கள் வெற்றிக்கு முற்றிலும் முக்கியமானது. ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற முதல் அணியில் இருந்ததோடு, கேரி முன்னின்று படையை வழிநடத்தியதன் மூலம் அவர் ஓர் உதாரணத்தை அமைத்தார்," என்று முல்ராய் பிபிசியிடம் கூறினார். ஒரு ராணுவ நடவடிக்கையாக, ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பு குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியடைந்தது. 2001 டிசம்பருக்குள் தாலிபன்களை அதிகாரத்திலிருந்து விரட்டியது. ஆனால், ஷ்ரோனின் முக்கிய இலக்கான, பின்லேடன் மற்றும் அல்-ஜவாஹிரி போன்ற பிற மூத்த அல்-கொய்தா பிரமுகர்கள் தப்பிவிட்டனர். அதே நேரத்தில், தாலிபன்கள் மீண்டும் ஒருங்கிணைந்து போரிட்டதால், போர் உச்சகட்டத்தை அடைந்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, 2001ஆம் ஆண்டு கோப்புப் படத்தில், ஒசாமா பின்லேடனும் அய்மன் அல்-ஜவாஹிரியும் 2003ஆம் ஆண்டு இராக் படையெடுப்பால் சிஐஏ மற்றும் ராணுவத்தின் வளங்கள் குறைக்கப்பட்டதன் காரணமாக, ஆப்கானிஸ்தானை பாதுகாப்பதிலும் அதன் முக்கிய எதிரிகளைப் பிடிப்பதிலும் அமெரிக்கா தோல்வியடைந்ததாக ஷ்ரோன் தனது வாழ்வின் பிற்பகுதியில் அளித்த பேட்டிகளில் கூறினார். இராக் அரசாங்கத்துக்கு 9/11 தாக்குதல்களோடு தொடர்பு இருந்தது என்று ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அமெரிக்க நிர்வாகத்தின் ஆரம்பகட்ட கூற்றுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அப்படியான எந்தத் தொடர்பும் இருந்ததாக தாம் நம்பவில்லை என ஷ்ரோன் தெரிவித்தார். "இராக் நடவடிக்கையில் ஆட்கள் தேவைப்பட்டதால், இந்த சிறிய தொலைதூர முகாம்கள் மற்றும் தளங்களில் இருக்கும் வீரர்கள், சிஐஏ பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இது உண்மையில் எங்களுக்குப் பெரிய இழப்பாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த இழப்பு இன்றளவும் நிலைத்துள்ளது," என்று அவர் என்பிஆரில் 2005ஆம் ஆண்டு கூறினார். ஷ்ரோன் இறுதியாக ஆப்கன் படையெடுப்புக்குப் பிந்தைய ஆண்டுகளில் ஓய்வு பெற்றார். பின்னர், 2005ஆம் ஆண்டில் "ஃபர்ஸ்ட் இன்" என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். அவருடைய ஓய்வுக்குப் பிறகும், பின்லேடனின் கூட்டாளிகள் ஷ்ரோனை ஓர் இலக்காகப் பார்த்தனர். 2013ஆம் ஆண்டில், சோமாலிய போராளிக் குழுவான அல்-ஷபாப் ட்விட்டரில் அவரைக் கொன்றதாகக் கூறியது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், என்பிசியிடம் அத்தகைய கூற்றுகளில் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தினர். "கேரி ஷ்ரோன் உயிருடன் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார்," என்று அந்த நேரத்தில் வெளியான என்பிசி செய்தியறிக்கை குறிப்பிட்டது. ஷ்ரோனின் பணி, விர்ஜீனியாவிலுள்ள சிஐஏ தலைமையகத்தில் உயிர்ப்போடு இருக்கிறது. 2001ஆம் ஆண்டு பயணத்தின்போது ஷ்ரோன் பயன்படுத்திய ஹெலிகாப்டர் அங்குள்ள சிஐஏ மைதானத்தில் அவரது நினைவாக இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-62455221
  11. 'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இயக்குநர் ரஞ்சித் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim என்ற ஆந்தாலஜி வகைத் திரைப்படம் ஒன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒரு படத்தை இயக்கியிருந்தார். ஜாதி ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு உள்ளாகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தின் ஒரு காட்சியில், சிறுமி ஒருவர் புத்தர் சிலையின் மீது ஏறி நிற்பார். அதைப் பார்க்கும் தந்தை (குரு சோமசுந்தரம்) சாமி சிலையின் மீது ஏறி நிற்காதே என்று கூறுவார். அதற்கு அந்தச் சிறுமி, 'சாமியே இல்லன்னு புத்தர் சொல்லிருக்காரு. அவர போய் சாமின்னு சொல்ற' என்று பதில் சொல்வார். குருசோம சுந்தரம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், பேபி தாரணி, அர்ஜீன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்தில் வரும் காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் பௌத்த சங்கம் ஒன்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை என்ற இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "புத்தர் கடவுள் இல்லை என்று சொல்வதற்காக அவர் தலை மீது ஏறி நின்று சொல்லும் வக்கிரத்தை இந்த உலகம் இதுவரை கண்டிருக்காது. பௌத்தம் வலுவாக உள்ள நாடுகளில் இது போன்ற காட்சி வெளியே வந்திருக்குமானால், அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால், இந்தியாவில் தமிழகத்தில் சிறுபான்மை பௌத்த மதத்தினருக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் இல்லாத காரணத்தினால் இதுபோன்ற புரிதல் குறைவான புத்தரை அவமதிக்கும் வீடியோக்கள் வெளியே வருகின்றன. "நீ ஸ்கிரிப்ட் எழுதி நான் பார்க்கவில்லையே" - ஸ்டாலின் சொன்னதை நினைவுகூரும் கிருத்திகா உதயநிதி ஆளுநரிடம் அரசியல் பேசிய ரஜினி - பால், தயிர் விலை உயர்வுக்கு பதில் கூற மறுப்பு மல்லிகா ஷெராவத் பேட்டி: "சமரசம் செய்யாததால் பட வாய்ப்புகள் குறைந்தன" எதிர்ப்பை வெளிப்படுத்தும் பெளத்த ஆதரவாளர்கள் இந்தக் காட்சி பகவன் புத்தர் மீது உருவாக்கும் தமிழ்நாட்டில் பௌத்தர்கள் மனம் வெகுவாகப் புண்பட்டுள்ளது. இந்தக் காட்சி உலக நாடுகளுக்குப் போகுமானால் உலகில் உள்ள பௌத்தர்களின் எதிர்ப்பையும் கடும் கண்டனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தான் எடுக்கும் படங்களில் புத்தரை நல்லபடியாகக் காட்டிக்கொண்டிருந்த பா. ரஞ்சித்துக்கு திடீரென இப்படி ஒரு காட்சி வெளியிடத் தோன்றியது ஏன் என்பது கேள்வியாக இருந்தாலும் தம்மம் படத்தில் வெளிவந்திருக்கின்ற காட்சி எங்களைப் போன்ற பௌத்த மதத்தினரின் மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது. அந்தப் படத்தின் காட்சிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அந்தக் காட்சிகளுக்கு தனது மன்னிப்பையும் வருத்தத்தையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இந்தக் காட்சிகளுக்கான விளக்கத்தை நாங்கள் கோரவில்லை. பௌத்தர்கள் மனம் புண்பட்டதற்கான வருத்ததைத் தெரிவித்து, அந்தக் காட்சிகளை உடனடியாக இணைய தளங்களில் இருந்து நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் தொடர்ந்து பௌத்தைக் கருத்துகளையும் புத்தரின் உருவத்தையும் தனது திரைப்படங்களில் பயன்படுத்திவரும் நிலையில், அவரை எதிர்ப்பது ஏன் என அந்தப் பேரவையின் பொதுச் செயலாளரும் பிக்குவுமான போதி அம்பேத்கரிடம் கேட்டபோது, "ரஞ்சித் செய்திருப்பது அவரது இந்து சமூக மனநிலையையே வெளிப்படுத்துகிறது" என்றார். மேலும், "புத்தர் நீங்களே விளக்காய், ஒளியாய் இருங்கள் என்கிறார். கடவுள் என்பதை ஒரு இடத்தில் சொல்கிறார். கடவுள் என்பவர் காணப்படவும் இல்லை, அறியப்படவும் இல்லை என்று நிறுத்திக்கொள்கிறார். "இப்படியா படத்தில் காட்சியை எடுப்பது?" பட மூலாதாரம்,PA.RANJITH/TWITTER நாம் புத்தரைப் பின்பற்றுபவர்களாக இருந்தால், அவரை மதிக்க வேண்டும். அது சிலையாக இருந்தாலும் ஓவியமாக இருந்தாலும் அதற்கு அருகில் செல்லும்போது நம் மனம் நிறைகிறது. அவர் அறிவை பகிர்ந்து கொள்கிறோம். அப்படி இருக்கும்போது ஒரு குழந்தையை புத்தர் சிலை மீது ஏற்றிவிட்டு பேசுகிறார் பா. ரஞ்சித். அது பௌத்தம் என்ற அம்சத்திற்கே எதிரானது. அந்தக் காட்சி அப்படித்தான் அமைந்திருக்கிறது. அவர் மிகப் பிரபலமானவர். ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகிறார் என்றார் அதற்கு நோக்கம் உண்டு. விளைவுகளும் உண்டு. அப்படியிருக்கும்போது ஒரு குழந்தையின் மூலமாக அப்படி ஒரு செய்தியைச் சொல்வதே தவறு. மதம், கலாசாரம், கல்வி, ஊடகம் ஆகியவைதான் மனித வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகின்றன. பா. ரஞ்சித் ஊடகத்தைப் பயன்படுத்தி தவறான கருத்தை முன்வைக்கிறார். அந்தக் குழந்தை பேசும் 'கடவுள் இல்லை' என்ற வார்த்தை மட்டுமல்ல, மொத்த காட்சியுமே ஆட்சேபகரமானது. அபத்தமானது" என்கிறார் போதி அம்பேத்கர். இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பா. ரஞ்சித்தைத் தொடர்புகொள்ள பல முறை முயற்சித்தும், அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை. தமிழ்நாட்டில் பௌத்தம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டும், எழுதியும் வரும் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் வேறொரு கருத்தை முன்வைக்கிறார். "கடந்த பல ஆண்டுகளாக புத்தரை ஒரு தத்துவஞானியாக, வழிகாட்டியாக பார்க்கும் போக்கு உருவாகியிருக்கிறது. புத்தரை அப்படி பார்க்கலாம், தவறில்லை. ஆனால், சாதாரண மக்களுக்கு பௌத்தத்தை ஒரு மதமாக உணர வைக்க அது போதாது. ஆகவே கலாச்சாரா ரீதியாகவும் சில அம்சங்களைச் செய்ய வேண்டும். அப்படி கலாச்சார ரீதியாக செய்யும் நிகழ்வுகள் ஒரு இந்து விழாவைப் போல மாறாமல், அறிவுசார்ந்த நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற உரையாடல்களும் தொடர்ந்து நடக்கின்றன. ரஞ்சித் போன்ற ஒருவர் சினிமாவில் பௌத்தத்தைக் காட்டும்போது அந்த விவாதம் மேலெழுகிறது. பட மூலாதாரம்,PA.RANJITH/TWITTER தமிழ்நாட்டில் கடந்த 10 - 15 ஆண்டுகளில் நிறைய பிக்குகள் வந்திருக்கிறார்கள். நிறைய மாநாடுகளை நடத்துகிறார்கள். சில நடைமுறைகளை கொண்டுவருகிறார்கள். பௌத்தத்தை கலாச்சார அடையாளமாக வைப்பதா, அரசியல் அடையாளமாக வைப்பதா என்ற விவாதம் தொடர்ந்து இருந்துவந்தது. அந்த விவாதத்தின் தொடர்ச்சிதான் இப்போது நடக்கும் நிகழ்வுகள் எல்லாம். ரஞ்சித், புத்தரை கடவுளாக மாற்றாமல், அவரை அறிவாளியாகவும் தத்துவமாகவும் பார்க்க வேண்டும் என்ற உரையாடலின் பிரதிநிதி. பௌத்தம் என்பது சிலையை வணக்குவது அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. மற்றவர்கள் மீது கருணை செலுத்துவதுதான் பௌத்தம் என்கிற வாழ்க்கை முறை. அம்பேத்கரின் மரபு அது. ஆகவே, ரஞ்சித் படம் எடுக்க வரும்போது அதேபோன்ற புத்தரை தன் படங்களில் காட்டுகிறார். ஆனால், அதனை விவாதமாக பார்ப்பதை விட்டுவிட்டு, காட்சிகளை நீக்கக் கோருவது நியாயமல்ல. ரஞ்சித் அவருக்கான புத்தரை முன்வைக்கிறார். இன்னொருவர் இன்னொரு புத்தரை முன்வைக்கலாம். ஆனால், ரஞ்சித்தோடு முரண்படும்போது அதனை விவாதமாக முன்னெடுக்காமல் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று கோரக்கூடாது." என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். https://www.bbc.com/tamil/india-62470204
  12. இலங்கைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் - சீன வெளியுறவு அமைச்சர் 8 ஆகஸ்ட் 2022, 03:27 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனா-இலங்கை இன்று (08.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதி அளித்ததாக இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்பகமான நண்பராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. சீன அரசவை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடியாவில் சந்தித்தார்.இதன்போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார். இதன்போது, சீன அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக சீன அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா? தைவானை நோக்கி சீறிப்பாய்ந்த சீன ஏவுகணைகள் - அச்சத்தில் மீனவ குடும்பங்கள் இலங்கையின் புதிய அரசாங்கம், நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, ஒரே சீனா கொள்கையில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் மற்றும் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலையும் எதிர்க்கிறது என்றும் குறிப்பிட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://www.bbc.com/tamil/global-62455308
