Everything posted by island
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
ஈரோடு தேர்தலில் நாதக டெபாஸிடை இழந்த போதும் தனக்குரிய தனிப்பட்ட payment போதியளவு கிடைத்த மகிழ்சசியில் சீமான்.
- IMG_9068.jpeg
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை!
இருக்கப் போவது நான்கு வருடம். அதற்குள் ஒரு பேயாட்டத்தை ஆடி விட்டு போவோம் என்று முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
தங்களை மாசற்றவர்களக காட்ட முற்பட்ட “புலம் பெயர் தேசிய செயற்பாட்டாளர்கள்” எனப்படுவோரால் செய்யப்பட்ட, மில்லியன் கணக்கான மக்கள் பணத் திருட்டு ஊழலை மறைப்பதுவும் ஒருவகை ஊழல்தான். தமிழீழ தேச மீட்பு நிதி என்று மக்களை ஏமாற்றி தமது குடும்பங்களுக்கு பணத்தை தேடிய இவர்களை போல மோசடி ஊழல் பேர்வழிகளை மறைத்து அடுத்த நாட்டில் ஊழலை தேடுவது அபத்தம்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சிந்தித்து பார்ததால், அவ்வாறு இந்தியாவின் தென் பிரதேசத்தை பிரிட்டிஷ் தொடர்ந்து தனது ஆளுமைக்குள் வைத்திருக்கவேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கை, தமிழருக்கு மிக பெரிய நல்விளைவுகள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய சாத்தியப்பாட்டை இயல்பாகவே உருவாக்கியிருக்கும். நாடுகளை கொலனிப்படுத்தும் வரலாற்றுக்காலம் 20 ம் நூற்றாட்டில் முடிவுக்கு வந்ததால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நீண்ட காலம் இப்பிரதேசத்தை தன் ஆளுமைக்கு கீழ் வைத்திருக்க முடிந்திருக்காது. எப்படியும் சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஏற்கனவே வட இந்திய பார்ப்பன வர்ககதிற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைகள் நீதி கட்சியாலும் அதை தொடர்ந்த திராவிடர் கழகத்தாலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அந்த நிலையும், பரப்புரையும் தென் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் தொடர்ந்திருந்தாலும் நடந்திருக்கும். எனவே, அந்த விழிப்புணர்வானது, அம்மக்களிடையே சுதந்திர நாடுகளாக பரிணமிக்கும் சுதந்திர வேட்கையை தானாகவே உருவாக்கியிருக்கும். அவ்வாறான நிலையானது, இந்திய துணைக்கண்டம் ஐரோப்பிய நாடுகள் போல் தன்னிச்சையாக பல சுதந்திர நாடுகளாக பரிணமிக்கும் சாத்தியப்பாட்டை அதிகரித்திருக்கும். மக்களிடையே சுதந்திர வேட்கையும் போராட்ட குணமும் இருக்கும் நிலையில் இந்திய இராணுவம் இப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நிலைக்கு எதிரான சர்வதேச சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆகவே, கோவா போன் ற பிரதேசங்களை ஆக்கிரமித்ததை போல் தென் இந்தியாவை ஆக்கிரமிப்பது இந்திய இராணுவத்துக்கு இலகுவாக இருந்திருக்காது. உண்மையில், எமது சுதந்திரத்தை வட இந்திய பார்ப்பன வர்க்கத்திடம் கையளிப்பதால் தமிழருக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஏற்படப்போகும் பேரழிவை அப்போதே பெரியார் சுட்டிக்காட்டி இருந்தார். இது பெரியாரின் தீர்கக தரிசனப்பார்வை என்று கூறலாம். ஏனெனில் ஈழப்போராட்டம் தோல்வியடைந்ததற்கான முக்கிய பங்களிப்பை அனைத்துலக அளவில் செய்தது இந்திய ஆளும் பார்ப்பன கும்பலின் அரசியல் ராஜதந்திர நகர்வுகளே. எமது எதிரிகளை அன்றே அடையாளம் காட்டியவர் பெரியார். அன்றைய இந்திய சுதந்திரத்தின் பின்னர் அதிகாரவர்ககத்தால் உருவாக்கிய “இந்திய தேசபக்தி” என்ற மாயையின் முன்னால் இந்திய தேசத்திற்கெதிரான எந்த போராட்டமும் வெற்றி பெற்றிருக்காது. அந்தளவுக்கு “பாரத மாதா” என்ற போலி பிம்பம் கிட்டத்தட்ட பக்தி உணர்வு போலவே கட்டி வளர்க்கப்பட்டது. அதுவே தமிழக தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் ஆப்பாக அமைந்தது.
