Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. NPP அரசியல். திகன கலவரம் போன்ற இனக்கலவரத்தை செய்த சிங்கள அமைப்புக்கள் எங்கே போனது....🤔 தடைப்பட்டியலில் தமிழ் முஸ்லிம் அமைப்புக்கள் மட்டுமே கருத்தில் கொள்ள பட்டுள்ளது..... இதை பார்க்கும் சிங்கள இளைஞர்கள் என்ன நினைப்பர்.... அப்போ சிங்கள அமைப்புக்கள் நல்லவர்கள் என்றல்லவா புரிந்துகொள்வர்.... பொதுபல சேனா போன்ற அமைப்புக்களால் கோட்டா காலத்தில் இஸ்லாமிய பெண்கள் பரிதா & அபாயா போட்டு வெளியில் செல்லும் அச்சம் ஏற்பட்டிருந்தது.... இதை எல்லாம் சமத்துவம் பேசும் NPP மறந்துவிட கூடாது.... யாழ்ப்பாணம்.com
  2. காவாலிகளால்... கொலை செய்யப் பட்ட, அந்த ஒய்வு பெற்ற அதிபரின் உழைப்பை நம்பி... வீட்டில் அவர் மனைவி, பிள்ளைகள், வயதான பெற்றோர் என்று எத்தனை உயிர்கள் காத்துக் கொண்டு இருந்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்து விட்டது... இந்தக் குடிகாரக் கூட்டம். இந்தச் செய்தியை... வாசித்ததில் இருந்து, மனம் மிகவும் வேதனையாக உள்ளது.
  3. தமிழ் பெயர்களாக உள்ளது. பொலிஸார்... வேறு காரணத்துக்காக கொன்று விட்டு, தம்மை சுட வந்தவர்களை சுட்டுக் கொன்றோம் என்று... கதை விடுகின்றார்களோ தெரியவில்லை. சிங்களம், தமிழனை கொல்ல எதனையும் செய்யும் என்பதற்கு, கடந்த கால அனுபவங்கள் நிறையவே உள்ளது.
  4. மரண ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டு இருக்கும் போது, வாகனத்தை மெதுவாக ஓட வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவனுக்கு எல்லாம், வாகன அனுமதிப் பத்திரம் எதற்கு. 5 பேரை காயப்படுத்தி, ஒருவனை கொன்று விட்டு... தப்பிச் சென்றவனுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்க வேண்டும். ஜேர்மனியில்... விபத்து ஏற்படுத்தி விட்டு, தப்பிச் சென்றால்.... கொடுக்கப் படும் தண்டனையும், அபராதமும்... ஆளை, தலை எடுக்க விட முடியாமல் பண்ணி விடும். அதானல்... விபத்து நடந்தால்... காவல்துறை வரும் மட்டும் அந்த இடத்திலேயே அவர் நிற்பார்.
  5. சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் மாலை 6 மணி வரை சிறப்பாக இடம்பெறும். நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்ப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்பட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். இது தமிழ்மக்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தியதுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது. கைது செய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்த நீதிபதி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இம்முறை சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலயத்தின் பூசாரியார் மற்றும் முக்கியஸ்தர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் நேற்றுமுன்தினம் அழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலயத்தின் பூசகர் மதிமுகராசாவிடம் கேட்ட போது இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணிவரை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். 6மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் சிறப்பாக இடம்பெறும் என அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1422563
  6. மீனகயாவால் பறிபோன யானைகளின் எண்ணிக்கை உயர்வு. மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் பாதையில் மீனகயா கடுகதி ரயிலில் மோதி படுகாயமடைந்த மற்றுமொரு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. அதன்படி, ரயில் விபத்தில் உயிரிழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 7 ஆகும். கடந்த 19 ஆம் திகதி இரவு 11.20 மணியளவில், மீனகயா கடுகதி ரயிலில் மோதிய ஏழு காட்டு யானைகளில் 6 யானைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடப்பட்டது. https://athavannews.com/2025/1422566
  7. மித்தெனிய முக்கொலை சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேகநபர்களை 72 மணி நேரம் தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம்திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே என்ற நபரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422554
  8. நீங்கள் கூறியபடி... சுமந்திரன் இருக்கும் மட்டும், தமிழரசு கட்சி கூட்டுப்பேச்சுவார்த்தைக்கு வர சந்தர்ப்பம் இல்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... அழைப்பு விடுக்க வேண்டிய கடமை உள்ளது. அதனால்... அழைப்பு விடுத்தார். இதுவரை.... சுமந்திரன் தமிழரசு கட்சியில் இருந்து கொண்டே, பிரிக்கும் வேலைகளை மட்டுமே செய்து கொண்டு வருபவர். அரச அதிபர்களை, வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் விடயங்களிலும்... தனது தமிழரசு கட்சிஉறுப்பினர்களுக்கே தெரியாமல், பின்கதவால் போய் சந்தித்து விட்டு வருபவர்தான் சுமந்திரன். அவருக்கும்... ஓற்றுமைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