  13. கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 7 ஆகஸ்ட் 2022 (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர் வந்தார்," என்று கருணாநிதி உடனடியாக பதிலளித்தார். தனது பொது வாழ்க்கை முழுமைக்கும் கருணாநிதி கொண்டிருந்த தன்னம்பிக்கையின் அளவு இது. பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். இரண்டு ஆயுதங்களைக் கொண்டுதான் அவர் அரசியலில் நுழைந்தார். ஒன்று அவரது பேச்சுத் திறமை, இன்னொன்று எழுத்துத் திறமை. அப்போது அவரிடம் பண பலமும் இல்லை, அதிக படிப்பும் இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை - கருணாநிதியின் வாழ்க்கை பயணம் YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 கருணாநிதிக்கு முன்பு திமுகவின் முன்னணி தலைவர்களாக இருந்த அண்ணாதுரை, மதியழகன் உள்ளிட்டோர் அப்போதே முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய கருணாநிதி அவர்களைவிட அதிக நூல்களை எழுதினார். எழுத்து மீதான அவரது தீராக் காதல் அவரை பல உயரங்களுக்கு அழைத்துச் சென்றது. 17 வயதிலேயே இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டிய கருணாநிதி, தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பைத் தொடங்கினார். கருணாநிதி தனது அரசியல் ஆசானான அண்ணாவை 1940களில் சந்தித்தார். பெரியார் உடன் உண்டான கருத்து வேறுபாட்டால், திமுக எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அண்ணாவுக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய தளபதியானார். கட்சியின் பிரசாரக் குழுவின் உறுப்பினராக மட்டுமல்லாது, கட்சியின் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தார். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தல் 1952இல் நடந்தபோது, அதில் திமுக பங்கேற்கவில்லை என்றாலும், தவிர்க்க முடியாத தலைவராகவே கருணாநிதி இருந்தார். 1967 தேர்தலில் வென்று திமுக ஆட்சியமைத்தபோது, கருணாநிதி ஏற்கனவே 10 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம் உள்ளவராகத் திகழ்ந்தார். 1969இல் அண்ணாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, சந்தை மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்த தொலைநோக்கைக் கொண்டிருந்தார். தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேற வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், அதற்கு சாமானியர்களின் நலனை விலையாகக் கொடுக்கவில்லை. சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த பொது விநியோகத் திட்டத்தை அவர் மாநிலம் முழுமைக்கும் பரவலாக்கினார். மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியதன்மூலம், தமிழகத்தில் பட்டினிச்சாவு இல்லாத ஒரு சூழலை உறுதிசெய்தார். அவரது அனைத்து செயல்பாடுகளுக்கும் சமூக நீதியே அடித்தளமாக இருந்தது என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம். தேசிய அரசியலுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தாலும், தேசிய அரசியலில் தமக்கென ஓர் இடத்தைப் பிடிக்க அவர் எப்போதுமே முயன்றதில்லை. தமக்கு பிரதமர் ஆவதற்கான சூழல் வந்தபோதும், அப்பதவிக்கு அவர் பிறரையே தேர்வு செய்தார். பிரதமர் பதவி குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், 'என் உயரம் எனக்குத் தெரியும்,' என்று அவரே பல தருணங்களில் வெளிப்படையாகக் கூறியுள்ளார். 1969இல் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என பிளவு பட்டபோது, தன் வசம் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த அவர் இந்திரா காந்தியின் பக்கம் நின்றார். அதே ஆண்டு சில மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட கருணாநிதி குறித்து பேசிய இந்திரா, 'அவர் ஒரு மோதல் போக்குடையவர் என்று கேள்விப்பட்டன்,' என்று கூறி இருந்தார். அந்த மோதல் போக்குடையவர்தான் இந்திராவைக் காப்பாற்ற வந்தார். கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக தமது சொந்த வேட்பாளரை, 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா களமிறக்கினார். அப்போதும் கருணாநிதி இந்திரா காந்திக்கு ஆதரவளித்தார். மத்தியில் அரசு நிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினாலும், ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் (இடது ஓரம்), ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் (இரண்டாவது இடது) ஆகியோருடன் கருணாநிதி. ராஜிவ் காந்தியிடம் இருந்து விலகி வந்தபின், தேசிய முன்னணி அரசை வி.பி.சிங் அமைத்தபோது, ஆட்சியமைப்பதில் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். தமிழக நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்த காவிரி நடுவர் மன்றம், இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படையை திரும்ப அழைத்தல் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்ப்படுத்துதல் ஆகியவற்றை அப்போது கருணாநிதி உறுதி செய்தார். திராவிட மாடல் ஆட்சியில் இந்து மத சடங்கா? புரோகிதரை விரட்டிய திமுக எம்.பி “எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு வி.பி.சிங் பதவி விலகிய பின்னும், தேவ கௌடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை பிரதமராகத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றினார். மதவாத சக்திகளுக்கு எதிராக போரிடுபவராக மட்டுமே அறியப்பட்ட கருணாநிதி, 1999இல் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஆனால், ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுக்க மாட்டோம் எனும் உத்தரவாதத்தை பாரதிய ஜனதாவிடம் வாங்கிக்கொண்டார். தங்கள் அரசியலின் முக்கிய நோக்கமாக இருக்கும் ஒன்றைச் செய்ய மாட்டோம் என்று ஒரு தேசிய கட்சி மாநில கட்சி ஒன்றிடம் உத்தரவாதம் அளிப்பது வழக்கத்துக்கு மாறானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேவ கௌடாவை (வலது) பிரதமர் ஆக்கியத்தில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார் ராமர் எனும் கடவுள் இருந்ததே இல்லை. அது ஒரு புராணக் கதை மட்டுமே என்றும் கூறி கருணாநிதி பாரதிய ஜனதா மற்றும் அதை ஆதரிக்கும் வலதுசாரி அமைப்பினரின் கோபத்துக்கு உள்ளானார். முதலமைச்சர் போன்ற ஓர் உயரிய அரசியல் சாசன பொறுப்பில் அமர்ந்துகொண்டு, ராமர் குறித்து அவர் அவ்வாறு கூறியிருக்கக்கூடாது என்று எல்.கே.அத்வானி கண்டித்தார். ஆனால், கருணாநிதி தன் கூற்றுக்கு ஆதரவாக நேரு கூறியதை சுட்டிக்காட்டினார். "திராவிடர்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதையே ராமாயணம் என்று கூறிய ஜவாஹர்லால் நேருவைவிடவும், ராமரைக் காக்க வருபவர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்ல," என்று கருணாநிதி அப்போது கூறினார். 'கலைஞர்' கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு குளித்தலை முதல் திருவாரூர் வரை. - தோல்வியே சந்திக்காத கருணாநிதி 2001ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசியபோது, தாம் ஏன் அக்கூட்டணியில் சேர்ந்தேன் என்று கருணாநிதி கூறினார். "வாஜ்பாய் உடனான நட்பில் வெல்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருக்கும் நண்பர்களை நான் இழக்க வேண்டியுள்ளது என்றால் அதற்கு காரணம் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நாங்கள் 1975இல் ஒன்றாகப் போராடிய அவசர நிலை நாட்களில் இருந்தே நாங்கள் நட்பில் உள்ளோம்," என்றார் கருணாநிதி. "எனக்கு பாரதிய கட்சியைவிட அதன் தலைமை பொறுப்பில் யார் உள்ளார்கள் என்பதே முக்கியம்." ஆகஸ்ட் 7, 2018: தொண்டர்களின் முழக்கத்திற்கு கருணாநிதியின் பதிலில்லாத நாள் இந்து ராஷ்டிரா: இந்தியா இந்து தேசமாக மாறுகிறதா? அதில் சிறுபான்மையினரின் நிலை என்ன? 2003இல் திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. வாஜ்பாயை போல அத்வானி தமிழர்களுக்கு அனுசரணையாக இல்லை என்று அப்போது கூறினார். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் தம் திறமைகள் குறித்து எப்போதுமே அவர் குறைவாக நினைத்ததில்லை. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக இல்லாதபோதும் தேசியத் தலைவர்களுடன் மிகவும் மிடுக்குடன் நடந்துகொண்டார். அவர்கள் அரசியலில் தாக்குப்பிடிக்க தாம் மிகவும் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி பாஜகவிடம் இருந்து விலகியதும் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கத்துடன் நெருங்கி, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைவதில் முக்கிய பங்காற்றினார். சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அறிவுரை வேண்டி அடிக்கடி கருணாநிதியை நாடியுள்ளதாக பல முறை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். "அவர் அரை நூற்றாண்டு காலமாக பொது வாழ்வில் உள்ளார். அவரது அனுபவமும் அறிவும் நாட்டை நிர்வகிப்பதில் உதவுவது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டவசமானது," என்று மன்மோகன் சிங் கூறினார். 2014இல் மோதி பதவியேற்றபோது உள்ளார்ந்த நுண்ணறிவு, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் உயர் பொறுப்பை அடைந்துள்ளீர்கள் என்று கூறினார் கருணாநிதி. 1996 முதல் 2014 வரை, அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த 13 மாதங்கள் நீங்களாக, திமுக மத்திய அரசில் அங்கம் வகிக்க கருணாநிதியின் அரசியல் நுட்பம் காரணமாக இருந்தது. மாநில சுயாட்சி மாநில அரசுகள் அதிக தன்னாட்சி அதிகாரம் பெறுவதிலும், மத்திய - மாநில அரசுகளின் உறவை வரையறுப்பதிலும் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். 1969இல் ராஜமன்னார் கமிட்டி அமைத்தது அதில் முக்கியமான ஒன்று. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது. மத்திய அரசு அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்காதவராகவே கருணாநிதி விளங்கினார். குடும்ப அரசியல் சமூகத்துக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்புக்கு போற்றப்பட்டாலும், குடும்ப அரசியல் ஈடுபட்டதாக மிகவும் விமர்சிக்கப்பட்டார். அதை முற்றிலும் ஒதுக்கிவிடவும் முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES தனது இறுதிக்காலம் வரை ஸ்டாலினை கட்சித் தலைவராகவோ, முதலமைச்சராகவோ ஆக்காவிட்டாலும், ஸ்டாலினின் மூத்த சகோதரர் அழகிரி, இளைய சகோதரி கனிமொழி ஆகியோரை அரசியலுக்கு கொண்டுவந்தது, தனது அக்காள் மகன் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் ஆக்கியது ஆகியவற்றுக்கு திமுகவால் எவ்வகையிலும் நியாயம் கற்பிக்க முடியவில்லை. அவர்களின் அரசியல் பங்களிப்பும் இன்று வரை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சகோதரர்களுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டிக்கு இடையிலும் கருணாநிதி சிக்கிக்கொண்டார். கருணாநிதி தனது அரசியல் வாரிசாக அறிவித்த ஸ்டாலின் தலைமை ஏற்பதற்கு எதிராக பேசிய அழகிரியை கட்சியை விட்டே நீக்கும் அளவுக்கு இது கருணாநிதியை இட்டுச் சென்றது. 'அறிவியல்பூர்வமான ஊழல்' கருணாநிதி அறிவியல்பூர்வமாக அல்லது மதிநுட்பத்துடன் ஊழல் செய்வார் என்று அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை திமுக வன்மையாக மறுக்கிறது. சென்னை மாநகரில் மேம்பாலங்கள் கட்டுவதில் ஊழல் நிகழ்ந்ததாக 2001இல் ஜெயலலிதா அரசால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்களாக பார்க்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES எனினும், 2ஜி வழக்கில் அவரது கட்சியைச் சேர்ந்த, அமைச்சராக இருந்த ஆ.ராசா மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்தால், அது திமுகவுக்கு கடுமையான சேதாரத்தை உண்டாக்கியது. அடுத்து வந்த பொதுத் தேர்தல், அதைத் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் திமுக தோல்வியை சந்திக்க அது முக்கிய காரணமாக இருந்தது. அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் கருணாநிதி சிக்கல்களை எதிர்கொள்ள இது வழிவகுத்தது. இலங்கை தமிழர் பிரச்சனை உலகத் தமிழர்களின் தலைவராக போற்றப்பட்டாலும், இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக கருணாநிதி குற்றச்சாட்டுக்கு உள்ளானார். 2009இல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கருணாநிதி எதையும் செய்யவில்லை என்று கருணாநிதி விமர்சிக்கப்பட்டார். உண்மையில் போர் நிற்காதபோதும், போர் நின்றதாக காங்கிரஸ் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாக கருணாநிதி உணர்ந்ததாக திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். எனினும், இதுவரை பலரும் இதை நம்பத் தயாரக இல்லை. அவர் இறப்புக்கு பிறகும் இது சமூக வலைத்தளங்களில் பிரதிபலிக்கிறது. உச்ச நட்சத்திரம் அரசியலில் பல மன்னர்களை உருவாக்கியவராக மட்டுமல்லாது திரைத் துறையிலும் கருணாநிதி ஒரு உச்ச நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார். 1949-50இல் கருணாநிதி கதை - வசனம், எழுதிய மந்திரி குமாரி படம் எம்.ஜி.ஆரை வெள்ளித் திரையில் நட்சத்திரம் ஆக்கியது. பராசக்தி படத்துக்கு கதை - வசனம் எழுதி சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகிய இருவரை நட்சத்திரங்கள் ஆக்கினார். 1954இல் இன்னொரு வெற்றிப் படமான மனோகரா படத்துக்கு கதை - வசனம் எழுதினார். அந்தப் படத்துக்கு எழுதிய திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டு கிடைத்த பணத்தில், தம் முதல் குழந்தை என்று அவர் கூறிய, கட்சி ஏடான முரசொலிக்கு அச்சகம் ஒன்றை வாங்கினார். அவரது இறப்புச் செய்தியை சுமந்து கொண்டு முரசொலி இதழும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும்போது அவருக்கு அருகிலேயே வைக்கப்பட்டிருந்தது. மரணத்துக்குப் பிறகும், தான் இறுதியாக ஓய்வெடுக்கும் இடத்துக்காகத் தாம் போராட வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார். தனது தொண்டர்களுக்கு முரசொலியில் கருணாநிதி இவ்வாறு எழுதுவார், "வீரன் சாவதே இல்லை! கோழை வாழ்வதே இல்லை!" https://www.bbc.com/tamil/india-45116563
