Columnsசிவதாசன் இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்? சிவதாசன் இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனது கனவுகளை நனவாக்க முயல்கிறார். இதில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களும் தெரிகிறது. ஏன் அவருக்கு இந்த பதவி வெறி? இலான் மஸ்கிற்கும் டொணால்ட் ட்றம்பிற்கும் ஒரு பொதுமையுண்டு. அது ஈவிரக்கமற்ற பழி வாங்கும் தன்மை. இவர்கள் இருவருமே இனத்துவேஷிகள். ஆனால் ட்றம்பின் இனத் துவேஷம் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் மீதான மோகமும், மரியாதையும் அவரை இயக்குகின்றன. வெள்ளை இனத்தவரைத் தவிர அவர் ஏனையோரை மதிப்பதில்லை. அவருடைய தந்தையாரும் அப்படியான ஒருவரே. தனது நியூ யோர்க் தொடர்மாடிக் குடியிருப்புகளில் கறுப்பர்களுக்கு இடமில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தவர் மூத்த ட்றம்ப். ஓரளவு மனிதாபிமானம் கொண்ட இரண்டாவது மகனுக்கு சொத்துக்களைக் கொடுக்காமல் டொணால்டை மட்டும் தனது வாரிசாகக் கொண்ட தந்தையின் குணம் தான் மகனின் வியாபார வெற்றிக்குக் காரணமானது. அது குறுக்கு வழியாயினும் அதையே அவர் பின்பற்றுவார். இலான் மஸ்க் ட்றம்பை விட மோசமான இனத் துவேஷி. தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கானர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழி வாங்கலே அவரது தற்போதைய நடவடிக்கைகள். ட்றம்பைப் போலவே இவரும் வெள்ளையரல்லாதோரை இழிவாகப் பார்ப்பவர். இருவரும் தமக்குத் தேவையான போது எவரையும் பாவித்து விட்டுத் தூக்கி எறிபவர்கள். எதிரிகளை வஞ்சம் வைத்துப் பழி தீர்ப்பவர்கள். விவேக் ராமசாமி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இலான் மஸ்க்கின் ரெஸ்லா பங்குச் சந்தையில் முதலிட்டு பணக்காரர்களாகியவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஆனால் இப்பணத்தில் எவ்வளவு இரத்தம் குழைந்திருக்கிறது என்பது பற்றி இவர்களுக்குத் தெரிந்திருக்கவோ அல்லது அக்கறையிருக்குமோ தெரியாது. கலிபோர்ணியாவிலுள்ள ரெஸ்லா ஆலையில் கறுப்பின மற்றும் லத்தீனோ மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பெருமூடகங்கள் வெளியே சொல்வதில்லை. ருவிட்டரில் அவருக்கு எதிரான தகவல்கள் வெளியாகின என்பதற்காகவே அதை அதிக விலை கொடுத்து ($40 பில்லியன்?) வாங்கியவர். ரெஸ்லா நிறுவனத்துக்கும் அதன் வாகனங்களுக்கும் ஆதரவானதும், புகழ் பாடுவதுமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கென ‘இன்ஃபுளுவென்ஸர்ஸ்’ எனப்படும் ‘தனிப்பட்டவர்களுக்கு’ அவர்களது வாகனப் பராமரிப்பிற்கென விசேட சலுகைகளைக் கொடுத்து விலைக்கு வாங்கி வைத்திருப்பவர். இலான் மஸ்கின் கலிபோர்ணியா ரெஸ்லா ஆலையில் இனத்துவேஷம் எல்லை மீறிப் போனதன் காரணமாகப் பதியப்பட்ட ஏகப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையிலிருக்கின்றன. அங்கு பணி புரியும் 6,000 கறுப்பினப் பணியாளர்களினால் அங்கு