Everything posted by Justin
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
நீங்கள் கேட்கும் எல்லாவற்றையும் அப்படியே literal ஆக எடுத்துக் கொள்ளும் ஒருவர் போல தெரிகிறது. உதாரணமாக, "நாங்கள்"- The Royal We 😎 என்று சாமி தன்னைத் தான் குறித்திருப்பார் என நான் ஊகிக்கிறேன். நீங்கள், அதற்கு ஒரு சதி வேலை அர்த்தம் கொடுத்து, வியாக்கியானம் செய்து ...மூளை காய்கிற உரையாடல் தான் அனேகமாக உங்களுடன் செய்ய வேண்டியிருக்கிறது ஐயா! (மனக்குரல்: ஐயோ சாவடிக்கிறாங்களே!!😂)
-
இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
பகிடி என்னவென்றால் ஆக்களைக் கொன்ற மாற்றுக் குழுவின் தலைவரையே இப்போது "தேசியப் பெயின்ற்" அடித்து உலவ விடும் சூழலில், ஆர்வக் கோளாறில் சந்திரிக்காவோடு சேர்ந்து தீர்வுத் திட்டம் உருவாக்க முயற்சித்த நீலனைக் கொன்றது சரி தான் என்று அங்கால ஒரு "வரலாற்றாய்வாளர்" குத்தி முறிந்திருக்கிறார்! இப்படிப் பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஏன் தான் அரசியல் தலைவர்கள் அவசியம் என யோசிக்கிறேன்! சுரேஷ் மாதிரி ஆக்களையே recondition செய்து தலைவர்களாக்கி விடலாம்😂!
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
மார்க் கார்னிக்கு பிரிட்டன் பிரஜாவுரிமையும், அயர்லாந்துப் பிரஜாவுரிமையும் இருந்திருக்கின்றனவே? அவர் பிரதமரான போது தான் இந்த இரு பிரஜாவுரிமைகளையும் துறந்திருக்கிறார். எப்படி வெளிநாட்டவர் என்கிறீர்கள்?
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
"குறைகள் இல்லாத ஆட்சிகள் இல்லை" என்பது சரி. ஆனால், குறையே மையக்கருவாகக் கொண்ட ஆட்சியை அல்லவா ட்ரம்ப் "ஐயா" தருகிறார்?😂 "என்ன பெரிதாக நடந்து விட்டது 100 நாட்கள் கழிந்த பின்னர்?" எனத் தேடிப்பார்த்தால், ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை "டமாரம்" அடித்து விளம்பரம் செய்து நாடு கடத்தியது மட்டும் தான்! இதை விடச்சிறப்பாக ஒபாமா குற்றவாளிகளான சட்ட விரோதக் குடியேறிகளை நாடு கடத்திய சாதனையைக் கூட எண்ணிக்கையளவில் ட்ரம்ப் இன்னும் முறியடிக்கவில்லை!
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
"தம்பு" அமெரிக்காவில் பதவிக்கு வந்தமையால் ஏற்பட்ட நன்மைகள் எவையென்று கேட்டால் கஷ்ட பட்டுத் தேடித் தான் பொறுக்கியெடுக்க வேண்டும். ஆனால், கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருந்து உருவாகும் டீசண்டான தலைவர்கள் தான் இந்த இருண்ட அத்தியாயத்தின் silver lining என்று கருதுகிறேன். புதிய வரவுகளாக பிரிட்டனின் ஸ்ராமர், ஜேர்மனியின் மெர்ஸ், தற்போது கனடாவின் கார்னி, இப்படியான "நட்டு லூசாகாத" தலைவர்களை நோக்கி உலகத்தின் மரியாதை நகர்வது இயல்பானது. "பல் துருவ உலகு உருவாகிறது" என்று புரின் யுத்தம் ஆரம்பித்து டசின் கணக்கான ஆபிரிக்க நாடுகளை தன் வசம் இழுத்த போது எழுதினார்கள். பல துருவங்கள் உருவானால், இப்படியான முன்னேற்றகரமான, அமெரிக்காவிற்கு மாற்றான துருவங்கள் தான் உருவாக வேண்டும். புரினும் ட்ரம்பும் வேண்டுமானால் இனி அலாஸ்காவின் வழியாக நிலங்களை இணைத்து விட்டு "தனித்துருவமாக" நடந்து கொள்ளலாம்😂!
