திருடர்களை ஒன்றும் செய்ய முடியாது.......என்னுடைய வண்டி, மகன் மகளுடைய வண்டிகள் என்று எல்லாவற்றிலும் களவு குடுத்து போலீசிலும் பதிந்து ஒன்றும் நடக்கவில்லை.......அப்படியே வீட்டிலும்.......பக்கத்தில் கடை, போய் ரெண்டு சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் வீடெல்லாம் உடைச்சிருக்கு......வீட்டிலேயே ட்ராவலிங் பாக் எடுத்து பிள்ளைகளின் வாட்ச்சுகள் மடிக்கணனிகள் உண்டியல்கள், சாமான்கள் என்று கொண்டு போயிட்டார்கள்......அதுவும் போலீசில் பதிந்ததுதான்.......பிரயோசனமில்லை.....
இப்பொழுது திருடுதல், பிச்சை எடுத்தல் என்பன கௌரவமான தொழில்களுக்குள் வந்து நெடுநாளாகி விட்டது .......நீங்கள் பரிசுக்குள் பத்து கி.மீ பிரயாணம் செய்தால் குறைந்தது இருபது பிச்சை எடுப்பவர்களையாவது சந்திகளில் சந்தித்து இருப்பீர்கள்......இதற்காகவே காரில் தண்ணீரும், பிஸ்கட் பெட்டிகளும் வைத்திருக்க வேண்டி இருக்குது (மனம் கேட்குதில்லை காசு குடுத்துக் கட்டாது)..........இவை எனது அனுபவங்கள்......மற்றும்படி சொல்வதென்றால் சொல்லி மாளாது ........!