  14. "இஸ்ரோவின் SSLV-D1 தவறான வட்டப்பாதையில் வைத்த செயற்கைக்கோள்கள் பயன்படாது" - 12 தகவல்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISRO "இஸ்ரோவின் SSLV-D1 தவறான வட்டப்பாதையில் வைத்த செயற்கைக்கோள்கள் இனி பயன்படாது" என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களை எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் (லாஞ்ச் வெஹிக்கிள்) சுமந்து சென்றது. குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் முதலாவது பயணத்திலேயே நிர்ணயித்த இலக்கில் உள்ள வட்டப்பாதைக்கு பதிலாக நீள் வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை ராக்கெட் வைத்ததால் அவை அனுப்பி வைக்கப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை. இது தொடர்பான 12 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். 1. 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை 'லாஞ்ச் ஆன் டிமாண்ட்' அடிப்படையில், தாழ்வான புவி வட்டப் பாதைக்கு ஏவுவதற்கு இஸ்ரோ ஒரு சிறிய செயற்கைக்கோள் ஏவும் ஏவூர்தியை எஸ்எஸ்எல்வி டி1 என்ற பெயரில் உருவாக்கியது. இந்த முதலாவது மேம்பாட்டு ஏவூர்தி SSLV-D1/EOS-02 என அழைக்கப்பட்டது. ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 9:18 மணிக்கு (IST) இந்த ஏவூர்தி விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. 2. எஸ்எஸ்எல்வி-டி1 ஏவூர்தியின் பயணம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 'எஸ்எஸ்எல்வி-டி2 தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று இஸ்ரோ அமைப்பு அதன் ட்விட்டர் பக்கத்தில் கூறியது. 3. அத்துடன், "SSLV-D1 ஏவூர்தி, அது சுமந்து சென்ற செயற்கைக்கோள்களை 356 கிமீ வட்டப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்தியது. அதில் இருந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. இந்த பிரச்னை நியாயமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் முயற்சி தோல்வி அடைந்தது. இதை ஒரு குழு ஆய்வு செய்து வழங்கும் பரிந்துரை அடிப்படையில் மேலதிக தகவல்கள் பகிரப்படும்," என்று மற்றுமொரு தகவலை இஸ்ரோ வெளியிட்டது. 4. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.48 மணியளவில், SSLV-D1 ராக்கெட் செயற்கைக்கோள்களை தவறான சுற்றுப்பாதையில் நிறுத்தியதால் அது பயன்படுத்த முடியாததாகிவிட்டதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 5. "ஏவூர்தி பயணத்தின் அனைத்து நிலைகளும் எதிர்பார்த்தபடியே நடந்தன. முதல் நிலை சரியாக இயங்கி பிரிந்தது. இரண்டாவது நிலையும் மூன்றாவது நிலையும் திட்டமிட்டபடியே நடந்து பிரிந்தன. கடைசியில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் பணியின் கடைசி கட்டத்தில், சில தரவுகள் இழப்பு ஏற்பட்டது. அந்த விவரத்தை நாங்கள் பகுப்பாய்வு செய்து வருகிறோம். அதன் நிலை மற்றும் ஏவூர்தியின் செயல்திறன் பற்றி விரிவான தகவல்களுடன் மீண்டும் தெரிவிக்கிறோம்," என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார். பரீட்சார்த்த முறையில் இந்த ஏவூர்தி சென்ற நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தபோதும், அது செயற்கைக்கோள்களை நிர்ணயித்த இடத்தை விட வேறு இடத்தில் வைத்ததால் அதை பயன்படுத்த இயலவில்லை. மற்றபடி இந்த செயற்கைக்கோள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தொழில்நுட்ப சாதனங்கள், மென்பொருள்கள், பிற கருவிகள் சிறப்பாக இயங்கின. இந்த ஏவூர்தியால் ஏன் சரியான புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடியவில்லை என்பது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்கும் என்றும் சோமநாத் கூறினார். மாதவன் சொன்ன 'பஞ்சாங்கம்' இன்றைய ராக்கெட் அறிவியலை பேசுகிறதா? விண்ணில் உள்ள செயற்கைக்கோள் தொகுப்புகளுக்கு எதிராக வானியலாளர்கள் குரல் கொடுப்பது ஏன்? பால்வெளி மண்டலத்தில் விசித்திரமான சுழலும் பொருளை கண்டறிந்த மாணவர்: என்ன சிறப்பு? 6. முன்னதாக, இஸ்ரோ தனது புதிய சிறிய செயற்கைக்கோள் முதலாவது ஏவூர்தி ராக்கெட்டை (எஸ்எஸ்எல்வி) புவி வட்டப்பாதைக்கு அனுப்பவுள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து SSLV-D1 என்ற அந்த ஏவூர்தி, ஞாயிற்றுக்கிழமை காலை 9:18 மணிக்கு, இரண்டு சிறிய செயற்கைக்கோள்களை, பூமத்திய ரேகைக்கு மேலே சுமார் 365 கிமீ தொலைவில் உள்ள தாழ்வான பூமியின் வட்டப்பாதையில் (LEO) நிலைவைக்க திட்டமிடப்பட்டிருந்தது. படக்குறிப்பு, சோமநாத், இஸ்ரோ தலைவர் 7. SSLV-D1 பணியானது 135 கிலோ எடையுள்ள EOS-02 என்ற செயற்கைக்கோளை, சுமார் 37 டிகிரி சாய்வில், பூமத்திய ரேகைக்கு சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள குறைந்த புவி வட்டப்பாதையில் நிலைவைப்பதாகும். இந்த திட்டத்தின் அங்கமாக AzaadiSAT என்ற செயற்கைக்கோளையும் எஸ்எஸ்எல்வி டி1 சுமந்து சென்றது. இந்த ஆசாதிசாட் என்பது அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணிதத்தை (STEM) பள்ளி அளவில் மாணவிகளிடையே பிரபலப்படுத்துவதற்கான இஸ்ரோவின் முயற்சியாகும். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. பட மூலாதாரம்,ISRO 8. SSLV ராக்கெட் மூன்று திட நிலைகளில் இயங்கும் வகையில் செயல்திறனைப் பெற்றிருந்தது. அதாவது, pitch-over time-length எனப்படும் 87 t, 7.7 t மற்றும் 4.5 t நிலைகளில் பிரிந்து வட்டப்பாதைக்குச் செல்லும் வகையில் இந்த ராக்கெட் கட்டமைக்கப்பட்டது. உத்தேசிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் வைக்க திரவ உந்துவிசை வேகம், டிரிம்மிங் தொகுதி மூலம் எட்டப்படுகிறது. இந்த SSLV ஏவூர்தி குறு, சிறு அல்லது நானோ செயற்கைக்கோள்களை (10 முதல் 500 கிலோ எடை கொண்டவை) 500 கிமீ பிளானர் சுற்றுப்பாதையில் நிலைவைக்கும் திறன் கொண்டது என கூறப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்திருந்தால், தேவையின் அடிப்படையில் விண்வெளிக்கு குறைந்த கட்டணத்தில் செயற்கைக்கோள்களை அனுப்பும் வசதி, இந்த எஸ்எஸ்எல்வி மூலம் சாத்தியமாகியிருக்கும். YouTube பதிவை கடந்து செல்ல, 1 தகவல் இல்லை மேலதிக விவரங்களைக் காண YouTubeவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. YouTube பதிவின் முடிவு, 1 9. இது குறைந்த டர்ன்-அரவுண்ட் நேர வசதியையும், பல செயற்கைக்கோள்களுக்கு இடமளிக்கும் நெகிழ்வுத்தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 34 மீ உயரம், 2 மீ விட்டம் கொண்ட 120 டன் எடை கொண்ட ஏவூர்தியாக இதை இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. 10. இதன் அங்கமாக உள்ள EOS-02 என்பது, இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். மைக்ரோசாட் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்த செயற்கைக்கோள், உயர் ஸ்பேஷியல் ரெசல்யூஷன் கொண்ட அகச்சிவப்பு பேண்டில் (இன்ஃப்ரா ரெட் பேண்ட்) இயங்கும் மேம்பட்ட ஆப்டிகல் ரிமோட் சென்சிங்கை வழங்குகிறது. இதன் உள்கூம்பு, ஐஎம்எஸ்-1 செயற்கைக்கோள் கலனின் வடிவத்தைத் தழுவியது. 11. AzaadiSAT என்பது சுமார் 8 கிலோ எடையுள்ள 8U கியூப்சாட் ஆகும். இது 50 கிராம் எடையுள்ள 75 வெவ்வேறு பேலோடுகளைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவிகள் அங்கம் வகித்த 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற மாணவர் குழுவின் கூட்டுப்பங்களிப்புடன் இந்த பேலோடுகளை கட்டமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 12. அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களுக்கு குரல் மற்றும் தரவு பரிமாற்றத்தை செயல்படுத்த ஹாம் ரேடியோ அலைவரிசையில் செயலாற்றக் கூடிய UHF-VHF டிரான்ஸ்பாண்டர், அதன் சுற்றுப்பாதையில் அயனியாக்கும் கதிர்வீச்சை அளவிட 'திட நிலை PIN டையோடு' அடிப்படையிலான கதிர்வீச்சு கவுன்ட்டர், ஒரு நீண்ட தூர டிரான்ஸ்பாண்டர் மற்றும் செல்ஃபி கேமிரா போன்றவை, இதன் பேலோடுகளாகும். 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' உருவாக்கிய தரைத்தள அமைப்பு மூலம் இந்த செயற்கைக்கோளில் இருந்து தரவுகளைப் பெற வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. https://www.bbc.com/tamil/science-62456459
  15. கள்ளக்குறிச்சி வன்முறை: வழியில் சென்றவர்களும் கைதானதாக புதிய சர்ச்சை - கள நிலவரம் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 18 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கலவரம் நடந்த பள்ளியின் முகப்புப்பக்கம் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வுக்கு ஆயத்தமானவர்கள் என்றும் சிலர் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சேலத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கேரளாவில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்பவர். தனது மகன் கள்ளக்குறிச்சி வன்முறையில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருப்பதை அறிந்து அந்த தந்தை மகனை மீட்க முடியாமல் தவித்து வருகிறார். வன்முறையில் மகன் ஈடுபட்டிருக்க மாட்டான் என்று கூறும் அவர், கடந்த இரண்டு வாரங்களாக மகனை விடுவிக்க யாரை பார்ப்பது? யார் துணையை நாடுவது? என்று தெரியாமல் உள்ளார். இதேபோல, குரூப் 4 மாதிரி தேர்வெழுத தயாராகி வந்த தங்களுடைய இரண்டு மகன்களை போலீஸார் கைது செய்து விட்டதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குரியதாகி விட்டதாக வேறொரு பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். தங்களுடைய பிள்ளைகள் தேர்வு எழுதச் சென்ற ஆதாரங்களுடன் போலீஸ் நிலையத்துக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் அந்த பெற்றோர் அலைந்து வருகின்றனர். தொடரும் கைது நடவடிக்கை படக்குறிப்பு, ஜூலை 17ஆம் தேதி பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக நடந்த கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட பள்ளி கட்டடம் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மான முறையில் மாணவி இறந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. அந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி முதல் கட்டமாக 221 இளைஞர்கள், 20 சிறார்கள் உட்பட 241 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த சம்பவத்தில் அடுத்துதடுத்து மேலும் பலர் கைது செய்யப்பட்டதையடுத்து மொத்த கைது எண்ணிக்கை 322 ஆக உள்ளது. இதில் வன்முறைக்கு முக்கிய காரணங்களாக, வன்முறையாளர்களை ஒருங்கிணைக்க உதவிய வாட்ஸ் அப் குழுவை தோற்றுவித்தவர்கள், அதில் பலரை இணைத்தவர்கள், கலவரத்தில் போலீஸ் பேருந்துக்கு தீ வைத்தவர்கள், பள்ளி கட்டடத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் என 16 பேரை மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்தது. "கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள்" - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம் கூடாது - எச்சரிக்கும் அரசு இந்த நிலையில், வன்முறை நடந்தபோது பள்ளி வளாகத்துக்கு அருகே இருந்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து, சின்ன சேலம் வழியாக செல்ல முற்பட்டவர்கள் மற்றும் வன்முறையில் எந்த வகையிலும் பங்கேற்காதவர்கள் போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளதாக பிடிபட்டுள்ள சிலரது உறவினர்கள் ஆதாரங்களை காண்பித்து முறையிடுகின்றனர். படக்குறிப்பு, பள்ளி வளாகத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பேருந்துகள் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கையை சர்ச்சையாக்கும் வகையில் அவர்கள் வெளியிடும் பல தகவல்கள் உள்ளன. குறிப்பாக, சின்ன சேலத்தை சேர்ந்த செல்வராஜ், மல்லிகா தம்பதியின் இரண்டு பிள்ளைகள் சம்பவ நாளில் குரூப் 4 தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தனர். சின்ன சேலம் பேரூராட்சியில் துப்புரவு பணி செய்து வரும் செல்வராஜ், கடுமையான பொருளாதார சூழலில் தமது பிள்ளைகளை படிக்க வைத்ததாகக் கூறுகிறார். இவரது மூத்த மகன் குடியரசு(26) முதுகலை கணிதவியல் மற்றும் இளங்கலை கல்வியியல் படித்துள்ளார். இளைய மகன் வசந்த்(25) பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இருவருமே அரசு வேலையில் சேர பல்வேறு தேர்வுகளை எழுதி வருகின்றனர். கடந்த ஜூலை 24ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுக்கான 'மாதிரி குரூப் 4 தேர்வு' கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றது. அதற்காக அன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வெழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது போலீசார் இருவரையும் கைது செய்து விட்டதாக அவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். ஹால் டிக்கெட்டை கிழித்ததாக புகார் படக்குறிப்பு, சிறையில் உள்ள மகன்களை மீட்க மாவட்ட நிர்வாகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு அலையும் தாயார் மல்லிகா, தந்தை செல்வராஜ். இதையடுத்து சிறையில் தற்போதுள்ள இரு இளைஞர்களின் பெற்றோரை பிபிசி தமிழ் சந்தித்து பேசியது. நம்மிடையே பேசிய இளைஞர்களின் தாய் மல்லிகா, "ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள பயிற்சி மையத்தில் காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை குரூப் 4 மாதிரி தேர்வு எழுதிவிட்டு, தென்வீரலூரில் உள்ள உறவினர் வீட்டுக்குபிள்ளைகள் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கனியாமூரில் கலவரம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால் கலவரம் ஓய்ந்த பிறகு வீட்டுக்கு செல்லலாம் என்று அங்கேயே இருந்துள்ளனர். பிறகு கலவரம் ஓய்ந்த தகவலறிந்து வீட்டுக்கு புறப்பட்டனர். கனியாமூர் தனியார் பள்ளி எல்லை அருகே சென்றபோது காவலர்கள் வழிமறித்துள்ளனர். இருவருமே தங்களது 'குரூப் 4' ஹால் டிக்கெட்டை காண்பித்துள்ளனர். ஆனாலும் அதை கிழித்துப் போட்டுவிட்டு இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்," என்கிறார். இந்த விவகாரத்தில் கலவரம் நடந்த ஜூலை 17ஆம் தேதி தனது இரண்டு மகன்கள் எங்கு சென்றனர், அவர்கள் மாதிரி தேர்வு எழுத சென்ற நேரம் முதல் வீடு திரும்பியது வரை உள்ள சிசிடிவி ஆதாரங்கள், தேர்வு மதிப்பெண் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து, திருச்சி சிறையில் இருக்கும் மகன்களை விடுவிக்க வேண்டும் என்று இரு இளைஞர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்ற காவலில் இருந்த மகன்களை பிணையில் வெளியே எடுக்க முயன்ற முயற்சி பலன் கொடுக்காததால், அவர்களால் ஜூலை 24ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வை எழுத இயலவில்லை. படக்குறிப்பு, தாயார் மல்லிகா "சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன்களை பார்த்தோம். தவறே செய்யாமல் எங்களை இந்த அரசு குற்றவாளியாக ஆகிவிட்டது என்று கூறி அழுகின்றனர்," என்கிறார் தாயார் மல்லிகா. இளைஞர்களின் தந்தை செல்வராஜ், "எனது பிள்ளைகள் இருவருமே தாசில்தாராக வேண்டும், விஏஓ ஆக வேண்டும் என்று கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்து வந்தனர். அவர்களது கனவு வீணாகிவிட்டது. இனி சிறையில் இருந்து வெளியே வந்தால் கூட, இருவரையும் குற்றவாளிகள் போலத்தான் இந்த சமுதாயம் பார்க்கும். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அரசாங்கமே முன்வந்து உதவி செய்தால் மட்டுமே அவர்களால் மீண்டு வர முடியும். இல்லையென்றால் அவர்கள் கனவு பாழாகும்," என்கிறார். மகனின் ஐபிஎஸ் கனவு - தந்தை உருக்கம் படக்குறிப்பு, கேசவன் இதேபோல, கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சேலம் மாவட்டம் தலைவசால் பகுதியை சேர்ந்த சிவா என்ற இளைஞரும் ஒருவர். அவரது தந்தை கேசவன் பிபிசி தமிழிடம் பேசும்போது, வழிப்போக்கனாக அந்த பகுதி வழியாக சென்ற தனது மகனை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறுகிறார். சேலத்தைச் சேர்ந்த கேசவன், கேரளா மாநிலத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது மகன் கலவரத்தில் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அன்றாடம் வேலைக்கு சென்றால் மட்டுமே சாப்பிட முடியும் என்ற நிலையில்தான் இவரது குடும்பம் உள்ளது. "எனது மகன் முதுகலை சமூகவியல் முடித்துவிட்டு, தற்போது இளங்கலை கல்வியியல் படித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு அரசு போட்டி தேர்வுகள் எழுதி வந்துள்ளார். அவனுக்கு ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. ஆனால், இப்போது எல்லாம் தகர்ந்து விட்டது," என்கிறார் கேசவன். போலீஸ் தரப்பு பதில் படக்குறிப்பு, பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் பகலவனை தொடர்பு கொண்ட பிபிசி தமிழ், கலவர சமயத்தில் முதல் கட்டமாக நடந்த கைது நடவடிக்கையின்போது தவறுதலாக சிலர் பிடிபட்டுள்ளதாக அவர்களின் பெற்றோர் முறையிடுவது குறித்து கேட்டது. அதற்கு அந்த அதிகாரி, "பெற்றோர் அவர்கள் தரப்பில் இருக்கும் நியாத்தை சொல்கின்றனர். உண்மையிலே அவர்கள் கூறியபடி அங்கே அவர்களின் பிள்ளைகள் வந்தனரா இல்லையா அல்லது கடைசி நிமிடத்தில் அவர்கள் இணைந்தார்களா உள்ளிட்ட கோணத்தில் எல்லாம் எங்களுடைய விசாரணை நடந்து வருகிறது. பெற்றோரின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையை பொருத்தவரை அப்பாவிகள் யாரும் கைதாகவில்லை என்றே கூறுவோம். வன்முறை நடந்து கொண்டிருக்கிறது என்றால் அந்த வன்முறை கும்பலில் இருக்கும் ஒவ்வொருவரும் அதற்கு பொறுப்புடையவர்கள். அதன் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்கிறார். இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்பட்டவர்கள் என்றும் எஸ்பி பகலவன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பெற்றோர் சிலர் காட்டும் ஆதாரங்கள் பற்றி குறிப்பிட்டபோது, "என்ன நடந்தது என்பது முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும். இதில் ஒவ்வொருத்தரின் பங்கு என்ன என்பதை முழுமையாக விசாரித்து வருகிறோம். அதற்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த அதிகாரி பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் உறுதி படக்குறிப்பு, ஷ்ரவன் குமார் ஜடாவத், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இதே விவகாரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. பெற்றோர் சிலர் தங்களுடைய பிள்ளைகளுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி சில ஆதாரங்களை வழங்கியுள்ளனர். மகனை பிணையில் விடுவிக்கவும் கோரினர். மாவட்ட நிர்வாகத்தை பொருத்தவரை இதில் அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கு முக்கியத்தும் கொடுத்துள்ளோம். கைது நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் பிடிபட்ட நபர்கள் உண்மையிலேயே ஈடுபட்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். யாராவது ஒரு நபர் காவல் துறையினர் தங்களை சும்மா பிடித்துவிட்டனர் என்று கூறினாலும் கூட, அவர்கள் கலவரம் நடந்த சுமார் ஒன்றரை மணி நேரம் எந்த பகுதியில் இருந்தனர் என்பது சரிபார்க்கப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்படுகிறது," என்றார் ஆட்சியர். இந்த விஷயத்தில் உண்மையை சரிபார்க்க காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்துகிறார்கள். இறுதியில் பிடிபட்ட நபர் எந்த வகையிலும் கலவரத்துக்கு தொடர்பில்லை எனத் தெரிய வந்தால் அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தையும் காவல் துறையினர் நீக்கி விடுவார்கள். இதில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், தவறே செய்யாதவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதும் எங்களுடைய கடமை," என்கிறார் மாவட்ட ஆட்சியர். https://www.bbc.com/tamil/india-62456961
  16. இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலாகும். சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 'யுவான் வாங் 5' என்பது, சீன விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலாகும். இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது. 2007ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல், அது நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து 750 கிமீ தூரம் கொண்ட பகுதிகளை கண்காணிக்கவும் பரந்த வான்வழி நோக்குடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கும் பயன்படுத்தலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த கப்பல் இலங்கைக்கு வருவது, அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாகும் என இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இந்த நிலையிலேயே, சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை அந்த கண்காணிப்பு கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே இந்தியா அரசாங்கம் அதன் கவலையை இலங்கையிடம் தெரிவித்திருந்தது. மேலும், இலங்கை பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கியிருக்கும் சூழலில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஹம்பாந்தோட்டையில் நடைமுறையில் எந்த பொருளாதார நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? "ஹம்பாந்தோட்டை துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது" மஹிந்த ராஜபக்ஷ வசிக்க திருகோணமலை கடற்படை தளத்தை தேர்வு செய்தது ஏன்? எச்சரிக்கை விடுத்த இந்தியா, அமெரிக்கா பட மூலாதாரம்,SRI LANKA DEFENCE MINISTRY முன்னதாக, சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்து வெளியிட்டது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீன கப்பல் பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்து கொண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி தனதுஅதன் பயணத்தைத் தொடரும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து இந்த வார தொடக்கத்தில், இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாடு காவல்துறை அதன் எல்லைக்குட்பட்ட கடலோர பாதுகாப்பை பலப்படுத்தியது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் இந்திய கடற்படையும் இந்திய கடலோர காவல் படையும் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தின. இதேவேளை, சீன கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகலாம் என்று இந்திய உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW) இலங்கைக்கு எச்சரிக்கை குறிப்பை அனுப்பியது. "இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை கவனத்தில் கொண்டு" இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரக பணியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ லெப்டிணன்ட் கர்னல் புனீத் சுஷீல் மற்றும் அதிகாரிகள், இந்திய துணைத்தூதர் திபின் தலைமையில் ஹம்பந்தோட்டா துறைமுக அதிகாரிகளையும் இலங்கை கடற்படை தென் பிராந்திய தளபதி மற்றும் ராணுவ உயரதிகாரிகளை சந்தித்துப் பேசினார்கள். அப்போதும் இந்தியாவின் கவலை இலங்கை தரப்பிடம் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, 'யுவான் வாங் 5' கப்பல் சீனா ராணுவத்தின் (பிஎல்ஏ) ஆதரவு அமைப்பால் இயக்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகனும் கூறியது. இந்த அழுத்தங்கள் காரணமாகவே, ஆகஸ்ட் 5ஆம் தேதி வாய்மொழி குறிப்பு மூலமும் பின்னர் எழுத்துபூர்வமாகவும் இந்த பிரச்னையில் மேலதிக ஆலோசனைகள் செய்யப்படும் வரை, யுவான் வாங் 5 கப்பலின் வருகை தேதியை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வெளியுறவுத்துறை கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. யுவான் வாங் 5 - ஏன் அச்சப்பட வேண்டும்? ஆராய்ச்சி பணிக்காக வடிவமைக்கப்பட்ட யுவான் வாங் 5 கப்பல், 2007இல் கட்டப்பட்டது. 11 ஆயிரம் டன்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல், ஜூலை 13ஆம் தேதி சீனாவின் ஜியாங்யினில் இருந்து புறப்பட்டது. தற்போது தைவானுக்கு அருகே இந்த கப்பல் பயணம் செய்து வருகிறது. ஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, சில தினங்களுக்கு முன்பு சீன தடையை மீறி பயணம் செய்தார். அப்போது தைவானை அச்சுறுத்தும் விதமாக இதே கப்பலை தைவான் கடல் பகுதி நோக்கிப் பயணம் செய்ய வைத்தது சீனா. அந்த கடல் பகுதியில் சீனா அதன் வான் படை மற்றும் கடற்படை, ராணுவ கூட்டு ஒத்திகையை கடந்த இரு தினங்களாக நடத்திய விவகாரம் சர்ச்சையானது. மரைன் டிராஃபிக் வலைதள தரவுகளின்படி, யுவான் வாங் 5 கப்பல், தற்போது கிழக்கு சீன கடலில் தெற்கு ஜப்பான் மற்றும் தைவானின் வடகிழக்கு இடையே உள்ளது.சீன கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான கடல் படுகை வரைபடத்தை தயாரிக்க இந்த யுவான் வாங் 5-ஆல் முடியும். ஆனால், தரவுகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சிக் கப்பலாக இது காட்டப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனாலேயே ஹம்பாந்தோட்டையில் சீன கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாக அமையலாம் என்ற கவலை நிலவுகிறது. இந்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டால் அது இலங்கையுடனான சீன உறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கான சீன தூதர் கூறியிருந்தார். இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் கர்னல் நளின் ஹேரத், சீன கப்பலுக்கு எரிபொருள் நிரப்ப மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவின் கவலைகள் யுவான் வாங் 5 கப்பல், சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க ராணுவ பயன்பாட்டு வசதிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது. இந்த கப்பல் மலாக்காவின் பரபரப்பான நீரிணையைத் தவிர்த்து மற்ற இந்தோனீசிய ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைய திட்டமிடப்பட்டது. யுவான் வாங் 5 சீன கப்பல், இந்திய பெருங்கடலின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டால், ஒடிஷா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை இந்தக் கப்பலால் கண்காணிக்க முடியும். இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான ஆற்றல் பற்றிய தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும். ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவுக்கு பெரும் தொகையை செலுத்த வேண்டிய இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேக கண்ணோட்டத்துடனேயே அணுகி வருகிறது. அந்த நாட்டில் கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதைகளில் அமைந்துள்ள துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு இலங்கை 2017இல் வழங்கியது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், இலங்கையில் உள்ள துறைமுக வசதிகளை அனுபவிக்கும் வகையில் தமது செல்வாக்கை இலங்கை மீது செலுத்த இந்த கப்பல் பயணத்தை சீனா வாய்ப்பாக பயன்படுத்தலாம் என இந்தியா கருதுகிறது. இதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டில், சீன நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. அப்போதும் இந்தியா அந்த கப்பல்கள் குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டது. அதன் பின்னர் இலங்கை துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை எதுவும் பதிவாகவில்லை. https://www.bbc.com/tamil/sri-lanka-62450326
