Everything posted by தமிழ் சிறி
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
எந்த ஒரு முஸ்லீமும்… தமிழர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் எமது வாக்கை பெற்று அவர்கள் பதவி பெற்று விடுவார்கள் இது கடந்த காலம் எமக்கு கற்றுத் தந்த பாடம். இதனை புரிந்து கொள்ள தமிழரசு கட்சிக்கு அறிவு போதாது. இன்னும் மக்களை முட்டாளாகவே நினைத்துக் கொண்டு உள்ளது.
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
அமெரிக்கர்களின் சாதனையில்…. சுனிதா வில்லியம்ஸ், இந்திய வம்சாவளி என்ற ஒரே காரணத்துக்காக இந்தியர்கள் தாம் சாதித்த மாதிரி குளிர் காய்வதைப் பார்க்க வெறுப்பாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு…. இதனை வைத்து அலட்டிக் கொண்டு இருக்கப் போகின்றார்கள் என்று நினைக்க, இப்பவே காதால் இரத்தம் வருகின்றது. 😂
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் நெடுக்ஸிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
மலையக தமிழ் கட்சிகளுக்கு விழும் வாக்கை பிரிப்பதற்காக.. சுமந்திரன் தலைமையிலான தமிழரசு கட்சி செய்யும் கீழ்த்தரமான செயல். தமிழரசு கட்சி… கொழும்பு, கண்டியில் போட்டியிட்டு இருக்காவிடில், அங்கு வசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்… தமிழர் என்ற முறையில் மலையக தமிழ் கட்சிகளுக்கே இதுவரை வாக்களித்து வந்தவர்கள். இம்முறை… சுமந்திரன் என்னும் சகுனியின் வேலையால் சிங்களப் பகுதியில் உள்ள தமிழ் வாக்குகள் சிதறுண்டு உள்ளூராட்சி மன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவம் குறையப் போகின்றது. இது… மனோ கணேசன், செந்தில் தொண்டமான் மீது… சுமந்திரனுக்கு இருக்கும் தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளும் செய்கையாகவே கருதப்படுகின்றது.
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
👉 https://www.facebook.com/watch?v=1303105237590524 👈 '800 கோடி பேர் எதிர்பார்த்த நொடி' கெத்தாக தரையிறங்கும் சுனிதா. விண்வெளியில் மேஜிக் செய்த 'டிராகன்'
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
👉https://www.facebook.com/watch?v=1093185272620705 👈 பூமியை நோக்கி வருகிறார் சுனிதா; வெற்றிகரமாக பிரிந்தது டிராகன் விண்கலம். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப தயாராகி வருகிறார். புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகின்றார். #Nasa #Space #SunitaWilliams
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
- பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை!
பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை! உடலில் பச்சை குத்தியவர்கள் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் எனவும், அந்த தோலை அழிப்பது நல்ல விடயம் அல்ல எனவும், எனவே உடலில் பச்சை குத்தியவர்களை எந்த ஆயுதப் படையிலும் இணைத்துக் கொள்ள வாய்ப்புக் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425626- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
இவர்கள் முதலில் சேர்த்த காசில் கொஞ்சமாவது முன்னாள் போராளிகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். பல ஆண் / பெண் போராளிகள் கச்சான் விற்கிறார்களாம்.- தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
இது மலையக தமிழ் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளை பிரிக்கும் வேலையில்… சுமந்திரன் தலைமையிலான தமிழரசு கட்சியின் கீழ்த்தரமான செயல்பாடு. ஒற்றுமையை வலியுறுத்தும் நேரத்தில்… இது வேண்டத்தகாத வேலை.- யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா!
அர்ச்சுனா வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அந்த இடத்திற்கு கௌசல்யாவை நியமிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். இப்போ கௌசல்யா யாழ். மேயர் வேட்பாளர் என்றால்… அப்போ சொன்னது பொய்யா கோபால். 😂- போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
சுனிதா வில்லியம்ஸ்... 9 மாதங்களின் பின், விண்வெளியில் இருந்து.. நாளை பூமி திரும்புகின்றார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள். இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 2024 ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 286 நாட்களுக்கு மேல் தங்கியுள்ளார். மொத்தம் 600 நாட்களுக்கு மேல் விண்வெளியில் செலவிட்டு, பெண் விண்வெளி வீரர்களில் சாதனை படைத்தவர். 2025 மார்ச் 26 அன்று ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார். ஆனால், விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கிய பிறகு, பூமியில் அவரது அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? 1. உடல் ரீதியான மாற்றங்கள்: தசை மற்றும் எலும்பு பலவீனம்: புவியீர்ப்பு இல்லாத சூழலில், தசைகள் 20-30% பலவீனமாகி, எலும்பு அடர்த்தி 1-2% குறையும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும், முதல் சில வாரங்கள் நடப்பது, படிக்கட்டு ஏறுவது சிரமமாக இருக்கும். 2007 இல் திரும்பியபோது, "நடப்பது மறந்துவிட்டது போல உணர்ந்தேன்" என்று கூறினார். இருதயம்: இரத்தம் மேல்நோக்கி செல்வதால், இதயம் சிறிது சுருங்கி, தலைச்சுற்றல் ஏற்படலாம். திடீரென எழும்போது மயக்கம் வரலாம். பார்வை: கண்களுக்கு பின்னால் அழுத்தம் (SANS) ஏற்பட்டு, பார்வை மங்கலாகலாம். 2. மன ரீதியான விளைவுகள்: தனிமை: சில மாதங்களுக்கு மேல் குடும்பத்தை பிரிந்து, சிறிய இடத்தில் வாழ்ந்தது மன அழுத்தத்தை தரலாம். 2012 இல், "என் நாயை மிஸ் செய்தேன்" என்று பகிர்ந்தார். புவியீர்ப்பு மனதுக்கு சோர்வை ஏற்படுத்தலாம். கூட்டமும் சத்தமும் முதலில் அந்நியமாக தோன்றலாம். 3. அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்: உணவு: விண்வெளியில் உலர்ந்த உணவுக்கு பிறகு, புதிய பழங்கள், பீட்சா சுவையாக இருக்கும். செரிமானத்தில் சிறு சிரமம் ஏற்படலாம். தூக்கம்: ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம் பார்த்த பிறகு, 24 மணிநேர சுழற்சிக்கு பழக, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் வரலாம். சமூகம்: பெரிய கூட்டத்தில் பழக சிறிது நேரம் தேவைப்படும். மீட்பு: நாசாவின் மறுவாழ்வு திட்டத்தில், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் உதவுவர். 1-3 வாரங்களில் நடப்பது சரியாகும், 3-6 மாதங்களில் முழு உடல் வலிமை திரும்பும். சுனிதாவின் மன உறுதியும், குடும்ப ஆதரவும் (கணவர் மைக்கேல், செல்ல நாய்கள்) அவரை விரைவாக மீட்க உதவும். Zen Murugesh- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- கருத்து படங்கள்
- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
- பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க
- ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை!
ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை! மகாராஷ்ராவின் , ஔரங்கபாத் நகரில் உள்ளமுகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுமாறு இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்த விவகாரம் பாரிய பூதாகாரமாக வெடித்துள்ளது நிலையில் நேற்றைய தினம் நாக்பூரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிர முதல்வரும் பா.ஜ.க தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், “ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தமை” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் இந்திய ரூபாய் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பொன்றும் அறிவித்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருறந்து. இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பினர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வேளை நாக்பூரில் பாரிய வன்முறை வெடித்துள்ளதாகவும், இதன் காரணமாக பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதை அடுத்து வன்முறை தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது. இந்நிலையில் ஔரங்கசீப் கல்லறையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அதைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பொலிஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‘முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் கொடூரமானவர்தான், மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனை படுகொலை செய்தவர்தான். ஆனால் மராத்தியர்களின் பேரரசை ஒளரங்கசீப்பால் கைப்பற்ற முடியாமல் போனது. ஒளரங்கசீப்பின் கல்லறை நூற்றாண்டுகளாக இருக்கிறது. அவருடைய தவறான நடவடிக்கைகளை நினைவூட்டக் கூடியதாகவும் இந்த கல்லறையைப் பார்க்கலாம். ஒளரங்கசீப்பை புகழ்ந்து பேசுவது எல்லாம் தேவையற்றது. அதை அகற்றுவது எந்த நோக்கத்திற்கும் உதவாது. இப்பிரச்னையை மீண்டும் கிளப்ப வேண்டிய அவசியமில்லை’ என தெரிவித்துள்ளார். இதேவேளை மத்திய அமைச்சரும் நாக்பூர் எம்பியும் நிதின் கட்கரி, ‘தவறு செய்தவர்கள் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நான் உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இந்த நிலைமை குறித்து முதலமைச்சருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425589- 2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை!
2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை! ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன்(Viktor Orbán) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 30 வயது வரை வருமான வரியிலிருந்து விலக்கும், அதே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு, 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் தாய்மார்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் விலக்கு என்று அறிவிக்கப்பட்ட திட்டம்தான், தற்போது விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில்,அதற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளம்பெற்றோருக்கு உதவுவதற்காக ஹங்கேரி அரசு ஏற்கெனவே, வட்டி இல்லா கடன், 3 குழந்தைகள் பிறந்த பின்னர் கடன் இரத்து போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425581- காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய சமாதான கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், ஹமாஸ் இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருந்தது ஆனால், காசாவில் பெரும்பாலான உயிரிழப்புகள் பொதுமக்களே என காசா சுகாதார அமைச்சு தெரிவிக்கிறதுடன் இந்த தாக்குதல்கள் காசாவில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன. மேலும் மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர், மேலும் உணவு, தண்ணீர் மற்றும் வைத்திய வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது https://athavannews.com/2025/1425578- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
தேசபந்து தென்னக்கோனுக்கு….. முன்னாள் ஜனாதிபதிகளின் செல்வாக்கு உள்ளது. அவரை இலேசில் பிடிபட அவர்கள் விரும்ப மாட்டார்கள். அப்படி பிடி பட்டால்… முன்னாள் ஜனாதிபதிகளின் பல குற்றச் செயல்கள், பாதாள உலகத் தொடர்புகள் அனைத்தும் வெளிவந்ததற்கு சமன். ஆன படியால்… அவரை ஏதோ விதத்தில் தலைமறைவாகவே வைத்திருக்க விரும்புவர்கள். இந்தக் “கள்ளன் பொலிஸ்” விளையாட்டு எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
செவ்வந்தி… மாலதீவுக்கு சென்று விட்டதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதே மாதிரி ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கருதப்படுபவரும், முஸ்லீம் மதத்துக்கு மாறியவருமான புலேந்தினி என்ற பெண்ணையும் பல வருடங்களாக தேடுகின்றார்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஒளிப்பதில்…. பெண்கள் கெட்டிக்காரர் போலுள்ளது. ஆண்கள்தான்… சூடு ஆற முதல் அம்பிட்டு விடுகின்றார்கள்.- பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்
நல்ல செயல். இது நிச்சயம் மாணவர்களை தவறான வழியில் செல்ல விடாமல், கல்வியில் முன்னேற ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.