Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30749
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. வீட்டில் வளர்க்கும் நாய்தான் காலைக் கடிக்கும்..... ஏனென்றால் அதுக்கு பூனை எலியைத் திரத்திப் பிடிக்குமளவு கூட வேட்டை தெரியாது....... ஆனால் காட்டில் வாழும் மிருகங்கள் நேரே தொண்டையைத்தான் கவ்விப்பிடிக்கும்...... அந்த நல்ல காசு விழுந்த வங்கிக் கணக்கைக் கூட பார்க்கிறதுக்கு ஆள் இருக்க வேணுமே.......! ( பரவாயில்லை என்ர மனிசி பிள்ளைகள்தானே அனுபவிக்கப்போகுதுகள் என்று சொல்லலாம், அது வீண் பேச்சு.......வெறும் சால்ஜாப்பு......! )
  2. சன்டிகட்டை இறக்கி கொடுக்கு கட்டிவிட்டு நரியிடம் கடி வாங்க வேண்டியதுதான் .......! 😂
  3. எனக்கும் இப்படித்தான் ஆகிப்போச்சு பிரியன்.......இப்பதான் இந்தக் கதையைப் பார்த்து விட்டு இங்கு பதிய கொண்டு வந்தால் நேற்று சிறியர் பதிந்து இருக்கிறார்.......! 😂
  4. மறக்குமா நெஞ்சம், மறக்குமா இந்த மேதைகளை.......! 🙏
  5. வணக்கம் வாத்தியார்........! ஆண் : பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் ஆண் : {வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்} (2) மரகதக் கிள்ளை மொழி பேசும் பூவானில் பொன்மோகமும் உன் போலே நாளெல்லாம் விளையாடும் ஆண் : {நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி} (2) பொன்வண்டோடும் மலர் தேடி என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ….....! --- பூங்காற்று புதிதானது ---
  6. அட......ஆமாம்.......! நான் பொதுவாக வேலைகள் செய்துபோட்டு முதுகு வேர்க்க வந்து கணணிக்குமுன் அமர்வது, அப்போது ஒருகால் கால் மசாஜ் கட்டையின் மேல் இருக்க மறுகால் அந்தக் காலின் மேல் இருக்கும்.....சற்று நேரத்தின் பின் கால் மாற்றிப் போடுவேன்.......இது வழமைதான்.........முன்பே தெரிந்திருந்தால் இரு கால்களையும் கீழே வைத்துக் கொண்டிருந்திருப்பேன்.........! 😂
  7. அதெண்டால் என்னமோ உண்மைதான்........காலியாண வீடோ , செத்தவீடோ எதுவென்றாலும் எங்காவது ஒரு இடத்தில் நின்று சமா வைத்து அந்த இடத்தை போத்தில்கள் பேப்பர்கள் என்று எறிந்து நாறடித்து விட்டுத்தான் போவினம்.........!
  8. ஆஹா ஒரு சரத்தைக் கட்டி என் மானத்தை காப்பாற்றிப் போட்டீர்கள் ரசோதரன்.....! நான் எப்பவும் வீட்டில் சரம்தான்......இங்கும் ஒரு கடையில் மூன்று சாரம் 10 ஈரோ வுக்கு தருவார்கள்......! பிறந்தநாளில் இருந்து நினைவில் தெரிந்ததும்,நினைவில் நிற்பதும் சரம்தான்.......! 7 / 8 வயதில் சீசன்களுக்கு இலந்தைப்பழம், நாவல் பழம் எல்லாம் சன்டிக்கட்டுக்குள்தான் அள்ளித் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வாறது ....... சரமெல்லாம் கையர் பிடித்து விடும்....... பின் வீட்டில் அடியும் உதையும் இனாமாக வாங்குவது......! ம்.......அது ஒரு கனாக்காலம்........!
  9. ஒன்றுகூடலா அங்கு ஒரு சத்தயுத்தமே நடக்கும்.......பிஸ்கட் தேநீருடன் ஒரு மாதிரி ஒன்றுகூடல் முடிந்ததும் கர்ஜித்த சிங்கங்கள் எல்லாம் எதுவுமே நடக்காததுபோல் கலந்துரையாடுவார்கள் பாருங்கள் அதுதான் நிஜமான ஒன்று கூடல்.......! 😂
  10. வணக்கம் வாத்தியார்.........! பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2) பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் பெண் : கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் பெண் : கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற பெண் : காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான் ........! --- என்னுள்ளே என்னுள்ளே ---
  11. இப்ப என்ன இன்பநிதிக்கா கொடுத்திருக்கிறார்கள் ......... இவர் ஏன் துள்ளுறார் .......எவ்வளவோ வலிமையான அ .தி .மு .க வை அச்சே இல்லாமல் அடிச்சுடைச்சுப் போட்டு ........!
  12. உண்மையில் இது நல்ல விடயம்........! --- சிறு தொழில்கள் ஊக்குவிக்கப் பட்டு தொழில் முனைவர்கள் உருவாக வாய்ப்புண்டு........! --- மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் பல உருவாகும்.......! --- வேலை வாய்ப்புகள் அதிகமாகும்........! பகிர்வுக்கு நன்றி பிழம்பு .......! 👍
  13. வரும்போது சேர்ந்து வந்த உடலே சேர்ந்து வராதபோது, வராத ஊசிக்கு காது இருந்தால் என்ன இல்லாட்டில் என்ன.........! 😁
  14. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மான் இனம் தமிழும் அவளும் ஓரினம் ஆண் : மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி ஆண் : நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் ஆண் : குறுநகை கோலத்தில் தாமரை கோடைகாலத்து வான்மழை குறுநகை கோலத்தில் தாமரை கோடைகாலத்து வான்மழை ஆண் : கார்த்திகை திங்களின் தீபங்கள் கார்த்திகை திங்களின் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள் ஆண் : அறுசுவை நிரம்பிய பாற்குடம் ஆடும் நடையே நாட்டியம் அறுசுவை நிரம்பிய பாற்குடம் ஆடும் நடையே நாட்டியம் ஆண் : ஊடல் அவளது வாடிக்கை ஊடல் அவளது வாடிக்கை என்னை தந்தேன் காணிக்கை ......! --- அவள் ஒரு நவரச நாடகம் ---
  15. இளமை திரும்பிவிடும் சந்தேகமே இல்லை ஆனால் செலவழிக்க இளமை இருக்க வேண்டுமே ........! 😴
  16. காதல் அழகானதுதான் ஆனால் அது உன்னை மூழ்கடித்துவிடும் என்பதை எளிமையாய் உணர்த்தும் படம்......! 😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.