  17. கூகுள் மேப் பயணத்தால் ஓடையில் இறங்கிய கார் - மயிரிழையில் தப்பிய குடும்பம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவின் கோட்டயத்தில் கூகுள் மேப் செயலி உதவியுடன் ஒரு மருத்துவரின் குடும்பம் பயணம் செய்த கார், இரவில் ஓடையில் இறங்கியது. நல்வாய்ப்பாக அந்த காருக்குள் இருந்த மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் நடந்துள்ளது. சம்பவ நாளில் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சோனியா, அவரது தாயார் சோஷாம்மா, உறவினர் அனீஷ், மூன்று மாத கைக்குழந்தை எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லா நோக்கி காரில் பயணம் செய்துள்ளனர். கூகுள் வரைபட செயலி உதவியுடன் இவர்கள் திருவாத்துக்கல் பகுதியில் இருந்து எம்பி சாலைக்குச் செல்ல நாட்டக்கோம் பைபாஸ் வழியாக சென்றனர். அந்த பாதை ஏற்கெனவே கன மழை காரணமாக வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அப்போது சாலை முடிந்தபோதும், மழை நீரால் பாதை மூடியிருந்ததால் அந்த கார் நேராக சாலைக்கு அப்பால் இருந்த ஓடைக்குள் இறங்கியது. இதை அறிந்தவுடன் கார் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், காருக்குள் இருந்தவர்களின் அலறல் கேட்கவே, அருகே இருந்த கடையொன்றில் இருந்தவர் அதை கவனித்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் காருக்குள் இருந்தவர்கள் ஓடையில் இருந்து மேலே வருவதற்கு ஊர் மக்கள் முயற்சி செய்தனர். ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய இளைஞர் - இரவோடு இரவாக மீட்பு புதுச்சேரியில் வயோதிக தம்பதியுடன் வீட்டுக்கு 'சீல்' - நடந்தது என்ன? கோட்டயம் மேற்கு காவல் நிலையத்தில் இருந்தவர்கள், தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியை துரிதமாக மேற்கொள்ள உதவினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், கார் ஓட்டுநர் கூகுள் மேம் உதவியுடன் வாகனத்தை இயக்கியதாகவும் அது காட்டிய வழியில் செல்ல முற்பட்டபோது, கார் ஓடைக்குள் இறங்கியதாகவும் தெரிவித்தனர். படக்குறிப்பு, கடந்த மே மாதம் கோட்டயம் பகுதியில் ஓடைக்குள் இறங்கிய கார். இந்த வாகன ஓட்டியும் கூகுள் மேப் உதவியுடன் பயணம் செய்தார். இதேபோன்றதொரு சம்பவம் கடந்த மே மாதம் காடுதுருத்தி பகுதியில் நடந்தது. அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பம், மூணாறில் இருந்து ஆலப்புழா செல்வதற்காக கூகுள் மேப் உதவியுடன் காரில் பயணம் செய்தது. அவர்கள் வந்த வாகனம், குருப்பந்தரா பகுதியில் இருந்த ஓடைக்குள் இறங்கியது. ஆனால், அது பகல் வேளை என்பதால் உள்ளூர் மக்கள் அந்த கார் ஓடைக்குள் முழுமையாக இறங்கும் முன்பே குரல் கொடுத்து காருக்குள் இருந்தவர்களை எச்சரித்தனர். நகரங்கள் அல்லாத தொலைதூர பகுதிகள் மற்றும் செல்பேசி சிக்னல் சரிவர கிடைக்காத பகுதிகளில்ல் கூகுள் மேப் உதவியுடன் சாலைகளில் பயணம் செய்யும்போது இத்தகைய சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/india-62448415
  18. மருதர் காஜலை விட்டு அணு(னு)வுக்கு மாறீட்டார்!🤭 எல்லாம் சரி அப்ப பனையள் இருக்குமே?!
  19. உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு 15 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர். அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ''பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை'' என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. 84 வயதான நபர் ஒருவர், 85 வயதான பவுலின் என்ற பெண்ணை தனது நான்காம் மனைவியாக 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தாங்கள் வாரத்திற்கு இரு முறை பாலுறவு கொள்வதாக அவர் கூறுகிறார். ''இதில் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்'' என்கிறார் அவர். தானும், தனது மனைவியும் வழக்கமாக உடற்பயிற்சி செய்து, தங்களை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும், இதுவே ஒருவர் மீது மற்றொருவர் ஈர்ப்புடன் இருக்க உதவுவதாகவும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ''நான் நேரடியாக செல்கிறேன். இளம் பெண்ணான உங்களுக்கு, பெரிய தொப்பையுடன் புகைபிடித்துக்கொண்டிருக்கும் உங்களது கணவரை பார்த்தால் என்ன தோன்றும்? அவர் மீது ஈர்ப்பு வருமா?'' என்கிறார் அவர். 80 வயதை கடந்தவர்களில், 6-ல் ஒருவர் மட்டுமே தங்களது பாலுறவு போதுமானதாக இருந்ததாக உணர்ந்தாக தெரிவித்துள்ளனர். போதிய வாய்ப்புகள் கிடைக்காததாலே, தங்களது பாலுறவு தடைப்படுவதாக 65 வயதைக் கடந்தவர்களில் 6-ல் ஒருவர் கூறுகிறார். ''பலர் நினைப்பதை விட, அதிக வயது முதியவர்கள் பாலுறவுவில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர்'' என சுதந்திர வயது தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் லூசி ஹார்மேர் கூறுகிறார். முதுமை காதல் நிறைந்த உறவுகளை வைத்துக்கொள்ளச் சுதந்திர வயது தொண்டு நிறுவனம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்களது துணையிடம் பேசுங்கள். விஷயங்களை அவர்களது பார்வையில் இருந்து பார்க்க முயலுங்கள். பாலுறவில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்ன தேவை? என்பதை இருவரும் பேசுங்கள். உடலை பற்றி நம்பிக்கையுடன் இருங்கள் https://www.bbc.com/tamil/global-43060453
  20. இஸ்ரேல் - பாலத்தீனம்: காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு; 100 ராக்கெட்டுகள் மூலம் பதிலடி யோலாண்டே க்னெல், ஜெருசலேம் & ரஃபி பெர்க், லண்டன் பிபிசி நியூஸ் 6 ஆகஸ்ட் 2022, 06:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் வான் நோக்கி புகை எழும் காட்சி காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலத்தீன போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உட்பட குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஓர் ஐந்து வயது பெண் குழந்தையும் அடக்கம் என்றும் பல காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர்களில் ஒருவரை இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்த பிறகு, அந்த அமைப்பின் "உடனடி அச்சுறுத்தல்" வந்ததைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத், இஸ்ரேல் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை "ஆரம்பகட்ட எதிர்வினையின்போது" வீசியது. பெரும்பாலானவை இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்புக் கவசத்தால் தடுக்கப்பட்டன. பல இஸ்ரேலிய நகரங்களில் சைரன் ஒலிகள் கேட்டன. இதற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் போராளிகளின் தளங்களைக் குறிவைத்து தாக்குதலை மீண்டும் தொடங்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கூறியது. முந்தைய நாளின் ஒரு தொலைக்காட்சி உரையில், பிரதமர் யாயீர் லப்பீட், "இஸ்ரேல் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகத் துல்லியமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது," என்றார். பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்துடன் (PIJ) தொடர்புடைய தளங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியது. அவற்றில், உரத்த குண்டுவெடிப்பு சத்தத்தோடு வெடித்த, காஸா நகரில் உள்ள உயரமான பாலஸ்தீன கோபுரமும் அடங்கும். அமெரிக்காவுடன் உறவை முறிக்கும் சீனா - காலநிலை மாற்றம், போதைமருந்து ஒழிப்பில் சிக்கல் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு - புகைப்படத் தொகுப்பு அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ''நீதியின் வாள்" தாக்குதல் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்டவர்களில் தைசீஸ் ஜபாரி உட்பட 4 பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினர் மற்றும் ஐந்து வயது குழந்தையும் அடக்கம் என்று உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர், இஸ்ரேல் பாதுகாப்புப் படை "சுமார் 15 போராளிகள்" கொல்லப்பட்டதாகத் தான் கருதுவதாகக் கூறினார். இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் அயிலெட் ஷகீத், சேனல் 12 நியூஸிடம், "இது எப்படி முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது முடிவுக்கு வர அதிக காலம் ஆகலாம். இதுவொரு நீண்ட மோதலாக கடினமான ஒன்றாக இருக்கலாம்," என்றார். ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணித்தபோது பேசிய பாலத்தீன பொதுச் செயலாளர் ஜியாத் அல்-நகாலா, "இந்த ஆக்கிரமிப்புக்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம். எங்கள் மக்கள் வெற்றி பெறக்கூடிய ஒரு சண்டையாக அது இருக்கும்," என்றார். "இந்தப் போரில் பேச்சுவார்த்தைக்குரிய எல்லைகள் இல்லை. மேலும் டெல் அவிவ் எதிர்ப்பின் ராக்கெட்டுகளுக்குக் கீழே இருக்கும்," என்றார். இதற்கிடையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ், ஆயுதக் குழுக்கள் போரில் "ஒற்றுமையாக" இருப்பதாகவும் அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது. திங்கள் கிழமையன்று இரவு, மேற்குக் கரையில் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் தலைவர் என்று கூறப்படும் பாஸ்ஸெம் சாதியை இஸ்ரேல் கைது செய்தது. 17 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு யுக்ரேனியர்களை கொன்ற இஸ்ரேலிய அரேபியர்கள் மற்றும் பாலத்தீனியர்களின் தாக்குதல்களுக்குப் பிறகு, தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர் ஜெனின் பகுதியில் கைது செய்து வைக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் ஜெனின் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பாஸ்ஸெம் சாதி கைது செய்யப்பட்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுடனான அதன் எல்லைக்கு அருகிலுள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது. பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைத் தாக்கும் கொண்டது என்று எச்சரித்தது. சாலைகள் மூடப்பட்டதால், தெற்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் முடங்கின. ஈரானால் ஆதரிக்கப்படும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் தலைமையகம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ளது. இது காஸாவில் இருக்கும் வலிமையான போராளிக் குழுக்களில் ஒன்று. இஸ்ரேலுக்கு எதிரான ராக்கெட் வீச்சு, துப்பாக்கிச் சூடு உட்பட பல தாக்குதல்களை இது நடத்தியிருக்கிறது. 2019 நவம்பரில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஐந்து நாட்கள் மோதலில் ஈடுபட்டன. இஸ்ரேல் மீது உடனடி தாக்குதலைத் திட்டமிடுவதாகக் கூறிய அந்த அமைப்பின் தளபதியை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து சண்டை வெடித்தது. இந்த வன்முறையில் 34 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 111 பேர் காயமடைந்தனர், 63 இஸ்ரேலியர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. கொல்லப்பட்ட பாலத்தீனியர்களில் ராக்கெட்டுகளை ஏவத் தயாராகி வந்தவர்கள் உட்பட 25 பேர் போராளிகள் என்றும் இஸ்ரேல் கூறியது. இஸ்ரேல் - பாலத்தீன மோதலின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இருபதாம் நூற்றாண்டில் பெத்லஹாம் பாலத்தீனம் என்னும் மத்திய கிழக்கின் அந்த பகுதியை ஆண்டுவந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப் போரில் வீழ்த்திய பின், அந்த பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடிபுகுந்தனர். பாலத்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, "தேசியப் பகுதி" ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின. இதில்தான் பதற்றம் தொடங்கியது. யூதர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் பூர்வீகம். ஆனால் பாலத்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர், இந்த நடவடிக்கைக்கு பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரபு லேஜியன் படைகள், யூத தற்காப்பு படையான ஹகானா மீது தாக்குதல் நடத்திய காட்சி. ஐரோப்பாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 - 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது. யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன. 1947ஆம் ஆண்டு பாலத்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது. இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதை அமல்படுத்தவும் இல்லை. இஸ்ரேல் மற்றும் `பேரழிவின்` தொடக்கம் 1948ஆம் ஆண்டு இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர். அதை பாலத்தீனத்தில் பல்வேறு மக்கள் எதிர்த்தனர். அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன. ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் அந்த பகுதியை விட்டு தப்பித்து சென்றனர். பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது. போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஜோர்டான் மேற்கு கரை என்னும் இடத்தை ஆக்கிரமித்தது. எகிப்து காசாவை ஆக்கிரமித்தது. ஜெருசலேத்தின் மேற்கில் இஸ்ரேலிய படைகள் கிழக்கில் ஜோர்டானிய படைகள் என பிரிக்கப்பட்டது. தற்போதைய வரைபடம் ஏனென்றால் அங்கு அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்படவே இல்லை. ஒவ்வொரு தரப்பும் பிற தரப்பின் மீது குற்றம் சுமத்தியது. அடுத்த பல ஆண்டுகளுக்கு அங்கு போர்களும் சண்டைகளும் தொடர்ந்தன. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேத்தையும், மேற்கு கரையையும், சிரிய கோலன் ஹைட்சின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர். ஆனால் இந்த அகதிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இது நாடு யூத நாடாக இருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மேற்குக் கரையை இன்றும் ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையை ஐநா ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே இன்றும் பார்க்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு வருகை தரும் இஸ்ரேலிய ராணுவ கமாண்டர்கள். இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்று கூறுகிறது. பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பாலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல் முழு நகரையும் உரிமை கொண்டாடுவதை அங்கீகரித்துள்ள வெகுசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை நிறுவியது. தற்போது அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர். இது சர்வதேச சட்டங்களின்படி தவறு என்றும் அமைதிக்கு தடையாக உள்ளது என்றும் பாலத்தீனம் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கிறது. தற்போது என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கிழக்கு ஜெருசலேம், காஸா மற்றும் மேற்கு கரையில் வசிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்களுக்கு இடையே அவ்வப்போது பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலத்தீன தீவிரவாத குழுவான ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளது காசா. இந்த குழு இஸ்ரேலுடன் பலமுறை சண்டையிட்டுள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு ஆயுதம் செல்வதை தடுக்க இஸ்ரேல் மற்றும் எகிப்து காஸா எல்லைகளை தீவிரமாக கட்டுப்படுத்தி வருகின்றன. காஸா மற்றும் மேற்கு கரையில் உள்ள பாலத்தீனர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் தங்களுக்கு துயரங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இஸ்ரேல் பாலத்தீனத்தின் வன்முறையிலிருந்து தங்கள் நாட்டை காத்துக் கொள்ளவே நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் தொடக்கத்திலிருந்து அங்கு பதற்றம் அதிகரித்தது. இரவு நேரங்களில் போலீசாருக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. கிழக்கு ஜெருசலேமில் சில பாலத்தீனிய குடும்பங்கள் வெளியேற அச்சுறுத்தப்படுவதும் பதற்றத்தை அதிகரித்தது. முக்கிய பிரச்னைகள் என்ன? இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் என இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படாத பல விஷயங்கள் உள்ளன. பாலத்தீன அகதிகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மேற்கு கரையில் உள்ள யூதக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டுமா, இருதரப்பும் ஜெருசலேத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமா? இது எல்லாவற்றையும்விட சிக்கலான ஒன்று உள்ளது. இஸ்ரேலுக்கு பக்கத்தில் பாலத்தீன நகரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல பிரச்னைகள் இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அமைதி பேச்சுவார்த்தைகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும்? சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பிரச்னைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு எட்டப்போவதில்லை. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அமைதி திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டது. இது `நூற்றாண்டுக்கான ஒப்பந்தம்` என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வர்ணித்திருந்தார். ஆனால் அது ஒருதலைப் பட்சமாக இருப்பதாக பாலத்தீனர்களால் நிராகரிப்பட்டது. இந்த கடினமான பிரச்னையை தீர்க்க இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். அதுவரை இந்த சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். https://www.bbc.com/tamil/global-62446373
  21. ஹிரோஷிமா, நாகசாகி நாள் : அணு குண்டுக்குத் தப்பிய பெண்களின் அனுபவங்கள் - 'அன்று நரகத்தைப் பார்த்தோம்' 6 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாம் உலகப் போர் முடியும் கட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியதன் நினைவு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. அவற்றில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை வெறும் மதிப்பீடுகள்தான். ஹிரோஷிமாவில் வாழ்ந்த 350,000 பேரில், இந்த குண்டுவீச்சில் 140,000 பேர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. நாகசாகியில் குறைந்தது 74 ஆயிரம் பேர் மாண்டதாகத் தெரிகிறது. இந்த குண்டு வீச்சுகளைத் தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 14 ஆம் தேதி நேசப் படையினரிடம் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து ஆசியாவில் திடீரென போர் முடிவுக்கு வந்தது. ஏற்கெனவே சரணடையும் எண்ணத்திற்கு ஜப்பான் வந்துவிட்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அணுகுண்டு வீச்சில் தப்பியவர்கள் ஹிபாகுஷா எனப்படுகின்றனர். குண்டுவீச்சைத் தொடர்ந்து கதிர்வீச்சு விஷத்தன்மை மற்றும் மன ரீதியிலான அழுத்தம் என கொடூரமான அனுபவங்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. வரலாற்றில் மோசமான சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக இருக்கும் அந்தப் பெண்களைப் பற்றிய கதைகளை சிறப்பாகக் கூறுபவராக பிரிட்டனைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் லீ கரேன் ஸ்டோவ் இருக்கிறார். ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு - புகைப்படத் தொகுப்பு ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் தப்பித்த முன்னணி பரப்புரையாளர் மரணம் 75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவீச்சுகளின் பாதிப்புகளை தெளிவாக நினைவில் வைத்திருக்கும் 3 பெண்களை ஸ்டோவ் புகைப்படங்கள் எடுத்து நேர்காணல்கள் செய்துள்ளார். இந்தக் கட்டுரையில் வரும் தகவல்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும். டெருக்கோ உயெனோ 1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட போது உயிர்தப்பிய டெருக்கோவுக்கு அப்போது வயது 15. பட மூலாதாரம்,LEE KAREN STOW படக்குறிப்பு, டெருக்கோ உயெனோ ஹிரோஷிமா செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனை வளாகத்தில் மழலையர் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். குண்டு வீச்சு நடந்ததும், மருத்துவமனையில் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த பகுதி தீ பிடித்தது. தீயை அணைக்கும் முயற்சியில் டெருக்கோ உதவிகள் செய்தார். ஆனால் அவருடன் தங்கியிருந்த நிறைய குழந்தைகள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். குண்டுவீச்சு நடந்து ஒரு வாரம் கழித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடூரமான காயங்களைக் குணப்படுத்த இரவு, பகலாக பலரும் வேலை பார்த்ததை இவர் நேரில் பார்த்திருக்கிறார். இவருக்கு சாப்பிட உணவு கிடைக்கவில்லை. தண்ணீரும் சிறிதளவு தான் கிடைத்தது. படிப்பை முடித்த பிறகு, டெருக்கோ அதே மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். தோல் மாற்று சிகிச்சைகளில் அவர் உதவியாளராக இருந்தார். நோயாளியின் தொடையில் இருந்து தோலை எடுத்து, தீக்காயத்தால் தோல் உரிந்து போன இடத்தில் அதைப் பொருத்த வேண்டும். அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்த டாட்சுயுக்கி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். முதல் முறையாக டெருக்கோ கருவுற்றிருந்தபோது, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்குமா, அது உயிர் பிழைக்குமா என்றெல்லாம் அவர் கவலைப்பட்டிருக்கிறார். அவருடைய மகள் டொமோக்கோ பிறந்து, உயிர் பிழைத்திருக்கிறார். அது குடும்பத்தைப் பேணுவதில் டெருக்கோவிற்கு அதிக தைரியத்தைக் கொடுத்தது பட மூலாதாரம்,LEE KAREN STOW படக்குறிப்பு, ஹிரோஷிமாவில் உள்ள மருத்துவமனையில் டெருக்கோவின் மகள் டொமோகோவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ``நான் நரகத்திற்குப் போனது கிடையாது. அதனால் அது எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் நாங்கள் எதிர்கொண்டதைப் போன்ற அனுபவத்தைப் போலத்தான் நரகம் இருக்கக் கூடும். மீண்டும் அதுபோல நடந்துவிட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது'' என்றார் டெருக்கோ. பட மூலாதாரம்,LEE KAREN STOW படக்குறிப்பு, டொமோகோ தனது தாய் டெருக்கோ மற்றும் தந்தை தட்சுயூகியுடன் இருக்கும் புகைப்படம் . ``அணு ஆயுதங்களை அழித்துவிடுவதற்கு தீவிர முயற்சிகள் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மாகாணத் தலைவர்கள் தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிறகு தேசிய அரசாங்கத்தின் தலைவர்களை அணுக வேண்டும். பிறகு உலகத் தலைவர்களை அணுக வேண்டும்'' என்று அவர் கூறினார். ``இங்கே 75 ஆண்டுகளுக்கு புல் அல்லது மரங்கள் வளராது என்று சொன்னார்கள். ஆனால் அழகான பசுமைவெளிகள் மற்றும் நதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட நகரமாக ஹிரோஷிமா உருவாகியுள்ளது'' என்று டெருக்கோவின் மகள் டொமோக்கோ கூறினார். ``இருந்தாலும் குண்டுவீச்சில் உயிர் தப்பியவர்கள், கதிர்வீச்சு பாதிப்பின் துன்பங்களைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டியதாயிற்று. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பற்றிய நினைவுகள் மக்கள் மனதில் இருந்து அகன்று கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் செய்வது அறியாமல் நடுத் தெருவில் நிற்கிறோம்'' என்றார் அவர். பட மூலாதாரம்,LEE KAREN STOW படக்குறிப்பு, டெருக்கோ (இடது) அவரது மகள் டொமோகோ (முன்பக்கம், நடுவில்) அவரது பேரப்பிள்ளை குணிக்கோ (வலது) . 