Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. மேலே ஓணாண்டியார் இணைத்த மருத்துவத் தகவல் கட்டுரையில் இருக்கும் அதே அடிநாதமான விடயத்தைத் தான் நானும் என் பாணியில் சொல்லியிருக்கிறேன். "இது முன்னோடி" என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் செய்தியைப் பிரசுரித்த அனைத்து இந்திய ஊடகங்களும் "ஊசி பாவிக்க தயார், அனைவருக்கும் இலவசம்" என்று கூறியிருக்கும் தகவலை நீங்கள் சரி பார்த்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், மருந்தைத் தயாரித்த ரஷ்ய அமைப்பின் தளத்தில் என்ரெறோமிக்ஸ் என்பதே mRNA தடுப்பூசியாக அல்லாமல், நான்கு மனிதனுக்குத் தொற்றும் வைரசுகளின் கலவை என்று இருக்கிறது. அதன் கீழ் ஒரு பந்தியில் mRNA தடுப்பூசி செய்கிறோம் என்று இருக்கிறது. இதையெல்லாம் கலந்து கட்டி ஒரு கற்பனைச் செய்தியை சில ஊடகங்கள் போட்டிருக்கின்றன. இப்படியான செய்திகள் முகநூலில், இன்ஸ்ராவில் ஓடும், யாழில் கஷ்டம் தான்!
  2. இதை உங்களுக்கும், "நோபல் பரிசுக் குழுவில்" இருக்கும் தமிழ்சிறிக்கும் 😎 விளக்கி எவ்வளவு பயன் இருக்குமோ தெரியாது, ஆனாலும் ஏனைய வாசகர்களுக்காக: புற்று நோய்க்குத் தடுப்பூசி (cancer vaccine) என்று அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. அது ஆரோக்கியமான ஒருவரில் புற்று நோய் வராமல் தடுக்கிறது என்பதால் அல்ல, உடலின் நோயெதிர்ப்பு சிஸ்ரத்தை ஏற்கனவே உருவாகி விட்ட புற்று நோய்க்கெதிராகத் திருப்பி விடும் வேலையைச் செய்வதால் தடுப்பூசி என்கிறார்கள். இதைப் பற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும் நடக்கின்றன. கடந்த 2023 இல், அமெரிக்காவின் ஒரு முன்னணி ஆய்வு நிறுவனம் கணையப் புற்று நோய்க்கெதிராக எம்.ஆர்.என் ஏ தடுப்பூசியை நீங்கள் குறிப்பிட்ட 3 நிலை ஆய்வுகளுள், முதலாவது Phase 1 ஆய்வை செய்து முடித்திருக்கிறது. Memorial Sloan Kettering Cancer CenterIn Early-Phase Pancreatic Cancer Clinical Trial, Investig...Learn how MSK researchers are deploying mRNA vaccines against pancreatic cancer.https://www.nature.com/articles/s41586-023-06063-y 👆இந்த அமெரிக்க ஆய்வுக்கும், மேலே இருக்கும் "ரஷ்ய வக்சீன்" செய்திக்கும் ஒரு பாரிய வித்தியாசம் என்ன? அமெரிக்க ஆய்வை விஞ்ஞான முறைகளின் படி சஞ்சிகைகளில் peer review செய்து வெளியிட்டிருக்கிறார்கள். யாரும் சென்று பார்க்கலாம். ரஷ்யாவின் என்ரெறோமிக்ஸ் பற்றி எந்த ஆய்வு அறிக்கையும், peer review இற்கு உட்பட்டு வெளிவரவில்லை. எனவே, விஞ்ஞான உலகைப் பொறுத்த வரை, என்ரெறோமிக்ஸ் என்பது மாநகரசபையின் பைப் தண்ணீர் தான். அதை சும்மா கொடுத்தால் என்ன, அரையணாவுக்குக் கொடுத்தால் என்ன😂? புத்தியுள்ளோர் எடுத்துக் கொள்ளப் போவதில்லை!