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இதெல்லாம் புரியாமல் நாங்கள் சு.க, ஐ.தே.க, ம.வி.மு என்று தேர்தல் நேரம் இலங்கையில் அடிபாடு! பா.ஜ.க, காங்கிரஸ் என்று இந்தியாவில் அடிபாடு! பிறகு "பச்சைச் தமிழ் கட்சி, மஞ்சள் தமிழ் கட்சி" என்று தமிழ் நாட்டில் புடுங்குப் பாடு! எல்லாமே ephemeral காகங்கள், "பனம் பழம்" சும்மா எழுந்தமானமாக விழுந்து கொண்டிருக்குது🤣😂!
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
"தம்புவின்" ஆட்சியில் 100 வது நாள் நிறைவுக்கான பரிசு, கனடாவிடமிருந்து😂!
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
~64% பல்கலை நுழைவதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றாலும், இவர்கள் அனைவருக்கும் அரசபல்கலை செல்ல வாய்ப்புக் கிடைக்காது. இவர்களுள் மூன்றிலொரு பங்கினர் அரச பல்கலை அனுமதி பெறுவர், மூன்றில் இரண்டு பங்கினர் பெறு பேறுகளை வைத்துக் கொண்டு வேறு வழிகளில் உயர்கல்வியைப் பெற வேண்டியிருக்கும். இது சில மாதங்களில் வெளியிடப் படும் Z-score இனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப் படும்.
-
'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?
கனடாவின் சில விடயங்கள் எனக்கு இன்னும் புரியாத புதிர் தான். அவற்றுள் சில: பொருட்களின் விலைகள் அதிகம். இது அரசு போடும் விற்பனை வரி என்று நான் நினைத்திருந்தேன். அண்மையில் ஒரு பிபிசி கட்டுரையில் இன்னொரு முக்கிய காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். கனடாவில், அமெரிக்காவை விட வர்த்தகப் போட்டி குறைவு எனவே, ஒரு சில வியாபாரிகளே மேலாண்மை (monopoly?) செய்து விலைகளையும் உயர்வாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அமெரிக்காவில் இருப்பது போல, ஒன்ராறியோவில் பல உணவுப் பொருள் விற்கும் கடைகள் (Grocers) இல்லாமல் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அடுத்த அதிசயம், வீட்டுக் கடன் எடுக்கும் போது ARM எடுப்பது எங்கள் கனேடிய உறவுகளிடையே நான் அவதானித்திருக்கிறேன். மாதாந்த செலவு குறைவு என்பதால் கனடாவில் பிரபலம் என்பார்கள். "வட்டி அடுத்த அட்ஜஸ்ட்மென்ரில் கூடாது என்று என்ன நிச்சயம்?" என்று கேட்டால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். வீட்டுக் கடனில் அடுத்த 5 வருடத்தை திட்டமிடாத அதே ஆட்கள், "பெற்றோல் விலை 5 சதம் அதிகரிக்கப் போகிறதாம்" என்று செய்தி வந்ததும், வீதியை மறித்து பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் வாகன வரிசை கட்டுவதும் இன்னொரு புதிர்😂!