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். ``எதிர்காலம் நம் கைகளில் உள்ளது. நமக்கு சிந்தனை இருந்தால் மட்டுமே, மற்ற மக்களைப் பற்றி யோசித்தால் மட்டுமே, நாம் என்ன செய்ய முடியும் என உணர்ந்தால் மட்டுமே, அதற்கான செயல்பாடுகளில் இறங்கினால் மட்டுமே, அமைதியை உருவாக்க ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி உழைத்தால் மட்டுமே அமைதியை ஏற்படுத்துவது சாத்தியமானதாக இருக்கும்'' என்றும் அவர் கூறினார். டெருக்கோவின் பேத்தி குனிக்கோ, ``போரையோ அல்லது அணுகுண்டு வீச்சையோ நான் பார்க்கவில்லை. மீண்டும் உருவாக்கப்பட்ட நிலையில் உள்ள ஹிரோஷிமாவை தான் எனக்குத் தெரியும். பழையனவற்றை நான் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்'' என்று கூறினார். ``ஆகவே, அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்த ஒவ்வொருவரும் சொல்வதைக் கேளுங்கள். அணுகுண்டு வீச்சு குறித்த உண்மைகளை, ஆதாரங்களின் அடிப்படையில் நான் படிக்கிறேன்'' என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணு குண்டு தாக்குதலுக்குப் பிறகு ஹிரோஷிமா ``அன்றைய தினம் நகரில் எல்லாமே எரிந்து போய்விட்டன. மனித உடல்கள், பறவைகள், தட்டாம்பூச்சிகள், புற்கள், மரங்கள் என எல்லாமே எரிந்துவிட்டன.'' குண்டுவீச்சுக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகளுக்காக நகரில் நுழைந்தவர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நலனை அறிய வந்தவர்களிலும் பலர் மாண்டு போனார்கள். அதையும் மீறி உயிர்பிழைத்தவர்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாயினர்.'' ``ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சில் உயிர் பிழைத்தவர்களுடன் மட்டுமின்றி, யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களுடனும், அந்த சுரங்கங்கள் அருகே வாழும் மக்களுடனும், அணு ஆயுதங்கள் பரிசோதனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடனும், அணு ஆயுத பரிசோதனை சூழலில் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளானவர்களுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ள நான் முயற்சி செய்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். எமிக்கோ ஒக்காடா பட மூலாதாரம்,YUKI TOMINAGA படக்குறிப்பு, எமிக்கோ ஹிரோஷிமாவில் குண்டுவீச்சு நடந்தபோது எமிக்கோவுக்கு 8 வயது. அவருடைய அக்கா மியெக்கோவும், நான்கு உறவினர்களும் அதில் கொல்லப்பட்டனர். எமிக்கோ மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பல புகைப்படங்கள் அதில் எரிந்துவிட்டன. உறவினர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த படங்கள் தப்பிவிட்டன. அதில் அவருடைய அக்காவின் படங்களும் உள்ளன. ``என் அக்கா அன்று காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டார். உன்னை பிறகு சந்திக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அப்போது அவருக்கு வயது 12'' என்று எமிக்கோ தெரிவித்தார். ``ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை. அவருக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது.'' பட மூலாதாரம்,COURTESY OF EMIKO OKADA படக்குறிப்பு, எமிக்கோ தனது தாய் மற்றும் சகோதரியுடன் ``என் பெற்றோர்கள் தீவிரமாக அவரைத் தேடினர். அவருடைய உடல்கூட கிடைக்கவில்லை. அதனால் அவர் எங்கேயோ உயிருடன் இருக்கிறார் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.'' ``அப்போது என் தாய் கருவுற்றிருந்தார். ஆனால் கரு கலைந்துவிட்டது.'' ``எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை. கதிர்வீச்சு பற்றி எங்களுக்குத் தெரியாது. எனவே எது கிடைத்தாலும் நாங்கள் சாப்பிட்டோம். அது கதிர்வீச்சு பாதிப்பு இருக்குமா என்பது பற்றி தெரியாமலே சாப்பிட்டோம்.'' ``சாப்பிட எதுவும் இல்லாத நிலையில், மக்கள் திருடத் தொடங்கினார்கள். உணவுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. தண்ணீர் கிடைப்பது அபூர்வமாக இருந்தது. முதலில் அப்படித்தான் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் அவையெல்லாம் மறந்து போய்விட்டன.'' ``பிறகு என் முடி உதிரத் தொடங்கியது. ஈறுகளில் ரத்தம் கசியத் தொடங்கியது. தொடர்ந்து சோர்வாக இருந்தேன். எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தேன்.'' பட மூலாதாரம்,COURTESY OF EMIKO OKADA படக்குறிப்பு, ஜப்பானின் பாரம்பரிய உடையில் எமிகோவின் சகோதரி மியிகோ ``கதிர்வீச்சு என்றால் என்ன என்று அப்போது யாருக்கும் எதுவும் தெரியாது. 12 ஆண்டுகள் கழித்து எனக்கு சிவப்பணு வளர்ச்சி இல்லாததால் ஏற்பட்ட சோகை நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.'' ``ஒவ்வொரு ஆண்டும் சில சமயங்களில் சூரியன் மறையும் நேரம் வானம் அடர் சிவப்பு நிறமாக இருக்கும். மக்களின் முகங்களே சிவப்பாக தோன்றும் அளவுக்கு அந்த சிவப்பின் அடர்த்தி இருக்கும்.'' ``அதுபோன்ற நேரங்களில், அணுகுண்டு வீச்சு நடந்த நாளில் சூரிய மறைவு நேரம் எப்படி இருந்தது என்பதை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. மூன்று நாட்கள் இரவு பகலாக நகரம் எரிந்து கொண்டிருந்தது.'' ``சூரியன் மறைவையே நான் வெறுக்கிறேன். இப்போதும் கூட சூரியன் மறையும் தருணம், அந்த எரியும் நகரை எனக்கு நினைவுபடுத்துவதாக உள்ளது.'' பட மூலாதாரம்,GETTY IMAGES ``அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்தவர்களில் பலரால் இதையெல்லாம் பேச முடியாது அல்லது குண்டுவீச்சால் ஏற்பட்ட பாதிப்பால் அவர்கள் இறந்துவிட்டார்கள். அவர்களால் பேச முடியாது. எனவே நான் பேசுகிறேன்.'' ``உலக அமைதி பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால் அதற்காக மக்கள் செயல்பட்டுக் காட்டவேண்டும் என நான் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தன்னால் இயன்றதை இதற்காகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.'' ``நம்முடைய எதிர்காலமாக இருக்கும் நமது பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும், தினமும் புன்னகையுடன் வாழக் கூடிய வகையிலான உலகை உருவாக்க நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று அவர் கூறினார். ரெய்க்கோ ஹடா நாகசாகியில் அணு குண்டுவெடிப்பு நடந்தபோது, ரெய்க்கோ ஹடாவிற்கு 9 வயது. பட மூலாதாரம்,LEE KAREN STOW படக்குறிப்பு, ரெய்க்கோ 5 வயது புகைப்படம் மற்றும் 2015 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட புகைப்படம் முன்னதாக அன்று காலையில், விமானத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை இருந்தது. எனவே ரெய்க்கோ வீட்டிலேயே இருந்துவிட்டார். அச்சம் நீங்கிவிட்டதாக அறிவிப்பு வந்ததும், அருகில் உள்ள கோவிலுக்கு அவர் சென்றார். தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடந்ததால் பள்ளிக்குச் செல்லாத அந்தப் பகுதி குழந்தைகள் அந்தக் கோவிலில் தான் படிப்பார்கள். கோவிலில் சுமார் 40 நிமிடம் ஆசிரியர் பாடம் நடத்துவார். அது முடிந்த்தும் ரெய்க்கோ வீட்டுக்கு வருவார். ``நான் எங்கள் வீட்டின் வாயிலுக்கு வந்தேன். ஓர் அடிகூட உள்ளே எடுத்து வைக்கவில்லை'' என்று ரெய்க்கோ விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணு குண்டு தாக்குதலுக்குப் பிறகு நாகசாகி: சிதைந்த கட்டடங்களின் இடிபாடுகள். ``அந்த சமயத்தில் திடீரென அது நடந்தது. பிரகாசமான வெளிச்சம் என் கண்களைத் தாக்கியது. மஞ்சள், காக்கி மற்றும் ஆரஞ்சு நிறத்தில் அவையெல்லாம் சேர்ந்த கலவையான நிறமாக அது இருந்தது.'' ``அது என்ன என்று பார்ப்பதற்குக் கூட எனக்கு அவகாசம் இல்லை. திடீரென எல்லாமே வெள்ளையாகிவிட்டது.'' ``நான் மட்டும் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன். அடுத்த விநாடி பெரிய சப்தம் கேட்டது. பிறகு எனக்கு எதுவுமே தெரியவில்லை.'' ``சிறிது நேரம் கழித்து நினைவுக்கு வந்தேன். அவசர தேவை ஏற்பட்டால், விமானத் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான பதுங்கு குழிகளுக்குள் சென்றுவிட வேண்டும் என்று எங்களுடைய ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருந்தார். எனவே உள்ளே இருந்த என் தாயாரை அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த பதுங்கு குழிக்குச் சென்றேன்.'' ``எனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லை. கோன்பிரா மலைதான் என்னைக் காப்பாற்றியது. ஆனால் மலையின் மறுபக்கம் இருந்தவர்கள் நிலை வேறு மாதிரி இருந்தது. அவர்கள் கொடூரமான பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தனர்.'' பட மூலாதாரம்,COURTESY OF REIKO HADA படக்குறிப்பு, ரெய்க்கோ தனது தந்தை மற்றும் சகோதரியுடன் ``நிறைய பேர் கோன்பிரா மலைக்கு ஓடினர். கண்கள் வெளியில் பிதுங்கிய நிலையில், கோரமான தலைமுடிகளுடன், ஏறத்தாழ நிர்வாணமாக, தீக்காயங்கள் அடைந்து, உடலின் தோல்கள் எரிந்து பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மலைக்கு ஓடினார்கள்.'' ``என் தாய், வீட்டில் இருந்த துண்டுகள் மற்றும் போர்வைகளை எடுத்துக் கொண்டார். தப்பி ஓடிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்ற பெண்களுடன் அருகில் கல்லூரியில் இருந்த ஆடிட்டோரியத்துக்கு ஓடினோம். அங்கு அவர்கள் படுத்துக் கொள்ள முடிந்தது.'' ``அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு தண்ணீர் தரும்படி எனக்குச் சொன்னார்கள். எனவே ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஆற்றுக்குச் சென்று அவர்களுக்குத் தண்ணீர் எடுத்து வந்தேன்.'' பட மூலாதாரம்,LEE KAREN STOW ``தண்ணீரை விழுங்கியதும் அவர்கள் இறந்தனர். ஒருவரை அடுத்து இன்னொருவர் என அடுத்தடுத்து இறந்தார்கள்.'' நீச்சல் குளத்தில் சடலங்களைக் கொட்டி.... ``அது கோடைக் காலம். இறந்தவர்களின் உடல்களில் மாமிசப் புழுக்கள் உருவாகிவிட்டதாலும் மற்றும் மோசமான நாற்றம் வீசியதாலும், உடனடியாக உடல்களை எரிக்க வேண்டியதாயிற்று. கல்லூரியின் நீச்சல் குளத்தில் எல்லா உடல்களையும் குவித்துப் போட்டு, மரக்கட்டைகளை மேலே போட்டு தீ வைத்தனர்.'' ``அதில் யாரெல்லாம் கிடந்தார்கள் என்று அறிந்து கொள்வது கஷ்டமான விஷயம். அவர்கள் மனிதர்களைப் போல சாகவில்லை.'' ``எதிர்கால தலைமுறையினர் யாருக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுவிடக் கூடாது. அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.'' ``மக்கள் தான் அமைதியை உருவாக்க வேண்டும். நாம் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், அமைதிக்கான நம்முடைய நாட்டம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்'' என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/global-53670149
  22. சோனியா, ராகுல் கைது நடந்தால் ப.சிதம்பரம் அடுத்த காங்கிரஸ் தலைவரா? தீவிரமாகும் விவாதம் பரணிதரன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அழைப்பு விடுக்கப்படும் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் தர்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள். நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக இந்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகனும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். இந்த இரு தலைவர்களிடமும் பல மணி நேர விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி முடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன. அப்படியொரு நிலை வந்தால் யார் அந்த கட்சியின் அடுத்த தலைவர் என்ற விவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களை மிரட்டும் வகையிலும், ஜோடிக்கப்பட்ட வழக்கில் இரு தலைவர்களையும் இணைத்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அமலாக்கத்துறையை ஒரு கருவியாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பயன்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். 50 மணி நேர விசாரணை இந்த விவகாரம் தொடர்பாக 54 மணி நேரத்துக்கும் மேலாக ராகுல் காந்தியிடமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். எப்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்களோ அப்போதெல்லாம் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாக்ததுக்கு உள்ளேயும் வெளியேயும் தர்னா, கண்டன பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிராக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸாரால் குண்டுக்கட்டாக தூக்கப்படும் கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி மற்றும் காங்கிரஸார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் உறுதிப்படுத்திய 24 மணி நேரத்தில் டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள பகதூர் ஷா ஜாஃபர் மார்கில் உள்ள நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில் உள்ள யங் இந்தியா அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன் பிறகு இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் மத்திய அமலாக்கத்துறையை இந்திய அரசு பயன்படுத்துவதாக எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில்தான் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் கைது செய்யும் வாய்ப்புகளை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருவதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது. இதை ஊகிக்கும் காங்கிரஸ் மேலிடம் அத்தகைய நிலை வந்தால், அடுத்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து இப்போதே அதன் நெருங்கிய வட்டாரத்தில் ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. காங்கிரஸில் சோனியா காந்தி குடும்பத்துடன் ஆரம்ப காலம் முதல் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம். 2019ஆம் ஆண்டில் அவர் தமது மகன் தொடர்புடைய அமலாக்கத்துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் 106 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்து விட்டு பிணையில் வெளியே இருக்கிறார். முன்னதாக, இதே வழக்கில் சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரமும் 2018, பிப்ரவரியில் கைதாகி அதே ஆண்டு மார்ச் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். 'ஆடையைக் கிழித்து போலீஸார் தாக்கினர்' - டெல்லி காங்கிரஸ் போராட்டத்தில் நடந்தது என்ன? நேஷனல் ஹெரால்டு: சோனியா குடும்பத்தை சோதிக்கும் ஊழல் புகாரின் கதை ப.