  3. இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகளை விட மோசமான வன்முறைக்குப் பலியாடுகளான தென்னமெரிக்க மக்கள் இருக்கிறார்கள். இது அந்த நாடுகள் பற்றிய அறிவுள்ளோருக்கு புரியும், உங்களுக்கு "அறிவலட்சியமே தோள்பட்டை நட்சத்திரம்" என்ற நிலை! எனவே, இப்படித் தான் சொல்வீர்கள்! வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சட்ட விரோதமாக உள்ளே வந்து அந்தக் காலங்களில் இருந்த லிபரல் ஆட்சியாளர்களின் தயவால் தஞ்சம் பெற்று, இன்று வலதுசாரிகளோடு நிற்கும் ஈழத்தமிழர்களை அமெரிக்க சட்ட விரோதக் குடிகளோடு ஒப்பிடலாமா😎?
  4. மிகவும் "நம்பக் கூடியதாகத்" தான் இருக்கிறது😎: என்ரெறோமிக்ஸ் (Enteromix) என்ற இந்த "தடுப்பூசி" புற்று நோய்க்கெதிராக 100% விளைவைக் காட்டியிருக்கிறதாம். இந்த "100%" என்பதே தகவலின் உண்மைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது. இவ்வளவு வினைத்திறனான புற்று நோய்த் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகளை, எந்தவொரு விஞ்ஞான சஞ்சிகையிலும் பிரசுரிக்காமல் Eastern Economic Forum என்ற வர்த்தகக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்! புரின் புரியன்மார் , ரஷ்ய விசிறிகள் யாவரும்- உண்மையிலேயே அவர்கள் அப்படியாக இருந்தால் - வரிசையில் முன்னுக்குப் போய் நின்று இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேணும்! செய்வார்களா😇?
  5. அஜீவன் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்! அவரது யாழ் கள கருத்தாடல்களூடாக அவரது நினைவுகள் நீடூழி வாழும்!
  6. காற்றாலைகளுக்கு ஏன் எதிர்ப்பு புரிந்து கொள்ளும் முயற்சியில், 2021 இல் இருந்து இயங்கி வரும் முதலாம் கட்ட மன்னார் காற்றாலையின் சூழல் பாதிப்பு அறிக்கையைத் தேடிப் பார்த்தேன். விரிவாக இந்த இணைப்பில், பல பின்னிணைப்புகளோடு சூழல் பாதிப்பு, ஒலி மாசு, காட்டுயிர்களின் பல்லினத்தன்மை, பறவைகள் இறப்பு என ஆய்ந்து தான் தொடர்கிறார்கள் எனப் புரிகிறது. அடிப்படைகள் எதுவும் இல்லாமல், பதாகையும், கொடியும் பிடிக்கும் மக்கள் கூட்டமாக நாம் மாறி விட்டோம் போல தெரிகிறது. Asian Development BankWind Power Generation Project: Environmental Monitoring R...Environmental monitoring reports describe the environmental issues or mitigation measures of a project. This document dated July 2024 is provided for the ADB project 49345-002 in Sri Lanka.
  7. இது அதிசயமல்லவே? ஒரு நாட்டில் பிறந்த குழந்தையை பிரஜையாக ஏற்றுக் கொள்வதா என்ற விடயத்தில், இரு வகையான சட்ட முறைமைகள் இருக்கின்றன. ஒன்று: "jus soli (right of soil)" எனப்படும் பிறந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட பிறப்புரிமை (birthright citizenship). மற்றையது, பெற்றோரின் பிரஜாவுரிமையை அடிப்படையாகக் கொண்ட "jus sanguinis (right of blood)" என்ற முறை. இதில் இந்தியா பின்பற்றும் முறை அனேகமாக பெற்றோரின் பிரஜாவுரிமையைக் கொண்டு குழந்தையின் பிரஜாவுரிமையைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. எனவே, இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியர்களுக்கு நிகரான உரிமையை எதிர்பார்க்க முடியாது. இன்னொரு கோணத்தில், இதை உங்கள் போன்றோர் எதிர்பார்ப்பது இன்னும் அதிசயம்! "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே" என்று முழங்கும் MAGA ட்ரம்ப் விசிறியாக இருக்கிறீர்கள். அதே ட்ரம்ப், அமெரிக்காவில் இருக்கும் jus soli முறைமையை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் மும்முரமாக இருக்கிறார். இதில், இங்கே பிறக்கும் குடியேறிகளின் குழந்தைகளே இரண்டாம் தரப் பிரஜைகளாக மாறும் ஆபத்து இருக்கிறது. இதையெல்லாம் கடந்து ட்ரம்ப் ஐயாவை மோகித்த படி, இந்தியா இலங்கைத் தமிழர்களை பிரஜைகளுக்கு சமமாக நடத்த வேண்டுமென்று எப்படிக் கேட்கிறீர்கள்😂?