  9. பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட... @suvy , @ஈழப்பிரியன் , @நிலாமதி அக்கா, @ஏராளன் @குமாரசாமி அண்ணை, @nunavilan , @நிழலி , @ரசோதரன் , @வாத்தியார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏
  10. துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு. கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு. இது தொடர்பில் கொழும்பு நீதிபதி வருகை தந்து விசாரணை முடியும் வரை குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப் படை வாகனம் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை – பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் , இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது பொலிஸாரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1422543
  11. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் குறித்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம் மற்றும் கனேடிய தமிழர் தேசிய அவை உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் இளைஞர் அமைப்பு, எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு, ஜமாதே மிலாதே இப்ராஹிம் அமைப்பு, விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்பனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 222 தனிநபர்களின் பெயர் விபரங்களும் அடங்குகின்றன. Athavan Newsதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு...தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம...
  12. நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது – சிறப்பு ஊடக சந்திப்பு நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டில் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தையும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் ஒரு குழு இருப்பதாகவும், அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார். மேலும், நிகழ்வில் பேசிய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பின்தொடர்பவர்களில் சுமார் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், இந்தக் குற்றங்களைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 93 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் குறிப்பிடப்படாத கூர்மையான ஆயுதங்களால் 18 தாக்குதல்கள் அடங்கும் என்று அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் 5 தாக்குதல்கள் நடந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு நடந்த 17 குற்ற சம்பவங்கள் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் குற்றங்களுக்கு பொலிஸ், ஆயுதப்படைகள் அல்லது பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்துள்ளதாகவும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1422540
  13. மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு! கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை அண்மையிலுள்ளும் இங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1422517
  14. நாகப்பட்டிணம் – காங்கேசன் துறை இடையிலான கப்பற்சேவை ஆரம்பம் இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று தொடங்கவுள்ள்தாக கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று கப்பலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், நாகை பயணியர் முனையத்திற்கு அதிகாலை முதல் வரத்தொடங்கின்ங்கினர். அதனைத் தொடர்ந்து நாகை பயணியர் முனையத்திற்கு வருகை தந்த 83, பயணிகளின் உடமைகள் மற்றும் பயண டிக்கெட்டை, இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து தொடக்கிவைக்கப்பட்டது. இதில் பயணம் செய்யும், பயணிகள் மகிழ்ச்சியுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை காங்கேசன்துறைக்கு பயணத்தை மேற்கொண்டனர். 3, மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் தொடங்கியதால் இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். https://athavannews.com/2025/1422537
  15. மிகவும் துயரமான செய்தி. 😢 புலம் பெயர் தேசத்திலிருந்து செல்லும்... கொழுப்பு மிஞ்சியதுகளால், தனது வருமானத்துக்காக, ஒய்வு பெற்ற பின்பும் உழைத்துக் கொண்டு இருந்த அப்பாவி மனிதனை, பாவிகள் அடித்துக் கொன்று விட்டார்கள். எங்கே போகின்றது நம் இனம்.? அகால மரணத்தை தழுவிய முன்னாள் அதிபருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  16. புத்தகத்தில்... துப்பாக்கியை கொண்டு வந்து, கொலை செய்யலாம் என்று முதன் முதலாக நிரூபித்து காட்டியவர்கள் புத்த பிக்குகள். கொண்டு வந்த புத்தகம்: திரிபிடகம். பிக்குகள்: 1.புத்தர கித்த தேரோ. 2.சோமராம தேரோ. கூட விமல விஜயவர்த்தன தேரோ. Karthigesu Indran

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.