-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் விடியோ பதிவு.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அவர்கள் ஒன்றும் தாமாக செய்யவில்லை. அவர்களின் தலைவரை எல்லை மீறி திட்டியதற்கு எதிர்வினையையே அவர்கள் ஆற்றினார்கள். அது இயல்பானது. முதலில் அவ்வாறு செய்து தூண்டி விட்ட புலம் பெயர் மாபியா கூட்டமே அதில் முதல் குற்றவாளிகள்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
சீமான் பேசுவது தமிழ் தேசியம் அல்ல. முழுக்க முழுக்க சாதிய பெரும்பான்மை வாதம் மட்டுமே தனது பிழைப்புவாதத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்படுகிறார். எந்த பிரதேசத்திற்கு போகிறாரோ அந்த பிரதேசத்தில் யார் பெரும் சமூகமோ அந்த சமூக தலைவரை பாராட்டி அவர் தமிழ்ப் பாட்டன் என்று பேசுவார். அந்த தலைவர் முழுமையான இந்திய தேசியவாதியாக இருப்பார். அந்த வரலாறு கூட சீமானுக்கு தெரியாமல் இருக்கும். இவ்வாறான பித்தலாட்டம் தனக்கு உதவும் என்று நினைக்கிறார். ஈரோடு பிரதேசத்தில் அறிஞர் அண்ணாவின் சமூகத்தினர் அதிகம் இருப்பதால் நேற்று அண்ணாவை பாராட்டி பேசினார். முன்பு ஒருமுறை வேறு பிரதேசத்தில் அண்ணாவை “பிச்சைகாரபயல்” என்று பேசியவர் இதே சீமான். இந்தியாவிலேயே அதிக பொய்களை மேடைகளில் பேசிய பாபெரும் பொய்யன் சீமான் ஆகும்.
-
2010 இல் கருணாநிதியை புகழ்ந்து மேடை நாடகம் போட்ட சீமான்
சீமான் மேடைக்கு வந்தாலே குறைந்தது இத்தனை பொய் கூறி தான் மேடையை விட்டை இறங்குவது என்ற முடிவுடன் தான வருபவர் போல் உள்ளது. 😂
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
புலிகள் கொடி மீது அவ்வளவு மரியாதை இருக்குமானால் சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி அரசியல் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதற்காக அந்த கொடியை திருடிப் பாவிக்கும் போது கோபம் வந்திருக்க வேண்டும். அப்போது வராத கோபம் இப்போது வருவதாக கூறுவது பொய், பித்தலாட்டம்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
பொய்கூறுவதில் சீமானுடன் புலவர் போட்டி போடுகிறார்போல உள்ளது.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
மாற்றியாச்சு.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
@goshan_che பெருந்தலைகள் எல்லால் இதை பார்தது வயிரெரிந்துவிட்டு, பார்காதது போல் சென்றிருப்பர். கிட்டுவை தெலுங்கன் என்றும் திட்டமுடியாது என்ற வெப்பிய்யாரம். 😂 இது ஒரு விரவான பேட்டி. இதனை 1992 ல் VHS video வில் நான் கேட்டுள்ளேன்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஈழத்தமிழர் மயூரன் என்பவரின் செவ்வி
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ் களத்தின் சக உறவான நேசக்கரம் சாந்தி அவர்கள் தமிழ் கேள்விக்கு பேட்டியளித்துள்ளார். புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சீமான் செய்த நாசகார செயல்களை விளகியதுடன் சீமானுக்கு துணையாக புலம் பெயர் நாடுகளில் இயங்கும் சிலரின் வண்டவாளங்களும் செவ்வியில் தெளிவாக எடுத்து கூறி உள்ளார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
குறைந்தது சென்னை மாகாணத்தையாவது பிரிட்டிஷ் தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியார் கேட்டதாக ஒரு கதையுண்டு. அது உண்மையால் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சென்னை மாகாணத்திற்கு பின்னர் எப்படியும் பிரிட்டிஷ் இடம் இருந்து சுதந்திரம் கிடைத்திருக்கும். மற்றைய மொழிகள் பிரிந்து போக தமிழ் நாடு தனி நாடாக ஆகியிருக்கும். தென்னிந்தியவில் பல சுதந்திர தேசங்கள் இருந்திருக்கும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதுவும் அந்த பிரபாகரன் என்ற முக மூடி பெருமளவு ஓட்டுகளை பெற உதவாது. அந்த முகமூடியை வைத்து பிஜேபியிடம் புறோக்கர் வேலை செய்து பணம் உழைக்கலாம் என்பது சீமானுக்கு தெரியும் . சீமானின் குறியும் அது தான்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