நடைமுறையிலிருக்கும் இனப் பாரபட்சம் பற்றியும் பணி ஒதுக்கீடுகள் பற்றியும் வழக்கு ஒன்று நிலுவையிலிருக்கிறது. தென்னாபிரிக்காவில் இருந்ததைப் போல பணியிடத்தில் வெள்ளையருக்கும் ஏனையோருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடுகள் வைத்திருப்பதற்கு எதிராக கலிபோர்ணியா அரசு வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கிறது. அங்கு இனத்துவேஷம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிராக மத்திய அரசின் திணைக்களமொன்றும் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. ரெஸ்லா வாகனத்தின் ஆட்டோ பைலொட் தொழில்நுட்பத்தால் 8 பேர் இறந்த / காயப்பட்ட காரணங்களுக்காக இன்னுமொரு வழக்கு பதியப்பட்டு நிலுவையில் இருக்கிறது. இவற்றில் சில வழக்குகள் பணம் மூலம் இரகசியமாக மீளப்பெறப்பட்டுள்ளன. மீதியானவை ட்றம்பின் ஆட்சியில் தூக்கியெறியப்பட வாய்ப்புகளுண்டு. இலான் மஸ்க் ஒரு பரந்த உள்நோக்கத்தோடு (mission) தான் வெள்ளை மாளிகை முகாமுக்குள் நுழைந்திருக்கிறார். அது ஹிட்லரின் தோற்றுப்போன கனவை நனவாக்குவது. இதுவரை அவரது நடவடிக்கைகளை உற்று நோக்கினால் இதற்கான தடயங்களை அவர் தொடர்ச்சியாக விட்டு வந்திருக்கிறார். தென்னாபிரிக்காவில் அவரது குடும்பம் மிக வசதியாக இருந்தது. ஆபிரிக்கானர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அவர் அமெரிக்காவிற்கு வந்து கடும் உழைப்பால் இந்த நிலையை எட்டியிருக்கிறார். இதே வேளை இவரது தந்தையார் எறோல் மஸ்க்கும் மகனது கனவுக்கு எண்ணை ஊற்றித் தூபம் போட்டு வளர்த்தவர். பீட்டர் தீல் எனப்படும் இன்னுமொரு தனவந்தர் (எரோலின் நண்பர்). ஆதிக்கம் செலுத்தும் (இக்குழுமத்தை ‘பே பால் மாஃபியா என்றழைப்பர்) குழுமத்தில் இலான் மஸ்க்கும் அவரது தந்தையும் உள்ளார்கள். ஃபுளோறிடாவிலுள்ள ட்றம்பின் பிரத்தியேக குடியிருப்பான மார்-எல்-லாகோ வில் இந்த மாஃபியா ‘குடி கொண்டிருக்கிறது’. இக்குழுமத்தின் ஆலோசனையையே ட்றம்பின் காதுகளை எட்டும். ஒரு காலத்தில் ட்றம்பைக் காரசாரமாகத் தாக்கிய, தற்போதைய உதவி ஜனாதிபதியாக இருக்கும், ஜே.டி. வான்ஸை உதவி ஜனாதிபதியாக்கும் அளவிற்கு இந்த மாஃபியாவிற்கு ட்றம்பின் மீது ஆதிக்கமுண்டு. இலான் மஸ்க் குழுமம் ஹிட்லரை மீளப் புதுப்பிக்க முயல்கிறார்கள் என்றால் யூதர்களது மாஃபியா அவரைச் சும்மா விட்டிருக்குமென நினைக்கிறீர்களா? என உங்களில் சிலர் கேட்கலாம். தேர்தலுக்கு முன் இஸ்ரேல் மாஃபியா கமலா ஹரிஸுக்கே முழு ஆதரவாகச் செயற்பட்டது. இருப்பினும் ட்றம்பின் மீதான பிடியையும் அவர்கள் தளர்த்தவில்லை. பிளான் ‘பி’ யுடன் அவர்கள் தயாராகவே இருந்தார்கள். யூதரான ட்றம்பின் மருமகன் அதற்குப் பொறுப்பு. ஆனாலும் உறவுகள் என்று வரும்போதும் ட்றம்ப் தன் சுயநலத்தை மட்டுமே கவனிப்பவர் என்பது அவரது சகோதரர் விடயத்தில் காட்டப்பட்டது. இதனால் ட்றம்ப் ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தவே அவர் மீதான கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது ஒரு சூசகமான தகவல். உலக ஆதிக்கத்தை முன்வைத்தே அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டமைக்கப்பட்டது. வர்த்தகம் அதன் முதல் கருவி. இதுவரை காலமும் ஜனநாயக, குடியரசு கட்சிகள் இவ்விடயத்தில் இலக்கை விட்டு மாறவில்லை. ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ எனச் சூசகமாகக் குறிக்கப்படும் ஆளும் வர்க்கம் இதைத் திறம்பட நிர்வகித்து வந்தது. இந்த விடயத்தில் ட்றம்ப் ஒரு வெளிவட்டக்காரர் (outlier). இந்த எஸ்ராபிளிஷ்மெண்டிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்றுவதே அவரது நோக்கம். இந்த எஸ்ராபிளிஷ்மெண்டில் இஸ்ரேல் லொபி போன்றவையும் அடக்கம். இதனால் அமெரிக்க கொள்கை வகுப்பு, பாதுகாப்பு, உலக ஆதிக்கம் போன்றவற்றை இக்கூட்டு வெற்றிகரமாக செயற்படுத்தி வரமுடிந்தது. இதனிடமிருந்து அமெரிக்காவை வெளியே எடுத்து ‘அமெரிக்கா முதலில் அமெரிக்கர்களுக்கே’ என்ற சுலோகத்தோடு ட்றம்ப் முதல் ஆட்சியைத் தொடங்கினார். அப்போது அவரது திறமைகள், தகமைகள் அதிகம் அறியப்படாதவை. அப்போது இவரை முன்தள்ளியது ஸ்டீவ் பனன், கொச் சகோதரர்கள் போன்ற அமெரிக்க-முதல்வாதக் கொள்கை வகுப்பாளர்கள் / தனவந்தர்கள். இவர்களும் வெள்ளை-முதல் வாதக் குழுவாக இருந்தாலும் இலான் மஸ்க் போன்று ஹிட்லர் மோகிகளல்ல. முதலாவது ஆட்சியில் ட்றம்பின் பலம் / பலவீனங்களை அவதானித்த ‘பே பால் மாஃபியா’ அவரது இரண்டாவது வருகையைத் திட்டமிட்டது. ருவிட்டர் கொள்முதல் தொடக்கம் ட்றம்பின் தேர்தல் செலவுகளைப் பொறுப்பேற்றது வரை ($300 மில்லியன்) இலான் மஸ்க்கின் திட்டம் எனக் கூறப்படுகிறது. இப்போது ட்றம்ப்பின் பிரத்தியேக வாஸஸ்தலத்தில் உணவுண்பது தொடக்கம் வெள்ளை மாளிகையில் மகனைக் கொண்டுவந்து (இன்னும் சில பத்து வருடங்களில் அவனே ஜனாதிபதி!) படம் காட்டுவது வரை மஸ்க்கும் ட்றம்பும் இணைபிரியா நண்பர்கள். இலான் மஸ்க்கின் / குழுமத்தின் முதல் நோக்கம் அமெரிக்காவை இஸ்ரேலின் பிடியிலிருந்து விடுவிப்பது எனவே நான் நம்புகிறேன். இதில் ட்றம்ப் ஓரளவு இணங்கிப் போவதாகவே தெரிகிறது. ட்றம்பின் கொலை முயற்சியின் பின்னால் இஸ்ரேல் இருப்பது குறித்த சந்தேகம் ட்றம்பிற்கு இருப்பதனால் தான் அவர் இலான் மஸ்க்குடன் நெருக்கமாகியிருக்கிறார் போலத் தெரிகிறது. ட்றம்பின் ஜனாதிபதி பதவியேற்பின்போது இலான் மஸ்க் தனது நாஜி சல்யூட் மூலம் தனது ஹிட்லர் விசுவாசத்தைப் பகிரங்கமாகவே காட்டியிருப்பது இஸ்ரேல் லொபிக்கு பயங்கர கடுப்பாகியிருக்கும். எனவே அவர்கள் இலான் மஸ்க் மீதான பரப்புரைகளை, மறைமுகமாக, ஏவ ஆரபித்திருப்பது தெரிகிறது. ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ இல் இஸ்ரேல் லொபி நீண்டகாலமாக ஊடுருவி இருப்பதால் பெண்டகன், எஃப்.டி.ஏ, டி.ஓ.ஜே. (நீதித் துறை) போன்ற திணைக்களங்கள் இலான் மஸ்க்கின் இறகுகளைக் கத்தரிக்க முயற்சிகளை மேற்கொள்கின்றன. இவை நடைபெறும் என்று எதிர்பார்த்துத் தான் பட்டேல், கிப்பார்ட், ஆர்.