Everything posted by நியாயம்
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
எலான் மாஸ்க்கை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. எலான் மாஸ்க்கிடம் ஜனாதிபதியாக வரும் நோக்கம் உள்ளதா என வினவப்பட்டபோது அவர் தனது விருப்பங்கள், நோக்கங்கள் பொறியியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்தவை என பதில் வழங்கியதாக எங்கோ வாசித்த/பார்த்த ஞாபகம். அது எந்த ஆங்கில ஊடகம் என நினைவில்லை.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அவர் அமெரிக்க ஜனாதிபதியாக வருவது தனது நோக்கம் இல்லை என கூறியுள்ளார்.
-
வினா விடை
AI தளம் ஒன்று வழங்கிய பதில்: முக்கிய செயலிகள் எல்லோர் கை தொலைபேசியிலும் கட்டாயம் காணப்பட வேண்டிய அதி முக்கியமான செயலிகள் பலவாக உள்ளன. இவை பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவுகின்றன. கீழே சில முக்கியமான செயலிகளை பட்டியலிடுகிறேன்: 1. தொடர்பு செயலிகள் (Communication Apps) இவை பயனர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. WhatsApp, Telegram, மற்றும் Signal போன்ற செயலிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை உரையாடல், குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய உதவுகின்றன. 2. சமூக ஊடக செயலிகள் (Social Media Apps) Facebook, Instagram, Twitter போன்ற சமூக ஊடக செயலிகள் உலகத்தோடு தொடர்பில் இருக்க உதவுகின்றன. இவை தகவல்களை பகிர்வதற்கும், நண்பர்களுடன் இணைவதற்கும் பயன்படுகின்றன. 3. நிதி மேலாண்மை செயலிகள் (Finance Management Apps) PayPal, Google Pay மற்றும் Venmo போன்ற செயலிகள் நிதியை மேலாண்மை செய்ய உதவுகின்றன. இவை பண பரிமாற்றம் மற்றும் செலவுகளை கண்காணிக்க பயன்படுகின்றன. 4. ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி செயலிகள் (Health and Fitness Apps) MyFitnessPal, Fitbit மற்றும் Headspace போன்ற செயலிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அமைதியை பெறவும் உதவுகின்றன. 5. தகவல் தேடும் செயலிகள் (Information Retrieval Apps) Google Search மற்றும் Wikipedia போன்ற செயலிகள் தகவல்களை விரைவில் தேடி பெற உதவும். 6. வானிலை கணிப்பு செயலிகள் (Weather Forecasting Apps) AccuWeather மற்றும் The Weather Channel போன்ற செயலிகள் வானிலை பற்றிய தகவல்களை வழங்குகின்றன. 7. பயணம் மற்றும் வழிகாட்டி செயலிகள் (Travel and Navigation Apps) Google Maps மற்றும் Uber போன்ற செயலிகள் பயணங்களை திட்டமிடுவதற்கும் வழிகாட்டுவதற்கும் பயன்படுகின்றன. 8. செய்தி வாசிப்பு செயலிகள் (News Reading Apps) BBC News, Flipboard போன்ற செய்திகள் வழங்கும் செயலிகள் உலக நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. இந்த அனைத்து வகையான செயலிகளும் கை தொலைபேசி பயன்படுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
-
தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு
அமைச்சரவையில் முஸ்லீம்கள் எவரும் இடம்பெறவில்லை என குறைப்பட்டதற்கும் ஜனாதிபதி நியமித்த செயலணி ஒன்றில் தமிழர்கள், முஸ்லீம்கள் எவரும் இல்லை என குறைப்படுவதற்கும் இடையில் ஏதாவது ஒற்றுமை உள்ளதா? Clean Sri Lanka பற்றிய விபரங்களை தாருங்கள் என்ன உள்ளது என வாசித்து பார்ப்போம்.
-
மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!
இந்த அறுபத்து மூன்று வயது எல்லை என்பது இலங்கை அரச மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கான கட்டுப்பாடா? இந்த வயது எல்லையின் பின்னரும் தனியார் மருத்துவமனைகளில் வேலையாற்றலாமா? அறுபத்து ஐந்து வயது ஏன் அறுபதாக குறைக்கப்பட்டது? மற்றைய நாடுகளில் வயது எல்லை என்ன?
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
மியன்மார் படகு வழிமாறி இலங்கை வந்ததா? அனைத்து பயணிகளும் தப்பியது அதிசயம்தான். ஜீபிஎஸ் கடல்வழி பயணத்தில் படகில் பயன்படுத்த இல்லை போல? 🤔
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
தமிழரசு கட்சி: பெயரிலேயே இனவாதம் உள்ளதே. இது இலங்கை நாட்டு மக்களுக்கான கட்சிதானே.
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
இதற்கு பெயர் Inorganic Disorder போல. யாருக்கு தெரியும். 🤷♂️
-
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!
