-
Posts
5813 -
Joined
-
Last visited
-
Days Won
39
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வல்வை சகாறா
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
வல்வை சகாறா replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
எறும்பூர கற்குழியும். 🙂 -
"நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும்இ நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது." மிக ஆக்கபூர்வமான கட்டுரை எழுதியவர் எவ்வளவு தூரம் இந்த கருப்பொருளுக்குள் தன்னை மிக நுட்பமாக நுழைத்து ஆய்வு செய்கிறார் என்பதை வாசித்துக்கொண்டுபோகும்போது நன்றாக உணரமுடிகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்றல் என்பது பாலியல் வன்முறை சார்ந்த விடயங்களில் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது என்பதை ஆய்வாளரின் எழுத்துகள் நிரூபிக்கின்றன. சாதாரண நீரோட்டமான வாழ்க்கையிலும் நான் பழகும் பலரில் அந்த ஆய்வில் கூறப்பட்ட குணாதியங்களை காண முடிகிறது.மனோதிடம் குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இலகுவாக ஒருவரை மனோதிடம் உடையவராக மாற்றிவிடமுடியாது. ஆய்வாளரின் எழுத்துகள் அவருடைய பலதரப்பட்ட முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. நல்ல முயற்சியும் தேடலும் வழிநடத்தலும் வாழ்த்துகள் கிரிசாந்த். இணைப்பிற்கு நன்றி கிருபன். கட்டுரையை வாசித்தவுடன் நிறையவே எழுதவேண்டும் என்று தோன்றியது ஆனால் கைத் தொலையேசியில் வாசித்ததனால் அப்போது எழுதமுடியவில்லை பின்னர் எழுதலாம் என்று தள்ளிப்போட்டேன் எழுத நினைத்த விடயங்கள் எங்கோ போய் ஒளிந்து விட்டன.
-
விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே! விலை எங்கு போனீர்? வலை பின்னி வாரீர் வார்த்தைகள் பொய்க்கின்றீர் நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன். தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?
-
யாயினி ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னையின் இழப்பிற்கும் நேரில் வந்து பங்குபற்ற முடியாமல் பென்டமிக் தடைசெய்தது. இப்போதும் நேரில் சமூகமளிக்கமுடியாத சூழலில் இருக்கிறேன். அதற்காக வருந்துகிறேன். கண்டிப்பாக நேரில் சந்திப்பேன்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
வல்வை சகாறா replied to நியாயம்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
பிள்ளைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை மொக்கை மாதிரி பார்த்துக் கொண்டிருப்பதே வேலையாகிவிட்டது. ஒரு சொல்லைத் தேட வெளிக்கிட்டால் ஏகப்பட்டவை கொட்டுப்படுகின்றன. கணனி ஒரு உளவாளி. 😒 -
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
வல்வை சகாறா replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
புட்டின் மகிமையால ஞானத்தங்கமே - எங்கள் கு.சா குழம்பிப்போனார் ஞானத்தங்கமே😁 -
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
வல்வை சகாறா replied to நிழலி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
ஒரு சம்பவத்தை மிகவும் இரசித்து வாசிக்கும்படி எழுதும் பாணி வெட்டுக்கிளிக்கு லாவகமானது என்பதற்கு உங்கள் பதிவுகள் சாட்சி. இரசித்து சிரித்தபடியே வாசித்து முடித்தேன். சூப்பர் -
என்னதான் வக்கணையாய் ஆயிரம் கதைகள் கதைத்தாலும் பக்கத்தில் உடன் வரும் துணைதான் ஆபத்பாந்தவர். வீட்டுக்குப் போன பின்னால் நிழலி கவிதாவின் காலில் அட்டாங்க நமஸ்காரம் செய்ததாக காற்று வாக்கில் கதை அடிபட்டது நான் தான் நம்பேல்லை. பட் இப்ப நம்புறேன். கிலியை உண்டாக்கும் எழுத்தென்றாலும் அந்த நீட்டி முழங்கல் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விடுகிறது. பாராட்டுகள் வெட்டுக்கிளி
-
நல்ல கவிதை தியா. அரிதாக என்றாலும், சிறகுகள் உடைந்தாலும் மேலும் கீழுமாக என்றாலும் பறவை பறக்கிறது அல்லவா. ஆதலால் பறவை தொலையவும் இல்லை தன்னைத் தொலைக்கவும் இல்லை. நான் சொல்வது சரிதானே.. 🙂
-
கவனம் அப்பு ப்ரசர் ஏறிக்கிடக்கிற மாதிரி தெரியுது. கவிதை சொல்லுது..... மீள் வருகை நலமாகட்டும்.