எஃப்.கே போன்ற விசுவாசிகளை மஸ்க் குழுமம் உள்ளே அனுப்பியிருக்கிறது. இவர்களும் காரியங்கள் நிறைவேறியதும் விவேக் ராமசாமியைப் போல விரைவில் விரக்தியுடன் வெளியேறத் தள்ளப்படலாம். ஏற்கெனவே நடைமுறையிருந்தும் அமுக்கி வாசிக்கப்பட்ட இன்னுமொரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலிருந்து ஆபிரிக்கான வெள்ளையர்களை அமெரிக்காவிற்கு குடியேற வைக்கும் முயற்சி. தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெறுவதாகப் பெரிதாகப் பரப்புரை செய்யப்படும் (X / ருவிட்டரில்) ஒரு விடயம் அங்கு வெள்ளை விவசாயிகள் கறுப்பின மக்களால் ‘கொலை செய்யப்படுவது’ பற்றியது. அமெரிக்காவிலிருந்து வெள்ளையரல்லாதோரை நாடு கடத்திவிட்டு வெள்ளையரை மட்டும் குடியேற்றும் இத்திட்டம் ‘பே பால் மாஃபியா’வினுடையது. அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பலவந்தமாக விலங்குகளிடப்பட்டு மந்தைகள் போல இழிவான முறையில் மூன்று விமானங்களில் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக இந்திய அரசு கூட மெளனம் சாதிக்கிறது. இது காளிஸ்தான் போராட்டத்தை மையமாகக் கொண்ட எதிர்வினையாகவும் இருக்கலாம். இருப்பினும் இப்பரப்புரை ட்றம்பின் ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. லத்தீன் அமெரிக்க குடிவரவினர் விடயத்தில் இந்தளவு துவேஷமோ, இழிவான செயல்முறைகளோ காட்டப்படாமைக்குக் காரணம் அமெரிக்க வெள்ளையர்களுக்குத் தேவையான, அவர்களது தோட்டங்களில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்யக்கூடிய நவீன அடிமைகள் இங்கிருந்துதான் வருகிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு அவர்கள் இப்போதும் அவசியமானவர்கள். இந்தியர்கள் அப்படியானவர்களில்லை. சமீபத்தில் இலான் மஸ்க்கின் தந்தையார் எரோல் மஸ்க் கொடுத்த ஒரு நேர்காணல் மகனது X தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் அவர் ஒரு அதிர்ச்சி தரும் பொய்யொன்றைக் கூறுகிறார். அதாவது, பராக் ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், அவரது மனைவி ஒரு ஆண் என்றும் கூறுகிறார். இது வேண்டுமென்றே வெளியிடப்பட்ட ஒரு காணொளி. இதற்கு எதிராக எந்தவித எதிர்வினைகளும் காட்டப்படவில்லை. காணொளிக்கு பல இலட்சம் விருப்புக்குறிகள் இடப்பட்டிருந்தன. வெள்ளைத் தேசியம் உலகம் முழுவதும் மீழெழுச்சி பெற்று வருவது இப்போதல்ல. பராக் ஒபாமாவின் தெரிவிலிருந்து ஆரம்பமாகியது இது. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் மேற்கு மேற்கொண்ட ஆட்சிக் கலைப்புகள் உருவாக்கிய அகதிகள் மேற்கு நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததன் நேரடி எதிர்வினையே வெள்ளைத் தேசியத்தின் மீழெழுச்சி. பிரான்ஸின் லூ பென், இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, தற்போதைய ஜேர்மனியின் எதிர்க்கட்சியான ஏ.எஃப்.