கிளிநொச்சி பக்க பாராளுமன்ற உறுப்பினர் கனடா செல்லும் நேரமாய் என்ன அபசகுணம் இது?
-
அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு! கேள்விக்குட்படுத்தப்படும் எம்.பி பதவி
வாய்ப்பே இல்லை. பலரது கவனத்தையும் ஆதரவையும் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் ஏற்கனவே பெற்றுவிட்டார். கூட்டுக்களவாணிகள் இவர் ஒதுங்கவேண்டும் என்பதையே விரும்புவார்கள்.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
வேலிக்கு ஓணான் சாட்சி. நிர்வாக திறன் இன்மை, வினைத்திறனுடன் செயலாற்ற முடியாமைக்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோருக்கும் சிங்கள மொழி கட்டாயம் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் பாதிப்பு அவர்களுக்குத்தான்.
-
திண்ணை
திண்ணையை பற்றி திரும்பவும் வாய் திறக்கும் ஆக்களுக்கு கருக்கம் மட்டையால (அந்த இடத்திலதான்) அடிவிழும் என்று அதிபர் சொல்லப்போகின்றார்.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
எரிக் சொல்கைமை அணுகி சத்தியமூர்த்தி அவர்களுக்கும் அர்ச்சனா அவர்களுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையை நல்லெண்ண அடிப்படையில் ஆரம்பித்து வைக்க இயலாதா? ஆனானப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பிலேயே தனிநபர்களுக்கும், பிரிவுகளுக்கும் இடையில் பல்வேறு போட்டிகள், சச்சரவுகள் காணப்பட்டன. தமிழருக்கு தனிநாடு எல்லாம் சரிவராது. ஒருத்தனுக்கு கீழ் அடிமையாக வாழவேண்டும் என்பதுதான் தலைவிதி.
-
வவுனியாவில் தேன் என சீனிப்பாணியை விற்ற மூவர் கைது!
வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
-
வீட்டுப்பணிப்பெண்ணின் உரிமைகளை மீறிய அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி- 117,000 டொலர் அபராதம் விதித்தது நீதிமன்றம்
அபராத தொகையை யார் கட்டப்போகின்றார்கள்? மகிந்த ஆட்களும் இப்போது பதவியில் இல்லை.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அர்ச்சனா அவர்களிடம் வெளிப்படைத்தன்மை உள்ளது. உத்வேகம் உள்ளது. தகமை உள்ளது. தன்னடக்கம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆயினும், சகலதையும் கூட்டி கழித்து பார்க்கும்போது எனது ஆதரவு அவருக்கு உண்டு. அம்சடக்க கள்ளரை விட இவர் எவ்வளவோ திறம் என நினைக்கின்றேன்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
@கிருபன் சார், மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சாரின் பேஸ்புக் கணக்கில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சாருடனான முழுமையான உரையாடல் உள்ளது. சார் என கூப்பிட சொல்லிப்போட்டார் என்பதற்காக போலிசில் முறைப்பாடு கொடுத்து ஊடகவியலாளர் மாநாடு நடாத்தலாமா கிருபன் சார்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நடப்பு அரசின் கட்சியை சேர்ந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்தியசாலைக்கு நிலவரம் அறிய சென்றால் வாசலில் வைத்து பிடித்து போலிசாரிடம் ஒப்படைப்பாரோ?
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சத்தியமூர்த்தி அவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்றா அல்லது பெறாமலா ஊடகவியலாளர் சந்திப்பு செய்கின்றார்? நாட்டின் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தம்பாட்டுக்கு ஊடகவியலாளர் சந்திப்பு செய்யலாமா? இவர் ஒரு அரசியல்வாதிபோல் அல்லவா செயற்படுகின்றார்?
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வந்தால் காவலர்கள் மூலம் வாயிலில் பிடித்து போலிசிடம் ஒப்படைப்போம். இது யாரோ தனியார் வைத்தியசாலை பணிப்பாளர் விடுகின்ற எச்சரிக்கையோ? என்ர வீட்டு வளவுக்கை வந்தால் போலிசை கூப்பிடுவன். அரசாங்க வைத்தியசாலை பொறுப்பதிகாரிக்கு காணப்படவேண்டிய நல்ல பண்பு இது? மக்களின் தெரிவை சகிக்க முடியாதவர்கள் குத்தி முறிகின்றார்கள்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பணிப்பாளருக்கு ஈகோ பிரச்சனையோ.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
முன்பே சொல்லிப்போட்டு வந்தால் எப்படி கள்ளரை பிடிப்பது?
-
வினா விடை
வினா: எல்லோர் கை தொலைபேசியிலும் கட்டாயம் காணப்பட வேண்டியது என நீங்கள் நினைக்கும் அதி முக்கியமான செயலிகள் எவை? ••••••• ♻️
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஒரு செய்தி நேற்று பார்த்தேன். விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? அவர் நிலமை யாது?