-
Posts
30758 -
Joined
-
Last visited
-
Days Won
273
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by suvy
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சுமே அவர்களுக்கும், தோழர் புரட்சிக்கும் சகல நலன்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.......! 💐
-
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம் பெண் : பக்கத்தில் உறங்கும் உறக்கம் அது பக்தியை போலவும் இருக்கும் ஆண் : தெரிய தெரியத்தான் கனவு அது கனிய கனியத்தான் உறவு பெண் : புரிய புரியத்தான் இனிமை அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை ஆண் : கன்னமா தங்கக் கிண்ணமா…….. பெண் : உள்ளமா அமுத வெள்ளமா…….. ஆண் : கன்னமா தங்கக் கிண்ணமா…….. பெண் : உள்ளமா அமுத வெள்ளமா…….. ஆண் : என்னம்மா நாணம் இன்னுமா பெண் : இல்லையேல் கால்கள் பின்னுமா இல்லையேல் கால்கள் பின்னுமா ஆண் : முல்லையோ பெண் : ஆஹஅஹஆஹா ஆண் : மலர் கொல்லையோ……… பெண் : ஆஹஅஹஆஹா ஆண் : இல்லையோ இடை இல்லையோ பெண் : கம்பனோ கவி மன்னனோ காதலின் இளம் கண்ணனோ ஆண் : அள்ளவோ வாரிக் கொள்ளவோ பெண் : சொல்லவோ உரிமை அல்லவோ சொல்லவோ உரிமை அல்லவோ .......! --- சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் ---
-
நிஜமாகவே இருமல் ஒரு பரிசுதான்.......! உடலும் கடலும் ஒன்று........ அந்நியமானவற்றை அரசியல்வாதிகள் போல் தமக்குள் சேர்த்து வைத்திருக்காது...... வெளியே தள்ளி விடும்...... அதனால் இருமலும் தும்மலும்........ விலைமதிப்பில்லா பரிசே ......! 😂
-
Azhagu Raja · #மணவாழ்க்கை..... மணவாழ்க்கை*_ யார்க்குத்தான்*_ சரியாக*_ _*இருந்தது*_ தசரதனுக்கும்_ அவன்_ _மனைவிகளுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ இராமனுக்கும் சீதைக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ கண்ணகி_ மாதவி_ _கோவலனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ அகலிகைக்கும்_ முனிவனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ புத்தனுக்கும்_ யசோதைக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ பட்டிணத்தார்க்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ ஒவ்வொரு_ சாமியார்க்கும்_ சித்தனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியாக இருந்தால்*_ அவன் ஏன்*_ காட்டை நோக்கிச்*_ செல்கிறான்*_ ஐந்துவிரலும்_ ஒரே நீளமாகவா_ இருக்கு_ ஒவ்வொரு*_ தலையிலும்*_ ஒரு விதி*_ எழுதப்பட்டிருக்கு*_ அதை அழிக்க_ முடியுமா_ பணக்காரன்*_ ரகசியமாகப்*_ புலம்புறான்*_ ஏழை வெளியில்_ புலம்புறான்_ அனைவருடைய*_ வாழ்விலும்*_ ஓட்டையும்*_ _*ஒடச்சலும்*_ இருக்கத்தானே*_ செய்கிறது*_ எல்லாமே_ சரியாக இருந்தால்_ இறைவனை_ மறந்துவிடுவாய்_ என்ற_ _காரணத்தினால்_ கூட்டியும்*_ _*பெருக்கியும்*_ கழித்துவிடுகிறான்*_ மனிதனின்*_ வாழ்க்கையை*_ ஆணும்_ _புலம்புகிறான்_ பெண்ணும்_ புலம்புகிறாள்_ இருந்தும்*_ வாழ்க்கை*_ நடந்துக்கொண்டுதான்*_ இருக்கு*_ அதில் நாமும்_ கடந்துக்கொண்டே_ இருக்கோம்_ வாழ்வதும்*_ வாழ வைப்பதும்*_ நம்ம*_ _*கையில்தான்*_ இருக்கிறது*_ புரிந்து கொண்டு வாழுங்கள்......! 😴
-
மண்ணோடும் விண்ணோடும் விளையாடும் வீடுகள்........! 😂
-
அழகான நினைவுகள், அருமையான படங்கள் ......பாராட்டுக்கள்.......! 👍
-