  8. The HinduUnion government exempts Sri Lankan Tamil refugees who ca...MHA exempts undocumented minorities from Afghanistan, Bangladesh, Pakistan and Sri Lankan Tamil refugees from penal action in India."..A senior government official said the exemption made through the Immigration and Foreigners (Exemption) Order was to enable the undocumented migrants from the six minority communities from three countries “who were compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution” to seek long-term visas (LTV). LTVs are a precursor to citizenship" இலங்கைத் தமிழர் உட்பட்ட அயல் நாடுகளின் 6 சிறுபான்மையினருக்கு இந்த விதிவிலக்கு வழங்கப் பட்டிருப்பது உண்மையான தகவல் தான். இந்த விதி விலக்கு வழங்காது விடில், அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களை குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்து, 5 இலட்சம் ரூபா அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்க முடியும். இதைத் தவிர்த்து, வேறு விசாக்களை உரிய முறைப்படி பெற்றுக் கொள்ளும் படி செய்யவே இந்த விதி விலக்கு.
  9. இங்கே ஏன் "உணர்வுகள்" பற்றிப் பேசுகிறார்கள் எனப் புரியவில்லை. கனியமணல் அகழ்வு நிச்சயம் சூழல் பாதிப்பைத் தரும், எனவே அதை எதிர்க்க வேண்டும். காற்றாலைகளால் என்ன தீமைகள் மன்னாருக்கு ஏற்படும் என எந்த ஆய்வு முயற்சியாவது யாராவது செய்து அதன் அடிப்படையில் அல்லவா பேச வேண்டும். உணர்வை மட்டும் வைத்துக் கொன்டு எதை நிறுவ முடியும்/ எங்கே தீர்வு தேட முடியும்?
  10. சில ஆண்டுகள் முன்னர், யாழ் பா.உ ஆக இருந்த அங்கஜன் இவரது பிரதேசத்தில் வீதி புனரமைத்த வேளையில், அது பற்றிய விளம்பரப் பலகையை ஒளித்து வைத்த அதே நிரோஷா இவர்? "வெளிப்படைத்தன்மை" பற்றி வகுப்பெடுக்க சரியான ஆள் தான் இவர்😂!
  11. வவுனியாவின் தண்ணீரில் இருக்கும் கல்சியம் காபனேற் கூட நீர் ஆவியாகும் போது இவ்வாறு படியலாம். அதை "உப்பு -NaCl" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.
  12. நீங்களெல்லாம் "மானம்" இருந்ததால் ஆமியும் பொலிசும் சுடாத ஷொட்கன்னோடு திரிந்த நாட்களிலேயே ஊரை விட்டு வெளியேறி விட்டீர்கள் என்பதை நம்புகிறோம்! எதைச் செய்தாலும் ஊரோடு இன்னும் இருப்போர் கொஞ்சம் "தமிழ்மானம்" குறைவான ஆட்கள் போலத் தான் தெரிகிறது😎!
  13. 😂"ஆதாரங்கள் இல்லாத உண்மை" - இப்படியொரு தமிழ் சொற்றொடர் இன்று தான் அறிகிறேன். சரியாகத் தேடிப் பார்த்தீர்களா? 2011 இல் லிபியப் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது புரின் "ஆட்சியில்" இருக்கவில்லையா? தொடர்ந்து அதிபராக இருக்க அந்த நேரத்தில் ரஷ்ய அரசியலமைப்பு இடம் கொடுக்காமையால், தன் அல்லக்கை மெட்வெடேவை அதிபராக்கி விட்டு, புரின் பிரதமராக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாரே? பின்னர் 2012 இல் மீண்டும் அதிபராகியவுடன், அரசியமைப்பையும் மாற்றினார்.
