Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    6119
  • Joined

  • Last visited

  • Days Won

    68

Everything posted by Justin

  1. யார் அந்த ஊசிக்கெதிராகப் பிரச்சாரம் செய்த "பிரபல" வைத்தியர்கள்? அவர்கள் முகனூலில் மட்டும் தான் பிரபலம் - சிலருக்கு மருத்துவமனைகளோடு தொடர்புகள் கூட இல்லை! இதைத் தான் சொல்கிறேன் - தகவல்களின் தரம் பிரிக்கக் கூடிய திறன் தான் முக்கியம், எவ்வளவு தகவல்களைப் பார்க்கிறோம்/கேட்கிறோம் என்பதல்ல! தண்ணி, சாப்பாடு, கூடவே வந்த ஜீன்கள் - இவையெல்லாவற்றையும் சொந்தமாகச் சேர்க்கும் அறிவினால் வெல்லலாம் நுணா! இதையே "விதியை மதியால் வெல்லலாம்" என்றனர்!
  2. நீங்கள் இதைப் பகிடியாகக் கேட்டாலும் அமெரிக்கா ஐரோப்பா இடையே இந்த முட்டாள் தனத்தில் பெரிய இடைவெளி இருக்கிறது. ஐரோப்பாவின் தீவிர வலது சாரிகள் கூட கோவிட் விடயத்தில் சீரியசாகத் தான் இருந்தார்கள். அமெரிக்கர்கள் இந்த "சுதந்திரம்/ liberty" இன் பின்னால் செய்யும் பல முட்டாள் தனங்களில் ஒன்றாக கோவிட் போராட்டத்தையும் பார்த்தார்கள் - பலர் களப்பலியானார்கள்!
  3. ஒரு கட்டத்தில் கோவிட்டினால் மருத்துவமனையில் இருந்தோரும், கோவிட்ட்னால் இறந்தோரும் 99% பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதோர். தரமான தடுப்பூசியை அமெரிக்கா செய்தால் அது மாயமாக காற்றில் பரவி ஆட்களைக் காக்காது, ஒவ்வொருவரும் போய் எடுத்துக் கொள்ளவும் வேண்டும் என்பது தான் அமெரிக்காவும் இப்போது சீனாவும் கற்றுத் தரும் பாடம்! அந்தக் குழுக்கள் சீனாவின் கட்டுப் பாட்டில் இல்லை என்பது நம்பக் கூடிய விடயம் தான்! 😎
  4. அவை இப்போதுள்ள நிலைமை! ஆனால், இந்தியாவும் சீனாவும் இறப்பை மட்டுமல்ல, கோவிட் கேஸ்களின் உண்மையான எண்ணிக்கையைக் கூட சரியாக எடுக்கவில்லை என்ற செய்திகளும் வேறு வழிகளில் தான் வந்தன. அனேக ஆசிய நாடுகளில் பிரச்சினை எண்ணாமல் விடுவது (under-counting) , இதையெல்லாம் ஒழுங்காக எண்ணும் நாடுகளுடன் ஒப்பிடுவது முட்டாள் தனம்! அது ஏன் தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்போரே தகவல்களின் தரக்கட்டுபாடு பற்றிய அறிவின்றி இருக்கின்றார்கள் என்பது தான் என்னைத் தலை கீழாக நிற்க வைக்கிறது!🤔
  5. முதலில் , கோவிட்டினால் இறந்தவர்களை சீனா சரியாக எண்ணியிருக்க வேண்டும், அப்படி எண்ணியிருந்தாலும் அதை அவர்களின் மத்திய அமைப்பு வெளியே சொல்லியிருக்க வேண்டும். இது இரண்டும் நடந்ததா என்பதை அறிய நீங்கள் தலைகீழாக நிற்க வேண்டியதில்லை! 😂 சீனாவில் இருக்கும் ஊடக, தகவல் கட்டுப் பாடுகளைப் பற்றி நேராக நின்று யோசித்தாலே அது புரியும்!
