சரத் பொன்சேகா, சீலரத்ன தேரர், திலகராஜ் பெற்றுக்கொண்ட வாக்குகள்!
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்றுக்கொண்ட அநுர குமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இவருக்கு அடுத்தப்படியாக 4,363,035 (32.76%) வாக்குகளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டார்.
39 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிடம் பிரபல்யம் வாய்ந்த சில வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் பின்வருமாறு,
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 22,407 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 6,839 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் 2,138 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தலில் மிகவும் குறைந்தளவிலான வாக்குகளை ஏ.எஸ்.பி.லியனகே பெற்றுக்கொண்டார். அவர் பெற்றுக்கொண்ட வாக்குக்களின் எண்ணிக்கை 1,860 ஆகும்.
https://tamil.adaderana.lk/news.php?nid=193457