-
அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி )
கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் வரி மூலம் வழங்கப்படும் மருத்துவ சேவையில் இது ஒரு இயல்பாக இருக்கிறது. கனடாவில், மாகாணங்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அதிகாரங்களை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் (இப்படிச் செய்திருக்கா விட்டால் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும்). கனடாவின் வயதானோரின் தொகை (ஏனைய மேற்கு நாடுகளில் நடப்பது போலவே) அதிகரித்து வருவதாலும், மருத்துவ சேவைகளின் செலவு அதிகரித்து வருவதாலும் இப்படியான நிலைமைகள் உருவாகியிருக்கின்றன. உண்மையில், எந்த நாடும் இலவசமான மருத்துவ சேவையை வழங்க முடியாது, யாரோ ஒருவரின் செலவில் தான் அது நடக்க வேண்டும் (இலங்கையில் அரசு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை/கடன் பெற்று இலவச சேவையை வழங்குகிறது). ஆனால், எந்த மருத்துவ சேவையிலும் சில விடயங்களைத் தவிர்க்க முடியாது. உதாரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவிற்கு ஒருவர் சென்றால் அவரது நோய்த்தீவிரத்தைப் பொறுத்துத் தான் முன்னுரிமை கிடைக்கும். எனவே, மூக்கில் இருந்து இரத்தம் வரும் ஒருவரை, நெஞ்சு வலியில் வரும் ஒருவரை விட காக்க வைத்துத் தான் உள்ளே எடுப்பர். இதை Triage என்பார்கள். இப்படி அலைக்கழியாமல் இருக்க ஒரு வழி, உயிர் ஆபத்தான நிலைகள் தவிர்ந்த சந்தர்ப்பங்களில் அம்புலன்சை அழைக்காமல், உடனடி முதலுதவி கிடைக்கக் கூடிய Urgent care சிகிச்சை நிலையங்களை நாட வேண்டும். எது உயிர் ஆபத்தான நிலை, எது சாதாரண உபாதை என்று புரிந்து கொள்ள, எங்கள் உடல் பற்றிய கொஞ்சம் புரிதல் எங்களுக்கு இருக்க வேண்டும். https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7138369/ 👆2018 இல் வெளிவந்த ஒரு கட்டுரையின் படி, அமெரிக்காவை விட கனடா ஒரு பிரஜைக்கு மருத்துவத்திற்காக செலவிடும் தொகை பாதியாக இருக்கிறது. ஆனால், 1000 பேருக்கு இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை, தாதியரின் எண்ணிக்கை, 10,000 பேருக்கு இருக்கும் மருத்துவமனைக் கட்டில்களின் எண்ணிக்கை என பல அளவீடுகள் - health service metrics கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரே எண்ணிக்கையாகத் தான் இருக்கின்றன.
-
அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' உலகையே மாற்றிய கதை
@ஏராளன் உங்கள் அதிர்ச்சி புரிகிறது, ஆனால் உள்ளக நேர்மை- integrity இன்னும் பெருமளவானோரில் எஞ்சியிருக்கும் துறையாக விஞ்ஞானத் துறை விளங்குகிறது. அண்மைக்காலத்தில் தனது விஞ்ஞானத் திரிப்பினால் உலகின் கவனத்தை ஈர்த்த ஒருவர் - துரதிர்ஷ்டவசமாக- ஒரு சிறிலங்கன் அமெரிக்கர். https://www.wsj.com/science/university-rochester-ranga-dias-superconductor-misconduct-aa2f9fd4 மிகைக் கடத்திகள் (super conductors) எனப்படும் மின்சாரக் கடத்திகள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின்சாரத்தைக் கடத்துவன. இதனாலேயே சாதாரண பயன்பாட்டிற்கு இன்னும் வராமல் இருக்கின்றன. ரங்கா டயஸ் என்ற இந்த பௌதீகவியலாளர், அறை வெப்ப நிலையில் வேலை செய்யும் மிகைக் கடத்தியை தாம் கண்டு பிடித்துள்ளதாக அறிவித்து, விருதுகள் சில பெற்றார். இன்னொரு விஞ்ஞானியுடன் சேர்ந்து ரங்கா டயஸ் செய்த "விஞ்ஞானத் திரிப்பு" சில மாதங்களிலேயே நியூசாகி, ஒரு வருடம் விசாரணையில் இருந்து, இப்போது முழுவதும் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. இவர் போன்றோரால், அல்லும் பகலும் உழைக்கும் பௌதீகவியலாளர்கள், விஞ்ஞானிகளுக்கும் அவமானம் நேர்ந்திருக்கிறது.