டி. தலைமை ஆகியவர்களின் வரவு தற்செயலானதல்ல. அவர்களும் ஒருவகையில் தமது இனத் தனித்துவத்தைக் காப்பாற்ற முயல்வதாக இருந்தாலும் மஸ்க் போன்றோரின் திட்டம் வெள்ளை இனத்தின் பெருக்கமும் ஆதிக்கமுமே. அமெரிக்காவில் சுத்தமான வெள்ளை இனத்தின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது. மாறாக இதர இனங்களின் எண்ணிக்கை அதி வேகமாக அதிகரித்து வருகின்றது. இதை மனதில் கொண்டுதான் மஸ்க் போன்றவர்கள் வெள்ளையினத்தவர் கருத்தடை செய்யக்கூடாது, அதிக குழந்தைகளைப் பெறவேண்டுமென போதித்து வருகிறார்கள். மஸ்க் வெவ்வேறு பெண்கள் மூலம் 13 குழந்தைகளைப் பெற்றதும், ஓரினச் சேர்க்கையை வெறுப்பதும், கருத்தடையைத் தடைசெய்ததும் இப்பின்னணியில் பார்க்கப்படவேண்டியவை. இஸ்ரேல் மாஃபியாவோ வெள்ளையினம் உட்பட இதர இனங்களின் பலம் குறையவேண்டுமென்பதில் குறியாகவிருக்கிறார்கள். இதனால் தான் அவர்கள் ஓரினக் கல்யாணம், கருத்தடை போன்ற நடைமுறைகளையும் தீவிர ‘முற்போக்குக் கொள்கைகளையும்’ ஊக்குவிக்கிறார்கள் எனவும் இதற்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் அமெரிக்கர்களின் வரிப்பணம் போன்றவற்றைச் செலவு செய்கின்றது எனவும் மஸ்க் தரப்பு குற்றம் சாட்டுகிறது. அரச வினைத்திறனுக்கான ஆணையம் (டோஜ்) என்ற திணைக்களத்தை மஸ்க் கைப்பற்றியது மேலே குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரச மானியங்களை நிறுத்துவதற்கே. இதில் ‘யூ.எஸ்.எயிட்’ நிறுவனம் மீது மஸ்க்கிற்கு ஒரு தீராத பகையுண்டு. ட்றம்ப் ஆட்சியேறியதும் அவரைக் கொண்டு மஸ்க் முதல் கைவைத்தது ‘யூ.எஸ்.எயிட்’. இதன் பின்னால் ஒரு வரலாறு உண்டு. ஜனாதிபதி கென்னெடியின் பதவிக் காலத்தில் ‘கிறீன் பெரே’ என்றொரு இராணுவ பிரிவை அவர் உருவாக்கினார். அதன் பொதுமக்கள் பிரிவாக (சிவிலியன்) உருவாக்கப்பட்டதே ‘யூ.எஸ்.எயிட்’. அப்போது நிலவிய சோவியத் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த உலக நாடுகளுக்குச் சென்று மக்களுடன் ஊடாடி மக்கள் அமைப்புகளுக்கு நிதிகளை வழங்கி அவர்கள் சோவியத் பிரச்சாரங்களுக்கு எடுபடாமல் செய்வதற்காகவே இந்த ‘யூ.எஸ்.எயிட்’ என்ற இராணுவ / மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆபிரிக்க கண்டத்தில் இந்த சோவியத் விரிவாக்க முயற்சிகள் அப்போது வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போதைய றொடீசியா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், மொசாம்பிக் எனப் பல நாடுகளும் அமைப்புக்களும் இலகுவாக சோவியத் சார்பு நிலையை எடுத்தபோது தென்னாபிரிக்காவைத் தமது பக்கம் வைத்திருக்க கென்னெடி எடுத்த முயற்சிகளிலொன்றுதான் இந்த யூ.எஸ்.எயிட்டின் ஆரம்பம். தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி சுதேச மக்களிடம் கொடுத்ததன் மூலம் கென்னெடியின் கனவு ஓரளவு வெற்றி பெற்றது. 1988 இல் வெள்ளையர்களின் ஆட்சி பறி போனதும் தனது பெரும் சொத்துக்களை அள்ளிக்கொண்டு சடுதியாக அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாகக் குடியேறியது தான் மஸ்க் குடும்பம். இதைச் சாத்தியமாக்கியது ‘யூ.