  14. நான் அவதானித்த வரை, நீங்கள் சில மனவியல்/சமூகவியல் தொடர்பான கலைச் சொற்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். பின்னர், பொருத்தமேயில்லாத இடங்களில் அந்தச் சொற்களை இணைத்துத் தொடுத்து கருத்துக்களை எழுதுகிறீர்கள்! இதுவல்லவா நேர் கோட்டில் செல்லும் குதிரையின் குணம்😂? நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கருத்துக்கும்,நாம் உரையாடிக் கொண்டிருக்கும் நாசிகள், நவநாசிகள் செய்யும் அறப் பிறழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று உங்களுக்கு மட்டுமே புரியும், எனக்கு எதுவும் பிரியவில்லை!
  15. எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான் என்றாலும் கருணாகரன் எழுதியிருக்கிறார். இனி கருணாகரனுக்கு இருக்குது சிறி அடிப்பொடிகளின் பூசை😂! ஊடக வெளிச்சம் பாயும் விடயங்களில், கடைசியாக உள் நுழைந்து இலவச விளம்பரம் தேடும் சிறிதரன் பா.உ, முன்னர் ஒரு தடவையும் மொக்கேனப் பட்டிருக்கிறார். கிளிநொச்சியில் ஒரு ஊழல் பிரமுகரால் மிரட்டப் பட்ட பெண் வைத்தியருக்கு ஆதரவாகப் பேசி தொலைபேசி எடுத்த சிறிதரன் பா.உ வின் உரையாடல் வெளியே யாராலோ ஊடகங்களுக்குக் கசிந்தது. இதனால், கோபம் கொண்ட சிறிதரன் பா.உ, தன் பாராளுமன்ற உரை நேரத்தை பெண் மருத்துவர் மீது விசாரணை வேண்டுமென்று கேட்டு உரையாற்றியதன் மூலம், தனக்கு முக்கியமானது எதுவென அப்பவே வெளிக்காட்டியிருந்தார்!
  16. 🤣 ஹிற்லர் 33% ஜேர்மனியினரின் வாக்குகளைப் பெற்று, கம்யூனிஸ்ட்களை மட்டும் அழிக்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் யூதர், கத்தோலிக்கர், ஓர் பாலினத்தவர், உடல் ஊனமுற்றோர் என்று 10 மில்லியன் பேரைக் கொன்றொழித்தது, primary தகவலா அல்லது இன்னொருவர் எழுதி வைத்து விட்டுப் போன இரண்டாம் நிலைத் தகவலா? இது போன்ற பதிவான சம்பவங்களையே "இரு பக்கம் இருக்கிறது, பல பக்கங்கள் இருக்கின்றன" என்று சமாளிப்பது ஒன்றும் தெரியாமல் இருக்கும் ஆட்கள் செய்யும் வேலையை விட ஆபத்தான சகஜமயப்படுத்தல் எனக் கருதுகிறேன். ஓடாமல் நின்ற கடிகாரத்தை விட, தொடர்ந்து பிழையாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தின் விளைவு நேர/கால நாசம் என்பார்களே? அது போன்ற நிலை உங்கள் இந்த அரை வேக்காட்டு மதிமேல் பூனை நிலை!
  17. எப்படிப் பட்ட "மானமுள்ள" தமிழன்? இலங்கை வகேஷன் போவதற்கு ஒரு மாதம் முன்னரே அனுர காவடி தூக்கி விட்டு, நவதுவாரங்களையும் மூடிக் கொண்டு போய் வந்த வகையிலான "மானமா" சார்😇?
  18. 1) இது மோசமான ஊழல். விசாரிக்கப் பட வேண்டும். 2) அப்படியெதுவும் சுமந்திரன் செய்ததாக "யூ ரியூப் அலட்டலாளர்கள்" தவிர வேறெவரும் நிரூபிக்கவில்லை. 3) இது எப்ப நடந்தது😂?