Vignesh Waran · செருப்பு தைக்கிறவங்க கிட்ட நாம காட்டுற வீரம் கோழையை விட கேவலமானது.. தெருவுல கீரை விக்கிற பாட்டிகிட்ட ரெண்டு ரூபா பேரம் பேசி ஜெயிச்சுட்டு 2000 ரூபாய் கோயில் உண்டில போட்றதால எந்த வரமும் கிடைச்சிட போறதில்ல.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, சுமார் எட்டு வருசத்துக்கு முன்னாடி, நான் ஒரு முறை பேங்க் ல Loan கட்ட போயிருந்தப்ப நடந்த நிகழ்வு இது.. ஒருத்தர் 70 75 வயசு இருக்கும்.. பாத்தா விவசாய கூலி வேலை செய்றவர் மாதிரி இருந்தாரு..கையெல்லாம் காச்சு போயிருந்தது..அவர் Passbook Entry போட்றதுக்காக அரை மணி நேரமா வரிசைல நின்னுட்டு இருந்தார். நான் அவர் பின்னாடி நான் நின்னுட்டு இருந்தேன்.. அவரோட வாய்ப்பு வரும் போது, அவர் Entry போட்றவர் கிட்ட, "ஐயா.. இந்த புக்ல எவ்வளவு பணம் இருக்குன்னு பாத்து சொல்லுங்க ஐயா.. அப்படியே எழுதி குடுங்கய்யா" ன்னு சொல்ல, Bank officer, "350 ரூபா இருக்கு.. இதுக்கு ஒரு entry வேறயா.. போ..போய் வெளிய ATM ல போட்டுக்கோ - ன்னு கேவலப்படுத்தி" அனுப்ப, அந்த அய்யா ATM எதுன்னு தெரியாம அரை மணி நேரம் அலஞ்சுட்டு மறுபடியும் வரிசைல வந்து நிக்கிறாரு.. அந்த Employee, "யோவ்..மறுபடியும் என்னய்யா நீ வரிசைல நிக்கிற.. போயா.. அந்தப்பக்கம்..னு திட்ட, அவர் என்ன செய்றதுன்னு தெரியாம திரு திரு முழிச்சிட்டு இருந்தப்ப, Security வாங்கய்யா ன்னு நான் போட்டுத் தரேன் கூட்டிட்டு போனாரு.. கஷ்டப்படுறவனுக்கத் தான் அடுத்தவனோட கஷ்டம் புரியுதுல.. அப்பவே,இன்னோருத்தர் வேக வேகமா Manager கிட்ட ஓடிவந்து, ஐயா.. "ஏன்யா என் பேர Board எல்லாம் போட்டு இருக்கீங்க, வீட்டுக்கு letter வந்துருக்குன்னு" கேட்டார்.. அதுக்கு Manager, "நீ ரெண்டு மாசம் வட்டி கட்டல.. அதான் போட்டுட்டோம்..னு Cool aa பதில் சொன்னாரு.." அந்த மனுஷன்.. எங்கேயோ போய் யார்கிட்டையோ காசு வாங்கி மொத்த கடன் 22000 த்த மொத்தமா அடச்சிட்டு.. அய்யா..இப்ப என் பேரு அழிங்க அய்யான்னு ஒரு சின்ன கொழந்த மாதிரி கேட்டது..அவங்க இவ்ளோ கஷ்டத்துலயும் அவங்க தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்க தயாரா இல்லன்னு காட்டுது.. (அது வேற யாரும் இல்ல எங்க அப்பா தான்...22000 ரூபா தறி Loan க்கு மானியம் போக வட்டி அது இதுன்னு 28000 ரூபாபாவ கண் கலங்கிக் கிட்டே கட்டுணது எனக்குள்ள இன்னமும் வலிக்கு) Drainage Clean பண்றவங்களை பாத்தா முகம் சுழிக்கறது, சர்வர் கிட்ட சவுண்டு விட்றது, ரோட்டாரம் காய்கறி விக்கவறங்க கிட்ட கறாரா பேசுறது, நமக்கு கீழ வேலை செய்றவங்கள ஒருமைல பேசுறது, இந்த மாதிரி Scene போட்றத எல்லாம் விட்டுட்டு,அவங்களுக்கும் சரிசமமான மரியாதை குடுத்து பழகுவோம்.. இங்க யாரும் மேலயும் இல்ல.. கீழயும் இல்ல.. படிச்சவங்க படிப்புக்கு ஏத்த வேலை செய்றாங்க.. மித்தவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வேலய செய்றாங்க.. உழைப்பாளன் கேட்பது தகுந்த ஊதியமும் குறைந்தபட்ச மரியாதை மட்டுமே.. உழைப்பாளனின் வியர்வை மணத்திற்கு இணையான நறுமண பொருள் இன்றுவரை கண்டுபிடிக்க படவில்லை.. உங்களுக்கு மேல இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாதைக்கு காரணம் பயம்.. உங்களுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாததான் உங்களோட Character. என்ன வேலைன்னு எல்லாம் பாக்காம வேர்வ சிந்தி உழக்கிறவங்க எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பழகுவோம்.. முடிஞ்சா அவங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.. நம்ம கிட்ட அதிகாரம் இருந்ததுன்னா அதை வச்சு இல்லாதவங்களுக்கு என்ன பண்ணி அவங்க வாழ்க்கைத் தரத்த உயரத்தலாம் ன்னு யோசிப்போம்.. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்........! 🙏