எஸ்.எயிட்’ என்ற காரணத்தல் அதில் வெஞ்சினம் கொண்டிருந்த மஸ்க் அதிகார பலம் கிடைத்ததும் ‘யூ.எஸ்.எயிட்’ மீது பாய்ந்ததற்கு இப்பழிவாங்கலே நோக்கம். என்கிறார் டேவி ஒட்டன்ஹைமெர் என்ற வரலாற்றாசிரியர். எனது அனுமானம் இப்போது சரியெனப் படுகிறது. இந்த வரலாற்றாசிரியர் ஒரு யூதர். வெள்ளை தேசியத்தின் எழுச்சியால் பாதிக்கப்படப் போவது இஸ்ரேல் / யூதரின் அமெரிக்க ஆதிக்கம். அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளைத் தேசிய சக்திகளினால் இஸ்ரேல் லொபியின் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்க ஆட்சி பிடுங்கப்பட்டிருக்கிறது. இதை இஸ்ரேல் மாஃபியா சும்மா பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்ரேல் லொபி மஸ்கின் ஆதிக்கத்தைக் குறைக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முனைப்புக் காட்டும். மஸ்கிற்கு எதிரான பரப்புரைகளும் சிலவேளைகளில் வன்முறைகளும் இனி வரும் காலங்களில் எதிர்ப்பர்க்கப்படலாம். அவரது நிறுவனங்கள், பண்டங்கள் மீது பல பொய்கள், திரிபு படுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்படலாம். மஸ்கிற்கு இப்போதுள்ள பலம் அவரது பணம் மட்டுமே. அதே வேளை, விரைவில் அவரது ‘வெள்ளைச் சேனை’ தனது கட்டமைப்பைப் பலப்படுத்துவதுடன் தனது ஆயுதக் கிடங்குகளையும் விஸ்தரிக்க முற்படலாம். இக்காலத்தில் ஏன் ட்றம்ப் தனது கூட்டாளிகளும் அயலவர்களுமான கனடா, மெக்சிக்கோவுடன் பொருதுகிறார் என நீங்கள் கேட்கலாம். அமெரிக்காவைப் பலவீனப்படுத்துவதில் முன்னணியாகச் செயற்படும் இஸ்ரேலின் ஒரு நோக்கம் அங்குள்ள வெள்ளை இனத்தைப் பலவீனப்படுத்துவதே. கனடாவிலிருந்தும், மெக்சிக்கோவிலிருந்தும் வரும் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை நகர்த்துவதில் மொஸாட் ஏஜெண்டுகளுக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் மொஸாட் தனது சிறு படைகளை வைத்திருக்கிறது. அங்குள்ள போதை வஸ்துக் கும்பல்கள் பாவிக்கும் நவீன ஆயுதங்கள் அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்குரியது. இக்கும்பல்களுக்கும், பிரிவினைவாதக் குழுக்களுக்கும் ஆயுதங்களையும், பயிற்சிகளையும் கொடுப்பது மொஸாட் என்பது பரவலாத் தெரிந்த செய்தி. அமெரிக்காவின் எதிரிகளான லத்தீன் அமெரிக்க நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதும், சதிகளால் ஆட்ட்சிகளைப் புரட்டுவதும் இந்த மொசாட் கும்பல்களின் வேலைதான். சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு உதவிகளைச் செய்வதன் மூலம் அதிக இலாபமடைவது இந்த போதைவஸ்துக்க் கும்பல்கள் (கார்ட்டல்கள்). இதை ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ அரசுகள் அறியாமலில்லை. பைடன் அரசு, “இச்சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் எல்லைகளைக் கடந்ததும் அவர்களை பஸ்களில் ஏற்றி அவர்களுக்கு