-
அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' உலகையே மாற்றிய கதை
ஐன்ஸ்ரினின் சிந்தனைச் சோதனைகளைப் பற்றி அறியும் போது வியப்பே மிஞ்சுகிறது. இன்றைய கால விஞ்ஞானத்தில், ஒரு அறையில் அமர்ந்து பேப்பரும் பென்சிலுமாக யோசிக்கும் சிந்தனை முறைமை மிகவும் அருகியிருக்கிறது. காலக் கட்டுப்பாடுகள், பிரசுரிக்க வேண்டுமென்பதற்காக அரைகுறையாக செய்யப் பட்ட பரிசோதனைகளின் முடிவுகள், பதவியுயர்வுக்காக திரிக்கப் பட்ட ஆய்வுகளைப் பிரசுரித்தல் என விஞ்ஞான முறைமையும் பெரும்பாலும் மாறி விட்டது. மிக அடிப்படையான விடயங்களை விஞ்ஞானிகள் கண்டறியும் போது, அந்த அறிவை உடனடியாக வருமானம் தரும் ஒரு பொருளாக மாற்றிக் கொள்ள முடியாவிட்டால், அந்த அறிவிற்கு அரச மானியமும் கிடைக்காத நிலை இருக்கிறது. National Science Foundation -NSF என்ற அடிப்படை விஞ்ஞானத்தை ஆதரிக்கும் நிறுவனத்திற்கான நிதியை, விஞ்ஞானம் புரியாத ஈலோன் மஸ்க்கின் வாலுகள் அண்மையில் நிறுத்தியது இந்த "இலாபம் தரும் விஞ்ஞானம்" என்ற கோசத்தினால் தான்!
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
பூமியில் பிரான்சிஸ் கடைசியாக சந்தித்த பிரபலம் "சாத்தானின் தூதுவர்" ! இந்த நல்ல ஆன்மாவுக்கு இப்படியொரு பிரியாவிடை! AP NewsVance meets Pope Francis on Easter Sunday after tangle ov...U.S. Vice President JD Vance has met briefly with Pope Francis on Easter Sunday as the pontiff recovers from pneumonia.
-
சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா!
https://www.usatoday.com/story/news/politics/2025/04/16/trump-china-tariff-245-percent-trade-war/83114710007/ அப்படி உயர்த்தப் படவில்லை. ஆனால், 145% வரி விதித்த ஆவணத்திலேயே ஒரு இடத்தில் "245%" என்று இருக்கிறதாம்! பன்னிரண்டாம் வகுப்புப் பெயில் விட்ட கேசுகளை intern களாக வைத்துக் கொண்டு தயாரித்த ஆவணம் இப்படித் தான் எழுத்துப் பிழைகளோடு இருக்கும்😂!
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
ம்..வாதவூரான்😂?
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
இப்படிப் பல பேரைப் பார்த்தாயிற்று இங்க, but nice try😎! தகவல்களை உங்கள் உழைப்பால் பெறுங்கள், சோம்பேறித்தனத்தை நான் ஊக்குவிப்பதில்லை!
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
நான் உங்களுடைய PA அல்ல😂! இருக்கிறது, தேடுங்கள். அல்லது, தமிழ்சிறியிடம் கேளுங்கள்😎!
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
இதற்குத் தான் மேலே இருக்கும் கருத்துக்களை வாசித்து விட்டு உரையாடலில் கலந்து கொள்ள வேண்டுமென்பது. "சுமந்திரன் சர்வதேச விசாரணை வேண்டுமெனக் கேட்கவில்லை" என்று நீங்கள் சொன்னதும் பொய் தானே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்? அதையும் நான் சொல்லவில்லை என்பீர்களா🤣?
-
கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
இதைப் பார்த்ததும், Seinfeld நகைச்சுவைத் தொடரில் ஜேசன் அலெக்சாண்டரின் பகிடி நினைவுக்கு வந்தது! பார்த்து ரசியுங்கள்😂!
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
"சர்வதேச விசாரணை வேண்டாம் என்றார்" என்பதில் இருந்து "சர்வதேச விசாரணையைக் கேட்கவில்லை/கதைக்கவில்லை" என்று இறங்கி வந்திருக்கிறீர்கள்😂! இதுவும் கூட தீவிர முகப் புத்தக வாசகர்களின் கருத்தேயொழிய உண்மையல்ல. 2013 இல் இருந்து 2021 வரை ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் முயற்சிகளுக்கு சுமந்திரன் ஆதரவு தெரிவித்த, வரவேற்ற எழுத்துக்களும், பேட்டிகளும் இருக்கின்றன. தேடுவதற்கு உங்களுக்கு மனம் வர வேண்டும்! இதை உங்களுக்கோ, யாருக்குமோ கற்பிக்கும் நோக்கம் எனக்கில்லை. ஆனால், சுருக்கமாக, 2015 OISL இலும், பின்னர் 2021 SL Accountability project இலும் ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு சிறிலங்கா அரசை இந்த விசாரணையில் சம்பந்தப் படுத்துவோம் (engage) என்று கூறியதை "சிறிலங்கா நடத்தும் விசாரணை" என்று சிலர் திரிக்க முயற்சித்தனர். அப்படி இல்லை என்று சுமந்திரன் சொன்ன வேளையில் "சுமந்திரன் உள்ளக விசாரணை போதும் என்கிறார்" என்ற வதந்தியை முன்னின்று பரப்பியவர் கஜேந்திரகுமார் பா.உ. ஏன்? முன்பகை, தொழில்துறை ரீதியான பொறாமை (கோர்ட் படி ஏறாத பரிஸ்ரர் கஜேந்திரகுமார் பா.உ😎), அத்தோடு தேர்தல் வெறுப்புப் பிரச்சாரம். தற்போதும் இதே போல "எக்கிய ராஜ்ஜிய, முக்கிய ராஜ்ஜிய" என்ற சொற்சிலம்பத்தைக் கஜேந்திரகுமார் பா.உ கையிலெடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். இவ்வளவு சுமந்திரனை காய்ச்சி ஊத்தும் கஜேந்திரகுமார், ஒரு பரிஸ்ரராக இருந்தும், எந்த துரும்பையும் இது வரை நகர்த்தவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, காணாமல் போன ஒவ்வொரு தமிழ் நபருக்கும் ஆட்கொணர்வு மனு -Habeas corpus போட்டிருந்தால் கூட ஏதாவது சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கும். மறு பக்கம் சுமந்திரன் சில பயங்கரவாத தடைச் சட்ட சந்தேக நபர்களுக்காக ஆஜராகி வென்றது அப்படியே மறக்கப் பட்டு விட்டது! #சவுண்டுக்கு மரியாதை😎! இதை வைத்தே சில அரசியல்வாதிகள் பிழைத்துக் கொள்வர்!
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
உண்மை..பேசிக் கொண்டே இருப்பது சிறப்பு! ஏமாந்த ஒரு குழுவினர் - கன பேர் அவசியமில்லை - வாக்குப் போட்டால், பொன்னம்பலம் குடும்ப பாரம்பரியமாக பா.உ வாகவே நீடித்து, ஓய்வு பெற்று வசதியாக இருக்க..பேசிக் கொண்டே இருக்கலாம்😂! ஏனையோரும் அதையே செய்தார்கள்.
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
"சும் இப்படி சொன்னாராம்" என்று முகநூலில் வந்து தமிழும், ஆங்கிலமும் தெரியாதவர்கள் போட்ட துணுக்குகளை நான் உங்களிடம் கேட்கவில்லை. "சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக விசாரணை போதும்" என்று சுமந்திரன் சொன்னதை - எழுத்தோ, பேட்டியோ- இங்கே இணையுங்கள். வந்ததோடு இன்னொன்றையும் தெளிவு படுத்தி விட்டுப் போங்கள்: "குறுக்கே விழுந்து தடுக்க" 😎சுமந்திரன் இப்போது இல்லை! இந்த தடை நீங்கிய சூழலில் உங்கள் பொன்னம்பலம் பா. உ இனப்படுகொலை விசாரணையை எவ்வளவு தூரம் முன்னகர்த்தியுள்ளார்? ஆதாரம் கேட்டவுடன் பொட்டுக்கால் புகுந்து எஸ் ஆகி விட்டு, புலவர் வந்ததும் "நேர சேமிப்பு" என்ற காரணத்தோடு வந்திருக்கிறீங்கள்! யாழ் வாசகர்களை முழு முட்டாள்களாக நினைத்துக் கொண்டு, சமூக வலை ஊடகங்களில் எவராவது உங்கள் தலையில் அரைக்கும் மிளகாயை அப்படியே இங்கே கொண்டு வந்து சம்பல் செய்யும் போது, நேரம் வீணாவதேயில்லை என நினைக்கிறேன்😎!
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
பாலியல் குற்றவாளி, பாலியல் குற்றம் சாட்டப் பட்டவர் ஆகியோரின் பக்கம் பலகாலம் advocate ஆக இருந்து விட்டு, திடீரென்று குற்றஞ் சாட்டுவோரின் பக்கம் பாய்வதும் "பெரிய பாய்ச்சல்" தான்😎!
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
தமிழ்சிறி, "சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக விசாரணை போதும்!" என்று சுமந்திரன் சொன்னதாக உருட்டுகிறார். நீங்களோ, அவர் இப்போது சர்வதேச மட்ட விசாரணை வேண்டும் என்று பேசுவதை "தேர்தல் வருவதால் பேசுகிறார்" என்கிறீர்கள். அப்படியானால், உங்களிடம் சுமந்திரன் சர்வதேச விசாரணை வேண்டாம் என்று சொன்னமைக்கான ஆதாரம் இருக்கிறது போல😂? அப்படியா? தலைவர்கள், பிரதிநிதிகளின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட வேண்டும். அதை, போலித் தகவல்களை வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை. பலமான காரணங்கள் இல்லமையால் தான் இத்தகைய போலிப் புரட்டுகளைத் தூக்கி வர வேண்டியிருக்கிறதோ என யோசிக்கிறேன்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
சில விசேட சூழ்நிலைகளில் இப்படி அதிகாரிகளால் ஆட்சி செய்யும் முறை நடந்திருக்கிறது. 20 ஆண்டுகள் முன்னர், பெல்ஜியத்தில் ஆட்சி பெரும்பான்மையில்லாமல் கவிழ்ந்து விட்டது. புதிதாக ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் பல மாதங்கள் "காபந்து பிரதமர்- caretaker PM" ஆட்சி செய்தார். அந்த வேளையில், குடிமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்கனவே இயற்றப் பட்ட கொள்கைகளை அமல் படுத்தி அன்றாட நிர்வாகத்தை அரச அதிகாரிகள் நடத்தினார்கள். "ஏற்கனவே இயற்றப் பட்ட கொள்கைகள்/சட்டங்கள்" - இது தான் முக்கியமான பொயின்ற்: புதிதாக கொள்கைகளைச், சட்டங்களை அதிகாரிகள் இயற்றவில்லை. இருக்கும் சட்டங்களை அமல் படுத்தினர். கடஞ்சா தன் கருத்திற்கு இந்திய யாப்பை சாட்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த யாப்பிலேயே இருப்பதன் படி, நிர்வாக அதிகாரிகள் "கொள்கைகளை அமல்படுத்துவோர்" என்று தான் இருக்கிறது. "கொள்கைகளை இயற்றுவோர் - policy makers" அல்லது அரசியல் தலைமையின் கொள்கைகளை தடம்/வழி மாற்றுவோர் என்று குறிப்பிடவில்லை.