-
யாழிணையத்தின் இருபத்தைந்தாவது அகவை தினம் யாழை தினமும் ஆராதிக்கும் உறவுகளுக்கும் யாழுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
வல்வை சகாறா replied to uthayakumar's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
எல்லாம் இருந்தது இப்போது இல்லையே கனவா என்று கேட்க வைப்பது நாம் கடந்ததை மட்டுமே நினைத்தபடி நடப்பதனால்..... வாழ்வின் ஓட்டம் எதிர் வருவதை நோக்கப்பயப்படுகிறது. -
உண்மையில் இன்று புலம்பெயர்ந்து வாழும் பல குடும்பங்கள் மனநல வைத்திய தேவை இருந்தும் நாடாமல் அவ்வகையான பிரச்சனைகளில் இருந்து மீளாமலும் அல்லது வைத்தியதேவைக்குப் பதிலாக சூழல் மாற்றத்தைக் கூட செய்யத்துணிவில்லாதவர்களாகவும் வாழ்கின்றனர். மாற்றுத் தீர்வுகளை நிராகரிப்பவர்களாகவே அதிகமானவர்கள் வாழ்கிறார்கள்.
-
நல்ல முயற்சி பாராட்டுகள் பிரபா சிதம்பரநாதன்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
வல்வை சகாறா replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
கோசான் உங்கள் படைப்பாற்றல் மிகவும் அபாரமாக இருக்கிறது. நம்மைச் சுற்றி நிகழும் சாதாரண விடயங்களுக்குள் அசாதாரணத்தை ஊகிப்பது கடினம். கோசான் உங்கள் கருத்தாடல்களை நாளாந்தம் வாசிக்கத் தவறுவதில்லை. கருத்தாடல்களே அதிகமாக உங்களை மிகவும் புடம்போட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. எழுத்தின் லாவகம் செம்மையாக இருதரப்பு வாதங்களையும் சமாந்தரமாக பயணிக்க வைத்திருக்கிறது. கதாப்பாத்திரங்களின் ஆளுமைதான் கதைகளை வெற்றிகரமாகக் காவிச்செல்லும். அபாரமான எழுத்தாளர். வாழ்த்துகள். -
ஒவ்வொரு அவலங்களுக்குப் பின்னாலும் தர்மத்தின் சாவும் மானுடத்தின் சிதைவும் நிச்சயம் இருக்கும் காது கொடுத்து கேட்காதவரை அது வெளியே தெரியாது.
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
வல்வை சகாறா replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
கோசான் நையாண்டி செம..... உண்மையைச் சொல்லட்டா இந்தக் காகம் , வடை, நரி எல்லாம் பசுமையாக நாளாந்த ஞாபகங்களைத் தூண்டுகின்றன. யாழின் செம்பாலையில் நடனம் புரியும் சொல்லாப் பொருளை உணர்த்துமாப்போல் இருக்கிறது. எழுதுவதற்கு அப்பால் வாசிப்பு நிறைய கிரகிக்கும் ஆற்றலை வளர்க்கிறது. ஐயா கோசான் மனதில் பட்டதை எழுதினேன். சரி சரி நான் நடையைக்கட்டுறன். கொஞ்சம் அசந்தாலும் எந்த நரியாவது வந்து என்னை காக்கா ஆக்கிப்போடும்.😆 -
நமக்குள் உள்ள குறைகளை உணர்ந்தாலும் மாற்ற முடியாத அகம்பாவத்தில் கட்டுண்டு கிடக்கிறோம் கரு. கவிதை நன்றாக உள்ளது.
-
மெய் தீண்டாக்காதலை வாசித்து மெய் தீண்டியதால் இவ்விடத்தில் மீளவும்.... 90 இற்கு முந்திய காதல்கள் பலரிடம் பசுமையாக இருப்பதற்குக் காரணமே மெய் தீண்டாததினால்தான் சுவியார் மெய் தீண்டப்பட்டதால் நான் அறிந்த நண்பர்கள் பலரின் தேடல்கள் வெறுமையாகிவிட்டன. எழுத்துக்களில் நல்ல மெருகேற்றம்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
வல்வை சகாறா replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
இலையான் கில்லர் வித்தியாசமான முயற்சி இரசிக்கக்கூடியதாக இருக்கிறது. -
பாராட்டுக்கள் கரு
-
களத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்தேனே.. ( வாசிக்க மட்டும்) எப்படி என்னை எட்டி உதைக்கலாம் ஆ? இது கூட்டுச்சதியா? அல்லது கூட்டாளிகள் சதியா?🤬
-
இங்க பார்ரா இவ எங்கேர்ந்து வர்றா என்றெல்லாம் கேட்கப் படாது. இந்த களமாற்றங்கள் செய்த பிறகு திண்ணை இல்லையோ.... கூட்டாளிகளை குசலம் விசாரிக்க ஏலாம இருக்கு......