நான் பொதுவாக சின்னப் பிள்ளைகளிடம் கூட எனது போனை குடுப்பதில்லை ......... அவர்கள் கண்டதையும் அமத்தி வேறு விளையாட்டுகள் டவுன்லோட் பண்ணிவிட்டு போய் விடுவார்கள் . .....பிறகு நான் அதை பாவிக்கும் போது சிரமமாக இருப்பதுடன் பொடியாளிடம் குடுத்து சரிபண்ண வேண்டி இருக்கும் ........இருந்தும் கடந்த ஐந்து வருடத்துக்குள் ஒருமுறைதான் விழுந்து அதன் மேல் தடுப்பு கவரில் சிறு வெடிப்பு உண்டு . .......அப்போது "ஒலலா" என்று சொல்லி இருப்பன் ........ பொதுவாய் நான் அந்த சொல் அப்பப்ப பாவிப்பது வழக்கம் . ....... எனது மருமகன் போன் திருத்தும் கடை வைத்திருக்கின்றார் . .....அவர் புனைபார்த்து விட்டு தாங்க மாமா புதுக்கவர் போட்டுத் தாறன் என்று சொல்லியும் நான் கொடுக்கவே இல்லை . ........! 😎
பி . கு : இவ்வளவு காலத்துக்குள் மனிசி நாலு, ஆறு போன் மாற்றி விட்டுது . ........!