  19. LNW Tamilவிக்கிக்கு ஏற்பட்ட நிலையேஅர்ச்சுனாவுக்கும் ஏற்படுமாம் - அ...அரசியலில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்ப 👆 சுமந்திரனுக்கு விலாங்கு மீன் பட்டம் கொடுத்து எங்கள் யாழ் கள "சுமந்திரன் லவ்வர்ஸ், கணிதப் புலிகள்😎, உசார் மடையர்கள்" என அனைத்து தரப்பினரையும் கிச்சு கிச்சு மூட்டிய "இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்" தலைவர் ஜெயேந்திரன் இவர் தான்! அடுத்த தேர்தலில் அனுர கட்சியில் போட்டியிடத் தயாராக இருக்கும் ஒரு எதிர்கால "தமிழ் பா.உ"🤣! "...எதிர்வரும் காலத்தில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தற்போது தீர்மானித்துள்ளோம்"
  20. "மக்கள் இறக்காமல் இருந்தால் நல்லது" என்பதில் யார் முரண்பட முடியும்? ஆனால், மக்கள் இறப்பையும் மோதலையும் யார் தொடங்கியது, யார் கையில் தடுக்கும் வழி இருக்கிறது என்பதில் அல்லவா நீங்களும் "புரின் புரியன்மாரும்"😎 குழம்பி நிற்கிறீர்கள்? உக்ரைன் சரணடைந்து விட்டால் புரின் சும்மா சுருட்டிக் கொண்டு இருந்து விடுவாரா? 2014 இல் கிரிமியாவை சத்தமில்லாமல் கைப்பற்றிய பின்னர் புரின் சும்மா இருந்தாரா? உக்ரைன் பிரச்சினையில் நிலையெடுத்திருக்கும் சிலருக்கு வரலாறு துண்டறத் தெரியாது. அந்த வெறுமையில் இருந்து அபிப்பிராயங்களை உருவாக்குகிறார்கள் என்பது மீள மீள நிரூபிக்கப் பட்டிருகிறது. உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. ஆனாலும் குழப்பம் தீரவில்லை.
  21. "பல்துருவ உலகம்" பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அத்தகைய பல்துருவ உலகிற்கு நானும் ஆதரவு😎. ஆனால், ஒட்டு மொத்த சமூகத்திற்கும், எங்கள் மண்ணிறத் தோல் கொண்டு உலாவரப் போகும் அடுத்த சந்ததிக்கும் எதிரான திட்டங்களை வகுக்கும் ஜேர்மன் AfD நவநாசிகள், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க திட்டமிடும் ஹங்கேரி, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் அதி வலதுசாரிகள் - இந்த தரப்புகள் ஒரு துருவமாக இருக்கவே கூடாது. வலதுசாரிகளாக மாறி விட்ட அமெரிக்காவிற்கு எதிரான துருவமாக முற்போக்கான ஐரோப்பிய ஒன்றியம் இருக்க வேண்டும். இது தான் நான் எதிர்பார்க்கும் "பல்துருவ" உலகு. என் அவதானிப்பின் படி, ஐரோப்பிய ஒன்றியம் சரியான திசையில் நகர்கிறது. உக்ரைனில் ஊழலை ஒழிக்க முயலும் அதே வேளை, போலந்தில் நீதித் துறையை வலதுசாரிகள் முடக்கி விடாமலிருக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் வேலை செய்கிறது. பிரான்சிலும், ஜேர்மனியிலும் குடியேறிகளுக்கெதிரான கட்சிகள் ஆட்சிக்கு வர முயலும் போது, அந்த நாடுகளின் மிதவாத சக்திகளோடு சேர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் அவர்களை ஆட்சிக்கு வர முடியாமல் முடக்கியிருக்கின்றன. இதை நீங்கள் "மக்களின் தேசிய விருப்பிற்கெதிரான நகர்வுகள்" என்று கண்டிப்பது போலத் தெரிகிறது. இப்படி 33% வீத மக்களின் தேசிய விருப்பின் படி தான் நாசிகள் ஆட்சிக்கு வந்தார்கள் - வரலாற்றில் அதனால் நிகழ்ந்த அழிவுகளை யூ ரியூபிலாவது தேடிப் பார்த்து அறிந்தால், இதைக் கண்டிப்பீர்களா தெரியவில்லை!
  22. அயல் அரபு நாடுகள் பலஸ்தீன அகதிகளை உள்வாங்காமல் இருக்க இது ஒரு காரணம். ஆனால், இதை விட முதன்மையான காரணம், அகதிகள் முகாம்களில் ஹமாஸ் போன்ற பலஸ்தீன அமைப்புகள் மக்களோடு மக்களாக டோரா போட்டு, ஆட்சேர்த்து, அந்த நாடுகளிலேயே இஸ்ரேல் வந்து குண்டு போடும் அளவுக்கு வைத்து விடுவார்கள் என்ற பயம். இது பல தசாப்தங்களாக நடந்து வரும் ஒரு போக்கு. அயல் நாடான ஜோர்தானில் (ஜோர்தான் நதியின்) கிழக்குக் கரை -East Bank இருக்கிறது. அங்கே இஸ்ரேல் உருவாக்கப் பட்ட போது குடிபெயர்ந்த பலஸ்தீனர்கள் இன்றும் வாழ்கிறார்கள், அவர்களோடு அரபாத்திற்கும் இடம் கொடுத்திருந்தார்கள். 70 களில் என நினைக்கிறேன், ஒரு பயணிகள் விமானத்தை அரபாத்தின் கீழிருந்த போராளிகள் கடத்திச் சென்று அம்மானில் தரையிறக்கி வைத்திருந்தார்கள். விமானத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்ட ஜோர்தான் படைகளுக்கு அடி தான் பதிலாகக் கிடைத்தது😂. ஒரு பெரும் நடவடிக்கை மூலம் அப்போதைய ஜோர்தான் மன்னர், அரபாத்தின் படைகளை வேட்டையாட ஆரம்பித்தார். அரபாத் ஒரு முஸ்லிம் பெண் போல உடையணிந்து தப்பிச் சென்று சிரியா சேர்ந்தார். சிரியாவிலும் அதே கதை, ரணகளம். அங்கிருந்து ஒரு கட்டத்தில் லெபனான் சென்றார்கள் பலஸ்தீனப் போராளிகள். ஷியா, சுனி, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட்டாட்சி செய்த லெபனானில், ஷியாக்கள் அதிக பங்கு கோரிப் போராட ஆரம்பித்த போது, அகதிகளாக வந்த பலஸ்தீனர்களும், அமைப்புகளும் ஷியாக்களை ஆதரித்தார்கள். லெபனானும் ரணகளமாகியது. இப்படி மீள மீள நடக்கும் போது, பலஸ்தீன அகதிகளை எந்த முஸ்லிம் நாடு ஏற்றுக் கொள்ளும்?
  23. எப்படி வேறு நாடுகளில் இந்தியக் கார்களை விற்பது? வட அமெரிக்காவில் எந்த நாட்டு வாகனத்தை விற்பதாக இருந்தாலும் IIHS , NHTSA ஆகிய இரு அமைப்புகளால் பரிசோதிக்கப் பட்டு மதிப்பீடு செய்ய்ப் பட்டிருக்க வேண்டும். அதே போலவே ஐரோப்பாவிலும் ஒரு பரிசோதனை அமைப்பு இருக்கிறது -இதுவும் அமெரிக்காவின் தராதரமுடையது. இந்தியா தன் தயாரிப்புகளைப் பரிசோதிக்க GNCAP என்ற அமைப்பை வைத்திருக்கிறது. ஊழல் மலிந்த நாடு என்பதால் இதன் பரிசோதனை முடிவுகளை யாரும் நம்புவதில்லை. ஜப்பானிய வாகனங்களை விட விலை குறைவாக இருப்பதாலும், சில சமயங்களில் அரச திணைக்களங்களுக்கு இலவசமாக வழங்கப் படுவதாலும் இலங்கை போன்ற நாடுகளில் இந்திய வாகனங்கள் ஓடுகின்றன.
  24. பலஸ்தீனர்களின் பட்டினி பற்றி நீங்கள் "உண்மையாக" கவலைப் படுகிறீர்களா?😂 அப்படியானால் ட்ரம்பின் மீதல்லவா உங்கள் தீவிரமான கோபம் வெளிவர வேண்டும்? இப்படியொரு நிலை வராமல் இருக்க சில நடவடிக்கைகளையாவது எடுத்த பைடன் தோற்க வேண்டும் என்று விரும்பிய அதே ஆளா நீங்கள்??😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.