சிதம்பரத்தை தலைவராக்க ஆலோசனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இந்திய அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டு போலீஸ் வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான ப. சிதம்பரம், தன் மீதான அமலாக்கத்துறையின் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என்று கூறிய வேளை, இதுநாள்வரை அந்த வழக்கு தொடர்பாக வெளியே விரிவாக பேசுவதை தவிர்த்து வருகிறார். மேலும், சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதெல்லாம் கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு அலுவல்பூர்வமாக விளக்கவும் எதிர்வினையாற்றவும் ப. சிதம்பரத்தையே காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும், ராகுலும் யங் இந்தியா பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதானால், இடைக்கால ஏற்பாடாக கட்சியை வழிநடத்தும் பொறுப்பை சட்ட நிபுணத்துவம் பெற்ற சிதம்பரத்திடமே ஒப்படைக்கும் சாத்தியத்தை காங்கிரஸ் மேலிடம் ஆராய்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் கடந்த இரு தினங்களாக இதே தகவல்கள் அதன் தொண்டர்கள் மற்றும் சில நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. கட்சியின் மேல்மட்டத்தில் நடத்தப்படும் இந்த ஆலோசனை குறித்து உங்களுடன் பேசப்பட்டதா என்று ப. சிதம்பரத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, பதில் அளிக்கவோ கருத்து கூறவோ அவர் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பியும் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவருமாக கருதப்படும் மாணிக்கம் தாகூரிடம் இதே கேள்வியை முன்வைத்தோம். "அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சட்டப்படி சோனியாவும் ராகுலும் எதிர்கொண்டு வருகின்றனர். இருவருமே அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இது ஒரு அரசியல் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை அனைவரும் அறிவர். முடிந்தால் எங்களுடைய தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்து பார்க்கட்டும். அப்படியொரு நடவடிக்கை பாய்ந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என எங்களுக்குத் தெரியும்," என்று மாணிக்கம் தாகூர் கூறினார். "அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து ஊடகங்களுக்கு சில தகவல்கள் கசிய விடப்படுகின்றன. யங் இந்தியா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனையில் முறைகேடு செய்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டிய தேவை சோனியா காந்தி குடும்பத்துக்குக் கிடையாது. இந்த நாட்டுக்காக அந்த குடும்பத்தினர் அர்ப்பணித்த சொத்துக்கள் ஏராளம். அவர்கள் செய்த தியாகங்கள் விலை மதிப்பற்றவை. அரசியல் ரீதியாக பழிவாங்க முற்படும் மோதி அரசு, அமலாக்கத்துறையை ஏவி விட்டு பயமுறுத்தப் பார்க்கிறது. இதை எல்லாம் கண்டு அஞ்சுபவர்கள் நாங்களல்ல," என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். அமலாக்கத்துறை தரப்பு பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நேஷனல் ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கத்துறை ஆகஸ்ட் 3ஆம் தேதி சோதனைக்காக வந்தபோது, அங்கிருந்து வெளியேறிச் செல்லும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சல் இதேவேளை, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான தங்களுடைய சோதனைகளுக்கு யங் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் ஒத்துழைப்பு தராததால் அந்நிறுவன கதவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையில் உள்ள பெயர் குறிப்பிடாத உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு தங்களுடைய அதிகாரிகள் குழு சென்றபோது, அங்கு சோதனை நடத்த ஒத்துழைக்குமாறு காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பவன் குமார் பன்சாலை கேட்டுக் கொண்டோம். அதற்கு முன்பாக முறைப்படி மின்னஞ்சல் அனுப்பினோம். முதலாவது முறை, சோதனைக்கு வருமாறும் இரண்டாவது முறை, நினைவூட்டல் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. ஆனால், நான்காவது மாடியில் உள்ள யங் இந்தியா அலுவலகத்துக்கு சோதனையிடச் சென்றபோது, அதிகாரிகள் குழுவுடன் செல்லாமல் மல்லிகார்ஜுன கார்கேவும் பன்சாலும் அந்த வளாகத்தை விட்டு வெளியேறி விட்டனர். அந்த அலுவலகத்துக்குள் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சந்தேகித்தோம். அதன் பேரிலேயே அலுவலக முன்பக்க கண்ணாடி கதவு மீது சீல் வைக்கும் நோட்டீஸை ஒட்டியுள்ளோம். ஒட்டுமொத்த கட்டடத்துக்கும் சீல் வைக்கவில்லை. அங்கு வேறு சில அலுவலகங்கள் வாடகை அடிப்படையில் இயங்குவதை அறிவோம்," என்று அதிகாரிகள் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்த விவகாரத்தில் தங்களுடைய சோதனை நடக்கும்போது அங்கு யங் இந்தியா நிறுவனம் சார்பில் யாரையாவது ஒருவரை முன்மொழிந்தால் அவரது முன்னிலையில் சோதனை மகஜரை தயாரித்து எந்தெந்த ஆவணங்களை பறிமுதல் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வாய்ப்பாக இருக்கும். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் நிர்வாகிகள் செயல்பட்டதால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்," என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமலாக்கத்துறை நோட்டீஸில், "அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அனுமதி இல்லாமல் இந்த வளாகத்தை திறக்கக் கூடாது. இது உத்தரவு," என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், சோதனை நடவடிக்கைகளுக்கு ஒருவேளை காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுத்தால், சோனியா மற்றும் ராகுலை கைது செய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். காமராஜுக்கு பிறகு 'முதல்' வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இத்தகைய சூழலில் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதானே என்று பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவரிடம் கேட்டோம். "கட்சித் தலைமை மாற்றத்துக்கான தேவை குறித்து தீர்மானிக்க வேண்டியது காங்கிரஸ் காரிய கமிட்டிதான். ஒருவேளை கைது நடவடிக்கை பாய்ந்தால், உடனடியாக சில சட்ட நடைமுறைகளை கையாள தயாராக இருக்கிறோம். அதன் பிறகே தலைமையில் மாற்றம் கொண்டு வரும் ஆலோசனைகள் நடக்கும். இந்த விஷயங்கள் சோனியா, ராகுல் காந்தி மட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளன. சிதம்பரம்வசம் தலைமையை ஒப்படைப்பது நல்ல தேர்வாக இருந்தாலும், அதை முறைப்படி விவாதித்தே தீர்மானிப்போம். இது வெளியே விவாதிக்கப்பட வேண்டிய விஷயமல்ல," என்று தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. காமராஜ் 1964 முதல் 1965 வரையிலும் பிறகு 1966 முதல் 1967வரையிலும் இருந்தார். அவருக்குப் பிறகு எஸ். நிஜலிங்கப்பா, ஜகஜீவன் ராம், சங்கர் தயாள் சர்மா, தேவகாந்த பருவா அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்தனர். 1978 முதல் 1983வரை இந்திரா காந்தி தலைவராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி ஆறு ஆண்டுகள் தலைவராக இருந்தார். பின்னர் 1992 முதல் 1994 வரை பி.வி. நரசிம்ம ராவும், 1996 முதல் 1998வரை சீதாராம் கேசரியும் காங்கிரஸ் தலைவராக இருந்தனர். இவர்களுக்குப் பிறகு 1998 முதல் 2017வரையில் சோனியா காங்கிரஸ் தலைவராக இருந்தார். 2017 முதல் 2019வரை ராகுல் காந்தி கட்சித் தலைவராக இருந்த பிறகு தமது பதவியை ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து மீண்டும் 2019இல் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் காமராஜுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவராக வரவில்லை. சோனியா, ராகுலின் கைது நடவடிக்கை ஒருவேளை நடந்து காங்கிரஸில் தலைமை பொறுப்பு ப.சிதம்பரத்துக்கு வருமானால், அவரே காமராஜுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் வாய்ப்பைப் பெறும் முதல் தமிழராக அறியப்படுவார். அவரது தலைமை தென் மாநிலங்களில் வலுவிழந்து வருவதாக கூறப்படும் காங்கிரஸுக்கு வலு சேர்க்கும் என்பதை கட்சித் தலைமை அறிந்துள்ளது என்கின்றன காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள். சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: இதுவரை நேரில் பார்க்காத கோபம் - என்ன நடந்தது? 'ஆடையைக் கிழித்து போலீஸார் தாக்கினர்' - டெல்லி காங்கிரஸ் போராட்டத்தில் நடந்தது என்ன? யங் இந்தியா வழக்கு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாடாளுமன்ற வளாகம் அருகே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை தடுத்து வைக்க அழைத்துச் செல்லும் போலீஸார் முன்னதாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதன் அழைப்பாணையின்படி தனித்தனியே ஜூன் மற்றும் ஜூலை மாதம் வெவ்வேறு வாரங்களில் ஆஜரான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் உதவி இயக்குநர் நிலையில் உள்ள இரண்டு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது. யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் என்ற அடிப்படையில் அந்த இருவரையும் விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்திருந்தது. நேஷனல் ஹெரால்டு நாளிதழின் வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் வருமானத்துக்கு பொருந்தாத ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அடையும் நோக்கில் ரூ. 50 லட்சத்துக்கு யங் இந்தியா வாங்கிய விவகாரத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். 2008ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு ஏ.ஜே.எல். நிறுவனம் 90 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லியில் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி விட்டு வரும் சோனியா காந்தி. உடன் அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி (ஜூலை மாதம் 27ஆம் தேதி) 2010ஆம் ஆண்டில், சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் இந்த கடனை வழங்கியது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை இருவரும் கொண்டிருந்தனர். மீதமுள்ள 24% பங்குகள், காங்கிரஸ் தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் கொண்டிருந்தனர். அவர்களுடைய பெயர்களும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் "தீங்கிழைக்கும்" நோக்கில், கோடிக்கணக்கிலான சொத்துக்களை "கைப்பற்ற" சூழ்ச்சி செய்ததாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஏ.ஜே.எல். மற்றும் டெல்லி, லக்னெள, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள அதன் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீது யங் இந்தியா நிறுவனம் முழு கட்டுப்பாட்டையும் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கும் ப. சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் "பணம் இல்லாமல் பண மோசடி செய்ததாக கூறப்படும் விசித்திரமான வழக்கு" என இந்த வழக்கை விவரித்துள்ள காங்கிரஸ், இது பாஜகவின் "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்று குற்றம்சாட்டியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின் அதிக ஆண்டுகாலத்திற்கு ஆட்சி செய்த காங்கிரஸ், இவ்வழக்கை "பயப்படாமல் எதிர்த்துப் போராடும்" என்று அதன் தலைவர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தை கடந்த வியாழக்கிழமை மாநிலங்களவையில் பதிவு செய்த மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், என்னை விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது என்று கூறினார். இது முழுக்க, முழுக்க கட்சியினரை மிரட்டும் போக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். மல்லிகார்ஜுன கார்கே விசாரணைக்கு அழைக்கப்பட்ட தகவலை காங்கிரஸ் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் தமது ட்விட்டர் பக்க்ததில் உறுதிப்படுத்தினார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனமான ஏ.ஜே.எல். நிதி நெருக்கடிகளில் சிக்கியபோதும், அதன் வரலாற்று பாரம்பரியம் மீது நம்பிக்கை வைத்திருந்ததால், காங்கிரஸ் அதனை கைவிடாமல் இருந்ததாக அக்கட்சி கூறியுள்ளது. பல்வேறு சமயங்களில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி ஏ.ஜே.எல். நிறுவனத்திற்கு 90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. 2010ஆம் ஆண்டில் ஏ.ஜே.எல். நிறுவனம் கடனில் இருந்து விடுபட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகளை ஒதுக்கியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. யங் இந்தியா நிறுவனம் "லாப நோக்கமற்றது" என தெரிவித்துள்ள காங்கிரஸ், அதன் பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு எந்த ஈவுத்தொகையும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. "நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் உரிமையாளர், அச்சு நிறுவனம், வெளியீட்டாளராக ஏ.ஜே.எல் நிறுவனம் தொடர்ந்து இருக்கிறது. அதன் சொத்துக்களில் எவ்வித மாற்றமோ பரிமாற்றமோ இல்லை" என்பது காங்கிரஸின் வாதம். நேஷனல் ஹெரால்டை குறிவைப்பதன் மூலம் பாஜக "இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களையும் சுதந்திர போராட்டத்திற்கான அவர்களின் பங்கையும் அவமரியாதை செய்கிறது" என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-62443614
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.