அதை அவர் தனது உடல் நிலையைப் பொறுத்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்......!
அது அவரது சீனி அளவைப் பொறுத்தது ....... என்வரையில் எனக்கும் சுகர் உண்டு......காலையில் ஒரு அளவான சீனி போட்ட பால்கோப்பி பின் தோட்டத்துக்குள் வேலைகள் செய்வேன்.......10 / 11 க்குள் ஒரு தேநீர் சீனியுடன் அல்லது பனங்கட்டி ஒரு துண்டு + இரண்டு பிஸ்கட் ........ மதியம் ரெண்டு மரக்கறி தயிர் அல்லது மோர், அப்பளம் +மிளகாய்யுடன் சாப்பாடு சிறிது நேரத்தின்பின் ஒரு மணித்தியாலம் நித்திரை பின் கொஞ்சம் வீட்டு வேலைகள் 4 /5 ல் சீனி போட்ட தேநீர் +நொறுக்குத்தீனி (வாரத்துக்கு ரெண்டு விழாக்கள் நடப்பதால் பலகாரப்பைகள் எப்பவும் மேசையில் இருக்கும்).......இரவு தோசை 3, இடியப்பம் 5, இட்லி 3, நூடில்ஸ் + குஸ்குஸ் ஒரு கையளவு இவற்றுள் ஏதாவது ஒன்று ....... பின் மெட்ரோபோமின் 500 ஒன்று அல்லது இரண்டு குளிசை அதன்பின் உறக்கம்......... கண்டநேரமும் கண்டபடி சாப்பிடுவதில்லை ....... (என்னவோ தெரியாது தோசை + சாம்பல் சாப்பிடும்போது மட்டும் பாதிகிளாஸ் கொக்கோகோலா குடிப்பேன் அது மிகவும் பிடிக்கும்...... குளிசையும் 2 போடுவேன்).........!
வீட்டில் நிக்கும் நாட்களில் இவை தவறாமல் நடக்கும்......மற்றும்படி மகள், மகன், பெறாமக்கள் எங்க வீட்டில் நிக்க விடுகினம்.......பாதிநாட்கள் வாகனத்துடன் தெருவிலதான் சீவியம்.......அதனால் பிளாஸ்கில் கோப்பியும் பிஸ்கட்டும்தான் தெய்வம்......! 😂