-
இப்படி ஒத்துழைக்கும் ஒரு பெண் கிடைத்தால் நாளைக்கு நானும் ஒரு ஆட்டம் ஆடலாம் என்று இருக்கிறேன்.......! 😂
-
இன்று உமா ராமணனுக்கு விதிவிலக்காக வர்ணத்தில் பாடல் ..........! 💐
-
வணக்கம் வாத்தியார்........! ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் : நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே…… பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே பெண் : வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் ஆண் : கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் பெண் : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே ஆண் : மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் ஆண் : சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா பெண் : இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா ஆண் : சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் .......! --- நீ பாதி நான் பாதி கண்ணா ---
-
வணக்கம் வாத்தியார்........! பெண் : மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு பெண் : உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம் எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும் பெண் : உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம் அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம் பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா .....! --- மண்ணிலே ஈரமுண்டு ---
-
நோ ...... இது விங் பரீட்சை.......! 😂
-
-
அன்றொருநாள் நானும் நீயும் ஆடும் ஆடுமாய் ஆடினோம் இதோ இந்த இடத்தில் ஆடியபோது என் முதுகில் ஆட நீ ஓடிவந்து தாவினாய், நான் சற்று விலகியபோது போனவன்தான் , நீ வருவாயென நானும் இங்கு .......! 😴
-
-
பழையன கழிதலும் புதியன புகுதலும் கவிதை அழகு .......! 👍 நன்றி கோபி ......!
-
கப்பலில் இருந்து கப்பலை நோக்கி ஒரு பார்வை.......! 😂 (ஆங்கிலக் கால்வாயில் ஒரு பயணம்).
-
நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது......! 😍
-
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நந்தா என் நிலா….ஆ….ஆ…ஆ…… நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹா…ஆ…. ஆண் : விழி மீனாடும் விழி மொழி தேனாடும் மொழி குழல் பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில் மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே ஆண் : ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா…… ஆண் : ஆயிரம் மின்னல் ஒர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே ஆண் : அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போலே பிறந்து வந்தாயே ஆண் : ஆகமம் கண்டு சீதையும் இன்று ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ ஆண் : மேகத்திலாடும் ஊர்வசி எந்தன் மோகத்திலாட இறங்கி வந்தாளோ ......! --- நந்தா நீ என் நிலா நிலா ---
-
ஒரு நாளைக்கு 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காகச் செலவிடும் இலங்கை மக்கள்!
suvy replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
ஒரு நாளைக்கு 52 கோடி என்றால் நீங்கள் எத்தனை தொன் சிக்ரெட்டை இருப்பில் வைத்திருக்கிறீர்கள் .....முதல்ல அவற்றை எரித்து அழித்து விட சொல்லுங்கள் ஏராளன் ......! 😂