புலம் பெயர் ஈழத்தமிழரை ஏமாற்றி மக்களின் பணத்தை திருடிய திருட்டு கூட்டங்களே இன்று சீமானுக்கும் வக்காலத்து வாங்குகின்றன. தாம் திருடிய பணத்தில் ஒரு சிறு பகுதியை தமிழ் நாட்டில் இருக்கும் சீமானுக்கு அள்ளி வீசி அந்த பணத்தை பெற்ற புளுகத்தில் சீமான் அங்கு குறளிவித்தை காட்ட பணத்தை தம்மிடம் பறி கொடுத்த மக்களுகளுக்கு சீமானை வைத்து என்ரெரெயின் கொடுத்தால் முடியுமான அளவுக்கு இன்னும் மக்களுடம் திருடலாம் என்ற காரணமே சீமானுக்கு முட்டுக்கொடுக்கும் திருடர்களின் நோக்கமாக இருக்கலாம். சீமானும் வாங்கிய பணத்திற்கு நல்லா தான் வித்தை காட்டுது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அரைகுறையாய் வரலாற்றை படித்துவிட்டு அத்துடன் தான் இட்டுக்கட்டிய கற்பனைகளை சேர்த்து, தான் நீண்ட காலமாய் காவித்திரியும் அந்த இத்து போன தனது போத்துகேய வரலாற்றை உண்மையாக்கி சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதிக்கு முட்டுக்கொடுக்க ஒருவர் படாத பாடுபடுகிறார். சீமானின் தம்பிகள் போல இங்கு சிந்திக்கும் அறிவு அற்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு போலும். சீமானுடன் சேர்ந்தாலே பொய்யும் புரட்டும் வியாதியை போல் பரவி விடுகிறது போலும்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஒருவேளை, புலிகள் அழிந்த பின்னர் சொத்துகளை நாம் பங்கிட்டோம, கொடியையும் சின்னத்தையும் வைத்து சீமான் பிழைக்கட்டும் என்று இந்த தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைக்கும் இந்த மாபியாக் கூட்டம் நினைத்திருக்கும். அதை விட இந்த பரணி என்பவர் மிக மோசமான இனவாதி. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படாமல் அடக்குமுறையும் அழிவும் மட்டுமே நடக்க வேண்டும் என்று விரும்பும் மனநோயாளி. நச்சுக்கருத்துகளை பரப்பிவருபவர். அநுர ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் மீது மிக கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்தது விடுவார், அதுவே எமக்கு நல்லது என்று எழுதியவர். அதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்று தன்னை தொடரும் முட்டாள் கூட்டத்துக்கு எழுதியவர். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது பாரிய அடக்குமுறைகளை ஏவி விடும் அரசாங்கம் வரவேண்டும் என்று விரும்பும், தமிழ் மக்களின் அழிவை ரசிக்கும் ஒரு சைக்கோ. தன்னை போல் சைக்கோக்களாக இருக்கும் மண்டை முழுவதும் களிமண்ணை வைத்திருக்கும் சிறிய அளவிலான தனது fans கூட்டதை வைத்து தனது சைக்கோ கருத்துக்களை பரப்ப செய்பவர். இந்த நச்சு பாம்பின் கருத்துக்கள் பெரும்பான்மை தமிழ் மக்களை சென்றடைவதில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல்.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
அதென்ன திராவிடியா ஊடகங்கள்.
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
@goshan_che @Justin இநு தான் உலக ஜதார்ததம். பல தலைமுறைகளாக மலையகத்தில் வாழ்ந்த மலையக மக்களை நாடற்றவர்களாக்க சட்டம் நிறைவேற்றப்பட்ட போதோ எந்த விதமான வாழ்வாதார கட்டமைப்பும் இன்றி அவர்கள் நாடு கடந்தப்படும் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதோ ஈழத்தமிழர்கள் பொங்கி வீதிக்கு வந்தார்களா? உலக ஜதார்த்தத்தை புரிந்து அதை அனுசரித்து போராட்டத்தை கொண்டு செல்லாமல. அழிந்துவிட்டு இப்படி தமிழ்நாட்டு தமிழர் உதவ வில்லை என்று மூக்கால்்அழுவதில் பயன் இல்லை. தமிழ் நாட்டில் எத்தனை இயற்கை அழிவுகள் நடந்தன எந்த ஒரு ஈழத்தமிழர் அமைப்பாவது நிதி சேர்தது அவர்களுக்கு உதவினார்களா?
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
சங்கிகள் அப்படி காலாகாலமாக உருட்டியபோது தமிழர்களே அந்த புரட்டை நம்பிய போதும் 19 ம் நூற்றண்டில் மொழியியல் ஆய்வுமூலம் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் கார்டுவேல் தனது “திராவிட மொழிகளுக்கான ஒப்பிலக்கணம்” என்ற நூலின் மூலம் அந்த உருட்டுகளை உடைத்தார். அதன் பின்னர் எங்களுக்கு அந்த கேள்வியே எழவில்ல. இன்று சீமான் பச்சை தமிழர்கள் என்று போற்றும் அனைவருமே தமிழ் தேசியத்தை புறந்தள்ளி இந்திய தேசியத்தை ஆதரித்தவர்களே.