  6. பொலிஸ் சேவை நகர மட்டத்தில் நிர்வகிக்கப் படுவது தான் சிறந்த தெரிவாக இருக்கிறது. ஆனால் இலங்கை போன்ற நாட்டில் நிதி ரீதியாக இதைச் செய்ய இயலாது (அரசியலும் இடம் கொடுக்காது என்பது இன்னொரு காரணம்). இலங்கையில் நகரங்களுக்கு மத்திய அரசு போல வருமானங்கள் இருப்பதில்லை. எனவே, குறைந்தது மாகாண மட்ட பொலிஸ் தான் உள்ளூர் மக்களைத் திருப்தி செய்யும் நிலைக்குக் கிட்டவாக வர முடியும் இலங்கையில்.
  7. ஓம், சீனாவில் அதிகம் மக்கள் அதிகம் இறக்கவில்லை! அதே போல இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப் பாட்டினால் ஒருவர் கூட இறந்ததாக அரச பதிவு இல்லை! இதையெல்லாம் நம்பும் அளவுக்கு மக்கள் - அதுவும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் மக்கள்- இருப்பது தான் disinformation இன் அமோக வெற்றி என்பேன்!😂
  8. உங்கள் எழுத்தை முழுவதும் வாசித்தேன். தவறைக் கவனித்தேன். ஆனால், தரவுத் தவறுகளை (factual errors) யாழில் சுட்டிக் காட்டும் போக்கினால் தான் நான் உட்பட்ட ஓரிரு உறுப்பினர்கள் மேல் பலருக்குக் காண்டும் ஜென்மக் குரோதமும் வந்தன! எனவே, இப்போது தரவுத் தவறுகளைச் சுட்டுவதில்லை! இதே தவறான தகவலை வேறெங்காவது பொது வெளியில் சொல்லி மொக்கேனப் படும் போது பட்டறிந்து தெளிந்தால் அதிலே ஒரு கற்பிதம் (lesson) இருக்கும் என்பதால் அப்படியே கடந்து விடுவது. ஆனால், அதை வைத்துக் கொண்டு நீங்கள் பிரேரித்த எண்ணக் கரு perception blindness சிலருக்கு யாழில் பொருந்துகிறது. உதாரணமாக, கோசான் பந்தி பந்தியாக எழுதிய வரலாற்றுத் தகவல்களை நீங்கள் மட்டுமல்ல, ரஷ்ய ஆதரவு நிலையெடுத்த பலரும் கடந்தே போயிருக்கிறார்கள் என்பது இந்தத் திரியிலேயே வெளிப்படுகிறது. இதன் காரணங்களில் நீங்கள் முன்வைத்த சார்பு நிலையும் ஒன்று. இதை விட முன்னுக்குப் பின் முரணான மன நிலையான cognitive dissonance உம் இன்னொரு காரணம். எப்படி? பிராந்திய அரசியலையும், உள்ளூர் இராணுவ அழுத்தங்களையும் மீறி நடை முறை (de facto) அரசை வைத்திருந்த ஈழத்தமிழர், அதைக் காக்க எடுத்த முயற்சிகள் எல்லாமே முற்று முழுதாக நியாயம் என்று வாதிடும் சில யாழ் உறவுகள், சர்வதேச சட்டப் படி ஒரு சட்டரீதியான (de jure) அரசை வைத்திருந்த உக்ரேன் அதைக் காக்க எடுக்கும் முயற்சிகளை தவறாகப் பார்க்கின்றனர், சிலருக்கு இந்த முயற்சிகள் நக்கலுக்குரியதாகவும் கூட இருக்குது. இத்தகைய ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொரு தொப்பியை மாற்றிப் போட்டுக் கொள்ளும் குழப்ப மன நிலை தான் cognitive dissonance.