மானியங்களைக் கொடுக்கிறது” என இப்போதும் குற்றஞ்சாட்டுபவர் ட்றம்ப். பைடன் அரசு ஏறத்தாழ ஒரு இஸ்ரேலிய அரசு எனப் பலரும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுமளவுக்கு விடயங்கள் நடைபெற்று வந்தன. எனவே கனடிய, மெக்சிக்க எல்லைகளைக் கண்காணிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஆயுதமே ட்றம்பின் ‘எல்லை வரி’. கொலம்பியாவுடன் இதே விளையாட்டை விளையாடி அதில் வெற்றிகண்டுவிட்டார் ட்றம்ப். கனடாவுக்கு வந்த 20,000 இந்திய மாணவர்களைக் காணவில்லை என்பதைக் கனடிய அரசே ஒத்துக்கொள்ளும்போது ட்றம்பின் கொக்கரிப்பில் உண்மை இருக்கிறது என்பது புரிந்துவிடும். அடுத்தடுத்த வருடங்களில் ஐரோப்பாவில் ஏற்படவிருக்கும் பல ஆட்சி மாற்றஙக்ள் மஸ்கிற்குச் சாதகமாக அமையப் போகின்றன. ட்றம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே ‘ஐரோப்பா சிவில் யுத்தம் ஒன்றிற்குத் தயாராக வேண்டும்’ என மஸ்க் அறைகூவல் விடுத்திருந்தது பிரித்தானிய பிரதமரால் (இவரும் பிறப்பால் ஒரு யூதர்) பலமாகக் கண்டிக்கப்பட்டது. யூக்கிரெய்னை மண்டியிடச் செய்வதன் மூலம் ரஸ்யாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதன் பின்னணியில் இந்த யூத எதிர்ப்பு இருக்கிறதோ தெரியாது. செலென்ஸ்கியும் ஒரு யூதர். இன்று / நாளை சவூதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் யூக்கிரெய்ன் பற்றிய அமெரிக்க – ரஸ்ய பேச்சுவார்த்தையில் வேண்டுமென்றே செலென்ஸ்கி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு வேறு காரணம் எதுவாக இருக்க முடியும்? இதே வேளை யூக்ரெயினைக் காரணம் காட்டி ரஸ்ய எல்லையில் நேட்டோவை நிறுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியை இலான் மஸ்க் தவிடுபொடியாக்கி விட்டார். போரின் ஆரம்ப காலத்திலிருந்தே அவர் யூக்கிரெய்னை விட ரஸ்யாவுக்கே அதிக விசுவாசமாக இருந்தவர். ஐரோப்பாவில் சிவில் யுத்தம் நடக்கவேண்டுமென அவர் கோரியது காரணதோடு தான். எனவே, நடைபெறப்போகும் இந்த மஸ்க் – இஸ்ரேல் பனிப்போரில் உலகிற்கு நல்லதும் கெட்டதும் நடக்கலாம். அமெரிக்கா மீதான இஸ்ரேலின் ஆதிக்கம் குறைக்கப்படுவது உலகிற்கும் அமெரிக்காவிற்கும் நல்லது தான். ஆனால் இதன் மூலம் மஸ்கின் பலம் அதிகரிக்குமானால் போத்தலுக்குள் இருக்கும் ஹிட்லரின் ஆவியை வெளியே விட்டதற்குச் சரி. நான் ஏற்கெனெவே பல கட்டுரைகளில் கூறியது போல அடுத்த நான்கு வருடங்களுக்கு நடைபெறப் போகும் இந்த இரண்டு தரப்பினரதும் பலப்பரீட்சை எஞ்சிய உலகிற்கு ஒரு இடைவேளையை வாங்கித் தரப் போகிறது. இப்பனிப்போரில் இரண்டு தரப்பும் தோற்றுப்போனால் அது உலகிற்கு வெற்றி. அதே வேளை இலான் மஸ்க் அமெரிக்காவை ஒரு தென்னாபிரிக்கா ஆக்கி விடுவாரேயானால் அது எல்லோருக்கும் தோல்வி. (Image Courtesy: Royal Society / Wikipedia) |இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்? |சிவதாசன் இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனத...