Everything posted by Justin
-
சீமானுக்கு சிக்கலா..?
இது ஓணாண்டியாரின் புது அணுகுமுறை! எவனாவது வந்து எங்களை அடிக்க முதல் , நாமே ஒரு குச்சியை எடுத்து நமக்கு அடித்துக் கொண்டால்..!😂
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
யாழ் களத்திற்கு மீண்டும் "மறு மலர்ச்சிக் காலம்" இப்போது! அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், மடகஸ்கார் ஊடகங்கள் எல்லாம் அடக்கி, மறைத்து வைக்கும் "ஆதாரங்களை" வைத்து அப்படியே பின்பக்கத்தால் உருவி, புதிய பார்வையாக யாழ் வாசகர்களுக்கு மருதர் தருகிறார்! மேலோட்டமாகப் பார்த்தால் "சதிக்கதைகள்" போல தெரியும், ஆனால் உற்றுப் பார்த்தால் எல்லாம் ஏற்கனவே ரஷ்ய ஊடகங்களில் வந்து சக்கை போடு போட்டவை தான். செலன்ஸ்கியின் பாரம்பரிய பிறப்பிடம் கூட உக்ரைன் கிடையாது😎, ஏனெனில் அவரது பேரன் வழி யூதர்கள்! The Jewish ChronicleHow Jewish is Volodymyr Zelensky? Ukrainian president's h...Looking at Zelenksy’s Jewish upbringing, it's not always clear how observant the Ukraine president isஇதே யூத வழி வந்த செலன்ஸ்கி "யூதர்களைக் கொன்ற நாசிகளின் பக்கம் நிற்கிறார், நாசி அழிப்பிற்காக ரஷ்யா உக்ரைனை ஆட் கொள்ள வேண்டும்!" என்று எழுதிய பிறகு அது ஒட்டாமல் போக, பின்னர் "உணவுப் பஞ்சத்தை உருவாக்க அமெரிக்கா தான் தனது ஸ்லீப்பர் ஏஜென்டான புரின் மூலம் உக்ரைன் மீது போர் தொடுத்தது" என்றும் சிலர் எழுதியிருக்கிறார்கள். ஆதாரம்?? அமெரிக்கா மறைப்பதால் தர முடியாது😂! நீங்களும் சரி, நீங்கள் குறிப்பிட்ட இரு கள உறுப்பினர்களும் சரி, விசுகர் மேலே எழுதியதற்குக் கிட்டவாகத் தன்னும் எழுதவில்லை உக்ரைன் விடயத்தில். எந்த நாட்டின் எதிர்ப்பாளர்களாகவும் இருப்பதில் பெருமை, சிறுமை இல்லை! ஆனால், தரவுகளை வைத்து உரையாடாமல் சதிக்கதைகளையும், "அமெரிக்கா பதுக்கிய" ஆதாரங்களை மட்டும் வைத்து உரையாடும் போது அது சவாலுக்குள்ளாகும்! இது யாழில் இருக்கும் சிறப்பியல்புகளில் ஒன்று!
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
மருதர், நீங்கள் ரஷ்யாவை உலக வரை படத்தில் மட்டுமல்ல, 90 களில் மொஸ்கோவில் இறங்கியும் பார்த்தவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இங்கே குழு வாதம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், மிக்க நன்றி😂! அது உங்களிடமிருந்து தான் அதிகம் உருவாகிறது என நான் நினைக்கிறேன்! அதை விடுங்கள்! பைடன் உக்ரைனுக்கு உதவியது, ரஷ்யா இராணுவ பலம் மூலம் ஐரோப்பாவை ஆட்டையைப் போட்டு ஹிற்லர் 2.0 ஆக உருவெடுக்காமல் தடுப்பதற்குத் தான். இந்தப் பாதுகாப்பு அச்சம் தான் நேட்டோவுக்கு மேலும் இரண்டு ஸ்கண்டினேவிய நாடுகளை உறுப்பினர்களாகச் சேர்த்திருக்கிறது. பலஸ்தீன விடயத்தில் அமெரிக்கா மட்டுமல்ல யாரும் எதுவும் ஒரு எல்லைக்கு மேல் செய்ய இயலாது. ஹமாஸ், ஈரான், ஹிஸ்பல்லா என எல்லாப் பக்கமும் இருந்து வரும் இஸ்ரேல் மீதான் அச்சுறுத்தல் நீங்கினால் ஒரு தீர்வுக்கான இடை வெளி கிடைக்கலாம், மற்ற படி எந்த முன்னேற்றமும் யாரும் வெளியே இருந்து ஏற்படுத்த முடியாது. அமெரிக்கா கொடுத்த 500 பில்லியனுக்கு மேலான விலை அது உக்ரைனின் கனிம வளத்தில் 50% இனைக் கேட்பது. பைடனும் எதிர்பார்த்திருப்பார், ஆனால் இப்படி "நாட்டைஎனக்கு விற்று விடு! இல்லா விட்டால் புரின் என்ற வேட்டை நாயை அவிட்டு விடுவேன்!" 😎 என்று மிரட்டியிருக்க மாட்டார். இது தான் "அறளை பேர்ந்த யாழ் கள அறம் பேசுவோரின்" நிலைப்பாடென நினைக்கிறேன்.
-
எங்களின் ஆளுமைகள் எங்கள் இனத்தின் அடையாளம் என் தங்கைக்கு நாமும் ஆதரவு குடுப்போம்
மிக்க மகிழ்ச்சியான வெற்றிக் கதை இது! றௌடிக் கும்பல்கள் தமக்குள் சுட்டுக் கொண்ட போது திசை மாறிப் பாய்ந்த தோட்டாவினால் சிறுமியாக இருந்த இவர் பாதிக்கப் பட்டாரென நினைக்கிறேன். யாழில் இந்தச் செய்தி பகிரப் பட்டிருக்கிறது. காலம் எவ்வளவு விரைவாகப் போய் விட்டது? நாங்களெல்லாம் டைனோசர்கள் போல இன்னும் யாழில் உலாவருகிறோம்😂!
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ப்றெக்சிற் பிரிட்டன் மக்களின் முடிவு! அதை கொள்கையளவில் எதிர்த்தாலும், தொழிற்கட்சி அதை நிராகரிக்கவோ மாற்றவோ முயற்சிக்கவில்லை. ப்றெக்சிற்றுக்கு முன்னரே, உக்ரைன் மக்கள் "ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவில் சேர்தல்" ஆகியவற்றிற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் - இது அவர்களின் முடிவு! ஆனால், பிரிட்டன் கேஸ் போல அங்கே நடக்கவில்லை. ரஷ்யாவின் கைப்பொம்மையான அப்போதைய உக்ரைன் தலைவர் மக்கள் தீர்ப்பை நிராகரித்து சட்டமியற்ற முயன்ற வேளையில், மக்களும் உக்ரைன் நாடளுமன்றப் பிரதிநிதிகளும் சேர்ந்து அவரைப் பதவி நீக்கி, மொஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார்கள். வேறொரு நாட்டின் மக்களின் தீர்ப்பை, ஆயுத பலம் கொண்டு மாற்ற முயல்கிறது ரஷ்யா என்ற ஜனநாயக அமைப்பு சீர் குலைந்த நாடு. இதை சகஜமாக்குவதால் வரும் ஆபத்துக்களை யோசிக்காமல் எம்மவரும் புரின், ரஷ்யா விசிறிகளாக வலம் வருவது வேடிக்கை!
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
வரலாற்றுப் புத்தகங்களை மட்டுமல்ல, கேஸ் கோப்புகள்😎, தரவுகள் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும். அதன் பிறகு அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்ளலாம்! எதையும் வாசிக்காமல் "முகப் புத்தகத்தை" மட்டும் வாசித்தால் இப்போது அமெரிக்கா இருப்பது போல முழு உலகமும் மாறுவதைத் தடுக்க இயலாது!
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
நீங்கள் "விழுந்து விழுந்து" சிரிக்காத திரியே யாழில் இல்லைப் போல இருக்கிறதே? இப்படி அடிக்கடி விழுந்து எழுவதால் , ஏனையோர் எழுதுவதைத் தலைகீழாகப் புரிந்து கொண்ட ஒருவராக இருக்கிறீர்கள் என அஞ்சுகிறேன்😎. நெரன்யாஹுவுக்கு யார் சிலை வைத்தார்கள் இங்கே? நன்னிச் சோழன் இஸ்ரேல் செய்வது சரி என்று தீவிரமாக ஆரம்பத்தில் கருத்திட்ட போதே, இங்கே எதிர்த்து எழுதியவர்கள், புரின் விசிறிகள் அல்ல, உக்ரைனின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொண்ட யாழ் உறவுகள் தான் நெரன்யாஹுவையும் நன்னிச் சோழனையும் கண்டித்தார்கள். இதே நிலைப்பாடு தான் இப்போதும் இருக்கிறது. உக்ரைன் பக்கம் நியாயம், ரஷ்யாவின் பக்கம் அநியாயம். உங்கள் "விருப்ப நாயகனான" ட்ரம்ப் புரின் பக்கம் சாய்வது எப்போதோ எதிர்பார்க்கப் பட்டது. இதெல்லாம், மாறவில்லை. இந்த நிலைப்பாடுகளுக்குப் பின்னால் அறவுணர்வு இருப்பதால் இவை எப்போதும் மாறாமல் இருக்கும்! ஆனால், உடைந்த அறித்திசைகாட்டியோடு உலாவரும் சிலரால் திரிக்கேற்ப நாணல் போல சாய்ந்து கொள்ள முடியும்!
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
இந்த அர்த்தத்தில் தான் நீங்கள் சிவப்பு வர்ணம் தீட்டினீர்கள் என்று நீங்கள் சொன்னால் யார் அதை மறுக்க முடியும்? ஆனால், ஒரு சிறு சந்தேகம் வருவது இயல்பானது: நீங்கள் குறிப்பிட்ட படி நவீன தொலைபேசி, அதில் இருக்கும் மென்பொருள் ஆகியவை பற்றிப் பேசியிருந்தால், அந்தப் பகுதிகள் சிவப்பு வர்ணமில்லாமல் இருக்கின்றனவே, ஏன்? மற்றபடி, இது பெண் குழந்தையின் வாழ்க்கை முடிவெல்லாம் அல்ல என்று நான் நினைக்கிறேன். இது அவரது தவறல்ல என்ற எண்ணத்தை உருவாக்கி, அவரை நகர்ந்து செல்ல வைக்க முடியும்! இதை வலியுறுத்தித் தான் பாலியல் இம்சைக்குள்ளான வளர்ந்தவர்களை மன ஆற்றுப் படுத்தல் மூலம் வழமை நிலைக்குத் திருப்புகிறார்கள்.
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
எழுத்துப் பிழையைக் கண்டறிய உதவியமைக்கு நன்றி. இந்த "சட்ட ரீதியான பாலியல் வல்லுறவு" என்ற அடிப்படை விடயம் கூட இடது சாரி வலது சாரி என்ற கண்ணாடியூடாக எதிரெதிராகத் தான் பார்க்கப் படுகிறது. இங்கே பல்கலை களில் பெண் மாணவிகளுக்கு பெரும் ஆபத்தான ஒரு விடயமாக இருக்கும் ஒன்று: அல்கஹோல் அல்லது Rohypnol என்ற தூக்க மாத்திரை கலந்த பானத்தைக் கொடுத்து விட்டு, அவர்களின் சம்மதமின்றி உடலுறவு கொள்ளும் கயவர்கள். இது statutory rape. இதற்கு தீர்வாக ஒபாமா நிர்வாகம் செய்தது, இத்தகைய கேஸ்களில் சந்தேக நபர்களாக இருப்போரை விசாரணை முடியும் வரை கல்லூரிகள் இடை நிறுத்தும் படி ஒரு ஆணையை அமல் படுத்தியது. ட்ரம்ப் 2017 இல் பதவிக்கு வந்தவுடன் ரத்துச் செய்த அரசு ஆணைகளில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக நடந்த வழக்கு ஒன்றில் ஒரு பழமை வாத நீதிபதி "பெண்கள் குறைவாக மது அருந்துவதால் இந்தக் குற்றங்களைக் குறைக்கலாம்" என்று கூறி பாரிய கண்டனங்களுக்குள்ளானார். இன்னொரு வழக்கில், இத்தகைய செயலைச் செய்த ஒரு பணக்கார வெள்ளையின மாணவரை சிறையில்லாமல் வெளியே விட்ட நீதிபதியை அகற்றி வழக்குகளை அவர் விசாரிக்காமல் தடுத்தார்கள். எல்லா சமூகங்களிலும் வலது சாரிகள் "ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து, தண்ணி கண்ட இடத்தில் கழுவிக் கொள்ளலாம்" என்ற "தாராள"😎 சிந்தையுடையோர்!
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
மருதர் சிவப்பில் காட்டியிருக்கும் பகுதிகள் மூலம் "சிறுமியில் தான் தவறு, பெடியள் வீணாக மாட்டுப் பட்டு விட்டார்கள்" என்ற கருத்து உருவாக்கப் படுகிறதென ஊகிக்கிறேன். இந்தியாவில் 18 வயதுக்குக் குறைந்தோர் சட்டப் படி சிறுவர்கள். மருதர் உட்பட, எல்லோரும் வலு கவனமாக இருக்க வேண்டிய விடயம், எந்த நாட்டிலும் "சிறுவர்" என்று வகைப்படுத்தப் படும் நபர்களோடு உறவு வைத்துக் கொள்வது, சட்ட ரீதியான பாலியல் வல்லுறவாகத் (statutory rape) தான் வகைப் படுத்தப் படும். அது சிறுவர்/சிறுமி விரும்பி வந்தாலும் கூட சட்ட ரீதியான பாலியல் வல்லுறவு தான்!
-
இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை
மோடியின் கொள்கைகளுக்கு நான் ஆதரவில்லை, ஆனால் "மோடிக்கு ஆங்கிலம் விளங்கவில்லை, அதனால் தான் அவர் இந்தியில் பேசினார், நிருபரின் ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் இருந்தார்" என்பது உலக அறிவு குறைவான முகநூல் ஆய்வாளரின் உருட்டல் மட்டுமே. நாடுகளின் தலைவர்கள், வேறு நாடுகளில் உத்தியோக பூர்வமாகப் பேசும் போது அவர்களது தாய் மொழி அல்லது தேசிய மொழியில் பேசுவது வழமை. இது ஆங்கிலம் தெரியாமையால் அல்ல, ஒரு வகையான பாரம்பரியம் -diplomatic tradition என்று தான் கருதப் படுகிறது. புரின் ட்ரம்போடு சேர்ந்து பத்திரிகையாளரைச் சந்தித்தாலும் புரின் ரஷ்ய மொழியில் தான் பேசுவார். இதன் அர்த்தம் புரினுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதல்ல! முகனூல் ஆய்வாளர் சொல்வதற்கு மாறாக, மோடிக்கு நன்கு ஆங்கிலம் தெரியும். கீழே இருக்கும் இணைப்பில் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை இருக்கிறது. அப்படியானால் ஏன் நிருபரின் கேள்விக்குப் பதில் தரத் தாமதம்? ஏனெனில் அது கேள்வி என்பதை விட மோடி வாயால் டரம்பைப் புகழ வைக்க ஒரு வலதுசாரி ஊடக நிருபர் (Fox or NY Post) போட்ட தூண்டில். "பைடனின் பலவீனமான தலைமையோடு, ட்ரம்பின் பலமான நிர்வாகத்தை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?" என்பது தான் கேள்வியின் சுருக்கம். மோடி போன்ற பழுத்த அரசியல் ராஜதந்திரிகள் இது போன்ற ஒரு தூண்டில் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தான் இருப்பர். என் பலமான சந்தேகம், இந்தப் பதிவை எழுதிய முகனூல் பதிவருக்கு ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி விளங்கவில்லை😂!
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
உங்களிடம் இந்த முரண்பாட்டை அடிக்கடி காண்கிறேன், எனவே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. ஒரு பிழையைச் சுட்டிக் காட்டுவது எப்படி அழிவுக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுக்கும் என எனக்கு விளங்கவில்லை! புலிகள் பற்றி ஐலண்ட் எழுதவில்லை, புலிகளுக்கு பணம் சேகரித்த ஆட்கள் பின்னர் வழி தவறிப் போயிருப்பதைச் சொல்கிறார் (இதையே மேலே நானும் அமைப்புகளை உடைப்போருள் ஒரு தரப்பாகச் சுட்டியிருக்கிறேன்). இதற்கு, இல்லாத புலிகள் அமைப்பு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நீங்கள் ஐலண்ட் போன்றவர்களிடம் காட்டும் ஆத்திரத்தில் ஒரு துளியைத் தன்னும் உங்களுக்குத் தெரிந்த நேர்மையற்ற சேகரிப்பாளர்களிடம் காட்டுவதில்லை.
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
இந்தப் பெரியார் சிலையை, வைக்க முன்னரே உடைக்க வைபரில் திட்டம் போடும் தமிழர்கள் சட்ட விரோதமாக வைக்கப் பட்ட புத்தர் சிலை/விகாரைகள் என்பவற்றிற்கு ஏதாவது திட்டம் இது வரை போட்டிருக்கிறார்களா? ஒரு பொது அறிவுக்காகக் கேட்கிறேன்😎!
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
தனிப்பட்ட முறையில் தெரியாது, ஆனால் இங்கே நீங்களே பகிர்ந்திருக்கிறீர்கள், அதைத் தான் பயன்படுத்துகிறேன். உங்களுக்கு என்னைத் தனிப்பட தெரியும் போல: சரியாகக் "கூமுட்டை" , "குரைக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறீர்கள்😎!
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
சீமான் சும்மா கிடந்த பெரியாரை சொறிந்தால் சீமான் தம்பிகளும் பெரியாரையும், ஒரு படி மேலே போய் "பெரியாரில் குறையில்லை" என்போரையும் சொறிவர் - இதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்😂! எனக்கு மீசை இல்லை, வேறெதை எடுக்கிறது? இருந்தாலும் கவலையில்லை - உங்கள் வீரம் அறிந்திருப்பதால்!
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
சரி! வழமை போல எல்லாம் வரும், "பதில் வராது"😎. நீங்கள் போகப் போறதில்லை எண்டு விளங்குது!
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
தம்பி, நீங்கள் பெரியாரை மட்டுமல்ல, யார் எழுதியதையும் "படிப்பதில்லை" என்பது தெரியும்! "காட்சிப் பிரியர்" அவ்வளவு தான்😎. சிலை உடைக்க நீங்கள் போவீங்களா எண்டு சொல்லுங்கோ!
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
அப்படியே "தீவிர தமிழ் தேசியர்கள்" காவிச் சட்டையும், நாமமும் அணிந்தால் இரண்டையும் தாண்டி அவர்களுக்குள் இருக்கும் "தமிழ் தேசியத்தை" ப் பாருங்கள்😎!
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
கடந்த ஒரு மாதமாக, 3 திரிகளில் பகிரப் பட்ட தரவுகளை, வரலாற்றை வாசிக்காமல் சீமான் தம்பிகளின் யூ ரியூப் மட்டும் பார்த்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. ஈழத் தமிழ் ஜேர்மனியரான சபேசனின் பேட்டி கூட யூ ரியூபில் தான் வந்தது, பார்க்கவில்லையா? பெரியாருக்கு எங்கள் மண்ணுடன் தொடர்பிருக்கிறது, அம்பேத்கருக்கு இந்தியா தாண்டி உஅலகம் பூராவும் தொடர்பிருக்கிறது! (போய் ஒருக்கா உடைச்சுப் பார்க்கச் சொல்லுங்கோ, சீமான் தம்பிகளான உங்கள் நண்பர்களை! நீங்கள் புத்திசாலி மறந்தும் போயிடாதையுங்கோ😎!)
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
நல்ல விசயம் தானே? காந்திக்கு, எம்ஜிஆருக்கு, ஈழத்தில் சாதியை ஊக்கிவித்த நாவலர் பெருமானுக்குக் கூட சிலை இருக்கும் போது, சாதி எதிர்ப்பை முன்னிறுத்திய பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் சிலை வைப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை! இதை அருண் சித்தார்த் செய்வதால், சிலர் வந்து "இது சிங்கள ஷதி" என்று ஆரம்பிப்பர்! அருண் சித்தார்த்தை ஓரமாக ஒதுக்கி விட்டு பெரியாரையும், அம்பேத்கரையும் பார்க்க வேண்டும் (இதை "தமிழ் நாட்டு அரசியலை தமிழ் நாட்டின் அரசியலாக மட்டும் பாருங்கள்" என்ற ஒரு கள உறவின் அட்வைசில் இருந்து கற்றுக் கொண்டு பாவிக்கிறேன்😎!)
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
இந்தப் பிரச்சினை பல அமைப்புகளில் இருக்கும் போல தெரிகிறது. உலகத் தமிழர் அமைப்பின் இணையத்தளத்தில் பொஸ்கோ மட்டும் தான் பிரான்சில். அவரை விட ஏனைய இருவர் சுவிசிலேயே இருக்கிறார்கள் என்று இருக்கிறது. அந்தத் தளம், 2022 இன் பின்னர் புதுப்பிக்கப் படவில்லை. அமைப்புகளை இப்படி ஒழுங்காக ஒரு பொறுப்பான தளம் கூட இல்லாமல் முகநூலில் நடத்துவது சரியான வழியாகத் தெரியவில்லை. இன்னொரு விடயம்: ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொரு அமைப்பாக செயல்படும் தனிமைப் படுத்தப் பட்ட (compartmentalized) மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். உலகத் தமிழர் இயக்கம், தனித் தமிழீழம் என்பது பற்றியும் பேசுகிறது. அதன் உறுப்பினரான பொஸ்கோ மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்ற அடையாளத்தையும் சுமக்கிறார். தமிழர்கள் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், தமிழர்களின் பிரச்சினை தெரியாத ஐரோப்பியருக்கு இது எப்படியான தோற்றப் பாட்டை அளிக்கும் என்பது இரகசியமல்ல.
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
சரி, இதைத் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறேன், மன்னியுங்கள்! ஆனால், இப்படி இருக்கும் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட என்ன காரணங்கள் என்று பார்த்தால்: 1. இலக்கு மாறியமை. 2. இலக்கு மாறாமல், அதை அடையும் வழிகள் மாறியமை. 3. சொத்து/வருமானம் பற்றிய பிரச்சினைகள். 4. யார் தலை எனும் ஈகோ இவற்றுள், 1 இனை தனித்தனியாக துரோகமா அல்லது இலக்கு குறுக்கப் பட்டதா என்று ஆராய்ந்து தான் தீர்ப்பெழுத முடியும். எடுத்த வாக்கில் "துரோகி" என்று சொல்ல முடியாது. 2 வது காரணம், என் பார்வையில் துரோகம் அல்ல. சாத்தியமான வழிகள் வெளிச்சூழலுக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். இதனை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், எதிரிகளாகப் பார்க்க வேண்டியதில்லை. சிறந்த உதாரணம், தாயகத்தில் தமிழரசுக்கும், தேசிய முன்னணிக்கும் இடையேயான வேறு பாடு. 3, 4: இது எங்கள் சமூகத்தில் இருந்து அகற்றப் பட வேண்டிய களைகள். இக்காரணங்களால் அமைப்புகளைப் பிரிப்போரை (இவர்களைத் தான் சாந்தி தன் பதிவில் சுட்டியிருந்தார் என நினைக்கிறேன்) ஒற்றுமை வேண்டுமென்பதற்காக சேர்த்து வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படி வைத்திருப்பது, மட்டத்தேள், கொடுக்கான், பாம்பு ஆகியவற்றை "இயற்கையை நேசிக்கிறோம்" என்ற பெயரில் வீட்டினுள் வைத்திருப்பது போல ஆகும். மேற்கூறிய காரணங்கள் தான் ஒருவரை தமிழ் தேசிய அமைப்புகளில் ஒற்றுமை கருதி வைத்திருப்பதா அல்லது அகற்றுவதா என்று தீர்மானிக்க வேண்டுமென நினைக்கிறேன்.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
"......சிக்க வைத்தது மாதிரி.." சீமான் ஆதரவாளர்கள் "டிசைன்" என்று நான் சொன்ன மாதிரியே நடந்திருக்கிறீங்கள் பார்த்தியளா😂? மரியாதையாகப் பேசிக் கொண்டிருந்தவரை நோக்கி ஒருமையில் வசவு ஒருவர் எறிகிறார். நீங்களும் அதே திரியில் அவருக்கு பச்சைகள் குத்தி ஊக்குவித்துக் கொண்டு நின்றீர்கள். இப்ப ஏதோ தூங்கி எழுந்த அப்பாவி போல "சிக்க வைச்சான், மச்சமுள்ள மச்சான்" என்று புரளி கிளப்புகிறீர்கள்! இது தான் நான் குறிப்பிடும் "மென்ரல் டிசைன்": "நான் சொல்லும் எதற்கும் நான் பொறுப்பல்ல" என்ற "பொறுப்பேயில்லாத தன்மை". இது சீமான் அலை எங்கள் ஆட்களிடையே விதைத்திருக்கும் ஒரு அரிய குணம்! எங்களுக்கு ஆப்பு, சீமான் போன்ற சாக்கடைகளுக்கு வரம்! உங்களை நியூஸ் 18 லோகோவைத் திருடி மீம் போட்டு ஏமாற்றியிருக்கிறார்கள், அதை வைத்து நீங்கள் இங்கே மொக்கேனப் பட்டீர்கள். ஏன் அப்படி செய்தார்கள் என்று சீமான் தமிகளிடம் கேட்டு விடை பெற்றீர்களா? இல்லையென நம்புகிறேன்!
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
பையன், நான் சொல்லும் விடயத்திற்கு "எனக்குப் பாடமெடுக்க வேணாம்" என்ற பதில் தான் வருமென்றாலும், சொல்ல வேண்டியது என் கடமை. உங்களை சீமான் அணி மட்டுமல்ல, இங்கே இருக்கும் சீமான் அணியின் ஆதரவாளர்களும் நன்கு ஏமாற்றுகிறார்கள். இப்போது பலர் முன்வந்து சீமான் செய்திகளில் கருத்துரைக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், சீமான் ஆதரவாளர்கள் கருத்துரைக்காமல் இருக்கக் காரணம், அவர்களாலேயே முட்டுக் கொடுக்க முடியாத கையறு நிலை! உதாரணமாக, இறுதியாக நீங்கள் சீமான் தொடர்பான திரியில் இருந்து எப்படி வெளியேறினீர்கள் என்பதை நினைவு மீட்டிப் பாருங்கள்? நியூஸ் 18 இன் லோகோவைத் திருடி "சீமானுடனான விவாதத்தில் இருந்து ஒருவர் பின்வாங்கி விட்டார்" என்ற பொய்ச்செய்தியை சீமான் அணி பரப்ப அதை நம்பி இங்கே நீங்கள் அதிகம் பேசினீர்கள். ரசோ வந்து நியூஸ்18 அப்படியொன்றும் வெளியிடவில்லை என்றார். இறுதியில் நியூஸ் 18 விவாதம் நடக்கவில்லை (ஏனெனில் சீமான் சவாலை ஏற்றுக் கொள்ளாமல் மௌனமாக இருந்ததால்!). ஆனால், ஒரு பொய்ச் செய்தியினால் ஏமாந்த சோர்வில் நீங்கள் வெளியேறினீர்கள்! இப்போது மீண்டும் வந்து சீமான் அணியின் பொய்களை நம்பி சக கள உறவுகளைக் கண்ணியக் குறைவாக விளித்திருக்கிறீர்கள். இதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் கூட, கோபம் மீண்டும் உங்கள் கண்ணியக் குறைவான விளிப்பினால் பாதிக்கப் பட்டவர் மீதே பாயும். ஏனெனில் சீமான் ஆதரவாளர்களின் டிசைன் அப்படி!
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
தகவல்களுக்கு நன்றி. தேசம் நெற் ஜெயபாலன், நிஷா ஆகியோர் சொல்வதன் படி: கைது செய்தது யாரெனத் தெரியாது கைது செய்த போது அடையாளப் படுத்தல் நிகழவில்லை "கைது செய்கிறோம், இவை உங்கள் உரிமைகள்" என்று சொல்லப் பட்டதாகவும் தெரியவில்லை. 48 மணி நேரங்கள் யாருக்கும் கைது பற்றி அறிவிக்கவில்லை. இவை யாவும் உண்மையாக இருந்தால் (இவை உண்மை என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது) இது சட்ட விரோத தடுத்து வைப்புத் தான். தீர்வு? Habeas corpus எனப்படும் ஆட் கொணர்வு மனு. சுவிஸ் அரசியமைப்பிலேயே இது உள்ளடக்கப் பட்டிருக்கிறது. ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்திலும் (EHRC) இது இருக்கிறது. தடுத்து வைக்கப் படும் ஒருவருக்கு நீதிபதி முன் தோன்றி, அநீதியான கைதானால் விடுதலை பெறும் உரிமை இது. தேவையானவை எவை? சுவிசில் பணியாற்றும் அனுமதியுடைய ஒரு சட்டத் தரணி, அவருக்கான , கொடுப்பனவு, சமர்ப்பிக்க ஒரு நீதி மன்றம். என் கேள்விகள்: ஒரு மாதத்திற்குத் தடுத்து வைக்க பொலிசால் மட்டும் முடியாது. எனவே ஏற்கனவே ஒரு நீதிபதி முன் கொண்டு சென்றிருப்பார்கள். அந்த நேரம் பொஸ்கோவிற்காக யாராவது சட்டத்தரணிகள் கூட இருந்தார்களா அல்லது public defender அரசே வழங்கியதா? ஏன் கைது செய்தார்கள் என்று வெளியே இருப்போருக்குத் தெரியாது. பொஸ்கோவிற்கும் இது வரை தெரியாதா? அப்படி இருக்க வாய்ப்புகள் வெகு குறைவு. "தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தான் இவ்வாறு சந்தேக நபருக்கே காரணம் சொல்லாமல் தடுத்து வைக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. இவர் அப்படி இருக்க வாய்ப்பில்லை. எனவே, அவருக்குக் குடும்பம் இல்லா விட்டாலும், அவரது நண்பர்கள் "எங்களுக்கு ஒன்றுமே புரியல" என்று கையைப் பிசைவதை விட்டு, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது. பி.கு: உங்களதும், ஓணாண்டியாரதும் கருத்துகளுக்கு கோசான் தடித்த எழுத்தில் பதிலாகத் தந்திருப்பவை தான் எனது கருத்தும். எம்மவரான பொஸ்கொ - அவரது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் - மனித உரிமைச் செயல்பாடுகளால் இந்தக் கஷ்டங்களை எதிர் கொள்கிறார். இதில் இருந்து அவரைக் காக்க இங்கே கருத்துரைப்பது பெரிய பலனைத் தரும் விடயமாக இருக்காது. ஆனால், நீங்கள் இருவரும் பொஸ்கோவின் அனுசரணையில் ஒரு தமிழக சாக்கடை அரசியல் வாதியை தேசிய ஆர்வலராகக் காட்டவும், உங்களை "நாங்கள் எவ்வளவு உசத்தி தெரியுமா?" என்று காட்டவும் முயற்சி செய்வது தான் "ஆட்டுக்காக ஓநாய் அழும்" சீனாக எனக்குத் தெரிகிறது.