  9. உக்ரைனின் வளமான மண் மேற்கில், ஒன்றும் விளையாத சைபீரிய மண் வடக்கு கிழக்கில். ஸ்ராலினின் வளப் பகிர்வுத் திட்டத்தின் கீழ் உக்ரேனியர்கள் உழைப்பில் விளைந்த தானியங்களை கிழக்கிற்கு அனுப்பி விட்டு மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் பட்டினியில் மடிந்தது செழியன் போன்றவர்களுக்குத் தெரியவராது! ஏனெனில் தலை மண்ணுக்குள்ளே! 😂
  10. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் காட்டுக்குள் ஒளிந்திருந்து சில தசாப்தங்களின் பின் வெளியே வந்த ஒரு ஜப்பானியப் படையினன் போல, 80 களிலேயே தங்கி விட்ட சிவப்புச் சட்டைக் காரர்கள் சிலர் இருக்கிறார்கள், இன்னும் (2014 இல் மட்டுமல்ல) எழுதுகிறார்கள்😂. ஏகாதிபத்தியம், சுரண்டல், முதலாளித்துவம், வர்க்கப் வேறுபாடு - இவையெல்லாம் ரஷ்யாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த 2014 இல் ஒருவர் இதை எழுதியிருக்கிறார் என்றால் நிச்சயம் செய்தி வாசிக்காத "டீப் ஸ்லீப் கேஸ்" தான் அவர்! 😎
  11. இதன் பதில் 2014 இல் யனுகோவிச் ஒறேஞ் மக்கள் புரட்சி மூலம் அகற்றப் பட்ட பின்னர் இடம் பெற்ற தேர்தலிலேயே இருக்கிறது: அந்தத் தேர்தலில் முதன் முறையாக ஐரோப்பாவை நோக்கி நகர விரும்பும் இரு கட்சிகளுக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை கிடைத்தது. ஏனைய தேசியவாத, ஐரோப்பிய எதிர் கட்சிகளுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்தன. யனுகோவிச் ரஷ்யாவுடன் வர்த்தக நோக்கங்களுக்காக சார முயன்றதைத் தான் உக்ரேனிய மக்கள் மேலிடத்திலிருந்து வந்த திணிப்பாகப் பார்த்தனர், அதனால் தான் அவரையும் அகற்றி அடுத்த தேர்தலில் ஐரோப்பிய ஆதரவுக் கட்சிகளை வெல்ல வைத்தனர் என்று தான் ஆய்வுகள் சொல்கின்றன. மற்றப் படி, இலாபமோ, நட்டமோ, செலவோ- உக்ரைன் யாரோடு சார வேண்டுமென்பதை உக்ரைனியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காதென நினைக்கிறேன்.
  12. விளைவுகளை எதிர்பார்க்கத் தவறியமைக்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள்: புட்டின் உவப்பில்லாத ஆலோசனைகளை ஏற்பதில்லை, ரஷ்யாவின் உண்மையான பலம் தெரியாமல் இருந்தார், கோவிட் நேரம் நேரடியாக ஆலோசகர்கள் சந்திக்க இயலாமல் போனதால் நிலைமை தெரியவில்லை, இப்படிப் பல. காரணம் எதுவானாலும், விளைவு ஒன்று தானே? மறு பக்கம், மேற்குலகு ஒரு அச்சுறுத்தல் தரும் நாட்டோடு இப்படித் தான் நடந்து கொள்ளும் என்பதற்கு 1914 முதல் தற்போது வரை ஏராளம் உதாரணங்கள் பாடங்களாக இருக்கின்றன: 1. முதல் உலகப் போரில் அமெரிக்கா உடனே குதிக்கவில்லை. பிரிட்டன் ஜேர்மனி மீது கப்பல் போக்கு வரத்துத் தடை விதித்து அதன் எதிரொலியாக எல்லாக் கப்பல்களையும் ஜேர்மனி மூழ்கடிக்க ஆரம்பித்த போது தான் அமெரிக்கா போரில் இணைந்தது. 2. பின்னர் இரண்டாம் உலகப்போரிலும் அமெரிக்கா உடனே இணையவில்லை - ஜப்பான் மீது பொருளாதாரத் தடையை இறுக்கி, வழிக்கு வராமல் பேர்ள் தாக்கப் பட்ட பின்னர் இணைந்தது. 3. இன்றும் ஈரான், வட கொரியா எல்லாம் பொருளாதாரத் தடை நிலை தான், நேரடி யுத்தம் இல்லை. மேற்குலகு இப்படித் தான் நடந்து கொள்ளும் என்ற ஒரு முன்னனுபவம் இருந்தும், புட்டின் உக்ரைனோடு சேட்டை விடக் காரணம் 2008 , 2014 களில் புட்டினின் ஆக்கிரமிப்புகளை அமெரிக்கா பலமாக எதிர்க்காமல் விட்டது தான். ஆனால் இந்த முறை கணக்குப் பிசகி விட்டது. இந்த அமெரிக்க ஈடுபாட்டிற்கு முக்கிய காரணங்கள் செலன்ஸ்கியின் தலைமைத்துவம், அருகிலிருக்கும் போலந்தின் பாதுகாப்புக் கரிசனையும். ஊரில் தண்ணியப் போட்டு விட்டு எல்லாரையும் சண்டைக்கிழுக்கும் வெறிக்குட்டிக்கு ஒரு நாள் யாராவது கன்னத்தைப் பொத்தி இளக்கி விட்டால் என்ன நடக்குமோ, அது தான் புட்டினுக்கு நடந்திருக்கிறது இப்போது!😂
  13. அருமையான மில்லியன் டொலர் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் வசி: ஏன் பேச்சு வார்த்தையால் தீர்க்க முடியாமல் இருக்கிறது? உக்ரைன் மக்களின் விருப்பம் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிப் போவது (கவனிக்க, ஐ.ஒ நோக்கித் தான், நேட்டோ உக்ரைனைச் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கவேயில்லை புட்டின் ஆக்கிரமிக்கும் வரையில்!). இந்த சுதந்திரத்தை விட்டுக் கொடு என்பது தான் ரஷ்யாவின் கோரிக்கை, ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? இதற்காகத் தான் மின்சாரம், நீர் எல்லாம் இல்லாமல் போனாலும் சமாதானம் என்று விட்டுக் கொடுக்காமல் சாகிறார்கள் உக்ரைனியர்கள். இதைப் புரிந்து கொள்வது 1995 வரை யாழிலும், 2009 வரை வன்னியிலும் மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமலே வாழ்ந்த தமிழர்களுக்கு ஏன் கடினமாக இருக்கிறது? இதைப் பலரும் இங்கே பல தடவை அரைத்திருக்கிறார்கள்: எங்களுக்கு ஏன் இந்தியா மீது காண்டு? எங்கள் சுயநிர்ணய உரிமையை தங்கள் ஒருமைப்பாட்டுக்காக மறந்து விடும்படி கேட்பதால் தானே? அது போன்ற காண்டு தான் உக்ரைனுக்கும் ரஷ்யா மீது இனி காலா காலமாக இருக்கும். மற்றபடி இந்த வாய்ப்பை நேட்டோவும் அமெரிக்காவும் பயன்படுத்திக் கொள்வது வெளிப்படை! இத்தகைய சந்தர்ப்பவாதம் நிகழும் என யாருமே பெப்ரவரி 2022 இல் எதிர்வுகூறியிருக்க முடியும் - புட்டினின் ஆலோசகர்களுக்கு மட்டும் முடியாமல் போய் விட்டது என்பது சோகம்! 😂
  14. ட்ரம்பின் அல்லது சிவப்புக் கட்சியின் 80+ மில்லியன் ஆதரவாளர்கள் அல்லது வாக்காளர்கள் முழுவதும் முட்டாள்கள் எனச் சொல்ல முடியாது, ஆனால் சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களை வென்று விட்டால் ஜனாதிபதியாகலாம் என்பதே நிலை. எனவே, ஒரு சிறு தொகை முட்டாள்களைப் பேய்க்காட்டி விட்டால் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்க முடியும் என்பது ட்ரம்பிற்கும், ரஷ்யாவிற்கும் நன்கு தெரியும் - அதைத் தான் 2016 இல் செய்தார்கள்: கீழே இருப்பது தான் 2016 இன் ட்ரம்ப் playbook , சிலவற்றை ரஷ்ய bots முன்னிலைப் படுத்தி உதவின: 1. இந்திய அமெரிக்க மோடி வாலாக்களிடம் முஸ்லிம் எதிர்ப்பைக் கிளறி விடுவது. 2. தென் மாநில வெள்ளையரிடம் கறுப்பின மக்கள் பற்றிய பயத்தைக் கிளறி விடுவது. 3. நகரங்களில் வசிக்கும் வெள்ளையினப் பெண்களிடம் கறுப்பின ஆண்கள் பற்றிய பயத்தைக் கிளறி விடுவது. 4. மத்திய அமெரிக்கா (Middle America) எனப்படும் கிராமச் சூழலில் வாழும் வெள்ளையின மக்களிடம் "உன் வேட்டைத் துப்பாக்கியை நீலக் கட்சி பறிக்கப் போகுது" என்று பீதியைக் கிளறி விடுவது. 5. Evangelicals எனப்படும் தீவிர கிறிஸ்தவ தலிபான்களிடம் , "உன் கிறிஸ்தவ மதம் ஏனைய மதங்களால் சிறுபான்மையாகி விடும்" என்ற பயத்தை ஊட்டுவது. 6. நடுத்தர வயது தாண்டிய ஆண்களிடம் "பெண்களுக்கு அதிக வாய்ப்புக் கொடுத்தால் உன் மேலாண்மை போய் விடும்" என்று பீதியூட்டுவது. இதெல்லாம் மீள அரங்கேறும் என்பதில் எனக்கு சந்தேகமேதுமில்லை!
  15. புட்டினின் வெளிச்சம் 2024 இல் வரலாம்! அமெரிக்க சமூகத்தை, குறிப்பாக வாக்காளர்களை, சிவப்பு- நீலம் எனப் பிரித்து வைக்கும் சில விடயங்கள் இருக்கின்றன: ஒரு பால் மணம், பால்மாற்றம், பால் சமத்துவம், துப்பாக்கி வைத்திருக்கும் சுதந்திரம், மத சுதந்திரம் (ஆனால், எல்லா மதங்களுக்குமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமான சுதந்திரம்!😂) - இவையெல்லாம் ரஷ்ய பொற் (bot) களால் இனி சமூக ஊடகங்களில் கிளறப்படும். 2016 இல் போலவே, இவை மூலம் ட்ரம்பை வெல்ல வைக்க ரஷ்ய நகரங்களின் மூலைகளில் ஒளிந்திருந்து முயல்வர். ட்ரம்பிற்கு வெல்வது மட்டும் தானே முக்கியம்? அவரும் பயன்படுத்திக் கொண்டு வெல்ல முயல்வார்! எனவே, 2024 வரை புட்டின் போரை இழுப்பார், உக்ரைன் நகரங்கள் தாக்கப் படும். இதை எதிர்பார்த்துத் தான் பேட்றியாற்றை இப்பவே கொடுத்து விட்டார்கள்.
  16. இதில் சில தரவுகள் உண்மை. ஆனால் அமெரிக்காவின் மொத்த நலக் காப்புறுதி, மருத்துவ சேவை விடயங்களை ஒற்றை ஆவணப்படத்தை மட்டும் பார்த்து விளங்கிக் கொண்டதால் பல வியாக்கியானங்கள் தவறானவை. உலகில் இன்சுலின் விலை அமெரிக்காவில் தான் அதிகம். இதன் காரணம் அதைத் தயாரிக்கும் கம்பனிகள் மட்டுமல்ல. கம்பனிகளுக்கும் நோயாளிக்குமிடையேயிருக்கும் பல இடைத்தரகர் நிலைகளால் இந்த நிலை. இதை அகற்றும் போது இந்த இலாப நோக்க இடைத்தரகர்கள் அரசியல் வாதிகளைக் கைக்குள் போட்டு தடை போடுவது உண்மை. இதற்கெல்லாம் ஒரு தீர்வாக அமேசன் மருந்துகள் விற்பனையையும் ஆரம்பிக்க முயற்சி செய்கிறது. பலித்தால் நோயாளிகளுக்கு வெற்றி. ஆனால், எல்லா மேற்கு நாடுகளிலும் மருந்துகளுக்கு மக்கள் தான் ஏதோ ஒரு வழியில் பணம் செலுத்துகிறார்கள் - இலவசமாக கிடைப்பதில்லை - there's no free lunch. வித்தியாசம்: அமெரிக்காவில் நோயாளி செலுத்துகிறார், ஐரோப்பா, கனடா, அவுசில் மக்களின் உயர்ந்த மட்ட வரிகள் பணத்தைச் செலுத்துகின்றன. இரண்டாவது: தொழில், போதிய வருமானம் இல்லாதோர் மருந்துகளுக்குச் செலவழிக்க முடியாவிட்டால் உதவ சமூக, அரச ஏற்பாடுகள் இருக்கின்றன. அமெரிக்க மத்திய அரசின் மெடிகெயார், மெடிகெய்ட் என்பன முக்கியமானவை. இதை விட ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அரசு மட்ட உதவிகளும் இருக்கின்றன. இடத்திற்கிடம் உதவியின் அளவு வேறுபடும், ஆனால் இன்சுலின் போன்ற உயிர்காக்கும் மருந்துகளை எல்லா மாநிலங்களிலும் பெற உதவிகள் உண்டு. இதையெல்லாம் தாண்டி ஒருவர் உதவி தேடாமல் இருக்க சில காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு பெருமையுணர்வு, கூச்சம் இருக்கலாம். சிலருக்கு தங்களுக்கு நோய் இருக்கிறதென்பதே தெரியாத நிலை. துரதிர்ஷ்ட நிலைகள் தான் என்றாலும் முற்றிலும் அரசின், சமூக அமைப்பின் தவறில்லை என்பது என் கருத்து.
  17. கடைசியில் குணாவுக்கும் வாசகரை ஈர்க்க "அதிரடி" என்ற சொல் தேவையாகி விட்டது! நான் இப்போது தான் "அதிரடியாக" பாத்றூம் போய் விட்டு வந்தேன்! இன்று காலையில் நான் "அதிரடியாக" துயிலெழுந்தேன்! சாவடிக்கிறான்களே!😅
  18. உண்மை. இந்தத் திசையிலான முயற்சி ஏற்கனவே தமிழ் நாடு அரசின் மொழிப்பிரிவினால் ஆரம்பிக்கப் பட்டு விட்டது. கடந்த ஒரு வருடமாக தமிழில் கலைச் சொற்களை உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் நிபுணர்களிடமிருந்து சேகரித்து ஒரு சொற்குவை ஏழு இலட்சம் சொற்களுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இது இன்னும் தொடர்கிறது. நானும் ஒரு நாற்பது மருத்துவ உயிரியல் சொற்கள் பங்களித்திருக்கிறேன். இணைப்பு: https://www.sorkuvai.com/ அடுத்த முயற்சியாக ஒவ்வொரு விஞ்ஞான தொழில் நுட்பத் துறையிலும் ஒரு கலைச்சொல் அகராதி உருவாக்கப் போகிறார்கள். முதல் அகராதி மருத்துவ உயிரியல் அகராதியாக 2023 இறுதியில் வெளிவர இருக்கிறது. இதன் ஆலோசனைக் குழுவிலும் என் பங்களிப்பு இருக்கும். விளம்பரங்கள் இல்லாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், திராவிடன் தமிழுக்கு சேவை செய்தால் சில தமிழருக்கு விளம்பரம் செய்தாலும் கூட அது மூளையில் ஏறாது.😂
  19. இது தான் என் கருத்தும். இதே கருத்தைத் தான் யதீந்திரா இன்னொரு கட்டுரையில் வெளிப்படுத்தியிருகிறார். புலிகள் அமைப்பு பாடசாலைகளில் பிரச்சாரத்திற்கு வரும் காலங்களில் பேசுபவர் ஒரு கேள்வி கேட்பார்: "தனி நாட்டுக்குக் குறைவான தீர்வை ஏற்றுக் கொண்டு சமாதானமாக வாழலாமா?" ஓரிருவர் மிக கமுக்கமாக "ஓம்" என்பர். "அப்ப இது வரை உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கு என்ன பதில் சொல்லலாம்?" என்று பேச்சாளர் மீள ஆரம்பிப்பார். இதே sunken cost theory அடிப்படையிலான கேள்வி தான் இடைக்காலத் தீர்வு/நிவாரணம் எதையும் சில தமிழ் தரப்புகள் ஏற்றுக் கொள்ளத் தடையாக இருக்கிறதென நினைக்கிறேன்.
  20. தற்போதிருக்கும் பல "மிளகாய்" ஆய்வாளர்களிடமிருந்து வித்தியாசமாக யதீந்திரா எழுதியிருக்கிறார். எத்தனை வரலாறு தெரிந்த ஆய்வாளர்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள் எனப் பார்க்கலாம்!
  21. இதே போன்ற ஒரு உரையாடல் முதல்வன் தனியான திரி ஆரம்பித்தும் முன்னகர முடியாமல் இருக்கிறது. அரூபமான (abstract) விடயங்கள் பற்றிப் பேசுவது ஏனைய சம்பவங்கள், இடங்கள் பற்றிப் பேசுவதை விடக் கடினமான விடயம் தான். ஆனால், விடயங்களை வரையறை செய்வதற்காகப் பேச வேண்டும். தேவைகள்: தமிழருக்குப் பிரத்தியேகமான தேவைகள் என்று நான் கருதுவது உயிர்பாதுகாப்பு, உடமை - சிறப்பாக நிலப்- பாதுகாப்பு, தங்கள் மொழியில் எல்லாக் காரியங்களையும் வாழுமிடத்தில் செய்து கொள்ளக் கூடிய மொழிச் சேவை வசதி. மேலே சசி குறிப்பிட்டிருக்கும் சில தேவைகள் இலங்கையர் எல்லாருக்கும் இருப்பவை: பொருளாதார வாய்ப்புகள், ஊழலின்மை, பால் சமத்துவம், இவையெல்லாம் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இல்லை - அதன் நீட்சியாக வடக்கு கிழக்கிலும் இல்லை! எனவே மிக அடிப்படையாக எங்களுக்குத் தேவை: 1. வன்முறையில், உயிர்பயத்திலிருந்து பாதுகாப்பு 2. நிலம் மீது உரிமை 3. மொழி
  22. இதில் விரிவாக இப்போது எழுத நேரமின்மைக்கு வருந்துகிறேன், ஆனால் சுருக்கமாக: 1. சிறி லங்கா வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான காட்டாப்பாகத் தான் பேச்சு வார்த்தை முஸ்தீபு செய்கிறது, எனவே தற்போது இருக்கும் சிங்களவரின் Achilles heel வெளிநாட்டு உதவி. முதலிடக் கூடிய தமிழர்கள் அதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த வேண்டும், ஏனையோர் அமெரிக்கா, ஐ. ஒ ஆகியவை உதவியை உள்நாட்டுத் தீர்வோடு முடிச்சுப் போட வைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2. இந்தியா எப்போதுமே எங்களோடு சேர்ந்து வரும் ஒரு செய்வினை (ஊர் பாசையில் தரித்திரம்😂!) எப்படியாவது, கை நீளத் தூரத்தில் இந்தியாவை வைத்துக் கொண்டு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளோடு தமிழர் தலைமைகள் நெருங்க வேண்டும். எப்படி செய்வது இதை என எனக்குத் தெரியாது! மேலும் உரையாடலாம் பின்னர்!
  23. இந்தியாவைக் கோபாவேசத்தோடு எதிர்க்கும் எந்த கருத்தையும் இங்கே காணவில்லையே? ஏன்?😂 - மனித உரிமைகள் விடயத்தில் உலகின் அடிமட்ட நிலை - மத/மொழி சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில் ஆசியாவின் மோசமான ஒரு நாடு - பொதுப் பணம் மக்களுக்குச் சேராமல் ஊழல் வாதிகளிடம் சேர்வதில் முன்னணி நாடு இந்தத் தகுதிகளெல்லாம் இருப்பதாலா சி. வி ஐயா இந்தியாவை அழைக்கச் சொல்கிறார்?
  24. கடுமையாக உழைத்திருப்பார்களென நினைக்கிறேன் மீட்டுக் கொண்டுவர. நன்றி மூன்று மூர்த்திகளுக்கும்! நானும் ஒரு நாள் அடிக்கடி நோண்டிப் பார்த்து விட்டு, ஆத்தாமல் நிழலிக்கு செய்தி அனுப்பிய போது தான் தொழில் நுட்பக் கோளாறைச் சரி செய்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.